தீர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 பிப்ரவரி, 2017

ஆருடம் வழங்கும் தீர்வு ( தீர்ப்பு )


"ஜோதிடதீபம்" ஆருடம் கூறியபடியே சரியாக அமைந்த தீர்ப்பு ....

கடந்த 13ம் தேதி தமிழக மக்களின்  மனதில் முக்கியஸ்தர் ஒருவருக்கு வரும் தீர்ப்பு எப்படி இருக்கும்? என்று எழுந்த கேள்விகளுக்கு உண்டான பதிலாக குருவின் ஆசியுடன் ஒரு ஆருடத்தை " ஜோதிடதீபம்" பதிவு செய்து இருந்தது, அதற்க்கு அடுத்தநாளே ஆருடத்தை மெய்பிக்கும் தன்மையாகவும், அவரது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் விதமாகவும், சம்பந்த பட்ட நபருக்கு தீர்ப்பு அமைந்து இருந்தது, ஆருடம் கேட்ட நேரமும் அதில் இருந்த சிறப்பு சாராம்சங்கள் பற்றியும், ஆருட லக்கினத்திற்கு அமைந்த பாவக தொடர்புகள் பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !



ஆருட கேள்வி :

சம்பந்தப்பட்ட நபருக்கு வரும் தீர்ப்பு எப்படி அமையும்? அவரின் எதிர்காலம் என்னவாகும் ?

ஆருட பதில் :

ஆருட நேரத்தில் அமைந்த லக்கினம் : கடகம்
ஆருட நேரத்தில் அமைந்த ராசி : கன்னி
ஆருட நேரத்தில் அமைந்த நட்சத்திரம் : உதிரம் 2ம் பாதம்.
ஆருட நேரத்தில் அமைந்த பாவக தொடர்புகள்

1,3,4,6,7,9,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5,11 வீடுகள் 200 % விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.

1,3,4,6,7,9,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  லக்கின வழியில் கலையில் நாட்டம், தனிமை விரும்பி ( சேராமாரி ) முதலீட்டில் விருப்பம், அதிக தொல்லை, பொறாமை, மறைமுக எதிரி, தடங்கல், அடிக்கடி வைத்திய செலவு, சிறை செல்லுதல், ஏமாற்றம், கொள்ளை அடித்தல், இராஜ துரோகம், சதி செய்தல் என்றவகையில் பலனை தரும்,எனவே ஆருட லக்கினம் என்பதே கடுமையாக பாதிக்கப்படுகிறது ( ஆரூடத்தில் லக்கினம் மிக முக்கியமாக கருதப்படும் ) , மேலும் ஆருட லக்கினாதிபதியான செவ்வாய், லக்கினத்திற்கு 8ல் மறைவு அடிப்படையிலேயே லக்கினமும் பாதிக்கப்பட்டு, லக்கினாதிபதியும் பாதிக்கப்படுவது, அவர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு கட்டியம் கூறுகிறது, 3ம் பாவகம் பாதிக்கப்படுவது அவரது முயற்சியில் பெரும் தோல்வியையும், 4ம் பாவகம் பாதிக்கப்படுவது விபத்து, சொத்துக்களை இழத்தல், தடங்கல், வறுமை, துரதிர்ஷ்டம், மனக்குழப்பம், ஜெயில் வாழ்க்கை, அதிக வேலைப்பளு, விஷ பாதிப்பு என்ற வகையிலும், 6ம் பாவகம் பாதிக்கப்படுவது கடன் கொடுத்தவர்களால் தொல்லை, கடன் பெற்றவர்களால் இன்னல்கள், வேலையாட்கள் விசுவாசிகள் மூலம் அதிக தொல்லை, வேலை நிறுத்தம், தேவையற்ற செலவு, எதிர்பாராத மருத்துவ செலவு, 7ம் பாவகம் பாதிப்படுவது நோயுற்ற வாழ்க்கை துணை, அரசியல் சிக்கல்கள், கூலியாட்கள் மூலம் அதிக தொல்லை, அனைத்திலும் தோல்வி, அதிக இன்னல்கள் என்ற வகையிலும், 9ம் பாவகம் பாதிக்கப்படுவது பித்ருக்கள் ஆசி இன்மை, சரியான நேரத்தில் அனைவரும் காலைவாரிவிடும் சூழ்நிலை, முட்டாள் தனமான செய்கைகள் மூலம் தன்னை ஓர் அறிவிலி என்று நிரூபித்தால், மற்றவர்களை நம்பி சோரம் போகுதல், உடன்பிறப்பை விட்டு, பிறந்த ஊரை விட்டு பிரிதல் என்ற வகையில் இன்னல்களையும், 10ம் பாவகம் பாதிக்கப்படுவது வெளியூர், வெளிநாட்டில் ஜீவனம், அடிக்கடி ஜீவன மாற்றம், வரவைவிட செலவுகள் அதிகம், தவறான வழியில் பணம் ஈட்டுதல், கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடுதல், என்றவகையில் இன்னல்களையும், 12ம் பாவகம் பாதிக்கப்படுவது, நிறைய வீண் செலவு, சூது மூலம் பேரிழப்பு, திருப்தி இல்லா வாழ்க்கை, அனைவராலும் தொல்லை, விபத்து  என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும், 12ம் வீடு மிதுனத்தில் ஆரம்பித்தாலும் பெரும்பாலும்   கடக ராசியிலே வியாபித்து இருப்பது ஆருடத்தால் சம்பந்தப்பட்ட்டவர் அனுபவிக்கும் மன ரீதியான கடுமையான போராட்டங்களை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக மனபயம், மனப்போராட்டம், மனக்குழப்பம் ஆகியவற்றை தெளிவு படுத்துகிறது.

2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து இன்ஷுரன்ஸ் மூலம் லாபம், குடும்பத்தில் இன்னல்கள்,  வாக்கு தவறும் தன்மை, வருமான பாதிப்பு என்ற வாழ்க்கையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆயுள், வாழ்க்கையில் ஏமாற்றம், துயரம், விபத்து, வியாதி, திருப்தி அற்ற மன நிலை, அனைத்தையும் திடீரென இழக்கும் தன்மை எல்லாவகையிலும் இன்னல்களை தரும்.

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்நதம் பெறுவது, (  எதிர்காலம் ஒன்று இல்லை என்பதை பாதக ஸ்தான தொடர்பு தெளிவுபடுத்துகிறது ) சமயோசித புத்திசாலித்தனம் இல்லாத தன்மை, வாய்ப்புகளை பயன்படுத்த தெரியாமல் வீணடிக்கும் தன்மை, தனது வாழ்க்கைக்கு தானே எதிர்ப்புகளை உருவாக்கி கொள்ளும் தன்மை, குலதெய்வ ஆசிர்வாதம் இல்லாததால் வரும் இன்னல்களுக்கு தீர்வு காண இயலாமல் சிரமப்படும் தன்மை, விதி தரும் இன்னல்களில் இருந்து விடுபட முடியாமல் இன்னலுறும் தன்மை, சுய அறிவு இன்றி  மற்றவர்கள் அறிவுரையை கேட்டு வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை என்ற வகையில் இன்னல்களை தரும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் இன்மை, துரதிர்ஷ்ட வாழ்க்கை, எதிர்காலம் சூன்யம் ஆகுதல், பிற்போக்கு தனமான செய்கைகள், தன்னம்பிக்கை இன்மை, அவநம்பிக்கையினால் எதிர்கால வாழ்க்கையினை எதிர்கொள்ள இயலாமல் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை, அனைத்திலும் தோல்வி என்ற வகையில்  அவயோகத்தையும் வழங்கு, மேலும் பாதக ஸ்தானம் என்பதால் 200 சதவிகித இன்னல்களை தரும்,  ஆரூடத்தில் 1,5,9ம் பாவகங்கள் வலிமை அற்று  இருப்பது மிக மோசமான விளைவை தரும் அமைப்பாகும், இந்த நிலை 17/12/2020 வரை நீடிக்கிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 27 அக்டோபர், 2014

வெளிநாடு செல்லும் யோகம் எனக்கு உண்டா ? வெளிநாட்டில் நல்ல வேலைவாய்ப்பும், பொருளாதார முனேற்றமும் பெற இயலுமா?



கேள்வி :

 ஐயா நான் பிறந்தது 20.04.1989, நேரம்:1.57 PM, இடம்: Attur......நான் 1.4 வருடமாக வெளிநாடு செல்ல காத்திருக்கிறேன். இதுவரை 20 க்கும் மேற்பட்ட ஜோதிடரை பார்த்து இருக்கிறேன்.அனைவரும் வெளிநாடு போவாய் என தெதியும் குறித்து கொடுத்துள்ளார்கள்.இதுவரை அப்படி எதுமே நடக்கவில்லை..அவர்கள் எதை வைத்து சொல்கிறார்கள் என ஜோதிடம் படிக்க ஆரம்பித்தேன்..இப்போது 4 மாதம் ஆகிவிட்டது..தயவுகூர்ந்து என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக எடுத்து எப்போது போவேன் என கூறும்படி கேட்டுக்கொள்கிறேன் ஐயா...நீங்கள் கூறியது போல நடக்கும் தசா புத்தியும் கோசார கிரகத்துடன் சாதகமாக தான் உள்ளது..குரு திசை சனி புத்தி,,சிம்ம லக்னம்,கன்னி ராசி,,கோசார குரு 11ல், பெயர்ச்சிக்கு பின் சனி 3ல்....






பதில் :


அன்பு தம்பி சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7ம் பாவகமும், காலபுருஷ  தத்துவத்திற்கு 7ம் ராசியான துலாம் ராசியும் வலிமை பெற்று இருந்தால் ஜாதகருக்கு வெளிநாடு அல்லது வெளியூர் சென்று புகழ் பெரும் யோகத்தை தரும், மேலும் 7ம் வீடு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் சிறந்த தொழில் அல்லது வேலை வாய்ப்பு அமையும், ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் என்பது அபரிவிதமான வளர்ச்சியை பெரும், ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டமும், நண்பர்களின் ஆதரவும் பரிபூரணமாக அமையும், எனவே சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் ஜாதகருக்கு வெளிநாடு யோகத்தை தருகிறது, வெளிநாடுகளில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவான முடிவை  மேற்கண்ட 7ம் பாவக வலிமையை வைத்தே நிர்ணயம் செய்து விடலாம் அன்பரே !


உனது சுய ஜாதக அமைப்பின் படி 3,7ம் விடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகத்தில் சிறந்த அமைப்பாகவே கருதலாம், குறிப்பாக 7ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாக வருவது தங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்பினையும், சிறந்த எதிர்காலத்தையும் அமைத்து தரும் என்பது உறுதியாக தெரிகிறது, மேலும் தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 14/11/2011 முதல் 14/11/2027 வரை ) தங்களுக்கு  3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், பலனை தருவது மிகுந்த யோகமே, மேலும் சுய ஜாதகத்தில் துலாம் ராசியும் 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையையே செய்கிறது என்பதால் தாங்களுக்கு நிச்சயம் வெளிநாடுகளில் நல்ல வேலை வாய்ப்பும், சிறப்பான அதிர்ஷ்டம் மிகுந்த யோக வாழ்க்கையும் நிச்சயம் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.

  நடைபெறும் குரு திசையில் சனி புத்தியும் ( 01/01/2014 முதல் 15/07/2016வரை ) தனது புத்தியை 3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று நடத்துவது சிறப்பான விஷயமே, இதில் சனி புத்தி வேறு பாவக தொடர்புகளையும் நடத்துகிறது அதாவது திடீர் இழப்பை தரும் 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 100% இன்னல்களை தருகிறது, 5,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 30% யோகத்தை தருகிறது, இதில் நடைபெறும் சனி புத்தி 12ம் பாவக வழியில் இருந்து அதிக தீமையை செய்வதால், தங்களின் முயற்ச்சிகள் நல்ல வாய்ப்புகள் அனைத்தும் விரையம் ஆகிறது, மேலும் 12ம் வீடு சர நீர் ராசியாக இருப்பதால் மன ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்மையை தருகிறது, தங்களின் வெளிநாடு பயணத்தின் முக்கிய முட்டுகட்டையாக இந்த 12ம் பாவகம் அமைகிறது.

எதிர் வரும் சுக்கிரன் அந்தரத்தில் தங்களுக்கு வெளிநாடு செல்ல 50% வாய்ப்பு இருக்கிறது, இதை தவிர்த்தல் தங்களுக்கு சனி புத்தி முடியும் வரை வெளிநாடு செல்லும் வாய்ப்பு இல்லை, சனி புத்திக்கு பிறகு வரும் புதன் புத்தியிலும் வாய்ப்பு இல்லை என்பதை மிக தெளிவாக சொல்ல முடியும்.

தங்களது சுய ஜாதகத்தில் 12ம் பாவக வழியில் இருந்து வரும் தீய பலன்களுக்கு முறையான நிவர்த்தி செய்வதும், ஜாதகத்தில் கடுமையாக பாதிக்க பட்ட 2,4,6,8,12ம் பாவகங்களுக்கு முறையான ஜோதிட ஆலோசனை பெற்று பரிகாரம் தேடிகொள்வதும் தங்களின் வெளிநாடு யோக வாழ்க்கையை தங்கு தடையின்றி வாரி வழங்கும், பொருளாதார ரீதியான வெற்றிகளை குவிக்கும், தம்பி உனது ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்க பட்டுள்ளது, வரும் வருமானம் அனைத்தையும் வீண் செலவு செய்யும் சூழ்நிலையை தருகிறதே, இதற்க்கு சரியான தீர்வை நாடு, இல்லை எனில் உனது உழைப்பு யாவும் வீணாக போகும் வாய்ப்பு உண்டு.

மேலும் உனது சுய ஜாதக ரீதியான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், உனது சுய ஜாதக ரீதியாக முறையான தீர்வுகளை பெறவும், நேரில் வந்து முறைப்படி ஆலோசனை பெற்றுகொள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696                                                                                                           


சனி, 25 அக்டோபர், 2014

சுய ஜாதக ரீதியாக ஒருவர் செய்யும் பரிகாரம் பலன் தருமா ? பரிகாரம் செய்வதால் ஒருவர் யோக பலன்களை அனுபவிக்க முடியுமா ?

  


பரிகாரம் தேடுதல் என்பது, ஒருவரின் சுய ஜாதக அமைப்பை வைத்தும் கிரகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையை வைத்தும் ஜோதிடர்களால் பரிந்துரை செய்வதை ஜாதகர் முறையாக செய்து அதன்வழியில் இருந்து நன்மை பெறட்டும் என்பதாகவே இருக்கிறது, இதில் பலதரப்பட்ட வித்தியாசங்களும், முரண்பட்ட கருத்துகளும் வருவது உண்டு, இந்த கருத்து வேறுபாடுகள் ஏன் வருகிறது, உண்மையில் ஜாதகர் தேடும் பரிகாரங்கள் ஜாதகருக்கு பலன் தருகின்றதா? கேவில் வழிபாடுகள் மூலம் ஜாதகர் மேற்கொள்ளும் வழிபாடுகள் பலன் தருகின்றதா? பரிகாரம் ஒருவரின் வாழ்க்கையில் தரும் மாற்றங்கள் என்ன? என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !

சுய ஜாதக பாதிப்பு நிலை :

 ஒருவரின் சுய ஜாதகம் என்பது அந்த ஜாதகர் செய்த வினை பதிவிற்கு ஏற்ப இறை அருளால் நிர்ணயம் செய்யபடுகிறது, உதாரணமாக ஒருவரின் சுய ஜாதக வலிமை நிர்ணயம் செய்வது 12 பாவகங்களே என்றால் அது மிகையாகாது அன்பர்களே ! குறிப்பாக ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை அற்று காணப்படுகிறது என்று வைத்துகொள்ளுங்கள், அந்த ஜாதகர் எந்த வகையில் இருந்து பரிகாரங்கள் தேடுவது ? அல்லது 12 பாவகங்களில் ஏதாவது ஒரு பாவகமோ அல்லது சில பாவகங்களோ பாதிக்க படும் பொழுது, ஜாதகர் எவ்வித பரிகாரங்களை செய்து நலம் பெறுவது என்பதை ஜோதிடர்களே நிர்ணயம் செய்கின்றனர், ஒரு தலை சிறந்த மருத்துவர் ஒருவரின் உடல் நிலை பாதிப்பை பார்த்த கணத்திலேயே முடிவு செய்ய இயலும், மேலும் பரிசோதனைகள் மூலம் சம்பந்தபட்டவருக்கு வந்திருக்கும் உடல் நல குறைபாட்டினை உறுதி படுத்தி அதற்க்கு தகுந்த சிகிச்சையை பரிந்துரைக்க முடியும், சம்பந்த பட்ட நபரை உடல் நல பாதிப்பில் இருந்து மீட்டு எடுக்க முடியும்.

இதை போன்றதே ஜோதிட பரிகாரங்களும், ஒருவரின் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் எது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, அந்த பாவகத்திர்க்கு அதிபதியான கிரகங்களுக்கு முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது, ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து சுய ஜாதகத்திற்கு உற்ப்பட்டு யோக பலன்களை அனுபவிக்க இயலும், மேலும் பாதிக்க பட்ட பாவக அமைப்பு எவ்வித தத்துவ  நிலையை கொண்டு உள்ளதோ அது சார்ந்த பரிகாரங்களை மேற்கொள்வது ஜாதகருக்கு உடனடியான நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பாக பஞ்ச பூத தத்துவ அமைப்பை அடிப்படையாக கொண்டு பல திருத்தலங்கள் நமது தமிழகத்தில் இறை அருளின் கருணையினால் பல சித்தர்களாலும், ஆன்மீக பெரியோர்களாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கோவில் வழிபாட்டில் மனிதனின் செயலற்ற கருமையம் உற்பட 7 ஆதாரங்களும் செயல்நிலை தூண்டப்பட்டு இயக்க நிலையை பெறுகிறது, மேலும் கிரகங்களின் ஜீவ காந்த அலைகளை உடலும் மனமும் கிரகிக்க ஆரம்பிக்கிறது, இந்த மாற்றங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பல அபரிவிதமான முன்னேற்றத்தையும், இறை அருளுடன் ஒன்று கலக்கும் வாய்ப்பை வாரி வழங்குகிறது, மேலும் இந்த சூட்சம விஷயங்கள் யாவும் சரியான சில நொடிகளில் நடைபெறும் என்பதால் எவராலும் விளக்கம் தர முடியாது, அப்படியே தந்தாலும் அது கற்பனையாகவே இருக்கும், ஒவ்வொரு ஜீவன்களின் கிரகிக்கும் சக்தியை பொறுத்து கிரகங்களின் ஜீவ சக்தி கலப்பு என்பது நிகழும், உதாரணம் சொல்ல வேண்டும் எனில் நாம்  ஒரு இனிப்பு பதார்த்தை உண்கிறோம் என்று வைத்து கொள்ளுங்கள், இதை மற்றவருக்கு வார்த்தையால் விவரிக்க இயலாது, சம்பந்த பட்டவரே அந்த இனிப்பு பாதார்த்தை உண்டால் மட்டுமே அவருக்கு அது புரியவரும், இனிப்பின் தன்மை தெரிய வரும்.

கோவில் வழிபாட்டில் ஒரு ஜாதகர் நவகிரகங்களின் கிரக சக்தியுடன் உயிர் கலப்பு பெறுவது மேற்கண்ட அமைப்பிலேயே, சில நபர்களுக்கு பரிகாரங்கள் செய்தும் பலன் தராதது ஏன் ? என்ற கேள்வி வர வாய்ப்புள்ளது, இதை இந்த இடத்தில் ஜோதிடதீபம் விளக்க கடமை பட்டுள்ளேன், அதாவது மேற்கண்ட இனிப்பு பதார்த்தை வைத்தே தெளிவு படுத்துவோம்,  அன்பர்களே ! ஒரு நோய்வாய்பட்ட ஒரு நபருக்கு ( அளவுக்கு அதிகமான காய்ச்சல் ) நாம் இதே இனிப்பு பதார்த்தை கொடுக்கும் பொழுது அந்த நபரின் நாக்கு சுவை அறியும் தன்மையை பெற்று இருக்காது, அப்பொழுது அந்த நபருக்கு இனிப்பு பதார்த்தை கொடுப்பதால் எவ்வித பயனும் இல்லை, இதை போன்றதே சில நபர்களின் பரிகாரங்கள்  நிவர்த்தி பெறாத அமைப்பிற்கும், யோக பலன்கள் நடைமுறையில் பலன் தராத அமைப்பிற்கும் காரணமாகும்.

 உதாரணமாக ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்கள் கடுமையான பாதிப்பிற்கு ( எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெறுவது மிகுந்த பாதிப்பை தரும் ) உள்ளாகி இருக்குமெனில் ஜாதகர் தொடர்ந்து பரிகாரங்களை  சில காலம் செய்வதால் அந்த பாதிப்பின் கடுமை குறைந்து நன்மைகளை பெறலாம், சில ஜாதகர்களை கோவில் வழிபாடு செய்ய பரிந்துரை சொல்வோம் அவர்கள், அந்த வழிபாட்டை ஒருமுறை செய்த உடனேயே யோக பலன்கள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமாக படவில்லை, தொடர்ந்த இறை வழிபாட்டில் ஈடுபடும் பொழுது ஜாதகர் பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து விரைவில் மீண்டு அதே பாவக வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிக்க ஆரம்பிப்பார், இதுவே பரிகாரத்தின் உண்மை நிலை, பொதுவாக பரிகாரம் என்பது சம்பந்தபட்ட ஜாதகர் யாரோ அவரே ஜோதிடர்களின் வழிகாட்டுதலின் படி தேடிகொள்வது நல்லது இதை தவிர்த்து ஜோதிடர் பரிகாரம் செய்கிறார் என்பது ஏற்புடையாதாக இல்லை.

ஒருவர் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து பரிகாரம் தேடிக்கொண்டு நன்மை பெற வேண்டும் என்றாலும் கூட, அவரது ஜாதகத்தில் அந்த விதி இருக்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே அந்த ஜாதகருக்கு சரியான ஜோதிடரை நாடி சரியான பரிகாரங்களை தேடிக்கொள்ள முடியும், ஆக ஒருவரின் சுய ஜாதகத்தில் பரிகார வழியில் ஜாதகர் யோக வாழ்க்கையை பெற வேண்டும் என்றாலும் கூட  அவரது சுய ஜாதகத்தில்,  பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமும், பாக்கியம் எனும் ஒன்பதாம் பாவகமும் சிறிதாவது நல்ல நிலையில் இருப்பது அவசியம். ஒருவர் தான் செய்யும் பரிகாரத்தில் கோவில் வழிபாடுகளுக்கு இணையான நன்மைகளையும் யோகங்களையும் பெற மாற்று வழிகளும் உண்டு, உதாரணமாக ஒருவருக்கு நான்காம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கிறது என்று வைத்துகொள்ளுங்கள், அந்த ஜாதகருக்கு நல்ல வீடு அமையாது, சிறப்பான வாகனம் அமையாது சொத்து சுகங்கள் கிடைக்காது, நல்ல குணநலன்களுடன் ஜாதகர் இருக்க மாட்டார், முரண்பட்ட பழக்க வழக்கங்களையும், குணநலன்களையும் பெற்று இருப்பார், ஜாதகரின் பெயரில் இருக்கும் சொத்து சுகங்கள் யாவும் விரையம் அடையும்.

இந்த நிலையில் ஜாதகர் கோவில் வழிபாடுகளுக்கு நிகரான பரிகார நிவர்த்தியும், நன்மை மிகுந்த யோக பலன்களையும் பெறுவது எப்படி? ஆண்கள் ஜாதகத்தில் நான்காம் பாவகம் அன்னையை குறிக்கும் ( பெண்கள் ஜாதகத்தில் நான்காம் பாவகம் தகப்பனாரை குறிக்கும் ) ஜாதகர் தனது அன்னைக்கு தேவையான பணிவிடைகளை தவறாது செய்வதும், அவரின் பேச்சை கேட்டு தட்டாமல் நடந்து கொள்வதும் ஜாதகருக்கு நான்காம் பாவக வழியில் இருந்து வரும் அவயோக பலன்களை தடுத்து நிறுத்தி, யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகர் தனது அன்னையின் உடல் நலத்தில் அக்கறை கொள்வதும், அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதும், அவரின் மனம் நோகாவண்ணம் நடந்து கொள்வதும் ஜாதகரின் வாழ்க்கையில், நல்ல வீடு, வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கி விடும், நான்காம் பாவகம் பதிக்க பட்டு இருக்கும் ஜாதகர் அனைவருக்கும் தனது தாயின் அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை தரும், இருப்பினும் ஜாதகர் அப்படி வரும் இன்னல்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, தனது அன்னைக்கு நன்மையை செய்யும் பொழுது சில காலம் சிரமபட்ட போதும், அதன் பிறகு வரும் காலங்கள் ஜாதகருக்கு நான்காம் பாவக வழியில் இருந்து யோகங்களை 100 சதவிகிதம் வாரி வழங்கும்.

எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகம் எதுவோ அந்த பாவக வழியில் உள்ள உறவுகளிடம், நாம் நமது பாவக வலிமையை வலுபடுத்திகொள்ள இயலும், 3ம் பாதிக்க படும் பொழுது சகோதர வழியில் இருந்தும், 5ம் பாவகம் பாதிக்க படும் பொழுது தனது குழந்தைகள் வழியில் இருந்தும், 7ம் பாவகம் பாதிக்க படும் பொழுது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், 9ம் பாவகம் பாதிக்க படும் பொழுது தனது பித்ருக்கள் வழியில் இருந்தும், 10ம்  பாவகம் பாதிக்க படும் பொழுது தனது தந்தை வழியில் இருந்தும் வரும் இன்னல்களை ஏற்றுகொள்ளும் தன்மையை ஜாதகர் பெரும் பொழுது மேற்கண்ட பாவக வழியில் இருந்து நன்மைகளை 100 சதவிகிதம் பெறலாம், இது தான் செய்த கர்ம வினை பதிவை கழித்து கொண்டு, அதன் வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் சரியான மாற்று வழி எனலாம்.

முதலில் சுய ஜாதக ரீதியாக பாதிக்க பட்ட பாவகம் எதுவென்று தெளிவாக தெரிந்து கொள்வதும், அந்த பாவகத்திர்க்கு அதிபதியான கிரகம் எதுவென்று உணர்வதும் சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகரை மீட்டு எடுக்க சரியான வழியை கடைபிடிக்க உதவும்.




 உதாரணமாக மேற்கண்ட ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் 6,9,12 இந்த பாவகங்களுக்கு அதிபதியாக முறையே 6க்கு செவ்வாயும், 9க்கு புதனும், 12க்கு சந்திரனும் வருகின்றனர், எனவே ஜாதகர் 6ம் பாவகம் சர ராசியாக இருப்பதால் 6ம் பாவக வழியில் இருந்து 100% இன்னல்களும், 12ம் பாவகம் சர ராசியாக இருப்பதால் 12ம் பாவக வழியில் இருந்து 100% இன்னல்களும், 9ம் பாவகம் பாதக ஸ்தானமாக வருவதால் 9ம் பாவக வழியில் இருந்து 200% இன்னல்களும் அனுபவிக்கும் தன்மையை தரும் எனவே மேற்கண்ட பாவகங்கள் என்ன தத்துவ அமைப்பை பெறுகிறது, இதற்க்கு உண்டான பரிகாரம் என்ன ? என்பதை முறையாக சிறந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்த்து, அதன் வழியில் இருந்து வரும் யோகங்களை அனுபவிக்க இயலும் அன்பர்களே! எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் பாதிக்கபட்ட பாவகம் எது? அதன் அதிபதி யார்? பாதிக்க பட்ட பாவகத்தின் தத்துவம் என்ன ? என்ற விஷயங்கள் தெளிவாக தெரிந்தால் மட்டுமே ஜாதகர் மேற்கண்ட இன்னல்களில் இருந்து விடுபட்டு, யோக பலன்களை அனுபவிக்க முடியும், இல்லை எனில் ஒருவருக்கு பிரச்சனை ஒன்று, அவர் செய்த பரிகாரம் வேறொன்று என்ற நிலையை தந்துவிடும், பரிகாரம் பலன் தராமல் போகக்கூடிய வாய்ப்பு அதிகம் உண்டு.

இதையே திருவள்ளுவர் :

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

குறள் விளக்கம் :

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

எனும் குறள் வடிவில் தெளிவாக தந்திருக்கிறார்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

திங்கள், 1 அக்டோபர், 2012

எல்லாம் விதிப்படிதான் நடக்குமெனில் ஜாதகம் பார்ப்பது எதற்கு ? கடவுள் வழிபாடு எதற்கு ?



அருமையான கேள்வி, நடக்கும் நன்மை தீமை பலன்களை நமது மனம் ஏற்றுகொள்ளவும் , அடுத்தகட்ட நிகழ்வுக்கு மனிதனை எடுத்து செல்லவும் நிச்சயம் நமக்கு ஜோதிட ஆலோசனையும் , கடவுள் வழிபாடும் தேவை , ஒருவருக்கு சரியான ஜோதிட ஆலோசனை கிடைக்கிறது எனில் நிச்சயம் அவர் தனது வாழ்க்கை முறையை சரியான பாதையில் அமைத்துக்கொள்ள முடியும் , தேவையில்லாத காரியங்களை செய்துவிட்டு பிறகு தவிக்க வேண்டிய சந்தர்ப்பத்தை தாமே ஏற்ப்படுத்தி கொள்ள தேவையில்லையே , உண்மையில் தனக்கு ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் இல்லை என்று ஒருவருக்கு தெரியும் பொழுது தனது பெயரில் ஒருவர் தொழில் துவங்காமல் ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பவரின் பெயரில் ஆரம்பித்து நிச்சயம் வெற்றி காணலாமே? இதற்க்கு நிச்சயம் உறுதுணை புரியும் நமது ஜோதிட கலை 

( உண்மையில் ஒருவருடைய ஜீவன ஸ்தானம் எப்படி இருக்கின்றது என்று இன்னும் பல ஜோதிடர்களுக்கு தெரியவில்லை என்பது வேறு விஷயம் )


அடுத்து ஒருவருடைய வினைபதிவினாலேயே நன்மை தீமை பலன்கள் நடை முறைக்கு வருகிறது எனும் பொழுது , ஒரு தம்பதியரின் வாழ்க்கையில் நடக்கும் சண்டை சச்சரவுகள் , மன நிம்மதி இழப்பு , மேலும் பல இன்னல்கள் ஏற்ப்படும் பொழுது இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று உணராமல் தனது மனம் போல் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் ( அதாவது பிரிவு , விவாகரத்து ) அமைப்பில் இருந்து ஜாதகரை காப்பாற்றலாம் , எப்படி எனில் அய்யா தங்களின் வாழ்க்கையில் நடக்கும் தீமையான அமைப்பிற்கு காரணம் தங்களின் வினை பதிவே எனவே தங்களது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து வரும் இன்னல்களை மனம் உவந்து ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மையை மட்டும் செய்யுங்கள் நிச்சயம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்களின் கர்ம வினை பதிவு அகன்று சம்பந்த பட்ட அமைப்பில் இருந்து ( குடும்பம் , களத்திரம் ) நன்மையான பலனை அனுபவிக்க முடியும் என்ற உண்மையான ஜோதிட பலனை சொல்லி ஜாதகரை நெறி முறையான வாழ்க்கைக்கு வழிகாட்டலாம் , ஒருவேளை ஜாதகர் ஜோதிட ஆலோசனை பெறவில்லை எனில் தனது விதிப்படி மேலும் மேலும் கர்ம வினைபதிவை அதிகமாக செய்துகொண்டே இருப்பார் அதனால் சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து மேலும் மேலும் தீமையான பலன்களே நடை பெற்று கொண்டு இருக்கும் என்பதே உண்மை .


தனது ஜாதக அமைப்பின் படி என்ன இருக்கிறது என்று தெரியாமல் வாழ்க்கையில் போராடி கொண்டு இருப்பதை காட்டிலும் , சரியான வாழ்க்கையை வாழ்வதற்கு நமது ஜோதிட கலை பயன்படுகிறது எனும் பொழுது , ஜோதிடத்தை பயன் படுத்தி கொள்வதில் என்ன தவறு இருக்க போகிறது , உண்மையில் நாங்கள் சொல்லும் கோவில் வழிபாட்டிற்கு பின்னால் ஒரு சூட்ட்சமம் இருக்கிறது என்பதை எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை , மேலும் அதை பற்றி அவர் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை , உதரணமாக எந்த கடைக்கு சென்றால் காய்கறி வாங்கலாம் என்று ஒருவருக்கு தெரிந்தால் போதும். அது எங்கு விளைகிறது , விளைவிப்பவர் யார் , என்ன உரம் இடுகிறார் , எவ்வளவு நாட்களில் விளைச்சலுக்கு வருகிறது என்பது பற்றி விபரங்கள் எல்லாம் வாங்குபவர்க்கு தேவையில்லை , எந்த கடையில் காய்கறி கிடைகிறது ,என்று தெரிந்தால் மட்டுமே போதும் அங்கு சென்று வாங்கி வந்து குழம்பு வைத்து சாப்பிடலாம் அதனால் கிடைக்கும் சக்தியை உடலுக்கு பெற்று கொள்ளலாம் .


எனவே கோவில் வழிபாடுகளிலும் இதையே தான் நாம் பெற்று கொள்கிறோம் , ஒருவர் கோவில் வழிபாடு செய்வதும் , கடவுள் வழிபாடு செய்வதும் கூட சுய ஜாதகத்திற்கு உட்பட்டும் , வினை பதிவிற்கு உட்பட்டும் நடை பெறுகிறது என்பது எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை , அதாவது " நீ விதியை மதியால் வெல்வாய் எனில் " உனது ஜாதகத்தில் அப்படி பட்ட விதி இருக்கும் என்பதே உண்மை . ஒருவருக்கு பூர்வ புண்ணியம் , பாக்கியம் பாதிக்க பட்டு இருக்கிறது என்று வைத்து கொள்வோம் , அவருக்கு கோவில் வழிபாடும் , கடவுள் வழிபாடும் செய்ய நிச்சயம் யோகம் இல்லை , ஒருவேளை ஜாதகர் கோவில் வழிபாடு செய்ய முயற்ச்சித்தால் பல தடைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதே உண்மை , சம்பந்த பட்டவரின் நண்பரின் ஜாதகத்தில் மேற்கண்ட வீடுகள் வலிமை பெற்றிருந்து அவருடன் கோவில் வழிபாடு செய்யவும் , கடவுள் வழிபாடு செய்யவும் ஜாதகர் சேர்ந்து சென்றால் மட்டுமே ஜாதகருக்கு கடவுள் அனுகிரகம் கிடைக்க வாய்ப்பு உண்டு , இதற்க்கு அவரது நண்பரின் புண்ணிய பதிவே காரணம் .


நடக்கும் நன்மை தீமை , அனைத்திற்கும் நமது முன்வினை பதிவும் , கர்ம வினை பதிவுமே காரணம் , இதற்க்கு உட்ப்பட்டே பிறப்பில் நமது ஜாதகம் அமைகிறது , தமது சுய ஜாதக அமைப்பின் படி எந்த பாவகங்கள் நல்ல நிலையில் இருக்கிறது , எவையெல்லாம் பாதிக்க பட்டு இருக்கிறது என்று சிறந்த ஜோதிடரின் மூலம் தெளிவாக தெரிந்து கொண்டு , சம்பந்த பட்ட பாவகங்களில் இருந்து வரும் நன்மை தீமை பலன்களை ஏற்றுக்கொண்டு , கர்ம வினை பதிவை கழித்து கொள்ள இறைஅருள் நமக்கு தந்த, இந்த ஒரு அறிய வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்டு இறை நிலையின் உண்மையை இறுதியில் உணர்வதே சிறப்பு .


எடுத்து காட்டாக :


ஒருவருடைய ஜாதகத்தில் சகோதர ஸ்தானம் பாதிக்க பட்டு இருக்கிறது
எனில் , தனது சகோதர அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் ஏற்றுகொள்ளும் பொழுது , சிறிது காலத்தில் சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து தீமையான பலன்கள் கழிந்து , நன்மையான பலன்கள் நடை பெற ஆரம்பிக்கும் , அதாவது ஜாதகரின் மன தைரியம் அதிகமாகும் , தன்னம்பிக்கை கூடும் , சிறு பயணங்களால் யோகம் பெறுவார் , சகோதரர்களால் நன்மை அடைவார் , எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றி பெரும் , ஒருவேளை ஜாதகர் இதை உணராமல் மீண்டும் மீண்டும் சகோதர அமைப்பிற்கு இன்னல்கள் புரிந்தால் , சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து தீமையான பலன்களே அதிகம் நடை பெறும் என்பது குறிப்பிட தக்கது .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
jothidadeepam@gmail.com




ஞாயிறு, 8 ஜூலை, 2012

திருமண பொருத்தம் ஜோதிட ஆலோசனை !




ஆண்
நட்சத்திரம்
பெண் நட்சத்திரம்
பெருத்தம்
நட்சத்திரம்
மிருகசீரிடம் 1 ம் பாதம்
பூரட்டாதி 3 ம் பாதம்

தினம்
√
√
உண்டு
கணம்
√
√
உண்டு
மாகேந்திரம்


மத்திமம்
ஸ்திரி தீர்க்கம்
√
√
உண்டு
யோனி
√
√
உண்டு
ராசி


இல்லை
ராசி அதிபதி
√
√
உண்டு
வசியம்


மத்திமம்
ரஜ்ஜு
√
√
உண்டு
நாடி
√
√
உண்டு
வேதை
√
√
உண்டு


நட்சத்திர பொருத்தம் 11 / 8 பொருத்தம் உண்டு திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் , 16 வகை செல்வ வளங்களும் தம்பதியருக்கு , நிச்சயம் வாழ்நாள் முழுவதும் நிறைந்திருக்கும் வாழ்த்துகள் .



ஜாதக அமைப்பில் சிறப்பு பாவக பொருத்த நிலை

ஆண் :
            
ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் ( 2 ம் வீடு ) ஜீவன  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாக்கு ,தனம் ,குடும்பம், செல்வாக்கு,நிரந்தர வருமானம் ,மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தும் யோகம் , நல்ல ஒழுக்கம் , பெருந்தன்மையான குணம் என ஜாதகருக்கு மிக சிறப்பான பலன்களையே , வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கும் , எனவே ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் மிகவும் சிறப்பாக காணப்படுகிறது .

         
ஜாதகருக்கு குழந்தை மற்றும் பூர்வீக அமைப்பை குறிக்கும் , ஐந்தாம் பாவகம் , பாக்கியம் எனும் ஒன்பதாம் வீட்டுடன் தொடர்பு எனவே ஜாதகருக்கு தனது குலம் செழிக்க நிச்சயம் ஆண் வாரிசு திருமணம் ஆனா சில மாதங்களிலேயே குலதெய்வ அருளால் கிடக்க பெறுவார் , ஜாதகருக்கு ஐந்தாம் பாவகமும் சிறப்பாக இருக்கிறது .

       
ஜாதகருக்கு களத்திரம் எனும் ஏழாம் பாவகம் , ஜீவனம் எனும் பத்தாம் வீட்டுடன் தொடர்பு , எனவே கணவன் மனைவி , உறவு மிகவும் சிறப்பாக அமைந்து வாழ்நாள் முழுவது மிகவும் மகிழ்ச்சியாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு , சிறப்பாக வாழ்க்கை நடத்துவார்கள் , மேலும் ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையை வாழ்நாள் முழுவதும் , கண்ணை இமை காப்பது போல் மனைவியை சிறப்பாக காப்பாற்றுவார் .

      
ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் , லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு , எனவே ஜாதகரின் வாழ்க்கையில் , திருமணத்திற்கு பிறகு சிறப்பான தொழில் முன்னேற்றங்களையும், அதிர்ஷ்ட வாழ்வினையும் நிச்சயம் பெறுவார் , எனவே இந்த ஜாதகம் மிகவும் யோக ஜாதகமே !

பெண் :

        
ஜாதகியின் லக்கினம் , லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் எனவே இயற்கையாக ஜாதகி அதிர்ஷ்ட தேவதையின் அருள் நிறைந்தவர் , இறைநிலையும் ஜாதகிக்கு மிகசிறந்த செல்வ வளங்களை இறுதி வரை அள்ளி தரும் .

       
ஜாதகியின் குடும்ப ஸ்தானம் ஜீவன  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவத, ஜாதகிக்கு  வாக்கு ,தனம் ,குடும்பம், செல்வாக்கு,நிரந்தர வருமானம் ,சந்தோஷமாக குடும்பம் நடத்தும் யோகம் , நல்ல ஒழுக்கம் , பெருந்தன்மையான குணம், கணவனுக்கு யோகம் தரும் அமைப்பு , பெரிய மனிதர்களை அனுசரித்து செல்லும் பக்குவம் , அன்பு , பாசம் , பண்பு போன்ற உயரிய குணங்கள் ஜாதகிக்கு இயற்கையாக அமைந்திருக்கும் , குடும்ப ஸ்தானம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது .

       
ஜாதகிக்கு குழந்தை மற்றும் பூர்வீக அமைப்பை குறிக்கும் , ஐந்தாம் பாவகம் , லாப ஸ்தானத்துடன் தொடர்பு எனவே ஜாதகிக்கு , நிச்சயம் குழந்தை பாக்கியம் ,குல தெய்வ அருளால் 100 சதவிகிதம் உண்டு , தனது நற்குணத்தால் குடும்ப வாழ்க்கை ஜாதகிக்கு மிக சிறப்பாக அமையும் .

       
ஜாதகிக்கு களத்திர பாவகம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் காரணத்தால் , கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்க்கை நடத்தும் குணம்  கொண்ட சிறப்பான ஜாதக அமைப்பாகும் , மேலும் திருமண வாழ்க்கை இறுதிவரை மிகவும் நன்றாக இருக்கும் , இல்லறம் மகிழ்ச்சி கரமானதாக அமையும் .ஜாதகிக்கு களத்திர பாவகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் உள்ளது .

       
ஜாதகிக்கு லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் வீடு மிகவும் சிறப்பாக உள்ள காரணத்தினால் , வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல முன்னேற்றமான வாழ்க்கை நிச்சயம் இறை அருளின் கருணையினால் அமையும் .



குறிப்பு : 

இருவருடைய ஜாதக அமைப்பில் பாவகங்கள் மிகவும் சிறப்பாக உள்ள காரணத்தினால் இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் , ஜாதக பொருத்தம் 100 / 98 சதவிகிதம் நன்றாக உள்ளது . இருவருடை லக்கினமும் சிம்மமாக அமைவது அதிசயமான ஒன்று இந்த நிலை ஜாதக பொருத்தம் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே அமையும் , இருவருடைய ஜாதக அமைப்பிலும் , சிறப்பான  யோகங்கள் பல உள்ளன , இது கவனிக்க பட வேண்டிய சிறப்பான விஷயம் .

செவ்வாய் தோஷ நிர்ணயம் :

லக்கினம் சிம்மம் என்பதால் , லக்கினத்திற்கு யோக அதிபத்யம் பெறுபவர் செவ்வாய் பகவான் , இவர் லக்கினத்திற்கு எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் தவறாமல் நன்மையை மட்டுமே செய்வார் , எனவே இந்த ஜாதக அமைப்பில் இருவருக்கும் செவ்வாய் தோஷம் என்பதே இல்லை , மேலும் பெண் மற்றும் ஆண் இருவரது ஜாதக அமைப்பிலும் , குரு பகவானின் இல்லத்தில்  செவ்வாய் அமர்வது மிகசிறந்த யோக பலனையே தருகிறது எனவே தான் ஜாதகர் இருவரும் , உயர்வாக கருதப்படும் மருத்துவ துறையில் சேவை செய்யும் யோகம் பெற்றுள்ளனர் இதற்க்கு காரணம் இவர்களது ஜாதகத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் என்பதில் சந்தேகம் இல்லை .

இவர்கள் இருவருக்கும்  திருமணம் நடந்தால் திருமண வாழ்க்கை 100 சதவிகிதம் வெற்றிகரமாக அமையும் வாழ்த்துகள் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696