numerology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
numerology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 நவம்பர், 2014

எண்கணிதம் ஒருவரின் வாழ்க்கையில் நடத்தும் மாயாஜாலங்கள் !



அன்பர்களே !

இந்த பதிவில் எண்கணிதம் பற்றியும், எண்களின் வலிமையை பற்றியும் சற்றே சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், ஒருவரின் வாழ்க்கையில் நன்மை தீமையை வாரி வழங்கும் தன்மை 0-9 வரை உள்ள எண்களுக்கு நிச்சயம் உண்டு, இதில் சுய ஜாதகத்தில் ராசி மற்றும் லக்கினத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை, சுய ஜாதகத்தில் உள்ள நவகிரகங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை ஜோதிடதீபம் அடிப்படையிலேயே தெளிவுபட தெரிவிக்கிறது, ஒருவரின் பிறந்த தேதியை மட்டும் அடிப்படையாக வைத்து எண்கணிதம் என்பதை சிந்தனைக்கு எடுத்துகொள்ளுங்கள், எண்கணிதம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் கூட்டு எண் ஆகிய எண்களின் அடிப்படையிலேயே இங்கே விவாதிக்க படுகிறது, ஜாதகத்திற்கும் எண் கணிதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை முதலிலேயே ஜோதிடதீபம் தங்களுக்கு அறிவுறுத்துகிறது, இனி வரும் விஷயங்கள் யாவும் ( 0 முதல் 9 வரையிலான ) எண்களின் அடிப்படையிலேயே இருக்கும் அன்பர்களே ! 

அடிப்படையில் ஒருவரின் பிறந்த தேதியில் 2,7,8 ம் எண்கள் இருப்பின் குறிப்பிட்ட நபர் மேற்கண்ட எண்களின் ஆதிக்கத்தின் கிழ் பயணிக்கும் குறிப்பிட்ட காலம் வரை மிகுந்த இன்னல்களுக்கும் தொந்தரவுகளுக்கும் ஆட்படும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட எண்களுக்கு அருகில் இருக்கும் எண்கள் இந்த எண்களுக்கு நட்பு நிலையில் இருப்பின், இந்த எண்களின் பாதிப்பு குறையும், ஒரு வேலை இந்த எங்களுக்கு பகை நிலையில் இருப்பின் பாதிப்பின் தன்மை மிக அதிகமாக இருக்கும். எனவே ஒருவரின் பிறந்த தேதியில் ( தேதி,மாதம்,வருடம் மற்றும் இவற்றின் கூட்டு எண் ) ஆகியவற்றில் மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருப்பின் சம்பந்தபட்டவர் வாழ்க்கையில் பெரிய அளவில் சிரமங்களை எதிர்கொள்ளாமல் சிறப்பான முன்னேற்றங்களை தனது வாழ்க்கையில் பெறுவார் என்பதுமட்டும் நிதர்சனமான உண்மை அன்பர்களே !

இனி உதாரண பிறந்த தேதியை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே :

தமிழகத்தை முதல்வரகளாக ஆட்சி செய்த மூன்று தலைவர்களின் பிறந்த தேதியை எடுத்து கொள்வோம் 

1) கலைஞர் கருணாநிதி 
2) புரட்சி தலைவர் எம்ஜிஆர் 
3) புரட்சி தலைவி ஜெயலலிதா 

கலைஞர் கருணாநிதி பிறந்த தேதி ( 03/06/1924 ) 
நமது எண்கணித முறைப்படி    3-6-7-7

புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த தேதி ( 17/01/1917 )
நமது எண்கணித முறைப்படி    8-1-9-9

புரட்சி தலைவி ஜெயலலிதா பிறந்த தேதி ( 24/02/1948 )
நமது எண்கணித முறைப்படி   6-2-4-3


கலைஞர் கருணாநிதி பிறந்த தேதி ( 03/09/1924 ) 
நமது எண்கணித முறைப்படி    3-6-7-7



பிறந்த தேதியில் 3ம் எண் வந்தது அதிபுத்திசாலிதனமான செய்கையினால் வெற்றிவாய்ப்புகளை  பெரும் யோகத்தை தந்தது, பிடிவாத குணத்தால் சில விஷயங்களை  சாதிக்கும் வல்லமையை தந்து, தனது பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் மக்களிடம் பிரபலம் ஆகும் வாய்ப்பை 3ம் எண்ணே வாரி வழங்கியது , இவர் சொல்லும் வார்த்தைக்கும், எழுத்து நடைக்கும் தனி ரசிகர் பட்டாளமே  இருந்தது, மொழி புலமையும் வாக்கு வன்மையும் எழுத்து நடையும் தனிப்பட்ட அடையாளத்தை தமிழகத்தில் பெற்று தந்து, 3ம் எண் இவரின் பிறப்பில் இருந்து முதல் 15 வருடங்களை தனது ஆளுமைக்கு கொண்டு வந்து அடித்தளத்தை அமைத்து தந்து .

பிறந்த தேதியில் மாதத்தில் 6ம் எண் வந்தது சில எதிர்பாராத வெற்றிவாய்ப்புகளை வாரி  வழங்கியது, பெரிய மனிதர்களின் ஆதரவும் ஆசிகளும் சிறப்பாக அமைந்து வெளி உலகத்திற்கு இவரின் செயல்கள் மற்றும் சேவைகள்  தெரிய ஆரம்பித்தது, இந்த நேரத்தில் தான் ஏற்றுகொண்ட துறையில்  பிரகாசிக்கும் வெற்றி வாய்ப்பை வாரி வழங்கியது, கற்பனை  வளமும் எழுத்தின் வல்லமையும் தமிழக மக்களுக்கு இடையே நல்ல வரவேற்ப்பை  பெற்று தந்தது, வெற்றிகரமான முன்னேற்ற வாழ்க்கையை இவரின் 15 வது வயது முதல் 30 வது வயது வரை 9ம் எண் ஸ்திரமாக நிர்ணயம் செய்து  வெற்றிகளை வாரி குவித்தது சிறந்த அறிமுகம் கிடைத்தது.

பிறந்த தேதியில் வருடத்தில் 7ம் எண் வந்தது பொதுமக்களிடம் பிரபலமாக்கியது ,  பொதுமக்களின் நன்மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நபராக வலம் வர செய்தது, இந்த காலகட்டத்தில் அரசியல் ரீதியான செல்வாக்கும் அரசியல் ஆதாயமும் எதிர்பாராத வகையில் அமைந்த போதிலும், சுய வாழ்க்கையில் பல முரண்பட்ட விஷயங்களில் ஈடுபட வைத்தது இவரின் எதிர்மறையான செய்கைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது, பொது வாழ்க்கையில் பிரகாசித்த அளவிற்கு தனிப்பட்ட வாழ்க்கை  சிறப்பாக அமையவில்லை, எதிர்மறையான கருத்துக்களும் இவருக்கு பிரபலமான அரசியல் வாழ்க்கையை தந்தது, இவரின் 30 வது வயது முதல் 45 வது வயது வரை 7ம் எண் பிரபலமான மனிதர் என்ற பெயரையும், பொருளாதார ரீதியான அபரிவிதமான் வளர்ச்சியின் ஆரம்பத்தையும் தந்து.

பிறந்த தேதியில் வரும் கூட்டு எண் 7ம் எண்  வந்தது நீண்ட ஆயுளை வாரி வழங்கியது, முதுமை வயதிலும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மிக சிறப்பாக அமைந்தது, தமிழகத்தில் மட்டும் பிரபலமாக இருந்த இவருக்கு இந்தியா முழுவதும் செல்வாக்கு கிடைத்த காலம் இதுவே எனலாம், 8ம் எண்ணுடன் மோதி தனது வலிமையை இழந்த காலம் இதுவே என்றால் அது  மிகையில்லை, இவரது பிறந்த தேதியில் உள்ள 3ம் எண்  இவரது கட்சியில் இருந்த 8ம் எண் கொண்ட அன்பருடன் மோதல் போக்கை கடைபிடிதததால், அவர்  வழியில் இருந்து மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, இருப்பினும் தொடர்ந்து வல்லமையுடன் போராடும் குணத்தை தந்தது, இந்த போராட்ட குணம் பின்னாளில் நல்ல பலனை தந்தது எனலாம், இவரின் 45 வது வயது முதல் தற்பொழுது உள்ள காலம் வரை 7ம் எண் தனது ஆளுமைக்கு  கிழ் கொண்டு வந்து வெற்றி தோல்வி பலன்களை மாறி மாறி தந்துகொண்டே இருக்கிறது, பல சாதனைகளுக்கு சொந்தக்காராக இன்னும் மக்கள் சேவை செய்யும் யோகத்தை தந்துகொண்டு இருப்பது 7ம் எண்ணின் வலிமையே என்றால் அது மிகையில்லை .

தொடரும்........

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 2 ஜூலை, 2012

சிம்ம லக்கினத்திற்கு லக்கினாதிபதி சூரியன் அமர்ந்த இட பலன்கள் !



லக்கினாதிபதி  சூரியன் லக்கினத்தில் அமர்ந்தால் :

ஜாதகர் பாடு படு திண்டாட்டமாக அமைந்து விடும் , ஜாதகரே தனது வாழ்க்கையை கெடுத்து கொள்வார் இங்கு சூரியன் ஆட்சி பெற்று அமர்ந்தாலும் , ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் தர மாட்டார் , மேலும் ஜாதகர் தனது பூர்விகத்தில் வாழ முடியாத நிலை ஏற்ப்படும் , உதவி செய்ய யாரும் வர மாட்டார்கள் , மக்கள் ஆதரவும் கிடைக்காது , அவர்கள் வழயில் இருந்து ஜாதகர் 100 சதவிகிதம் தீமையான பலன்களையே அனுபவிக்க வேண்டி வரும் , ஜாதகர் சிந்தனை செய்யாமல் செய்யும் காரிங்கள் அனைத்தாலும் மனநிம்மதி இழக்க வேண்டி வரும் , தன்னம்பிக்கை குறையும் , முயற்ச்சி இன்மை , சோம்பல் ஜாதகரை முடக்கி விடும் , ஜாதகர் எந்த விதத்திலும் செயல் பட்டாலும் அதற்க்கு பல தடைகளும் , தொந்தரவுகளும் வரும் , சிறு வயது முதற்கொண்டே பாசத்திற்காக எங்கும் சூழ்நிலையும் , நல்ல இடத்தில் வளரும் சூழ்நிலையும் ஏற்ப்படாது , பல போராட்டங்களை வாழ்க்கையில் சந்திக்க வேண்டி வரும் , ஆக இந்த அமைப்பு ஜாதகருக்கு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் இரண்டாம் பாவகம் கன்னி ராசியில் அமர்ந்தால் :

ஜாதகரின் வாக்கில் இருந்து வரும் வார்த்தைகள் மற்றவரை அதிகம் மனம் நோக செய்யும் , போகும் இடங்களில் எல்லாம் வம்பு தும்புக்கு செல்ல நேரும் அதனால் தேவையில்லாத தொந்தரவுகளை ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும் மேலும் மன நிம்மதி என்பதை தனது வாக்கால் தொலைக்க வேண்டி வரும் , ஜாதகர் ஈட்டும் வருமானம் அனைத்தையும் மனம் போன  போக்கில் செலவு செய்ய நேரும் , இதனால் குடும்பத்தில் எப்பொழுது சண்டை சச்சரவுகளை தவிர்க்க இயலாது , உறவினர்களிடமும் நல்ல பெயர் கிடைக்காது , பல இடங்களில் இருந்து துன்பங்களை அனுபவிக்க நேரும் , ஜாதகரின் தனம் குடும்பம்  வாக்கு என்ற நிலையில் இருந்து லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் மூன்றாம் பாவகம் துலாம்  ராசியில் அமர்ந்தால் :

ஜாதகரின் வாழ்க்கையில் செய்யும் முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றி பெரும் , அதன்மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவார் சூரியன் இங்கு நீச நிலையில் அமர்ந்தாலும் லக்கினத்திற்கு மிகசிறந்த நன்மைகளையே வாரி வழங்குவார் , துலாம் சர காற்று தத்துவம் என்பதால் ஜாதகர் ஒவ்வொரு விசயத்தையும் அறிவுபூர்வமாக அணுகும் தன்மை கொண்டவராக  இருப்பார் , இதனால் அனைவரும் நன்மையடைவார்கள் . ஜாதகருக்கு வரும் துன்பங்கள் யாவையும் அறிவின் வழியில் தீர்வு கண்டு நன்மை பெறுவார் , ஜாதகருக்கு மக்கள் செல்வாக்கும், ஜன ரஞ்சக எழுத்தாற்றலும், மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை , பத்திரிகை உலகில் ஜாதகருக்கு நிச்சயம் மிகசிறந்த எதிர்காலம் அமையும் , அரசு துறையில் பணியாற்றும் யோகமும் கிடைக்கும் இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான  பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் நான்காம்  பாவகம் விருச்சக ராசியில் அமர்ந்தால் :

மிக சிறந்த யோகம் லக்கினத்திற்கு ஏற்ப்படும். திடீர் அதிர்ஷ்டம் , புதையல் கிடைத்தல் , மண்ணில் கிடைக்கும் அறிய வகை பொருட்களால் நிறைய லாபம் , வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வ வளம் , புதிய கண்டுபிடிப்புகளால் ஜாதகர் திடீர் என வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் வாய்ப்பு , அறிய வகை பொருட்களை வாங்கி விற்பதால் வரும் லாபம் , உயர்கல்வியால் அமையும் தொழில் வாய்ப்புகள் அதன் வழி முன்னேற்றம் , மக்கள் தொடர்பில் ஜாதகருக்கு வரும் யோகம் , வெளிநாடுகளில் அதிர்ஷ்ட வாழ்க்கை , வெளிநாடுகளில் தொழில் முதலீடு செய்யும் யோகம் , பழைய வண்டி வாகனங்களை வாங்கி விற்பதால் வரும் அதிக லாபம் , செய்யும் தொழில் விரைவான முன்னேற்றம் , சிறப்பான குணம் மற்றவரை மதிக்கும் பெருந்தன்மை எந்த சூழ்நிலையிலும் நேர்மை மாறாத குணம் என  இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான  பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் ஐந்தாம் பாவகம் தனுசு  ராசியில் அமர்ந்தால் :

ஜாதகரை தனது பூர்வீகத்தை விட்டே ஒட்டி விடும் , உதவி செய்ய யாரும் இல்லாத சூழ்நிலைக்கு தள்ள படுவார் , குலதெய்வமும் ஜாதகருக்கு நன்மை செய்யாது , வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் , பூர்வீகத்தில் இருக்கும் வரை ஜாதகருக்கு சிறிதும் நன்மையில்லை , தனது பூர்வீக சொத்துகளை திடீர் என இழக்க வேண்டி வரும் , மன உறுதி ஜாதகருக்கு இருக்காது , மற்றவரை நம்பி நடு ஆற்றில் இறங்கியது போல தவிக்க வேண்டி வரும் , குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்ப்படும் , விருப்ப மனம் செய்தால் ஜாதகருக்கு பிரிவு நிச்சயம், இருதார யோகம் ஏற்ப்படும் , இல்லை எனில் மற்ற பெண்களுடன் சகவாசம் ஏற்ப்படும் அதனால் ஜாதகர் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை ஏற்ப்படும் , அவசரபட்டு எடுக்கும் முடிவுகள் அனைத்து ஜாதகருக்கு எந்த விதத்திலும் நன்மை செய்யாது ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் ஆறாம் பாவகம் மகர ராசியில் அமர்ந்தால் :

ஜாதகர் மற்றவர்களிடம் சூழ்நிலை கைதியாக படாத பாடு பட வேண்டி வரும் , மனதளவில் மிகுந்த தைரியசாலியாக இருந்தாலும் ஜாதகருக்கு நடக்கும் பலன்கள் யாவும் மன உறுதியை தவிடு பொடியாக்கி விடும் ,கூண்டில் அடைக்க பெற்ற  அடிபட்ட சிங்கத்தின் நிலை ஜாதகருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் , வாழ்க்கையில் சில நேரங்களில் திடீர் அதிர்ஷ்டம் வரும் ஆனால் ஜாதகர் அதை பயன்படுத்தி கொள்ள மறுப்பார் , எதிர்கள் அதிகம் இருப்பினும் அவர்களால் ஜாதகருக்கு மிக சிறந்த நன்மையே நடக்கும் , இவரை பகைத்து கொண்டவர்களின் வாழ்க்கை சர்வ நாசம் என்பதில் சந்தேகம் இல்லை , ஜாதகர் தனது எண்ண ஆற்றல்களை செழுமை படுத்தினால் நிச்சயம் இவரை போன்று யாரும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற முடியாது , அரசியலில் இந்த அமைப்பை பெற்ற ஜாதகரை ஒரு கட்சி நிற்க வைத்தால் எதிர்கட்சியை சேர்ந்தவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 50 க்கு 50 சதவிகித நன்மை தீமை பலனையே கலந்து  தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் ஏழாம் பாவகம் கும்ப  ராசியில் அமர்ந்தால் :

ஜாதகரின் வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக அமைந்து விடும் , நல்ல சிறப்பான கல்வி , மக்கள் செல்வாக்கு , பலதார யோகம் , மனைவி வழியில் இருந்து மிகசிறந்த நன்மைகளை பெரும் யோகம் , எங்கு சென்றாலும் அனைவராலும் விரும்பப்படும் நல்ல குணம் , பெருந்தன்மை கடமை கண்ணியம் கட்டுபாடு போன்ற உயர் குணங்கள் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் , அரசியலில் மிகசிறந்த பதவிகளை அலங்கரிக்கும் யோகம் , அதிரடியான வெற்றிகள் அதன் மூலம் வாழ்க்கையில் சகல யோகங்களையும் ஜாதகர் பெறுவார் , பெரிய மனிதர்களின் ஆதரவு , மக்கள் ஆதரவு ஜாதகரை மிக சிறந்த அரசியல் வாதியாக மாற்றி விடும் , தன்னம்பிக்கை எந்த சூழ்நிலையிலும் ஜாதகரை காப்பாற்றும் , ஆன்மீக வாதிகளின் ஆசிர்வாதமும் அருளாசியும் ஜாதகருக்கு என்றும் துணை நிற்கும் ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் எட்டாம் பாவகம் மீன ராசியில் அமர்ந்தால் :

ஜாதகரின் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிடும் , ஜாதகரின் மன ஆற்றல் , மன உறுதி அனைத்தும் ஒரு காலத்தில் சிதைந்து விடும் மன அழுத்த நோயினால் ஜாதகர் படாத பாடு பட வேண்டி இருக்கும் , ஜாதகரை யாரும் புரிந்துகொள்ள முன் வர மாட்டார்கள் , நாளடைவில் இதுவே ஜாதகரை அதிகம் பாதிக்கும் , இதனால் கவனக்குறைவு ஏற்ப்படும் பல விபத்துகளை சந்திக்க வேண்டி வரும் , இதனால் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும் ஜாதகருக்கு மன அழுத்தம் அதிகமாகி விட வாய்ப்பு உண்டு , தனது வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து அதிக இழப்புகளை ஜாதகர் சந்திக்க வேண்டி வரும் ,ஆனால் வாழ்க்கை துணை ஜாதகரை புரிதுகொள்ள சிறிதும் முன்வர மாட்டார் , இதனால் ஜாதகர் வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்கு உரிய நிலைக்கு தள்ளப்படுவார் , ஜாதகருக்கு நல்ல குணம் , உதவும் மனப்பான்மை இருந்தாலும் இதனால் மற்றவர்கள் மட்டுமே பயன் பெறுவார்கள் ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் இல்லை ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .


லக்கினாதிபதி சூரியன் ஒன்பதாம் பாவகம் மேஷ ராசியில் அமர்ந்தால் :

ஜாதகர் யாரிடமும் நல்ல பெயர் வாங்க முடியாது , நன்மை என்று செய்யும் காரிங்கள் அனைத்தும் ஜாதகருக்கு தீமையில் போய் முடியும் , குறிப்பாக பெண்களிடம் ஜாதகர் கவனமாக இல்லை எனில் தேவையில்லாமல் அவ பெயரை சந்திக்க வேண்டி வரும் , செய்யும் காரியங்கள் அனைத்து அவசர அவசரமாக செய்து விட்டு பின்பு புலம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும், ஜாதகருக்கு உதவிட யாரும் வர மாட்டார்கள் . இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் தன்னை விட வயதில் பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று வாழ்க்கை நடத்துவது மிகசிறந்த நன்மைகளை தரும் , அல்லது வெளியூர் , வெளிநாடு சென்று வசிப்பது நன்மையை தரும் , மேலும் ஜாதகர் அனைவரையும் அனுசரித்து செல்லும் குணத்தை கடை பிடிப்பது ஜாதகருக்கு மிக மிக அவசியம் ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் பத்தாம் பாவகம் ரிஷப ராசியில் அமர்ந்தால் :

ஜாதகருக்கு நல்ல வருமானத்தை தந்துவிடும் , மிகசிறந்த வியாபார அறிவை சிறு வயதிலேயே ஜாதகர் பெற்றுவிடுவார் , குறிப்பாக அடிப்படையில் வியாபாரம் செய்யும் வணிகர்கள் குடும்பத்தில் ஜாதகர் பிறந்திருக்கும் யோகம் உண்டு. அமர்ந்த இடத்திலிருந்து அனைத்து செல்வங்களையும் ஜாதகர் பெறுவார் . சிறந்த வியாபாரிகள் , நிர்வாக திறமை பெற்றவர்கள் , ஆளுமை திறன் கொண்ட அரசியல்வாதிகள் , மக்கள் நலம் போற்றும் ஆன்மீகவாதிகள் , மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் கைராசி மருத்துவர்கள் , மன நல மருத்துவர்கள் , சிறந்த ஆற்ருபடுத்துதல் திறன் கொண்டவர்கள் , மக்களுக்கு சிறப்பாக பணியாற்றும் அரசு உழியர்கள் , என சகல துறைகளிலும் சிறந்து விளங்கும் தன்மை கொண்டவர்கள் , இவர்களிடம் உள்ள சுய நலத்தில் பொது நலம் கலந்தே இருக்கும் .ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் பதினொன்றாம் பாவகம் மிதுன ராசியில் அமர்ந்தால் :

அதிர்ஷ்ட தேவதையின் அருட் கடாட்சம் பெற்றவர்கள் , நீண்ட நிறைவான அதிர்ஷ்டம் கொண்டவர்கள் . இவர்களுக்கு வரும் அதிர்ஷ்டங்கள் அனைத்தும் தனது அறிவை மூலதனாமாக கொண்டு பெற்றதாகவே இருக்கும் , குறிப்பாக பத்ரிக்கை உலகில் கோடி கட்டி பறக்கும் நபர்கள் பலர் இந்த அமைப்பை பெற்றவர்களே , குறிப்பாக எழுத்து மற்றும் எழுது பொருட்கள் , அச்சு துறை , விளம்பர துறை , தகவல் தொழில் நுட்ப பிரிவு , வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்கு மதி தொழில்களில் சிறப்பாக விளங்கும் யோகம் , மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களில் சிறந்து விளங்குபவர்கள் என இவர்களது பட்டியல் நீலம் அதிகம் , சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் இங்கு அமர்வது லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

லக்கினாதிபதி சூரியன் பனிரெண்டாம்  பாவகம் கடக ராசியில் அமர்ந்தால் :


மன நிம்மதி என்ன விலை என்று கேட்பவர்கள் , எந்த விதத்திலாவது  ஜாதகருக்கு மனக்குறை இருந்து கொண்டே இருக்கும் , சரியான காலத்தில் ஜாதகருக்கு எதுவும் அமையாது , இதனால் அதிக மன உளைச்சலுடன் வாழும் சூழ்நிலைக்கு தள்ள படுவார் , இவர்கள் எந்த வகையிலாவது குடி பழக்கத்திற்கு , தீய பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் ஜாதகார் அதிலிருந்து  விடுபடுவது என்பது நிச்சயம் நடக்காது , இவர்கள் அனைவரும் நல்ல ஆன்மீக வாதிகளிடம் ஆசி பெறுவதும் , தீட்சை பெறுவது ஜாதகருக்கு தான் யார் என்ற உண்மையை புரிய வைக்கும் , அதன்வழி ஆன்மிக வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம் அமைய பெறுவார்கள் , இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் சிறுவயதில் இருந்தே அதிக கவனம் எடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும் அப்பொழுதுதான் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் , ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

குறிப்பு :

பொதுவாக சிம்மலக்கின அமைப்பை பெற்ற ஜாதகர்களுக்கு நல்ல பாசம், அன்பு கிடைப்பதில்லை , இதனால் சிறு வயதிலேயே பாதை மாறி போய்விடும் நிலை ஜாதகருக்கு ஏற்ப்படுவதர்க்கு முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்களே  என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் , இந்த இலக்கின அமைப்பை பெற்ற குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர்கள்  அதிக பாசத்தை காட்டி வளர்ப்பது ஜாதகரை சமுதாயத்தில் மிகசிறந்த மனிதனாக மாற்றி விடும் . இவர்கள் அனைவரும் மலை நீரை போன்றவர்கள் நல்ல முறையில் பயன் படுத்தினால் இவர்காளால் சமுதாயத்திற்கு மிகசிறப்பாக பயன்படுவார்கள் , இல்லை எனில் அவர்கள் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாக மாறியதற்கு அவர்களின் பெற்றோரே காரணம் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


குடியிருக்கும் வீடு தரும் யோகம் ?




கேள்வி :

வணக்கம் அய்யா, தங்களின் வலை பூவை சில வாரங்களாக தொடர்ந்து படித்து வருகிறேன், மிகவும் சிறப்பாக இருக்கிறது , தாங்களது இருக்கு இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே ! என்ற பாதிவை கண்டேன் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது , ஒரு ஜாதகத்தில் ஒருவருக்கு குடியிருக்கும் வீடு தரும் பலன்களை பற்றிய விளக்கம் மிகவும் அருமை , குடியிருக்கும் வீட்டின் திசை அமைப்பு ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை தருமா ? அப்படி எனில் சில மாதங்களில் நான் புதிதாக கட்ட இருக்கும் வீட்டின் வாயிர்ப்படி எப்படி அமைந்தால் ? எனது வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கு என்பதை தயவு செய்து கூறவும் தங்களுக்குண்டான ஆலோசனை கட்டணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்து விட்டேன் , தங்களின் ஆலோசனையை ஆவலுடன் எதிர் நோக்கும் !


 பதில் :

தங்களுடைய வாழ்க்கையில்  நடக்கும் நன்மை, தீமையை  நிர்ணயம் செய்வதில் 80 சதவிகிதம் முக்கிய பங்கு வகிப்பது, தாங்கள் குடியிருக்கும் வீடு மற்றும்  அதன் வாயிர்ப்படி, என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை . ஒருவருடைய ஜாதக அமைப்பில் எவ்வளவு நன்மையான பலன்களை திசா அமைப்பு தந்தாலும் , அதன் முழு பலனையும் ஜாதகர்  அனுபவிக்க வேண்டும் எனில் , சுய ஜாதக அமைப்பில் நான்காம் வீடு அமைப்பு குறிப்பிடும் திசையில்  வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருந்தால் மட்டுமே 100 சதவிகிதம் நன்மையான பலன்கள் நடக்கும் .மேலும் ஜாதக அமைப்பில் இந்த நான்காம் வீடு 2 ,6 ,8 ,12 ம் பாவகத்துடன் தொடர்பு பெறாமல் இருந்தால் நிச்சயம் ஜாதகருக்கு நல்ல வசதி மிக்க வீடு, வண்டி ,வாகனம், சுகம் , கல்வி ஆகியன இயற்கையாக அமைந்து விடும் .

தங்களது ஜாதக அமைப்பில் தங்களது நான்காம் வீடு , களத்திர பாவகத்துடன் சம்பந்தம் , மேலும் இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையை தங்களுக்கு வாரி வழங்குகிறது எனவே , தங்களுக்கு இதுவரை நிறைவான உயர்கல்வி , வசிக்க சிறப்பான வீடு , வசதி மிக்க வண்டி வாகனம் அமைந்திருக்கும் என்பதில் சிறிதும் ஜோதிட தீபத்திற்கு சந்தேகம் இல்லை . தாங்களது சுய முயற்ச்சியால் புதிதாக வீடுகட்டும் யோக அமைப்பு மிகவும் சிறப்பாக காணப்படுகிறது , இந்த பலன் இன்னும் 73 நாட்களுக்கு பிறகு நடக்க வாய்ப்பு அதிகம். இந்த யோக  பலன் தங்களுக்கு தொடர்ந்து மூன்று வருடம் நடை முறையில் இருக்கும் .

எனவே தாங்களது சுய ஜாதக அமைப்பின் படி மேற்கு திசை வாயிர்ப்படி அமைந்த வீடாக அமைந்து கொள்வது , தங்களது ஜாதகத்தில் உள்ள நன்மைகள் அனைத்தையும் தவறாமல் வாரி வழங்கும் , தங்களுக்கு ஏற்ற வாயிர்ப்படி , மேற்கு திசை மட்டுமே . இதனால் தங்களுக்கு  நீடித்த ஜீவன மேன்மை , மக்கள் செல்வாக்கு , கற்ற கல்வியால் ஆதாயம் , நல்ல வண்டி வாகனம், சொத்து சுகம் என சகல நன்மைகளையும் நிச்சயம் தரும் எவ்வித சந்தேகமும் தங்களுக்கு வேண்டாம் , தாங்கள் வீடு கட்டி முடித்த சில மாதங்களிலேயே , நல்ல சிறப்பான இடத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு , அதன் மூலம் தங்களுக்கு ஆண் வாரிசு கிடைக்க பெறுவீர்கள் , மேற்கு திசை வாயிற்படி அமைந்த அந்த வீட்டில்  தாங்கள்  குடியிருக்கும் வரை தங்களுக்கு யோகமே .

 அடுத்ததாக வரும் ராகு புத்தி தங்களுக்கு தீமையான பாவக பலனை செய்தாலும் , மேற்கு திசை வாயிற்படி அமைந்த அந்த வீட்டில்  தாங்கள்  குடியிருக்கும் வரை இந்த பாவக வழியில் இருந்து தங்களுக்கு எவ்வித தீமையான பலனும் நடை பெறாது ஆகவே தாங்கள் எதற்கும் கவலை பட தேவையில்லை  வாழ்த்துக்கள்.

குறிப்பு :

ஒருவரது ஜாதக அமைப்பில் நான்காம் பாவகம் பாதக ஸ்தானதுடன் தொடர்பு பெறுமாயின் , அதற்குரிய திசை வாயிர்ப்படி அமைந்த வீட்டில் ஜாதகர் குடியிருந்தால் ஜாதகருக்கு 200 மடங்கு தீமையான பலனை, நடப்பு திசை  கொடுக்க ஆரம்பித்து விடும் , இதன் வழி துன்பங்களை ஜாதகர் நிச்சயம் அனுபவித்தே தீர வேண்டும் , வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத சூழ்நிலை ஏற்ப்படும் , துவங்கும் அனைத்து காரியங்களும் தோல்வியில் முடிவடையும் , குடும்ப வாழ்க்கை சிறப்பிக்காது , நல்ல தொழில் அமையாது , உறவினர் உதவி கிடைக்காது , மக்கள் செல்வாக்கு இல்லாத நிலை , என ஜாதகரை ஒரு வழி செய்து விடும் , இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள், சுய ஜாதக ரீதியாக  தங்களுக்கு நன்மையை தரக்கூடிய திசையில் வாயிற்படி அமைந்த வீடுகளை ஜாதக ரீதியாக கண்டறிந்து அந்த வீடுகளுக்கு விரைவில் குடி பெயர்வது அதிக நன்மையை தரும். .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 27 ஜூன், 2012

ராகு கேது பாதிப்பிற்கு எளிய நிவர்த்தி வழி முறைகள் !



ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் ராகு கேது பிறப்பிலோ அல்லது கோட்சார ரீதியாக பாதிக்கப்பாடுமாயின் அதன் கெடு பலன்களில் இருந்து ஜாதகர் விடுபட சில எளிய வழி
முறைகள் , நவகிரகங்களில் விரைவில் எளிதாக  நமது உடலுடன் உயிர்கலப்பு பெரும் கிரகங்கள் இந்த ராகு கேது என்பதனை மனதில் கொள்க மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனி தன்மை இந்த சாயா கிரகங்களுக்கு மட்டுமே உண்டு  :

1 ) தனது தாய் வழி அல்லது தகப்பன் வழி தாய் தந்தையருக்கு ( தாத்தா பாட்டி , அம்மாயி ,அப்பிச்சி ) ஒரு பொர்ணமி நாளில் அவர்களுக்கு புத்தாடை கொடுத்து , அவர்கள் கையால் ( அட்சதை தூவி ) ஆசிர்வாதம்பெறுவது ஜாதார் இந்த ராகு கேது கிரகங்களின் பாதிப்பிலிருந்து விடு பட வழி வகுக்கும் , மேலும் திருமண தாமதம் , குழந்தை பாக்கியம் , ஆயுள் விருத்தி , தொழில் முன்னேற்றம் , என ஜாதகருக்கு படிப்படியான முன்னேற்றத்தை நிச்சயம் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை இந்த கிரகங்களின் பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளவர்கள் கூட தொடர்ந்து மூன்று பொர்ணமிக்கு ஆசிர்வாதம் பெறுவார்களே ஆயின் இதன் வழி நிவர்த்தி பெற்று சகல நலன்களும் பெறுவார்கள் , மேலும் விரைவில் ஜாதகருக்கு ராகு கேது கிரகங்கள்  நன்மையான பலனை விருத்தி செய்து கொடுக்க ஆரம்பிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை .

2 ) அல்லது அருகில் உள்ள  அறுபது வயதை கடந்த பெரியவர்கள் , சதாபிஷேகம் கண்ட தம்பதியரிடம் இது போன்று ஆசிர்வாதம் பெறுவதும், ராகு கேது கிரகங்கள் நன்மையான பலனை தருவதற்கு வழி வகுக்கும் , குறிப்பாக அறுபது வயதை கடந்த பெரியோர்கள் அனைவரிடமும் , ராகு கேதுவால் பாதிக்க பட்டவர்கள் ஆசி பெரும் பொழுது சகல நன்மைகளையும் ராகு கேது கிரகம் தர தவறுவதில்லை.திருமண வாழ்க்கை சரியாக அமையாதவர்கள் , திருமண தடையுள்ளவர்கள் ,குழந்தை பாக்கியம் அற்றவர்கள் , ஜாதக ரீதியாக ராகு கேது கிரகங்களால் அதிகம் பாதிக்க படும் நிலையில் உள்ளவர்களுக்கு , இந்த வழிமுறை விரைவில் பலன் தருகிறது என்பது கண்ணெதிரே  கண்ட உண்மை .

3 ) ஜாதகர் ஆக்னை தீட்சை  , சரியான குருவின் வழிகாட்டுதலில் பெற்று கொள்வது ராகு கேது கிரகங்களின் கெடுதலான பலன்களில் இருந்து விரைவில் மீட்டு எடுக்கும் இதற்க்கு ஜாதகருக்கு நல்ல தேடுதல் இருப்பது அவசியமாகிறது , சிறந்த ஆன்மீக வாதிகள் , மத குருமார்கள் , ஆன்மீக போதனையாளர்கள் , யோக ஆசிரியர்கள் இவர்களிடம் தீட்சை பெறுவதும், ஜாதகருக்கு ராகு கேது கிரக பாதிப்பிலிருந்து விரைவில் மீட்டெடுக்கும் .

4 ) அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி விட்டு , சூரியன் வருவதற்கு முன் சூர்ய நமஸ்காரம் செய்வது , ஜாதகரே சுயமாக ராகு கேது கிரகங்களின் பாதிப்பிலிருந்து சில நாட்களில் விடுபட வழி வகுக்கும் , இந்த முறை மிகவும் எளிதானது ஆனால் தொடர்ந்து செய்யும் பொழுது மட்டுமே ஜாதகர் ராகு கேது கிரகங்களுடன் உயிர்கலப்பு பெறுவது பற்றி உணர முடியும் , இடைவெளி விட்டு விட்டு செய்வது நிச்சயம் பலன் தர வாய்ப்பு இல்லை .

5 ) கலை துறையில் சிறந்து விளங்கும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது இதற்க்கு நிகரான பலனை அள்ளி தரும் ஏனெனில் இவர்கள் அனைவரிடமும் ராகு கேது கிரகத்தின் ஜீவ சக்தி மிகுதியாக காணப்படும் , சித்தர்கள் ஜீவ சமாதி பெற்ற இடங்கள் அனைத்திலும் இந்த கிரகசக்திகள் மிகுந்து காணப்படும் அந்த இடங்களில் ஜாதகர் சென்று உயிர்கலப்பு பெறுவது விரைவான நன்மைகளை தரும் . சித்தர்கள் ஜீவ சமாதி பெற்ற இடங்களுக்கு சென்று முடிந்தது 30 நிமிடங்களாவது தியானத்தில் அமர்வது ஜாதகருக்கு நிச்சயம் நன்மையான பலன்களை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

6 ) புகழ் பெற்ற சிவா ஸ்தலங்களில் எல்லாம் ராகு கேது கிரகங்களின் ஜீவ சக்தி மிகுதியாக காணப்படும் , அந்த தளங்களுக்கு வருடம் ஒரு முறை அல்லது வாழ்வில் ஒருமுறை சென்றுவருவது ராகு கேது கிரக பாதிப்பிலிருந்து ஜாதகரை நிச்சயம் மீட்டு எடுக்கும் குறிப்பாக , திரு காளகஸ்தி , தங்க மேடு தம்பிக்களை அய்யன் கோவில் , மருத மலை , பழனி , திருப்பதி , திருவெண்காடு , திருவக்கரை, சபரி மலை , கொடுமுடி , திரு நணா எனும் கூடுதுறை , நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் , திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் திரு கோவில் , பாண்டமங்கலம் விஸ்வநாதர் கோவில் , கொல்லி மலை அரப்பளிஸ்வரர் கோவில் , அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் , பாண்டவர்கள் ஐவரும் பூசித்த சிவஸ்தலங்கள் கொங்கு மண்டலத்தில் ஐந்து இடங்கள்  ஆகியன ராகு கேது பாதிப்பிற்கு விரைவான நன்மைகளை தரும் கோவில்கள் .

7 ) ராகு கேது கிரகங்கள் சுய ஜாதக ரீதியாக பாதிக்க பட்டு இருப்பின் மட்டுமே ஜாதகர் இந்த வழி முறைகளை பின்பற்றி நன்மை பெறலாம் , இயற்கையில் ஜாதகருக்கு ராகு கேது கிரகங்கள் நன்றாக அமைந்து இருப்பின் , ஜாதகர் இவ்வித நிவர்த்திகள் எதுவும் தேவையில்லை , மேலும் நல்ல நிலையில் அமர பெற்ற ராகு கேது கிரகங்கள் ஜாதகருக்கு நிச்சயம் எவ்வித தீமையான பலனையும் தருவதில்லை வாழ்க்கையில் மிகசிறந்த முன்னேற்றம் மட்டுமே வாரி வழங்குகிறது . மேலும் தனது ஜாதகத்தில் இந்த சாயா கிரகங்கள் நன்மையை செய்கிறதா தீமையை செய்கிறதா என்று தெரிந்து கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுங்கள் . பொதுவாக ராகு கேது தீமையை மட்டுமே தரும் என்பதில் சிறிதும் உண்மையில்லை இந்த சாய கிரகங்களுக்கு மட்டும் எந்த இடத்தில் அமருகிறதோ அந்த பாவக பலனை தான் மட்டுமே முழுவதும் ஏற்று கொண்டு செய்யும் , மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை எதுவும் அந்த பாவகத்திர்க்கு சம்பந்தம் பெற முடியாது என்பது ஜாதக ரீதியான உண்மை .

வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 25 ஜூன், 2012

ராகு கேது எனும் சாயா கிரகங்களின் சிறப்பு !



நவக்கிரகங்களில் சாயாகிரகம் என்று போற்றப்படும் ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு தன்மை உண்டு , ஒருவரது சுய ஜாதக அமைப்பில் லக்கினம் முதற்கொண்டு 12 பாவகங்களில் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் அந்தபாவகத்திர்க்கு உண்டான பலனை முழுவதும் தான்  மட்டுமே உரிமை எடுத்து கொண்டு  செய்யும் என்பதே அதன் சிறப்பு தன்மை , இதில் அவரவர் வினை பதிவிற்கு ஏற்றார் போல் நன்மை தீமை பலனை செய்யும் .

ஒருவரது
ஜாதக அமைப்பில் சாயா கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்தால் தரும் பலன்கள் :

ராகு
கேது சுய ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் அமரும்பொழுது ஜாதகருக்கு முதலில் நல்லவர்கள் சேர்க்கை ஏற்ப்படும் , ராகு கேது கிரகங்களின் அமைப்பில் நன்மையான பலன்களை அனுபவிக்கும் நிலையில் உள்ள ஜாதகர்களுக்கு  எங்கு சென்றாலும் , எந்த சூழ்நிலையிலும் நல்ல மனிதர்கள் சேர்க்கை , செல்வந்தர்களின் அறிமுகம் , சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவு . அவர்களால் ஜாதகர் அனுகூலமான பலன்களை பெரும் வாய்ப்பு , அதனால் ஏற்ப்படும் முன்னேற்றம் என நன்மையான பலன்களை இந்த சாயா கிரகங்கள் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , மேலும் ஒரு ஜாதகருக்கு நல்லவர்கள் சேர்க்கை ஏற்ப்பட வேண்டும் எனில் அவருக்கு நிச்சயம் ராகு கேது நல்ல நிலையில் இருப்பது அவசியம் .

சாயா
கிரகங்கள் நல்ல நிலையில் அமைந்த ஜாதகருக்கு எந்த விதத்திலும் மற்றவர்களால் தீமையான பலன்கள் நடக்க வாய்ப்பு சிறிதும் இல்லை என்பது உண்மை , ஜாதகர் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றம் மட்டும் காண்பார் என்பது நிச்சயம்  , ஜாதகருக்கு மனதில் நினைக்கும் எண்ணங்கள் எல்லாம் நடைமுறையில் நடப்பதை காண முடியும் . தான் போடும் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெரும் , அதன் வழி ஆதாயம் ஜாதகர் நிச்சயம் பெறுவார்.  முக்கியமாக அரசியலில் , கலை துறையில் , தொழில் துறையில் சிறந்து விளங்க வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் ராகு கேது 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பது அவசியம்( ராகு கேது எந்த வீடுகளில் இருந்தாலும் சரி ) .

ஜாதகரின்
உடல் நிலையை ஆளுமை செய்வதில் இந்த சாயா கிரகங்களுக்கு முக்கிய பங்கு நிச்சயம் உண்டு , மிகசிறந்த யோக கலையில் சிறந்து விளங்கவும் , தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கவும் , சிறந்த விளையாட்டு வீரராக திகழவும் , சுய ஜாதகத்தில் ராகு கேது 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே முடியும் .ஜாதகருடைய நண்பர்களை நிர்ணயம் செய்வது இந்த ராகு கேது கிரகங்களே , சாயகிரகங்களின் அருள் இல்லை எனில் நிச்சயம் நமக்கு நல்ல நட்புறவு கொண்ட நண்பர்கள் இல்லை என்பது மறுக்க முடியாத
உண்மை
.

சாயா
கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்த ஜாதகருக்கு இயற்கையாகவே கருமைய்யம் மிகவும் பரிசுத்தமாக காணப்படும் , இதனால் ஜாதகருக்கு விளைவு அறிந்து செயல் படும் தன்மை  சிறிய வயதில் இருந்தே துவங்கி விடும்  என்பதில் ஆச்சரியம் இல்லை , ஜாதகருக்கு தன்னிலை விளக்கம் சரியான பருவம் வந்தவுடன் கிடைத்து விடும் , இதன்காரணமாக  சுய கட்டுப்பாடு , ஒழுக்கம் , பரந்த மனப்பான்மை , பொது நலம் , சேவை செய்யும் குணம் , எந்த சூழ்நிலையிலும் கடமை தவறாத குணம் , தம்மை சார்ந்தவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கு ஆற்றல் என  எல்லா பிறப்பிலே அமைந்து விடுகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை .

எனவே
சாயா கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் பல நன்மைகளை நிச்சயம்  வாரி வழங்கும் .


ஒருவரது
ஜாதக அமைப்பில் சாயா கிரகங்கள் தீமை செய்யும் அமைப்பில் அமர்ந்தால்  தரும் பலன்கள் :

ஜாதகருக்கு
சுயமாக வாழ்க்கை வாழ முடியாமல் மற்றவரை சார்ந்து வாழ வேண்டி வரும் , தன்னம்பிக்கை குறையும் , சுய முயற்சிகளில் அதிக தடைகளை சந்திக்க வேண்டி வரும் , ஆண்  மற்றும் பெண் நண்பர்களால் அதிக துன்பம் ஏற்ப்படும் , நண்பர்கள் வழியே நன்மையான பலனை ஜாதகர் எந்த காலத்திலும் எதிர்பார்க்க இயலாது , நண்பர்கள் காட்டும் வழியில் ஜாதகர் சென்றால் நிச்சயம் வாழ்க்கையில் மனநிம்மதி என்பதே இருக்காது , உதவி செய்ய யாரும் முன் வர மாட்டார்கள், ஜாதகரிடம் இருந்து எல்லா வற்றையும் அகபறிக்கவே சுற்றி உள்ளவர்கள் திட்டம் திட்டுவார்கள் , இறை நிலையும் ஜாதகருக்கு உதவி செய்யாது , குறிப்பாக வாழ்க்கையில் நல்ல வழிகாட்டி கிடைப்பது அரிது .

அடிப்படை
கல்வியை தாண்டுவதே ஜாதகருக்கு பெரும் பாடாக இருக்கும், இளம் வயதிலேயே உலகில் உள்ள அனைத்து தீய பழக்க வழக்கங்களும் ஜாதாகருக்கு அறிமுகமாகி விடும் , சற்றே கவனமாக இல்லை எனில் இந்த பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகும் சூழ்நிலை ஏற்ப்படும் , ஜாதகர் என்னும் எண்ணங்கள் அனைத்தும் எதிர்மறை எண்ணங்களாகவே இருக்கும் , குறுக்கு வழியில் புத்தி செயல் பட துவங்கி விடும் . ஜாதகர் தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் உதறி தள்ளும் நிலை ஏற்ப்படும் , அனைவரிடமும் பகைமை பாராட்டும் நிலைக்கு தள்ளபடுவார் .

இவர்களை
எளிதாக மற்றவர்கள் தமது சுய லாபத்திற்காக பயன் படுத்தி கொள்ளவார்கள் , அதனால் ஜாதகருக்கு எவ்வித பயனும் இருக்காது மற்றவர்கள் சொல்வதை ஆராய்ந்து பார்க்காமல் அவர்களுக்கு அடிமை ஆகும் சூழ்நிலை ஏற்ப்படும் , தனக்கு தேவை எனில் சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட தயங்க மாட்டார்கள் மேலும் இவர்களின் செயல்கள் அனைத்தும்  செய்து முடித்த பிறகு வருத்த படும் அளவிலேயே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை , இந்த அமைப்பை பெற்ற ஜாதகத்தை கொண்ட ஆண் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் சிறப்பு கவனம் எடுத்து வளர்த்துவது முக்கிய கடமையாகும் .

மேலும்  மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளும் இல்லற வாழ்க்கை  ஜாதகருக்கு அமைந்து விடும். மனைவி மற்றும் உறவினர் ,நண்பர்கள் என்ற வகையில் ஜாதகர் அதிக துன்பங்களையே எதிர்கொள்ள வேண்டி வரும் , இப்படிபட்ட அமைப்பை கொண்ட ஜாதகர்கள் ஒரு விஷயத்தை செய்யுமுன் பலமுறை சிந்தனை செய்து செயலாற்றுவது சிறிது நன்மையான பலனைத்தரும்  .

இந்த
தீமையான பலன்களில் இருந்து ஜாதகர் விடுபட வேண்டும் எனில் அவர் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் , ஒரு சிறந்த ஆன்மீக ஆசானை குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் முறையாக தீட்சை பெறுவது மட்டுமே நல்ல வாழ்க்கையை அமைத்து தரும் . மேலும் கருமையம் தூய்மை பெற்று சாயா கிரகங்களின் பாதிப்பிலிருந்து நிச்சயம் 100 சதவிகிதம் ஜாதகர் விடு பட வழி வகுக்கும் ஆனால் இது எளிதில் நடக்கும் விஷயம் அல்ல ஜாதகர் பல சோதனைகளை கடந்து வர  வேண்டி இருக்கும் .

இந்த
அமைப்பை பெற்ற ஜாதகர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தால் நிச்சயம் இவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் அது " தேடுதல் " இதனால் ஜாதகருக்கு நல்ல வழி கிடைக்கும் என்பது உறுதி .

வாழ்க வளமுடன்
ஜோதிடன்
வர்ஷன்
9443355696