வாரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 மார்ச், 2016

திருமண தடை மற்றும் தாமத திருமணம் ஏற்ப்பட காரணம் என்ன ?

 

 ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதை அந்த ஜாதகரின் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானமே நிர்ணயம் செய்கிறது, சுய ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் என்று அழைக்கப்படும் 2ம் வீடும், களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும் 7ம் வீடும் வலிமை பெறுவது எந்த ஒரு ஜாதகருக்கும் சரியான கால நேரத்தில், திருமண வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வைத்துவிடும், மாறாக 2,7ம் வீடுகள் பாதிக்க படும் பொழுது, ஜாதகரின் திருமண முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவும், கால தாமத திருமணமும், திருமண தடைகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், 2,7ம் வீடுகள் பாதிப்பது திருமண வயதில் உள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் சிறப்பான வாழ்க்கையை அமைத்து தருவதில்லை, இவர்கள் எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் மிகப்பெரிய தோல்விகளையே சந்திக்கிறது என்பது கண்கூடான உண்மை, திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருக்கும் ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஸ்வினி 2ம் பாதம் 

ஜாதகருக்கு வயது 40 மேல் ஆகிவிட்டது, பெண் பார்க்கும் படலத்தை தொடர்ந்து  செய்துகொண்டு உள்ளார், இருப்பினும் ஜாதகருக்கு உகந்த வாழ்க்கை துணை கிடைக்க வில்லை, மேலும் திருமனத்திர்க்காக ஜாதகர் எடுக்கும் ஒவ்வொரு முயர்ச்சியும் ஜாதகருக்கு தொடர்ந்து தோல்வி மேல் தோல்விகளையே வாரி வழங்கி கொண்டு இருப்பது ஜாதகருக்கும் ஜாதகரின் குடும்பத்தாருக்கும் பெரிய மன கலக்கத்தையும், வெளியில் சொல்ல இயலாத துன்பத்தையும் தந்து கொண்டு இருக்கிறது, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாதகர் பெண் தேடினாலும் இன்னும் கிடைத்தபாடில்லை, திருமண தாமதத்திற்கு ஜாதக ரீதியான காரணங்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே!

ஜாதகருக்கு மீன லக்கினம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம், பொதுவாக சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் வலிமை பெற்றால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான வயதில் நல்ல முறையில் திருமணம் நடைபெற்று விடும், இந்த ஜாதகருக்கு அடிப்படையிலேயே 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும், 7ம் வீடு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும், 2,7ம் வீடுகள்  கடுமையாக பாதிக்க பட்டு இருப்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, களத்திர ஸ்தானமாக அமைந்து ஆயுள் பாவகம் 100% விகிதம் பாதிக்க படுவது ஜாதகரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிறது.

சுய ஜாதகத்தில் லக்கினம் விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் யாவும், ஜாதகர் மூலமாகவே விரையம் ஆவதை உறுதிபடுத்துகிறது, ஜாதகரின் கற்பனையும் எண்ணத்தின் விளைவும் தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளையும் வீண் விரையம் செய்வதை தெளிவாக காட்டுகிறது, லக்கினம் விரைய ஸ்தானமான  12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு எதிலும் திருப்தி இல்லாத மன நிலையை காட்டுகிறது, தமக்கு வரும் வாழ்க்கை துணை பற்றி ஜாதகரே ஒரு கற்பனையில் நீந்திக்கொண்டு, தமக்கு வரும் நல்ல, நல்ல பெண் ஜாதகங்களை தவிர்த்தது, திருமணம் நடைபெறாமல் ஜாதகரை 40 வயதுக்கு மேல் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது, திருமண வாழ்க்கை என்பது சரியான வயதில் நடைபெற்றால் மட்டுமே இல்லறம் சிறக்கும் என்ற விஷயம் ஜாதகருக்கு இதுவரை புரியாதது, ஜாதகரின் இலக்கினம் பாதிக்கும் தன்மையில் இருந்து "ஜோதிடதீபம்" தெளிவாக உணர்ந்து கொண்டது.

ஜாதகருக்கு 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது ஒருபக்கம் இருப்பினும், 02/02/2006 முதல் 02/02/2016 வரை நடைபெற்ற சந்திரன் திசை 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, சந்திரன் திசை முழுவதும் 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை அமையாமலும், வருமான ரீதியான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததிர்க்கு ஒப்பான பலன்களை தந்தது, சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதிப்பதே திருமண வாழ்க்கையில் தடைகளை தரும், நடைபெறும் திசாபுத்தியும் பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் படும் அவஸ்தையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு எவ்வித பலன்களை வழங்குகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே! தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 8ம் பாவக பலனையே செவ்வாய் திசையும் ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு வந்த சோதனை காலம் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை, எனவே செவ்வாய் திசையில் செவ்வாய் புத்தியில் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது, ஆனால் செவ்வாய் திசையில், ராகு புத்தியும், குரு புத்தியும் சற்று நிறைவான நன்மையை செய்வதால் 30/06/2016க்கு மேல் தமக்கு வரும் வதுவின் ஜாதகத்தை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமணம் செய்துகொள்வது சால சிறந்தது, இல்லை எனில் ஜாதகரின் கதி அதோ கதிதான்.

திருமண தடையும், திருமணம் தாமதம் ஆக காரணம் சம்பந்த பட்ட ஜாதகரின் 2,7ம் வீடுகளின் வலிமையின் தன்மையே என்றால் அது மிகையில்லை, மேற்கண்ட அமைப்பில் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதிக்க பட்டு இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகத்தின் திசா அல்லது புத்திகள்  நடைபெறும் பொழுது திருமணத்திற்கு உண்டான முழு முயற்ச்சியில் இறங்கி நல்ல இல்லற வாழ்க்கையை தேடிகொள்வது 100% விகித நன்மைகளை  நிச்சயம் தரும், எனவே திருமணம் ஆகாமல் தாமதம், மற்றும் தடைகளை சந்தித்து வரும் அன்பர்கள், தமக்கு உகந்த நேரத்தை தேர்வு செய்து இல்லற வாழ்க்கையில் இணைத்துகொள்வது வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 16 மார்ச், 2016

பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் பாதிக்க பட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்காத ?


 பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் பாதிக்க பட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்காத ?

தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் பாதிக்க பட்டால், குழந்தை பாக்கியத்தில் தடை செய்யும், தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டால், தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது, பொதுவாக சுய ஜாதகத்தில் தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் மட்டுமே புத்திர பாக்கியத்தில் குறைகளை தரும், மாறாக ஒருவரது ஜாதகத்தில் புத்திர பாக்கியம் நல்ல நிலையில் வலிமை பெற்று இருந்து, ஒருவரது ஜாதகத்தில் பாதிக்க பட்டு இருப்பின் புத்திர பாக்கியம் அமையும், மேலும் சாய கிரகங்களான ராகுகேது  5ம் பாவகத்தில் அமர்வது புத்திர பாக்கியத்தை தாராது என்று முடிவு செய்வது உண்மைக்கு புறம்பானதே, 5ல் அமர்ந்த சாயா கிரகங்கள் ஜாதகருக்கு தொடர்ந்து ஆண் வாரிசாகவே வழங்குவதும் உண்டு, 5ல் அமர்ந்த சாய கிரகங்கள் 5ம் பாவகத்தை வலிமை பெற செய்யுமாயின், மேற்கண்ட பலன்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகம் கடுமையாக பாதிக்க படும் நிலை :

சுய ஜாதகத்தில் 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது 200% விகித பாதிப்பை, புத்திர பாக்கிய அமைப்பில் இருந்து தரும், சர லக்கினத்திற்கு 11ம் பாவகத்துடனும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் பாவகத்துடனும், உபய லக்கினத்திற்கு 7ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெரும் 5ம் வீடு ஜாதகருக்கு நிச்சயம் புத்திர பாக்கிய தடைகளை தரும், குழந்தையே அற்ற நிலை, கருசிதைவு, புத்திரசோகம், சிறப்பு குழந்தைகள் என ஜாதகருக்கு புத்திர பாவக வழியில் இருந்து  வெகுவான பாதிப்புகளை வழங்கும்.

5ம் பாவகம் பாதிக்க படும் நிலை :

ஜாதகருக்கு 5ம் வீடு 4,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு புத்திர பாக்கியத்தில் 60% விகத தடைகளை தரும், தாமத புத்திர பாக்கியம், பெண் குழந்தை மட்டும் வாரிசாக அமையும் தன்மை, மருத்துவ உதவியுடன்  செயற்கை முறையில் குழந்தை பாக்கியம் பெரும் தன்மை, தனது குழந்தைகள் வழியில் இருந்து மன கவலைகளையும், மன உளைச்சல்களையும் எதிர்கொள்ளும் தன்மை என ஜாதகருக்கு புத்திர பாக்கிய அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், 

மேற்கண்ட 5ம் பாவக பாதிப்புகள் தம்பதியர் இருவரின்  ஜாதகத்திலும் அமைந்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவருக்கு மட்டும் இருப்பின் மேற்கண்ட பாதிப்புகளில் 10% விகிதம் மட்டுமே நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்ட ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, மேலும் அந்த ஜாதகர் 5ம் பாவக பாதிப்பில் இருந்து வெளிவரும் வழிமுறையையும் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்!


லக்கினம் : மிதுனம் 
ராசி : விருச்சிகம் 
நட்சத்திரம் : கேட்டை 1ம் பாதம் 

ஜாதகருக்கு மிதுன லக்கினம், குழந்தை பாக்கியத்தை வழங்கும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், ஜாதகருக்கு இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை, ஜாதகரின் வாழ்க்கை துணைக்கு சில முறை கரு சிதைவும் ஏற்ப்பட்டுள்ளது, மேலும் ஜாதகரின் 5ம் வீடு தொடர்பு பெரும் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவது, ஜாதகரின் முன்னோர்கள் செய்த வினை பதிவின் தாக்கத்தை காட்டுகிறது, மேலும் ஜாதகரின் 9ம் வீடும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, பித்ரு சாபத்தின் தன்மையை தெளிவாக்குகிறது, எனவே ஜாதகருக்கு குல தெய்வம் பிதுர்க்கள் ஆசியும் அற்று, சாபம் என்ற நிலையை அதிகரிக்கின்றது, எனவே ஜாதகருக்கு புத்திர பாக்கிய குறைகளையும், புத்திர சோகத்தையும் வாரி வழங்குகிறது.

ஜாதகரின் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் பாதிக்க படுவது, ஜாதகருக்கு நல்ல வாரிசு அமைவதை கேள்விகுரியாக்குகின்றது, ஜாதகர் 5ம் பாவக வழியில் இருந்து இன்னல்கள் அனுபவிப்பதை தவிர்க்க  இயலவில்லை, தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோகங்களை தந்த போதிலும், நடைபெற்ற செவ்வாய் புத்தி 8ம் பாவக பலனை வழங்கி திடீர் இழப்புகளை வழங்கியது, தற்பொழுது நடைபெறும் ராகு புத்தி ஜாதகருக்கு 2ம் பாவக பலனை தருவது நன்மைகளை தரும் என்று ஜாதகர் மகிழ்ச்சி அடையலாம்.

ஜாதகர் உடனடியாக செய்ய வேண்டிய பரிகாரங்கள் :

1) ஜாதகர் தான் குடியிருக்கும் பூர்வீக இடத்தை விட்டு வேறு இடத்தில் குடி பெயர்வது 5ம் பாவக இன்னல்களை தவிர்க்க வழிவகுக்கும், நல்ல புத்திர பாக்கியம் அமைய வாய்ப்பை அதிகரிக்கும், குறைவில்லா புத்திர பாக்கியத்தை வழங்கும்.

2) ஜாதகர் தனது குல தெய்வ வழிபாட்டினையும், பித்ரு வழிபாட்டினையும், எதிர் வரும் அமாவசை திதியில் அண்ணதானம் செய்து  வழிபடுவது சகல நலன்களையும் தரும்.

3) தமக்கு உகந்த திசை வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருப்பது, புத்திர பாக்கியம், குடும்பம், ஜீவனம் என சகல அமைப்பில் இருந்தும் நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு 5ம் பாவகம் கடுமையாக பாதிக்க படும்பொழுது, தனது பூர்வீகத்தில் இருந்து வெளியே சென்று ஜீவனம் மேற்கொள்வதே சால சிறந்தது, ஏனெனில் பூர்வீகத்தில் ஜாதகர் இருக்கும் வரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது, சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என்பது கவனிக்க தக்க அமசமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696   

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

புத்திரபாக்கியமும் ( ஆண் வாரிசு ) சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையையும்!


 தனது குலம் தழைக்கவும், சந்ததி விருத்திக்காகவும் திருமணம் ஆனா சில வருடங்களிலேயே ஒரு நல்ல ஆண் மகவை பெற்று தரும் பெண்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையையும், இந்த சமூகம் கொடுக்க தவறியது இல்லை எனலாம், பொதுவாக ஆண் வாரிசு அமைவது மருத்துவ ரீதியாக தம்பதியரில் ஆணுக்கே அதிக பங்கு உண்டு என்று சொன்னாலும், ஜாதக ரீதியாக தம்பதியர் இருவருக்கும் பங்கு உண்டு என்பதே உண்மை, சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் என்று வர்ணிக்கப்படும் 5ம் பாவகம் திருமணமான தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் வலிமை பெற்று இருப்பதே சிறந்த புத்திர ( ஆண் ) பாக்கியத்தை தரும், மேலும் பிறந்த குழந்தையின் வழியில் இருந்து யோக வாழ்க்கையை அனுபவிக்கவும் வழிவகுக்கும்.

தம்பதியரின் சுய ஜாதகங்களில் 5ம் பாவகம் ஒருவருக்கு நல்ல வலிமை பெற்று இருப்பதும், ஒருவருக்கு வலிமை அற்ற நிலையில் இருப்பதும் அல்லது இருவருக்கும் 5ம் பாவகம் வலிமை அற்று இருப்பதும் பெண்குழந்தை பிறப்பில் தடை எதையும் செய்வதில்லை, ஆனால் ஆண்வாரிசு அமைவதற்கு பல தடைகளை தருகிறது, சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் 4,6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவதும் அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதும் புத்திரபாக்கியத்தில் குறையை தருகிறது, தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் 5ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது புத்திர பாக்கியத்தை ( பெண் குழந்தைக்கு அமைவதற்கு கூட ) கேள்விக்குறியாக்கும், இந்த அமைப்பை பெற்ற தம்பதியர் 5ம் பாவக வழியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து புத்திர பாக்கியங்களை பெறுவதற்கு, சுய ஜாதகமும், இறை அருளும் வழிகாட்ட வேண்டும், இதற்க்கு எதிர்பதமாக அமையும் பொழுதே தம்பதியருக்கு புத்திர பாக்கியம் அற்ற நிலையை தருகிறது.

இதை ஓர் உதாரண ஜாதகங்களை கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

தம்பதியருக்கு திருமணம் நடந்து 7 வருடங்கள் முடிந்து விட்டது, இதுவரை தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள், ஆண் வாரிசு இல்லை, இவர்களது சுய ஜாதகத்தை ஆய்வு செய்வோம்.

ஆண் ஜாதகம் :


லக்கினம் : தனுசு 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 

பெண் ஜாதகம் :


லக்கினம் : மகரம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 


தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் 5ம் பாவகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! 

ஆணின் ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவகம் சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டுடன் தொடர்பு, மேலும் தற்பொழுது  நடைபெறும் ராகு திசையும் ஜாதகருக்கு 7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனைதருவது சிறப்பானது அல்ல, மேலும் 12ம் பாவகம் பாதிக்க பட்டு ஜாதகருக்கு தனுசு ராசியிலேயே அமைவதும், தனுசு ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவதும் ஜாதகரின் முன்னோர்கள் செய்த வினை பதிவை அனுபவிக்கும் தன்மையை தருகிறது.

பெண்ணின் ஜாதகத்தில்  குழந்தை பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவகம் பாதக ஸ்தானமான 11ம் வீட்டுடன் தொடர்பு, எனவே ஜாதகிக்கு ஆண்வாரிசு இல்லை என்பதை தெள்ள தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது, ஜாதகிக்கு நடைபெறும் ராகு திசை 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்துவது குழந்தை இல்லை என்ற குறையை ( பெண் குழந்தை ) போக்கியது, மேலும் ஜாதகியின் 11ம் பாவகமும் தனுசு ராசியில்  அமைவதும், தனுசு ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவதும் ஜாதகியும் தனது முன்னோர்கள் செய்த வினை பதிவை அனுபவிக்கும் தன்மையை தருகிறது.

தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் 5ம் பாவகங்கள் முறையே ரிஷபத்திலும், மிதுனத்திலும் அமைவது, ஜாதகருக்கு ஸ்திர மண் தத்துவ ( உடல் ) அமைப்பில் இருந்து பிரச்சனைகளையும், ஜாதகிக்கு உபய காற்று தத்துவ  ( மன ) அமைப்பில் இருந்து பிரச்சனைகளையும் தொடர்ந்து தருவது புத்திர பாக்கியத்தை கேள்விகுறி ஆக்கும் அமைப்பாக கருதலாம்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமோ, அல்லது பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமோ பாதிக்கபட்டு இருப்பின் ( பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தாலும் சரி ) மிக எளிதாக நிவர்த்தியை பெற்று 5,9ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பெற இயலும் என்பது  கவனிக்கத்தது, சுய ஜாதக அமைப்பின்படி சரியான தீர்வுகளை தேடி நலம் பெருக.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் பாதக ஸ்தானம் !


" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " முற்றிலும் உண்மையே, பொதுவாக வாழ்க்கை துணையின் வழியில் இருந்து யோகங்களை பெறுபவர்களும் உண்டு, அவயோகங்களை பெறுபவர்களும் உண்டு, இவையெல்லாம் ஒவ்வொருவர் சுய ஜாதகபடியே நிகழ்ந்தாலும், தனக்கு அமைந்த வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்பம்,களத்திரம் அல்லது ஆயுள் பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும்பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் விதி விளையாட தொடங்கிவிட்டது என்று உறுதி செய்துகொள்ளலாம், மேலும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்பொழுது அல்லது எதிர்வரும் திசை புத்தி, பாதக ஸ்தானதத்தால் பாதிக்கபட்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோ கதிதான், ஜாதகரை காப்பாற்ற எவராலும் இயலாது என்று முடிவு  செய்து கொள்ளலாம்.

 திருமண பொருத்தம் காணும் பொழுது அடிப்படையில் வது வரனின் ஜாதகத்தில் இந்த ஒரு விஷயத்தை ஜோதிடரால் குறிப்பிட்ட ஜாதகருக்கு தெளிவுற அறிவுறுத்த இயலவில்லை எனில் ஜாதகரின் வாழ்க்கையே படுகுழியில் தள்ளிய பெருமை சம்பந்தபட்ட ஜோதிடரையே சாரும் அன்பர்களே !

ஜோதிடர்கள் பலர் எவ்வளவு அறிவுறுத்தியும் ஜாதகர் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் தனது எண்ணம் போல் காதல் திருமணம் புரிந்து, இடியாப்ப சிக்கலில் மாட்டிகொண்டு இன்னலுறும் ஒரு அன்பரின் வாழ்க்கை துணையின் ஜாதகம் இது, திருமணதிற்கு பிறகு வாழ்க்கை துணை வழியில் இருந்து குறுகிய காலத்தில் அனுபவித்த இன்னல்களும், வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை நிலையையும் இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி1ம் பாதம் 

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,8ம் வீடுகள் உயிர் உடல் ஆனா லக்கினத்துடன் தொடர்பு.
2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு.

3,5,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு.
6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு.

அடிப்படையில் ஜாதகிக்கு களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 11ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ( குடும்பம் ) ரிஷபத்தில் அமைவதும் ஜாதகிக்கு களத்திர பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும் அமைப்பாகும், ஜாதகியை திருமணம் செய்த முதல் மாதத்தில் இருந்தே ஜாதகர் வருமானம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை பெரிய அளவில் ஸ்திரமாக சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, குடும்பம் நடத்த ஜாதகர் பெரிய அளவில் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

 மேலும் 3,5,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகி 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையும், தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அற்ற நிலையையும், 5ம் பாவக வழியில் இருந்து திருமணம் நடந்து 3வருடங்களுக்கு மேல் ஆகியும் புத்திர பாக்கியத்தில் 
தடைகளையும், தெளிவான சிந்தனை மற்றும் புத்திசாலிதனத்தில் 
போதிய பக்குவம் இன்மையையும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்லாமல் வீண் சந்தேகங்களையும்,
பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாமல் கருத்து வேறுபாடுகளுடன் சச்சரவையும், 9ம் பாவக வழியில் இருந்து பெரியோருக்கு கட்டுப்படாமல் தனது எண்ணம்போல் செயலாற்றும் தன்மையையும், தனக்கே அனைத்து தெரியும் என்ற அகம்பாவத்தையும் தந்தது, 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் இல்லாத வாழ்க்கையும், பிற்போக்கு தனமான மூட நம்பிக்கைகளில் பற்று கொண்டு தனது இல்லற வாழ்க்கையை தானே கெடுத்துகொள்ளும் நிலையை தந்தது.

 தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிர திசை 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையை வெகுவாக பதம்பார்த்து கொண்டிருப்பதும், ஜாதகியின் கணவர் ரத்தகண்ணீர் வடிக்காத குறையாக போராடிகொண்டிருக்கும் சூழ்நிலையை தந்து இருப்பதும் கவனிக்கத்தக்கது.

நல்ல வேலை எதிர்வரும் சூரியன் திசையும், அடுத்து வரும் சந்திரன் திசையும் முறையே 8ம் வீடு லக்கினத்துடன் தொடர்பு பெற்று நன்மையையும், 2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று நன்மையையும் செய்வது ஜாதகிக்கு நல்லது, மேற்கண்ட ஜாதகிக்கு கடந்த 20 வருடங்களாக சுக்கிர திசை நடைபெற்ற போதிலும், சுக்கிரன் தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியதால் 3,9ம் பாவக வழியில் இருந்து பாதகமான பலன்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது, அதிக அளவில் இன்னல்களையே ஜாதகி சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, திருமணதிற்கு பிறகும் தனது கணவனுக்கு யோகம் அற்ற நிலையையே தருவது கவலைக்கு உரிய விஷயமே.

6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மன நிம்மதியில்லாத வாழ்க்கையும், இல்லற வாழ்க்கையில் அதிக மன போராட்டங்களையும், மன உளைச்சல்களையும் வாரி வழங்குவது கவனிக்க தக்கது, 6ம் பாவக வழியில் இருந்து வீண் மன கவலைகளை மனதில் கொண்டு தனது உடல் நிலையை பாதிக்கும் விதமான செய்கைகளை ஜாதகி முட்டாள் தனமாக செய்ய வைத்தது, இதனால் ஜாதகி வயிறு சார்ந்த அதிக தொந்தரவுகளையும், இன்னல்களையும் அனுபவிக்க நேர்ந்தது. 10ம் பாவக வழியில் இருந்து தொழில் மற்றும் வேலை இல்லா தன்மையையும், கௌரவ குறைவான செயல்களில் ஈடுபட்டு வீண் மனகவலைக்கு ஆளாகும் துர்பாக்கிய நிலையை ஜாதகியே ஏற்ப்படுத்திகொண்டார். 12ம் பாவக வழியில் ஜாதகி வீண் கற்பனைகளுக்கும், மனோரீதியான பிரச்சனைகளுக்கும் இடம்கொடுத்து குடும்பத்தில் நிம்மதியில்லாமல் தவிக்கும் நிலைக்கு ஆளானார்.

சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெறுவது தனது கணவர் வழியில் இருந்து தேவையான அளவிற்கு பொருளாதார உதவிகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்பை மட்டும் ஜாதகிக்கு தங்கு தடையின்றி வழங்குவது வரவேற்க தக்கது என்றாலும், தனது கணவர் அதற்காக படும் சிரமங்களை ஜாதகி சிறிதும் சிந்தித்து பார்க்காமல் தனது மனம்போல் வீண் விரையம் செய்வது வருந்ததக்கது.

மேற்கண்ட ஜாதகியை திருமண செய்து கொண்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் 1,5,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றது, ஜாதகரே தனது இல்லற வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள காரணமாக அமைந்தது, 1ம் பாதக ஸ்தானதுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் தனது உடல் மற்றும் மனதை தானே பாதிப்பிற்கு உள்ளாக்குவார், மேலும் 5ம் பாவகம் பாதிக்க பட்டதால் சுய சிந்தனையும் அற்று பெரியோர்களின் ஆலோசனையும் கேட்கவில்லை, 7ம் பாவகம் பாதிக்க பட்டதால் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து இன்னல்களை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது, பொருத்தம் இல்லாத பெண்ணை திருமணம் செய்ய நேர்ந்தது, 9ம் பாவகம் பாதிக்க பட்டதால் பெரியோர் ஆதரவும், இறை அருளின் கருணையும் இன்றி இல்லற வாழ்க்கையில் தனித்து போராட வேண்டிய சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கி கொண்டார், தம்பதியர் இருவருக்கும் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால், குடும்ப வாழ்க்கையில் பிரிவு இல்லாமல், இல்லற வாழ்க்கையை பல சிரமங்களுடன் நகர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுவிட்டது.

மேற்கண்ட இன்னல்களுக்கு சுய ஜாதக ரீதியான பாவக வலிமையை உணராமல், நட்சத்திர பொருத்தம் 10ற்கு மட்டும் முக்கியத்துவம் தந்து திருமணம் செய்துகொண்டதும், நடைமுறையில் இருவருக்கும் நடைபெறும் திசை புத்திகள் எவ்வித பலனை தருகிறது என்பதை ஆய்வு செய்யாமலும் திருமணம் செய்தது காரணமாக அமைந்துவிட்டது, எனவே திருமணம் செய்யும் முன் இருவரது சுய ஜாதகங்களிலும் உள்ள பாவக நிலையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை புத்தி, எதிர் வரும் திசை புத்தி ஏற்று நடத்தும் பாவக பலனை கருத்தில் கொண்டும் திருமண பொருத்தம் காண்பதே சாலசிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையும், ஜாதகரின் மதிநுட்பமும் !




வாழ்க்கையில் அறிவு சார்ந்த விஷயங்களில் புதுமையான அணுகுமுறையும், புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தி பல வியக்கத்தக்க வெற்றிகளை குவிக்க வைக்கும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக வலிமையை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்ற வாக்கிற்கு இணங்க சுய ஜாதகத்தில் அதி புத்திசாலிதனமான நுண் அறிவுக்கும், 64 கலைகளில் தேர்ச்சிக்கும் வழிகோலுவது பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை, 5ம் பாவகம் வலிமை பெற்ற ஜாதகருக்கு, நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் அறிவு திறனுக்கும், புதிய அணுகுமுறைக்கும் பஞ்சமே இருக்காது, மேலும் ஜாதகரின் சமயோசித புத்திசாலிதனத்தால் ஆதாயம் என்பது பன்மடங்கு கூடும் என்பது கவனிக்க தக்கது, பலவிதமான புதிய விதிகளை உலகிற்கு அறிமுகம் செய்யும் வல்லமையை தந்துவிடும்.

ஜாதகரின் புதிய கண்டுபிடிப்புகள் பூமியில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையில் பங்கெடுக்கும், மனித குலத்திற்கு பெருமைசேர்க்கும், அனைவருக்கும் பயன்படும் விதத்தில் இவர்களின் கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக அமையும், புதிய சிந்தனை மற்றும் புதிய மாற்றங்களுக்கு உரிமை கொண்டாடும் தனித்திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள அன்பர்களின் ஜாதகங்களில், 5ம் பாவக வலிமையை நாம் உணர இயலும், இயற்கையாகவே இவர்களின் சிந்தனை மற்றும் கேள்விகளுக்கு சரியான பதில்களை இந்த பிரபஞ்சம் வாரி வழங்கும், எவ்வித பிரச்சனைகள் மற்றும் இன்னல்களுக்கும் சரியான தீர்வுகளை, சரியான நேரத்தில் வழங்கும் வல்லமை கொண்டவர்கள், சிறு வயதுமுதலே அறிவுத்திறனில் சிறந்து விளங்கும் யோகம் பெற்றவர்கள், பன்முக திறமை சாஸ்திர அறிவு, சாஸ்திரத்தில் தேர்ச்சி, கற்ற கல்வியை தனது முன்னேற்றத்திற்கும் தன்னை சார்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் யோகம் பெற்றவர்கள், குறிப்பாக 5ம் பாவகம் வலிமை பெற்றுள்ள அன்பர்கள் பெரும் யோகத்தை  விட, இவரை சார்ந்தவர்கள் பெரும் யோகம் மிகவும் அளப்பரியதாக அமையும் என்பது கவனிக்க தக்கது.

குல தெய்வத்தின் பரிபூர்ண ஆசிகளின் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெரும் யோகத்தை தரும், வருமுன் உணரும் சில சிறப்பு சக்திகள் இயற்கையாகவே அமையபெற்று இருப்பார்கள், வாக்கு பலிதமும், உள்மனதின் எண்ண ஓட்டங்களை தெளிவாக உணரும் யோகம் பெற்றவர்கள், யோகம்,தியானம்,தவம் மூன்றிலும் தேர்ச்சி பெறுவார்கள், சிந்தனை திறனும் செயல்திறனும் ஒருங்கே அமையபெற்றவர்கள், ஆராய்ச்சிகளில் வெற்றியும் புகழும் உண்டாகும், கலைத்துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, இயல், இசை, நாடக துறைகளில் அபரிவிதமான தேர்ச்சியை தரும், உலக புகழ் பெரும் யோகமும், சுய முயற்ச்சியிலேயே தன்னிறைவான வாழ்க்கை வசதிகளையும் அனுபவிக்கும் தன்மையும், மிகப்பெரிய நிறுவனங்களையும், சாம்ராஜ்ஜியத்தையும் உருவாகும் சிற்ப்பிகளாக திகழ்வார்கள்.

பொதுவாக பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது குறிப்பிட்ட ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியத்தை நல்குகிறது, தனக்கு பிறகு தனது எண்ணங்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றும் விதமான வாரிசு அமைப்பை ஜாதகர் பெறுகிறார், ஜாதகருக்கு பிறக்கும் குழந்தையும் நல்ல அறிவு திறனும், புத்திசாலித்தனமும் நிரம்பபெற்ற குழந்தையாகவே அமைவது சுய ஜாதகத்தில் உள்ள புத்திர ஸ்தான வலிமையே, " தோன்றின் புகழோடு தோன்றுக" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க ஜாதகரும், ஜாதகரின் வாரிசும் நல்லறிவும் நல்ல குணமும், பரந்த மனப்பக்குவமும் பெற்று இருப்பார்கள், இவர்களின் வாழ்க்கையில் 5ம் பாவக பலன்கள் நடைமுறையில் வரும் பொழுது கலைகளில் தேர்ச்சி, கல்வியில் வெற்றி, போட்டி பந்தையங்களில் சிறப்பான வெற்றிகள், சமுதாயத்தில் தனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் அங்கீகாரம், அரசு ஆதாயம் என மிகுந்த நன்மைகளை பெறுவார்கள்.

5ம் பாவக வலிமை என்பது தனது சந்ததிகளையும், தம்மை சார்ந்தவர்களையும் வாழ்க்கையில் தன்னிறைவான சுகபோகங்களை அனுபவிக்க வைக்கும் அறிவும், புத்திசாலித்தனமும் கொண்டவர்களாக இருப்பார்கள், குறிப்பாக பல கோடிரூபாய் செலவு செய்யுங்கள், ஆனால் ஒரு ரூபாய்கூட விரையம் செய்தீர்கள் என்ற வார்த்தைக்கு உதாரணமாக திகழ்வார்கள், இதை போன்றே  இவர்களுக்கு சம்பாத்தியம் என்பது மிக கடினமான விஷயமாகவே இருக்க வாய்ப்பில்லை, அதேசமயம் சத்தியம் வாய்மையை காப்பாற்றும் குணம் கொண்டவர்கள், இவர்களின் செயல்களினால் எந்த ஒரு சிறு இன்னல்களும் மற்றவர்களுக்கு ஏற்ப்படாவண்ணம் பார்த்துகொல்வதில் கைதேர்ந்தவர்கள், வியாபாரத்தில் பல நுணுக்கமான விஷயங்களை கையாளும் திறமை பெற்றவர்கள்.

முற்போக்கு சிந்தனையும், வருமுன் காக்கும் திட்டமிடுதல்களுடன் செயல்படும் அன்பர்கள், மன உறுதி, மனோதிடம் நிறைவாக பெற்றவர்கள் என்பதால் எந்த ஒரு காரியத்தையும் உறுதியாக தன்னம்பிக்கையுடன் செய்து வெற்றி பெரும் யோகம் கொண்டவர்கள், வாழ்க்கையில் ஏற்ப்படும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தகர்த்தெறிந்து, தெளிவான சிந்தனையுடனும் உறுதியான மன நிலையுடன் வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ளுவார்கள், இவர்களின் ஆலோசனையின் பெயரில் நடைபோடும் அனைவருக்கும், பல வெற்றிகள் வாழ்க்கையில் வந்து குவியும் என்பது மறுக்க இயலாத உண்மை, மேலும் சிறந்த குடும்ப நல ஆலோசகர், ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர், ஜோதிடர் போன்றோர் ஒருவருக்கு சரியாக அமைவதும் 5ம் பாவக வலிமையே, சரியான கால நேரம் அறிந்து செயலாற்றுவதும், தனக்கு அமைந்த நேரத்தை சிறந்த நேரமாக மாற்றும் வல்லமை பெற்றவர்கள்.

எந்த ஒரு ஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று அமைவது, குறிப்பிட்ட ஜாதகத்தில் மற்ற பாவகங்களில் இருந்து வரும் இன்னல்களை களைந்து வாழ்க்கையில் வெற்றி நடை போடவைக்கும், ஜாதகருக்கு அறிவு திறனும், புத்திசாலித்தனமும் மிதமிஞ்சி நிற்கும், மேலும் சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி ( சிம்ம ராசி எந்த பாவகமாக அமைந்தாலும் அந்த பாவகம் வலிமை பெறுவது ) வலிமை பெற்று அமைவது ஜாதகருக்கு ஒரு வரபிரசாதமே, தனக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இன்னல்களுக்கும் சுயமாகவே தீர்வு கண்டு வாழ்க்கையில் வெற்றி காண்பார்கள், பல்துறை அறிவும், ஒரே நேரத்தில் பலவிஷயங்களில் கவனம் செலுத்தும் வல்லமையை தரும், 5ம் பாவக வலிமை தனக்கு நிகராக வேறொருவரும் இல்லை என்ற நிலையை தரும், உலகில் தனித்து வெற்றிகரமாக இயங்கும் சக்தியை இறைஅருள் மற்றும் இயற்க்கை இவர்களுக்கு அளித்த கொடையாகவே கருதலாம். 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 25 ஏப்ரல், 2015

வரனின் ஜாதகத்தில் 5ல் ராகு என்றால் புத்திர பாக்கியம் (ஆண் வாரிசு) கிடைக்காதா ?


5ல் ராகு அமர பெற்ற ஆண்களின் ஜாதகங்களை பார்க்கும் பெண்ணை பெற்றவர்கள், மறு பேச்சுக்கே இடமில்லாமல் தங்களது பெண்ணை திருமணம் செய்து தர மறுக்கின்றனர், இதை 5ல் ராகு அமைய பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்களிடமும் அவர்களை பெற்றவர்களையும் கேட்டல் கதை கதையாக சொல்வார்கள், உண்மையில் இவர்களது ஜாதகத்தை ஆய்வு செய்யும் ஜோதிடர்கள் ராகு பகவான் உண்மையில் 5ம் பாவகத்தில்தான் அமர்ந்து இருக்கின்றாரா? 5ல் அமர்ந்த ராகு பகவான் ஜாதகருக்கு எவ்விதம் தீமையை செய்கிறார்? லக்கினத்திற்கும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் எந்த ராசியுடன் சம்பந்தம் பெறுகிறார், ராகு பாகவானால் பாதிக்க பட்ட 5ம் பாவகத்தின் பலனை தற்பொழுது நடைபெறும் திசை புத்தி ஏற்று நடத்துகிறதா? எதிர்வரும் திசை புத்தி ஏற்று நடத்துகிறதா ? என்ற கேள்விகளும் துணை கேள்விகளும் நிறைய உண்டு, ஆனால் நமது ஜோதிட அன்பர்கள் 5ல் ராகு அமர்ந்தாலே ஜாதகருக்கு "புத்திர பாக்கியம்" கிடையாது என்ற முடிவுக்கு வருவது எப்படி? என்று தெரியவில்லை.  

இவர்கள் சொல்லும் வார்த்தையை வேதவாக்காக எடுத்து கொள்ளும் பெண்ணை பெற்றவர்களின் மன நிலையும் விளங்க வில்லை, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு லக்கினத்தில் இருந்து 5ம் பாவகம் பூர்வ புண்ணியம் என்று வர்ணிக்கப்படும், புத்திர ஸ்தானம் இந்த பாவகத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு புத்திர பாக்கியத்தை தர மாட்டார் என்று முடிவு செய்வது முற்றிலும் ஜோதிட கணித அமைப்பிற்கு முரண்பட்ட கருத்தாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, 5ல் ராகு அமைய பெற்ற ஜாதகருக்கு ஆண் வாரி உள்ள ஜாதகங்கள் நிறைய நம்மிடம் உதாரணம் உண்டு அன்பர்களே ! 

இருப்பினும் 5ல் ராகு அமர்ந்த ஜாதகத்தை குத்து மதிப்பாக "புத்திரபாக்கியம் " கிடையாது என்று ஒதுக்குவது முற்றிலும் தவறு என்றே தோன்றுகிறது, 5ல் ராகுகேதுவை பற்றி இதற்க்கு முந்தைய பதிவுகளில் ஜோதிடதீபம் மிகவும் விரிவாக ஆய்வு செய்து கட்டுரை எழுதியிருக்கிறது, குத்து மதிப்பாக 5ல் ராகு புத்திர பாக்கியம் கிடையாது என்று ஒதுக்கும் ஜோதிடர்கள் அனைவரும், முறையாக ஜோதிடகணிதம் கற்றவர்கள்தான ? என்ற கேள்வி எழுகிறது, இந்த குழப்பங்களுக்கு கிழ்கண்ட விளக்கங்களை தர " ஜோதிடதீபம் " கடமை பட்டுள்ளது.

ராகு 5ல் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் :

1) ஜாதகரின் லக்கினத்தில் இருந்து 5ம் ராசியில் ராகு அமர்ந்து இருப்பதை வைத்து 5ல் ராகு என்று முடிவு செய்வது முற்றிலும் தவறு, ஜாதகரின் 5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகை முதல், பாவகம் முடிவு பெரும் பாகைக்கு உட்ப்பட்ட 5ம் பாவகத்தில் ராகு அமர்ந்து இருக்கின்றாரா? என்பதை ஜாதகரின் பாவக ஆரம்பம், மதியம், முடிவு நிலையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யவேண்டும்.

2) 5ல் அமர்ந்த ராகு ரிஷபம், மிதுனம் ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேராத புதன்), கடகம் ( வளர்பிறை சந்திரன் ), கன்னி ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேராத புதன்) துலாம், தனுசு,மீனமாக இருந்தால் ஜாதகரின் 5ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்யும் தன்மையை ராகு இயற்கையாக பெற்று விடுவார், எனவே இந்த அமைப்பில் 5ல் ராகு உள்ள ஜாதகங்கள் அனைத்தும் புத்திர பாக்கிய யோகம் உள்ளதாகவே கருதலாம், ( பெரும்பாலும் இவர்களுக்கு ஆண் குழந்தைகளாகவே எவ்வித தடையும் இன்றி பிறக்கின்றது)

3) 5ல் அமர்ந்த ராகு மேஷம்,மிதுனம்  ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேர்ந்த புதன்),கடகம் ( தேய் பிறை சந்திரன் ), சிம்மம்,கன்னி  ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேர்ந்த புதன்), விருச்சிகம்,மகரம்,கும்பமாக இருந்தால் ஜாதகரின் 5ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை அற்று போக செய்யும் தன்மை ராகு பகவானுக்கு உண்டு, எனவே இந்த அமைப்பில் 5ல் ராகு உள்ள ஜாதகங்கள் அனைத்தும் புத்திர பாக்கியத்தில் தடை உள்ள ஜாதகமாக எடுத்துகொள்ளலாம், ஆனால் இது ஆண் வாரிசு என்ற அமைப்பில் மட்டுமே குறையை தரும், பெண் குழந்தை கிடைப்பதில் எவ்வித தடையும் இல்லை, ஒருவேளை ஜாதகர் தனது பூர்வீகத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பின் ( 100கிமீ அப்பால் ) ஆண்வாரிசே நிச்சயம் கிடைக்கும்.

4) பெரும்பாலும் 5ல் ராகு அமர்ந்து பாதிப்பை பெற்று இருக்கும் ஜாதகர்கள், தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை பெறுகின்றனர், தனது பாரம்பரிய முறையில் இருந்து வித்தியாசமான அணுகு முறையில் ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையையும், தனது பாரம்பரியத்திற்கு மாறுபட்ட சிந்தனைகளையும் கொண்டவர்களாக கானபடுகின்றனர், இவர்கள் அனைவரும் தனது பூர்வீகத்தில் மிகப்பெரிய வெற்றிகளை பெற இயலவில்லை, வெளியூர் அல்லது வெளிநாடுகளிலேயே மிகப்பெரிய அந்தஸ்தையும், வெற்றிகளையும் வாரி குவிக்கின்றனர், பூர்விகத்தில் இவர்களது அறிவும் புத்திசாலித்தனமும் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்ப்படுகின்றது, வெளியூரில் அல்லது வெளிநாடுகளில் இவர்களது அறிவும், புத்திசாலித்தனமும் அபரிவிதமாக வேலை செய்வது கவனிக்க தக்கது, மேலும் வெளியூர் வெளிநாடுகளில் ஜாதகர்  வசிக்கும் பொழுது 5ம் பாவக பாதிப்பு வெகுவாக குறைந்து, சிறந்த ஆண்வாரிசும் உண்டாகிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

5) பெரும்பாலும் குழந்தைகளே அற்ற சூழ்நிலை எப்பொழுது ஒரு ஜாதகருக்கு ஏற்ப்படுகிறது என்று காணும் பொழுது தம்பதியர் இருவரது ஜாதகத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் பாதக ஸ்தனாங்களுடன் தொடர்பு பெற்றால் மட்டுமே புத்திர பாக்கியமே இல்லாமல் போகிறது என்பது 100% விகித உண்மை, மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களும் முறையான தீர்வுகளை தேடும் பொழுது 5ம் பாவக வழியில் இருந்து யோகத்தை பெற இயலும் என்பதே ஜோதிடதீபத்தின் ஆணித்தரமான கருத்து.

குறிப்பு :

 அன்பர்களே ! 5ல் ராகு அமர்ந்தாலே குழந்தை பாக்கியம் கிடையாது என்ற குத்து மதிப்பான வாதத்தை விடுத்து சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையை உணர்ந்து தங்களது மகளுக்கோ, அல்லது மகனுக்கோ வரன்,வது தேடுவதே சரியான தீர்வாக இருக்கும், 5ல் அமரும் ராகு நல்ல செய்தால் எவ்வித குழப்பமும் இல்லாமல் தங்களது மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் செய்து கொடுங்கள் அவர்களது வாழ்க்கை மென்மேலும் செழித்து ஓங்குவதையும், அவர்களுக்கு நல்ல வாரிசு அமைவதையும்,திருமணம் நடந்த சில காலங்களிலேயே கண்குளிர காணலாம், என்று ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

குழந்தை பாக்கியமும், பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் பாவக வலிமையையும் !


தனது குலம் செழிக்கவும், தனக்கு பின் தனது பெயர் சொல்லவும் ஒரு நல்ல வாரிசு வேண்டும் என்று தேடுதல் இல்லாத தம்பதியரை இப்புவியில் காண்பது அரிது, எவ்வளவோ மருத்துவ முன்னேற்றம் வந்த போதிலும் திருமணம் நடைபெற்று பல வருடங்கள் ஆகியும்,  ஒரு வாரிசுக்காக ஏங்கும் தம்பதியர் நிறைய உண்டு, பல மருத்துவர்களை பார்த்தும் புத்திர பாக்கியம் அமையாத தம்பதியரும், பல திருத்தலங்களுக்கு சென்றும் குழந்தை பாக்கியம் கிட்டாமல் வாடும் தம்பதியரும் உள்ளனர், இந்த பதிவில் புத்திர பாக்கியம் அமையாமல் தனது குலம் தழைக்க ஒரு நல்ல வாரிசு அமையாத நிலைக்கு காரணம் என்னவென்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே.

குழந்தை பாக்கியம் இல்லை என்று ஜாதகம் காண வரும் அன்பர்களுக்கு, ஜோதிடர்கள் சொல்லும் முதல் பரிகாரம் அவர்களது குல தெய்வம் எதுவோ அதற்க்கு முறையான வழிபாட்டையும், தான தர்மங்களையும் செய்யுமாறு அறிவுரை கூறுவது உண்டு, பொதுவாக குழந்தை பாக்கியம் அமையாத நிலைக்கு அடிப்படை காரணமாக குல தெய்வ சாபம் மற்றும் முறையான குல தெய்வ வழிபாடு செய்யாதது என்று அறிவுறுத்த படுகிறது.

 குல தெய்வ சாபம் என்றால் என்ன ?

1 சம்பந்தபட்ட தம்பதியரோ அல்லது அவர்களது முன்னோர்களோ வெகு காலமாகவோ, தலை முறை தலை முறையாக தனது குல தேவதைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து தவறி நடப்பதால் வரும் சாபம் என்று வைத்து கொள்ளலாம்.
2 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு பிறந்த குழந்தை பெண் என்பதால், அதன் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது ( அதாவது சிசு கொலை )
3 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு இறை அருளால் அமைந்த கருவை, தனது சௌகர்யத்திற்காக கருசிதைவு செய்து கொள்ளுதல். ( இது தம்பதியருக்கும் பொருந்தும்.)
4 கருவுற்ற பெண் வந்து யாசிக்கும் பொழுது அவர்களுக்கு இல்லை என்று சொல்வதும், அவர்களை உதாசீனபடுத்துவதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
5 பசு அதன் கன்று குட்டியை பிறந்தவுடன் பிரிப்பதும், பசுவிற்கு துன்பம் இளைப்பதும், பசு தந்த பாலில் நீர் கலந்து விற்பதும், பச்சிளம் குழந்தைக்கு கொடுப்பதும் குல தெய்வ சாபத்திற்கு அடிகோலும்.
6 கற்று கொடுத்த குருவுக்கு இன்னல் தருவதும், துரோகம் செய்வதும், சாஸ்திரம் அறிந்த பெரியோர்களை அவமதிப்பதும், இறைபணியில் அர்ப்பணித்து கொண்டவர்களின் வாழ்க்கையில் இன்னல்களை ஏற்ப்படுத்துவதும், குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
7 பெற்றோர்களை நிந்தனை செய்வதும், இயலாமல் இருக்கும் பெரியோரின் சொத்துகளை  அபகரிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
8 தன்னை நாடிவரும் பெண்களுக்கு தீங்கு  விளைவிப்பதாலும், கட்டிய மனைவியை நிந்தனை செய்வதாலும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.
9 சிறு வயதிற்கு உற்பட்ட குழந்தைகள் அனைவரும் குல தேவதையின் அம்சம் என்பதால், அவர்களுக்கு உணவு தர மறுப்பதாலும் குல தெய்வ சாபம் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு.
10 ஆன்மீக பெரியவர்களை நிந்தனை செய்வதும், அவர்களுக்கு எண்ணத்தாலும் செயலாலும் துன்பம் விளைவிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும்.
11 சர்ப்பங்களை கொள்வதும் ஒருவகையில் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும், புத்திர பாக்கியத்தில் தடை செய்யும்.
12 சேர்ந்து வாழும் தம்பதியரை பிரிப்பதும் குல தெய்வ சாபத்தை பெற வழிவகுக்கும்.

மேற்கண்ட காரணங்கள் குல தெய்வ சாபத்திற்கும், புத்திர பாக்கியத்தில் தடை உண்டாகவும் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தும், மேலும் சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகருக்கு உதவி செய்ய எவரும் முன்வரமாட்டார்கள் என்பது கவனிக்க தக்கது அன்பர்களே.

மேற்கண்ட விஷயங்கள் குல தெய்வ சாபத்திற்கு காரணமாக அமைந்த போதிலும், இதில் அதிக இன்னல்களை தருவது உடனடியாக குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்குவது " சிசு கொலை, கருகலைப்பு "  ஆகிய இரண்டு மட்டுமே மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கும், பிறக்கும் பெண் சிசு யாவும் அவர்களது குல  தேவதையை குறிக்கும், கருவில் உள்ள குழந்தைகள் யாவும் அவர்களது குலதெய்வமாகவே விளங்கும் என்பதால், இவற்றிற்கு விளைவிக்கும் துன்பங்கள் யாவும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும், இதற்க்கு தீர்வு காண்பது என்பதும் அவ்வளவு எளிதல்ல என்பதை நாம் அனைவரும் உணர்வது அவசியம், ஏனெனில் நமக்கு பின் வரும் சந்ததிக்கு புண்ணி பதிவை சேர்த்து வைக்காவிட்டாலும் சரி பாவ பதிவை சேர்த்து வைக்காமல் போவது நல்லது, நாம் செய்யும் தவறு நமக்கு பின் வருபவர்களுக்கு இன்னல்களை தர கூடாது அல்லவா ?

இனி தனது சுய ஜாதக அடிப்படையில் புத்திர பாக்கியம் உண்டா ? அதற்க்கு தடைகள் உள்ளனவா ? என்பதை சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவது அவசியமாகிறது, பொதுவாக சுய ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை குறிக்கும் ஐந்தாம் பாவகம் எக்காரணத்தை கொண்டும் பாதிப்பை பெறாமல் இருப்பது நல்லது, இது தம்பதியர் இருவருக்கும் பொருந்தும், குறிப்பாக ஐந்தாம் பாவகம் அவர்களது  லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் வீடு, ஸ்திர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 9ம் வீடு, உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 7ம் வீடு ) புத்திர பாக்கியத்தை கேள்விக்குறியாக்கும், ஐந்தாம் பாவகம் 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த இன்னல்களையே தரும், இதை போன்றே கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் 5ம் பாவகமான சிம்மம் பாதிப்பை பெறுவதும் குழந்தை பாக்கியத்தை கடுமையாக பாதிக்கும், மேற்கண்ட விஷயங்கள் யாவும் தம்பதியர் இருவரின் சுய ஜாதக அமைப்பிற்கும் பொருந்தும்.

ஒருவரது சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் வசிப்பதற்கு தடைகளை தொடர்ந்து தந்த வண்ணமே இருக்கும், ஜாதகரின் அறிவு சார்ந்த முயற்ச்சிகள் யாவும் வெறும் திட்டத்துடனே முடியும், நடைமுறைக்கு வருவதற்கு உண்டான வாய்ப்பை தாராது, ஜாதகரின் எண்ணங்கள் யாவும் வெறும் கற்பனையாகவோ கனவாகவோ மாறிவிட வாய்ப்பு உண்டு, இதை தவிர குழந்தை பாக்கியத்திற்கு எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளும் பலன் தாராமால் ஜாதகர்  மற்றும் ஜாதகரை சார்ந்தவர்கள் வெகுவாக மனபோரட்டத்திர்க்கு ஆளாகும் சூழ்நிலையை தர  கூடும், இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யும் அன்பர்களும் இருக்கமாட்டார்கள் என்பது கவனிக்க தக்கது, தனிமையில் போராட்ட வாழ்க்கையை வாழும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், மேற்க்கண்ட விஷயங்கள்  5ம் பாவகத்தின்  வலிமை அற்ற தன்மையால் நடைபெறும் என்பதை இவர்களது சுய ஜாதகத்தை ஆய்வு செய்தால் நமக்கு நிச்சயம் புலப்படும்.

இன்றைய நவநாகரீக உலகத்தில் இளம் தம்பதியர் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு குழந்தை பெற்றுகொள்ள, கருக்கலைப்பு என்ற ஒரு விஷயத்தை சர்வ சாதரணமாக செய்கின்றனர், இதன் விளைவு அவர்களுக்கு தெரிவதில்லை இதனால் ஏற்ப்படும் விளைவுகளின் தன்மை மிகவும் கடுமையானதாக இருக்கும், உதாரணமாக வீட்டில் செல்வ வளம் குறைந்து தரித்திர நிலை உருவாகும், குல தெய்வ சாபத்தால் ஜாதகருக்கு மிக எளிதில் கிடைக்கும் விஷயங்களுக்கு கூட போராடி பெரும் சூழ்நிலையை தரும், சுய முன்னேறம் வெகுவாக பாதிக்கும், தனது சந்ததிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும், உடல் நல குறைபாட்டை தரும், மருத்துவ செலவினங்களை அதிகரிக்கும், ஒற்றுமையாக இருந்த தம்பதியர் திடீரென பிரியும் சூழ்நிலையை தரும், எதிர்பாராத விபத்துகள் மூலம் உடல் நல குறைவு, பொருள் இழப்பு போன்றவை ஏற்ப்பட வாய்ப்பு உண்டாகும், இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு யாரும் உதவி செய்ய முன்வரமாட்டார்கள் என்பதே  வருத்தத்திற்கு உரியது அன்பர்களே, எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களை நீங்களே உருவாக்கி கொண்டு பின்னலில் வருத்தம் கொள்வதனால் எவ்வித பயனும் இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

அடுத்த பதிவில் 5ம் பாவக வலிமையை சுய ஜாதக ரீதியாக நிர்ணயம் செய்வது பற்றி சிந்திப்போம் அன்பர்களே ........

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

திங்கள், 17 நவம்பர், 2014

ஏக திசை சந்திப்பும் திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்களும் !



  திருமண பொருத்தம் பார்ப்பதில் தற்பொழுது மிக பிரபலம் ஆகிக்கொண்டு இருக்கும் ஒரு வார்த்தை " ஏக திசை சந்திப்பு " அதாவது திருமண பொருத்தம் காண வரும் வது வரன் இருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்யும் ஜோதிடர்கள், வது வரனின் ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு எத்தனை இருக்கின்றது என்பதை உறுதி செய்துகொண்டு, இருவருக்கு தற்பொழுது நடைபெறும் திசை ஒரே கிரகத்தின் திசையாக இருப்பின், இந்த ஜாதகங்கள் பொருந்தாது என்று கூறி தவிர்க்க சொல்கின்றனர், இதை கேட்ட உடன் ஜாதகம் காண வந்தவர்களும் பொருத்தம் இல்லை என்று நினைத்து, திருமண பேச்சை அத்துடன் விட்டு விடுகின்றனர், இதன் உண்மை நிலையை இன்றைய பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


கிழ்கண்ட ஜாதகங்கள் இதற்க்கு முன் 3 ஜோதிடர்கள் ஆய்வு செய்து இருவருக்கும் ஒரே திசை நடைபெறுவதால் ( சுக்கிரன் திசை ) பொருத்தம் வராது என்று, வரனின் ஜாதகத்தில் 5ல் ராகு  இருப்பதால் புத்திர பாக்கியம் இருக்காது என்று காரணம் சொல்லி ஜாதகம் காண வந்தவர்களின் வயிற்றில் புளியைகரைத்து அனுப்பி விட்டனர், உண்மையில் இரு தரப்பினருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கும் முன்பு வரை மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்துள்ளனர் வதுவுக்கும் வரணுக்கும் பிடித்து விட்டதால் திருமணத்தை நடத்திவிடலாம் என்று, ஜாதகம் பார்க்க போன இரு தரப்பினருக்கும் இந்த பதிலால் கிலியடித்து, திருமணத்தையே நிறுத்தி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர், இவர்களை எமது நண்பர் விபரம் சொல்லி நம்மிடம் அழைத்து வந்தார், வது வரனின் ஜாதகத்தை தெளிவாக ஆய்வு செய்து இரு தரப்பினருக்கும் விளக்கத்தை எடுத்து உரைத்து, ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை தெளிவு படுத்தி திருமணம் நடத்தி வைத்தோம் அன்பர்களே !

ஜாதக ஆய்வு 

வரனின் ஜாதக நிலை :



வதுவின் ஜாதக நிலை :



மேற்கண்ட இரண்டு ஜாதகத்திலும் சுக்கிர திசை நடைமுறையில் இருக்கிறது, ஜோதிடர்கள் காரணமாக கூறியது இருவருக்கு ஒரே திசை நடைபெறுகிறது எனவே திருமணம் செய்ய கூடாது என்பது, இதற்க்கு ஜோதிடதீபம் கிழ்கண்ட வாறு  விளக்கம் தந்தது.

வரனின் ஜாதகத்தில் நடைபெறும் சுக்கிரன் திசை ( 30/03/2013 முதல் 30/03/2033 வரை )

 ஜாதகனுக்கு சுக்கிர திசை களத்திர ஸ்தானமான 7ம் வீடு , சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோகத்தை தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு 7ம் வீடு தொடர்பு பெரும் நான்காம் பாவகம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடாக அமைந்து சர நெருப்பு தத்துவ அமைப்பில் செயல்படுவதால், ஜாதகர் சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, ஒழுக்கம், நேர்மையான குணம், செய்யும் தொழில் தனது செயல்பாடுகள் மூலம் வெற்றி பெற்று சுய உழைப்பின் மூலம் வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை, நல்ல உடல் நிலை மற்றும் மன நிலையை பெரும் யோகம், மற்றவர் போற்றும் அருங்குணங்கள், சமுதாய அந்தஸ்து மற்றும் ஏற்றமிகு பெருவாழ்வை குறுகிய காலத்தில் ( சரம் ) பெரும் யோகத்தை தரும்.

வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் சுக்கிரன் திசை ( 16/12/2002 முதல் 16/12/2022 வரை )

 ஜாதகிக்கு சுக்கிரன் திசை 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோகத்தையே தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகிக்கு 7ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாக அமைந்து சர மண் தத்துவ அமைப்பில் நடைபெறுவதால், ஜாதகி பொறுமையான குணமும், சிறந்த உடல் நலமும், மற்றவர் போற்றும் பெருந்தன்மையையும் கொண்டிருப்பார், தனது நிதானமான செய்கையினாலும், பெரியோர்களின் ஆசிர்வாதமும் பாராட்டுகளையும் பெறுவார், இதில் கவனிக்க தக்க விஷயம் எதுவெனில் ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவத்திற்கு 10ம் வீடாகி ஜீவன ஸ்தானமான வருவது ஜாதகியை திருமணம் செய்துகொள்ளும் அன்பருக்கு! அளவில்லா ( சரம் ) தொழில் விருத்தியை வாரி வழங்கும், இதுவரை ஜீவனத்திர்க்கே சிரம பட்ட நபராக இருந்தாலும் சரி, இந்த வதுவை திருமணம் செய்த சில நாட்களிலேயே தொழில் ரீதியான அபிவிருத்தியை எதிர்பாரா வண்ணம் பெறுவார், அவரின் கௌரவமும் அந்தஸ்தும் சமுதாயத்தில் மேலோங்கும்.

மேற்கண்ட இருவரின் சுய ஜாதக ரீதியாக நடைபெறும் சுக்கிரன் திசை வரனின் ஜாதகத்தில் 4ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், வதுவின் ஜாதகத்தில் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும் வாரி வழங்குவது ஏக திசா சந்திப்பால் எவ்வித துன்பமும் நடைபெற வாய்ப்பில்லை, மேலும் இவர்கள் திருமணம் செய்துகொள்வதால் திருமண வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பது உறுதி, எனவே திருமண வாழ்க்கை மிகவும்  சிறப்பாக நடைபெற்று தம்பதியர் யோக வாழ்க்கையையே பெற்றார்கள் என்பது உறுதி செய்யபட்ட விஷயமாக இருக்கிறது அன்பர்களே !

இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை யோக பலன்களையே வழங்குவதால், ஏக திசை சந்திப்பு எப்படி தீமையை செய்யும் என்று ஜோதிடர்கள் நிர்ணயம் செய்தனர் என்பது எமக்கு புரியவில்லை, ஆக வதுவின் ஜாதகத்திலும், வரனின் ஜாதகத்திலும் நடைபெறும் சுக்கிரன் திசை எந்த பாவக பலனை தருகிறது என்று தெரியாத பொழுதே ஜோதிடர்களுக்கு இந்த குழப்பம் ஏற்ப்பட்டு இருக்கும், இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை வரனின் ஜாதகத்தில் 4ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், வதுவின் ஜாதகத்தில் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை, தருகிறது என்று தெரிந்து இருந்தால் இவர்கள் ஜாதக பொருத்தம் இல்லை என்று ஏக திசை சந்திப்பை காரணம் காட்டி இருக்க வாய்ப்பில்லை அன்பர்களே ! இந்த மாதிரி குத்து மதிப்பாக தவறாக ஜாதக பலன் சொன்னால், இதற்க்கு உண்டான வினை பதிவு, ஜோதிடர்களின் சந்ததியை பாதிக்கும் என்பதும் ஜோதிடர்களையும் பாதிக்கும் என்பதும் ஏன் இவர்களுக்கு புரியாமல் போய்விடுகிறது, நாம் காணும் ஜாதக கணிதம் குறைந்த பட்சம் நம்மை நம்பி வருபவர்களுக்கு நன்மை செய்யாவிட்டலும் பரவாயில்லை, தீமை நடைபெறாமல் இருப்பது முக்கியமல்லவா அன்பர்களே !

பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் வது வரன் ஜாதகத்தில் அடிப்படையாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருப்பது குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமுமே, இந்த இரண்டு பாவகமும் மிக வலிமையாக இருந்து நடைபெறும் திசை, எதிர்வரும் திசைகள் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் நிச்சயம் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாகவே அமையும், இத்துடன் 5ம் பாவகமும் இருவரின் ஜாதகத்தில் வலிமை பெற்று அமையும் பொழுது, நிச்சயம் சிறந்த புத்திர பாக்கிய யோகத்தை வாரி வழங்கிவிடும்.

பொருத்தம் இல்லை என்பதற்கு ஜோதிடர்கள் சொன்ன மற்றொரு காரணாம், " 5ல் ராகு புத்திர பாக்கியம் இல்லை " ஒருவரது ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருக்கிறாரா?  பாதிக்கபட்டு இருக்கிறாரா ? என்று ஆய்வு செயாமல், ராகு 5ல் அமர்ந்தால் புத்திர பாக்கியம் இல்லை என்று முடிவு செய்வது உண்மைக்கு புறம்பான ஒரு விஷயம் அல்லவா ? பொதுவாக ராகு 5ல் அமர்ந்து அந்த பாவகத்திர்க்கு அதிபதி சுக்கிரன்,குரு,வளர்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன் ( சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் அமர்ந்த நிலை) ஆகியோர் பொறுப் ஏற்றால் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் 100% வலிமை பெற்று விடும் ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகள் யாவும் ஆண் குழந்தைகளாகவே இருக்கும், ( ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவனம் செய்து வந்தால் ) ஆக மேற்கண்ட வரனின் ஜாதகத்தில் சுக்கிரன் வீடான ரிஷபத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு சிறந்த ஆண்வாரிசை வழங்குகிறார் என்பது உறுதியாகிறது, ஜாதகத்தில் உண்மையான விஷயங்கள் இப்படி இருக்க, இப்படி உண்மைக்கு புறம்பான ஜாதக பலன்களை சொல்லும் ஜோதிடர்களை என்ன செய்வது ? நாம் தான் தலையில் அடித்துக்கொள்ளவேண்டும்.

மேற்கண்ட சரியான உண்மையான விளக்கத்தை இரு தரப்பிற்கும் தெளிவாக சொன்ன பின்னரே இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர், தற்பொழுது தம்பதியருக்கு சந்தான பாக்கியம் கிட்டியாதாக நம்முடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர், வாழையடி வாழையாக அவர்களது குடும்பம் 16 வகை செல்வமும் பெற்று செழித்து ஓங்கட்டும், இந்த பெருமை எல்லாம் எனது குருவையே சாரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுகொள்வது, குழந்தைக்கு யோக வாழ்க்கையை தருமா ?



இதை விட கேலிக்கூத்தான ஒரு விஷயம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம் , முன்பெல்லாம் ஒரு பெண்ணிற்கு சுக பிரசவம் என்பது எளிதாக இருந்தது , இதற்க்கு காரணம் பெண்களின் மன நிலையும்  உடல் நிலையும்  அதற்க்கு ஏற்ற வகையிலே சிறப்பாக அமைந்து இருந்தது , மேலும் மருத்துவர்கள் இயற்கையாக குழந்தை பிறப்பினையே வலியுறுத்தினர் தம்மை நாடி வரும் மக்களுக்கு, தனது நேர்மையின் அடையாளமாக .

 ஆனால் இன்றோ இதற்க்கு மாறாக சில மருத்துவர்கள் இயற்கையாக சுக பிரசவம் பெரும் அமைப்பை பெண்கள் பெற்று இருந்தாலும், அவர்கள் அறுவை சிகிச்சையே பரிந்துரை செய்கின்றனர் , இதற்க்கு காரணமாக பல விஷயங்களை சொல்லலாம் 

1) குழந்தை இயற்கையாக சுகமாக பிறந்தால் மருத்துவமனைக்கும் , தனக்கும் பெரிய வருமானம் இல்லாமல் போய்விடும் என்ற ஒரு காரணத்தினாலும் .

2) குழந்தையின் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியும் .

3) ஜோதிடர்கள் சொல்லும் நல்ல நேரத்தில் தமது குழந்தை பிறந்தால் உலகத்தையே கட்டி ஆண்டுவிடும் என்ற தவறான எண்ணத்தினாலும்.

4) இந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் சிலருக்கு ஆகாது என்ற தவறான ஜோதிட ஆலோசனையின் பேரிலும் .

இன்னும் பல சொல்ல இயலாத காரணத்தினாலும் இயற்கையான குழந்தை பிறப்பை மருத்துவர்கள் , அல்லது குழந்தையின் பெற்றோர்கள் தவிர்த்து விடுகின்றனர் என்பதே உண்மை .

சில தொலைகாட்சி ஜோதிட நிகழ்சிகளில் இன்றைக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம் என்ற குறிப்பு வேறு தருகின்றனர் , கலிகாலத்தின் அலங்கோலம்தான் இது என்ற எண்ணமே நமக்கு தோன்றுகிறது . 

இயற்கையின் பேரழிவுகளையும் , பூமியில் மலை பொழியும் தருணங்களையும் , குழந்தை பிறக்கும் நேரத்தினையும் எவராலும் சரியாக கணிக்க இயலாது,  இதை பெரியோர்களே மலைபேரும், பிள்ளைபேரும்  மகாதேவனுக்கே  தெரியாது என்று செலவடையாக சொல்லி வைத்துள்ளார்கள் , ஆக நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறப்பை நிர்ணயம் செய்வது என்பது முற்றிலும் இயலாத காரணம் , இதற்க்கு சரியான உதரணங்களை கிழே கொடுத்துள்ளோம் , 

எடுத்துகாட்டாக ஜோதிடர் கொடுத்த ஒரு 3 நிமிட நல்ல நேரத்திற்கு உட்பட்ட காலகட்டத்தில் பிறக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் , நொடியிலும் குழந்தையின் பலன்கள் வேறுபடுவதை பாருங்கள் :


ஜாதகம் 1 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:55:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் தீமையான பலன்களை தருகிறது , 6,12ம் வீடுகள் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 2ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10 ம் வீடுகள் ஜீவன ஷ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும் , 5,8ம் வீடுகள் குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .



ஜாதகம் 2 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:56:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் தீமையான பலன்களை தருகிறது ,8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 6,12ம் வீடுகள் பூர்வ புண்ணிய  பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை தருகிறது , 2ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10 ம் வீடுகள் ஜீவன ஷ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும் , 5,ம் வீடு குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .



ஜாதகம் 3 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:57:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் நன்மையான  பலன்களை தருகிறது , 6ம் வீடு பூர்வ புண்ணிய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 2ம் வீடு எதிரி பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10, 12ம் வீடுகள் விரைய ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்றும் தீமையையும் , 5ம் வீடு குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அதிக தீமையான பலனையும் தருகிறது .




ஆக நிமிடத்திற்கு நிமிடமும் , நொடிக்கு நொடியும் பலன்கள் மாறும் பொழுது நிச்சயம் தங்களின் குழந்தை குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சையின் மூலம் பெற்றுகொள்வது என்பது நிச்சயம் இயலாத காரியம் , மேலும் இடத்திற்கு இடம் அதற்கு உண்டான அமைப்பில் ஜாதக பலன்கள் மாறுபடும் எனவே குறித்த நல்ல நேரத்தில் குழந்தை பிறப்பை எவராலும் நிர்ணயம் செய்ய இயலாது, ஜோதிடர் சொல்லும்  நல்ல நேரத்தில் எவராலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்ள இயலாது என்பதே உண்மை .

பொதுமக்கள் இதை உணருவது அவசியம் யாரோ ஒரு ஜோதிடர் சொல்கிறார் என்பதற்காக தங்களின் குழந்தையின் விதி நிச்சயம் மாறிவிட வாய்ப்பு இல்லை , முடிந்த அளவிற்கு தங்களது  குழந்தை இயற்கையாக பிறப்பதற்கு என்ன வழி உள்ளது என்பதை பற்றி  மட்டும் சிந்தியுங்கள் அல்லது மருத்துவ துறைக்கு தன்னை அர்ப்பணித்து  கொண்டு நேர்மையாக மருத்துவம் பார்க்கும் நல்ல மருத்துவரை நாடி இயற்கையாக குழந்தை பிறப்பை பெறுவதற்கு என்ன வழி என்பதை  பற்றி சரியான ஆலோசனை பெறுங்கள்.

ஜோதிட தர்மத்தை முறையாக கடை பிடிக்கும்  எந்த ஒரு ஜோதிடனும் குழந்தை பிறப்பிற்கு  நேரம் குறித்து தருவதில்லை, காரணம் பிறப்பு இறப்பு என்பது ஒருவரின் வினை பதிவின் படி இயற்கையால் நிர்ணயம் செய்யபடுவது என்பதே உண்மை , ஜோதிடன் என்பவன் தங்களின் விதி பாதையில் உள்ள உண்மை நிலைகளை , சாதக பாதக அமைப்புகளை உள்ளது உள்ளபடி சொல்பவரே அன்றி விதியை மற்றும் அளவிற்கு சக்தி படைத்தவர் அல்ல , இறை நிலைக்கு அப்பாற்பட்ட சிறப்பு சக்தி படைத்தவரும் அல்ல , அவரும் தங்களை போன்றே ஒரு சாதாரண மனிதன் என்பதை மறந்துவிட வேண்டாம் அன்பர்களே இதை போன்றே ஜோதிடமும் நமது வாழ்க்கையில் நடைபெறும் நன்மை தீமையை சரியாக எடுத்து சொல்லும் ஒரு கணித அறிவியல் மட்டுமே . 

மருத்துவ தர்மத்தை முறையாக  கடைபிடிக்கும் எந்த ஒரு மருத்துவனும் இயற்கையாக குழந்தை பிறப்பிற்கு  வாய்ப்பு இருக்கும் பொது அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்வதில்லை என்பதே முற்றிலும் உண்மை , மேலும் இயற்கையாக பிறக்கும்  குழந்தையின் வளரும் சூழ்நிலையும் , அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும்  குழந்தையின் வளரும் சூழ்நிலையும் அதிக அளவிலே வித்தியாசம் படுகிறது  என்பதை மக்கள் இங்கு கவனிக்க வேண்டும் .

இயற்கையாக பிறக்கும் குழந்தையின் மன ஆற்றல் , உடல் நிலை , அறிவு திறன்  மிகவும் பலம்கொண்டதாக இருக்கிறது என்பது பல ஆராய்ச்சிகள் நமக்கு  உணர்த்துகிறது , இது பற்றி தெளிவு பெற கூகிள் ஆண்டவரை தொடர்பு  கொள்ளுங்கள் அன்பர்களே !

இயற்கையாக குழந்தை பிறப்பு அமையாததிர்க்கு சில முக்கிய காரணங்களாக அறிஞர்கள் சொல்வது :

1) சரியான வயதில் திருமணம் செய்யாமல் தவிர்ப்பது .
2) தேவையான  உடல் உழைப்பு அற்ற நிலை 
3) குழந்தை பிறப்பை தள்ளிபோடுவது .
4) தேவையான அளவிற்கு ஊட்ட சத்து உணவுகளை எடுத்துகொள்ளதது .
5) மனோ ரீதியான பிரச்சனைகள் .
6)​ தன்னம்பிக்கை அற்ற நிலை 
7) கருவுற்று இருக்கும் பொழுது பொற்றோர்களின் ஆதரவு இல்லாத சூழ்நிலை ஆகியவற்றை  குறிப்பிடலாம் .

எனவே அன்பர்களே தங்களின் குழந்தை இயற்கையாக பிறப்பதே குழந்தைக்கும் அதன் தாயிக்கும் மிகுந்த நன்மையை தரும் , தங்களின் குழந்தை  இயற்கையாக பிறப்பதே நல்லது , ஒருவேளை அதற்க்கு வாய்ப்பு இல்லை எனும்பொழுதே அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் அது மருத்துவரின்  ஆலோசனையாக இருக்கட்டும், ஜோதிடரின் ஆலோசனையாக  இருப்பது சிறந்ததல்ல என்பதே முற்றிலும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

வியாழன், 11 ஏப்ரல், 2013

பூர்வபுண்ணிய பாதிப்பும், புத்திர பாக்கியம் எனும் ஆண் வாரிசு யோகமும் !




சுய ஜாதக ரீதியாக ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் 100 சதவிகித வலிமை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம் , எடுத்துகாட்டாக ஒருவர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனில் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருக்க வேண்டும் , நல்ல நினைவாற்றல் , தன்னம்பிக்கை , உறவுகள் அல்லாத மற்றவர்களின் ஆதரவு , தெளிவான சிந்தனை திறன் மற்றும் செயல்பாடுகள் , வருமுன் கணிக்கும் புத்திசாலித்தனம் , தனது முன்னோர்களின் சொத்து சுகங்களை பெரும் யோகம் , முன்னோர்களின் நல்ல குணங்களை தான் அப்படியே பெற்று இருக்கும் அமைப்பு என்ற அமைப்பில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்குவது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே என்றால் அது மிகையாகாது . 

இவ்வளவு மேன்மைகள் பெற்ற பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர சந்தானம் எனும் குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் , சுய ஜாதகத்தில் ஒருவருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது தனது வம்சம் விருத்தி பெற எவ்வித தடையும் இல்லாமல் ( ஆண் )  குழந்தை பாக்கியத்தை வழங்கும் , இதில் சில விதி முறைகள் உண்டு , தம்பதியர் இருவரது ஜாதக அமைப்பிலும் புத்திர ஸ்தானம் வலிமை பெறுவது நன் மக்கட்பேரை தரும் , மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் செய்யாமல் இருப்பது மிகுந்த நன்மையை தரும் .

பூர்வ புண்ணியம் நல்ல நிலையில் இருந்து  அந்த ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று ஜீவனம் செய்துகொண்டு இருக்கிறார் என்ற ஒரு நிலை வரும் பொழுது , ஜாதகருக்கு (ஆண் வாரிசு ) புத்திர சந்தானத்தில் குறை வர வாய்ப்பு உண்டு ஏனெனில் ஜாதகரின் ( நல்ல நிலையில் இருக்கும் ) தனது பூர்வீகத்தை விட்டு வெளியிடங்களில் சென்று ஜீவனம் செய்வது , பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு உண்டான பலன்கள்  ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதுமே நடை பெறாமலே நின்று விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு, மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் இருக்கிறார் என்றால் நிச்சயம் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நன்மையான பலன்கள் அதிக அளவில் தடை படும் என்பதே உண்மை .

மேலும் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று நல்ல நிலையில் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானம் சர ராசியாக இருப்பின் விரைவான குழந்தை பாக்கியத்தையும் , ஸ்திர ராசியாக இருப்பின் சில மாதங்களிலும் , உபய ராசியாக இருப்பின் சில வருடங்களிலும் நிச்சயம் குலம் விருத்தி பெற ஆண்வாரிசை தந்துவிடும் , எனவே சுய ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் வலிமை பெற்ற அன்பர்கள் எதற்காகவும் கவலை கொள்ள தேவையில்லை .

ஆனால் பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்  ஸ்தானம் சர ராசியாக இருப்பின் தம்பதியர் இருவரின் உடல்  ரீதியான மருத்துவ காரணங்களாலும் , குலதேவதை நிந்தனையின் காரணங்களாலும் , முன்னோர்கள் ,சாதுக்கள் , ஐந்தறிவு ஜீவன்களின் சாபத்தாலும், மற்றும் பெண்களின் சாபத்தாலும் தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும் .

பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்  ஸ்தானம் ஸ்திர ராசியாக இருப்பின் ஜாதகரின் ஜீவிக்கும் இடமும் அல்லது தனது  பூர்வீகத்தில் குடியிருப்பதாலும் , தம்பதியரின் விருப்பத்தின் பேரில் குழந்தை பிறப்பை தாமதபடுத்துவத்தின் காரணத்தாலும், தம்பதியர் இருவரும் எடுக்கும் தவறான முடிவுகளின் காரணத்தாலும் , தனது குடும்பத்தில் உள்ளவர்களின் தவறான போதனை மற்றும் வழிகாட்டுதலின்  காரணத்தாலும் தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும் .

பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்  ஸ்தானம் உபய ராசியாக இருப்பின் ஜாதகர் மற்றவர்களுக்கு இழைக்கும் அநீதிகளாலும் , மற்றவர் பொருளுக்கு விருப்பபட்டு அவர்களை ஏமாற்றுவதினாலும் , தனது பெற்றோரை , சகோதரர்களை , ரத்த உறவுகளை ஏமாற்றுவதினாலும் , தனது குல தேவதையை முறையாக வழிபாடு செய்யாமல் விடுவதினாலும் , பித்ரு கடமைகளை முறையாக கடைபிடிக்காமல் விடுவதினாலும், தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும்.

எனவே அவரவர் சுய ஜாதகத்தின் தன்மையை உணர்ந்து , முறையான செயல்பாடுகளையும் , வழிபாடுகளையும் சரியாக செய்தால் அவர்களுக்கு உறுதியாக இறை அருளின் கருணையினால் தனது குலம் விளங்க புத்திர சந்தானம்  உண்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது ஜோதிடதீபத்தின் கருத்து , ஒருவரது சுய ஜாதகத்தில் இந்த புத்திர ஸ்தானம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி நாம் அடுத்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

திங்கள், 5 நவம்பர், 2012

சுய ஜாதகத்தில் ஐந்தில் கேது , குரு பார்வை நலம் தருமா ? புத்திர பாக்கியம் உண்டா ?




பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் ஜோதிடர்கள் சொல்லும் முதல் வார்த்தை குழந்தை பாக்கியத்தை தடை செய்யும் என்பதாகவே இருக்கிறது , கிழ்க்கண்ட  ரிஷப இலக்கின ஜாதகருக்கு கன்னியில் அமர்ந்த கேது தரும் பலன்கள் பற்றி , இதற்க்கு முன் பார்த்த ஜோதிடர்கள் சொன்ன கருத்துகள் பின் வருமாறு :



1 ) ரிஷப லக்கினத்தில் இருந்து ஐந்தில் கேது ( அதாவது கன்னியில் ) அமர்வதால் ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லை என்றும் , இதற்க்கு பரிகாரம் செய்தால் மட்டுமே நன்மை உண்டு , மேலும் புத்திர பாக்கியம் கிடைப்பது அரிது என்று பலன் சொல்லியிருக்கிறார் .

2 ) மற்றொரு ஜோதிடர் ஐந்தில் கேது அமர்ந்தாலும் , அந்த பாவகதிர்க்கு குரு பார்வை இருப்பதால் , நன்மை விளையும் , புத்திர சந்தானம் கிட்டும் என்றும் , குரு பார்வை ஜாதகருக்கு புத்திர சந்தானத்தை வழங்கும் கவலை பட தேவையில்லை என்று கூறியிருக்கிறார்கள் . மேலும் பல ஜோதிடர்கள் பலவாறு சொல்லி ஜாதகரையும் அவர்களை சார்ந்தவர்களையும் குழப்பி  இருக்கின்றனர் என்பது வேறு விஷயம் .

மேற்கண்ட வாறு ஐந்தாம் பாவக பலனை நிர்ணயம் செய்வதில் இருவேறு கருத்து ஜோதிடர்களிடையே நிலவும் பொழுது , ஜாதகம் காண வந்தவர்கள் நிலை என்ன ? குழந்தை பாக்கியம் உண்டா ? இல்லையா ? ஒருவர் குழந்தை பாக்கியம் இருக்கும் என்கிறார் , ஒருவர் குழந்தை பாக்கியம் இல்லை என்கிறார் எதை நம்புவது என்ற நிலைக்கு தள்ளபடுவார்கள் என்பதே உண்மை , இதில்  ஜோதிட தீபம் தரும் சரியான பலன் என்னவென்பதை  இனி காண்போம் .

மேற்கண்ட ஜோதிடர்கள் சொன்ன பலன்கள் யாவும் தவறு என்பதே ஜோதிட தீபத்தின் கருத்து , முதலில் ராகு கேது கிரகத்தின் தனி தன்மையை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறது ஜோதிட தீபம் , அது ராகு கேது கிரகங்கள் ஒரு பாவகத்தில் அமரும் பொழுது அந்த பாவகத்தின் பலனை முழுவதும் தாமே எடுத்துகொண்டு நன்மை தீமை பலன்களை தவறாமல் செய்யும் என்பதே உண்மை , இதில் எவ்வித சந்தேகமும் இல்லை , மேலும் இந்த பாவகத்தை எந்த கிரகங்கள் பார்வை செய்தாலும் , அந்த பார்வை எவ்வித நன்மை தீமை பலனையும் செய்யாது , அல்லது ராகு கேது உடன் சேர்ந்து அமரும் கிரகங்களும் எவ்வித நன்மை தீமை பலனையும் செய்ய இயலாது , நன்மையோ தீமையோ ராகு கேது இரு கிரகங்களே பொறுப்பு ஏற்று பலனை வழங்கும் , ஆக ராகு கேது கிரகங்கள் அமர்ந்த பாவகத்தை பார்க்கும் கிரகங்களுக்கும் , சேர்ந்து அமர்ந்த கிரகங்களுக்கும் எவ்வித நன்மை தீமை பலனை தரும் வலிமை இல்லை என்பதை இந்த இடத்தில் பதிவு செய்வதில் ஜோதிட தீபத்திற்கு இரு வேறு கருத்துகள் இல்லை .

அடுத்து மேற்கண்ட ஜாதகத்தில் ஜோதிடர்கள் நிர்ணயம் செய்த பலன்கள் சரியா ? என்பதை ஜோதிட தீபம் ஆய்வுக்கு எடுத்துகொள்கிறது , அதாவது ஜோதிடர்கள் சொன்ன அனைத்தும் தவறான பலன்கள் என்பதை தெளிவாக ஜோதிட தீபம் உரைக்க விரும்புகிறது , உண்மையில் கேது அமர்ந்த பாவகம் எது என்பதை தெரியாமலே ஜோதிடர்கள் பலன் கண்டுள்ளனர் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறது .

அதாவது இந்த ரிஷப இலக்கின ஜாதகருக்கு லக்கினம் என்பது ரிஷப ராசியில் 56 .00 பாகையில் ஆரம்பித்து, மிதுன ராசியில் 82 .02 பாகையில் முடிவடைகிறது , அதேபோல் ஜாதகரின் ஐந்தாம் பாவகம் என்பது கன்னியில் 172 .09 பாகையில் ஆரம்பித்து துலாம் ராசியில் 205 .13 பாகையில் முடிவடைகிறது , ஆக ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம் எனும் ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் கேது இருக்கிறாரா என்பதை கணிதம் செய்து கண்டு பலன் சொல்வதே சரியான பலனாக இருக்கும் , ஜாதகருக்கு ஐந்தாம் பாவகம் ஆரம்பிக்கும் பாகை கன்னியில் 172 .09 பாகையில் , எனவே இந்த 172 .09  பாகைக்கு மேல் 205 .13 பாகைக்குள் கேது அமர்ந்தால் மட்டுமே கேது ஐந்தில் அமர்வதாக எடுத்து கொள்ள இயலும் , ஆனால் கேது 167 .43  அமர்ந்து விடுவதால் கேது கன்னியில் இருக்கும் நான்காம் பாவகதில் அமர்வதாக எடுத்துகொண்டு பலன் சொல்வதே சரியான பலனாக இருக்கும் , மேலும் கேது என்ற கிரகத்திற்கும், ஐந்தாம் பாவகதிர்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் உறுதி ஆகிறது .

அடுத்த கேள்வி இந்த ஜாதகருக்கு புத்திர சந்தானம் உண்டா ? இல்லையா ? என்பது , ஐந்தாம் பாவகதிர்க்கு அதிபதியான புதன் என்ற கிரகத்தை வைத்தும் , ஐந்தாம் பாவகதுடன் சம்பந்தம் பெரும் கிரகங்களை வைத்தும், குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்யலாம் , ஐந்தாம் பாவக அதிபதியும் சம்பந்தம் பெரும் கிரகங்களும் , ஐந்தாம் பாவகத்திர்க்கு நன்மையை தருவதால் ஜாதகருக்கு நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு என்பதை உறுதி செய்யலாம் , இதே போன்ற ஐந்தாம் பாவகம் வலிமை பெற்ற அமைப்பு உள்ள பெண்ணை ஜாதகர் திருமணம் செய்து கொண்டால் நிச்சயம் ஆண் வாரிசு உண்டு என்பதை 100 சதவிகிதம் உறுதியாக சொல்ல இயலும் .

ஒரு பாவக பலனை நிர்ணயம் செய்யும் பொழுது , அந்தபாவகம் ஆரம்பிக்கும் பாகை அடிப்படையாக வைத்து பலன் கண்டால் நிச்சயம் ஜாதக பலன்களை தெளிவாக சொல்ல  உறுதுணை புரியும் , மேலும் அந்த பாவகதிர்க்கு உட்பட்ட பாகைக்குள் சம்பந்தம் பெரும் கிரகங்கள் தரும் பலன்களை அடிப்படையாக வைத்து பலன் காணுவதே ஜாதக பலன்களை சரியாக சொல்ல எதுவாக இருக்கும் , மேற்க்கண்டவாறு குத்து மதிப்பாக பலன் கண்டால் ஜோதிடரை நம்பி வந்து பலன் கேட்டு அதன் படி நடக்கும் நபர்களின் நிலை பெரிய கேள்வி குறியாக மாறிவிட வாய்ப்பு உண்டு .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  

சனி, 20 அக்டோபர், 2012

புத்திர தோஷம் எனும் குழந்தை பாக்கியம் அற்ற நிலையை எப்படி நிர்ணயம் செய்வது ?



ஐயா வணக்கம்,

கேள்வி :

1.ஒரு ஜாதகரின் குழந்தைகளை நிர்ணயிப்பதற்கு ஒருவர் ஜாதகம் மட்டுமே போதுமா?அல்லது கணவன்,மனைவி இருவர் ஜாதகமும் சேர்த்து பார்த்தால்தான் முடிவுசெய்யமுடியுமா?


பதில் : 

நிச்சயமாக தம்பதியர் இருவரின் ஜாதகமும் தேவை , இவருடைய ஜாதக அமைப்பை வைத்து மட்டுமே குழந்தை பாக்கியம் என்ற பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் தன்மையை நிர்ணயம்  செய்ய முடியும் , அதன் அடிப்படையிலேயே குழந்தை பாக்கியம் உண்டா ? இல்லையா என்று தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் . ஒருவரின் ஜாதக அமைப்பை மட்டும் வைத்து குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்வது என்பது ஒரு  கை ஓசைக்கு சமமானது அன்பரே ! மேலும் தம்பதியரின் சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்க பட்டு இருந்தாலும் , ஒருவருக்கு வலிமையுடன் இருந்தால் நிச்சயம் பெண் குழந்தைக்கு கிடைப்பதற்கு  உண்டான வாய்ப்பு நிச்சயம் உண்டு . இதிலிருந்து ஒருவருக்காவது  புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் . இருவருக்கும் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து ஆண் குழந்தை இல்லத்திற்கு காரணம் தம்பதியர் தங்களுக்கு உகந்த திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருக்காமல் , பாதகத்தை தரும் வாயிர்ப்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பது மட்டுமே காரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு ஆண்குழந்தைகளே பிறக்கின்றன.

பதில் : 
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் சர ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் சர ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் ஆண் குழந்தைகளாக பிறக்கும் . மேற்கண்ட அமைப்பில் இருந்து அதாவது  ஜாதகர் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருந்து, தனது பூர்விகத்தை விட்டு வெளியே சென்று குடியிருந்தால் , ஜாதகருக்கு பெண் குழந்தைகளாகவே பிறக்க கூடும் , தனது பூர்வீகத்திற்கு திரும்ப வந்தவுடன் ஆண் வாரிசு நிச்சயம் அமையும் , இதையெல்லாம்  சுய ஜாதகம் கொண்டே பலன் நிர்ணயம் செய்ய முடியும் .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு பெண் குழந்தைகளே பிறக்கின்றன.

பதில் :
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் உபய ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் உபய  ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் பெண்  குழந்தைகளாக பிறக்கும் .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு இரண்டுமே பிறக்கின்றன.

பதில் : 
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் ஸ்திர  ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் ஸ்திர  ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , ஆண் பெண் என்று இரண்டு விதமான குழந்தைகளையும் பெரும் யோகம் உண்டாகும் .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன.

பதில் :
இது மேற்கண்ட அமைப்பில் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து , கருத்தரித்த நேரமும் , இடமும் இரட்டை குழந்தைகளுக்கு உண்டான அமைப்பை நிர்ணயம் செய்யும் .

கேள்வி :
சிலபேருக்கு குழந்தைகளே இல்லை.

பதில் :
இதற்க்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும் ,  தம்பதியரின் ஜாதக அமைப்பில் இவருடைய பூர்வ புண்ணியம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் , பூர்வ புண்ணியம் எனும் பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகனுக்கு இப்பிறவியில் தத்து புத்திர யோகம் மட்டுமே உண்டு அதுவும் ஜாதகர் செய்யும் குல தேவதை வழிபாட்டை பொறுத்து அமையும் .

கேள்வி :
இதை ஒரு ஜாதகரின் அல்லது தம்பதியின் ஜாதகங்களை வைக்து சரியாக அதாவது மிகச்சரியாக தெரிந்துகொள்ளமுடியுமா?உங்கள் அனுபவத்தை வைத்து பதிலை ஜோதிடதீபத்தில் அளிக்கவும்.

பதில் :
நிச்சயம் தம்பதியர் இருவரின்  ஜாதகத்தை வைத்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் , ஒருவரின் ஜாதக அமைப்பை வைத்து நிர்ணயம் செய்வது என்பது மிகவும் கடினம். மேலும் இதை எல்லாம்  அனுபவத்தை வைத்து சொல்ல இயலாது ஜோதிட கணிதத்தை வைத்து சரியாக சொல்லிவிட முடியும் அன்பரே ! ஜோதிடத்தில் கணிதம் மட்டுமே உண்டு அனுபவம் என்பது ஏது ?


கேள்வி :
கிராமவாசிகள் ஜோதிடரிடம் இந்த ஜாதகருக்கு எத்தன வாரிசு பிறக்கும்?அதுல ஆண் எத்தன பெண் எத்தன?மூத்தது ஆணா?பெண்ணா? இப்படியெல்லாம் கேட்கிறார்களே. இதற்கெல்லாம் உண்மையிலேயே மிகச்சரியான பதிலை ஜோதிடத்தின் மூலம் கூறமுடியுமா? முடியும் எனில் உங்கள் அனுபவத்தில் பார்த்த ஒரு உதாரண ஜாதகம் மூலம் விளக்கமுடியுமா?

பதில் :
கிராம வாசிகள் என்ன ? நகர வாசிகள் என்ன ? எல்லோருக்கும் ஒன்றேதான் , பாரம்பரிய ஜோதிட முறையில் பல ஜோதிடர்கள் பச்சிலை என்ற ( அதாவது மனோ தத்துவம் அல்லது மனோ ரீதியான அணுகு முறை பிறந்த ஜாதகத்தில் சில எழுத்துகள் மூலம் உடன் பிறப்பு பற்றி சொல்லும் தன்மை  ) ஒரு முறையை கடை பிடிக்கிறார்கள் , இதை வைத்து கொண்டுதான் பல அரை குறை ஜோதிடர்களின் பிழைப்பே ஓடுகிறது , நமது அமைப்பில் ஆருடம் மூலம் பிறப்பது ஆண் குழந்தைய அல்லது பெண் குழந்தையா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , மேலும் இதை பற்றி நான் அதிகம் சொல்ல விரும்ப வில்லை .

கேள்வி :
புத்திர தோஷம் என ஜோதிடம் ஆண் வாரிசை மட்டுமே குறிக்கிறது.புத்திரி தோஷம் என் பெண் பாலை குறிக்கவில்லை.எனவே ஒருவருக்கு ஏற்ப்படும் பெண் வாரிசை பற்றி அவர் ஜாதகம் மூலம் அறியமுடியாதா?முடியும் எனில் எப்படி?

பதில்:
புத்திர தோஷம் என்பதே பொதுவான ஒரு வார்த்தைதான் , இதில் ஆண் பெண் வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை , மேலும் புத்திரன் தோஷம் என்று இருந்திருந்தால் மட்டுமே உங்களின் கேள்வி சரியானதாக இருந்திருக்கும் என்பது எமது கருத்து , மேலும் ஜாதகருக்கு பெண் குழந்தை உண்டா என்பதை நிர்ணயம் செய்ய நிச்சயம் முடியும் , எப்படி எனில் இதற்க்கு தாங்கள் ஜோதிடத்தை நல்ல குரு மூலம் தெளிவாக  இருந்து கற்றுகொள்ள வேண்டும் .

கேள்வி :
புத்திர தோஷம் என்றால் என்ன? குழந்தைகளே இல்லாத நிலையா? ஆண் குழந்தைகளே இல்லாத நிலையா?

பதில் :
குழந்தைகளே இல்லாத நிலையையே புத்திர தோஷம் என்று சொல்ல இயலும் ,

கேள்வி :
ஆண்,பெண் குழந்தைகள் பிறந்தும் அந்த குழந்தை சில வருடங்கலில் அதாவது திருமணம்,வேலை போன்றவற்றிற்கு முன்பே அந்த வாரிசு அகால மரணம் அடைவது அல்லது மரணத்திற்கு ஒப்பான நிலை,அல்லது பெற்றோருக்கு உபயொகமில்லாமல் போவது. அந்த வாரிசால் பெற்றோர் அவமானம் அடைதல் புத்திர தோஷம் இதில் எது அடங்கும்? இதற்கான விரிவான பதிலை ஜோதிட தீபத்தில் எதிர்பார்க்கிறேன்

நன்றிகளுடன்,
ஜோதிட பித்தன்.

பதில் :
ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , எதிரி ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, ஆறாம் பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகனுக்கு பிறக்கும் குழந்தையால் ஜாதகன் அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் .

ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , ஆயுள் ஸ்தானம் மற்றும் திடீர் இழப்பு  எனும் எட்டாம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று எட்டாம்  பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகன் தனது குழந்தையை இழக்கும் தன்மையையோ அல்லது நிரந்தரமாக பிரியும் தன்மையையோ பெற கூடும் .

ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ,விரைய ஸ்தானம் எனும் 12 ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று எட்டாம்  பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகன் தனது குழந்தையின் அமைப்பில் இருந்து அதிக வீண் விரயங்களையும் , மன நிம்மதி இழப்பினையும்  சந்திக்க வேண்டி வரும் .

மேற்கண்ட பலன்கள் எல்லாம் சுய ஜாதக அமைப்பை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும் , புத்திர ஸ்தானம் எனும் ஒருபாவகத்தை வைத்து மட்டுமே நிர்ணயம் செய்து விட முடியாது .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com