கூட்டுதொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூட்டுதொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஜூன், 2018

சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்யலாமா ? திருமணம் அமைவது எப்பொழுது ?


கேள்வி : 

எனது ஜாதகப்படி நான் சுய தொழில் செய்யலாமா ? அல்லது கூட்டு தொழில் செய்யலாமா ? திருமணம் அமைவது எப்பொழுது? இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்குமா ? 5ல் கேது புத்திர தோஷத்தை தருமா ? நடை பெரும் சூரியன் திசை, எதிர்வரும் சந்திரன் திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் யோகமிக்கதாக அமையுமா ?

பதில் :

தங்களது ஜாதக வலிமை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் முன் நாம் சில விஷயங்களை கருத்தில் எடுத்துக்கொள்வது நல்லது, ஒருவரது சுய ஜாதக வலிமை என்பது லக்கினம் உற்பட பனிரெண்டு பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது, மேலும் சுய ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், நடைபெறும் எதிர்வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமங்கள் ஏற்று நடத்தும் பாவக வலிமையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஜாதகர் யோக அவயோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவராகிறார், இனி தங்களது ஜாதக வலிமை பற்றியும், தங்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் பற்றியும் சற்று விரிவாக பார்ப்போம்.


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஷ்வினி 3ம் பாதம்

எனது ஜாதகப்படி நான் சுய தொழில் செய்யலாமா ? அல்லது கூட்டு தொழில் செய்யலாமா ?

பொதுவாக சுய தொழில் செய்வது அல்லது கூட்டு தொழில் செய்வது இரண்டும் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் அமைவதே சகல நிலைகளில் இருந்தும் சிறப்புகளையும் லாபங்களையும் வாரி வழங்கும், தொழில் நிர்ணயம் என்பது ஜீவன ஸ்தானம் எனும் ஒரு பாவகத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு இயங்குவதல்ல, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் அடிப்படையிலேயே தொழில் மற்றும் அதுசார்ந்த வெற்றிகள்   ஒருவருக்கு சிறப்பாக அமையும், கேந்திர பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கான கவுரவம் அந்தஸ்து சுயமரியாதையை உறுதிப்படுத்தும், கோண பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கான அறிவார்ந்த செயல்கள், புத்திசாலித்தனம், தொழில் நுணுக்கம் மற்றும் இறை அருளின் கருணையை உறுதிப்படுத்தும், மறைவு ஸ்தானங்கள் ஜாதகருக்கான அளவில்லா பொருளாதர வெற்றியையும், நிம்மதி மற்றும் நிதான செயற்பாடுகளை உறுதிப்படுத்தும், தொழில் வெற்றிகளை 100% விகிதம் பெற ஓர் ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையும் அதி அவசியமானதாக உள்ளது, இந்த அமைப்பை பெரும் ஜாதகரே மிகசிறந்த தொழில் அதிபராக பிரகாசிக்கும் வல்லமையை பெறுகின்றார்.

 தங்களது ஜாதகத்தில் அப்படிப்பட்ட  ஓர் வலிமையான நிலை இருப்பது வரவேற்கத்தக்கது, தாங்களும் ஓர் தலைசிறந்த தொழில் அதிபராக விளங்குவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பரே ! மேலும் தங்களது சுய ஜாதகத்தில் பாவக வலிமை என்பது மிகவும் அபரிவிதமானதாக அமைந்து இருப்பது வரவேற்கத்தக்கது, அதுபற்றி இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

சுய ஜாதகத்தில் வலிமையான பாவக தொடர்புகள் :

 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து ஆரோக்கியமான உடல், தெளிவான மனம், கூட்டாளியால் யோகம், நன்பர்கள் வழியிலான நன்மைகள், வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் அதிர்ஷ்டம் மற்றும் லாபம், எதிர்பாலின சேர்க்கை பொதுமக்கள் ஆதரவு, அரசு பதவி, சிறந்த நிர்வாக திறமை, விரோதிகள் மறைந்து நன்மை உண்டாகுதல் என்ற வகையிலும், 7ம் பாவக  வழியில் இருந்து சக்தி நிறைந்த கூட்டு தொழில் அல்லது கூட்டாளி, யோகம் நிறைந்த வாழ்க்கை துணை, பொதுமக்கள் ஆதரவு, செய்தொழில் வழியில் பிரபல்ய யோகம், வியாபாரத்தில் அபரிவித வளர்ச்சி என்ற அமைப்பில் நன்மைகளை வாரி வழங்கும்.

2,3,8,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகம், கனிம பொருள் சார்ந்த வியாபாரத்தில் வெற்றி, தாய் வழியிலான சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம், இனிமையான பேச்சு திறன், வாக்கு வன்மை, உறுதிமிக்க செயல்பாடுகள் என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகம், முதுமையில் செல்வாக்கு, பெண்கள் ஆதரவு, போட்டி பந்தயங்களில் வெற்றி, போக்குவரத்து தொழில் வழியில் லாபம், முயற்சி செய்யும் காரியங்கள் வெற்றி பெரும் தன்மை, விவசாயம் மூலம் வருமானம், அரசியல்வாதிகள் மூலம் லாபம் பெரும் தன்மை, தைரியம், தன்னம்பிக்கை, சுய ஆளுமை திறன், வெற்றி பெரும் வல்லமை என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, எதிர்பாராத திடீர்இழப்பு, மருத்துவ செலவினங்கள், குழப்பம், வியாதி, மனஇறுக்கம் எல்லாவகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகனம் சார்ந்த விஷயங்களில்  முதலீடு செய்யும் யோகமும், அதன் வழியிலான முன்னேற்றங்களும், விவசாயம் அல்லது விவசாய உபகரணம் சார்ந்த பொருட்கள் வழியிலான அதிர்ஷ்டம் மற்றும்  லாபம் உண்டாகும்.

10,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 10ம் பாவக வழியில் இருந்து உத்தியோக வெற்றி, சுய தொழில் விருத்தி, வியாபாரம் மற்றும் தொழில் முதலியவற்றில் அபரிவித அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி, கம்பீரம் தீர்க்கமான வாத திறமை, சுய தொழில் செய்வதால் செல்வச்செழிப்பு என்றவகையிலும், 11ம் பாவக வழியில் இருந்து மிகப்பெரிய பதவிகளை அலங்கரிக்கும் யோகம், அரசு மற்றும் தனியார் துறை வழியிலான அதிஷ்டம், தகப்பனாருக்கு சொத்து சுக சேர்க்கை, சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சாதனை படைக்கும் வல்லமை, முற்போக்கு சிந்தனை, நேர்மறை எண்ணம் மூலம் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெரும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

5,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஆரோக்கியமான உடல் நிலை, தெளிவான மனநிலை, சிறந்த மனவலிமை, அதிபுத்திசாலித்தனம், பல்துறை ஆய்வுத்திறன், அமைதியான சூழ்நிலையை விரும்புதல், எப்பொழுதும் மகிழ்ச்சி, சமாதான விருப்பம், சுய ஒழுக்கம் மற்றும் நற்பண்புகள் என்ற வகையிலும், 6ம் பாவக வழியில் இருந்து பயணம் மூலம் லாபம், சமாதான முறையில் வெற்றி, மதசம்பதமான யோக வாழ்க்கை, பட்டய கல்வியில் தேர்ச்சியை தரும், 9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறந்த பண்புகள் அடிப்படையிலே அமைந்து இருக்கும், ஒழுக்கம் மற்றும் பண்பு நிறைந்த மனம், அனைவரையும் தம்மைப்போல் கருதும் சமதர்மத்தை போற்றும் தன்மையை பெற்றவராக திகழ்வார்.

4ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு விபத்து, மருத்துவ செலவினங்களை தரும், தனது பெயரில் உள்ள சொத்துக்களை இழக்கும் தன்மை, இளமையில் போராட்டம், நஷ்டம், வறுமை, துரதிர்ஷ்டம், மனக்குழப்பம், அதிக வேலைப்பளு என்றவகையில் இன்னல்களை தரும்.

தங்களது சுய ஜாதகத்தில் 4,8ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது, மேலும் பெரும்பாலான வீடுகள் தொடர்பு பெரும் 4,7,10ம் பாவகங்கள் அனைத்தும் சர இயக்க ராசிகளான மேஷம் கடகம் மற்றும் துலாம் ராசியில் வியாபித்து நிற்பது பரிபூர்ண நன்மைகளை தங்களுக்கு வாரி வழங்கும், மேலும் ஜீவன ஸ்தானம் கால  புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாக அமைவது தங்களை மிகசிறந்த வியாபாரியாக பிரகாசிக்க செய்யும், துலாம் சர காற்று ராசி என்பதால் தங்களின் தொழில் சார்ந்த அறிவு திறன் மற்றும் நுண்ணறிவு மிகசிறந்த எதிர்காலத்தை வாரி வழங்கும்.

 சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் வலிமையாக  உள்ளதால் சுய தொழில்  செய்வதே சிறப்பான நன்மைகளை தரும், பரிபூர்ண வெற்றியும் உண்டாகும், கூட்டு தொழில் வழியிலான வெற்றி மேலும் சிறப்பானதாகவே அமையும் என்பது கவனிக்கத்தக்கது, தங்களின் விருப்பம் சார்ந்த முடிவுகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள்.

திருமணம் தங்களுக்கு சூரியன் திசை புதன் புத்தி காலத்தில் நடைபெறும், சூரியன் திசையும், புதன் புத்தியும் ஏக காலத்தில் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துத்தரும், திருமணத்திற்க்கு பிறகான வாழ்க்கை யோகமிக்கதாக அமையும்.

5ல் அமர்ந்த கேது தாம் அமர்ந்த பாவகத்திற்க்கு வலிமை சேர்ப்பதால், 5ம் பாவகம் 100% விகித வலிமையுடன் இருக்கின்றது, எனவே தங்களுக்கு நல்ல புத்திர பாக்கியமும், ஆண் வாரிசும் அமையும்.

சூரியன் திசை தங்களுக்கு  1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலாபலன்களையே வாரி வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

எதிர்வரும் சந்திரன் திசை 11ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் ரீதியான சுபயோகங்களை வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது.

குறிப்பு :

தங்களது சுய ஜாதக வலிமை மிகவும் அபரிவிதமானது, அதை கருத்தில் கொண்டு தங்களது வாழ்க்கையை வெகு சிறப்பாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுங்கள், மிகசிறந்த தொழில் அதிபராக பிரகாசிக்க " ஜோதிடதீபம் " தங்களுக்கு தனது சார்ப்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 16 செப்டம்பர், 2017

தொழில் ஸ்தானம் தரும் யோக வாழ்க்கை : கூட்டு தொழில் செய்வது சரியானதா ? சுய தொழில் செய்வது சரியானதா ?


" அவனின்றி ஓர் அணுவும் அசையாது, அனைத்து இயக்கங்களுக்கும் காரணம் இறைவன் ” என்பதற்க்கு இணங்க சுய ஜாதகத்தில் " லக்கினம் " எனும் முதல் பாவகம் ஓர் ஜாதகரை இயக்குவதில் முன்னுரிமை பெறுகிறது, லக்கினம் என்பது அவரவர் பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிய காரணிகளால் நிர்ணயம் செய்படுகிறது, லக்கினத்தில் அடிப்படையாக கொண்டு 12பாவகங்களின் வலிமை நிலையும் சுய ஜாதகத்தில் நிர்ணயிக்கபடுகிறது என்றால் அது மிகையில்லை அன்பர்களே ! இதில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவகம் நான்காவது கேந்திரமாகவும், ஜாதகரின் ஜீவன வாழ்க்கையை பற்றியும் தெளிவுபடுத்துகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெற்று கேந்திரம் மற்றும் கோண பாவகங்களுடன் தொடர்பு பெற்றோ, வீரியம் மற்றும் லாப ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் ஜீவன வாழ்க்கை என்பது அபரிவிதமான முன்னேற்றங்களுடன், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை பெற்று இந்த புவியில் சுயமரியாதை,கௌரவம் மற்றும் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கையை தனது வாழ்நாளில் சுவீகாரம் செய்யும் வல்லமை பெற்றவர் என்பது உறுதியாகும்.

 மாறாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10 வீடு, மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெற்றோ, தனது லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருப்பின் ஜாதகரின் ஜீவன வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், ஜாதகருக்கு தனது ஜீவனத்தை கௌரவமாக நடத்த வாய்ப்பு இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கும், ஜீவன ரீதியாக ஜாதகர் வெறும் திட்டமிடுதல்களை மட்டுமே செய்ய இயலும் நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது குதிரை கொம்பாக இருக்கும், குறிப்பாக ஜாதகரின் 10ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கும், மேலும் கௌரவ குறைவான வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், ஜாதகர் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்விகளை வாரி வழங்கும், ஜாதகரின் நம்பிக்கையும், செயல்திறனும் முற்றிலும் பாதிக்கப்பட்டு, போராட்டம் ஒன்றே வாழ்க்கையாக மாறிவிட வாய்ப்பு உண்டு, ஜாதகரின் அறிவுரையை ஏற்கும் அனைவரும் வெற்றிமேல் வெற்றி பெறுவார், ஆனால் ஜாதகருக்கோ தோல்வி ஒன்றே பரிசாக கிடைக்கும், இதை தவிர்க்க ஜாதகர் தனது சுய ஜாதகத்தில் உள்ள மற்ற பாவகங்களின் வலிமை பயன்படுத்தி நலம்பெறலாம், இதற்க்கு தனது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை பற்றி தெளிவு பெற்று இருப்பதும், நடைபெறும் திசா புத்திகள் மற்றும் எதிவரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை பற்றி தெளிவு பெற்று இருப்பதும் அவசியமாகிறது.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று நடைமுறையில் உள்ள திசா புத்தியும், எதிர்வரும் திசாபுத்தியும் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் ஜீவன வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், செய்யும் தொழில் மற்றும் பணியில் தன்னிறைவான முன்னேற்றங்களை பெற்றும் ஜீவன ரீதியாக யோக வாழ்க்கையை பெறுவார் என்பது உறுதி, கிழ்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன பாவக வலிமை, கூட்டு தொழில் யோகம் மற்றும் தற்பொழுது நடைபெறும் திசை தரும் பலன்கள், எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றிய விரிவான விளக்கத்தை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : துலாம்
ராசி : கும்பம்
நட்சத்திரம் : அவிட்டம் 4ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் வீடுகள், தொடர்பு படுத்தும் பாவகம் பற்றி பார்ப்போம் அன்பர்களே 4,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மிகுந்த வலிமையுடன் இருப்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு சுக ஸ்தானம் எனும் 4ம் வீடாக அமைவது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், இதானால்  ஜாதகரின் ஜீவன வலிமை மேலும் மெருகேறி அதி அற்ப்புதமான ஜீவன முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஜாதகருக்கு 4,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மாத்ரு ஸ்தான வழியில் இருந்து நல்ல சுக போகங்களை தான் செய்யும் தொழில் வழியில் இருந்து ஜாதகர் பெறுவார், மண் மனை, வண்டி வாகனம் சார்ந்த தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தரும், தனது தாயார் வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கையையும், நிதி உதவிகளையும் பெரும் யோகம் பெற்றவர், போக்குவரத்து தொழில் வண்டிவாகனம் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சியை தரும், சரக்கு உந்து, போருந்து, சொகுசு வாகனங்கள் மூலம் வாழ்க்கையில் ஜாதகருக்கு நல்ல வருமானமும், முன்னேற்றமும் உண்டாகும்.

ஆயுள் ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு மருத்துவ துறை, அல்லது மருந்து பொருட்கள், ஆயுள் காப்பீடு, இன்சூரன்சு, மருத்துவ உபகரணம் சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகரின் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார உதவிகள் ஜாதகரை மதிப்பு மிக்க தொழில் அதிபர் என்ற நிலைக்கு குறுகியகாலத்தில் உயர்த்தும், தனது திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி என்பது ஜாதகரே நினைத்து பார்க்காத வண்ணம் அமையும் என்பது சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை, மேலும் ஜாதகரின் ஆயுள் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளையும், வாழ்க்கை துணை வழியிலான தன சேர்க்கையையும் எதிர்பாராத நேரங்களில், திடீர் அதிர்ஷ்டமாக வாரி வழங்கும், தனம் சார்ந்த தொழில்களில் குறிப்பாக நிதி நிறுவனம், வட்டி தொழில், வாக்கு வன்மையின் மூலம் பெரும் வாருமானம் என ஜாதகரின் ஜீவன வாழ்க்கைக்கு மேலும் மேலும் மெருகேற்றும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அமசமாகும்.

பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகர் பேராசிரியர், கல்வி துறை சார்ந்த தொழில்களில் மிகப்பெரிய வருமான வாய்ப்புகளை தரும், கல்வி கூடங்கள் நடத்துவது, கல்வி பணி சார்ந்த தொழில்களில் ஈடுபடுவது மூலம் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவது மூலம் மிகப்பெரிய வெற்றிகளை பெறலாம், அல்லது தனது முன்னோர்கள் செய்து வந்த பாரம்பரிய தொழில்களில் நல்ல வெற்றி வாய்ப்புகளை பெறலாம், அறிவு சார்ந்த தொழில்கள், ஆன்மீக தொழில் போன்றவற்றில் சிறப்புகளை தரும்

ஜீவன ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியிலான பலாபலன்களை முழு அளவில் பெறுவதற்கு தகுதி உள்ளவர் என்பது உறுதியாகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தான அதிபதி புதன் என்பதால் ( உயர் கணித ஜோதிட விதிபடி ) ஜாதகரின் மன ஆற்றலும் அறிவு திறனும் ஒருங்கே இணைந்து செயல்படும், இதனால் ஜாதகரின் மனதில் எண்ணிய காரியங்கள் மற்றும் தொழில் முன்னேற்றங்களை வெற்றிகரமாக தனது அறிவு திறன் கொண்டு தொடர்ந்து பெற்ற வண்ணமே இருப்பார் என்பது மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் தொழில் வன்மையும், தெளிவான திட்டமிடுதல்களும் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளையும், கை நிறைவான வருமானங்களையும் வாரி வழங்கிய வண்ணமே இருக்கும், ஜாதகர் கை தேர்ந்த வியாபாரியாகவும், திறமை மிக்க தொழில் அதிபராகவும் பரிணமிக்க சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தான வலிமை நூறு சதவிகிதம் உதவி புரியும், ஜீவன ஸ்தானம் சர ராசியில் வலிமை பெற்று இருப்பது  குறுகியகாலத்தில் "கோடிஸ்வர " யோகத்தை நல்கும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சர நீர் தத்துவ ராசியில் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் செய் தொழிலில் தன்னிறைவான முன்னேற்றங்களை தொடர்ந்து பெறுபவர் என்பதுடன், அழிவு நிலை பொருட்களான உணவு பொருட்கள், தானியம், எண்ணை பொருட்கள், துணி மற்றும் நீர் தத்துவம் சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வளர்ச்சியை பெறுபவர் என்பதை உறுதி செய்கிறது.

மேற்கண்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமையுடன் இருப்பதும், ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகர் சுப யோகங்களை தடையின்றி பெறுவார் என்பதும் தெளிவாகிறது, அடுத்து தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு தரும் பலன்களை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், குரு திசை ஜாதகருக்கு 7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் 200% விகித இன்னல்களை நடத்தி கொண்டு இருப்பது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தும், அதனால் உண்டாகும் யோக வாழ்க்கை பெற இயலாத சூழ்நிலையை உருவாக்கும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றநிலையை தருவது வருத்தத்திற்கு உரிய ஒன்றாக் கருத வேண்டியுள்ளது, அடுத்து வரும் சனி திசை ஜாதகருக்கு 9ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது தொழில் ரீதியான யோக பலன்களை அனுபவிக்கும் யோக அமைப்பை தரும், குரு திசை ஜாதகருக்கு சிறப்பை தரவில்லை என்பதே உண்மை நிலை, நடப்பது குரு திசை தானே, நன்மையை செய்யும் என்று கருதி ஜாதகர் செயல்பட்டால், அனைத்தையும் பாதக ஸ்தான வழியில் இழந்து இன்னலுற நேரும் என்பதை கருத்தில் கொள்வது ஜாதகருக்கு நன்மையை தரும், ஏனெனில் நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கின்றது.

ஜாதகர் கூட்டு தொழில் செய்யலாமா ?

சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலேயே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு ஆகும், இது ஜாதகரின் வாழ்க்கையில் 7,11ம் பாவக வழியில் இருந்து அளவில்லா இன்னல்களை தரும், குறிப்பாக கூட்டாளி, நண்பர்கள், வெளிவட்டாரம்  சார்ந்த விஷயங்களில் இருந்து ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், கூட்டு தொழில் செய்ய சுய ஜாதகத்தில் 7ம் வீடு மிக மிக வலிமையுடன் இருப்பதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் வலிமை பெற்று இருப்பதும் அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய தோல்விகளையும், நஷ்டங்களையும் ஏற்ப்படுத்தும், எதிர்பால் இன சேர்க்கை மூலம் ஜாதகர் தனது ஜீவன முன்னேற்றத்திற்கு தானே தடைகளை ஏற்ப்படுத்திகொண்டு இன்னளுருவார் என்பது உறுதியாக தெரிவதால், தயவு செய்து கூட்டு தொழில் செய்வதை தவிர்ப்பதே சால சிறந்தது, பொருளாதர கஷ்டத்தில் இருந்து ஜாதகர் தப்பிக்க இயலும் என்பதே சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் 7ம் வீடு வலிமை அற்று இருப்பது ( பாதக ஸ்தான தொடர்பு ) ஜாதகர் கூட்டு தொழில் செய்ய அருகதை அற்றவர் என்பதை உறுதிபடுத்துகிறது, மேலும் நடைபெறும் குரு திசை சாதகம் இன்றி இருப்பது ஜாதகர் ஏதாவது ஓர் பணியில் ஈடுபடுவதே நன்மைகளை தரும், எதிர்வரும் சனி திசையில் சுய தொழில் சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறலாம், "வாழ்த்துகள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


ஞாயிறு, 26 மார்ச், 2017

தொழில் நிர்ணயம் : வண்டி வாகன ( சரக்கு மற்றும் போக்குவரத்து ) தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது ஏன் ?



 தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வதில், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையிலும், மற்ற பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டது நிர்ணயம் செய்வது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், குறிப்பாக சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகங்கள் வழியிலான தொழிலை ஜாதகர் தேர்வு செய்யாமல் இருப்பது ஜாதகருக்கு பெரும் நன்மைகளை வாரி வழங்கும், மேலும் தனது ஜாதக வலிமையின் அடிப்படையில் தான் சுய தொழில் செய்யலாமா ? அடிமை தொழில் செய்யலாமா? அல்லது கூட்டு தொழில் செய்வதால் முன்னேற்றம் உண்டாகுமா ? என்பதில் தெளிவு பெற்ற பிறகு, தற்போழுது நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து அதன் பிறகு, தொழில் வழியிலான முயற்சிகளை மேற்கொள்வது சகல நன்மைகளையும் தரும்.

தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வதில் ஓர் ஜாதகருக்கு குழப்பம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஜாதகரின் ஜீவன ரீதியான போராட்டங்கள் கடுமையானதாக அமையும், ஜீவன வழியிலான முன்னேற்றங்களை பெற இயலாமல் ஜாதகர் இன்னலுறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், தொழில் ரீதியாக வரும் எதிர்ப்புகளும், முன்னேற்றம் இன்மையும் ஜாதகருக்கு வெகுவான பாதிப்புகளை வாரி வழங்கும், போராட்டம் ஒன்றே வாழ்க்கையாக மாறிவிட வாய்ப்பு அதிகம், தங்களின் சுய நம்பிக்கை மிதமிஞ்சிய அளவில் இருந்தாலும், செய்யும் தொழிலை சரியாக தேர்வு செய்யவில்லை எனில் " பாடும் பட்ட மாதிரி வீடும் கெட்ட மாதிரி " என்ற முதுமொழிக்கு உதாரணமான அமைந்துவிடும், தங்களின் கடின உழைப்பும், அறிவு திறனும் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்தை வழங்காமல், மற்றவர்களுக்கு பலன்தர ஆரம்பித்துவிடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது, தொழில் முன்னேற்றம் என்பது ஆரம்பித்த 3முதல் 5வருடங்களில் தன்னிறைவான முன்னேற்றத்தையும், பொருளாதார வசதி வாய்ப்புகளையும் தங்களுக்கு தருகின்றது எனில் தாங்கள் தேர்வு செய்த தொழில் தங்களுக்கு உகந்தது என்பதனையும், ஆரம்பித்த 3முதல் 5வருடங்களில் யாதொரு முன்னேற்றம் இன்றி போராட்டத்தை சந்தித்து கொண்டு இருந்தால், ஜாதகர் தேர்வு செய்த தொழில் ஜாதகருக்கு உகந்தது அல்ல என்பதை உறுதியாக சொல்லிவிடலாம்.

சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்க்கு நான்காம் ராசியான கடகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்தாம் ராசியான மகரமும் ஜாதகருக்கு முழு வலிமை பெற்றும், ஜாதகரின் லக்கினத்திற்க்கு சுக ஸ்தானமான நான்காம் பாவகம் மற்றும்  ஜீவன ஸ்தானமான பத்தாம் பாவகம் முழு வலிமை பெற்றும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசா புத்தியும் ஜாதகருக்கு வலிமை பெற்ற மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ( ட்ரான்ஸ்போர்ட் ) எனப்படும் வண்டி வாகன தொழில் மிக சிறப்பாக அமையும், ஜாதகர் ஒரு வண்டியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் தொழில் அபிவிருத்தி பெற்று வண்டி வாகனங்கள் பெருகி தன்னிறைவான தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகர் செய்யும் தொழிலில் நம்பகத்தன்மை உடையவராகவும், நிலைத்து நின்று தொழில் புரியும் வல்லமை மிக்கவராக திகழ்வார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும் மேஷம்,கடகம்,துலாம் மற்றும் மகர ராசிகள் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரை ஏதாவது ஒருவழியில் முன்னேற்றங்களை தந்து மிகப்பெரிய தொழில்களை திறம்பட நடத்தும் வலிமை மிக்கவராக செயல்பட வைக்கும் என்பதால், சுய ஜாதகத்தில்  மேற்கண்ட ராசிகள் பெரும் வலிமை நிலையை தெளிவாக உணர்வதும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை நிலையை தெளிவாக உணர்வதும் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன ரீதியான ( தொழில் ) வெற்றிகளை பெறுவதற்க்கு அடிப்படையாக அமையும், வாழ்க்கையில் சிரமமில்லா தொழில் வெற்றிகளை வாரி குவிக்க நல்லதொரு வாய்ப்புகளையும், தொடர்புகளையும் ஜாதகருக்கு வாரி வழங்கும்.

குறிப்பாக மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  ( முறையே மேஷம்,கடகம்,துலாம் மற்றும் மகரம் ) ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் ரீதியான வெற்றிகளை பன்மடங்கு வழங்கும், ஜாதகரின் வளர்ச்சி என்பது மற்றவர்களால் வியப்புக்கு உரிய வகையில் கவனிக்கப்படும், குறுகிய காலத்தில் பன்மடங்கு தொழில் வளர்ச்சியை பெற்று ஜாதகர் தன்னிறைவான ஜீவன முன்னேற்றத்தையும், பொருளாதார வசதி வாய்ப்புகளையும் பெறுவார், மேற்கண்ட அமைப்பு ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள திசை புத்தி மற்றும் எதிர்வரும் திசாபுத்தி ஏற்று நடத்துவது அவசியமாகிறது, மேற்கண்ட அமைப்பு ஜாதகத்தில் இருந்தாலும், நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசாபுத்தி வலிமை பெற்ற ஜீவனம் மற்றும் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில், ஜாதகத்தில் ஜீவன பாவகம் வலிமை பெற்று இருந்தாலும் அதனால் யாதொரு பயனும் இல்லை என்பதை கருத்தில் கொள்க.

குறிப்பு :

எது எப்படி இருப்பினும் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் தமக்கு உகந்த தொழிலை தேர்வு செய்து, அதில் வெற்றி பெறுவதே ஜாதகருக்கு உகந்த நன்மைகளை தரும், சுய ஜாதக வலிமையை உணராமல் மற்றவர்கள் செய்கின்றனர் அதனால் நானும் செய்கிறேன் என்பது " எங்க வீட்டுகாரரும் கச்சேரிக்கு போகிறார் " என்ற கதைக்கு பொருத்தமானதாக மாறிவிடும் என்பதனை நினைவில் கொள்க.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

சனி, 21 ஜனவரி, 2017

தொழில் ரீதியாக பெரிய இழப்புகளையும் திடீர் நஷ்டங்களையும் சந்திப்பது ஏன் ?



கேள்வி :

தொழில் ரீதியாக பெரிய இழப்புகளையும் திடீர் நஷ்டங்களையும் சந்திப்பது ஏன் ? கடந்த சில வருடங்களில் பெருத்த  நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது தவிர்க்க என்ன வழி ? நான் செய்யும் தொழில் எனக்கு ஏற்றதா ?

பதில் :

சுய ஜாதக பாவக வலிமை உணராமல் தொழில் செய்வதும், தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்யாததும், நடைபெறும் திசையும் எதிர்வரும் திசையும் ஜாதகருக்கு வலிமை அற்ற அல்லது பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதுமே ஒருவருக்கு தொழில் ரீதியான பெரிய இழப்புகளையும், திடீர் நஷ்டங்களையும் சந்திக்கும் நிலையை தரும், தங்களது சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்.

 தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை தங்களுக்கு 1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், முறையே பாதக ஸ்தான பலனையும், விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், தங்களுக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை பாதக ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், விரைய ஸ்தான வழியில் இருந்து 100% விகித இன்னல்களையும் ஒரு சேர வழங்கி கொண்டு இருப்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றாகும், தங்களது சுய ஜாதகத்தில் அடிப்படையிலேயே தொழில் ஸ்தானம் எனும் 10ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது என்பதினால் தங்கள்  சுய தொழில் செய்வதே சரியான தேர்வு அல்ல, மேலும் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்கள் முடிவெடுக்கும் விஷயங்கள் யாவும் தங்களுக்கு எதிராக திரும்பும் என்பதை கவனத்தில் கொள்க.

மேலும் தங்களது சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெற்று வலிமை இழந்து காணப்படுகிறது, மேலும் தங்களின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாகவும், சர நீர் தத்துவ ராசியாகவும் அமைகிறது, எனவே தங்களது சுய ஜாதகத்தின் படி நீர் தத்துவ ராசியான கடகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, தாங்கள் தேர்வு செய்த தொழிலான பால் பண்ணை என்பது நீர் தத்துவத்துடன் சம்பந்தம் பெற்ற தினமும் அழிவை சந்திக்கும் பொருளான பால்  பொருட்களை அடிப்படையாக வைத்து செய்யப்படும் தொழிலாகும், தங்களது ஜாதகத்தில் நீர்த்துவ ராசி பாதிக்கப்பட்டு ( அதுவும் தொழிலை குறிக்கும் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் நேரடி நேரடி தொடர்பு பெற்று முற்றிலும் வலிமை அற்று காணப்படுகிறது ) தாங்கள் நீர் தத்துவம் சார்ந்த பால் பண்ணை தொழிலை தேர்வு செய்து நடத்தியதால் தவிர்க்க முடியாத பெரிய இழப்புகளையும், திடீர் நஷ்டங்களையும் தந்து கொண்டு இருக்கின்றது.

எனவே தாங்கள் அடிப்படையிலேயே  சரியான தொழிலை தேர்வு செய்யவில்லை என்பது முதல் தவறு, இரண்டாவது தங்களுக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை வலிமை அற்ற பாவக தொடர்பை பெற்று முறையே பாதக ஸ்தான பலனையும், விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது மிக வருந்தத்தக்கது, ஆக நடைபெறும் செவ்வாய் திசையும் தங்களுக்கு தொழில் சார்ந்த நன்மைகளை தரவில்லை, பாக்கிய ஸ்தான வலிமை இன்மை தங்களுக்கு, மேற்கண்ட இன்னல்களில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளையும் தரவில்லை, தங்களின் அறிவு திறனும் இழப்பை தவிர்ப்பதற்கு உண்டான சந்தர்ப்பங்களை வழங்கவில்லை, எனவே தாங்கள்  மேற்கண்ட தொழிலில் கடுமையான நெருக்கடிகளையும், இழப்பு  மற்றும் நஷ்டங்களையும் சந்தித்து வருகிண்றீர்கள்.

மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண தாங்கள் முறையாக நேரில் வந்து  ஜாதக ஆலோசனை பெற்று கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவதே சால சிறந்தது, ஒன்று மட்டும் உறுதி தாங்கள் தேர்வு செய்த பால் பண்ணை தொழில் தங்களுக்கு சிறிதும் பொருந்தாதது, மேலும் நீர் தத்துவம் சார்ந்த எந்த தொழிலும் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தையே தரும்.

எதிர் வரும் ராகு திசை தங்களுக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதால், முறையாக ஜாதக ஆலோசனை பெற்று தங்களுக்கு உகந்த தொழிலை தேர்வு செய்து வாழ்க்கையில் சகல நலன்களையும் பெறுக.

குறிப்பு :

சுய ஜாதக ரீதியாக ஜீவன ஸ்தான வலிமையை  கருத்தில் கொண்டும் , தற்போழுது நடைபெறும், எதிர்வரும் திசை தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் சரியான தொழிலை தேர்வு செய்வது என்பது சம்பந்த பட்ட ஜாதகருக்கு ஜீவன ரீதியான வெற்றிகளை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 5 ஜனவரி, 2017

சுய தொழில் செய்யலாமா? அல்லது வேலைக்கு செல்வது நல்லதா? நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் என்ன ?


கேள்வி :

2005 முதல் 2015 ம் வருடம் வரை வெளிநாட்டில் பணியாற்றினேன், தற்போழுது சொந்த ஊரில் சுய தொழில் செய்யலாம் என்று இருக்கின்றேன்? எனது ஜாதகப்படி சுய தொழில் செய்தால் முன்னேற்றம் உண்டா? அல்லது வேலைக்கு செல்வதே நன்மையை தருமா? தற்போழுது நடைபெறும் புதன் திசை எனக்கு நன்மைகளை வழங்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும்.


லக்கினம் : மிதுனம்
 ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவாதிரை 3ம் பாதம்

எனது ஜாதகப்படி சுய தொழில் செய்தால் முன்னேற்றம் உண்டா? அல்லது வேலைக்கு செல்வதே நன்மையை தருமா?

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பது வரவேற்க தக்க விஷயமாகும்,  ஏனெனில் சுய ஜாதகத்தில் மேற்கண்ட வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுயமாக ஜீவன வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவும், மேலும் தங்களது ஜாதகத்தில் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவதும் ஜீவன ஸ்தானம் உபய ராசியில் அமைவதும் சிறப்பான விஷயம், 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது செய்யும் தொழில் வழியில் தனது அறிவு திறனை பயன்படுத்தி சிறப்பான முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், ஜீவன ஸ்தானம் தொடர்பு உபய ராசியுடனும், லாப ஸ்தான தொடர்பு சர ராசியுடன் சம்பந்தம் பெறுவது  தங்களுக்கு சுய தொழில் விருத்தியினை பன்மடங்கு வாரி வழங்கும்.

மேலும் 2,4,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், 2ம் பாவக வழியில் இருந்து பன்மடங்கு லாபத்தையும், கைநிறைவான வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்கும், இனிமையான குடும்ப வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இல்லற வாழ்க்கையை வழங்கும், 4ம் பாவக வழியில் இருந்து வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, சுகபோகங்கள், இடம் நிலம், வீடு  மற்றும் நிறுவனம் ஆகியவற்றில் முதலீடு மற்றும் அதன்வழியில் ஆதாயம் மற்றும் லாபம் பெரும் யோகத்தை தரும், 7ம் பாவக வழியில் இருந்து கூட்டு முயற்சியில் வெற்றி, கூட்டு தொழிலில் அபரிவிதமான லாபம், வியாபாரம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் அபரிவிதமான லாபம், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழில் வாய்ப்புகள் என தன்னிறைவான தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும் அமைப்பாகும், எனவே தங்களது சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது, சுய தொழில் செய்வதே சாலச்சிறந்த யோக வாழ்க்கையை நல்கும், மேலும் தாங்கள் செய்யும் தொழில் தனிப்பட்ட முறையிலும் அமையலாம் அல்லது கூட்டு தொழில் முறையிலும் அமையலாம், இதில் எந்த பிரச்சனையும் இல்லை, தங்களின் முடிவே இறுதியானது, தனித்து செயல்பட்டாலும், கூட்டு தொழில் செய்தாலும் தங்களுக்கு 100% விகித வெற்றியே உண்டாகும், வேலைக்கு செல்வது தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய அளவிலான முன்னேற்றங்களை வழங்க வாய்ப்பு இல்லை, சுய தொழில் செய்வதே தங்களின் முன்னேற்றத்திற்கும், எதிர்கால யோக வாழ்க்கைக்கும் உகந்ததாக அமையும்.

தற்போழுது நடைபெறும் புதன் திசை எனக்கு நன்மைகளை வழங்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும்.

தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு 2,4,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 11ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 5,11ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, எனவே புதன் திசை முழுவதும் தாங்கள் 2,4,5,7,11ம் பாவக வழியில் இருந்து சிறப்பான யோங்களையே பெறுவீர்கள் என்பதனால், புதன் திசை தங்களுக்கு 100% விகித யோகங்களை தனக்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதனால் புதன் திசை தரும் யோக பலன்களை தாங்கள் ஏற்றுக்கொள்ளும் வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள், எதிர்கால வாழ்க்கை தங்களுக்கு மிகவும் பிரகாசமாக உள்ளது என்பதே தங்களின் ஜாதக நிலை, ஒருவரது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்றும், லாப ஸ்தானமான 11ம் வீடும் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் சுய தொழில் செய்து வெற்றி காணலாம், மேலும் நடைமுறையில் உள்ள திசையும் வலிமை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் ஜீவன வாழ்க்கையில் தோல்வி என்பதே இல்லை என்பதனால், தாங்கள் சுய தொழில் செய்வதற்கு உண்டான ஆயத்த பணிகளை இனி மேற்கொள்ளலாம், இதுவே "ஜோதிடதீபம்" தங்களுக்கு வழங்கும் ஆலோசனை வாழ்த்துக்கள்.

குறிப்பு :

ஜீவன ஸ்தானம் தங்களுக்கு உபய ராசியிலும், லாப ஸ்தானம் சர ராசியிலும் அமைவது தொழில் அதிபர் எனும் அந்தஸ்த்தை விரைந்து வழங்கும் அமைப்பாகும் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் ஜீவன ஸ்தான, லாப ஸ்தான அதிபதியாக வரும் கிரகத்தை கருத்தில் கொண்டு சரியான தொழிலை தேர்வு செய்து நலம் பெறுக.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 5 நவம்பர், 2016

சுய தொழில் அல்லது அடிமைத்தொழில் எதை தேர்வு செய்வது?


கேள்வி :

வணக்கம், கடந்த 10 வருடங்களுக்கு முன் சுயமாக தொழில் செய்து, மிகப்பெரிய நஷ்டம், தற்போழுது திருப்தி இன்றி ஓர் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு இருக்கின்றேன், வருமான பற்றாக்குறை, பொருளாதார சிக்கல்கள் அதிகம் உள்ளது, சுய தொழில் செய்ய வாய்ப்பு தற்போழுது நண்பர்கள் வழியில் இருந்து வருகின்றது, துணிந்து செய்யலாமா? அல்லது தற்போழுது உள்ள வேலையிலேயே தொடர்ந்து இருக்கலாமா ? தெளிவான விளக்கம் தேவை.


பதில் :

ஒருவரது சுய ஜாதகத்தில் தொழில் வெற்றிகளை வழங்கும் பாவகங்கள் (1,4,7,10,11 ) வலிமை பெற்று இருந்தால் நிச்சயம் சுய தொழில் செய்யலாம், தட்டாமல் செய்யும் தொழிலில் வெற்றிகளை வாரி குவிக்கும், அபரிவிதமான தொழில் வளர்ச்சியை வாரி வழங்கும், குறிப்பாக ஒருவரது ஜீவன ஸ்தானம் உபய ராசியில் அமைந்து ( உபய லக்கின அன்பர்கள் அனைவரையும் சாரும் ) வலிமை பெற்றும்,  லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடு தனது பாவகத்துடன் தொடர்பு பெற்றும் வலிமையுடன் இருந்தால் ஜாதகர் சுய தொழில் செய்வதற்கு யோகம் பெற்றவர் எனலாம், தங்களது ஜாதக வலிமை நிலை மிகவும் அபரிவிதமாக உள்ளது தெளிவாகிறது, பெரும்பாலான பாவகங்கள் தங்களுக்கு மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, தொழிலை குறிக்கும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம், லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம், இது தங்களது ஜாதகத்தில் சுய தொழில் செய்வதற்கு உகந்த அமைப்பாகும், எனவே தங்கள் சுய தொழில் செய்ய வல்லமை உடையவர் எனலாம்.

மேலும் தங்களது ஜாதகத்தில் சுய தொழில் செய்வதற்கு வலிமை சேர்க்கும் பாவகங்களான லக்கினம் எனும் முதல் வீடு வலிமை பெறுவது, தங்களின் தொழில் ஆர்வத்தையும், முழு வீச்சில் செயல்படும் தன்னம்பிக்கையும்  தெளிவு படுத்துகிறது, நான்காம் பாவகம் வலிமை பெறுவது வண்டி வாகன தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தையும், எதிர்காலத்தையும் தரும் என்பதை தெளிவு படுத்துகிறது, களத்திர ஸ்தானம் வலிமை  பெறுவது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் தொழில்  முன்னேற்றங்களை பெறுபவர் என்பதை தெளிவு படுத்துகிறது, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஓர் இடத்தில் பணியாற்றுவதைவிட, சுய தொழில் செய்வதே தங்களுக்கு பொருத்தமானது என்பதை தெளிவு படுத்துகிறது, லாப ஸ்தானம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில் அபரிவிதமான  அதிர்ஷ்டத்தையும் மிகப்பெரிய லாபங்களை பெரும் யோகம் கொண்டவர் என்பது 100% சதவிகிதம் தெளிவாகிறது, மேற்கண்ட விஷயங்கள் ஒருவரது ஜாதகத்தில் சுய தொழில் செய்ய வல்லமை உள்ளவரா? என்பதை உறுதி படுத்த பயன்படும்.

மேலும் தங்களின் ஜாதகத்தில் வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது, சிறந்த  வியாபார நுணுக்கம் பெற்றவர் என்பதும் செய்யும் தொழிலில் நல்ல விருத்தியை  பெறுபவர் என்பதும் தெளிவாகிறது, சரியான திடடமிடுதல்களுடன் தனது தொழிலினை முன்னேற்ற பாதையில் நடத்திச்செல்லும், தன்மை பெற்றவர் என்பதும் தெளிவாகிறது, பூர்வ  புண்ணியம் வலிமை பெறுவது தங்களின் அறிவு திறனும், புத்திசாலித்தனமும், தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை நல்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது, சத்ரு ஸ்தானம் வலிமை  பெறுவது தொழில் முறை எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், எதிரிகளின் வழியில் நன்மையை அனுபவிக்கும் யோகம் பெற்றவர் என்பதனையும், பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில் நற்பெயரும், பிரபல்யமும் வழங்கும் என்பது உறுதியாகிறது.

தங்களது சுய ஜாதகம் சுய தொழில் செய்வதற்கு முழு தகுதி கொண்டதாக இருப்பதால் 100% சதவிகிதம் தங்கள் சுய தொழில் செய்வதே சாலசிறந்து, ஓர் இடத்தில் பணியாற்ற உகந்தது அல்ல என்பதை ஜோதிடதீபம் தெளிவுற விளக்கம்  தர கடமைப்பட்டுள்ளது, அடுத்து சுய ஜாதகம் மிகவும் வலிமை பெற்று இருந்தும் இதற்க்கு முன் செய்த தொழில் பெரும் நஷ்டத்தை வழங்கியதற்கு இரண்டு காரணங்களை சொல்லாம்,

1) தாங்கள்  தொழில் துவங்கிய நேரத்தில் தங்களுக்கு நடைபெற்ற சந்திரன் திசை  2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, இதன் காரணமாகவே தாங்கள் செய்த தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது, ஒருவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது முக்கியம் அல்ல, நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டும் அதற்குண்டான யோக பலன்களை ஜாதகர் அனுபவிக்க இயலும், தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசையும், எதிர்வரும் ராகு மற்றும் குரு திசையும் தங்களுக்கு மிகப்பெரிய அளவிலான நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும்  தர தயாராக உள்ளதால், இதுவே தாங்கள் சுய தொழில் செய்ய சரியான நேரம் எனலாம்.

2) தங்களது சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், தங்கள் இதற்க்கு  முன் துவங்கிய தொழில் தங்களது பூர்வீகத்தில் இல்லமால், வெகு தொலைவு சென்று வேறு மாவட்டத்தில் ஆரம்பித்தது தவறு, சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் எந்த ஒரு தொழிலையும் தனது பூர்வீகத்திர்க்கு உற்ப்பட்ட இடத்திலேயே நிர்வகிப்பது நல்ல முன்னேற்றத்தை தரும், தங்களுக்கு நடந்த சந்திரன் திசை சிறப்பான நன்மைகளை தாராததும், செய்யும் தொழில் பூர்வீகத்தில் அமையாததும் மட்டுமே தங்களுக்கு திடீர் பேரிழப்பை தந்தது என்று தெளிவுற சொல்லலாம், இனிவரும் காலங்களில் இந்த தவறை செய்யாமல் நன்மை பெறுக.

சுய தொழில் செய்ய தகுதி உள்ள ஜாதகம் என்ற போதிலும், தங்களது ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்கப்படுவது, தங்களுக்கு வாக்கு வழியில் இன்னல்களையும், வரும் வருமானத்தை வீண் செலவு செய்யும் தன்மையையும் தெளிவுபடுத்துகிறது, 8ம் பாவகம் பாதிக்கப்படுவது மற்றவர்களை நம்பி முதலீடு செய்வது உகந்தது அல்ல, தங்களின்  கட்டுப்பாட்டில் அனைத்தையும் நிர்வகிப்பதே சாலசிறந்தது, மேற்க்கண்ட இரண்டு விஷயங்களிலும் தங்கள் அதிக கவனமுடன் செயல்படுவது தங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், நீர்த்துவம் சார்ந்த தொழில்களை தவிர்ப்பது நலம் தரும், வண்டி வாகனம் மற்றும் கட்டுமான துறை தங்களுக்கு அளவில்லா தொழில் வளர்ச்சியை வாரி வழங்கும்.


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 23 ஜூலை, 2016

சுயதொழில்,கூட்டுதொழில் அல்லது அடிமைதொழில் இதில் பொருத்தமான தொழிலை ஜாதகரீதியாக தேர்வு செய்வது எப்படி ?


சுய ஜாதக ரீதியாக தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்யவில்லை எனில் சம்பந்தப்பட்ட ஜாதகரின் நிலையானது, நமது கிராமங்களில் சொல்லும் செலவடையான " பாடும் பட்டது போல், வீடும் கெட்டது போல் " என்ற பழமொழிக்கு உதாரணமாக அமைந்துவிடும், தமக்கு உகந்த தொழிலை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதக பாவக வலிமை 100% விகிதம் சரியான வழிகாட்டுதல்களை வழங்குகிறது என்றால் அது மிகையல்ல, ஒரு ஜாதகர் தனது சுய ஜாதகம் கொண்டு தமக்கு உகந்த சுயதொழில்,கூட்டுதொழில் அல்லது அடிமைதொழிலை தேர்வு செய்வாராயின், சம்பந்தப்பட்ட ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தை எந்த சக்தியாலும் தடைசெய்ய இயலாது, ஏனெனில் இறைஅருள் விதித்த கர்மத்தை செய்ய தகுதி உடையவர் ஆகிறார், இதனால் ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் மென்மேலும் வளர்ச்சி பாதையில் வெற்றிநடை போடும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் ஜாதகரின் உழைப்பும், லட்ச்சியங்களும் மிகவிரைவாக சாதிக்கும் வல்லமையை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் சரியான காலநேரத்தில் பரிபூர்ணமாக நிறைவேறும், பொருளாதார தடைகள் அற்ற தன்னிறைவான வசதிவாய்ப்புகளை ஜாதகர் சிறப்பாக பெறுவதற்கு வழிவகுக்கும்.

சுய ஜாதகத்திற்கு சற்றும் பொருந்தாத தொழிலை தேர்வு செய்வது என்பது ஜாதகரை செக்குமாட்டிற்கு பொருத்தமான நிலையையும், குறுகிய வட்டத்தில் ஜீவிக்கும் சூழ்நிலையையும், ஜாதகரின் லட்ச்சியங்கள் மற்றும் கனவுகள் "கானல்நீராக" மாறிவிட வாய்ப்புண்டு, தாம் செய்யும் தொழிலில் விருப்பமும், கடமை உணர்வும், அதீத ஆர்வமும் கொண்டதாக அமையும் பொழுதே ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது அபரிவிதமான வெற்றிகளை நல்கும், விருப்பம்,ஈடுபாடு,கடமை மற்றும் ஆர்வம் இன்றி செயல்படும் எந்த ஒரு காரியமும் சிறப்பான நன்மைகளை தந்துவிட நிச்சயம் வாய்ப்பில்லை, ஏனெனில் புது சிந்தனைகள் மற்றும் புதிய யுக்திகளை கண்டுணரும் வாய்ப்பினை ஜாதகருக்கு ஜீவன பாவகம் வழங்குவது கேள்விக்குறியே, தமக்கு உகந்த தொழிலை தேர்வு  செய்யும்பொழுது ஜாதகரின் வளர்சசி ஓர் சீரிய முன்னேற்றத்துடன் வளர்ச்சிப்பாதையில் சிறப்பாக வெற்றிநடைபோடும்.

  ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கேற்ப, தமக்கு பொருத்தமான தொழிலை நிர்ணயம் செய்வது எப்படி? என்பதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 2ம் பாதம் 

1) ஜாதகர் சுய தொழில் செய்ய தகுதி உள்ளவரா? 

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவக வலிமை நிலையை கருத்தில் கொண்டால் ஜாதகர் சுய தொழில் செய்ய தகுதி உள்ளவரா? என்பதை நிர்ணயம் செய்யலாம், மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவாகத்துடன் தொடர்பு பெறுவது, ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை அற்று இருப்பது தெளிவாகிறது, எனவே ஜாதகர் சுய தொழில் செய்தால் நிச்சயம் திடீர் பேரிழப்பும் வீண் விரையமுமே ஏற்படும், மேலும் ஜாதகர் தான் செய்யும் சுய தொழில் மூலம் அதிக மன உளைசலுக்கும், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கும் ஆளாகும் சூழ்நிலையை பெரிய அளவில் தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடகமாக அமைவது ஜாதகரின் சொத்து,வீடு, வண்டி,வாகனம் மற்றும் சுக போகங்கள் அனைத்தையும் சுய தொழில் செய்வதால் விரையமாக்கும் சூழ்நிலையை தரும், மேலும் சொத்து,வீடு,வண்டி,வாகனம் மற்றும் நீர் தத்துவம் சார்ந்த தொழிலை தேர்வு செய்து செய்தால் ஜாதகருக்கு நிச்சயம் தொழில்  ரீதியாக மிகப்பெரிய தோல்வியே கிட்டும் என்பதை கவனத்தில் கொள்வது சாலச்சிறந்தது.

2) ஜாதகர் கூட்டு தொழில் செய்ய தகுதி உள்ளவரா ?

சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவக வலிமை நிலையை கருத்தில் கொண்டால் ஜாதகர் சுய தொழில் செய்ய தகுதி உள்ளவரா? என்பதை மிக துல்லியமாக நிர்ணயம் செய்யலாம், மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடு தமது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்க அம்சமாகும், எனவே ஜாதகர் சுய தொழில் செய்ய முழு தகுதி உடையவர் ஆகிறார், மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்பத்தில் நிற்பது, ஜாதகர் கூட்டு தொழில் மூலம் லாபங்களை அதிர்ஷ்டங்களை ஸ்திரமாக பெறுவார் என்பதை தெளிவுபடுத்துகிறது, ஸ்திர காற்று ராசியான கும்பம் ஜாதகருக்கு பரிபூர்ண வெற்றிகளை கூட்டு தொழில் மூலம் வாரி வழங்கும் என்பது உறுதியாகிறது, ஜாதகரின் அறிவு திறனும் தொழில் வல்லமையும் கூட்டு தொழில் மூலம் விருத்தி அடையும், மேலும் திருமணத்திற்கு பிறகு வெற்றிகரமான ஜீவன வாழ்க்கையை பெரும் யோகம் பெற்றவர்களின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் வலிமையாக இருக்கும் என்பது மறுக்க இயலாத உண்மை அன்பர்களே, ஜாதகர் தனது அறிவு திறன்,சமயோசித புத்திசாலித்தனம் மற்றும் புதியசிந்தனை, புதிய யுக்திகளை கையாண்டு கூட்டு தொழில் மூலம் பன்மடங்கு லாபங்களை பெறுவார் என்பது மிக தெளிவாக தெரிய வருகிறது.

3) ஜாதகர் அடிமை தொழில் செய்ய தகுதி உள்ளவரா ?

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்று காணப்படும் பொழுது, ஜாதகர் அடிமை தொழில் செய்யவும் தகுதி அற்றவர் என்பது உறுதியாகிறது, ஏனெனில், ஒரு இடத்தில் நிலையாக பணியாற்றும் வாய்ப்பினை தாராது, பல இடங்களில் ஓடி அலைந்து திரியும் நிலையை தந்துவிடும், இதனால் ஜாதகரின் திட்டமிடுதல்கள், செயல் திறன் வெகுவாக குறையும், கெளரவம் பார்க்காமல் சுய மரியாதை இழந்து செய்யும் வேலையை ஜாதகரே விரும்பி ஏற்றுக்கொண்டால் இது சாத்தியம், அது இந்த ஜாதகத்திற்கு பொருந்தி வர வாய்ப்பில்லை ஏனெனில் ஜாதகரின் லக்கினம் சிம்மம், கட்டுப்பாடு அற்ற சுதந்திர நிலையை கையில் ஏந்தும் அன்பர்கள், இந்த சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்கள், இந்த ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு மட்டுமே கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றது, ஆனால் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் வீடுகள் முறையே 2,6,8,12 பாவகங்கள் ஆகும் என்பதால் ஜாதகர் கூட்டு தொழில் மூலமோ அல்லது வெளிநாடுகளில் உயர்பதவி மூலமோ ராஜயோகங்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பதை சிறப்ப சுய ஜாதக பாவக வலிமை தெளிவுபடுத்துகிறது, மேலும் சுய ஜாதகத்தில் 1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது எவ்வித சூழ்நிலையிலும், தனக்கு உகந்த தொழிலை தாமாகவே தேர்வு செய்து வெற்றிகாணும் யோகம் பெற்றவர் என்பது உறுதியாகிறது, அதிர்ஷ்டம் இவர் பக்கம் நிற்பதால் வாழ்க்கையை மிக சிறப்பாக எதிர்கொண்டு நன்மைகளையும், ஜாதகத்திற்கு உற்ப்பட்ட யோகங்களையும் பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பது தெளிவாகிறது.

குறிப்பு :

ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரன் திசையும், அடுத்தது வரும் செவ்வாய் திசையும் கூட்டுதொழில்  அல்லது வெளியூர், வெளிநாடுகளில் சிறப்பான தொழில் அல்லது வேலை வாய்ப்பினை நல்கும்,  அதற்கு அடுத்து வரும் ராகு திசை ஜாதகரை கூட்டு தொழில் மூலம் பரிபூரண யோகத்தை வாரி வழங்கும் என்பது உறுதியாகிறது, ஜாதகருக்கு "ஜோதிடதீபம்" வழங்கும் அறிவுரை உடனடியாக ஜாதகர் திருமணம் செய்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

சுய ஜாதக அமைப்பின் படி தொழில் மற்றும் வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?




ஜீவனம் ஸ்தானம் ஒருவருடைய ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய ஒரு பாவகம் , குறிப்பாக ஒருவருக்கு தொழில் சிறப்பாக அமைவது பற்றி இந்த பாவக அமைப்பை வைத்து மிகவும் தெளிவாக சொல்லி விட முடியும் , ஜாதகர் தனித்து தொழில் செய்வாரா ? கூட்டு தொழிலா ? அல்லது மற்றவரிடம் அடிமை சேவகம் செய்ய வேண்டி வருமா ? அரசு துறையில் பணியாற்றும் யோகம் உண்டா ? வெளிநாடுகளில் பணியாற்றும் யோகம் உண்டா ? 

பாரம்பரியமாக செய்து வரும் தொழில்களில் ஜாதகர் ஜொலிப்பாரா ?  தான் செய்யும் தொழில் மூலம் ஜாதகர் யோக வாழ்க்கை பெரும் அமைப்பு உண்டா ? இல்லை அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை ஏற்படுமா ? ஜீவன வழியில் சொத்து சுக சேர்க்கை உண்டா ? இல்லை சொத்து சுக இழப்பை தருமா ? என்ற கேள்விகளுக்கெல்லாம், ஒரு  ஜாதக அமைப்பில் இந்த ஜீவன பாவகமும் மேலும் சில பாவக அமைப்பை வைத்தும் தெளிவாக கணிதம் செய்து சொல்லிவிட முடியும், மேலும் ஒருவருக்கு அமையும் ஜீவனம் ஜாதகரின் தகப்பனார் செய்த புண்ணியத்தின் அடிப்படியிலேயே கிடைக்க பெறுகிறது .

குறிப்பாக ஒருவரது ஜாதக அமைப்பில் ஜீவன பாவகம் எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது அடிப்படையிலேயே ஜீவன வாழ்க்கைக்கு இன்னல்களை தந்து விட வாய்ப்பு உண்டு , மேலும் ஜீவன ஸ்தானம் 6 , 8 , 12 ம்  வீடுகளுடன் தொடர்பு பெறுவது மிகுந்த தீமையான பலன்களையே வாரி வழங்கும் , இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் அனைவரும் , சுய தொழில் செய்வதை விட்டு விட்டு , மற்றவரிடம் அடிமை தொழில் புரிவது நல்லது , ஒரு வேலை களத்திர பாவகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் கூட்டு தொழில் செய்யலாம் , களத்திர பாவகமும் பதிக்க பட்டிருந்தால் ஜாதகர் ஓரிடத்தில் அடிமை தொழில் செய்வதே சால சிறந்தது .


1 ) ஒருவருடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் சர ராசிகள் ஆனா மேஷம் , கடகம் , துலாம் , மகர ராசிகளுடன் தொடர்பு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் சுய தொழில் செய்வதில் 200 சதவிகித வெற்றியை வாரி வழங்கும் .

2 ) ஒருவருடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஸ்திர ராசிகள் ஆனா ரிஷபம் , சிம்மம், விருச்சகம், கும்ப மகர ராசிகளுடன் தொடர்பு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் சுய தொழில் செய்வதில் 100 சதவிகித வெற்றியை வாரி வழங்கும் .

3 ) ஒருவருடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் உபய  ராசிகள் ஆனா மிதுனம், கன்னி, தனுசு, மீன  ராசிகளுடன் தொடர்பு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் சுய தொழில் செய்வதில் 60 சதவிகித வெற்றியை வாரி வழங்கும் அல்லது அடிமை தொழில் செய்வதில் வெற்றியை தரும் .


மேற்கண்ட அமைப்பில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்றிருந்தால் மட்டுமே ஒரு ஜாதகர் ஜீவன வழியில் யோக வாழ்வினை பெற முடியாது , தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்திகள் , நடை பெற இருக்கும் திசை மற்றும் புத்திகள் ஜீவன ஸ்தான பலனை நடத்தினால் மட்டுமே 100 சதவிகித தொழில் வெற்றியும் , ஜீவன மேன்மையும் ஜாதகர் பெற இயலும் , சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று நடக்கும் திசை மற்றும் புத்திகள் இந்த பாவக பலனை தரவில்லை எனில் நிச்சயம் ஜாதகர் ஜீவன வழியில் யோக  வாழ்க்கையை பெற முடியாது என்பது உறுதி .


எனவே ஒருவர் சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்யுமுன் தனது சுய ஜாதக அமைப்பின் படி சம்பந்த பட்ட பாவகங்கள் நல்ல நிலையில் இருக்கின்றதா , என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு சரியான தொழிலை தேர்ந்தெடுத்து செய்தால் நிச்சயம் ஜாதகர் தொழில் மேன்மையும் , ஜீவன வழியில் நன்மையையும் பெறுவார் , மாறாக ஜாதக அமைப்பில் ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் இல்லாமலும் , நடப்பு திசை மற்றும் புத்திகள் ஜாதகருக்கு சாதகமாக இல்லாத நேரத்தில் துவங்கும் தொழில்கள் யாவும் விரைவில்  மூடு விழ காணும் என்பதில் சந்தேகம் இல்லை .


புதிதாக தொழில் துவங்குபவர் ஜாதக அமைப்பில் தற்பொழுது நடை பெற்று கொண்டு இருக்கும் திசா புத்தியில் ஜீவன ஸ்தானம் வலிமையுடன் இருந்தாலும் ஜாதகர் தான் துவங்கிய தொழில் மிக பெரிய வெற்றியை பெற முடியும் , ஒரு வேலை சுய ஜாதக அமைப்பின் படி ஜீவன ஸ்தானம் பாதிக்க பட்டு இருப்பின் தனது குடும்பத்தில் உள்ள நபர்களின் ஜாதக அமைப்பில் ஜீவான ஸ்தானம் வலிமை பெற்ற ஜாதகரின் பெயரில் தொழில் துவங்கலாம் , இதனால் நிச்சயம் அந்த தொழில் மிக பெரிய வெற்றியை தரும் அல்லது கோட்சார ரீதியாக ஜீவன ஸ்தானம் வலிமையுடன் இருக்கும் பொழுது துவங்கும் தொழில்களும் மிக பெரிய வெற்றியை தரும் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696