நல்லநேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்லநேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

எல்லா நேரமும் நல்ல நேரமே ! லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்ற ஜாதகத்திற்க்கு !


கேள்வி  :

 சுப அசுபங்களை நீக்க வேண்டிய ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களும். செவ்வாய், சனி, சூரியன் போன்ற ஹோரைகளும், சந்திராஷ்டமம், அஷ்டம சனி, ஏழரை சனி, பாத சனி, விரைய சனி, போன்றவைகளும், சனி, ராகு, செவ்வாய், சூரியன், கேது போன்ற இன்னல்களை தரும் என்று கருதப்படும் திசா புத்திகளும் யார் ஒருவருக்கு நன்மையை தரும் ? ஒரு வேலை மேற்கண்ட விஷயங்கள் யாவும் எவருக்கும் நன்மையை தாராத ? கெடு பலனை மட்டுமே தருமா ? உண்மை என்ன ?

பதில் :

 தாங்கள் வினவியிருக்கும் கேள்விக்கு விளக்கமான பதிலை இன்றைய பதிவில்  சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஒருவரின் வாழ்க்கையில் நல்ல நேரம் எது என்பதனையும், கெட்ட நேரம் எது என்பதனையும் நிர்ணயம் செய்யும் முழு உரிமை அவரது சுய ஜாதகத்திற்க்கே உண்டு என்றால் அது மறுக்க இயலாத உண்மை கீழ்கண்ட ஜாதகருக்கு நல்ல நேரம் எது? என்பதனையும் கெட்ட நேரம் எது?  என்பதனையும் அவரது சுய ஜாதகம் எப்படி நிர்ணயம் செய்கிறது என்ற அழகினை இந்த பதிவில் ரசிப்போம்  வாருங்கள் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : சதயம் 2ம் பாதம்

ஜாதகருக்கு  லக்கினம், ராசி இரண்டுமே கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாபம்  மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடான ஸ்திர காற்று ராசியான கும்பத்தில் அமைவது, அடிப்படையிலேயே ஜாதகர் பரிபூர்ண அதிர்ஷ்டத்தை பெரும் யோகம் பெற்றவர் என்பதை தெளிவு படுத்துகிறது, அடுத்து ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை நிலையை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,8,9,10,12 வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெற்று இருப்பது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பதை உறுதி செய்கிறது, மேற்கண்ட ஜாதகருக்கு வாழ்க்கையில் எல்லா நேரமும் நல்ல நேரமே என்று தெளிவாக சொல்லிவிட முடியும் ஏனெனில் சுய ஜாதக வலிமையே ஒருவரின் வாழ்க்கையில் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரத்தை நிர்ணயம் செய்கிறது, ஜாதகர் ஜெனன காலத்தில் ராகு திசை 12வருடம், 7மாதம், 27நாட்கள் இருப்புடன் தனது பூவுலக வாழ்க்கையை துவங்கி இருக்கிறார், ராகு தனது திசையில் 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை நடத்தியது ஜாதகருக்கு நல்ல உடல் ஆரோக்கியம், தெளிவான மனநிலையை வாரி வழங்கி இருக்கிறது இதன் காரணமாக ஜாதகரின் அடிப்படை கல்வி சிறப்பாக அமைந்திருக்கிறது, வளரும் சூழ்நிலையில்  நல்ல நன்மைகளையும் பொருளாதர சிறப்புகளையும் பெற்று வாழ்க்கையில் சுப யோகங்களை அனுபவித்திருக்கின்றார், அதன் பிறகு நடைபெற்ற குரு திசை ஜாதகருக்கு 3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை நடத்தியது ஜாதகரின் முயற்சிகள் யாவும் நல்ல வெற்றியை தந்து இருக்கின்றது, ஜாதகரின் கல்வி முழுமை பெற்று இருக்கின்றது, சிறந்த மேல்நிலை பட்டபடிப்பையும், ஆராய்ச்சி கல்வியையும் யாரும் எதிர்பாரா வண்ணம் சிறப்பாக பெற்று இருப்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

ஜாதகரின் சிறந்த கல்வி தகுதி சிறப்பான சுய தொழில் வாய்ப்பையும் அதன் வழியிலான அபரிவிதமான முன்னேற்றங்களையும் வாரி வழங்கி இருப்பதற்கு, சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றது, மேலும் சரியான வயதில் திருமண வாழ்க்கை அமைந்தது, உடனே நல்ல புத்திர பாக்கியம் பெற்றது, வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு மற்றும் அன்பு ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைத்தது என ஜாதகருக்கு தொடர்ந்து சுபயோக பலாபலன்கள் அனைத்தும் நடைபெற சுய ஜாதக வலிமையே உறுதுணையாக நின்று இருப்பது கண்கூடான உண்மை, மேலும் குரு திசை காலத்திலேயே ஜாதகர் மூன்று விதமான  தொழில் வழியில் இருந்து தன்னிறைவான வருமானங்களை எவ்வித தொய்வும் இன்றி பெற்றதற்க்கும் சுய ஜாதக வலிமையே காரணம் என்றால் அது மிகையில்லை அன்பர்களே !

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 8,10 வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலாபலன்களை குடும்பம் மற்றும் வீர்ய ஸ்தான வழியில் இருந்து சிறப்பாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது, ஜாதகர் மற்றும் ஜாதகரின் முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலனும், பாக்கியத்தின் வலிமையுமே என்றால் அது மிகையில்லை, அடுத்து  வரும் புதன் திசையும் ஜாதகருக்கு 6வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கை தன்னிறைவான சுபயோக வாழ்க்கை என்பதை கட்டியம் கூறுகிறது அன்பர்களே !

எனவே ஒருவரது சுய ஜாதகம் வலிமை பெற்று, நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் அனைத்தும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் முழு அளவில் யோகம் பெற்றவர் ஆகிறார், இவருக்கு ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களும் சுபயோகங்களையே வாரி வழங்கும், கெட்ட நேரம் என்ற ஓர்  விஷயம் ஜாதகரின் நிழலை கூட நெருங்காது, ஆனால் சுய ஜாதகம் வலிமை அற்று நடைபெரும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் உலகின் மிகசிறந்த சாஸ்த்திர வல்லுநர்களை கொண்டு நல்ல நேரம் கணித்து செயல்பட்டாலும் கூட, ஜாதகருக்கு அந்த நேரம் கெட்ட நேரமாகவே அமையும், நல்ல நேரமும் கெட்ட நேரமும் சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே அமைகிறது என்ற  உண்மையை அனைவரும் உணர்வது அவசியமாகிறது என்பதனை " ஜோதிடதீபம் " தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளது.

மேலும் சுப அசுபங்களை நீக்க வேண்டிய ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களும். செவ்வாய், சனி, சூரியன் போன்ற ஹோரைகளும், சந்திராஷ்டமம், அஷ்டம சனி, ஏழரை சனி, பாத சனி, விரைய சனி, போன்றவைகளும், சனி, ராகு, செவ்வாய், சூரியன், கேது போன்ற இன்னல்களை தரும் என்று கருதப்படும் திசா புத்திகளும் சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே கருத்தில்கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதனை அனைவரும் கடைபிடித்தால் எல்லா நேரமும் நமக்கு நல்ல சுபயோக நேரமே, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 15 பிப்ரவரி, 2017

நேரம் நல்ல நேரம்


நேரம் நல்ல நேரம்



நல்ல நேரம் என்பது ஒருவருக்கு எப்படி பலன் தருகிறது என்பதை சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! சுப காரியங்களை செய்ய நாம் நல்ல நேரம் பார்த்தே செய்கின்றோம், குறிப்பாக நல்ல முகூர்த்தம்,நல்ல ஹோரை சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று பஞ்ச பட்சி பார்த்து செயல்படுவது உண்டு, சிலர் அபிஜித் முகூர்த்தத்தை பயன்படுத்துவது உண்டு, தமிழக முன்னாள் முதல்வர் மேற்கண்ட நல்ல நேரத்தை பயன்படுத்தி பதவி ஏற்று கொண்டார், அபிஜித் முகூர்த்தத்தை பயன்படுத்தி பதவி ஏற்றால் அவருக்கு வெற்றிகள் நிச்சயம் என்று பரிந்துரை செய்ததாக செய்தி, அதன் பிறகு முன்னாள் முதல்வர் நிலை என்ன ஆனது என்பதை தமிழகமே அறியும், அடுத்து முதல்வர் ஆசையில் பல பகிரதன முயற்சிகளை மேற்கொண்ட நபருக்கு தற்பொழுது என்ன நடந்தது என்ன என்பதும் நேற்றே உலகம் முழுவது அறிந்திருக்கும், மேலும் தற்பொழுது முதல்வர் பதவியை அடைய முயற்சி செய்யும் அன்பர்கள் படும் பாடு உலகே அறியும்.


முன்னாள் முதல்வர் நல்ல நேரத்தை பயன்படுத்தி, முதல்வராக நீடிக்க முடியாத நிலை ஏன் ஏற்ப்பட்டது? முதல்வர் ஆசையில் பகிரதன முயற்சி செய்த நபருக்கு சிறைவாசம் சென்றது ஏன் ? தற்பொழுது முதல்வர் பதவிக்கு முயற்சிக்கும் அன்பருக்கு இன்னும் நல்ல செய்தி வாராமல் இருப்பதற்கு என்ன காரணம் ? என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

நல்ல நேரம் என்பது என்ன ?

பொதுவாக அன்றைய நாளில் நல்ல நேரம் பார்க்கும் அன்பர்கள், தமது சுய ஜாதக வலிமையை பற்றி எவ்வித கவனமும் கொள்வதில், குறிப்பாக தமது ஜாதக வலிமை எப்படி இருந்தாலும், நல்ல நேரம் பார்த்து செய்தால் அனைத்தும் வெற்றிகரமாக அமையும் என்ற எண்ணத்தின் விளைவே, முன்னாள் முதல்வர் முதல்வராக நீடிக்க முடியாததிர்க்கும், முதல்வர் ஆசையில் முயற்சி எடுத்த நபர் சிறை வசம் சென்றதிர்க்கும் , தற்பொழுது முதல்வர் பதவிக்கு முன்னெடுப்பவருக்கு தாமதம் ஆவதற்கும் அடிப்படை காரணமாக அமைகிறது..

ஒருவரது சுய ஜாதகம் வலிமை பெறாமல், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல்... ஒருவர் நல்ல நேரம் பார்த்து செய்யும் காரியங்கள் எதுவும் வெற்றி பெறாது.. குறிப்பாக சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகர் ராகுகாலம், எமகண்டம் மற்றும் குளிகை நேரத்தில் ஒரு காரியத்தை செய்தாலும் நிச்சயம் வெற்றி மேல் வெற்றியை தரும், சுய ஜாதக வலிமை இன்றி ஒருவர் நல்ல முகூர்த்தம்,நல்ல ஹோரை மற்றும் பஞ்ச பட்சி பார்த்து செய்தாலும் சம்பந்தப்பட்ட அன்பருக்கு தோல்வியே மிஞ்சும், எனவே நல்ல நேரம் என்பது சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதே "ஜோதிடதீபத்தின்" கருத்து.

முன்னாள் முதல்வருக்கு தெரியாத ஜோதிடர்களா? சாஸ்திர வல்லுன்னர்களா? இருப்பின்னும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றும், ஜோதிடர்களின் ஆலோசனை படி நல்ல நேரம் பார்த்து பதவி ஏற்றும் அதில் நீடிக்க முடியவில்லை, முதல்வர் பதவி ஆசையில் ஒருவர் சிறை செல்ல நேர்ந்தது, முதல்வர் பதவியை அடைவதற்கு தற்பொழுது ஒருவர் முயற்சிக்கும் பொழுது அதுவும் தாமதம் ஆகிறது... இங்கே ஒரு நாளில் நிர்ணயம் செய்யும் நல்ல நேரத்தை விட, ஒருவரின் சுய ஜாதக வலிமையே முழுமையாக வேலை செய்கிறது என்பது 100% விகிதம் உறுதியாகிறது அன்பர்களே! எனவே குறிப்பிட்ட நல்ல நாளில் நல்ல நேரம் பார்த்து ஒரு காரியத்தை செய்வதை விட, சுய ஜாதக வலிமை உணர்ந்து ஒரு காரியத்தை செய்வதே முழு அளவிலான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதை மனதில் கொண்டு ஒவ்வொருவரும் செயல்பட்டால், அவர்கள் செய்யும் காரியங்களில் 100 % விகித வெற்றி உறுதி என்பதை "ஜோதிடதீபம்" அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய விரும்புகிறது.

வாழ்க வளமுடன் ஜோதிடன் வர்ஷன் 9443355696

வெள்ளி, 18 மார்ச், 2016

எப்பொழுதும் நல்ல நேரமே! சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுது !


" ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் செல்போனில் பேட்டரி இருந்தாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் " 

என்ற திரைபட நகைசுவை விரும்பி பார்த்ததுண்டு, பொதுவாக எந்த ஒரு சுப நிகழ்ச்சி துவங்கும் முன் நல்ல நேரம் பார்ப்பது மக்களிடையே உள்ள இயற்க்கை நடைமுறை, இதில் அன்றைய நாளில் பஞ்ச அங்கங்களை கணிதம் செய்து முகூர்த்தமும், சுப நேரங்களையும் "ஜோதிடர்கள்" பரிந்துரை செய்கின்றனர், நல்லநேரம் நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்வது, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு யோக பலன்களையும் அதிர்ஷ்டங்களையும் அதிக அளவில் வாரி வழங்கும்.

பொதுவாக சுய ஜாதகங்களில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு எப்பொழுதும் எல்லா நேரங்களையும் நல்ல நேரமாக நன்மை தரும் விதத்தில் அமைந்து விடும், குறிப்பாக சுய ஜாதக பாவக வலிமை ஜாதகருக்கு எப்பொழுதும் நன்மை மற்றும் யோகங்களை வாரி வழங்கிய வண்ணம் இருக்கும், மேலும் லக்கினம் முதல் 12 பாவகமும் வலிமை பெற்ற, ஜாதக அமைப்பை பெற்றவர்கள், ராகு காலம், எமகண்டம், குளிகை, சூலம் போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல், எந்த நேரத்திலும் எந்த காரியத்திலும் துணிந்து இறங்கலாம், நிச்சயம் 100% விகித நன்மையும் வெற்றியும் உண்டாகும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்கள் பாதிக்க படும் பொழுதே ஜாதகர் தமக்கு உகந்த, தனது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் அடிப்படையில் நல்ல நேரத்தை தேர்ந்து எடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

சில அன்பர்களின் ஜாதகங்களுக்கு பொதுவாக தீமையை தரும் என்று கருதும் ராகு காலம், எமகண்டம், குளிகை, சூலம் போன்றவை அபரிவிதமான யோக பலன்களை தருவதுண்டு, சுய ஜாதகத்தில் ராகு பகவான் வலிமை பெற்ற அன்பர்களுக்கு ராகு காலம் மிகுந்த யோகங்களை தருவதுண்டு, சுய ஜாதகத்தில் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக ராகு பகவான் அமர்ந்து லாப ஸ்தானம் வலிமை பெரும் பொழுது, சம்பந்தபட்ட ஜாதகருக்கு ராகு காலமே சகல யோகங்களையும் தரும், குறிப்பாக ஜாதகர் ராகு காலங்களில் எடுக்கும் முயற்ச்சிகள், புதிய காரியங்கள், புதிய தொழில்கள் யாவும் ஜாதகருக்கு வெற்றிமேல் வெற்றியையும், லாபங்களையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெரும் பொழுது, பாவ கிரகம் என்று அழைக்கப்படும்  ராகு,கேது,சனி, செவ்வாய்,சூரியன் திசாபுத்திகளும் ஜாதகருக்கு யோக பலன்களையே வாரி வழங்கும்.

 ஒருவருக்கு நல்ல நேரம் என்பது சம்பந்த பட்ட ஜாதகரின் பாவக  வலிமைக்கு ஏற்ப்பவே அமைகிறது என்பதை கருத்தில் கொள்வது நல்லது, சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுது எல்லா நேரமும் நல்ல நேரமே, சுய ஜாதகம் வலிமை இழக்கும் பொழுது நல்ல நேரமும் ஜாதகருக்கு எதிராக திரும்பு, ஜாதகரின் முயற்ச்சிகள், செயல்கள் அனைத்தும் தோல்வியில் முடியும், தமது சுய ஜாதக பாவக வலிமைக்கு ஏற்ற பொருத்தமான நல்ல நேரத்தை தேர்வு செய்து வெற்றி காண்பதே புத்திசாலித்தனம், எல்லா நேரமும் நல்ல நேரமாக அமையும் ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே!


லக்கினம் : மிதுனம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : பரணி 3ம் பாதம் 

 ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :

1,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை வாரி வழங்கும்.

2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை வாரி வழங்கும்.

3,6,711ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை வாரி வழங்கும்.

9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து 100% விகித அவயோக பலன்களை வாரி வழங்கும்.

மேற்கண்ட  ஜாதகருக்கு பெரும்பாலனா வீடுகள்  ( 9,12 தவிர ) வலிமை பெற்ற பூர்வ புண்ணியம்,ஜீவனம்,லாப ஸ்தானங்களுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த யோகங்களை தரும் அமைப்பாகும், மேலும் நடைபெறும் திசாபுத்திகள் அனைத்தும் ஜாதகருக்கு பூர்வபுண்ணியம்,ஜீவனம்,லாப ஸ்தானங்களுடன் சம்பந்தம் பெற்ற வீடுகளின் பலன்களையே ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு எந்நேரமும் நல்ல நேரமாக அமைவதை உறுதிபடுத்துகிறது, ஜாதகர் எந்த நேரத்திலும் எதை செய்தாலும் முழு வெற்றியினை பெறுவது கவனிக்க தக்க அம்சமாகும், இதற்க்கு காரணமாக அமைவது சுய ஜாதக பாவக வலிமையே, ஜாதகருக்கு 9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றாலும், நவ கிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு 12ம் பாவக பலனை ஏற்று நடத்தாதது ஜாதகருக்கு சாதகமான அம்சமாகும், 9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றாலும் 12ம் பாவகம் ஜாதகருக்கு செயலிழந்து நிற்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பு :

ராகு பகவான் ஜாதகருக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக பொறுப்பு ஏற்ப்பது, ஜாதகர் ராகு காலங்களிலும் அபரிவிதமான யோகங்களை பெறுவதை உறுதி செய்கிறது, ஜாதகர் ராகு காலங்களில் துவங்கும்  காரியங்களும், முயற்ச்சி மற்றும் தொழில்களும் வெற்றி மேல் வெற்றியை வாரி குவிக்கும் என்பது மறுக்க இயலாத உண்மை, இந்த ஜாதகருக்கு அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் வாரி வழங்குவதே சாய  கிரகமான ராகு பகவான்தான் என்றால் அது மிகையில்லை.

" ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் செல்போனில் பேட்டரி இருந்தாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் "

என்ற நகைசுவை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ "சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும்" வலிமை பெற்ற ஒருவருக்கு  நிச்சயம் பொருந்தும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 18 செப்டம்பர், 2013

தனது மகன் அல்லது மகள் என்றாலும் கூட, சுபகாரியங்களில் கணவனை இழந்த பெண்களை கலந்துகொள்ள அனுமதிப்பதில்லையே இதற்க்கு என்ன காரணம்? சாஸ்திரம் தான் இப்படி அறிவுறுத்துகிறது என்கிறார்களே இது உண்மையா ?



எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எந்த சாஸ்திரமும் கணவனை இழந்த பெண்களை சுபகாரிங்களில் கலந்துகொள்ளகூடாது என்று அறிவுறுத்தியதாக தெரியவில்லை சகோதரி அவர்களே ! 

மேலும் பெரியோர்கள் கணவனை இழந்த பெண்கள் சுபகாரியங்களுக்கு தவிர்த்ததிர்க்கு உண்டான உண்மை காரணம், கணவனை இழந்த பெண்கள் சுப காரியங்களில் கலந்துகொள்ளும் பொழுது மனோ ரீதியான சிக்கல்களை சந்திக்கவேண்டி வரும் என்பதாலும், தனது நிலையை பற்றிய நினைத்து  தாழ்வு மனப்பான்மை ஏற்பட கூடும் என்பதாலும், மற்றவர்கள் சந்தோஷமாக தம்பதியாக கலந்துகொள்ளும் பொழுது தன்னால் இயலவில்லை என்ற மனக்கவலை ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தாலும், சுப காரியங்களில் கணவனை இழந்த பெண்களை கலந்துகொள்ள வேண்டாம் என்று அறிவுருத்தியிருக்க கூடும் .

இதுவே நாளடைவில் பிற்போக்கு தனமான செய்கையாக மாறியிருக்க கூடும், ஆக கணவனை இழந்த பெண்களின் நலன் கருதியே பெரியவர்கள் சுப காரியங்களில் தவிர்த்திருக்க வாய்ப்பு உண்டு, மற்றபடி சாஸ்திரம் சொல்கிறது என்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து , இறை அருளுக்கு தெரியாத? உயிர்கள் அனைத்தும் ஒன்று என்று , மனிதனுக்குள் தானே, இத்தனை பிரிவினைகள், வேறுபாடுகள்  இறை நிலைக்கு ஏது வேறுபாடு, தற்பொழுது நடந்துகொண்டு இருக்கும் 21ம் நூற்றாண்டில் இப்படி பட்ட அவலங்கள் இருப்பதை நினைத்து, நாம் அனைவரும் வருந்த வேண்டும் என்பதே உண்மை.

ஆகவே சகோதரி அவர்களே ! தாங்கள் தங்களின் குழந்தைகளின் சுபகாரியங்களில் கலந்துகொள்ள எந்த சாஸ்திரமும் தடை சொல்லவில்லை என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள் , மற்றவர்களை விட நல்ல மனதுடன் தாங்கள் வாழ்த்தும் வாழ்த்துகள் அனைத்தும் தங்களின் குழந்தைகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் , நல்லாசியையும் வாரி வழங்கும் என்பதே உண்மை, ஆக தாங்கள் எவ்விதத்திலும் மனவருத்தம் கொள்ளாமல் தங்களின் குழந்தைகளை ஆசிர்வாதம் செய்யுங்கள் , அவர்கள் வாழையடி வாழையாக செழித்து, 16வகை செல்வமும் பெற்று நீண்ட ஆயுளும், நிறைசெல்வமும், உயர்புகழும்,
மெய்ஞானத்தையும் பெற்று வளமுடன் வாழட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696
jothidadeepam@gmail.com 

வெள்ளி, 5 அக்டோபர், 2012

சுய ஜாதக அமைப்பில் லக்கினம் வலிமை பெரும் பொழுது ஒரு ஜாதகர் பெரும் நன்மைகள் - பகுதி 2.





லக்கினம் எதுவென்றாலும் ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை மேன்மை பெற உறுதுணை புரியும் , மேலும் லக்கினம் என்பது ஜாதகரின் தனி தன்மை , குண இயல்பு , உடல் நிலை , மன நிலை , ஜாதகரின் செயல்பாடுகள் , ஜாதகர் செய்த வினை பதிவின் தன்மை , அனுபவிக்க வேண்டிய நன்மை தீமை , வளரும் சூழ்நிலை , ஜாதகரின் ஆயுள் பலம் , தனிப்பட்ட புத்திசாலிதனம், ஜாதகரின் செயல் திறனின் வேகம் , ஒரு விஷயத்தை கிரகித்துகொள்ளும் அறிவாற்றல் , தனது பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு , போன்ற அமைப்புகளை நிர்ணயம் செய்வது இந்த லக்கினமே , எனவே லக்கினம் வலிமை பெற்றால் என்ன பலன் , வலிமை இழந்தால் என்ன பலன் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம் .


லக்கினம் வலிமை பெரும் அமைப்பு : 


ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினம் எனும் பாவகம் கீழ்கண்ட வீடுகளுடன் தொடர்பு பெற்றால் மிகுந்த நன்மையை தரும் , ஆனால் அந்த வீடு பாதக ஸ்தானமாக இருக்க கூடாது என்பது பொது விதி .

லக்கினம் ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதகரின் வசக்கையை அடிப்படையிலேயே கடுமையாக பாதிக்கும் , குறிப்பாக பெற்றோரின் ஆதரவை சிறு வயதிலேயே இழக்கும் சூழ்நிலை உண்டாகும் , அடிப்படை கல்வியில் தடை ஏற்ப்படும் , திடீரென நிகழும் அவயோக நிகழ்சிகளால் ஜாதகர் கடுமையாக பாதிக்க வாய்ப்பு உண்டு , மேலும் உடல் நிலையும் கடுமையாக பாதிக்க  படும், தன்னம்பிக்கை இழக்கும் அளவிற்கு ஜாதகரின் வாழ்வில் அடிக்கடி துன்பம் உண்டாகும் , எடுக்கும் முயற்சிகள் யாவும் தேல்வி பெரும் , மேலும் உடல் ஆரோக்கியம் , மன ஆரோக்கியம் கெடும் .

லக்கினம் பாக்கியம் எனும் ஒன்பதாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக ஜாதகர் சிறுவயது முதலே அனைத்திலும் தனி தன்மையுடன் விளங்கும் அளவிற்கு ஜாதகரின் அறிவாற்றல் அமைந்து விடும் , மேலும் அனைவரிடமும் அன்பாகவும் , பெருந்தன்மையாகவும் நடந்து கொள்ளும் மனநிலையை ஜாதகர் சிறு வயதிலேயே பெற்றிருப்பார் , சுய ஒழுக்கம் , கட்டுப்பாடு , நன்னடத்தை , என சிறப்பு குணங்களும் ஜாதகரிடம் சிறு வயதிலேயே அமைந்த விடும் , மேலும் கல்வி காலங்களில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும் , உடல் நிலை மன நிலை வளரும் சூழ்நிலை அனைத்தும் ஜாதகருக்கு மிகவும் சிறப்பாக அமைந்து விடும் . ஆனால் ஸ்திர  இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு இது பொருந்தாது , காரணம் ஸ்திர  லக்கினத்திற்கு பாதக ஸ்தானமே இந்த ஒன்பதாம் வீடுதான் .

லக்கினம் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதகருக்கு  சிறுவயதில் இருந்தே பல முன்னேற்றங்களை வாரி வழங்கும் , குறிப்பாக ஜாதகரின் தகப்பனார் ஜாதகர் பிறந்த சில நாட்களில் மிகப்பெரிய தொழில் முன்னேறத்தை பெறுவார் , மேலும் ஜாதகரின் உடல் நிலையும் , மன நிலையும் வளரும் சூழ்நிலையும் மிகவும் சிறப்பாக அமைந்து விடும் , சிறுவயதிலேயே நல்ல கல்வி அறிவினையும் , நிர்வாக திறைமையும் சிறப்பாக ஜாதகருக்கு அமைந்து விடும் , எதை செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம் எனும் மந்திரத்தை ஜாதகர் இயற்கையாக கற்று வைத்திருப்பார் .

லக்கினம் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதகர் பிறந்த சில மணி நேரத்தில் இருந்தே அதிர்ஷ்டத்தை வாரி வழங்க ஆரம்பித்து விடும் , தனது பெற்றோருக்கு அளவில்லா வசதி வாய்ப்பினை வாரி வழங்கும் ஜாதக அமைப்பு இது , மேலும் ஜாதகரின் உடல் நிலையும், மன நிலையும் வளரும் சூழ்நிலையும் மிக மிக சிறப்பாக அமைத்து விடும் , கல்வி காலங்களில் வகுப்பில் முதல் எண் பெரும் யோகம் உண்டாகும் , பட்ட படிப்பில் ஜாதகர் உலகம் வியக்கத்தக்க முன்னேற்றத்தை பெறுவார் , மேலும் சிறு வயது முதல் சகல யோகங்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , மேலும் ஜாதகர் எவ்வளவு வசதி படைத்திருந்தாலும் எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வார் , நல்ல குணமும் , சுய கட்டுப்பாடு , ஒழுக்கம் எல்லாம் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் .ஆனால் சர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு இது பொருந்தாது , காரணம் சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானமே இந்த 11 ம் வீடுதான் .

லக்கினம் விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதகரின் அடிப்படை வாழ்க்கையே கடுமையாக பாதிக்கும் , குறிப்பாக பெற்றோரிடம் இருந்து பிரிந்து தனிமையில் வாட வேண்டிய சூழ்நிலையை ஏற்ப்படுத்தி விடும் , குறிப்பாக ஹாஸ்டலில் படிக்கும் குழந்தைகளின் ஜாதக அமைப்பில் இந்த நிலை நிச்சயம் இருக்கும் , இதனால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை தந்து விடும் , அடிப்படை கல்வியில் பல தடைகள் ஏற்ப்படும் , உடல் நிலையும் , மன நிலையும் கெடும் , கற்பனையில் வாழ்க்கையை வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப்படுத்தி விடும் , தன்னம்பிக்கை குறையும் , தைரியம் குறையும் , சுய சிந்தனை அற்று மற்றவரை சார்ந்து வாழும் வாழ்க்கையை ஏற்ப்படுத்தி விடும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam @gmail .com  

வியாழன், 4 அக்டோபர், 2012

சுய ஜாதக அமைப்பில் லக்கினம் வலிமை பெரும் பொழுது ஒரு ஜாதகர் பெரும் நன்மைகள் - பகுதி 1.




லக்கினம் எதுவென்றாலும் ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை மேன்மை பெற உறுதுணை புரியும் , மேலும் லக்கினம் என்பது ஜாதகரின் தனி தன்மை , குண இயல்பு , உடல் நிலை , மன நிலை , ஜாதகரின் செயல்பாடுகள் , ஜாதகர் செய்த வினை பதிவின் தன்மை , அனுபவிக்க வேண்டிய நன்மை தீமை , வளரும் சூழ்நிலை , ஜாதகரின் ஆயுள் பலம் , தனிப்பட்ட புத்திசாலிதனம், ஜாதகரின் செயல் திறனின் வேகம் , ஒரு விஷயத்தை கிரகித்துகொள்ளும் அறிவாற்றல் , தனது பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு , போன்ற அமைப்புகளை நிர்ணயம் செய்வது இந்த லக்கினமே , எனவே லக்கினம் வலிமை பெற்றால் என்ன பலன் , வலிமை இழந்தால் என்ன பலன் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம் .


லக்கினம் வலிமை பெரும் அமைப்பு : 


ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினம் எனும் பாவகம் கீழ்கண்ட வீடுகளுடன் தொடர்பு பெற்றால் மிகுந்த நன்மையை தரும் , ஆனால் அந்த வீடு பாதக ஸ்தானமாக இருக்க கூடாது என்பது பொது விதி .


லக்கினம் முதல் வீடு எனும் இலக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெற்றால் , ஜாதகர் மிகுந்த யோகசாலி , அடிப்படையில் நல்ல வளரும் சூழ்நிலையை பெறுவார் , யாருடைய ஆதரவும் இன்றி சுயமாக வெற்றி பெரும் அமைப்பை பெறுவார் , தனித்து செயல் படும் தன்மையும், நல்ல உடல் ஆரோக்கியமும் , நல்ல மன நிலையம் , பூரண ஆயுளையும் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் , எவருக்கும் இன்னல்களை தர விரும்ப மாட்டார் தான் உண்டு தனது வேலை உண்டு என மிகவும் , பொறுப்பாக இருப்பார் , எவ்வித தீய பழக்க வழக்கமும் இன்றி நல்ல ஒழுக்கம் கொண்ட மனிதராக விளங்குவார் .


லக்கினம் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் , ஜாதகரின் வாக்கு வன்மை சிறப்பாக இருக்கும் , வியாபாரம் , வணிகம் இரண்டும் ஜாதகருக்கு சிறப்பாக வரும் , இயற்கையிலேயே ஜாதகர் லாப நோக்கம் இன்றி எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார் , ஜாதகரின் வாழ்க்கையில் உடல் ரீதியாக சிறு சிறு தொந்தரவுகள் வந்து நீங்கும் , மன தைரியமும் , தன்னம்பிக்கையும் , மிகுந்து காணப்படும் , அடிப்படை கல்வி மிகவும் சிறப்பாக தேர்ச்சி பெரும் தன்மையை தரும் , நல்ல மன நிம்மதியான குடும்ப வாழ்க்கை சரியான வயதில் நிச்சயம் அமையும் , பெருந்தன்மையான குணம் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் .


லக்கினம் சகோதர ஸ்தானம் எனும் மூன்றாம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் , ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலையை பெறுவார் , சிறு வயது முதற்கொண்டே அதிர்ஷ்டம் நிறைந்தவராக காணப்படுவார் , எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும் , தன்னம்பிக்கை , பரிபூரண ஆயுள் சிறப்பாக அமைந்து விடும் , சகோதரர்கள் ஜாதகருக்கு மிகுந்த நன்மையை செய்வார்கள் , குறிப்பாக வேற்று இனத்தவர் மூலம் ஜாதகர் சிறப்பான முன்னேற்றம் பெறுவார் .


லக்கினம் சுக ஸ்தானம் எனும் நான்காம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் , சிறப்பான உடல் நிலையும் மன நிலையும் பெற்றிருப்பார் , தனது தாயின் கருணையினாலும் ஆசியினாலும் வாழ்க்கையில் மிகப்பெரிய சொத்து சுகங்களையும் , வண்டி வாகன யோகங்களையும் , மேல் நிலை கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையும் , ஜாதகருக்கு தேவையானவைகள் சிறுவயது முதற்கொண்டே தடையின்றி கிடைக்க பெறுவார் , நல்ல வசதி மிக்க வீடு , வண்டி வாகனம் , சொகுசு வாழ்க்கை , விவசாயம் செய்வதால் லாபம் , கால்நடைகள் பண்ணை தோழிகளால்  மிகப்பெரிய அதிர்ஷ்ட வாழ்க்கை என ஜாதகர் சிறப்பான முன்னேற்றம் நிச்சயம் பெரும் யோகம் உண்டாகும் .


லக்கினம் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது 1000 ல் ஒரு ஜாதகத்தில் மட்டுமே இந்த அமைப்பு இருக்கும் , காரணம் ஜாதகரின் பெற்றோரும் , ஜாதகரும் செய்த புண்ணியத்தின் பலனாக இந்த அமைப்பு ஜாதகருக்கு இருக்கும் , மேலும் இறை அருளின் பரிபூரண நல்லாசிகள் ஜாதகரை எல்லா காலங்களிலும் நன்மையை வழங்கி கொண்டே இருக்கும், நல்ல உடல் ஆரோக்கியம் , சிறந்த அறிவாற்றல் , நேர்மையான குணம் , தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாடு கொண்ட நல்ல மனிதராக ஜாதகர் இருப்பார் , மேலும் ஆன்மீக வாழ்க்கையில் ஜாதகர் சிறந்து விளங்கும் பெரும் பாக்கியம் கிடக்கும் .


லக்கினம் பகை ஸ்தானம் எனும் ஆறாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , அடிப்படையில் இருந்தே ஜாதகருக்கு முன்னேற்ற தடையை ஏற்ப்படுத்தும் , உடல் ரீதியாக பல இன்னல்களை தந்து கொண்டே இருக்கும் , ஒருவேளை இந்த ஆறாம் வீடு கடகம்,விருச்சகம்,மீன ராசியாக அமைந்து லக்கினம் ஆறாம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக ஆகி விடும் காரணம் இது நீர் ராசியாக இருப்பதால் , அதிக மன உளைச்சலை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் , இதானால் உடல் நிலையும் , மன நிலையும் கடுமையாக பாதிக்க படும் இந்த அமைப்பு மிகவும் சிரமத்தை தரும் , வளரும் சூழ்நிலையும் சரியாக அமையாது , ஜாதகரை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் , தனது வாழ்க்கை பாதிக்க ஜாதகரே காரணமாக அமைந்து விடுவார் .


லக்கினம் களத்திரம் எனும் ஏழாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது மிகவும் சிறப்பான பலனை தரும் , தனது சிறு வயது முதல் சிறப்பான வளரும் சூழ்நிலையை பெற்று இருப்பார் , அனைவரும்  ஜாதகருடன் நட்பு பாராட்டுவார்கள் , ஜாதகரை பிடிக்காதவர்களே இல்லை எனலாம் , அதுமாதிரியான நல்ல நடத்தையும் சுய கட்டுப்பாடு ஒழுக்கமும் கொண்டு இருப்பார் , தனது நண்பர்கள் வழியிலும் , பொது மக்களின் ஆதரவிலும் வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை பெறுவார் , மிக பெரிய அரசியல் பதவிகளில் கொடி கட்டி பறக்கும் மா மனிதர்களின் ஜாதக அமைப்பில் இந்த பாவகம் சிறப்பாக இருக்கும் , அதிலும் ஏழாம் வீடு சர ராசியாக இருப்பது மிகப்பெரிய வெற்றிகளை பெற்று தரும் , ஆனால் உபய இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு இது பொருந்தாது , காரணம் உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானமே இந்த ஏழாம் வீடுதான் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam @gmail .com