வாகனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாகனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 மார்ச், 2017

தொழில் நிர்ணயம் : வண்டி வாகன ( சரக்கு மற்றும் போக்குவரத்து ) தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது ஏன் ?



 தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வதில், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையிலும், மற்ற பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டது நிர்ணயம் செய்வது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், குறிப்பாக சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகங்கள் வழியிலான தொழிலை ஜாதகர் தேர்வு செய்யாமல் இருப்பது ஜாதகருக்கு பெரும் நன்மைகளை வாரி வழங்கும், மேலும் தனது ஜாதக வலிமையின் அடிப்படையில் தான் சுய தொழில் செய்யலாமா ? அடிமை தொழில் செய்யலாமா? அல்லது கூட்டு தொழில் செய்வதால் முன்னேற்றம் உண்டாகுமா ? என்பதில் தெளிவு பெற்ற பிறகு, தற்போழுது நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து அதன் பிறகு, தொழில் வழியிலான முயற்சிகளை மேற்கொள்வது சகல நன்மைகளையும் தரும்.

தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வதில் ஓர் ஜாதகருக்கு குழப்பம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஜாதகரின் ஜீவன ரீதியான போராட்டங்கள் கடுமையானதாக அமையும், ஜீவன வழியிலான முன்னேற்றங்களை பெற இயலாமல் ஜாதகர் இன்னலுறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், தொழில் ரீதியாக வரும் எதிர்ப்புகளும், முன்னேற்றம் இன்மையும் ஜாதகருக்கு வெகுவான பாதிப்புகளை வாரி வழங்கும், போராட்டம் ஒன்றே வாழ்க்கையாக மாறிவிட வாய்ப்பு அதிகம், தங்களின் சுய நம்பிக்கை மிதமிஞ்சிய அளவில் இருந்தாலும், செய்யும் தொழிலை சரியாக தேர்வு செய்யவில்லை எனில் " பாடும் பட்ட மாதிரி வீடும் கெட்ட மாதிரி " என்ற முதுமொழிக்கு உதாரணமான அமைந்துவிடும், தங்களின் கடின உழைப்பும், அறிவு திறனும் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்தை வழங்காமல், மற்றவர்களுக்கு பலன்தர ஆரம்பித்துவிடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது, தொழில் முன்னேற்றம் என்பது ஆரம்பித்த 3முதல் 5வருடங்களில் தன்னிறைவான முன்னேற்றத்தையும், பொருளாதார வசதி வாய்ப்புகளையும் தங்களுக்கு தருகின்றது எனில் தாங்கள் தேர்வு செய்த தொழில் தங்களுக்கு உகந்தது என்பதனையும், ஆரம்பித்த 3முதல் 5வருடங்களில் யாதொரு முன்னேற்றம் இன்றி போராட்டத்தை சந்தித்து கொண்டு இருந்தால், ஜாதகர் தேர்வு செய்த தொழில் ஜாதகருக்கு உகந்தது அல்ல என்பதை உறுதியாக சொல்லிவிடலாம்.

சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்க்கு நான்காம் ராசியான கடகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்தாம் ராசியான மகரமும் ஜாதகருக்கு முழு வலிமை பெற்றும், ஜாதகரின் லக்கினத்திற்க்கு சுக ஸ்தானமான நான்காம் பாவகம் மற்றும்  ஜீவன ஸ்தானமான பத்தாம் பாவகம் முழு வலிமை பெற்றும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசா புத்தியும் ஜாதகருக்கு வலிமை பெற்ற மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ( ட்ரான்ஸ்போர்ட் ) எனப்படும் வண்டி வாகன தொழில் மிக சிறப்பாக அமையும், ஜாதகர் ஒரு வண்டியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் தொழில் அபிவிருத்தி பெற்று வண்டி வாகனங்கள் பெருகி தன்னிறைவான தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகர் செய்யும் தொழிலில் நம்பகத்தன்மை உடையவராகவும், நிலைத்து நின்று தொழில் புரியும் வல்லமை மிக்கவராக திகழ்வார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும் மேஷம்,கடகம்,துலாம் மற்றும் மகர ராசிகள் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரை ஏதாவது ஒருவழியில் முன்னேற்றங்களை தந்து மிகப்பெரிய தொழில்களை திறம்பட நடத்தும் வலிமை மிக்கவராக செயல்பட வைக்கும் என்பதால், சுய ஜாதகத்தில்  மேற்கண்ட ராசிகள் பெரும் வலிமை நிலையை தெளிவாக உணர்வதும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை நிலையை தெளிவாக உணர்வதும் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன ரீதியான ( தொழில் ) வெற்றிகளை பெறுவதற்க்கு அடிப்படையாக அமையும், வாழ்க்கையில் சிரமமில்லா தொழில் வெற்றிகளை வாரி குவிக்க நல்லதொரு வாய்ப்புகளையும், தொடர்புகளையும் ஜாதகருக்கு வாரி வழங்கும்.

குறிப்பாக மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  ( முறையே மேஷம்,கடகம்,துலாம் மற்றும் மகரம் ) ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் ரீதியான வெற்றிகளை பன்மடங்கு வழங்கும், ஜாதகரின் வளர்ச்சி என்பது மற்றவர்களால் வியப்புக்கு உரிய வகையில் கவனிக்கப்படும், குறுகிய காலத்தில் பன்மடங்கு தொழில் வளர்ச்சியை பெற்று ஜாதகர் தன்னிறைவான ஜீவன முன்னேற்றத்தையும், பொருளாதார வசதி வாய்ப்புகளையும் பெறுவார், மேற்கண்ட அமைப்பு ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள திசை புத்தி மற்றும் எதிர்வரும் திசாபுத்தி ஏற்று நடத்துவது அவசியமாகிறது, மேற்கண்ட அமைப்பு ஜாதகத்தில் இருந்தாலும், நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசாபுத்தி வலிமை பெற்ற ஜீவனம் மற்றும் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில், ஜாதகத்தில் ஜீவன பாவகம் வலிமை பெற்று இருந்தாலும் அதனால் யாதொரு பயனும் இல்லை என்பதை கருத்தில் கொள்க.

குறிப்பு :

எது எப்படி இருப்பினும் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் தமக்கு உகந்த தொழிலை தேர்வு செய்து, அதில் வெற்றி பெறுவதே ஜாதகருக்கு உகந்த நன்மைகளை தரும், சுய ஜாதக வலிமையை உணராமல் மற்றவர்கள் செய்கின்றனர் அதனால் நானும் செய்கிறேன் என்பது " எங்க வீட்டுகாரரும் கச்சேரிக்கு போகிறார் " என்ற கதைக்கு பொருத்தமானதாக மாறிவிடும் என்பதனை நினைவில் கொள்க.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

தொழில் முன்னேற்றமும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையையும்!


 ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தை வைத்து தொழில் நிர்ணயம் செய்யும் முன் சம்பந்தபட்ட ஜாதகரின் ஜீவன ஸ்தானத்தின் வலிமையை கருத்தில் கொண்டு பலன்கான முற்படுவதே சரியான விஷயமாக இருக்கும், பெரும்பாலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே சம்பந்தபட்ட ஜாதகருக்கு சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்ய பரிந்துறை செய்வது, ஜாதகரை தொழில் ரீதியான வெற்றிகளையும் நன்மைகளை பெறுவதற்கு வாய்ப்பளிக்கும், மாறாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை அற்று காணப்படும் பொழுது ( உதாரணமாக ஜீவன ஸ்தானம் 2,6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெற்றோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் ) ஜாதகரை சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்ய பரிந்துரை செய்வது நீச்சல் தெரியாதவரை கிணற்றில் கல்லைகட்டிகொண்டு தள்ளிவிடுவதற்கு சமமான பலனை வழங்கி விடும்.

மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஒன்று மட்டுமே தொழில் முன்னேற்றத்தை நிர்ணயம் செய்துவிடுவதில்லை, ஏனெனில் பெரும்பாலான பன்முக தொழில்கள் அனைத்தும் அங்கு வேலை செய்யும் பணியாட்களை சார்ந்தும் நடைபெறுவதால், ஜீவன ஸ்தானம் ஒன்று மட்டுமே தொழில் வெற்றிகளை வாரி வழங்கி விடுவதில்லை, ஒரு வேலை ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று, ஜாதகர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்வதாக இருந்தால் மட்டுமே, சுய ஜாதகத்தில் உள்ள தொழில் ஸ்தான வலிமை ஜாதகருக்கு நன்மைகளை வாரி வழங்கும், அதற்கும் ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை அல்லது எதிர்வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தவேண்டும்.

அடிப்படையில் ஒருவரின் தொழில் அமைப்பை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்தபட்ட  ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையை முதலில் ஆய்வுக்கு எடுத்துகொள்வது நல்லது, 1) சுய ஜாதகப்படி 10ம் பாவக வலிமை பெற்று இருக்கின்றதா ? அல்லது வலிமை அற்ற நிலையில் இருக்கின்றதா ? என்பதில் தெளிவு வேண்டும், 2) சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெற்றுள்ள பாவகத்தின் தன்மையை கருத்தில் கொள்வது ( சர,ஸ்திர,உபய இயக்கமா? நெருப்பு,மண்,காற்று,நீர் தத்துவமா? ) இது ஜாதகர் செய்யும் தொழில் நிலையை தெளிவு படுத்தும். 3) ஜாதகரின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெற்ற பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு என்ன வீடாக வருகிறது என்பதையும் கருத்தில் கொள்வது நல்லது. 4) ஜீவன ஸ்தான அதிபதியையும், ஜீவன ஸ்தானம் தொடர்பு பெற்ற பாவகத்தின் அதிபதியையும் கருத்தில் கொள்வது சம்பந்தபட்ட ஜாதகர்  ஈடுபடவேண்டிய தொழில் மற்றும் வேலையை உறுதி செய்ய 100% விகிதம் உதவி புரியும்.

 பொதுவாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் சுய தேடுதல்களுடன் நல்ல தொழிலை ஜாதகரே அமைத்துக்கொள்ள வழிவகுக்கும், லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரை செய்யும் தொழில் விருத்தியில் ஆர்வமுடன் செயலப்டவைக்கும், 2ம் பாவகம் வலிமை பெறுவது செய்யும் தொழில் வழியில் இருந்து வருமான வாய்ப்புகளை வாரி வழங்கும் அல்லது ஜாதகருக்கு வருமானம் வரும் வழிகளை தெளிவுபடுத்தும், 3ம் பாவகம் வலிமை பெறுவது தொழில் அமைப்புகளில் ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகளையும், பெரும் வருவாயினையும் தொடர் லாபங்களையும், தரகு சார்ந்த வரவுகளையும் நிர்ணயம் செய்யும், 4ம் பாவகம் வலிமை பெறுவது தொழில் ரீதியான அசையும் அசையா சொத்துகளையும், தொழில் மூலம் ஈட்டிய வருமானத்தை இடம்,பொருள்,வண்டி வாகனம், சொத்து முதலியவற்றில் முதலீடு செய்யும் விஷயங்களை குறிப்பிடும், 5ம் பாவகம் வலிமை பெறுவது தொழில் அறிவு திறனையும், சமயோசித புத்திசாலிதனத்தையும் செய்யும் தொழிலில்  பயன்படுத்தி வெற்றிகாணும் தன்மையை குறிப்பிடும், 6ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரின் கடன் நிலை, ஜாதகருக்கு அமையும் நல்ல விசுவாசமான வேலையாட்கள், வேலையாட்கள் மூலம் ஜாதகர் பெரும் யோகங்களையும், சிறு சிறு வருமான வாய்ப்புகளையும் குறிப்பிடும்.

7ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் ஏற்றுமதி இறக்குமதி தொழில் விருத்திகளையும், பொதுமக்களுடன் தனது தொழிலில் உள்ள உறவு நிலைகளையும், உலகலவியா வியாபர விருத்திகளையும், ஜாதகரின் கூட்டாளிகள் மற்றும் அவர்களுடன் உண்டான தொழில் விருத்தி மட்டும் லாபங்களை குறிக்கும், 8ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் செய்த தொழில் கிடைக்கும் குறுகிய கால வெற்றிகளையும் லாபங்களையும், இழப்புகள் மூலம் பெரும் காப்பீடுகலையும், திடீர் அதிர்ஷ்டங்களையும் தெளிவுபடுத்தும், 9ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் தான் செய்த தொழில் கிடைக்கும் நர்ப்பெயரினையும், பாரம்பரிய வளர்ச்சியையும், பல தலைமுறைகளாக செய்துவரும் தொழில் விருத்தியையும் உறுதி படுத்தும், 10ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் தான் செய்யும் தொழிலில் அடையும் வெற்றியையும், லட்சியங்களை நோக்கி எடுத்துவைக்கும் பாதையையும் தெளிவு படுத்தும், தொழிலில் ஜாதகரின் கௌரவம், அந்தஸ்து, புகழ் மற்றும் சுய மரியாதையும் பன்மடங்கு பெருக வைக்கும், ஜாதகர் செய்யும் தொழில் என்ன ? என்பதையும் தெள்ள தெளிவாக அறிவுறுத்தும், 11ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் செய்யும் தொழில் வழியில் இருந்து அனுபவிக்கும் லாப விஷயங்களையும், அதிர்ஷ்டம் மற்றும் திடீர் மற்றும் நிரந்த முன்னேற்றங்களையும், தொழில் ரீதியாக ஜாதகர் கொண்டு இருக்கும் தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனை, திட்டமிடுதல்கள் பற்றியும் அறிவுறுத்தும். 12ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரின் அதிகபடியான முதலீடுகளையும், முதலீடுகளால் ஜாதகர் பெரும் தொழில் விருத்தி மற்றும் பெருத்த லாபங்களை பற்றியும் குறிப்பிடும், மேலும் ஜாதகருக்கு செய்யும் தொழில் உள்ள மன நிறைவையும், மன நிறைவான வருமானத்தையும் தெளிவுபடுத்தும்.


சுய ஜாதக ரீதியாக ஒருவர் தொழில் செய்ய முற்படும் முன் ஜீவன ஸ்தான வலிமையை கொண்டு தொழில் நிர்ணயம் செய்த பின்பு, நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசை,புத்திகள் ஏற்று நடத்தும் பாவக பலன்களை கருத்தில் கொண்டு தொழில் துவங்க சொல்வதும், செய்து கொண்டு இருக்கும் தொழிலை விஸ்தரிக்க சொல்வதும், தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், தங்கு தடையில்லாத தொழில் முன்னேற்றத்தை நிரந்தரமாக பெறவும், கை நிறைவான வருமானத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும்.

எந்த ஒரு ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் மட்டும் வலிமை பெறுவது தொழில் வெற்றிகளை உறுதி செய்யாது, லாப ஸ்தானமும் வலிமை பெறுவது சிறப்பான அதிர்ஷ்டங்களை பெற வாய்ப்பளிக்கும், சுய ஜாதகங்களில் 12 பாவகங்களும் வலிமை பெரும் பொழுதோ, அல்லது வலிமை பெற்ற பாவகங்களின் பலனை மட்டும் திசை,புத்திகள் ஏற்று நடத்தினாலோ ஜாதகர் ஜீவன ரீதியான நன்மைகளை தொடர்ந்து பெற இயலும், மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியன்களை நிறுவி வெற்றிகரமாக நடத்தும் வாய்ப்பை வழங்கும்.

ஒருவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று, லாப ஸ்தானம் வலிமை அற்ற நிலையில் இருப்பின் ( 2,6,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் ) ஜாதகரின் உழைப்பு மற்றும் திறமைகள் அனைத்தும் வீணாகிவிட வாய்ப்புண்டு, இந்த அமைப்பை பெற்றவர்கள் மட்டும் சற்று கவனமுடன் தொழில் விஷயங்களை கையாள்வது சம்பந்தபட்ட ஜாதகருக்கு நன்மையை தரும்.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம் எவ்வளவு வலிமை பெற்று இருந்தாலும், தற்பொழுது அல்லது எதிர்வரும் திசை மேற்கண்ட ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றியும் லாபங்களும் உண்டாகும், மாறாக நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை ஜீவன மற்றும் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தாலும் எவ்வித பயனும் இல்லை என்ற நிலையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 28 ஜூலை, 2015

தொழில் முன்னேற்றமும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையையும் !




 தொழில் ரீதியான முன்னேற்றங்களை வாரி வழங்குவதில் சுய ஜாதகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் பாவகம் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகமே என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று அமரும் பொழுது ஜாதகருக்கு தொழில் வாய்ப்புகள் தேடிவந்து மிக பெரிய அளவில் நல்ல முன்னேற்றங்களை தந்து விடும், மாறாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தொழில் ரீதியான முன்னேற்றங்களை பெற இயலாமல் வாழ்க்கையில் அதிக அளவில் ஜீவன வழியில் இருந்து எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மேலும் தனக்கு உகந்த தொழில் எது என்ற குழப்பத்திலேயே காலம் கடத்தும் சூழ்நிலையை தரும், பெரும்பாலும் சரியான வேலை அல்லது தொழில் அமையாமல் குழப்பத்தில் போராடிக்கொண்டு இருக்கும் அன்பகளின் சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் பாதிக்க பட்டு இருக்கும் அல்லது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் பாதிப்பான பலன்களை தந்துகொண்டு இருக்கும், கிழ்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று அமைந்த போதிலும், ஜாதகர் தொழில் ரீதியான வெற்றிகளை பெரிய அளவில் பெற இயலவில்லை, நடைபெறும் திசையும் ஜாதகருக்கு மிகுந்த நன்மையான பலன்களையே ஜீவன ஸ்தான வழியில் இருந்து தந்த போதிலும் ஜாதகருக்கு இதனால் பயன் ஏதும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது, இந்த நிலை ஏன் என்பதை இன்றைய பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !




லக்கினம் : துலாம் 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : அஸ்தம் 2ம் பாதம் 

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் சர நீர் ராசியான கடகத்தில் அமைகிறது, சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தொழில் வல்லமையை  காட்டுகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியாக அமைவது ஜாதகரை வாகன தொழில் துறையில் ஈடுபாட்டை தந்தது கனரக வாகனங்களை இயக்குவதில் நல்ல தேர்ச்சியும், நல்ல அனுபவத்தையும் தந்தது, எனவே ஜாதகர் தனது உறவினர் ஒருவரின் கனரக வாகனத்தை இயக்கம் பொறுப்பை பெற்றார், இந்த தொழிலில் ஜாதகருக்கு நல்ல அனுபவமும் நிர்வாக திறமையும் குறுகிய காலத்தில் கிடைத்தபோதிலும், ஜாதகர் தனது சுய முன்னேற்றத்திற்கு உண்டான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல், தனது உறவினரின் தொழில் முன்னேற்றம் பெறுவதற்காகவே தனது அனுபவத்தையும் உழைப்பையும்  முழுவதையும் செயல்படுத்தினர், இதன் விளைவாக தொழில் நல்ல விருத்தியும் அதிக லாபத்தையும் பெற்றது, உறவினருக்கு கைநிறைவான வருமான வாய்ப்புகள் வந்து குவிந்தது, வண்டி வாகனங்கள்  பெருகியது, ஆனால் ஜாதகருக்கு கிடைத்ததோ வெறும் மாத சம்பளம் மட்டுமே.

சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசையும் சரி இதற்க்கு முன் நடந்த திசையும் சரி ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து நல்ல யோக பலன்களையே தந்த போதிலும், ஜாதகருக்கு இதனால் பயன் ஏதும் இல்லை கடந்த 12 வருடங்களாக வண்டி வாகன துறையில் நல்ல அனுபவமும் சிறந்த நிர்வாக திறனையும் பெற்ற போதிலும் ஜாதகரின் முன்னேற்றம் மட்டும் கிணறில் இட்ட கல் போல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை இனி சிந்திப்போம் அன்பர்களே !

1) ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற போதிலும். தனது சுய  வாழ்க்கைக்கு உண்டான முயற்ச்சிகளை எடுக்க வைக்கும், வீர்ய ஸ்தானமான 3ம் பாவகம் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை பெற்றது, ஜாதகரின் சுய முன்னேற்ற தன்மையை வெகுவாக பாதித்தது, இது சார்ந்த  சிந்தனைகளுக்கு ஜாதகர் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை என்பது  கவனிக்கதக்கது, மேலும் 3ம் பாவகம் வலிமை குறைந்தது, ஜாதகரின் மன தைரியத்தை வெகுவாக குறைத்து மற்றவர்களின் நிழலில் அண்டி வாழும் சூழ்நிலையை தந்து, தனது  எதிர்கால முன்னேற்றத்தை பற்றிய சிந்தனைக்களுக்கு ஜாதகரே எதிர்மறையான எண்ணத்தை மனதில் விதைத்துகொண்டது ஜாதகரின் முன்னேற்றத்தை பாதிக்கும் வண்ணமாக அமைந்தது.

2) ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற போதிலும், வலிமையான பூர்வ புண்ணிய ஸ்தான பலன்களை அனுபவிக்கும் தன்மையில்லாமல், தனது பூர்வீகத்தை விட்டு வெளியேறி 200 மையில் தொலைவு அப்பால் ஜீவனம் மேற்கொள்ளும் நிலையை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொண்டது, ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தை கேள்விக்குறியாக மாற்றியது, ஜாதகருக்கு பூர்வீகத்தில்தான் ஜீவன முன்னேற்றம் என்ற அமைப்பு உள்ள பொழுது ( சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் மிகுந்த வலிமையுடன் இருப்பது ) தனது தொழில் மற்றும் ஜீவனத்தை தனது பூர்வீகத்தில் அமைத்து கொள்ளாமல், பூர்வீகத்தை விட்டு  வெகு தொலைவு சென்று தனது ஜீவனத்தை அமைத்துகொண்டது ஜாதகரின் முன்னேற்றத்திற்கு ஜாதகரே வைத்துகொண்ட வினை என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல இயலும், ஜாதகருக்கு பூர்வீகம் வலிமை பெற்று பூர்விகத்தை விட்டு வெளியேறியது ஜாதகரின் திருமண தாமத்தை தந்தது, ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து கிடைக்கும் யோக பலன்களை வெகுவாக குறைத்தது, ஏனெனில் ஜாதகரின் புத்திசாலித்தனமும் அறிவும் பூர்விகத்தில் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு பயன் தரும்.

3) ஜாதகத்தில் அதிர்ஷ்டம் மாறும் லாபத்தை குறிக்கும் 11ம் பாவகம் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றது ஜாதகருக்கு வரும் அதிர்ஷ்டம் மற்றும் லாபம் அனைத்தும் ஜாதகரை சார்ந்த மற்றவர்கள் அனைவரும் அனுபவிக்கும் தன்மையை தந்தது, மேலும் ஜாதகரின் பிறப்பின் பலனை அனுபவிக்க வைக்கும் 11ம் பாவகம் ஜாதகருக்கு எதிராக அமைந்தது கவலைப்படவேண்டிய விஷயம், ஜாதகரின் மூடநம்பிக்கைகள், பிற்போக்கு  தனமான சிந்தனைகள், எதிர்மறையான எண்ணங்கள் ஜாதகருக்கு எதிராக அமைந்தது, மனதில் உறுதி, லட்சியத்தில் உறுதி, விடா முயற்ச்சி எனப்படும் விஷயங்களை வழங்கும் 11ம் பாவகம் சுய ஜாதகத்தில் 200% விகித பாதிப்பை பெற்றது மேற்கண்ட விஷயங்களில் இருந்து சிறிய அளவில் கூட நன்மையை தர இயலவில்லை, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்றது சிறப்பானது, நடந்த,நடைபெற்று கொண்டு இருக்கிற,நடைபெற போகிற திசைகள் யாவும் ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து நன்மைகளை வாரி வழங்கிய போதிலும், ஜாதகர் 3,5,6,11ம் பாவக வழியில் இருந்து அதிக அளவில் தடைகளையே சந்திப்பது வருந்ததக்கது.

4) ஜாதகர் முதலில் தனது பூர்வீகத்தில் குடியேறி ஜீவனத்தை மேற்கொள்வது நல்லது, இது 5ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை 100% விகிதம் வாரி வழங்கும், தனது எண்ணங்களையும் சிந்தனைகளையும் சுய பரிசீலனை செய்துகொள்வது மிகுந்த நன்மையை தரும், வீண் கற்பனைகளையும்,  எதிர்மறை சிந்தனைகளையும் பிற்போக்கு எண்ணங்களையும் விட்டு விட்டு சரியான பாதையை வகுத்துகொல்வது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளை அனுபவிக்க உதவும், சுய முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத வரை ஜாதகரின் ஜீவன பாவக வலிமை பலன் தறதாதகவோ, மற்றவர்களுக்கு முன்னேற்றத்தை வாரி வழங்கும் தன்மையிலோ செயல்படும் என்பது இந்த ஜாதகத்தில் கவனிக்க தக்க அம்சமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


திங்கள், 3 பிப்ரவரி, 2014

நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் சுக வாழ்வும், வசதி மிக்க இருப்பிடமும்!




சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு நான்காம் பாவகமான சுக ஸ்தானம் வலிமை பெரும் பொழுது, ஜாதகர் பெரும் பொழுது ஜாதகர் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து பெரும் நன்மைகளையும், சுப யோக வாழ்க்கையை பற்றி இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

  சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடான கடகம் வலிமை பெரும் பொழுதும், லக்கினத்திற்கு 4ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் முதலில் தனது தாய் வழியில் இருந்து நிறைவான யோகத்தை பெறுபவராக இருப்பார், குறிப்பாக சிறு வயது முதல் தாயின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலையை தரும், அன்பு பாசம் நிறைந்த குழந்தை பருவத்தை ஜாதகருக்கு தந்துவிடும், "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே" என்ற புலமை பித்தன் வரிகளுக்கு பொருத்தமாக, ஜாதகர் நல்ல குணங்களை பெறுவதற்கும், பரந்த மனதை பெறுவதற்கும் இந்த நான்காம் பாவகமே முழு காரணமாக அமைகிறது.

 பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் நீர் ராசிகள் வலிமை பெரும் பொழுது ஜாதகரின் மனம் மிகவும் நல்ல நிலையில் இருக்கும், சிறந்த நல்ல எண்ணங்களால் சூழப்பட்ட சூழ்நிலையில் வளரும் தன்மையை தரும், பறந்து விரிந்த மன ஆற்றலின் காரணமாக ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், ஜாதகர் மன ஆற்றல் மிக சிறப்பாக செயல் படும், தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுப்பாட்டை நிறைவாக நிலையாக தரும்.

 ஆக சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் மேற்கண்ட நன்மைகளை தரும் பொழுது ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் என்பது ஜாதகரின் மன இயல்புக்கு ஏற்றவாறு அமைந்துவிடும், பொதுவாக நான்காம் பாவகம் சுக ஸ்தானம் என்று வர்ணிக்க படுகிறது, எங்கே சுகம் நிறைந்து நிற்கும் எங்கு மனம் ஒரு நிலை படுகிறதோ அங்கெ சுகம் நிறைந்து நிற்கும் என்பதற்கு இணங்க ஜாதகரின் நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் மனம் ஒரு நிலையாக ஒடுங்கி நிற்கும், ஒரு நிலையான மனம் சகல வெற்றிகளுக்கும் காரணமாக அமையும், நினைத்ததை அனைத்தும் பெரும் யோகத்தை தரும்.

சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் முதலில் நல்ல தாய் அன்பையும் அரவணைப்பையும் பெரும் யோகத்தை தரும், இதனால் ஜாதகரின் மனம் பண்பட்டதாக மாறும், அடுத்து ஜாதகரின் வளரும் சூழ்நிலையில் நல்ல நண்பர்களின் ஆலோசனையை பெரும் யோகத்தை தரும், இளமை பருவத்தில் சிறந்த கல்வியை பெரும் யோகத்தை வாரி வழங்கும், தனது வளரும் காலத்தில் அடிப்படை வசதிகளை குறைவின்றி பெரும்  யோகத்தை தரும், கேட்க்கும் பொருட்கள் யாவும் ஜாதகருக்கு தடையின்றி கிடைக்கும்.

 மனிதனுக்கு அடிப்படை தேவைகளில் முதன்மையானது, குடியிருப்பதற்கு தேவையான நல்ல வசதி மிக்க ஒரு வீடு, ஜாதகத்தில் நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகருக்கு இயற்கையாக சகல வசதிகளும் நிறைந்த வீடு சிறு வயதிலேயே அமைந்துவிடும், இதன் காரணமாக ஜாதகருக்கு வளரும் பருவத்தில் கல்வியிலே அல்லது சுகமான வாழ்க்கையிலோ எவ்வித தடையும் இன்றி நிறைவான சுக வாழ்வை தங்கு தடையின்றி தரும், அடிப்படையில் நல்ல வீடு ஒருவருக்கு அமைந்துவிட்டால் ஜாதகருக்கு சகல தேவைகளும் பூர்த்தியாகும்.

 " இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே " என்ற கவிஞரின் வரிகளுக்கு ஏற்ப, சுக ஸ்தானம் வலிமை பெரும் பொழுது நல்ல வசதி மிக்க வீடு அமைந்து, ஜாதகரின் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்க ஆரம்பித்து விடும்.

 ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் லக்கினத்துடன் தொடர்ப்பு பெரும் பொழுது ஜாதகருக்கு "கிழக்கு திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.
 ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் சுக ஸ்தானமான 4ம் வீட்டுடன் தொடர்பு  பெரும் பொழுது ஜாதகருக்கு "வடக்கு திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டுடன் தொடர்பு  பெரும் பொழுது ஜாதகருக்கு "மேற்கு  திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டுடன் தொடர்பு  பெரும் பொழுது ஜாதகருக்கு "தெற்கு திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.

 எந்த ஒரு ஜாதகத்திலும் சுக ஸ்தானமான நான்காம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நன்மை தருவதில்லை, குறிப்பாக குடியிருக்க நல்ல வீடு அமைவதில்லை, நல்ல வண்டி வாகன யோகத்தை தருவதில்லை, சொத்து சுக அமைப்பை தருவதில்லை, இதே போன்று சுக ஸ்தானம் 5,6,8,12ம் வீட்டுடன் தொடர்பு பெறுவதும் நல்லதல்ல, ஜாதகரின் சுகமான வாழ்க்கை என்பது பெரிய கேள்வி குறியாக மாறிவிடுகிறது .

குறிப்பு :
 சுய ஜாதக ரீதியாக ஒருவரின் நான்காம் பாவகம் எந்த வீட்டுடன் தொடர்பு பெறுகிறதோ அந்த திசையை குறிக்கும் வாயிர்ப்படி அமைத்த வீட்டில் ஜாதகர் குடியிருக்கும் பொழுது, சகல செல்வங்களையும், படிப்படியான முன்னேற்றங்களையும், வண்டி வாகன யோகத்தையும் பெற்று நிறைவாக வாழும் யோகத்தை தருகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435