ஜாதக ஆலோசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாதக ஆலோசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

சுயஜாதக ஆலோசனை - பாதக ஸ்தான தொடர்பும்,ஜாதகரின் துரதிர்ஷ்ட வாழ்க்கையும் !



கேள்வி :

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்.நான் 13/11/1987 வருடத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.58PM மணிக்கு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் என்ற ஊரில் பிறந்தேன்.
இதுவரை எனக்கு திருமணம் நடைபெறவில்லை.நல்ல தொழிலும் அமையவில்லை.சுய தொழிலில் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு பெரும் கடனாளி ஆகிவிட்டேன்.எனது பூர்விக வீட்டின் மேல் கூட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.சம்மந்தமே இல்லாத நபர் என் வீட்டிற்கு உரிமை கொண்டாடுகிறார்.என் தந்தை கூட என்னையும் என் தாயையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.ஒன்றுமே புரியவில்லை, என் ஜாதகத்தை கொடுத்து பல ஜோதிடர்களிடம் பலன் கேட்டுப்பார்த்தேன்.ஆனால் ஒருவர் கூட எனது பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லவில்லை, மதிப்பிற்குரிய ஐயா நான் கடவுளை முழுமையாக நம்புபவன்.ஆனால் இதுவரை எனது வாழ்வில் பெருத்த ஏமாற்றங்களையும், தோல்விகளையுமே சந்தித்துள்ளேன்.

நான் எப்போது எனது வாழ்வில் முன்னேற்றம் காண்பேன்?
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்?
எனது பிரச்னைகள் எப்போது தீரும்?

மதிப்பிற்குரிய ஐயா தயவு செய்து அருள்கூர்ந்து எனது பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லுங்கள்.

இப்படிக்கு
சே.மதிவாணன்.

பதில் :

தங்களின் கேள்விகளுக்கு நிச்சயம் சரியான பதில்களை " ஜோதிடதீபம் " வழங்கும் அன்பரே ! ஆனால் தாங்கள் முறையான ஜாதக ஆலோசனை பெற்றுக்கொள்வது சாலசிறந்தது, ஏனெனில் நல்ல ஜோதிட ஆலோசனை தங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சகல விதங்களிலில் இருந்தும் பயனுள்ளதாக அமையும், இருப்பினும் தங்களது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகங்கள் பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் !

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நல்லதல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான இன்னல்களை 200% விகிதம் அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய  ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை உதறித்தள்ளும் நிலையை தரும் குறிப்பாக, ஜாதகர் முரண்பட்ட குணாதிசயத்தை பெற்று இருப்பார், தங்களின் ஜாதகத்தில்  அவ்வித  பாதிப்புகள் ஏதும் இல்லை என்பதனால், தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம்.

ஆனால் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில், புதன் புத்தி தங்களுக்கு பாதக ஸ்தான பலனையும், திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக பலனை  ஏற்று நடத்திக்கொண்டு இருக்கிறது என்பது, சற்று கவலை தரும் விஷயமே என்றாலும், இதற்க்கு உண்டான தீர்வுகளையும், பிரீதி பரிகாரங்களையும் மேற்கொள்வது தங்களுக்கு பாதிக்கப்பட்ட பாதக ஸ்தானம் மற்றும் ஆயுள் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க உதவும், மேலும் எதிர் வர இருக்கும் சுக்கிரன் திசை கேது புத்தி, அதற்க்கு அடுத்து வரும் சூரியன் திசை ஏற்று நடத்தும் பாவக பலன்கள் பற்றிய புரிதலுடன், தாங்கள் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.

திருமண தாமதத்திற்கு களத்திர ஸ்தான வலிமை இன்மையே அடிப்படை காரணமாக விளங்குகிறது என்பதை கருத்தில் கொள்க, தங்களது ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பு தரும் இன்னல்களில் இருந்து விடுபடவும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் துன்பங்களில் இருந்து விடுபடவும், முறையான ஜாதக ஆலோசனை பெறுவதே சிறந்தது, தங்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள " ஜோதிடதீபம் " தங்களுக்கு சிறந்த ஜாதக ஆலோசனைகளை வாரி வழங்கும். நேரில் வந்து ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் " வாழ்த்துகள் "


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 29 நவம்பர், 2015

ஜாதக ஆலோசனை : சனி மஹா திசை நரக வாழ்க்கையை தருமா ?

கேள்வி : 

என் பெயர் கார்த்திக்
நான் நேற்று முன்தினம் ஒரு ஜோதிடரை பார்த்தேன் அவர் என்னுடைய ஜாதகத்தை கணித்து உங்களுக்கு இபொழுது நடக்கும் திசை குரு திசை சுகர புத்தி அதனால் உங்களுக்கு இந்த குருதிசை ஓரளவு நல்ல பலன் தருவார்,
அடுத்து வரும் சனி மகா திசை 19 ஆண்டு காலம் அதில் நீங்கள் பல பிரச்னையை மற்றும் துன்பங்களை  நீங்கள் சந்திக்க கூடும் அது மற்றும் இன்றி நீங்கள் ஒரு சன்யாசி வாழ்க்கை  வாழ நேரிடும் (திருமணம் ஆகாது) என்று சொன்னார்

நான் சொந்த தொழில் செய்யலாமா என்று கேட்டேன் அதற்க்கு நீங்கள் சொந்த தொழில் செய்ய கூடாது செய்தால் அது உங்களுக்கு மிக பெரிய இளப்பை தரும், மற்றும் நீங்கள் கூட்டு சேர கூடாது .... யாருக்கும் ஜாமீன் கையப்போம் போடகூடாது என்று  சொன்னார், கடைசியாக உங்களுக்கு குரு திசை முடிந்தவுடன் உங்கள் வாழ்க்கை ஒரு நரகம் ஆகிவிடும் என்று  சொல்லி ஜாதகத்தை மூடிவிட்டார்,அதில் இருந்து தூக்கம் வரவில்லை, தயவு செய்து ஒரே வரியில் பதிலை முடித்து விடுங்கள்

நன்றி.


பதில் : 

தங்களது ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை மற்றும் எதிர்வரும் சனி திசை தங்களுக்கு ஏற்று நடத்தும் பாவக பலன்களை ஆய்வு செய்வோம் அன்பரே !

குரு திசை தங்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது தங்களுக்கு குரு திசையில் சரியான உத்தியோகம் இல்லாத சூழ்நிலையை தந்தாலும், வியாபாரம் அல்லது விபாரம் சார்ந்த ஆலோசனை வழங்கும் துறையில் சிறந்த ஜீவனத்தை தரும், மற்றும் மற்றவருக்கு உதவி செய்வதின் மூலம் லாபம் பெரும் யோகத்தை தரும் என்பதால், தரகு சார்ந்த தொழில்களை தேர்வு செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம்.

குரு திசையில் சுக்கிரன் புத்தியும் ஜீவன ஸ்தானமான 10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகவே கருதலாம், திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 2,7ம் வீடுகளில் 2ம் வீடு மட்டும் சிறு பாதிப்பை பெற்று இருப்பது திருமணத்தை தாமதம் செய்யும், ஆனால் நிச்சயம் திருமண வாழ்க்கை அமையும், 7ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது கூட்டு தொழில் அல்லது கூட்டு முயற்ச்சியின் மூலம் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், சிறந்த வாழ்க்கை துணை அமையும், நண்பர்கள் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து சிறந்த முன்னேற்றங்களை பெரும் யோகம் உண்டாகும், வெளிநாடுகளிலும் வியாபரத்திலும் தாங்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெறுவதற்கு சந்தர்ப்பங்களை வாரி வழங்கும்.

பொதுவாக சனி திசை என்றாலே தீமையை மட்டுமே செய்யும் என்ற கணிப்பின் படியே தங்களுக்கு மேற்கண்ட பலன்களை அந்த ஜோதிடர் கூறியிருக்க வேண்டும், தங்களது ஜாதகத்தில் சனி மஹா திசை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரியாமல், அந்த ஜோதிடரும் குத்து மதிப்பாக தங்களுக்கு பலன்களை சொல்லியிருக்க கூடும், உண்மையில் தங்களுக்கு எதிர் வர இருக்கும் சனி மஹா திசை உயிர் உடலாகி 1ம் வீடு இலக்கின பாவகமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது சனி திசை நடைமுறையில் உள்ள 19 வருடங்களுக்கும் மிகுந்த யோக பலன்களையே நடைமுறை படுத்துவார் என்பது 100% மறுக்க இயலாத உண்மை, மேலும் தங்களது லக்கினம் சர நெருப்பு தத்துவத்தில் 3 பாகைகளும், ஸ்திர மண் தத்துவத்தில் 25 பகைகளும் வியாபித்து இருப்பது, சனி திசை முழுவதும் ஸ்திரமான நன்மைகளை விரைவாக வாரி வழங்கும், தங்களின் லக்கினம் பெரும்பாலும் ரிஷப ராசியிலேயே அதிகம் வியாபித்து இருப்பது மிகுந்த நன்மைகளையும், சிறந்த வருமான வாய்ப்புகளையும், வாக்கு அல்லது பேச்சு திறமையின் மூலம் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும்.

தங்களது சுய ஜாதக அமைப்பின் படி எதிர்வரும் சனி திசை இலக்கின பாவக பலனையே ஏற்று நடத்துவதால் சிறந்த உடல் மற்றும் மன நிலையை தரும், எடுக்கும் காரியங்களின் வெற்றியையும், கீர்த்தியையும் தரும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும், எனவே சனி திசை தங்களுக்கு தீமையை செய்யும் என்ற பொய்யான ஜாதக பலன்களை நம்பி, சிறந்த எதிர்கால வாழ்க்கையை தாங்களே கெடுத்து கொள்ள வேண்டாம், வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான ஆயத்த வேளைகளில் ஸ்திரமாக பணியாற்றி நன்மையை பெறுங்கள்.

தங்களது ஜாதக ரீதியான மேற்கண்ட பலன்களுக்கு முறையான ஜோதிட ஆலோசனை, நேரிலோ அல்லது மின் அஞ்சல் வழியாகவோ முறையாக பெற்று கொள்ளவும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696