ராகுகாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராகுகாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 பிப்ரவரி, 2017

நேரம் நல்ல நேரம்


நேரம் நல்ல நேரம்



நல்ல நேரம் என்பது ஒருவருக்கு எப்படி பலன் தருகிறது என்பதை சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! சுப காரியங்களை செய்ய நாம் நல்ல நேரம் பார்த்தே செய்கின்றோம், குறிப்பாக நல்ல முகூர்த்தம்,நல்ல ஹோரை சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று பஞ்ச பட்சி பார்த்து செயல்படுவது உண்டு, சிலர் அபிஜித் முகூர்த்தத்தை பயன்படுத்துவது உண்டு, தமிழக முன்னாள் முதல்வர் மேற்கண்ட நல்ல நேரத்தை பயன்படுத்தி பதவி ஏற்று கொண்டார், அபிஜித் முகூர்த்தத்தை பயன்படுத்தி பதவி ஏற்றால் அவருக்கு வெற்றிகள் நிச்சயம் என்று பரிந்துரை செய்ததாக செய்தி, அதன் பிறகு முன்னாள் முதல்வர் நிலை என்ன ஆனது என்பதை தமிழகமே அறியும், அடுத்து முதல்வர் ஆசையில் பல பகிரதன முயற்சிகளை மேற்கொண்ட நபருக்கு தற்பொழுது என்ன நடந்தது என்ன என்பதும் நேற்றே உலகம் முழுவது அறிந்திருக்கும், மேலும் தற்பொழுது முதல்வர் பதவியை அடைய முயற்சி செய்யும் அன்பர்கள் படும் பாடு உலகே அறியும்.


முன்னாள் முதல்வர் நல்ல நேரத்தை பயன்படுத்தி, முதல்வராக நீடிக்க முடியாத நிலை ஏன் ஏற்ப்பட்டது? முதல்வர் ஆசையில் பகிரதன முயற்சி செய்த நபருக்கு சிறைவாசம் சென்றது ஏன் ? தற்பொழுது முதல்வர் பதவிக்கு முயற்சிக்கும் அன்பருக்கு இன்னும் நல்ல செய்தி வாராமல் இருப்பதற்கு என்ன காரணம் ? என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

நல்ல நேரம் என்பது என்ன ?

பொதுவாக அன்றைய நாளில் நல்ல நேரம் பார்க்கும் அன்பர்கள், தமது சுய ஜாதக வலிமையை பற்றி எவ்வித கவனமும் கொள்வதில், குறிப்பாக தமது ஜாதக வலிமை எப்படி இருந்தாலும், நல்ல நேரம் பார்த்து செய்தால் அனைத்தும் வெற்றிகரமாக அமையும் என்ற எண்ணத்தின் விளைவே, முன்னாள் முதல்வர் முதல்வராக நீடிக்க முடியாததிர்க்கும், முதல்வர் ஆசையில் முயற்சி எடுத்த நபர் சிறை வசம் சென்றதிர்க்கும் , தற்பொழுது முதல்வர் பதவிக்கு முன்னெடுப்பவருக்கு தாமதம் ஆவதற்கும் அடிப்படை காரணமாக அமைகிறது..

ஒருவரது சுய ஜாதகம் வலிமை பெறாமல், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல்... ஒருவர் நல்ல நேரம் பார்த்து செய்யும் காரியங்கள் எதுவும் வெற்றி பெறாது.. குறிப்பாக சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகர் ராகுகாலம், எமகண்டம் மற்றும் குளிகை நேரத்தில் ஒரு காரியத்தை செய்தாலும் நிச்சயம் வெற்றி மேல் வெற்றியை தரும், சுய ஜாதக வலிமை இன்றி ஒருவர் நல்ல முகூர்த்தம்,நல்ல ஹோரை மற்றும் பஞ்ச பட்சி பார்த்து செய்தாலும் சம்பந்தப்பட்ட அன்பருக்கு தோல்வியே மிஞ்சும், எனவே நல்ல நேரம் என்பது சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதே "ஜோதிடதீபத்தின்" கருத்து.

முன்னாள் முதல்வருக்கு தெரியாத ஜோதிடர்களா? சாஸ்திர வல்லுன்னர்களா? இருப்பின்னும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றும், ஜோதிடர்களின் ஆலோசனை படி நல்ல நேரம் பார்த்து பதவி ஏற்றும் அதில் நீடிக்க முடியவில்லை, முதல்வர் பதவி ஆசையில் ஒருவர் சிறை செல்ல நேர்ந்தது, முதல்வர் பதவியை அடைவதற்கு தற்பொழுது ஒருவர் முயற்சிக்கும் பொழுது அதுவும் தாமதம் ஆகிறது... இங்கே ஒரு நாளில் நிர்ணயம் செய்யும் நல்ல நேரத்தை விட, ஒருவரின் சுய ஜாதக வலிமையே முழுமையாக வேலை செய்கிறது என்பது 100% விகிதம் உறுதியாகிறது அன்பர்களே! எனவே குறிப்பிட்ட நல்ல நாளில் நல்ல நேரம் பார்த்து ஒரு காரியத்தை செய்வதை விட, சுய ஜாதக வலிமை உணர்ந்து ஒரு காரியத்தை செய்வதே முழு அளவிலான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதை மனதில் கொண்டு ஒவ்வொருவரும் செயல்பட்டால், அவர்கள் செய்யும் காரியங்களில் 100 % விகித வெற்றி உறுதி என்பதை "ஜோதிடதீபம்" அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய விரும்புகிறது.

வாழ்க வளமுடன் ஜோதிடன் வர்ஷன் 9443355696

சனி, 21 ஏப்ரல், 2012

ராகுகாலம் நல்ல நேரமாக அமையும்?








1.சுய ஜாதக அமைப்பில் ராகு எங்கு?எப்படிப்பட்ட நிலையில் இருந்தால்
ஒருவருக்கு
ராகுகாலம் நன்மை செய்யாத நேரமாக அமையும்?
 
2.சுய ஜாதக அமைப்பில் ராகு எங்கு?எப்படிப்பட்ட நிலையில் இருந்தால்
அவருக்கு
ராகுகாலம் நல்ல நேரமாக அமையும்?

3.
எமகண்டம் என்பது கேதுவிற்கு உரிய நேரம் என்கின்றனர்.அந்த வகையில் சுய
ஜாதக
அமைப்பில் கேது அல்லது எமகண்டத்திற்கு உரிய கிரகம் எங்கு
எப்படிப்பட்ட
நிலையில் இருந்தால் அவருக்கு அந்த நேரம் நன்மையாக அமையும்?

எப்படிப்பட்ட
நிலையில் இருந்தால் எமகண்டம் தீமையாக அமையும்?

இது
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வேண்டிய விஷயம்.தங்களின் பதில் ஜோதிட
உலகில்
ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

நன்றிகளுடன்
,
By
ஜோதிட
பித்தன்.


பதில் : 

சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு லக்கனத்தில் ( இலக்கின பாவத்திற்கு உட்பட்ட பாகைக்குள் ) ராகு அமர்ந்து இருக்குமானால், அது எந்த லக்கினமானாலும் அந்த ஜாதகருக்கு நிச்சயம் ராகுகாலம் 100  சதவிகித நன்மையை மட்டுமே செய்யும் இது நடைமுறை உண்மை , மேலும் ஜாதகருக்கு இந்த நேரங்களில் துவங்கும் அனைத்து காரியங்களும் வெற்றி மேல் வெற்றி கொடுக்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 

சுய ஜாதக அமைப்பில் ராகு எந்த பாவகத்தில் இருந்தாலும், அந்த பாவகத்திர்க்கு 100  சதவிகித நன்மையை மட்டும் செய்து கொண்டிருந்தாள், அந்த ஜாதகருக்கு நிச்சயம் ராகுகாலம் நன்மையையே வாரி வழங்கும் .

இதில் அந்த பாவகம் சர தத்துவத்தில் அமைந்து இருப்பது மிக 
நல்லது , மேலும் ராகுவுடன் சேர்ந்திருக்கு மற்ற கிரகங்கள் வக்கிரக நிலையில் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு நிச்சயம் ராகுகாலம் நன்மையையே வாரி வழங்கும் .    

இதற்க்கு எதிர்பதமாக சுய ஜாதகத்தில் ராகு அமர்ந்தால், ஜாதகருக்கு தீமையான பலன்கள் ராகுகாலத்தில் நடப்பதிற்கு நிச்சயம் வாய்ப்பிருக்கிறது, மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் ராகுகாலத்தை தவிர்ப்பது நல்லது . மேலும் இந்த தீமையான பலனை ஜாதகரின் நண்பர்கள் மூலமாக 100  சதவிகிதம் நடத்தும்.

சுய ஜாதக அமைப்பில் கேது நில தத்துவ ராசியில் அமர்ந்து அது சர ராசியாக இருந்து 100  சதவிகிதம் பாதிப்படைந்து இருந்தால், அந்த ஜாதகருக்கு நிச்சயம் எமகண்டம் தீமையாக அமையும் மேலும் இந்த நேரங்களில் ஜாதகர் பயணம் துவங்குவதை தவிர்ப்பது மிகுந்த நலம் தரும், அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து பயணம் செய்வதையும் தவிர்ப்பது நலம் . 

சுய ஜாதக அமைப்பில் லக்கினம் , எட்டாம் பாவகம் , ராகு கேது , சனி ஆகிய கிரகங்கள் வழுத்து நிற்கும் ஜாதகருக்கு எமகண்டம் எனும் நேரம் யோக நேரமாக அமையும் .

ஜாதகர் ஒருவர் இந்த கால நேரத்தை பற்றி கவலை கொள்ளாமல் , தமது கடமையே முக்கியம் என்று ஒரு பணியை செய்து கொண்டு இருப்பாரே ஆயின், நிச்சயம் அவருக்கு இந்த நல்ல நேரம் , கெட்ட நேரம் எதுவும் வேலை செய்யாது, ஏனெனில் அவரது ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன்  கிரகங்கள் வழுவாக அமைந்து இருக்கும்.

ஜோதிடன் வர்ஷன் 
9443355696