புத்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 டிசம்பர், 2016

5,11ல் ராகு கேது பெரும் வலிமையும், தனது திசையில் தரும் பலாபலன்களும் !


சுய ஜாதகங்களில் நவகிரகங்கள் ராசியில் வலிமை பெற்று இருப்பதும் ( ஆட்சி, உச்சம், நட்பு ,சமம்) ராசியில் வலிமை அற்று இருப்பதும் ( நீச்சம், பகை ) சுப கிரகங்களுடன் சேர்க்கை பெற்று இருப்பதும், பார்வை பெற்று இருப்பதும், அசுப கிரகங்களின் சேர்க்கை பெற்று இருப்பதும், பார்வை பெற்று இருப்பதும், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நடைமுறையில் வரும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் யோக அவயோக பலாபலன்களை தரும் என்ற கருத்து உள்ளது, இது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு முரண்பட்ட கருத்தாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, அதாவது சுய ஜாதகத்தில் வலிமை ( ஆட்சி, உச்சம், நட்பு ,சமம்) பெற்ற கிரகத்தின் திசை நடக்கும் பொழுது யோக பலன்களையும், வலிமை ( நீச்சம், பகை ) அற்ற கிரகத்தின் திசை நடக்கும் பொழுது அவயோக பலன்களையும் தரும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது, இது சிறிதும் ஏற்புடையது அல்ல, ஏனெனில் ஒருவருக்கு நடைபெறும் யோக அவயோக நிகழ்வுகளை நிர்ணயம் செய்யவது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, கீழ்கண்ட மிதுன லக்கின ஜாதகருக்கு 11ல் அமர்ந்த ராகு பகவான் அந்த பாவகத்தை மிகுந்த வலிமையுடையதாக திகழ செய்கிறார், இவரது ஜாதகத்தில் மிகுந்த வலிமையுடைய பாவகம் எதுவெனில் 5,11 எனலாம், சாயா கிரகங்கள் முறையே 11,5 என்ற நிலையில் அமர்ந்து சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு 100% விகித வலிமையை தருகின்றனர், எனவே தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலத்தில் சாயா கிரகங்களான ராகுகேது ஜாதகருக்கு தரும் பலன்கள் என்ன? என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : மிதுனம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : அஸ்தம் 1ம் பாதம்

ஜாதகருக்கு ராகு திசை தற்போழுது நடைமுறையில் உள்ளது ( 10/07/2002 முதல் 09/07/2020 வரை ) 11 ல் வலிமை பெற்று அமர்ந்துள்ள ராகு திசை ஜாதகருக்கு தனது திசையில் 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கின்றது, எனவே தற்போழுது நடைபெறும் ராகு திசையில் ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து கடன்,உடல் நலம், எதிரி தொல்லை என மிகுந்த இன்னல்களையும் மன உளைச்சல்களையும், 9ம் பாவக வழியில் இருந்து கல்வியில் தடைகளையும், காரிய தடைகளையும், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தையும், பெரியோர் மற்றும் பெற்றோர் வார்த்தைகளை மதிக்காமல் நடந்து சமூகத்தில் வீண் அவ பெயரையும் சம்பாதிக்கும் நிலையை தந்து கொண்டு இருக்கிறது, மேலும் தனது பித்ருக்கள்  வழியிலான சாபங்களையும், அறிவு பூர்வமற்ற செயல்களினால் தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்ளும் நிலையை தந்து கொண்டு இருக்கின்றது, 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஏற்படும் இழப்புகள் கொஞ்சம் அதிக அளவிலேயே உள்ளது, மேலும் மன அழுத்தம் மன போராட்டம், எதிர்ப்புகளை சமாளிக்க இயலாத சூழ்நிலை, விபத்து, பொருள் இழப்பு என கடுமையான இன்னல்களுக்கு ஜாதகர் ஆளாக்கிக்கொண்டு இருக்கிறார், ஜாதகருக்கு ஏற்படும் இழப்புகளை ஜாதகரால் தவிர்க்கவே இயலவில்லை, ஊரில் உள்ள உறவுகளும், சொந்த பந்தங்களும் ஜாதகரை மதிப்பதில்லை , அனைவருக்கும் எதிரி என்ற சூழ்நிலையை தற்போழுது நடைபெறும் ராகு திசை 6,9,12ம் பாவக வழியில் இருந்து வழங்கி கொண்டு இருக்கின்றது, இது சாயா கிரகங்களில் 11ல் வலிமை பெற்ற ராகு பகவான் தனது திசையில் தரும் பலன்கள்.

ஜாதகருக்கு கேது திசை பல வருடங்களுக்கு பிறகு வந்தாலும் மற்ற கிரகங்களின் திசையில், புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் தரும் பலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற கேது ஜாதகருக்கு புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், பலர் சுய ஜாதகத்தில் 5ல் அமரும் ராகு கேது புத்திர பாக்கியத்தை தடை செய்யும் என்பர், ஆனால் 5ல் வலிமை பெற்று அமரும் ராகு கேது ஜாதகருக்கு முதல் குழந்தையாக ஆண் வாரிசை வழங்கும், ஒருவேளை 5ல் வலிமை அற்று ராகு கேது அமர்ந்து இருப்பின் ஜாதகருக்கு ஆண் வாரிசை நல்காது பெண் குழந்தை உண்டு என்பது அனுபவபூர்வமான உண்மை, மேற்கண்ட ஜாதகருக்கு 5ல் வலிமை பெற்ற கேது தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு ஜீவனம் மற்றும் தொழில் வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், கேது தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் ஜாதகர் 2ம் பாவக வழியில் கை நிறைவான வருமானமும், செய் தொழில் முதலீடும், அபரிவிதமான லாபங்களை பெறுவார், 4ம் பாவக வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், இடம் வீடு புதிய சொத்துக்கள் மற்றும் சுகபோக யோகங்களை பெறுவார், தனது தாய் வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை பெறுவார், 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அபரிவிதமான தொழில் வளர்ச்சியையும், சிறப்பு மிக்க முன்னேற்றங்களையும், தங்கு தடையின்றி பெறுவார், சுய கவுரவம் மேலோங்கும், அதிகார பதவிகள் ஜாதகரை தேடி வரும், இது சாயா கிரகங்களில் 5ல் வலிமை பெற்ற கேது பகவான் தனது திசையில் தரும் பலன்கள்.

எனவே சுய ஜாதகத்தில் 5,11ல் சாயா கிரகங்கள் அமர்ந்த போதிலும், தனது  திசையில் அமர்ந்த பாவக பலனை ஏற்று நடத்தவில்லை என்பதை கவனத்தில் கொள்க, மேலும் தனது திசையில் ராகு 12ம் பாவக பலனையும், கேது 10ம் பாவக பலனையும்  ஏற்று நடத்துவதே உண்மை இதை முறையாக ஜாதக கணிதம் கொண்டு உணர்ந்து பலாபலன் காண முற்படுவதே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான வாழ்க்கையை அமைத்து தர உதவும் சிறப்பான நன்மைகளையும்  நல்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 6 பிப்ரவரி, 2016

திருமண பொருத்தம் : திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள, பாவக வலிமையின் அடிப்படையில் ஜாதக பொருத்தம் காணும் வழி முறைகள்.



  திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள, தம்பதியரின் ஜாதகங்களில் 12பாவகங்களின், வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தம் கண்டு இல்லற வாழ்க்கையில் இணைவதே, தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றியை நிர்ணயம் செய்யும், பொதுவாக திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வது தம்பதியர் இருவரின் சுய ஜாதக வலிமையே அன்றி, நட்சத்திர பொருத்தமோ ( ரஜ்ஜு பொருத்தம் ), செவ்வாய் தோஷமோ, ராகுகேது தோஷமோ அல்லது தம்பதியர் இருவருக்கும் நடக்கும் ஏக திசை பொருத்தமோ அல்ல என்பதை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தபட்ட ஜாதகருக்கு நிச்சயம் யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம்,குடும்பம்,பூர்வ புண்ணியம்,களத்திரம் மற்றும் ஆயுள் ஸ்தானம் போன்ற பாவகங்கள் வலிமை பெற்றால், சம்பந்த பட்ட ஜாதகருக்கு  இல்லற வாழ்க்கை இனிதே அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, எனவே திருமண பொருத்தம் காணும் பொழுது சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பொருத்தம் காண்பதே தம்பதியரின் இல்லற வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும்.

"ஜோதிடதீபம்" மூலம் பொருத்தம் கண்டு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள வரன்,வதுவின் சுய ஜாதகத்தை உதாரணமாக எடுத்துகொண்டு, அவர்களின் சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தம் நிர்ணயம் செய்யும் முறையை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !

மணமகன் ஜாதகம் :



லக்கினம் : துலாம் 
ராசி : விருச்சிகம் 
நட்சத்திரம் : அனுஷம் 3ம் பாதம் 

மணமகள் ஜாதகம் :



லக்கினம் : விருச்சிகம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : கிருத்திகை 3ம் பாதம் 

வரன் வதுவின் சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையிலான திருமண பொருத்தம் :

வரனின் ஜாதகத்தில் பாவக வலிமை நிலை :

1,3,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கினம், சகோதர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தான வழிகளில் இருந்து ஸ்திரமான யோக பலன்களை தரும்.

6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சத்ரு ஸ்தானம், பாக்கிய ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களை தரும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களை 100% விகிதம் வாரி வழங்கும்.

4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சுக ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை வழங்கிய போதும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது.

2,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்பம் மற்றும் விறைய ஸ்தான வழியில் இருந்து அவயோக பலன்களை வழங்கும்.

7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது களத்திர ஸ்தான வழியில் இருந்தும், லாப ஸ்தான வழியில் இருந்தும் 200% விகித இன்னல்களை வாரி வழங்கும்.

தற்பொழுது நடைபெறும் கேது திசை ஜாதகருக்கு 7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவது வரவேற்க தக்க அம்சம் அல்ல என்பதே உண்மை, எனவே ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் கேது திசை நன்மையான பலன்களை ஏற்று நடத்தவில்லை என்பதே உண்மை, ஆனால் கேது திசையில் தற்பொழுது நடைபெறும் குரு புத்தி ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது 100% விகித யோக பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே திருமணத்திற்கு உகந்த காலமாக, தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு புத்தியை கருதலாம், கேது திசை குரு புத்தியில் திருமணம் ஜாதகருக்கு நடைபெற்றால் யோகமான இல்லற வாழ்க்கை அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

வதுவின் ஜாதகத்தில் பாவக வலிமை நிலை :

1,3,6,7,9,10,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஜாதகியின் வெற்றிகரமான யோக வாழ்க்கையை பெறுவார் என்பதை பற்றி கட்டியம் கூறுகிறது.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் குணநலன்கள் பற்றியும், ஜாதகி பெரும் சுக போக யோக வாழ்க்கை பற்றி எடுத்துரைக்கிறது.

5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் நுட்பமான அறிவுத்திறன் பற்றியும், யோகமிக்க குழந்தைகளையும் சிறந்த வாரிசுகளையும் பெற்று எடுக்கும் தன்மையை பற்றியும் தெளிவு படுத்துகிறது.

2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான குடும்ப வாழ்க்கையையும், கணவனுக்கு திடீர் அதிர்ஷ்டத்தையும், நீடித்த அதிர்ஷ்டத்துடன் கூடிய சுபயோக சுக வாழ்க்கையை ஜாதகி தங்கு தடையின்றி பெறுவார் என்பதை உறுதிபடுத்துகிறது.

தற்பொழுது நடைபெறும் ராகு திசை ஜாதகிக்கு 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து கௌரவம் மிக்க யோக வாழ்க்கையை பெறுவதை உறுதி படுத்துகிறது, ராகு திசையில் தற்பொழுது நடைபெறும் சனி புத்தி ஜாதகிக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அதிபோக சுக வாழ்க்கையை பெரும் தன்மையை காட்டுகிறது, எனவே ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் திசைபுத்தி திருமண வாழ்க்கையின் மூலம் அளவில்லா யோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்குவது கவனிக்க தக்க அம்சமாகும்.

"ஜோதிடதீபம்" இதுவரை பார்த்ததில், மேற்கண்ட ஜாதகியின் ஜாதகம் சகலயோகமும் பெற்ற ஓர் "ராஜயோக" ஜாதகமாக கருதுகிறது, லட்சம் ஜாதகங்களில் இதுபோன்று ஒரு "ராஜயோக" ஜாதகம் அமைவதாக ஒரு கருத்து உண்டு என்பது முற்றிலும் உண்மையே.

ஆக மேற்கண்ட வது வரனின் ஜாதகத்தை இல்லற வாழ்க்கையில் இணைக்கும் பொழுது இறை அருளின் கருணையினால் சகல யோகங்களையும் வரனும், வதுவின் ஜாதக வழியில் இருந்து அனுபவிப்பர் என்பது கவனிக்க தக்க அமசமாகும், மேலும் திருமண வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியையும், 16 வகை செல்வங்களையும் பெற்று வாழையடி வாழையாக செழிப்புடன் வாழ்வாங்கு வாழ்வார்கள் தம்பதியர் ஜாதகங்களின் உன்னத நிலையாகும்.

எனவே திருமண பொருத்தம் காணும் பொழுது வரன் வது இருவரின் ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் நிலையை உணர்ந்து, திருமண பொருத்தம் கண்டு இல்லற வாழ்க்கையில் இணைத்தால் நிச்சயம் 100% விகித யோக வாழ்க்கையை தம்பதியருக்கு வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, தவிர்த்து இல்லாத  நட்சத்திரபொருத்தம், தோஷபொருத்தம், ஏக திசை சந்திப்பு, செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம் போன்றவைகள் சமுதாயத்தில் மூட நம்பிக்கைகளை விதைப்பதாகவே அமையுமே அன்றி, உண்மையான ஜாதக பலன்களை கண்டு திருமணம் அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை காண்பதற்கு வழிவகுக்காது.

சுய ஜாதகத்தில் பாவக வலிமையை ஆய்வு செய்து திருமணம் அமைத்து தருவோம், தம்பதியரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெற்று வாழ்வதற்கு வழிவகை செய்வோம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

ராகு ஐந்தாம் பாவகத்தில் அமரும் பொழுது புத்திர பாக்கியத்தை தடை செய்யுமா ? ஆண் வாரிசு அமையாத ?



  ராகு ஐந்தில் அமர்ந்தால் சம்பந்த பட்ட ஜாதகருக்கு புத்திர சந்தானம் அமையாது என்பதும், குலம் தழைக்க ஆண் வாரிசு அமையாது என்று சொல்வதும் பொதுவான கருத்து, இதில் ராகு 5ம் பாவகத்தில் அமர்ந்தாலே இந்த பலனை தரும் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, ஜோதிட கணிதம் பற்றிய தெளிவில்லாமல், பாவகங்களின் தன்மை அறியாமலும், சுய ஜாதக ரீதியாக 5ம் பாவகத்தின் வலிமையை பற்றிய கணிதம் செய்ய தெரியாமலும் சொல்லும் ஒரு வார்த்தையாக மட்டுமே எடுத்துகொள்ள இயலும், பாரம்பரிய ஜோதிடத்தில் ராகு ஐந்தில் அமர்ந்தால் புத்திர பாக்கியத்தை தராது என்று பொதுவாக சொல்வது உண்டு.

 உண்மையில் ராகு 5ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் தான் அமர்ந்து இருக்கின்றாரா, என்ற தெளிவு வேண்டும், ஒரு வேலை 5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகைக்கு முன்பே அமர்ந்து இருக்கின்றாரா, 5ல் அமர்ந்த ராகு பாவகத்தை வலிமை படுத்துகிறார, அல்லது தீமையான பலனை தருகிறார என்பதை துல்லியமாக, சுய ஜாதகத்தை கொண்டு அறிந்த பிறகே, புத்திர பாக்கியத்தை பற்றி சொல்வது சரியாக இருக்கும், இதை உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வது தங்களுக்கு மிக எளிதாக புரிந்துகொள்ள இயலும்.


மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கன்னி 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 2ம் பாதம்

இந்த கன்னி இலக்கின ஜாதகிக்கு திருமணம் நடைபெற்று 4 வருடங்கள் ஆயிற்று, இருமுறை கருத்தரித்து, கருச்சிதைவு ஏற்ப்பட்டு இருக்கிறது, இதனால் உடல் நலம் வெகுவாக பாதிக்க பட்டு இருக்கிறது, இது வரை ஜாதகிக்கு புத்திர பாக்கியம் என்பது கிடைக்கவில்லை, ஜாதகியின் வாழ்க்கை துணைவரின் ஜாதகத்திலும் புத்திர பாக்கியத்தை தரும் ஐந்தாம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கின்றது, மேற்கண்ட ஜாதகிக்கு புத்திர சந்தானம் கிடைக்க பெறாத அமைப்பிற்கு 5ல் ராகு அமர்ந்து இருப்பதே என்று சொல்வது சரியாக இருக்கும் என்றபோதிலும், சுய ஜாதக அமைப்பில் 5ம் பாவகம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே இதற்க்கு காரணம், மேலும் 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகி 200% இன்னல்களை அனுபவிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

மேற்கண்ட ஜாதகத்தில் மகரத்தில் அமரும் ராகு பகவான் 5ம் பாவகத்தை 100% பாதிப்பிற்கு உள்ளாக்குகிறார், இதன் காரணமாகவே ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் அமையாமல் தடை செய்கிறது, பொதுவாக தம்பதியரின் ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தை குறிக்கும் 5ம் பாவகம் பாதிக்க படாமல் இருப்பது உடனடி குழந்தை பாக்கியத்தை வாரி வழங்கும், திருமணதிற்கு பிறகு குறுகிய காலத்தில் குழந்தை பாக்கியத்தை எவ்வித தங்கு தடையின்றி தரும் குறிப்பாக ஆண் வாரிசாக அது அமையும் என்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம், பிறக்கும் குழந்தையும் பூரண ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக இருக்கும், தனது பெற்றோருக்கு மிகுந்த கீர்த்தியை பெற்று தரும், இதற்க்கு அடிப்படையாக அமைவது தம்பதியரின் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை.

இதற்க்கு மாறாக மேற்கண்ட உதாரண ஜாதகத்தில் 5ம் பாவகம் ராகு பகவானால் கடுமையாக பாதிக்கபட்டு இருக்கின்றது, மேலும் சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பதம் பெற்று 200% இன்னல்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாக இருக்கின்றது.

 சர மண் தத்துவமான மகர ராசியில் அமரும் ராகு ஜாதகியின் உடல் நிலையையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாக வருவதால் ஜாதகியின் முன்வினை கர்ம பலன்களையும் அனுபவிக்கும் தன்மையாக 5ம் பாவக வழியில் இருந்து தீமையான பலன்களை வழங்குகிறார், கிரகங்களில் அதிக வலிமை பெற்றதும், தன்னிகரில்லா தனி தன்மை வாய்ந்ததும் ராகு பகவானே என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஒருவரின் ஜாதகத்தில் ராகு பகவான் வலிமையாக நல்ல நிலையில் அமர்ந்து இருப்பின் ஜாதகரின் வெற்றிகரமான வாழ்க்கையை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, இதற்க்கு மாறாக தீமை தரும் அமைப்பில் ராகு அமரும் பட்சத்தில், தான் அமரும் பாவக அமைப்பில் இருந்து தரும் இன்னல்களில் இருந்து ஜாதகரை எவராலும் காப்பாற்ற இயலாது, தனது கடமையை மிகவும் சிறப்பாக ராகு பகவான் தங்கு தடை இன்றி தருவார் என்பதில் மாற்று கருத்து இல்லை.


மேற்கண்ட ஜாதகம் ராகு பகவான் 5ல் அமர்ந்தால் தரும் தீமையான பலன்கள் பற்றிய உதாரணம், ஆனால் ராகு பகவான் 5ல் அமர்ந்தாலும் 5ம் பாவகத்தை வலிமை செய்யும் அமைப்பும் உண்டு, பொதுவாக 5ல் அமரும் ராகு பகவான் தீமையை மட்டுமே செய்யும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கருத்து, இங்கே 5ல் அமரும் ராகு பகவான் 5ம் பாவகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு மிகுந்த நன்மையையும், அளவில்லா புத்திர சந்தான பாக்கியத்தையும் அருள்கிறார் என்பதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு பார்ப்போம் அன்பர்களே !




லக்கினம் : மகரம் 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 3ம் பாதம்

இந்த மகர இலக்கின ஜாதகிக்கு திருமணம் ஆன ஓரிரு மாதங்களிலேயே புத்திர சந்தான பாக்கியத்தை வாரி வழங்கியது ராகு பகவானே, ராகு பகவான் ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் அமர்ந்து 5ம் பாவகத்திர்க்கு 100% வலிமை தருவது ஒரு சிறப்பான விஷயம் ஸ்திர மண் தத்துவம் என்பதால், ஜாதகிக்கு சிறந்த உடல் வலிமை தந்தது, பூரண சுக பிரசவத்தில் நல்ல யோகமுள்ள ஆண் வாரிசை ஜாதகிக்கு வழங்கியது, ஜாதகியின் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் பூரண வலிமை பெற்று இருந்தது ஜாதகிக்கு நல்ல ஆண் வாரிசை உறுதி செய்தது.

மேற்கண்ட ஜாதகிக்கு ராகு 5ல் அமர்ந்தது ஆண் வாரிசை மற்றும் இன்றி நல்ல புத்திசாலிதனத்தையும், மிகசிறந்த அறிவாற்றலையும் வாரி வழங்கியது, கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையை தந்தது, மேலும் இறை அருளின் கருணையை பரிபூரணமான பெற்று தந்து, ஜாதகிக்கு ரிஷபம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாக வந்தது, ஜாதகிக்கு நிலையான குடும்ப வாழ்க்கையையும், கை நிறைவான பொருளாதார வசதி வாய்ப்பையும், நிலையான வருமான வாய்ப்பையும் பெற்று தந்தது, மேற்கண்ட ஜாதகத்தை பொதுவான கண்ணோட்டத்துடன் 5ல் ராகு இருப்பதால் புத்திர பாக்கியம் கிடைக்காது என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, இந்த ஜாதகிக்கு ராகு பகவானே சிறந்த புத்திர சந்தானத்தை தான் அமர்ந்த இடத்தில் இருந்து வழங்குகிறார் அன்பர்களே!

எந்த ஒரு ஜாதகத்திலும் ராகு பகவான் 5ல் அமர்ந்து இருந்தாலும், 5ம் பாவகத்தை வலிமை செய்தால், ஜாதகர் 5ம் பாவாக வழியில் இருந்து 100% நன்மைகளை பெறுவார், இதற்க்கு மாறாக தீமை செய்யும் அமைப்பில் அமர்ந்தால் எவ்வித பாகுபாடும் இன்றி 100% தீமையே செய்வார் இதில் மாற்றம் இல்லை, எனவே சுய ஜாதக அமைப்பின் படி 5ல் அமரும் ராகு பகவான் எந்த நிலையில் இருக்கிறார் என்று துல்லியமாக கணிதம் செய்து, பலன்  காண்பதே சிறந்த உண்மையான ஜோதிட பலன் சொல்ல உதவி புரியும், 5ல் அமரும் ராகு பகவான் கெடுதல் மட்டுமே செய்யும் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறன ஒரு அணுகுமுறையே.

குறிப்பு :

ராகு பாவக அமைப்பின் படி 5ல் தான் அமர்ந்திருக்கிறார் என்பதை முதலில் நிர்ணயம் செய்வது நலம், இதற்க்கு லக்கினம் ஆரம்பிக்கும் பாகையும், 5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகையும், ராகு பகவான் அமர்ந்திருக்கும் பாகையும் மிக மிக முக்கியம் என்பதை கருத்தில் கொள்வது அவசியம்.

ஒருவேளை ஒரே ராசியில் ராகு பகவான்  5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகைக்கு முன்பே அமர்ந்திருந்தால், ராகு பகவான் 5ல் என்ற கருத்துக்கே இடமில்லாமல் போகும் வாய்ப்பு உண்டு அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வெள்ளி, 26 ஏப்ரல், 2013

நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுகொள்வது, குழந்தைக்கு யோக வாழ்க்கையை தருமா ?



இதை விட கேலிக்கூத்தான ஒரு விஷயம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம் , முன்பெல்லாம் ஒரு பெண்ணிற்கு சுக பிரசவம் என்பது எளிதாக இருந்தது , இதற்க்கு காரணம் பெண்களின் மன நிலையும்  உடல் நிலையும்  அதற்க்கு ஏற்ற வகையிலே சிறப்பாக அமைந்து இருந்தது , மேலும் மருத்துவர்கள் இயற்கையாக குழந்தை பிறப்பினையே வலியுறுத்தினர் தம்மை நாடி வரும் மக்களுக்கு, தனது நேர்மையின் அடையாளமாக .

 ஆனால் இன்றோ இதற்க்கு மாறாக சில மருத்துவர்கள் இயற்கையாக சுக பிரசவம் பெரும் அமைப்பை பெண்கள் பெற்று இருந்தாலும், அவர்கள் அறுவை சிகிச்சையே பரிந்துரை செய்கின்றனர் , இதற்க்கு காரணமாக பல விஷயங்களை சொல்லலாம் 

1) குழந்தை இயற்கையாக சுகமாக பிறந்தால் மருத்துவமனைக்கும் , தனக்கும் பெரிய வருமானம் இல்லாமல் போய்விடும் என்ற ஒரு காரணத்தினாலும் .

2) குழந்தையின் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியும் .

3) ஜோதிடர்கள் சொல்லும் நல்ல நேரத்தில் தமது குழந்தை பிறந்தால் உலகத்தையே கட்டி ஆண்டுவிடும் என்ற தவறான எண்ணத்தினாலும்.

4) இந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் சிலருக்கு ஆகாது என்ற தவறான ஜோதிட ஆலோசனையின் பேரிலும் .

இன்னும் பல சொல்ல இயலாத காரணத்தினாலும் இயற்கையான குழந்தை பிறப்பை மருத்துவர்கள் , அல்லது குழந்தையின் பெற்றோர்கள் தவிர்த்து விடுகின்றனர் என்பதே உண்மை .

சில தொலைகாட்சி ஜோதிட நிகழ்சிகளில் இன்றைக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம் என்ற குறிப்பு வேறு தருகின்றனர் , கலிகாலத்தின் அலங்கோலம்தான் இது என்ற எண்ணமே நமக்கு தோன்றுகிறது . 

இயற்கையின் பேரழிவுகளையும் , பூமியில் மலை பொழியும் தருணங்களையும் , குழந்தை பிறக்கும் நேரத்தினையும் எவராலும் சரியாக கணிக்க இயலாது,  இதை பெரியோர்களே மலைபேரும், பிள்ளைபேரும்  மகாதேவனுக்கே  தெரியாது என்று செலவடையாக சொல்லி வைத்துள்ளார்கள் , ஆக நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறப்பை நிர்ணயம் செய்வது என்பது முற்றிலும் இயலாத காரணம் , இதற்க்கு சரியான உதரணங்களை கிழே கொடுத்துள்ளோம் , 

எடுத்துகாட்டாக ஜோதிடர் கொடுத்த ஒரு 3 நிமிட நல்ல நேரத்திற்கு உட்பட்ட காலகட்டத்தில் பிறக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் , நொடியிலும் குழந்தையின் பலன்கள் வேறுபடுவதை பாருங்கள் :


ஜாதகம் 1 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:55:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் தீமையான பலன்களை தருகிறது , 6,12ம் வீடுகள் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 2ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10 ம் வீடுகள் ஜீவன ஷ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும் , 5,8ம் வீடுகள் குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .



ஜாதகம் 2 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:56:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் தீமையான பலன்களை தருகிறது ,8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 6,12ம் வீடுகள் பூர்வ புண்ணிய  பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை தருகிறது , 2ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10 ம் வீடுகள் ஜீவன ஷ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும் , 5,ம் வீடு குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .



ஜாதகம் 3 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:57:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் நன்மையான  பலன்களை தருகிறது , 6ம் வீடு பூர்வ புண்ணிய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 2ம் வீடு எதிரி பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10, 12ம் வீடுகள் விரைய ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்றும் தீமையையும் , 5ம் வீடு குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அதிக தீமையான பலனையும் தருகிறது .




ஆக நிமிடத்திற்கு நிமிடமும் , நொடிக்கு நொடியும் பலன்கள் மாறும் பொழுது நிச்சயம் தங்களின் குழந்தை குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சையின் மூலம் பெற்றுகொள்வது என்பது நிச்சயம் இயலாத காரியம் , மேலும் இடத்திற்கு இடம் அதற்கு உண்டான அமைப்பில் ஜாதக பலன்கள் மாறுபடும் எனவே குறித்த நல்ல நேரத்தில் குழந்தை பிறப்பை எவராலும் நிர்ணயம் செய்ய இயலாது, ஜோதிடர் சொல்லும்  நல்ல நேரத்தில் எவராலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்ள இயலாது என்பதே உண்மை .

பொதுமக்கள் இதை உணருவது அவசியம் யாரோ ஒரு ஜோதிடர் சொல்கிறார் என்பதற்காக தங்களின் குழந்தையின் விதி நிச்சயம் மாறிவிட வாய்ப்பு இல்லை , முடிந்த அளவிற்கு தங்களது  குழந்தை இயற்கையாக பிறப்பதற்கு என்ன வழி உள்ளது என்பதை பற்றி  மட்டும் சிந்தியுங்கள் அல்லது மருத்துவ துறைக்கு தன்னை அர்ப்பணித்து  கொண்டு நேர்மையாக மருத்துவம் பார்க்கும் நல்ல மருத்துவரை நாடி இயற்கையாக குழந்தை பிறப்பை பெறுவதற்கு என்ன வழி என்பதை  பற்றி சரியான ஆலோசனை பெறுங்கள்.

ஜோதிட தர்மத்தை முறையாக கடை பிடிக்கும்  எந்த ஒரு ஜோதிடனும் குழந்தை பிறப்பிற்கு  நேரம் குறித்து தருவதில்லை, காரணம் பிறப்பு இறப்பு என்பது ஒருவரின் வினை பதிவின் படி இயற்கையால் நிர்ணயம் செய்யபடுவது என்பதே உண்மை , ஜோதிடன் என்பவன் தங்களின் விதி பாதையில் உள்ள உண்மை நிலைகளை , சாதக பாதக அமைப்புகளை உள்ளது உள்ளபடி சொல்பவரே அன்றி விதியை மற்றும் அளவிற்கு சக்தி படைத்தவர் அல்ல , இறை நிலைக்கு அப்பாற்பட்ட சிறப்பு சக்தி படைத்தவரும் அல்ல , அவரும் தங்களை போன்றே ஒரு சாதாரண மனிதன் என்பதை மறந்துவிட வேண்டாம் அன்பர்களே இதை போன்றே ஜோதிடமும் நமது வாழ்க்கையில் நடைபெறும் நன்மை தீமையை சரியாக எடுத்து சொல்லும் ஒரு கணித அறிவியல் மட்டுமே . 

மருத்துவ தர்மத்தை முறையாக  கடைபிடிக்கும் எந்த ஒரு மருத்துவனும் இயற்கையாக குழந்தை பிறப்பிற்கு  வாய்ப்பு இருக்கும் பொது அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்வதில்லை என்பதே முற்றிலும் உண்மை , மேலும் இயற்கையாக பிறக்கும்  குழந்தையின் வளரும் சூழ்நிலையும் , அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும்  குழந்தையின் வளரும் சூழ்நிலையும் அதிக அளவிலே வித்தியாசம் படுகிறது  என்பதை மக்கள் இங்கு கவனிக்க வேண்டும் .

இயற்கையாக பிறக்கும் குழந்தையின் மன ஆற்றல் , உடல் நிலை , அறிவு திறன்  மிகவும் பலம்கொண்டதாக இருக்கிறது என்பது பல ஆராய்ச்சிகள் நமக்கு  உணர்த்துகிறது , இது பற்றி தெளிவு பெற கூகிள் ஆண்டவரை தொடர்பு  கொள்ளுங்கள் அன்பர்களே !

இயற்கையாக குழந்தை பிறப்பு அமையாததிர்க்கு சில முக்கிய காரணங்களாக அறிஞர்கள் சொல்வது :

1) சரியான வயதில் திருமணம் செய்யாமல் தவிர்ப்பது .
2) தேவையான  உடல் உழைப்பு அற்ற நிலை 
3) குழந்தை பிறப்பை தள்ளிபோடுவது .
4) தேவையான அளவிற்கு ஊட்ட சத்து உணவுகளை எடுத்துகொள்ளதது .
5) மனோ ரீதியான பிரச்சனைகள் .
6)​ தன்னம்பிக்கை அற்ற நிலை 
7) கருவுற்று இருக்கும் பொழுது பொற்றோர்களின் ஆதரவு இல்லாத சூழ்நிலை ஆகியவற்றை  குறிப்பிடலாம் .

எனவே அன்பர்களே தங்களின் குழந்தை இயற்கையாக பிறப்பதே குழந்தைக்கும் அதன் தாயிக்கும் மிகுந்த நன்மையை தரும் , தங்களின் குழந்தை  இயற்கையாக பிறப்பதே நல்லது , ஒருவேளை அதற்க்கு வாய்ப்பு இல்லை எனும்பொழுதே அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் அது மருத்துவரின்  ஆலோசனையாக இருக்கட்டும், ஜோதிடரின் ஆலோசனையாக  இருப்பது சிறந்ததல்ல என்பதே முற்றிலும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969