lucky லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
lucky லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஜூலை, 2012

பாவகங்களின் இரண்டு விதமான தன்மைகள் ! பகுதி 2



பாவகங்களின் இரண்டு விதமான தன்மைகள் பகுதி 1 தொடர்ச்சி...

ஏழாம் பாவகம்:

ஒருவரது ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு நல்ல இல்லற வாழ்க்கை துணை நிச்சயம் நன்றாக அமையும் , ஜாதகருக்கு சமுதாயத்தில் மிகசிறந்த நண்பர்கள் கிடைக்க பெறுவார், மக்களிடம் நல்ல செல்வாக்கு , கூட்டு தொழில்களில் சிறப்பான வெற்றி , நல்ல கூட்டாளிகள் , பல தொழில் செய்யும் யோகம் , வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வா வளம் , மிகசிறந்த அரசியல் பதவிகள் தானாக தேடிவரும் வாய்ப்பு, நல்ல சிந்தனை , நண்பர்களின் வழியில் ஆதாயம் , ஆதரவு , பொது காரியங்களில் நல்ல பெயர் எடுக்கும் ஆற்றல், என ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது ஜாதகத்தில் இந்த ஏழாம் பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக ஏழாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் திருமண வாழ்க்கை கேள்வி குறியாக மாறிவிடும் , பலதார மனம் அதனால் வாழ்க்கையில் மன நிம்மதி இழப்பு, தொழில் கூட்டாளிகளால் ஏமாற்றப்படும் சூழ்நிலை , வாழ்க்கை துணைவரால் வஞ்சிக்க படும் நிலை , நண்பர்களால் பாதிப்புக்கு ஆளாக வேண்டிய சந்தர்பம் சூழ்நிலை , பொது மக்களால் செல்வாக்கை இழக்கும் நிலைக்கு ஜாதகர் தள்ள படுவார் .


எட்டாம் பாவகம் :

ஒருவரது ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் , ஆரோக்கியமான உடல் அமைப்பு , வண்டி வாகங்களில் செல்லும்பொழுது பாதுகாப்பான பயணம் , எதிர்பாராத சொத்துகள் ஜாதகருக்கு கிடைக்க பெறுதல் , மாமனாரின் முழு ஆதரவு , மனைவி வழி திடீர் சொத்துகள் கிடைக்க பெறுதல் , இன்சுரன்ஸ் , வைப்பு தொகை மூலம் அதிக லாபம் , கூட்டு தொழில் திடீர் லாபம் முன்னேற்றம் , கூட்டாளிகளின் சொத்துகள் ஜாதகருக்கு கிடைக்க பெறுதல், மருத்துவம் சார்ந்த தொழில்களில் அபரிவிதமான முன்னேற்றம் , மக்கள் பணத்தை  முதலீடாக கொண்டு சுய முன்னேற்றம் பெரும் வாய்ப்பு , பண்ணை தொழில்களில் நல்ல வளர்ச்சி விவசாய தொழில்களில் முன்னேற்றம் என ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது ஜாதகத்தில் இந்த எட்டாம் பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக எட்டாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் திடீரென இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் , விபத்துகளில் பாதிப்பு ஜாதகருக்கு நிச்சயம் ஏற்ப்படும் , யாரை நம்பியும் அதிக முதலீடுகளை செய்வது தனக்கு தானே குழி பறித்து கொள்வதற்கு சமம், ஜாதகர் வாழ்க்கை துணையின் வழியில் இருந்து பொருளாதார சிக்கல்களை அதிகம் சந்திக்க வேண்டி வரும் , கூட்டாளிகளால் தனது சொத்துகளை இழக்க வேண்டி வரும் , ஜாதகர் ஏதாவது தீய பழக்கத்திற்கு அடிமை ஆளானால் வாழ்க்கை அவ்வளவுதான் மீண்டு வருவது குதிரை கொம்பு .


ஒன்பதாம் பாவகம் :

ஒருவரது ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு சமுதாயத்தில் மிகசிறந்த நல்ல பெயரும் , பெரிய மனிதர் என்ற மரியாதையும் கிடைக்கும் , தனது பரம்பரை பரம்பரையாக அனைவராலும் மதிப்பு மிக்க வாழ்க்கையை ஜாதகர் பெறுவார் , செல்லும் இடங்களில் எல்லாம் மதிப்பும் மரியாதையும் தானாக தேடிவரும் , மனதளவில் ஜாதகருக்கு பெருதன்மையான குணமும் , மற்றவருக்கு உதவும் மனப்பான்மையும் அமைந்திருக்கும் , தெய்வங்களின் அருள் ஜாதகருக்கு எப்பொழுதும் நிறைவாக குடிகொண்டு இருக்கும் மற்றவர்களின் வாழ்க்கையை மாற்றும் பேராற்றல் பெற்ற ஜாதக அமைப்பை பெற்றவர்கள் எனவே  ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது ஜாதகத்தில் இந்த ஒன்பதாம் பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக ஒன்பதாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் செய்யும் நன்மை கூட கெடுதலாக மாறி ஜாதகரை முடக்கிவிடும் , பொது காரியங்களுக்கு சென்றால் ஜாதகர் நிச்சயம் மன நிம்மதியை இழக்கும் சூழ்நிலை வரும் , தான் உண்டு தனது  வேலை உண்டு என்று இருப்பது ஜாதகருக்கும் நல்லது ஜாதகரை சார்ந்து  இருப்பவர்களுக்கும் நல்லது , குறிப்பாக அரசியல் சம்பந்தபட விஷயங்களில் ஜாதகர் தலை இடாமல் இருப்பது அனைவருக்கும் நல்லது .


பத்தாம் பாவகம் :

ஒருவரது ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் , ஜாதகருக்கு நல்ல ஜீவன வாழ்க்கை இயற்கையாக அமைந்து விடும் , பல தொழில்கள் செய்யும் பேராற்றல் சரியான வயதில் கிடைக்க பெறுவார் , தனது தகப்பனாரின் பரிபூரண ஆதரவு ஜாதகருக்கு என்றும் உண்டு , தனது தகப்பனார் வழியில் இருந்து ஜாதகர் 100 சதவிகித நன்மைகளை நிச்சயம் பெறுவார், சுய தொழில்களில் மிகவும் சிறப்பான முன்னேற்றங்களை ஜாதகர் பெறுவார் , எந்த தொழில் செய்தாலும் தனியாக நின்று வெற்றி பெறுவார் , இவரது நிழலில் பல குடும்பங்கள் வசதியாக வாழ்க்கை நடத்துவார்கள், சிறந்த தொழில் அதிபர் ஆகும் வாய்ப்பு ஜாதகருக்கு நிச்சயம் உண்டு எனவே,  ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது ஜாதகத்தில் இந்த பத்தாம் பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக பத்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் பாரதேச ஜீவனம் செய்ய வேண்டி வரும் , குடும்பத்தில் உள்ளவர்களை அனைவரையும் பிரிந்து வெளிநாடு , வெளியூர் சென்று வேலை நிமித்தமாக இருக்க வேண்டி வரும் , ஜாதகருக்கு வரும் வருவாய் அனைத்தும் விரையம் ஆகும் , ஜாதகர் சுய தொழில் செய்தால் அனைத்தும் தோல்வியை தரும் என்பதில் ஆச்சரியம் இல்லை , இந்த நிலையை பெற்றவர்கள் இளம் வயதிலேயோ அல்லது சிறு வயதிலேயோ தந்தையை இழக்க வேண்டி வருகிறது , மற்றவர் ஆதரவில் வளரும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் . இந்த அமைப்பை பெற்ற ஜாதகத்தை சார்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அதிககவனமுடன் இருப்பது நலம் அல்லது ஜோதிட ரீதியாக தீர்வு கண்டு கொள்வது நலம் .

பதினொன்றாம் பாவகம்:

ஒருவரது ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் , ஜாதகருக்கு அதிர்ஷ்ட தேவதையின் பரிபூரண அருள் எப்பொழுதும் நிறைந்திருக்கும், மனதில் நினைப்பவைகளை அனைத்தையும் பெரும் யோகம் கொண்டவர்கள், விலை மதிப்பில்லா செல்வ வளங்கள் யாவும் ஜாதகர் தனது வாழ்நாளில் கிடைக்க பெறுவார் , தன்னம்பிக்கை ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து இருக்கும் , எதிர்பார்க்கும் விஷயங்கள் யாவும் ஜாதகருக்கு தேடிக்கொண்டு வரும் , செய்யும் வேலை குறைவாகவும் , வரும் வருமானம் அதிகமாகவும் ஜாதகருக்கு கிடைக்கும் , வாழ்நாள் முழுவதும் எவ்வித குறைவுமின்றி ஜாதகர் யோகமான வாழ்க்கையை அனுபவிப்பார் , தனது இரண்டாவது மனைவி மூலம் ஜாதகர் விரைவான முன்னேற்றத்தை நிச்சயம் பெறுவார் , முதல் மனைவி ஜாதகருக்கு நன்றாக அமைவதில்லை, ஆக ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது ஜாதகத்தில் இந்த பதினொன்றாம் பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக பதினொன்றாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் வாழ்க்கையில் சுய உழைப்பினால் மட்டுமே முன்னேற்றம் பெற முடியும் , சரியான வயதில் கிடைக்க வேண்டிய விஷயங்கள் எதுவும் சரியாக கிடைக்காது , அனைத்தும் தாமாதபடும், இதனால் ஜாதாகர் தன்னம்பிக்கை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார், எதிர்பார்ப்புகள் அனைத்தும் தோல்வியை தரும் ஜாதகர் எதையும் எளிதில் பெற முடியாது போராட வேண்டியிருக்கும்.


பனிரெண்டாம் பாவகம் :

ஒருவரது ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் , ஜாதகருக்கு மனநிறைவான வாழ்க்கை நிச்சயம் உண்டு , நிம்மதியான துக்கம் கிடைக்க இந்த வீடு நல்ல நிலையில் இருப்பது அவசியம் , இவர்களின் சிந்தனை ஆரால் மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் , எவ்வளவு கடினமான வேலைகளையும் மிகவும் எளிதாக செய்யும் புத்திசாலித்தனம் கொண்டவர்கள் , மனதை ஒருநிலை படுத்தும் ஆற்றல் இவர்களுக்கு அதிகம் உண்டு , திடீர் என வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்திற்கு சென்றுவிடுவார்கள் , முதலீடுகள் செய்வதால் அதிக லாபம் பெற வேண்டுமெனில் இந்த பாவகம் நிச்சயம் நல்ல நிலையில் இருப்பது அவசியம், தனது ஆயுள் முழுவதும் சந்தோஷமாக வாழும் யோகம் பெற்றவர்கள் , இப்பிறப்பின் பயன் , மறு பிறவியை பற்றி இந்த பாவகம் நிச்சயம் ஜாதகருக்கே சுயமாக உணரும் தன்மை கிடைக்கும் ஆக ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது ஜாதகத்தில் இந்த பனிரெண்டாம் பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக பனிரெண்டாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் நிச்சயம் குடி பழக்கத்திற்கு அடிமை ஆகும் சூழ்நிலை ஏற்ப்படும், இதனால் ஜாதகரின் குடும்பம் நிச்சயம் பாதிக்க படும் , மற்றவரை சார்ந்தும் ,அண்டியும் பிழைக்க வேண்டி வரும் , மன நிம்மதிஎன்பது ஜாதகருக்கு நிச்சயம் கிடைக்காது, மன நோயினாலும் , மன அழுத்தம் , மன சஞ்சலத்தாலும் வாழ்க்கையில் தவறான பாதைக்கு சென்று மீளமுடியாமல் தவிக்க வேண்டி வரும் , துர் சக்திகள் ஜாதகரை ஆட்கொண்டு விடும், வாழ்க்கை ஒரு கேள்வி குறியாக மாறிவிட வாய்ப்பு உண்டு , இவர்கள் அனைவரும் நல்ல மன நல ஆலோசகரை சந்தித்து நன்மை பெறுவது அவசியம் .

இதிலிருந்து நாம் உணர்வது சுய ஜாதகத்தில் ஒவ்வொரு பாவகத்திர்க்கும் இரண்டு வித குணம் உண்டு , நல்ல நிலையில் உள்ள மறைவு ஸ்தானம் எனப்படும்  3 ,6 ,8 ,12  பாவகங்கள், இந்த பாவக பலன்கள் நடை பெரும் திசை, புத்திகளில் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து  நன்மை செய்யும்.
கேந்திர, கோணம் எனும் பாவகங்கள் சுய ஜாதகத்தில் பாதிப்படைந்தால் ஜாதகருக்கு தவறாமல், இந்த பாவக பலன்கள் நடை பெரும் திசை, புத்திகளில் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து  தீமையை தரும் என்பது, எவராலும் மறுக்க முடியாத உண்மை .
  
எனவே ஒரு ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை தருவதில் 
பனிரெண்டு பாவகங்களுக்கும் உரிமை உண்டு . நல்ல பாவகங்கள் அனைத்தும் நன்மை செய்யும் என்றும் , தீமையான பாவகங்கள் அனைத்தும் தீமையை செய்யும் என்பது முற்றிலும் தவறான கருத்து .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 4 ஜூலை, 2012

பாவகங்களின் இரண்டு விதமான தன்மைகள் ! பகுதி 1




பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் தீமையை தரும் பாவகங்கள் என்பவை  3 ,6 ,8 ,12 மட்டுமே என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது , மேலும் ஒரு ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து எவ்வித நன்மையையும் பெற முடியாது , அந்த பாவகங்கள் 100 சதவிகிதம் தீமையான பலனை மட்டுமே தரும் என்பதாக இருக்கிறது , மேலும் இந்த பாவகங்களில் அமரும் கிரகங்கள் யாவும் ஜாதகருக்கு தீமையை மட்டுமே செய்யும் , நன்மையை செய்யாது இதன் வழியில் இருந்து ஜாதகர் கெடுதலான பலனை மட்டுமே அனுபவிக்க வேண்டும் , இந்த பாவகத்திர்க்கு அதிபதியான கிரகங்களின் திசை புத்தி நன்மையை செய்யாது என்பதும் , இந்த பாவகத்தில் அமர்ந்த கிரகங்களின் திசை ,புத்தி நடந்தாலும் நன்மை செய்யாது என்பதாகவே இருக்கிறது , உண்மை என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம் .

லக்கினம்
:

ஒருவரது
ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு ஆரோக்கியமான உடல் அமைப்பு , பரந்த மனப்பான்மை ,நல்ல எண்ணங்கள் , நீண்ட ஆயுள் பலம் , சிறப்பான வசதி வாய்ப்புகள் , தான் வளரும் காலத்தில் சிறப்பான விஷயங்களை கருக்கொள்ளுதல் , நல்லவற சேர்க்கை என ஜாதகர் ஒரு சிறப்பான சூழ்நிலையில் வளரும் யோகத்தை பெற்று இருப்பார் . இதனால் ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது
ஜாதகத்தில் இந்த இலக்கின பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் என்பதே உண்மை இந்த இடத்தில் லக்கினம் நன்மையை செய்யாது இலக்கின அமைப்பில்  ஜாதகர் தீமையான பலனையே அனுபவிக்க வேண்டி வரும் .

இரண்டாம்
பாவகம் :

ஒருவரது
ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு சிறந்த அறிவாற்றல் , நல்ல ஞானம் , நிறைவான வருமானம் , மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை , மனைவி வழியில் இருந்து நன்மைகள் பெறுதல் , வாக்கின் வழி நன்மையான பலன்கள் , தனது வாக்கின் மூலம் வருமானம் , தடையில்லா அடிப்படை கல்வி , புதிய சொத்துகள் தனது சுய உழைப்பால் வாங்கும் சக்தி , வாக்கு பலிதம் என ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது
ஜாதகத்தில் இந்த இரண்டாம்  பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக இரண்டாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் வருமானத்திற்கு வாழ்க்கையில் அதிக போராட்டங்களை சந்திக்க வேண்டிவரும் , அல்லது மற்றவரை சார்ந்து சூழ்நிலை கைதியாக இருக்க வேண்டி வரும் , மேலும் தனது வாயாலேயே தனது வாழ்க்கையை கெடுத்து கொள்ளவார் .

மூன்றாம்
பாவகம் :

ஒருவரது
ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால்  ஜாதகரின் மன ஓட்டம் , எண்ணத்தின் தன்மை , மனோ நிலை ஆகியவை சிறப்பாக இருக்கும் , எடுக்கும் முயற்ச்சிகளில் வரும் வெற்றிகள் , சிறு பயணத்தால் வரும் யோகம் , ஜன ரஞ்சக எழுத்தாற்றல் , தொலை தொடர்புகளால் ஜாதகர் பெரும் நன்மைகள் , ஜாதகரிடம் உள்ள மன உறுதி , தன்னம்பிக்கை , சகோதர வழி நன்மைகள் , கற்பனை வளம் , மற்றவரிடம் நல்ல பெயர் எடுக்கும் தன்மை , மக்கள் செல்வாக்கு ,போட்டிகளில் வெற்றி என ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது
ஜாதகத்தில் இந்த மூன்றாம்  பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக மூன்றாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் தன்னம்பிக்கை அற்றவராகவும் , பயந்த சுபாவம் கொண்டவராகவும் , செய்யும் காரியங்களில் வெற்றி பெற முடியாமல் தடுமாற்றம் பெரும் அமைப்பும் , அதனால் விரக்தி மன நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலையும் ஜாதகருக்கு நிச்சயம் ஏற்ப்படும் .

 

நான்காம் பாவகம் :

ஒருவரது
ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு  குடியிருக்க நல்ல வசதிகளுடன் சொகுசு வீடு அமையும் , அந்த வீட்டில் ஜாதகர் இருக்கும் வரை அனைத்து செயல்களும் வெற்றி மேல் வெற்றி  என்ற பலனை தரும் , ஜாதகரின் குணம் மிகவும் சிறப்பாக காணப்படும் , அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவராக இருப்பார் , தனது தாயின் வழியில் இருந்து சகல யோகங்களும் பெறுவார் , நல்ல சொகுசு வாகனம் , சொத்து சுகம் ஆகியவை மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கும் எனவே ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது
ஜாதகத்தில் இந்த நான்காம் பாவகம்  பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக நான்காம் பாவகம்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் குடியிருக்க நல்ல வீடு அமையாது , ஜாதகர் மேல்நிலை கல்வி , அல்லது உயர் கல்வி தடை படும் . ஜாதகரின் குணம் சற்றே வருத்தம் அளிக்கும் வகையில் இருக்கும் . ஜாதகருக்கு சொத்து சுகங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க இயலாது .


ஐந்தாம் பாவகம் :

ஒருவரது ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு எப்பொழுதும் இறைஅருள் துணையிருக்கும் , தனது பூர்வீகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் , உதவி செய்ய அனைவரும் முன்வருவார்கள் , பூர்விக சொத்துகள் ஜாதகருக்கு நிச்சயம் கிடக்கும் , நல்ல குழந்தைகள் கிடைப்பார்கள், ஆண் வாரிசு உண்டு , ஜாதகர் நினைக்கும் அனைத்தையும் சாதிப்பார் , பெரிய மனிதர்கள் தொடர்பும் , தனது சொந்த ஊரில் நல்ல மதிப்பும் , மரியாதையும் ஜாதகருக்கு என்றும் கிடைக்கும், எனவே ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது ஜாதகத்தில் இந்த ஐந்தாம் பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக ஐந்தாம் பாவகம்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், ஜாதகர் தனது பூர்வீகத்தில் குடியிருக்க முடியாது உதவி செய்ய யாரும் முன் வரமாட்டார்கள் , ஆண் வாரிசு அற்ற நிலை , தேவையில்லாமல் மற்றவர்களுடன் சண்டை சச்சரவுக்கு செல்லுதல் , நிலையான புத்தி இல்லாமல் துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை , பரதேச ஜீவனம் அமைந்து விடும்.


ஆறாம் பாவகம் :

ஒருவரது ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் , நோயற்ற வாழ்க்கை , கடன் பெறுவதால், கொடுப்பதால் லாபம் , வாழ்க்கையில் வரும் சிறு அதிர்ஷ்டங்கள் , சட்டத்தின் வழியில் இருந்து ஜாதகருக்கு யோகம், வழக்குகளில் வெற்றி , எதிரிகளை வெற்றி கொள்ளும் திறமை , எதிரியின் சொத்து ஜாதகருக்கு கிடைக்க பெறுதல் , புத்திசாலி தனத்தால் அனைத்தையும் வெற்றி கொள்ளுதல் என்று ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது ஜாதகத்தில் இந்த ஐந்தாம் பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக ஆறாம் பாவகம்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், வாழ்நாள் முழுவதும் உடல் நல பாதிப்புகள் இருந்து கொண்டே இருக்கும் , எதிரிகளிடம் தனியாக மாட்டி கொண்டு விழிக்க வேண்டி வரும் , வம்பு வழக்கில் சிக்கி அதனால் ஜாதகரின் வாழ்க்கை கேள்வி குறியாக மாற வாய்ப்பு அதிகம், இவர்கள் தொடுக்கும் வழக்குகள் அனைத்தும் இவருக்கு பாதகமாகவே அமையும் .
தொடரும்.......


எனவே இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் எந்த ஒரு பாவகமும் நல்ல நிலையில் இருந்தால் ( அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்று இருந்தால் ) மட்டுமே நன்மையை செய்யும், இதற்க்கு மாறாக பாதிக்க பட்டு இருந்தால் எந்த பாவகமாக இருந்தாலும் அந்த பாவக வழியில் இருந்து ஜாதகர் கெடுதலான பலனை அனுபவிக்க வேண்டும் குறிப்பிட்ட பாவகங்களின் பலன்களை தரும் திசை புத்தி காலங்களில் என்பதே முற்றிலும் உண்மை .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696