நிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 மே, 2016

தொழில் ஸ்தானம் - ஜாதக ரீதியாக தமக்கு உகந்த தொழில் அல்லது வேலையை தேர்வு செய்வது எப்படி ?


" உத்தியோகம் புருஷ லட்சணம் " என்ற பழமொழிக்கு உதாரணமாக வாழும் மனிதர்களுக்கே இந்த சமுதாயமும், உறவுகளும் கௌரவம், அந்தஸ்து மற்றும் மரியாதைகளை நிச்சயம் வாரி வழங்குகிறது, கல்வி காலங்களுக்கு பிறகு சரியான ஜீவனத்தை தேடுவதில் அதிக ஆர்வம் இன்றைய இளைஞர்களுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை, இருப்பினும் சுய ஜாதக ரீதியாக தமக்கு உகந்த தொழில் அல்லது பணியை தேர்வு செய்யாத பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கை திசைமாறி செல்வதற்கு அதிக வாய்ப்புண்டு, எந்தவிதத்திலும் தமக்கு சம்பந்தம் இல்லாத துறையை தேர்வு செய்து, கடனுக்காக அந்த தொழிலை செய்வதை விட, தமக்கு உகந்த ஆர்வமுள்ள தொழில்களில் ஜாதகர் ஈடுபடும்  பொழுது, ஜாதகரின் முன்னேற்றமும் சிறப்பாக அமையும். 

மேலும் ஜாதகர் தனது வாழ்க்கையில் முழு ஈடுபாட்டுடன் செய்யும் தொழில் மற்றும் வேலை உலக புகழையும், தன்னிறைவான வசதி வாய்ப்புகளையும் வாரி வழங்கும், நல்ல ஜீவனம் அமைவது என்பது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் என்று அழைக்கப்படும் 10ம் பாவக வலிமையின் அடிப்படையிலேயே அமைகிறது, மேலும் 10ம் பாவக வலிமை சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், கௌரவம் மற்றும் அந்தஸ்த்தை தாம் செய்யும் தொழில் வழியில் இருந்தே நிர்ணயம் செய்வதால், ஜாதகர் சமூகத்துடன் கொண்டுள்ள தொடர்புகளையும், அதன் வழியில் இருந்து பெரும் யோக நிலையையும் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவக வழியில் இருந்தே 100% விகிதம் பெறுகின்றார்.

எந்த ஒரு ஜாதகரும் தமது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமைக்கு ஏற்ப ஜீவனத்தை அமைத்துகொள்வது ஜாதகரின் வாழ்க்கையில் தன்னிறைவான முன்னேற்றங்களை வாரி வழங்கும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சர ராசி, ஸ்திர ராசி மற்றும் உபய ராசி என்றும் நெருப்பு தத்துவம், நில தத்துவம், காற்று  தத்துவம் மற்றும் நீர் தத்துவம் என்றும் இயற்கையால்  வகைபடுத்தபட்டுள்ளது, எந்த ஒரு ஜாதகருக்கும் மேற்கண்ட ராசி மற்றும் தத்துவ அமைப்பிலேயே ஜீவன ஸ்தானம் அமையும், அப்படி அமையும் ஜீவன ஸ்தான வலிமையை முதலில் அறிந்துகொள்வது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உகந்த வெற்றியை தரும்  தொழில் அல்லது வேலையை துல்லியமாக தேர்வு செய்ய உதவி  புரியும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் ஜீவன ஸ்தானம் அமைந்த ராசி, ஜீவன ஸ்தானம் பெற்றுள்ள தத்துவம், ஜீவன ஸ்தானம் தொடர்பு பெற்றுள்ள பாவகம் ஆகியவற்றை கணிதம் செய்து மிக துல்லியமாக ஒருவரின் தொழில் அல்லது வேலையை நிச்சயம் நிர்ணயம் செய்ய இயலும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு சாதகமாக அமைந்தால் ( வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ) தாம் தேர்வு செய்த தொழில் அல்லது பணியில் ஜாதகர் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தரும், நடைபெறும் திசா புத்திகள் சாதகமாக அமையவில்லை என்றாலும் ஜாதகருக்கு சிறப்பான ஜீவனத்தை வழங்குவதில் தவறுவது இல்லை, ஜீவன வெற்றி என்பது சாதகமான  திசா புத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது மிக அபரிவிதமாக வாரி வழங்கிவிடும், இதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஜீவன பாவகம் தரும் பலனை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : தனுசு 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம் 

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவக வலிமை  நிலையை ஆய்வு செய்வோம் அன்பர்களே! ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியாக அமைகிறது, மேலும் உபய ராசி நில தத்துவம், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெறுவது தமது பாவகத்துடனே என்பது வரவேற்க தக்கது, மேலும் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் மற்ற வீடுகள் 7,10 ஆகும், எனவே ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையாக இருப்பது உறுதியாகிறது. 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகருக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் வழியில் இருந்து நன்மைகளை வாரி வழங்கும், இந்த இடத்தில் வாழ்க்கை துணை பற்றி குறிப்பிடுவதற்கு  காரணம், பெண்கள் நினைத்தால் தமது வாழ்க்கை துணையை மிகசிறந்த இடத்திற்கு எடுத்துசெல்லும் வல்லமை பெற்றவர்கள் என்பதை தெரிவிப்பதற்கே, மேலும் ஜாதகர் தமது திருமணத்திற்கு பிறகே வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் பெற்றார் என்பது கவனிக்க தக்கது, வீட்டில் நிம்மதி இருந்தால் மட்டுமே எந்த ஒரு ஆண்மகனும் தாம் செய்யும் தொழிலில் சிறந்து விளங்க முடியும்.

இயற்கையாகவே இந்த ஜாதகருக்கு 7ம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜீவன  உதவிகளையும் ஆதரவையும் பெற்று தந்தது, மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன  ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் இரண்டு, 
1) களத்திரம் என்று அழைக்கப்படும் 7ம் வீடு. 2) ஜீவனம் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 10ம் வீடு, ஜாதகரின் களத்திர ஸ்தானம் காலபுருஷ தத்துவத்திற்கு வீர்ய ஸ்தானமாகவும், ஜீவன ஸ்தானம் காலபுருஷ தத்துவத்திற்கு சத்ரு ஸ்தானமாகவும் அமைந்து மிகவும் வலிமை பெற்றுள்ளது.

 மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் உபய காற்று தத்துவத்திலும், சர நீர் தத்துவத்திலும் சம்பந்தம் பெறுகின்றது ( 7ம் பாவகம் மிதுன ராசியில் 072:16:00 பாகையில் ஆரம்பித்து, கடக ராசியில் 101:49:01 பாகையில் முடிவடைகிறது )  ஜாதகரின் ஜீவன ஸ்தானம் உபய நில தத்துவத்திலும், சர கற்று தத்துவத்திலும் சம்பந்தம் பெறுகின்றது ( 10ம் பாவகம் கன்னி ராசியில் 166:34:14 பாகையில் ஆரம்பித்து, துலாம் ராசியில் 197:34:04 பாகையில் முடிவடைகிறது ) எனவே ஜாதகருக்கு மேற்கண்ட தத்துவ அமைப்பில்தான் ஜீவனம் அமைய வாய்ப்புள்ளது, இயற்கையாகவே மிதுனம் உபய காற்று தத்துவம் என்பதால் ஜாதகரின் வியாபர அறிவை குறிக்கும், மிதுனம் ஜாதகருக்கு  7ம் பாவகமாக அமைவது வியாபாரம் மற்றும் வியாபாரத்தில் தமக்குள்ள அறிவு திறனை குறிக்கும், கன்னி உபய நில தத்துவம் என்பதால் பூமியில் விளையும் உணவு சார்ந்த பொருட்களை குறிக்கும், கன்னி ஜாதகருக்கு 10ம் பாவகமாக அமைவது, ஜாதகர் மண்ணில் விளைந்து மக்கள் உபயோகிக்கும் உணவு பொருட்களை வியாபாரமாக செய்வதை குறிக்கிறது, எனவே ஜாதகர் 7ம் பாவக வழியில் இருந்து அறிவார்ந்த வியாபாரத்தையும், 10ம் பாவக வழியில் இருந்து மண் தத்துவம் சார்ந்த உணவு பொருட்களை வைத்து வியாபாரம் செய்வதை தெளிவு படுத்துகிறது, மேலும்  மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் சார்ந்த வியாபாரத்தில், ஜீவன ஸ்தான வழியில் இருந்து தன்னிறைவான முன்னேற்றத்தை  பெறுவார் என்பதை அவரது சுய ஜாதகம் தெளிவு படுத்துகிறது.

1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர்  நல்ல வியாபர திறன் கொண்டவர் என்பதையும், 3ம் பாவக வழியில் இருந்து செய்கின்ற வியாபரத்தில் வெற்றிகளை தொடர்ந்து பெறுவார் என்பதையும் உறுதி செய்கிறது, இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் ஜாதகரின் 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது  குறைந்த முதலீட்டில் பன்மடங்கு லாபத்தை பெறுவார் என்பதை சிறப்பாக சொல்லலாம், மேலும் கடந்த புதன் திசை ஜாதகருக்கு 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியது தாம் செய்த வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தந்தது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

தற்பொழுது நடைபெறும் கேது திசை ஜாதகருக்கு 1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகர்  தாம் செய்து கொண்டு இருக்கும் வியாபாரத்தில் தன்னிறைவான வளர்ச்சி பெறுவதை தெளிவு படுத்துகிறது, மேலும் அடுத்து வரும் சுக்கிரன் திசையும் ஜாதகருக்கு 4,6,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது மிகுந்த யோகத்தையே தரும் என்பதால் ஜாதகரின் வாழ்க்கை இனிவரும் காலங்களில் மிகவும் சிறப்பானதாக அமையும் என்பது மட்டும் உறுதி, இவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மிகவும்  வலிமையுடன் அமைந்ததும், அதைவிட லாப ஸ்தானம் மிக மிக வலிமையுடன் அமைந்ததும், ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் தந்தது.

 லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் உடல் மனம்  மற்றும் செயல்பாட்டினையும், 2ம் பாவகம் வலிமை பெறுவது கை நிறைவான வருமானத்தையும், வியாபாரத்தில் பேச்சு திறமையையும், 3ம் பாவகம் வலிமை பெறுவது தனிப்பட்ட வியாபர திறமைகளையும், 4ம் பாவகம் வலிமை பெறுவது சொத்து சுக சேர்க்கையையும், 5ம் பாவகம் வலிமை பெறுவது சமயோசித புத்திசாலிதனத்தையும், தொழிலில் ஜாதகர் கொண்டுள்ள நுண் அறிவையும், 6ம் பாவகம் வலிமை பெறுவது குறுகிய கால வெற்றிகளையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது பொதுமக்கள், வாழ்க்கை துணை மற்றும் கூட்டாளிகள் ஆதரவையும், 10ம் பாவகம் வலிமை பெறுவது தொழில் வழியில் கௌரவத்தையும், சுய மரியாதை மற்றும் அந்தஸ்தையும், 11ம் பாவகம் வலிமை பெறுவது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கையையும், மிகுந்த அதிர்ஷ்ட சாலி என்ற நிலையையும், தன்னம்பிக்கையியும், முற்போக்கு சிந்தனையையும் ஒருங்கே அமையபெற்றவர் என்பதனையும், 12ம் பாவக வழியில் இருந்து போதும் என்ற மன நிறைவையும், நல்ல உறக்கத்தையும், மன நிம்மதியையும், வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில், தமக்கு உகந்த தொழிலை ஒரு ஜாதகர் தேர்ந்து எடுப்பராயின், சம்பந்தப்பட்ட ஜாதகர் தொழில் ரீதியாக தன்னிறைவு பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது என்று உறுதியாக இந்த கட்டுரையில்  "ஜோதிடதீபம்" பதிவு செய்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 11 டிசம்பர், 2014

ஜீவன ஸ்தான வலிமையையும், தகப்பனார் வழியில் இருந்து ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையும் !




"தாயின் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை "

மேற்கண்ட முதுமொழிக்கு ஏற்ப ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 4ம் பாவகம் தாயாரையும், 10ம் பாவகம் தகப்பனாரையும் குறிக்கும், சுய ஜாதகத்தில் 4,10ம் பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் 4ம் பாவக அமைப்பில் இருந்து நல்ல சுகபோக வாழ்க்கையையும், 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த ஜீவன ( தொழில் ) வாழ்க்கையையும் வாரி வழங்கும், பொதுவாக சுய ஜாதக ரீதியாக ஆண்களின் ஜாதகத்தில் ஜீவனம் எனும் 10ம் பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது ஏனெனில் உத்தியோகம் "புருஷ லட்சனம் " என்று பழமொழிக்கு ஏற்ப ஆண்கள் ஏதாவது ஒரு வகையில் ஜீவனத்தை தேடி குடும்பத்தை காப்பாற்றும் கடமை ஆண்களுக்கே அதிகம் உண்டு, தற்காலத்தில் "உத்தியோகம் பெண் ஆட்சி லட்சனம் " ஆகிவிட்டது வேறு கதையாக இருந்தாலும், உத்தியோகம் அல்லது வேலை இல்லாத ஆண் மகனை சமுதாயமும், அவரது உறவுகளும் மிக ஏளனமாகவே பார்க்கின்றனர், வேலை இல்ல இளைஞனை பார்த்து, அதிக அளவு கவலை படுபவர்கள் அவர்களது பெற்றோர்களே, குறிப்பாக ஜாதகரின் தந்தையே இதை பற்றி அதிக அளவில் கவலை கொள்பவராக காணப்படுகின்றார்கள்.

ஒரு ஆண்மகனுக்கு சரியான வயதில் நல்ல ஜீவனம் அமைவது அவரது சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தானமான 10ம் பாவக வலிமையை பொறுத்தே, ஜீவன ஸ்தானம் ஒருவரது சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகத்துடனும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது ஜாதகருக்கு சிறந்த ஜீவன அமைப்பை தொழில் அல்லது வேலைவாய்ப்பில் சரியான வயதில் வழங்கிவிடுகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் ஏதாவது ஒரு தொழில் வாய்ப்பையோ, வேலை வாய்ப்பையோ பெரும் யோகத்தை தங்குதடையின்றி கொடுத்து  விடுகிறது, ஜாதகர் குறிப்பிட்ட பாவக அமைப்பில் இருந்து கௌரவம் அந்தஸ்து மற்றும் வருமான வாய்ப்பை பெறுவதில் தடையேதும் இருப்பதில்லை. மேலும் நடைபெறும் திசை மற்றும் புத்திகள் சாதகமாக இருப்பின் ஜாதகரின் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் ஜாதகரை தேடிவருவதும், ஜாதகர் ஜீவன வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுவதும் இயற்கையாக நடந்துவிடுகிறது.

இதற்க்கு மாறாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுதே ஜாதகர் ஜீவனம் சார்ந்த இன்னல்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் அமைப்பை தருகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் கௌரவம் மற்றும் அந்தஸ்தை குறிப்பதால், ஜாதகர்  ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களையும் வேலை வாய்ப்பின்மையும் ஜாதகரை கடுமையாக பாதிக்கிறது, சுய கௌரவமும் அந்தஸ்தும் இழந்து மற்றவரை எதிர்பார்த்து வாழ்க்கையை நகர்த்தும் சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளபடுகிறார், பொதுவாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது  ஜாதகர் அதிக அளவில்  தனது தகப்பனாருடன் கருத்து வேறுபாடு வருவது எதார்த்தமான விஷயம், ஏனெனில் ஜீவன ஸ்தானம்  ஒரு வகையில்  தனது  தகப்பனாரையும் குறிப்பதால் ஜாதகர் அவரது வழியில் இருந்து ஆதரவினமையும், கருத்துவேறுபாடு காரணமாக வீண் சச்சரவையும் தருகிறது, இதன் விளைவாக பல இளைஞர்களின் முதல் எதிரியாக தனது தகப்பனாரை நினைப்பது உண்டு, மேலும் அவர் சொல்லும் விஷயங்களை ஏற்றுகொள்ளாமல் அவருக்கு எதிராக முரண்பட்ட காரியங்களை செய்வது சம்பந்தபட்ட ஜாதகருக்கு மேலும் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் தன்மையையே தருகிறது.

பொதுவாக ஜீவன ஸ்தானம் பாதிக்க பட்ட ஜாதக அமைப்பை சார்ந்த அன்பர்கள் ! தனது  தகப்பனார்  வழியில் இருந்து வரும் துன்பங்களை அல்லது சிரமங்களை ஏற்றுகொள்ளும் பொழுது அந்த ஜாதகருக்கு  ஜீவன வழியில் இருந்து வரும் இன்னல்கள் நீங்கி தொழில் ரீதியாகவும் வேலை அமைப்பிலும் மிகப்பெரிய சாதனையை செய்கின்றார்கள் என்பது கவனிக்க தக்கது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் பாதிக்கபட்ட அன்பர்கள் எந்த காரணத்தை கொண்டும் தனது தகப்பனாரை எதிர்த்து செயல்படாமல் இருப்பது நல்லது, மேலும் அவரது வார்த்தைகளை மதித்து  அவர் சொல்லும் வழியில் நடப்பது ஜாதகருக்கு சில காலங்கள் சிரமம் தந்த போதிலும், அதன் பிறகு வரும் காலங்கள் ஜீவன  வழியில் இருந்து 100% விகித யோகத்தை வாரி வழங்கும், ஜாதகர் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகளை வேலை மற்றும் தொழில் அமைப்பின் மூலம் அபரிவிதமாக பெரும் யோகத்தை தரும் என்பதை மறுக்க இயலாது, தான் செய்யும் தொழில் மற்றும் வேலைவாய்ப்பின் மூலம் ஜாதகர் அபரிவிதமான வருமான வாய்ப்பை பெரும்  தன்மையை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நெருப்பு தத்துவ ராசியில் அமைந்து பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகர் தனது  செய்கையின் மூலம் தகப்பனாருக்கு பிடித்த அமைப்பில் நடந்துகொள்வதும், எந்த ஒரு காரியத்திலும் அவசர கதியில் செய்யாமல் பொறுமையை கடைபிடிப்பது சிறந்தது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நில தத்துவ அமைப்பில் இருப்பின், ஜாதகர் தனது தகப்பனாரின் சொத்துக்களை அல்லது செல்வத்தை பயன்படுத்தாமல் இருப்பது நலம் தரும், ஜாதகர் தனது தகப்பனாரின் உடல் நிலையை அதிக  அக்கறை எடுத்துகொள்வது சிறந்தது, அவரது பணத்தை செல்வத்தை விரையம் செய்யாமல் இருப்பது ஜாதகருக்கு உடனடி ஜீவன மேன்மையை தரும், ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் காற்று தத்துவ அமைப்பில் இருப்பின் அவரது அறிவுரையை ஏற்று நடப்பதும், சுயமாக தனது சிந்தனை மூலம் ஜீவன வாழ்க்கையை மேற்கொள்வது சிறந்தது தகப்பனாருக்காக அனைத்தையும் ஏற்றுகொள்ளும் மனபக்குவத்தை வளர்த்துகொள்வது நல்லது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நீர் தத்துவ அமைப்பில் இருப்பின்  ஜாதகர் தனது தகப்பனார் மனம் நோகாமல் நடந்துகொள்வது சிறந்தது, மனதளவில் அவருக்கு சிறு துன்பமும் தராமல் இருப்பதே ஜாதகருக்கு அபரிவிதமான ஜீவன வாழ்க்கையை வாரி வழங்கிவிடும், அதே போல் ஜாதகர் தனது மனதளவில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பது சகல நிலைகளில்  இருந்து வெற்றியை வாரி வழங்கும்.

பொதுவாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் ஜாதக அமைப்பை பெற்ற அன்பர்கள் அனைவரும் தனது தகப்பனாருக்கு  சிறிதேனும் துன்பம் தராமல் நடந்துகொல்வதே, ஜாதகரின் ஜீவன வாழ்க்கையை மேம்படுத்தும் மேலும் ஜாதகர் பார்ர்க்கும் பணியில் அல்லது செய்யும் தொழிலில் அபரிவிதமான முன்னேற்றங்களை  வாரி வழங்கும் என்பது மட்டும் 100% விகிதம் உறுதி.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - பாகம் 1


 ஜீவன ஸ்தானம் ஒருவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பாவகம், மேலும் ஒரு ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வைத்து அந்த ஜாதகரின் கௌரவம்,அந்தஸ்து சுய மரியாதை ஆகிய விஷயங்களை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும், ஜீவன பாவகத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொருவருக்கும் சரியான தொழில் அமைகிறது என்றால் அது மிகையில்லை, 12 ராசிகளும் , சர,ஸ்திர,உபய அமைப்புகளும், நெருப்பு,நிலம்,காற்று,நீர் தத்துவங்களும் சுய ஜாதகத்தில் ஒருவருக்கு எந்த விதமான ஜீவன வாழ்க்கையை, எந்த வயதில் அமைத்து தருகிறது என்பதை ஜாதக ரீதியாக தெளிவாக தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் தனது தொழில்,வேலை  மற்றும் பணியை சிறப்பாக செய்து வாழ்க்கையில் முன்னேற்றமும் வெற்றியும் காணலாம்.

ஒருவரின் ஜீவன அமைப்பை ( செய்யும் தொழில் அல்லது வேலை ) சுய  ஜாதகரீதியாக தெரிந்து கொள்வது, அந்த ஜாதகர் தனது ஜீவன வாழ்க்கையை சிறப்பாக  செய்ய பெரும் உதவியாக இருக்கும், அடிப்படையில்  ஒருவரது  ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் எந்த விதமான தொடர்புகளை  பெறுவது ஜாதகரின் தொழில் மற்றும் வேலை  வாய்ப்பினை கேள்வி குறியாக மற்றும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் அன்பர்களே !

ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் தொடர்பு பெற கூடாத நிலைகள் :

1) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானம் எனும் 7,9,11ம் பாவகங்களுடன் தொடர்பு பெற கூடாது , ஒரு வேலை ஜீவன ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகரை ஜீவன வழியில் இருந்து 200% இன்னல்களுக்கு வழிவகுத்துவிடும் மேலும் சுய கௌரவமும் அந்தஸ்தும் வெகுவாக பாதிக்க படும்  ( சர லக்கினத்திற்கு 11ம் வீடு பாதக ஸ்தானம், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு பாதக ஸ்தானம், உபய லக்கினத்திற்கு 7ம் வீடு பாதக ஸ்தானம்)

2) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம்,எதிரி மற்றும் பகை ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து பல எதிர்ப்புகளையும், எதிரிகளையும் உருவாக்கும், மேலும் செய்யும் தொழில் அமைப்பில், அதிக கடன் தொந்தரவுகளை உருவாக்கி தொழில் முடங்கும் சூழ்நிலையை தந்துவிடும், ஜாதகருக்கு 6ம் பாவகம் ஒரு வேலை சர ராசியாக இருப்பின், ஜாதகர் தனது தொழிலுக்கு மூடுவிழா, தொழில் செய்ய ஆரம்பித்த சில தினங்களிலேயே நடத்தி விடுவார், தேவையின்றி செய்யும் சில காரியங்களால், ஜாதகரின் தொழில் வாய்ப்புகள்  முடங்கி மிகப்பெரிய பின்னடைவை தந்துவிடும்.

3) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், திடீர்  இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, எதிர்பாராத சந்தர்பத்தில் திடீர் இழப்பை  தந்து, இதுவரை செய்துவந்த தனது தொழில்  அமைப்பிற்கு மூடுவிழா காணும் தன்மையை தரும், சுய ஜாதகத்தில் இந்த அமைப்பை பெறும் அன்பர்கள் தயவு செய்து மற்ற  பாவகங்களின் வலிமை உணர்ந்து தொழில் செய்வது நலம், இல்லை எனில் ஜாதகரின் ஜீவன வாழ்க்கை மிகப்பெரிய கேள்வி குறியாக மாறிவிடும், தொழில்  செய்யாமல் அடிமை ஜீவனம் மேற்கொள்ளும் அன்பர்களுக்கும் இந்த அமைப்பு அதிக துன்பத்தையே தரும், குறிப்பாக ஒரு இடத்தில் நிரந்தரமாக வேலை பார்க்க ஜாதகரால் இயலாது, எதிர்பாராத நேரத்தில் வேலையை விட்டு எக்காரணமும் தெரியாமல் நீக்கபடுவார்கள்.

ஜாதகர் தனது உழைப்பின் மூலம் சம்பாதித்த பணம் பொருள் அனைத்தையும் திடீர் என இழக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக மருத்துவ செலவினங்கள்,  விபத்து செலவினங்கள், மற்றவர்களை நம்பி கொடுக்கும் பணம்,  மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள், ஆகியவற்றில் பெரிய திடீர்  இழப்பையே ஜாதகர் சந்திக்கும் சூழ்நிலையை தரும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதாலும், மற்றவர்களுக்கு ஜாமீன் தருவதாலும் ஜாதகருக்கு மிகப்பெரிய இழப்பே ஏற்ப்படும், ஜாதகர் செய்யும் தொழிலும் கடுமையாக பாதிக்க படும்.

ஜாதகருக்கு 8ம் பாவகம் சர ராசியாக இருப்பின், மேற்கண்ட பாதிப்புகள்  மிக விரைவாக நடத்தும், ஜாதகரின் சிந்தனை எதுவும் பலன் தராது, ஜாதகருக்கு உதவி செய்யும் அன்பர்கள் யாரும் இல்லை என்ற சூழ்நிலையை தரும்.

4) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் செய்யும் தொழில் முதலீட்டையே வெகுவாக பதம் பார்க்கும், குறிப்பாக ஜாதகர் தொழில் ரீதியாக செய்த முதலீட்டை திரும்ப பெறுவது என்பது குதிரை கொம்பாக இருக்கும், தொழிலில் முதலீடு செய்துவிட்டு ஒவ்வொரு நாளும்  உறக்கமின்றி நிம்மதியின்றி தவிக்கும் சூழ்நிலையை தந்துவிடும், மனதளவில் அதிக இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்,  பெரும்பாலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் சமுதாயத்தில் பொருளாதார ரீதியான பின்னடைவை விரைவில் சந்திக்கிறார்கள், இவர்கள் தொழில் ரீதியாக மீண்டு வருவது என்பது இயலாத ஒரு காரியமே என்றால், அது மிகையில்லை அன்பர்களே !

இந்த அமைப்பை பெற்ற அன்பர்களுக்கு அடிமை ஜீவனம் சிறந்த  நன்மைகளை வாரி வழங்கும், சுய தொழில் செய்தால் மட்டுமே ஜாதகர் கடுமையாக பாதிக்க படுவார், ஒருவரிடமோ அல்லது ஒரு நிறுவனத்திலோ பணிபுரியும் பொழுது ஜாதகருக்கு  பெரிய இழப்புகள் எதுவும் நடை பெறுவதில்லை, மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் கூட்டு தொழில் செய்ய கூடாது ஏனெனில் ஜாதகர் தனது கூட்டாளியாலேயே ஏமாற்றப்பட கூடும், மேலும் செய்த முதலீடு, ஜாதகரின் கூட்டாளிக்கு மிகுந்த வளர்ச்சியை கொடுத்துவிடும்.

5) மேற்கண்ட விஷயங்களுடன் சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் பாவகமான மகரம் மிகவும் சிறப்பாக இருப்பது அவசியம், சிலர் தொழில் ரீதியாக பெரிய வெற்றிகளை பெற இயலாத நிலைக்கு காரணம் இதுவே, மேலும் சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் பாவகமான மகர ராசிக்கு அதிபதியான சனிபகவானும், சுய ஜாதகத்தில் 10ம் பாவகத்திர்க்கு அதிபதியான கிரகமும் எக்காரணத்தை கொண்டும் வக்கிரக நிலையை பெற கூடாது, மேற்கண்ட கிரகங்கள் வக்கிரக நிலை பெரும் பொழுது ஜாதகர் தொழில் ரீதியான வெற்றிகள் வாய்ப்புகள் வெறும் 10% நிலையிலேயே நின்றுவிடும், தொழில் ரீதியான சிரமங்கள் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், வக்கரகம் பெற்ற கிரகங்களுக்கு முறையாக வக்கரக நிவர்த்தி செய்யும் வரை ஜாதகர் ஜீவன வழியில் இருந்து நன்மையை பெற முடிவதில்லை.

இனி வரும் பதிவுகளில் ஜீவன ரீதியான பலன்கள் பற்றி விளக்கமாக காணலாம் அன்பர்களே!.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696