லக்கினத்தில் ராகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லக்கினத்தில் ராகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

காலசர்ப தோஷம் , களத்திர தோஷம் உண்மை நிலை என்ன ?



கேள்வி :

 அய்யா எனது ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் , களத்திர தோஷம் இருப்பதாக  

சொல்கிறார்கள் , மேலும் இதன் காரணமாகவே எனக்கு திருமணம் தாமதப்படுவதாகவும்  
கூறுகின்றனர், எனக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும் , எனது ஜாதக அமைப்பிற்கு 
 தொழில் விருத்தி பெரும் காலம் எப்பொழுது வரும் , எனக்கு வரும் மனைவி எப்படிபட்ட 
 குணாதிசயம் கொண்டவராக இருப்பார் , ராகு கேது கிரகங்களால் அதிக பாதிப்பு வரும்  
என்று பல ஜோதிடர்கள் சொல்கிறார்கள் , எதை நம்புவது , எதை விடுவது என்று  
தெரியவில்லை சரியான வழிகாட்டுங்கள் , பதிலை ஆவலுடன் எதிர்நோக்கும் . 

 

பதில் :

 

பொதுவாக லக்கினம் மற்றும் களத்திர பாவக அமைப்பில் ராகு கேது அமர்ந்து ராகு கேது  
கிரகங்களுக்குள் அனைத்து கிரகங்களும் இருக்கும் அமைப்பை பெற்ற ஜாதகங்களை ,  
காலசர்ப்ப தோஷ ஜாதக நிலை என்று கூறுவார்கள் , இதில் ராகு கேது லக்கினம் மற்றும் 
 ஏழாம் பாவகத்தில் அமர்ந்து அதற்குள் அனைத்து கிரகங்கள் அடைப்படுமாயின் இதற்கும் 
 காலசர்ப்ப தோஷம் என்று கூறுவார்கள் , எனவே தங்களுடைய ஜாதக அமைப்பில் 
 மேலோட்டமாக பார்க்கும் பொழுது  லக்கினத்தில் ராகுவும் , ஏழாம் பாவகத்தில் கேதுவும்  
இருப்பதாக கருத்தில் கொண்டுதான் பலன் சொல்வார்கள் , தங்களது  ஜாதகத்தை  
மேலோட்டமாக பார்க்கும் ஜோதிடர்கள்  கருத்து பெரும்பாலும் இதுவாகவே அமையும்,  
மேலும் சிம்மத்தில் ராகுவும் , கும்பத்தில் கேதுவும் அமர்வது ஜாதகருக்கு நன்மை தராது  
என்பது பொது பலன் , இதுவே பல ஜோதிடர்களின் கருத்தாகவும் இருக்கும் உண்மையில் 
 தங்களது ஜாதக அமைப்பின் நிலையை  பற்றி தெளிவாக தங்களுக்கு விளக்குகிறோம் , 
 இதை ஏற்றுக்கொண்டு தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் காணுங்கள் .

 

தங்களது பிறப்பு லக்கினம் சிம்ம லக்கினமாக அமைகிறது, லக்கினம் ஆராம்பம் ஆகும் 
 பாகை ( துல்லிய கணிதப்படி ) சிம்மத்தில் 131 .32 முதல் கன்னியில் 161 .36 பாகை வரை வியாபித்து நிற்கிறது , மேலும் தங்களது களத்திர ஸ்தானமும்  
கும்பத்தில் 311 .32 முதல் மீனத்தில் 346 .36 பாகை வரை வியாபித்து நிற்கிறது , இதன் மூலம் தங்களின் லக்கினம்  
பாவகத்தின் நிலையையும்  களத்திர பாவக நிலையையும் தெளிவாக தெரிந்து கொள்ள 
 இயலும் , மேலும் இந்த துல்லிய கணிதப்படி பார்க்கும் பொழுது ராகுபகவான் 
 சிம்மத்தில் 126 .20 பாகையில் நிற்கிறார் , கேது பகவான் கும்பத்தில் 306 .20 பாகையில் நிற்கிறார் தங்களின் சுய ஜாதக நிலையில் , எனவே தங்களது சுய ஜாதக 
 அமைப்பில் ராகுவும் கேதுவும் முறையே சிம்மத்தில் உள்ள  12 ம்  பாவகத்திலும் , கும்பத்தில் உள்ள 6 ம் பாவகத்திலும் இருக்கிறார்கள் 
 என்பதே உண்மை . 

ஆக தங்களுடைய ஜாதகத்தில் ராகு கேது கிரகங்கள் பாவக அமைப்பின் படி இருக்கும் 

 நிலையையும் தெளிவாக தெரிந்துகொண்டு இருப்பிர்கள் என்று நம்புகிறோம் , மேலும்
  இந்த பாவகங்களில் அமர்ந்துள்ள ராகு கேது இரு கிரகங்களும் தங்களுக்கு என்ன  
விதமான பலனை  தருகிறார்கள் என்பது அடுத்த கேள்வி ? உண்மையில் இந்த  
பாவகங்களில் அமர்ந்துள்ள ராகு கேது  இரு கிரகங்களும் தங்களுக்கு 100 சதவிகித  
நன்மையை வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்கள்  என்பதே முற்றிலும் உண்மை ,  
அப்படி பார்க்கும் பொழுது 6 ம் பாவகம் மற்றும்12 பாவகம் இரண்டும் தங்களுக்கு
 100 சதவிகித நன்மையை செய்துகொண்டு இருக்கிறது , இந்த பாவக வழியில் 
 இருந்து தாங்கள் 100 சதவிகித நன்மையை பெறுவீர்கள் என்பது உறுதியாகிறது .

பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் துர் ஸ்தானம் , மறைவு ஸ்தானம் , கெட்ட பாவகம் என்றும்  இந்தபாவக  வகையில் தங்களுக்கு தீமையான பலன்கள் மட்டுமே நடைபெறும் என்று  

சொல்வது இயற்கையே ,  
ஆனால் ஒவ்வொரு பாவகத்திர்க்கும் இரண்டு வித தன்மைகள் உண்டு ஒருவருக்கு ஆறாம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் எதிரியால் லாபமும் , எதிரியின் சொத்து கிடைக்கும் யோகமும் ஜாதகருக்கு ஏற்ப்படும் மேலும் சிறு முதலீடு செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும் , எட்டாம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் திடீர் என புதையல் கிடைத்தார் போல் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறுவார் , எட்டாம் பாவகம் பாதிக்க பட்டால் ஜாதகருக்கு பொருளாதாரத்தில் எதிர்பாராத இழப்பு , அதிக முதலீடு செய்வதால் இழப்பு போன்ற நிலைகள் ஏற்ப்படலாம் , 12 ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் நல்ல உறக்கம் , நிம்மதியான வாழ்க்கை , தொழில் துறையில் எதிர்பாராத முன்னேற்றம் போன்ற நல்ல பலன்கள் நடைபெறும், 12 ம் பாவகம் பாதிக்க பட்டால் மன நிம்மதி இழப்பு , அதிக முதலீடுகளால் பாதிப்பு , குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் என்று தீமையான பலனைதரலாம்.

தங்களுடைய ஜாதக அமைப்பில் இந்த மூன்று பாவாகங்களும் நல்ல நிலையில் இருப்பதால் தங்களுக்கு இந்த பாவக வழியில் இருந்து அதிக நன்மையே கிடைக்கும் , மேலும் லக்கினத்திற்கும் களத்திர பாவகத்திர்க்கும் , ராகு கேது கிரகங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது , அடுத்ததாக ராகு கேது கிரகங்கள் தங்களுக்கு ஜாதக ரீதியாக நன்மையே செய்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது , 

அடுத்ததாக தங்களது கேள்வி திருமண தாமதத்திற்கு கரணம் என்ன ?  திருமண தாமதத்திற்கு முக்கிய காரணம் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதே , இதனால் தங்களுக்கு வந்த நல்ல மணமகளை கூட தங்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பு உண்டு , அமைந்த நல்ல வதுவை கூட வேண்டாம் என்று சொல்லி , தங்களின் வாழ்க்கையை தாங்களே கெடுத்து கொண்டதே காரணம் , எனவே கனவு உலகத்தில் இருந்து விடுபட்டு, வாழ்க்கைக்கு ஏற்ற மணப்பெண்ணை தேர்வு செய்து நலம் பெறுங்கள் .

எனக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும் ?
எதிர் வரும் கார்த்திகை மாதத்திற்கு பிறகு நிச்சயம் நடை பெரும் சந்தேகமே இல்லை உறுதி 

 எனது ஜாதக அமைப்பிற்கு தொழில் விருத்தி பெரும் காலம் எப்பொழுது வரும் ?
இன்னும் சில மாதங்களில் இருந்து தொழில் ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை நிச்சயம் காணலாம் .

எனக்கு வரும் மனைவி எப்படிபட்ட குணாதிசயம் கொண்டவராக இருப்பார் ?
மிகவும் நல்ல குணத்துடன் அதிக புத்தி கூர்மை உள்ளவராக இருப்பார் , திருமணத்திற்கு பிறகு எதிர்பாராத வெற்றிகரமான வாழ்க்கை நிச்சயம் உண்டு .

ராகு கேது கிரகங்களால் அதிக பாதிப்பு வரும் என்று பல ஜோதிடர்கள் சொல்கிறார்கள் , எதை நம்புவது , எதை விடுவது ?
யார் எதை சொன்னாலும் உங்களின் ஜாதகத்தில் ராகு கேது இருகிரகங்களும் 100 சதவிகித நன்மையையே தருகின்றனர் , மேலும் தருவார்கள் , சில ஜோதிடர்கள் சொல்லிவிட்டார்கள்  என்பதற்காக ராகு கேது கிரகங்கள் பலனை மாற்றி தர வாய்ப்பில்லை , கால நேர அமைப்பு தங்களுக்கு தர வேண்டிய பலனை தவறாமல் தரவேண்டிய நேரத்தில் சரியாகவும் , உறுதியாகவும் நிச்சயம் தருவார்கள் இதில் மாற்றம் இல்லை , எந்த ஒரு ஜாதகருக்கும் தீமையான பலன்கள் நடக்கும் காலங்களில் விழிப்புணர்வுடன் இருந்தால் அதன் பாதிப்பில்  இருந்து நிச்சயம் விடுபடலாம் , இதை தான் ( விதியை மதியால் அறிவாற்றல் கொண்டு வெற்றி கொள்ளலாம் ) என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.  

வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 9 ஜூன், 2012

சிம்ம லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும் பொழுது தரும் பலன்கள் !



சிம்ம லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும் பொழுது தரும் பலன்கள்:

ஜாதகருக்கு மிகசிறந்த யோகங்களை தரும் அமைப்பு , வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் பெறுவார் , ஜாதகருக்கு நண்பர்கள் வட்டம் ரொம்ப அதிகம் , மக்கள் ஆதரவு வாழ்க்கையின் இறுதி வரை உண்டு , பொது வாழ்க்கையில் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தை தரும் அமைப்பு .

 அடிப்படையில் நல்ல வளரும் சூழ்நிலையை கொண்டிருப்பார் , நிறைவான கல்வி அல்லது உலக அனுபவத்தை கொண்டிருக்கும் தன்மை உள்ளவர் , தான் கற்ற கல்வியினை மற்றவருக்கு பயன்படும் விதத்தில் செயல் ஆற்றும் திறன் கொண்டவர் , ஜாதகருக்கு சிந்தனை ஆற்றல் மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கும் , எவ்வித பிரச்சனைக்கும் தனது அறிவாற்றால் மூலம் தீர்வு சொல்லும் தன்மை பெற்றவர்கள் .

ஜாதகருக்கு இலக்கின அமைப்பில் இருந்து 100 சதவிகித நன்மையை மட்டுமே பெறுவார் , கால புருஷ தத்துவத்திற்கு ஐந்தாம் வீடாக வருவதால் , இறைஅருள் ஜாதகருக்கு எப்பொழுதும் துணை நிற்கும் , சக்தி வழிபாட்டில் மிகசிறப்பான முன்னேற்றத்தை ஜாதகர் பெறுவார் , குல தெய்வத்தின் பரிபூரண அருள் எப்பொழுதும் உண்டு , மிகவேகமான செயல் திறன் கொண்டவர்கள் , பெரியோர் ஆதரவும் , ஆன்மீக வாதிகளின் அருளும் , சித்தர்களின் அருளாசியும் நிரம்ப பெரும் யோகம் பெற்றவர்கள்.


 நல்ல கவர்ச்சியான உடல் அமைப்பு கொண்டவர்கள், எதிர் பாலினம் கொண்டவர்களால் அதிகம் விரும்பப்படும் யோகம் பெற்றவர்கள் , திடமான உடல் அமைப்பு இறுதிவரை வாய்த்திருக்கும் , உடல் நிலையை பற்றி ஜாதகர் எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை , எவ்வித உடல் தொந்தரவு வந்தாலும் விரைவில் குணமடையும் தெய்வீக ஆற்றல் கொண்டவர்கள்.

இவர்கள் அனைவரும் மக்கள் ஆதரவு பெற்ற தொழில்களில் மிகசிறப்பான முன்னேற்றம் பெறுவார்கள் , முக்கியமாக மருத்துவம் , வழக்கறிஞர் , பொறியாளர் , கலைத்துறையில் இசை  , நடிப்பு , நாட்டிய , ஆகியவைகள் . ஜோதிட கலையில் சிறந்து விளங்கும் தன்மை இந்த அமைப்பை கொண்டவர்களுக்கு இயற்கையாக அமையும்.


 மன நிலை மருத்துவராக சிறப்பாக செயலாற்றும் திறமை கொண்டவர்கள் , மற்றவர் மனதில் உள்ள விஷங்களை கூட உணரும் தெய்வீக ஆற்றல் கொண்டவர்கள் , இவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் மக்களுக்கு நன்மையான பலனை தந்து கொண்டே இருக்கும் , உலகின் தலை சிறந்த மருத்துவராக வேண்டும் எனில் ஜாதகத்தில் இந்த அமைப்பை பெற்று இருக்க வேண்டும் .

லக்கினத்தில் அமரும் ராகு ஜாதகருக்கு நல்ல உடல் அமைப்பையும் , நினைத்ததை சாதிக்கும் தன்மையை தருவார் , உலகின் மிகசிறந்த பெரிய  மனிதர்கள் தொடர்பை நிச்சயம் ஏற்ப்படுத்தும் , வாழ்க்கையில் விரைவான அதிரடி முன்னேற்றங்களை தரும் அமைப்பை பெற்ற ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் , நீண்ட ஆயுளை  தரும் இங்கு அமரும் ராகு பகவான் ஆனால் உடலில் தழும்பு வடுக்களை நிச்சயம் தரும் முக்கியமாக தலையில் அல்லது முகத்தில் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் .


ஜாதகர் சிறந்த தொழில் அமைப்பு , சிறந்த மக்கள் ஆதரவு , நல்ல நண்பர்கள் ஆதரவு , சிறந்த மனைவியை பெரும் யோகம் அவர்களால் சிறப்பான முன்னேற்றம் என ஜாதகர் மிகவும் சிறப்பான முன்னேற்றங்களை மட்டுமே பெறுவார் , தாய் மகலக்ஷ்மியின் பரிபூரண ஆதரவை பெற்றவர்கள் சிறு சோம்பேறி தனம் கொண்டவர்கள் , வேலை என்று வந்துவிட்டால் உறக்கம் பார்க்காமல் வேலையை முடிக்கும் திறமை கொண்டவர்கள் , நிர்வாக துறையில் இவர்களின் பங்களிப்பு அதிகம் காணப்படும் , இவர்களுக்கு என்று தனி வழியை கடை பிடிக்கும் தனித்தன்மை வாய்ந்தவர்கள், மிகவும் சிறப்பான யோக அமைப்பை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

லக்கினத்தில் அமரும் கேது சிறப்பான அறிவாற்றலை தந்து விடும் , இவர்களின் அறிவாற்றலுக்கு நிகர் எதுவுமே இல்லை , வாழ்க்கையின் தத்துவத்தை சிறுவயதிலேயே உணரும் யோகம் கொண்டவர்கள் , நல்ல ஆன்மீக வாதிகளின் தரிஷனம் கிடைக்க பெரும் யோகம் கொண்டவர்கள் , எதற்காகவும் கவலை கொள்ளாதவர்கள் , மன கவலை கொண்டவர்களையும் புத்துணர்ச்சி பெறவைக்கும் பிரமிக்க தக்க பேச்சாற்றல் கொண்டவர்கள் , நேர்மையான குணமும் ,சுய கட்டுப்பாடும் கொண்டவர்கள் .


 என்ன இவர்களது அப்பாவித்தனமான குணத்தை மக்கள் நன்றாக பயன்படுத்தி கொள்வார்கள்.  இருப்பினும் அதை பற்றி கவலை கொள்ளாதவர்கள் , கூட்டு அமைப்பு , கூட்டு தொழில்களில் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தை காண்பவர்கள் , மக்கள் செல்வாக்கினை எப்பொழுதும் கொண்டுள்ளவர்கள் , இவர்களின் பேச்சுக்கு மக்களிடம் எப்பொழுதும் நல்ல மதிப்பு , மரியாதை இருக்கும் , தன்னம்பிக்கை , வீரம் , பேராண்மை குணம் பெற்றவர்கள் , அறிவின் வழியில் சகல யோகங்களையும் பெரும் அமைப்பை பெற்றவர்கள் .

சிம்ம லக்கினத்தில் பிறந்து லக்கினத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அமர்ந்தால் ஜாதகருக்கு  மிகவும் நல்ல யோக பலனையே தரும் என்பதில் எவ்வித சந்தேகமும்  இல்லை, இந்த அமைப்பை பெற்றவர்கள் ஒருநல்ல ஆன்மீக வாதியாக வாழ்க்கையின் இறுதி காலங்களில் இருப்பார்கள். இவர்களால் சமுதாயம் நல்ல முன்னேற்றமும் நல்லறிவையும் பெரும் என்பதில் ஆச்சரியமில்லை , சிம்மலக்கினம் கொண்டவர்கள் இதை உணருவது அவசியம், வாழ்க்கையின் இறுதிகாலங்களில்  இறைநிலையின் திருவடியை அடையும் யோகம் இந்தலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கே அதிகம் உண்டு .
 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
  9443355696

வெள்ளி, 8 ஜூன், 2012

கடக லக்கினத்திற்கு லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்த இட பலன்கள்!



லக்கினத்தில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் வாழ்க்கையில் மிகசிறந்த அதிர்ஷ்ட யோகங்களை பெரும் வாய்ப்பினை பெறுவார் , நல்ல இடத்தில் வளரும் சூழ்நிலை இளவயது முதற்கொண்டே ஜாதகருக்கு அமையும் , நல்ல கல்வி அறிவு பெரும் யோகம் கொண்டவர்கள் மனோ திடமும் , தன்னம்பிக்கையும் அதிகம் காணப்படும் , வாழ்க்கையில் முன்னேற்றம் படிப்படியாக மிக விரைவாக ஏற்றப்படும் , நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராகவும் , தீய பழக்க வழக்கங்கள் அற்றவராகவும் ஜாதகர் காணப்படுவார் .

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகருக்கு எதிரி ஜாதகரே , மனம் போன போக்கில் ஜாதகரின் செயல் பாடுகள் அமையும் , அடிப்படையில் எந்தவித நன்மையையும் பெற முடியாத தன்மை ஏற்ப்படும் , மற்றவரிடம் நல்ல பெயர் வாங்க ஜாதகர் படாத பாடு பட வேண்டி வரும் , வாழ்க்கையில் நலம் பெற அதிகம் சிரமங்களை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டி வரும் , முன்னேற்ற தடை , மற்றவர் உதவி இல்லாத நிலை , மற்றவரை சார்ந்து வாழும் சூழ்நிலை என ஜாதகர் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான் , இவர்கள் எவ்வித தீய பழக்கங்களையும் தொடாமல் இருப்பது அவசியம் இல்லை எனில் அதற்க்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , இது உயிர் இழப்பு வரை செல்ல கூடும் .

2 ம் வீடு  சிம்ம ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் தேவை இல்லை எனில் அதிக துன்பம் பெற வேண்டி வரும் , வருமானத்தை முறையாக பயன்படுத்த இயலாது, பூர்வீகத்தில் வசிக்க இயலாது மீறி இருப்பின் ஜாதகருக்கு எவ்வித முன்னேற்றமும் கிடைக்காது , குடும்ப வாழ்க்கை மிகவும் சிரமம் தரும் , பலதார யோகம் கொண்டார்கள் , கண்பார்வை பாதிக்க வாய்ப்பு அதிகம் உண்டு , சேமிக்கும் பழக்கத்தை ஜாதகர் சிறு வயது முதலே பின்பற்ற வேண்டும் , இல்லை எனில் அதிக சிரமப்பட வேண்டி வரும் .

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் நல்ல முறையில் குடும்பம் நடத்தி செல்வார் , நல்ல மனைவி அமையும் யோகம் பெற்றவர் , நல்ல வருமானம் ஜாதகரை தேடி வரும் . சொத்து சுக சேர்க்கை ஜாதகருக்கு இயற்க்கையாக அமையும் , ஜாதகரின் பேச்சுக்கு நல்ல மதிப்பு உண்டு . கலைகளில் சிறந்து விளங்கும் தன்மை ஏற்ப்படும் , கலைத்துறையில் அதிகம் சாதிப்பவர்கள் இவர்களே , நிறைய இசை ஞானம் கொண்டவர்கள் . இவர்கள் அனைத்து திறமைகளும் தன்னுள் கொண்டவர்கள் இதை முறையாக பயன்படுத்தினால் உலக புகழ் பெரும் யோகம் பெற்றவர்கள்  .

3 ம் வீடு கன்னி  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும் ஜாதகர் மிகவும் நல்ல பலன்களையே அனுபவிக்கும் யோகம் பெற்றவர்கள் , ஜாதகர் எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளும் நல்ல வெற்றி வாய்ப்பினை தரும் , எழுத்தின் மூலம் புகழ் பெரும் யோகம் பெற்றவர்கள் , கலைத்துறையில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள் , எப்பொழுதும் இளமை மாறாத தோற்றம் கொண்டவர்கள் , மக்கள் செல்வாக்கும் ஆதரவும் கொண்டவர்கள் தான் நினைத்ததை முடிக்கும் திறன் பெற்றவர்கள் , மற்றவர்களை அனுசரித்து சென்றால் வாழ்க்கை மிகவும் இனிமையான  வாழ்க்கையாக அமையும் .

4 ம் வீடு துலாம்  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன்  என்றால் ஜாதகர் குடியிருக்க நல்ல வீடு கிடைக்காது , தாய் வழியில் அதிக துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும் , நல்ல வேண்டி வாகனம் அமையாது , ஜாதாகர் சிந்தித்து செயல் படுவது மிக அவசியம் இல்லை எனில் அதிக துன்பம் ஏற்ப்படும் , மன ஆற்றலை நன்றாக வளர்த்து கொள்வது மிக அவசியம் , பொது மக்களை நம்பி எந்த காரியங்களில் இறங்கினாலும் ஜாதகர் அதிக துன்ப பட வேண்டி வரும் .

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் நல்ல யோகங்களை மனைவி வழியிலும் , நண்பர்கள் வழியிலும் , தனது தாய்வழியிலும் அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள் , நல்ல சிறந்த கல்வி அறிவு ஜாதகருக்கு எங்கு சென்றாலும் கைகொடுக்கும், மக்களால் அதிக நன்மை பெரும் யோகம் பெற்றவர்கள் , பொதுமக்கள் ஆதரவு எப்பொழுதும் ஜாதகருக்கு உண்டு , நல்ல வசதியான வீடு , வண்டி வாகனம் போன்ற அமைப்பை பெரும் யோகம் பெற்றவர்கள் .

5 ம் வீடு விருச்சக  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன்  என்றால் ஜாதகர் இறை அருள் இயற்கையாக அமைய பெற்றவர்கள் , நல்ல முன்னேற்றம் , ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள் , பூர்வீகத்தில் குடி இருப்பதால் திடீர் என  நல்ல முன்னேற்றமும் யோகமும் ஏற்ப்பாடு ஜாதகருக்கு நல்ல ஆண் வாரிசு கிடைக்கும் , குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் , எதற்க்காகவும் பயம் கொள்ளாதவர்கள் , கவலை அற்றவர்கள் , தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவார்கள் .

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகரின் மன நிலையை யாரும் புரிந்து கொள்ள முடியாது , எந்த நேரத்தில் என்ன செய்வார் என்றே ஜாதகருக்கே தெரியாது , மனைவி வழியில் அதிக துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , மற்றவரால் இழப்புகளை அதிகம் சந்திக்க வேண்டிவரும் , மனநிலை பாதிக்கும் சூழ்நிலை , போதைக்கு அடிமை ஆகும்  நிலை மனதில் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் .

 6 ம் வீடு தனுசு  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும் ஜாதகருக்கு மன நிலை பாதிப்பால் உடல் நிலை கெடும் , கடன் பெறுவது கொடுப்பது ஆகவே ஆகாது , சரியான நேரத்தில் உணவு அருந்துவது அவசியம் இல்லை எனில் மருத்துவ மனைக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைக்க வேண்டி வரும் , இந்த அமைப்பை பெற்றவர்கள் யாரையும் பகைத்து கொள்வது அவ்வளவு நன்மையை தருவது இல்லை , எதிரிகளிடம் கொஞ்சம் கவனமாக இருப்பது அவசியம் .

 7 ம் வீடு மகர  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் வாழ்க்கையில் அதிக துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் , மக்களிடம் நன்மதிப்பை பெறுவது மிகவும் கடினம் , பொது வாழ்க்கையில் ஜாதகர் அதிகம் தீமையான பலனை அனுபவிக்க வேண்டி வரும் , போதை வஸ்துக்களை கண்ணால் பார்ப்பது கூட தீமையை தரும் , மன நிலை ஒருமுக படுத்த இயலாது மற்றவர்களை சார்ந்து ஜீவிக்க வேண்டி வரும் , பரதேஷ ஜீவனம் அமைந்து விடும் தீய நண்பர்கள் சேர்க்கையும் , மனைவியாலும் அதிக தின்பத்திர்க்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , நல்ல ஆன்மீக வாதிகளிடம்  தீட்சை பெறுவது அவசியமாகிறது .

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் நல்ல யோக பலன்களை நிச்சயம் பெறுவார் , மக்களிடம் செல்வாக்கு அதிகம் உள்ளவர்கள் , நேர்மை மாறாத குணம் கொண்டவர்கள் , மற்றவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தருபவர்கள், நீதிக்காகவும் நியத்திர்க்காகவும் பாடுபடும் குணம் கொண்டவர்கள் , மக்களால் முன்னேற்றம் பெறுவார்கள் , மக்களுக்கு பிரதி பலன் பாராமல்  நன்மை செய்வார்கள் , மனைவி வழியில் நல்ல முன்னேறமும் ஆதரவும் கொண்டவர்கள் .

8 ம் வீடு கும்ப ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும் ஜாதகருக்கு திடீர் இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் , உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் , நிறை முதலீடு செய்யும் பொழுது அதிக கவனம் தேவை , விபத்துகள் நடக்க வாய்ப்பு அதிகம் என்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனமும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது அவசியம் , மனநிலை அதிகம் பாதிக்க பாடுவது இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கு தான் , எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது அவசியம் .

9 ம் வீடு மீன  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் நன்மையான பலன்களை அதிகம் அனுபவிப்பார் , மக்களிடம் நல்ல செல்வாக்கு, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் , பரந்த மனப்பான்மை , பொது வாழ்வில் தூய்மை என ஜாதகரின் சிறப்பான குணங்கள் எதிர்பாராத முன்னேற்றத்தை அள்ளித்தரும் , ஆன்மீக வாழ்க்கையில் மிகசிறந்த முன்னேற்றம் பெரும் யோகம் கொண்டவர்கள் , இறை அருள் எப்பொழுதும் ஜாதகருக்கு நன்மையான பலன்களையே தந்து கொண்டு இருக்கும் .

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் ஜாதகர் தேவையில்லாத விஷயங்களை செய்வதால் சமுதாயத்தில் அவ பெயர் உண்டாகும் , இதனால் மன நிலை பாதிக்கும் தன்மை ஏற்ப்படும் போதை பொருட்களுக்கு அடிமை ஆகும் சூழ்நிலை ஏற்ப்படும் ஜாதகர் மன நிலை ஒருமுக படுத்துவது அவசியம் .


10  ம் வீடு மேஷ  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் செய்யும் தொழில்களில் நல்ல முன்னேற்றம் பெறுவது மிக கடினம் , தகப்பனார் வழியில் இருந்து எவ்வித  உதவிகளும் கிடைக்காது , சுய தொழில்கள்  செய்யும் பொழுது ஜாதகர் அதிக கவனமுடன் இருப்பது அவசியம் , இல்லை எனில் அதிக பாதிப்புகளை அனுபவிக்க வேண்டி வரும் , பொதுவாக இவர்கள் அவசர பட்டு செய்யும் அனைத்து காரியங்களும் தோல்வியை தரும் .

தேய்பிறை சந்திரன் என்றால்  ஜாதகர் பல தொழில் புரியும் பன்முக திறமையாளராக காணப்படுவார் , செய்யும் தொழில்களில் எல்லாம் சிறப்பான வெற்றிகளை காண்பார் , நினைக்கும் காரியங்களை சாதிக்கும் திறமை கொண்டவர்கள் , நல்ல உடல் அமைப்பை பெற்றவர்கள் , கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு கொண்ட பண்பாளர்கள் , நிறைந்த நிர்வாக திறன் கொண்டவர்கள் , மக்களிடம் நன்மதிப்பை பெரும் யோகம் கொண்டவர்கள் , மக்களுக்கு சேவை செய்யும் பணிகளில் சிறப்பாக செயல் படும் தன்மை கொண்டவர்கள் , நன்மைகள் அதிகம் பெரும் யோக அமைப்பை கொண்டவர்கள் .

11  ம் வீடு ரிஷப  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும் நீடித்த அதிர்ஷ்டத்தை பெரும் தன்மை கொண்டவர்கள் , நல்ல உடல் அமைப்பு , கலைத்துறையில் வெற்றி , நல்ல சொத்து சுகம் , நல்ல மனோ திடம் , மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் கொண்டவர்கள் , உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் நல்ல நிலையை இருக்கும் ஜாதக அமைப்பை கொண்டவர்கள் , நினைக்கும் காரியங்களை முடிக்கும் திறைமை கொண்டவர்கள் , நிதி நிறுவனம் , சுய தொழில்களில் மிகசிறந்த முன்னேற்றம் பெரும் அமைப்பை பெற்றவர்கள் , நல்ல வசதியான வீடு , வண்டி , வாகன யோகம் பெற்றவர்கள் .


12  ம் வீடு மிதுன  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும்  ஜாதகருக்கு  அதிக துன்பமே ஏற்ப்படும் , ஜாதகரின் பிடிவாத குணத்தால் அதிக இழப்புகளையும் மன போராடத்தையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்ப்படும் , இந்த அமைப்பை பெற்றவர்கள் நன்றாக சிந்தித்து செயல்படுவது அவசியம் அல்லது பெரியவர்களின் சொல்படி நடப்பது நன்மை தரும் , இல்லை எனில் அதிக துன்பமே ஏற்ப்படும் , திருமண வாழ்க்கையை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் இல்லை எனில் பிரிவு நிச்சயம் உண்டு , செய்யும் அனைத்து காரியங்களையும் பெரியவர்களின் ஆலோசனை படி செய்வது அவசியம் .


வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 1 ஜூன், 2012

கடக லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும்பொழுது தரும் பலன் !



 

ஜாதகர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி காரணம் கால புருஷ தத்துவத்திற்கு கடகம் சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடாக சர நீர் ராசியாக வருவதே இதற்க்கு காரணம் , மேலும் ஜாதகருக்கு லக்கினம் எனும் வீடு 100 சதவிகிதம் நன்றாக அமைந்துவிடும் .

 மேலும் கடக லக்கினத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அமரும்பொழுது ஜாதகருக்கு லக்கினத்திற்கு உண்டான முழு பலனையும் தானே செய்ய ஆராம்பித்து விடுவார்கள் அதுவும் 100 சதவிகிதம் நன்மையை மட்டுமே , மேலும் ஜாதகரின் உடல் நிலை எப்பொழுதும் நல்ல நிலையிலேயே இருக்கும் , சிறு சிறு உடல் உபாதைகள் வந்தாலும் அவை வெகு விரைவில் குணமடைந்து விடும் உடல் அமைப்பை பெற்று இருப்பார்கள் .

ஜாதகர் நினைக்கும் எண்ணங்களை அனைத்தையும் செயல் வடிவம் காணும் யோகத்தை பெற்றவர் என்பதில் சிறிது கூட சந்தேகமே இல்லை , ஜாதகருக்கு நல்ல கல்வியறிவு இயற்கையிலேயே சிறப்பாக அமைந்துவிடும் , குடியிருக்க சிறப்பான வசதிகள் கொண்ட சொகுசான வீடு அமைந்திருக்கும் , ஜாதகர் சிறு வயது முதல் தனது பெற்றோரின் அரவணைப்பில் நன்றாக வளரும் யோகம் உண்டாகும் , தாய் வழியில் ஜாதகர் அனைத்து யோகங்களையும் பெறுவார் .


 நல்ல பாசமான பெற்றோர்கள் இவர்களுக்கு அமைவார்கள் , இதன் காரணமாக சிறந்த ஒழுக்கமும் , கட்டுப்பாடும் , தன்னம்பிக்கையும் , சுயமாக வாழும் தன்மையும் கொண்ட மனிதனாக ஜாதகர் காணப்படுவார் , சிலருக்கு அளவுக்கு மீறிய சொத்துகள் நிறைந்திருக்கும் , இருப்பினும் ஜாதகர் கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு கொண்ட சிறந்த மனிதராக விளங்குவார் , மற்றவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்ப்படுத்தும் தன்மை உள்ள மனிதர் , மேலும் இவர்களை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை என்பதே ஜாதகருக்கு இருக்கும் சிறப்பான விஷயம் .

ஜாதகருக்கு கலை உணர்வு இயற்கையாக அமைந்திருக்கும் , கலைகளில் சிறந்து விளங்கும் தன்மை கொண்டுள்ளவராக காணப்படுவார் , பரந்த மனப்பான்மை , மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை , செல்வம் சேர்க்கும் திறமை , அதை முறையாக பயன்படுத்தும் தன்மை என, ஜாதகருக்கு அதிக நன்மையான பலனையே கடக லக்கினத்தில் அமரும், ராகுவோ அல்லது கேதுவோ தடையின்றி தந்துவிடுவார்கள் , இவர்கள் நினைத்த விஷயங்களை சிறப்பாக முடிக்கும் தன்மை கொண்டவர்கள்.


 கடக லக்கினத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அமரும்பொழுது, கடக லக்கினத்திற்கு ஏழாம் வீடான மகரத்தில்  ராகுவோ அல்லது கேதுவோ அமரும் இந்த அமைப்பு மிக சிறப்பான யோகத்தையே வாரி வழங்கும் , கூட்டு தொழிலால் அதிக லாபம் , பொதுமக்கள் ஆதரவு , மனைவி வழியில் சொத்து , சுகம் , பெரும் வாய்ப்பு , அரசியலில் எதிர்பாராத வெற்றி என களத்திர பாவகமும் ௧௦௦ சதவிகித நன்மையை வாரி வழங்கும் , மகரமும் சர நில தத்துவ ராசி என்பதினால் .

மேலும் தொழில் ரீதியாக விரைவில் முன்னேற்றம் பெரும் அமைப்பு ஜாதகருக்கு இளம் வயது முதலே அமைந்து விடும் , கூட்டு தொழிலால் சகல யோகங்களையும் ஜாதகர் பெறுவார் , நல்ல நண்பர்கள் , தொழில் கூட்டாளிகள் என்று ஜாதகருக்கு அமைபவர்கள் எல்லாம் நல்லவர்களாகவே இருப்பார்கள் , வெளிநாடுகளில் இருந்து அதிக வருமான அமைப்பை ஜாதகர் பெறுவார் , ஏற்றுமதி , இறக்குமதி தொழில் கொடிகட்டி பறக்கும் நபர்கள் அனைவரும் இந்த அமைப்பை சார்ந்தவர்களே .

கலியுகத்தில் பிறந்தவர்கள் கடக லக்கினமாக பிறக்க வேண்டும் , அப்படி பிறந்தாலும் லக்கினத்தில் ராகுவோ , கேதுவோ அமர வேண்டும் , அப்படி அமர்ந்து லக்கினம் களத்திர வீடுகளின் பலன் ஜாதகருக்கு 18 வயது முதல் 50 வயது வரை நடக்குமானால், ஜாதகர் மிகசிறந்த அதிர்ஷ்ட சாலி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை, என்பதை அவர்கள் வாழ்க்கையில் ஏற்ப்படும் முன்னேற்றங்களை, பார்த்தால் நிச்சயம் தெரியும்.

எனவே கடக லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்வது 100 சதவிகித நன்மையை மட்டுமே செய்யும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை என்பதே ஜோதிட தீபத்தின் ஆணித்தரமான கருத்து .

 
குறிப்பு :

மேற்கண்ட பலன்கள் சுய ஜாதக ரீதியாக இலக்கின பலனை நடக்கும் திசைகள் புத்திகள் . அந்தரம் , சூட்சமம் ஆகியவைகள்  நடத்தினால் மட்டுமே நடைபெறும் என்பதை கவனத்தில் கொள்க .



வாழ்க வளமுடன்   
ஜோதிடன் வர்ஷன்
9443355696