விருச்சிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருச்சிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : விருச்சிக லக்கினம் ( 2019-2020 )




 விருச்சிக லக்கின அன்பர்கள் பொருளாதார திட்டமிடுதல்கள் மற்றும் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : விருச்சிகம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆயுள் ஸ்தானமாகவும், ஸ்திர நீர் ராசியாகவும் விளங்கும் விருச்சிக ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்திலும், குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் ஆயுள் ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், இது ஜாதகருக்கான திடீர் அதிர்ஷ்டத்தை வழங்குவதுடன், முயற்சிக்கும் காரியங்களில் எதிர்பாராத லாபங்களை வாரி வழங்கும், முன்னேற்றம் என்பது திடீரென அமையும், வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு, நண்பர்கள் உதவி, கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஆகியவை விருச்சிக லக்கின அன்பர்களுக்கு அதீத அளவில் நன்மைகளை வாரி வழங்கும், இதுவரை இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்பு வெகு விரைவாக தீரும், மனதளவில் இருந்து வந்த போராட்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பொங்கும், உறவுகள் வழியிலான உதவிகள் தேடிவரும், சிகிச்சை மூலம் உடல் நலம் பெறுவதற்கான வாய்ப்பை வாரி வழங்கும், அந்நியர் ஆதரவு அல்லது வெளிநாட்டினர் மூலம் ஆதாயம் என்ற வகையில் சிறப்புக்களை தரும், வியாபார ரீதியாக நல்லதொரு வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டாகும், தெளிவான சிந்தனை சரியான முடிவு மற்றும் தீர்க்கமான வாதம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் ஆயுள் ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாது, தன்னம்பிக்கை குறையும், திட்டமிட்ட செயல்கள் யாவும் நடைமுறைக்கு வாராது, செயல்பாடுகளில் மந்தம் ஏற்படும், விழிப்புணர்வு இன்றி செய்யும் காரியங்களில் மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும் நிலையை தரும், உறவுகளின் ஆதரவு இன்றி தனித்து நிற்கும் சூழ்நிலை உருவாகும், வாழ்க்கை துணை வழியிலான இழப்புகள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு உண்டு தெய்வ நம்பிக்கை குறையும், விபத்து மற்றும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, செய்து வந்த தொழில்களில் நஷ்டம் மற்றும் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு, சகோதர வழி இன்னல்கள் தங்களின் நிம்மதியை குறைக்கும், தைரியம் வெகுவாக குறையும், சரியான நிகழ்வுகள் உணராமல் வதந்திகளை நம்பி செய்யும் அனைத்தும் தங்களுக்கு பேரிழப்புகளை வாரி வழங்கும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து 200% சதவிகித  இன்னல்களையே தரும் என்பதை கவனத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் தங்களின் வாழ்க்கையில் அதீத பண நெருக்கடிகளை தர கூடும், நாவடக்கம் தேவை என்பதை உணர வேண்டிய நேரமிது, குறிப்பாக வயதில் பெரியவர்கள், ஆன்மீக பெரியோர்களிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை, வீட்டில் உள்ள பெரியோர்களின் வார்த்தைகளை மதித்து நடப்பது தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், வருமானம் சார்ந்த விஷயங்களில் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவது அவசியமாகிறது, சேமிப்பு என்பது தங்களுக்கு அனைத்து வித தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள், குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை நாடுவதும் குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுவதும் தங்களுக்கான நெருக்கடிகளை குறைக்க உதவும், கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடி நிவர்திகளை மேற்கொண்டு விடுபடுவது அவசியமாகிறது.

 கற்ற கல்வி தங்களுக்கு சரியான ஜீவன மேன்மையை வழங்கும் என்பது கவனிக்க தக்கது, திருமண தடைகள் நீங்கும், நல்லதொரு வாழ்க்கை துணையை தேர்வு செய்து நலம் பெறுங்கள், அவசர கதியில் செய்யும் செயல்கள் யாவும் தங்களுக்கு நீண்ட நாள் நீங்காத இன்னல்களை தந்து விடும், திருமண முயற்சிகள் கூடி வரும் என்ற போதிலும் சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்வது தங்களின் கடமை என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், மற்றவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படும் தன்மையை தவிர்ப்பது தங்களுக்கு சகல நன்மைகளையும் தரும், எதிர்பாராத நிகழ்வுகள் மூலம் அதீத பொருள் இழப்புகளை தாங்கள் சந்திக்க வேண்டி வரும் என்பதை கவனத்தில் கொண்டு மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகிறது, நிதி சார்ந்த மேலாண்மை இனிவரும் 18 மாதங்களுக்கும் தங்களுக்கான நெருக்கடிகளை குறைத்து நலவாழ்க்கையை தரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 8,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 8,2ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து விருச்சிக லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 16 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கடகம் )



( குரு பெயர்ச்சியின் வழியில் 100% விகித பரிபூர்ண சுபயோக பலனை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள்  என்கிற முறையில் 3ம் இடத்தை பெறுபவர்கள் கடக லக்கின அன்பர்களே என்றால் அது மிகையில் ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கடகம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியாகவும், சர  நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான கடக ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் நல்லதொரு மாற்றங்களை தனது சஞ்சார நிலையில் இருந்தும், பார்வை செய்யும் பாவக வழியில் இருந்தும் வாரி வழங்குவது வரவேற்க்கதக்கது, கடக இலக்கின அன்பர்கள் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் முன்னேற்ற பாதையில் வெற்றிகரமாக நடைபோடும் வாய்ப்பை நல்கும், குறிப்பாக லக்கினத்தில் இருந்து 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தனது வர்க்க கிரகம் என்பதால், ஜாதகரின் சிந்தனை திறனும் செயல் திறனும் ஒரே நேர்கோட்டில் இயங்கி வெற்றிகளை பெற்று தரும், புதிய சிந்தனை புதிய செயல்பாடுகள் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனது நுண்ணறிவு திறன் மற்றும் ஆராய்ச்சி அறிவு இதுவரை இல்லாத புதிய மாற்றங்களையும், நிறைவான வருமான வாய்ப்பையும் வாரி வழங்கும், நல்ல ஆண் வாரிசு அமையும், தனது குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கையை வெகு சிறப்பாக கொண்டாடும் வல்லமையை தரும், லாட்டரியில் யோகம் பங்கு சந்தை லாபம், குல தெய்வ ஆசி, ஆன்மீக பெரியோர் மற்றும் ஆன்மீக குரு வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை கொண்டவர்களாக கடக இலக்கின அன்பர்கள் திகழ்வார்கள், " மனமது செம்மையானால் " மந்திரம் செபிக்க தேவையில்லை என்பதற்கு இணங்க கடக இலக்கின அன்பர்களின் மனம் தெளிந்த நீரோடை போன்று ஓர் சீரான கட்டுபாடுடன் இயங்கும் என்பதால், இவர்களின் ஆசை மற்றும் லட்சியங்கள் மிக விரைவில் நடைமுறைக்கும் வந்து வெற்றியை வாரி வழங்கும், இதுவரை மனதில் இருந்த நிறைவேறாத ஆசைகள் யாவும் நிறைவேறும் என்பதுடன், மங்களகரமான நிகழ்வுகளில் வழியில் கடக இலக்கின அன்பர்களுக்கு மனமகிழ்வு அதிகரிக்கும், திருமணம், குழந்தை பாக்கியம், நல்லோதோர் வேலை அல்லது தொழில், புதிய சொத்துகள் வண்டி வாகனம், வீடு நிலம் போன்றவை அமைய அதிக வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு பாக்கிய  ஸ்தானமான 9ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, 100% விகித யோக வாழ்க்கையை வாரி வழங்கும், இதுவரை உதவி செய்யாதவர்கள் கூட தேடி வந்து உதவி செய்வார்கள், இறை அருளின் கருணையினால் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, தங்களின் அறிவு திறன் தங்களுக்கு வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், மதிநுட்பம் கொண்டு வாழ்க்கையில் சுபயோகங்களை மிக எளிதில் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், அறிவார்ந்த செயல்கள் மூலம் பொது மக்களிடமும், மேல் அதிகாரிகளிடமும் நற்ப்பெயர் உண்டாகும், அரசியல், ஆசிரிய பணியில் உள்ளோருக்கு இனிவரும் காலம் சிறந்த மாற்றங்களை வாரி வழங்கும்.தெய்வீக அனுபவம் தங்களின் வாழ்க்கையை புத்துணர்வு மிக்கதாக மாற்றும் என்பதுடன், புதுவித அறிமுகங்களை வழங்கும், காதல் வெற்றி பெரும், திருமண வாழ்க்கை கைகூடிவரும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள், வாழ்க்கையில் புதுவித மாற்றங்களை சந்திக்கும் யோகம் உண்டு என்பதுடன், முதலீடுகளில் இருந்து வரும் லாபம் தங்களின் பொருளாதர சிக்கலுக்கு நல்ல தீர்வை தரும், வெளியூர் வெளிநாடு செல்ல விரும்பும் அன்பர்கள் தனது முழு முயற்சியின் வழியில் இருந்து வெற்றி காண்பார்கள், சமூக மதிப்பும், அந்தஸ்துடன் கூடிய பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும்  என்பது கவனிக்கத்தக்கது.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்தை வசீகரிப்பது, அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை முழு அளவில் வாரி வழங்கும், தனது வருமானம் என்பது கடக லக்கின அன்பர்களுக்கு கை நிறைவாகவும், மிதம்மிஞ்சியதாகவும் அமையும் என்பது வரவேற்கத்தக்கது, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் செயற்கரிய காரியங்களை சாதிக்கும் வல்லமையை தரும், பொது காரியங்களில் நன்மதிப்பும், புதிய உத்வேகமும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்ப்புகள் யாவும் தங்களுக்கு சாதகமாக மாறும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வீர்கள், அதிர்ஷ்ட தேவதையின் அருள் கடாட்சம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளையும், பொருளாதர தன்னிறைவையும் வாரி வழங்கும், உடல் நலம் மனநலம் மேலோங்கும், தங்களின் வாக்கு வன்மை சிறக்கும் என்பதனால் அனைவரும் தங்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவார்கள், எல்லையில்லா சந்தோஷமும், சுபயோகத்தின் தாக்கமும் தங்களின் வாழ்க்கையில் ராஜ யோக பலன்களை அனுபவிக்க வைக்கும் என்பதுடன், திருமணம் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து நன்மைகளை சுவீகரிக்கும் யோகத்தை தரும், எதையும் துணிந்து சாதிக்கும் வல்லமையை தரும் என்பதுடன், புதுவித யுக்தி மற்றும் புதுவித தொழில் நுட்பம் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களுக்கே சற்று வியப்பை தரும், வாழ்க்கை துணை, பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் தன்னிறைவாக பெறுவீர்கள் என்பதுமட்டும் உறுதி வாழ்த்துக்கள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ராஜ யோக பலன்களை தரும் உடல் நலம், மன நலம் மேலோங்கும், சுகபோக யோக வாழ்க்கைக்கான அடித்தளத்தை இனிவரும் காலம் சிறப்பாக அமைத்து தரும், புதிய சொகுசு வண்டி வாகனம், வீடு, சொத்து சுக சேர்க்கை மூலம் வாழ்க்கையில் அந்தஸ்தும் கவுரவமும் அதிகரிக்கும், புதிய மாற்றங்களும், புதிய சந்தர்ப்பங்களும் கடக லக்கின அன்பர்களுக்கு சந்தோஷம் மிக்க யோக வாழ்க்கையை தரும், புதிய தொழில்  முயற்சிகள் வாழ்க்கையில் நல்ல வெற்றிகளையும், வருமான வாய்ப்பையும் தரும், நீர் தத்துவ சார்ந்த தொழில்களில் உள்ளோருக்கு இனிவரும் காலம் யோக காலமாக அமையும், மருத்துவ துறையில் உள்ளோருக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு, ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிவோர், வண்டி வாகன தொழில் புரிவோர், கட்டடம் மற்றும் கட்டுமான தொழில் செய்வோர் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டமும், பொருளாதர முன்னேற்றமும் பரிபூர்ணமாக அமையும், பண்ணை தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த துறையில் உள்ளோருக்கு ஏற்றமிகு யோக காலமாக அமையும், பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் சார்ந்த வியாபாரம் விருத்தி அடையும் என்பதுடன் அதிர்ஷ்டகரமான நன்மைகளையும் சுவீகரிக்கும் வல்லமை உண்டாகும், மனதளவில் நல்ல மாற்றங்களும், செயல்பாட்டில் நல்ல முன்னேற்றத்தையும் தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் என்பதுடன் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.

குறிப்பு :

கடக லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 5,9,11,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 5,9,11,1ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696


புதன், 14 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மிதுனம் )


( குரு பெயர்ச்சியின் வழியில் சற்று இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாகும் லக்கினமாக மிதுன லக்கின அன்பர்கள் உள்ளனர் என்பது கவனிக்க தக்கது ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மிதுனம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாகவும், உபய காற்று தத்துவ தன்மையை பெற்றதுமான மிதுன ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மிதுன லக்கினத்திற்க்கு, களத்திர ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானம் என்ற இரு அமைப்பிலும் கேந்திர ஆதிபத்திய தோஷ நிலையில் நிற்பது மிதுன லக்கின அன்பர்களுக்கு இன்னல்களை தரும் அமைப்பாகும், தனது சத்ரு ஸ்தான சஞ்சார நிலையில் மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிரிகளை வெல்லும் வல்லமையை தந்த போதிலும், தானாகவே எதிர்ப்புகளை சம்பாதித்து கொள்ளும் நிலைக்கு ஆளாக்குவார், தனது உடல் நிலையில் அக்கறை இன்மை வெகுவான பிரச்சனைகளை தரும், கடன் தொந்தரவுகள் எதிர்பாராத பிரச்சனைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்ற தடையாக விளங்கும், இருப்பினும் போட்டி பந்தயம், சூது போன்றவற்றில் வெற்றி உண்டு, நிதானமான சிந்தனை வாழ்க்கையில் நன்மைகளை தரும், பொது வாழ்க்கையில் உள்ளோர் சிறிது ஏற்றம் காணும் நல்ல நேரம் என்ற போதிலும் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மனம் போன போக்கில் செயல்படுவது வாழ்க்கையில் கடுமையான இன்னல்களையும் துன்பங்களையும் தரும் என்பதால் தெளிவான சிந்தனையுடன் ஒவ்வொரு முடிவுகளையும் மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ரீதியான இன்னல்களை வெகுவாக தரக்கூடும், தொழில் வழியிலான தடைகள், முன்னேற்ற பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படக்கூடும் என்பதுடன் பெற்றோர் உடல் நலனிலும் அதிக அக்கறை கொள்ள வேண்டி வரும், கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே சகல நன்மைகளையும் தரும், பொதுவாக தனது முடிவையே மற்றவர்கள் மேல் திணிக்கும் வழக்கம் மிதுன இலக்கின அன்பர்களுக்கு கைவந்த கலை என்பது எதார்த்தமான உண்மை என்ற போதிலும் தற்போதைய சூழ்நிலையில் இது பலன் தாராது, தங்களுக்கே எதிர்ப்பாக கிளம்பி நிற்கும் என்பதால், மற்றவர்கள் ஆலோசனைக்கும் மதிப்பளித்து நடந்துகொள்வதே ஜீவன ரீதியான நன்மைகளை தரும், சுய விருப்பு வெறுப்பு இன்றி நடந்தால் மட்டுமே வாழ்க்கை சற்று நிம்மதியுடன் இயங்கும், வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் மிகுந்த இணக்கமாக இருப்பது தங்களுக்கு வரும் தொழில் ரீதியான இன்னல்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்ப்படுத்தும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, தேவையற்ற மன உளைச்சலை தரும், மன போராட்டம் மன அழுத்தம் இரண்டும் தங்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வெகுவாக பாதிக்கும், வருமானம் சார்ந்த இழப்புகள் தங்களின் பொருளாதார வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பதால், சேமிப்பை தங்களது வசமாக்குவது அவசியமானதாக உள்ளது, புது வித உடல் தொந்தரவுகள் தங்களுக்கு வெகுவான மருத்துவ செலவினங்களை அதிகரிக்க கூடும், எதிர்பாராத விபத்து அல்லது உடல்நல குறைவு தங்களுக்கு கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால், வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது, முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மட்டும் தங்களுக்கு சற்று ஆறுதலை தரும், உறக்கம் பாதிக்கும், எனவே நல்ல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வருவது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும் என்பதுடன், விரைய ஸ்தான பாதிப்பை வெகுவாக குறைக்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ஒருவகையில் நன்மையை தந்த போதிலும் குடும்பத்தில் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது என்பதானால் மிதுன இலக்கின அன்பர்கள் தனது நாவை அடக்கி ஆள்வது அவசியமாகிறது, தேவையற்ற  வீண் வாதங்களில் ஆர்வம் செலுத்தினால் மன நிம்மதி பறிபோவதுடன், செலவினங்களும் கட்டுக்கடங்காமல் வீண் விரையமாகும், மேலும் நீர் தத்துவம் சார்ந்த விஷயங்கள் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு, வாழ்க்கை துணை உடனான இணக்கமான சூழ்நிலையை மிதுன இலக்கின அன்பர்கள் பேணி பாதுகாப்பது அவசியமாகிறது, இருப்பினும் ஏதாவது ஒரு வழியில் இருந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும் என்பதுடன், பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகளும் உண்டாகும், இனிமையான பேச்சு திறன் கொண்டு வாழ்க்கையில் நலம் பெறவேண்டிய நேரமிது என்பதால், மிகுந்த கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் " வாழ்த்துகள் "

குறிப்பு :

மிதுன லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 6,10,12,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 6,10,12,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 13 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - ரிஷபம் )


( இந்த குரு பெயர்ச்சியின் மூலம் லாப ஸ்தானம் மற்றும் வீரிய ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள் ரிஷப லக்கின அன்பர்கள் என்றால் அது மிகையில்லை ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : ரிஷபம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாகவும், ஸ்திர மண் தத்துவ தன்மையை பெற்றதுமான ரிஷப ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் ரிஷப லக்கினத்திற்க்கு, சத்ரு ஸ்தான அதிபதி என்ற நிலையில் கேந்திர ஆதிபத்திய தோஷம் தரும் அமைப்பிலும், லாப ஸ்தான அதிபதி என்ற நிலையில் சகல சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும் வல்லமை பெற்றவர் ஆகிறார், தனது களத்திர ஸ்தான சஞ்சார நிலையில் இருந்து ரிஷப லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமங்களை வாரி வழங்க தவறமாட்டார் என்பதுடன், எதிர்பாலின சேர்க்கை மூலம் தேவையற்ற இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்குவார் என்பது கவனிக்க தக்கது, உயர்பதவிகளில் உள்ளோர் சற்று கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டிய நேரமிது, வெளிநாடு அல்லது வெளியூரில் ஜீவனம் தேடும் அன்பர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் தேடிவரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், மன நிலையில் நல்ல மாற்றங்களும், தெய்வீக அனுக்கிரகமும் தங்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை வாரி வழங்கும், கூட்டு முயற்சிகள் மட்டும் தங்களுக்கு பேரிழப்பையும், தடை தாமதங்களையும் வழங்க கூடும், வண்டி வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருப்பது மிக மிக அவசியமாகிறது.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, மிகுந்த லாபத்தையும் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையையும் வாரி வழங்கும், முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் லாபம் தங்களின் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பை அதிகரிக்கும், நல்ல நிம்மதியும், தெளிவான மனநிலையும் தங்களின் வாழ்க்கையில் அபரிவிதமான  யோக வாழ்க்கையை வாரி வழங்கும், புதிய முயற்சிகள் வழியிலான லாபங்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சுபயோகங்களை வாரி வழங்கும், தன்னம்பிக்கை மிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் அபரிவிதமான நன்மைகளையும் சுபயோகங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் இனிவரும் ஒருவருட காலத்தில் தேடிவரும், தங்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் யாவும் நீங்கி, புதிய யோக வாழ்க்கையை நல்கும் என்பதுடன், அதிர்ஷ்டத்தின் தாக்கம் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது, போதிய விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளையும், சுகபோக யோக வாழ்க்கையையும் சுவீகரியுங்கள், குறிப்பாக முதலீடுகளில் அதிக கவனம் செலுத்தலாம்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு லக்கினம் எனும் முதல் பாவகத்தை வசீகரிப்பது, உடல் நிலை சார்ந்த இன்னல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு, வரும் வருமானத்தை சரியான மேலாண்மை செய்ய இயலவில்லை எனில் அதீத பொருளாதர சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பேசும் வார்த்தைகளில் அதீத கவனம் தேவை, வாக்கு தவறினால் வாழ்க்கையில் நிறைய இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மனம் கவலைகொள்ளவும், அதீத போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும், மன பயம் தங்களின் வாழ்க்கையில்  அதிகப்படியான துன்பங்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளும் என்பதால், தைரியமான  முடிவுகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள், அரை குறை மனதுடன் செய்யும் காரியங்கள் யாவும் தங்களுக்கு மீள இயலா இன்னல்களை தரும் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் பொது காரியங்கள், பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது, குறிப்பாக குடும்பத்தில் பகைமை பாராட்டாமல் அனைவருடன் இணக்கமாக நடந்துகொள்வது சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை  தரும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் 3ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை தரும், வீரியமிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் நேரமிது, தரகு, கமிஷன், ஒப்பந்த சார்ந்த வியாபரங்கள் மூலம் அபரிவிதமான யோக வாழ்க்கையை சந்திக்கும் நேரமிது, புதிய தொழில் வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் சிறப்புமிக்க முன்னேற்றங்களை வாரி வழங்கும், காண்ட்ராக்ட் தொழில் செய்வோருக்கும், கட்டுமான துறை மற்றும் வண்டி வாகன துறையில் இருப்போருக்கும் அபரிவிதமான நன்மைகளும் முன்னேற்றங்களும் வந்து சேரும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள், மருத்துவ துறை போன்றவற்றில் பணியாற்றும் அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், கலைத்துறை மற்றும் விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களும்  மிகப்பெரிய சாதனைகளை சாதிக்கும் வாய்ப்பை வாரி வழங்கும், புதிய வீடு வண்டி வாகனம் சொத்து சுக சேர்க்கை என  வாழ்க்கையில் தன்னிறைவான சுகபோகங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகத்தை இந்த குரு பெயர்ச்சி ரிஷப இலக்கின அன்பர்களுக்கு வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை " வாழ்த்துகள் "

குறிப்பு :

ரிஷப  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 7,11,1,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,11,1,3ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 9 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மேஷம்)


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மேஷம்

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் ராசியாகவும், சர நெருப்பு தத்துவ தன்மையை பெற்றதுமான மேஷ ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மேஷ லக்கினத்திற்க்கு, அஷ்டமாதிபதி மற்றும் விரைய ஸ்தான அதிபதி என்ற நிலையை பெறுவது கவனிக்கத்தக்கது, மேலும் குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது மேஷ லக்கின அன்பர்களுக்கு சிறப்பை தரும் விஷயமல்ல, மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகளில் அதீத எச்சரிக்கை தேவை, பயணங்களில் மிகுந்த பாதுகாப்பும், உடல் நலனில் அதிக அக்கறையும் கொள்வது நல்லது, தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு காட்டுவது சிறப்பை தரும், திடீரென எடுக்கும் முடிவுகள் யாவும் தங்களுக்கு மிகப்பெரிய தோல்வியை தரக்கூடும், தன்னம்பிக்கை குறையும், இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் இறக்குமதி பொருள் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் உண்டு, தனது வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு அதிகம் என்பதால் வரும் இன்னல்களை மிக சிறப்பாக கையாண்டு வெற்றிகொள்ளும் வாய்ப்பை நல்கும், வண்டி வாகனங்களில் மட்டும் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வது அவசியமாகிறது, மேலும் முதலீடு செய்யுமுன் மிகுந்த கவனமுடன் இருப்பதும் மேஷ லக்கின அன்பர்களுக்கு நன்மை பயக்கும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தை வசீகரிப்பது, நிம்மதியின்மையை உருவாக்கும், மனம் ஒரு நிலைப்படுவது என்பது சற்று கடினமான காரியமாக அமையும், தெளிவில்லாத நிலை, எடுக்கும் காரியங்களில் தொய்வு, மன உறுதியின்மை, துவங்கும் காரியங்களில் திருப்தி இன்மை, பொழுதுபோக்கு விஷயங்களில் அதீத ஆர்வம், தன்னம்பிக்கை வெகுவாக குறையும் தன்மை, எந்த ஓர் காரியத்தையும் ஆர்வத்துடன் செய்ய இயலாமை, கடமைக்கு செய்து இன்னலுறும் தன்மை, பணியில் நிம்மதியின்மை, தொழில் வழியில் பாதிப்பு, மனதிருப்திக்காக செய்யும் காரியங்கள் யாவும் கடும் தோல்வியை சந்திக்கும் நிலை, வீண் விரையங்கள், முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் வழியில்  இருந்து வரும் தொந்தரவுகள், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதால் வரும் பாதிப்பு என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும், சிறிது கவனமின்றி செயல்பட்டால் கூட வாழ்க்கையில் வெகுவான பாதிப்புகளை சந்திக்கும் நிலையை தரும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகத்தை வசீகரிப்பது, குடும்ப வாழ்க்கையில் சற்று இன்னல்களை தரக்கூடும், குறிப்பாக வருமானம் சார்ந்த இன்னல்கள் என்பது அதிக அளவில் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது, வீண் வாக்குவாதம் குடும்பத்தில் நிம்மதியிழப்பை தரும், செலவினங்களை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாக அமையும், தனம் சார்ந்த விஷயங்களிலேயே அதீத இன்னல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு, திட்டமிட்டு செயல்படுவதும், நிதி சார்ந்த விஷயங்களில் முறையான மேலாண்மையை கடைபிடிப்பது மட்டுமே சற்று நிம்மதியை தரக்கூடும், போதிய நிதி இன்மை காரணமாக மற்றவர்களிடம் கடன் பெரும் சூழ்நிலை உருவாகலாம், வக்கிரக காலங்களில் மட்டும் தங்களுக்கு எதிர்பாராத சுபயோகங்கள் தேடி வரக்கூடும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேற வாய்ப்பு உண்டு என்பதால் சரியான நேரமறிந்து செயல்பட்டு வெற்றிகாணலாம்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் தேய்பிறை காலங்களில் நன்மையை தரும், திடீர் வண்டிவாகன யோகம், வீடு நிலம் சொத்து சுக சேர்க்கை உருவாக கூடும், மற்றவர்கள் தனம் தனது கையிருப்பாக உயரும், மனதில் உள்ள ஆசைகள் யாவும் நிறைவேறும் நேரமிது, எதிர்பாராத அதிர்ஷ்ட வாழ்க்கையை சுவீகரிக்கும் யோகத்தை தரும், வண்டி வாகன தொழில் அல்லது கட்டுமான துறை சார்ந்த அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகளும், புதிய தொழில் முன்னேற்றமும் உண்டாகும், வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரம் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் புதுவித தொழில் விருத்தி உண்டாகும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு திடீரென முன்னேற்றமும், நிறைவான வாய்ப்புகளும், பிரபல்ய யோகமும் உண்டாகும், தங்களின் முயற்சிகளில் எதிர்பாராத வெற்றியை சுக ஸ்தான அமைப்பில் இருந்து இந்த  குரு பகவானின் வசீகர பார்வை வாரி வழங்கும்.

குறிப்பு :

மேஷ  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 8,12,2,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 27 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கும்பம் )



 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கும்பம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாகவும், ஸ்திர வாயு தத்துவ தன்மையை பெற்றதுமான கும்ப ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் கும்ப லக்கினத்திற்க்கு குடும்பம் மற்றும் லாப ஸ்தான அதிபதியாகிறார், கும்ப லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்திற்க்கு பெயர்ச்சி ஆகும் குரு பகவான் கேந்திர ஆதிபத்திய தோஷம் என்ற நிலையை பெறுவது கும்ப லக்கின அன்பர்களுக்கு உகந்தது அல்ல, ஒரு வகையில் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் ( சுய வர்க்கம் ) என்பதால் தொழில் வழியில் இருந்து நன்மைகளை வழங்கிய போதிலும், கும்ப லக்கின  அன்பர்கள் தனது மனம் சொன்னபடி நடந்தால் இன்னல்கள் ஏற்படும், கவுரவ குறைவு உண்டாக வாய்ப்பு உண்டு, பொது காரியங்களில் மிகுந்த கவனம் தேவை, தொழில் வழியிலான புதிய முயற்சிகள் அல்லது முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே ஈடுபடவும், இல்லையெனில் அமைதி காப்பதே சாலச்சிறந்தது, ஏமாற்றத்தை தவிர்க்க அதுவே சிறந்த வழி, தனது வாழ்க்கை துணை வழியிலான ஆதரவும், பொருளாதர உதவிகளும் கும்ப லக்கின அன்பர்களுக்கு அபரிவிதமாக வந்து சேரும், குறிப்பாக தனது வாழ்க்கை துணையின் பெயரில் செய்யும் தொழில் வழியிலான விருத்தி மிகவும் சிறப்பாக அமையும், தனது பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமானதாகிறது, சுய தொழில் புரிவோர் அனைவரும் மிகுந்த கவனமுடன் இயங்குவது பேரிழப்பை தவிர்க்க உதவும், குறிப்பாக சுய ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும் அதிக அளவில் தேவைப்படும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகத்தை வசீகரிப்பது, வருமானம் சார்ந்த விஷயங்களில் இன்னல்களையும் துன்பங்களையும் அதிக அளவில் தரக்கூடும், குடும்ப வாழ்க்கையில் துன்பங்களும், இல்லற வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களும் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு, முறையான நிதி மேலாண்மை செய்யவில்லை எனில் கடுமையான நிதி நெருக்கடிகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படலாம், தனது பேச்சு திறமையை சிறப்பாக கையாண்டு நன்மைகளை பெரும் நேரமிது, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலை உருவாகும் என்பதால் நிதி கையிருப்பை உறுதிசெய்துகொள்வது நல்லது, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழியில் வீண் வாக்குவாதங்களை வளர்த்துக்கொள்வதும், உறவுகள் வழியில் பகைமை பாராட்டுவதும் மிகுந்த துன்பங்களை தரக்கூடும், சேமிப்பின் மூலம் நலம்  பெற வேண்டிய நேரமிது, வாழ்த்துக்கள்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு மாத்ரு ஸ்தானம் எனும் நான்காம் பாவகத்தை வசீகரிப்பது ஆண்கள் எனில் பெற்ற தாய்க்கும், பெண்கள் எனில் பெற்ற தகப்பாவுக்கும் இன்னல்களை தரக்கூடும், உடல் நலம் மற்றும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, வண்டி வாகனங்களில் செல்வோர் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வது சகல நலன்களையும் தரும், போக்குவரத்து மற்றும் சரக்கு உந்து சார்ந்த தொழில் செய்வோர் வருமானம் சார்ந்த இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை உருவாகக்கூடும், சுகபோக வாழ்க்கைக்கு யாதொரு குந்தகமும் வாராமல் பார்த்துக்கொள்வது நல்லது, தன்னிறைவான பொருளாதார மேம்பாடு, நிதி மேலாண்மை, சரியான திட்டமிடுதல்கள், எதிர்ப்புகளை சிறப்பாக கையாளும் தன்மை என சில நன்மைகள் நடைமுறைக்கு வந்த போதிலும், பாதிப்புகளை தவிர்க்க இயலாது, கேளிக்கை, பொழுது போக்கு அம்சங்களில் அதீத கவனம் செலுத்தினால் வாழ்க்கையே சூனியமாகிவிட வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொள்க.

 குரு பகவான் தனது 9ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் வளர்பிறை காலங்களில் நன்மையை தரும், இருப்பினும் தேய் பிறை காலங்கள் வெகுவான இன்னல்களை தரும், உடல் நலம், கடன் தொந்தரவு, எதிரி தொந்தரவு, எதிர்ப்புகளை சமாளிக்க இயலாத சூழ்நிலை, போதிய வருமானம் இன்மை, வீண் செலவினங்கள், வட்டி வரவு செலவு சார்ந்த பிரச்சனைகள் என்ற வகையில் துன்பங்களை தரும், புதிய முயற்சிகள் வழியிலான வெற்றிகள் பாதிக்கப்படும் அல்லது தடை ஏற்படும், உறவுகள் வழியில் மனக்கசப்பு, பொருளாதார சிக்கல்கள், சரியான வாழ்க்கை பாதையை நிர்ணயம் செய்ய இயலாத நிலை, வயிறு சார்ந்த இன்னல்கள் என்ற வகையில் அதிக அளவிலான துன்பங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்கது, எந்த காரணத்தை கொண்டு மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பது உகந்தது அல்ல, அவர்களால் வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் வெகுவான பாதிப்பை தரும், வாழ்க்கை முன்னேற்றத்தை கடுமையாக பாதிக்கும்.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 10,2,4,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 23 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மகரம் )



சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மகரம் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியாகவும், சர மண் தத்துவ தன்மையை பெற்றதுமான மகர ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மகர லக்கினத்திற்க்கு வீரியம் மற்றும் விரைய ஸ்தானத்திற்க்கு அதிபதி என்ற நிலையை பெறுகின்றார், மேலும் தற்போழுது லாப ஸ்தானமான 11ம் பாவகத்திற்க்கு பெயர்ச்சி ஆகும் குரு பகவான் தனது சுப திருஷ்ட்டி என்ற நிலையில் 3,5,7ம் பாவகங்களை வசீகரம் செய்கிறார், இதன் மூலம் மகர இலக்கின அன்பர்கள் 90% சதவித ராஜ யோக பலாபலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர்கள் ஆகிறார்கள், 11ல் அமர்ந்த குரு பகவான் சம வீடு என்ற நிலையில் மகர இலக்கின அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது வரவேற்க தக்கது, தனது வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை பரிபூரணமாக  சுவீகரிக்கும் வல்லமையை தருகின்றார், எதிர்பாலினம், வெளிநாடுகளில் இருந்து வரும் திடீர் தனவரவு, வியாபர வழியில் இருந்து வரும் அதிக பொருள் சேர்க்கை, தன்னம்பிக்கை, சுய மரியாதை வாழ்க்கை, தெய்வீக அனுகிரகம், எதிர்பாராத அதிர்ஷ்டம் என்றவகையிலும், புதிய முயற்சிகள், புதிய சந்தர்ப்பங்கள், புதிய வாய்ப்புகள் என அனைத்திலும் புதுமையான வெற்றிகளை குவிக்கும் நேரமிது, லாப ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் மகர லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதுமட்டும் உறுதி வாழ்த்துக்கள்.

 குரு பகவான் தனது 5ம் பார்வையால் மகர லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் மூன்றாம் பாவகத்தை வசீகரிப்பது, வரவேற்கத்தக்கது நவ கிரகங்கள் யாவும் சம வீடுகளான 3,11ம் பாவகங்களை வசீகரிப்பதும், சஞ்சாரம் செய்வதும் 100% விகித நன்மைகளை மட்டுமே வாரி வழங்கும் இது பொது விதி, அதன் படி மகர லக்கின அன்பர்களுக்கு குரு பகவானின் லாப ஸ்தான சஞ்சாரமும், வீரிய ஸ்தான வசீகரமும் சிறப்பான யோக வாழ்க்கையை மட்டுமே தருவது கவனிக்கத்தக்கது, எடுக்கும்  காரியங்கள் யாவிலும் வெற்றியை தரும் யோகமான நேரமிது, அதிர்ஷ்ட லட்சுமியின் அருள் பார்வை  மகர லக்கின அன்பர்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், செய்த முதலீடுகள் வழியில் இருந்து அதீத லாபமும் பொருளாதார முன்னேற்றத்தையும் பெறுவார்கள், நல்ல உறக்கமும், நிம்மதியான வாழ்க்கையும் ஜாதகரின் வாழ்க்கையில் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும், மனம் அமைதியும் சாந்தமும் பெரும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், வியாபாரிகளுக்கு அபரிவிதமான யோக வாழ்க்கையை வாரி வழங்கும் நேரமிது, தெய்வீக அனுக்கிரகம் மூலம் புதிய தொழில்  முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிபெறுவார், தகவல் தொழில் நுட்பம் சாந்த துறையில் வெற்றி உண்டாகும், எழுத்து பத்திரிக்கை, ஊடக தொழில் துறையில் உள்ளவர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், நல்ல விஷயங்களும், சரியான அணுகுமுறையும் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை மகர லக்கின அன்பர்களே, அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையில் பல படிகள் முன்னேறி சென்று வெற்றிவாகை சூடும் நேரமிது " வாழ்த்துக்கள் "  

 குரு பகவான் தனது 7ம் பார்வையால் மகர லக்கின அன்பர்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவகத்தை வசீகரிப்பது வரவேற்கத்தக்கது, ரிஷபம் ( சுக்கிரன் ) எதிர்வர்க்க கிரகம் என்ற போதிலும், கோண வீடாக அமைவது மிகுந்த சிறப்புகளை தரும், தான் கற்ற கல்வி, தனது சமயோசித அறிவு திறன், குலதெய்வ ஆசி, இறை அருளின் கருணை, இணையற்ற பேச்சு திறன் யாவும் மகர லக்கின அன்பர்களுக்கு இந்த ஒருவருட காலத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை வாரி வழங்கும், புதிய சகாப்தத்தை வெற்றிகரமாக துவங்கும் வாய்ப்பைத் தரும், எந்த ஓர் நல்ல  காரியமும் துவங்கிய வேகத்தில் வெற்றியை தரும், எதிர்ப்புகள் யாவும் விலகும், நல்லோர் அறிமுகமும்,  பெரிய மனிதர்களால் ஆதாயம், அரசியல் செல்வாக்கு, கலைத்துறை சார்ந்த முன்னேற்றம்,கலைகளில் தேர்ச்சி, கல்வியில் வெற்றி, ஆரோக்கியம் உடல் நலனில் ஆர்வம், அளவில்லா வருமானம், அபூர்வ அதிசய நிகழ்வுகள் மூலம் வாழ்க்கையில் பிரகாசிக்கும் தன்மை என்ற விதத்தில் சுபயோகங்களை வாரி வழங்கும், தொண்மையான புனிதம் மிக்க புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டு, இதுவரை புத்திர பாக்கியம் இன்றி தவித்த அன்பர்களுக்கு நல்லதோர் யோகம் மிக்க ஆண் வாரிசு அமையும், வாழ்க்கை இனிமை மிக்கதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை " வாழ்த்துக்கள் "

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மகர லக்கின அன்பர்களுக்கு களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ஒரு வகையில் நன்மையை தரும் என்ற போதிலும், மகர லக்கினத்திற்கு களத்திர ஸ்தானம் மற்றும் கேந்திர பாவகமாக அமைவது குரு பார்வையின் மூலம் இன்னல்களை தரும் என்பதை  தவிர்க்க இயலாது, தனது வாழ்க்கை துணை வழியில் வரும் தொல்லைகள் சற்று அதிகமாகவே இருக்கும், வண்டி வாகனம், வீடு நிலம் இடம் சார்ந்த தொந்தரவுகள் சற்று கடுமையான பாதிப்பையும், இழப்பையும் தரக்கூடும், ஆடம்பர செலவுகள் பெருத்த ஏமாற்றங்களை தரக்கூடும், சுக போக வாழ்க்கை சற்று பாதிக்க வாய்ப்பு உண்டு, கூட்டு முயற்சிகள் அதீத தடை தாமதங்களை சந்திக்கும், வெளியூர் வெளிநாடு வாழ்க்கை பெரிய பின்னடைவை தரும் ஏமாற்றங்களும், இழப்புகளும் மகர லக்கின அன்பர்களை வெகுவாக பாதிக்கும், சில இழப்புகள் வாழ்க்கையை வேறு பாதையை நோக்கி இழுத்து செல்லக்கூடும், எதிர்பாலின அமைப்பினரிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதும், தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்வது சற்று கடுமையான இன்னல்களை தரும், புதிய கூட்டு முயற்சிகளை தவிர்ப்பது ஜாதகரின் வாழ்க்கையில் நிம்மதியை தரும்.

குறிப்பு :

மகர லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 11,3,5,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 11,3,5,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 19 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - தனுசு )


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : தனுசு

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியாகவும், உபய நெருப்பு தத்துவ தன்மை பெற்றதுமான தனுசு லக்கின அமைப்பை பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரக ஆளுமையின் கீழ் ( செவ்வாய் ) இயக்கத்தை பெற்றிருக்கும் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஒருவகையில் லக்கினாதிபதி என்ற அந்தஸ்த்தையும் பெறுகின்றார், சுக ஸ்தானமான 4ம் பாவகத்திற்கு அதிபதி என்ற அந்தஸ்த்தையும் பெறுகின்றார், எனவே லக்கினத்திற்கு 12ல் மறைவும், 4ம் பாவகத்திற்கு 9ல் கோண பலம் பெறுகின்றார், குரு பகவான் விருச்சிகத்தில் அமர்ந்த நிலையில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு சற்று வீண் விரயங்களை தரக்கூடும், மேலும் சுப விரையங்களாக மாறுவதற்கான சந்தர்ப்பங்களை தனசு லக்கின அன்பர்கள் உருவாக்கி கொள்வது அவசியமாகிறது, மேலும் எதிர்பாராத மனஉளைச்சல், மனப்போராட்டம், மனஅழுத்தம் போன்றவை மென்மேலும் துன்பங்களை தரக்கூடும், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்ற நிலையும், அனைவராலும் துன்பம் என்ற நிலையும் தனுசு லக்கின அன்பர்களுக்கு மிகப்பெரிய சவால்களாக அமையும் என்பது கவனிக்கத்தக்கது, லக்கினாதிபதி மறைவு பெறுவதும், சுக ஸ்தான அதிபதி கோணபலம் பெறுவதும் தனுசு லக்கின அன்பர்களுக்கு உகந்தது அல்ல, வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணமும், தான் எடுக்கும் முடிவுகளில் தெளிவும் தேவை என்பதை உணர்வது அவசியமாகிறது, மேலும் அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் தனுசு லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானம் எனும் நான்காம் பாவகத்தை வசீகரிப்பது, உகந்தது அல்ல வண்டி வாகனம், வீடு சொத்து சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனம் தேவை, சிறு கவனமின்மை கூட தனுசு லக்கின அன்பர்களுக்கு கடுமையான பாதிப்பையும் இழப்பையும் தரக்கூடும் என்பதால், பயணங்களில் கவனமும், சொத்து சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையும் கொண்டிருப்பது அவசியமாகிறது, தனது பெற்றோரை கவனமுடன் பாதுகாப்பது ஜாதகருக்கு வரும் இன்னல்களில் இருந்து காத்தருளும், அனைவரிடமும் சுமுக போக்கை கையாள்வது ஜாதகருக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும், புதிய வீடு, வண்டி வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்யுமுன் சுய ஜாதக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து செய்வதே சகல நலன்களையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் தனுசு லக்கின அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்தை வசீகரிப்பதும், ரிஷபம் எதிர் வர்க்க கிரகம் என்பதும் சற்று கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், குரு பார்வை பொதுவாக கோண வீடுகளை ( 1,5,9 ) சுவீகரிக்கும் பொழுதும், சம வீடுகளை ( 3,11 ) சுவீகரிக்கும் பொழுது மட்டுமே சுபயோகங்களை வாரி வழங்கும் , கேந்திர வீடுகளை பார்வை செய்யும் பொழுது இன்னல்களையே வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, குருபகவானின் சமசப்த பார்வை சத்ரு ஸ்தானத்திற்கு விழுவது கடுமையான இன்னல்களையே தரும், குறிப்பாக ஜாதகரின் குறுகிய கால வருமானங்களில் தொய்வு ஏற்படும், உடல் நலம் பாதிக்கும் குறிப்பாக தலை மற்றும் வயிறு சார்ந்த இன்னல்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, மேலும் கடன், வரவு செலவுகள் வெகுவாக பாதிக்க வாய்ப்பு உண்டு என்பதால் நிதி சார்ந்த விஷயங்களில் யோசித்து முடிவெடுப்பது சகல நன்மைகளையும் தரும், மேலும் தனது வார்த்தைகள் மூலம் அதீத துன்பங்கள் உண்டாகவும், எதிர்ப்புகள் அதிகரிக்கவும் சந்தர்ப்பம் உண்டு என்பதால் நாவடக்கம் தனுசு லக்கின அன்பர்களுக்கு அவசியமாகிறது, குரு பார்வையால் ஏற்படும் ஒரே நன்மை மற்றவர்கள் பணம் தன் கையிருப்பாக மாறும், அதன் வழியிலான வருமானம் அதிகரிக்கும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் தனுசு லக்கின அன்பர்களுக்கு ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக அமைவதும் சிறப்பான நன்மைகளை தரும், திடீர் அதிர்ஷ்டம் என்பது தனுசு லக்கின அன்பர்களுக்கு தேய்பிறை காலங்களில் கைகொடுக்கும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவும், பொருளாதார உதவிகளும் தனுசு லக்கின அன்பர்களுக்கு பேருதவியாக அமையும், ஆயுள் நீடிக்கும், உடல் நலம் மற்றும் இழப்புகளில் இருந்து மீண்டு வரும்  யோகம் உண்டாகும், பங்கு சந்தை லாட்டரியில் யோகம் உண்டு, புதையல் கனிம பொருட்கள் வழியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் வழியில் இருந்தும் ஜாதகருக்கு அபரிவிதமான தனசேர்க்கை உண்டாகும், தெய்வீக  அனுக்கிரகம் சுய ஜாதகத்தில் ஆளுமை செய்யும் என்பதால் ஆன்மீக வெற்றி உண்டாகும், புதிய மனிதர்கள், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெரும் யோகம் உண்டாகும் என்பது தனுசு லக்கின அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வழங்கும் நன்மையாகும்.

குறிப்பு :

தனுசு லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 12,4,6,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,4,6,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

வியாழன், 18 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )



சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை அன்பர்களே !

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : விருச்சிகம்

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாகவும், ஸ்திர நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கும் குரு பகவான், தனது வர்க்க கிரக ஆளுமையின் கீழ் ( செவ்வாய் ) இயக்கத்தை பெற்றிருக்கும் விருச்சிக ராசிக்கு அடிப்படையிலே சுபயோகங்களை வாரி வழங்கும் தன்மை பெற்றவர் என்பதில் மாற்று கருத்து இல்லை, விருச்சிக லக்கின அன்பர்களுக்கு ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் கல்வி கேள்விகளில் தேர்ச்சியையும், தெளிவான சிந்தனை மூலம் சுபயோகங்களை பெரும்  தன்மையையும் தருவார், விசாலமான மனம் கொண்டவர்கள் விருச்சிக லக்கின அன்பர்கள் என்பதால், இவர்களின் மனதில் உள்ள அபிலாசைகள், லட்சியங்கள், நல்ல எண்ணங்கள் யாவும் நிறைவேறும் தருணம் இது, மனம் சந்தோசம் கொள்ளும் நிகழ்வுகளுக்கு இந்த வருடத்தில் குறைவு இருக்காது, கல்வியில் தேர்ச்சி, உயர் கல்வி வாய்ப்பு, தெய்வீக அனுக்கிரகம், திருமண யோகம், குழந்தை பாக்கியம், தர்ம சிந்தனை, சமுதாயத்தில் உயரிய அந்தஸ்து, அரசு ஆதரவு, அழிவு பொருட்கள் சார்ந்த வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் அன்பர்களின் வாழ்க்கையில் திடீர் முன்னேற்றம் மற்றும் பொருளாதார தன்னிறைவு, உடல் நல பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடும் தன்மை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், விருச்சிக ராசி அன்பர்களின் ஆசைகள் எண்ணங்கள் யாவும் பூர்த்தியாகும் நேரம் இதுவென்பதால், விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவகத்தை வசீகரிப்பது, சிறப்பான யோக வாழ்க்கையை தரும், கல்வியில் சிறந்து விளங்கும்  யோகத்தை தரும், திருமணம் கைகூடி வரும், காதல் நிறைவேறும், குரு பகவான் கோண பலம் பெற்று தனது வீட்டையே வசீகரம் செய்வது வரவேற்கத்தக்கது, இது 5ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்யும், இதனால், விருச்சிக லக்கின  அன்பர்களுக்கு தன்னிறைவான யோக வாழ்க்கை அமையும், அதிர்ஷ்டம், ஆண்வாரிசு, பூர்வீக சொத்து வழியில் முன்னேற்றம், லாட்டரியில் யோகம், பங்கு சந்தை மூலம் அதீத லாபம், தனது சமயோசித புத்திசாலித்தனம் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, குல தெய்வ ஆசீர்வாதம் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம், புதிய முயற்சிகள் வெற்றி பெரும் தன்மை, தெய்வீக அனுபவம், ஆன்மீக பெரியோர் ஆசிர்வாதம் என்ற வகையில் மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கும், மனநிம்மதியான  வாழ்க்கை அமையும் அனைத்திலும் திருப்தி, உறவுகள் வழியில் ஆதரவும் தேடி வரும், பெற்ற குழந்தைகள் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பார்கள், தொழில் வழியிலான  நுண்ணறிவு மேலோங்கி அபரிவித வளர்ச்சியும், வருமான வாய்ப்பும் அதிகரிக்கும், குரு பகவானின் 5ம் பார்வை விருச்சிக லக்கின அன்பர்களுக்கு சுபயோகங்களையே பரிபூர்ணமாக வாரி வழங்குகிறது.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகத்தை வசீகரிப்பது, உகந்தது அல்ல இது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்தும் வீண் செலவினங்களை வாரி வழங்கும், மேலும் இவர்களுடனான நல்லுறவை பாதிக்கும் வண்ணம் சில நிகழ்வுகள் நடைபெற கூடும் என்பதால் இந்த ஒரு வருடம் விருச்சிக லக்கின அன்பர்கள் தனது வார்த்தையிலும், பேச்சிலும் அதிக கவனமும் எச்சரிக்கையும் கொண்டு இருப்பது அவசியமாகிறது, மேலும் நிதி சார்ந்த மேலாண்மையில் அதிக கவனம் தேவைப்படும், கூட்டு முயற்சியை தவிர்ப்பதும், வெளியூர் வெளிநாடு பயணங்களில் சரியான திட்டமிடுதல்களை மேற்கொள்வது அவசியமாகிறது, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை மனதில் கொண்டு விட்டுக்கொடுத்து செல்லும் தன்மையின் மூலம் நலம் பெரும் கட்டாயத்தில் விருச்சிக லக்கின அன்பர்கள் உள்ளனர் வாழ்த்துகள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பதாம் பாவகத்தை வசீகரிப்பது, விருச்சிக லக்கின அன்பர்களின் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்க தயார் நிலையில் இருப்பது உறுதியாகிறது, குறிப்பாக சமூக அந்தஸ்து, அரசியல் பதவிகள், தெய்வீக அனுபவம், ஆன்மீக திருத்தலங்களுக்கு புண்ணிய யாத்திரை செல்லும் யோகம், பெரிய மனிதர்களின் ஆதரவின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, புதிய சிந்தனைகள் மூலம் எதிர்கால வாழ்க்கைக்கான திட்டமிடுதல்களை மேற்கொள்ளும் தன்மை, எதிர்பாராத உதவிகள், கற்ற கல்வி வழியிலான  முன்னேற்றம் எதிர்ப்புகளை வெல்லும் தன்மை, நல்ல மனநிலை, தெளிவான சிந்தனைகள், ஆய்வு கல்வியில் தேர்ச்சி, என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், தனது வர்க்க கிரகமான சந்திரனின் வீட்டை ( கடகம் ) சுவீகரிக்கும், குரு பகவான் பெயரும் புகழும், மதிப்பு மரியாதையையும் வாரி வழங்குவார், தெய்வீக ஆற்றல் மூலம் வாழ்க்கையில் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் நேரமாக இதை கருதலாம், சாஸ்த்திர ஞானம் கொண்டு வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக பெறுவதற்கான சந்தர்ப்பங்களை குருவின் சுபதிருஷ்ட்டி வாரி வழங்கும் நேரமிது என்பதால், விருச்சிக லக்கின அன்பர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிக்கனியை பறிக்க "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

குறிப்பு :

விருச்சிக லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 1,5,7,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,5,7,9ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 19 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் விருச்சகம் !



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

விருச்சகம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு எட்டாம் ராசியான விருச்சக  ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், விருச்சக லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், மறைபொருள் உண்மைகளை உலகிற்க்கு ஒளிமறைவின்றி அனைவருக்கும் பிரதிபலன் எதிர்பாரமால் விளக்கம் தரும் வல்லமை பெற்ற விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு இதுவரை ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்து மனம் மற்றும் உடல் ரீதியாக கடுமையான இன்னல்களையும், திடீர் இழப்புகளையும் தந்துகொண்டு இருந்தார், குறிப்பாக மன ரீதியான கடுமையான இன்னல்களை விருச்சக இலக்கின அன்பர்கள் மிக பெரிய அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, லக்கினத்தில் சனியின் சஞ்சாரம் தங்களுக்கு மிகுந்த துன்பத்தை  தந்தது, ஆனால்  இனி வரும் காலங்களில் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு வருமான வாய்ப்புகளை பெரிய அளவில் தரக்கூடும், மேலும் வாக்கின் வழியில் நின்று தங்களது வெற்றிகரமான வாழ்க்கைக்கு  உறுதுணை புரிவார், இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்கள் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம், ஆன்மீக வாழ்க்கையில் நல்ல வெற்றியும் ஆசிர்வாதமும் உண்டாகும், தெய்வீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், இனிமையான வார்த்தைகளை கையாண்டு வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுவதற்கு உண்டான நேரம் இது என்பதனை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், சனி பகவானின்  2 ம் பாவக சஞ்சார நிலை விருச்சக இலக்கின அன்பர்களுக்கு தனம் சார்ந்த முன்னேற்றங்களையும், வாக்கு சார்ந்த இன்னல்களையும் நல்கும்.

7ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு இதுவரை இருந்த திருமண தடைகளை தகர்த்து விரைவாக திருமண வாழ்க்கையை அமைத்து தருவார், கூட்டு தொழில் செய்து வரும்  அன்பர்களுக்கு யோகம் மிகுந்த வாழ்க்கையையும், தொழில் வழியிலான லாபங்களை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து முன்னேற்றம் என்பது அபரிவிதமாக வந்து சேரும், தொழில் வழியிலான  வருமானம் என்பது நிரந்தரமாக அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதனால் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாய்ப்புகளை பயன்படுத்திகொள்வது நல்லது, மேலும் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள்  வழியிலான ஆதரவும், உதவிகளும் பெரிய அளவில் கிடைக்க பெறலாம், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், வெளிநாடு வெளியூர் வழியில் இருந்து லாபம் மற்றும் அதிர்ஷ்டம் உண்டாகும், குடும்பத்தில் உள்ள நபர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், கைநிறைவான வருமானம், பொருளாதார முன்னேற்றம், கேட்கும் இடங்களில் இருந்து வரும் கடன் உதவி என சனி பகவானின் 6ம் பார்வை, களத்திர ஸ்தானத்திற்கு முழு அளவில் நன்மைகளை வாரி வழங்கும், பிரபல்ய யோகம் வியாபார அபிவிருத்தி உண்டாகும்.

8ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் உடல் நலபாதிப்பில் உள்ள அன்பர்களுக்கு அதில் இருந்து விரைவான குணமும், சரியான மருத்துவ சிகிசிச்சையும், வீண் செலவுகளையும் வெகுவாக குறைக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சகல விஷயங்களில் இருந்தும் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், தனது வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர உதவிகள் தங்களுக்கு தேடிவரும், அவர்களின் உதவி தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும், சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும், தொலைதூர பயணங்கள் மூலம் லாபம் கிட்டும், திடீர் தனவரவுகள் தங்களின் வாழ்க்கையில் பலமாற்றங்களை தரும், எதிர்ப்பால் அமைப்பினர் மூலம் வாழ்க்கையில் மிகுந்த லாபம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும், பொதுமக்களை ஆதாரமாக கொண்டு தொழில் புரியும் அன்பர்களுக்கு அபரிவிதமான லாபம் உண்டாகும், சனி பகவானின் 7ம் பார்வை ஆயுள் ஸ்தான வழியில் 100% விகித நன்மைகளை வாரி வழங்கும்.

11ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவார், சத்ரு வழியில் இருந்தும் லாபத்தை பெரும் யோகம் உண்டாகும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் பல வழியில் இருந்து தன லாபங்கள் வந்துசேரும், எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை உண்டாகும், தன்னம்பிக்கையும் முற்போக்கு சிந்தனையும் தங்களின் வாழ்க்கையில் பலமடங்கு முன்னேற்றங்களை வாரி வழங்கும், இதுவரை போராட்டத்தை சந்தித்து கொண்டிருந்தவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் தாக்கம் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனது உறவுகள் வழியிலான உதவிகளும் பொதுமக்கள் ஆதரவும் புதியநம்பிக்கையை தரும், இதனால் தங்களின் உழைப்பின் வேகம் அதிகரிக்கும் முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமாக அமையும், சனி பகவானின் 10ம் பார்வை லாப ஸ்தான வழியில் 100% விகித நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

விருச்சிக லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 2,7,8,11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  2,7,8,11ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 4 பிப்ரவரி, 2017

நல்ல வேலை, திருமணம் எப்பொழுது அமையும்? சந்திரன் திசை எப்படி இருக்கும்?


 கேள்வி :
இதுவரை எனக்கு நல்ல வேலை அமையவில்லை, அரசு பணியாளர் தேர்வுகள் நிறைய எழுதிவிட்டேன் ஒரு வாய்ப்பும் கிட்டவில்லை, இதனால் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன், எனக்கு அரசு துறையில் பணி அமையுமா? திருமணம் எப்பொழுது அமையும்? எதிர்காலம் நன்றாக இருக்குமா?

பதில் :

 ஒருவரது வாழ்க்கையை சிறப்பாக நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் கோணங்கள் என்று அழைக்கப்படும் 1,5,9ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின், குணம், அறிவு, கல்வி, உதவி, சமூக அந்தஸ்து, உடல் வலிமை, மன வலிமை, தீர்க்கமான முடிவு, சரியான விஷயத்தை தேர்வு செய்து வெற்றி பெறுதல் என்ற வகையிலும், கேந்திரம் என்று அழைக்கப்படும் 2,4,6,7,8,10,12ம் வீடுகள் வலிமை பெறுவது, வருமானம், தானம்,குடும்பம், சொத்து சுகம், வண்டி வாகனம், எதிரிகளை வெல்லுதல், அனைத்திலும் தேர்ச்சி, களத்திர யோகம், கூட்டு முயற்சி, நபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு, திடீர் அதிர்ஷ்டம், நீண்ட ஆயுள், சுய கவுரவம், அந்தஸ்த்து, ஜீவன முன்னேற்றம், மன நிம்மதி, நல்ல உறக்கம், திடீர் எனவரும் மிக பெரிய சொத்துக்கள், திருப்திகரமான யோக வாழ்க்கை என்ற வகையிலும், சம பாவகங்களான 3,11ம் வீடுகள் வலிமை பெறுவது, ஜாதகரின் வெற்றி, சொல்வாக்கு, லட்சியம் வெற்றி பெறுதல், நினைத்ததை சாதிக்கும் வல்லமை, செல்வ செழிப்பு , மற்றும் திடீர் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, அதிர்ஷ்டத்தின் பரிபூர்ணத்துவம் முழுவதையும் ஜாதகர் அனுபவிக்கும் வல்லமை, வாழ்க்கையில் ஜாதகர் பெரும் நன்மை மற்றும் சுப யோகங்கள் என்ற வகையில் சிறப்புகளை தரும், எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோக, அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வருகின்றது என்பதால் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே சிறப்பான எதிர்காலத்தை அமைத்து  தரும்.


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம்

நல்ல வேலை எப்பொழுது அமையும் ?

எதிர்வரும் செவ்வாய் திசையில் அமைய வாய்ப்பு உள்ளது ஏனெனில் எதிர்வரும் செவ்வாய் திசை தங்களுக்கு 4,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதால், திடீரென நல்ல வேலை அமையும், ஆனால் அது அரசு பணியாக இருக்க வாய்ப்பு இல்லை, வண்டி வாகனம்  அல்லது இன்சூரன்ஸ் துறையில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது, அதுவரை தங்களுக்கு உண்டான ஒரு சிறு வேலை வாய்ப்பை தேடிக்கொள்வது நல்லது.

திருமணம் எப்பொழுது அமையும் ?

சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர வீடுகள் முறையே ஆயுள் பாவகம் மற்றும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, மிக மிக தாமதமான திருமண வாழ்க்கையை தரும், குறிப்பாக சந்திரன் திசையில் நடைபெற சிறிதும் வாய்ப்பு இல்லை, சந்திரன் திசையில் திருமணத்திற்க்காக எடுக்கும் முயற்சிகள் பெரும் பின்னடைவை தரும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நலம் தரும், மேலும் காதல் வயப்படுவது தங்களை, மரணத்தின் விளிம்பிர்க்கே அழைத்து செல்லும், திருமணத்திற்கும் தங்களுக்கு செவ்வாய் திசை செவ்வாய் புத்தியே உகந்ததாக அமையும்.

நடைபெறும் சந்திரன் திசை எப்படி இருக்கும் ?

தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை ( 05/12/2011 முதல் 05/12/2021 வரை ) தங்களுக்கு 7ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தந்துகொண்டு இருப்பது வருந்தத்தக்க விஷயமாகும், இதனால் தங்களின் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்பால் இன அமைப்பினரால் கடுமையான நெருக்கடிகளை சந்திப்பீர்கள், தேவையற்ற அவ பெயரால் மன நிம்மதி கடுமையாக பாதிக்கப்படும், தங்களது மனவலிமைக்கு  பலவிதமான சவால்களை வாரி வழங்கும் திசையாக சந்திரன்  அமைவது வருந்தத்தக்க விஷயமே, எனவே சந்திரன் திசை முழுவதும் தங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமுடன் எடுத்து வைப்பது அவசியமாகிறது, குறிப்பாக, சந்திரன் திசை தங்களுக்கு மிகுந்த இன்னல்களையும், துன்பங்களையும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், இதில் இருந்து விடுபட முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொள்வது சாலச்சிறந்தது, இதனால் சந்திரன் திசையில் இருந்து வரும் இன்னல்கள் தங்களுக்கு குறைய வாய்ப்பு உள்ளது.

எதிர்காலம் நன்றாக இருக்குமா?

சந்திரன் திசை முழுவதும் பாதக ஸ்தான பலன்களே நடைமுறைக்கு வருவதால் தங்களுக்கு யாதொரு நன்மையையும் நடைபெற வாய்ப்பு இல்லை, ஆனால் எதிர்வரும் செவ்வாய் திசை தங்களுக்கு 4,8ம் வீடுகள் வலிமை  பெற்று ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோக வாழ்க்கையை வாரி வழங்குவது செவ்வாய் திசை முழுவதும் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பு :

ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகர் 200% விகித இன்னலைகளை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும் குறிப்பாக, நடைமுறையில் உள்ள திசாபுத்தி அல்லது எதிர்வரும் திசாபுத்தி பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோகதிதான், ஏனெனில் பாதக ஸ்தானம் தரும் பாதிப்பில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகரால் எதிர்கொள்ளவே இயலாது.

 மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது லக்கின வழியில் இருந்து உடல்நலம், மனநலம் மற்றும் வளரும் சூழ்நிலையில் இருந்து வரும் இன்னல்களை அதிக அளவில் தரும், 3ம் பாவக வழியில் இருந்து முயற்சிகளில் தோல்வி, முயற்சி இன்மை, வீரியமிக்க செயல்திறன் இன்றி அதிக அளவிலான கவன குறைவு, சரியான தொடர்புகள் இன்றி வாழ்க்கையில் அனைவராலும் இன்னல்களை சந்தித்தால், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளி இல்லாமல் தவறான பாதையில் பயணிக்கும் நிலை, எதிர்ப்பால் அமைப்பினரால் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை, கூட்டு முயற்சி தோல்வி, தாமத திருமணம் மூலம் இன்னல்கள், 9ம் பாவக வழியில் இருந்து பித்ருக்கள் ஆசியின்மை, யாருடைய உதவியையும் பெற இயலாமல் இன்னலுறும் தன்மை, காரியங்களில் தடை, ஜீவன முன்னேற்றம் இன்மை, அதிக அளவிலான எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலை, திருப்தி அற்ற வாழ்க்கை என்ற வகையில் கடுமையான இன்னல்களை பாதக ஸ்தான வழியில் இருந்து வழங்கும், மேலும் தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களையும், அவயோகங்களையும் தரும் என்பதால் ஜாதகர் தகுந்த பீரிதி பரிகாரங்களை மேற்கொள்வது நன்மையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 30 ஜனவரி, 2017

திருமண வாழ்க்கையில் பரிபூர்ண யோகங்களை வாரி வழங்கும், பொருத்தமான வாழ்க்கை துணை தேர்வு !


" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்ற வார்த்தை உண்மையாக்க, சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்வது இன்றைய இளைஞர்களுக்கு அவசியமாகிறது, இயற்கையாக சில அன்பர்களுக்கு இந்த வாய்ப்பு இறை அருளின் கருணையினால் வழங்கப்பட்டு விடுகிறது ( அதற்க்கு சம்பந்தப்பட்டவரின் சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருக்கும் என்பது வேறு விஷயம் ) இல்லற வாழ்க்கையை சிறப்பிக்க யோகம் நிறைந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்தவர்களுக்கு யாதொரு கவலையும் இல்லை, ஏனெனில் பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்ப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும், கடவுளின் கருணையினால் தேடிவரும், பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்த அன்பர்கள், எதிர்கால வாழ்க்கையை பற்றி யாதொரு பயமும் இன்றி மிக சிறப்பாகவும், முழு யோகத்துடன் எதிர்கொள்ள இயலும், இன்றை சூழ்நிலையில் தனக்கு உகந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் தவறிவிடும் தற்கால இளைஞர்கள் தமது வாழ்க்கையையே பணயம் வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பது, மறுக்க இயலாத உண்மையாக உள்ளது.

இதுபோன்ற தவறான, பொருத்தமற்ற தேர்வுகளை தவிர்க்க " ஜோதிட சாஸ்த்திரம் " இன்றைய சந்ததியருக்கு 100% விகிதம் உதவுகிறது என்றால் அது மிகையில்லை, ஆனால் இன்றைய சந்ததியினர் " ஜோதிட சாஸ்த்திரம் " எந்த அளவிற்கு நம்புகின்றனர் என்பது கேள்விக்குறியே !, முழு மனதாக " ஜோதிட சாஸ்த்திரம் " எனும் கலையை நம்பும் அன்பர்களுக்கு நிச்சயம் சரியான தீர்வுகளையும், யோகம் நிறைந்த நல்வாழ்க்கையையும் வாரி  வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

இன்றைய சிந்தனைக்கு தனது ஜாதக வலிமையின் மூலம், தனது கணவனுக்கு மிகுந்த சுபயோகங்களை நல்கும் ஓர் ஜாதகத்தை  சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : விசாகம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு பாவக தொடர்பு :

1,3,5ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு லக்கின வழியில் இருந்து நல்ல உடல் நலம் மற்றும் சிறந்த மனவலிமையை  தரும், அனைவருடன் சுமுக போக்கு, பெருந்தன்மையான குணம், மற்றும் கண்டிப்பு என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து மிகுந்த செல்வ செழிப்பு , எதிரிகளை வெல்லும் ஆற்றல், நல்ல மனநிலை, சிறப்பான சிந்தனை, சத்தியத்தை மதித்தல், கல்வி வழியில் யோக வாழ்க்கை, சிறந்த வியாபார வல்லமை, கமிஷன் தொழில் மூலம் சிறப்பான முன்னேற்றம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் எதிர்பாராத வெற்றி மற்றும் லாபங்கள் வந்து சேரும் அமைப்பு, 5ம் பாவக வழியில் இருந்து குலதெய்வ அனுக்கிரகம், ஆய கலைகளில் தேர்ச்சி, குழந்தைகளிடம் அன்பு, எதிர்ப்புகளை மிக எளிதாக கையாளும் தன்மை, புதிய சூழ்நிலையில் ஆர்வம், எஜென்ஜி துறையில் நல்ல லாபம் என்ற வகையில் நன்மைகளை தரும்.

2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து சிறந்த குடும்ப வாழ்க்கையை, இனிமையான பேச்சு திறன், கைநிறைவான வருமான வாய்ப்பு, கணவருடன் பாசம் மற்றும் சகல வசதி வாய்ப்புகளையும் பெரும் யோகம் என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து நிறைவான சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், பொருளாதார முன்னேற்றம், சகல வசதிகளும் கொண்ட வீடு, பண்ணை தோட்டம் என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் கணவருக்கு திடீர் அதிர்ஷ்டத்தையும், கணவரால் தனது வாழ்க்கையில் சிறப்பான யோகங்களையும், நீண்ட ஆயுளுடன் சுமங்கலியாக திகழும் சுப யோகத்தையும் ஜாதகி பெறுவார், 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கவுரவம், தாய் வழியிலான யோக வாழ்க்கை, பாரம்பரியம் மிக்க விஷயங்களை கடைபிடிக்கும் யோகம், கவுரவ பதவி, கணவருக்கு தொழில் வழியிலான நன்மைகளை தரும் அமைப்பு என்ற வகையில் நன்மைகளை ஸ்திரமாக வாரி வழங்கும்.

7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 7ம் பாவக வழியில் இருந்து தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து சகல அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி, தனது  கணவருக்கு தேவையான விஷயங்களை சிறப்பாக செய்து கொடுக்கும் வல்லமை, தனது கணவருக்கு எந்த சூழ்நிலையிலும் நன்மையை தரும் யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் யாதொரு இன்னல்களும் இன்றி சுமுகமாக, சந்தோஷத்துடன் வாழும் யோகம், கூட்டு முயற்சியின் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகம் என்றவகையில் நன்மைகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி  பரிபூர்ண மஹாலக்ஷ்மி யோகம் நிறைந்தவர் என்பது உறுதியாகிறது, தனது கணவருக்கு சகல நிலைகளில் இருந்தும் அதிர்ஷ்டங்களை வாரி  வழங்குபவர் என்பது 100% விகிதம் உறுதி மேலும் தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும் தன்னகத்தே கொண்டவர், மெய்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இணங்க, தனது அறிவு திறனால் சகல விஷயங்களையும் சீர்துக்கி பார்க்கும், சமயோசித அறிவாற்றல் பெற்றவர் என்பதுடன், அதிர்ஷ்டம் நிறைந்தவர் என்பது ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சம் ஆகும்.

6,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு, ரண சிகிச்சையும், மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்தால் வீண் இன்னல்களையும் சந்திக்கும் நிலையை தரும்.

12ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, மனஅழுத்தம் மற்றும் மனப்போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

நடைபெறும் புதன் திசை ( 05/05/2012 முதல் 05/05/2029 வரை ) 

தற்போழுது நடைபெறும் புதன் திசை, ஜாதகிக்கு 7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, புதன் திசை முழுவதும் தனது  கணவருக்கு முழு வீச்சில் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது, மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்தும், லாப ஸ்தான வழியில் இருந்தும் தன்னிறைவான யோக வாழ்க்கையை பெறுபவர்  என்பதும் உறுதியாகிறது, புதன் திசைக்கு பிறகு வரும் கேது மற்றும் சுக்கிரன் முறையே 11ம் பாவக பலன் மற்றும் 3ம் பாவாக பலனையே தனது திசைகளில்  ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே ஜாதகியும், ஜாதகியின் கணவரும் முழு அளவிலான யோக வாழ்க்கையை சிறப்பாக வாழும் தன்மையை தரும் என்பது மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சுபயோக  அமைப்பாகும்.

குறிப்பு :

 பெண்களின் ஜாதகத்தில் இல்லற வாழ்க்கைக்கு சுபயோகங்களை நல்கும் 2,5,7ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பதும், நடைபெறும் திசை மற்றும் எதிர்வரும் தசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், மிகசிறந்த யோக வாழ்க்கையை தம்பதியருக்கு வாரி வழங்கும் என்பதில் ஐயம் இல்லை, மேலும் தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது அவரது ஜாதகத்தில் 2,5,7ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு தேர்வு செய்தால், காதல்  திருமணமோ, நிச்சயிக்க பட்ட திருமணமோ 100% வெற்றியை பெரும், இல்லற வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696