செல்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 மார்ச், 2017

தொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமை - 1



சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், தொழில் மற்றும் வேலை வாய்ப்பினை சிறப்பாக அமைத்து தரும், சுய ஜாதகத்தில் 10ம் வீடு பாதிப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன ரீதியான சிரமங்களை தரக்கூடும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதும் , சரியான இளம் வயதில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும், ஜாதகருக்கு ஜீவன ரீதியாக யாதொரு தடையும் இன்றி, அவருக்கு உகந்த தொழில் வாய்ப்பினை சுயமாகவோ, அடிமை தொழிலாகவோ இயற்கையாக அமைத்து தந்துவிடும், ஜாதகர் ஜீவன ரீதியாக யாதொரு இன்னல்களையும் சந்திக்கமால், தனது வாழ்க்கையில் வெற்றிநடை போட ஆரம்பித்து விடுவார், மேலும் ஜீவன முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு தன்னிரைவாகவும், பொருளாதார ரீதியான வசதி வாய்ப்புகளையும் வாரி வழங்கி விடும்.

மாறாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை அற்று காணப்படுவது ( 6,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது ) ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன ரீதியான கடுமையான போராட்டங்களை தந்து விடும், குறிப்பாக ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிலான இன்னல்களை தந்துவிடும், அடிப்படையில் ஜாதகருக்கு சரியான வயதில் ஓர் வேலை அல்லது தொழில் அமைவது குதிரை கொம்பாக மாறிவிடும், தனக்கு ஏற்ற வேலை எது என்று உணர்ந்துகொள்ளவே ஜாதகருக்கு பல வருடங்கள் பிடிக்கும், தனக்கு உகந்த வேலையைதான் செய்து வருகிறோமா ? என்று அறியாமலே சூழ்நிலை கைதி போல் மற்றவருக்காக தனது உழைப்பை சிந்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், சுய கவுரவம் வெகுவாக பாதித்த போதிலும், ஜீவனத்தை கருத்தில் கொண்டு, அடிமை சேவகம் செய்யும் சூழ்நிலையை தரும், அடிப்படையிலேயே ஜாதகருக்கு பரதேஷ ஜீவனம் வாய்த்துவிடும், தனது குடும்பம், பெற்றோர், உடன் பிறப்பு, குழந்தைகள் மற்றும் உறவுகளை விட்டு  வேறு இடத்தில் சென்று ஜீவிக்கும் சூழ்நிலையை தரும்.

சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும், அதன் வழியிலான பலாபலன்களை ஜாதகர் அனுபவிக்க இயலாது சூழ்நிலையை தரும், தனது தகுதிக்கு உகந்த வேலை இல்லை என்று தெரிந்தும் ஜாதகர்  அதில்  இருந்து வெளிவர ஜாதகரின் பொருளாதாரம் இடம் தாராது, ஜாதகர் செய்யும்  சுய முயற்சிகள் யாவும் கடும் தோல்வியை தரும், பொதுவாக ஜீவன ஸ்தான வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, சுய தொழில் செய்தாலோ, அல்லது அடிமை தொழில் செய்தாலும் குறுகிய காலத்தில் ( 3 வருடங்களில் இருந்து 5 வருடங்களுக்குள் ) தன்னிறைவான பொருள் வசதியையும், மிகப்பெரிய தொழில் முன்னேற்றங்களையும் வாரி வழங்கி விடும், ஜீவன ஸ்தான பாதிப்பு என்பது கிணற்றில் போட்ட கல் மாதிரி யாதொரு சிறு அசைவும் இன்றி துவங்கிய நிலையில் ஜாதகர் எப்படி இருந்தாரோ அதே நிலையில் வைத்திருக்கும், ஜீவன ரீதியான முன்னேற்றங்கள்  என்பது ஜாதகருக்கு சிறிதும் ஏற்படாது, இந்த சூழ்நிலையில் உள்ள அன்பர்கள் தனது சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவாக உணர்ந்து கொண்டு மாற்று வழிகளை நடைமுறைக்கு கொண்டுவந்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம், அதற்க்கு உறுதுணையாக அமைவது அவர்களது சுய ஜாதகத்தில்  உள்ள பாவக வலிமையே என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை குன்றும் பொழுது ஜாதகர் பெரும் இன்னல்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : புனர்பூசம் 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு திடீர் இழப்பை தர கூடிய  ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் ஜீவன ரீதியான இன்னல்களை தரும், குறிப்பாக தொழில் அல்லது வேலை வழியிலான சங்கடங்கள், அதிக வேலை பளு, திருப்தி அற்ற வேலை, வேலை செய்யும் இடத்திலும், பொது வாழ்க்கையிலும் கடுமையான சிக்கல்கள், ஓர் ஸ்திரமான முடிவு எடுக்க இயலாமல் தடுமாறும் சூழ்நிலை, செய்யும் காரியங்கள் யாவிலும் ஏமாற்றம், அடிக்கடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேறு வேலையை தேடிக்கொண்டு இருப்பது, ஜீவன ரீதியான ஸ்திர தன்மை இல்லாமல் வீண் அலைச்சல் அலையும் தன்மை என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும்.

மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மட்டும் அல்ல கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன வீடான மகரம் தொடர்பு பெறுவது பாதக ஸ்தானத்துடன் என்பது மிகுந்த இன்னல்களை தொழில் மற்றும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து தரும், சுய ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் பாதிக்கப்பட்டு, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ராசியான மகரமும் பாதிக்கப்படுவது ஜாதகரின் அடிப்படை ஜீவனத்தை கேள்விக்குறியாக மாற்றும், ஜாதகருக்கு கிட்டத்தட்ட 27 வயது நெருங்கிவிட்டது இருப்பினும் நல்லதொரு சிறு வேலையும் இதுவரை  கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகருக்கு எவ்வித பலன்களை தருகிறது என்பது  மேற்கண்ட ஜாதகமே ஓர் சரியான உதாரணம்.

சரி சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடும், கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும் கடுமையாக பாத்திக்கப்பட்டு விட்டது, நடைபெறும் திசா புத்தியாவது ஜாதகருக்கு யோக பலன்களை தருகின்றதா? என்பதை கவனத்தில் கொண்டு ஆய்வு செய்யும் பொழுது, தற்போழுது  நடைபெரும் புதன் திசை ஜாதகருக்கு 4,6,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,6,7ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தந்து கொண்டு இருக்கின்றது, புதன் திசையில் தற்போழுது நடைபெறும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, அவமானம், உடல் நல பாதிப்பு, அனைத்திலும் நஷ்டம், அமைதி இல்லா மனம், தேவையற்ற சவகாசம் மற்றும் பூர்வீகத்தை விட்டு பரதேச ஜீவனத்தை தந்து கொண்டு இருக்கின்றது .

ஜாதகரின் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் மற்றவர்களை நம்பி முதலீடு செய்து தொழில் செய்ய விரும்பினால் திடீர் இழப்பு நிச்சயம் உண்டு, கூட்டு முயற்சி செய்து தொழில் செய்யலாம் என்றால் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது கூட்டாளிகள் வழியில்  கோவணம் வரை உருவிவிட்டு விடும், பொருட்களை வைத்து ( வீடு நிலம் வண்டி வாகனம், தொழில் உபகரணம் ) தொழில் செய்யலாம் என்றால் அடிப்படையே ஆட்டம் காணும், எனவே ஜாதகருக்கு உள்ள ஜீவன ரீதியான வாய்ப்புகளை ஆய்வு செய்வோம் (3,9) பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது சிறு வியாபாரம் செய்யலாம், அல்லது கல்வி நிறுவனத்தில் வேலை செய்யலாம், (11 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானம் ) லாப ஸ்தானம் வலிமை பெறுவதால் ஒருவேளை திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தொழில் முயற்சிகளில் இறங்கலாம், இருப்பினும் திருமணம் நடைபெறவே மிகுந்த  கால  தாமதம் ஆக கூடும், ஆனால் குருட்டு அதிர்ஷ்டம் ஜாதகருக்கு உண்டு என்பதால் 11ம் பாவக வழியிலான ஜீவனத்தை ஆய்வு செய்து, 11ம் பாவக சம்பந்தம் பெற்ற தொழில்களை செய்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

ஜாதகருக்கு 3,9,11ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 2,4,5,6,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற ஜாதகர்கள் சுய தொழில் செய்ய சிறிதும் யோகம் அற்றவர்கள் என்பதை அவர்களது ஜீவன ஸ்தானம் வலிமையே நன்றாக உணர்த்துகிறது என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

அடுத்த பதிவில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற ஓர் ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 10 அக்டோபர், 2014

அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையின் முழுமையை உணர்த்தும் யோக ஜாதக அமைப்பு!

 

அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கும் யோக ஜாதகம் என்ற அமைப்பிற்கும் உதாரணமாக விளங்கும் ஜாதகத்தை பற்றி நாம் இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! கிழ்கண்ட ஜாதகியை அதிர்ஷ்ட தேவதையின் மறு உருவமாகவே நாம் கருதலாம், ஏனெனில் அவரது சுய ஜாதகத்தில், பாவகங்களின் வலிமை அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது, மேலும் வலிமை பெற்ற பாவகங்களின் பலன்களையே, ஜாதகிக்கு நடைபெறும் பெரும்பாலான திசை, புத்தி, அந்தரம், சூட்சமங்கள் நடைமுறைக்கு கொண்டுவருகிறது, அதன் அபரிவிதமான ராஜயோக பலன்களையே ஜாதகி பரிபூரணமாக் இனிவரும் காலங்களில் அனுபவிக்கிறார் என்பது கவனிக்கத்தக்க 
ஒரு சிறப்பு யோக பலன்களாக ஜோதிடதீபம் கருதுகிறது.

மேலும் ஜாதகி செய்த புண்ணியத்தின் பலனையும், பெற்றோர் செய்த பாக்கியத்தின் பலனையும் ஒன்று சேர்ந்து தரும் யோக ஜாதக பலனாகவே கருதலாம், ஜாதகியின் சிறு வயதுமுதல் மிகுந்த யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும் குறிப்பாக ஜாதகியின் பெற்றோர், ஜாதகியின் உடன் பிறப்பு, ஜாதகியின் நண்பர்கள், ஜாதகியின் வாழ்க்கை துணை, ஜாதகியின் உறவினர்கள் என்ற அமைப்பில் சகல நபர்களுக்கும் தனது வழியில் இருந்து யோகத்தை தருபவராக காணப்படுகிறார், ஜாதகி அடிப்படையில் இருந்தே நல்லகுணம், சிறந்த உடல் ஆரோக்கியம், பொருளாதார தன்னிறைவு மற்றும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழும் யோகத்தை தரும்.



ஜாதகியின் ஜெனன லக்கினம் : கன்னி 
ஜாதகியின் ஜெனன ராசி : மகரம் 
ஜாதகியின் ஜெனன நட்சத்திரம் : திருவோணம் 

இந்த ஜாதகத்தில் யோக பலன்களை வாரி வழங்கும் பாவகங்களை மட்டும் நாம் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே ! இதை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது 1,3,5,9,11ம் வீடுகள் அதிர்ஷ்டம் மட்டும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே ஜாதக அமைப்பில் சிறந்த யோக பலன்களை வாரி வழங்கும் வலிமையை பெறுகிறது இதன் வழியில் ஜாதகி பெரும் யோக பலன்களை பற்றி இனி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம், ஜாதகியின் 1,3,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், லாப ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் பாவகமாக வருவதும், லாப ஸ்தானம் சர நீர் தத்துவ ராசியான கடகமாக அமைவதும் ஜாதகிக்கு தர வேண்டிய யோக பலன்களை 100% தங்கு தடையின்றி பூரணமாக வாரி வழங்கும். மேலும் லாப ஸ்தானம் சர ராசியாக இருப்பதால் தான் தரும் பலன்களை விரைந்து தரும், யோக பலன்களின் அளவு என்பது 100% என்ற விகிதத்தில் இருக்கும் என்பது கவனிகதக்கது.

1ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகிக்கு பரந்த மனப்பான்மையையும், சிறந்த நற்குண நலன்களையும் வாரி வழங்கும், ஜாதகியின் எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும், முற்போக்கு சிந்தனையும் பகுத்தறியும் சிறந்த அறிவாற்றலும் இயற்கையாக அமைந்திருக்கும், சிறப்பாக வளரும் சூழ்நிலையை தரும், அதிக லாபத்தையும், நீடித்த அதிர்ஷ்டத்தையும் இலக்கின வழியில் இருந்து ஜாதகி பரிபூரணமாக பெறுவார், செல்வசெழிப்பு, பரஸ்பர உதவிகளை பெரும் யோகம், நீடித்த உடல் ஆரோக்கியம், வருமுன் உணரும் மனோசக்தி, வருமுன் காக்கும் சமயோசித அறிவாற்றல், மனதிற்கு உகந்த மணவாழ்க்கை பெரும் யோகம், சிறந்த புத்திர சந்தான பாக்கியம், தனது குழந்தைகள் வழியில் இருந்து யோக வாழ்க்கை என ஜாதகி இலக்கின அமைப்பில் இருந்து சகலயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

தனது பெயரில் செய்யும் வியாபாரம் அல்லது தொழில் விரைவான முன்னேற்றத்தை வாரி வழங்கும், நிறைய வண்டி வாகனங்களுக்கு உரிமியாளர் ஆகும் யோகம் உண்டாகும், விவசாய பண்ணை விவிவசாய தொழில்களில் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் யோகம் உண்டாகும், நிறைய சொத்து சுக சேர்க்கை ஜாதகி வளரும் காலத்தில் அதிர்ஷ்ட வசமாக கிடைக்கும், புதையல் அல்லது அதற்க்கு இணையான பொருள் வரவை தரும், தர்ம சிந்தனையையும் நேர்மையான குணத்தையும், அதி தைரியமான மனவலிமையையும் வாரி வழங்கும், நிர்வாகம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், திருமண வாழ்க்கைக்கு பிறகு அளவில்லா சொத்து சேர்க்கையை வாரி வழங்கும், விளையாட்டு வீரராக உலக புகழ் பெரும் யோகம் உண்டாகும்.

5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

லாட்டரியில் யோகம் , குதிரை பந்தயம் மற்றும் அனைத்து போட்டி பந்தையங்களில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி குவிக்கும், தனது புத்திசாலிதனத்தல் எப்பொழுதும் ஆதாயம் கிடைக்கும், எப்பொழுதும் மகிழ்ச்சியான வாழ்க்கையே தரும், குடும்பத்தில் நீடித்த மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் தொடர்ந்து வந்தவண்ணமே இருக்கும், இறை அருளின் பரிபூரண நல்லாசிகள் ஜாதகிக்கு வாழ்நாள் முழுவதும் நிறைந்து அருள் புரியும், தொழில் ரீதியான வெற்றிகள் ஜாதகிக்கு வெகு எளிதாக் கிடைக்கும், மக்கள் ஆதரவும், சமுக அந்தஸ்தும் நீடித்து நிலைத்து நிற்கும், கல்வி கேள்விகளிலும், கலைத்துறையிலும் பிரகாசிக்கும் யோகத்தை சிறு வயது முதற்கொண்டே ஜாதகி இயற்கையாக பெற்று இருப்பார்.

9ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஆன்மீக வெற்றி, ஆன்மீக பெரியவர்களின் அருளாசி சிறு வயதிலேயே கிடைக்கும் பாக்கியம் உண்டாகும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், ஜாதகி சொல்லும் வார்த்தைகள் யாவும் பலிதம் பெரும், பல நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுவரும் யோகம் உண்டாகும், இதனால் மிகுந்த லாபம் கிடைக்கும், வெளிநாட்டில் படிக்கும் யோகம் உண்டாகும், ஆராய்ச்சி கல்வியில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, ஜாதகி நினைக்கும் விஷயங்கள்  மற்றும் பொருட்கள் யாவும், எளிதில் கிடைக்கும்.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதக அமைப்பிலேயே சிறந்த விஷயமாகவும், அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் அமைப்பாகவும் இதை கருதலாம், ஜாதகியின் சிந்தனையும் செயல்பாடுகளும் அனைவரும் பாராட்டும் வண்ணம் அமையும், படிப்படியான அதிரடி வளர்ச்சியை வாரி வழங்கும், அனைத்திலும் லாபம் கிடைக்கும், ஜாதகிக்கு சிறந்த  நல்ல குணங்களை வழங்குவதில், இந்த 11ம் பாவகத்திர்க்கு அதிக  பங்கு உண்டு, வியாபர விருத்தி, நீடித்த அதிர்ஷ்டம், சுப விரைய செலவுகளை தரும், ஒருவரின் ஜாதகத்தில் 11ம் வீடு ஜாதகர் எதற்காக பிறந்தார் என்பதை உணர்த்தும் பாவகமாக இருப்பதால், இங்கே ஜாதகி அதிர்ஷ்டமும் சகல யோகத்தையும் அனுபவிக்க பிறந்தவர் என்பது தெளிவாகிறது, மேலும் இந்த லாப ஸ்தானம் ஜாதகிக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடக ராசியாக அமைவது 100% யோக பலன்களை வாரி வழங்குகிறது.

குறிப்பு :

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் திசையும், எதிர்வரும் திசைகளும் மேற்கண்ட லாப ஸ்தான பலன்களையே நடைமுறைக்கு கொண்டுவருவது ராஜயோக பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் தன்மையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

புதன், 12 மார்ச், 2014

1,7,10ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜீவன வழியில் இருந்து ஜாதகர் பெரும் வெற்றி வாய்ப்புகள் !



 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது, சம்பந்தபட்ட ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும், தங்கு தடையின்றி ஜீவன முன்னேற்றத்தை தரும், ஜாதகர் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காணும் யோக வாழ்க்கையை பெற்று தரும்.

 கிழ்கண்ட மகர இலக்கின ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !




லக்கினம் : மகரம் 
ராசி : மீனம் 
நடசத்திரம் : ரேவதி 4ம் பாதம் 

 ஜாதகருக்கு 1,7,10ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டுடனே தொடர்பு பெறுவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம் , இதில் ஜீவன ஸ்தனத்துடன் தொடர்பு  பெரும் 1,7,10 ம் பாவகங்கள் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்களை வாரி வழங்கும் என்பதனை சற்று ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

 உடல், உயிராகிய லக்கினம் ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான ஒரு விஷயமே, ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு துலாம் ராசியில் அமைவதும், அந்த துலாம் ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகமாக வருவதும், சர காற்று தத்துவ அமைப்பை ஏற்று நிற்பதும் ஜாதகருக்கு பரிபூரண யோகத்தை வழங்கும , பொதுவாக சர காற்று தத்துவ ராசி நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு தன்னிறைவான அறிவாற்றலை வாரி வழங்கும் , அடிப்படையில் இந்த ஜாதகருக்கு லக்கினம் ஜீவன ஸ்தனத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறு வயது முதல் தந்தையின் அரவணைப்பில் கட்டுப்பாட்டில் வளரும் சூழ்நிலையை தரும், மேலும் கௌரவமான வாழ்க்கை மேற்கொள்ளும் யோகத்தை தரும், தனது சுய அறிவாற்றல் கொண்டும், சுய உழைப்பை கொண்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற்றவராக இருப்பார்.

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  7ம் வீடான துலாம் ராசியுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெறுவதால், ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணை மிகுந்த யோகம் கொண்டவராக காணப்படுவார், ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே திருமண வாழ்க்கைக்கு பிறகுதான் என்றால் அது மிகையில், மேலும்  ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மனைவி, நண்பர்கள், பொது மக்கள் என்ற அமைப்பில் ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து பலன் தரும்.

 களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகர் மனைவி வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுபவர் என்ற அமைப்பையும் தரும், மேலும் ஜாதகரின் வெளி வட்டார பழக்க வழக்கங்கள் மற்றும் தொடர்புகள் அனைத்தும் மிக பெரிய அந்தஸ்து கொண்ட நபர்களுடன் இருக்கும் என்பதே குறிப்பிடத்தக்கது, மேலும் அரசியல்வாதிகளின் அதாரவும் ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும், அரசு சார்ந்த அமைப்புகளில் இருந்து லாபம் பெரும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகர் வியாபாரம் செய்தால் பொதுமக்கள் ஆதரவும், அரசு ஆதரவும் தடையின்றி கிடைக்கும், மேலும் வாழ்க்கை துணை, நண்பர்களின் ஆதரவும் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

 ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்து நிறைவான பொருள் வரவு உண்டாகும், வெளிநாடுகள் பலவற்றிற்கு சென்று வரும் யோகத்தை தரும், ஜீவன வாழ்க்கை வெளிநாடுகளில் அமைந்தால் ஜாதகர் பொருளாதார ரீதியான தன்னிறைவை குறுகிய காலத்தில் பெரும் யோகம் உண்டாகும், அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை வாங்கி விற்பனை செய்தாலோ, ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களை மேற்க்கொண்டாலோ கை நிறைவான வருமானம் தடையின்றி 100 சதவிகிதம் கிடைக்கும், ஜாதகரின் வாழ்க்கை குறுகிய காலத்தில் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும்

 ஜீவன ஸ்தானம் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் சுய தொழில் செய்வதே வெற்றி மிகுந்த வாழ்க்கை பெற்றுத்தரும் என்பது உறுதியாகிறது, மேலும் ஜாதகர் வேறு ஒரு இடத்தில் பணியாற்றுகிறார் என்றால் ஜாதகரின் வெற்றி வாய்ப்புகள் யாவும், அவர் வேலை செய்யும் தொழில் நிறுவனத்திற்கு சென்று விடும், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு  மிக பெரிய முன்னேற்றத்தை பெற்று தந்து விடும், மாறாக ஜாதகர் சுயமாக தொழில் செய்தால் ஜாதகருக்கே பரிபூரண வெற்றிகளை வாரி வழங்கிவிடும், இந்த கருத்தை இங்கே பதிவு செய்ய காரணம் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் சர ராசியாக அமைவதாலும், துலாம் காற்று தத்துவ ராசியா இருப்பதாலுமே இதை குறிப்பிடுகிறோம், சர ராசி ஜாதகருக்கு 100 சதவிகித வெற்றியை தரும், காற்று தத்துவம் ஜாதகருக்கு செலவில்லா மக்கள் விளம்பரத்தையும், தொழில் நேர்மையையும் உலகுக்கு எடுத்து சொல்லும், துலாம் ராசி உலக புகழ் பெற வைக்கும்.

மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக வருவது ஜாதகர் தனித்தும் தொழில் செய்து வெற்றி பெற முடியும், கூட்டு முயற்ச்சி, அல்லது கூட்டு தொழில் மூலமாகவும் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற இயலும், ஜாதகர் சுய தொழில் ஆரம்பிக்க சரியான நேரம் எதுவென்றால் மேற்கண்ட 1,7,10ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானமான  10ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தும், திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் இவைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து தொழில் துவங்கினால் ஜாதகருக்கு நிச்சயம் 100 சதவிகித தொழில் வெற்றியை வாரி வழங்கும் என்பது நிச்சயம்.

ஜோதிடன் வர்ஷன் 
வாழ்க வளமுடன் 
9443355696,9842421435


வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

பங்கு வர்த்தகத்தில் லாபம் ஈட்டும் யோக ஜாதக நிலை !





பொதுவாக அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை விரும்பாத நபர்களே இல்லை எனலாம், அதிர்ஷ்டம் மூலம் வாழ்க்கையில் செல்வ வளமும், பொருளாதார முன்னேற்றமும் அடையும் அன்பர்களை கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்வதுண்டு, யார் செய்த புண்ணியமோ ஜாதகர் சகல நலன்களும் பெற்று வாழ்க்கையில் சிறப்பாக இருக்கிறார் என்று பெரியோர்கள் சொல்ல கேட்டதுண்டு, ஆக ஒருவருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பை வாரி வழங்குவதில் முதன்மை வகிப்பது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே என்றால் அது மிகையில்லை, ஒருவரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் 5ம் பாவகத்திர்க்கு முக்கிய பங்கு உள்ளது.

 குறிப்பாக ஜோதிட ஆலோசனை பெற வரும் பல அன்பர்கள் எனக்கு பங்கு வர்த்தகத்தில் வருமானம் ஈட்டும் யோகம் உண்ட என்று கேட்பது வாடிக்கையானதே, இதற்க்கு உண்டான பதில் ஒருவருடைய சுய ஜாதகத்தில் 5ம் பாவகமும் 11ம் பாவகமும் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பங்கு வர்த்தகத்தில் கை நிறைவான வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் என்பது உறுதியான விஷயம்.

சுய ஜாதகத்தில் 5ம் வீடு 5,11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றாலோ, 11ம் வீடு  5,11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றாலோ, ஜாதகர் பங்கு வர்த்தகம் சார்ந்த எந்த ஒரு தொழில் செய்தாலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், நினைத்து பார்க்க இயலாத லாபம் கிடைப்பது உறுதி, 5,11ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது நுண் அறிவு திறனால் பங்குவர்த்தகத்தில் லாபம் ஈட்டும் யோகத்தை தரும் .

குறிப்பாக மிதுன இலக்கின ஜாதகருக்கு துலாமும்,மேஷமும் 5,11ம் பாவகமாக வரும், மிதுன லக்கினத்திற்கு துலமும்,மேஷமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பொது மக்கள் வாயிலாகவும், தனது சுய திறனை கொண்டும் லாபம் ஈட்டும் தன்மை உண்டாகும், குறிப்பாக ஜாதகருக்கு பங்குவர்த்தக துறையில் தினசரி முதலீடு செய்வதால் தொடர்ந்து வருமானம் ஈட்டும் யோகம் உண்டாகும், நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால் ஜாதகருக்கு இரட்டிப்பு யோகம் உண்டாவது நிச்சயம்.

கன்னி இலக்கின ஜாதகருக்கு மகரமும், கடகமும் 5,11ம் பாவகமாக வரும், கன்னி லக்கினத்திற்கு மகரமும் கடகமும் வலிமை பெரும் பெரும் பொழுது ஜாதகர் செய்யும் தொழில் துறை சார்ந்த நிலைகளில் இருந்தும், சொத்து சுக அமைப்பில் இருந்தும் தனது அதிர்ஷ்டத்தின் மூலம் லாபம் ஈட்டும் தன்மையை தரும், குறிப்பாக ஜாதகர் பங்குவர்த்தக துறையை சுய தொழிலாகவே ஏற்று நடத்தலாம் 100 சதவிகித வெற்றியை தரும், மேலும் நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால், ஜாதகரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது.

தனுசு இலக்கின ஜாதகருக்கு மேஷமும்,துலாமும் 5,11ம் பாவகமாக வரும், தனுசு இலக்கின ஜாதகருக்கு மேஷமும்,துலமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது நண்பர்கள் வழியிலும், கூட்டு தொழில் அமைப்பில் இருந்தும் தனது சுய திறமையால் லாப வாய்ப்பை பெரும் யோகத்தை தரும் குறிப்பாக, ஜாதகருக்கு சம்பந்தம் இல்லாமலேயே பல இடங்களில் இருந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும், பங்கு வர்த்தக துறையில் முதலீடு செய்வதால் ஜாதகருக்கு பன்மடங்கு லாபம் உண்டாகும், மேலும் நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால், ஜாதகர் தனது சுய திறமையால் அதிர்ஷ்ட வாய்ப்பினை பெரும் யோகத்தை 100 சதவிகிதம் தரும்.

மீன இலக்கின ஜாதகருக்கு கடகமும்,மகரமும் 5,11ம் பாவகமாக வரும், மீன இலக்கின ஜாதகருக்கு கடகமும், மகரமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது தன்னிகரற்ற தொழில் திறனை கொண்டும், சிறப்பாக கற்ற கல்வி அறிவை கொண்டும் அதிர்ஷ்ட வாய்ப்பினை பெரும் யோகம் உண்டாகும், பங்கு வர்த்தக துறையில் ஆலோசனை சொல்லும் சிறப்பு திறமையை ஜாதகர் இயற்கையாகவே பெற்றிருப்பர், இவர் சொல்லும் கணிப்புகள் யாவும் 100 சதவிகித வெற்றியை பங்குவர்த்தக துறையில் குறைவின்றி தரும். மேலும் நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால், ஜாதகர் குறுகிய  காலத்தில் பங்கு வர்த்தக துறையில் கொடி கட்டி பறக்கும் யோகத்தை தரும்.

மேற்கண்ட மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் எனும் உபய இலக்கின ஜாதகர்களுக்கு 5,11ம் பாவகங்கள் சர ராசியாக அமைவதால் 100 சதவிகித யோகத்தை மேற்கண்ட அமைப்பில் இருந்து வாரி வழங்கும், ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எனும் ஸ்திர இலக்கின ஜாதகர்களுக்கு 5,11ம் பாவகங்கள்   ராசியாக அமைவதால் 35 சதவிகித யோகத்தை மேற்கண்ட அமைப்பில் இருந்து வாரி வழங்கும், மேஷம்,கடகம்,துலாம்,மகரம் எனும் சர இலக்கின ஜாதகர்களுக்கு 5,11ம் பாவகங்கள் ஸ்திர  ராசியாக அமைவதால் 70 சதவிகித யோகத்தை மேற்கண்ட அமைப்பில் இருந்து வாரி வழங்கும்.

ஆக அன்பர்களே ! பங்கு வர்த்தகத்தில் ஜாதகர் வருமானம் பெற வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் 5,11ம் பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9842421435
9443355696

புதன், 8 ஜனவரி, 2014

அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும் 11ம் பாவகம் !


   அதிர்ஷ்டம் மற்றும் லாபம் எனும் 11ம் பாவகம் சுய ஜாதகத்தில், வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும்  நற்பலன்கள் என்பது சற்று மிதமிஞ்சிய அளவிலேயே இருக்கும், குறிப்பாக ஜாதகரின் முற்போக்கு சிந்தனையும், பகுத்தறியும் தன்மையும் எப்பொழுதும் ஜாதகரை விழிப்புணர்வுடன் வைத்திருக்கும், சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் வலிமைபெறுவது ஜாதகருக்கான தனித்திறமையை வெளிப்படுத்தும், இருப்பினும் சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெறுவதே மற்ற பாவக வழியில் இருந்துவரும் சுபயோகங்களை சுவீகரிக்கும் தன்மையை தரும், திறமை இருப்பது ஒரு வகையில் சிறப்பு என்ற போதிலும் அதனால் வரும் முழு பலன்களையும் அனுபவிக்க ஜாதகத்தில் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, இது பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 பொதுவாக ஒரு மனிதனின் பிறப்பின் சாராம்சம் என்ன? தனது வாழ்க்கை எப்படி பட்ட அமைப்பில் வாழும் தன்மையை பெறுவார்,  என்ற விஷயத்தை தெளிவாக தெரிந்து கொள்ள லாப ஸ்தானம் எனும் 11ம் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டு  சிறப்பாக கூறிவிட முடியும் என்றால் அது மிகையில்லை, மனிதனின் பிறவி பலனை நிறைவு செய்யும் தன்மையை (கடனை) 12ம் பாவகம் தெளிவுபடுத்தும், ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை பற்றி தெளிவாக  கூறும் தன்மை 11ம் பாவக வலிமையே நிர்ணயம் செய்கிறது, எனவே சுய ஜாதகத்தில் 11ம் பாவக வலிமை பற்றிய தெளிவு பெறுவது தனது எதிர்காலத்தை பற்றிய ஒரு திட்டமிடுதல் மற்றும் தனது வாழ்க்கையில்  பெரும் லாபம் மற்றும் அதிர்ஷ்டம், நன்மை மற்றும் யோக அமைப்புகள் பற்றிய விபரங்களை மிக தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.

லாப ஸ்தானம் பற்றி சிலாகித்து கூறாத ஜோதிடர்களே இல்லை எனாலாம், குறிப்பாக கோட்சார கிரகங்கள் ராசிக்கு ( லக்கினம் ) 11ல் சஞ்சாரம் செய்யும் பொழுது, ஜாதகருக்கு மிகுந்த யோககங்களையும், அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் வாரி வழங்கும் என்பது பொதுவான கருத்தாகவே இருக்கிறது, ஆக ஒரு ராசிக்கு  கோட்சாரத்தில் 11ல் சஞ்சாரம் செய்யும் கிரகம் மிகுந்த யோகத்தை தரும் என்று என்னும் பொழுது ( ராசிக்கு 11ல் சஞ்சாரம் செய்யும் கிரகம் யோகத்தை தருகிறதா? அவயோகத்தை தருகிறதா? என்பது வேறு விஷயம்), லக்கினத்திற்கு 11ம் பாவகம் வலிமை பெறுவது எவ்விதமான நன்மைகளை தரும் என்பதனை கருத்தில்கொள்வது அவசியமாகிறது.


உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தில் 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் சுபயோகங்கள், அதிர்ஷ்டம் மற்றும் லாபங்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !




இந்த மிதுன இலக்கின ஜாதகருக்கு 1,3,5,6,7,11 வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த யோகத்தை தரும் என்றால் அது மிகையில்லை, இருப்பினும் ஜாதகர் எந்த எந்த வழிகளில் இருந்து அதிர்ஷ்டங்களையும், லாபங்களையும் பெறுவார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது  அவசியம்.

 லக்கினம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அடிப்படையில் சிறப்பாக  வளரும் சூழ்நிலையை தரும், நீண்ட ஆரோக்கியமான உடல் அமைப்பினையும், தெளிவான முற்போக்கு சிந்தனையையும், நிறைந்த அறிவாற்றலையும் வாரி வழங்கும், எனவே ஜாதகர் தனது நிலையில் இருந்து அதிர்ஷ்டசாலி என்பது உறுதியாகிறது.

3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் நல்ல வெற்றியினை தரும், போட்டி, தேர்வு, பந்தயங்களில் வெற்றியை தரும், தனது சகோதர அமைப்புகளில் இருந்து மிகுந்த நன்மையை தரும், வீரியம் மிக்க மன தைரியத்தையும், பிடிவாத மன நிலையை தரும், தனது வெற்றிக்காக இரவு பகல் பாராமல் அயராது பாடுபடும் தன்மையை தரும், ஜாதகர் எடுக்கும் காரியங்கள் யாவும் நிச்சய வெற்றியை தரும் என்பது உறுதியாகிறது.

5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தனது முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து சுகங்களையும், அவர்கள் செய்த புண்ணியத்தையும் அனுபவிக்க பிறந்தவர் என்றால் அது மிகையில்லை, தனது  பெயர் சொல்ல நல்ல புத்திர சந்தானத்தையும், அவர்கள் வழியில் இருந்து வரும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்க இயலும், மேலும் தனது முன்னோர்கள் வழியில் இருந்து வரும் அறிவாற்றலையும், புத்திசாலித்தனத்தையும் பெற்றிருப்பார் என்பது உறுதியாகிறது.

6ம்வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தான் நினைக்கும் எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வரும் திறமை அமையும், அதிர்ஷ்ட வாய்ப்புகள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கும், குறிப்பாக பங்கு சந்தையில் நல்ல லாபம் பார்க்க இயலும், வெகு விரைவில் சுலபமாக வெற்றிக்கனியை பறிக்கும் தன்மையை தரும், லாட்டரியில் அதிர்ஷ்டம், புதையல் யோகத்தை தரும், வேலையாட்கள் மற்றும் எதிரிகளாலும் லாபம் பெரும் தன்மையை தரும், எவ்வித பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் புத்திகூர்மையை தரும் என்பது உறுதியாகிறது.

7ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, நண்பர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை வாழ்நாள் முழுவதும் பெரும் யோகதாரிகள் என்றால் அது மிகையில்லை, மேலும் வாழ்க்கை துணை வழியில் இருந்தும், பொது மக்கள் வழியில் இருந்தும் அதிர்ஷ்டம் வந்துகொண்டே இருக்கும், நல்ல அரசியல்வாதி, பொதுமக்களுக்கு சேவை செய்யும் தொழில்கள் புரிவோர், சிறப்பான வியாபர திறமை, அனைவராலும் அதிர்ஷ்டம் பெரும் அமைப்பை பெற்றவர் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மிகசிறந்த நல்ல குணத்தை வாரி வழங்கிவிடும், எவரும் போற்றும் தன்மையை தரும் பாராட்டு மலையில் நனையும் யோகம் பெற்றவர் , தனது சிந்தனையும் செயலும் முற்போக்கு தன்மையுடன் இருப்பதை ஜாதகரே உணர்ந்துகொள்ள முடியும், தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பை தரும், இது மட்டுமல்ல அனைத்திலும் லாபம் பெறுபவர், மிக அதிர்ஷ்டசாலி என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

ஜாதகரின் லாப ஸ்தானம் சர (மேஷம்) ராசியாக அமைவதால் ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் இருந்து 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கும் என்பது கூடுதல் தகவல்.

11ம் பாவக வழியில் இருந்து ஒரு ஜாதகர் எவ்வித நன்மையை பெறுகிறார் என்பதை நமது ஜோதிட முறையில் தெள்ள தெளிவாக தெரிந்துகொள்ள இயலும் என்றால், அதற்க்கு காரணம் எமது குருவும், இறைஅருளின் கருணையுமே ! 11ம் பாவக வலிமையை உணருங்கள், வாழ்க்கையில் வெற்றியை தடையில்லாது பெறுங்கள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9842421435
9443355696
jothidadeepam@gmail.com

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

திடீர் தன சேர்க்கை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் யோக ஜாதக நிலை !



பொதுவாக பாரம்பரிய ஜோதிட கணிப்பில் 6,8,12ம் வீடுகளை ( பாவகம் ) துர் ஸ்தானம் என்றும் . தீமை செய்யும் பாவகம் என்றும் சொல்வதுண்டு, குறிப்பாக மேற்க்கண்ட பாவகங்கள் எக்காரணத்தை கொண்டும் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு அதிக இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் அதன் பாதிப்பில் இருந்து மீள்வது மிக கடினம் என்று கூட சொல்வதுண்டு.

6ம் வீடு அல்லது 6ம் பாவக அதிபதி வலிமை பெரும் பொழுது உடல் நல குறையும், கடன் தொந்தரவுகளையும் வழங்கும் என்றும் , 8ம் வீடு அல்லது 8ம் பாவக அதிபதி வலிமை பெரும் பொழுது ஜாதகர் திடீர் இழப்பு அல்லது திடீர் விபத்துகளை சந்திக்க வேண்டும் என்றும், 12ம் வீடு அல்லது 12ம் அதிபதி வலிமை பெற்றால் ஜாதகர் மன நிம்மதி இழப்பினையும், வீண் விரையங்களையும் சந்திக்க வேண்டி வரும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கருத்தாக இருக்கிறது , இது முற்றிலும் உண்மையா ? அல்லது இதற்க்கு மாற்று கருத்து இருக்கின்றதா என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

ஜோதிட தீபத்தில் இதற்க்கு முன் எழுதிய பதிவுகளில்  ஒரு ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை வழங்கும் அதிகாரம் 12 பாவகத்திர்க்கும் உண்டு என்ற கருத்தை முன் மொழிந்திருப்போம், ஆக ஒருவருடைய சுய ஜாதக அமைப்பின் படி தீமையான பலன்களை மட்டுமே 6,8,12ம் வீடுகள் (பாவகங்கள்)  வழங்கும் என்பது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானது மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் ஒரு ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் அமரும்பொழுது ஜாதகருக்கு வழங்கும் நன்மையான பலன்களை பற்றிய ஒரு சிறு விளக்கம் கிழ்கண்டவாறு அமையும் .

6ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :

1) ஜாதகர் எதிரிக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார், ஜாதகரை எதிர்க்கும் அனைவரும் தோல்வியை தழுவ வேண்டி வரும் மேலும் , எதிரிகள் செய்யும் சூழ்சி ஜாதகருக்கு சாதகமாக அமைந்து ஜாதகரை உலக புகழ் பெற வைக்கும்.

2) அரசியலில் திடீர் என முன்னேற்றம் பெறவும், பொதுமக்களின் நீண்ட ஆதரவினை பெரும் யோகத்தை பெறவும், அதிகார பதவிகளை நீண்ட நெடுங்காலம் அனுபவிக்கும் யோகத்தை தருவதும் இந்த சத்துரு ஸ்தானத்தின்  வலிமையே என்றால் அது மிகையாகாது .

3) ஜாதகருக்கு வரும் உடல் ரீதியான தொந்தரவுகள் விரைவில் குணம் பெற வைப்பதும், தனக்கு வரும் உடல் ரீதியான தொந்தரவுகளை தாங்கும் மன வலிமையை  தருவதும், தனது உடல் நிலையில் அதிக கவனமும், உடல் மன நலம் பேணுவதில் சிறந்து விளங்கும் தன்மையினையும், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து போராடும் குணத்தை தருவதும் இந்த சத்ரு ஸ்தானத்தின் வலிமையே .

4) வட்டிதொழில், நிதி நிறுவனம் நடத்தும் யோகம், தன்னை சார்ந்தவர்களை அரவணைத்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணச்செய்யும் தன்மையை ஜாதகருக்கு தருவது சத்ரு ஸ்தானமே, 6ம் பாவகம் வலிமை பெரும்  பொழுது ஜாதகர் நிதி சார்ந்த தொழில்களை துணிந்து செய்யலாம், ஜாதகரை குறுகிய காலத்தில் மிக பெரிய செல்வ சேர்க்கையை தந்துவிடும்.

5) புதிய உயிர்காக்கும் மருந்துகளை கண்டறிந்து மக்களின் உயிரை காக்கும் வல்லமையை இந்த பாவகமே வழங்குகிறது, ஜாதகரின் பொருளாதார முன்னேற்றமும் இதன் மூலம்  மிகப்பெரிய அளவில் உயரும் என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் . 

6) ஒருவருக்கு சுய ஜாதகத்தில் 6ம் வீடு வலிமை பெற்று, நடக்கும் திசை 6ம் பாவக பலனை தரும் பொழுது ஜாதகருக்கு தொடர்ந்து சிறு சிறு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும், மேலும் ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் படி படியாக உயர்ந்த வண்ணமே இருக்கும் . 

8ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :  

1) முதலில் ஜாதகருக்கு பூரண நீண்ட ஆயுளை தந்துவிடும் , மேலும் நூலிலையில் உயிர்தப்பிக்கும் புண்ணியவான்கள் அனைவரின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

2) இன்சுரன்ஸ் துறையில் கொடிகட்டி பறக்கும் அன்பர்கள் ஜாதக அமைப்பில் இந்த 8ம் பாவகம் மிகுந்து வலிமை பெற்றிருக்கும், தனது மூதாதையர்களின் சொத்து சுகங்களை உயில் மூலம் பெரும் அமைப்பை தரும், ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து மிகப்பெரிய சொத்து சேர்க்கை உண்டாகும் .

3) ஜாதகரிடம் மற்றவர்களின் பணமே அதிகம் இருக்கும் , குறிப்பாக பெண்கள் மூலம் அதிக லாபம் உண்டாகும், கட்டுமான துறையில் பயன்படுத்த படும் உபகரணங்களினால் ஜாதகருக்கு தொடர்ந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும், திருமணத்தால் யோக வாழ்க்கை ஜாதகருக்கு நிச்சயம் அமையும்.

4) ஜாதகருக்கு தனது பூர்விக நிலத்தில் இருந்து புதையல் கிடைப்பதும், அதன் மூலம் ஜாதகர் திடீர் தன பிராப்தி யோகம் உண்டாகுவதும், அல்லது புதையலுக்கு நிகரான செல்வ சேர்க்கையை ஜாதகருக்கு திடீர் என தருவதும்  ஆயுள் பாவகத்தின் வலிமையே.

5) யூக வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் ஜாம்பவான்களின் ஜாதக அமைப்பில்  ஆயுள் பாவகம் மிகுந்த வலிமையுடன் இருக்கும் , பங்குவர்த்தக தொழில் துறையில்  அபரிவிதமான செல்வ சேர்க்கையை தருவது ஆயுள் பாவகமே, ஜாதகர் செய்யும் கூட்டு தொழில் மிகப்பெரிய வளர்சியை பெரும் மேலும் கூட்டு தொழிலால் அதிக லாபம் பெறுவது ஆயுள் பாவகம் வலிமை பெற்றவருக்கே என்றால் அது மிகையில்லை .

6) தான் செய்யும் தொழில், வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த துறைகளில் இருந்தும் , அரசு மானியம் மற்றும் அரசு சலுகைகள் மிக எளிதில் கிடைக்க வேண்டும் எனில் குறிப்பிட்ட ஜாதகருக்கு ஆயுள் பாவகம் வலிமை பெற்றிருக்க வேண்டும் , மேலும் மருத்துவ துறையில் பயன்படுத்த படும் மருத்துவ உபகரணங்களினால் ஜாதகருக்கு மிகப்பெரிய தன சேர்க்கை உண்டாகும் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் ஜாதகத்திலும் பெரிய தனவந்தர்களின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகம் மிகவும் வலிமையுடன் இருக்கும்.

12ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :

1) மற்றவர்கள் மனதில், மன நிம்மதி மற்றும் மன மாற்றத்தை தரும் அறிய கலைகளில் ஜாதகருக்கு மிகப்பெரிய ஆற்றல் மற்றும் புலமை இயற்கையாக  அமைந்திருக்கும், இதனால் ஜாதகரை சந்திப்பவர்களின் வாழ்க்கையில் மிகசிறந்த எதிர்காலம்  உருவாகும்.

2) யோகசானம் , தியானம், உடற்பயிற்ச்சி, தற்காப்பு கலைகளில் ஜாதகருக்கு அதிக  ஆர்வமும், தேர்ச்சியும் உண்டாகும், தனிப்பட்ட முறையில் எவருடைய உதவியும் இன்றி வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி பெரும் யோகம் ஜாதகருக்கு உண்டு, தொலைதூர பயணங்களினால் ஜாதகர் மிகப்பெரிய தன சேர்க்கை பெரும் யோக அமைப்பு ஜாதகருக்கு மத்திம வயதில் உண்டாகும்.

3) பொழுதுபோக்கு மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் மூலம் ஜாதகருக்கு மிகுந்த லாபம் உண்டாகும், இசை மற்றும் கலை துறை சார்ந்த அமைப்புகளில் அதிக வருமானத்தை பெரும் தன்மையை தரும் , கலை துறையில் குறிப்பாக சிறந்த  திரைப்பட இயக்குனர்களின் சுய ஜாதகத்தில் 12ம் வீடு மிகுந்த வலிமையுடன் இருக்கும் .

4) ஜாதகர் செய்யும் முதலீடுகள் 3மடங்கு லாபத்தை தரும், குறிப்பாக 12ம் வீடு வலிமை பெற்ற ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் முதலீடு செய்யும் தொழில்களை  தேர்ந்தெடுத்து செய்யும் பொழுது மிகுந்த லாபமும் குறுகிய காலத்தில்  தான் முதலீடு செய்த தொகையை எவ்வித நஷ்டமும் இன்றி எடுத்து விட முடியும் .

5) 12ம் வீடு வலிமை பெறுவது ஜாதகருக்கு நல்ல மன வலிமையை தரும், எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மன ஆற்றலை பெற்றிருப்பார் , எடுத்த காரியத்தில் வெற்றி பெரும் வரை உறக்கம் இல்லாமல் ஓயாமல் உழைத்துக்கொண்டு இருக்கும் மன வலிமையை தரும் , மேலும் ஒரு இரவில் தனவந்தனாகும் யோகம் 12ம் வீடு வலிமை பெரும் பொழுதே நடைமுறைக்கு வருகிறது .

6) இறுதியில் ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், தனது ஆன்மாவை இறை நிலையுடன் கலந்து மோட்ச வாழ்வினை பெறுவதற்கு 12ம் வீடு மிகுந்த வலிமையுடன் இருப்பது அவசியம், தான் யார் என்ற கேள்விக்கு விடை தேடும் அன்பர்களின் ஜாதக அமைப்பில் 12ம் வீடு வலிமை பெற்றிருப்பதை காண முடிகிறது .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் மேற்கண்ட 6,8,12ம் விடுகள் வலிமையுடன் இருக்கும்  பொழுது நோயற்ற வாழ்க்கையும் , குறைவற்ற செல்வமும் , மன நிம்மதியான குடும்ப வாழ்க்கையும் நிச்சயம் அமைந்திருக்கும் என்பதில் எவ்வித  சந்தேகமும் இல்லை அன்பர்களே ! துர் ஸ்தானம் என்று சொல்லபடுகிற 6,8,12ம் வீடுகள் வலிமை பெரும் பொழுது மேற்கண்ட யோக பலன்களும் , வலிமை இழக்கும் பொழுது இதற்க்கு நேர்மறையான அவயோக பலன்களையும் தரும் , மேலும் அப்படி வலுவிழந்து தீய பலன்களை தரும் பொழுது அந்த பலன்களை ஜாதகரால் எதிர்கொள்ள முடிவதில்லை எனவே தான் 6,8,12ம் வீடுகள் துர் ஸ்தானம் என்று வர்ணிக்கபட்டு இருக்க கூடும் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com


வியாழன், 21 ஜூன், 2012

சொந்த வீடு, சுய தொழில் அமைய என்ன செய்ய வேண்டும் ?



 கேள்வி :

அய்யா எனக்கு தற்பொழுது குடியிருக்க சொந்த வீடு இல்லை , மேலும் சுயமாக தொழில் பல  செய்தேன் ஆனாலும் அனைத்திலும் நஷ்டம் , நான் தற்பொழுது எனது மனைவியுடன் மாமனார் வீட்டில் வசித்து வருகிறேன்,  இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் , எதிர்காலம் எப்படி இருக்கும் முன்னேற்றம் உண்ட என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ? தயவு செய்து வழிகாட்டுங்கள் .

 அன்புள்ள நண்பருக்கு ..

தங்களுடை ஜாதக அமைப்பில், சொத்து, சுகம், சொந்த வீடு , வண்டி வாகன அமைப்பு மற்றும் தாயாரின் நிலை ஆகியவற்றை குறிக்கும் 4 ம் வீடு  மற்றும் தொழில் , வசதி , தொழில் மூலம் வரும் வருமானம் தங்களது தகப்பனார் ஆகிய அமைப்பை குறிக்கும் 10 ம் வீடுகளின் பலன்களை  தற்பொழுது நடக்கு திசை ராகு திசை தங்களுக்கு நடத்தி கொண்டு இருக்கிறது , மேலும் இந்த பாவகங்கள் கோட்சார ரீதியாக மிகவும் பாதிக்க பட்டுள்ளது .

ஒருவருடைய ஜாதக அமைப்பில் இந்த இரு வீடுகள் கோட்சார ரீதியாக பாதிக்க படும்பொழுது , ஜாதகர் அவசரபட்டு எடுக்கும் சில முடிவுகளால் அதிகம் பாதிக்க பட வேண்டி வரும் என்பது கவனிக்க பட வேண்டிய முக்கிய அம்சம் , ஒருவருக்கு குடியிருக்க அனைத்து வசதியுடன் கூடிய ஒரு நல்ல வீடு , வண்டி , வாகனம் , சொத்து சுகம் , ஆகிய அமைப்புகள் பெற வேண்டுமெனில் அவரது ஜாதக அமைப்பில் இந்த நான்காம் வீடு மிகவும் நன்றாக இருப்பது அவசியம் . மேலும் சுய தொழில் நல்ல முன்னேற்றம் பெறவும் , நல்ல வேலை வாய்ப்பினை பெறவும் , செய்யும் தொழில்களில் நல்ல முன்னேற்றம் பெறவும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு , மிகவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் .

இந்த இரண்டு வீடுகள் ஒரு ஜாதகத்தில் பிறப்பிலே பாதிக்க பட்டாலும் , கோட்சார ரீதியாக பாதிக்க பட்டாலும் ஜாதகர் இந்த வகையில் நன்மையான பலன்களை பெற முடியாது , தங்களது சுய ஜாதகத்தில் இந்த இரண்டு வீடுகள் மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றது , கோட்சார ரீதியாக மட்டும் பாதிக்க பட்டுள்ளது கடந்த 7 வருடமாக மட்டுமே  , இந்த காலங்களில் தாங்கள் தங்களின் பெற்றோரை விட்டு விட்டு மனைவி பேச்சை கேட்டுக்கொண்டு மாமனார் வீட்டில் வந்து அமர்ந்து விட்டால் , செய்யும் தொழிலும் , மற்ற விஷயங்களிலும் தோல்வி தான் கிடைக்கும் .

பொதுவாக அம்மாவை குறிக்கும் 4 ம் பாவகம்  குடியிருக்க நல்ல வீடு, வண்டி , வாகனம் , சொத்து சுகம் , ஆகிய அமைப்புகள் இந்த பாவக வழியில் இருந்தே நடக்கும் , செய்யும் சுய தொழில் அதன் வழி முன்னேற்றம், நல்ல மதிப்பு மரியாதை , செல்வாக்கு  ஆகியன தந்தையை குறிக்கும் 10 ம் பாவக வழியில் இருந்து நடக்கும் , அப்படியெனில் நமது பெற்றோரை நாம் எவ்வளவு நன்றாக கவனித்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு , நமது வாழ்க்கையில் நல்ல வீடு, வண்டி , வாகனம் , சொத்து சுகம் , சுய தொழில் நல்ல முன்னேற்றம் , வேலை வாய்ப்பில்  நல்ல முன்னேற்றம் என நமக்கு ஜாதக ரீதியாக நன்மையை கொடுக்க ஆரம்பித்து விடும் .

தங்களது சுய ஜாதக அமைப்பில் கோட்சார ரீதியாக 4 ம் பாவகம் மற்றும் 10 ம் பாவகம் ஆகியன பாதிக்கும் பொழுது பெற்றோரை அம்போ என்று விட்டு விட்டு வந்தது மிக பெரிய தப்பு , இதை தாங்கள் நன்கு உணர்ந்து கொண்டு மீண்டும் அவர்களுடன் போய் சேர்ந்து வாழ்வது தங்களின் ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட 4 ம் பாவகம் மற்றும் 10 ம் பாவகம் பலனை நன்கு விருத்தி செய்து கொடுக்கும் , மேலும் அவர்களால் தங்களுக்கு சில சிரமங்கள் நேரலாம் ஆனால் அவற்றை எல்லாம் தங்கள் மனம் உவந்து ஏற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்துங்கள் , சில மாதங்களிலேயே தங்களுக்கு தொழில் ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள் , புதிதாக அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு கட்டும் யோகம் நிச்சயம் கிடைக்கும் , நல்ல வண்டி வாகனம் , சொத்து சுக சேர்க்கை நிச்சயம் ஏற்ப்படும் . இதை மறுத்து தாங்கள் எந்த கோவிலுக்கு சென்று என்ன பரிகாரம் செய்தாலும் தங்களுக்கு ஒன்றும் நல்ல பலன் நடந்து விட போவதில்லை .

பரிகாரம் :

தங்களின் பெற்றோருக்கு தேவையான வற்றை செய்து கொடுங்கள் , அவர்களது ஆசைகளை நிறைவேற்றி வையுங்கள் ( இந்த வயதில் அவர்கள் என்ன கேட்டு விட போகிறார்கள் தங்களது பேரபிள்ளைகள் உடன் கொஞ்சி மகிழ்வதை விட ?   உலகம் அன்பு மயமானது நீங்கள் அதை மற்றவருக்கு கொடுங்கள் அது நிச்சயம் தங்களுக்கு திரும்ப கிடைக்கும் ) அவர்களை இறுதி வரை உங்களது கண்காணிப்பிலேயே வைத்திருங்கள் , இதுவே உடனடி பலன் தரும் பரிகாரம் .

தாயின் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை .

நாம் செய்யும் நன்மை தீமை பொறுத்தே , நமக்கு நல்ல கெட்ட பலன்கள் நடக்கிறது , ஒரு பாவக வழியில் இருந்து நமக்கு அதிக தீமையான பலன்கள் நடை பெற்றால் அந்த பாவக சம்பந்த பட்ட நபரை மனமார  நாம் ஏற்று கொண்டு அவருக்கு  நன்மையை மட்டும் செய்தோம் என்றால் , அந்த பாவக வழி கர்ம வினை பதிவை தீர்த்துக்கொள்ள முடியும் , இதன் மூலம் அந்த பாவகம் விருத்தி பெரும் நமக்கு நன்மையான பலன் நடக்க ஆரம்பிக்கும் , உதாரணமாக ஒருவரது ஜாதக அமைப்பில் மூன்றாம் வீடு பாதிக்க பட்டு இருந்தால் , அவர் தனது மூத்த அண்ணன் அல்லது அக்கா ஆகியோரால் ஏற்ப்பாடு துன்பங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மையை மட்டும் செய்தால் , சிறிது காலத்திற்கு பிறகு அந்த பாவக வழியில் கர்ம வினை பதிவு கழிந்து , நன்மையான பலன்கள் விருத்தி பெரும் .

இதுவே இறை நிலை நமக்கு வழங்கி இருக்கும் வாய்ப்பு, இதை நாம் உணர்ந்தால் நமது வாழ்க்கையில் வரும் செழிப்பு.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
jothidadeepam@gmail.com