ஏகதிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏகதிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜூன், 2024

கூட்டுதிசை - திசாசந்தி ராகுதிசை இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறுவது திருமண வாழ்க்கையை பாதிக்குமா?

 

 கூட்டுதிசை அல்லது திசாசந்தி (மணமகன் மணமகள்) இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறுவது திருமண பொருத்தம் அற்ற நிலையையோ அல்லது இல்லற வாழ்க்கையில் பாதிப்பையோ தருமா ?

 கூட்டுதிசையோ அல்லது திசாசந்தியோ மணமகன் மணமகள் ஜாதகத்தில் இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறும் பொழுது இருவருக்கும் நடைபெரும் தசா அல்லது எதிர்வரும் தசைகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் திருமண வாழ்க்கை அல்லது இல்லற வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிப்பை தாராது, மாறாக வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மிகுந்த பாதிப்பை தரும், தசாசந்தி அல்லது ஏகதசை நடைபெறாத சூழ்நிலையிலும் வரன் வதுவுக்கு நடைபெறும் தசா புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது திருமண வாழ்க்கையில் இன்னல்களையும், இல்லற வாழ்க்கையில் கடுமையான பாதிப்பையும் தரக்கூடும் என்பது உண்மை நிலை, எனவே தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்திலும் நாம் கவனிக்க வேண்டியது சுய ஜாதக வலிமையோ அன்றி, ஏகதிசை, கூட்டுதிசை, திசாசந்தி, செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், களத்திரதோஷம், மாங்கல்யதோஷம் போன்ற சுய ஜாதக வலிமைக்கு புறம்பான விஷயங்கள் அல்ல என்பதை அன்பர்கள் உணருவது அவசியம், இதை ஓர் உதாரண ஜாதகங்கள் கொண்டு உண்மையையும் தெளிவையும் பெறுவோம் அன்பர்களே !

மணமகள் ஜாதகம் : 
 

லக்கினம் : ரிஷபம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 4ம் பாதம் 

 ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் மிக வலிமையாக இருப்பதுடன் தற்போழுது நடைபெறும் செவ்வாய் தசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான அமைப்பாகும், ஜாதகிக்கு செவ்வாய் தசை தான் கற்ற கல்வி வழியில் இருந்தும், குலதெய்வ ஆசிகள் வழியில் இருந்து  மிகப்பெரிய அளவிலான யோக வாழ்வை நல்கும் என்பது கவனிக்க தக்கது மேலும் எதிர்வரும் ராகு தசையும் வலிமை பெற்ற 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகிக்கு தொடர்ந்து சுபயோகங்களை 5,11ம் பாவக வழியில் வாரி வழங்கும், அதன் பின் வரும் குருமகா தசையும் 2,6,8ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக வழியில் சுபயோகங்களை வாரி வழங்குவது இல்லற வாழ்க்கையில் தன்னிறைவான யோக வாழ்வையே நல்கும் அமைப்பாகும், அடுத்து மணமகன் ஜாதக நிலையை கருத்தில் கொள்வோம்.

மணமகன் ஜாதகம் :


லக்கினம் : மகரம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : உத்ராடம் 1ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் மிக வலிமையாக இருப்பதுடன், ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் மிக மிக வலிமையாக இருப்பது கவனிக்க தக்க விஷயம், இது ஜாதகருக்கான சுபயோக வாழ்வை உறுதி படுத்தும் அம்சமாகும், தற்போழுது ஜாதகருக்கு நடைபெறும் ராகு தசை 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக வாழ்வை நல்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகர் வாழ்வில் சுயமாக வெற்றி பெறுபவராகவும், ஆரோக்க்கியம் கல்வி தொழில் போன்ற அமைப்புகளில் சுய ஆளுமைத்திறன் நிறைந்தவராகவும் காணப்படுவார், மேலும் எதிர்வரும் குரு மகா தசையும் 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்வை தொடர்ந்து நல்குவதுடன், அதன் பின் வரும் சனி மகாதசை 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளையும். 2,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனையும் ஏற்று நடத்துவது மிகுந்த சுபயோகங்களை இல்லற வாழ்க்கையில் நல்கும், எனவே மணமகள் மற்றும் மணமகன் இருவரது சுய ஜாதகமும் மிக மிக  வலிமையுடன் இருப்பதுடன், நடைபெறும் எதிர்வரும் தசை புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது வெற்றிகரமான இல்லற வாழ்வை வழங்கும் யோக அமைப்பாகும் என்பதை தெளிவாக பதிவு செய்கிறோம்.

இப்படி பட்ட யோக ஜாதக அமைப்பை தசாசந்தி கூட்டுதசை ஏகதசை நடப்பு என்று உண்மைக்கு புறம்பான விஷயங்களை பதிவு செய்வது சுயஜாதக வலிமை நிலையை கருத்தில் கொள்ளாமல்  கூறப்படும் தவறான கருத்துக்கள் என்பதை பொதுமக்கள் உணர்ந்து விழிப்புணர்வு பெறுவது அவசியமாகும்.

 சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படும் திருமணபொருத்தம் இல்லற வாழ்க்கையில்  சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பதே உண்மை நிலை அன்பர்களே "வாழ்த்துக்கள்"

ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

சனி, 11 நவம்பர், 2017

திருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்குமா? ஏக திசை நடப்பு !


கேள்வி :

 அய்யா எனக்கும் எனது வாழ்க்கை துணைக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறோம், எங்களது ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் இருவருக்கும் புதன் திசை நடைபெறுவதால் " ஏக திசை நடப்பு " இதனால் இல்லற வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது விவாகரத்து நிச்சயம் என்று கூறுகின்றனர், நாங்கள் மீண்டும் இல்லற வாழ்க்கையில் இணைந்து வாழ வாய்ப்பு உண்டா ? தெளிவான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.


ஜாதகி

லக்கினம் : சிம்மம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம்


ஜாதகர்

லக்கினம் : மிதுனம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : பூசம் 1ம் பாதம்

தங்களது இருவரது ஜாதகத்திலும் ஏக காலத்தில் புதன் திசை நடைபெறுவது உண்மைதான், அதே சமயம் இருவருக்கும் நடைபெறும் புதன் திசை பாதிக்கப்பட்ட  பாவக பலனை ஏற்று நடத்துவதும் தங்களது இல்லற வாழ்க்கையில்  இன்னல்களை தரும் என்பதும் உண்மைதான் ஆனால் அது விவாகரத்தை தரும் என்பது முற்றிலும் தவறான கருத்து, தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் ஏக காலத்தில் நடைபெறும் ஒரே கிரகத்தின் திசை விவாகரத்தை தரும் என்பதெல்லாம் கற்பனையின் அதிஉட்ச நிலை என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை, தங்களது இருவரது சுய ஜாதகத்திலும் ஏக காலத்தில் நடைபெறும் புதன் திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு நிலையை பற்றி தெரியாமல் விவாரகாரத்து நடைபெறும் என்று  கூறிய விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது.

பொதுவாக கணவன் மனைவி இருவரது சுய ஜாதகத்திலும் நடைபெறும் ஏக திசை இன்னல்களை தரும் என்று கருதுவதும் தவறான அணுகுமுறையே, தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் நடைபெறும் ஏக திசை சுய ஜாதகத்தில் ஏற்று  நடத்தும் பாவக தொடர்புகளின் வலிமை மற்றும் அது தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டு தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும், தங்களது இருவரது சுய ஜாதகத்திலும் நடைபெறும் புதன் திசை தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டு தங்களுக்கான ஆலோசனையை ஜோதிடதீபம் கீழ்கண்ட வரிகளில் வழங்குகிறது.

ஜாதகிக்கு நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் : ( 28/03/2010 முதல் 28/03/2027  வரை )

 தங்களுக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை 5,9ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விறைய  ஸ்தான பலனை தந்துகொண்டு இருக்கின்றது, மேலும் தங்களது விறைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுகம் மற்றும் மாத்ரு ஸ்தானமாக அமைவது தங்களின் சுக போக வாழ்க்கையில் நிம்மதியின்மையை தருகின்றது, குறிப்பாக வாழ்க்கை துணையுடனான அந்தரங்க வாழ்க்கையில் சிறு சிறு மன சஞ்சலங்களை அனுபவிக்கும் நிலையை தருகின்றது, மேலும் நிம்மதி இன்மை அனைவராலும் தொல்லை தொந்தரவுகள் என்ற வகையிலும் பாதிப்பை தருகின்றது, 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ ஆசியின்மையையும், தெளிவான சிந்தனை இன்றி தவறான முடிவுகளை மேற்கொள்ளும் நிலையை தருகின்றது, குழந்தை பாக்கியம் இன்மை தங்களது இல்லற வாழ்க்கையில் ஓர் பிணைப்பை தாராமல் வெற்றிடத்தை ஏற்ப்படுத்துகிறது, 9ம் பாவக வழியில் இருந்து பித்ரு ஆசியின்மையின் காரணமாக இல்லற வாழ்க்கையில் சிரமங்களை தருகின்றது, அறிவார்ந்த செயல்பாடுகள் தங்களிடம் இல்லாத காரணத்தால் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று பகுத்தறிந்து செயல்படும் தன்மை குறைகிறது, இதனால் தங்களுக்கு வரும் ஆலோசனைகளை அப்படியே நம்பி வாழ்க்கை துணையுடன் பிரிந்து நிற்பது நல்லது அல்ல, மேலும் தங்களது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களின் குடும்ப வாழ்க்கையில், தங்களது பேச்சின் மூலம் பல இன்னல்களை ஏற்ப்படுத்தும், நிம்மதியின்மையைதரும், இது தங்களது ஜாதகத்தில் உள்ள குறை என்பதுடன், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது குடும்ப வாழ்க்கையில் நிச்சயம் சிரமங்களை தரும் அமைப்பாகும், இருப்பினும் தற்பொழுது நடைபெறும் புதன் திசை இருவருக்கும் பாதிக்கப்பட்ட குடும்ப ஸ்தான பலனை  ஏற்று நடத்தவில்லை என்பதால் இல்லற வாழ்க்கையில் பெரிய அளவிலான பாதிப்பை தாராது, மேலும் தங்களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது, தாங்கள் நல்ல வாழ்க்கை துணையை பெற்று  இருக்கின்றீர்கள் என்பதை தெளிவு படுத்துகிறது.

ஜாதகருக்கு நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் : ( 19 /03/2013 முதல் 19/03/2030  வரை )

தங்களது கணவரது ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் புதன் திசை 3,6,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விறைய ஸ்தான பலனை தருவது தங்களின் தாம்பத்திய வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களை  தரும் அமைப்பாகும், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நன்மைகளை அனுபவித்த போதிலும், 6ம் பாவக வழியில் இருந்து கடன், உடல் நல பாதிப்பு, எதிர்ப்பு என்ற வகையில் இன்னல்களையும், 12ம் பாவக வழியில் இருந்து திடீர் நஷ்டம், மன உளைச்சல் மற்றும் போராட்டம், வீண் கற்பனை என்றவகையில் இன்னல்களை தரும், இவரது ஜாதகத்திலும் குடும்ப  ஸ்தானம் பாதக ஸ்தான தொடர்பை பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது, இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தரும் அமைப்பாகவே படுகிறது, ஆனால் தாங்கள் இருவரது ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு வலிமை பெற்று இருப்பது தங்களுக்கு இல்லற வாழ்க்கையில் விவாகரத்தை தாராது, சிறு சிறு பிரிவுகள் நிச்சயம் வரும், தாங்கள் இருவரும் இதை உணர்ந்து தங்களது தாம்பத்திய வாழ்க்கையை புனிதமாக்கிகொள்வது தங்களது கையிலேயே உள்ளது என்பதை அழுத்தமாக பதிவு செய்ய " ஜோதிடதீபம் " விரும்புகிறது, மேலும் தங்களுக்கு வயதும் மிக மிக குறைவு என்பதால் தங்களைவிட வயதில் மூத்தோர்களிடம் ஆலோசனை பெற்று இல்லறவாழ்க்கை சிறப்பாக எதிர்கொள்ளுங்கள், தங்களின் வாழ்க்கை துணைக்காக சில பல விஷயங்களில் விட்டுகொடுத்து செல்வது தங்களின் எதிர்காலத்தை  சிறப்பாக அமைத்து தரும், தங்களின் எதிர்கால சந்ததிகளுக்கு சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை அமைத்து தரும், சிலர் கூறும் பிற்போக்கு தனமான சுய ஜாதகத்தில் இல்லாத, உண்மைக்கு புறம்பான வாதங்களை தங்களது நினைவில் நிறுத்தாமல், சிறப்பான தாம்பத்திய வாழ்க்கையை வாழுங்கள், தங்களின் இருவரது சுய ஜாதகத்திலும் பல பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பது தங்களின் இல்லற வாழ்க்கையில் பிரிவை தாராது என்று நம்பிக்கை கொள்ளலாம்.

 தங்களது இருவரது சுய ஜாதகத்திலும் அடுத்து வரும் கேது திசை தங்களுக்கு 8ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களை தரும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் எதிர் வரும் கேது திசை பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்தி சிறப்புகளை தர இருக்கின்றது என்பது வரவேற்கத்தக்க விஷயம், அடுத்து வரும் சுக்கிரன் திசையும் இருவருக்கு ஜாதகத்தில் ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறந்த எதிர்காலத்தை தரும் என்பதை கருத்தில் கொண்டு சிறப்பான தாம்பத்திய வாழ்க்கையை பெறுங்கள் வாழ்த்துக்கள்.

குறிப்பு :

தாங்கள் இருவருக்கும் தற்போழுது நடைமுறையில் புதன் திசை நடைபெற்றாலும் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தரும் என்பது மட்டுமே உண்மை, ஆனால் விவாகரத்தை தாராது என்பதை கருத்தில் கொண்டு இனிமையான இல்லற வாழ்க்கையை பெறுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 26 ஆகஸ்ட், 2017

திசாசந்திப்பும் ( ஏக திசை நடப்பு ) திருமண வாழ்க்கையும் !

 

 திருமண பொருத்தம் காண்பதில் தற்போழுது " திசாசந்திப்பு " எனும் புதுவித பொறுத்த நிர்ணயம் மிக பிரபல்யம் அடைந்து வருகின்றது, திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய இது அவசியம் என்பதனை வலியுறுத்தி கூறுகின்றனர், பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் அடிப்படையாக நட்ச்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் கண்டு, ஜாதகத்தில் ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம் மற்றும் களத்திர தோஷம் என்ற விஷயங்களை அலசி ஆராய்ந்த பிறகு மணமகனுக்கும், மணமகளுக்கும் ஏக காலத்தில் ஒரே திசை நடைமுறைக்கு வரும்பொழுது திசாசந்திப்பு எனும் விஷயம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது, அதாவது இருவருக்கும் ஒரே திசை சில வருடங்கள் முன்பின் நடைபெற்றால் தம்பதியர் வாழ்க்கை இன்னலுறும் என்பதும், இதனால் திருமண பொருத்தம் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, ஒருவேளை தம்பதியர் இருவருக்கும் ஒரே திசை நடைபெற்றால் ஏக காலத்தில் இன்னல்களையும், ஏக காலத்தில் நன்மைகளையும் அனுபவிக்க வேண்டி வரும் என்பது, பொருத்தம் காண வரும் அன்பர்களின் கேள்வியாகவும் இருக்கின்றது, உதாரணமாக மணமகனுக்கும் மணமகளுக்கும் முன்பின் குரு திசை நடைபெறும் காலத்தில் தம்பதியர் இருவரும் நன்மைகளையும், சனி திசை நடைபெறும் காலத்தில் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டி வரும் என்ற கருத்தை வரன் வதுவின் பெற்றோர்கள்  முன் வைக்கின்றனர்.

இது எந்த அளவிற்கு உண்மை என்பதனை இன்றைய பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு  சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வரன் ஜாதகம்


லக்கினம் : கன்னி
ராசி : கன்னி
நட்சத்திரம் : சித்திரை 2ம் பாதம்


வது ஜாதகம்


லக்கினம் : விருச்சிகம்
ராசி : ரிஷபம்
நட்சத்திரம் : ரோஹிணி 4ம் பாதம்

மேற்கண்ட தம்பதியர் இருவருக்கும் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை குரு திசை, திருமணம் 2015ம் வருடம் ஜூன் மாதம் நடைபெற்றது, தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் ஏக காலத்தில் குரு திசை நடைபெறுவதால் திருமணம் செய்ய வேண்டாம் என்ற கருத்தை அதிகம் பேர் பரிந்துரை செய்து இருக்கின்றனர், இருப்பினும் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியரின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை இனி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!  தம்பதியரின் இல்லறவாழ்க்கை மிகவும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கின்றது, மேலும் நல்ல ஆண் வாரிசும் அமைந்து இருக்கின்றது, தம்பதியர் இருவரும் புதிய வீடு ஒன்று விலைக்கு வாங்கி இருக்கின்றனர், எனவே இருவருக்கும் குரு திசை நடைமுறையில் இருப்பதால் சுபயோக பலன்கள் என்று எடுத்துக்கொள்ளலாம? என்றால் அது சரியாக வர வாய்ப்பில்லை காரணம் தம்பதியரில் வதுவுக்கு நடைபெறும் குரு திசை 10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தந்து கொண்டு இருக்கின்றது, வரனுக்கோ 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலனை லாப ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது,  எனவே குரு  திசை இருவருக்கும் நன்மையை செய்யும் என்ற வாதம் முற்றிலும் தவறாக போகிறது, அடுத்து வரும் சனி திசை தம்பதியர் இருவருக்கும் தரும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகிக்கு 26/02/2031 வரை நடைபெறும் குரு திசை தனது திசையில் 10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருகின்றது, ஜாதகருக்கு குரு திசை 09/04/2018 வரை நடைபெற்று 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருகின்றது, இருவருக்கும் அடுத்து வரும் சனி திசை ஜாதகிக்கு  5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனையும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும் தருகின்றது, ஜாதகருக்கு 2,6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஒரு வகையில் நன்மைகளையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிதம்மிஞ்சிய சுக போகங்களையும், 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தர தயார் நிலையில் உள்ளது, சனி திசை காலத்தில் ஜாதகி பாதக ஸ்தான வழியில் இன்னல்களையும், பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும் அனுபவிப்பார், ஜாதகர் சுக ஸ்தான வழியில் இருந்தும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும், விரைய ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும் அனுபவிப்பார் இதுவே மேற்கண்ட தம்பதியர் ஜாதகத்தில் சனி திசை தரும் பலாபலனாகும்.

மேற்கண்ட  தம்பதியர் இருவரது சுய ஜாதகப்படியும் நடைபெறும் குரு மற்றும் சனி திசை தம்பதியரின் இல்லற வாழ்க்கையை பாதிக்கும் வண்ணம் இல்லை என்பதே உண்மை நிலை, சுய ஜாதகத்தில் குறிப்பாக வதுவின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகளை கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே ( அதாவது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு ) தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும், மேற்கண்ட தம்பதியர் இருவரது சுய  ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் மிகவும்  வலிமையுடன் இருப்பதால் இல்லற வாழ்க்கை பாதிக்க சிறிதும் வாய்ப்பு இல்லை, குறிப்பாக தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது சிறப்பான இல்லற வாழக்கையை  தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, இல்லற வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்கள் வரும் அது எதார்த்தமான விஷயம், ஆனால் பிரிவு என்ற நிலையை தரும் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

உதாரண ஜாதகத்தில் நடைபெறும் ஏக திசை எனும் திசா சந்திப்பு  என்பது தம்பதியரின் இல்லற வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதனை "  ஜோதிடதீபம் " தெளிவாக பதிவு செய்ய விரும்புகிறது, மேலும் திசாசந்திப்பு, ஏக திசை நடப்பு என்பதெல்லாம் வரன் வதுவுக்கு நடைபெறும் ஒரே கிரகத்தின் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகின்றது என்ற உண்மை தெரியாத  நிலையிலும், தம்பதியரின் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகளின் வலிமை நிலை அறியாத நிலையிலும் கூறப்படும் கற்பனை கதையே அன்றி உண்மையில்லை என்பதனை அன்பர்கள் அனைவரும் உணர்வது அவசியமாகிறது, திருமண பொருத்தம் காணும்  பொழுது நட்ச்சத்திர பொருத்தம் மற்றும் தோஷங்களுக்கு முன்னுரிமை தாராமல், வரன் வதுவின் சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டு பொருத்தம் காணும் பொழுதும், தம்பதியருக்கு திசாசந்திப்பு எனும் ஏக திசை நடைபெற்ற போதிலும் கிரகங்களின் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின்  வலிமையை கருத்தில் கொண்டு பொருத்தம் காண்பதே திருமண வாழ்க்கையை  வெற்றிகரகமாக அமைத்து தரும்.

குறிப்பு :

 திசாசந்திப்பு என்பது தம்பதியர் இருவருக்கும் நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையின் தன்மையை பற்றி தெளிவு இல்லாத நிலையில் கூறப்படும் கற்பனையே, இதில் சிறிதும் உண்மையில்லை அன்பர்களே! திருமண பொருத்தம் காணும் பொழுது வரன் வதுவுக்கு ஏக திசை நடைபெற்ற போதிலும் நடைபெறும் ஏக திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று  நடத்தினால் தம்பதியர் வாழ்க்கையில் சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பதனை நினைவில் கொள்க, திருமண வாழ்க்கை வெற்றி பெற்ற தாம்பத்திய வாழ்க்கையாக மாற வரன் வதுவின் சுய ஜாதகத்தில்  உள்ள 1,2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமை நிலையே என்பதில் கவனத்தில் கொண்டு திருமண பொருத்தத்தை நிர்ணயம் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 6 மார்ச், 2017

தசா சந்திப்பும் ( ஏக திசை நடப்பு ) திருமண வாழ்க்கையும் !

 

 திருமண பொருத்தம் காணும் பொழுது தற்போழுது திசாசந்திப்பு அல்லது ஏக திசை நடப்பு பார்த்து திருமணம் செய்வது மிக முக்கியம் என்ற கருத்து திருமண பொருத்தம் காண்பதில், தற்போழுது பிரபல்யம் பெற்று இருக்கின்றது, இதன் தாக்கம் என்பது ஜாதக பொருத்தம் காணவரும் வரன்,வதுவின் பெற்றோரின் கேள்விகளில் இருந்தே உணர முடிகிறது, பொதுவாக திசாசந்திப்பு அல்லது ஏக திசை நடப்பு சார்ந்து இவர்கள் முன் வைக்கும் கேள்விகள், வரன், வது இருவருக்கும்  ஒரே நேரத்திலோ, சிலகால இடைவெளியிலோ திசாசந்திப்பு அல்லது ஏகதிசை நடப்பு ஆகிவற்றை சந்தித்தால், தம்பதியரின் வாழ்க்கையில் இன்னல்கள் வரும், இது பொருத்தம் அற்ற நிலை என்பதால் திருமணம் செய்வது உகந்தது அல்ல என்ற கருத்தை முன் வைக்கின்றனர், இதனால் இல்லற வாழ்க்கை பாதிக்கும் என்கின்றனர், இதைப்பற்றி இன்றைய பதிவில் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

அடிப்படையில் திசாசந்திப்பு அல்லது ஏகதிசை நடப்பு பொருத்தம் என்பது சுய ஜாதகத்தில் வரனுக்கும், வதுவுக்கும் நடைபெறும் ( ஒரே கிரகத்தின் திசை என்ற போதிலும் ) திசை சம்பந்தப்பட்ட இருவருக்கும், எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற உண்மை நிலை அறியாத போதே மேற்கண்ட திசாசந்திப்பு அல்லது ஏகதிசை நடப்பு பொருத்தம் என்ற குழப்பம் ஏற்படுவதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, வரனுக்கும் வதுவுக்கும் தற்போழுதும் , எதிர்காலத்திலும் நடைபெறும் திசாபுத்திகள் ( ஒரே திசையாக இருப்பினும் ) சுய ஜாதகத்தில் உள்ள வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்ற உண்மை நிலையை அறிந்து பொருத்தம் காண்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று கருதுகிறோம், கீழ்கண்ட தம்பதியரின் சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை,எதிர்வரும் திசைகள் தரும் பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

வரன் ஜாதகம் :

லக்கினம் : துலாம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம்4ம் பாதம் 

வது ஜாதகம் :
லக்கினம் : ரிஷபம் 
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவோணம்2ம் பாதம்.

மேற்கண்ட தம்பதியர் இருவரது ஜாதகத்திலும், தற்போழுது மற்றும் எதிர்வரும் திசை தரும் பலன்கள் :

ஜாதகருக்கு தற்போழுது ராகு திசை ( 09/05/2007 முதல் 08/05/2025 வரை ) நடைமுறையில் உள்ளது,  தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 7ம் வீடு  பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 10ம் வீடு ஜீவன  ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் யோக பலனை வழங்கி கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகருக்கு நடைபெறும் ராகு திசை களத்திர ஸ்தான வழியில் இருந்தும், ஜீவன ஸ்தான வழியில் இருந்தும் வலிமை  பெற்ற யோக பலன்களை தருவது சிறப்பான விஷயம்.

ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு தசை ( 18/05/2001 முதல் 18/05/2019 வரை ) தனது திசையில் 3,6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான அவயோக பலனை, பாதக ஸ்தான வழியில் இருந்து வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை அவயோக பலன்களை தருவது மிகுந்த இன்னல்களை  வீர்யம்,சத்ரு மற்றும் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து தரும் என்பது கவனிக்கத்தக்க  விஷயம்.

ராகு திசைக்கு அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் :

ஜாதகருக்கு ராகு திசைக்கு அடுத்து குரு தசை ( 08/05/2025 முதல் 08/05/2041 வரை ) நடைபெற இருக்கின்றது, நடைபெற இருக்கின்ற குரு திசை ஜாதகருக்கு 1,3,5,9ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தர இருக்கின்றது, மேலும் ஜாதகர் குரு திசை காலத்தில் 1,3,5,9ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுவது வரவேற்க தக்க அம்சமாகும்.

ஜாதகிக்கு ராகு திசைக்கு அடுத்து குரு தசை ( 18/05/2019 முதல் 18/05/2035 வரை ) நடைபெற இருக்கின்றது, நடைபெற இருக்கின்ற குரு திசை ஜாதகிக்கு 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தர இருக்கின்றது, மேலும் ஜாதகி 2,4,8,10ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுவது வரவேற்க தக்க அம்சமாகும்.

குரு திசைக்கு அடுத்து சனி தசை ( 08/05/2041 முதல் 08/05/2060 வரை ) நடைபெற இருக்கின்றது, நடைபெற இருக்கின்ற சனி திசை ஜாதகருக்கு 4ம் வீடு விரைய  ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, ஜாதகருக்கு அவயோக பலன்களை தர இருக்கின்றது, மேலும் ஜாதகர் சனி திசையில் சுக ஸ்தான வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், சுகபோக வாழ்க்கையில் இன்னல்களை அதிக அளவில் எதிர்கொள்வர் என்பது சனி திசையில் ஜாதகருக்கு இருக்கும் நெருக்கடி ஆகும்,

குரு திசைக்கு அடுத்து சனி தசை ( 18/05/2035 முதல் 18/05/2054 வரை ) நடைபெற இருக்கின்றது, நடைபெற இருக்கின்ற சனி திசை ஜாதகிக்கு 5,11ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் ஜாதகிக்கு மிகுந்த அவயோக பலன்களை தர இருக்கின்றது, மேலும் ஜாதகி சனி திசையில் பூர்வபுண்ணியம், லாபஸ்தானம் மற்றும் அயனசயன ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

மேற்கண்ட தம்பதியர் இருவருக்கும் முறையே தொடர்ந்து நடைபெறும் ராகு,குரு,சனி திசை தரும் பலன்கள் என்ன என்பது தெளிவாக தெரிந்து விட்டது, இனி திசாசந்திப்பு மற்றும் ஏகதிசைநடப்பு சார்ந்த குழப்பம் தீர்ந்து  ஓர் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

தம்பதியர் இருவருக்கும் நடைபெறும் திசை எதுவென்றாலும் சரி இருவருக்கும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும், அல்லது ஒருவருக்காவது வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்த வேண்டும், சில விட்டுக்கொடுத்து செல்லும் மனபக்குவத்தால் மணவாழ்க்கை சிறப்பிக்கும், இருவருக்கும் வலிமை அற்ற பாவக பலனையே, பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்தினால், திசாசந்திப்பு ஏகதிசை நடப்பு இல்லாத சூழ்நிலையிலும், திருமண  வாழ்க்கை நீடிக்காது மணமுறிவுக்கு அழைத்து செல்லும் என்ற உண்மையை அனைவரும் உணர்வது அவசியமாகிறது.

திசை தரும் பலாபலன்கள் பற்றி ஓர் தெளிவு ஏற்பட்டு இருக்கும் என்று நம்புகிறோம், இனி மேற்கண்ட தம்பதியரின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு உகந்த பாவக பொருத்தங்கள் உண்டா ? என்பதை சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் 

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய தம்பதியரின் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்கள் ( 2,5,7,8,12 )

ஆணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தை ( 7ம் வீடு ) தவிர மற்ற பாவகங்கள்  (2,5,8,12 ம் வீடுகள் ) கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

பெண்ணின் ஜாதகத்தில் குடும்பம்,களத்திரம் மற்றும் ஆயுள் பாவகத்தை ( 2,7,8 ம் வீடுகள் )  தவிர மற்ற பாவகங்கள் ( 5,12ம் வீடுகள் ) கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

எனவே அடிப்படையிலேயே பாவக பொருத்தம் இல்லை என்பதுடன், ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது இல்லற வாழ்க்கையில் பிரிவை நோக்கி அழைத்து சென்றுள்ளது, இதற்க்கு துல்லியமற்ற ஜாதக ஆலோசனை காரணமாக அமைந்துவிட்டது ( நட்ச்சத்திர பொருத்தம் 10க்கு ஒன்பது உண்டு என்று நிர்ணயம் செய்ததே தம்பதியரின் திருமணம் வாழ்க்கை தடுமாற காரணமாக அமைந்துவிட்டது.

குறிப்பு : 

சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையும், நடைபெறும் எதிர்வரும் திசைபுத்தி தரும் பலாபலன்களை கருத்தில் கொள்ளமல் திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வது தம்பதியரின் இல்லற வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பதால், சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு திருமண பொருத்தம் காண்பது இனிமையான இல்லற வாழ்க்கையை வழிவகுக்கும், தாம்பத்திய  வாழ்க்கையும் பரிபூர்ண நிலைய அடையும்.

வாழ்த்துக்கள் 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 2 ஜூலை, 2016

திருமண பொருத்தத்தில் ஏகதிசை சந்திப்பும், இனிமையான இல்லறவாழ்க்கையும் !


திருமண பொருத்தத்தில் வரன் மற்றும் வதுவின் ஜாதகங்களில் ஏககாலத்தில் இருவருக்கும், ஒரு கிரகத்தின் திசை நடைமுறையில் இருந்தாலோ, எதிர்காலத்தில் நடைமுறைக்கு வந்தாலோ, அது பொருத்தமற்ற ஜாதக அமைப்பாக கருதப்படுகிறது, இதனால் இல்லற வாழ்க்கையில் பிரிவு நிலை வர கூடும் என்று அறிவுறுத்தப்படுகிறது, மேலும் திருமண பொருத்தம் காணும் பொழுது ஏகதிசை நடைமுறையில் இருப்பின் எவ்வித இன்னல்களை தம்பதியர் அனுபவிக்க நேரும் என்பதை  கீழ்கண்டவாறு பட்டியல் இடுகின்றனர்.

1) வது வரன் ஜாதகத்தில், இருவருக்கும் ஒரே கிரகத்தின் திசை நடைமுறையில் இருப்பின், தம்பதியருக்கு ஒரே மாதிரியான பலன்கள் நடைபெறும், சுப கிரகத்தின் திசை எனில் இருவருக்கும் நன்மை நடைபெறும், அசுப கிரகத்தின் திசை எனில் இருவருக்கும் தீமையான பலனே நடைபெறும், மேலும் எதிர்காலத்தில் இதே நிலை தொடரும்.
2) தம்பதியரின் வாழ்க்கையில் ஒற்றுமை இருக்காது பிரிவை தரும், மனவாழ்க்கை சிரமத்தை தரும்.
3) திருமணத்திற்கு இது பொருத்தம் அற்ற நிலையை தரும்.
4) குழந்தை பாக்கியத்தில் தடையை தரும்.
5) தம்பதியரின் வாழ்க்கையில் பொருளாதார சிக்கல்கள் அதிக அளவில் வரும்.
6) உடல் மனம் மற்றும் பொருளாதார சிக்கல்களை தம்பதியர் இருவரும் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.
7) மறுமணம் செய்யும் சூழ்நிலைக்கு இருவரையும் ஆளாக்கும்.

வது வரன் ஜாதகத்தில் ஏக காலத்தில் ஒரு கிரகத்தின் திசை நடைபெறுமாயின், மேற்கண்ட காரணங்கள் தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு வரும் என்பதால் திருமண பொருத்தம் இல்லை என நிராகிக்கின்றனர், இதைப்பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, கீழ்கண்ட உதாரண ஜாதகங்களை துணைகொண்டு.

வரன் ஜாதகம் 


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

தற்போழுது நடைபெறும் திசை  : குரு ( 10/07/2007 முதல் 10/07/2023 வரை )

வது ஜாதகம் 



லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 4ம் பாதம் 

தற்போழுது நடைபெறும் திசை  : குரு ( 23/02/2014 முதல் 23/02/2030 வரை )

மேற்கண்ட ஜாதகங்களுக்கு பொருத்தம் பார்த்த பொழுது, ஜாதகரின் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்ட விஷயம் யாதெனில், ஜாதகத்தில் இருவருக்கும் தற்போழுது குரு திசை நடைபெறுகின்றது, எனவே ஏக திசை நடைபெறுவதால் திருமண பொருத்தம் இல்லை, மேலும் அடுத்து வரும் சனி திசை இருவருக்கும் அதிக துன்பத்தை தரும், மணமகனுக்கு  சனி திசை ஆரம்பித்தவுடன் ( 10/07/2023) திருமண வாழ்க்கையில் பிரிவை தரும் என்பதால் இருவருக்கும் பொருத்தம் இல்லை, எனவே திருமணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

பொதுவாக திருமண பொருத்தம் காணும் பொழுது மேற்கண்ட கூற்று  ( ஏகதிசை பொருத்தம் ) கடந்த சில வருட காலமாக பிரபல்யம் அடைந்து வருகிறது, தம்பதியர் இருவருக்கும் தற்ப்பொழுதோ, எதிர்காலத்திலோ ஒரு கிரகத்தின் திசை ஏக காலத்தில் நடைமுறைக்கு வந்தால் இல்லற  வாழ்க்கைக்கு உகந்ததல்ல, நிச்சயம் பிரிவை தரும் என்ற கருத்து ஜோதிட உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் மேற்சொன்ன  7 காரணங்களையும் தவறான கருத்தாகவே உள்ளது என்பதை தெளிவு படுத்த விரும்புகிறது.

மேற்கண்ட இருவரது ஜாதகத்திலும் உள்ள உண்மை நிலையை பற்றி சிந்தனைக்கு  எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வரனின் ஜாதகத்தில் நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் :

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை 5ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகுந்த நன்மைகளை  தான் கற்ற கல்வி வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியாகவும், உபய மண் தத்துவ அமைப்பிலும் உள்ளது, ஜாதகரின் வெற்றிகரமான யோக வாழ்க்கையை தெளிவுபடுத்துகிறது, ஒரு  நல்ல நிறுவனத்தில்  கை நிறைவான வருமானத்துடன் ஜாதகர் சிறப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றார் என்பதை தெளிவு படுத்துகிறது, எனவே ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை லாபஸ்தான பலன்களை வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் :

ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை 6,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அபரிவிதமான யோக பலன்களை தந்து கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகி 6ம் பாவக வழியில்  இருந்து குறுகிய கால வெற்றிகளையும், திடீர் அதிர்ஷ்டங்களை, பெறுபவர் என்பதையும், 9ம் பாவக வழியில் இருந்து தமது சுய அறிவு கொண்டு கற்ற கல்வி வழியில் இருந்து மிகுந்த நன்மைகளையும் யோகங்களையும் பெறுவதை குறிக்கிறது, மேலும் ஜாதகியின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியாகவும், சர நெருப்பு தத்துவ  ராசியில் இயங்குவதால் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் ஜாதகியை பிரகாசிக்க செய்யும் அதன் வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களும் ஜாதகிக்கு நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்க தக்கது, மேலும் முன்னோர்கள் ஆசிர்வாதமும் ஆன்மீக பெரியோர்களின் ஆசியும் ஜாதகிக்கு மிகப்பெரிய புகழையும், பெருமைகளையும் கொண்டு வந்து சேர்க்கும்

வரனின் ஜாதகத்தில் அடுத்து வரும் சனி திசை தரும் பலன்கள் :

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சனி திசை பலனை தருவது, ஜாதகருக்கு வாக்குவாத தன்மையை அதிகரிக்கும், வருமானம் மேலோங்கும், வீண் செலவுகளை தவிர்க இயலாது, 8ம் பாவாக  வழியில் இருந்து பூரண ஆயுளை தரும், மேலும் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாக, உபய காற்று தத்துவத்தில் அமைவது ஜாதகருக்கு எடுக்கும் முயற்சசிகளில் வெற்றிகளையும், திடீர் அந்தஸ்த்தையும் தரும், எனவே சனி திசை ஜாதகருக்கு 30% விகித  இன்னல்களையும், 70% விகித நன்மையையும் தரும் என்பதால் மன வாழ்க்கையில் நிச்சயம் பிரிவு வாராது. ஆயுள் பாவகம் உபய ராசி என்பதால் இன்னல்கள் பெரிய பாதிப்பை தாராது.

வதுவின் ஜாதகத்தில் அடுத்து வரும் சனி திசை தரும் பலன்கள் :

1,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், யோக பலனை தருவது, ஜாதகிக்கு 1ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமும்,லாபமும், 11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டமும், தன்னம்பிக்கை மிக்க மன ஆற்றலையும், முற்போக்கு சிந்தனையையும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை மூலம் மிகுந்த நன்மைகளையும், வாழ்க்கை துணையுடன் சந்தோஷமான யோக வாழ்க்கையையும், 10ம் பாவக வழியில் இருந்து கவுரவம் மிக்க வாழ்க்கையையும், தேடிவரும் அந்தஸ்த்தையும் ஒருங்கே பெரும் யோகத்தை தரும், மேலும் ஜீவன வழியில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றங்களையும் வாரி வழங்கும் என்பதால் இந்த ஜாதகங்களை திருமணத்தில் இணைக்கும் பொழுது இல்லற வாழ்க்கை நிச்சயம் இனிக்கும் என்பதில் மாற்றம் இல்லை, இதுவே மேற்கண்ட இருவரது ஜாதகத்திலும் உள்ள உண்மை நிலை.

பட்டியல் இட்ட 7  கருத்துக்களுக்கு உண்மை விளக்கங்கள் :

1) வது வரனின் ஜாதகத்தில் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையில் இருந்தால், இருவருக்கும் நடக்கும் சம்பந்தப்பட்ட கிரகத்தின் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, ஏனெனில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது  என்ற அடிப்படை விஷயம் தெரிந்தால் மட்டுமே அது நன்மையை செய்கிறதா? தீமையை செய்கிறதா என்பதில் தெளிவு பெற இயலும், சுப கிரகத்தின் திசை நன்மையை செய்யும் என்று கருதுவதும், அசுப கிரகத்தின் திசை தீமையை செய்யும் என்று கருதுவதும் ஜோதிட உண்மைக்கு புறம்பான கருத்தாக அமையும், மேலும் ஒரு கிரகத்தின் திசை இருவருக்கும் நடைபெற்றால் இருவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடைபெறும் என்று நினைப்பதும் ஜோதிட உண்மைக்கு புறம்பானதே.

2) தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவை தரும் என்பது முற்றிலும் தவறான கருத்து, தம்பதியரின் இருவரின் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே இல்லற வாழ்க்கையில் பிரிவு வரும், அதுவும் நடைபெறும் திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இது சாத்தியம். சுய ஜாதகத்தில் இருவருக்கும் 2,7ம் வீடுகள்  வலிமை பெற்று இருப்பின் பிரிவு என்ற நிலை வர வாய்ப்பே இல்லை என்பது கவனிக்கத்தக்க அமசமாகும்.

3) தம்பதியர் இருவருக்கும் நடைபெறும் ஒரே கிரகத்தின் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நிச்சயம் பொருத்தம் உண்டு, 

4) குழந்தை பாக்கியத்திற்கும் திசாபுத்திக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை, சுய ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை தரும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருந்தால், நடைபெறும் திசை வலிமை அற்ற பலனை நடத்தினாலும் தம்பதியருக்கு நல்ல குழந்தை பேறு அமையும், மேற்கண்ட இருவரது சுய ஜாதகத்திலும் 5ம் பாவகம் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது.

5) பொருளாதார சிக்கல்களுக்கும் நடைபெறும் ஏக திசை பலாபலன்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, ஏனெனில் சுய ஜாதகத்தில் பொருளாதார நன்மை தீமைகளை தருவதற்கு பாவக வலிமையே காரணமாக அமையும்.

6) சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே மேற்கண்ட இன்னல்கள் வரக்கூடும், மேற்கண்ட ஜாதகங்களில் இந்த பாவகங்கள் நல்ல வலிமையை பெற்று இருக்கின்றது.

7) சுய ஜாதகத்தில் 1,2,5,7,8ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே மறுமணம் அமையும், அதற்கும் 11ம் பாவகம் வழிகாட்ட வேண்டும்.

குறிப்பு :

திருமண பொருத்தம் காணும் பொழுது வரன்வதுவின் ஜாதகங்களில், ஏகதிசை நடைமுறையில் இருந்தால், நடைபெறும் திசை, எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெற்று பொருத்தம் நிர்ணயம் செய்வதே சாலச்சிறந்தது, மேலும் இருவருக்கும் ஏகதிசை நடைமுறையில் இருந்தால் பொருத்தம் இல்லை என நிர்ணயம் செய்வது, வது வரனின் ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் ஏற்றுநடத்தும் பாவக வலிமையை பற்றியும், அவை தரும் நன்மை தீமையை பற்றியும் சிறிதும் அறியாமல் செய்யும் முடிவே அன்றி வேறு எதுவும் உண்மை இல்லை அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வியாழன், 14 ஏப்ரல், 2016

திசா சந்திப்பும், ஏகதிசை நடப்பும் தம்பதியர் வாழ்க்கையில் பிரிவை தருமா?

 
 
திருமண பொருத்ததில் அதிமுக்கியமான பொருத்தமாக கருதபடுவது, ஏக திசை நடப்பு எனும் திசா சந்திப்பு என்றால் அது மிகையில்லை, அதாவது வரணுக்கும் வதுவுக்கும் தற்பொழுதோ, எதிர்காலத்திலோ ஏக திசை நடைமுறைக்கு வருமாயின், தம்பதியரின் வாழ்க்கையில் புயல் அடிக்கும், திருமண வாழ்க்கை மன முறிவை நோக்கி இழுத்து செல்லும், எந்த ஒரு விஷயத்தாலும் தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு என்ற நிலையை தடுத்து நிறுத்தி விட முடியாது, எனவே திருமண பொருத்தம் காணும் பொழுது எந்த பொருத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திசா சந்திப்பு எனும் ஏக திசை நடப்பு இல்லாமல் பார்த்து கொள்வது தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு நிலையை தாராது, ஏனெனில் தம்பதியருக்கு எதிர்வரும் காலங்களில் குரு திசை, மற்றும் சனி திசை ஏக காலத்தில் நடைபெறும் என்பதால், குரு திசையில் தம்பதியருக்கு இடையே பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்புள்ளது, சனிதிசை மிகுந்த தீமையை செய்யும் என்பதால், சனி திசையில் தம்பதியருக்குள் பிரச்சனை ஏற்ப்பட்டு நிச்சயம் பிரிவை தரும், சனி பகவானின் திசை என்றாலே தீமையைதான் செய்யும் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை, எங்களது தலை சிறந்த ஜாதகத்தின் கணிப்பை மீறி திருமண செய்தால், அதற்க்கு பிறகு வரும் இன்னல்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

என்று பொருத்தம் பார்க்க சென்ற உங்களை மிரட்டினால், துண்டை காணம் துணிய காணம் என்று ஓட்டம் பிடிப்பீர்களா? மாட்டீர்களா ? இவர்களது ஜாதக பொறுத்த கணிதத்தில் கல்லை கொண்டுதான் அடிக்க வேண்டும், மேற்கண்ட வாதத்திற்கு உற்பட்ட வது வரனின் ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை ஆய்வு செய்வோம் அன்பர்களே ! இவர்களின் கூற்படி தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றால் வாழ்க்கையில் ஏக திசை நடைபெறும் காலத்தில் திருமண வாழ்க்கையில் பிரிவை தருமா? குரு,சனி திசை தம்பதியருக்கு இன்னல்களை தருமா? என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

வரன் ஜாதகம் :

லக்கினம்: சிம்மம்
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம் 

வது ஜாதகம் 


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம் 

வரனின் ஜாதகத்தில் தற்பொழுது குரு திசை நடைமுறையில் உள்ளது, வதுவின் ஜாதகத்தில் தற்பொழுது ராகு திசை நடைமுறையில் உள்ளது,

இருவருக்கும் நடைபெறும் திசை தரும் பலன்கள் பற்றி சிந்திப்போம் :

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை 2,6,8,12ம் வீடுகள் ஜீவன  ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வருமான வாய்ப்புகளையும், சிறந்த பேச்சு திறமையையும்,  இனிமையான குடும்ப வாழ்க்கையையும் தரும், 6ம் பாவக வழியில் இருந்து பதவியில்  வெற்றி, பதவி உயர்வு, அதிகாரிகள் உதவி, சொந்த முயற்ச்சியில் வெற்றி பெரும் யோகம், நல்ல உடல் நிலை, சிறப்பான பொருளாதார வளர்ச்சியை தரும், 8ம் பாவக வழியில் இருந்து நல்ல பொருளாதார முன்னேற்றத்தை  விரைவில் அடைதல், வசதிமிக்க உத்தியோகம், திடீர் பதவி உயர்வு, வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் என்ற  வகையில் யோகத்தை தரும், 12ம் பாவக வழியில் இருந்து எதிரிகள் சூல்சியே ஜாதகருக்கு சாதகமாக மாறி நன்மையை செய்யும், நல்ல அயன சயன சுகத்தை தரும், திடீர் பதவி உயர்வு, தொழில் துறையில் திடீர்  முன்னேற்றம், மன நிம்மதியான வாழ்க்கை என்ற வகையில் குரு திசை ஜாதகருக்கு யோகத்தை  தரும்.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் ராகு தசை 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள் வெளிவட்டார பழக்க வழக்கம் மூலம் பெயரும் புகழும் கிடைத்தல், நல்ல வாழ்க்கை துணை கிடைத்தல், வாழ்க்கை துணை வழியில் இருந்து யோக வாழ்க்கை, பொதுமக்கள் ஆதரவு, சமூகத்தில் பெயரும் புகழும் கிடைத்தல் என்ற வகையில் யோகத்தை தரும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் குரு திசை 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4ம் பாவக வழியில் இருந்து நல்ல சுக  போகங்களையும், நிறைவான சொத்து சுக சேர்க்கை மற்றும் வண்டி வாகன  யோகத்தையும் ஸ்திரமாக வாரி வழங்கும், 10ம் பாவக வழியில் இருந்து திடீர் தொழில் முன்னேற்றங்களையும், கெளரவம் குறையாத யோக வாழ்க்கையையும், ஜீவன வழியில் இருந்து நல்ல முன்னேற்றங்களையும்,  நிலையான பதவியையும், தொழில் துறையில் நல்ல  முன்னேற்றத்தையும் தரும், எனவே வரன் வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் குரு திசை மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்கும் என்பது தெளிவாகிறது.

அடுத்து வரும் சனி திசை வரன் வதுவுக்கு தரும் பலாபலன்கள் :

ஜாதகருக்கு அடுத்து வரும் சனி திசை 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், ஜாதகர் சனி திசை காலங்களில் பதவியில் வெற்றி, செய்யும் தொழில் அபிவிருத்தி, திடீர் முன்னேற்றம், தான் செய்யும்  காரியங்களில் நல்ல முன்னேற்றம், எதிர்ப்புகள் அகலும் தன்மை, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் யோகம், திடீர் அதிர்ஷ்டம் என்ற வகையில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் சனி திசை 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது, ஜாதகிக்கு தனது கணவன் வழியில் இருந்து அனைத்து நன்மைகளையும் வாரி வழங்கும், தாம்பத்திய வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை தரும், மக்கள் செல்வாக்கும், ஆதரவும் ஜாதகிக்கு மிகுந்த பெயரையும் புகழையும் பெற்று தரும், தனது வாழ்க்கை துணையுடன் இணைபிரியா யோக வாழ்க்கையை சனி மஹா திசை வாரி வழங்கும் .

இதுவே மேற்கண்ட 2 ஜாதகத்தில், குரு,சனி மகா திசை வழங்கும் பலாபலன்கள் ஆகும், இந்த உண்மைக்கு மாறாக பதிவின் ஆரம்பத்தில் மற்றவர்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் தேவையற்ற வீண் மன பயத்தையே தரும் என்பதை "ஜோதிடதீபம்" வரன்,வதுவின் உறவுகளுக்கு தெளிவு படுத்தியது.

நவ கிரகங்கள் தனது திசை புத்தி காலங்களில் தரும் பலாபலன்கள்  பற்றிய தெளிவு இல்லாத பொழுதே இதுபோன்ற குழப்பங்கள் ஏற்ப்படும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது, சுப கிரகங்களின் திசாபுத்திகள் அனைத்தும் நன்மையை செய்துவிடுவதில்லை, அசுப கிரகங்களின் திசை புத்திகள் அனைத்தும் தீமையை செய்யும் என்பதும் முற்றிலும் தவறனா கருத்தாகவே உள்ளது, நவகிரகங்களின் திசா புத்திகள் அனைத்தும், சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே தமது திசை புத்திகளில் யோக அவயோக பலன்களை தருகிறது என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% விகிதம் ஜாதகருக்கு யோக பலன்களே நடைபெறும், மாறாக வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நடைபெறும் திசை புத்திகள் சுப கிரகத்தின் திசாபுத்திகள் என்றாலும், ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களையே வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 17 நவம்பர், 2014

ஏக திசை சந்திப்பும் திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்களும் !



  திருமண பொருத்தம் பார்ப்பதில் தற்பொழுது மிக பிரபலம் ஆகிக்கொண்டு இருக்கும் ஒரு வார்த்தை " ஏக திசை சந்திப்பு " அதாவது திருமண பொருத்தம் காண வரும் வது வரன் இருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்யும் ஜோதிடர்கள், வது வரனின் ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு எத்தனை இருக்கின்றது என்பதை உறுதி செய்துகொண்டு, இருவருக்கு தற்பொழுது நடைபெறும் திசை ஒரே கிரகத்தின் திசையாக இருப்பின், இந்த ஜாதகங்கள் பொருந்தாது என்று கூறி தவிர்க்க சொல்கின்றனர், இதை கேட்ட உடன் ஜாதகம் காண வந்தவர்களும் பொருத்தம் இல்லை என்று நினைத்து, திருமண பேச்சை அத்துடன் விட்டு விடுகின்றனர், இதன் உண்மை நிலையை இன்றைய பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


கிழ்கண்ட ஜாதகங்கள் இதற்க்கு முன் 3 ஜோதிடர்கள் ஆய்வு செய்து இருவருக்கும் ஒரே திசை நடைபெறுவதால் ( சுக்கிரன் திசை ) பொருத்தம் வராது என்று, வரனின் ஜாதகத்தில் 5ல் ராகு  இருப்பதால் புத்திர பாக்கியம் இருக்காது என்று காரணம் சொல்லி ஜாதகம் காண வந்தவர்களின் வயிற்றில் புளியைகரைத்து அனுப்பி விட்டனர், உண்மையில் இரு தரப்பினருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கும் முன்பு வரை மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்துள்ளனர் வதுவுக்கும் வரணுக்கும் பிடித்து விட்டதால் திருமணத்தை நடத்திவிடலாம் என்று, ஜாதகம் பார்க்க போன இரு தரப்பினருக்கும் இந்த பதிலால் கிலியடித்து, திருமணத்தையே நிறுத்தி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர், இவர்களை எமது நண்பர் விபரம் சொல்லி நம்மிடம் அழைத்து வந்தார், வது வரனின் ஜாதகத்தை தெளிவாக ஆய்வு செய்து இரு தரப்பினருக்கும் விளக்கத்தை எடுத்து உரைத்து, ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை தெளிவு படுத்தி திருமணம் நடத்தி வைத்தோம் அன்பர்களே !

ஜாதக ஆய்வு 

வரனின் ஜாதக நிலை :



வதுவின் ஜாதக நிலை :



மேற்கண்ட இரண்டு ஜாதகத்திலும் சுக்கிர திசை நடைமுறையில் இருக்கிறது, ஜோதிடர்கள் காரணமாக கூறியது இருவருக்கு ஒரே திசை நடைபெறுகிறது எனவே திருமணம் செய்ய கூடாது என்பது, இதற்க்கு ஜோதிடதீபம் கிழ்கண்ட வாறு  விளக்கம் தந்தது.

வரனின் ஜாதகத்தில் நடைபெறும் சுக்கிரன் திசை ( 30/03/2013 முதல் 30/03/2033 வரை )

 ஜாதகனுக்கு சுக்கிர திசை களத்திர ஸ்தானமான 7ம் வீடு , சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோகத்தை தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு 7ம் வீடு தொடர்பு பெரும் நான்காம் பாவகம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடாக அமைந்து சர நெருப்பு தத்துவ அமைப்பில் செயல்படுவதால், ஜாதகர் சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, ஒழுக்கம், நேர்மையான குணம், செய்யும் தொழில் தனது செயல்பாடுகள் மூலம் வெற்றி பெற்று சுய உழைப்பின் மூலம் வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை, நல்ல உடல் நிலை மற்றும் மன நிலையை பெரும் யோகம், மற்றவர் போற்றும் அருங்குணங்கள், சமுதாய அந்தஸ்து மற்றும் ஏற்றமிகு பெருவாழ்வை குறுகிய காலத்தில் ( சரம் ) பெரும் யோகத்தை தரும்.

வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் சுக்கிரன் திசை ( 16/12/2002 முதல் 16/12/2022 வரை )

 ஜாதகிக்கு சுக்கிரன் திசை 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோகத்தையே தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகிக்கு 7ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாக அமைந்து சர மண் தத்துவ அமைப்பில் நடைபெறுவதால், ஜாதகி பொறுமையான குணமும், சிறந்த உடல் நலமும், மற்றவர் போற்றும் பெருந்தன்மையையும் கொண்டிருப்பார், தனது நிதானமான செய்கையினாலும், பெரியோர்களின் ஆசிர்வாதமும் பாராட்டுகளையும் பெறுவார், இதில் கவனிக்க தக்க விஷயம் எதுவெனில் ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவத்திற்கு 10ம் வீடாகி ஜீவன ஸ்தானமான வருவது ஜாதகியை திருமணம் செய்துகொள்ளும் அன்பருக்கு! அளவில்லா ( சரம் ) தொழில் விருத்தியை வாரி வழங்கும், இதுவரை ஜீவனத்திர்க்கே சிரம பட்ட நபராக இருந்தாலும் சரி, இந்த வதுவை திருமணம் செய்த சில நாட்களிலேயே தொழில் ரீதியான அபிவிருத்தியை எதிர்பாரா வண்ணம் பெறுவார், அவரின் கௌரவமும் அந்தஸ்தும் சமுதாயத்தில் மேலோங்கும்.

மேற்கண்ட இருவரின் சுய ஜாதக ரீதியாக நடைபெறும் சுக்கிரன் திசை வரனின் ஜாதகத்தில் 4ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், வதுவின் ஜாதகத்தில் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும் வாரி வழங்குவது ஏக திசா சந்திப்பால் எவ்வித துன்பமும் நடைபெற வாய்ப்பில்லை, மேலும் இவர்கள் திருமணம் செய்துகொள்வதால் திருமண வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பது உறுதி, எனவே திருமண வாழ்க்கை மிகவும்  சிறப்பாக நடைபெற்று தம்பதியர் யோக வாழ்க்கையையே பெற்றார்கள் என்பது உறுதி செய்யபட்ட விஷயமாக இருக்கிறது அன்பர்களே !

இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை யோக பலன்களையே வழங்குவதால், ஏக திசை சந்திப்பு எப்படி தீமையை செய்யும் என்று ஜோதிடர்கள் நிர்ணயம் செய்தனர் என்பது எமக்கு புரியவில்லை, ஆக வதுவின் ஜாதகத்திலும், வரனின் ஜாதகத்திலும் நடைபெறும் சுக்கிரன் திசை எந்த பாவக பலனை தருகிறது என்று தெரியாத பொழுதே ஜோதிடர்களுக்கு இந்த குழப்பம் ஏற்ப்பட்டு இருக்கும், இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை வரனின் ஜாதகத்தில் 4ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், வதுவின் ஜாதகத்தில் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை, தருகிறது என்று தெரிந்து இருந்தால் இவர்கள் ஜாதக பொருத்தம் இல்லை என்று ஏக திசை சந்திப்பை காரணம் காட்டி இருக்க வாய்ப்பில்லை அன்பர்களே ! இந்த மாதிரி குத்து மதிப்பாக தவறாக ஜாதக பலன் சொன்னால், இதற்க்கு உண்டான வினை பதிவு, ஜோதிடர்களின் சந்ததியை பாதிக்கும் என்பதும் ஜோதிடர்களையும் பாதிக்கும் என்பதும் ஏன் இவர்களுக்கு புரியாமல் போய்விடுகிறது, நாம் காணும் ஜாதக கணிதம் குறைந்த பட்சம் நம்மை நம்பி வருபவர்களுக்கு நன்மை செய்யாவிட்டலும் பரவாயில்லை, தீமை நடைபெறாமல் இருப்பது முக்கியமல்லவா அன்பர்களே !

பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் வது வரன் ஜாதகத்தில் அடிப்படையாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருப்பது குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமுமே, இந்த இரண்டு பாவகமும் மிக வலிமையாக இருந்து நடைபெறும் திசை, எதிர்வரும் திசைகள் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் நிச்சயம் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாகவே அமையும், இத்துடன் 5ம் பாவகமும் இருவரின் ஜாதகத்தில் வலிமை பெற்று அமையும் பொழுது, நிச்சயம் சிறந்த புத்திர பாக்கிய யோகத்தை வாரி வழங்கிவிடும்.

பொருத்தம் இல்லை என்பதற்கு ஜோதிடர்கள் சொன்ன மற்றொரு காரணாம், " 5ல் ராகு புத்திர பாக்கியம் இல்லை " ஒருவரது ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருக்கிறாரா?  பாதிக்கபட்டு இருக்கிறாரா ? என்று ஆய்வு செயாமல், ராகு 5ல் அமர்ந்தால் புத்திர பாக்கியம் இல்லை என்று முடிவு செய்வது உண்மைக்கு புறம்பான ஒரு விஷயம் அல்லவா ? பொதுவாக ராகு 5ல் அமர்ந்து அந்த பாவகத்திர்க்கு அதிபதி சுக்கிரன்,குரு,வளர்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன் ( சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் அமர்ந்த நிலை) ஆகியோர் பொறுப் ஏற்றால் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் 100% வலிமை பெற்று விடும் ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகள் யாவும் ஆண் குழந்தைகளாகவே இருக்கும், ( ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவனம் செய்து வந்தால் ) ஆக மேற்கண்ட வரனின் ஜாதகத்தில் சுக்கிரன் வீடான ரிஷபத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு சிறந்த ஆண்வாரிசை வழங்குகிறார் என்பது உறுதியாகிறது, ஜாதகத்தில் உண்மையான விஷயங்கள் இப்படி இருக்க, இப்படி உண்மைக்கு புறம்பான ஜாதக பலன்களை சொல்லும் ஜோதிடர்களை என்ன செய்வது ? நாம் தான் தலையில் அடித்துக்கொள்ளவேண்டும்.

மேற்கண்ட சரியான உண்மையான விளக்கத்தை இரு தரப்பிற்கும் தெளிவாக சொன்ன பின்னரே இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர், தற்பொழுது தம்பதியருக்கு சந்தான பாக்கியம் கிட்டியாதாக நம்முடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர், வாழையடி வாழையாக அவர்களது குடும்பம் 16 வகை செல்வமும் பெற்று செழித்து ஓங்கட்டும், இந்த பெருமை எல்லாம் எனது குருவையே சாரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696