சாயகிரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாயகிரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஏப்ரல், 2015

வரனின் ஜாதகத்தில் 5ல் ராகு என்றால் புத்திர பாக்கியம் (ஆண் வாரிசு) கிடைக்காதா ?


5ல் ராகு அமர பெற்ற ஆண்களின் ஜாதகங்களை பார்க்கும் பெண்ணை பெற்றவர்கள், மறு பேச்சுக்கே இடமில்லாமல் தங்களது பெண்ணை திருமணம் செய்து தர மறுக்கின்றனர், இதை 5ல் ராகு அமைய பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்களிடமும் அவர்களை பெற்றவர்களையும் கேட்டல் கதை கதையாக சொல்வார்கள், உண்மையில் இவர்களது ஜாதகத்தை ஆய்வு செய்யும் ஜோதிடர்கள் ராகு பகவான் உண்மையில் 5ம் பாவகத்தில்தான் அமர்ந்து இருக்கின்றாரா? 5ல் அமர்ந்த ராகு பகவான் ஜாதகருக்கு எவ்விதம் தீமையை செய்கிறார்? லக்கினத்திற்கும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் எந்த ராசியுடன் சம்பந்தம் பெறுகிறார், ராகு பாகவானால் பாதிக்க பட்ட 5ம் பாவகத்தின் பலனை தற்பொழுது நடைபெறும் திசை புத்தி ஏற்று நடத்துகிறதா? எதிர்வரும் திசை புத்தி ஏற்று நடத்துகிறதா ? என்ற கேள்விகளும் துணை கேள்விகளும் நிறைய உண்டு, ஆனால் நமது ஜோதிட அன்பர்கள் 5ல் ராகு அமர்ந்தாலே ஜாதகருக்கு "புத்திர பாக்கியம்" கிடையாது என்ற முடிவுக்கு வருவது எப்படி? என்று தெரியவில்லை.  

இவர்கள் சொல்லும் வார்த்தையை வேதவாக்காக எடுத்து கொள்ளும் பெண்ணை பெற்றவர்களின் மன நிலையும் விளங்க வில்லை, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு லக்கினத்தில் இருந்து 5ம் பாவகம் பூர்வ புண்ணியம் என்று வர்ணிக்கப்படும், புத்திர ஸ்தானம் இந்த பாவகத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு புத்திர பாக்கியத்தை தர மாட்டார் என்று முடிவு செய்வது முற்றிலும் ஜோதிட கணித அமைப்பிற்கு முரண்பட்ட கருத்தாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, 5ல் ராகு அமைய பெற்ற ஜாதகருக்கு ஆண் வாரி உள்ள ஜாதகங்கள் நிறைய நம்மிடம் உதாரணம் உண்டு அன்பர்களே ! 

இருப்பினும் 5ல் ராகு அமர்ந்த ஜாதகத்தை குத்து மதிப்பாக "புத்திரபாக்கியம் " கிடையாது என்று ஒதுக்குவது முற்றிலும் தவறு என்றே தோன்றுகிறது, 5ல் ராகுகேதுவை பற்றி இதற்க்கு முந்தைய பதிவுகளில் ஜோதிடதீபம் மிகவும் விரிவாக ஆய்வு செய்து கட்டுரை எழுதியிருக்கிறது, குத்து மதிப்பாக 5ல் ராகு புத்திர பாக்கியம் கிடையாது என்று ஒதுக்கும் ஜோதிடர்கள் அனைவரும், முறையாக ஜோதிடகணிதம் கற்றவர்கள்தான ? என்ற கேள்வி எழுகிறது, இந்த குழப்பங்களுக்கு கிழ்கண்ட விளக்கங்களை தர " ஜோதிடதீபம் " கடமை பட்டுள்ளது.

ராகு 5ல் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் :

1) ஜாதகரின் லக்கினத்தில் இருந்து 5ம் ராசியில் ராகு அமர்ந்து இருப்பதை வைத்து 5ல் ராகு என்று முடிவு செய்வது முற்றிலும் தவறு, ஜாதகரின் 5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகை முதல், பாவகம் முடிவு பெரும் பாகைக்கு உட்ப்பட்ட 5ம் பாவகத்தில் ராகு அமர்ந்து இருக்கின்றாரா? என்பதை ஜாதகரின் பாவக ஆரம்பம், மதியம், முடிவு நிலையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யவேண்டும்.

2) 5ல் அமர்ந்த ராகு ரிஷபம், மிதுனம் ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேராத புதன்), கடகம் ( வளர்பிறை சந்திரன் ), கன்னி ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேராத புதன்) துலாம், தனுசு,மீனமாக இருந்தால் ஜாதகரின் 5ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்யும் தன்மையை ராகு இயற்கையாக பெற்று விடுவார், எனவே இந்த அமைப்பில் 5ல் ராகு உள்ள ஜாதகங்கள் அனைத்தும் புத்திர பாக்கிய யோகம் உள்ளதாகவே கருதலாம், ( பெரும்பாலும் இவர்களுக்கு ஆண் குழந்தைகளாகவே எவ்வித தடையும் இன்றி பிறக்கின்றது)

3) 5ல் அமர்ந்த ராகு மேஷம்,மிதுனம்  ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேர்ந்த புதன்),கடகம் ( தேய் பிறை சந்திரன் ), சிம்மம்,கன்னி  ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேர்ந்த புதன்), விருச்சிகம்,மகரம்,கும்பமாக இருந்தால் ஜாதகரின் 5ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை அற்று போக செய்யும் தன்மை ராகு பகவானுக்கு உண்டு, எனவே இந்த அமைப்பில் 5ல் ராகு உள்ள ஜாதகங்கள் அனைத்தும் புத்திர பாக்கியத்தில் தடை உள்ள ஜாதகமாக எடுத்துகொள்ளலாம், ஆனால் இது ஆண் வாரிசு என்ற அமைப்பில் மட்டுமே குறையை தரும், பெண் குழந்தை கிடைப்பதில் எவ்வித தடையும் இல்லை, ஒருவேளை ஜாதகர் தனது பூர்வீகத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பின் ( 100கிமீ அப்பால் ) ஆண்வாரிசே நிச்சயம் கிடைக்கும்.

4) பெரும்பாலும் 5ல் ராகு அமர்ந்து பாதிப்பை பெற்று இருக்கும் ஜாதகர்கள், தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை பெறுகின்றனர், தனது பாரம்பரிய முறையில் இருந்து வித்தியாசமான அணுகு முறையில் ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையையும், தனது பாரம்பரியத்திற்கு மாறுபட்ட சிந்தனைகளையும் கொண்டவர்களாக கானபடுகின்றனர், இவர்கள் அனைவரும் தனது பூர்வீகத்தில் மிகப்பெரிய வெற்றிகளை பெற இயலவில்லை, வெளியூர் அல்லது வெளிநாடுகளிலேயே மிகப்பெரிய அந்தஸ்தையும், வெற்றிகளையும் வாரி குவிக்கின்றனர், பூர்விகத்தில் இவர்களது அறிவும் புத்திசாலித்தனமும் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்ப்படுகின்றது, வெளியூரில் அல்லது வெளிநாடுகளில் இவர்களது அறிவும், புத்திசாலித்தனமும் அபரிவிதமாக வேலை செய்வது கவனிக்க தக்கது, மேலும் வெளியூர் வெளிநாடுகளில் ஜாதகர்  வசிக்கும் பொழுது 5ம் பாவக பாதிப்பு வெகுவாக குறைந்து, சிறந்த ஆண்வாரிசும் உண்டாகிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

5) பெரும்பாலும் குழந்தைகளே அற்ற சூழ்நிலை எப்பொழுது ஒரு ஜாதகருக்கு ஏற்ப்படுகிறது என்று காணும் பொழுது தம்பதியர் இருவரது ஜாதகத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் பாதக ஸ்தனாங்களுடன் தொடர்பு பெற்றால் மட்டுமே புத்திர பாக்கியமே இல்லாமல் போகிறது என்பது 100% விகித உண்மை, மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களும் முறையான தீர்வுகளை தேடும் பொழுது 5ம் பாவக வழியில் இருந்து யோகத்தை பெற இயலும் என்பதே ஜோதிடதீபத்தின் ஆணித்தரமான கருத்து.

குறிப்பு :

 அன்பர்களே ! 5ல் ராகு அமர்ந்தாலே குழந்தை பாக்கியம் கிடையாது என்ற குத்து மதிப்பான வாதத்தை விடுத்து சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையை உணர்ந்து தங்களது மகளுக்கோ, அல்லது மகனுக்கோ வரன்,வது தேடுவதே சரியான தீர்வாக இருக்கும், 5ல் அமரும் ராகு நல்ல செய்தால் எவ்வித குழப்பமும் இல்லாமல் தங்களது மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் செய்து கொடுங்கள் அவர்களது வாழ்க்கை மென்மேலும் செழித்து ஓங்குவதையும், அவர்களுக்கு நல்ல வாரிசு அமைவதையும்,திருமணம் நடந்த சில காலங்களிலேயே கண்குளிர காணலாம், என்று ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

திங்கள், 5 ஜனவரி, 2015

அபார சக்தி வாய்ந்த சாய கிரகமான ராகு கேதுவின் வலிமை!



 ராகு கேது சரித்திரம் பற்றியும், சுய ஜாதகத்தில் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையில் அமரும் பொழுது ஜாதகருக்கு தரும் பலாபலன்களை பற்றி இன்று நாம் இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

சாய கிரகமான ராகு கேது கிரகங்களின் சரித்திர கதையை நாம் சிந்தனைக்கு எடுத்துகொள்ளும் பொழுது, பாற்கடலை கடைந்து அதில் வரும் அமிர்தத்தை, தேவர்களும் அசுரர்களும் சமமாக பங்கிட்டு அருத்துவதாக ஒப்பந்தம் செய்துகொண்டனர் , இதன் அடிப்படையில் பாற்கடலை கடைந்து அமிர்தம் கிடைத்தவுடன் விஷ்ணு மோகினி அவதாரம் கொண்டு அமிர்த கலசத்தை பெற்று, தேவர்கள் அசுரர்களுக்கு பரிமாருவதாக நிர்ணயம் செய்யப்பட்டது,  அசுரர்கள் தமக்கு வழங்குவது அமிர்தமல்ல என்பதை உணராமல் மோகினியின் அழகில் மயங்கிய நின்றனர், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட மோகினி முதலில் தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தை பரிமாறினாள்.

 இந்த சதியை உணர்ந்த கஷ்யப மகரிஷியின் மகனான சுவர்ணபானு, தனக்கு அமிர்தம் கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சி தேவர்களின் வடிவம் எடுத்து, தேவர்களின் வரிசையில் அமர்ந்தார், இதை உணர்ந்த சூரியனும் சந்திரனும் மோகினியை தடுக்கும் முன் சுவர்ணபனுக்கு அமிர்தத்தை அருந்த கொடுத்து விட்டாள், சூரியனும் சந்திரனும் நடந்த உண்மையை மோகினியிடம் எடுத்து கூறினர், கடுங்கோபம் கொண்ட மோகினி அமுதம் வழங்கிய அகப்பையால் சுவர்ணபானுவின் தலையில் ஓங்கி அடிக்க, சுவர்ண பானுவின் தலை வேறாகவும் உடல் வேறாகவும் பிரிந்தது.

 அமிர்தம் அருந்தியதால் சுவர்ணபானுவின் உயிர் பிரியாமல் தலையும் உடலும் தனித்தனியாக கிடந்தது, இதை அறிந்த அசுரர்கள் மோகினியின் கையில் இருந்த அமுத கலசத்தை பிடுங்க முயற்ச்சி செய்ய, சுவர்ணபானு செய்த தவறுக்கு அசுரர்களுக்கு அமிர்தம் இல்லை என்று சொன்ன மோகினி, அமிர்தம் முழுவதையும் தேவர்களுக்கு மட்டும் வேகமாக வழங்கிவிட்டு சென்று விட்டாள், சுவர்ணபானுவால்தான் தங்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை என்று எண்ணிய அசுரர்கள் சுவர்ணபானுவை தம் அசுர குலத்தில் இருந்து ஒதுக்கி வைத்தனர்.

தனக்கு உயிர் இருந்த போதிலும் உடல் வேறாக தலை வேறாக இருப்பதை எண்ணிய சுவர்ணபானு, பிரம்மனிடம் முறையிட பிரம்மாவோ இதற்க்கு தீர்வு பரம்பொருளான மஹாவிஷ்ணு மட்டுமே வழங்கமுடியும் என்று சொல்ல, சுவர்ணபானு மஹாவிஷ்ணுவை வணங்கி பிராயசித்தம் வேண்டும் பொழுது எம்பெருமான் அருள் கூர்ந்து சுவர்ணபானுவின் தலைக்கு பாம்பு உடலையும், உடலுக்கு பாம்பு தலையையும் வழங்கி, சுவர்ணபனுவின் தலைக்கு ராகு எனவும், உடலுக்கு கேது எனவும் பெயர் வழங்கி கிரக அந்தஸ்தை வழங்குகிறார், மேலும் கிரகங்களின் அமைப்பில் இருந்து வித்தியாசத்தை பெற வானவெளியில் அப்ரதட்சனமாக சஞ்சாரம் செய்ய இறைவன் கட்டளை இடுகிறார், இதை ஏற்று ராகு கேது இருவரும் அப்ரதட்சனமாக சஞ்சாரம் செய்கின்றனர்.

தங்களின் இந்த நிலைக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழிவாங்க தவம் இருந்து பிரம்மாவிடம் வரம் கோருகின்றனர், சாய கிரகங்கள் பெற்ற வரத்தின் படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாது  தடுக்கும் வல்லமையை பெறுகின்றனர், இந்த நிகழ்வை சூரிய கிரகணம் என்றும், சந்திர கிரகணம் என்றும் வழங்கபடுகிறது, இந்த கிரகண நேரத்தில் அதிசக்தி வாய்ந்ததாக கருதப்படும் சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் தன்மையை சாய கிரகங்களான ராகு கேது பெறுகின்றனர்.

ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் வலிமை பெற்று அமரும் பொழுது அந்த ஜாதகர் தனது வாழ்க்கையில் பெரும் வெற்றிகளுக்கும், அதிர்ஷ்ட வாழ்க்கைக்கும் தங்கு தடை என்பதே கிடையாது எனலாம், இந்த சிறப்புகளை பெற்ற சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் வல்லமை பெற்ற சாயகிரகமான ராகு கேதுவின் வல்லமையை பற்றி சொல்லவும் வேண்டுமோ? ஆக கிரகங்களின் அதிக வலிமை பெற்றதாக ராகு கேதுவை வர்ணனை செய்தது துளியும் தவறில்லை என்றே ஜோதிடதீபம் 100% விகிதம் கருதுகிறது.

எமது குருவின் கருத்துப்படி, சாய கிரகங்கள் ஆன ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி குறிப்பிட்ட பாவகத்தை தனது  ஆளுமைக்கு கிழ் 100% விகிதம் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற உண்மை மிக சரியாக பொருந்துகிறது, தான் அமர்ந்த பாவகத்தின் தன்மையையும், தன்னுடன் சேர்ந்த கிரகத்தின் வலிமையையும் தானே ஏற்று நடத்துவார்கள் என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை, மேலும் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு நன்மையையோ அல்லது தீமையையோ 100% விகிதம் எவ்வித குறையும் இன்றி செய்வார்கள் என்பதும் முற்றிலும் உண்மை.

சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்ற ஜாதகர் நிச்சயம் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகிதம் நன்மை மற்றும் யோகத்தை அனுபவிப்பர், சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை அற்ற ஜாதகர் நிச்சயம் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகிதம் தீமை மற்றும் அவயோகத்தை அனுபவிப்பர், இதை மாற்ற எவராலும் இயலாது, சாய கிரகங்களால் வரும் இன்னல்களை கலைய  எந்த ஒரு பரிகாரமும் பலன் தாரது, ஏனெனில் இதுவே ராகு கேதுவின் தனித்தன்மை, 

மேற்கண்ட ராகு கேதுவின் சரித்திர கதையில் இருந்தே இதை நாம் உணராலாம், முப்பத்து முக்கோடி தேவர்களையும் அமிர்தம் வழங்கிய எம்பெருமான் மகாவிஷ்ணுவையும் ஏமாற்றி அசுரனான சுவர்ணபானு தனது தனி திறமையால் அமிர்தத்தை அருந்த முடிகிறது என்றால், நவக்கிரக அந்தஸ்து பெற்ற சாய கிரகமான ராகு கேது ஏன் ? தனிப்பட்ட வல்லமையுடன் திகழ முடியாது, ஆக நவகிரகங்களிலேயே அதி சக்தி கொண்டதாக சாய கிரகமான ராகு கேதுவை வர்ண்ணனை செய்வதில் எவ்வித தவறும் இல்லை என்றே ஜோதிடதீபம் கருதுகிறது.

ராகு வலிமை பெரும் ஜாதகம் :

தனிப்பட்ட தன்மைகளை தன்னகத்தே கொண்ட  ஜாதகராக கருதலாம், ஜாதகருக்கு தான் அமர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் இருந்து 100% விகித நன்மைகளை தங்குதடையின்றி செய்வார், அசுர பலம் கொண்ட அமைப்பை பெறுவார்கள், பெரிய அறிவியல் வல்லுனர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், உடல் மனம்  இரண்டிலும் நிகரில்லா வலிமையை பெற்றவர்கள், அதிகாரம் செய்யும் யோகம் கொண்டவர்கள், தனது கட்டளைக்கு அனைவரையும் கட்டுபட்டு நடக்க வைக்கும் தன்மை பெற்றவர்கள், தான் சொல்வதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட மக்களை தன் கண் அசைவில் கட்டுபடுத்தும் வல்லமையாலர்களாக திகழ்வார்கள்.

பொதுவாக அதிகாரம் செய்வதில் செவ்வாய் சூரியன் சிறந்து விளங்குபவர்களாக ஜோதிடர்களால் வர்ணிக்க படுவார்கள், ஆனால் ராகுவின் முன்னால் இவர்களின் திறன் வெறும் 10% விகிதம் மட்டுமே என்பதை நினைவில் நிறுத்தினால் ராகுவின் ஆளுமை மிக எளிதாக நமக்கு புரியும், உலகின் வல்லரசான நாடுகள் அனைத்தும் ராகுவின் கருணை இன்றி செயல்பட முடியாது என்பதை கருத்தில் கொள்வது நலம், வீர்யமிக்க செயல்பாடுகள், தான் நினைக்கும் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை, தனது தேடுதலுக்கு உண்டான சரியான பதில் அல்லது பயன்கள் அனைத்தையும் குறுகிய காலத்தில் தருவது ராகு பகவானே என்றால் அது மிகையில்லை, ராகு வலிமை பெற்ற ஜாதக அமைப்பை பெற்ற அன்பர்கள் புலன் அடக்கம் பற்றிய தெளிவில் இருப்பார்கள், வாழ்க்கையை இயல்பாக வாழும் தன்மையை பெற்று இருப்பார்கள் என்பது கவனிக்க தக்கது.

கேது வலிமை பெரும் ஜாதகம் :

தனிப்பட்ட அமைப்புடன் குழுவாக செயல்படும் தன்மையை பெற்று இருப்பார்கள், ஜாதகருக்கு தான் அமர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் இருந்து 100% விகித நன்மைகளை தங்குதடையின்றி செய்வார், ஆத்மா பலம் கொண்டவர்களாக திகழ்வார்கள், ஆன்மீக வெற்றியை பெரும் யோகம் பெற்றவர்கள், புலன்களை அடக்கி ஆளும் வல்லமை ஜாதகருக்கு இயல்பாகவே அமைந்திருக்கும், குறிப்பாக செயல்திறன் மற்றும் அறிவில் தெளிவு பெற்றவர்களாகவும், பலரது கேள்விகளுக்கு சரியான பதில்தரும் ஞானம்  பெற்றவர்களாகவும், சமுதாயத்தை அன்பின் வழியிலும் அறவழியிலும் இயக்கும் தன்மை பெற்றவர்கள், தனது அறிவு திறனால் சாதிக்க இயலாத விஷயம் ஒன்றும் இல்லை என்ற நிலையை தரும்.

ஜோதிட ரீதியாக குரு,புதனுக்கு நிகரான 3 மடங்கு அறிவு திறனையும், இயக்க சக்தியையும் வாரி வழங்கும் தன்மையை பெற்றவர் கேது பகவான், சிறந்த ஆன்மீகவாதிகள், இறை நிலை சிந்தனையாளர்கள், வருமுன் உணரும் சக்தி படைத்தவர்கள், கல்வி கேள்விகளில் புகழ் பெரும் விற்பனர்கள், ஜோதிட கணித  மேதைகள், பல சாம்ராஜ்யங்களை கட்டியாளும் தனி திறமைகளை கொண்டவர்கள், சாஷ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் வகுக்கும் வல்லமை பெற்றவர்கள், பிரபஞ்ச ரகசியங்களை அறிந்தவர்கள், இறை நிலையுடன் ஜீவகலப்பு பெரும் யோகம் பெற்றவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் கேது பகவான் மிகவும் சிறப்பாக பஞ்சபூத தத்துவ அமைப்பில் அமர்ந்திருப்பார் என்பது கவனிக்க தக்கது.

எனவே சுய ஜாதகத்தில் சாய கிரகமான ராகு கேது வலிமை பெறுவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையையே பெற்று தரும் என்பதை மறுக்கவும் இயலாது, மாற்றவும் முடியாது.

வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 2 ஜூலை, 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 2



 சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

மிதுன லக்கினம் : 


 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மூன்றாம் ராசியான மிதுனத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது மிதுன லக்கினத்திற்கு ராகு 4ம் பாவகத்திலும், கேது 10ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.


 மிதுன லக்கினத்திற்கு 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் புதிய சொத்து, வண்டி, வாகனம், நில புலன்கள், இடம் வாங்கும் யோகத்தை தருவார், மேலும் கன்னி உபய மண் தத்துவ ராசி என்பதால் மிதுன இலக்கின அமைப்பை சார்ந்தவர்களுக்கு உடல் நிலை மிகவும் சிறப்பாக அமையும், உடல் ரீதியான பிரச்சனைகளில் வருத்தபடுவோர்களுக்கு, நல்ல ஆரோக்கியத்தையும், உடல் நலனில் முன்னேற்றத்தையும் வழங்குவார், வட்டி, வரவு செலவு, வங்கிகள் மூலம் ஆதாயம், கடன் கொடுப்பது, பெறுவது ஆகியவற்றால் நன்மை என்ற வகையில் மிதுன லக்கினத்தாருக்கு யோகத்தை வாரி வழங்குவார்.


இதுவரை சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்கு திடீர் என வீடு கட்டும் யோகத்தை வழங்குவார், புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை தருவார், போக்குவரத்து தொழில் செய்வோர்களுக்கு தமது தொழில் எதிர்பாராத முன்னேற்றத்தை பெறுவதை காணலாம், குறிப்பாக சரக்கு வாகனம் வைத்திருப்போருக்கு திடீர் முன்னேற்றம் உண்டாகும், வண்டி வாகன தொழில் செய்வோருக்கு அபரிவிதமான தொழில் விருத்தியை ராகு பகாஅன் வழங்குவார் இனி வரும் 18 மாதங்களுக்கு என்றால் அது மிகையில்லை, மேலும் சிமெண்ட்,செங்கல்,ஜல்லி,பெய்ன்ட் போன்ற பொருட்களை வியாபாரம் செய்பார்களுக்கும், கட்டிட தொழில் செய்பவர்களுக்கும் அபரிவிதமான வளர்ச்சியை தங்கு தடையின்றி தருவார்.

 மிதுன லக்கினத்திற்கு 10ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து  மன நிம்மதி இழப்பை தருவார், எதிர்பாரத வகையில் மற்றவர் செய்யும் தவறுகளுக்கு தான் பொறுப்பு ஏற்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவர், மேலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பது அரிது, தனக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் பகைமை பாராட்டாமல் இருப்பது சால சிறந்தது, இல்லை எனில் தேவையில்லாத மன கசப்பு ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, இனி வரும் 18 மாதங்களும் மிதுன லக்கினத்தை சார்ந்தவர்கள் மற்றவர்களிடம் பணிபுரியும் அமைப்பில் இருப்பின் அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நலம் தரும்.

 மேலும் தமது கௌரவத்திற்கு இழுக்கு ஏற்ப்படும் தன்மை வரக்கூடும் என்பதால் மிதுன லக்கினத்தை சார்ந்தவர்கள், எதிர் பாலினரிடம் அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நலம் தரும், மேலும் பொது காரியங்களில் முன் நிற்ப்பதை தவிர்ப்பது ஜாதகரின் கௌரவத்திற்கு எவ்வித பங்கத்தையும் விளைவிக்காது, ஆக மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு கேதுபகவன் எதிர்வரும் 18 மாதங்கள் தீமையான பலன்களை தரக்கூடும் என்பதால் அதிக கவனமுடன் இருப்பது நலம் தரும்.

கடக லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடகத்தை   லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! கடக லக்கினத்திற்கு 3ல் ராகுவும், 9ல் கேதுவும் இனி வரும் 18 மாதங்கள் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர், இந்த 18 மாதங்களிலும் கடக இலக்கின ஜாதகர்களுக்கு எவ்வித யோக அவயோக  பலன்களை வழங்க இருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

 தற்பொழுது பெயர்ச்சி பெற்றிருக்கும் ராகு கேது எனும் சாய கிரகங்களால் அதிக அளவிற்கு யோக பலன்களை அனுபவிக்கும் மற்றொரு லக்கினம் இந்த கடக லக்கினத்தை சார்ந்தவர்களே என்றால் அது மிகை இல்லை, குறிப்பாக லக்கினத்தில் இருந்து 3ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடக  லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு எடுக்கும் காரியங்களில் வெற்றியையும், நினைத்த எண்ணங்களை வெற்றிகரமாக முடிக்கும் வாய்ப்பையும் வாரி வழங்குவார், எதிர்பாராத லாபங்களை வாரி வழங்குவார், முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு முயற்ச்சிக்கும் காரியங்களில் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை வாரி வழங்குவார்.

 சகோதர வழியில் இருந்து நல்ல ஆதரவினை  பெரும் யோகம் உண்டாகும், கமிஷன் தரகு தொழில் செய்வோருக்கு இது ஒரு பொற்காலமாக கருதலாம், வீரியமிக்க செயல்களால் மக்களால் போற்ற படுவார்கள், விளையாட்டு வீரர்கள் மிகப்பெரிய வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் பெறுவார்கள், தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஏஜென்சி எடுத்து நடத்தும் அன்பர்களுக்கு செல்வ செழிப்பை வாரி வழங்கும், எதிரிகளை வெல்லும் ஆற்றல் அபரிவிதமாக உண்டாகும், பயணங்களினால் மிகப்பெரிய ஆதாயங்களை மிதுன  லக்கினத்தை சார்ந்தவர்கள் பெறுவார்கள் என்பது உறுதி.

 9ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மதிப்பிற்கு உரிய செயல்களையும், புகழ் மிக்க பொறுப்புகளையும் வாரி வழங்குவார், வெகுமதி கெளரவம் சமூக அந்தஸ்து என்ற வகையில் மிகுந்த நன்மைகளையும், தொழில் துறையில் நல்ல வளர்ச்சியையும் வாரி வழங்குவார், ஆன்மீகத்தில் கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இனி வரும் 18 மாத காலமும் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கும், குறிப்பாக இதுவரை செல்ல இயலாத புண்ணிய திரு தளங்களுக்கு சென்று வரும் யோகத்தை வாரி வழங்கும், ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் குரு மகான்களின் தரிசனமும், ஆசிர்வாதமும் ஒருங்கே கிடைக்கும் யோகம் உண்டாகும்.

 மேலும் கடக லக்கினத்தை சார்ந்தவர்களின் அறிவாற்றலும், சிந்தனை திறனும் கேது பகவானால் பன்மடங்கு உயர்ந்து நிற்கும், எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு சொல்லும் அளவிற்கும் தனி திறமையும், சமயோசித புத்திசாலிதனத்துடன் விளங்கும் யோகத்தை கேது பகவான் வாரி வழங்குவார், நல்ல ஆரோக்கியம் விரைவாக முடிவெடுக்கும் தன்மை, பல துறைகளில் ஆராய்ச்சி, உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி கல்விகளில் தேர்ச்சி, இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம், புதிய கண்டுபிடிப்பு, வெளிநாடுகள் செல்லும் யோகம், புதை பொருட்கள் மூலம் லாபம், லாட்டரியில் அதிர்ஷ்டம் என்ற வகையில் நன்மையை வாரி வழங்குகிறார்.

குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் மிதுன  லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், இதை போன்றே யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் கடக லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வியாழன், 26 ஜூன், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 1





சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

 1) மேஷ லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது மேஷ லக்கினத்திற்கு ராகு 6ம் பாவகத்திலும், கேது 12ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

6ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் ஜாதகருக்கு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார், உடல் நல பாதிப்பை தந்த போதிலும் விரைவில் குணம் பெரும் யோகத்தை தருவார், எவ்வித தடையும் இன்றி அனைத்திலும் வெற்றியை  வாரி வழங்கும் தன்மையை ராகு இங்கு சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகருக்கு வழங்குகிறார், வழக்கு, பிரச்சனைகளில் இருந்து ஜாதகருக்கு  100% சாதகமான பலன்களை வாரி வழங்குகிறார், தன்னம்பிக்கை அதிகருக்கும், நல்ல வேலையாட்கள் அமைவார்கள், சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் ஜாதகருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும், மேலும் ஒவ்வொரு மாதமும் ஜாதகருக்கு ஏதாவது ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு வந்துகொண்டே இருக்கும் இதன் மூலம் ஜாதகருக்கு எதிர்பாராத பொருட் சேர்க்கை, தன சேர்க்கை கிடைத்து கொண்டே இருக்கும் புதன் கேந்திர அதிபதியாக வருவதால், ஜாதகருக்கு கன்னியில் சஞ்சாரம் செய்யம் 18 மாதங்களுக்கும் ராகு யோகத்தை தருகிறார்.

 12ல் சஞ்சாரம் கேது பகவான் ஜாதகருக்கு மன நிம்மதி என்ற அமைப்பில் இருந்து அதிக இனல்களை தரக்கூடும், தேவையற்ற விரையம், நிறைய செலவுகள், பங்கு சந்தை, முதலீடு செய்வதால் இழப்பு, அனைவராலும் தொல்லை தொந்தரவு, எதிர்பாராத விபத்து போன்ற இன்னல்கள் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்கள் யாவும் தோல்வியை தர கூடும், தொலைதூர பயணங்களால் ஜாதகர் பதிப்புகளை சந்திக்க கூடும், மறைமுக எதிரிகளால் துன்பமும் தொல்லைகளும் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், நிம்மதியான உறக்கம் கிடைக்க ஜாதகர் வெகு பிரயத்தனம் செய்ய வேண்டி வரும், அலைச்சல் அதிகமாகும், ஜாதகராலும் ஜாதகரை சார்ந்தவர்களாலும் அதிக இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.

2) ரிஷப லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் ராசியான ரிஷபத்தை  லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ரிஷப லக்கினத்திற்கு 5ல் ராகுவும், 11ல் கேதுவும் இனி வரும் 18 மாதங்கள் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர், இந்த 18 மாதங்களிலும் ரிஷப இலக்கின ஜாதகர்களுக்கு எவ்வித யோக அவயோக  பலன்களை வழங்க இருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

 உண்மையில் இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில் 18 மாதங்களும் 100% யோகத்தை அனுபவிக்கும் அன்பர்கள் இந்த ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்களே என்றால் அது மிகையில்லை, ஏனெனில் 5ல் அமரும் ராகு ஜாதகருக்கு இறை அருளின் பரிபூரண நல்லாசிகளை வாரி வழங்குவதும், 11ல் அமரும் கேது மிகுந்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவதுமே காரணமாக அமையும், 5ல் அமரும் ராகு ஜாதகருக்கு நல்ல நினைவாற்றலையும், சிறந்த சிந்தனை ஆற்றலையும் வாரி வழங்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், உதவி செய்ய பலர் முன் வருவார்கள், எங்கு சென்றாலும் ஜாதகர் வெற்றி மேல் வெற்றியை பெரும் யோகத்தை தரும், விளையாட்டு துறையை சார்ந்தவர்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறுவார்கள்.

 கலை துறையை சார்ந்தவர்கள் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் யோக காலம் இது தன்னம்பிக்கை அதிகரிக்கும், இயல் இசை நாடக துறையை சார்ந்த ரிஷப இலக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவியும், பொருளாதார ரீதியாகவும், உலக புகழ் பெரும் யோகத்தையும் இந்த 18 மாதங்களில் ராகு பகவான் வாரி வழங்குவார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, குழந்தை பாக்கியம் அற்ற தம்பதிகளுக்கு புத்திர சந்தானம் உண்டாகும் , பங்கு சந்தை சார்ந்த தொழில்களில் இருப்பவர்கள் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் யோக காலம் இது, பாரம்பரிய தொழில்களில் செய்துவருபவர்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறுவாரகள், விவசாயம் செழித்து வளரும்.

 11ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் ஜாதகருக்கு 18 மாதங்களும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்குவார், எதிர்பாராத தனசேர்க்கை உண்டாகும், ஜாதகர் மன நிலை மிகவும் தெளிவாக இருக்கும், எடுக்கும் ஒவ்வொரு காரியம் யாவும் ஜாதகருக்கு சாதகமாக அமைந்து வெற்றி மேல் வெற்றி தரும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஜாதகர் மிகவும் சிறப்பாக இருப்பார், ஜாதகரின் நேர்மறை எண்ணங்கள் ஜாதகருக்கு வெற்றி வாய்ப்புகளை 100% வெற்றியை வாரி வழங்கும், எதிலும் லாபம், வியாபர விருத்தி, சுப விரையம், திருமண வாய்ப்பு கைகூடும் யோகம், செல்வசெழிப்பு, வருமுன் காப்பது, நினைத்த எண்ணம் ஈடேறும் வாய்ப்பு, தாம்பத்திய வாழ்க்கையில் முன்னேற்றம், கணவன் மனைவி நல்லுறவு, பொதுமக்கள் ஆதரவு என்ற வகையிலும், ஆன்மீக வெற்றி, தெய்வீகத்தால் லாபம் என்ற வகையிலும் ரிஷப இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு யோகத்தை வாரி வழங்கும்.

 குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் மேஷ லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், மேஷ லக்கினத்திற்கு 6,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், இதை போன்றே யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் ரிஷப லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 5,11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 27 டிசம்பர், 2012

சாய கிரகமான ராகு கேதுவுடன் மற்ற கிரகங்கள் சேர்க்கை பெற்று ஒரு பாவகத்தில் அமரும் பொழுது தரும் பலன்கள் !



கேள்வி :

 ஒருவருடைய சுய ஜாதகத்தில் சாயா கிரகமான ராகு கேதுவுடன் , சுப கிரகங்களோ , அசுப கிரகங்களோ சேர்க்கை பெற்று அமரும் பொழுது தரும் பலன்கள் என்ன ? ராகு கேதுவுடன் சேரும் கிரகங்கள் ஜாதகருக்கு அவ்வளவு நன்மையை செய்யவதில்லை என்றும் , குறிப்பாக சூரியன் , செவ்வாய் , சனி போன்ற அசுப கிரகங்கள் சேரும் பொழுது ஜாதகருக்கு அதிக தீமையே செய்கின்றது என்பது பொது கருத்தாக இருக்கிறது , உண்மை என்ன ? சற்றே தெளிவாக விளக்கவும்.  நன்றி !

பதில் :

கிரக சேர்க்கை வைத்தே ஒரு ஜாதகத்தில் ஒருவருக்கு யோக அவ யோக நிலையை பற்றி நிர்ணயம் செய்கின்றனர் , குறிப்பாக சுப கிரகங்கள் சேர்க்கை பெரும் பொழுது யோக பலன்களையும் , அசுப கிரகங்களின் சேர்க்கை ஜாதகருக்கு அவ யோக பலன்களை தரும் என்று பலன் நிர்ணயம் செய்கின்றனர் பெரும்பாலான ஜோதிடர்கள் , இதில் சுய ஜாதகத்தில் கிரக சேர்க்கை நிர்ணயம் செய்யும் பொழுது பல விதி விளக்குகள் உள்ளன , இதனால் ஒருவருடைய சுய ஜாதகத்தில் கிரக சேர்க்கை பெறாதா நிலையை கூட யோக நிலை என்றும் , கிரக சேர்க்கை பெற்ற நிலையை கிரக சேர்க்கை இல்லை என்றும் கணிதம் செய்து பலன் சொல்கின்றனர் .


எடுத்துகாட்டாக :

மேற்கண்ட இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு பெரும்பாலான ஜோதிடர்களின் கணிப்பு , ராகு கிரகத்துடன் செவ்வாய் குரு சேர்க்கை பெற்று இருக்கிறது என்றும் , சனி பகவானுடன் எந்த கிரகமும் சேர்க்கை பெறவில்லை என்பதாகவே இருக்கிறது , உண்மையில் இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு ராகு கிரகத்துடன் எந்த ஒரு கிரகமும் ஒரே பாவகத்தில் சேர்க்கை பெறவில்லை, கரணம் இந்த ஜாதகருக்கு லக்கினம் என்பது, சிம்மத்தில் 131.33.44 பாகையில் ஆரம்பித்து, கன்னியில் 162.12.33 பாகையில் முடிவடைகிறது .

இதில் ராகு  ஜாதகத்தில் 126.25.02 பாகையில் அமர்ந்து இருக்கிறார் எனும் பொழுது  , ராகு சிம்மத்தில் அமர்ந்து இருந்தாலும் சிம்மத்தில் உள்ள 12 ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதாகவே நாம் எடுத்துகொள்ள வேண்டும் , அதுவே சரியான  ஜோதிட கணிதம் , இதில் சனி பகவான் கன்னியில் அமர்ந்து இருந்தாலும் , அவர் லக்கின பாவகத்திர்க்கு உற்பட்ட 152.39.12 பாகையில் அமர்ந்து  விடுவதால் சனி பகவான் குரு செவ்வாய் பகவானுடன் சேர்க்கை பெற்றதாகவே  நாம் எடுத்துகொள்ள வேண்டும் , இதுவே கிரக சேர்க்கை பற்றிய  துல்லியமான ஜோதிட கணிதம்.

 இங்கே ராகு பகவான் சிம்மத்தில் குரு செவ்வாயுடன்  சேர்க்கை பெற்று இருப்பதுபோல் தெரிந்தாலும் , உண்மையில் அவற்றுடன்  சேர்க்கை பெறவில்லை , சனி கன்னியில் தனித்து நிற்பது போல் தோற்றம் தந்தாலும் , லக்கினத்திற்கு உட்ப்பட்ட பாகைக்குள் அமர்ந்து  இருப்பதால் உண்மையில் குரு பகவானுடனும் செவ்வாய் பகவனுடனும்  சேர்க்கை பெற்று அமர்ந்து இருக்கிறார் என்பதே உண்மை , மேற்கண்ட  எடுத்து காட்டில் இருந்து நாம் தெரிந்து கொள்வது , லக்கினம் மற்றும் 12 பாவகங்களும் எந்த பாகையில்  ஆரம்பிக்கிறது எந்த பாகையில்  முடிவடைகிறது என்று தெரியாத பொழுது , சுய ஜாதகத்தில் கிரக சேர்க்கையை  பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாது , மேலும் அந்த கிரக  சேர்க்கை தரும் நன்மை தீமையை பற்றி தெரிந்து கொள்ள முடியவே முடியாது .

ஒரு ஜாதகத்தில் கிரக சேர்க்கை பற்றி முடிவு செய்வதிலேயே இவ்வளவு குளறுபடிகள் ஜோதிடர்களுக்கு இடையே காணப்படும் பொழுது , பாவம் ஜோதிட பலன் காண வந்தவரின் நிலை பரிதாபத்திற்கு உரியது , இதனால் தான் பல  ஜோதிடர்கள் ஆக ஓகோ இது ராஜ யோக ஜாதகம் என்று சொன்ன ஜாதகர்  கூட எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் , விட்டத்தை பார்த்து  கனவு கண்டு கொண்டு இருக்கின்றனர் , ஆக ஜாதகத்தில் துல்லியமாக  பாகை வாரியாக கணிதம் செய்து பலன் காணும் பொழுதே சரியான  பலனை ஜாதகருக்கு சொல்ல இயலும் , அதுவே ஜாதகருக்கு நல்ல வாழ்க்கையை  அமைத்து தரும் .

சரி தாங்கள் கேட்ட கேள்விக்கு உண்டான பதிலுக்கு வருவோம் , சாயா கிரகத்துடன் சேரும்  கிரகங்கள் ஜாதகருக்கு எவ்வித பலனை தரும் ? 

ராகு அல்லது  கேதுவுடன் சேர்ந்து ஒரு பாவகத்தில் அமரும் கிரகங்கள் , அமர்ந்த  அந்த பாவகத்திர்க்கு எவ்வித நன்மை தீமையும் செய்ய இயலாது , அங்கு  அமர்ந்த ராகுவோ கேதுவோ முழு பலனையும் தானே ஏற்று நடத்தும் , மேற்கண்ட  சிம்ம இலக்கின ஜாதகத்தில் கேதுவுடன் சூரியன் , புதன் இரண்டு கிரகமும் சேர்க்கை பெற்று 6 ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறது , இங்கு கேதுவுடன்  சேர்ந்த சூரியன் , புதனுக்கு எவ்வித பலனும் 6 ம் பாவகத்திர்க்கு தர வாய்ப்பு  சிறிதும் இல்லை , கேது என்ற கிரகமே ஆறாம் பாவகத்திர்க்கு உண்டான  முழு பலனையும் செய்யும் அதுவும் 100 சதவிகிதம் நன்மையாக , ஆனால்  சூரியன் லக்கினத்திற்கும் , புதன் இரண்டு மற்றும் பதினொன்றாம் பாவகத்திர்க்கு  உண்டான நன்மை தீமை பலனை செய்வார்கள் .

பொதுவாக சாய கிரகமான ராகு கேதுவுடன்  எந்த கிரகமும் சேர்க்கை பெற்று ஒரே  பாவகத்தில் அமர்ந்தாலும் , அந்த பாவகதிர்க்கு எவ்வித நன்மை தீமையும்  செய்ய இயலாது , ஏனெனில் அந்த பாவகதிர்க்கு உண்டான நன்மை தீமை பலன்களை  ராகு கேதுவே 100 சதவிகிதம் நிர்ணயம் செய்யும் என்பதால், ராகு கேதுவுடன்  சேர்க்கை பெற்ற கிரகத்தை பற்றி நாம் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை, ராகு கேது ஜாதகருக்கும் அந்த பாவகதிர்க்கும் நன்மை  செய்கிறதா ? தீமை செய்கிறதா ? என்பதை மட்டும் பார்த்தால் போதும்,   அதுவே  ஜாதகருக்கு சரியான பலன் சொல்ல உதவும்.

 இல்லை எனில் குத்து மதிப்பாக 12 ராசிக்கும் நன்மைகள் மிக பெரிய அளவிலே, அதிக அளவிலே நன்மைகள் நடைபெறும் ஒரு நல்ல நாளாக விளங்குகிறது, என்று கதை விட்டுக்கொண்டு , காலத்தை கடத்த  வேண்டியதுதான். 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443306969