பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மகர லக்கினம்


 சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகர ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 8ல் ராகு பகவானும், 2ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

மகர இலக்கின சிறப்பு இயல்புகள் :

மகர ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் செயல்பாடுகளில் பொறுமையும், சுய கட்டுபாடும் அதிகரிக்கும், தன்னம்பிக்கை கூடும், நேர்மை மாறாத குணமும், சத்தியத்திற்கு கட்டுப்படும் யோகமும் உண்டாகும், சிறந்த உழைப்பாளியாகவும், மற்றவர்களுக்கு உதவும் நற்குணமும், பகுத்தறிந்து செயல்படும் தன்மையையும் அதிகரிக்கும், பொதுவாழ்க்கையில் நேர்மையையும், சுய ஒழுக்கத்தையும் கடைபிடிக்கும் நல்லவர்களாக திகழ்வார்கள், சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரின் தனித்தன்மையை சிறப்பாக எடுத்துக்காட்டும், உடல் ஆரோக்கியமும் மனதில் தெளிவும் ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை ஈட்டுவதற்கு உதவி புரியும், எவரின் உதவியும் இன்றி சுயமாக முன்னேற்றம் பெரும் திறமையையும் வல்லமையும் ஒருங்கே அமைய பெற்றவர்கள் மகர இலக்கின அன்பர்கள் என்றால் அது மிகையில்லை, மேலும் ஜாதகரின் கௌரவம் அந்தஸ்து மற்றும் சுய மரியாதை குறைவில்லா வாழ்க்கை, தொழில் வெற்றிகளை ஜாதகரே சிறப்பாக நிர்ணயம் செய்வது, போன்றவை கவனிக்கத்தக்க சிறப்பு அம்சங்களாகும்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி மகர இலக்கின அன்பர்களுக்கு 9ல் ராகுவும், 3ல் கேதுவும் சஞ்சாரம் செய்து பாக்கிய ஸ்தான வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களையும் மன போராட்டங்களையும், வீர்ய ஸ்தான அமைப்பில் இருந்து சீரிய வெற்றிகளையும் தந்து கொண்டு இருந்தது ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் கேது பகவானின் சஞ்சாரம், தங்களுக்கு சிறப்பான வாக்கு வன்மையையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் வாரி வழங்கும், கை நிறைவான வருமானம் ஸ்திரமாக வந்தவண்ணம் இருக்கும், தங்களின் எண்ணங்கள் மற்றும் லட்சியங்கள் யாவும் தங்கு தடையின்றி நிறைவேறும், எதிர்ப்புகள் அகலும், தங்களின் பேச்சுக்கு அனைத்து இடங்களிலும், மதிப்பு மரியாதை உண்டாகும், வாத திறமையால் செய்யும் தொழிலில் நிகரற்ற வருமானங்களை பெரும் யோகம் உண்டாகும், வேற்று மதத்தினர் மற்றும் வெளிநாட்டினர் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை சந்திக்கும் யோகம் உண்டாகும், புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் கூட்டு தொழில் முயற்ச்சிகள் தங்களுக்கு அபரிவிதமான யோகங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்க்காலம் என்றே சொல்லாம், அரசியலில் வெற்றி பதவி உயர்வு, கௌரவ பதவிகள் தேடிவரும் வாய்ப்பு என தங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களையும், புதிய நம்பிக்கையையும் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் வாரி வழங்குவார், மேலும் இதுவரை திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும், வருமானம் பல வழிகளில் இருந்து வரும்.

8ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால் தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவியும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாகும், வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும், கூட்டாளிகள் மற்றும் நண்பர்களின் உதவியும், ஆதரவும் தங்களுக்கு மிகப்பெரிய அளவிலான வெற்றிகளை  வாரி வழங்கும், புதிய சொத்துகள் அல்லது புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், அதிரடியான முன்னேற்றங்களையும் தவிர்க்க இயலாது, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய அந்தஸ்தையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், இன்சூரன்ஸ் துறையில் உள்ள அன்பர்களுக்கு, எதிர்பாராத வருமானங்களும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும், அதிகபடியான உடல் உழைப்பை தவிர்க்க இயலாது  இருப்பினும் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும், புதிய சூழ்நிலைகளும் புதிய மனிதர்களின் அறிமுகமும் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய யோகத்தை வாரி வழங்கும், பங்கு சந்தையில் முதலீடு செய்த அன்பர்களுக்கு திடீர் வரவு உண்டாகும், இதுவரையில் நிலுவையில் இருந்த கடன் அடைபடும், உயில் மூலம் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், புதிய தொழில் வாய்ப்புகள் அறிமுகமாகும், 8ல் ராகுவின் சஞ்சாரம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்கும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி மகர இலக்கின அன்பர்களுக்கு 100% விகிதம் வருமான வாய்ப்பினையும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தையும் தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, மகர இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் குடும்ப ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் மகர இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 02 மற்றும் 08ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே மகர இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 02,08ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 30 ஜனவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - தனுசு லக்கினம்



 சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியான தனுசு ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 9ல் ராகு பகவானும், 3ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

தனுசு இலக்கின சிறப்பு இயல்புகள் :

தனுசு ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது,  ஜாதகரின் அறிவு திறனும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், அறிவுபூர்வமான செயல்களில் ஆர்வத்தையும், புதிய சிந்தனைகள் மூலம் வாழ்க்கையின் முன்னேற்றங்களை நிர்ணயம் செய்துகொள்ளும் வல்லமையை தரும், பிடிவாதம் மிகும் இலகுவான வழிமுறைகளை கையாண்டு வெற்றிகளை பெரும் யோகம் உண்டாகும், சிறந்த நிர்வாக திறமையும், திட்டமிடுதல்களுடன் செயல்களை செய்து தொடர் வெற்றிகளை பெரும் தன்மையை தரும், ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களுக்கு உபயோகம் மற்றும் நன்மையை தரும் விதத்தில் அமையும், உடல் ரீதியான உழைப்பைவிட அறிவு ரீதியான உழைப்பை அதிகம் விரும்பும் அன்பர்கள், பாரம்பரியம் ரகசியம் உணர்தல், புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு திறன், வரைமுறைக்கு உற்பட்ட சுய கட்டுபாடு, தன்னம்பிக்கை குறையாத மன நிலை, ஆரோக்கியமான உடல் நிலை, முற்ப்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்க்கொள்ளும் தன்மை என ஜாதகரின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஜாதகரே காரணமாக அமைவார், ஜன வசீகரம் எப்பொழுதும் உண்டு.

கடந்த ராகு கேது பெயர்ச்சி தனுசு இலக்கின அன்பர்களுக்கு 10ல் ராகுவும், 4ல் கேதுவும் சஞ்சாரம் செய்து ஜீவன ஸ்தான வழியில் இருந்து சிறு சிறு நன்மைகளையும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும் தந்து கொண்டு இருந்தது ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் கேது பகவானின் சஞ்சாரம், தங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை ஈட்டி தரும், சுய அறிவு திறன் சிறப்பாக செயல்படும், கமிஷன் மற்றும் தரகு தொழில் செய்து வரும் அன்பர்களுக்கு நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், புதிய வாய்ப்புகள் தங்களுக்கு வந்து குவிந்த வண்ணமே இருக்கும், சகோதர ஆதரவு பயணங்களில் லாபம், வியாபாரத்தில் விருத்தி, ஏஜென்சி துறையில் தன்னிறைவான வருமானம், புதிய வேலை வாய்ப்புகள், தனது திறமைக்கு உரிய மரியாதை அரசு கௌரவம் கிடைத்தல், தனிப்பட்ட முறையில் முன்னேற்றம் காணுதல், காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும் யோகம், திருமண முயற்ச்சிகள் பெரியவர்கள் மூலம் நிறைவேறுதல்,  உயர் கல்வியில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும், இடம் மாறுதல் மற்றும் புதிய சூழ்நிலைகளில் பணியாற்றும் யோகம் உண்டாகும், எங்கு சென்றாலும் தங்களுக்கு வெற்றி கிடைக்கும், மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும் இதனால் அதிர்ஷ்டமும் யோகமும் அதிகரிக்கும்.

9ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால் தங்களுக்கு அதிக அளவில் இன்னல்களே வரக்கூடும் என்பதால், தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரியவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது, தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது மிகப்பெரிய அவமானங்களையும், அவபெயரையும் தரும், சரியான  நேரத்தில் அறிவு திறன் செயல்படாது, ஆன்மீக பெரியோர்களின் ஆசியையும் தீட்சையையும் பெறுவது தங்களின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும், சிறப்பு வாய்ந்த ஆன்மீக திருத்தலங்களுக்கு அடிகடி சென்று வருவது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும், புத்துணர்வையும் தரும், கல்வி காலங்களில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது, உடல் ரீதியான வரும் சிறு சிறு தொந்தரவுகளையும் உடனடியாக மருத்துவம் செய்துகொள்வது நல்லது, எந்த காரணத்தை கொண்டு மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவது நல்லதல்ல, அதிக அளவில் அலைச்சல் தரும் என்பதால் சரியான திட்டமிடுதல்களுடன் செயல்படுவது தங்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் தரும், பொது வாழ்க்கையில் உள்ள  அன்பர்களுக்கு இனிவரும் காலம் அவ்வளவு சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் அதிக கவனமுடன் செயல்படுவது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் நன்மையை தரும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி தனுசு இலக்கின அன்பர்களுக்கு 50% விகிதம் முயற்ச்சிக்கு உண்டான வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, தனுசு இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் வீரிய ஸ்தான வழியில் இருந்து நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் தனுசு இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03 மற்றும் 09ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே தனுசு இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03,09ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 12 ஜனவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - விருச்சிக லக்கினம்



சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிக ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 10ல் ராகு பகவானும், 4ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

விருச்சிக இலக்கின சிறப்பு இயல்புகள் :

விருச்சிக ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் இயக்கம் உணர்ச்சிபூர்வமானதாக அமையும், மனதின் எண்ணங்களும் சிந்தனையும் ஸ்திர தன்மையான வேகத்துடன் இயங்கிக்கொண்டே இருக்கும். அறிவுக்கு எட்டாத, புலனுக்கு அப்பாற்பட்ட சக்தியை தன்னகத்தே கொண்டவர்களாக காணப்படுவார்கள், வருமுன் காக்கும் சக்தி பெற்றவர்கள், இவர்களின் கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை, தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மையையும், ஒழுக்கம் நிறைந்த கட்டுபாட்டினையும் கட்டிக்காக்கும் யோகம் பெற்றவர்கள், தமக்கு வரும் நன்மை தீமையை தாமே ஏற்றுகொள்ளும் மனபக்குவம் நிறைந்தவர்கள், தீவிர சிந்தனை விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரர்களாக மாற்றும் வல்லமையை தரும், எதிர்பாராத புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை, தனது அறிவு திறன் மூலம் பெரும் யோகம் பெற்றவர்கள், குடும்ப வாழ்க்கையில் இன்னல்கள் வந்த போதிலும், பொது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், பதவிகளும் தேடிவரும், தனது மனநிலையை ஒருநிலை படுத்துவது செயற்கரிய காரியங்களை மிக எளிதாக சாதிக்கக் வைக்கும் என்பது விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு இறையருள் வழங்கிய "வரம்" எனலாம்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு 11ல் ராகுவும், 5ல் கேதுவும் யோக பலன்களை வழங்கிய போதிலும், பெருவாரியான நன்மைகளை பெற இயலவில்லை, ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் கேது பகவானின் சஞ்சாரம், தங்களுக்கு புதிய சொத்துகள், புதிய வீடு, வண்டி வாகன யோகம், சுகபோகமான வாழ்க்கை, என மிகுந்த நன்மைகளை தர காத்திருக்கிறார், தங்களின் மேலான எண்ணங்கள் யாவும் வெற்றி பெரும், புதிய சொத்துகள் மூலம் லாபம் உண்டாகும், பெற்றோர் வழியில் இருந்து மிதமிஞ்சிய நன்மைகள் உண்டாகும், மகிழ்ச்சி பொங்கும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும், சொந்த பந்தம், உறவுகள் வழியில் இருந்து உதவிகள் கிடைக்கும், குல தெய்வ அனுகிரகம் உண்டாகும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், இதுவரை வாகன வசதி இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும், வீடு கட்ட அல்லது வாங்க முயற்ச்சித்த நடவடிக்கைகள் உடனடியாக வெற்றி பெரும், அனுபவம் மிக்க பெரியோர்களின் வழிகாட்டுதல் தங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை தங்கு தடையின்றி வழங்கும், மனதிற்கு இனி நிகழ்வுகள் தங்களுக்கு சிறப்பான நல்ல மாற்றங்களை வாரி வழங்கும்.

10ல் ராகு பகவான் தங்களுக்கு தொழில் ரீதியான அபிவிருத்திகளை தன்னிறைவாக வாரி வழங்கும், ஸ்திரமான லாபங்கள் தங்களுக்கு சீறிய இடைவெளியில் வந்துகொண்டே இருக்கும், தங்களின் அதிதீவிரமான அறிவு திறன் காரணமாக செய்யும் தொழிலில் நிர்வாக திறைமை மேலோங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் வரவேற்ப்பும், லாபமும் கிடைக்க பெறுவீர்கள், ஏற்றுமதி இறக்குமதி வணிகம் புரியும் அன்பர்களுக்கு இந்த ராகுகேது பெயர்ச்சி அளவில்லா தனலாபத்தை வாரி வழங்கும், புதிய தொழில் வாய்ப்புகள் தங்களை தேடிவரும், கூட்டு முயற்ச்சி தங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், தங்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்க பெறுவீர்கள், வலிமை பெற்ற ராகு பகவான் தங்களின் ஜீவன ஸ்தானத்திற்கு பரிபூர்ணா நன்மைகளை வழங்குவதால், தொழில் ரீதியான கௌரவம் மற்றும் அந்தஸ்து மற்றும் லாபங்கள் திடீரென அதிகரிக்கும், இதுவரை முன்னேற்றம் இல்லாமல் தத்தளித்துக்கொண்டு இருந்த தொழில்கள் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை பெரும், அரசு உதவிகள் மற்றும் அரசு கௌரவங்கள் தங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு, மேலும் இதுவைரை வேலை வாய்ப்பற்ற அன்பர்களுக்கு சிறப்பான வேலையும், பதவி உயர்வும் கிடைக்க பெறுவீர்கள், ஜீவன ஸ்தானத்தில் ராகுவின் சஞ்சாரம் தங்களுக்கு மிகப்பெரிய தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு 100% விகித "அதிர்ஷ்ட ராஜயோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, விருச்சிக இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை பெறுவதில் மூன்றாம் இடம் வகிக்கின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 04 மற்றும் 10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே விருச்சிக இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 04,10ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 8 ஜனவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - துலா லக்கினம்



 சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 11ல் ராகு பகவானும், 5ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

துலா இலக்கின சிறப்பு இயல்புகள் :

துலா ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் செயல்பாடுகள் மிகவும் நேர்த்தியான தன்மையில் காணப்படும், அபரிவிதமான மக்கள் செல்வாக்கினையும், முகமதிப்பையும் பெரும் யோகம் உண்டாகும், மக்கள் தொடர்பு மூலம் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை பெரும் அன்பர்களின் ஜாதகத்தில் துலாம் வலிமை பெற்று இருப்பது கவனிக்க தக்கது, இயல்பாக மிதமிஞ்சிய அறிவு திறனையும், சமயோசித புத்தியையும் குறைவின்றி தரும், மற்றவர் வழியை பின்பற்றாமல் தனிப்பட்ட வழிமுறையை கையாளும் யோகம் பெற்றவர்கள், எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவு திறன் கொண்டு மிக எளிதாக கையாண்டு சரியான தீர்வுகளை தரும் யோகம் பெற்றவர்கள், புதுமை விரும்பிகள், மனதிற்கு எட்டாத விஷயங்களில் தேர்ச்சி பெற்றவர்கள், தன்னம்பிக்கையும் மன உறுதியையும் ஒருங்கே அமைய பெற்றவர்கள், ஆராய்ச்சி மூலம் பல அறிய புதிய கண்டுபிடிப்பிற்கு சொந்தகாரர்கள், எந்த ஒரு விஷயத்திலும் சத்தியத்தின் தன்மையை கடைபிடிக்கும் உத்தமர்கள், அறிவு சார்ந்த தொழில்நுட்பங்களில் கைதேர்ந்தவர்கள், புதிய கருவிகளை கையாளும் வல்லமையும், அதன் செயல்பாடுகளையும் விரைவாக உணர்ந்துகொள்ளும் மதிநுட்பமும் கொண்டவர்கள், நஷ்டத்தில் இயங்கும் எந்த ஒரு தொழிலிலும் சிறந்த நிர்வாக திறமையின் மூலம் மிகப்பெரிய  முன்னேற்றத்தை தரும் வல்லமை பெற்றவர்கள், "புத்தியே துணை" என்பது துலா இலக்கின அன்பர்களுக்கு மிக சரியாக பொருந்தும்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி துலா இலக்கின அன்பர்களுக்கு, 12ல் ராகுவும், 6ல் கேதுவும் மிகுந்த இன்னலகளை வழங்கி இருக்க கூடும், 12ம் பாவக வழியில் இருந்து அதிக வீண் விரையங்களையும், மன உளைச்சல்களையும், உடல்  நல பாதிப்புகளையும் தந்திருக்க கூடும், மேலும் மன நிம்மதி இழப்பு, கடன் சுமை, எதிரிகள் தொந்தரவு என வெகுவான பாதிப்புகள் தங்களை பாதித்து இருக்க வாய்ப்புண்டு, ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, 11ம் பாவக வழியில் இருந்து ராகுவின் சஞ்சாரம் தங்களுக்கு மிகுந்த ஸ்திர  தன்மையான லாபங்களை வாரி வழங்கும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களும், முன்னேற்றங்களும் தங்களுக்கு அபரிவிதமாக அமையும், மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், திட்டமிடுதல்கள் யாவும் செயல்முறை காணும், தொழில் ரீதியான முன்னேற்றம் என்பது ஸ்திர தன்மையில் லாபகரமாக அமையும், பொது வாழ்க்கையில் பெயரும் புகழும் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும்,  வெளிநாடுகளில் இருந்து நல்ல செல்வாக்கு உண்டாகும், புதிய வாய்ப்புகள் தங்கள் இல்லம் தேடி வரும், திருமண தடைகள் நீங்கி மணவாழ்க்கை சிறப்பாக அமையும், மனதிற்கு இசைந்த வாழ்க்கை துணை அமையும், தங்களின் மனதில் உள்ள ஆசைகள்  அனைத்தும் நிறைவேறும் யோக காலமாக இனிவரும் 18 மாதங்கள்  அமையும், தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டு யோக பலன்களை பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

5ல் சஞ்சாரம் செய்யும் கேதுபகவான் தங்களுக்கு 5ம் பாவக வழியில் இருந்து எதிர்பார்த்த நன்மைகளை தங்களுக்கு வழங்கும் என்பது கேள்விக்குறியே, எனவே தங்களது முயற்ச்சிகள் யாவும் பூர்வீகத்திற்கு அப்பார்ப்பட்டு அமைவது உசிதமானத "ஜோதிடதீபம்" கருதுகிறது, தங்களது வாரிசுகளுடன் மிதமான கருத்து பரிமாற்றத்துடன், அறிவுரைகளையும் வழங்குவது அவர்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், எந்த ஒரு காரியத்திலும் தங்களின் செயல்பாடுகள் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு அமைவதே தங்களுக்கு நன்மையை தரும், நிறைய கேட்பதும் நிறைய சிந்திப்பதும், குறைவாக பேசுவதும் தங்களின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை மிக கவனமாக பயன்படுத்தி கொண்டு முன்னேற்றம் பெறுவது அவசியமானதாகும், தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையையும், அதிசயத்தக்க மாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை தர கேதுபகவான் தயார் நிலையில் இருப்பது மட்டும் கண்கூடான உண்மை, இனிவரும் காலங்களில் தங்களின் குல தெய்வத்தின் அருளாசி தங்களுக்கு வெகுவாக தேவை படும் என்பதால், குல தேவதை வழிபாட்டினை சிறந்த முறையில் மேற்கொள்வது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி துலா இலக்கின அன்பர்களுக்கு 50% விகித "அதிர்ஷ்ட யோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, துலா இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் சிம்ம ராகுவின் மூலம் அதிர்ஷ்டத்தையும், கும்ப கேதுவின் மூலம் நல்ல ஞானத்தையும் பெறுவது கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் துலா இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 11 மற்றும் 5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே துலா இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 11,5ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 5 ஜனவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - கன்னி லக்கினம்


 சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது"  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்ம ராசியில் "ராகு" பகவானும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான கும்பராசியில் "கேது" பகவானும் சஞ்சாரம் செய்து, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான, கன்னி ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 12ல் ராகு பகவானும், 6ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

கன்னி இலக்கின சிறப்பு இயல்புகள் :

கன்னி ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது, தமது தனிப்பட்ட செயல்பாடுகளில் யாரும் தலையீடு செய்வதை சிறிதும் விரும்பாதவர்கள், ஒரு முடிவு செய்யும் முன் நிறையவே சிந்தனை செய்து செயல்படுவார்கள், இயற்கையாகவே அதித தன்னம்பிக்கையும் மன உறுதியும் பெற்றவர்கள், முற்போக்கு சிந்தனையும் சுதந்திர சிந்தனையும் ஒருங்கே அமைய பெற்றவர்கள், தாம் எடுக்கும் செயல்களில் எந்த விதத்திலாவது வெற்றியை பெற்றுவிடுவார்கள், புதிய வாய்ப்புகளையும் மற்றவர்களின் தனி திறமைகளையும் தனக்காக சிறப்பாக பயன்படுத்திகொள்ளும் வல்லமை பெற்றவர்கள், தனது கொள்கைகளிலும், லட்சியங்களிலும் சிறிதும் பிறளாது வெற்றியை பெற இறுதிவரை போராடும் குணம் கொண்டவர்கள், குறுகிய கால லாபங்களை அடிகடி பெரும் யோகம் பெற்றவர்கள், மக்கள் சக்தியை சரியான பாதையில் பரிணமிக்க செய்யும் யோகம் பெற்றவர்கள், வாழ்க்கையில் பல திருப்புமுனைகளை சந்திக்கும் தன்மையை தரும்.

தங்களுக்கு இதுவரை லக்கினத்தில் சஞ்சாரம் செய்து வந்த ராகு பகவானும், 7ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்து வந்த கேது பகவானும், இலக்கின வழியில்  இருந்து யோக பலன்களையும், களத்திர பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும் தந்திருக்க கூடும், ஆனால் இனி வரும் 18 மாதங்களும் சாய   கிரகங்களான ராகுகேதுவினால் 12ம் பாவக வழியில் இருந்தும், 6ம் பாவக வழியில் இருந்தும் யோக பலன்களை தாங்கள் தங்கு தடையின்றி அனுபவிக்கலாம், "அனைத்து ஜோதிடர்களும் 12,6ம் வீடுகள் துர் ஸ்தானங்கள்  ஆயிற்றே தீமையை தானே தரும், மேலும் 12ம் பாவகத்திற்கு வரும் ராகு விரையத்தையும், 6ம் பாவகத்திர்க்கு வரும் கேது ஆரோக்கிய குறை மற்றும் கடன் சுமையை அல்லவே அதிகாரிக்கு என்ற கேள்வி தங்களுக்கு வரக்கூடும், இந்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானதே.

 சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மற்றும் 6ம் பாவக வலிமை பெரும் பொழுது ஒரு ஜாதகர் அனுபவிக்கும் யோக பலன்கள் என்னவென்பதை இனி காண்போம் அன்பர்களே !

தங்களுக்கு 12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், பெரிய முதலீடுகளில் ஈடுபடும் யோகத்தை தருவார், நல்ல அயன சயன சுகத்தையும், நிம்மதியான மன நிலையையும், திருப்தியான மன சந்தோஷத்தையும் வாரி வழங்குவார், தாங்கள் செய்யும் காரியங்களில் இறை நிலையின் அருளாசி பரிபூர்ணமாக காணப்படும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்பது திடீரென ஏற்ப்படும், எதிர்பாராத வெளிநாடு வாய்ப்புகளும், வருமானங்களும் வந்து சேரும், தங்களது தொழில் சிறப்பான வருமான வாய்ப்புகளையும், திடீர் முன்னேற்றங்களையும் பெரும், ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் யோகம் மிகுந்த காலம் எனலாம், தங்களது ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை சந்திக்கும் யோகம் உண்டாகும், இறை நிலையுடன் ஜீவசங்கமம் பெரும் யோகம் உண்டாகும், இறை அருளின் பரிபூர்ணதுவம் தங்களுக்கு புது வாழ்க்கையை வாரி வழங்கும், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும்.

தங்களுக்கு 6ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், குறுகிய கால அதிர்ஷ்டங்களையும், தங்களது சத்ரு வழியில் இருந்து யோக வாழ்க்கையை வாரி வழங்குவார், கேட்க்கும் இடத்தில் இருந்து பண உதவிகள் வந்துசேரும், தொழில் லாபங்கள் குறுகிய கால இடைவெளியில் வந்தவண்ணமே இருக்கும், உடல் நலம் மேம்படும், நீண்ட நாள் ஆரோக்கிய குறைகள் விரைவாக நிவர்த்தி பெரும், புதிய நபர்கள் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவி செய்வார்கள், நல்ல வேலையாட்கள் அமைவார்கள், பொருளாதார உதவிகளும், வங்கி கடன்களும் உடனடியாக கிடைக்க பெறுவீர்கள், வாராகடன்கள்  வசூல் ஆகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும், தங்களுக்கு வரும் எதிர்ப்புகளே தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் உதவி புரியும், பயணங்களில் "ராஜயோக விருந்து" மற்றும் உணவு உபசரிப்பை போகும் இடங்களில் எல்லாம் அனுபவிக்கும் யோகம் உண்டாகும், நேர்மறையான எண்ணங்களால் தங்களின் வாழ்க்கையின் லட்சியங்களை குறுகிய காலங்களில் தங்குதடையின்றி அடைவீர்கள்.

 மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி கன்னி இலக்கின அன்பர்களுக்கு 100% விகித "திடீர் விபரீத ராஜயோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, கன்னி இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை பெறுவதில் இரண்டாம் இடம் வகிக்கின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் கன்னி இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 12 மற்றும் 6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே கன்னி இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 2 ஜனவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - சிம்ம லக்கினம்




சாய கிரகங்கள் என்று ஜோதிடத்தில் போற்றப்படுவதும், தாம் அமர்ந்த ராசியை ( பாவகம் ) தனது முழு கட்டுபாட்டில் எடுத்துகொண்டு யோக அவயோக பலன்களை வாரி வழங்கும் வல்லமை பெற்றதுமான ராகு கேது கிரகங்கள், 29.1.2016 தேதி நள்ளிரவு 2 மணி 3 நிமிடத்திற்கு, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மராசியில் ராகு பகவானும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான கும்பராசியில் கேது பகவானும் சஞ்சாரம் செய்து பலாபலன்களை வாரி வழங்க தாயராக உள்ளனர், ஒருவரின் சுய ஜாதகத்தில் பலன்கள் காண "லக்கினமே" அடிப்படையாக அமைவதால், ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களும், இனிவரும் 18 மாதங்களில் சாய கிரகங்களான ராகு கேது வின் சஞ்சார நிலையில் இருந்து பெரும் யோக அவையோக பலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்திப்போம் அன்பர்களே!

29.1.2016 தேதி நள்ளிரவு 2 மணி 3 நிமிடத்திற்கு நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்திலும், 11ம் ராசியான கும்பத்திலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ராகு சஞ்சாரம் செய்யும் சிம்ம ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு முன்னுரிமை தந்து, சிம்ம லக்கினத்திற்கு சாய கிரகங்கள் வழங்கும் பலாபலன்கள் எப்படி?இருக்கும் என்பதில் இருந்து இலக்கின வாரியாக தொடர்ச்சியாக காண்போம் அன்பர்களே !

சிம்ம லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5 ம் ராசியான, சிம்ம ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே ! தங்களது லக்கினத்தில் ராகு பகவானும், களத்திர ஸ்தானமான கும்பத்தில் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி ஆய்வு செய்வோம் , 

சிம்ம இலக்கின சிறப்பு இயல்புகள் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணிய ஸ்தானம், ஸ்திர நெருப்பு தத்துவ சிம்ம ராசியை ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு லக்கினம் வலிமை  பெற்று அமைய பெற்றால், ஜாதகர் பெருதன்மை மிக்க குணங்களுடன், சிறப்பு மிக்க நிர்வாக திறமை கொண்டவராக காணப்படுவார், ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் செவ்வனே நிறைவேறும், உடல் உறுதியும் மன உறுதியும் ஜாதகருக்கு இயற்க்கையாவே அமைய பெரும், தான் செய்யும் காரியங்கள் யாவிலும் தமது அறிவுத்திறனை மிக சிறப்பாக பயன்படுத்தும் வல்லமை கொண்டவர்கள், அதிக அளவில் நகைசுவை உணர்வு கொண்டவர்கள், சாஸ்திர ஞாணமும், தியானம் ஆன்மீக மற்றும் யோக பயிற்ச்சியில் தேர்ச்சி பெரும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள், சிறந்த ஆன்மீக பெரியோர்கள் அவதரித்த லக்கினம் சிம்மமே என்றால் அது மிகையில்லை, மேலும் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு இயற்க்கையாவே மனதிற்கு எட்டாத புலன் அறிவை பிறவியிலேயே பெற்றிருப்பார்கள்.

இதுவரை தங்களுக்கு 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்த ராகு பகவான், குடும்பம், வாக்கு தனம் என்ற வகையில் அதிக அளவில் இன்னல்களையும் போராட்டங்களையும் சந்திக்க வைத்திருக்க கூடும், மேலும் உடல் நிலையில் பாதிப்பும் வீண் விரையங்களும் ஏற்ப்பட்டிருக்க வாய்ப்புண்டு.

 ஆனால் இனி தங்களது லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் தங்களுக்கு ஸ்திர தன்மையான வெற்றிகளை வாரி வழங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை, கலைகளில் தேர்ச்சி, கல்வியில் மேன்மை, எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் யோகம், தன்னம்பிக்கை புத்திசாலித்தனம் மூலம் சிறந்த நன்மைகளை அனுபவிக்கும் யோகம், குல தெய்வத்தின் ஆசியினால் சகல காரியங்களிலும் வெற்றி, உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் என இனிவரும் 18 மாதங்களும் தங்களுக்கு ஏறுமுகமாகவே அமையும், பித்தம் சார்ந்த தொந்தரவுகள் வந்த போதிலும் பெரிய பாதிப்புகளை தாரது, வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டும் அதிக கவனம் எடுத்துகொள்வது நல்லது, பொதுவாக சிம்மத்தில் ராகு சஞ்சாரம் சிம்ம ராசிக்கு உண்டான பலாபலன்களை முழுவதும் தாமே சுவீகரிக்கும் என்பதால், லக்கினம் சார்ந்த யோக பலன்களை தங்களுக்கு தங்கு தடையின்றி தரும்.

 வெற்றி புகழ் கீர்த்தி என ராகு பகவான் தரும் நன்மைகளின் தரம் மிகவும் சிறப்பானதாகவும், நீடித்து நன்மைகளை தரும் அமைப்பிலும் இருக்கும் என்பதில் ஐயமில்லை, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு மிகுந்த நன்மைகளையும், திடீர் பதவிகளையும் அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், உடலும் மனமும் தங்களுக்கு முழுவதும் ஒத்துழைக்கும், எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் தங்களுக்கு தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும், வாழ்க்கையில் புதிய மாற்றங்களையும் வாரி வழங்கும், புதிய மனிதர்கள் மற்றும் புதிய சூழ்நிலைகள் தங்களுக்கு மிகுந்த யோகத்தையும் நன்மையையும் வாரி வழங்கும்.

தங்களது களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், இது வரை திருமணம் ஆகாத அன்பர்களின் வாழ்க்கையில் திடீரென திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவார், தங்களின் மனதிற்கு இசைந்த வாழ்க்கை துணையை கைபிடிக்கும் யோகம் உண்டாகும், காதல் திருமணம் கைகூடும், திருமண வாழ்க்கையில் இணைந்த தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும், பொது வாழ்க்கையில் இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் "ராஜயோக" பலன்களை வாரி வழங்கும், தங்களது கற்பனையிலும் நினைத்திறாத யோக வாழ்க்கையை எதிர்கொள்ள முனைப்புடன் தயாராக சிம்ம இலக்கின அன்பர்கள் இருக்கலாம்.

பொது மக்களின் ஆதரவும், அரசியலில் செல்வாக்கும் அதிகரிக்கும் தங்களின் களத்திர  பாவகம் ஸ்திர காற்று தத்துவ ராசியான கும்பத்தில் அமைவதால், தங்களின் அறிவு  திறனும் அதிர்ஷ்டமும் ஒன்று சேர்ந்து செயல்படும், மனதில்  தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும், பெண்கள் வழியில் இருந்து ஆண்களும், ஆண்கள் வழியில் இருந்து பெண்களும் மிகுந்த நன்மைகளையும், யோகங்களையும் தங்கு தடையின்றி பெறுவார்கள், நுண்ணறிவு சார்ந்த துறைகளில் உள்ள அன்பர்களுக்கு உலக புகழ் பெரும் யோகம் உண்டாகும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் உண்டாகும், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும், வெளிநாடுகளில் இருந்து தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் தங்களை தேடிவரும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், வெளிநாடுகளில் வசித்து வரும் அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகள், குடியுரிமை, அரசு ஆதரவு, அரசு சலுகைகள் அனைத்தையும்  அனுபவிக்கும் யோக உண்டாகும்.

 மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி சிம்ம இலக்கின அன்பர்களுக்கு 100% விகித "ராஜயோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, சிம்ம இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை பெறுவதில் முதலிடம் வகிக்கின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே சிம்ம இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 29 மார்ச், 2013

லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் நிலை என்ன ?





அன்பரே இது ஒரு சிறந்த கேள்வியாக ஜோதிடதீபம் கருதுகிறது .


கால புருஷ தத்துவ விதிப்படி ராசிகளை சரம் ஸ்திரம் உபயம் என்று மூன்று பிரிவுகளாக இயற்க்கை பகுத்து வைத்திருக்கிறது , இதில் சர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 11ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், ஸ்திர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், உபய ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானமாக இயற்கையால் நிர்ணயம் செய்யப்படுகிறது .

ஒருவருடைய லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையில் எவ்வித இன்னல்களை சந்திக்க வேண்டி வரும், என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் , பொதுவாக ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நன்மையை தருவதில்லை என்பதே முற்றிலும் உண்மை , எனவே ஒருவருடைய ஜாதகத்தில் உடலாக , உயிராக , மனதாக  மதிக்கப்படும் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து அனுபவிக்க வேண்டிய பலன்களை பற்றி இனி பார்ப்போம் .

சர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது , ஜாதகருக்கு தரவேண்டிய பதிப்புகளை நிலைத்து நின்று செய்யும் , மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் மூலம் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அதிக இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை தாமே உருவாக்கி கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் , மேலும் தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பை ஜாதகர் தவறவிடும் தன்மையை தரும் .

முன் பின் சிந்திக்காமல் செய்யும் காரியங்களால் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , ஜாதகருக்கு சிறப்பான வளரும் சூழ்நிலையை தராது , கல்வியில் தடையை தரும் , திருமண தாமதத்தை தரும் , தொழில் முடக்கம் அல்லது வேலைவாய்ப்பற்ற நிலை தரும் , ஆக சர லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர்  இலக்கின வழியில் இருந்து நிலையான இன்னல்களை சந்திக்க வேண்டி வரும்  .

ஸ்திர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது , ஜாதகருக்கு தர வேண்டிய பாதிப்புகளை  விரைந்து செய்யும் அதுவும் ஜாதகர் எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கையில்  மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி சென்றுவிடும் , இதில் இருந்து  ஜாதகர் மீண்டு எழுந்து வர அதிக கால நேரத்தை எடுத்துகொள்ள வேண்டி வரும் , இந்த தீமையான பலன்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் அதிக மாற்றங்களை தரும் நேற்றுவரை நன்றாக இருந்தவர் ஒரு இரவில் அனைத்தையும்  இழந்து , ஒன்றும் இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார் , இருப்பினும்  ஜாதகர் இவற்றில் இருந்து மீண்டு வரும் வாய்ப்பை நிச்சயம் தரும் .

மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் மூலம் தனக்கு நடக்கும் இன்னல்களை ஏற்படுத்தி கொள்ளும் தன்மையை தரும் , குறிப்பாக தனது கல்வி , தொழில் , குடும்ப வாழ்க்கை என்ற அமைப்புகளில் வெகுவாக பாதிக்கும் சூழ்நிலையை தரும் , ஸ்திர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும்  பொழுது, விரைவான கெடு பலன்களை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டி வரும் , இருப்பினும் இவை அனைத்தும் ஜாதகரின் நன்மைக்கே என்பதை இறுதியில் ஜாதகர் உணரக்கூடும் .

உபய ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ,  ஜாதகருக்கு தர வேண்டிய பாதிப்புகளை ஜாதகருடைய அமைப்பில் இருந்து குறைந்த இன்னல்களை அனுபவித்த  போதிலும் , ஜாதகரின் நண்பர்கள் , வாழ்க்கை துணை , கூட்டாளிகள்  மூலமாகவே அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , எனவே  ஜாதகர் தனது நண்பர்கள் , வாழ்க்கை துணை , கூட்டாளிகளை தேர்ந்தெடுக்கும்  பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம் ஏனெனில் ஜாதகர்  அவர்கள் வழியில் இருந்தே அதிகபடியான பாதக ஸ்தான பலன்களை அனுபவிக்க வேண்டி வரும் .

மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் தன்மையை ஜாதகரின் நண்பர்கள் , கூடாளிகள் , வாழ்க்கை துணையே நிர்ணயம்  செய்து ஜாதகரை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்குவார்கள் , குறிப்பாக மற்றவர் செய்யும் காரியங்களுக்கு ஜாதகர் வீண் பலி பாவங்களை அனுபவிக்க  வேண்டி வரும் , குறிப்பாக ஜாதகரின் பொது வாழ்க்கை , தொழில் மற்றும்  திருமண வாழ்க்கை கேள்வி குறியாக மாறிவிட அதிக வாய்ப்புகள் ஏற்ப்படுத்தும் , தனது நண்பர்கள் , கூட்டாளிகள் , வாழ்க்கை துணையின் செயல்பாடுகள்  மூலம் ஜாதகர் 100 சதவிகித தீமையான பலனையே அதிகம் அனுபவிக்க  வேண்டி வரும் என்பதே வருத்தம் அளிக்கும் விஷயம் , இவரின் தொடர்  தோல்விகளுக்கு காரணமாக மேற்க்கண்டவர்களின் தொடர்பே காரணமாக அமைந்துவிடும்  என்பதே உண்மை .

சர லக்கினத்தை சார்ந்தவர்கள் தனது அதிர்ஷ்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல்  இருப்பதாலும் , ஸ்திர லக்கினத்தை சார்ந்தவர்கள் தனது செய்கையினாலும் சிந்தனையினாலும் தனக்கு இன்னல்களை தானே தேடி கொள்வதாலும் , உபய லக்கினத்தை சார்ந்தவர்கள் மற்றவர்களாலும் பாதக ஸ்தான  பலனை அனுபவிக்க வேண்டி வரும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


திங்கள், 15 அக்டோபர், 2012

அஷ்டவர்க்க பரல்கள் ஜாதக பலனை நிர்ணயம் செய்யுமா ?



குருவிற்கு
மிக அருமையான விளக்கம். மேலும் சில வினாக்கள். கேள்விகளில் தவறு இருப்பின் மன்னிக்கவும் ஐயா.

பாதக ஸ்தானத்தில் அஷ்டவர்க்க படி அதிக பரல்கள் இருந்தால் மிக அதிக தீமை என்று எடுத்து கொள்ளலாமா?
 
பாவகங்களின் வலிமையை அஷ்டவர்க்கம் வைத்து முடிவு செய்யலாமா?


பதில் :

இரண்டுமே தவறான ஜோதிட கணித முறை அன்பரே ! காரணம் இந்த அஷ்ட வர்க்கத்தை வைத்து பலன் சொல்லுவது என்பது நிச்சயம் சரியான பலனை சொல்ல இயலாது என்பதே எனது கருத்து , மேலும் இதை பற்றி தெளிவாக ஆராய்சி செய்து பார்த்தாகி விட்டது , பலன்கள் சரியாக வரவில்லை .

ஒரு உபய இலக்கின ஜாதகருக்கு லாப ஸ்தானத்தின் பலன் நடக்கின்ற பொழுது லாப ஸ்தானத்தில் குறைவான பரல்கலையே பெற்றிருந்தும் மிகுந்த யோக அமைப்பையே தந்து இருக்கிறது , பாதக ஸ்தான பலனை நடத்தும் பொழுது பாதக ஸ்தானத்தில் குறைவான பரல்களை பெற்றிருந்தும் , ஜாதகர் கடுமையான தீய பலன்களையே அனுபவிக்க வேண்டி இருந்தது , எனவே அஷ்ட வர்க்க பரல்களை வைத்து பலன் நிர்ணயம் செய்வது என்பது நிச்சயம் ஜாதக பலன்களை சொல்ல இயலாது  என்பதே  எமது கருத்து .

போலி ஜோதிடர்கள் சொல்வது போல் வீடு கொடுத்தவன் , வீடு வாங்கியவன் , வீடு விற்றவன் என்று கதை அளப்பவர்களுக்கு  மட்டுமே இந்த அஷ்ட வர்க்க அமைப்பு  பயன் படும் நமது தெளிவான சரியான ஜோதிட பலன்களுக்கு இந்த அஷ்ட  வர்க்க கணிதம் நிச்சயம் உதவவில்லை என்பதே உண்மை .

ஒரு பாவகத்தின் வலிமையை , அந்த பாவகம் தொடர்பு பெறும் வீட்டின் நிலையில்  இருந்து மட்டுமே தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , லக்கினம்  ஒருவருக்கு பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் பொழுது லக்கினத்தில் எத்தனை பரல்கள் இருந்தாலும் ஜாதகரை காப்பாற்ற இயலாது , பாதக ஸ்தானத்தில்  எத்தனை பரல்கள் இருந்தாலும் காப்பாற்ற இயலாது , காரணம் தொடர்பு  பெறுவது பாதக ஸ்தானதுடன் எனவே லக்கினத்திற்கு எவ்வித தடையும்  இன்றி 200 மடங்கு தீமையான பலனை மட்டுமே சரியாக செய்யும் .

இதுவே மாறி லக்கினம்  லாப ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று லக்கினம் உபய ராசியாக இருந்தால் லக்கனத்தில் குறைவான பரல்கள் இருந்தாலும் , லாப ஸ்தானத்தில் குறைவான பரல்கள் இருந்தாலும் ஜாதகரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை  யாராலும் தடுக்க இயலாது , 100 மடங்கு நன்மையான பலனை ஜாதகருக்கு  குறிப்பிட்ட காலகட்டத்தில் வாரி வழங்கி விடும் ,இதில் எவ்வித சந்தேகமும்  இல்லை அன்பரே ! எனவே  இந்த அஷ்ட வர்க்க பரல்களை கொண்டு  எம்மால் நிச்சயம் சரியான ஜாதக பலனை நிர்ணயம் செய்ய முடியாது , மேலும் ஒரு பாவக பலனை நிர்ணயம் செய்ய அந்த பாவகம் எந்த வீட்டுடன்  தொடர்பு பெறுகிறது என்பதை வைத்தே சரியாக  துல்லியமாக நிர்ணயம்  செய்ய இயலும் .

நீங்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் உண்டான ஒரே பதில் அஷ்ட வர்க்க பரல்களை  வைத்து ஜாதக பலனை நிச்சயம் சரியாக சொல்ல முடியாது என்பதே  உண்மை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com

வெள்ளி, 5 அக்டோபர், 2012

சுய ஜாதக அமைப்பில் லக்கினம் வலிமை பெரும் பொழுது ஒரு ஜாதகர் பெரும் நன்மைகள் - பகுதி 2.





லக்கினம் எதுவென்றாலும் ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை மேன்மை பெற உறுதுணை புரியும் , மேலும் லக்கினம் என்பது ஜாதகரின் தனி தன்மை , குண இயல்பு , உடல் நிலை , மன நிலை , ஜாதகரின் செயல்பாடுகள் , ஜாதகர் செய்த வினை பதிவின் தன்மை , அனுபவிக்க வேண்டிய நன்மை தீமை , வளரும் சூழ்நிலை , ஜாதகரின் ஆயுள் பலம் , தனிப்பட்ட புத்திசாலிதனம், ஜாதகரின் செயல் திறனின் வேகம் , ஒரு விஷயத்தை கிரகித்துகொள்ளும் அறிவாற்றல் , தனது பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு , போன்ற அமைப்புகளை நிர்ணயம் செய்வது இந்த லக்கினமே , எனவே லக்கினம் வலிமை பெற்றால் என்ன பலன் , வலிமை இழந்தால் என்ன பலன் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம் .


லக்கினம் வலிமை பெரும் அமைப்பு : 


ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினம் எனும் பாவகம் கீழ்கண்ட வீடுகளுடன் தொடர்பு பெற்றால் மிகுந்த நன்மையை தரும் , ஆனால் அந்த வீடு பாதக ஸ்தானமாக இருக்க கூடாது என்பது பொது விதி .

லக்கினம் ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதகரின் வசக்கையை அடிப்படையிலேயே கடுமையாக பாதிக்கும் , குறிப்பாக பெற்றோரின் ஆதரவை சிறு வயதிலேயே இழக்கும் சூழ்நிலை உண்டாகும் , அடிப்படை கல்வியில் தடை ஏற்ப்படும் , திடீரென நிகழும் அவயோக நிகழ்சிகளால் ஜாதகர் கடுமையாக பாதிக்க வாய்ப்பு உண்டு , மேலும் உடல் நிலையும் கடுமையாக பாதிக்க  படும், தன்னம்பிக்கை இழக்கும் அளவிற்கு ஜாதகரின் வாழ்வில் அடிக்கடி துன்பம் உண்டாகும் , எடுக்கும் முயற்சிகள் யாவும் தேல்வி பெரும் , மேலும் உடல் ஆரோக்கியம் , மன ஆரோக்கியம் கெடும் .

லக்கினம் பாக்கியம் எனும் ஒன்பதாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக ஜாதகர் சிறுவயது முதலே அனைத்திலும் தனி தன்மையுடன் விளங்கும் அளவிற்கு ஜாதகரின் அறிவாற்றல் அமைந்து விடும் , மேலும் அனைவரிடமும் அன்பாகவும் , பெருந்தன்மையாகவும் நடந்து கொள்ளும் மனநிலையை ஜாதகர் சிறு வயதிலேயே பெற்றிருப்பார் , சுய ஒழுக்கம் , கட்டுப்பாடு , நன்னடத்தை , என சிறப்பு குணங்களும் ஜாதகரிடம் சிறு வயதிலேயே அமைந்த விடும் , மேலும் கல்வி காலங்களில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும் , உடல் நிலை மன நிலை வளரும் சூழ்நிலை அனைத்தும் ஜாதகருக்கு மிகவும் சிறப்பாக அமைந்து விடும் . ஆனால் ஸ்திர  இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு இது பொருந்தாது , காரணம் ஸ்திர  லக்கினத்திற்கு பாதக ஸ்தானமே இந்த ஒன்பதாம் வீடுதான் .

லக்கினம் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதகருக்கு  சிறுவயதில் இருந்தே பல முன்னேற்றங்களை வாரி வழங்கும் , குறிப்பாக ஜாதகரின் தகப்பனார் ஜாதகர் பிறந்த சில நாட்களில் மிகப்பெரிய தொழில் முன்னேறத்தை பெறுவார் , மேலும் ஜாதகரின் உடல் நிலையும் , மன நிலையும் வளரும் சூழ்நிலையும் மிகவும் சிறப்பாக அமைந்து விடும் , சிறுவயதிலேயே நல்ல கல்வி அறிவினையும் , நிர்வாக திறைமையும் சிறப்பாக ஜாதகருக்கு அமைந்து விடும் , எதை செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம் எனும் மந்திரத்தை ஜாதகர் இயற்கையாக கற்று வைத்திருப்பார் .

லக்கினம் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதகர் பிறந்த சில மணி நேரத்தில் இருந்தே அதிர்ஷ்டத்தை வாரி வழங்க ஆரம்பித்து விடும் , தனது பெற்றோருக்கு அளவில்லா வசதி வாய்ப்பினை வாரி வழங்கும் ஜாதக அமைப்பு இது , மேலும் ஜாதகரின் உடல் நிலையும், மன நிலையும் வளரும் சூழ்நிலையும் மிக மிக சிறப்பாக அமைத்து விடும் , கல்வி காலங்களில் வகுப்பில் முதல் எண் பெரும் யோகம் உண்டாகும் , பட்ட படிப்பில் ஜாதகர் உலகம் வியக்கத்தக்க முன்னேற்றத்தை பெறுவார் , மேலும் சிறு வயது முதல் சகல யோகங்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , மேலும் ஜாதகர் எவ்வளவு வசதி படைத்திருந்தாலும் எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வார் , நல்ல குணமும் , சுய கட்டுப்பாடு , ஒழுக்கம் எல்லாம் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் .ஆனால் சர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு இது பொருந்தாது , காரணம் சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானமே இந்த 11 ம் வீடுதான் .

லக்கினம் விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதகரின் அடிப்படை வாழ்க்கையே கடுமையாக பாதிக்கும் , குறிப்பாக பெற்றோரிடம் இருந்து பிரிந்து தனிமையில் வாட வேண்டிய சூழ்நிலையை ஏற்ப்படுத்தி விடும் , குறிப்பாக ஹாஸ்டலில் படிக்கும் குழந்தைகளின் ஜாதக அமைப்பில் இந்த நிலை நிச்சயம் இருக்கும் , இதனால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை தந்து விடும் , அடிப்படை கல்வியில் பல தடைகள் ஏற்ப்படும் , உடல் நிலையும் , மன நிலையும் கெடும் , கற்பனையில் வாழ்க்கையை வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப்படுத்தி விடும் , தன்னம்பிக்கை குறையும் , தைரியம் குறையும் , சுய சிந்தனை அற்று மற்றவரை சார்ந்து வாழும் வாழ்க்கையை ஏற்ப்படுத்தி விடும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam @gmail .com  

வியாழன், 4 அக்டோபர், 2012

சுய ஜாதக அமைப்பில் லக்கினம் வலிமை பெரும் பொழுது ஒரு ஜாதகர் பெரும் நன்மைகள் - பகுதி 1.




லக்கினம் எதுவென்றாலும் ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை மேன்மை பெற உறுதுணை புரியும் , மேலும் லக்கினம் என்பது ஜாதகரின் தனி தன்மை , குண இயல்பு , உடல் நிலை , மன நிலை , ஜாதகரின் செயல்பாடுகள் , ஜாதகர் செய்த வினை பதிவின் தன்மை , அனுபவிக்க வேண்டிய நன்மை தீமை , வளரும் சூழ்நிலை , ஜாதகரின் ஆயுள் பலம் , தனிப்பட்ட புத்திசாலிதனம், ஜாதகரின் செயல் திறனின் வேகம் , ஒரு விஷயத்தை கிரகித்துகொள்ளும் அறிவாற்றல் , தனது பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு , போன்ற அமைப்புகளை நிர்ணயம் செய்வது இந்த லக்கினமே , எனவே லக்கினம் வலிமை பெற்றால் என்ன பலன் , வலிமை இழந்தால் என்ன பலன் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம் .


லக்கினம் வலிமை பெரும் அமைப்பு : 


ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினம் எனும் பாவகம் கீழ்கண்ட வீடுகளுடன் தொடர்பு பெற்றால் மிகுந்த நன்மையை தரும் , ஆனால் அந்த வீடு பாதக ஸ்தானமாக இருக்க கூடாது என்பது பொது விதி .


லக்கினம் முதல் வீடு எனும் இலக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெற்றால் , ஜாதகர் மிகுந்த யோகசாலி , அடிப்படையில் நல்ல வளரும் சூழ்நிலையை பெறுவார் , யாருடைய ஆதரவும் இன்றி சுயமாக வெற்றி பெரும் அமைப்பை பெறுவார் , தனித்து செயல் படும் தன்மையும், நல்ல உடல் ஆரோக்கியமும் , நல்ல மன நிலையம் , பூரண ஆயுளையும் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் , எவருக்கும் இன்னல்களை தர விரும்ப மாட்டார் தான் உண்டு தனது வேலை உண்டு என மிகவும் , பொறுப்பாக இருப்பார் , எவ்வித தீய பழக்க வழக்கமும் இன்றி நல்ல ஒழுக்கம் கொண்ட மனிதராக விளங்குவார் .


லக்கினம் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் , ஜாதகரின் வாக்கு வன்மை சிறப்பாக இருக்கும் , வியாபாரம் , வணிகம் இரண்டும் ஜாதகருக்கு சிறப்பாக வரும் , இயற்கையிலேயே ஜாதகர் லாப நோக்கம் இன்றி எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார் , ஜாதகரின் வாழ்க்கையில் உடல் ரீதியாக சிறு சிறு தொந்தரவுகள் வந்து நீங்கும் , மன தைரியமும் , தன்னம்பிக்கையும் , மிகுந்து காணப்படும் , அடிப்படை கல்வி மிகவும் சிறப்பாக தேர்ச்சி பெரும் தன்மையை தரும் , நல்ல மன நிம்மதியான குடும்ப வாழ்க்கை சரியான வயதில் நிச்சயம் அமையும் , பெருந்தன்மையான குணம் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் .


லக்கினம் சகோதர ஸ்தானம் எனும் மூன்றாம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் , ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலையை பெறுவார் , சிறு வயது முதற்கொண்டே அதிர்ஷ்டம் நிறைந்தவராக காணப்படுவார் , எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும் , தன்னம்பிக்கை , பரிபூரண ஆயுள் சிறப்பாக அமைந்து விடும் , சகோதரர்கள் ஜாதகருக்கு மிகுந்த நன்மையை செய்வார்கள் , குறிப்பாக வேற்று இனத்தவர் மூலம் ஜாதகர் சிறப்பான முன்னேற்றம் பெறுவார் .


லக்கினம் சுக ஸ்தானம் எனும் நான்காம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் , சிறப்பான உடல் நிலையும் மன நிலையும் பெற்றிருப்பார் , தனது தாயின் கருணையினாலும் ஆசியினாலும் வாழ்க்கையில் மிகப்பெரிய சொத்து சுகங்களையும் , வண்டி வாகன யோகங்களையும் , மேல் நிலை கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையும் , ஜாதகருக்கு தேவையானவைகள் சிறுவயது முதற்கொண்டே தடையின்றி கிடைக்க பெறுவார் , நல்ல வசதி மிக்க வீடு , வண்டி வாகனம் , சொகுசு வாழ்க்கை , விவசாயம் செய்வதால் லாபம் , கால்நடைகள் பண்ணை தோழிகளால்  மிகப்பெரிய அதிர்ஷ்ட வாழ்க்கை என ஜாதகர் சிறப்பான முன்னேற்றம் நிச்சயம் பெரும் யோகம் உண்டாகும் .


லக்கினம் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது 1000 ல் ஒரு ஜாதகத்தில் மட்டுமே இந்த அமைப்பு இருக்கும் , காரணம் ஜாதகரின் பெற்றோரும் , ஜாதகரும் செய்த புண்ணியத்தின் பலனாக இந்த அமைப்பு ஜாதகருக்கு இருக்கும் , மேலும் இறை அருளின் பரிபூரண நல்லாசிகள் ஜாதகரை எல்லா காலங்களிலும் நன்மையை வழங்கி கொண்டே இருக்கும், நல்ல உடல் ஆரோக்கியம் , சிறந்த அறிவாற்றல் , நேர்மையான குணம் , தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாடு கொண்ட நல்ல மனிதராக ஜாதகர் இருப்பார் , மேலும் ஆன்மீக வாழ்க்கையில் ஜாதகர் சிறந்து விளங்கும் பெரும் பாக்கியம் கிடக்கும் .


லக்கினம் பகை ஸ்தானம் எனும் ஆறாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , அடிப்படையில் இருந்தே ஜாதகருக்கு முன்னேற்ற தடையை ஏற்ப்படுத்தும் , உடல் ரீதியாக பல இன்னல்களை தந்து கொண்டே இருக்கும் , ஒருவேளை இந்த ஆறாம் வீடு கடகம்,விருச்சகம்,மீன ராசியாக அமைந்து லக்கினம் ஆறாம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக ஆகி விடும் காரணம் இது நீர் ராசியாக இருப்பதால் , அதிக மன உளைச்சலை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் , இதானால் உடல் நிலையும் , மன நிலையும் கடுமையாக பாதிக்க படும் இந்த அமைப்பு மிகவும் சிரமத்தை தரும் , வளரும் சூழ்நிலையும் சரியாக அமையாது , ஜாதகரை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் , தனது வாழ்க்கை பாதிக்க ஜாதகரே காரணமாக அமைந்து விடுவார் .


லக்கினம் களத்திரம் எனும் ஏழாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது மிகவும் சிறப்பான பலனை தரும் , தனது சிறு வயது முதல் சிறப்பான வளரும் சூழ்நிலையை பெற்று இருப்பார் , அனைவரும்  ஜாதகருடன் நட்பு பாராட்டுவார்கள் , ஜாதகரை பிடிக்காதவர்களே இல்லை எனலாம் , அதுமாதிரியான நல்ல நடத்தையும் சுய கட்டுப்பாடு ஒழுக்கமும் கொண்டு இருப்பார் , தனது நண்பர்கள் வழியிலும் , பொது மக்களின் ஆதரவிலும் வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை பெறுவார் , மிக பெரிய அரசியல் பதவிகளில் கொடி கட்டி பறக்கும் மா மனிதர்களின் ஜாதக அமைப்பில் இந்த பாவகம் சிறப்பாக இருக்கும் , அதிலும் ஏழாம் வீடு சர ராசியாக இருப்பது மிகப்பெரிய வெற்றிகளை பெற்று தரும் , ஆனால் உபய இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு இது பொருந்தாது , காரணம் உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானமே இந்த ஏழாம் வீடுதான் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam @gmail .com