களத்திரதோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
களத்திரதோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 அக்டோபர், 2018

ரஜ்ஜு பொருத்தம் மற்றும் திசா சந்திப்பும் - திருமண பொருத்தம் காண்பதில் பாவக வலிமை அடிப்படையிலான அணுகுமுறை !



  இன்றைய தலைமுறையினர் திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிவுக்கு வருவதற்கும், இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி நிற்பதற்கும், கணவன் மனைவி ஒற்றுமை இன்மைக்கும், கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்து நிற்பதற்கும் அடிப்படை காரணம் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களின் வலிமை அற்ற தன்மையே காரணமாக அமைகின்றது, திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது சுய ஜாதக வலிமைக்கு முக்கியத்துவம் தாராமல், நட்ச்சத்திர பொருத்தம் மற்றும் தோஷ நிர்ணயம் எனும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதும், அதன் அடிப்படையில் திருமண பந்தத்தில் இணைவதே மேற்கண்ட இன்னல்களுக்கு அதி முக்கிய காரணமாக அமைகிறது, திருமண பொருத்தம் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் எப்படி பார்ப்பது, இதனால் வரன் வது இருவருக்கும் கிடைக்கும் நன்மைகள் என்ன ? என்பதை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வரன் ஜாதகம் :


வது ஜாதகம் :



இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில்  முக்கிய பங்கு வகிப்பது  சுய ஜாதகத்தில் 2,5,7,812ம் வீடுகள் என்றால் அது மிகையில்லை, குறிப்பாக வது, வரன் ஜாதகத்தில் 2,5,7ம் வீடுகள் வலிமை பெறுவது திருமண வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வழங்கும், தம்பதியரின் வாழ்க்கையில் சுபயோகங்களையும், மனக்கசப்பற்ற தாம்பத்யத்தையும் தரும், மேற்கண்ட வரன், வது ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமையை பற்றியும், அவை பெரும் தொடர்புகள் பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு இவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்தால் ஏற்படும் நன்மை தீமை யோக அவயோக நிகழ்வுகள் பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே !

வரனின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமை நிலை :

ஜாதகருக்கு 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு அளவற்ற செல்வ வளம், இனிமையான வாக்கு வன்மை, யோகம் மிக்க குடும்ப வாழ்க்கை, குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்லும் தன்மை, ஒற்றுமையுடன் சேர்ந்து வாழும் தன்மை, நிறைவான வருமான வாய்ப்புகள், நல்ல உணவு, பேச்சு திறன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், குழந்தைகளுடன் அன்பு பாசம், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற வகையில் சிறப்பான நன்மைகளை தரும்.

5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நிறைவான கல்வி அறிவு, கலைகளில் தேர்ச்சி, சமயோசித அறிவு திறன், எதையும் எதிர்கொள்ளும் துணிவு, வாத திறமை, புத்திசாலித்தனம் மூலம் இன்னல்களை வெற்றிகொள்ளும் தன்மை, தன்னிறைவான செல்வ வளம், நல்ல குழந்தைகள், குடும்பத்தில் மகிழ்ச்சி, விளையாட்டில் ஆர்வம், காதலில் வெற்றி, காதல் திருமணம் மூலம் யோக வாழ்க்கை, தர்ம சிந்தனை, கற்ற கல்வி வழியில் இருந்து வரும் தனசேர்க்கை, குல தெய்வ ஆசிர்வாதம், மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும் தன்மை, குழந்தைகள் மூலம் யோகம், நல்ல ஆண் வாரிசு என்ற வகையில் சிறப்புகளை தரும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையை பெற்று தரும், சக்தி வாய்ந்த கூட்டாளி, நல்ல நண்பர்கள், வெளிநாடு யோகம், கூட்டு முயற்சி மூலம் வாழ்க்கையில் நலம் பெரும் தன்மை, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, திருமணதிற்கு பிறகான யோக வாழ்க்கை, தன்னிறைவான பொருளாதர முன்னேற்றம், வியாபர துறையில் மிக பெரிய முன்னேற்றம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும், இல்லற வாழ்க்கை இனிதே அமையும், தெய்வீக அனுகிரகம் மூலம் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

8,12ம் வீடுகள் உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஆயுள் பாவக வழியில் இருந்து தீர்க்காயுள், தொல்லையில்லா யோக வாழ்க்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் அன்பு மற்றும் ஆதரவு, குறிக்கோள்கள் மிக எளிதாக நிறைவேறும் தன்மை, மருத்துவ உபகரணம் அல்லது ஆயுள் காப்பீடு போனஸ் இன்சூரன்ஸ் மூலம் மிகுந்த லாபத்தை தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஏற்படும் நஷ்டமே மிகுந்த லாபத்தை தரும், மற்றவர்களின் பணம் தன்னிடம் கையிருப்பாக இருக்கும், சிக்கனநடவடிக்கை மூலம் செல்வசேர்க்கை உண்டாகும், சிறு முதலீடுகள் கூட மிகுந்த லாபத்தை தரும், விரோதிகள் மறைவர், நல்ல சொத்து சுக சேர்க்கை உண்டு என்பதுடன், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

ஜாதகருக்கு நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 21/06/2018 முதல் 21/06/2038 வரை )

நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக தொடர்பை பெற்று தனது திசையில் யோகமிக்க குடும்ப வாழ்க்கையை வழங்குவது வரவேற்கத்தக்கது, இதனால் ஜாதகர் நல்ல இல்லறவாழ்கை, மகிழ்ச்சியான குடும்பம், தன்னிறைவான வருமானம், செல்வச்செழிப்பு, பொருளாதார முன்னேற்றம், எதிர்ப்புகளை வெற்றிகொண்டு யோக வாழ்கையை பெரும் தன்மை, நம்பிக்கை மிக்க எதிர்காலம் என்ற வகையில் ஜாதகருக்கு சுக்கிரன் திசை அளவற்ற செல்வத்துடன் சுகபோக யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை வாழ்த்துகள்.

வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமை நிலை :

2,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு வருமானம் சார்ந்த இன்னல்களை தரக்கூடும், இருப்பினும் இல்லற  வாழ்க்கையை சிறப்பாக அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், வாக்கு சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் ஜாதகிக்கு தேவை, 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முடிவுகளை மிகவும் ஆழ்ந்து யோசித்து எடுப்பது வீண் பண விரயத்தை தவிர்க்க உதவும், மேலும் பொறுமை காப்பதும், பெரியோர் ஆலோசனையை பெறுவதும் ஜாதகிக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், குறிப்பாக பணத்தை முதலீடு செய்யுமுன் ஆழ்ந்து யோசித்து செய்வதே சகல நன்மைகளையும் தரும்.

5,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு அதிர்ஷ்ட லட்சுமியின் அருள் பார்வை எப்பொழுதும் பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், குறிப்பாக ஜாதகிக்கு பிறக்கும் குழந்தைகள் வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டம் உண்டாகும், நிறைந்த நல்லறிவும், சமயோசித புத்திசாலித்தனமும் ஜாதகியின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், எதிர்ப்புகளை தனது அறிவு திறன் கொண்டு வெல்லும் வல்லமையை தரும், குல தெய்வத்தின் ஆசியின் மூலம் ஜாதகிக்கு சகல நன்மைகளும் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது, 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கணவர் வழியில் இருந்தும், நண்பர்கள், கூட்டாளிகள், வெளியூர் அல்லது வெளிநாடுகள் வழியில் இருந்து சகல யோகமும் உண்டாகும் நன்மைகள் மேலோங்கும், கூட்டு முயற்சி பலிதம் பெரும் வாழ்க்கை துணை வழியிலான நன்மைகளை ஜாதகியும், ஜாதகியால் வழக்கை துணையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும், இல்லற வாழ்க்கை ஜாதகிக்கு விரும்பியது போல் அமையும் என்பது கவனிக்கத்தக்கது.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நீண்ட ஆயுளை தரும், இருப்பினும் சிறு சிறு மருத்துவ செலவினங்களை தரக்கூடும், உடல் நலனில் அதீத அக்கறை கொள்வது ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை தரும், முதலீடுகளில் அதீத கவனமும் தேவை, மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது வெகுவான இன்னல்களை தரக்கூடும்.

ஜாதகிக்கு நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 01/07/2014 முதல் 01/07/2034 வரை )

ஜாதகிக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 3,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 3,7ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, சுக்கிரன் திசையில் ஜாதகி எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி பெரும், நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், விளையாட்டில் ஆர்வம் பரிசுகள், தெய்வீக அனுபவம், கமிஷன் வியாபாரம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் வெற்றி என்ற வகையில் சிறப்பான யோக வாழ்க்கையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல  யோகமிக்க வாழ்க்கை துணை, வெளிநாடுகளில் யோக வாழ்க்கை, கூட்டு முயற்சியில் வெற்றி, அரசு கவுரவம், வாழ்க்கை துணைக்கு அதிர்ஷ்டம், பிரபல யோகம், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி, வியாபர விருத்தி மற்றும் அதன் வழியிலான யோக வாழ்க்கை என்ற அமைப்பில் சுபயோகங்களை  வாரி வழங்கும்.

திசா சந்திப்பு :

வரனுக்கும் வதுவுக்கும் ஏக காலத்தில் சுக்கிரன் திசை நடைமுறையில் இருப்பதால் திசா சந்திப்பு அல்லது ஏக திசை நடப்பு தோஷம் என்று கூறக்கூடும், வரன் வது இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை 2ம் பாவக வழியில் இருந்தும் 3,7ம் பாவக வழியில் இருந்தும் சுபயோகங்களை வாரி வழங்குவதால் இல்லற வாழ்க்கை மிகவும் யோகமிக்கதாகவே அமையும் என்பதை உறுதியாக கூறலாம், மேலும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று அறிவுறுத்த கூடும், வரன் வது ஜாதகத்தில் பாவக வலிமை மிதமிஞ்சி நிற்பதால் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்பதால் யாதொரு இன்னல்களும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொண்டு திருமணம் சிறப்பாக செய்யலாம் என்பது " ஜோதிடதீபம் " வழங்கும் அறிவுரை, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 14 ஜூன், 2018

" களத்திர தோஷமும் " " சனி திசை நடப்பும் " திருமண தடைக்கு காரணமா? திருமணம் கைகூடி வருமா ?


கேள்வி :

 திருமணத்திற்க்கான முயற்சிகள் யாவும் இதுவரை பெரும் பின்னடைவையே தந்து இருக்கின்றது, கடந்த இருபது வருடங்களாக திருமணம் கைகூடி வரவில்லை, சுய ஜாதகத்தில் களத்திர தோஷம் என்கின்றனர், சனி திசை திருமண தடையை தருகிறது என்கின்றனர், உண்மை நிலை என்ன ? திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடி வருவதற்க்கு பரிகாரம் உண்டா ? எனது ஜாதகத்தில் உள்ள குறைகள் மற்றும் தோஷம் பற்றி விளக்கம் தர வேண்டுகின்றேன்.

பதில் :

ஒருவருக்கு திருமணம் தாமதமாக அடிப்படை காரணம் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் ( 2,5,7,8,12ம் ) வீடுகள் வலிமை அற்று காணப்படுவதும், பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்துவதும் காரணமாக அமையும், குறிப்பாக சுய ஜாதகத்தில் பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு இல்லற வாழ்க்கை அமைவதில் யாதொரு தடைகளும் தாமதமும் ஏற்படுவதில்லை, சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள், திருமணத்தை நடத்தி வைக்கும் பருவ வயதில் நடைமுறைக்கு வரும் பொழுதே மேற்கண்ட தங்களின் கேள்விக்கு உரித்தான விதத்தில், அதிக அளவிலான தடைகளும், திருமணத்தில் வெகு தாமதத்தையும் தருகின்றது, தங்களின் ஜாதகத்தில் உள்ள நிலையை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : மிதுனம்
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவாதிரை 2ம் பதம்

திருமணம் தாமதமாக காரணம் : 1

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் அடிப்படை வீடுகளான 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது முழு முதற்காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் எந்த ஓர் வீடும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, மேற்கண்ட தங்களின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு தனுசு ராசியில் அமைவதும் தங்களுக்கு, பித்ரு தோஷ வழியில் திருமணம் அமையாமல் வெகு தாமதங்களை வழங்கிய கொண்டு இருக்கின்றது, 2ம் பாவகம் தங்களுக்கு மிதுனத்திலேயே ஆரம்பித்த போதிலும் அதிக  அளவில் கடக ராசியிலே வியாபித்து நிற்பது குடும்ப வாழ்க்கையில் இன்பத்தை தராமல் தடை செய்கிறது, மேலும் இல்லற வாழ்க்கையில் ஜாதகர் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தருகின்றது.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் கூட்டு முயற்சி வழியிலான இன்னல்களை வெகுவாக தருகின்றது, திருமணம் வெகு தாமதமாக சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் 200% விகித பாதிப்பை பெறுவதும், அது சார்ந்த இன்னல்களை ஏக காலத்தில் அனுபவிப்பதும் காரணமாக அமைகிறது, குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவக வழியில் 200% விகித இன்னல்களை சந்திப்பதால் தங்களின் திருமண வாழ்விற்க்கான முயற்சிகள் யாவும் கடும் தோல்வியை சந்திக்கிறது, இதற்கான தீர்வை பதிவின் இறுதியில் காண்போம்.

திருமணம் தாமதமாக காரணம் : 2

 தங்களுக்கு 19/04/2002 முதல் 19/04/2021 வரை நடைபெறுகின்ற சனி மஹா திசையானது தங்களுக்கு 3,9,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 3,9,12ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்ற போதிலும், 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2,7ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தருவது தங்களுக்கு சனி மகா திசையில் சிறப்புகளை தரும் அம்சமல்ல, மேலும் 2ம் பாவக வழியில் இருந்து போதிய வருமானம் இன்மை, வாக்கு வழியிலான இன்னல்கள், குடும்பத்தில் சிரமம், தனம் சார்ந்த சிக்கல்கள், பொருளாதார முன்னேற்ற தடைகள், வரும் வருமானம் வீண் விரையமாகுதல் என்ற வகையில் சிரமங்களை தரும், 7ம் பாவாக வழியில் இருந்து திருமண தடை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியிலான தொந்தரவுகள், வியாபாரம் கடுமையாக பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை, எதிர்ப்புகள் அனைத்து இடங்களில் இருந்தும் வரும், சட்ட சிக்கல்கள், பொது வாழ்க்கை பாதிப்பு, எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து வரும் தொல்லைகள் என்ற வகையில் மிகுந்த சிரமங்களை தரும், சனி மகா திசை லாப ஸ்தான வழியில் அதிர்ஷ்டத்தை வழங்கிய போதிலும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்கள் தங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

சனி மஹா திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தியும் தங்களுக்கு கடுமையான திடீர் இழப்புகளை ஆயுள் பாவக வழியில் இருந்து வாரி வழங்கி கொண்டு இருப்பது சிறப்பானது அல்ல, இது மேலும் மேலும் கடுமையான இன்னல்களையே தரும், ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைவது தொழில் ரீதியான திடீர் இழப்புகளை குறிக்கிறது என்பதால் ராகு புத்தியில் தொழில் ரீதியாக மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய தருணமாகும்.

சனி மகா திசையில் எதிர்வரும் குரு புத்தி தங்களுக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5,11ம் பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சனி திசை குரு புத்தி காலத்தில் தங்களின் திருமண முயற்சி நல்ல வெற்றியை தரும், சிறந்த புத்திர பாக்கியம் அமையும், இவையெல்லாம் மிகுந்த அதிர்ஷ்டத்துடன் அமையும் என்பது கவனிக்கத்தக்கது, குரு புத்தி காலத்தை தாங்கள் பயனுள்ள வகையில் அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

1) திருவக்கரை சென்று புதனுக்கு வக்கிரக நிவர்த்தியும், சர்ப்ப சாந்தி பரிகாரமும் செய்து யோக வாழ்க்கையை பெறுவது ஜாதகருக்கு சிறப்புகளை தரும்.
2) திருவெண்காடு சென்று முக்குண நீராடுவது களத்திர தோஷ நிவர்த்தியை தரும், திருமண வாழ்க்கையிலான தடைகளை தகர்க்கும்.
3) திருப்பதி வருடம் ஒரு முறை சென்று வருவதும், ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் நீராடுவதும் தங்களின் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

எதிர் வரும் புதன் திசை தங்களுக்கு ஜீவன ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும் என்பது வரவேற்கத்தக்கது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

சுய ஜாதக பலாபலன்கள் : சுப, அவயோக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள் !



சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் அல்லது அவயோகங்கள் இருப்பது முக்கியமல்ல, நடைபெறும் திசா புத்தி, எதிர்வரும் திசா புத்தி சுபயோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், அதுபோன்றே பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களையும், துன்பங்களையும் நடைபெறும் திசா புத்தி அல்லது எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே அவயோக பலாபலன்கள்  நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 கீழ்கண்ட ஜாதகருக்கு, 1,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பாபந்தம் பெறுவதும், 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் அவயோக அமைப்பாகும், 2,5,8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுபயோகங்களை நல்கும் அமைப்பாகும், தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து உடல் நல குறைவை தந்த போதிலும், 9 பாவக வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூரணமாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், எதிர் வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோகங்களை தருவது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் அமைப்பாகும்.


லக்கினம் : தனுசு
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பாபந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து அருங்கலைகளில் ஆர்வத்தை தரும், யோகம் பக்தி போன்ற விஷயங்களில் தேர்ச்சியை தரும், தனிமை விருப்பம், தொலைதூர பயணங்களில் அதீத ஆர்வம், முதலீடுகளில் அதிக விருப்பம் என்றவகையில் நன்மைகளை தந்த போதிலும், அனைவராலும் தொல்லை மற்றும் துன்பத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மறைமுக எதிரிகள் தொந்தரவு, தடங்கல், அடிக்கடி வைத்திய செலவு, ஏமாற்றம், துன்பம், சதி வேலைகளால் இன்னலுறும் தன்மையை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், நல்லவர்களை காண்பது ஜாதகருக்கு அரிதிலும் அரிதாக அமையும், தேவையற்ற குழப்பமும் நிம்மதியின்மையும், ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் துன்பங்களை தரும், வீண் கற்பனை ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்து வரும் சுபயோகங்களை சுவீகரிக்க இயலாத நிலையை தரும், தன்னம்பிக்கையையும், சுய கட்டுப்பாட்டையும் ஜாதகர் அதிகம் வளர்த்துக்கொள்வது நல்லது, எந்த ஓர் காரியத்தையும் பலமுறை ஆலோசனை செய்து முடிவெடுப்பதே சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இழப்பது கடுமையான பின்னடைவுகளை ஜாதகருக்கு  தரும் என்பதால் முறையான பரிகாரங்களை மேற்கொண்டு சகல நலன்களையும் பெறுக.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைய விரைய செலவுகளை தரும், சேமிப்பு எதிர்பாராத விஷயங்களால் வீணடிக்கப்படும், தாம்பத்திய வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், நல்ல உறக்கம் அமைவது கேள்விக்குறியே, மனநிம்மதி இழப்பு, மனஅழுத்தம், மனப்போராட்டம் என சகல நிலைகளில் இருந்தும் பெருத்த துன்பத்தை தரும், மனஒருமைப்பாடு ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடும், தெளிவில்லாத மனநிலை மற்றும் சிந்தனை ஆகியவை ஜாதகருக்கு பெருத்த சேதாரங்களை வழங்கக்கூடும், பங்கு சந்தை, சூது மூலம் நஷ்டத்தை தரும், அனைவராலும் தொல்லை மற்றும் எதிர்பாராத விபத்தை ஏற்படுத்தும், விடாமுயற்சியுடன் போராடி வாழ்க்கையில் வெற்றி பெரும் சூழ்நிலையை தரும்.

2,5,8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக  வழியில் இருந்து எழுத்து பேச்சு, கலைத்துறை போன்ற அமைப்புகளில் சிறப்பான முன்னேற்றத்தை தரும், எண்ணத்தின் வலிமை அதிகமாகும், கைநிறைவான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், நிலையான வருமான வாய்ப்பு ஜாதகருக்கு தேடி வரும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சகல சம்பத்தும் பெறுவதற்கான யோகம் உண்டு,  விளம்பர துறை, இலக்கியம், எஜென்ஜி, கமிஷன், தரகு தொழில், எதிர்பாராத லாபம், இனிமையான பேச்சு திறன் மூலம் பெரும் வியாபார விருத்தி என சகல சௌபாக்கியங்களையும் நல்கும்.

5ம் பாவக வழியில் இருந்து எஜென்ஜி விளையாட்டு உபகரணம், இசைக்கருவிகள்,  தைரிய செயல்பாடுகள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை, இறுதி நேரத்தில் பிரச்சனைகளில் இருந்து விடுபடுதல், மந்திர உபதேசம் பெறுதல், வாக்கு வன்மை குல தெய்வ ஆசிர்வாதம், தெய்வீக அனுக்கிரகம், நினைத்தைதை சாதிக்கும் யோகம், பெரும் செல்வாக்கு, தீர்வுகளை அறியும் யோகம், பொதுவாழ்க்கையில் பெயரும் புகழும் உண்டாகும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து லாட்டரியில் அதிர்ஷ்டம், சுலப வழி வருமானம், இன்சூரன்ஸ் போனஸ் போன்றவற்றில் நல்ல லாபம், திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார தன்னிறைவு, திடீர் பதவி மற்றும் அந்தஸ்து தேடி வரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து பயணங்களில் விருப்பம், எழுத்து மற்றும் புத்தம் எழுதும் ஆற்றல், மாற்றத்தை முன்னெடுக்கும் வல்லமை, வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்கு, கமிஷன், எஜென்ஜி மூலம் அபரிவித லாபம், மனோதைரியம், தன்னம்பிக்கை ஓங்கும் குணாதிசயம், எதையும் அதிர்ஷ்டம் மூலம் பெரும் ஆற்றல், பொது வாழ்க்கையில் வெற்றி என்றவகையில் சிறப்புகளை தரும், வியாபாரத்தில் மிகுந்த லாபத்தை தரும்.

3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மருந்துகள் மூலம் மிகுந்த லாபத்தை தரும், அரிய கலைகளில் ஜீவித மேன்மையையும், விட்டுக்கொடுக்கும் தன்மையால் மிகுந்த லாபத்தையும் ஜாதகர் பெறுவார், அயல் தேசம் மற்றும் அயலார் மூலம் சிறந்த நன்மைகள் தேடி வரும், புதிய கண்டுபிடிப்பு, சட்டம் மூலம் நன்மை, தர்ம சிந்தனை, நேர்மையான வழியில் முன்னேற்றங்களை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மண் மனை வண்டி வாகன யோகம், சொந்த ஊரில் ஜீவிக்கும் தன்மை, கல்வி மற்றும் நிர்வாக துறையில் சிறந்து விளங்கும் தன்மை, வடக்கு வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜீவனம் செய்யும் பொழுது சிறப்பான முன்னேற்றங்களை பெரும் யோகத்தை நல்கும்.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு தேர்வு போட்டி பந்தயங்களில் வெற்றி, உடல் நல பாதிப்பு தொடர் சிகிச்சை மேற்கொள்ளும் சூழ்நிலை, வியாதியை எதிர்க்கும் தன்மை அற்ற நிலை, சிறந்த வேலை வாய்ப்பு மூலம் முன்னேற்றம் பெரும் யோகம், பிறரால் கடுமையான தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை, முன்னேற்றம் என்பது எதிரிகளால் வெகுவாக பாதிக்கப்படும் தன்மை, உடல் மனம் சார்ந்த சிக்கல்களில் சிரமப்படும் நிலை என பாதிப்புகளை தரும்.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை வாழ்க்கை துணை வழியில் இருந்து வாரி வழங்கும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் எதிர்பாராத இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும் வெளிவட்டார பழக்க வழக்கம் கடுமையாக பாதிக்கப்படும், வாழ்க்கை துணைக்கு கடுமையான இன்னல்களை உருவாக்கும், திருமண வாழ்க்கையில் கடுமையான பாதிப்பு மற்றும் இல்லற வாழ்க்கையில் துன்பங்களை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் எதிர்பாலினத்தல் வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், சுய ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகத்தில் களத்திர ஸ்தானமே முதலிடம் பெறுகிறது என்பதால், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் மிக கவனமுடன் எதிர்கொள்வதே சால சிறந்தது மேலும் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது, இல்லை எனில் இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்பு உள்ளது.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த அறிவு திறனை வாரி வழக்கும், எதையும் தனது அறிவு திறன் கொண்டு வெற்றிகொள்ளும் வாய்ப்பை தரும், முன்னேர்களின் ஆசிர்வாதம் சிறந்த வாழ்க்கை பாதையை அமைத்து தரும், தெய்வீக தரிசனம், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்ககையில் பல மாற்றங்களை வாரி வழங்கும், யோகம் மற்றும் தெய்வீகம் ஜாதகருக்கு சிறந்த நன்மையை வாரி வழங்கும்.

10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு செய்யும் தொழில் அல்லது வேளையில் மிகுந்த லாபத்தை தரும், குறுகிய காலத்தில் தொழில் வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமை உண்டு, பல தொழில் செய்யும் யோகத்தை நல்கும், எதிர்பாராத அதிர்ஷ்டம் மூலம் கை நிறைவான வருமான வாய்ப்புகளை ஜாதகர் பெறுவார், பெற்றோர் வழியிலான நன்மைகளை ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், சுய உழைப்பில் வாழ்க்கையில் பெருத்த நன்மைகளை அனுபவிக்கும் தன்மையை தரும், கவுரவம் குறையாத தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும்.

நடைபெறும் குரு திசை ராகு புத்தி தரும் பலாபலன்கள் : ( 02/05/2017 முதல் 26/09/2019 வரை )

நடைபெறும் குரு திசை ராகு புத்தி ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், சுபயோக பலன்களை தருவதால் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை வெகுவாக அனுபவிக்கும் தன்மையை தரும், எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும், முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சுபயோகங்கள் ஜாதகருக்கு தேடி வரும், வெகுநாள் பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும்.

எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் : ( 26/09/2019 முதல் 05/09/2038 வரை )

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது ஜாதகர் எதிர்பாராத தொழில் வெற்றிகளை அனுபவிக்கும் யோகத்தை தரும், சுய சிந்தனை மற்றும் சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய தொழில் வெற்றிகளை பெறுவார், ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியில் அமைவது ஜாதகரின் வியாபார விருத்தி 100% விகிதம் மிகவும் சிறப்பான முன்னேற்றங்களை பெரும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் சனி திசை ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை லாப ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் லாபங்களை அதிர்ஷ்டங்களை முழுவீச்சில் சனிதிசையில் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்த்துக்கள்.

குறிப்பு :

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் இருப்பினும் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வலிமையான பாவக பலனை ஏற்று நடத்துவதால், ஜாதகர் சுபயோக பலன்களையே அனுபவிப்பார் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவாக பலன்கள் என்ன என்பதில் தெளிவு பெறுவதே சகல நிலைகளில் இருந்து சிறப்புகளை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 26 நவம்பர், 2017

திருமண தடை மற்றும் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தரும் நவகிரக திசாபுத்திகள் !



 சுய ஜாதகத்தில் சிறப்பான யோகங்கள் இருப்பினும், நடைபெறும் திசாபுத்தி அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் யோகங்களை தரும் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் இருந்தும் பயனற்ற நிலையையே தரும், குறிப்பாக ஜாதகர் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் க்கு அலைந்த நிலையை தந்துவிடும், கீழ்கண்ட ஜாதகருக்கு வயது 41 கடந்தும் திருமணம் எனும் பந்தத்தில் இணையாத சூழ்நிலையை தந்து, ஜாதகரையும் ஜாதகரின் பெற்றோரையும் மிகுந்த மனவேதனைக்கு ஆளாக்கிக்கொண்டு இருக்கின்றது, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் 9ம் வீடு என மூன்று வீடுகள் மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, மற்ற 9 வீடுகளும் மிகவும் வலிமையுடன் இருந்தும் ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியிலான யோக பலன்களை சிறிதும் அனுபவிக்க இயலாத சூழ்நிலையில் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றார், சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் வீடுகளில் 12ம் வீடுமட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஒரு வகையில் இன்னல்களை தந்த போதிலும் 2,5,7,8ம் பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை ஏன் ஏற்படுகிறது என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 2ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகருக்கு பெரும்பாலான பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், குறிப்பாக சுய ஜாதகத்தில் 1,2,3,4,5,7,8,10,11 எனும் ஒன்பது பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை மேற்கண்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், 6,9,12ம் எனும் மூன்று பாவகங்கள் மட்டுமே சுய ஜாதகத்தில் வலிமை அற்று காணப்படுகிறது இதில் 6,12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான பாதிப்புகளையும், 9ம் பாவக வழியில் அளவில்லா கடுமையான பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட பாவக வழியிலான நன்மை தீமைகளை ஜாதகர் எந்த காலகட்டத்தில் அனுபவிப்பார் என்பதில் இருக்கிறது ஜாதகரின் முன்னேற்றம் என்பது, ஜெனன காலம் முதல் தற்போழுது  வரை நடைபெற்ற நவகிரக திசை ஜாதகருக்கு தந்த பலாபலன்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ஜெனன கால கேது திசை 4வருடம் 2மாதம் ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை தடையின்றி வாரி வழங்கியது ஜாதகருக்கு வளரும் சூழ்நிலையில் சிறப்பான யோக பலன்களை  வாரி வழங்கியிருக்கின்றது, ஜாதகர்  மாற்றும் ஜாதகரின் பெற்றோர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை பெற்று இருக்கின்றனர்.

சுக்கிரன் திசை 20 வருடம் ஜாதகருக்கு 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் ஜாதகருக்கும் ஜாதகரின் தகப்பனாருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கி இருப்பது சிறப்பான யோக பலன்களை தந்து இருக்கின்றது, ஜாதகரின் அடிப்படை கல்வி, உயர்கல்வி மற்றும் பட்டயபடிப்பு பரிபூர்ண சுபயோகங்களை வழங்கி இருக்கின்றது, கல்வி காலம் சிறப்பாக நிறைவு பெற்ற உடன் ஜாதகருக்கு நல்லதோர் தொழில் வாய்ப்பும் அமைந்து நிறைவான வருமானத்தை பெற ஆரம்பித்தார் என்பது ஜாதகருக்கு சுக்கிரன் திசை வழங்கிய சிறப்பு பலன்களாகும்.

சூரியன் திசை 6 வருடம் ஜாதகருக்கு 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான நன்மைகளை 5ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கியது ஜாதகர் தான் கற்ற கல்வி வழியில் இருந்து ராஜயோக பலன்களை பெற்றார் என்பது ஜாதகருக்கு சூரியன்  திசையால் கிடைத்த அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.

சந்திரன் திசை 10 வருடங்கள் ஜாதகருக்கு 2,4ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான யோக பலன்களை வழங்கியது, ஜாதகருக்கு தொழில் ரீதியான சுபயோகங்களை வழங்க ஆரம்பித்தது, அதன் வழியில் ஜாதகர் பெற்ற தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி ஜாதகரின் வாழ்க்கை பாதையை வெகுவாக சீர்குலைக்க ஆரம்பித்தது, குறிப்பாக சந்திரன் திசையில் செவ்வாய் மற்றும் ராகு புத்திகள் ஜாதகருக்கு தவறான எதிர்பாலின சேர்க்கையையும், தீய பழக்க வழக்கங்களை கொண்ட நண்பர்களின் சேர்க்கை ஜாதகரின் வாழ்க்கையை புரட்டிப்போட ஆரம்பித்தது, செவ்வாய் புத்தியில் ஜாதகருக்கு ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் தவறான பழக்க வழக்கங்கள் ஜாதகரின்  வாழ்க்கையில் திருமணம் எனும் முயற்சிகளில் பிரதிபலித்தது, ஜாதகரின் திருமண முயற்சிகள் அனைத்திற்கும்  வெகுவான தடை தாமதத்தை வழங்க ஆரம்பித்தது தற்போழுது வரை நிறைவடையவில்லை, திருமணத்திற்க்கான பகிர்தன முயற்சிகள் யாவும் ஜாதகருக்கு கடுமையான தோல்வியை மட்டுமே வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 05/05/2016 முதல் 05/05/2023 வரை ) ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் பாதகம் மற்றும் விரைய ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது, ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கான முயற்சிகள் அனைத்திற்கும் நல்லதோர் திண்டுக்கல் பூட்டை பலமாக பூட்டி சாவியை தன்வசம் வைத்துக்கொண்டது என்பதுடன் அடுத்துவரும் ராகு திசையிடம் தன்வசம் உள்ள சாவியை பொறுப்பாக தந்துவிடும் என்பதை நினைக்கும் பொழுது ஜாதகரின் இல்லற வாழ்க்கையை பற்றிய கேள்விக்குறி மிக பெரியதாக நம்முன் நிற்கின்றது.

மேற்கண்ட ஜாதகருக்கு 1,2,3,4,5,7,8,10,11 எனும் ஒன்பது பாவகங்கள் வழியில் இருந்து சுபயோக அமைப்புகள் இருப்பினும், நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல் வலிமையற்ற பாதகம் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு அதிர்ஷ்டம் இருந்தும்  துரதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது, பெரும்பாலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் இருப்பினும், நடைமுறையில், எதிர்காலத்தில் வலிமை பெற்ற பாவக பலனை நவக்கிரக திசாபுத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகரின் பாடு பெரும் தர்மசங்கட நிலைக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், அதற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம்.

ஜாதகருக்கு திருமணம் தாமதமாக காரணம் என்ன ?

1) சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாதக ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாகவும் களத்திர ஸ்தானமாகவும் அமைகிறது, சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டாலும் ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆக அதிக வாய்ப்பு உள்ளது.

2) கடந்த சந்திரன் திசையில், செவ்வாய் புத்தியில் ஜாதகருக்கு ஏற்பட்ட எதிர்பாலின தவறான தொடர்பு ஓர் அவயோக ஜாதகமாகும் ( தரித்திர யோகம் ) இதன் தாக்கத்தை ஜாதகர் தற்போழுது வரை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார் என்பதுடன், செவ்வாய் புத்திக்கு அடுத்து வந்த ராகு புத்தி ஜாதகரின் திருமண முயற்சிக்கான வாய்ப்பை தட்டிப்பறிக்கும் களங்கத்தை ஏற்ப்படுத்தியது.

3) தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசையும் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாதகம் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையை ஜீவனம் மற்றும் களத்திர வழியில் கடுமையான இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, இதுவே ஜாதகரின் திருமண தாமதத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசை எதுவென்றாலும் சரி சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை
எனில் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் பலனேதும் இருக்காது, சுய ஜாதகத்தில் அவயோகங்கள் இருந்தாலும் நடைபெறும் அல்லது எதிர்வரும் திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் ஏற்று நடத்தினால் சுய ஜாதகத்தில் உள்ள அவயோகங்கள் யாவும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வாராமல், ஏற்று நடத்தும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் சுபயோக பலன்களையே அனுபவிப்பார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 21 நவம்பர், 2017

ராகுகேது தோஷம் தரும் பாதிப்புகள் என்ன ? 1ல் அமர்ந்த கேதுவும், 7ல் அமர்ந்த ராகுவும் ஜாதகருக்கு தரும் பலாபலன்கள் என்ன ?


 ராகுகேது எனும் சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் 1,2,5,6,7,8,12 வீடுகளில் ஜெனன ஜாதகத்தில் அமர்ந்து இருப்பது  ராகுகேது தோஷமாகவும், சர்ப்ப தோஷமாகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது, இந்த நிலையை சுய ஜாதகத்தில் பெற்ற அன்பர்கள் சாயாகிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்களால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகும் தன்மையை தரும் என்றும், கல்வி,தொழில்,திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தில் தடைகளையும், தாமதங்களையும் ஏற்படுத்தும் என்றும், இதனால் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகும் என்ற கருத்து ஸ்திரமாக இருக்கின்றது, சுய ஜாதகத்தில் சாயாகிரகங்கள் மேற்கண்ட வீடுகளில் அமர்ந்திருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தோஷத்தை தரும் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்தாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, மேற்கண்ட வீடுகளில் அமர்ந்திருக்கும் ராகு கேது இன்னல்களை மட்டுமே சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவதும் தவறான கருத்தே என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் எந்த ஓர் பாவகத்தில் ராகுகேது அமர்ந்தாலும், தான் அமர்ந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் வல்லமை, சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு நிச்சயம் உண்டு, தான் அமர்ந்த பாவகத்தில் சேர்ந்த மற்ற கிரகங்களின் பலாபலன்களை தானே சுவீகரித்து ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை வழங்கும் வல்லமையும் சாயாகிரகங்களுக்கு பரிபூர்ணமாக உண்டு, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : ஸ்வாதி 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு ஜெனன ஜாதகத்தில் லக்கினத்தில் கேதுவும், ஏழாம் பாவகத்தில் ராகுவும் அமர்ந்து இருப்பதை கருத்தில் கொண்டு ஜாதகருக்கு சர்ப்பதோஷம் என்று முடிவு செய்வது மிகவும் தவறான அணுகுமுறையாகும், ராகு கேது உண்மையில் அமர்ந்த பாவகம் எது ? என்பதில் முதலில் தெளிவு வேண்டும், ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் கும்ப ராசியில் 325:47:55 பாகையில் ஆரம்பித்து, மேஷ ராசியில் 000:32:21 பாகையில் முடிவடைகிறது, கேது அமர்ந்திருப்பது கும்ப ராசியில் உள்ள 316:55:40 பாகையில் என்பதனால் ஜாதகருக்கு கேது கும்ப ராசியில் உள்ள 12ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே சரியானது, அதை போன்றே நேரெதிராக சிம்மத்தில் அமர்ந்திருக்கும் ராகுவும் சிம்மத்தில் உள்ள 6ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே சரியான ஜாதக கணிதமாகும், எனவே மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் மற்றும் 7ல் கேது ராகு அமர்ந்த தோற்றத்தை தந்தாலும் பாவக கணித முறைப்படி 12ம் பாவகம் மற்றும் 6ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதே முற்றிலும் சரியானதாகும்.

பாவங்கள் முறையே 6,12ல் அமர்ந்த சாயா கிரகங்களான ராகுகேது ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்கள் என்ன ? என்பதே அடுத்த கேள்வி சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு முறையே 6,12ல் அமர்ந்த ராகுகேது முழு வலிமை பெற்று சுபத்துவத்தை பெற்று இருப்பதால் ஜாதகர் 6,12ம் பாவக வழியில் இருந்து 100% சதவிகித நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவார் என்பதே மிக சரியான ஜோதிட கணிதமாகும்.

ஜாதகருக்கு 6ல் வலிமை பெற்ற ராகு அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும், எதிரிகள் வழியில் இருந்து நன்மைகளையும், மருத்துவ உபகரணம் மருந்துகள் மூலம் அபரிவிதமான லாபங்களை பெற்று தருவார், ஜாதகரின் உடல் வலிமை மற்றும் மனவலிமை அதிகரிக்கும், சிம்மத்தில் உள்ள 6ல் அமர்ந்த ராகு ஜாதகரின் ஆன்மீக வெற்றியை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து செல்லும், யோக கலையிலும் சாஸ்த்திரம் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கும் தன்மையை தருவது ஜாதகருக்கு கிடைத்த ஆசிர்வாதம் ஆகும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருப்பது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகுவின் சிறப்பு அம்சத்தாலே என்றால் அது மிகையில்லை, ஜாதகரின் வாக்கு வன்மையும், அதிகார வல்லமையும் சிறப்பான நிர்வாக திறமையும் பெருவாரியான வெற்றிகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், 6ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு குறுகிய கால வெற்றி வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கிக்கொண்டு இருப்பதும், ஸ்திர நெருப்பு தத்துவ அமைப்பில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகளும் மிகவும் அபரிவிதமானதாக இருப்பதை ஜாதகர் தனது சிறு வயதில் இருந்தே பரிபூர்ணமாக உணர்ந்துகொண்டு இருக்கின்றார், மேலும் ஜாதகரின் வெற்றிகொள்ளும் திறன் அதிகரித்து இருப்பதற்கும் அடிப்படை காரணமாக அமைவது ஜெனன காலத்தில் 6ம் பாவகத்தில் நின்ற ராகு பகவானே என்றால் அது மிகையில்லை.

ஜாதகருக்கு 12ல் வலிமை பெற்ற கேது பகவான், நல்ல மனநிம்மதியை தனது அறிவார்ந்த செயல்கள் மூலம் பரிபூர்ணமாக பெறுவதை உறுதிப்படுத்துகிறது, அயனசயன ஸ்தானத்தில் அமர்ந்த கேது ஜாதகருக்கு நல்ல ஆன்மீகவாதிகளின் ஆசீர்வாதத்தையும், தெய்வீகம் நிறைந்த பல திருத்தல தரிசனங்களையும் சிறப்பாக வழங்கியுள்ளது, நல்ல உறக்கம் ஜாதகரின் உடல் நலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது, தெளிவான சிந்தனையுடன் ஜாதகர் எடுக்கும் முடிவுகள் பரிபூர்ண வெற்றிகளை வாரி வழங்குகிறது, யோக வாழ்க்கையில் நல்ல ஞானத்தை பெற ஜாதகருக்கு கும்பத்தில் அமர்ந்த கேது வாரி வழங்குகிறார், ஜாதகரின் எண்ணம் மற்றும் லட்சியம் நிறைவேற முழுவீச்சில் உதவி புரிவது ஜாதகத்தில் 12ல் அமர்ந்த கேது பகவானே என்றால் அது மிகையில்லை, ராகுகேது இரண்டு சாயா கிரகங்களும் ஸ்திர ராசியான சிம்மம் மற்றும் கும்ப ராசியில் அமர்ந்திருப்பது, ஸ்திரமான பலாபலன்களை ஜாதகருக்கு வழங்க தவறுவதில்லை, அயன சயன ஸ்தானம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமான 11ம் வீடாக அமைவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தை 12ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், முதலீடுகளில் இருந்து ஜாதகருக்கு வரும் வருமானம் ஜாதகரின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்கிறது, ஜாதகரின் மனநிம்மதி, தெளிவான சிந்தனை, போதும் என்ற மனது திருப்திகரமான யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறது.

மேற்கண்ட ஜாதகரின் வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கு அடிப்படை காரணகர்த்தாவாக விளங்குவதே சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமர்ந்திருக்கும் சாயா கிரகங்களான ராகு கேது பகவானே என்றால் அது மிகையில்லை அன்பர்களே, சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் ராகு கேது அமர்ந்தாலும் தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்யும் நிலையில் ராகுகேது இருப்பின் நிச்சயம் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவார், மாறாக சுய ஜாதகத்தில் வலிமை அற்று அமர்ந்து இருக்கும் ( எந்த பாவகம் என்றாலும் சரி ) ராகு கேது ஜாதகருக்கு அவயோக பலாபலன்களை வாரி வழங்க தவறுவதில்லை என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில்  1,2,5,6,7,8,12 வீடுகளில் ஜெனன ஜாதகத்தில் அமர்ந்து இருப்பது மட்டுமே தோஷத்தை தாராது, லக்கினம் முதல் 12 பாவகத்தில் அமர்ந்து இருக்கும் ராகுகேது தான் அமர்ந்த பாவக வழியில் வலிமை பெற்று இருப்பின் சுபயோக பலாபலன்களையும், வலிமை அற்று இருப்பின் தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து அவயோக பலாபலன்களை தரும் என்பதை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வதே சரியான ஜோதிட கணித முறையாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

காதல் கண்ணை மறைத்தால், வாழ்நாள் முழுவதும் கண்ணீர்தான் மிஞ்சும் !



இன்றைய இளைஞர்களின் அசட்டு துணிச்சலும், தான் திறமையானவன் என்ற எண்ணமும் தனது இளைமை பருவத்திற்கே உண்டான அறியாமையினாலும், வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் மிகப்பெரிய தவறுகளை செய்கின்றனர், குறிப்பாக தனது விருப்படி வழக்கை துணையை தேர்வு செய்துகொள்வது என்பது ( ஆண் பெண் ) பேதம் இன்றி நடைபெறுகிறது, இனகவர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு தனக்கு பொருத்தமற்ற காதல் துணையை தேர்வு செய்து, தனது வாழ்க்கைக்கே தானே தீவிணையை தேடிக்கொள்கின்றனர், தனது வாழ்க்கை துணையாக கிழ்கண்ட ஜாதகியை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், இந்த ஜாதகியை திருமணம் செய்துகொண்டால் தனது வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி இருக்கும் என்று தனது கேள்வியை ஒரு அன்பர் முன்வைத்து இருக்கின்றார், முதலில் பெண்ணின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஜாதகத்தில் உள்ள நிறை குறைகளை சிந்தனைக்கு எடுத்து கொள்வோம்.


லக்கினம் : கடகம்
ராசி : சிம்மம்
நட்சத்திரம் : உத்திரம் 1ம் பாதம் 

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய பெண்களின் ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்கள் ( 1,2,5,7,8,12 ) ஆகும் பெண்களின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தையும், நன்மைகளையும் வாரி வழங்கும், குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமை பெறுவது கணவனுக்கும், குடும்பத்திற்கும் மிகுந்த யோக பலன்களை நல்கும், லக்கினம் வலிமை பெறுவது ஜாதகியின் குணநலன்களையும், உடல் ஆரோக்கியம் மற்றும் ஜாதகியின் செயல்திறனையும் சிறப்பிக்கும், குடும்ப ஸ்தானம் வலிமை பெறுவது, இனிமையான பேச்சு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிறைவான வருமானம், கணவருடன் அன்னியோன்னியம், மற்றும் சந்தோஷத்தை தரும், பூர்வ புண்ணியம் வலிமை பெறுவது ஜாதகியின் அறிவு, சமயோசித புத்திசாலித்தனம், குழந்தை பாக்கியம், சூழ்நிலைகளை சிறப்பாக கையாளும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும், களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது, கணவனுக்கு யோகத்தையும், இணக்கமான நல்லுறவையும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வல்லமையையும் தரும், திருமண பந்தத்தின் புனிதத்தை காக்கும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது ஜாதகியின் மூலம் அவரது கணவர் பெரும் யோகங்களையும், தீர்க்க சுமங்கலி யோகத்தையும், நீண்ட ஆயுள் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் மூலம் சிறப்பான வெற்றிகளையும் வாரி வழங்கும், அயனசயன ஸ்தானம் வலிமை பெறுவது தாம்பத்திய இன்பத்தையும், திருப்தியான யோக வாழ்க்கை, மனநிறைவுடன் கூடிய சந்தோஷத்தை தரும், திருமண பந்தத்தில் பிரிவு இல்லா நிலையை தரும், ஆக வாழ்க்கை துணையாக வரும் பெண்ணின் ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமையை உறுதி செய்து கொண்டு அதன் பிறகு, திருமண பந்தத்தில் இணையும் அன்பர்களுக்கு, திருமண வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி நிச்சயம், இனி மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

1,2,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு லக்கின வழியில் இருந்து அதிக மனஉளைச்சலுக்கும், போராட்டத்திற்கும் ஆளாக்கும், எதிலும் திருப்தி அற்ற நிலை, மனக்கிலேசம், நம்பிக்கை அற்ற தன்மை, உறுதியில்லா மனப்பாண்மையை தரும், குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படுவது, குடும்ப வாழ்க்கையில் திருப்தி இல்லை, வீண் வாக்குவாதம், பொருளாதார நெருக்கடி, நிம்மதியின்மை, எப்பொழுதும் சண்டை சச்சரவு, குடும்ப வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகள் என்ற வகையில் இன்னல்களை தரும். களத்திர ஸ்தானம் வலிமை இழப்பது ஜாதகி தனது கணவர் வழியில் இருந்து கடுமையான மனபோராட்டத்தை சந்திக்கும் சூழ்நிலையை தரும், ஒற்றுமை இன்மை, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்கள், வீண் வெறுப்பு, திருப்தி அற்ற நிலை, அனைத்திலும் குற்றம் காணும் சுபாவம் என ஜாதகியை இல்லற வாழ்க்கையில் இணக்கம் காண்பதற்கு உண்டான வாய்ப்பை தாராது, எனவே ஜாதகியின் இல்லற வாழ்க்கை துன்பத்தின் விளிம்பில் வந்து நிற்கும்.

5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்ல புத்திர சந்தானத்தை தாராது, ஜாதகியின் அறிவு திறனும் மட்டுப்படும், முட்டாள்தனமான செய்கைகள் மூலம் ஜாதகி தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்வார், அனைத்திலும் தோல்வி என்ற நிலையை தரும், குல தேவதையின் ஆசியை பெற ஜாதகி பகிர்தனா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையை தரும், தனக்கு வரும் இன்னல்களை ஜாதகியால் தவிர்க்க இயலாது, புத்திர பாக்கியத்திலும் இன்னல்களை தரும்.

8ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு பரதேச ஜீவனத்தை தரும், தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவிக்கும் தன்மையை தரும், குறிப்பாக இந்த அமைப்பு ஜாதகிக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல, கணவன் வழியில் இருந்து தானும், தனது வழியில் இருந்து கனவரும் கடுமையான இழப்புகளை சந்திக்கும் நிலையை தரும்.

12ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்ப வாழ்க்கையில் வரும் கடுமையான பாதிப்புகளை உறுதிப்படுத்துகிறது, குறிப்பாக தனம் சார்ந்த தொந்தரவுகள் கடுமையான நெருக்கடிகளை தரும், அயனசயன சுகம் என்பது ஜாதகிக்கு பெரும் நெருக்கடிகளை தரும், வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும் தன்மை பெற்றது மேற்கண்ட பாவக தொடர்பு, எனவே ஜாதகியை காதல் திருமண செய்து கொள்ள விரும்பும் அன்பரது நிலை மிகுந்த கவலைக்கிடமாக மாற அதிக வாய்ப்பு உள்ளது, ஒருவேளை ஜாதகியை காதல் திருமணம் செய்துகொள்ள விரும்பும் அன்பரது சுயஜாதகம் மிக மிக வலிமையுடன் இருந்தால் மட்டுமே, இல்லற வாழ்க்கை ஓரளவிற்கு நலம் பெரும்.

குறிப்பு :

திருமணம் செய்வதற்கு முன்பு தம்பதியர் இருவரும், தமது சுய ஜாதக வலிமையை உணர்ந்து இல்லற வாழ்க்கையில் இணைவது, சகலவிதங்களில் இருந்து நன்மைகளை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 2 ஜனவரி, 2017

திருமணம் தாமதம் ஆக காரணம் சர்ப்பதோஷமா ? நல்ல கணவர் கிடைப்பாரா ?


கேள்வி :

 அய்யா எனக்கு தற்போழுது வயது 29 ஆகிறது, திருமணம் தாமதமாக சர்ப்ப தோஷம் என்பதை காரணமாக சொல்கின்றனர், எனது திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன? நல்ல அன்பான, பொருத்தமான கணவர் கிடைப்பாரா? திருமணம் எப்பொழுது நடைபெறும்? 



பதில் :

லக்கினம் : கும்பம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 2ம் பாதம்.

தங்களது சுய ஜாதகத்தில் சாயாகிரகங்கள் எனும் ராகு கேது முறையே 2,8ம் பாவகங்களில் அமர்ந்து சம்பந்தப்பட்ட பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றனர், மேலும் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகமும் கடுமையான பாதிப்பை பெற்று உள்ளது தங்களது ஜாதகத்தில், களத்திர வாழ்க்கை மற்றும் குடும்பம் சார்ந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், இதனால் தங்களுக்கு திருமண தடைகளும், திருமணம் சார்ந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் படுதோல்வியையும் தருகின்றது, ஒருவரது சுய ஜாதகத்தில் குடும்பம் அல்லது களத்திர ஸ்தானம் இரண்டில் ஒன்று பாதிக்கப்படுமாயின் சிறிது காலதாமதத்திற்க்கு பிறகு இல்லற வாழ்க்கை அமையும், இருப்பினும் தாம்பத்திய வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களை தரக்கூடும், குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் இரண்டும் பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உக்காந்ததல்ல, ஏனெனில் திருமண வாழ்க்கை வெகு தாமதமாக, காலம் தாழ்ந்தே நடைபெறும், நடைபெற்றாலும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று சொல்வதற்கு இல்லை.

தங்களின் ஜாதகத்தில் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகுகேது, தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களும், களத்திர ஸ்தானம் வலிமை இன்மை, தடைபட்ட திருமண வாழ்க்கையும் தரும் என்பதே உண்மை, திருமணம் தாமதமாக உண்மையான காரணம் மேற்கண்ட ஜாதகத்தில் 2,7,8ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்படுவதும், சாயா கிரகங்களின் வலிமை இன்மையும் காரணமாக அமைகிறது, மேலும் சுய ஜாதகத்தில் கால புருஷ  தத்துவ அமைப்பிற்கு குடும்பம் மற்றும் களத்திர வீடு என்று அழைக்கப்படும், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகள் தங்களுக்கு முறையே சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானமாக அமைந்து இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, இதனால் தங்களது சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு  2,7 ம் பாவகங்களும் பாதிக்கப்பட்டு, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்பம் மற்றும் களத்திரம் என்று அழைக்கப்படும் ரிஷபம் மற்றும் துலாம் ராசியும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால், தங்களுக்கு திருமணம் ஆக இவ்வளவு தடைகளும், தாமதங்களும் ஏற்படுகிறது.

தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை ( 19/09/2015 முதல் 18/09/2032 வரை ) தங்களுக்கு 1,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளையும் தந்து கொண்டு இருப்பது தெளிவாகிறது, புதன் திசை வலிமை அற்ற 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது தங்களது திருமண வாழ்க்கையில் வரும் தடைகளுக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு உண்டான பாவகங்கள் வலிமை அற்று, நடைபெறும் திசையும் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால், தங்களின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது, தற்போழுது நடைபெறும் புதன் திசை புதன்   புத்தியில் திருமண வாழ்க்கை அமைய சற்று வாய்ப்பு குறைவு, அடுத்து வரும் கேது புத்தியிலும் வாய்ப்பு குறைவு, அதற்க்கு அடுத்து வரும் சுக்கிரன் புத்தியில் 2ம் பாவாக பலன் நடைமுறைக்கு வருவதால், சுக்கிரன் புத்தியில் திருமணம் நடைபெற அதிக வாய்ப்பு உண்டு, தற்போழுது நடைபெறும் புதன் புத்தியில் சனியின் அந்தரத்தில் நடைபெறவும் சிறிது வாய்ப்பு உண்டு, எனவே காலம் அறிந்து செயல்படவும்.

குறிப்பு :

 தங்களது சுய ஜாதகத்தில் பெரும்பாலான  பாவகங்கள் கடுமையான பாதிப்பில் உள்ளதால், தங்களுக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள்  மிக மிக வலிமை உள்ளதாக தேர்வு செய்வது அவசியமாகிறது, சர்ப்ப கிரகங்களின் தாக்குதல்களில் இருந்து விடுபட, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகில் உள்ள தங்கமேடு "தம்பிக்களை அய்யன்" கோவிலுக்கு சென்று சர்ப்ப சாந்தி பரிகாரம் மேற்கொண்டு நலம் பெறுக.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 19 அக்டோபர், 2016

காலசர்ப்ப தோஷம் மற்றும் ராகு கேது தோஷ பரிகாரம் !


சாய கிரகங்களான ராகுகேது ஒருவரது சுய ஜாதகத்தில் பாதிக்கப்படுவது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறு வயது முதல், வாழ்வின் இறுதிவரையிலான காலகட்டம் வரை அதிக அளவில் இன்னல்களை தரும் அமைப்பாகும், குறிப்பாக ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் யோகப்பலன்களையும், அவயோகபலன்களையும் நடைமுறைக்கு கொண்டுவரும் அன்பர்களின் சந்திப்பை நிகழ்த்துவது சாய கிரகங்களான ராகுகேது என்றால் அது மிகையில், சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் வலிமையுடன் இருப்பின் அவருடன்  சேர்க்கை பெரும் நண்பர்கள், கூட்டாளிகள், அறிமுகம் இல்லாத புதிய நபர்கள், வாழ்க்கை துணை, பொதுமக்கள், வேலையாட்கள், வெளியூர் அல்லது வெளிநாடு சார்ந்த அன்பர்கள் அனைவரும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளையும் வாழ்க்கையில் சிறப்பான நல்ல திருப்பத்தையும் வாரி வழங்கும் நபர்களாக திகழ்வார்கள், சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் வலிமை அற்று இருப்பின் மேற்கண்ட பலாபலன்களுக்கு நேர் எதிராக அமைந்துவிடும்.

ஜாதகர் தமது வாழ்க்கையில் சந்திக்கும் அன்பர்கள் அனைவராலும் இன்னல்களையும் துன்பங்களையும் சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், உறவுகளுடனும் சுமூக போக்கை ஜாதகர் கையாள முடியாது, நல்ல நண்பர்கள் ஜாதகருக்கு கிடைப்பது அரிது, ஜாதகருக்கு அறிமுகமாகும் அன்பர்கள் அனைவரின் வழியில் இருந்தும் துன்பங்களையும் இன்னல்களையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவர், இதனால் ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படும், குறிப்பாக ராகு கேது வலிமை அற்று குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்களில் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையில் இல்லற துணை ஜாதகரை வெகுவான பாதிப்புகளுக்கு ஆளாக்கும் சூழ்நிலையை தரும், குடும்ப ஸ்தானம் சாய கிரங்கங்களால் பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை துணை, ஜாதகருக்கு தனது வாக்கு மற்றும் குடும்ப வாழ்க்கையில் இருந்து இன்னல்களை தரகூடும், வருமானம் வெகுவாக பாதிக்கும், களத்திர ஸ்தானம் சாய கிரங்கங்களால் பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை துணை ஜாதகருக்கு பொருத்தமற்று அமைவதால், அவர் வழியில் இருந்து ஜாதகர் வெகுவான இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு ஆளாக்கும், மேலும் களத்திர ஸ்தானம் ஜாதகருடன் சேரும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை குறிப்பதால், நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் அமைவது சிரமம், மேலும் மேற்கண்ட நபர்களால் ஜாதகர் பெரும் இன்னல்களுக்கு ஓர் அளவு என்பதே இருக்காது, ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படும்.

எனவே எந்த ஒரு ஜாதகத்திலும் சாயகிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது வலிமை அற்று இருப்பது ஜாதகருக்கு உகந்தது அல்ல, மேலும் 2,5,7 ம் பாவகங்களின் அமர்ந்து வலிமை அற்று ஜாதகருக்கு இன்னல்கள் தரும் அமைப்பில் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகளை வாரி வழங்கிவிடும், மேலும் அந்த பாதிப்பில் இருந்து ஜாதகர் விடுபடுவது சற்று கடினமான விஷயமாகும், 2,5,7ம் வீடுகள் வழியில் இருந்து ஜாதகர் தனது வாழ்க்கையில் நல்ல வருமானம், குடும்பம், இனிமையான பேச்சு திறன், சேமிப்பு மற்றும் இல்லற வாழ்க்கையில் இன்பம் என்ற அமைப்பிலும், தான் கற்ற கல்வி, கல்வி வழியில் இருந்து ஜாதகர் பெற்ற அறிவு, நல்ல பூர்வீகம், நிறைந்த அறிவு திறன், மற்றவர்களின் உதவி, நல்ல குழந்தைகள், தமக்கு வரும் இன்னல்களில் இருந்து விடுதலை பெரும் யோகம், அனைத்தையும் சாதிக்கும் வல்லமை என்ற அமைப்பிலும், நல்ல நண்பர்கள், பொருத்தமான  வாழ்க்கை துணை, சிறந்த கூட்டாளிகள் என்ற அமைப்பில் யோக பலன்களை வாரி வழங்கும் எனவே மேற்கண்ட பாவகங்கள் மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த யோகங்களை வழங்கும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் இன்னல்களையும், மேற்கண்ட  பாவகங்கள் ராகுகேது எனும் சாயகிரகங்களால் பாதிக்கப்படும் பொழுது கடுமையான பாதிப்புகளையும் இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை ஜாதகருக்கு வழங்கும்.

மேற்கண்ட சாயகிரகங்களின் பாதிப்புகளில் இருந்து விடுபட ஜாதகர் தனது பெற்றோர்களின் பெற்றோர்களுக்கு ( தாய் வழி தாய்தந்தையர், தகப்பன் வழி தாய் தந்தையர் ) தம்மால் இயன்ற உதவிகளை செய்வதே ( வஸ்த்திர தானம், பொருள் தானம், அவர்களின் ஆசிர்வாதம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை ஜாதகரே முன் வந்து ஏற்று கொண்டு செயல்படுதல்) சாலச்சிறந்தது, மேலும் அவர்களுக்கு உண்டான  உணவு,ஆடை,இருப்பிடம் ஆகியவற்றை சிறப்பாக செய்து கொடுப்பது பாதிக்கப்பட்ட சாயாகிரகங்களின் தாக்கத்தில் இருந்து ஜாதகரை மீட்டு எடுக்கும், மேற்கண்ட வாய்ப்பை இழந்தவர்கள், தம்மால் இயன்ற அளவு முதியோர் ஆதரவற்ற  அன்பர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை பிரதிபலன்  பார்க்காமல் செய்யலாம், சாய கிரகங்களின் ஜீவகாந்த அலைகள் அதிக அளவில் வெளிப்படும் திருத்தலங்களான, திரு காலகஸ்த்தி, திருநாகேஷ்வரம், கீழப்பெரும்பள்ளம், தம்பிக்கலை அய்யன் கோவில் போன்ற இடங்களுக்கு சென்று பச்சை கற்ப்பூர அபிஷேகம் செய்து  வழிபடலாம், மேற்கண்ட கோவில் வழிபாடு செய்வதே தனது பாட்டன் பாட்டி, அப்பிச்சி அம்மாயி ஆகியோருடன் ஜாதகர் நெருக்கமான பாசத்தை பகிர்ந்து  கொண்டு, சாய கிரகங்களின் வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து விடுபடவே அன்றி,  பரிகாரம் மட்டுமே ஜாதகருக்கு நன்மையை வழங்கி விடும் என்ற தவறான கருத்தை விதைக்க அல்ல என்பதை அனைவரும் கருத்தில்  கொள்ளவும் அன்பர்களே!

மேலும் சுய ஜாதகத்தில் சாயகிரகங்கள் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான உறவுகளுக்கு உதவிகளை செய்து ஜாதகர், சாய கிரகங்களின் பாதிப்பில் இருந்து விடுபடலாம், உதாரணமாக சாயாகிரகங்கள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை பாதிக்க செய்யும் பொழுது பெற்ற தாய்க்கு சேவைகளை செய்து சுப யோகங்களை பெறலாம், ஜீவன ஸ்தானமான 10ம் பாவத்தை பாதிக்க செய்யும் பொழுது பெற்ற தந்தைக்கு சேவைகளை செய்து சுபயோகங்களை பெறலாம், பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவத்தை பாதிக்க செய்யும் பொழுது தனது குழந்தைகளுக்கும், குல தேவதைக்கும் சேவைகள் செய்து நன்மைகளையும் யோகங்களையும் பெறலாம், ஒருவர் சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் பாதிக்கப்படும் பொழுது, பாதிக்கப்பட்ட பாவக வழியிலான உறவுகள் வழியில் துண்டிப்பையும், தொடர்பு இனிமையையும் தரும், இதை தெளிவாக உணர்ந்து ஜாதகர் மேற்கண்ட கோவில்களுக்கு ஜாதகர் சென்று சர்ப்பசாந்தி பரிகாரம் மேற்கொள்ளும் பொழுது  பாதிக்கப்பட்ட பாவக வழியிலான உறவுகள் தொடர்பையும், அவர்களின் மூலம் நன்மையையும் பெரும் நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் சாய கிரகங்களின் வலிமையை தெளிவாக உணர்ந்து நலம் பெறுவது அவசியமாகிறது.

சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் வலிமையுடன் இருப்பின், தான் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு யோகங்களையும் நன்மைகளையும் வாரி வழங்கும், இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் யாதொரு பரிகாரமும் செய்ய தேவையில்லை, அதாவது சாய கிரகங்கள் 1,2.5,6,7,8,12ம் பாவகங்களில் அமர்ந்து இருப்பினும், அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின் மேற்கண்ட பாவக வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களுமே நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொள்க, சாய கிரகங்கள் 1,2.5,6,7,8,12ம் பாவகங்களில் அமர்ந்து அந்த பாவகத்தை பாதிக்க செய்யும் பொழுதே மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு  இன்னல்களும் அவயோகங்களும் நடைமுறைக்கு வரும், அப்படி பட்ட ஜாதக அமைப்பை பெற்றவர்கள் மட்டுமே மேற்கண்ட பரிகாரங்களை மேற்கொண்டு வாழ்க்கையில் சகல நலன்களும் பெறுக.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

7 ல் ராகு பகவான் களத்திர தோஷத்தை தரும் பொழுது, எதிர்வரும் தனது திசையில் களத்திர பாவக வழியில் இன்னல்களை தருமா?


சுய ஜாதகத்தில் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு வலிமை சேர்க்கும் விதத்தில் ராகு பகவான் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், ராகு பகவான் அமர்ந்த பாவக வழியில் இருந்து யோகங்களையும் நன்மைகளையும் வாரி வழங்கிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை, அதே போல் ராகு பகவான் தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும் அமைப்பில் இருப்பின், ஜாதகர் அவர் தரும் தீய பலாபலன்களில் இருந்து விடுபடுவது சிரமமே, ஒருவரது ஜாதகத்தில் ராகு பகவான் வலிமை பெற்று இருந்தாலோ, வலிமை அற்று இருந்தாலோ தான் தரவேண்டிய பலாபலன்களை நிச்சயம் தரும், ஆனால் அதை தனது தசாபுத்திகளில் தரும் என்று எண்ணுவது முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானது. 

ஒருவருக்கு ராகு திசை நடைபெறும் பொழுது, தான் அமர்ந்த பாவக பலனை தரும் என்பதும், நவ கிரகங்கள் தான் அமர்ந்த பாவக பலனையும், பார்த்த பாவக பலனையுமே தனது திசா புத்திகளில் வழங்கும் என்பதும் முற்றிலும் தவறான கணிப்பே, இதை பற்றி ஓர் பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, தற்பொழுது கேள்விக்கு வருவோம் கிழ்கண்ட ஜாதகருக்கு 7ம் பாவகத்திர்க்கு பாதிப்பை தரும் ராகு, தனது திசையில் 7ம் பாவக வழியில் இருந்து தீமையை தருமா? இதற்கான பதில் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : மீனம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்ராடம் 2ம் பாதம் 

ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான் கடுமையான பாதிப்பை வாரி வழங்குவது உண்மையே, இதனால் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஆரோக்கிய குறைவை பெறுவது உறுதி, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிக இன்னல்களும் பொருள் இழப்பும் உண்டாகும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, பொது வாழ்க்கை மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து இன்னல்களும் துன்பங்களும் எதிர்பாராத நேரத்தில் வரும் என்பது ராகு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதற்கு உண்டான பலாபலன்கள், ஆனால் மேற்கண்ட பலன்களை எதிர்வரும் ராகு திசையில் வழங்கும் என்பது முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானதே ஏனெனில், எதிர்வரும் ராகு திசை பாதிக்கப்பட்ட களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை, எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது.

எனவே ராகு திசை முழுவதும் ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பத்தில் மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை, எதிர்பார்த்த வருமான வாய்ப்புகள் வந்து சேரும் யோகம், வாக்கு வன்மை அதிகரிக்கும், ஜாதகரின் பேச்சிற்கு எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கிடைக்கும், வாக்கின் வழியில் வருமானம் அதிகரிக்கும், கை நிறைவான வருமானமும், அளவற்ற செல்வ சேர்க்கையும் லட்ஷமிகடாட்ஷம் உண்டாகும், ஜாதகரின் 2ம் வீடு சர நெருப்பு ராசியான மேஷத்தில் அமைவதும், ஜாதகருக்கு விரைவான யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகருக்கு களத்திர ஸ்தானத்தை ராகு பகவான் பாதிப்பிற்கு உள்ளாக்கினாலும், தனது திசை மற்றும் புத்திகளில் வலிமை பெற்ற 2ம் பாவக பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், தனது திசாபுத்திகளில் பாதிக்கப்பட்ட பாவக பலனையே வழங்கும் என்பது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகும், மேலும் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் வலிமை பெற்று இருப்பின் தனது திசாபுத்திகளில் யோகங்களையும், நன்மையையும் வாரி வழங்கும் என்பதும் முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதே, நவ கிரகங்கள் தனது திசா புத்திகளில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை கருத்தில் கொண்டு சுய ஜாதகத்திற்கு பலன் காண முற்படுவதே சாலச்சிறந்தது.

மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை நடைமுறைக்கு கொண்டுவரும் திசாபுத்திகள் எது? என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே! 

ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சூரியன் திசாபுத்தி மட்டுமே, எனவே ஜாதகர் சூரியன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில்  களத்திர ஸ்தான வழியிலான இன்னல்களையும் துன்பங்களையும் நிச்சயம் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இந்த காலங்களில்  ஜாதகர் வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள்  வழியில் இருந்து வரும் இன்னல்களை மிக கவனமாக எதிர்கொண்டு நன்மைகளை பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

நவகிரக திசாபுத்திகள் ஒருவரின் சுய ஜாதகத்தில் உள்ள பாவக பலனை ஏற்று நடத்தவே உரிமை பெற்றவை, மேலும் தனிப்பட்ட இயக்கத்தில் நன்மை தீமை பலாபலன்களை வழங்க நவகிரகங்கள் தகுதி அற்றவை என்பதை கருத்தில் கொள்வது நலம், மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெற்று இருப்பது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் திசாபுத்திகள் யாவும் நன்மைகளையே வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை  நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தாமல், பாதிக்கப்பட்ட பாவக பலனை மட்டுமே ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகங்கள் இருந்த  போதிலும் எவ்வித பயனும் இல்லை என்பதை கருத்தில் கொள்வது  அவசியமாகிறது, இதை போன்றே சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை மட்டுமே நவகிரக திசாபுத்திகள் ஏற்று நடத்தினால், பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து யாதொரு துன்பமும் ஜாதகருக்கு நேராது என்பது ஜாதகருக்கு உள்ள சிறப்பு அமசமாகும், இது பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 7 ஜூன், 2016

திருமண வாழ்க்கையில் தடைகளும் தாமதமும் ஏற்ப்பட காரணம் என்ன ?

 

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெரும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, தமது பாவக நிலைகளில் இருந்து தமது வலிமைக்கேற்ப நன்மைகளை வாரி வழங்கும், மாறாக சில பாவகங்கள் பாதிக்கப்படும் பொழுதோ, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை இழக்கும் பொழுதோ ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிக்கும் நிலைக்கு ஆளாக்கபடுகிறார், ஜாதகர் பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து விடுபட பரிகாரங்களையும், வழிமுறைகளையும் நாடவேண்டி உள்ளது, 40 வருடங்கள் கடந்தும் திருமண வாழ்க்கை அமையாமல், பல போராட்டங்களை சந்தித்து கொண்டு இருக்கும் ஓர் ஜாதகத்தை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! சம்பந்தப்பட்ட ஜாதகத்தின் பாவக வலிமை, ஜெனனம் முதல் நவகிரக திசா புத்திகள் ஜாதகருக்கு ஏற்று நடத்திய பலாபலன்கள் பற்றியும் சிந்திப்போம்.


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி 4ம் பாதம் 

இது ஒரு பெண்ணின் ஜாதகம், ஜாதகிக்கு தற்பொழுது அகவை 41, இதுவரை  திருமணம் செய்வதற்காக எடுத்த முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியையே சந்தித்தது, இதற்க்கு முன் ஜாதகிக்கு தேடிவந்த நல்ல வரன் வாய்ப்புகளை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் குறைகூறி தவிர்த்தனர், இவ்வளவு நெடுங்காலம் திருமண தாமதத்திற்கு காரணம் என்ன? என்பதை ஜாதக  ரீதியாக ஆய்வு செய்வோம், இந்த ஜாதகத்தில் பாவக வலிமை பற்றி சிந்திப்போம் .

வலிமை மிக்க பாவக தொடர்புகள் :

1ம் வீடு ஜாதகிக்கு தனது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மிக சிறப்பான அமைப்பு லக்கினம் மிகவும் வலிமை பெறுகின்றது.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு ஒரு நல்ல ஸ்திரமான வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது.

வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்ப அமைப்பில் இருந்தும், வருமானம்  மற்றும் வாக்கு அமைப்பில் இருந்தும் இன்னல்களை வழங்கும், 4ம் பாவக வழியில் இருந்து வீடு சொத்து சுகம் மற்றும் தனது தந்தை வழியில் இருந்து யோகம் அற்ற தன்மையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து எதிர்பால் அமைப்பினர், களத்திர வாழ்க்கையில் இன்னல்கள், கூட்டாளிகள் மூலம் துன்பங்கள், வெளிவட்டார பழக்க  வழக்கங்களில் திருப்தியற்ற சூழ்நிலையை உருவாக்கும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்பு, வீண் மருத்துவ செலவுகள், பொருளாதார நெருக்கடிகள், மற்றவர்களால் இன்னல்களுக்கு ஆளாகும் தன்மை என மிகுந்த சிரமங்களை தந்த போதிலும், பூர்ண ஆயுளை தரும்.

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையும், வீரியமற்ற தன்மையையும், சகோதர வழியில் இருந்து ஆதரவற்ற தன்மையையும், லட்சியமற்ற பொறுப்பற்ற வாழ்க்கையையும் தரும், 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் நல குறைவையும், வீண் செலவினங்களையும் தரும், 9ம் பாவக வழியில் இருந்து சுய அறிவுத்திறன் அற்ற நிலையையும், அறிவார்ந்த செயல்திறன் இல்லாத நிலையையும், முன்னோர்கள் ஆசியும், கடவுள் அனுகிரகம் அற்ற நிலையையும்  தரும், 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை, மனநிம்மதி அற்ற சூழ்நிலைகள், இல்லறவாழ்க்கை சுகமற்ற தன்மை, நல்ல உறக்கம் இன்மை, அதிக மனபோராட்டங்கள், வீண் மன பயம், பிற்போக்குத்தனமான செய்கைகள் மூலம் தமது சுய வாழ்க்கையை தாமே பாதிக்க செய்துகொள்ளும் தன்மை என மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கும்.

5,11ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ ஆசி அற்ற தன்மையும், சமயோசித புத்திசாலித்தனம் இல்லாத நிலையையும், மற்றவர்களின் உதவியை பெற இயலாத தன்மையையும் தரும், எடுக்கும் செயல்கள் யாவும் ஜாதகிக்கு முழு பலன்களை தாராமல் தடைகளையும், இன்னல்களையும் வாரி வழங்கும், யாருடைய உதவியும் இல்லாமல் ஜாதகி மட்டும் தனிமையில் போராடும் சூழ்நிலையை உருவாக்கும், பூர்வீகத்தில் குடியிருப்பது என்பது ஜாதகிக்கு அனைத்து வித தடைகளையும் வாரி வழங்கும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமற்ற தன்மையையும், ஒவ்வொரு விஷயத்திற்கும் அதிக போராட்டங்களை சந்திக்கும் தன்மையை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்து போகும், மூடநம்பிக்கையும் பிற்போக்கு தனமான எண்ணங்களும் ஜாதகியை வெகுவாக பாதித்து, செயல்பட முடியாமல் முடக்கி வைக்கும், நன்மைகள் இருந்த போதிலும் அதை நாடாமல், தீமையை நோக்கியே ஜாதகியை பயணிக்க வைக்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்கினம் மற்றும் ஜீவன ஸ்தானத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 6,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகி 100% விகித இன்னல்களையும், 8ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகி 50% விகித இன்னல்களையும், சந்திக்கவேண்டியுள்ளது, மேலும் 6,8,12ம் பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் அனைத்தும், தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை ஜாதகிக்கு தங்கு தடையின்றி தருகின்றது.

திருமண தாமதத்திற்கு காரணம் என்ன ?

சுய ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும், வலிமை பெறுவது ஒரு ஜாதகருக்கு தடையில்லாத, திருமண வாழ்க்கையை அமைத்து தரும், மேற்கண்ட ஜாதகிக்கு, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிக்க பெற்று இருப்பதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் ராசி கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதும், ஜாதகியின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது, மேலும் திருமண பருவ வயதில் சுக்கிரன் திசை ஜாதகிக்கு விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்தியதும், அதன் பிறகு வந்த சூரியன் திசை ஜாதகிக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியதும், ஜாதகியின் திருமண வாழ்க்கை எனும் எண்ணத்திற்கு தடைகளை வாரி வழங்கியது, அதற்க்கு பிறகு நடைபெற்ற சந்திரன் திசை ஜாதகிக்கு இலக்கின பாவக தொடர்பை பெற்று ஜாதகிக்கு நல்ல வேலையை மட்டுமே வழங்கியது, திருமண வாழ்க்கைக்கு தடையாக ஜாதகியின் பெற்றோர்கள் காரணமாக அமைந்தனர், குறிப்பாக ஜாதகியின் தாந்தையார் ( தந்தையை  குறிக்கும் 4ம் வீடு ஜாதகிக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் ) தலையீட்டின் காரணமாக ஜாதகிக்கு சந்திரன் திசையில் அமையவிருந்த நல்ல திருமண வாழ்க்கை நடைபெறாமல் பாதியில் நின்றுபோனது.

தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசையும் ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வருத்தத்திற்கு உரியதாகவே கருத வேண்டியுள்ளது, மேலும் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசையில் மற்ற புத்திகளும் ஜாதகிக்கு சாதகமாக இல்லை என்பதால், திருமண வாழ்க்கையில் தொடர்ந்து தடைகளை வழங்கும் என்பதுமட்டும் தெளிவாகிறது, எனவே ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் தனது கருத்துகளை சுய பரிசீலனைகள் செய்துகொள்வது, ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு உள்ள சிரமங்கள் மாற, ஜாதகிக்கு அமையவிருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,12ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கும் வரன் அமைந்தால் மட்டுமே ஜாதகியின் இல்லற வாழ்க்கை இனிக்கும், இதற்க்கு  வாய்ப்பு மிகவும் குறைவு, ஜாதகியின் சுய ஜாதக வலிமை இதற்க்கு வழிகாட்ட வாய்ப்பில்லை, இறையருள் கருணை செய்யட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

ராகுகேது எனும் சாயா கிரகங்கள் தரும் ராஜயோகங்கள் !


 நவகிரகங்களில் சாயா கிரகங்கள் என்று போற்றபடும் " ராகு கேது " ஒருவரின் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தனது அமைப்பில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்குவதில் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை, அதே போன்று பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையில் தனது அமைப்பில் இருந்து இன்னல்களை வாரி வழங்குவதில் எவ்வித குறையும் வைப்பதில்லை, சுய ஜாதகத்தில் சாயாகிரகங்கள் என்று அலைக்கபெரும் ராகு கேது, லக்கினம் மற்றும் களத்திர பாவகங்களில் அமர்ந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சர்ப்ப தோஷத்தை தரும் என்ற தவறான கருத்தும் உள்ளது, சுய ஜாதகத்தில் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானங்களில் அமர்ந்தாலும், லக்கினத்திற்கும் களத்திர பாவகத்திர்க்கும் நன்மையை தருகின்ற அமைப்பில் உள்ளனரா? தீமையை தரும் அமைப்பில் உள்ளனரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

இயற்கையில் சாயா கிரகங்களான ராகு கேதுவிற்கு மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனி சிறப்பு இயல்புகள் அதிகம் உண்டு, அவையாவன :

1) தான் அமர்ந்த இடத்தின் பலனை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை, 

2) தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் சக்தியை தாமே வீகரித்துகொண்டு அவர்கள் தரும் பலாபலனையும் தமது பலனாக தானே ஏற்று நடத்தும் வல்லமை. 

3) தான் அமர்ந்த பாவகங்களை பார்வை செய்யும் கிரகங்களின் சக்தியை தானே சுவீகரித்துகொண்டு அவர்கள் தரும் பலாபலனையும் தமது பலனாக தானே ஏற்று நடத்தும் வல்லமை.

4) தன்னுடன் சேர்ந்த, பார்த்த கிரகங்களின் வலிமையை முழுவதும் தமது கட்டுப்பாட்டில் எடுத்துகொள்ளும் வல்லமை.

5) தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு நன்மை தரும் அமைப்பை பெற்றால் 100% சதவிகித நன்மைகளையும், தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு தீமை தரும் அமைப்பை பெற்றால் 100%  சதவிகித தீமையையும், தங்குதடையின்றி ஜாதகருக்கு வழங்கும் வல்லமை.

6) தாம் தரும் நன்மை தீமை பலாபலன்களை எந்த ஒரு கிரகத்தின் பார்வையும், சேர்க்கையும் குறுக்கீடு செய்ய இயலாத வல்லமையும், சாயா கிரகங்களான ராகு கேதுவிற்கு உண்டான சிறப்பு இயல்புகள் ஆகும்.

 சுய ஜாதகங்களில் ராகு கேது (1,7) (2,8) (5,11) (6,12)  பாவகங்களில் அமர்ந்தால் ஜாதகருக்கு ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம், புத்திர தோஷம் என்று முடிவு செய்வது ஜோதிட சாஸ்திர உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஏனெனில் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு சாயா கிரகங்கள் நன்மையை தருகின்றனரா ? தீமையை தருகின்றனரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, பெரும்பாலும் சுய ஜாதகங்களில் ஒருவருக்கு 1,3,11ம் பாவகங்களில் அமரும் ராகு அல்லது கேது 100% விகித நன்மையே தருகின்றனர் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 லக்கினத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு சிறப்பான வளரும் சூழ்நிலை, நல்ல உடல் நிலை, சிறந்த மன நிலை, புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு திறன், மிதமிஞ்சிய உடல் மற்றும் மனோ சக்தி, எந்த சூழ்நிலையையும் சிறப்பாக கையாளும் வல்லமை, நினைத்ததை சாதிக்கும் யோகம், மற்றவர்களை தமது ஆளுமைக்கு கீழ் கொண்டுவரும் சிறப்பு தகுதி, அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டு அனைத்தையும் சாதிக்கும் யோகம், அபார சக்திகளை கையாளும் வல்லமை, புதிய சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள், உலகத்தை தன்பக்கம் கவர்ந்து இழுக்கும் சக்தி, குறுகிய காலத்தில் பிரபலம் அடையும் வழிமுறைகள், எதிர்பாலின கவர்ச்சி, தமது லட்சியங்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடாமல் வெற்றியை பெரும் யோகம், பின்னல் வருவதை முன்னால் உணரும் சக்தி, முக்காலங்களையும் உணர்ந்து  செயல்படும் யோகம், மற்றவர்களின் மன ஓட்டம், இயக்கங்களை தெளிவாக உணரும் தன்மை, சாஸ்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, தமது எண்ணங்களை மற்றவர்கள் மீது பிரகாசிக்க செய்யும் வல்லமை, கர்ம  வினை பதிவில் இருந்து தாமும் மீண்டு, மற்றவர்களையும் மீட்டு எடுக்கும் யோகம், சிறந்த ஞானத்தை அனைவருக்கும் பாரபட்சம் இன்றி போதிக்கும் வல்லமை என லக்கினத்தில் அமரும் ராகு அல்லது கேது ஜாதகருக்கு 100% விகித யோகங்கலையே வாரி வழங்கும்.

வீரிய ஸ்தானத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும்  வெற்றிகளை வாரி குவிக்கும், சிறந்த விளையாட்டு வீரர்கள், வியாபாரிகள், வெகு ஜன அபிமானிகள், திரை நட்சத்திரங்கள், மக்கள் செல்வாக்குள்ள அரசியல்வாதிகள், சிறந்த நிர்வாகிகள், மற்றும் வியப்பில் ஆழ்த்தும் வெற்றியாளர்கள் சுய ஜாதகங்களில் 3ம் பாவக ராகு கேதுவின் பங்களிப்பு மிக அபரிவிதமானதாக அமைந்திருக்கும், திடீர் செல்வவளம், திடீர் பதவி உயர்வு, அரசு அங்கீகாரம், திடீர் ராஜ உபச்சாரம் என ஜாதகரை திக்குமுக்காட வைப்பதில் அதிக பங்குவகிப்பது 3ம் பாவக சாயா கிரகங்களின் பங்களிப்பே என்றால் அது மிகையில்லை, வீரியமிக்க செயல்திறன்களையும் தனிப்பட்ட தகுதி மற்றும் சிறப்பு மிக்க மாற்றங்களை  வழங்கும் யோகம் பெற்றவர்களாக திகழ செய்வதில் சாயாகிரகங்களின் பங்களிப்பு வியப்பை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

லாப ஸ்தானத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவதில்  எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை, திடீர் அதிர்ஷ்டசாலிகள், நல்ல குணம், நினைத்ததை அடையும் வல்லமை, திறன்மிக்க செயல்பாடுகள், தன்னம்பிக்கை முற்போக்கு சிந்தனை மூலம் யோக வாழ்க்கையை  தங்குதடையின்றி அனுபவிக்கும் தன்மையை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு நிறைவேற்றி வைப்பதில் சாயாகிரகங்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்பதே உண்மை, லாப ஸ்தானத்தில் சாயா கிரகங்களின் செயல்பாடுகள் மிகவும் அபரிவிதமாக இருக்கும், ஜாதகரின் மன எண்ணங்களையும், திட்டமிடுதல்களையும் எவ்வித தடையும் இல்லாமல் நிறைவேற்றி வைக்கும், தனது முன்னோர்கள் மற்றும் பெற்றோரின் லட்சியங்கள் அனைத்தையும் ஜாதகரே பரிபூரணமாக அனுபவிப்பார் என்பதில் மாற்று கருத்து இல்லை, இவர்களின் பொருளாதார வளர்ச்சி என்பது மற்றவர்களுக்கு புரியாத புதிராகவே இறுதிவரை இருக்கும், ஜாதகரின் முன்னேற்றம் குறுகிய கால வெற்றிகளாக அமைந்திருக்கும், அனைத்து  விஷயங்களிலும் லாபங்களை பெறுவதில் லாப ஸ்தான சாயாகிரகங்களின் பங்களிப்பு என்பது ஜாதகருக்கு தொடர்ந்து கொடுத்தவண்ணம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமரும் சாயகிரகங்கள் ஒரு ஜாதகத்தில் தனது பங்களிப்பையும் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு வழங்கும் பலாபலன்களையும்  பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

 
லக்கினம் : கடகம் 
நட்சத்திரம் : பூராடம் 4ம் பாதம் 
ராசி : தனுசு 

ஜாதகிக்கு லக்கினத்தில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்துள்ளனர், தாம் அமர்ந்த பாவகங்கள் முறையே நன்மையான பலனை 100% வீதம் வலிமை பெற்று வழங்குகின்றனர், லக்கினத்தில் அமர்ந்த கேது ஜாதகிக்கு கல்வி கேள்விகளில் நல்ல ஞானத்தை வாரி வழங்குகிறார் என்பதால் ஜாதகி பட்டைய படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறார், வளரும்  சூழ்நிலையும் ஜாதகிக்கு மிக சிறப்பாக அமைந்திருக்கின்றது, நல்ல உடல் ஆரோக்கியம், பரந்த விசாலமான மனம், அனைவருக்கும் நன்மையை நினைக்கும் நல்ல குணம், சுகபோகமான யோக வாழ்க்கை ( கடகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானம் என்பதால் ஜாதகிக்கு அடிப்படையில் இருந்தே சுகபோகங்களுக்கு குறைவில்லை ) மேலும் லக்கினத்தில் அமர்ந்த குரு பகவானின் வலிமையையும் கேது பகவானே ஏற்று நடத்துவதால் ஜாதகிக்கு கற்ற கல்வியில் நல்ல ஞானத்தையும், சிறப்பு மிக்க தேர்ச்சியையும், சிறந்த நிர்வாக திறமையும் ஒருங்கே அமையபெற்று இருப்பது கவனிக்க தக்கது, ஜாதகிக்கு சிறு வயது முதலே கேட்பது கிடைத்தது, நினைத்தது நடந்தது, இதற்க்கு காரணமாக சுய ஜாதகத்தில் லக்கினத்தில் கேதுபகவான் மிகவும் வலிமையாக அமர்ந்தது, என்றால் அது  மிகையில்லை .

களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்தது களத்திர ஸ்தானம் வலிமை பெற்றது, ஜாதகியின் நண்பர்கள் வட்டாரத்தை  மிகசிறப்பாக அமைத்து தந்தது, பிரியமான நேசமிக்க நல்ல நண்பர்கள் மற்றும்  தோழிகள் ஜாதகிக்கு அமைந்தனர், சிறந்த புகழ் மிக்க மேல்நாட்டு நிறுவனத்தில்  கை நிறைவான வருமானத்தில் நல்ல வேலை கிடைத்தது,  ( ஜாதகியின் களத்திர பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைந்ததும், களத்திர ஸ்தானம் 100% விகிதம் வலிமை பெற்றதும், வெளிநாட்டு நிறுவனத்தில் நல்ல வேலை வாய்ப்பை நல்கியது ) பதவி உயர்வும் குறுகிய காலத்தில் அமைந்தது, உடன் பணிபுரியும் அன்பர்களுடன் நல்ல இணக்கத்தையும், சிறந்த நிர்வாக திறமையையும் வாரி வழங்கியது, பணிநிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகள் சென்றுவரும் யோகத்தை வாரி வழங்கியது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறாத காரணத்தால் ஜாதகி அடிமை தொழில் செய்யும் சூழ்நிலையை தந்தது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறாத நிலையில் சம்பந்தப்பட்ட ஜாதகர் அடிமை தொழிலை மேற்கொள்வதே சால சிறந்தது, இந்த ஜாதகிக்கு ஜீவன ஸ்தானம் வலிமை இழந்த போதிலும், ராகுவின் தயவாலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தான வலிமையின் தயவாலும் நல்ல தொழில் அமைந்து, அதில் ராஜ யோகங்களை அனுபவிக்கும் நிலையை தந்துகொண்டு இருக்கின்றது, என்பதை காணும் பொழுது சுய ஜாதகத்தில் சாயகிரகங்களின் வலிமை  பற்றியும், அதனால் ஜாதகர் பெரும் யோகங்கள் பற்றியும் நாம் தெளிவு பெற இயலும்.

இருப்பினும் ஜாதகிக்கு 26 வயது கடந்த போதிலும் திருமணம் நடைபெறவில்லை, இதற்க்கு காரணமாக சுய ஜாதகத்தில் லக்கினத்தில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்ததே காரணம் என்றும், ஜாதகிக்கு களத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளது என்றும் மற்ற ஜோதிடர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர், இதன் உண்மை தன்மை பற்றியும் நாம் இந்த பதிவில் ஆய்வு செய்வோம் அன்பர்களே! 

ஜாதகிக்கு லக்கினத்தில் அமர்ந்த கேதுவும் நன்மையை செய்கின்றார், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுவும் நன்மையை செய்கின்றார், பிறகு ஏன் திருமணம் தாமதமாகிறது ? மற்றவர்கள் சொல்வது போல் ஜாதகிக்கு சர்ப்ப தோஷம் உண்டோ என்ற சந்தேகம் வருவது இயற்கையானதே, இதற்க்கு சரியான விளக்கம் தர "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, ஒருவருக்கு எவ்வித தடையும் இல்லாமல் திருமணம் நடைபெற வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும், இந்த ஜாதகிக்கு  களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ராகு பகவானால் 100% சதவிகிதம் வலிமை பெற்று அமைந்த போதிலும், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம், விரைய ஸ்தான தொடர்பை பெற்று மிகவும் வலிமை இழக்கின்றது, எனவே இந்த ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் 2ம் பாவகம் கடுமையாக பாதிக்க படுவதே அன்றி, சாயா கிரகங்களான ராகு கேது அல்ல என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

மேற்கண்ட ஜாதகத்தில் திருமண தாமதத்திற்கு 2ம் பாவக வலிமை அற்ற நிலையே 100% விகிதம் காரணமாக அமைகிறது, லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த சாயா கிரகங்கள் அல்ல என்பதும், ஜாதகிக்கு சர்ப்ப தோஷம் இல்லை என்பதனையும் இந்த பதிவில் "ஜோதிடதீபம்" மிக துல்லியமாக தெளிவுபடுத்துகிறது, மேலும் ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசையும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான யோகங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது, ராகு தசை ராகு புத்தியிலே ஜாதகிக்கு நல்ல வாழ்க்கை  துணை நிச்சயம் அமையும், அதற்க்கு களத்திர ஸ்தானத்தில் வலிமை பெற்ற ராகு பகவான் காரணமாக அமைவார் என்பது மறுக்க இயலாத உண்மை, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நல்ல சிறப்பான வாழ்க்கை துணையை அமைத்து தரும், இந்த ஜாதகிக்கு 2ம் பாவக வலிமை அற்ற நிலை திருமணத்தை தாமதம் செய்த போதிலும் ( 27 வயதுக்கு மேல் ) 7ம் பாவக வலிமை சிறப்பான வாழ்க்கை துணையை நிச்சயம் அமைத்து தரும்.

குறிப்பு : 

சுய ஜாதகத்தில் ராகு கேது (1,7) (2,8) (5,11) (6,12)  பாவகங்களில் அமர்ந்தால் ஜாதகருக்கு ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம், புத்திர தோஷம் என்று தவறாக முடிவு செய்வதை விட்டுவிட்டு, திருமண தாமதம் மற்றும் தடைகளுக்கு உண்மையான காரணம் என்னவென்பதை சம்பந்தப்பட்ட ஜாதகத்தில் பாவக வழியில் ஆய்வு செய்து, சரியான தீர்வை காண்பதே ஜோதிடர்களை தேடிவரும் அன்பர்களுக்கு நன்மைபயப்பதாக அமையும், உண்மைக்கு புறம்பான பாலாபலன்களை ஜாதகர்களுக்கு சொல்லும்பொழுது, இதனால் உண்டான வினைபதிவு ஜோதிடர்களையே நிச்சயம் சென்றடையும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696