உபயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உபயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஏப்ரல், 2015

ஸ்திர ராசிகளுக்கு பாக்கியஸ்தானமே பாதகஸ்தானமாகிறது.பாக்கியாதிபதியின் தசையில் பலன் எப்படி இருக்கும்?




சர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு லாபஸ்தானம் பாதக ஸ்தானமகவும், ஸ்திர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு பாக்கிய ஸ்தானம் பாதக ஸ்தானமாகவும், உபய ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானமாகவும், இறை நிலையால் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது, மேலும் ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் பெரும் வலிமைக்கு ஏற்ப திசா புத்திகள் யோக பலன்களோ, அவயோக பலன்களே ஜாதகருக்கு ஏற்று நடத்துகிறது.

மேற்கண்ட கேள்வி பொதுவாக ஜாதக கணிதம் பற்றிய தெளிவு இல்லாத சூழ்நிலையில் வினவ படுவதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, அதாவது பாதக ஸ்தான அதிபதியாக வரும் கிரகத்தின் திசை பாதக ஸ்தான பலனையே செய்யும் என்று கணிப்பது முற்றிலும் தவறான கணிப்பாகும், மேலும் ஒருவரது ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமும் தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்த வாய்ப்புள்ளது, எந்த ஒரு கிரகமும் யோகம் தரும் பாவகங்களின் பலனை ஏற்று நடத்த வாய்ப்புள்ளது, இது அவரவர் சுய ஜாதக அமைப்பில் பாவகங்களின் தொடர்பு மற்றும் வலிமை சார்ந்த விஷயம்.

இதற்க்கு உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் காண்போம் :




ஜாதகர் லக்கினம் : கடகம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம் 

மேற்கண்ட கடக இலக்கின ஜாதகருக்கு பாதக ஸ்தானமான அமைவது லக்கினத்திற்கு 11ம் வீடான லாப ஸ்தானம் , இது ஜாதகருக்கு அதிர்ஷ்டம் மற்றும் ஜாதகர் அடையும் லாபத்தை குறிக்கும், சர லக்கினம் என்பதால் இது ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக செயல்படுகிறது, இதன் அதிபதி சுக்கிரன் ( இது பொதுவாக பாரம்பரிய ஜாதக கணிதம் கொண்டு பார்க்கும் பொழுது ) இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான அதிபதியான சுக்கிரன் தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்பதை ஆய்வு செய்யும் பொழுது சுக்கிரன் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை வாரி வழங்குகிறார், அதாவது பாதக ஸ்தான அதிபதி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் யோகத்தை தரும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த நன்மையை தரும் அமைப்பாக கருதலாம், ஆக இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான அதிபதி பாதக ஸ்தான பலனை செய்யவில்லை, வேறு எந்த கிரகம் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

இவரது சுய ஜாதக அமைப்பின் படி, புதன்,சனி,ராகு ஆகிய கிரகங்கள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, புதன் என்ற கிரகம் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதால் பாதக ஸ்தான பலனை நடத்துகிறது என்றால், சனி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எப்படி? ராகு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எப்படி? என்ற கேள்விகளுக்கு ஜாதக கணிதம் தெரிந்தோர் மிக எளிதாக பதில் காண இயலும், எனவே இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது பாதக ஸ்தான அதிபதியான சுக்கிரன் அல்ல, 3,12க்கு உடைய புதனும், 7,8க்கு உடைய சனியும், லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவானுமே பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகின்றனர்.

 எனவே ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியின் திசாபுத்தி, பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் என்று ஜாதக கணிதம் செய்வது முற்றிலும் தவறான கணிப்பே அன்றி, துல்லியமான ஜாதக கணிதம் அல்ல அன்பர்களே! மேலும் ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானம் எனும் பாவகம் எந்த வீடுகளுடன் தொடர்பு பெறுகிறதோ அந்த வீடுகளின் பலனை ஏற்று நடத்தும் கிரகம் எதுவென்றாலும் பாதக ஸ்தான பலனை வழங்க  கூடும், அதே போன்று பாதக ஸ்தான அதிபதியான கிரகம் சுய ஜாதகத்தில் யோகம் தரும் பாவக பலனை ஏற்று நடத்தினால், பாதக ஸ்தான அதிபதியின் திசாபுத்திகள் யோக பலன்களை தர தவறுவதில்லை, எனவே ஒருவரது சுய ஜாதக வலிமையை முதலில் கருத்தில் கொண்டு, நடைபெறும் திசை மற்றும் புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன் காண முற்படுவதே துல்லியமான ஜாதக பலன்களை எடுத்து கூற இயலும், மாறாக பாதக ஸ்தான அதிபதி, மற்றும் துர் ஸ்தான அதிபதிகள் திசை மற்றும் புத்திகள் இன்னல்களையே தரும் என்று கணிப்பது முற்றிலும் தவறான ஜாதக கணிதமே அன்றி வேறில்லை என்பது "ஜோதிடதீபத்தின் " ஆணித்தரமான கருத்தாக இங்கே பதிவு செய்கிறது.

குறிப்பு : 

எந்த ஒரு ஜாதகருக்கும் தற்பொழுது அல்லது எதிர்காலத்தில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் வருமாயின், அந்த ஜாதகருக்கு பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற பாவக அமைப்பில் இருந்து 200% விகித இன்னல்கள் உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்க.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 20 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் சர,ஸ்திர,உபய ராசிகள் வழங்கும் பலாபலன்கள் !



ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்களின் தொடர்புகளின் வழியில், திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தும் நன்மை தீமை பலன்களில், சர,ஸ்திர,உபய ராசிகளுக்கு ஏற்ப நிறைய வேறுபாடுகள் உண்டு, பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் 12 வீடுகள் தான் தொடர்பு பெரும் பாவகங்கள் வழியில் இருந்து யோக அவயோக பலன்களை தருகிறது, இந்த 12 வீடுகளும் தொடர்பு பெரும் பாவகம், சர ராசியாக இருப்பின் விரைவான பலன்களையும், ஸ்திர ராசியாக இருப்பின் நீடித்த பலன்களையும், உபய ராசியாக இருப்பின் மேற்கண்ட இரண்டிற்கும் சம்பந்தம் இல்லாத பலன்களையும் தரும்.


குறிப்பாக ஒரு ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள திசை யோக பலனை தரும் நிலையில் இருக்கிறது என்று வைத்துகொண்டால், 1,4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜாதகருக்கு 1,4,7,10ம் வீடுகள் வழியில் இருந்து நன்மையை செய்கிறது எனில், ஜாதகருக்கு தொடர்பு பெரும் 10ம் பாவகம் சர ராசியாக இருப்பின், தான் தரவேண்டிய யோக பலன்களை திசை ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே வாரி வழங்கிவிடும், எடுத்துகாட்டாக ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் குறுகிய காலத்தில் வெகு விரைவாக அமையும். ஜாதகருக்கு தொடர்பு பெரும் 10ம் பாவகம் ஸ்திர  ராசியாக இருப்பின், தான் தரவேண்டிய யோக பலன்களை தனது திசை முழுவதும் தொடர்ந்து ஸ்திரமாக வழங்கிகொண்டே இருக்கும், உதாரணமாக ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் என்பது படிப்படியாக அமையும். ஜாதகருக்கு தொடர்பு பெரும் 10ம் பாவகம் உபய  ராசியாக இருப்பின், தான் தரவேண்டிய யோக பலன்களை மேற்கண்ட இரண்டு அமைப்பிற்கும் சாராமல் சிறிது சிறிதாக அமையும், உதாரணமாக ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவில் இல்லாமல் குறைவான நிலையிலேயே அமையும்.

மேற்கண்ட விதி யோக அவயோக நிலை இரண்டிற்கும் பொருந்தும், இதை ஓர்  உதாரண ஜாதகம் கொண்டு காண்பது சிறப்பாக அமையும் என்று "ஜோதிடதீபம்" கருதுகிறது.


லக்கினம் : தனுசு 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : மூலம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு யோகம் தரும் பாவகங்களாக அமைவது :

1) 1,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 
2) 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
3) 3ம் வீடு சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்.
4) 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் ஜாதகத்தில்  யோக அமைப்பாக கருதலாம், இதில் 10ம் பாவகம் உபய ராசியாகவும், 11ம் பாவகம் சர ராசியாகவும், 3,9ம் பாவகங்கள் ஸ்திர ராசியாகவும் ஜாதகிக்கு அமைகிறது.

ஜாதகிக்கு அவயோகம் தரும் பாவகங்களாக அமைவது :

1) 6,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
2) 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் ஜாதகத்தில் அவயோக அமைப்பாக கருதலாம், இதில் 8ம் பாவகம் சர ராசியாகவும், 12ம் பாவகம் ஸ்திர ராசியாகவும் ஜாதகிக்கு அமைகிறது.

ஜாதகிக்கு 10ம் பாவகம் உபய ராசியில் அமைந்து நன்மையை செய்வது குறிப்பிட்ட பாவக வழியில் சிறிய அளவிலேயே அமையும், 3,9ம் பாவகம் ஸ்திர ராசியாக அமைந்து நன்மையை செய்வதால் ஜாதகிக்கு குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நீடித்த 80% விகித நன்மையை தொடர்ந்து பெற்ற வண்ணம் இருப்பார், 11ம் பாவகம் சர ராசியாக அமைந்து நன்மை செய்வது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித நன்மையை விரைவாக குறுகிய காலத்தில் வாரி வழங்கும்.

ஜாதகிக்கு 8ம் பாவகம் சர ராசியாக அமைந்து தீமையை தருவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை குறுகிய காலத்தில் தரும், 12ம் பாவகம் ஸ்திர ராசியாக அமைத்து தீமையை தருவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 75% விகித இன்னல்களை தொடர்ந்து ஸ்திரமாக தந்துகொண்டே இருக்கும்.

மேற்கண்ட யோக அவயோக பலன்கள் ஜாதகிக்கு எப்பொழுது நடைமுறைக்கு  வரும் என்பதை இனி ஆய்வு செய்வோம் .

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் திசை சூரியன் திசை ( 13/08/2014 முதல் 13/08/2020 வரை ) 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 3ம் வீடு சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலனை தருவது 11ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோகத்தையும், 3ம் பாவக வழியில் இருந்து 80% விகித யோகத்தையும் தரும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் சந்திரன் திசை ( 13/08/2020 முதல் 13/08/2030 வரை ) 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 9ம் பாவக வழியில் இருந்து 80% விகித யோகத்தையும் தரும்.

ஜாதகிக்கு சந்திரன் திசைக்கு அடுத்து வரும் செவ்வாய் திசை ( 13/08/2030 முதல் 13/08/2037 வரை ) 6,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 75% இன்னல்களை செவ்வாய் திசை முழுவதும் தொடர்ந்து குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த வண்ணமே இருக்கும்.

ஜாதகிக்கு செவ்வாய் திசைக்கு அடுத்து வரும் ராகு திசை ( 13/08/2037 முதல் 14/08/2055 வரை )  6,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 75% இன்னல்களை செவ்வாய் திசை முழுவதும் தொடர்ந்து குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த வண்ணமே இருக்கும். எனவே ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் சூரியன் திசையும், எதிர்வரும் சந்திரன் திசையும் சரியான வயதில் நல்ல யோகத்தை தருவதால், குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து சர,ஸ்திர,உபய ராசிக்கு உற்பட்ட யோக பலன்களை அனுபவிக்கும் யோகத்தை தருவது வரவேற்க தக்கதே, தற்பொழுது நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் சிறப்பான நன்மைகளை செய்வதால் ஜாதகி கவலை கொள்ளாமல், தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் நடைமுறையில், எதிர்வரும் திசை அமைப்பில் இருந்து யோக பலன்களை அனுபவிப்பதே சிறப்பானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - பாகம் 1


 ஜீவன ஸ்தானம் ஒருவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பாவகம், மேலும் ஒரு ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வைத்து அந்த ஜாதகரின் கௌரவம்,அந்தஸ்து சுய மரியாதை ஆகிய விஷயங்களை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும், ஜீவன பாவகத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொருவருக்கும் சரியான தொழில் அமைகிறது என்றால் அது மிகையில்லை, 12 ராசிகளும் , சர,ஸ்திர,உபய அமைப்புகளும், நெருப்பு,நிலம்,காற்று,நீர் தத்துவங்களும் சுய ஜாதகத்தில் ஒருவருக்கு எந்த விதமான ஜீவன வாழ்க்கையை, எந்த வயதில் அமைத்து தருகிறது என்பதை ஜாதக ரீதியாக தெளிவாக தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் தனது தொழில்,வேலை  மற்றும் பணியை சிறப்பாக செய்து வாழ்க்கையில் முன்னேற்றமும் வெற்றியும் காணலாம்.

ஒருவரின் ஜீவன அமைப்பை ( செய்யும் தொழில் அல்லது வேலை ) சுய  ஜாதகரீதியாக தெரிந்து கொள்வது, அந்த ஜாதகர் தனது ஜீவன வாழ்க்கையை சிறப்பாக  செய்ய பெரும் உதவியாக இருக்கும், அடிப்படையில்  ஒருவரது  ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் எந்த விதமான தொடர்புகளை  பெறுவது ஜாதகரின் தொழில் மற்றும் வேலை  வாய்ப்பினை கேள்வி குறியாக மற்றும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் அன்பர்களே !

ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் தொடர்பு பெற கூடாத நிலைகள் :

1) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானம் எனும் 7,9,11ம் பாவகங்களுடன் தொடர்பு பெற கூடாது , ஒரு வேலை ஜீவன ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகரை ஜீவன வழியில் இருந்து 200% இன்னல்களுக்கு வழிவகுத்துவிடும் மேலும் சுய கௌரவமும் அந்தஸ்தும் வெகுவாக பாதிக்க படும்  ( சர லக்கினத்திற்கு 11ம் வீடு பாதக ஸ்தானம், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு பாதக ஸ்தானம், உபய லக்கினத்திற்கு 7ம் வீடு பாதக ஸ்தானம்)

2) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம்,எதிரி மற்றும் பகை ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து பல எதிர்ப்புகளையும், எதிரிகளையும் உருவாக்கும், மேலும் செய்யும் தொழில் அமைப்பில், அதிக கடன் தொந்தரவுகளை உருவாக்கி தொழில் முடங்கும் சூழ்நிலையை தந்துவிடும், ஜாதகருக்கு 6ம் பாவகம் ஒரு வேலை சர ராசியாக இருப்பின், ஜாதகர் தனது தொழிலுக்கு மூடுவிழா, தொழில் செய்ய ஆரம்பித்த சில தினங்களிலேயே நடத்தி விடுவார், தேவையின்றி செய்யும் சில காரியங்களால், ஜாதகரின் தொழில் வாய்ப்புகள்  முடங்கி மிகப்பெரிய பின்னடைவை தந்துவிடும்.

3) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், திடீர்  இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, எதிர்பாராத சந்தர்பத்தில் திடீர் இழப்பை  தந்து, இதுவரை செய்துவந்த தனது தொழில்  அமைப்பிற்கு மூடுவிழா காணும் தன்மையை தரும், சுய ஜாதகத்தில் இந்த அமைப்பை பெறும் அன்பர்கள் தயவு செய்து மற்ற  பாவகங்களின் வலிமை உணர்ந்து தொழில் செய்வது நலம், இல்லை எனில் ஜாதகரின் ஜீவன வாழ்க்கை மிகப்பெரிய கேள்வி குறியாக மாறிவிடும், தொழில்  செய்யாமல் அடிமை ஜீவனம் மேற்கொள்ளும் அன்பர்களுக்கும் இந்த அமைப்பு அதிக துன்பத்தையே தரும், குறிப்பாக ஒரு இடத்தில் நிரந்தரமாக வேலை பார்க்க ஜாதகரால் இயலாது, எதிர்பாராத நேரத்தில் வேலையை விட்டு எக்காரணமும் தெரியாமல் நீக்கபடுவார்கள்.

ஜாதகர் தனது உழைப்பின் மூலம் சம்பாதித்த பணம் பொருள் அனைத்தையும் திடீர் என இழக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக மருத்துவ செலவினங்கள்,  விபத்து செலவினங்கள், மற்றவர்களை நம்பி கொடுக்கும் பணம்,  மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள், ஆகியவற்றில் பெரிய திடீர்  இழப்பையே ஜாதகர் சந்திக்கும் சூழ்நிலையை தரும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதாலும், மற்றவர்களுக்கு ஜாமீன் தருவதாலும் ஜாதகருக்கு மிகப்பெரிய இழப்பே ஏற்ப்படும், ஜாதகர் செய்யும் தொழிலும் கடுமையாக பாதிக்க படும்.

ஜாதகருக்கு 8ம் பாவகம் சர ராசியாக இருப்பின், மேற்கண்ட பாதிப்புகள்  மிக விரைவாக நடத்தும், ஜாதகரின் சிந்தனை எதுவும் பலன் தராது, ஜாதகருக்கு உதவி செய்யும் அன்பர்கள் யாரும் இல்லை என்ற சூழ்நிலையை தரும்.

4) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் செய்யும் தொழில் முதலீட்டையே வெகுவாக பதம் பார்க்கும், குறிப்பாக ஜாதகர் தொழில் ரீதியாக செய்த முதலீட்டை திரும்ப பெறுவது என்பது குதிரை கொம்பாக இருக்கும், தொழிலில் முதலீடு செய்துவிட்டு ஒவ்வொரு நாளும்  உறக்கமின்றி நிம்மதியின்றி தவிக்கும் சூழ்நிலையை தந்துவிடும், மனதளவில் அதிக இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்,  பெரும்பாலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் சமுதாயத்தில் பொருளாதார ரீதியான பின்னடைவை விரைவில் சந்திக்கிறார்கள், இவர்கள் தொழில் ரீதியாக மீண்டு வருவது என்பது இயலாத ஒரு காரியமே என்றால், அது மிகையில்லை அன்பர்களே !

இந்த அமைப்பை பெற்ற அன்பர்களுக்கு அடிமை ஜீவனம் சிறந்த  நன்மைகளை வாரி வழங்கும், சுய தொழில் செய்தால் மட்டுமே ஜாதகர் கடுமையாக பாதிக்க படுவார், ஒருவரிடமோ அல்லது ஒரு நிறுவனத்திலோ பணிபுரியும் பொழுது ஜாதகருக்கு  பெரிய இழப்புகள் எதுவும் நடை பெறுவதில்லை, மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் கூட்டு தொழில் செய்ய கூடாது ஏனெனில் ஜாதகர் தனது கூட்டாளியாலேயே ஏமாற்றப்பட கூடும், மேலும் செய்த முதலீடு, ஜாதகரின் கூட்டாளிக்கு மிகுந்த வளர்ச்சியை கொடுத்துவிடும்.

5) மேற்கண்ட விஷயங்களுடன் சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் பாவகமான மகரம் மிகவும் சிறப்பாக இருப்பது அவசியம், சிலர் தொழில் ரீதியாக பெரிய வெற்றிகளை பெற இயலாத நிலைக்கு காரணம் இதுவே, மேலும் சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் பாவகமான மகர ராசிக்கு அதிபதியான சனிபகவானும், சுய ஜாதகத்தில் 10ம் பாவகத்திர்க்கு அதிபதியான கிரகமும் எக்காரணத்தை கொண்டும் வக்கிரக நிலையை பெற கூடாது, மேற்கண்ட கிரகங்கள் வக்கிரக நிலை பெரும் பொழுது ஜாதகர் தொழில் ரீதியான வெற்றிகள் வாய்ப்புகள் வெறும் 10% நிலையிலேயே நின்றுவிடும், தொழில் ரீதியான சிரமங்கள் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், வக்கரகம் பெற்ற கிரகங்களுக்கு முறையாக வக்கரக நிவர்த்தி செய்யும் வரை ஜாதகர் ஜீவன வழியில் இருந்து நன்மையை பெற முடிவதில்லை.

இனி வரும் பதிவுகளில் ஜீவன ரீதியான பலன்கள் பற்றி விளக்கமாக காணலாம் அன்பர்களே!.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 21 மே, 2013

சுய ஜாதகத்தில் 12 வீடுகளும், அவற்றின் பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளும் !



ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையின் அடிப்படையிலேயே , நடந்த நடக்கின்ற நடைபெற இருக்கின்ற திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியன பலனை வழங்குகிறது என்றால் அது மிகை ஆகாது , இதை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது , ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திலும் 12 பாவகங்களும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்பது உறுதியாகிறது .

எனவே ஒருவருடைய சுய ஜாதக பலனை நிர்ணயம் செய்யும் பொழுது பனிரெண்டு பாவகங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம், மேலும் அவருடைய சுய ஜாதகத்தில் தற்பொழுது நடை பெரும் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது , ஜாதக பலனை மிக துல்லியமாக எடுத்துரைக்க உதவி புரியும் .

ஒருவரின் சுய ஜாதக அமைப்பின் படி நவ கிரகங்கள் ராசி கட்டத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது, என்பதனை லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் கண்டுணர்ந்து பலன் நிர்ணயம் செய்வது, சம்பந்த பட்ட ஜாதகருக்கு ஜாதக ரீதியான துல்லியமான பலனை சொல்ல உதவும் , ராசியை அடிப்படையாக வைத்தோ , லக்கினத்தை அடிப்படையாக வைத்தோ (லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை கருத்தில் கொள்ளாமல்) பலன் காணுவது அமாவசை அன்று நிலவை தேடுவதற்கு நிகரான ஒன்றாக கருத வேண்டி வரும் , லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் ஜாதக ஆய்வு செய்தால் மட்டுமே ஒவ்வொரு கிரகமும் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது என்ற உண்மை நிலை புரியும் , மேலும் ஒவ்வொரு பாவகத்தின் வலிமையை பற்றி தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும் .

மேற்கண்ட அமைப்பில் ஜாதக கணிதம் நிர்ணயம் செய்த பின்பு திசா புத்திகளின் பலாபலன்களை துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலும், உதாரணமாக கீழ்க்கண்ட ஜாதக அமைப்பை எடுத்துகொண்டு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையை பற்றியும் , திசா புத்திகள் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதனை பற்றியும் சற்றே சிந்திப்போம் .

ஜாதகர் பிறந்த தேதி : 27/06/2012
ஜாதகர் பிறந்த நேரம்: 07 : 52 pm 
ஜாதகர் பிறந்த இடம் : சேலம் 


இந்த ஜாதக அமைப்பின் படி 1,7,10 ம் வீடுகள் முறையே ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையிலும் ( ஜீவன ஸ்தானம் உபய ராசி என்பதால் 33சதவிகித யோக பலன்களையே தரும் ).

2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( லாப ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( சுக ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).

6ம் வீடு சத்துரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( சத்துரு ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை )

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( விரைய ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை ) சுய ஜாதக நிலை பலன்களை வழங்கிக்கொண்டு இருக்கிறது .

ஜாதகருக்கு பிறப்பு முதல்  11/05/2016 தேதி முடிய சந்திரன் திசையே நடை பெற்று கொண்டு இருக்கிறது , இந்த சந்திரன் திசை ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும் மேலும் ஜாதகர் சிறு குழந்தை பருவம் என்பதால் இதை அனுசரித்து பலனை நிர்ணயம் செய்வது அவசியம் தற்பொழுது நடை பெரும் சந்திரன் திசை ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலன்களை தந்து கொண்டு இருப்பது அவ்வளவு நன்மையை தர வாய்ப்பில்லை,மேலும் பனிரெண்டாம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஒன்பதாம் பாவகமாக வருவது ஜாதகருக்கு தான் செய்த பாக்கியத்தின் பலன்களை அனுபவிக்க இயலாது சூழ்நிலையையும் , உடல் ரீதியான சில தொந்தரவுகளையும் தர கூடும் , மேலும் தனது தகப்பனாருக்கு தேவையற்ற அவ பெயரை ஏற்ப்படுத்தகூடும் , இருப்பினும் இவற்றின் தாக்கம் என்பது மிக குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடையலாம் .

11/05/2016 தேதிக்கு மேல் நடை பெரும் செவ்வாய் திசை பற்றி சிறிது ஆய்வு செய்வோம், 2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று செவ்வாய் திசை பலன்களை வழங்குகிறது இது மிகவும் சிறந்த விஷயம் குறிப்பிட்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித பலன்களை தங்கு தடையின்றி அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , இதனால் ஜாதகருக்கு நல்ல கல்வி அமையும் , எடுக்கும் முயற்ச்சிகள் வெற்றி பெரும் , குல தேவதையின் அருளும் நல்லோர் ஆசியும் கிடைக்கும் , எங்கு சென்றாலும் ஜாதகர் நற்பெயர் எடுக்கும் யோகம் உண்டாகும் , அடிப்படையில் ஜாதகருக்கு இந்த செவ்வாய் திசை நீண்ட அதிர்ஷ்ட வாழ்க்கையை அமைத்து தரும் என்பது உறுதியாகிறது.

எனவே மேற்கண்ட முறையில் ஜாதக பலன்களை துல்லியமாக கணிதம் செய்து சொல்லும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை செம்மையாக அமைத்து கொள்ள உதவும் என்பது ஜோதிட கலையின் சிறப்பு அம்சம் . மேலும் சந்திரன் திசையில் ஜாதகர் உடல் நிலை அமைப்பில் அதிக கவனமாக இருந்து அவர்களது பெற்றோர்கள் ஜாதகரை கவனமுடன் பார்த்துக்கொள்ள ஜோதிட கலை இந்த இடத்தில் கை கொடுக்கும் , ஜாதகரின் தகப்பனார் தேவையில்லாமல் மாற்றவர்கள் விஷயந்தில் தலையீடு செய்து அவ பெயரை சம்பாதித்து கொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ள ஜோதிட கலை அறிவுறுத்தும் , வீண் விரையன்களை தவிர்க்க உதவி புரியும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969




 

வெள்ளி, 29 மார்ச், 2013

லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் நிலை என்ன ?





அன்பரே இது ஒரு சிறந்த கேள்வியாக ஜோதிடதீபம் கருதுகிறது .


கால புருஷ தத்துவ விதிப்படி ராசிகளை சரம் ஸ்திரம் உபயம் என்று மூன்று பிரிவுகளாக இயற்க்கை பகுத்து வைத்திருக்கிறது , இதில் சர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 11ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், ஸ்திர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், உபய ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானமாக இயற்கையால் நிர்ணயம் செய்யப்படுகிறது .

ஒருவருடைய லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையில் எவ்வித இன்னல்களை சந்திக்க வேண்டி வரும், என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் , பொதுவாக ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நன்மையை தருவதில்லை என்பதே முற்றிலும் உண்மை , எனவே ஒருவருடைய ஜாதகத்தில் உடலாக , உயிராக , மனதாக  மதிக்கப்படும் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து அனுபவிக்க வேண்டிய பலன்களை பற்றி இனி பார்ப்போம் .

சர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது , ஜாதகருக்கு தரவேண்டிய பதிப்புகளை நிலைத்து நின்று செய்யும் , மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் மூலம் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அதிக இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை தாமே உருவாக்கி கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் , மேலும் தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பை ஜாதகர் தவறவிடும் தன்மையை தரும் .

முன் பின் சிந்திக்காமல் செய்யும் காரியங்களால் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , ஜாதகருக்கு சிறப்பான வளரும் சூழ்நிலையை தராது , கல்வியில் தடையை தரும் , திருமண தாமதத்தை தரும் , தொழில் முடக்கம் அல்லது வேலைவாய்ப்பற்ற நிலை தரும் , ஆக சர லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர்  இலக்கின வழியில் இருந்து நிலையான இன்னல்களை சந்திக்க வேண்டி வரும்  .

ஸ்திர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது , ஜாதகருக்கு தர வேண்டிய பாதிப்புகளை  விரைந்து செய்யும் அதுவும் ஜாதகர் எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கையில்  மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி சென்றுவிடும் , இதில் இருந்து  ஜாதகர் மீண்டு எழுந்து வர அதிக கால நேரத்தை எடுத்துகொள்ள வேண்டி வரும் , இந்த தீமையான பலன்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் அதிக மாற்றங்களை தரும் நேற்றுவரை நன்றாக இருந்தவர் ஒரு இரவில் அனைத்தையும்  இழந்து , ஒன்றும் இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார் , இருப்பினும்  ஜாதகர் இவற்றில் இருந்து மீண்டு வரும் வாய்ப்பை நிச்சயம் தரும் .

மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் மூலம் தனக்கு நடக்கும் இன்னல்களை ஏற்படுத்தி கொள்ளும் தன்மையை தரும் , குறிப்பாக தனது கல்வி , தொழில் , குடும்ப வாழ்க்கை என்ற அமைப்புகளில் வெகுவாக பாதிக்கும் சூழ்நிலையை தரும் , ஸ்திர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும்  பொழுது, விரைவான கெடு பலன்களை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டி வரும் , இருப்பினும் இவை அனைத்தும் ஜாதகரின் நன்மைக்கே என்பதை இறுதியில் ஜாதகர் உணரக்கூடும் .

உபய ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ,  ஜாதகருக்கு தர வேண்டிய பாதிப்புகளை ஜாதகருடைய அமைப்பில் இருந்து குறைந்த இன்னல்களை அனுபவித்த  போதிலும் , ஜாதகரின் நண்பர்கள் , வாழ்க்கை துணை , கூட்டாளிகள்  மூலமாகவே அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , எனவே  ஜாதகர் தனது நண்பர்கள் , வாழ்க்கை துணை , கூட்டாளிகளை தேர்ந்தெடுக்கும்  பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம் ஏனெனில் ஜாதகர்  அவர்கள் வழியில் இருந்தே அதிகபடியான பாதக ஸ்தான பலன்களை அனுபவிக்க வேண்டி வரும் .

மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் தன்மையை ஜாதகரின் நண்பர்கள் , கூடாளிகள் , வாழ்க்கை துணையே நிர்ணயம்  செய்து ஜாதகரை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்குவார்கள் , குறிப்பாக மற்றவர் செய்யும் காரியங்களுக்கு ஜாதகர் வீண் பலி பாவங்களை அனுபவிக்க  வேண்டி வரும் , குறிப்பாக ஜாதகரின் பொது வாழ்க்கை , தொழில் மற்றும்  திருமண வாழ்க்கை கேள்வி குறியாக மாறிவிட அதிக வாய்ப்புகள் ஏற்ப்படுத்தும் , தனது நண்பர்கள் , கூட்டாளிகள் , வாழ்க்கை துணையின் செயல்பாடுகள்  மூலம் ஜாதகர் 100 சதவிகித தீமையான பலனையே அதிகம் அனுபவிக்க  வேண்டி வரும் என்பதே வருத்தம் அளிக்கும் விஷயம் , இவரின் தொடர்  தோல்விகளுக்கு காரணமாக மேற்க்கண்டவர்களின் தொடர்பே காரணமாக அமைந்துவிடும்  என்பதே உண்மை .

சர லக்கினத்தை சார்ந்தவர்கள் தனது அதிர்ஷ்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல்  இருப்பதாலும் , ஸ்திர லக்கினத்தை சார்ந்தவர்கள் தனது செய்கையினாலும் சிந்தனையினாலும் தனக்கு இன்னல்களை தானே தேடி கொள்வதாலும் , உபய லக்கினத்தை சார்ந்தவர்கள் மற்றவர்களாலும் பாதக ஸ்தான  பலனை அனுபவிக்க வேண்டி வரும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


ஞாயிறு, 3 மார்ச், 2013

மனோகாரகன் சந்திரன் ஜாதகத்தில் செய்யும் அற்புதங்கள் !




ஒரு ஜாதக அமைப்பில் சந்திரன் நல்ல நிலையில் அமரும்பொழுது , ஜாதகரின் மன நிலை மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது , சந்திரன் சர ராசியில் அமரும்பொழுது , ஜாதகரின் மன ஆற்றல் மிகுந்த வேகத்துடனும் , ஸ்திர ராசியில் அமரும்பொழுது ஸ்திரமான எண்ணங்களுடனும் , உபய ராசியில் அமரும் பொழுது அனைவருக்கும் பயன்தரும் காரியங்களை ஆற்றும் தன்மை பெற்றவராகவும் ஜாதகரை பண்படுத்தும் .

கிராமங்களில் ஒரு செலவாடை ஒன்று உண்டு அது " எண்ணம் போல் வாழ்க்கை " என்று பெரியவர்கள் சொல்லி கேட்பது உண்டு , இதற்க்கு உதாரணமாக ஒரு சிறு கதை ஒன்று சொல்வது உண்டு , சிவ பெருமான் கோவிலுக்கு , விசேஷ காலங்களில் வழிபாடுகளில் பயன்படுத்த ஒரு சிறிய குட்டி யானையை , வாங்கி வருகின்றனர் , அதை கட்டுபடுத்த ஒரு பாகனும் , யானையின் காலில் கட்டிபோட ஒரு சிறு சங்கிலியும் பயன்படுத்துகின்றனர் .

சிறு சங்கிலியால் யானையை கட்டி போட்ட உடன் யானை அந்த சங்கிலியை இழுத்து பார்கிறது , அதனால் அந்த சங்கிலியை அறுக்க இயலவில்லை , மீண்டும் முயற்ச்சிக்கிறது ஆனால் அந்த முயர்ச்சியும் வெற்றி பெறவில்லை , தொடர்ந்து ஒரு மாத காலம் முயற்ச்சிக்கிறது , யானையின் செயல் வெற்றி பெறவில்லை , எனவே குட்டி யானை ஒரு முடிவுக்கு வருகிறது, தன்னால் இந்த சங்கிலியை அறுக்க இயலாது என்று , அதன் பிறகு அந்த குட்டியானை சங்கிலியை அறுப்பதற்கு உண்டான எந்த ஒரு முயர்ச்சியும் செய்வதில்லை , காலங்கள் செல்கிறது .

 குட்டியானை பெரிய யானையாக வளர்கிறது , இருப்பினும் சங்கிலியை அறுப்பதற்கு உண்டான எந்த ஒரு முயர்ச்சியும் இந்த யானை செய்வதில்லை , காரணம் யானையின் மனதில் சிறு வயதில் தனது முயற்ச்சி தோல்வி அடைந்ததை நினைத்தே எவ்வித முயர்ச்சியும் எடுப்பதில்லை , இப்பொழுது அந்த யானை முயற்ச்சித்தால் எவ்வளவு பெரிய சங்கிலியையும் அறுத்து எரியும் தன்மை உண்டு , எதையும் உடைக்கும் பலம் யானைக்கு உண்டு , ஆனால் யானை எவ்வித முயற்சியும் செய்வதில்லை , காரணம் யானையின் மனதில் சிறு வயதில் விழுந்த அந்த எண்ணம் யானையை செயல்பட மறுக்க வைக்கிறது , தற்பொழுது அந்த யானையின் காலில் இருப்பது , யானையின் சிறுவயதில் கட்டிய அந்த சிறு சங்கிலியே என்பதை உணராமலேயே அதன் வாழ்க்கை நகர்கிறது .

மேற்கண்ட கதையை போன்றதே நமது நிலையும் , சில விஷயங்கள் சில காலங்களில்  தோல்வி அடைந்த காரணத்தால் , எவ்வித முயற்சியும் செய்யாமல்  தன்னுள் உள்ள மிகப்பெரிய மனோ ஆற்றலை பயன்படுத்தாமலேயே  உள்ள மனிதர்கள் 70 சதவிகிதம் பேர் என்பது ஆராய்ச்சி முடிவு  , கன்றை ஈன்ற பசுமாடு தனது கன்றை சில மணி துளிகள் மட்டுமே தனது  நாவால் வருடி கொடுக்கிறது , அதன் பிறகு அந்த பசு கன்றுகுட்டி தானாகவே  சுயமாக எழுந்து நிற்கிறது , நடக்கிறது , துள்ளி குதிக்கிறது , பிறகு  ஓடுகிறது , ஆனால் நமது பெற்றோர்கள் நம்மை எப்பொழுதுமே பிறந்த கன்றாகவே  நினைத்து வருடி கொடுத்துகொண்டே இருக்க வேண்டு என்று நினைக்கின்றனர்  , சுயமாக நாம் சிந்தித்தாலும் அதை செயல் படுத்த முடியாத சிறு வயது  சங்கிலியாக மாறிவிடுகின்றனர் .

நமது குழந்தைகள் செய்யும் செயல்களை பெற்றோர்கள் நன்றாக கவனிக்க வேண்டு , அவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் கண்டிப்பதுடன் , சரியான  வழியை காட்டுவது அவர்களின் கடமை , இதில் இருந்து பெற்றோர்கள்  விலகி நிற்கும் பொழுது , அதன் விளைவுகளை தனது வயதானகாலங்களில்  அனுபவிக்க நேர்கிறது என்பதே உண்மை , இதனால் தனது  சந்ததியும் பாதிக்கிறது , இவர்களும் பாதிக்க படுகின்றனர் என்பதே உண்மை .

தனது குழந்தையின் நிலை என்ன ? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள அவர்களின்  ஜாதகம் பெற்றோர்களுக்கு மிகுந்த உதவி செய்கிறது , குறிப்பாக ஜாதகத்தில் லக்கினம் இருக்கும் நிலையை வைத்து ஜாதகரின் உடல் , மனம் , வளரும்  சூழ்நிலையை தெளிவாக நாம் தெரிந்துகொள்ள முடியும் , சந்திரனின் நிலையை  வைத்து லக்கினத்தின் வழியில் ஜாதகன் செய்யும் செயல்பாடுகளின்  தன்மையை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , இதன் அடிப்படையில்  தனது குழந்தையை நிச்சயம் விழிப்புணர்வுடன் வளர்த்து , சமுதாயத்தில்  ஒரு தனி திறன் வாய்ந்த மனிதனாக சிறப்பாக வாழ்க்கையை அமைத்து  கொள்ள வைக்க இயலும் , இது பெற்றோர்களால் மட்டுமே முடியும், இதை  ஒவ்வொரு பெற்றோரும் உணருவது அவசியம் .

தனது குழந்தைகளை கட்டுபாடுடன் கூடிய சுதந்திரத்தை சரியான வயது வரும் வரை தருவது அவசியம் , அதன் பிறகு அவர்களின் வாழ்க்கையை நிச்சயம்  சிறப்பாக அவர்களே அமைத்து கொள்வார்கள் , கண்டிக்கிறேன் என்ற பெயரில் குழந்தைகளை அடக்கி ஆள்வதும் , சுதந்திரம் தருகிறேன் என்ற பெயரில் அவர்களின் பெயரில் அலட்சியமாகவும் இருப்பது மிகுந்த பாதிப்பையே  தரும் .

குறிப்பாக சர ராசி லக்கினத்தை பெற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் அதிக கவனம்  பெற்றோர்கள் செலுத்த வேண்டி வரும் , அடுத்ததாக உபய ராசி லக்கினத்தை பெற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் சிறு அக்கறை பெற்றோர்கள்  எடுத்துகொள்வது அவசியம் , ஸ்திர ராசி இலக்கின அமைப்பை பெற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் சரியான வழியை காட்டினால் போதும் அவர்களே தனது சிறப்பான வாழ்க்கையை அமைத்துகொள்வார்கள் , இதில் மேற்கண்ட லக்கினம் ராசி நிலைகள்  நல்ல நிலையில் இருப்பது அவசியம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

சனி, 12 ஜனவரி, 2013

சந்திரன் அமர்ந்த ராசியும் ஜாதகரின் மன இயல்பும் - பகுதி 2



ஒருவரின் மன ஆற்றலை நிர்ணயம் செய்யும் சந்திரன் , மேஷம் முதற்கொண்டு மீனம் வரை அமரும் பொழுது , ஜாதகரின் மன நிலையையும், என்ன ஆற்றல்களையும் , எவ்விதம் செயல்படுத்துகிறார் என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

சிம்மம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகரின் மனம் மிகவும் பரிசுத்தமான கள்ளம் கபடம் அற்று ஒரு குழந்தையின் மன நிலையை ஒத்து இருக்கும், சந்திரன் சூரியன் சேர்க்கை நிலையில் இருந்து தரும் யோக பலன்களை நடைமுறை படுத்தும், முற்ப்போக்கு சிந்தனையும் ஆராய்ச்சி மனநிலையும் தரும், நான் யார் என்ற உண்மையின் விளக்கத்தை பெற மனம் எப்பொழுதும் ஒரு தேடுதல் உடனே இருக்கும், தன்னம்பிக்கை, சுய கட்டுபாடு, ஸ்திரமான மனநிலை , முடிவு செய்த பின் மாறாத தன்மை, தர்மம் நியாயம் போன்ற உண்மை விஷயங்களுக்கு கட்டுப்படும் தன்மை, சூரியனை போன்று அக இருளை அகற்றி, மற்றவருக்கும் தெளிவை தரும் யோக வாழ்க்கையில் வெற்றியை தரும் . 

 தனக்கு எவ்வித துன்பம் வந்த போதிலும் தன்னை நம்பியவர்களை காப்பாற்றும் தயாள குணத்தை தரும் தனக்கு சாதகமானதை செய்யாமல் மற்றவருக்கும்  சரியென்பதை செய்யும் உயர்ந்த குணத்தை தரும் , இதன் காரணமாகவே பல நேரங்களில் பல எதிர்ப்புகளை ஜாதகர் சந்திக்க வேண்டி வரும் , இருப்பினும் எதற்க்கும் அஞ்சாத நேர்மையில் இருந்து மாறாத குணத்தை தரும் , இவர்கள் அனைவரும் சிறு வயது முதற்கொண்டே ஏதாவது நிறைவேறாத ஆசைகளுடனே வாழ்க்கையை எதிர்கொள்ளும் அமைப்பை தருகிறது , நிறைய திறமைகள் இருந்தும் வெளி உலகிற்கு தெரியாமல் தன்னடக்கத்துடன்  வாழும் தன்மை பெற்றவர்கள் , இங்கு அமரும் சந்திரன் சுய ஜாதக ரீதியாக சிறப்பாக இருந்தால் ஜாதகரின் வாழ்க்கையில் சாதிக்க இயலாதது ஒன்றும்  இல்லை எனலாம் .

கன்னி :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் தன்னை எதிர்பவர்க்கும் நன்மை செய்யும் மன பக்குவத்தை தரும் , எதற்க்ககவும்  எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது சுய உரிமையையும் , சுய மரியாதையையும் விட்டுகொடுக்க ஜாதகருக்கு  மனம் வராது , எதிர்ப்புகளை  ஜாதகர் தனக்கு சாதகமாக மாற்றி கொள்ளும் தனி திறமை இயற்கையாக  அமைந்திருக்கும் , பூமிக்கு அடியில் உள்ள நீர் மற்றும்  புதையல்கள் விஷயங்களை தனது மன ஆற்றல் கொண்டு சரியாக  கண்டுபிடிக்கு தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் மேலும் வரலாற்று விஷயங்களை சரியாக கணிக்கும் பேராற்றல் இயற்க்கை இவர்களுக்கு கொடுத்த கொடை எனலாம்,  இந்த குறிப்பிட்ட திறமையை  ஜாதகர் வளர்த்து கொள்வது அவசியம் .

சிறந்த மனோ தத்துவ நிபுணராக ஜாதகர் ஜொலிக்க இங்கு அமரும் சந்திரன் 100 சதவிகிதம் உதவி செய்வார் , மேலும் மற்று மருத்துவ முறைகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும் , ஜாதகரின் மன ஆற்றல்  மூலமாகவும் , எண்ணத்தின் மூலமாகவும் மக்களுக்கு ஏதாவது ஒரு  வகையில் உதவி செய்து கொண்டு இருக்கும் தன்மையில் தனது தொழில் மற்றும் பணியை  அமைத்துகொள்ளும் வாய்ப்பை தரும் , இதை தவிர  மற்றவர்களின் மனதில் உள்ள விஷயத்தை உணர்ந்து கொள்ளும் ஆற்றல்  உண்டாகும் , இங்கு அமரும் சந்திரன் பிரபஞ்சத்தை உணர்ந்து கொள்ளும் விழிப்பு நிலையை தரும் .

துலாம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் கலகலப்பாக  அனைவருடன் பழகும் தன்மையை தரும் , ஜாதகருக்கு பொது மக்களின்  ஆதரவு எப்பொழுதும் நிறைந்திருக்கும் , கலைகளில் சிறந்து  விளங்கும் பேராற்றலை வாரி வழங்கி விடும் , கலை துறையில் நல்ல பெயரும்  புகழும், சாதனை செய்யும் யோகம் உண்டு, குறிப்பாக இசையில்  சிறந்து விளங்கும் தன்மையும்  நல்ல ஞானத்தை தரும், ஒரு சிறந்த  சமுகத்தை உருவாக்கும் தன்மையும் உண்டாகும் , தனது சிறப்பான  சிந்தனை ஆற்றல் மூலம் தன்னை சார்ந்த மக்களுக்கு   முன்னேற்றமான எதிர்காலத்தை அமைத்து தரும் சக்தியினை தரும்.

இங்கே அமரும் சந்திரன் ஜாதகருக்கு சிறந்த நுணுக்கமான அறிவாற்றலை  தந்துவிடும் , எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவாற்றல்  மூலம் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றியை பெரும் யோகம் உண்டு , செய்யும் தொழில் நேரம் காலம் பார்க்காமல் அயராது பாடு படும் குணத்தை தரும் , ஜாதகரை நம்பியவர்கள் நிச்சயம் நன்மையடைவார்கள் , தானும் முன்னேற்றம் கண்டு தன்னை நம்பியவர்களின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை  தரும் தன்மை கொண்டவர்களாக காணப்படுவார்கள் சந்திரன்  இங்கு அமர்வது அழியா உலக புகழ் பெரும் யோகத்தை தரும் .

விருச்சிகம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் அதிக அளவில் மன  போராட்டத்தை எதிர்கொள்ளும் தன்மை பெற்றவராக இருப்பார் , மக்கள் நலனுக்காக போராடும் தன்மை பெற்றவர்கள் , எதிர்பாராத  நிகழ்சிகளால் சமுதயாத்தில் முக்கிய பதவிகளை ஏற்றுகொள்ளு  சூழ்நிலை ஏற்படும் , பெரிய மனிதர்களின் ஆதரவு , அவர்களின் மனதை  எளிதில் கவரும் தன்மை , அரசு வழிகளில் இருந்து வரும்  ஆதரவு , வேற்று இனத்தவர்களின் ஆதரவு மூலம் வாழ்க்கையில் மிக பெரிய பதவியை  பெற்றுத்தரும் , அந்த பதவிகளை நீடித்து சிறப்பாக செய்யும் யோகம்  உண்டாகும் , தனது சிறப்பன நடவடிக்கையின் மூலம் மக்கள் அனைவரிடமும் நல்ல பெயரும் புகழும் உண்டாகும் .

தனிபட்ட முறையில் ஜாதகரின் குணாதிசியத்தை எவராலும் கணிக்க இயலாது , இவரின் மனதில் உதிக்கும் எண்ணங்கள் யாவும் ஜாதகருக்கும், ஜாதகரை  சார்ந்தவர்களுக்கும் மிகப்பெரிய நன்மைகளை தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்கும் , குறிப்பாக ஜாதகர் பொது வாழ்க்கையில் வெற்றி பெரும் அளவிற்கு குடும்ப வாழ்க்கையில் நன்மை மற்றும் வெற்றி பெற இயலுவதில்லை , இருப்பினும் எதையும் தங்கும் இதயமாக ஜாதகர் இருப்பது  இறைவன் கொடுத்த வரமே , இங்கும் அமரும் சந்திரன் ஜாதகருக்கு  வாழ்க்கையின் உண்மை நிலையை உணர வைத்தது , பக்தி நிலைக்கு  எடுத்து செல்லும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


புதன் கேது சேர்க்கை தரும் யோக பலன்கள் !



ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகம் என்றாலும் சரி புதன் கேது சேர்க்கை பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகருக்கு தரும் யோக பலன்களை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் , 

புதன் கேது சேர்க்கை ஒருவருடைய சுய ஜாதகத்தில், ஒரே வர்க்கம் சார்ந்த மண் தத்துவ ராசிகளான ரிஷபம் , கன்னி , மகரத்தில் நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகர் பொருளாதரா ரீதியாக நல்ல முன்னேற்றமும் , சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் , நிறைவான சொத்து சுக சேர்க்கையையும் வாரி வழங்கி விடுகிறது புதன் கேது சேர்க்கை , இதற்க்கு காரணம் புதனுடன் சேர்ந்த கேதுவின் ஆற்றலே என்றால் அது மிகை ஆகாது , ஏனெனில் புதனுடன் சேரும் கேது, புதன் வழங்கும் நல்ல பலன்களையும் , அமர்ந்த இடத்திற்கு உண்டான முழு பலன்களையும் தானே ஏற்று கொண்டு நடை முறை படுத்துவதே இதற்க்கு காரணம்.

 கால புருஷ தத்துவ அமைப்பின் படி இரண்டாம் வீடான ரிஷபத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை நல்ல குடும்ப வாழ்க்கையினையும் ,   முதலீடு அற்ற கை நிறைவான வருமானத்தையும் , சிறப்பான பேச்சு திறமையின் மூலம் பொருளாதார முன்னேற்றத்தையும் தரும் . மேலும் ஜாதகரின் உடல் நிலை ஆயுள் வரை பெரிய பாதிப்புகளை சந்திக்காது ,  ஜாதகருக்கு சொத்து சுக சேர்க்கை என்பது மிக எளிதாக அமையும் , அடிப்படை கல்வி ஜாதகருக்கு எவ்வித தடையும் இன்றி மிகவும் சிறப்பாக அமையும் , 

ஜாதகருக்கு விட்டு கொடுத்து செல்லும் மனபக்குவம் சிறு வயது முதலே அமைந்து விடும் , இதனால் ஜாதகருக்கு வேண்டியாது நிச்சயம் கிடைக்கும் , ஜாதகரின் பொறுமையான குணம் அனைவராலும் விரும்பப்படும் , ரிஷபத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை ஜாதகருக்கு அளவற்ற வருமானத்தை நிச்சயம் தரும் , குறிப்பாக மருத்துவம் , பைனான்ஸ் , வட்டி தொழில் , கலை துறை , தனது பேச்சு திறனால் ஈட்டும் வருவாய் என்ற அமைப்பில் .

கால புருஷ தத்துவ அமைப்பின் படி ஆறாம் வீடான கன்னியில் அமரும் புதன் கேது சேர்க்கை ஜாதகரை திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம்  மிக பெரிய செல்வந்தனாக மற்றும் தன்மை கொண்டது , மேலும் சூது , லாட்டரி , சட்டத்துக்கு புறம்பான தொழில்கள் மூலம் மிகப்பெரிய தன சேர்க்கை உண்டாகும் , புதனுடன் சேரும் கேது  ஜாதகருக்கு அடிக்கடி அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்கி கொண்டே இருப்பார் , மேலும் ஜாதகரை பகைத்து கொள்ளும் அன்பர்களின் நிலை மிகவும்  பரிதாபத்திற்கு உரிய நிலைக்கு கொண்டு சென்று விடும் .

 இவர்களின் வாக்கு  பலிதம் பெரும் என்பதால் , இவரால் சபிக்க பட்டவர்களுக்கு சுய ஜாதகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கும் , இவரால் வாழ்த்து பெற்றவர்களின்  ஜாதக அமைப்பு மிகுந்த யோக பலன்களை  நடை முறையில் நடத்தி கொண்டு இருக்கும், தனது எண்ணத்தாலும் செயலாலும் காரிய வெற்றி பெரும்  தனி திறமை, ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து இருக்கும் , தன்னை எதிர்பவர்களை கண்டு சிறிதும் அஞ்சாத மன நிலையை இங்கு அமரும்  புதன் கேது சேர்க்கை சிறப்பாக தந்து விடும் .

கால புருஷ தத்துவ அமைப்பின் படி பத்தாம் வீடான மகரத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை , மேற்கண்ட இரண்டு சேர்க்கை நிலையை விட அதிக யோக பலன்களை தரும் புதன் கேது சேர்க்கை எனலாம் , சர ராசியான மகரத்தில் அமரும் இந்த சேர்க்கை நிலையில் கேதுவின் ஆதிக்கமே 100 சதவிகிதம் மேலோங்கி  நிற்கும், ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றத்தை குறுகிய காலத்தில் வாரி வழங்கும் , எதையும் சாதிக்கும் ஆற்றலை ஜாதகருக்கு தடையில்லாமல் வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கி கொண்டே இருக்கும் .

குறிப்பாக கனரக வண்டி வாகன போக்குவரத்து தொழில்கள் , கட்டிடம் மற்றும் கட்டுமான தொழில்களில் , விவசாயம் சார்ந்த தொழில்கள் , பண்ணை தொழில்கள் மூலம் ஜாதகரின் வாழ்க்கை குறுகிய காலத்தில் முன்னேற்றம் பெரும் , இதற்க்கு மூல காரணமாக இங்கு அமரும் கேது பகவானின் ஆற்றலே  என்றால்  அது மிகையாகாது , புதன் ஜாதகருக்கு சரியான திட்டமிடுதலை தருவார் , கேது அதனை நடைமுறைக்கு கொண்டுவருவார் , மேலும் ஜாதகர் வெற்றி பெறுவதற்கு உண்டான நல்ல மனிதர்களின் தொடர்புகளை ஏற்ப்படுத்துவதும் கேது பகவானே . 

மேற்கண்ட அமைப்பில் சுய ஜாதகத்தில் புதன் கேது சேர்க்கை இருந்து லக்கினத்திற்கு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே மேற்கண்ட நன்மையான பலன்கள்  நடை முறைக்கு வரும் , இல்லை எனில் இதற்க்கு நேர் எதிரான  பலன்களை ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும் , இவை யாவும் நடப்பு திசையில் சம்பந்த பட்ட பாவகத்தின் பலன் நடைமுறையில் வந்தால் மட்டுமே  என்பதை கவனத்தில் கொள்வது அவசியம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


செவ்வாய், 11 டிசம்பர், 2012

காற்று தத்துவ ராசிகளின் தன்மையும், சுய ஜாதகத்தில் வலிமை பெரும் பொழுது தரும் நன்மைகள் !



கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மிதுனம் உபய காற்று தத்துவ ராசியாகவும், துலாம் சர காற்று தத்துவ ராசியாகவும், கும்பம் ஸ்திர காற்று தத்துவ ராசியாகவும் இயற்கையால் வகைபடுத்த படுகிறது , ஒருவருக்கு சுய ஜாதக அமைப்பில் மேற்கண்ட காற்று  தத்துவ ராசிகள் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் .

பொதுவாக சுய ஜாதகத்தில் மேற்கண்ட ராசிகள் ஜாதகருக்கு நல்ல நிலையில் இருந்தால் , ஜாதகரின் அறிவாற்றல் மிகவும் சிறப்பாக அமைந்து விடும் , தனது அறிவாற்றல் துணை கொண்டு சாதிக்காத விஷயங்களே இல்லை எனலாம் , சிறுவயதில் கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையை இயற்கையாக தந்துவிடும் , மேலும் விளைவு அறிந்து செயல்படும் நுணுக்கமான அறிவை பெற்றிருப்பது இவர்களின் தனி தன்மை , மேலும் கணிதம் , மற்றும் அறிவியல் , விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் இவர்களின் பங்களிப்பை தவிர்க்க இயலாது , மேலும் மருத்துவ துறையில் தலை சிறந்த மருத்துவர்களின் ஜாதக அமைப்பில் இந்த காற்று தத்துவ ராசிகள் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .

தனது வாரிசுகள் எந்த துறையில் சிறந்து விளங்குவார்கள் என்பதை பற்றி தெளிவாக பெற்றோர்கள் தெரிந்து கொள்ள உதவும் ராசிகள் இந்த காற்று தத்துவ ராசிகள் என்றால் அது மிகையாகாது , இதன் மூலம் ஒவ்வொருவரும் தன்னை பற்றிய சுய மதிப்பீடு செய்ய இந்த காற்று தத்துவ ராசிகள் நிச்சயம் உதவி புரியும் .

மிதுனம் உபய காற்று ராசி ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு  தரும் நன்மைகள் :

தனது அறிவாற்றல் மூலம் மக்களுக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் , மிகுந்த நன்மைகளை செய்யும் அமைப்பை தரும் , இருப்பினும் ஜாதகருக்கு  சுயநலம் அதிகமாக மேலோங்கி இருக்கும் மற்றவருக்கு உதவினாலும்  அதில் தனக்கு ஏதாவது நன்மை இருக்குமாறு பார்த்துகொள்ளும்  தன்மை பெற்றவர்கள் , அதிக சுதந்திர மன நிலை கொண்டவர்கள் , கணித துறையில் சிறந்து விளங்கும் தன்மையை தரும் , வாழ்க்கையில் முன்னேற்றம்  என்பது சிறிது தாமதமாகவே கிடைக்கும் இருப்பினும் நிலைத்து  நிற்கும் , சமுதயாத்தில் சில மாற்றங்களை செய்யும்  தன்மையை ஜாதகருக்கு உண்டு .

 இவர்களின் அறிவாற்றல் நிச்சயம் மற்றவருக்கு  நன்மையை மட்டுமே செய்யும் என்பது தனி சிறப்பாக கருதலாம் , தான் நினைப்பதை நடத்தி முடிக்கும் தன்மை பெற்றவர்கள் , இளம் வயதில் கல்வியில் சிறந்து விளங்கும் தன்மை உண்டாகும் , கலைகளில் சிறந்து விளங்கும் தன்மை உண்டாகும் , குறிப்பாக , ஓவியம் வரைதல் , இசை கோர்த்தல் , இசை கருவிகளை சிறப்பாக இயக்கும் ஆற்றல், மனதில் உள்ளதை கலை நயமாக மக்களுக்கு  விரும்பும் விதம் விருந்தளிக்கும் படைப்பற்றல் ஜாதகருக்கு சிறப்பாக  அமைந்து விடும், மிதுனம் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்வது  ஜாதகருக்கு தனது அறிவாற்றல் மூலம் எவ்வித பிரச்சனைகள்  வந்தாலும் எளிதாக சாமாளிக்கும் ஆற்றலை வழங்கி விடும் .

துலாம் சர காற்று ராசி ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு  தரும்  நன்மைகள் :

ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர வேண்டிய ராசி இதுவே , குறிப்பாக  சூரியன் , சந்திரன் , சனி , புதன் இந்த ராசியில் நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகரின் புகழ்  எட்டு திக்கும் எங்கும் உலகம் முழுவது  பரவும் , மக்களுக்கு பயன்படும் பல புதிய கண்டு பிடிப்புகளுக்கு சொந்தகாரர்கள்  இவர்களே , சிறந்த வியாபார நுணுக்கங்களையும் , நிர்வாக  திறமையையும் வாரி வழங்கி விடும் , புதுமை விரும்பிகள் வாழ்க்கையில் புதிய சூழ்நிலை மற்றும்  பொழுது போக்கில் அதிக நாட்டம் கொண்டவர்கள் , கலை துறையில் நீங்க இடம் பிடிக்கும் அளவிற்கு  புதிய சிந்தனைகளை சமுதாயத்திற்கு கொடுக்கும் படைப்பாற்றல்  பெற்றவர்கள் , இவர்களின் உதவி இல்லாமல் கலை துறையில்  எவ்வித புதிய படைப்புகளும் வர வாய்ப்பில்லை .

 மற்றவர்கள் வியக்கும் வண்ணம் ஒன்றும் இல்ல விஷயத்தை  வைத்துக்கொண்டே அதில் பல புதுமைகளை கொடுக்கும் சிந்தனை மற்றும்  அறிவாற்றல் இவர்களுக்கு இறைவன் கொடுத்த வர பிரசாதமே அன்றி வேறேது ? இந்த துலாம்  ராசி நல்ல நிலையில் இருப்பவர்களின் வசீகர சக்தி என்பது சற்று அதிகமே , இவர்களை விரும்பாத பிடிக்காத நபர்கள் மிக குறைவே , தன்னம்பிக்கை  , சுய கட்டுபாடு , எல்லோருக்கும் பிரதி பலன் பாராமல் உதவும் தன்மை , பொது மக்கள் சேவையில் சிறந்து விளங்கும் கடமை தவறாத  அரசு உழியர்கள் , மருத்துவ சேவையில் புதுமை மற்றும் உயிர்க்காக்கும் சிறப்பு சிகிச்சையில் பல விஷயங்களை அறிமுகம்  செய்யும் சிறந்த மருத்துவரகள் என இவர்களின் பட்டியல் நீளம் மிக மிக அதிகம் ஒருவருடைய சுய ஜாதகத்தில் இந்த துலாம் ராசி வலிமையாக இருந்தால்  அந்த ஜாதகர் வாழ்க்கையில் மிக விரைவாக முன்னேற்றம் பெரும் தன்மையை நிச்சயம் தரும் .

கும்பம் ஸ்திர காற்று ராசி ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு  தரும் நன்மைகள் :

அதிர்ஷ்டம் மற்றும் அளவில்லா அறிவாற்றல் இரண்டும் ஒருங்கே அமைந்தவர்கள்  , குறிப்பாக தொழில் நுட்ப அறிவு மற்றவர்களை காட்டிலும் இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கு ரொம்ப அதிகம் , புதிய வண்டி வாகனம் , புதிய தொழில் நுட்பம் வாய்ந்த கருவிகள் , மக்களுக்கு பயன்படும்  வீட்டு உபகரண பொருட்கள் தாயாரிப்பு , மோட்டார் எஞ்சின் தயாரிப்பில் புதுமை செய்யும் தன்மை , பழமையான பொருட்களை  தனது அறிவாற்றல் மூலம் சிறந்த பொக்கிஷமாக மாறும் திறன்  , கட்டிட கலை , சிற்ப கலை , கற் சிலை வடிக்கும் சிற்ப கலை வல்லுனர்கள் , மக்களை சந்தோஷ படுத்தும் இசை , திரைப்படம் , நடாகம் , போன்ற துறைகளிலும் சிறப்பான முன்னேற்றத்தை தரும் .

 ஜாதகரின்   புத்திசாலித்தனம் பலரது வாழ்க்கையில் நிலையான நல்ல மாற்றங்களை தரும் , இதனால் ஜாதகருக்கும் ஜாதகரை சார்ந்தவருக்கும் பல முன்னேற்றங்கள் உண்டாகும் , புதை பொருள் ஆராய்ச்சி , பழமையான புராதன பொருட்கள் மீதான ஆய்வுகள் , சரித்திர சம்பந்தம் பட்ட ஆய்வுகளில் உண்மை விஷயங்களை உலகிற்கு எடுத்து சொல்லும் ஆற்றல் , உயிரியல் , மருத்துவ ஆய்வு , வேதியல் , புவியல் ஆய்வுகள் போன்ற விஷயங்களில்  சிறந்து விளங்கும் தன்மை என ஜாதகருக்கு சிறப்பான ஆய்வுகளில் சிறந்து விளங்கும் அறிவு ஆற்றலை இந்த கும்ப ராசி நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு எவ்வித தடையும் இல்லாமல் வாரி வழங்கும் .

ஒருவருடைய ஜாதகத்தில் காற்று தத்துவ ராசிகள் சிறப்பாக அமைய பெற்றால் அறிவாளியாகவும் , காற்று தத்துவ ராசிகள் கடுமையாக பாதிக்க பட்டால் அறிவிலியாகவும் ஜாதகர் காணப்படுவார் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

செவ்வாய், 4 டிசம்பர், 2012

பாதக ஸ்தானத்துடன் பூர்வ புண்ணியம் சம்பந்தம் பெரும்பொழுது ஜாதகர் பெரும் நன்மை தீமை பலன்கள் !




ஒருவருடைய சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய பாவகங்களில் ஒன்றான பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் அதிக அளவில் பாதிக்க படுவார் என்பதில் சந்தேகம் இல்லை இருப்பினும் , இதில் சர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கும் , ஸ்திர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கும் , உபய இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கும் பலன்கள் நடை முறை அமைப்பில் வேறுபடுவது இயற்கையே .

ஒரு சர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் பாதக ஸ்தான அமைப்பில் இருந்து மற்றவர்களால்  அனுபவிக்கும் இன்னல்களின் தன்மை, அதாவது உறவுகள் , நண்பர்கள் , அண்டை அயலார், வாழ்க்கை துணை , தனது குழந்தைகள் மூலமாக வரும் தொந்தரவு அதிகமாக இருக்கும் , மேலும் ஜாதகர் யாருக்காவது உதவி செய்ய சென்றால் அதுவே ஜாதகருக்கு எதிராக திரும்பி தாங்க முடியாத அளவிற்கு இன்னல்களை தரும், ஆக சர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும்பொழுது மற்றவர்களால் ஜாதகருக்கு அதிக இன்னல்கள் ஏற்ப்படும் .

ஒரு ஸ்திர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தான் அவசர பட்டு எடுக்கும் திடீர் முடிவுகளால் , தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்ளும் அமைப்பை தரும் , அதாவது யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்வதற்கு இணையாக எடுத்துகொள்ளலாம் , உறவுகள் நண்பர்கள்  தனக்கு நன்மை செய்கிறார்களா ? தீமை செய்கிறார்களா? என்று தெரிந்துகொள்ளாமல் ஜாதகர் அவசரபட்டு எடுக்கும் திடீர் முடிவுகளால் ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் இழக்கும் தன்மை ஏற்ப்படும் .

ஒரு உபய இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது செய்கை மற்றும் நடவடிக்கைகளாலும் பாதிக்க படுவார் , தனது உறவுகள் நண்பர்கள் பொது மக்களாலும் பாதிக்கப்படும் சூழ்நிலையை தரும் , மேலும் பூர்வ புண்ணிய அமைப்பில் இருந்து ஜாதாருக்கு நீடித்த தீமையான பலன்கள் தொடர்ந்து நடை பெரும் இதில் ஜாதகர் எதையும் தவிர்க்க இயலாது , பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் அமைப்பில் இருந்து  அதிக  இன்னல்களை எதிர்கொள்ளும் அன்பர்கள் உபய இலக்கின அமைப்பை சார்ந்தவர்களே .

பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவதால் சர இலக்கின அமைப்பை சார்ந்தவர்கள் மற்றவர்களாலும் , ஸ்திர இலக்கின அமைப்பை சார்ந்தவர்கள் தனது செய்கையினாலும் , உபய இலக்கின அமைப்பை சார்ந்தவர்கள்  தன்னாலும் மற்றவர்களாலும் பாதக ஸ்தான பலன்களை அனுபவிக்க  வேண்டி வரும் , இது பாதக ஸ்தான அமைப்பில் இருந்து வரும் கெடுதல்கள் .

இந்த பாதக ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகர் நன்மை பெரும் அமைப்பும் உண்டு  அதாவது ஜாதகரின் ரத்த உறவுகளான பாட்டனார் , தகப்பனார் சமுதாயத்தில் பெரிய அளவில் தனது அறிவாற்றல் கொண்டு நல்ல நிலையை பெற முடியாத அமைப்பை பெரும்பொழுது , ஜாதகர் தனது அறிவாற்றல் மூலம் சமுதாயத்தில் சிறப்பான இடத்தை பெரும் யோகம் உண்டாகும் , ஒரு வகையில் பூர்வ புண்ணியம் என்பது ஜாதகரின் தகப்பனார் வழியில் வரும் புத்தி கூர்மை மற்றும் அறிவாற்றலை  குறிக்கும் , எனவே ஒரு ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுகிறது எனும் பொழுது ஜாதகரின் தகப்பனார் புத்திசாலித்தனம் அற்றவராக கானப்படுவாறே ஆயின் , ஜாதகருக்கு அதி புத்திசாலிதனத்தை வாரி வழங்கி விடும் , இதனால் தனது தகப்பனார் மற்றும் அவரது  முன்னோர்கள் செய்யாத சாதனைகளை ஜாதகர் தனது அறிவாற்றல் மற்றும் சமயோசித புத்திசாலிதனத்தால் செய்து வாழ்க்கையில்  சிறப்பான முன்னேற்றத்தையும் , பொருளாதார தன்னிறைவையும் பெரும் யோகம் உண்டாகும் .

இந்த இடத்தில் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரை மட்டும்  மிகப்பெரிய இடத்திற்கு எடுத்து செல்லும் அவரது அறிவு  வழியில்,  ஆனால் ஜாதகரை சார்ந்தவர்கள் அடையும் இன்னல்களுக்கு அளவிருக்காது , ஜாதகரை நம்பியவர்களின் கதி அதோ கதிதான் . ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இருந்து பெற வேண்டிய துன்பங்களை , ஜாதகரை சார்ந்தவர்கள் அனுபவிக்க வேண்டி வரும் அதாவது ஜாதகரின்  நண்பர்கள் , உறவுகள் , வாழ்க்கை துணை , ஜாதகரின் வாரிசுகள் என  அனைவரையும் பாதிக்கும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பாதக ஸ்தானத்தின் பலன் ஒரு ஜாதகருக்கு நடைபெற்றால் என்ன நடக்கும் ?



அண்ணே வணக்கம்,
      

உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் எப்போதும் பாதக ஸ்தானம் பற்றி அதிகம் குறிப்பிடுகிறீர்கள். மற்ற ஜோதிடர்கள் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை கேட்டால் லாப ஸ்தானம்,பாக்கிய ஸ்தானம்,களத்திர ஸ்தானம் எப்படி  நமக்குத் தீமை செய்யும் எனக்கேட்டு உடம்பு புல்லரிக்கச் செய்கின்றனர். அதில் எனக்கும் உடன்பாடு இல்லை தான்.பாதகஸ்தானம் எப்போதும் தீமையான பலன்களைத்தான் தருமா?.இல்லை பாதகஸ்தான அதிபதி தான் பாதகம் செய்யுமா?.இல்லை பாதகஸ்தான அமர்வு பெற்ற கிரகங்கள் தான் தீமை செய்யுமா?.இத்தனை செய்யுமா ஏன் என்றால் நீங்கள் சொல்லும் பாதகஸ்தானத் தொடர்பு பெற்ற கிரகங்களின் தசா,புத்திகள் எப்போதுமே நன்மை செய்யாது என்று கொள்ளலாமா?. நீங்கள் குறிப்பிடுவது ஒருவருக்கு (சரம் 11ம் அதிபதி,ஸ்திரம் 9ம் அதிபதி, உபயம் 7ம் அதிபதி)இந்த இடங்களின் ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் ஏதோ ஒருவகையில் தீமை மட்டுமே செய்யுமாயின் அந்தக் குறிப்பிட்ட ஆதிபத்திய வீடுகளின் பலனை நாம் அனுபவிக்கவே முடியாது. லாப‌மில்லாம‌ல்,ஒரு பாக்கிய‌மும் இல்லாம‌ல், ந‌ல்ல‌ ம‌னைவியில்லாம‌ல் த‌னிம‌னித‌ வாழ்வு எப்ப‌டி சாத்திய‌மாகிற‌து?. அத‌ற்கு இறை நிலை செய்துள்ள‌ மாற்றுவ‌ழிக‌ள் என்ன‌வாக‌ இருந்தால் அதை அவ‌ன் ச‌மாளிக்க‌ முடியும்.இத‌ற்குத் த‌ங்க‌ளிட‌மிருந்து ஒரு ப‌திலை ந‌ம‌து வ‌லைப்பூவில் அனைவ‌ர் அறிய‌த் த‌ருவீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்.


வணக்கம் தம்பி தங்களின் சந்தேகங்களை தீர்த்தது வைப்பது ஜோதிடன் என்ற முறையில் எனது கடமையும் கூட , தங்களின் கேள்வி எனக்கு மிகவும் ஆச்சரியத்தை தருகிறது , ஏனெனில் ஜோதிடத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சி உள்ளவர்களால் மட்டுமே இது போன்ற கேள்விகள் கேட்க்க இயலும் , இதிலிருந்து தங்களுக்கு ஜோதிட கலையின் மீது உள்ள அளவில்லா ஆர்வத்தை காட்டுகிறது , எவருக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தேடுதல் இருக்கிறதோ , அவர்களுக்கு நிச்சயம் அந்த விஷயம் நிச்சயம் கிடைக்கும் , கடந்த ௮ வருடங்களுக்கு முன்பு தங்களை போன்றே ஜோதிடத்தை பற்றி உண்மை விஷயங்களை அறிய அதிக தேடுதலுடன் இருந்தேன் , அந்த தேடுதலின் பலனாகவும் , இறை அருளின் கருணையினாலும் , எனக்கு ஜோதிடத்திற்கும் , ஆன்மிகத்திற்கு சரியான குரு எனக்கு கிடைத்தார் , அவர்களின் அருளால் ஜோதிடத்தில் தெளிவும் , ஆன்மீகத்தில் விழிப்புணர்வும் பெற்றேன் எனவே தங்களுக்கும் தங்களின் தேடுதலுக்கும் இறை அருள் நிச்சயம் சரியான பதிலையும் , தெளிவையும் தரும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை சரி இனி தங்களின் கேள்விக்கு உண்டான தெளிவான பதிலை பார்ப்போம் .


பாதகஸ்தானம் எப்போதும் தீமையான பலன்களைத்தான் தருமா?

பாதக ஸ்தானம் நிச்சயம் எப்பொழுது தீமையான பலனை மட்டுமே தரும் என்பதில் எவ்வித சந்தகமும் இல்லை உதரணமாக நமது வீட்டில் எரியும் விளக்குதானே அதை தொட்டால் நம்மை ஒன்றும் செய்து என்று சொல்ல முடியுமா ? உங்களது வீடு என்றாலும் உங்களது விளக்கு என்றாலும் அதில் எரியும் நெருப்பை தொட்டால் நிச்சயம் சுடவே செய்யும், "நெருப்பை தொட்டால் சுடும் என்பதே விதி"  இதை மாற்ற யாராலும் முடியாது , இதில் இருந்து தெரிவது பாதக ஸ்தானம் ஒருவருக்கு நிச்சயம் தீமையான பலன்களை மட்டுமே செய்யும் என்பது ஊறுதி .


இல்லை பாதகஸ்தான அதிபதி தான் பாதகம் செய்யுமா?.இல்லை பாதகஸ்தான அமர்வு பெற்ற கிரகங்கள் தான் தீமை செய்யுமா?

பாதக ஸ்தான அதிபதியும் கெடுதல் செய்ய மாட்டார் , பாதக ஸ்தானத்தில் அமர்ந்த கிரகமும் கெடுதல் செய்து , பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற கிரகத்தின் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் நடக்கும் பொழுது மட்டுமே , அதிக கெடுதலான பலனை அதாவது 200 மடங்கு கெடுதலான பலனை வாரி வழங்கும் , அந்த காலகட்டங்களில் ஜாதகர் தனது வாழ்நாளில் அனுபவிக்காத சிரமங்களையெல்லாம் அனுபவிக்க வேண்டி சூழ்நிலைக்கு தள்ள படுவார் , குறிப்பாக சர லக்கினம் பெற்ற ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை பாதக ஸ்தானமான பதினொன்றாம் பாவகத்தின் பலனை தரும் பொழுது ஜாதகர் லக்கினம்  மேஷம் என்றால் தனது முட்டல் தனமான நடவடிக்கையின் காரணமாக தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் , கடக லக்கினம் என்றால் தனது சொத்து சுகங்களை இழக்கும் தன்மையும் , உடல் நிலை பாதிப்புகளையும் சந்திக்க வேண்டி வரும் , துலாம் லக்கினம் என்றால் தனது அவசரமான செயல்களாலும் , முன்பின் யோசனை அற்ற செயல்களாலும் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் , மகர லக்கினம் என்றால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும் , மன நிலை பாதிப்பிற்கும் உட்பட வேண்டிய சூழ்நிலை  ஏற்ப்படும் குறிப்பாக மன நோயால் அதிகம் பாதிக்க படும் நபர்கள் இவர்களே .

நடக்கும் எந்த கிரகத்தின் திசை என்றாலும் , அந்த திசை நிச்சயம் பாதக ஸ்தானத்தின் பலனை செய்யாமல் இருந்தால் மட்டுமே நல்லது , பாரம்பரிய ஜோதிட முறையில் நல்ல கிரகம் என்று வர்ணிக்க படும்  சுக்கிரன் , குரு , சந்திரன், போன்ற கிரகங்களின் திசை நடந்தாலும் அந்த கிரகத்தின் திசை பாதக ஸ்தான பலனை செய்தால் ஜாதகர் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக மாறிவிடும் , நடப்பது என்னவே நல்ல கிரகத்தின் திசை தான் ஆனால் அந்த நல்ல கிரகம் தொடர்பு பெறுவதோ பாதக ஸ்தானம் எனவே நல்ல கிரகத்தின் திசையும் ஜாதகருக்கு பாதகமான பலனை 200 மடங்கு செய்யும் , உதாரணமாக என்னிடம் வந்த ஒரு நபருக்கு உபய லக்கினம் சுய ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி பெற்று இருந்தார் அவரின் திசை அப்பொழுது நடந்து கொண்டு இருந்தது , நடந்த சந்திரன் திசை பாதக ஸ்தான பலனை செய்து கொண்டிருந்தது எனவே ஜாதகர் தனது நண்பர்களுடன்  கூட்டு தொழில் செய்து தன்னிடம் இருந்த சொத்து , நிலபுலன்கள் அனைத்தையும் இழந்து நடு தெருவுக்கு வந்து விட்டார் , இதற்க்கு ஜாதகரின் வாழ்க்கை துணையும் உடந்தை இதற்க்கு காரணம் ஜாதகருக்கு நடந்த சந்திரன் திசை களத்திர பாவகம் எனும் பாதக ஸ்தான பலனை நடத்தியதே , தற்பொழுது விவாகரத்து பெற்று ஒரு நிறுவனத்தில் இருந்து வரும் சிறிய வருமானத்தை வைத்து தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் , இவருக்கு சந்திரன் திசை சந்திரன் புத்தியில் திருமணம் செய்ய சொல்லி எந்த ஒரு ஜோதிடனோ வழிகாட்டி இருக்கிறார் .

இதில் இருந்து தெரிவது நடக்கும் திசை எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரியாத ஜோதிடர்கள் சொல்வதை கேட்டு சில காரியங்கள் செய்யும் நபர்கள் பின்னலில் இதுமாதிரி கடுமையான பாதிப்பான பலன்களை அனுபவித்து , மீள முடியாத நிலைக்கு தள்ளபடுகிறார்கள் , இது போன்ற தவறான பலனை சொல்லும் போலி ஜோதிடனுக்கு மற்றவரின் வாழ்க்கையை பற்றி என்ன கவலை , ஏதாவது பரிகாரத்தை சொல்லி பணம் ஈட்டுவதே அவர்களின் குறியாக  இருக்கும், மேலும் பரிகாரம் என்பது என்னவென்றே தெரியாமல் மக்களும் மூட நம்பிக்கைக்கு ஆர்ப்பட்டு தங்களது பொருட்களை இழந்து கொண்டேதான் இருக்கிறார்கள் , பாரிகாரம் என்பதே தான் செய்த வினை பதிவினை தானே தீர்த்து கொள்வதுதான் , உங்களுக்கு தலை வலி என்றால்  நீங்கள் தான் மருந்து எடுத்து கொள்ள வேண்டும் , மருத்துவர் எடுத்து கொண்டால் , தங்களுக்கு எப்படி குணமாகும் .

பொதுவாக பாதக ஸ்தானமாக சர லக்கினத்திற்கு 11 ம் வீடும் , ஸ்திர லக்கினத்திற்கு 9 ம் வீடும் , உபய லக்கினத்திற்கு 7 ம் வீடும் வருகின்றது , இதில் சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்தின் பலன் நடக்கும் பொழுது ஜாதகர் துரதிர்ஷ்டத்தையும் , ஸ்திர லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்தின் பலன் நடக்கும் பொழுது ஜாதகர் தேவையில்ல அவ பெயரையும், நற்பெயருக்கு களங்கத்தையும், உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்தின் பலன் நடக்கும் பொழுது ஜாதகர் சமுதாயத்தில் மற்றவர்களால் அதிக இழப்புகளையும் , இல்லற வாழ்க்கையில் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும் .

நீங்கள் சொல்லும் பாதகஸ்தானத் தொடர்பு பெற்ற கிரகங்களின் தசா,புத்திகள் எப்போதுமே நன்மை செய்யாது என்று கொள்ளலாமா?

நிச்சயமாக இதில் என்ன சந்தேகம் , பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்ற கிரகத்தின் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் அனைத்தும் நிச்சயம் கெடுதலே செய்யும் இதற்க்கு நீங்கள் எந்த பரிகாரம் செய்தாலும் சரி வராது , ஜாதகர் தனது கருமையத்தை சுத்தம் செய்துகொண்டு , மனதை ஒரு நிலையாக வைத்து கொள்வது மட்டுமே நன்மையை தரும் , மேலும் அறிவில் விழிப்புணர்வுடன் இருப்பது சகல நன்மையை தரும் , சர லக்கினத்தை சார்ந்தவர்கள் மன உறுதியுடன் இருப்பதும் , ஸ்திர லக்கினத்தை சார்ந்தவர்கள் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமலும்,உபய லக்கினத்தை சார்ந்தவர்கள் நண்பர்கள், வாழ்க்கை துணை,பொதுமக்களிடம் அதிக கவனமாக இருப்பதும் ஜாதகரை தேவையாற்ற பிரச்சனைகளை இருந்து காப்பாற்றும் , நன்மையான பலனை தரும் .


 நீங்கள் குறிப்பிடுவது ஒருவருக்கு (சரம் 11ம் அதிபதி,ஸ்திரம் 9ம் அதிபதி, உபயம் 7ம் அதிபதி)இந்த இடங்களின் ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் ஏதோ ஒருவகையில் தீமை மட்டுமே செய்யுமாயின் அந்தக் குறிப்பிட்ட ஆதிபத்திய வீடுகளின் பலனை நாம் அனுபவிக்கவே முடியாது. லாப‌மில்லாம‌ல்,ஒரு பாக்கிய‌மும் இல்லாம‌ல், ந‌ல்ல‌ ம‌னைவியில்லாம‌ல் த‌னிம‌னித‌ வாழ்வு எப்ப‌டி சாத்திய‌மாகிற‌து?. அத‌ற்கு இறை நிலை செய்துள்ள‌ மாற்றுவ‌ழிக‌ள் என்ன‌வாக‌ இருந்தால் அதை அவ‌ன் ச‌மாளிக்க‌ முடியும்.இத‌ற்குத் த‌ங்க‌ளிட‌மிருந்து ஒரு ப‌திலை ந‌ம‌து வ‌லைப்பூவில் அனைவ‌ர் அறிய‌த் த‌ருவீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்.

இதற்கு மேற்கண்ட அமைப்பில் பதில் கொடுத்து விட்டோம் , இருப்பினும் சில விளக்கம் கொடுக்க கடமை பட்டு இருக்கிறோம் , அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் ஆனால் அந்த பாவகத்தின் பலன்கள் நடக்கும் திசையில் நடை பெறவில்லை என்றால் , நிச்சயம் அதன் கெடுதலான பலன்கள் நடை முறைக்கு வரவே வராது , எனவே அந்த பாவகங்கள் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது பற்றி நாம் எவ்வித கவலையும் பட தேவையில்லை , நன்மை என்றாலும் , தீமை என்றாலும் நடக்கும் திசையில் சம்பந்த பட்ட பாவகங்களின் பலன்கள் நடை முறைக்கு வந்தால் மட்டுமே நன்மை தீமை பலனை செய்யும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் . மேலும் சம்பந்த பட்ட லக்கினத்தின் பாதக ஸ்தானமாக வரும் ராசி,மற்றும் தத்துவம், கால புருஷ தத்துவத்திற்கு சம்பந்த பட்ட ராசி என்ன அமைப்பை பெறுகிறது  என்ன வென்பதை வைத்தே பலனை நிர்ணயம் செய்ய வேண்டும் தம்பி , மேலும் ஜாதக ரீதியான அனைத்து கேள்விகளுக்கும் எங்களால் முடிந்த அளவிற்கு தங்களுக்கு பதில் சொல்ல காத்து இருக்கிறது ஜோதிடதீபம் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

மண் தத்துவ ராசிகளின் தன்மை , சுய ஜாதகத்தில் வலிமை பெரும் பொழுது தரும் நன்மை !



கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, ரிஷபம் ஸ்திர மண் ராசியாகவும்  , கன்னி உபய மண் ராசியாகவும் , மகரம் சர மண் ராசியாகவும் இயற்கையால் வகை படுத்தபடுகிறது , ஒருவருக்கு சுய ஜாதக அமைப்பில் மேற்கண்ட மண் தத்துவ ராசிகள் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

பொதுவாக சுய ஜாதகத்தில் மண் தத்துவ ராசிகள் நல்ல நிலையிருந்தால் , ஜாதகருக்கு தொழில் முறையில் மிகப்பெரிய வெற்றியை தரும் , உடல் ஆரோக்கியத்தில் எவ்வித தொந்தரவுகளையும் தராது , மேலும்  வண்டி வாகன யோகம் , வீடு , சொத்து சுகம் , விவசாய நிலங்களில் இருந்து வரும் வருமானம் , சொகுசு வாகன யோகம் , வண்டி வாகன தொழில்களில் மிகப்பெரிய வெற்றி , கட்டிட கட்டுமான துறையில் எதிர்பாராத முன்னேற்றம் , ரியல் எஸ்டேட் தொழில்களில் சிறப்பான வளர்ச்சி , மருத்துவ தொழில் செய்வோருக்கு மிகப்பெரிய முன்னேற்றம் , மிகசிறந்த மருத்துவ நிபுணர்கள் ஜாதக அமைப்பில் இந்த மண் தத்துவ ராசிகள் மிகவும் நல்ல நிலையில் இருக்கும் , மேலும் இந்த தத்துவ ராசிகள் நல்ல நிலையில் இருக்கும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று கொள்ளும் நபர்களுக்கு விரைவில் நலம் பெரும் அமைப்பை தரும் . 

ரிஷபம் ஸ்திர மண் ராசி ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் அனுபவிக்கும் நன்மைகள் :

கை நிறைய வருமானம் கிடைக்கும் , நல்ல குடும்பம் அமையும் , உடல் நிலையில் பாதிப்பற்ற நிலையும் , உடல் நலம்  பேணும் தன்மையும் , ஜாதகர் சுய உழைப்பின் மூலம் முன்னேற்றம் பெறுவார் , சுய சம்பாத்தியத்தின் மூலம் சொத்து சுகங்களை பெரும் அமைப்பை தரும் , வட்டி தொழில் மற்றும் வாக்கின் மூலம் சிறப்பான வருமானம் கிடைக்க பெறுவார்கள் , ஆசிரிய பணிகளில் சிறந்து விளங்கும் தன்மையும், ஆய கலைகள் 64  தொழிலாக கொண்டு  நிறைவான வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் , தனது எண்ணம் செயல்களால் மற்றவர்களின் துன்பத்தை போக்கும் தன்மை கொண்டவர்களாகவும் , உதவி செய்யும் மன பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் , சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதையும் ஜாதகருக்கு நிச்சயம் உண்டாகும் , மேலும் சுய நலமற்ற, மக்கள் செல்வாக்கை பெற்ற  அரசியல் பிரமுகராக  செயலாற்றும் தன்மை கொண்டவர்கள் , எனவே சுய ஜாதகத்தில் ரிஷபம் நல்ல நிலையில் இருப்பது மிகப்பெரிய நன்மைகளையே வாரி வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை .

கன்னி உபய மண் ராசி ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் அனுபவிக்கும் நன்மைகள் :

நிதி நிறுவனம் நடத்துவதால் ஜாதகர் நல்ல வருமானம் கிடைக்கும் , வட்டி தொழில் செய்ய மிகசிறந்த ஜாதக அமைப்பு , விஷ வைத்தியம் பலிதமாகும், நகையின் பேரில் இடத்தின் பேரில் கடன் கொடுத்தால் சிறப்பான வருமானம் கிடைக்கும் , அரசியலில் ஈடுபடுவதால் குறுகிய காலத்தில் வெற்றி பெரும் அமைப்பை தரும் , மக்கள் செல்வாக்கு ஜாதகருக்கு பரிபூரணமாக அமைந்து விடும் , தொழில் துறையில் குறுகிய காலத்தில் வெற்றி பெரும் அமைப்பை நிச்சயம் தரும் , பெற்ற குழந்தைகள் மூலம் யோக வாழ்க்கையை  ஜாதகருக்கு வாரி வழங்கும் அமைப்பாக இதை கருதலாம் , சித்த மருத்துவம் , இயற்க்கை மருத்துவம் சார்ந்த தொழில்களில் ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றிகளையும் , மூலிகை ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் தன்மையும்  ஜாதகருக்கு ஏற்ப்படும் .

மகரம்  சர மண் ராசி ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் அனுபவிக்கும் நன்மைகள் :

நிச்சயம் ஜாதகர் மருத்துவ துறையில் கொடி கட்டி பறக்கும் அளவிற்கு பெயரும் புகழும் உண்டாகும் , ஜாதகர் செய்யும் சிகிச்சை அனைத்தும் வெற்றி பெரும் , நல்ல கை ராசியான  மருத்துவர் என்ற பெயர் ஆரம்பத்த்திலேயே கிடைக்கும் , உடல் நிலையை பற்றி ஆராய்ச்சி , மற்றவர்களை பார்த்த மாத்திரத்தில் அவர்களின்  உடல் நிலையை பற்றி சரியாக கணிக்கும் தனித்தன்மை ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் , ஜாதகரால்  சிகிச்சை பெரும்  நபர்களெல்லாம் குணம் பெறுவார்கள் , குறுகிய காலத்தில் மருத்துவ துறையில் பெயரும் புகழும் கிடைக்கும் , இதனால் ஜாதகருக்கு அனைத்து வசதி வாய்ப்புகளும் மிக பெரிய அளவில் கிடைக்கும் .

 இந்த அமைப்பு நல்ல நிலையில் இருந்து ,ஒருவேளை ஜாதகர்  அதிகம் படிக்கவில்லை எனில் , கணரக வண்டி வாகன தொழில்களில் மிகப்பெரிய வெற்றிகளை தந்து விடுகிறது , சிறிதாக துவங்கும் தொழில் கூட சில வருடங்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை வாரி வழங்கி மிக பெரிய செல்வந்தனாக மாற்றி விடுகிறது , அதே போல் விவசாய தொழில்களில் கொடி கட்டி பரப்பவர்களும் இவர்களே , பண்ணை மற்றும் விவசாயத்தில் அளப்பறியா  செல்வ வளத்தை வாரி வழங்கி விடுகிறது .

எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் மண் தத்துவ ராசிகள் நல்ல நிலையில் இருப்பது , உடல் நிலை , சொத்து , வண்டி , வாகனம் , நிலபுலன்கள் , அரசு துறையில் ஆதரவு , மக்கள் ஆதரவு , உலகம் முழுவதும் வலம் வரும் வாய்ப்பு , எவருடைய உதவியும் இன்றி  சுயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு ஆகியவைகளை தந்து நலம் பெற செய்கிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்  
9443355696

புதன், 5 செப்டம்பர், 2012

பெண்ணின் சுய ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் பாதிக்க பட்டால் ஜாதகியின் நிலை என்ன ?




பெண்களின் ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் எனும் 7 ம் பாவகம் பாதிக்க படுமாயின் , ஜாதகிக்கு திருமண வாழ்க்கை தாமதமாக நடைபெறும், குறிப்பாக  28 வருடங்களுக்கு பிறகே நடக்கும் , மேலும் ஜாதகிக்கு நல்ல கணவன் கிடைப்பது அரிது சிலருக்கு மறுமணம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்படும் , அதாவது பெண்ணின் ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் 6 , 8 , 12 ம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் மேற்கண்ட நிலை ஏற்ப்படும் , ஒரு வேலை களத்திர பாவகம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால் , அந்த பெண்ணின் நிலை பரிதாபத்திற்கு உரிய நிலைக்கு கொண்டு வந்துவிடும் , வாழ்க்கையே கேள்வி குறியாகிவிடும் .

சர இலக்கின பெண்களின் களத்திர ஸ்தானம் 11 ம்வீட்டுடன் தொடர்பு பெறுவதும் , ஸ்திர இலக்கின பெண்களின் களத்திர ஸ்தானம் 9 ம்வீட்டுடன் தொடர்பு பெறுவதும், உபய இலக்கின பெண்களின் களத்திர ஸ்தானம் 7 ம்வீட்டுடன் தொடர்பு பெறுவதும் பெண்களின் ஜாதக அமைப்பில் 200 சதவிகிதம் தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகமே இல்லை , இந்த அமைப்பை பெற்ற ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2 ம் வீடும் கெட்டு விட்டால் அந்த பெண்ணுக்கு திருமண வாழ்க்கை என்பதே நிச்சயம் இல்லை குடும்பமும் அமையாது . இந்த அமைப்பை பெற்ற பெண்கள் ஜோதிட ரீதியாக பாதிக்கப்பட்ட களத்திரம் , மற்றும் குடும்ப ஸ்தானங்களுக்கு கிரகங்களுக்கு உரிய பிரிதி பரிகாரங்களை செய்து நன்மை பெறலாம் , குறிப்பாக களத்திர ஸ்தான அதிபதி களத்திர பாவகம் பாதிக்க காரணமான கிரகங்களுக்கு பிரிதி பரிகாரங்கள் செய்வது சிறப்பான மன வாழ்க்கையை அமைத்து தரும் .

குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் பாதிக்க பட்ட பெண்ணின் ஜாதகத்திற்கு , குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் நல்ல நிலையில் இருக்கும் ஆணின் ஜாதகத்துடன் சேர்த்து திருமணம் செய்து வைத்தால்,  நிச்சயம் திருமண வாழ்க்கையில் எவ்வித சிக்கல்களும் வராது , ஆணின் ஜாதகத்திலும் குடும்பம் மற்றும் களத்திரம் பாதிக்க படும் பொழுதுதான் திருமண வாழ்க்கை தம்பதியர்க்கு அதிக இன்னல்களை தந்து விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது .

பெண்களின் ஜாதகத்தில் குடும்பம் , களத்திரம் எனும் இரண்டு பாவகங்களும் நல்ல நிலையில் இருப்பது இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரும் , பொதுவாக ஆண் பெண் இவருடைய ஜாதக அமைப்பிலும் குடும்பம் மற்றும் களத்திரம் இரண்டும்  பாதிக்க படும் பொழுது, ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்க படுகின்றனர் , ஜாதகியின் மனதை புரிந்துகொள்ளாத கணவன் , ஆறுதல் சொல்லாத உறவுகள் , சரியான வாழ்க்கை வழிகாட்டாத பெற்றோர்கள் , சரியான நேரத்தில் உதவி செய்யாத  சகோதர அமைப்புகள் என ஜாதகிக்கு சாதகமாக யாரும் இருக்க மாட்டார்கள் , தம்பதியற்குள் இருக்கும் பிரச்சனையை ஊதி பெரிதாக்குவார்களோ தவிர ஒற்றுமையாக வாழ வழிகாட்ட மாட்டார்கள் , மேலும் கணவனுடன் சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தவோ , உதவி செய்யவோ யாரும் இருக்க மாட்டார்கள் , உறவுகளும் நண்பர்களும் ஜாதகியின் விஷயத்தை  வைத்து எள்ளி நகையாடுவார்களோ தவிர , நன்மை செய்ய யாரும் நிச்சயம் வர மாட்டார்கள் .

பெண்கள் தனது ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் பாதிக்க பட்டு இருப்பின் எக்காரணத்தை கொண்டும் , ஜாதகி தனது குடும்ப விஷயங்களை வேறு யாரிடமும் சொல்லாமல் தானே சுயமாக நல்ல தீர்வை எடுப்பது நலம், அல்லது தனது வாழ்க்கை துணையிடம் மனம் விட்டு பேசி பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டுவருவது நலம் , ஏனெனில் வாழ்க்கை துணை என்பவர் உங்களது கணவர், மேலும் அவரிடம் முழு  உரிமை தங்களுக்கு 100 சதவிகிதம்  உண்டு என்ற விஷயத்தை,  மனதில் நிறுத்தினால் நிச்சயம் தங்களுக்கு நன்மையே நடக்கும் , மேலும் தங்களது தனிப்பட்ட விஷயங்களில் வேற்று நபர் யாரும் தலையிடுவது நிச்சயம் தங்களுக்கு நன்மை தர வாய்ப்பே இல்லை, அது பெற்றோர் என்றாலும் சரி , சகோதர அமைப்பை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உறவுகளாக இருந்தாலும் சரி தங்களுக்கு அதிக துன்பத்தையே தரும் .

தங்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு தாங்களே தீர்வு தேடிக்கொல்வதுதான்  சரியானது , அதுவே நன்மை தரும் , தம்பதியர் பிரச்சனைகளுக்கு அரசியல் சட்டம் கூட எவ்வித நன்மையையும் செய்ய முடியாது, என்பதே இதுவரை நாம் கண்ட உண்மை என்பதை எவராலும் மறுக்க இயலாது,  மேலும் சட்ட திட்டம் போட்டு குடும்ப உறவுகளை நலம் பெற செய்ய இயலாது , சட்டத்தால் பிரித்து வைக்க முடியுமோ தவிர தம்பதியரை சேர்த்துவைக்க நிச்சயம் முடியாது , தம்பதியரின்  மனதில் நம் குடும்பம் , நாம் குடும்பத்தை நல்ல முறையில் நடத்த வேண்டும், காப்பாற்ற வேண்டும்  என்ற எண்ணம் இயற்கையாக வரவேண்டும் .

ஒருவருக்கு வாழ்க்கை துணை சிறப்பாக அமையததிர்க்கு முக்கிய காரணம் அவரவர் ஜாதக நிலையே என்பதை மனதில் கொள்வது அவசியம் , சுய ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் பாதிக்கப்படும் பொழுதே  சரியான மன வாழ்க்கை அமைவதில்லை , சரியான வாழ்க்கை துணையும் கிடைப்பதில்லை , மன வாழ்க்கையில் அதிக கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது ,  எனவே திருமணத்திற்கு முன்பே வரன் வதுவை தேர்ந்தெடுக்கும் பொழுது , ஜாதக நிலையை நன்றாக ஆராய்ந்து களத்திரம் , குடும்ப ஸ்தானங்கள் நல்ல நிலையில் இருக்கும் ஜாதகத்தை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வது நலம் , ஒருவேளை திருமணம் நடந்துவிட்டால் ,  திருமணத்திற்கு பிறகு ஜாதக அமைப்பை தெளிவாக ஆராய்ந்து அதற்க்கு உண்டான சரியான தீர்வை பெறுவதே நலம் தரும் .

மேலும் பல ஜோதிடர்கள் சொல்வைதை கேட்டுக்கொண்டும் சில குடும்பங்கள் பிரிவை நோக்கி செல்வதும் உண்டு , திருமணம் ஆனா பிறகு தங்களது ஜாதகதிர்க்கும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திற்கு பொருத்தமே இல்லை எப்படி திருமணம் செய்திர்கள் என்று கேட்டால், வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கும் தம்பதியரின் மனதில் நிச்சயம் மிகப்பெரிய குழப்பமும் , சந்தேகமுமே ஏற்ப்படும் , இப்படி  பல தம்பதியரின் திருமண வாழ்க்கையில் சிக்கலுக்கு தூபம் போட்ட ஜோதிடர்களும் நிறைய பேர் உண்டு , ஒருவருக்கு வாழ்க்கை துணை அமைவதே அவரவரின் விதி பயன், இதில் ஜோதிடர் தம்பதியரின் வாழ்க்கை சிறப்பாக இருக்க நல்ல ஆலோசனை வழங்குவதை விட்டுவிட்டு , அவர்களின் வயிற்றில் புளியை கரைத்தால்   அவர்கள் என்ன செய்வார்கள் , தாம்பத்திய வாழ்க்கையின் அருமையை , அன்பாக ஒற்றுமையாக குடும்பம் நடத்துவது  எப்படி என்று அவர்களுக்கு புரிய வைப்பதே சிறந்த ஜோதிடன் கடமையாக  இருக்க முடியும்,  தங்களுக்கு விதித்ததை தாங்களே அனுபவிக்க வேண்டும் என்பதே உண்மை . எனவே திருமணத்திற்கு பிறகு பொருத்தம் பார்ப்பதை விட்டு விட்டு குடும்பம் நல்ல முறையில் நடத்துவது எப்படி என்று பார்ப்பதே புத்திசாலித்தனம் .

இறுதியாக திருமண வாழ்க்கையில் அதிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியவர்கள் ஆண்களே , காரணம் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமைக்கு தலை முறை தலை முறையாக பாதிக்கிறது என்பதே உண்மை , முன்னேற்றம் பெறாத ஜாதக அமைப்பில் எல்லாம் பெண்ணுக்கு செய்த கொடுமையின் காரணமாக , சுய  ஜாதகத்தில் இருக்கும் ராஜ யோகங்கள் கூட யோகபங்க நிலைக்கு ஆளாகி , விருத்தியை  தாராமல் இருப்பதை அனுபவத்தில் காண்கிறோம் , மேலும் ஒரு ஜாதகனுக்கு பொருத்தம் இல்லாத வாழ்க்கை துணை அமைந்தாலும் அதை மனம் உவந்து ஏற்றுக்கொண்டு , அவர்களால் வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு , வாழ்க்கை துணைக்கு கண்ணை மூடிக்கொண்டு நன்மையே செய்யுங்கள் , சிறிது காலம் வரை சிரமத்தை தரும், ஆனால் சில கலாங்களுக்கு பிறகு  இனிமையான இல்லற வாழ்க்கையாக மாறிவிடும் , இது அனுபவத்தில் பலருக்கு அறிவுறுத்தி நன்மை பெறுவதை கண்ணால் கண்டவன் என்ற முறையில் சொல்கிறோம் , வாழ்க்கை துணையின் இன்னல்களை ஒரு ஜாதகர் ஏற்றுகொள்ளும் பொழுது ஜாதகன் செய்த முன்ஜென்ம கர்ம வினை பதிவு கழிந்து , மண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்குகிறது என்பது முற்றிலும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696