செவ்வாய் தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய் தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜூன், 2024

கூட்டுதிசை - திசாசந்தி ராகுதிசை இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறுவது திருமண வாழ்க்கையை பாதிக்குமா?

 

 கூட்டுதிசை அல்லது திசாசந்தி (மணமகன் மணமகள்) இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறுவது திருமண பொருத்தம் அற்ற நிலையையோ அல்லது இல்லற வாழ்க்கையில் பாதிப்பையோ தருமா ?

 கூட்டுதிசையோ அல்லது திசாசந்தியோ மணமகன் மணமகள் ஜாதகத்தில் இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறும் பொழுது இருவருக்கும் நடைபெரும் தசா அல்லது எதிர்வரும் தசைகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் திருமண வாழ்க்கை அல்லது இல்லற வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிப்பை தாராது, மாறாக வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மிகுந்த பாதிப்பை தரும், தசாசந்தி அல்லது ஏகதசை நடைபெறாத சூழ்நிலையிலும் வரன் வதுவுக்கு நடைபெறும் தசா புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது திருமண வாழ்க்கையில் இன்னல்களையும், இல்லற வாழ்க்கையில் கடுமையான பாதிப்பையும் தரக்கூடும் என்பது உண்மை நிலை, எனவே தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்திலும் நாம் கவனிக்க வேண்டியது சுய ஜாதக வலிமையோ அன்றி, ஏகதிசை, கூட்டுதிசை, திசாசந்தி, செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், களத்திரதோஷம், மாங்கல்யதோஷம் போன்ற சுய ஜாதக வலிமைக்கு புறம்பான விஷயங்கள் அல்ல என்பதை அன்பர்கள் உணருவது அவசியம், இதை ஓர் உதாரண ஜாதகங்கள் கொண்டு உண்மையையும் தெளிவையும் பெறுவோம் அன்பர்களே !

மணமகள் ஜாதகம் : 
 

லக்கினம் : ரிஷபம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 4ம் பாதம் 

 ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் மிக வலிமையாக இருப்பதுடன் தற்போழுது நடைபெறும் செவ்வாய் தசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான அமைப்பாகும், ஜாதகிக்கு செவ்வாய் தசை தான் கற்ற கல்வி வழியில் இருந்தும், குலதெய்வ ஆசிகள் வழியில் இருந்து  மிகப்பெரிய அளவிலான யோக வாழ்வை நல்கும் என்பது கவனிக்க தக்கது மேலும் எதிர்வரும் ராகு தசையும் வலிமை பெற்ற 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகிக்கு தொடர்ந்து சுபயோகங்களை 5,11ம் பாவக வழியில் வாரி வழங்கும், அதன் பின் வரும் குருமகா தசையும் 2,6,8ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக வழியில் சுபயோகங்களை வாரி வழங்குவது இல்லற வாழ்க்கையில் தன்னிறைவான யோக வாழ்வையே நல்கும் அமைப்பாகும், அடுத்து மணமகன் ஜாதக நிலையை கருத்தில் கொள்வோம்.

மணமகன் ஜாதகம் :


லக்கினம் : மகரம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : உத்ராடம் 1ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் மிக வலிமையாக இருப்பதுடன், ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் மிக மிக வலிமையாக இருப்பது கவனிக்க தக்க விஷயம், இது ஜாதகருக்கான சுபயோக வாழ்வை உறுதி படுத்தும் அம்சமாகும், தற்போழுது ஜாதகருக்கு நடைபெறும் ராகு தசை 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக வாழ்வை நல்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகர் வாழ்வில் சுயமாக வெற்றி பெறுபவராகவும், ஆரோக்க்கியம் கல்வி தொழில் போன்ற அமைப்புகளில் சுய ஆளுமைத்திறன் நிறைந்தவராகவும் காணப்படுவார், மேலும் எதிர்வரும் குரு மகா தசையும் 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்வை தொடர்ந்து நல்குவதுடன், அதன் பின் வரும் சனி மகாதசை 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளையும். 2,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனையும் ஏற்று நடத்துவது மிகுந்த சுபயோகங்களை இல்லற வாழ்க்கையில் நல்கும், எனவே மணமகள் மற்றும் மணமகன் இருவரது சுய ஜாதகமும் மிக மிக  வலிமையுடன் இருப்பதுடன், நடைபெறும் எதிர்வரும் தசை புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது வெற்றிகரமான இல்லற வாழ்வை வழங்கும் யோக அமைப்பாகும் என்பதை தெளிவாக பதிவு செய்கிறோம்.

இப்படி பட்ட யோக ஜாதக அமைப்பை தசாசந்தி கூட்டுதசை ஏகதசை நடப்பு என்று உண்மைக்கு புறம்பான விஷயங்களை பதிவு செய்வது சுயஜாதக வலிமை நிலையை கருத்தில் கொள்ளாமல்  கூறப்படும் தவறான கருத்துக்கள் என்பதை பொதுமக்கள் உணர்ந்து விழிப்புணர்வு பெறுவது அவசியமாகும்.

 சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படும் திருமணபொருத்தம் இல்லற வாழ்க்கையில்  சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பதே உண்மை நிலை அன்பர்களே "வாழ்த்துக்கள்"

ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

செவ்வாய், 12 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மகர லக்கினம் ( 2019-2020 )




 மகர லக்கின அன்பர்களுக்கு சத்ரு மற்றும் அயன சயன பாவக வழியில் இருந்து யோக அவயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : மகரம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும், சர மண் தத்துவ ராசியாகவும் விளங்கும் மகர ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்திலும், விரைய ஸ்தானமான  12ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் சத்ரு ஸ்தானத்தில் அமைவது மகர லக்கின அன்பர்களுக்கு தேர்வு, போட்டி பந்தயம், வழக்குகளில் வெற்றியை தரும், உடல் நலனில் நல்ல ஆரோக்கியத்தையும், ஜாதகர் மேற்கொள்ளும் சுய முயற்சியில் வெற்றியையும் தரும், இது புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் மகர லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், குறிப்பாக ஜாதகரின் அறிவு திறன் மேலோங்கும், சத்ரு வழியில் இருந்து நன்மை உண்டாகும், கடன் பெறுவதால் முன்னேற்றம் ஏற்படும், கேட்ட இடத்தில் இருந்து தன உதவிகள் கிடைக்க பெறுவீர்கள், சரியான  தகவல் தங்களுக்கு  கிடைக்க பெற்று ஆதாயம் அதிக அளவில் கிடைக்கும், வியாபர துறையில் உள்ள அன்பர்களுக்கும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும், திடீர் வருமானம் குறுகிய காலங்களில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் உள்ளோருக்கு இனிவரும் காலம் நல்ல எதிர்காலத்தை தரும் என்பதுடன் பதவி உயர்வு நல்ல வெற்றி வாய்ப்புகள் உண்டாகும், துணிந்து செய்யும் காரியங்களில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், மருத்துவம் சார்ந்த தொழில் வழியில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்ல மாற்றங்களை வாரி வழங்குவதுடன் கைநிறைவான வருமானமும் சிறப்பாக கிடைக்க பெறுவீர்கள், சத்ரு ஸ்தான வழியில் எதிர்ப்புகளை வென்று நலம் பெரும் நேரமிது.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் மகர லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், எதிர் பாரத செலவுகள், வீண் விரையம், பொருளாதார சிக்கல்கள், எதிரிகள் தொந்தரவு, கடன் தொந்தரவு, மறைமுக எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள், நோய் பாதிப்பு, திடீர் மருத்துவ செலவினம், தாங்க இயலாத உடல் தொந்தரவுகள், வயிறு சார்ந்த இன்னல்கள், நரம்பு பாதிப்பு, தவறான புரிதல்கள் மூலம் வாழ்க்கையில் அடையும் நஷ்டங்கள், முன்னேற்ற தடை, தெளிவில்லாத நடவடிக்கைகள், சிந்தனை திறன் பாதிப்பு, உறவுகள் வழியில் இணக்கமற்ற சூழ்நிலை, அதீத உடல் பாதிப்பு, அறுவை சிகிக்சை, போராட்ட வாழ்க்கை முறை, எதிர்பாராத பொருள்இழப்பு , ஜாமீன் தருவதால் வரும் பாதிப்பு என சற்று சிரமங்களை அதிக அளவிலேயே தரக்கூடும்.

விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் மகர லக்கின அன்பர்களின் வாழ்க்கையில் அதீத மனப்போராட்டத்தையும், மனஅழுத்தத்தையும் வாரி வழங்கும், பெரியவர்கள், ஆன்மீக பெரியோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து சரியான விஷ்யங்களை மட்டுமே கிரகித்து நலம் பெற வேண்டிய நேரமிது, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு வீண் அவப்பெயர் உருவாக அதிக வாய்ப்பு உண்டு என்பதால் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது நலம் தரும், தெய்வீகத்தில் அதிக ஈடுபாடு மற்றும் பித்ரு வழிபாடு இரண்டும் தங்களுக்கான இன்னல்களை வெகுவாக குறைக்கும், மனதில் ஏற்படும் வீண் கற்பனைகளும், பயமும் தங்களின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும், போதிய தெளிவில்லாமல் தாங்களே பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும், மனதில் உள்ள ஆசைகள் யாவும் நிறைவேறாமல் வெறும் கற்பனையாகவே மாறிவிட அதிக வாய்ப்பு உண்டு, எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வீண் அவமானங்களும் துன்பங்களும் உருவாக வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு நலம் பெறுங்கள்.

வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காண முயற்சி செய்வது அவசியமானதாக  படுகிறது, சரியான புரிதலுடன் மனம்விட்டு பேசுவதே தங்களுக்கு நல்லது, நேர்மையில் சிறந்து விளங்கும் மகர லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் நேர்மைக்கு பல சவால்களை தரும் என்ற போதும், ஸ்திரமாக நின்று வெற்றி பெறுங்கள், வீட்டில் உள்ள பெரியோர்களை மதித்து நடந்து, அவர்கள் ஆசியுடன் வரும் இன்னல்களில் இருந்து விடுபடுங்கள் அன்பர்களே, மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டு கடமையில் இருந்து தவறாமல் கவுரவத்தை காப்பாற்ற வேண்டிய நேரமிது, கல்வித்துறையில் உள்ள அன்பர்களுக்கு சற்று சோதனைகளை அதிக அளவிலேயே தரக்கூடும், வீண் அவப்பெயரை தவிர்க்க கூட்டாளிகள் நண்பர்கள் போன்றோரை சரியாக தேர்வு செய்யவும், மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பதே தங்களுக்கான கவுரவத்தை காப்பாற்றும் அன்பர்களே.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

சுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் ( திருமணம்,தொழில்,குழந்தைபாக்கியம் )


சுய ஜாதக ஆலோசணை


லக்கினம் : சிம்மம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 3ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், எடுக்கும் முடிவுகள் ஸ்திர தன்மையுடன் உறுதியாக அமையும் அமைப்பு, உடல் நலம், மனநலம் சிறப்பாக அமையும் தன்மை, எதிர்பாராத நன்மைகள் அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக பெரும் தன்மை, நம்பிக்கை லட்சியம் போன்றவை மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை, எதையும் சிறப்பாக செய்து வெற்றிகொள்ளும் யோகம், சுய முன்னேற்றம் பெறுவதில் ஆர்வம், முற்போக்கு கருத்துக்களை ஆமோதித்தல், புதிய சிந்தனை மற்றும் புதிய வாய்ப்புகளை சுவீகரிக்கும் வல்லமை, சுய ஆளுமை திறனுடன் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலத்தை பெரும் யோகம்,  சுய முயற்சியில் சகல சௌபாக்கியங்களையும் ஜாதகி தேடி பெரும் யோகம் உண்டாகும்.

5ம் பாவக வழியில் இருந்து கலைத்துறையில் பிரகாசமான எதிர்காலத்தை தருவதுடன், கலைகளில் தேர்ச்சியை தரும், நாடகம், திரைத்துறையில் புகழ் உண்டாகும், குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கை ஜாதகிக்கு பரிபூர்ணமாக உண்டாகும், விளையாட்டில் ஆர்வம், வாழ்க்கையில் உயர்ந்த நிலை, புத்திசாலித்தனம் மிக்க செயல்பாடுகள், அதீத கலைஆர்வம், இசையில் ஈடுபாடு என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், சுய அறிவு திறன் ஜாதகிக்கு பன்மடங்கு தொழில் விருத்தியையும், சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகியின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், கற்ற கல்வி ஜாதகிக்கு பெருமை மிக்க யோக வாழ்க்கையை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து  ஜாதகி பெருந்தன்மை மிக்க குணம் கொண்டவராக திகழ்வதுடன், அதீத அறிவு திறன் உள்ளவராக விளங்குவர், தன்னை விட வயதில் அதிகமுள்ள பெரியோர் அறிவுரையின் படி நடப்பதன் மூலம் வாழ்க்கையில் வியக்கத்தக்க நன்மைகளை பெறுவார், எதையும் பகுத்தறியும் தன்மை பெற்றவராக இருப்பர், ஜாதகியின் முன்னோர் செய்த புண்ணியத்தின் பலாபலன் ஜாதகிக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகிக்கு வெகுவான சுபயோகங்களை வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சுகபோக யோக வாழ்க்கையை பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, நிறைந்த நல்லறிவு ஜாதகிக்கு அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு தெளிந்த மனப்பான்மையும், பயமற்ற மனோநிலையையும் தரும், அதிர்ஷ்டகரமான நிகழ்வுகள் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத யோக வாழ்க்கையை பெறுவார், நல்ல குணம் ஜாதகியின் வாழ்க்கையில் சிறந்த நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை பெற்று தரும், அதிர்ஷ்டம் உள்ளவர் என்பதால் ஜாதகியின் வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக திகழும், அரசு துறை அல்லது அரசியல்வாதிகள் மூலம்  அபரிவித லாபங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு, நீடித்த அதிர்ஷ்டம் உள்ளதால் வாழ்க்கையில் தான் நினைத்ததை அடையும் யோகம் உண்டு என்பதுடன் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

2,4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தாமத திருமணம் என்ற போதிலும், தனம் சார்ந்த முன்னேற்றங்கள் உண்டு, பொருளாதார தன்னிறைவு ஏற்படும், குடும்ப  வாழ்க்கையில் சிக்கல்கள் உண்டு என்ற போதிலும், தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக அமையும், போட்டி, பந்தயம், தேர்வுகளில் அபரிவித வெற்றி உண்டு, மற்றவர்களிடம் கவனமாக பேசுவது அவசியமாகிறது, மருந்துகள் மூலம் லாபம் வருமானம் உண்டு, பண்ணை தொழில் வழியில் சிறப்பான முன்னேற்றம் உண்டு, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் எதிர்பாராத  நன்மைகளும் வெகுவான முன்னேற்றங்களும் உண்டாகும்.

4 ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு மன அழுத்தம் மற்றும் போராட்டத்தை தரும், நுண்ணறிவு ஞாபக சக்தி குறைபாட்டை தரும், வண்டி வாகன பாதிப்பு, திடீர் இழப்பும் ஏற்படும், தனது பெயரில் உள்ள சொத்துக்கள் திடீர் இழப்பை சந்திக்கக்கூடும், குணநலம் சார்ந்த பாதிப்பு உண்டாகும், தகப்பனாருக்கு வெகுவான பாதிப்பை தரும், மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதால் இன்னல்கள் அதிகரிக்கும், உறவுகள் வழியிலான துன்பங்கள் வெகுவான பாதிப்பையும் அமைதியின்மையையும் தரும்.

12ம் பாவக வழியில் இருந்து அடிப்படையில் மனநிம்மதி குறையும், தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்கள் உண்டாகும், அறிவில் விழிப்புணர்வு வெகுவாக குறையும், மனஅழுத்தம், மனப்போராட்டம் அதிகரிக்கும், திருப்தி இல்லாத தன்மை ஜாதகியின் வாழ்க்கையில் அளவிற்கு அதிகமான போராட்டங்களை வாரி வழங்கும் என்பதால், எதையும் பலமுறை சிந்தனை செய்து செயல்படுவது சகல சௌபாக்கியங்களையும் பெற வழிவகை அமைத்து தரும், இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு தானே சரியான தீர்வுகளை எடுப்பது சிறந்ததாக அமையும்.

3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து வெற்றியும், அதிர்ஷ்டமும் கொண்டவர் என்பதை உறுதி செய்யும், தான் மேற்கொள்ளும் காரியங்கள், முயற்சிக்கும் செயல்களில் முழு அளவிலான வெற்றியை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர், செல்வச்செழிப்பு, எதிரிகளை வெல்லுதல், நல்ல சிந்தனை, சிறந்த மனநிலை, உண்மை சத்தியத்தை மதித்தல், சாகசம் செய்வதில் ஆர்வம், துணிந்து எதையும் செய்யும் வல்லமை, பயணங்களில் விருப்பம், வெளியூர் வெளிநாடுகள் சென்று வரும் வாய்ப்பு, தகவல் தொழில்நுட்பம், எழுத்து துறை, கலைத்துறையில் வெற்றியை தரும், சகோதர வழி ஆதரவு உண்டு அல்லது அது சார்ந்த முன்னேற்றங்கள் உண்டாகும்.

7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம் அல்லது விருப்ப திருமணம் அமையும் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது, சுய ஜாதகம் வலிமை பெற்ற ஜாதகரை வாழ்க்கை துணையாக ஜாதகி தேர்வு செய்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர ஸ்தான தொடர்பை பெறுவது, ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் மிகுந்த யோகத்தை தரும் தன்மையை காட்டுகிறது, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை பெறுவார், இல்லற வாழ்க்கையில் மனமொத்த தம்பதிகளாக திகழும் யோகமுண்டு, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், எனவே திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் முன் ஜாதகி சரியான முடிவுகளை மேற்கொண்டு  நலம் பெறுவது  அவசியமாகிறது, ஜாதகிக்கு அமையும் கணவர் நல்லவர் என்பது கவனிக்கத்தக்கது.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு, குறிப்பாக வயிறு சார்ந்த இன்னல்கள் உண்டாகும், முயற்சிக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், கடன் மற்றும் எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் பாதிப்புகள் ஜாதகிக்கு சற்று கடினமாகவே அமைய கூடும், தெளிவற்ற  முடிவுகளால் ஜாதகி பெருவாரியான பாதிப்புகளை அனுபவிக்க நேரும், யாரிடமும் பகைமை பாராட்டாமல் நட்ப்புறவை பேணுவது சகல சௌபாக்கியங்களையும் தரும், வியாதியை எதிர்க்கும் தன்மை குறைவு என்பதால் வருமுன் காப்பது அவசியமாகிறது, அதிக அளவிலான செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரித்துக்கொள்வது நன்மையை தரும், கணவருக்கு பொருளாதார வெற்றியை நல்கும்.

 10ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 10ம் பாவக வழியில் இருந்து ஏஜென்சி, காண்ட்ராக்ட் தொழில் விருத்தியை தரும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஜீவனம் மூலம் நல்ல வெற்றி உண்டாகும், இருப்பினும் தாய் வழியிலான இன்னல்கள் அதிகரிக்கும்,  சுய தொழில் முயற்சிகள் பேரிழப்பை தரக்கூடும், மற்றவர்களால் கவுரவ குறைவு உண்டாகும் என்பதால் அதிக கவனம் தேவை , மக்கள் ஆதரவும் ஜீவன மேன்மையும்  ஜாதகிக்கு தேடிவரும், வாழ்நாள் முழுவதுமான ஜீவன முன்னேற்றம் சிறப்பாக அமையும், கவுரவம் அந்தஸ்து சுயமரியாதை சார்ந்த விஷயங்களில் வெகு கவனமுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது, தெய்வீக அனுகிரகம் மூலம் ஜாதகிக்கு செல்வவளம் அதிகரிக்கும், தொழில் வழியிலான தனித்திறமை கொண்டவராக விளங்குவார் என்ற போதிலும் சுய தொழில் வழியில் மிகப்பெரிய இழப்புகளையே தரும், மிகுந்த பொறுப்புணர்வு கடமையுள்ளம் கொண்டவராக இருப்பார் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, மருத்துவ சிகிக்சை, அனைத்திலும் ஏமாற்றம், மனக்குழப்பம், சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை, தலைவலி, கண்பாதிப்பு உடல்நலம் சார்ந்த தொல்லைகள் என்ற வகையில் வெகுவான பாதிப்பை தரும், வலிமை பெற்ற ஜாதகரை வாழ்க்கை துணையாக தேர்வு செய்யவில்லை எனில் ஜாதகியின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், வாழ்க்கை துணை வழியிலான பேரிழப்புகளை தவிர்க்க இயலாது என்பதுடன் விவாகரத்து அல்லது வாழ்க்கை துணையை பிரிந்து வாழும் சூழ்நிலையை தரக்கூடும்.


நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 21/05/2005 முதல் 21/05/2025    வரை )

நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு 6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலாபலன்களை தருவது ஜாதகிக்கு உகந்தது அல்ல, இது ஜாதகிக்கு உடல் நல பாதிப்பு, எதிரி தொல்லை, தீய சக்தி பாதிப்பு போன்ற இன்னல்களை வாரி வழங்கும், அனைவரிடமும் பகைமை பாராட்டும் தன்மையை தருவதுடன், எதிரியின் சதியில் இன்னலுறும் தன்மையை தரக்கூடும், கடன் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, உடல் நலம் மன நலம் இரண்டிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது, சுக்கிரன் திசையில் தற்போழுது நடைபெறும் சனி புத்தி 2,4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலாபலன்களை வாரி வழங்குவது ஜாதகிக்கு கடும் நெருக்கடிகளை தரும், அனைவரிடமும் மிகவும் கவனமாக இருப்பதுடன் வார்த்தைகளில் அதீத கவனம் செலுத்துவதும், இனிமையான பேச்சும் ஜாதகிக்கு நன்மையை தரும், தனது வாழ்க்கை சார்ந்த முடிவுகளை மிக கவனமாக மேற்கொள்வதும், தனது பெயரில் உள்ள சொத்துக்களை பாதுகாப்பதும் அவசியமாகிறது, குணநலன் சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் தேவை, நிம்மதியற்ற மனமும், சரியான தீர்வுகளை காண இயலாத தன்மையும் சுக்கிரனை புத்தி தரும் என்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை, பாதுகாப்பான பயணம் ஜாதகிக்கு நன்மையை தரும், சுக்கிரன் திசையில் சனி புத்தி ஜாதகிக்கு சற்று பின்னடைவை தரக்கூடும் என்பதால், திட்டமிட்டு செயலாற்றி நலம் பெறுவது அவசியமாகிறது.

எதிர்வரும் குரு திசை தரும் பலன்கள் : ( 21/05/2025 முதல் 21/05/2031 வரை )

எதிர்வரும் சூரியன் திசை ஜாதகிக்கு 1ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலாபலன்களை வாரி  வழங்குவது வரவேற்கத்தக்கது, ஜாதகியின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும் என்பதுடன், திருமணம், தொழில், குழந்தைகள் பொருளாதாரம் என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது வரவேற்க்கத்தக்க சிறப்பு அம்சமாகும்,அதிர்ஷ்டத்தின் தாக்கம் ஜாதகிக்கு சூரியன் திசையிலேயே பரிபூர்ணமாக கிடைக்கும்.

பரிகாரம் :

1) திருவக்கரை வளர்பிறை சனி கிழமை  சென்று சனி பகவானுக்கு வக்கிரக நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.
2) குலதெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் செய்து நலம் பெறுக.
3) வருடம் ஒருமுறை பழனி சென்று வருவது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
4) சர்ப்ப சாந்தி பரிகாரம் கால ஹஸ்த்தி சென்று முறையாக செய்து பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கலாம்.
5) தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 1 ஜூலை, 2018

5ல் ராகு ஆண் வாரிசு அமைந்தது எப்படி ? எதிர்வரும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ?


கேள்வி :

தங்களிடம் ஜாதக ஆலோசணை பெறும்முன், எனது ஜாதகத்தை பார்த்த அனைவரும் 5ல் ராகு இருப்பதால், கடுமையான புத்திர தோஷம் உள்ளதாகவும், குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது என்றனர், மேலும் ஆண் வாரிசு கிடையாது என்றனர், தங்களிடம் ஆலோசனை பெற்று தாங்கள் பரிந்துரை செய்த ஜாதகத்தை வாழ்க்கை துணையாக அமைத்துக்கொண்டேன், தற்போழுது ஆண் குழந்தை பிறந்து உள்ளது, 5ல் ராகு அமர்ந்தாள் புத்திர பாக்கியம் இல்லை என்பது பொய்யானதா? பிறந்த ஆண் குழந்தை வழியில் இருந்து ஏதாவது இன்னல்கள் வருமா ? ராகு திசை அடுத்து வர இருக்கின்றது, எனக்கும் எனது குழந்தைக்கும் எதிர்வரும் ராகு திசையில் ஏதாவது பாதிப்பை தருமா ? எதிர்காலம் எப்படி இருக்கும் ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன் .


லக்கினம் : கன்னி
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 3ம் பாதம்

அடிப்படையில் ஒருவரது சுய ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்து இருப்பதினால் மட்டுமே புத்திர பாக்கியத்தை தடை செய்யும் என்று கருதுவதும், அவருக்கு குழந்தை பிறக்காது என்று முடிவு செய்வதும் முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானது, மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் பாவகத்தில் ராகு அமர்ந்து சம்பந்தப்பட்ட பாவாகத்தை கடுமையாக பாதிப்பிற்கு ஆளாக்குவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி 12ம் வீடாக அமைந்து கடுமையாக பாதிக்கப்படுவதும் தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிப்பின் தன்மை கடுமையாக உள்ளது என்பதே உண்மையானது, இருப்பினும் தங்களது சுய ஜாதகத்தில் பிறந்த நேரத்தின் அடிப்படையில் 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சம்பந்தப்பட்ட பாவக  வழியில் இருந்து வரும் இன்னல்களை யாவற்றையும் தவிர்த்து, 11ம் பாவக வழியிலான நன்மைகளை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், தங்களது சுய ஜாதகத்தில் 5ம் வீடு சர மண் தத்துவ ராசியில் 1 பாகையும் ஸ்திர காற்று ராசியில் 29 பாகைகளையும் கொண்டிருப்பது 5ம் பாவக வழியிலான அதிர்ஷ்ட பலன்களை மட்டும் தடை செய்யும், குல தெய்வ நிந்தனை மூலம் தங்களுக்கு சுப நிகழ்வுகளில் தடை தாமதங்களை தரும், இதுவே தங்களது திருமண தாமதத்திற்கும் காரணமாக அமைந்தது என்பது கவனிக்கத்தக்கது.

ராகு பகவானால் பாதிக்கப்பட்ட 5ம் பாவக பலனை தற்போழுது நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ஏற்று நடத்தவில்லை என்பதனால் 5ம் பாவக  வழியில் இருந்து வரும் இன்னல்கள் யாவும் தங்களுக்கு நடைமுறைக்கு வரவில்லை, மேலும் தங்களுக்கு 5ம் பாவகம் ராகு பகவானால்  கடுமையாக பாதிக்கப்படுவது, தங்களது பூர்வீக ஜீவனத்தை வெகுவாக பாதித்து கல்வி காலம் முதல் தற்போழுது வரை பரதேச ஜீவனம் என்ற அமைப்பில் வெளியூர், வெளிநாடுகளிலேயே ஜீவனத்தை மேற்கொள்ள வைத்திருப்பதால், புத்திர பாக்கியத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை, தாங்கள்  வெளிநாட்டில் இருப்பது தங்களது 5ம் பாவக ராகு தரும் இன்னல்களில் இருந்து காத்துஅருள்கிறது, தங்களது ஜீவனம் பூர்வீகத்தில் இருந்து இருப்பின் ( வாய்ப்பு வெகு குறைவு காரணம் 5ம் பாவகம் ராகு பகவானால் பாதிக்கப்படுவது பூர்வீகத்தை விட்டு வெளியேற்றிவிடும் ) ஆண் வாரிசு அமைவது என்பது குதிரைக்கொம்பாகவே அமைந்து இருக்கும்.

சுய ஜாதகத்தில் ராகு கேது 5ல் அமர்ந்து வலுவாக பாதிப்பை பெறுவது சம்பந்த பட்ட ஜாதகருக்கு பரதேச ஜீவனத்தை தந்துவிடும் என்பதற்கு தங்களது ஜாதகமே நல்ல உதாரணம், ஒருவேளை தாங்கள் பூர்வீகத்தில் வலுக்கட்டாயமாக ஜீவித்து இருப்பின், தங்களுக்கு நல்ல கல்வி, தொழில், திருமணம் , வருமானம், குழந்தை பாக்கியம், பொருளாதார முன்னேற்றம் என யாதொரு நன்மைகளையும் அனுபவித்து இருக்க முடியாது என்பதே உண்மை, மேலும் ஒரு சிறு விஷயத்தை பெறுவதற்கு கூட பகிர்தன முயற்சிகளை எடுக்கவேண்டிய சூழ்நிலையை தந்து இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் தங்களுக்கு அமைந்த வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் மிகுந்த வலிமையுடன் அமைந்தது, தங்களுக்கு வெகு சாதகமாக அமைந்தது, திருமணம் ஆனா உடனேயே புத்திர பாக்கியம் கிட்டியதுடன், நல்ல ஆண் வாரிசும் பிறந்தது வரவேற்கத்தக்கது, தங்களது ஜாதகத்தில் 5ம் வீடு ராகு பகவானால் பாதிக்கப்பட்ட போதிலும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் வீடு வலிமை பெற்று இருந்தது ஓர் சிறப்பு அம்சமாகும், மேலும் தாக்களுக்கு நடைபெற்ற செவ்வாய் திசை 5ம் பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருந்ததும், தாங்கள் வெளிநாட்டில் ஜீவனம் செய்து வருவதும் தங்களுக்கு நல்லொதொரு ஆண் வாரிசை நல்கியிருக்கிறது.

எதிர்வரும் ராகு திசை தங்களுக்கு 9ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் அதிர்ஷ்டகரமான யோக பலன்களை வாரி வழங்குவது மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ராகு திசையும் தங்களுக்கு யாதொரு பாதிப்பையும் தரவில்லை என்பதால் 9ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பெற தயார் நிலையில் இருப்பதே உசிதமானது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் 5ம் வீடு சாயா கிரகங்களான ராகுகேதுவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது அல்லது சுய ஜாதகத்தில் 5ம் வீடு 4,8,12ம் பாவக தொடர்பை பெறுவது, பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு பூர்வீக வழியில் இருந்து வரும் நன்மைகளை வெகுவாக தடுக்கும், மேலும் ஜாதகரின் சமயோசித அறிவு திறன், பூர்வீக சொத்து, குழந்தை பாக்கியம் போன்ற விஷயங்களை வெகுவாக பாதிக்கும், மேற்கண்ட அமைப்பை பெற்ற அன்பர்களுக்கு சரியான தீர்வு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் தேடிக்கொள்வது நல்லது இல்லை எனில், நமது பெரியவர்கள் சொல்லி வைத்த " பாடும் பட்டமாதிரி, வீடும் கெட்ட மாதிரி " என்ற முதுமொழிக்கு நிகரான வாழ்க்கையை தந்துவிடும் என்பதுடன், புத்திர பாக்கியத்தையும் வெகுவாக பாதிக்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 22 பிப்ரவரி, 2018

ஜாதக பொருத்தம் எப்படி உள்ளது? எனது மகளுக்கு ஏற்ற வரனா ? இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையுமா ?


கேள்வி :
கீழ்கண்ட வரனின் ஜாதகம் எனது மகளுக்கு பொருந்துமா ? திருமண வாழ்க்கை சிறப்பாக அமையுமா ? ஜாதக பொருத்தம் சார்ந்த விஷயங்களை தெளிவு படுத்தவும்,

பதில் :

 திருமண பொருத்தம் காண்பதில் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

1) வரன் வது இருவரது சுய ஜாதகத்திலும் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமை பற்றி தெளிவு பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும்.

2) வரன் வது இருவரது ஜாதகத்திலும் தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் ( ஏக திசை என்ற போதிலும் ) சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? என்பதில் தெளிவு பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும்.

3) வரன் வது இருவரது ஜாதகத்திலும் தற்போழுது  கோட்சார கிரகங்கள் தரும் பலாபலன் பற்றி தெளிவு பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும்.

4) மேற்கண்ட விஷயங்களை தவிர ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகுகேது ஜாதகம், களத்திர தோஷம் போன்ற மூட நம்பிக்கைகளை, புறம் தள்ளிவிட்டு, வரன் வது இருவரது சுய ஜாதகத்திலும் பாவக வலிமையின் அடிப்படையில் திருமணம் செய்வதே தாம்பத்திய வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

இனி அன்பரின் கேள்விக்குண்டான பதிலை பார்ப்போம்.

வரனின் பிறந்த தேதி : 26/09/1990
                                நேரம் : 08:45 AM 
                                இடம் : கோவை 


லக்கினம் : துலாம் 
ராசி : விருச்சிகம் 
நட்ஷத்திரம் : கேட்டை 4ம் பாதம்.

மேற்கண்ட வரனின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, குறிப்பாக 2,8ம் வீடுகள்  திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் இன்னல்களை தரும் அமைப்பாகும், 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் குடும்பம், வருமானம், வாக்கு வழியில் இருந்து கடுமையான இன்னல்களை சந்திப்பார், 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்ண ஆயுள் என்ற போதிலும், வாழ்க்கை துணைக்கு பொருளாதார ரீதியான பேரிழப்புகளை தருவார்.

5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் 5ம் பாவக வழியில் கடுமையான புத்திர தோஷத்தையும், சமயோசித அறிவு  திறனில் குறைகளையும், கற்ற கல்வி வழியிலான நன்மை அற்ற தன்மையையும் அனுபவிப்பார், குறிப்பாக ஜாதகரின் சிந்தனை திறனும், பூர்வீகமும் கடுமையாக பாதிக்கப்படும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணைக்கு கடுமையான தோஷத்தை தரும் அமைப்பாகும், ஜாதகரின் மணந்துகொள்ளும் ஜாதகியின் சுய ஜாதகம் வலிமை இன்றி இருப்பின், இல்லற வாழ்க்கை வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிடும், வாழ்க்கை துணையுடனான நெருக்கத்தை வெகுவாக குறைக்கும், மேலும் சுய ஜாதகத்தில் ஜாதகரின் லக்கினமும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியில் அமைந்து பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இல்லற வாழ்க்கையில் ஜாதகர் கடுமையான பாதிப்பை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபமும் வலிமையற்று உள்ளது, 7ம் ராசியான துலாமும் வலிமையற்று உள்ளது  என்பதுடன் சுய ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் வலிமையற்று காணப்படுகிறது என்பதால் ஜாதகரின் இல்லற வாழ்க்கை மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகும்.

அயன சயன ஸ்தானத்தை குறிக்கும் 12ம் வீடு பூர்வ புண்ணியமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அனைத்திலும் நஷ்டத்தை தரும், மேலும் புத்திரம் யோகம் சார்ந்த கடுமையான பாதிப்புகளை தரும், தாம்பத்திய வாழ்க்கையில் முரண்பட்ட பாதிப்புகளை ஜாதகர் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவர் என்பதால், தங்களது அருமை மகளுக்கு ஏற்ற வரன் இந்த  ஜாதகர் இல்லை என்பதை மட்டும் மிக தெளிவாக கூறி, வேறு நல்ல வரனாக தேடி திருமணம் நடத்தி வைக்க " ஜோதிடதீபம் " ஆலோசனை வழங்குகிறது.

குறிப்பு :

தங்களது மகளின் சுய ஜாதகத்தில் 2,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு  இருப்பதால், தாங்கள் பார்க்கும் வரனின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் மிக மிக வலிமையுடன் இருப்பதுடன், நடைமுறையில் உள்ள திசா புத்திகள், எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெற்ற பிறகே திருமணம் செய்து வைப்பது சகல நலன்களையும் தரும் என்பதை கருத்தில் கொள்க.
 
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

செவ்வாய் தோஷம் எனும் மாயவலை !

 

 " மாற்றம் ஒன்றே மாறாதது " என்ற விதி அணைத்திற்கும் பொருந்தும், இன்றைய சூழலில் ஜோதிட சாஸ்திரமும் இதற்க்கு ஆர்ப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது, இயற்க்கை உண்மைக்கு புறம்பான விஷயங்களை புறம் தள்ளிவிட்டு, சத்தியத்தை நோக்கி நகரும் என்பது மறுக்க இயலாத உண்மை அன்பர்களே,  பிற்போக்கு தனமான மூடநம்பிக்கைகளில் மனிதனை மூழ்கடித்து உண்மைக்கு புறம்பான விஷயங்களை பதிவு செய்துகொண்டிருந்த பலரை, இன்றைய இளைய தலைமுறையினர் தெரிக்கவிட்டு கொண்டு இருப்பது வரவேற்க்கதக்க விஷயமாக " ஜோதிடதீபம் " கருதுகிறது, இன்றைய இளைஞர்கள் தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை ஆண் பெண் பாகுபாடு இன்றி பெறுவதிலேயே நாம் இதை தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும், மேலும் இதற்க்கு அவரவர் சுய ஜாதக  பாவக வலிமை பெரிதும் உதவுகிறது என்பது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது, தனது ஜாதகத்தில் 7ல் செவ்வாய் பகவான் உள்ளதால் செவ்வாய் தோஷம் என்கின்றனர்? நான் செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா ? என்ற கேள்விக்கான பதிலை இன்றை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம் 

 ஜாதகரின் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் பகவான் ஜாதகருக்கு செவ்வாய் தோஷத்தை தருகிறார் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, ஜாதக வலிமை என்பது பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது, இதன் அடிப்படையில்  ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற தன்மை அமைகிறது, ஒருவரின் திருமண வாழ்க்கையினை நிர்ணயம் செய்வது சுய ஜாதகத்தில் 2,7,8ம் வீடுகள் ஆகும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட வீடுகள் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே, 2,7,8ல் பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன், ராகு,கேது  போன்ற கிரகங்கள் அமர்ந்து இருந்தாலும், சுய ஜாதக வலிமையின்  அடிப்படையில் 2,7,8ம் வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று இருப்பின் மேற்கண்ட கண்ட பாவ கிரகங்கள் அமர்ந்து இருப்பதால் ஜாதகருக்கு யாதொரு பாதிப்பையும் தாராது என்பதே உண்மை.

2,7,8ல் பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன், ராகு,கேது  போன்ற கிரகங்கள் அமர்ந்து இருந்தால், சம்பந்தப்பட்ட பாவகம் வலிமை இல்லை என்று கருதுவது முற்றிலும் ஜாதக கணிதம் அறியாமல் கூறப்படும் வாய்ஜாலம் என்பதை தவிர வேறு இல்லை, கீழ்கண்ட மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும் 7ம் பாவகத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்து இருப்பினும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது  ஜாதகருக்கு சுய ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், மேலும் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடும்  களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது  ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர் என்பதை தெளிவு படுத்துகிறது, 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது வாழ்க்கை துணையுடனான புரிதல்கள், இணக்கமான வாழ்க்கை, பரஸ்பரம் அன்பு செலுத்தும் யோகம் என்ற  வகையில்  சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும் அமைப்பை தருவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், செவ்வாய் இங்கு அமர்வது  தோஷத்தை தருமெனில் ஜாதகரின் களத்திர ஸ்தானம் வலிமை இழந்து காணப்பட வேண்டும் ஆனால் ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது.

மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடாகவும் சர நீர் ராசியாகவும் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் தனது மனைவி வழியில் இருந்து சகல சுகபோகங்களையும் அனுபவிக்கும் வல்லமையை தருவதுடன், ஜாதகர் எந்த பெண்ணை ( தனது வாழ்க்கை துணையாக ) தேர்வு செய்தாலும் அவர் வழியில் இருந்து நன்மைகளையும் சுக போகங்களையும் தன்னிறைவாக பெறுவார் என்பதை அவரது சுய ஜாதகமே கட்டியம் கூறுகிறது, மேலும் தான் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி,  அதனால் யாதொரு பாதிப்பும் ஜாதகருக்கு ஏற்படாது என்பதே உண்மை நிலை, செவ்வாய் தோஷம் என்பது முற்றிலும் தவறான கருத்து அன்பர்களே, தம்பதியரின் சுய ஜாதகத்தில் பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பின் செவ்வாய் போன்ற பாவக கிரகங்கள் எங்கு அமர்ந்து இருந்தாலும் அதனால் யாதொரு பாதிப்பும் வாராது, சுய ஜாதகம் வலிமை இழக்கும் பொழுதே தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையாது என்பதனை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் இது போன்ற மூடநம்பிக்கைகளை களைந்து, சுய ஜாதக வலிமைக்கு முக்கியத்துவம் தந்து திருமண வாழ்க்கையில் இணையும் பொழுது, இல்லற வாழ்க்கை பரிபூர்ணத்துவத்தையும் சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பரே !

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகத்தில் தாய் மற்றும் தந்தையை பிரதிபலிக்கும் பாவகங்களான 4,10ம் வீடுகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டுமே இன்னல்களை தரும் அமைப்பாகும், தற்போழுது நடைமுறையில் உள்ள குரு திசை ஜாதகருக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, திடீர் அதிர்ஷ்டத்தை 8ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், இது ஜாதகருக்கு தனது தொழில் வழியில் பிரதிபலிக்கும், தொழில் மூலம் ஜாதகர் சுபயோக வாழ்க்கையை பெறுவர் என்பதுடன், 8ம் வீடு வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் நன்மைகளை குறிக்கும், எனவே ஜாதகர் திருமண பந்தத்தில் இணைந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவதே புத்திசாலித்தனம், எதிர்வரும் சனி திசையை 3,6,8,9,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பரிபூர்ண யோகத்தை நல்குவது ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையையும் சிறப்பிக்கும் என்பதால், நம்பிக்கையுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்து நலம் பெற " ஜோதிடதீபம் " வாழ்த்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

திருமண பொருத்தம் நிர்ணயம் : சுய ஜாதகத்தில் கிரகங்களின் அமர்வு முக்கியமா ? சுய ஜாதகத்தில் 12 பாவக வலிமை முக்கியமா ?


பொதுவாக திருமண பொருத்தம் காணும் பொழுது வரன் வது இருவரது சுய ஜாதகத்திலும் கிரகங்கள் அமர்ந்த நிலையை வைத்தும், நட்சத்திர பொருத்தங்களை வைத்தும், நடைபெறும் திசை மற்றும் புத்திகள் சுப கிரக திசாபுத்திகளா? என்பதை கருத்தில் கொண்டும், கிரக தோஷம், ராகுகேது தோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் என வகைக்கு ஓர் தோஷங்களை சொல்லியும், ஏக திசை, திசா சந்திப்பு எனும் நடைமுறைக்கு சற்றும் ஒத்துவராத காரணங்களை சொல்லி, பொருத்தம் உள்ள ஜாதகங்களை பொருத்தமற்றது என்றும், பொருத்தம் அற்ற ஜாதகங்களை பொருத்தம் உள்ளது என்றும் பலரது இல்லற வாழ்க்கையை பாதிப்பிற்கு ஆளாக்கி, தனது வினைபதிவையும் அதிகரித்து கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு சில உண்மைகளை கூற " ஜோதிடதீபம் " கடமை பட்டுள்ளது, அதாவது சுய ஜாதக வலிமை என்பாது இரட்டை குழந்தையாக பிறந்த 30 வினாடிகள் வித்தியாசம் மட்டுமே கொண்டுள்ளவர்களுக்கும் பாவக வலிமையில் வெகு மாற்றங்களை தரும் எனும் பொழுது சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையை கருத்தில் கொண்டு பலன் நிர்ணயம் செய்வது என்பது முற்றிலும் சுய ஜாதக வலிமை நிலைக்கு புறம்பானது.

நட்ச்சத்திர பொருத்தம் :

திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வதில் இதுவரை அனைவராலும் கடைபிடிக்கும் முறை இது, உண்மையில் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை அற்று இருப்பின் மேற்கண்ட நட்ச்சத்திர பொருத்தம் என்பது 10க்கு 10 இருப்பினும் திருமண வாழ்க்கை சிறப்பிக்காது, குறிப்பாக ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் திருமணம் செய்ய கூடாது என்று சொல்லும் வாதம் என்பது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை நிலையை பற்றி சிறிதும் அறிந்திராமல் சொல்லப்படும் ஓர் குருட்டு தனமான அணுகுமுறையே என்றால் அது மிகையில்லை, ரஜ்ஜு பொருத்தம் அற்று திருமணம் செய்ய அன்பர்கள் பல பேர் வாழ்க்கையில் தாம்பத்திய வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருப்பதை உதாரண ஜாதகம் கொண்டும் விளக்கம் தரமுடியும், மேலும் சுய தம்பதியர் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பின் இந்த ரஜ்ஜு பொருத்தம் எந்த விதத்திலும் திருமண வாழ்க்கை நிச்சயம் பாதிக்காது, நட்ஷத்திர பொறுத்த நிர்ணயம் என்பது சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பின், நட்ச்சத்திர பொருத்தத்தை கருத்தில் கொள்ளாமல் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யலாம், மேலும் சுய ஜாதகம் இல்லாமல் வெறும் பெயரை மற்றும் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் நட்ஷத்திரம் கண்டு பொருத்தம் நிர்ணயம் செய்த தலைமுறைக்கு வேண்டுமானால் இது பொருந்தும், பிறந்த தேதி, நேரம், இடம் ஆகிவற்றை கையில் வைத்திற்குக்கும் அன்பர்களுக்கு நட்ச்சத்திர பொருத்தம் என்பது தேவையற்றது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையும், நடைபெரும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை நிலையும் தெளிவாக தெரிந்தால் போதும்.

கிரகங்கள் அமர்வு நிலை :

கிரகங்கள் சுய ஜாதகத்தில் அமர்வதை வைத்து பொருத்தம் நிர்ணயம் செய்வது, அதாவது பெண்கள் ஜாதகத்தில் 8ல் சனி, செவ்வாய், ராகு அமர்வது விதவை தோஷம் என்று சொல்வது கேலி கூத்து, பெண்களின் சுய ஜாதகத்தில் 8ம் பாவக வலிமை நிலையை சிறிதும் உணராமல் கூறப்படும் உளறல் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை, பெண்களின் ஜாதகத்தில் 8ல் சனி, செவ்வாய், ராகு அமர்ந்து இருந்தாலும், 8ம் பாவகம் சுய ஜாதக அமைப்பின்படி வலிமை பெற்று இருப்பின் விதவை தோஷத்தை ஏற்படுத்தாது, மாறாக தனது கணவன் வழியில் இருந்து ஜாதகி பெரும் பொருளாதார வசதி வாய்ப்பை குறிக்கும், சுக போகங்களை குறிக்கும், தம்பதியரின் உடல் ஆரோக்கியத்தை குறிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் இணைவதன் மூலம் தம்பதியர் பெரும் அதிர்ஷ்டத்தை குறிக்கும், ஆக ஜாதகத்தில் 8ல் சனி, செவ்வாய், ராகு அமர்வது விதவை தோஷம் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான கருத்து, அவர்களுக்கு சுய ஜாதக பாவக வலிமை பற்றிய தெளிவு சிறிதும் இல்லை என்பதே உண்மை நிலை, மேலும் பெண்கள் ஜாதகத்தில் 7ல் சூரியன் சனி இருப்பது தோஷம் என்பதும் களத்திரம் மற்றும் குடும்ப ஸ்தானங்களில் கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டும், லக்கினம் முதல் 12 பாவகங்களில் கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டும் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகு முறை, லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொள்வதே சாலச்சிறந்தது.

 அதை போன்றே ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையை கருத்தில் கொண்டு திருமணம் செய்வது என்பதும் தவறான அணுகுமுறை, ஆண் பெண் ஜாதகங்களின்  திருமண பொருத்தம் காணும் பொழுது கீழ்கண்ட பாவக வலிமைக்கும், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமைக்கும் முக்கியத்துவம் தந்து பொருத்தம் நிர்ணயம் செய்வதே சரியான அணுகுமுறை, வரன் வது ஜாதகத்தில் 1,2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பிக்கும், அதே போன்று நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது தாம்பத்திய வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து தரும்.

ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், ரஜ்ஜு பொருத்தம், காலசர்ப்ப தோஷம், சனி தோஷம், ஏழரை சனி தோஷம், களத்திர தோஷம் என்ற மூட நம்பிக்கையில் கவனம் செலுத்தாமல், வரன் வது ஜாதகத்தில் பாவக வலிமைக்கும், நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகளுக்கும் முக்கியத்துவம் தந்து பொருத்தம் நிர்ணயம் செய்வதே சரியான அணுகு முறை அன்பர்களே ! சுய ஜாதக  வலிமையை பற்றியும், அதன் அடிப்படையில் பொருத்தம் நிர்ணயம் செய்வது பற்றியும் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கன்னி
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 3ம் பாதம்

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று இருப்பதும், 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையில் தடை தாமதங்களையும், நல்ல இல்லற வாழ்க்கையை அமையாத நிலையையும் கட்டியம் கூறுகிறது, மேலும் நடைபெறும் குரு திசை 11ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதக ஸ்தான பலாபலன்களை முழு வீச்சில் தந்து கொண்டு இருப்பது ஜாதகியின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிக்கொண்டு இருப்பது வருத்தத்திற்க்கு உரிய விஷயமாகும்.

 எனவே சுய  ஜாதகத்தில் ஜாதகிக்கு திருமண வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை அற்று இருப்பதும், நடைபெறும் திசா புத்தி வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் திருமணம் சார்ந்த தடைகளையும் இன்னல்களையும் வழங்கிகொண்டு இருக்கின்றது,எனவே இந்த ஜாதகிக்கு சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர்  ஜாதகரை திருமணம் செய்து வைத்தால் மட்டுமே இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும், மாறாக இதை போன்றே வலிமை அற்ற ஜாதகரை நட்ச்சத்திர பொருத்தம் மற்றும் இதர பல தோஷ பொருத்தங்கள் உள்ளது என்று  இல்லற வாழ்க்கையில் இணைத்தால் சில மாதங்களிலேயே திருமண வாழ்க்கை கசந்து, வெகு விரைவில் பிரிவினையை தந்து விடும்.

குறிப்பு :

 திருமண பொருத்தம் காணும்பொழுது வரன் வது  ஜாதகத்தில் பாவக வலிமைக்கும் முக்கியத்துவம் தந்து பொருத்தம் நிர்ணயம் செய்வதே தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றிகரமான முன்னேற்றங்களையும், சந்தோஷமான இல்லற வாழ்க்கையையும் தரும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது என்பதை பதிவு செய்ய "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 26 ஆகஸ்ட், 2017

திசாசந்திப்பும் ( ஏக திசை நடப்பு ) திருமண வாழ்க்கையும் !

 

 திருமண பொருத்தம் காண்பதில் தற்போழுது " திசாசந்திப்பு " எனும் புதுவித பொறுத்த நிர்ணயம் மிக பிரபல்யம் அடைந்து வருகின்றது, திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய இது அவசியம் என்பதனை வலியுறுத்தி கூறுகின்றனர், பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் அடிப்படையாக நட்ச்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் கண்டு, ஜாதகத்தில் ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம் மற்றும் களத்திர தோஷம் என்ற விஷயங்களை அலசி ஆராய்ந்த பிறகு மணமகனுக்கும், மணமகளுக்கும் ஏக காலத்தில் ஒரே திசை நடைமுறைக்கு வரும்பொழுது திசாசந்திப்பு எனும் விஷயம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது, அதாவது இருவருக்கும் ஒரே திசை சில வருடங்கள் முன்பின் நடைபெற்றால் தம்பதியர் வாழ்க்கை இன்னலுறும் என்பதும், இதனால் திருமண பொருத்தம் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, ஒருவேளை தம்பதியர் இருவருக்கும் ஒரே திசை நடைபெற்றால் ஏக காலத்தில் இன்னல்களையும், ஏக காலத்தில் நன்மைகளையும் அனுபவிக்க வேண்டி வரும் என்பது, பொருத்தம் காண வரும் அன்பர்களின் கேள்வியாகவும் இருக்கின்றது, உதாரணமாக மணமகனுக்கும் மணமகளுக்கும் முன்பின் குரு திசை நடைபெறும் காலத்தில் தம்பதியர் இருவரும் நன்மைகளையும், சனி திசை நடைபெறும் காலத்தில் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டி வரும் என்ற கருத்தை வரன் வதுவின் பெற்றோர்கள்  முன் வைக்கின்றனர்.

இது எந்த அளவிற்கு உண்மை என்பதனை இன்றைய பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு  சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வரன் ஜாதகம்


லக்கினம் : கன்னி
ராசி : கன்னி
நட்சத்திரம் : சித்திரை 2ம் பாதம்


வது ஜாதகம்


லக்கினம் : விருச்சிகம்
ராசி : ரிஷபம்
நட்சத்திரம் : ரோஹிணி 4ம் பாதம்

மேற்கண்ட தம்பதியர் இருவருக்கும் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை குரு திசை, திருமணம் 2015ம் வருடம் ஜூன் மாதம் நடைபெற்றது, தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் ஏக காலத்தில் குரு திசை நடைபெறுவதால் திருமணம் செய்ய வேண்டாம் என்ற கருத்தை அதிகம் பேர் பரிந்துரை செய்து இருக்கின்றனர், இருப்பினும் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியரின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை இனி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!  தம்பதியரின் இல்லறவாழ்க்கை மிகவும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கின்றது, மேலும் நல்ல ஆண் வாரிசும் அமைந்து இருக்கின்றது, தம்பதியர் இருவரும் புதிய வீடு ஒன்று விலைக்கு வாங்கி இருக்கின்றனர், எனவே இருவருக்கும் குரு திசை நடைமுறையில் இருப்பதால் சுபயோக பலன்கள் என்று எடுத்துக்கொள்ளலாம? என்றால் அது சரியாக வர வாய்ப்பில்லை காரணம் தம்பதியரில் வதுவுக்கு நடைபெறும் குரு திசை 10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தந்து கொண்டு இருக்கின்றது, வரனுக்கோ 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலனை லாப ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது,  எனவே குரு  திசை இருவருக்கும் நன்மையை செய்யும் என்ற வாதம் முற்றிலும் தவறாக போகிறது, அடுத்து வரும் சனி திசை தம்பதியர் இருவருக்கும் தரும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகிக்கு 26/02/2031 வரை நடைபெறும் குரு திசை தனது திசையில் 10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருகின்றது, ஜாதகருக்கு குரு திசை 09/04/2018 வரை நடைபெற்று 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருகின்றது, இருவருக்கும் அடுத்து வரும் சனி திசை ஜாதகிக்கு  5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனையும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும் தருகின்றது, ஜாதகருக்கு 2,6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஒரு வகையில் நன்மைகளையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிதம்மிஞ்சிய சுக போகங்களையும், 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தர தயார் நிலையில் உள்ளது, சனி திசை காலத்தில் ஜாதகி பாதக ஸ்தான வழியில் இன்னல்களையும், பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும் அனுபவிப்பார், ஜாதகர் சுக ஸ்தான வழியில் இருந்தும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும், விரைய ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும் அனுபவிப்பார் இதுவே மேற்கண்ட தம்பதியர் ஜாதகத்தில் சனி திசை தரும் பலாபலனாகும்.

மேற்கண்ட  தம்பதியர் இருவரது சுய ஜாதகப்படியும் நடைபெறும் குரு மற்றும் சனி திசை தம்பதியரின் இல்லற வாழ்க்கையை பாதிக்கும் வண்ணம் இல்லை என்பதே உண்மை நிலை, சுய ஜாதகத்தில் குறிப்பாக வதுவின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகளை கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே ( அதாவது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு ) தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும், மேற்கண்ட தம்பதியர் இருவரது சுய  ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் மிகவும்  வலிமையுடன் இருப்பதால் இல்லற வாழ்க்கை பாதிக்க சிறிதும் வாய்ப்பு இல்லை, குறிப்பாக தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது சிறப்பான இல்லற வாழக்கையை  தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, இல்லற வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்கள் வரும் அது எதார்த்தமான விஷயம், ஆனால் பிரிவு என்ற நிலையை தரும் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

உதாரண ஜாதகத்தில் நடைபெறும் ஏக திசை எனும் திசா சந்திப்பு  என்பது தம்பதியரின் இல்லற வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதனை "  ஜோதிடதீபம் " தெளிவாக பதிவு செய்ய விரும்புகிறது, மேலும் திசாசந்திப்பு, ஏக திசை நடப்பு என்பதெல்லாம் வரன் வதுவுக்கு நடைபெறும் ஒரே கிரகத்தின் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகின்றது என்ற உண்மை தெரியாத  நிலையிலும், தம்பதியரின் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகளின் வலிமை நிலை அறியாத நிலையிலும் கூறப்படும் கற்பனை கதையே அன்றி உண்மையில்லை என்பதனை அன்பர்கள் அனைவரும் உணர்வது அவசியமாகிறது, திருமண பொருத்தம் காணும்  பொழுது நட்ச்சத்திர பொருத்தம் மற்றும் தோஷங்களுக்கு முன்னுரிமை தாராமல், வரன் வதுவின் சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டு பொருத்தம் காணும் பொழுதும், தம்பதியருக்கு திசாசந்திப்பு எனும் ஏக திசை நடைபெற்ற போதிலும் கிரகங்களின் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின்  வலிமையை கருத்தில் கொண்டு பொருத்தம் காண்பதே திருமண வாழ்க்கையை  வெற்றிகரகமாக அமைத்து தரும்.

குறிப்பு :

 திசாசந்திப்பு என்பது தம்பதியர் இருவருக்கும் நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையின் தன்மையை பற்றி தெளிவு இல்லாத நிலையில் கூறப்படும் கற்பனையே, இதில் சிறிதும் உண்மையில்லை அன்பர்களே! திருமண பொருத்தம் காணும் பொழுது வரன் வதுவுக்கு ஏக திசை நடைபெற்ற போதிலும் நடைபெறும் ஏக திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று  நடத்தினால் தம்பதியர் வாழ்க்கையில் சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பதனை நினைவில் கொள்க, திருமண வாழ்க்கை வெற்றி பெற்ற தாம்பத்திய வாழ்க்கையாக மாற வரன் வதுவின் சுய ஜாதகத்தில்  உள்ள 1,2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமை நிலையே என்பதில் கவனத்தில் கொண்டு திருமண பொருத்தத்தை நிர்ணயம் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 29 மே, 2017

சுய ஜாதகம் வலிமை அற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வதால் வரும் இன்னல்கள் !


" திருமணம் ஆயிரம்காலத்து  பயிர் " என்பது முதுமொழி, தனது சந்ததிகள் வாழையடி வாழையாக தழைத்து ஓங்கி வாழ சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் ஜாதகத்தை தனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்வது அவசியமாகிறது, இதை கருத்தில் கொண்டே முன்னோர்களும் பெரியவர்களும் சுய ஜாதக வலிமை அறிந்து திருமணம் செய்வது அவசியம் என்பதனை வலியுறுத்துகின்றனர், இதை ஏற்றுக்கொண்டு தமது இல்லற வாழ்க்கையில் சரியான பொருத்தம் நிறைந்த வலிமை பெற்ற ஜாதகத்தை தேர்வு செய்யும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பல சிறப்புகளை பெறுகின்றது, குறிப்பாக ஜாதகரின் வாரிசுகள் யோகம் நிறைந்ததாகவும், வாழ்க்கையில் குன்றாத வளம் நிறைந்தததாகவும் அமைகிறது, சுய ஜாதக வலிமை மற்றும் பொருத்தம் ஆகியவற்றில் சிறிது தவறு செய்தாலும் தம்பதியரின் வாழ்க்கை முற்றிலும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தருகிறது, கருத்துவேறுபாடு ஏற்பட்டு இல்லற வாழ்க்கை பிரிவை நோக்கி செல்கிறது.
இந்த இடர்பாடுகளை தவிர்க்க தம்பதியரின் சுய ஜாதக வலிமையை தெளிவாக உணர்ந்து வலிமை பெற்ற ஜாதகத்தை இல்லற வாழ்க்கையில் சங்கமிக்கும் பொழுது திருமணம் என்னும் உயர்ந்த பந்தம், இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும், சுகபோகங்களையும் தர தவறுவதில்லை, தனது வாழ்க்கை துணையாக கீழ்கண்ட ஜாதகத்தை தேர்வு செய்யலாமா ? என்ற ஓர் அன்பரின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஜாதகத்தை இன்றைய ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : துலாம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகியை திருமணம் செய்துகொள்ளலாம ? நட்ச்சத்திர பொருத்தங்கள் 9 உண்டு என்பதால் பொருத்தம் சிறப்பாக இருக்கின்றது  இல்லற  வாழ்க்கை யோகத்தை தரும் என்கின்றனர் தங்களின் ஆலோசனை  என்ன ? என்பது  ஜாதகரின் கேள்வி, பெரும்பாலும் திருமணம் பொருத்தம் காண்பதில் சுய ஜாதக வலிமை கருத்தில் கொள்ளாமல், தசவித பொருத்தம், தோஷ நிர்ணயம், ஏக திசை பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் போன்றவற்றிற்கு மட்டும் முக்கியத்துவம் தந்து திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வது  கல்லை கட்டிக்கொண்டு கடலில் இறங்குவதற்கு சமம் என்பதை கருத்தில் கொள்வது நலம், சுய ஜாதகம்  வலிமை பெறாமல் எந்த பொருத்தங்கள் இருந்தாலும் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையாது என்பதே உண்மை, மேற்கண்ட ஜாதகத்திற்கு நட்ச்சத்திர பொருத்தம் ஒன்றை மட்டும் அடிப்படையாக கொண்டு திருமணம் செய்ய பரிந்துரை செய்து இருக்கின்றனர், இது  எவ்வளவு பெரிய இன்னல்களை மணமகனுக்கு தரும் என்ற விஷயம் அறியாமலே, இனி ஜாதகியின் சுய ஜாதக வலிமையை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் .

திருமண வாழ்க்கையில் பெண்ணின் ஜாதகத்தில் அடிப்படையில் மிகவும் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகம் லக்கினமாக, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகியின் உயர்ந்த குணத்தையும், வளரும் சூழ்நிலை, மனவலிமை, உடல் ஆரோக்கியம் மற்றும் ஜாதகியின் கீர்த்தி புகழ்  போன்றவற்றை எடுத்துரைக்கும், இந்த ஜாதகிக்கு லக்கினம் எனும் முதல் பாவகம்  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, அடிப்படையில் லக்கினம் எனும் முதல் பாவகமே வலிமை அற்று காணப்படுகிறது என்பதும், ஜாதகி லக்கின பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை அனுபவிக்க பிறந்தவர் என்பதும் தெளிவாகிறது, குறிப்பாக  ஜாதகி பிற்போக்கு தனமான எண்ணமும், சுய ஆளுமை திறன் அற்றவர் என்பதும் உறுதியாகிறது.

அடுத்து குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகியின் இல்லற வாழ்க்கை, தனம் சார்ந்த முன்னேற்றம், இனிமையான வாக்கு வன்மை ஆகியவற்றை பறைசாற்றும், ஜாதகியின்  2ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்ப வாழ்க்கையில் பலவித இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு ஜாதகி ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதும், இனிமையான பேச்சு திறன் அற்றவர் என்பதும், பொருளாதார ரீதியான நெருக்கடி மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற தன்மையை தரும் என்பதும் உறுதியாகிறது, எனவே ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

அடுத்து தனது குலம் தழைக்க நல்ல வாரிசை நல்கும் அமைப்பான 5ம் வீடு  ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல, மேலும் ஜாதகிக்கு சுய சிந்தனை, சமயோசித புத்திசாலித்தனம், நுண்ணறிவு ஆகியவை திறம்பட செயலாற்ற வாய்ப்பில்லை, மேலும் ஜாதகிக்கு புத்திர பாக்கியம் சார்ந்த இன்னல்களும் ஏற்படும், தெய்வத்தின் அனுக்கிரகமும், இறையருளின் கருணையையும் ஜாதகி பெறுவது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும், மேலும் புதிய சிந்தனை, அறிவு சார்ந்த முயற்சிகள் என்பது ஜாதகிக்கு சற்று குறைவு என்பது கவலை அளிக்கும் விஷயமாகும், இதனால் ஜாதகியின் வாழ்க்கை துணை பெரும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை குறையும், வீண் வாதமும், பிற்போக்குத்தனமான எண்ணங்களால் சூழப்பட்ட மனநிலையை  பெற்றவர் என்பதும் உறுதியாகிறது.

அடுத்து கணவன் எனும் 7ம் வீடு  ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் கணவர் ஜாதகம் வலிமை பெற்று இருக்கவில்லை எனில் அவரின் கதி அதோகதிதான், அடிப்படையில் கணவன் மனைவி என்ற பிணைப்பே இருக்காது, தனது வாழ்க்கை துணையை ஓர் எதிரியாக பாவிக்கும் மனநிலையை ஜாதகிக்கு தந்துவிடும், திருமணத்திற்கு பிறகு கணவரின் அனைத்து செயல்பாடுகளும் முழுவதுமாக முடங்கும், ஜாதகரின் சுய வலிமை அனைத்தும் செயலற்று சூனியமாக மாறிவிடும், தம்பதியர் இருவருக்கும் மிகுந்த கருத்துவேறுபாடு உருவாகும், தம்பதியர் இருவரும் ஒருவர் வழியில் இருந்து ஒருவர் கடுமையான இன்னல்களை சந்திக்கும் நிலையை தரும், இல்லற வாழ்க்கையில் நிம்மதி என்பதே சிறிதும் இருக்காது, 7ம் வீடு பெண்களின் ஜாதகத்தில் பாதிக்கப்படுவது  கணவருக்கு மிகப்பெரிய நெருக்கடிகளை கொடுக்கும் என்பதும், இல்லற வாழ்க்கையில் பிரிவு ஏற்படும் என்பதும் கவலை தரும் விஷயமாகும்.

அடுத்து ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் வீடு  ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கும் ஜாதகியின் கணவருக்கும் பேரிழப்புகளையும், திடீர் இழப்புகளையும் தரும், விபத்து, உடல்நல குறைபாடு, தனம் சார்ந்த நஷ்டங்கள், என தம்பதியர் இருவரும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், மேலும் ஆயுள் பாவகம் என்பது  ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் வருமானம் மற்றும்  பொருளாதார வசதி வாய்ப்புகளை  குறிக்கும், இந்த பாவகமும் ஜாதகிக்கு பாதிக்கப்படுவது ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து கடுமையான இழப்புகளை சந்திக்கும் நிலைக்கு ஆளாவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அடுத்து அயன சயன ஸ்தானம் எனும் 12ம் வீடு ஜாதகிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு சில நன்மைகளை தந்த போதிலும், இல்லற இன்பம் எனும் விஷயங்களில் முரண்பட்ட வாழ்க்கையை தந்துவிடும் என்பதால் இதுவும் உகந்ததல்ல, எனவே  மேற்கண்ட ஜாதகியின் சுய  ஜாதக வலிமை என்பது மிகவும் வலிமை அற்று காணப்படுவது, ஜாதகியை மணந்துகொள்ள நினைக்கும் அன்பருக்கு நல்லதல்ல, ஒருவேளை மணந்துகொள்ள நினைக்கும் அன்பரது சுய ஜாதகம் மிகவும் வலிமை பெற்று இருந்தால் ஓரளவிற்கு ஜாதகர் சமாளிக்க கூடும் என்பது மட்டுமே ஆறுதலான, விஷயம்.

தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் அன்பர்கள்! அவரது சுய ஜாதக வலிமை நிலையை உணர்ந்து தேர்வு செய்வது நல்லது, இல்லை எனில் தனது  சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையும், யோக பங்கமாக மாறிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்க, மேலும் நட்ச்சத்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ராகுகேது தோஷம், ஏக திசை பொருத்தம் போன்றவை எல்லாம் ஓர் ஜாதகத்தை ஆளுமை செய்யாது, அதனால் யாதொரு பாதிப்பும் வாராது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் மட்டும் வலிமை பெற்று இருப்பதை உறுதி செய்து தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம், சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்து நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நட்ச்சத்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ராகுகேது தோஷம், ஏக திசை பொருத்தம் ஆகியவை இல்லை என்றாலும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதிக்கப்பட்டு, நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகள், வலிமை அற்ற  பாவக பலனை ஏற்று நடத்தினால், நட்ச்சத்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ராகுகேது தோஷம், ஏக திசை பொருத்தம் ஆகியவை இருந்தாலும் அதனால் யாதொரு பலனும் இருக்காது, இல்லற வாழ்க்கையும் சிறப்பிக்காது, என்பதை உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

திருமண வாழ்க்கை வெற்றியும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் !




 திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையே அன்றி வேறு எதுவும் இல்லை, பொதுவாக திருமண பொருத்தம் காணும் பொழுது பெரும்பாலான அன்பர்கள், நட்சத்திர பொருத்தம், ஜாதக கிரக நிலை, ஏக திசை சந்திப்பு, சர்ப்ப,களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நடைமுறையில் உள்ள திசை தரும் பலன்கள், ஜாதகத்தில் உள்ள தோஷ நிலைகள் என பல விஷங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றார்களே அன்றி, பொருத்தம் காணும் ஜாதகங்களின் பாவக வலிமை நிலையை பற்றி சிந்திப்பதே இல்லை, நட்சத்திர பொருத்தம், ஜாதக பொருத்தம், ஏக திசை பொருத்தம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருவதை விட சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு திருமண பொருத்தம் காணும் பொழுது தம்பதியரின் திருமண வாழ்க்கை மிகவும் வெற்றிகாரமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே!

திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும் முக்கிய விஷயங்கள் :

1) தம்பதியர் சுய ஜாதகங்களில் லக்கினம் எனும் முதல் பாவகமும், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும் மிகவும் வலிமையுடன் இருப்பது தம்பதியரின் இல்லற வாழ்க்கையை மேம்படுத்த உதவும், லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் ஆயுளையும், ஜாதகரின் உடல் மற்றும் நலம் மன நலம் என்ற விஷயங்களில் மிகுதியான நன்மையான பலன்களை வாரி வழங்கும், தம்பதியரின் குண நலன்களை லக்கினமே குறிப்பிடுவதால், லக்கினம் வலிமை பெரும் பொழுது தம்பதியரின் குண நலன்கள் மேம்பட்டு இருக்கும், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளும் தன்மையை தரும், இதுவே தாம்பத்திய வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.

குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் பேச்சு, வருமானம் மற்றும் குடும்ப வாழ்க்கையின் தன்மையை தெளிவு படுத்தும், 2ம் பாவகம் வலிமை பெரும் பொழுது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொண்ட நடந்து கொள்ளவும், இனிமையான பேச்சின் மூலம் குடும்ப வாழ்க்கையை செம்மையாக நடத்துவதற்கு வாய்ப்பை வாரி வழங்கும், 2ம் பாவகம் வலிமை இழக்கும் பொழுது, தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குடும்ப வாழ்க்கையை தமது பேச்சின் மூலமே கெடுத்து கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும், குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் வலிமை பெரும் பொழுது குடும்பம் நடத்த ஜீவ ஆதாரமான வருமானம் மிகுந்த அளவில் வந்து கொண்டே இருக்கும், பெரும்பாலான குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமாக அமைவது, தம்பதியரின் பேச்சும், அவர்களின் பொருளாதார நிலையுமே என்பதை கவனத்தில் கொள்வது நலம், தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் இந்த இரண்டாம் பாவகம் மிகவும் வலிமையுடன் அமையும் பொழுது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவேது.

2)  தம்பதியரின் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவாகம் மிகவும் வலிமையுடன் அமைவது நல்லது, பொதுவாக 5ம் பாவகத்தை குழந்தை பாக்கியத்தை தரும் அமைப்பாக அனைவரும் கருதுவார்கள், 5ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியருக்கு தனது குலம் தழைக்க நல்ல வாரிசை மட்டும் அமைத்து தருவதில்லை, தம்பதியரின் புத்திசாலிதனத்தையும், சமயோசித அறிவு திறனையும் வெகுவாக தமது வாழ்க்கையில் பயன்படுத்தும் சூழ்நிலையை தரும், எந்த ஒரு சிரமமான சூழ்நிலையையும் சிறப்பாக கையாண்டு வாழ்கையில் வெற்றி பெரும், சில ரகசியமான வித்தைகளை தம்பதியருக்கு வழங்கும், மேலும் குல தெய்வத்தின் பரிபூரண நல்லாசிகளுக்கு ஆளாகும் தன்மையை தருவதால், எந்த நேரத்திலும், எங்கு சென்றாலும் தம்பதியருக்கு உதவி செய்ய பலர் காத்துகொண்டு இருப்பார்கள் என்பது கவனிக்க தக்கது, தம்பதியருக்கு பிறக்கும் குழந்தை ஆண்வாரிசாக அமைவதும், அந்த குழந்தையின் வழியில் இருந்து யோக வாழ்க்கை தம்பதியர் பெறுவதற்கும் அடிப்படையாக அமைவது பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவக வலிமை நிலையே காரணமாக அமையும்.

3) தம்பதியரின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் வலிமையுடன் அமைவது அவசியம், தாம்பத்திய வாழ்க்கையில் தம்பதியர் இருவரின் மனம் மட்டும் உடல் இயக்கம், எண்ணங்களின் தன்மை என சகல விஷயங்களையும் இயக்குவதில் களத்திர பாவகமே முக்கிய பங்கு வகிக்கிறது, கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்துகொள்ளும் தன்மையை தருவது களத்திர பாவக வலிமையே, மனதில் உள்ள எண்ணங்களின் தன்மையை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் சொல்லாமலே புரிந்துகொள்வதும், பரஸ்பர அன்பு  காட்டுதலுக்கும் அடிப்படையாக அமைவது களத்திர பாவக வலிமையே, எந்த ஒரு சூழ்நிலையிலும் பிரிவு நிலையை தாராமல், தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வதற்கும், ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து இனிமையான களத்திர வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கும் களத்திர பாவக வலிமையே அடிப்படையாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

4)  தம்பதியரின் சுய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகம் வலிமையுடன் இருப்பது தம்பதியரின் ஆயுள் வலிமையை குறித்த போதிலும், ஒருவரின் வழியில் இருந்து ஒருவர் பெரும் வருமான வாய்ப்பையும் குறிக்கும், ஆயுள் பாவகம் மிகவும் வலிமையுடன் அமையும் பொழுது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர பொருளாதார தன்னிறைவை பெரும் வருமானங்களை பெறுவார்கள் என்பதை உறுதிபடுத்தும், மேலும் கணவனுக்கு மனைவியாலும், மனைவிக்கு கணவனாலும் வருமான வாய்ப்புகள் வந்து குவியும், தமது வாழ்க்கை துணையை ஜாதகர் அல்லது ஜாதகி எப்படி நடத்துவார் என்ற  விஷயத்தையும் ஆயுள் பாவக வலிமையை வைத்து நிர்ணயம் செய்யலாம்.

மேலும் தம்பதியரின் சுய ஜாதகங்களில் அயன சயன ஸ்தானமான 12ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் அந்தர வாழ்க்கையின் மகிழ்ச்சியையும், பரஸ்பர தாம்பத்திய இன்பங்களையும் வாரி வழங்கும், மேலும் திடீர் பொருள் வரவையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் வாழ்க்கையில் சகல வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கும் யோகத்தை தரும்.

5) தம்பதியரின் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி மற்றும் எதிர்வரும் திசை,புத்தி தம்பதியர் இருவருக்கும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்துவது திருமண வாழ்க்கையின் வெற்றியை 100% சதவிகிதம் நிர்ணயம் செய்யும், ( தம்பதியர் இருவருக்கும் ஏக திசை அதவாது ஒரே திசை நடைமுறையில் இருந்தாலும் சரி வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் திருமண வாழ்க்கையின் வெற்றி நிச்சயம் என்பதில் மாற்று கருத்து இல்லை) மேற்கண்ட 5ந்து விஷயங்களை கருத்தில் கொண்டு, திருமண வாழ்க்கையை  அமைத்து  தரும் பொழுது தம்பதியரின் வாழ்க்கை வாழையடி வாழையாக செழித்து ஓங்கும், சகல சௌபாக்கியமும் பெற்று வளமுடன் வாழும் வாய்ப்பை தரும், மேற்கண்ட 5ந்து விஷயங்கள் சிறப்பாக அமையும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகங்களுக்கு, நட்சத்திர பொருத்தம் தேவையில்லை, செவ்வாய் தோஷ நிர்ணயம் தேவையில்லை, சர்ப்ப தோஷ நிர்ணயம் தேவையில்லை, பொதுவாக பார்க்கும் தசவித பொருத்தங்களும் ( ரச்சு பொருத்தம் உற்பட ) எதுவும் தேவையில்லை அன்பர்களே, திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

மாறாக மேற்கண்ட பாவகங்கள்  6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெற்றோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ, இருப்பது திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களுக்கும், தோல்விக்கும் அடிகோலும், மேலும் நடைமுறையில் உள்ள திசை,புத்தி அல்லது எதிர்வரும் திசை,புத்தி  6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெற்ற அல்லது  பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் தம்பதியரின் இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாகவே அமையும் என்பதில் சந்தேகமே இல்லை, இதில் நட்சத்திர பொருத்தங்கள் பத்தும் ஒன்றும் செய்ய இயலாத, சம தோஷம், ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம் மற்றும் ஏக திசை பொறுத்தமும் ஒன்றும் செய்ய இயலாது. 


குறிப்பு :

 ஆக திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வது தம்பதியரின் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையையும், நடைமுறையில் உள்ள திசை மற்றும் எதிர்வரும் திசையின் வலிமையுமே என்பதில் சந்தேகமே இல்லை அன்பர்களே, எனவே திருமண பொருத்தம் காணும் பொழுது  பாவக வலிமையை கருத்தில் கொண்டும் திசை புத்தி ஏற்றுநடத்தும் பாவக வலிமையை கொண்டு நிர்ணயம் செய்யும் பொழுது திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 6 செப்டம்பர், 2012

ஜாதகத்தில் செவ்வாய் தோஷ நிர்ணயம்,செவ்வாய் பகவான் வழங்கும் நன்மை ! தீமை ? பகுதி 4


பொதுவாக சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் செவ்வாய் இருப்பின், அது செவ்வாய் தோஷம் என்று நிர்ணயம் செய்து , குறிப்பிட்ட ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் இதே போன்றே செவ்வாய் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் இருக்கும் ஜாதகத்தை சார்ந்தவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் பல ஜோதிடர்கள் தீர்மானம் செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் . மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தரும் நன்மை தீமையை பற்றி விரிவாக 12 லக்கினத்தை அடிப்படையாக வைத்து  பார்ப்போம் .

துலாம் லக்கினம் :

2 ம் பாவகம் விருச்சகத்தில் ஆட்சி பெற்று அமரும் செவ்வாயால் குடும்ப ஸ்தானம் 100 சதவிகிதம் பாதிக்க படும் , எனவே ஜாதகருக்கு தாமதமாக  திருமணம் வாழ்க்கை அமையும் , மேலும் வருமானம் பாத்திக்கும் , வாக்கு தவறும் தன்மையும் , பேச்சு திறமை அற்றவராகவும் , வாக்கின் வழியில் அதிக துன்பத்தை அனுபவிக்கும் நிலையும் ஏற்ப்படும் , இங்கு அமரும் செவ்வாய் களத்திர பாவகத்திர்க்கும் கெடுதல் செய்வதால் ஜாதகரின் இல்லற வாழ்க்கை கேள்வி குறியாக மாற அதிக வாய்ப்புகளை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொள்வார் .எனவே செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் , குடும்பம் , களத்திரம், ஆகிய மூன்று பாவக அமைப்பிற்கும் கெடுதலே செய்யும் .

4 ம் பாவகம் மகரத்தில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு தொழில் வழியில் அதிக நன்மையையும் , களத்திர வழியில் அதிக நன்மைகளும் , லக்கினத்திற்கு மிகப்பெரிய யோகத்தையும் தரும் , நிலையான சொத்து சுகம் , வண்டி வாகன யோகம் , நிலபுலன்கள் , சகல வசதிகளும் கொண்ட வீடு , நல்ல சுகபோக வாழ்க்கை , அருமையான வாழ்க்கை துணை , வாழ்க்கை துணையின் வழியில் இருந்து அதிக நன்மைகள் , முன்னேற்றங்கள் , கூட்டு தொழில் செய்வதால் வரும் அபரிவிதமான யோக வாழ்க்கை , நல்ல நண்பர்கள் சேர்க்கை , பூரண ஆயுள் , தொழில் துறையில் விரைவான முன்னேற்றம் , குறிப்பாக சரக்கு வாகனம் சார்ந்த தொழில்களில் அபரிவிதமான யோகம் என,  செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் , குடும்பம் , களத்திரம், ஆகிய மூன்று பாவக அமைப்பிற்கும் 100 சதவிகித நன்மையே தரும் .

7 ம் பாவகம் மேஷத்தில் ஆட்சி பெற்று அமரும் செவ்வாய் ஜாதகருக்கு அதிக தீமையான பலன்களையே தரும், குறிப்பாக லக்கினம் , குடும்பம் , களத்திரம் , மூன்று பாவகங்களுக்கும் அதிக நன்மையே தரும் , திருமண வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் , திருமண தாமதத்தையும் , வருவாய் இழப்பையும் , கல்வியில் தடையையும் , குடும்ப வாழ்க்கையில் அதிக சிக்கல்களையும் , நிம்மதி இன்மையையும் , உடல் நலத்தில் அதிக தொந்தரவுகளையும் , முன்னேற்றம் இல்லாத சூழ்நிலையையும் , ரத்த சம்பந்த பட்ட வியாதிகளையும் , அதிக கோப உணர்வினையும் , அவசரபட்டு செய்யும் காரியங்களால் அதிக இன்னல்களையும் தரும். எனவே செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் , குடும்பம் , களத்திரம், ஆகிய மூன்று பாவக அமைப்பிற்கும் கெடுதலே செய்யும் .

8 ம் பாவகம் ரிஷபத்தில் அமரும் செவ்வாய் குடுப்ப ஸ்தானத்திற்கு மற்றும் அதிக நன்மைகளை தரும் , களத்திர பாவகத்திர்க்கும் , லக்கினத்திற்கும் அதிக தீமையான பலனையே தரும் , ஜாதகருக்கு இளைமையில் திருமணம் நடந்தாலும் மனதிற்கு இசைந்த மனைவி அமையாது , நல்ல நண்பர்கள் இருக்க மாட்டார்கள் , மனைவி வழியிலும், நண்பர்கள் வழியிலும் அதிக இழப்புகளையும் , முன்னேற்ற தடைகளையும் தரும் , மேலும் அதிக மன உளைச்சலையும், பொது காரியங்களில் தோல்விகளையும் தரும் என்பதே உண்மை இங்கு அமரும் செவ்வாய் குடும்ப ஸ்தானத்திற்கு நன்மையையும் , களத்திரம் மற்றும் லக்கினத்திற்கு அதிக கெடுதலையும் தரும் .

12 ம் பாவகம் கன்னியில் அமரும் செவ்வாய், ஜாதகருக்கு குடுப்ப ஸ்தானத்திற்கு மற்றும் அதிக நன்மைகளை தரும் , களத்திர பாவகத்திர்க்கும் , லக்கினத்திற்கும் அதிக தீமையான பலனையே தரும் , குறிப்பாக ஜாதகரின் வருமானம் அனைத்தும் வீண் விரையம் ஆகும் , மனைவி வழியில் இருந்து எந்த சுக வாழ்வையும் ஜாதகர் அனுபவிக்க இயலாது , வாழ்க்கை துணையே ஜாதகருக்கு ஜென்ம எதிரியாக மாறிவிடும் வாய்ப்பை தரும், நண்பர்களும் சிலகாலமே ஜாதகர் நட்பு பாராட்ட முடியும் பிரிவை தவிர்க்க இயலாது , வெளிநாடு , வெளியூர் சென்றால் ஜாதகர் அதிக கவனத்துடன் செல்வது அவசியம் , இல்லை எனில் ஜாதகரின் பாடு படு திண்டாட்டமாகிவிடும் .எனவே இங்கு அமரும் செவ்வாய் குடும்ப ஸ்தானத்திற்கு நன்மையையும் , களத்திரம் மற்றும் லக்கினத்திற்கு அதிக கெடுதலையும் தரும் .

விருச்சக லக்கினம்

2 ம் பாவகம் தனுசு ராசியில் அமரும் செவ்வாய் லக்கினம் , குடும்பம் , களத்திரம் என்ற மூன்று அமைப்பிற்கும் 100 சதவிகித தீமையான பலனையே தரும் , ஜாதகர் 35 வயதிற்கு மேல் திருமணம் செய்துகொள்வது சிறந்தது , இல்லை எனில் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் , மேலும் பல தார யோகம் ஏற்ப்படும் , பெண்கள் வழியில் இருந்து அதிக துன்பத்திற்கு ஆளாக வேண்டும் , இந்த அமைப்பு அதிகம் ஜாதகரை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி விடும் , எனவே எச்சரிக்கையுடன் வாழ்க்கையை நடத்துவது அவசியம் , மேலும் கல்வியில் அதிக தடைகளையும், தொழில் துறையில் அதிக இன்னல்களையும் ஜாதகர் சந்திக்க வேண்டி வரும் , எனவே இங்கு அமரும் செவ்வாய் குடும்ப , களத்திரம் மற்றும் லக்கினத்திற்கு அதிக தீமையான பலனையே தரும் .

4 ம் பாவகம் கும்பத்தில் அமரும் செவ்வாய் ஜாதகரின் வாழ்க்கையில் அளப்பரிய முன்னேற்றத்தை நிச்சயம் தரும் , குறிப்பாக வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்தும் , லக்கினம் வழியில்  இருந்தும், குடும்ப அமைப்பிலிருந்து 100 சதவிகித நன்மையே செய்யும் , யோகமான மனைவி ஜாதகருக்கு நிச்சயம் கிடைப்பார் , குடும்ப வாழ்க்கையில் அபரிவிதமான நன்மைகளும் , அதிக வருமானத்தையும் , வாழ்க்கையில் அடிக்கடி அதிர்ஷ்ட அமைப்புகள் மூலம் அனைத்து யோகமும் ஜாதகருக்கு கிடைக்கும் , செவ்வாய் பகவானால் அதிக யோக பலன்களை அனுபவிக்கும் அமைப்பு இது எனவே இங்கு அமரும் செவ்வாய் இங்கு அமரும் செவ்வாய் குடும்ப ஸ்தானத்திற்கு களத்திரம் மற்றும் இலக்கின அமைப்பிற்கு மிக பெரிய  நன்மையையும் , அதிர்ஷ்டத்தையும்  தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

7 ம் பாவகம் ரிஷபத்தில் அமரும் செவ்வாய் இலக்கின அமைப்பிற்கு மட்டும் நன்மையை செய்யும் , களத்திரம் குடும்பம் என்ற இராண்டு பாவக அமைப்பிற்கும் அதிக தீமையான பலனையே செய்யும் , இலக்கின அமைப்பில் இருந்து ஜாதகர் பூரண ஆயுளையும் , வெற்றி , புகழ் , கல்வி போன்ற அமைப்புகளை மிக பெரிய நன்மைகளை வழங்கும் , ஆனால் குடும்ப வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் , துன்பத்தையும் தரும் , நல்ல நண்பர்கள் அமைவது அரிது , வருமானத்தை ஜாதகர் கவனமாக கையாள வேண்டும் இல்லை எனில் உதவி செய்ய யாரும் வர மாட்டார்கள் , முன்னேற்றம் தடை ஏற்ப்பட அதிக வாய்ப்பு இருப்பதால் அனைவரிடமும் அதிக கவனத்துடன் பழகுவது அவசியம் , ஜாதகர் யாரிடமும் பகைத்து கொள்வது அவ்வளவு நன்மையை தருவதில்லை , எனவே இங்கு அமரும் செவ்வாய் லக்கினத்திற்கு மட்டும் நன்மையை செய்யும் , களத்திரம் , குடும்ப ஸ்தானத்திற்கு அதிக கெடுதலையே தரும் .

8 ம் பாவகம் மிதுனத்தில் அமரும் செவ்வாய் களத்திர பாவக அமைப்பிற்கும் , குடும்ப ஸ்தான அமைப்பிற்கும் , 100 சதவிகித நன்மையை செய்யும் , ஜாதகருக்கு நல்ல இல்லற வாழ்க்கை துணை அமையும் , குடும்ப வாழ்க்கை மிகவும்  மகிழ்ச்சியானதாக  அமைந்துவிடும் , வருமானத்திற்கு எந்த காலத்திலும் பஞ்சம் வராது , வாக்கு பலிதம் உண்டாகும் , வாழ்க்கை துணையின் சகோதர அமைப்பில் இருந்து ஜாதகருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் , நல்ல நண்பர்கள் , நல்ல குடும்பம் , நிறைவான வருமானம் , கூட்டு தொழில் செய்வதால் அதிக லாபம் என களத்திரம் , குடும்பத்திற்கு அதிக நன்மையையும் , லக்கினத்திற்கு எதிர்பாராத இழப்புகளையும் தரும் லக்கினத்திற்கு மட்டும் அதிக கெடுதலை செய்யும் , உடல் ரீதியான தொந்தரவுகள் தர கூடும் .

12 ம் பாவகம் துலாம் ராசியில் செவ்வாய் அமர்வது லக்கினத்திற்கு அதிக கெடுதலையும் , குடும்பம் மற்றும் களத்திர பாவகத்திர்க்கு அதிக நன்மைகளை வழங்கும் , திருமண வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டத்தை தரும் அமைப்பாக இதை கருதலாம் , மேலும் தன்னம்பிக்கை ஜாதகருக்கு அதிகமாகும் , எதிரிகாளால் நன்மையே ஏற்ப்படும் , வருமானத்தில் குறைவில்லா வாழ்க்கையை தரும் , குறிப்பாக நண்பர்களின் உதவியால் வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பை செவ்வாய் பாகவான் நிச்சயம் தருகிறார் , கட்டிட கட்டுமான  துறை சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கிவிடுகிறார் இங்கு அமரும் செவ்வாய் பகவான் , எனவே செவ்வாய் இங்கு அமருவது களத்திரம் , குடும்பத்திற்கு அதிக நன்மையையும் , லக்கினத்திற்கு தீமையான பலனையே தருகிறார் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ஜாதகத்தில் செவ்வாய் தோஷ நிர்ணயம்,செவ்வாய் பகவான் வழங்கும் நன்மை ! தீமை ? பகுதி 2



பொதுவாக சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் செவ்வாய் இருப்பின், அது செவ்வாய் தோஷம் என்று நிர்ணயம் செய்து , குறிப்பிட்ட ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் இதே போன்றே செவ்வாய் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் இருக்கும் ஜாதகத்தை சார்ந்தவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் பல ஜோதிடர்கள் தீர்மானம் செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் . மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தரும் நன்மை தீமையை பற்றி விரிவாக 12 லக்கினத்தை அடிப்படையாக வைத்து  பார்ப்போம் . 

முதல் பகுதியின் தொடர்ச்சி ...


மிதுன லக்கினம் :

2 ம் பாவகம் கடகத்தில் செவ்வாய் அமர்வது மிதுன இலக்கின ஜாதகருக்கு நல்ல சொத்து சுகத்தையும் , வண்டிவாகன யோகத்தையும் , நிலையான வருவாயினையும் , பேச்சில் இனிமையும் , குடும்ப வாழ்க்கையில் அளவில்லா மகிழ்ச்சியினையும் நிச்சயம் தருவார் , மேலும் கடக ராசியில் அமரும் செவ்வாய் தாய் வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை நிச்சயம் தருவார் , மேலும் ஜாதகர் நல்ல குண இயல்பினை நிச்சயம் பெற்றிருப்பார் , முக்கியமாக நிலம் , வீடு , இடம் சம்பந்த பட்ட தொழில் துறையில் ஜாதகருக்கு அபரிவிதமான யோகம் கிடைக்கும் , மேலும் சுய ஜாதகத்தில் மிதுன லக்கினத்திற்கு 2 ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் இங்கு அமரும் செவ்வாய் பகவான் , 100 சதவிகிதம்  மிகுந்த யோக பலனையே நிச்சயம் செய்வார் , இந்த இடத்தில் செவ்வாய் பகவானால் எவ்வித பாதிப்பும் நிச்சயம் ஏற்ப்பட வாய்ப்பு இல்லை .

4 ம் பாவகம் கன்னியில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு சிறு  முதலீடு செய்யும் தொழில்களில் அபரிவிதமான முன்னேறத்தை தருகிறார் , மேலும் நிலையான உடல் வலிமையையும் மன  வலிமையையும் அதிக அளவில் தந்துவிடுகிறார் , முக்கியமாக வட்டிக்கு பணம் தரும் தொழில்கள் , நகையின் பேரில் வட்டிக்கு பணம்தரும் தொழில்கள் , ஜாதகர்ருக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை தருகிறது , மேலும் ஜாதகர் வண்டி வாகனத்தின் பேரில் கடன் தருவது , வீடு நிலத்தின் பேரில் கடன் தருவது போன்ற தொழில்கள் சிறப்பாக அமைகிறது , நல்ல குடும்ப வாழ்க்கை ஜாதகருக்கு அமைய இந்த இடத்து செவ்வாய் பகவான் அருள் புரிகிறார் , மேலும் இந்த இடத்தில் அமரும் செவ்வாய் கணவன் மனைவி ஒற்றுமையுடன் குடும்பம் நடத்த உதவி செய்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் , எனவே செவ்வாய் பாகவான் மிதுன லக்கினத்திற்கு 4 ம் பாவகத்தில் அமரும் பொழுது  100 சதவிகிதம்  யோக பலனையே  தருகிறார் .

7 ம் பாவகம் தனுசு ராசியில் அமரும் செவ்வாய் , ஜாதருக்கு 6 ம் பாவகத்திர்க்கும் , 7 ம் பாவகத்திர்க்கும் , 11 ம் பாவகத்திர்க்கும் மேலும்  ஜாதகருக்கும் நன்மையை தருவதில்லை , மிதுன இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு இந்த இடத்தில் செவ்வாய் அமர்வது உடல் மன ரீதியாக தொந்தரவுகளையும்  , கடன் தொந்தரவுகளையும் , தேவையில்லாமல் மற்றவரை பகைத்துக்கொள்ளும் சூழ்நிலையையும் , தீய நண்பர்கள் சேர்க்கையையும் , வாழ்க்கை துணையின் வழியில் அதிக துன்பத்தையும் , முன் கோபத்தால் ஜாதகருக்கு அதிக இளைப்பையும் , பிடிவாத குணத்தால் தனக்கு கிடைக்க வேண்டிய யோக நிலையினை உதறும் சூழ்நிலையையும் தந்துவிடுகிறது , ஒருவேளை மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு சிறிதளவு நன்மை நடக்க வாய்ப்பு உண்டு, இல்லை எனில் ஜாதகர் இந்த பாவக வழியில் இருந்து நன்மையை நிச்சயம் பெற முடியாது .

8 ம் பாவகம் மகரத்தில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பெரும் செல்வந்தன் ஆகும் யோகத்தை தருகிறது , தனது வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து அதிக செல்வ வளத்தை தருகிறது , திருமணத்திற்கு பிறகு ஜாதகருக்கு மிகசிறப்பான யோக வாழ்க்கையினை ஜீவன வழியில் இருந்து வாரி வழங்கி விடுகிறது , நண்பர்களாலும் , உறவினர்களாலும் அதிக நன்மையையே ஜாதகருக்கு கிடைக்கின்றது , திருமண வாழ்க்கையில் அதிக மன மகிழ்வுடன் இருக்கும் தம்பதியர் என இவர்களை சொல்ல இயலும் , மேலும் ஜாதகுக்கு தனது தகப்பானார் வழியில் இருந்தும் அதிக யோக பலன்களே கிடைக்க பெறுவார் இல்லை எனில் ஜீவன வழியில் அபரிவிதமான யோகம் ஏற்படுகிறது , எனவே செவ்வாய் பாகவான் மிதுன லக்கினத்திற்கு 8 ம் பாவகத்தில் அமரும் பொழுது  100 சதவிகிதம்  யோக பலனையே  தருகிறார் .

12 ம் பாவகம் ரிஷபத்தில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு மனநிம்மதியை கெடுத்து விடுகிறார் , மேலும் முதலீடு செய்யும் தொழில்களில் அதிக இழப்புகளையும் , குடும்ப வாழ்க்கையில் அதிக துன்பங்களையும் , வருமான பற்றாக்குறையையும் ஏற்ப்பட செவ்வாய் பகவான் காரணம் ஆகி விடுகிறார் , ஒருவகையில் ஜாதகர் புதிய முயற்ச்சிகளில் அதிக லாபத்தையும் , புதிய கண்டுபிடிப்புகள் , புதிதாக சந்தைக்கு வரும் பொருட்களை விற்பனை செய்வதால் அபரிவிதமான செல்வ நிலையை தருகிறார் , வரும் செல்வங்கள் அனைத்தையும் ஜாதகர் கவனமாக சேமித்து வைக்க வில்லை எனில் , அனைத்தும் விரையம் ஆகிவிட வாய்ப்பு உண்டு , மேலும் ஜாதகருக்கு அதிக கோப உணர்வை தந்து தனது வாழ்க்கையில் முன்னேற்ற தடைக்கு தானே காரணமாக வாய்ப்பை ஏற்ப்படுத்திவிடுகிறார் ,மிதுன லக்கினத்திற்கு 12 ல் ரிஷபத்தில் செவ்வாய் அமர்வது அதிக  நன்மையை செய்வதில்லை .



கடக லக்கினம் :

2 ம் பாவகம் சிம்மத்தில் செவ்வாய் அமர்வது ஜாதகருக்கு வாழ்க்கை துணையின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தருகிறார் , ஆனாலும் வருமான ஆதாயத்தை அதிகம் தந்துவிடுகிறார் , மேலும் தனது பூர்விக அமைப்பில் பல இன்னல்களை தந்து ஜாதகரின் முன்னேறத்தை தடுத்து விடுகிறார் , மேலும் குடும்ப வாழ்க்கையில் சிரமங்கள் இருந்தாலும் வெளியில் தெரியாமல் குடும்பம் நடத்தும் யோகம் ஜாதகருக்கு உண்டு , சில நேரங்களில் வாக்கு தவறி நடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படலாம் , எனவே ஜாதகர் தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது , கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியாமாகிறது . தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் களத்திரம் மற்றும் குடும்ப ஸ்தானங்கள் நல்ல வலிமையுடன் இருக்கும் ஜாதகமாக பார்த்து தேர்வு செய்வது ஜாதகரின் வாழ்க்கையை இனிமையாக இருக்க வழி வகுக்கும் .

4 ம் பாவகம் துலாம் ராசியில் செவ்வாய் அமரும் செவ்வாய் பகவான் ஜாதகருக்கு பூர்விக அமைப்பில் இருந்தும் , தொழில் , குடும்ப அமைப்பில் இருந்து மிகப்பெரிய அதிர்ஷ்ட வாழ்க்கையை ஜாதகருக்கு தருகிறது , தனது பூர்விகத்தில் ஜாதகர் குடியிருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாழ்க்கையை ஜாதகருக்கு தருகிறது , ஜீவன வழியில் படிப்படியான முன்னேற்றமும் , அளவில்லா சொத்து சுக வாழ்க்கையையும் தந்து அருள் புரிகிறார் செவ்வாய் பகவான் , மேலும் ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து நல்ல ஆதரவை இறுதிவரை ஜாதகருக்கு தருவது செவ்வாய் தரும் நன்மையான பலன் , மேலும் ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டம்மிக்கவர்களாக காணப்படுகின்றனர் . எனவே செவ்வாய் பாகவான் கடக லக்கினத்திற்கு 4 ம் பாவகத்தில் அமரும் பொழுது  100 சதவிகிதம்  யோக பலனையே  தருகிறார் .

7 ம் பாவகம் மகரத்தில் அமரும் செவ்வாய் பகவான் , கடக இலக்கின ஜாதாருக்கு மிகுந்த அதிர்ஷ்ட வாழ்க்கையையே தருகிறார் , குறிப்பாக சுய தொழில் செய்வதால் அதிக லாபத்தையும் , கூட்டு தொழிலால் ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சியையும் , களத்திர வழியில் இருந்து மன ரீதியாக ஆதரவையும் , பொருளாதார உதவியையும் , மக்கள் செல்வாக்கால் அதிகார பதவியையும் , நிலையான மக்கள் ஆதரவையும் , நண்பர்கள் வழியில் இருந்து அதிக நன்மைகளையும் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுகிறார் , பொதுவாக இங்கு அமரும் செவ்வாய் ஜாதகருக்கு விரைவான முன்னேற்றத்தையும் , வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து யோக வழ்வினையுமே தருகிறார் என்பதே உண்மை எனவே செவ்வாய் பாகவான் கடக லக்கினத்திற்கு 7 ம் பாவகத்தில் அமரும் பொழுது  100 சதவிகிதம்  யோக பலனையே  தருகிறார் . 

8 ம் பாவகம்  கும்பத்தில்  அமரும் செவ்வாய் பகவான் , கடக இலக்கின ஜாதகருக்கு பூர்விக அமைப்பில் இருந்து 100 சதவிகித தீமையான பலன்களையே தருகிறார், ஆனால் ஜீவன வழியில் இருந்து 200 சதவிகித நன்மையை செய்கிறார் , யாருடைய உதவியும் இன்றி சுயமாக வாழ்க்கையில் தொழில் ரீதியாக வெற்றி பெரும் ஜாதக அமைப்பில்,  இந்த நிலை அதிகம் காணப்படுகிறது , மேலும் குடும்ப வாழ்க்கையில் எவ்வித சிக்கலையும் தருவதில்லை இந்த கும்ப செவ்வாய் , களத்திர வாழ்க்கையிலும் சிக்கல்கள் ஏற்ப்படாமல் நன்மையே தருகிறார் , இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் தனது பூர்வீகத்தில் குடியிருக்கும் வரை எவ்வித முன்னேற்றமும் பெறுவதில்லை என்பதை தவிர வேறு எந்த குறையும் செவ்வாய் பகவானால் ஏற்படுவதில்லை .

12 ம் பாவகம்  மிதுனத்தில் அமரும் செவ்வாய் பகவான் , ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கையிலும் , களத்திர வாழ்க்கையிலும் அதிக நன்மைகளையே தருகிறார் , மேலும் வாழ்க்கை துணையின் சகோதர வழியில் இருந்து நல் ஆதரவினையும் , அவர்கள் உதவியால் ஜாதகர் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பினையும் தருகிறார் , மன நிம்மதியான வாழ்க்கையினையும் , குடும்ப வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தையும் , எடுக்கும் முயற்ச்சிகளில் நல்ல வெற்றியினையும் இங்கு அமரும் செவ்வாய் பகவான் தர தவறுவதில்லை , தனது சிந்தனை ஆற்றலால் எவ்வித சூழ்நிலையையும் ஜாதகர் சமாளிக்கும் ஆற்றல் இயற்கையாக அமைந்து விடுகிறது , மேலும் தனது சகோதர அமைப்பிற்கு அதிக உதவிகளை செய்யும் யோகமும் ஜாதகருக்கு கிடைக்கின்றது , சமுதாயத்தில் நல்ல மதிப்பு ,மரியாதை ,செல்வாக்கு ஏற்ப்படுகிறது , ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கின்றது ,எனவே செவ்வாய் பாகவான் கடக லக்கினத்திற்கு 12 ம் பாவகத்தில் அமரும் பொழுது  100 சதவிகிதம்  யோக பலனையே  தருகிறார் . 



வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696