முன்னேற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னேற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் ஜீவன மேன்மை ( தொழில் முன்னேற்றம் ) தரும் திசாபுத்திகள் !




ஒருவரது சுய ஜாதக அமைப்பின் படி தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற்றமும், யோகமும் தரும் திசாபுத்திகள் எது என்பதை தெளிவாக ஜாதக கணிதம் மூலம் தெரிந்துகொண்டு, அந்த கால நேரத்தில் ஜாதகர் தொழில் ரீதியான முயற்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது 100% விகித வெற்றிகளை தங்கு தடையின்றி ஜாதகர் பெறலாம், பொதுவாக ஒருவரது தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் வரும் முன்னேற்றத்தை நிர்ணயம் செய்வது அவரது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்து திசாபுத்திகளே என்றால் அது மிகையில்லை, பொதுவாக சுப கிரகமான குரு,சுக்கிரன்,புதன்,வளர்பிறை சந்திரன் திசாபுத்திகளில் ஜீவன மேன்மை உண்டாகும் என்று கணிப்பதும், அசுப கிரகங்களான சூரியன்,செவ்வாய்,தேய்பிறைசந்திரன்,சனி,ராகுகேது  திசபுத்திகளில் ஜீவன முன்னேற்றம் தடைபடும், பாதிப்பை தரும் என்று முடிவு செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகவே கருதலாம்.

தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற்றமும், முன்னேற்றம் அற்ற நிலையை தருவது நவ கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அல்ல, குறிப்பிட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையும், அந்த பாவக பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமுமே என்றால் அது மிகையில்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் தர ஜோதிடதீபம் கடமைபட்டு இருக்கிறது.

உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 1ம் பாதம் 

ஜாதகருக்கு சிம்ம லக்கினம், சுய ஜாதகத்தில் ஜீவனத்தை குறிக்கும் 10ம் பாவக நிலை ஆய்வு செய்யும் பொழுது 1,2,4,5,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம், 1,2,4,58,10ம் வீடுகள் முறையே ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதால், ஜாதகர் இலக்கின வழியில் இருந்து சுயமாக தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பவர் என்பது உறுதியாகிறது, ஜாதகர் தனது அறிவின் வழியிலோ, அல்லது தனது உடல் உழைப்பின் மூலமோ ஜீவனத்தை தேடி சுயமாக தொழில் வெற்றிகளை குவிப்பார் என்பதும், தனது சுய உழைப்பின் மூலம் ஸ்திரமான தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கும் தன்மையை பெறுவார் என்பதும் 1ம் பாவக வழியில் இருந்து உறுதிபடுத்த படுகிறது.

ஜாதகர் 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வருமான வாய்ப்பை பெறுவார் தனது பேச்சு திறனின் காரணமாக நல்ல வேலைவாய்ப்பை பெறுவதும், வரும் வருமானத்தை கொண்டு வாழ்க்கையில் தொழில் துவங்கும் தன்மையை ஜாதகருக்கு தரும், 4ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வீடு,வண்டி,வாகனம்,நிலம்,சொத்து ஆகிய அமைப்பில் இருந்தும் நல்ல வருமானத்தை தரும், தனது பெயரில் இருக்கும் அசையும் அசையா சொத்துகள் மூலமும் ஜாதகருக்கு தொழில் அமையும், தனது பெயரிலேயே ஜாதகர் தொழில் துவங்கி செய்யலாம், தனது பெயரில் சொத்து வாங்கலாம் விற்கலாம் எனவே ஜாதகருக்கு 4ம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது மிகுந்த யோகத்தை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து, ஜாதகர் தான் கற்ற கல்வியின் வழியில் இருந்தும், தனது முன்னோர்களின் அறிவு திறனின் தன்மையின் வழியில் இருந்து தொழில் முன்னேற்றங்களை பெறுவார், 5ம் பாவகம் ஜீவன பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகரின் புதிய சிந்தனையும், புதிய செயல்பாடுகளும், மற்ற அமைப்பில் இருந்து வேறுபடுத்தி தனித்தன்மையுடன் திகழ செய்யும், ஜாதகரின் வெற்றியும் இதன் வழியிலேயே அமையும், எவரும் பயன்படுத்தாத புதிய தொழில் முறை யுக்திகளை பயன்படுத்தி வாழ்க்கையில் ஜீவன மேன்மையை ஜாதகர் தங்குதடையின்றி பெறுவார், குல தெய்வத்தின் அருளாசிகள் ஜாதகரை எவ்வித தொல்லைகளில் இருந்தும் காப்பாற்றிவிடும் என்பது கவனிக்க தக்கது.

 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு திருமண வாழ்க்கையின் மூலம் ஜீவனம் மேம்படும் அமைப்பை தருகிறது, ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து நல்ல வருமான வாய்ப்பையும் தொழில் முன்னேற்றத்தையும் பெறுவார், 8ம் பாவகம் திடீர் அதிர்ஷ்டத்தை ஜீவன அமைப்பில் தருவதால், ஜாதகர் செய்யும் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் திடீரென முன்னேற்றத்தை பெற்று, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவார் என்பது வரவேற்க தக்கது, ஜாதகரின் தொழில் முன்னேற்றம் என்பது வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானத்தை அடிப்படையாக கொண்டதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

  10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் ஒரு ஸ்திரமான தொழில் முன்னேற்றத்தை பெறுவார் என்பதும், செய்யும் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் தொடர்ந்து வருமானத்தை பெற்றுகொண்டே இருப்பார் என்பதும் உறுதியாகிறது, ஜாதகரின் கையில் எப்பொழுதும் பணம் இருந்துகொண்டே இருக்கும், ஜீவன வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல கௌரவமும், அந்தஸ்தும் கிடைத்துக்கொண்டே இருக்கும், நிலையான மதிப்பு மரியாதையுடன் நீண்ட நெடுங்காலம் ஜீவன வாழ்க்கையை செய்யும் தன்மையை தரும், ஜாதகருக்கு ஸ்திரமான மண் தத்துவம் சார்ந்த தொழில்கள் அபரிவிதமான வெற்றியை வாரி வழங்கும், பொறுமையுடன் கையாளும் தொழில்கள் மூலம் நீண்டகால தொழில் முன்னேற்றத்தை ஜாதகர் ஸ்திரமாக பெறுவார் என்பது உறுதியாகிறது.


பொதுவாக ஜாதகரின் ஜீவன பாவகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது கிடைக்கும், சுய ஜாதகரீதியான பதில்கள் மேற்கண்டவை, இனி அடுத்தது மேற்கண்ட யோக பலன்களை ஜாதகர் எப்பொழுது, எந்த எந்த கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் பெறுவார் என்பது தெரிந்தால் மட்டுமே ஜாதகர், முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டு தனது ஜீவன வாழ்க்கையை மேலும் சிறப்பாக அமைத்துக்கொள்ள உதவும், ஆக அவரது ஜாதகத்தில் நடைபெறும் எந்த எந்த கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்து, அதை தெளிவாக ஜாதகருக்கு உணர்த்துவதே ஒரு சிறந்த ஜோதிடனின் கடமை.

எனவே ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம அமைப்பை இனி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தும் கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம விபரங்கள் பின்வருமாறு :

1) சனி 1,5ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.
2) புதன் 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.
3) கேது 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.
4) சந்திரன் 1,5ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.

ஆக ஜாதகர் ஜீவன ரீதியான வெற்றிகளை சனி,புதன்,கேது,சந்திரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில், தங்குதடையின்றி 100% விகிதம் பெறுவார் என்பது உறுதியாகிறது, எனவே ஜாதகர் மேற்கண்ட திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் தனது தொழில் அபிவிருத்தியை மேற்கொண்டு வாழ்க்கையில் சகல விதங்களில் இருந்தும் ஜீவன மேன்மையை பெறலாம் என்பதே "ஜோதிடதீபத்தின் " ஆலோசனை வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


ஞாயிறு, 2 நவம்பர், 2014

சாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையா ? கடின உழைப்பா ?




 புகழ் பெற்ற ஒருவரின்  ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் அனைவரும், அவரது புகழுக்கும் வெற்றிக்கும் காரணம் அவரது சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையே என்று கூறுவது வாடிக்கையானதே, மேலும் அவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் மிக சிறப்பாக இருந்தது, அதன் காரணமாக அந்த ஜாதகர் புகழ் பெற்ற ஆன்மீக பெரியவராகவோ, நடிகராக, அரசியல் தலைவராக, சமுதாயத்தில் புகழ் மிக்க பெரிய மனிதராக வளம் பெற்றார் என்ற வாதத்தை ஜோதிடதீபம் வேறு விதாமாக பார்க்கிறது, ஏனெனில் குறிப்பிட்ட ஜாதகருக்கு சில யோக நிலை இருந்த போதிலும் அதே அமைப்பை பெற்ற சில ஜாதகங்கள் வெற்றி பெற இயலாமல் போக காரணம் ஏன் ? என்பதை பற்றி இந்த ஆய்வில் சிந்திப்போம் அன்பர்களே !

 உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 

மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகரை தமிழகத்தில் அறியாதவர்களே இல்லை  எனலாம், ஏன் ? உலக அளவில் இவர் பிரபலமான நடிகர், ஆரம்பத்தில் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து, திரைப்பட துறையில் பெரிய புகழும், வெற்றியும் பெற்று உலகத்தை தன்பால் திரும்பி பார்க்க வைத்தவர், இயற்கையில் இவரது ஜாதகம் யோகம் நிறைந்ததா ? அல்லது ஜாதகரின் கடின  உழைப்பு ஜாதகருக்கு பல வெற்றிகளையும், உலக புகழையும் தேடி தந்ததா? என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் , முதலில் ஜாதகருக்கு பாவக தொடர்புகளை  பற்றி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் .

1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், 2,4.6,8,10,12ம் வீடுகள் எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம், ஆக இவரது ஜாதகத்தில் எந்த ஒரு திசை பலனை தந்தாலும்  சரி ஒன்று 11ம் பாவகமான லாப ஸ்தான பலனை தரவேண்டும், அல்லது 6ம் பாவகமான எதிரி ஸ்தான பலனை தர வேண்டும், இதை தவிர வேறு பாவக  பலன்கள் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை, எனவே 6,11 ம் பாவக அமைப்பை காணும் பொழுது 6ம் பாவகம் ஜாதகருக்கு மகரத்தில் 290:14:45 பாகையில் ஆரம்பித்து, கும்பத்தில் 320:15:29 பாகையில் முடிவடைகிறது , இந்த மகரமும் கும்பமும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாகவும், 11ம் வீடாகவும் வருவது கவனிக்க தக்கது, ஏனெனில் இங்கே ஜாதகருக்கு 6ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானமாக  வருவதால் கடின உழைப்பையும், நிலையான அதிர்ஷ்டத்தையும் தந்தது, சர மகர ராசி மண் தத்துவ அமைப்பில் இருந்து ஜாதகருக்கு கடின உழைப்பையும், ஸ்திர கும்ப ராசி காற்று தத்துவ அமைப்பில் இருந்து நிலையான ( ஸ்திரமான ) அதிர்ஷ்டத்தையும், வாரி வழங்கியது. இதன் காரணமாகவே ஜாதகர் தான் ஏற்று கொண்ட தொழிலை  சிறப்பாகவும் செம்மையாகவும் பணியாற்ற முடிகிறது,
    
11ம் பாவக அமைப்பை காணும் பொழுது 11ம் பாவகம் ஜாதகருக்கு மிதுனத்தில் 80:42:17 பாகையில் ஆரம்பித்து கடகத்தில் 110:14:45 பாகையில் முடிவடைகிறது. இந்த மிதுனமும் கடகமும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு முறையே 3ம் வீடாகவும், 4ம் வீடாகவும் வருகிறது, ஜாதகருக்கு 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முயற்ச்சி ஸ்தானமாகவும், சுக ஸ்தானமாகவும் வருவதால், ஜாதகருக்கு மக்கள் மத்தில் நல்ல தொடர்பு கிடைத்தது ( 3ம் பாவகம் மக்கள் தொடர்புகளை  பற்றியும் சொல்லும்) சுக ஸ்தான அமைப்பில் இருந்து  சொத்து சுக  சேர்க்கையும் மிக பெரிய தன சேர்க்கையையும் தந்தது , இதுவெல்லாம்  இந்த ஜாதகருக்கு சுய ஜாதக ரீதியாக அமைந்தது, மேலும் இந்த ஜாதகர் பாவக வழியில் இருந்து எவ்வித பாதிப்பை பெற்றார் என்பதை பார்ப்போம், சுய ஜாதக அமைப்பின் படி ஜாதகருக்கு பாதிப்பை தரும் அமைப்பு 6,12ம் பாவகங்கள் மட்டுமே, வேறு எந்த பாவகமும் ஜாதகருக்கு பாதிப்பை தரவில்லை , மேற்கண்ட பாதிப்புகள் ஜாதகருக்கு உடல் சார்ந்த அமைப்பில் மட்டுமே இருப்பதால் ஜாதகருக்கு அவை பெரிய பதிப்பை தரவில்லை, பொருளாதார வசதி ஜாதகருக்கு உடல் நலத்தை பாதுகாத்தது, ஆக ஜாதக அமைப்பில்  நல்ல யோக அமைப்புகளே இருப்பதால், ஜாதகர் வெற்றி பெற்றார் என்று எடுத்துகொள்லாமா ? முற்றிலும் இல்லை அன்பர்களே ! ஜாதகர் 11ம் பாவக  வழியில் இருந்து தனது அதிர்ஷ்டத்தை எப்படி அபிவிருத்தி செய்து கொண்டார் என்பதை இனி பார்ப்போம் .

தமிழர்களுக்கு மிகப்பெரிய குணம் ஒன்று உண்டு, அதாவது " வந்தாரை வாழவைக்கும் தமிழகம் " என்ற வார்த்தைக்கு ஏற்ப, இவரது நடிப்பிற்கும், வித்தியாசமான நடைமுறைக்கும், ஈர்க்க பட்ட மக்கள் ஜாதகரை வெகுவாக வாழ்த்த ஆரம்பித்தனர், அவர்கள் மனதில் ஜாதகர் நிரந்தரமாக கதாநாயகனாக அமர்ந்துகொண்டார், அவரது ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் பெரிய அளவில் உயர்ந்து நின்றார், ரசிகனின் எண்ண அலைகள் யாவும் ஒன்று சேர்ந்து ஜாதகரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது ( ரசிகன் வீட்டில் குடிப்பதற்கு கஞ்சி இல்லாமல் கிடப்பான் அது வேறு விஷயம் ஆனால் தனது தலைவன் மிகவும் நல்லவர் என்ற எண்ணம் தீர்க்கமாக இருக்கும் ) , ஜாதகர் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற வைத்தது, ஆக ஜாதகரின் யோக அமைப்பும், மக்கள் செல்வாக்கும் மக்களின் எண்ண அலைகளும், அவர்களின் வாழ்த்துகளும் ஒன்று சேரும் பொழுது ஜாதகர் வெற்றிகரமாக புகழின் உச்சிக்கு மிக எளிதாக சென்று வெற்றிக்கொடி நாட்டமுடியும் என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, வெற்றி பெற்ற பல மனிதர்களுக்கு பின்னல் அவர்களது ரசிகர்,தொண்டர்,பணியாளர்களின் நல்ல எண்ண அலைகளும், வாழ்த்துகளும் ஓங்கி நிற்கும் என்பதை எவராலும் மறுக்க இயலாது அன்பர்களே!.

அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர், ஆன்மீகபெரியோர், தொழில் அதிபர்கள், சமூக பெரிய மனிதர்கள் அனைவரின் புகழ் மிக்க வெற்றிக்கு பின்னல் அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், பணியாளர்கள், பொதுமக்களின் எண்ண அலைகளும் , அவர்களது வாழ்த்துகளும் ஒன்று சேர்ந்தே  மேற்கண்ட நபர்களின் வெற்றியும், பொருளாதார முன்னேற்றத்தையும் அபரிவிதமாக பெற முடிகிறது,  ( சுய ஜாதகத்தில் யோக அமைப்பு இருந்த போதிலும் ) மேற்கண்ட நபர்களின் வெற்றிக்கு அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நல்ல எண்ணங்களே , அடிப்படை காரணமாக அமைகிறது, என்ற கருத்தை இங்கே ஜோதிடதீபம் பதிவு செய்ய விரும்புகிறது.

உதாரண ஜாதகத்தை இன்னும் சற்றே ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே ! 

ஜாதகர் பிறந்ததில் இருந்து தற்பொழுது உள்ள வரை நடைபெறும் திசைகள் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்று பார்ப்போம் 1

பிறப்பில் ஜாதகருக்கு சந்திரன் திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 2வதாக செவ்வாய் திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 3வதாக ராகு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 4வதாக குரு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 5வதாக தற்பொழுது நடைபெறும் சனி திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் தந்து கொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு தீமையை செய்யும் திசை அல்லது புத்தி என்று பார்க்கும் பொழுது சூரியன் கேது மட்டுமே அதிக தீமையை ஸ்திரமாக செய்யும் என்பது உறுதியாகிறது, எனவே ஜாதகருக்கு சிரமம் என்ற நிலை சூரியன்,கேது புத்தி,அந்தரம்,சூட்சமம் போன்ற காலங்களிலேயே நடைபெற்று இருக்கும் என்பதை ஆய்வின் மூலம் தெரிந்துகொள்ளலாம் அன்பர்களே !

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 5,11ம் பாவகங்கள்  நல்ல நிலையில் இருப்பின் கலை துறையில் மிகப்பெரிய இடத்தை பெற முடியும், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பின் பெயரும் புகழும் ஜாதகருக்கு வெகு விரைவில் கிடைக்கும் இது உறுதி, 5ம் பாவகம் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பின் ஜாதகருக்கு ஆய கலைகள் 64 ல் நல்ல  புலமையும், பண்டித்தியமும் நிச்சயம் இறை அருளால் கிடைக்கும், 5ம் பாவகம் என்பது ஜாதகரின் சுய அறிவாற்றலையும் சமயோசித புத்திசாலிதனத்தையும் வெளிபடுத்தும், நவரசம் சொட்டும் முகபாவகங்கள் மிக எளிதாக கைவர பெறுவார்கள் என்பது குறிப்பிட தக்கது, மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் பாவகம் லாப ஸ்தானதுடன் தொடர்பு பெற்று, லாப ஸ்தானம் மிதுனம் கடகம் ராசி கலப்பில் அமைந்ததால் மேற்கண்ட புகழும் வெற்றியும், கலைத்துறையில் மிக எளிதாக பெற முடிந்தது, மேலும் 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு முற்போக்கு சிந்தனையும், தன்னம்பிக்கையையும் தந்தது, 3ம் பாவக வழியில் இருந்து விடாமுயர்ச்சியையும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை தந்தது, 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான நடிப்பு திறனை தந்தது, 7ம் பாவக வழியில் இருந்து பொதுமக்கள் ஆதரவையும், மக்களிடம் முகமதிப்பையும் பெற்று தந்து, 9ம் பாவக அமைப்பில் இருந்து சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற பெயரை பெற்று தந்து,11ம் பாவக வழியல் இருந்து மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும், யோக வாழ்க்கையையும் வாரி வழங்கியது.

சுய ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது, ஜாதகருக்கு அவரது எதிரிகள் செய்யும் சூல்சியே மிகப்பெரிய வெற்றியையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கி விடும், மேலும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள், இவரது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம், மேலும் ஜாதகர் 2,4,8,10ம் வீடுகள் 6ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 2,4,8,10ம் பாவக வழியில் இருந்து 100% யோகத்தை வாரி வழங்கி இருப்பது கண்கூடான விஷயம், 2ம் பாவக வழியில் இருந்து பல தலைமுறைக்கு உண்டான வருமானம் ஜாதகரே சம்பாதிக்கும் வல்லமையை தந்தது , 4ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான சொத்து சுக சேர்க்கையை தந்தது, 8ம் பாவக வழியில் இருந்து புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை திடீரென குறுகிய காலத்தில் தந்தது, 10 ம் பாவக வழியில் இருந்து சிறந்த கௌரவம், அந்தஸ்து, புகழ், ஸ்திரமான ஜீவனம் என்ற அமைப்பை தந்தது. 

இருப்பினும் இந்த ஜாதகருக்கு 12ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதால் மன நிம்மதி என்ற விஷயம் வெகுவாக பாதிக்கபடுகிறது , இதன் காரணமாகவே இவர் இமையமலை பயணம் என்று வருடம் ஒரு முறையாவது சென்று வருகின்றார், சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெற்றால் மட்டுமே ஆன்மீக வெற்றி கிட்டும், இந்த ஜாதகருக்கு 12ம் பாவகம் கடகமாக வருவதால் ஆன்மீகத்தில் ஈடுபாட்டை தந்தது, ஆனால் 12ம் பாவகம் கடுமையாக பாதிக்க படுவதால் ஜாதகர் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற இயலவில்லை, ஆன்மீகம் என்ற பெயரில் இவர் அடிக்கும் கூத்து ( என்பது ) இதில் இருந்தே நமக்கு தெளிவாக தெரியும்.

சாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையும், அவரது கடின உழைப்பும் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை, பொதுமக்களின் ஆதரவும் அவர்களின் எண்ண ஆற்றலும் ஜாதகருக்கு கிடைக்கும் பொழுதே ஜாதகருக்கு அபரிவிதமான வெற்றியும் புகழின் உச்ச நிலைக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது என்பதை ஜோதிடதீபம் இங்கு உறுதி பட தெரிவிக்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

ஜோதிட ஆலோசனை : கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் யோக ஜாதக நிலை !



கேள்வி :

எனது சுய ஜாதக ரீதியாக சுய தொழில் தனியாக செய்யலாமா ? கூட்டாக செய்யலாமா ? வாழ்க்கையில் தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டா ?

பதில் :

தங்களுடைய ஜாதக அமைப்பில் களத்திரம் , மற்றும் பூர்வ புண்ணியம் இரண்டும் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுகிறது இருப்பினும் அது உபய தத்துவமாக இருப்பதால் அதிக நன்மை இல்லை என்பதே உண்மை , மேலும்  கூட்டு தொழில் மூலம் வரும் வருமானத்தை குறிக்கும் 8 ம் பாவகம்  8 ம் வீட்டுடனே தொடர்பு பெறுவது 100 சதவிகித தீமையான பலனை தரும் , அதாவது கூட்டு தொழில் மூலம் வரும் வருமானம் அனைத்தும் ஒருநாள் இழக்கும் சூழ்நிலையை ஏற்ப்படலாம், எனவே கூட்டு தொழில் செய்யும் பொழுது பண விஷயத்தில் அதிக கவனம் தேவை ,  தங்களுடைய ஜாதக அமைப்பில் லக்கினம் மட்டும் தொழில் ஸ்தானம் இரண்டும் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் கூட்டு தொழில் செய்வதை விட , தனித்து தொழில் செய்வது அபரிவிதமான வெற்றியை தரும் , கூட்டு தொழில் 33 சதவிகிதம் மட்டுமே நன்மை செய்யும் , தனித்து சுய தொழில் செய்வது 66 சதவிகிதம் யோக பலனை செய்யும் என்பது தங்களது ஜாதக அமைப்பில் உள்ள ஒரு சிறப்பான யோக நிலை , எனவே தனியாக தொழில் செய்வதே தங்களுக்கு அதிக  நன்மையை தரும் .

கூட்டு தொழில் மூலம் வெற்றி பெற கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான முன்னேற்றம் பெற வேண்டுமெனில் சுய ஜாதக அமைப்பில் , களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடும் , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடும் மிகவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , இதில் களத்திர பாவகம், ஜாதகரின் தொழில் முறை கூட்டாளியின் தன்மையையும், ஜாதகருக்கு தொழில் முறை கூட்டாளியால் கிடைக்கும் ஆதரவினை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள முடியும் , மேலும் கூட்டாளி ஜாதகருடன் எப்படிபட்ட உறவினை கையாளுவார் என்பது களத்திர பாவக வழியில் இருந்து துல்லியாமாக தெரிந்து கொள்ள இயலும் , ஜாதகருடன் கூட்டு சேரும்பொழுது எவ்விதத்தில் தொழில் முதலீடு செய்வார் ( அதாவது பொருளாதார உதவியா? அறிவு வழியில் உதவியா? சொத்து அமைப்பில் உதவியா ? ) என்பதை தெரிந்து கொள்ளவும் களத்திர பாவகத்தின் நிலையை வைத்து நிர்ணயம் செய்துவிட முடியும் .

ஒரு ஜாதகருக்கு களத்திர பாவகம் நல்ல நிலையில் இருந்தால் , ஜாதகர் கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் , இதில் களத்திர பாவகம் சர ராசிகளுடன் தொடர்பு பெறுவது மிகசிறந்த யோகபலனை வாரிவழங்கும் , குறிப்பாக மேஷம் , கடகம் , துலாம், மகர ராசியாக அமைவது மிகப்பெரிய வெற்றிகளை தரும் , மேலும் இந்த ராசிகள் ஜாதகருக்கு 11 ம் வீடாக வருவது மிகவும் சிறப்பான விஷயம். இந்த அமைப்பில் ஒரு ஜாதகருக்கு களத்திர பாவகம் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று , அது ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமைந்து விட்டால்  ஜாதகரின் கூட்டு தொழில் 
நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறிவிட வாய்ப்பு உண்டு , இந்த அமைப்பை பெற்றவர்கள் எக்காரணத்தை கொண்டும் கூட்டு தொழில் பக்கம் தலை வைத்தும் கூட படுக்க கூடாது , இந்த அமைப்பு மேற்கண்ட சர லக்கினத்தை பிறப்பு லக்கினமாக கொண்டவர்களுக்கே பொருந்தும் , அதாவது மேஷம் , கடகம் , துலாம், மகர ராசியை இலக்கணமாக கொண்டவர்களுக்கு , களத்திர பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது எக்காரணத்தை கொண்டும் ஜாதகருக்கு கூட்டு தொழில் ஆகவே ஆகாது , தனித்து தொழில் செய்வதே சாலசிறந்தது .

எந்த ஒரு இலக்கின அமைப்பை சார்ந்தவராக இருந்தாலும் களத்திர பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் , அந்த ஜாதகர் கூட்டு தொழிலுக்கு ஏற்றவர் அல்ல , மேலும் இவருடன் கூட்டு தொழில் செய்பவரையும் இது பாதிக்கும் , தொழில் பின்னடைவை விரைவில் சந்திக்க வேண்டிவரும் , மேலும் சுய ஜாதகத்தில் இந்த நிலையை பெற்றவர்கள் கூட்டு தொழில் செய்வது என்பது கண்ணை மூடிக்கொண்டு தண்ணீர் இல்லா கிணற்றில் விழுவதற்கு ஒப்பானது. இதில் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் முதலீடு செய்த தொகை திரும்ப கிடைக்கலாம் , ஒருவேளை பூர்வ புண்ணியமும் பாதிக்க பட்டிருந்தால் முதலீடு செய்த தொகை நிச்சயம் 100 சதவிகிதம் கிடைக்க வாய்ப்பே இல்லை, எனவே கூட்டு தொழில் செய்யுமுன்னர் ஜாதகர் தனது சுய ஜாதகத்தை தெளிவாக தெரிந்து கொண்டு முதலீடு செய்வது அதிக நன்மையை தரும் .

கூட்டு தொழில் மூலம் யோகமான வாழ்க்கையினை பெரும் அமைப்புள்ள ஜாதக நிலை :

சுய ஜாதக அமைப்பில் நண்பர்கள் கூட்டாளிகளை குறிக்கும், களத்திர பாவகம் மிகவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் , களத்திர பாவகத்திர்க்கு இரண்டாம் வீடான ௮ ம் வீடு ஜாதகருக்கு நண்பர்கள் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் வருமானத்தை குறிக்கும் , களத்திர பாவகத்திர்க்கு பதினொன்றாம் வீடான பூர்வ புண்ணியம் எனும் 5 ம் வீடு நல்ல நிலையில் இருப்பது ஜாதகர் தனது நண்பர்கள் , மற்றும் கூட்டாளிகள் மூலம் அடையும் நன்மை மற்றும் லாபத்தை குறிக்கும் , ஒரு ஜாதக அமைப்பில் மேற்கண்ட மூன்று பாவகங்களும் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் துணிந்து கூட்டு தொழில் செய்யலாம் , இதனால் ஜாதகருக்கு 100 சதவிகிதம் கூட்டு தொழில் மூலம் யோகமான பலனே நிச்சயம் நடக்கும் .

மேற்கண்ட பாவகங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் சர ராசிகளுடனோ , ஸ்திர ராசிகளுடனோ தொடர்பு பெற்றால் மிகுந்த நன்மையை தரும் , உபய ராசிகளுடன் தொடர்பு பெறுவது சராசரியான தொழில் வளர்ச்சியினை மட்டுமே தரும் , ஆனால் இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமைந்துவிட கூடாது .

சுய ஜாதக நிலையை தெளிவாக தெரிந்து கொண்டு கூட்டு தொழில் செய்து வெற்றி பெறுங்கள் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


திங்கள், 16 ஜூலை, 2012

பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தமும், சிறப்பு குழந்தை ( Special kid ) பிறப்பும் !



எனது நெருங்கிய நண்பரின் உறவினரின் ஜாதகம் இது , இந்த ஜாதகருக்கு தீர்மானம் ஆவதற்கு முன் எங்களிடம் ஆலோசனை பெற வந்தனர் ,  ஜாதகரின் வாழ்க்கையை அடிப்படியில் இருந்து பார்க்கும் பொழுது நல்ல வளரும் சூழ்நிலை ஜாதகருக்கு அமைந்து இருக்க வில்லை , கல்வியும் சரி தடை பட்டது , நண்பர்கள் சேர்க்கையும் சரியானதாக அமைய வில்லை , இதற்க்கு காரணம் குடும்பம் ,மற்றும் இலக்கின பாவங்கள் பாதக ஸ்தனாத்துடன் சம்பந்தம் பெற்றது,  பரம்பரை தொழில் மட்டும் ஜாதகருக்கு சிறப்பாக வாய்த்து இருந்தது , தனது தகப்பானாருடன் சேர்ந்து அந்த தொழிலை சிறப்பாக செய்யும் யோகம் ஜாதகருக்கு ஏற்ப்பட்டது , இதற்க்கு காரணம் சுகம் மற்றும் ஜீவன ஸ்தானங்கள் சிறப்பாக அமைந்ததுமே . மேலும் இவரது ஜாதக அமைப்பு படி பூர்வ புண்ணியம் ஸ்தானம் லக்கினத்திற்கு பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெற்று இருந்தது , இது ஜாதகரின் முன்னேற்றத்தை வெகுவாக பாதித்துக்கொண்டு இருந்தது .

எம்மிடம் ஜாதகர் வந்த பொழுது திருமண பொறுத்த அமைப்பை பார்த்து திருமணம் செய்ய ஆலோசனை கேட்டனர் , குழந்தை பாக்கிய அமைப்பை பற்றி கேட்ட பொழுது , ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் பாதிக்க பட்டு இருப்பதால் ஜாதகர் தனது பூர்விகத்தை விட்டு வெகு தொலைவில் ( 100 km அப்பால் அல்லது எல்லை அமைப்பை தாண்டி ) குடியிருக்க வேண்டும் , திருமண வாழ்வில் எவ்வித சிக்கலும் இல்லை ஆனால் ஜாதகர் தனது பூர்விகத்தில் குடியிருக்கும் பொழுது  ஆண் குழந்தை பிறந்தால் , அந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்ப்படலாம் என்று அறிவுறுத்தி இருந்தோம்.

ஆனால் ஜாதகர் குடும்பம் இதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் திருமணத்திற்கு பிறகு தனது பூர்விகத்திலேயே குடி அமர்த்தினர் ஒரு வருடத்திற்கு பிறகு ஜாதகருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது , குடும்பமே மிகவும் சந்தோஷ பட்டது , ஏனெனில் நாம் சொல்லியது போல் அந்த குழந்தைக்கு எவ்வித குறைபாடும் இருக்கவில்லை, இந்த சந்தோசம் அவர்களுக்கு  வெகு நாள் நீடிக்கவில்லை இரண்டு வருடங்களுக்கு பிறகு அந்த குழந்தை வளர வளர தான் அதன் பெற்றோருக்கு , அந்த குழந்தை ஒரு சிறப்பு குழந்தை ( special kid ) என தெரிய வந்தது அதாவது கேட்க்கும் திறன் , பேசும் திறன் , தானாக நடக்கும் வலிமை அற்றது என தெரிய வந்தது, இதற்குள் அவர்கள் அவசர பட்டு ஒரு குழந்தை போதும் என்று குடும்ப கட்டுபாடு வேறு செய்து விட்டனர், இதனால் அவர்களது குடும்பம் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தனர் .

மீண்டும் அவர்கள் எம்மிடம் ஆலோசனை பெற வந்தனர் , அய்யா தாங்கள் சொல்லியது போல் நடந்து விட்டது , இதற்க்கு நாங்கள் செய்த பாவம் தான் காரணமா அல்லது வேறு எதாவது பாதிப்பா , நாங்கள் மிகவும் மன துயரத்துடன் இருக்கிறோம் எங்களுக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் என்றனர் , கவலை பட வேண்டாம் இதற்க்கு காரணம் நீங்கள் செய்த பாவமும் அல்ல  புண்ணியமும் அல்ல தங்களது மகனின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் கடுமையாக பாதிக்க பட்டதே , எனவே இனியாவது அவர்களை பூர்விகத்தை விட்டு வெகு தொலைவிற்கு  சென்று குடியிருக்க சொல்லுங்கள் , நிச்சயம் இறைவன் அருளால் நன்மை பெறுவீர்கள் என்று ஆலோசனை வழங்கினோம் , இங்கு இருக்கும் தொழில் எப்படி செய்வது என்றனர் , நல்ல நிர்வாகியை வேலைக்கு அமர்ந்துங்கள் மாதத்தில் இரண்டு முறை வந்து தொழில் நன்றாக நடை பெறுகிறத என்று கவனித்து கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தோம் .

சில மாதங்களுக்கு பிறகு அவர்கள் மறுபடியும் வந்து நன்றி சொன்னார்கள்  , காரணம் இவர்கள் தனது பூர்விகத்தை விட்டு சென்ற சில மாதங்களிலேயே நல்ல மருத்துவர் அமைந்து அந்த குழந்தை படி படியாக குணம் அடைந்து வருவதாகவும் , குழந்தையின் தாய் செயற்கை முறையில் மீண்டும் கருவுற்று இருப்பதாகவும் , தான் செய்து வந்த தொழிலை சென்ற இடத்தில் மிகவும் பெரிய அளவில் செய்து வருவதாகவும் மகிழ்வுடன் தெரிவித்தனர் , எல்லாம் இறை நிலையின் கருணை என்றோம் .

இவர்கள் நாங்கள் முன்பே சொன்னது போல் திருமணம் ஆனா உடன் வேறு இடத்திற்கு சென்று இருந்தால் , இந்த துன்பங்களை அனுபவித்து இருக்க தேவையில்லை, அந்த குழந்தையும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நன்றாக பிறந்து இருக்கும் , இதற்க்கு முக்கிய காரணம் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் பாதிக்க பட்டு தனது பூர்விகத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லாமல் இருந்தது மட்டுமே காரணம் , மேலும் தொழில் அமைப்புகளில் பெரிய வெற்றிகளை பெற முடியாததிர்க்கும் இதுவே காரணம் . பூர்விகத்தை விட்டு சென்றவுடன் இவ்வித பாதிப்புகளில் இருந்து, அவர்களது குடும்பம் விரைவாக மீண்டு வர தொடங்கி விட்டது ஜாதக ரீதியான பலன்களை ஒருவருக்கு ஜாதகம் சரியாக தருகிறது என்பது இங்கே 100 சதவிகிதம் நிருபிக்க படுகிறது .   

எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் இந்த பூர்வ புண்ணியம் பாதிக்க பட்டாலோ? பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றாலோ ? தனது பூர்விகம் எதுவோ அந்த இடத்தை விட்டு எங்களது ஆலோசனை படி வெகு தொலைவில் ( 100 km அப்பால் அல்லது எல்லை அமைப்பை தாண்டி ) குடியிருக்க வேண்டும் , அப்படி இருப்பவர்களுக்கு இந்த பாவக வழியில் இருந்து எவ்வித துன்பமும் நிச்சயம் ஏற்ப்படுவதில்லை என்பது கண்கூடாக கண்ட உண்மை .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443306969