நாகதோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாகதோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 மார்ச், 2019

சுய ஜாதகத்தில் பாவக வலிமை வழியில் இருந்து ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை !


சுய ஜாதக பலன்கள்

ஒருவரது பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளை வைத்து முறையாக உயர் கணித சார ஜோதிட முறைப்படி கணிதம் செய்து, சுய ஜாதகத்தில் உள்ள லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை உணர்ந்து, நவகிரகங்களின் திசா புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் லக்கினம் முதல் 12 பாவகங்களின் எந்த தொடர்பை பெற்று பலன்களை வழங்குகிறது என்பதில் தெளிவு பெற்று சுய ஜாதக பலன் கூறும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக துல்லியமான பலாபலன்கள் கிடைக்க பெறுவதுடன், சிறப்பான நன்மைகளையும் எதிர்காலத்தில் யோகமிக்க வாழ்க்கையையும் தன்னிறைவாக பெறுவார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.
 

லக்கினம் : துலாம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 3ம் பாதம்

1,5,9,ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு லக்கின பாவக வழியில் இருந்து மதிப்பு மிக்க செயல்பாடுகள், அதிகாரம் மிக்க பொறுப்புகள், புகழ் மிக்க பதவிகள், வெகுமதி, கவுரவம், சமூகம் மற்றும் தொழில் துறையில் அபரிவித வளர்ச்சி அரசியலில் வெற்றி, வியாபாரத்தில் அதீத லாபங்கள் என்ற வகையிலும், நல்ல உடல் ஆரோக்கியம், மனதில் தெளிவு, மதி நுட்பம் கொண்டு அனைத்திலும் வெற்றி காணும் யோகம், என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும், சுய தொழில் வெற்றி, ஜீவன வழியில் முன்னேற்றம் என வாழ்க்கையில்  சகல சௌபாக்கியமும் உண்டாகும்.

5ம் பாவக வழியில் இருந்து கலைத்துறையில் வெற்றி, ஆராய்ச்சியில் வெற்றி , இயல் இசை நாடகம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம், குழந்தைகள் வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை, சமயோசித புத்திசாலி தானம் கொண்டு  வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு தீர்வு காணும் தன்மை என சகல சௌபாக்கியங்களையும் தரும், விளையாட்டில் ஆர்வம் குலதெய்வ அனுக்கிரகம், மேன்மை மிக்க பொறுப்புகள், புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான எதிர்காலத்தை தரும்.

9ம் பாவக வழியில் நுண்ணறிவு திறன், ஆராய்ச்சி கல்வியில் வெற்றி, அனைவரிடமும் நற்பெயர், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், உயர்ந்த பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், ஆன்மீகத்தில் வெற்றி,கடவுள் அனுக்கிரகம், செய்யும் காரியங்களில் பரிபூர்ண நன்மைகளை பெரும் யோகம், பித்ருக்களின் ஆசிர்வாதம், மிதம்மிஞ்சிய ஞானம் என்ற வகையில் சிறப்பை தரும்.

2,6,8,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெறுவது  ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து கல்வியில் தேர்ச்சி, நல்ல ஜீவனம் அமையும் தன்மை, கை நிறைவான வருமான வாய்ப்புகள், வியாபார ஞானம், நிர்வாக திறன், இனிமையான பேச்சு திறன், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, நல்ல நண்பர்கள், புகழ் பரிசு அனைத்திலும் வெற்றி என்ற வகையிலும், பொது மக்கள் ஆதரவு, வெளியூர் வெளிநாடு சென்று வரும் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் பெரும் அதீத வருமான வாய்ப்புகள் என சகல சௌபாக்கியமும் உண்டாகும்.

6ம் பாவக வழியில் இருந்து பதவியில் வெற்றி, உத்தியோக ஆர்வம், பதவியில் திடீர் உயர்வு, அதிகாரிகளிடம் இருந்து வரும் ஆதரவு, சொந்த முயற்சியில் முன்னேற்றம் பெரும் தன்மை, உடல் நலனில் அக்கறை, கடன் சார்ந்த வகையில் முன்னேற்றம், எதிர்பார்ப்புகள் அணைத்த்தும் நிறைவேறும் தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி என்ற வகையில் நன்மையை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து விபத்து அறுவை சிகிக்சை மூலம் உடல் ஆரோக்கியம் பெரும் தன்மை, மருத்துவ செலவினங்கள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு மற்றும் அன்பு, மனமகிழ்ச்சி, திருமணம் மூலம் யோக வாழ்க்கை, சரியான முடிவுகளை சரியான நேரங்களில் மேற்கொண்டு சகல வழிகளில் இருந்தும் நலம் பெரும் தன்மை, எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் அபரிவித முன்னேற்றம் என்ற வகையில் சுக போகங்களை வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து முதலீடுகள் வழியில் இருந்து வரும் அதீத வருமானம், தெய்வீக அனுக்கிரகம், ஆன்மீகத்தில் ஈடுபாடு, பொருளாதார தன்னிறைவு, அதிகப்படியான பொருளாதார வரவுகள், தெய்வீக ஆற்றல் வழியில் இருந்து வரும் முன்னேற்றம், புதிய வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் நலம் பெரும் தன்மை, உறவுகள் வழியிலான ஆதரவு, அனைவரின் ஆதரவு மூலம் பெரும் பொருளாதர முன்னேற்றம், மனநிம்மதி, தெளிவான சிந்தனை, நல்ல அயன சயன சுக போக வாழ்க்கை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மனவலிமை என்ற வகையில் சுக போகங்களை வாரி வழங்கும்.

3,11ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து நிலையான முன்னேற்றம், சுலப பொருள் வரவு, வீரியமிக்க செயல்பாடு, சகல சௌபாக்கியம், முயற்சிக்கும் காரியங்களில் வெற்றி, இசை ஆர்வம், தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அரசியலில் உயர் பதவி, தீர்க்காயுள், பெரியோர் ஆதரவு மற்றும் ஆசிகள், புத்தி கூர்மை, நியாயமான முறையில் வியாபார வெற்றி,  விவசாயத்தில் அதீத ஆர்வம், தெய்வீக சிந்தனை, லட்சியங்களை அடைதல், தன்னம்பிக்கை, நூல் ஆசிரியர், பத்திரிக்கை நிருபர், தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி, துணிந்து செயலாற்றும் திறன், அதிர்ஷ்டத்தின் தன்மையை முழுவதும் சுவீகரிக்கும் தன்மை சுய ஜாதகத்தில் உள்ள  யோக பலன்களை முழுவதும் அனுபவிக்கும் வல்லமை என சிறப்பான யோக வாழ்க்கையை நல்கும்.

11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், தொழில் வழியிலான அதிர்ஷ்ட வாய்ப்புகளை சுவீகரிக்கும் வல்லமை, முற்போக்கு சிந்தனை மற்றும் செயல்பாடுகள், புதுமை விரும்பி, அனைத்தையும் யூகிக்கும் வல்லமை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போராடி வெற்றி பெரும் மனவலிமை, போதுமென்ற மனம், பல தொழில் செய்யும் யோகம், உறவுகள் பெற்றோர்  வழியில் இருந்து பெரும் அதிர்ஷ்டங்கள் என வெகு சிறப்பான நன்மைகளை ஜாதகி பரிபூர்ணமாக பெறுவார்.

4ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 4ம் பாவக வழியில் இருந்து தந்தையாருக்கு மிகுந்த பாதிப்பு, ஜாதகியின் குணாதிசயம் வெகு சிறப்பாக அமையும், நல்ல தொழில் முன்னேற்றம், நல்ல குணம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, மண் மனை வண்டி வாகன யோக வழியில் பாதிப்பு, வீடு நிலம் இடம் போன்றவற்றில் இருந்து வரும் இழப்புகள், வாகனத்தில் வரும் வீண் செலவினங்கள், வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாத சூழ்நிலை, கருத்து வேறுபாடுகள், பிடிவாத குணம் அல்லது மனப்போராட்டம் வழியில் இருந்து வரும் இழப்புகள், திருமணத்திற்கு பிறகான யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மையை தரும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம், நல்ல அந்தஸ்துள்ள வாழ்க்கை துணை , அரசியலில் வெற்றி, வியாபாரத்தில் வெகு சிறப்பு, சமூக அந்தஸ்த்து, வாழ்க்கை துணையின் ஆதரவு பரிபூர்ணமாக கிடைக்கும் தன்மை, வெளிநாடுகள் சென்று வரும் யோகம், பிறந்த இடத்தை விட்டு வெகு  தொலைவு சென்ற பிறகு கிடைக்கும் ஜீவன மேன்மை, கூட்டு தொழில் வழியில் பெரும் சிறப்புகள், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், கூட்டு முயற்சியின்  வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை என்ற வகையில் மிகுந்த சிறப்பை தரும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், அரசு துறையில் பணியாற்றும் வல்லமை, ஜீவன வழியில் இருந்து வரும் படிப்படியான முன்னேற்றம், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, எதிர்பார்த்த விஷயங்கள் ஜாதகிக்கு தேடி வரும் தன்மை, கம்பீரமான வாழ்க்கை முறை, தீர்க்கமான வாத திறமை, சுய தொழில் செய்வதால் வரும் அபரிவித முன்னேற்றம், தெளிவான தொழில் ஞானம், திட்டமிட்டு செயலாற்றும் தன்மை, அனைவரையும் அனுசரித்து செல்லும் யோகம், புதிய மாற்றங்களை  ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை தரும்.

குறிப்பு :

பெரும்பாலான பாவக தொடர்புகள் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகிக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது, சுய ஜாதகத்தில் ராகு பகவான் லக்கினத்தில் ( துலாம் ) அமர்ந்து இருப்பது ஜாதகிக்கு ஜென்ம லக்கினம் 100% விகித வலிமையை பெற்று சிறப்பான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் ஜாதகியின் அறிவுத்திறன் வெகுவாக பிரகாசிக்கும், வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றி கிட்டும், மேலும் கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் ( மேஷம் ) அமர்ந்து இருப்பது ஜாதகிக்கு நல்ல யோகமிக்க வாழ்க்கை துணையை அமைத்து தரும் என்பதுடன், பிரபல்ய யோகமும் வியாபாரத்தில் விருத்தி, அரசியலில் வெற்றி என்ற நிலையை வாரி வழங்கும், கணவருக்கு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும், களத்திர ஸ்தான வழியில் இருந்து ஜாதகி பரிபூர்ண நன்மைகளை சிறப்பாக பெறுவார், வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 1 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : துலாம் லக்கினம் ( 2019-2020 )


 துலா லக்கின அன்பர்கள் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெரும்  நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : துலாம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாகவும், சர காற்று ராசியாகவும் விளங்கும் துலாம் ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்திலும், வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் பாக்கிய ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் துலா லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும். தனது அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் வரும் இன்னல்களை வெகு எளிதாக கடந்து செல்லும் வாய்ப்பை தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், முயற்சிக்கும் காரியங்கள் இறை அருளின் கருணையினால் சிறப்பான வெற்றிகளை வாரி  வழங்கும், உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் எதிர் பாராத நன்மைகளையும் பாராட்டு மற்றும் பரிசுகளையும் பெறுவதற்கான வாய்ப்பை வாரி வழங்கும், முன்னோர்கள் ஆசிர்வாதம், பெரியமனிதர்கள் ஆதரவு, மக்கள் செல்வாக்கு, பிரபல்ய யோகம், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு, சரியான வழியில் வாழ்க்கையில் முன்னேற்றங்களை பெரும் தன்மை, அதீத போராட்டங்களை கடந்து சிறப்பான யோக வாழ்க்கையை பெரும் தன்மை, நல்ல மனிதர்களின் சேர்க்கை, ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பு, அவர்கள் வழியிலான வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், புதுவித சிந்தனைகளின் வழியில் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் தன்மை என முழு அளவில் நன்மையான பலன்கள் நடைமுறைக்கு வரும், பயணங்கள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம், எதிர்பாராத சந்திப்புகள் மூலம் நலம் பெரும் தன்மை, அந்நியர் மற்றும் மேல்நாட்டினர் மூலம் வழியில் இருந்து பெரும் ஆதாயம் என ராகுவின் சஞ்சாரம் சுபயோகங்களை வாரி வழங்கும்.

 அதே சமயம் புதன் கேந்திர அதிபதியாக 14 பாகைக்குள் சஞ்சாரம் செய்யும் நிலையில்  துலா லக்கின அன்பர்களுக்கு சற்று இன்னல்களை வெகுவாக தரக்கூடும், குறிப்பாக பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் செயல்படுவதை தவிர்ப்பது நல்லது, பெரியோர்களை மதித்து நடப்பதும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதும் சிறப்பான நன்மைகளை தங்களுக்கு வாரி வழங்கும், முறையான பித்ரு காரியங்களை மேற்கொண்டு அவர்களின் ஆசியின் மூலம் நன்மைகளை சுவீகரிப்பது அவசியமாகிறது, மிக சிறந்த ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று முறையான நிவர்த்தி பரிகாரங்களை மேற்கொண்டு சகல சௌபாக்கியங்களையும் பெற "ஜோதிடதீபம்" அறிவுறுத்துகிறது.

 வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் தான் சஞ்சரிக்கும் 3ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய சுபயோகங்களை வாரி வழங்குவார் என்பதில்  சந்தேகம் இல்லை, எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும், வியாபார துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், தெய்வீக சிந்தனை மேலோங்கும், கமிஷன் அல்லது தரகு வழியில் ஜீவனம் மேற்கொள்ளும் அன்பர்களுக்கு திடீர் யோக வாழ்க்கை அமையும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், லட்சியம் மற்றும் அபிலாசைகள் அனைத்தும் கைகூடி வரும் சுபயோக நேரமிது, புதிய சிந்தனைகள் அறிவார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் தங்களுக்கு வெகுவாக கைகொடுக்கும், சகோதர வழி ஆதரவு, உறவுகள் வழியில் இருந்து வரும் உதவிகள் என ஒவ்வொரு நாளும் தங்களுக்கு வெகு சிறப்பான நன்மைகளையும், முன்னேற்றங்களையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும், இதுவரை இல்லாத அதிர்ஷ்ட வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் உண்டாகும், கல்வி துறையில் அரசு பணியில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத நன்மைகளும் முன்னேற்றங்களும் கிடைக்க பெறுவார்கள், வியாபாரிகளுக்கு லாபம் பன்மடங்கு கூடி வரும், புதிய தொழில் செய்வோருக்கு இனிவரும் காலம் மிகுந்த சிறப்புக்களையும், அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல வாய்ப்புக்களையும் வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதனால் முயற்சித்து சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுங்கள்.

தகவல் தொழில் நுட்பம், உயர் கல்வி, பட்டய படிப்பு என துலா லக்கின  அன்பர்களுக்கு கேது பகவானின் சஞ்சாரம் வெகுவான சிறப்புகளை வாரி வழங்கும், புதிய யுக்தியை கையாண்டு குறுகிய காலத்தில் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், சுய அறிவு வெகுவாக பிரகாசிக்கும், பல தொழில் செய்யும் யோகம் உண்டாகும், நல்லவர்கள் சேர்க்கை தங்களின் வாழ்க்கையில் வெகுவான நன்மைகளை வாரி வழங்கும், உயர் ரக தொழில் நுட்பம் சார்ந்த உபகரணங்கள் மூலம் அதீத லாபம் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்துவரும்  பொருட்கள் மூலம் நல்ல லாபம் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிதம் மிஞ்சிய லாபம் கிட்டும், சுய உழைப்பிற்க்கான பாராட்டுதல்கள் ஊக்குவிப்பு தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், எழுத்து சார்ந்த துறை பத்திரிக்கை துறையில் உள்ள அன்பர்களுக்கு சீரிய முன்னேற்றம் உண்டாகும், கேது பகவானின் வீரிய ஸ்தான சஞ்சாரம் துலா லக்கின அன்பர்களுக்கு சாதிக்க இயலாதது எதுவும் இந்த உலகில் இல்லை என்பதை உறுதி செய்து வெற்றியாளனாக பரிணமிக்க செய்யும் அன்பர்களே, வாழ்த்துக்கள்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் துலா லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,3ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து துலா லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கன்னி லக்கினம் ( 2019-2020 )


கன்னி லக்கின அன்பர்கள் சோதனைகளை வெற்றிகொள்ளும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : கன்னி

காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சத்ரு ஸ்தானமாகவும், உபய மண் தத்துவ ராசியாகவும் விளங்கும் கன்னி ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்திலும், சுக ஸ்தானமான 4ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் ஜீவன ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திரதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே யோக பலன்கள் கன்னி லக்கின அன்பர்களுக்கு வெகுவான சிறப்புகளை வழங்கும், குறிப்பாக செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதா அமையும், கமிஷன், தரகு, வியாபாரம் சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை வாரி வழங்கும், கவுரவம் அந்தஸ்து மேலோங்கி நிற்கும், உயர்பதவிகள் செய் தொழில் வெற்றி என ஜாதகரின் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான யோக பலன்கள் தேடி வரும், புதிய முயற்சிகள் யாவும் பலிதம் பெரும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஊடக துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத யோக வாழ்க்கை அமையும், கன்னி லக்கின அன்பர்களின் அறிவு திறன் எதிர்பாராத சுபயோகங்களை சுவீகரிக்க செய்யும் எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து வெற்றிநடை போடும் நேரமிது, சுய தொழில் செய்யசரியானநேரமாக இதை கருதலாம், மேலும் தொழில் வழியிலான முன்னேற்றம் என்பதும் படி படியாக அமையும், அரசியலில் கவுரவ பதவி உண்டு, பொதுமக்கள் ஆதரவு மேலோங்கும், தூர தேச பிரயாணம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை வாரி வழங்கும், தகப்பனார் வழியிலான ஆதரவு தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும், உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் நிச்சயம் உண்டு என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் கன்னி லக்கின அன்பர்கள் மிகுந்த சோதனைகளை எதிர்கொள்ளும் தன்மையை தரும் குறிப்பாக கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே சகல நலன்களையும் தரும், எதிர்ப்புகள் அதிக அளவில் வரும் என்பதுடன், ஜீவன வழியிலான சிரமங்களை அதிக அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது மிகுந்த நன்மையை தரும், தொழில் வழியிலான முன்னேற்ற தடைகள், தாமதங்களை தவிர்க்க இயலாது, கூட்டு தொழில் செய்யும் அன்பர்கள் தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருந்து தொழில் முன்னேற்றத்தை கவனிப்பது அவசியமாகிறது, மனக்கசப்புகளை தவிர்த்து ஜீவன முன்ன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக செயல்படுவது அவசியமாகிறது, தொழில் வழியினாலான பணப்பரிமாற்றம் தங்களுக்கு சில நேரங்களில் வெகுவான இழப்புகளை தரும் என்பதால் கவனமுடன் பணத்தை கையாள்வது அவசியமாகிறது, தங்களின் முன்னேற்றம் தங்களின் முயற்சியில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், முயற்சி இன்மை தங்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்த கூடும் என்பதை மறவாதீர்கள் கன்னி லக்கின அன்பர்களே !

கேது பகவானின் சஞ்சாரம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் அமைவதும், 4ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைவதும் கவனிக்கத்தக்கது, கன்னி லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது உகந்ததது அல்ல, மேலும் தனுசு கோண அதிபதி வீடாக அமைவது 100% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து கடும் நெருக்கடிகளை தரும், சுகபோக விஷயங்களுக்கு வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலை தரும், ஆடம்பர பொருட்கள் சுவீகரிப்பதன் மூலம் வீண் விரையம் ஆகும், பொருளாதார ரீதியான சிக்கல் அதிகரிக்கும், வீடு, நிலம், இடம் சார்ந்த அமைப்புகளில் இருந்து வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் கடும் மனநிம்மதி இழப்பை தரக்கூடும், முன்னேற்ற தடைகள் மூலம் வாழ்க்கையில் அதீத போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும், பெரியவர்கள் ஆதரவு இன்றி தனித்து செயல்படும் சூழ்நிலையை தரும், அனைத்திலும் போராட்டம் என்ற சூழ்நிலையையையும், தோல்வியால் இன்னலுறும் தன்மையையும் தரும், எதிர்ப்புகள் பல விதங்களில் தங்களை பாதிக்கும், நல்ல குணம், பரந்த மனப்பக்குவம் இரண்டையும் மேம்படுத்திக்கொள்வது மிகுந்த சிறப்பை தரும், சுக ஸ்தான வழியில் இருந்து சற்று கடுமையான இன்னல்கள் தங்களுக்கு வந்த போதிலும், நல்ல குணம் கொண்டு அனைத்தையும் வெல்லுங்கள்.

வண்டி வாகனம், சொத்து, வீடு நிலம், இடம் ஆகிவற்றில் இருந்து தங்களுக்கு எதிர்பாராத இழப்புகள் அல்லது சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இழப்புகளை தவிருங்கள், வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த பாதுகாப்புடன் செல்வதே தங்களுக்கு நன்மைபயக்கும், வீண் மருத்துவ செலவினங்களை தவிர்க்கலாம், பெற்ற தாயை பேணி காப்பதும், அவர்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதுமே தங்களுக்கு மிகுந்த நன்மைகளை சுக ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், அருங்குணங்களை சீரமைப்பதும், பொறாமை, கோபம், பதட்டம் போன்றவற்றை  தவிர்ப்பதும் தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், புதிதாக சொத்து வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கும் முன் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு முயற்சிப்பது நன்மை தரும், முடிந்த அளவு பொறுமையை கடைபிடித்து கேது பகவான் சுக ஸ்தான வழியில் இருந்து தரும் இன்னல்களை தவிர்க்க முற்படுங்கள், உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் தடையை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் கடினமான உழைப்பை கையில் எடுத்து வெற்றி பெறுங்கள், எந்த சூழ்நிலையிலும் நல்ல குணத்துடன் ஸ்திரமாக நின்று வெற்றியை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 10,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் கன்னி லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து கன்னி லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 12 ஜனவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மிதுன லக்கினம் ( 2019-2020 )



 நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : மிதுனம் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன லக்கின அன்பர்களுக்கு, முறையே ஜென்மலக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் வழியில், ஜென்மலக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவானால் பரிபூர்ண சுபயோக பலாபலன்களை அனுபவிக்கும் யோகத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது, ராகுவின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு முயற்சிக்கும் காரியங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், கமிஷன் தரகு காண்ட்ராக்ட் தொழில்களில் உள்ளோர்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை நல்குவதுடன், அதீத லாபங்களை வாரி வழங்கும், புதிதாக முயற்சிக்கும் காரியங்கள் யாவும் சிறப்பான வெற்றிகளை பெரும், தன்னம்பிக்கை, சுய மரியாதை அதிகரிக்கும், சகோதர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளையும், சிறப்பான ஆதரவுகளை பெரும் நேரமிது, எதிர்ப்புகளை அனைத்தையும் கடந்து வெற்றிநடை போடும் காலமிது என்பதை உணர்ந்து மிதுன லக்கின அன்பர்கள் தனது வாழ்க்கை பாதையை மிக சிறப்பாக அமைத்துக்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

இதுவரை வாழ்க்கையில் அதீத போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருந்த மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத வெற்றிகள் வந்து சேரும், தைரியமும் தன்னம்பிக்கையும் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும், எதிர்பார்ப்புகளை பூரணமாக நிறைவேற்றும் வல்லமை உண்டாகும், உடல் நலம் மன நலம் மேலோங்கும், சிறந்த அறிவுத்திறன் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் சிறப்பாக வாரி வழங்கும், புது வித தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ளோருக்கு இனிவரும் 18 மாதங்கள் வெகு சிறப்பாக அமையும், ஊடகம் சார்ந்த துறைகளில் உள்ளோர் மிகப்பெரிய சாதனைகளை சாதிக்கும் வாய்ப்பை தரும், கமிஷன், தரகு, ஏஜென்சி சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு சிறப்பான வருமான வாய்ப்புகள் உருவாகும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் வெற்றி தரும் என்பதால் ராகு பகவானின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு சிறப்பான யோக பலன்களையே வாரி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, வாய்ப்புகளை தவற விடாமல் வெற்றி பெறுங்கள்.

 களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சரிக்கு கேது பகவான் மிதுன லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை வாரி வழங்குவார், இல்லற வாழ்க்கையில் உள்ள மிதுன லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் " நித்யகண்டம் பூர்ண ஆயுசு " என்ற அளவில் செயல்பாடுகளில் தடை தாமதங்களை வாரி வழங்கும், எதிர்பாலின சேர்க்கையின் மூலம் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் தேவையற்ற சகவாசங்களை விட்டு விட்டு வாழ்க்கையில் நிம்மதியை தேடுவது உகந்த நன்மைகளை தரும், புது உறவுகள் தங்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது, சுய ஒழுக்கம் தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை தரும்,  நல்லோர் சேர்க்கை வரும் இன்னல்களில் இருந்து காப்பாற்றும், கூட்டு முயற்சி, கூட்டு தொழில் வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தமது வாழ்க்கையில் மிகுந்த நேர்மையை கடைபிடித்து நலம் பெறுவது அவசியமாகிறது, மேலதிகாரிகளிடம் பகைமை பாராட்டாமல் நட்பு உறவை பேணுவது அவசியமாகிறது, வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் அதீத அக்கறை கொள்வது தங்களுக்கான மனஉளைச்சலை குறைக்கும்.

உறவுகளுடன் சுமுகபோக்கை கையாண்டு நலம் பெறுங்கள், பொது வாழ்க்கையில் உள்ளோர் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது இல்லையெனில் வீண் அவப்பெயரும் பாதிப்பும் உண்டாகும், வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் பொழுது பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு நலம் பெறுங்கள், உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது, வெளிவட்டார பழக்க வழக்கங்கள் சற்று பாதிப்பை தரக்கூடும் என்பதால் கொடுக்கல் வாங்கலில், தனம் சார்ந்த விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, மற்றவருக்காக ஜாமீன் தருவதை தவிர்க்கலாம், பொது வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிப்பது நன்மையை தரும், கல்வி துறையில் உள்ளோருக்கு சற்று முன்னேற்ற தடையை தரக்கூடும், பதவி உயர்வு தாமதம் ஆகக்கூடும், பெரிய மனிதர்கள் உதவியை பெற மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பித்ருக்களின் ஆசியை பெற அமாவாசை தினங்களில் முறையான தர்ப்பணம் செய்து நலம் பெறுக, எந்த காரணத்தை கொண்டும் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படும் நிகழ்வுகளில் ஈடுபடாமல் இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து மிதுன லக்கின அன்பர்கள் யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 25 ஜூலை, 2018

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களின் வலிமை, ராகுகேதுவினால் ஜாதகர் பெரும் நன்மை !

 

 சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் முற்பகுதியில் சிறு சிறு இன்னல்களை தந்த போதிலும் ( வளரும் சூழ்நிலை பாதிப்பு, பெற்றோரை விட்டு பிரிந்து வாழும் சூழ்நிலை, கல்வியில் தடை, தொழில் வழியில் தடை, வாழ்க்கை துணையை தேடுதலில் இன்னல்கள், உடல் மனம் பாதிக்கும் தன்மை என்ற வகையில் ) பிற்பகுதியில் அபரிவிதமான யோக வாழ்க்கையை வழங்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும், மேலும் நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது, சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த நன்மையான பலாபலன்களையே வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, பொதுவாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு புலனுக்கு அப்பாற்பட்ட அறிவுத்திறனை வாரி வழங்கிவிடுகிறது, ஜாதகர் சுய ஒழுக்கம் மட்டும் கட்டுப்பாட்டை பேணும் தன்மை கொண்டவராக இருப்பின், அவரது வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சிகம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம்

இந்த விருச்சிக லக்கின ஜாதகருக்கு 5ல் ராகுவும், 11ல் கேதுவும் அமர்ந்திருப்பது மேலோட்டமாக காணும் பொழுது 5ல் அமர்ந்த ராகு புத்திர தோஷத்தை தரும் என்று  கருதக்கூடும், பாவக வழியிலான ஆய்வில் ராகு அமர்ந்த 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த வலிமை பெற்ற அமைப்பாகும், மேலும் ஜாதகரின் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீனராசியில் 8பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 21 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் மனம் மிக வேகமாக சஞ்சரிக்கு வல்லமை கொண்டது என்பதுடன் ஜாதகரின் மனதில் எண்ணிய காரியங்களை மிக விரைவாக முடிக்கும் வல்லமையை தரும், தனது சுய அறிவு திறன் மற்றும் அதி புத்திசாலித்தனம் இரண்டு ஜாதகருக்கு சரியான நேரத்தில் நல்லொதொரு பலாபலன்களை வாரி வழங்கும், ஜாதகரின் குல தெய்வ ஆசி செயற்கரிய காரியங்களை மிக எளிதாக செய்துமுடிக்கும் வல்லமையை தரும், நல்லோர் சேர்க்கையும், ஆன்மீக பெரியோரின் ஆசியும் ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க எதிர்காலத்தை வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தருவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியை வாரி வழங்கும்.

ராகு பகவானின் அமர்வு என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அயன சயன ஸ்தானமாகவும், ஜென்ம ஸ்தானமாகவும் அமைவது, ஜாதகரின் நல்லறிவும் ஆராய்ச்சி மனப்பக்குவமும் சிறப்பு மிக்க எதிர்காலத்தை அமைத்து தரும் மிதமிஞ்சிய நல்ல வாய்ப்புகளையே உருவாக்கி தரும், புதிய கண்டுபிடிப்புகள் அல்லது புதிய முயற்சிகளில் நல்லதோர் எதிர்காலத்தை தரும், ஜாதகரின் மனமும் உடலும் மிக சிறப்பாக இயங்கும் என்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை அற்றவர்கள்  ஓர்  காரியத்தை செயல்வடிவமாக பார்க்க பகிர்தனா கஷ்டங்களை சந்திக்கும் பொழுது சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெற்ற அன்பர்கள் மிக எளிதாக ஓர் செயலை செய்து செயல்வடிவம் காண்பார்கள், தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும்  ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும், எதையும் சாதிக்கும் வலிமையை  ஜாதகருக்கு  பரிபூர்ணமாக  நல்கும் என்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராகு 5ல் அமர்ந்து வலிமை பெறுவதும், 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுபயோக வாழ்க்கையை தருவதில் யாதொரு தடைகளையும் வழங்காது என்பது கவனிக்கத்தக்கது, தனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஜாதகர் 5ம் பாவக வழியில் செலுத்த ஆரம்பிக்கும் பொழுது 5ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான்  வழங்கும் சுபயோக வாழ்க்கையை யாதொரு தடையும் இன்றி  சுவீகரிக்கலாம்.

சம வீடான 11ல் கேது அமர்வது ஜாதகருக்கான அதிர்ஷ்டத்தை பரிபூர்ணமாக பெரும் வாய்ப்புகளை  வாரி வழங்கும், ஜாதகருக்கான அதிர்ஷ்டம் என்பது ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் வழியில் இருந்தும், சத்ருக்கள் வழியில் இருந்தும் வரக்கூடும் என்பதுடன், உபய மண் தத்துவம் சார்ந்த அமைப்பில் இருந்தும் சர காற்று தத்துவ அமைப்பில் இருந்தும் வந்து சேரும், மேலும் எதிர்பாலினம் நண்பர்கள், கூட்டாளிகள் வெளியூர் அல்லது வெளிநாடு என்ற அமைப்பில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை நல்கும், கேது பகவானின் வலிமை ஜாதகருக்கு அபரிவித நன்மைகளை சிந்தனை ஆற்றல் வழியில் இருந்து  வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, குறிப்பாக வியாபாரம் சார்ந்த அமைப்பில் ஜாதகரின் முன்னேற்றம் தன்னிறைவாக அமையும் அல்லது வெளிநாடுகளிலான ஜீவனம் ஜாதகருக்கு மிதமிஞ்சிய அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு 11ல் கேது வலிமை பெற்று அமர்வதுடன், சுய ஜாதகத்தில் பாவக  வழியிலான தொடர்பு என்பது 11ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது நிறைவான சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கும், நல்ல குணமும் ஜாதகரின் செயல்பாடுகளும் சமூக அந்தஸ்த்தை குறுகிய காலத்தில் பெற்றுத்தரும், ஜாதகரின் தன்னம்பிக்கை லட்சியம், மனோதிடம் போன்றவை 11ம் பாவக வழியில் இருந்து சில எதிர்பாராத நன்மைகளை தருவதுடன் சிறந்தவற்றை தேர்ந்துஎடுக்கும் வல்லமையை  தரும், வண்டிவாகன யோகம், வீடு நிலம் சார்ந்த தொழில்கள் வழியில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும் மிதமிஞ்சிய லாபங்கள் வந்து சேர்வதுடன் தொழில் விருத்தியும் அபரிவிதமாக அமையும், ஜாதகரின் லாப ஸ்தானத்தில் பெரும்பகுதி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியிலேயே வியாபித்து நிற்பது ( 21 பாகைகள் ) ஜாதகர் வெளிநாடுகளில் மிதமிஞ்சிய  அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறுவார் என்பதை கட்டியம் கூறுகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்க்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின், ஜாதகருக்கு விவரிக்க இயலாத சில தனி திறமைகளை கொண்டவராக திகழ்வார், தன்னிடம் உள்ள தனித்திறனை கண்டுணர்ந்து அதில் ஆர்வம் காட்டுவது ஜாதகருக்கான வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், பிரபல்ய யோகமும், உலகப்புகழ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை இந்த கட்டுரையில் பதிவு செய்ய "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 3 ஜூலை, 2018

ராகுகேது தோஷம் புத்திர பாக்கியத்தை தடைசெய்கிறதா ? ஆண் வாரிசு கிடைக்குமா ?


 கேள்வி :

 திருமண வாழ்க்கையில் இணைந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது, இதுவரை குழந்தைக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியை தந்துவிட்டது, மருத்துவ சிகிச்சையும் பலன் தரவில்லை, எங்களுக்கு நல்ல ஆண் வாரிசு அமைய வாய்ப்பு உள்ளதா? சர்ப்ப தோஷம் எங்களுக்கு புத்திர பாக்கியத்தில் தடை செய்கிறதா? இதற்க்கு சரியான தீர்வுதான் என்ன ?


லக்கினம் : கன்னி
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 1ம் பாதம்

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் நல்ல வாரிசு மற்றும் குழந்தை பாக்கியத்தை தரும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதுடன், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் தற்போழுது நடைபெறும் சூரியன் திசையும் தங்களுக்கு 4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்ட அயன சயன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எதிர்பாராத இன்னல்களையும், துன்பங்களையும் 4,8,12ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், சூரியன் திசையில் கேது புத்தி தங்களுக்கு 3,8ம் வீடுகள் பாதகம் மற்றும் விரைய ஸ்தான தொடர்பை பெற்று கடுமையான இன்னல்களை தருவது தங்களுக்கு உகந்ததல்ல, எனவே தங்களது சுய ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் கடுமையாக பாதிக்கப்பட்டு, நடைபெறும் சூரியன் திசையும் தங்களுக்கு ஜாதகம் இன்றி இருப்பது புத்திர பாக்கியத்தில் தடை தாமதங்களை வழங்குகிறது.

சாயா கிரகங்களான ராகுகேது தங்களது ஜாதகத்திற்கு தான் அமர்ந்த உயிர் உடலாகிய லக்கின ( கேது ) பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வதும், களத்திர ஸ்தானமாகிய 7ம் பாவகத்தை ( ராகு ) 100% விகிதம் வலிமை இழக்க செய்வதும் முரண்பட்ட பலாபலன்களை வழங்கும், லக்கினத்தில் அமர்ந்த கேது தங்களுக்கு உடல் ஆரோக்கியம், மனநலம், தெளிந்த நல்லறிவு, யோக வாழ்க்கை, வளரும் சூழ்நிலையில் சிறப்பு, புகழ் வெற்றி அந்தஸ்து என்ற வகையில் நன்மைகளையும், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தங்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் பொதுமக்கள் என்ற வகையில் இருந்து அதீத துன்பங்களை வாரி வழங்கும், எனவே சர்ப்ப தோஷம் தங்களது வாழ்க்கையில் புத்திர பாக்கியத்திற்கு தடையா அமையவில்லை, சுய ஜாதகத்தில் 5ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்றது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி கடுமையாக பாதிக்கப்பட்டதும், தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் காரணமாக அமைகிறது.

சந்திரன்,சனி மற்றும் புதன் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்கள் மட்டுமே தங்களுக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறது, இதில் புதன் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அதே வேளையில் 3,5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது மிகுந்த பாதிப்பை தரும், தங்களது ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் பாதிக்கப்பட்ட பாவக பலனையே ஏற்று நடத்துவதால் தங்களுக்கு இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை, எனவே தங்களது ஜாதகத்துடன் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தையும் தெளிவாக அறிந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுமா ? என்பதை உறுதி செய்யலாம், தம்பதியர் இருவரின் ஜாதகம் கொண்டு பாவக வலிமையை பற்றி தெளிவாக அறிந்துகொண்ட பிறகே தங்களது வினாவுக்கான பதில் தர இயலும் சகோதரி.

சரியான தீர்வு :

தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, இதுவே தங்களது இல்லற வாழ்க்கையில் புத்திர பாக்கியத்தை வழங்கவில்லை என்பதனால், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் எப்படிப்பட்ட வலிமையை பெற்று இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு ஓர் சரியான தீர்வை தர இயலும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மேற்கண்ட விஷயங்கள் வலிமை பெற்று இருப்பின் தங்களுக்கு நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு, ஒருவேளை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பின், தாங்களும் தங்களது வாழ்க்கை துணையும் மருத்துவ ஆலோசணையை நாடி, நல்லதொரு குழந்தையை பெறுவதே சரியான தீர்வாக இருக்கும், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 16 மே, 2018

கால சர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம், சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களின் ஆளுமை திறன் !


 நவ கிரகங்களில் மிகவும் வலிமையானது கேது, அதற்க்கு மேலான வலிமையை பெற்றது ராகு, சுய ஜாதகத்தில் மேற்கண்ட சாயாகிரகங்களின் ஆளுமை என்பது விவரிக்க இயலாத ஒன்றாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒருவரது ஜெனன ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை சேர்க்கும் அமைப்பில் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர், ராகுகேது அமர்ந்த பாவக வழியிலான சுபயோகங்களை தங்கு தடையின்றி சுவீகாரம் செய்வார், அபரிவித நன்மைகளும் சுபயோகங்களும் ஜாதகரை தேடிவரும் வரும் இதில் சிறிதும் மாற்றம் இருக்காது, அதே சமயம் சுய ஜாதகத்தில் தான் அமர்ந்த பாவகத்திற்க்கு வலிமை சேர்க்கவில்லை எனில் ஜாதகரின் பாடு படு திண்டாட்டம் தான், எவ்விதத்திலும் ஜாதகர் சாயாகிரகங்கள் அமர்ந்த பாவக வழியிலான சிறு நன்மைகளையும் பெற இயலாது என்பது கவனிக்கத்தக்கது.

பெரும்பாலும் சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12 பாவகங்களின் அமரும் ராகு கேது தோஷத்தை தரும் என்பதாகவும், சாயா கிரகங்களுக்குள் மற்ற கிரகங்கள் அமர்ந்து இருப்பின் கால சர்ப்ப தோஷத்தை தருவதாகவும் பொதுவான கருத்து உள்ளது, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதனை "ஜோதிடதீபம்" அறிவுறுத்த கடமைப்பட்டுள்ளது, மேலும் இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவுபடுத்த உவகை கொள்கிறது, ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம் என்று வர்ணிக்கப்பட்ட ஓர் ஜாதகத்தை இன்றை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்

மேற்கண்ட கும்ப லக்கின ஜாதகருக்கு ராகு லக்கினம் எனும் முதல் பாவகத்திலும், கேது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்திலும் அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு கடுமையான ராகுகேது தோஷத்தை ஏற்படுத்தும் என்றும், லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் ராகு கேது அமர்வது மிகுந்த இன்னல்களை தரும் என்றும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாது மற்றும் இல்லற வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவிக்க நேரும் என்றும் ஜாதகருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, பொதுவாக சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்வது தோஷம் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி, தான் அமர்ந்த பாவகத்திற்கு எவ்வித வலிமையை பெற்று தருகிறது என்று தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதை  தவிர்த்து 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்ந்து இருந்தாலே தோஷம் என்று கருதுவது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானது, தெளிவான ஜாதக பலாபலன்கள் காணவும் இது உதவாது.

மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் ராகு கேது அமர்ந்தாலும், லக்கினம் சம வீடு என்ற முறையில் அங்கு அமரும் ராகு ஜாதகருக்கு முழு வீச்சில் சுபயோக பலன்களை வழங்க அருகதை உடையவர் ஆகிறார், மேலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தில் ( கேந்திர ஸ்தானம் ) அமரும் கேது பகவானும் தான் அமர்ந்த பாவகத்திற்க்கு 100% விகித வலிமையை தருவதால், களத்திர ஸ்தான அமைப்பிற்கு முழு வீச்சில் சுபயோக பலன்களை வழங்க அருகதை உடையவர் ஆகிறார், எனவே மேற்கண்ட ஜாதகர் லக்கினம் மற்றும் களத்திரம் என இரண்டு பாவக வழியில் இருந்தும் சாயா கிரகங்களால் 100% விகித சுபயோக பலன்களை அனுபவிக்க வல்லமை உடையவராக திகழ்கிறார்.

மேற்கண்ட அமைப்பு ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவான், லக்கினம்  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாக அமைவதாலும், ஸ்திர காற்று ராசியில்  10 பாகைகளும், உபய நீர் ராசியில் 24பாகைகளை கொண்டிருப்பதால் சிறந்த அறிவாளியாகவும், வளரும் சூழ்நிலையில் யோகத்தை பெற்றவராகவும், பரந்த மனப்பக்குவம், பெருந்தன்மையான குணத்தை பெற்றவராகவும் ஜாதகர் திகழ்கிறார், இது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகு பகவானால் வழங்கப்படும் சுபயோகம் ஆகும், மேலும் ஜாதகருக்கு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த கேது பகவான், களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணிய ஸ்தானமாக அமைவதாலும், ஸ்திர நெருப்பு ராசியில் 10 பாகைகளும், உபய மண் ராசியில் 24பாகைகளை கொண்டிருப்பதால் சிறந்த சுறுசுறுப்பு, சுய கட்டுப்பாடு, தெவீக அனுக்கிரகம், சமயோசித புத்திசாலித்தனம், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக பெரும் வல்லமை கொண்டவராக திகழ செய்யும்.

சுய ஜாதகத்தில் ராகு கேது 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்ந்து இருப்பின் தான் அமர்ந்த பாவகத்திற்கு அது தரும் பாலாபலன்கள் என்ன ? என்பதில் தெளிவு பெற்ற பிறகே ஜாதக பலன்களை விவரிக்க வேண்டும், மேற்கண்ட 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்ந்து இருந்தாலே தோஷம் என்று கருதுவது முற்றிலும் ஜோதிடகணிதத்திற்கு புறம்பானது என்பதை கருத்தில் கொள்வது சிறப்புகளை தரும்.

ஜாதகருக்கு திருமணம் தாமதமாக ராகு கேது தோஷம் காரணமல்ல, நடைபெறும் ராகு திசை 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் ஜீவன ஸ்தான பலனை மட்டும் ஏற்று நடத்துவதால் ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றங்களை மட்டும் வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எதிர்வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் இணைவதற்கான அதிர்ஷ்ட வாய்ப்பை நல்கும் என்பது கவனிக்கத்தக்கது, "வாழ்த்துக்கள்"

குறிப்பு :

சுய ஜாதகத்தில் சாயாகிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து 100% விகித சுபயோகங்களை பெறுவார் இதில் மாற்றம் இல்லை,  சுய ஜாதகத்தில் சாயாகிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை இழக்கும் விதத்தில் இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து 100% விகித அவயோகங்களை பெறுவார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, எனவே சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் தான் அமர்ந்த  பாவக வழியில் இருந்து பெரும் வலிமை என்ன ? என்பதில் தெளிவு பெறுவதே மிக துல்லியமான ஜாதக பலாபலன்களை பெற உதவி புரியும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

சர்ப்ப கிரகங்கள் ( ராகு கேது ) சுய ஜாதகத்தில் பெரும் வலிமையும், தனது திசா புத்திகளில் வழங்கும் பலாபலன்களும் !



 இறை அருளின் கருணையினால் நம்மை இயக்குவதும், இயங்க வைப்பதும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, இதில் மற்ற 7 கிரகங்களுக்கு இல்லாதா தனித்தன்மை சாயாகிரகங்களுக்கு உண்டு என்பது நிதர்சனமான உண்மை, சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்கின்றார்களோ அந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை இவர்களுக்கு உண்டு என்பதுடன், ஒரே பாவகத்தில் தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் வல்லமையையும் தானே ஆளுமைக்கு கீழ் எடுத்துக்கொண்டு அவர்கள் தரும் பலாபலன்களை தனது பலாபலனாக வழங்கு தனித்தன்மையும் உண்டு, என்பதால் நமது சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்கிறாரா? அல்லது வலிமை இழக்க செய்கிறாரா ? என்பதில் தெளிவு பெறுவது சாய கிரகங்கள் நமக்கு யோகத்தை தருகின்றனரா ? அவயோகத்தை தருகின்றனரா ? என்பதை நிர்ணயம் செய்ய இயலும்.

அடுத்து சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் எப்படிப்பட்ட நிலையில் அமர்ந்து இருந்தாலும், தனது திசா, புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை என்ன? அவை நமக்கு யோக பலன்களை தருகின்றதா ? அவயோக பலன்களை தருகின்றதா ? என்பதில் தெளிவு பெறுவது சாயாகிரகங்களின் திசா புத்தி நமக்கு தரும் பலாபலன்கள் பற்றி ஓர் முடிவுக்கு வர இயலும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் ராகுவும், லக்கினத்தில் கேதுவும் ஜெனன ஜாதகத்தில் அமர்ந்திருக்கின்றனர், இதில் லக்கினத்தில் அமர்ந்த  கேது ஜாதகருக்கு சுபத்துவம் பெற்று லக்கின பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வது ஜாதகருக்கு ஜெனன காலத்தில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, நல்ல உடல் நலம், சிறந்த கல்வி, சிறந்த அறிவு திறன், தனது சிந்தனை திறன் கொண்டு சுயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம், தன்னம்பிக்கை குறையாத மன நிலை, எதிர்ப்புகளை மிக எளிதாக வெற்றிகொள்ளும் தன்மை, மிகுந்த சிந்தனை திறன் மற்றும் மதி நுட்பம் என ஜாதகரை லக்கினத்தில் அமர்ந்த கேது ஓர் பூரணத்துவம் பெற்ற மாமனிதராக உலகிற்கு அடையாளம் காட்டியது, மேலும் ஜாதகரின் ஒழுக்கம், நல்ல மனம், வெளிப்படையாக பழகும் தன்மை யாவும் ஜாதகரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது, ஜாதகருக்கு லக்கினத்தை முழுமையாக ஆளுமை செய்யும் கேது பகவான் நல்ல ஆன்மீக வெற்றியையும், சிறந்த ஆன்மீக பெரியோர்களின் ஆசியையும் மிக  இளம் வயதிலேயே பெற்று தந்தது, லக்கினம் உபய காற்று தத்துவ ராசியான மிதுனத்தில் 18 பாகைகளையும், சர நீர் தத்துவ ராசியான கடகத்தில் 8 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகருக்கு சிறந்த அறிவு திறனுடன் கூடிய வீரியத்தையும், பரந்த மனபக்குவத்துடன் கூடிய ஆளுமை திறனையும் வாரி வழங்கியது கேது பகவானின் ஆளுமையினாலே என்றால் அது மிகையாகாது, ஜாதகருக்கு கேது பகவான் ஜெனன ஜாதகத்தில் லக்கினத்தில் அமர்ந்து முழு சுபயோகங்களையும் தருவது கவனித்தக்க சிறப்பு அம்சமாகும், இதற்க்கு நேரெதிராக களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தரும் வலிமையை பற்றி இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் தனுசு ராசியில் 18 பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானம் என்று அழைக்கப்படும் மகர ராசியில் 8 பாகைகளையும் கொண்டு இருப்பதும், தனுசு ராசிக்கு உற்ப்பட்ட களத்திர பாவகத்தில் அமர்ந்த ராகு, தான் அமர்ந்த பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்கு ஆளாக்குவதும், ஜாதகருக்கு நன்மையை தரவில்லை, ஜாதகருக்கு இளம் வயதிலேயே காதல் எனும் விஷயத்தில் மூழ்கடித்து, தனக்கு சற்றும் பொருந்தாத ஓர் வாழ்க்கை துணையை தேர்வு செய்து, அதன் வழியிலான கடுமையான இன்னல்களை அனுபவிக்க செய்தது, குறிப்பாக ஜாதகரின் முதல் திருமணம் ஜாதகருக்கு வீண் அவப்பெயரையும், எதிர்பாராத இழப்புகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, ஜாதகர் இதன் பாதிப்பில் இருந்து விடுபடவே வெகுகாலம் ஆனாது என்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார்களோ அந்த பாவகத்தை வலிமை பெற செய்யயும் நிலையில் இருப்பின் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும் இதில் மாற்று கருத்து இல்லை, ஒரு வேலை தான் அமர்ந்த பாவகத்தை வலிமை இழக்க செய்கின்றனர் என்றால், ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை மிக கவனமுடன் எதிர்கொள்ள வேண்டும் இல்லையெனில் சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தாலும் சாயாகிரகங்கள் தரும் பாதிப்பு மறையாத வடுவாக நமது வாழ்க்கையில் நீடித்து நின்றுவிடும், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு 100% விகித பாதிப்பை தருவது ஜாதகருக்கு சற்று கவலைதரும் விஷயம் என்ற போதிலும், ராகு கேது தனது திசா,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் என்ன ? என்பதனை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ராகு தனது திசையில் தரும் பலாபலன்கள் : ( 28/10/2001 முதல் 28/10/2019 வரை )

சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் நின்ற ராகு பகவான் தான் நின்ற பாவகத்தை 100% விகித பாதிப்பிற்கு ஆளாக்கிய போதும், தனது திசா, புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் 1,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வாரி வழங்கியது ராகு திசை காலத்திலேயே ஜாதகர் மறுமணம் செய்து நல்ல குழந்தை பேருடன் வெளிநாடுகளில் நல்ல ஜீவனத்துடன் ஜீவிக்க செய்தது, இதற்க்கு  காரணம் ஜாதகரின் 5ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியில் வியாபித்து வலிமை பெற்று நின்றதே அடிப்படை காரணமாக அமைந்தது, மேலும் ஜாதகர் தொடர்ந்து வெளிநாடுகளில் தனது அறிவு திறன் கொண்டு சுய சம்பாத்தியத்தையும், நல்ல வெளிவட்டார பழக்க வழக்கங்களையும் பெற்று பிரபல்ய யோகத்தை பெற்று தந்து இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் பாதிப்பிற்கு ஆளான ஓர் கிரகம் தனது திசையிலும் இன்னல்களை தரும் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகும், சுய ஜாதகத்தில் பாவக வழியில் பாதிக்கப்பட்ட கிரகம் தனது திசையில் எந்த ? பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு ஜெனன ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு, தான் அமர்ந்த பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்கிய போதிலும், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தியது ஜாதகருக்கு ஏற்று நடத்திய  பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கியது .

கேது தனது ( திசை ????? )  புத்திகளில் தரும் பலாபலன்கள் :

கேது பகவானும் தனது புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில்  1,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வாரி வழங்குவது ஜாதகருக்கு 1,5ம் பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களையே தரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்து  இருந்தாலும் சரி தான் அமர்ந்த பாவகத்திற்கு தரும் வலிமை என்ன ?  என்பதை மட்டுமே நாம் கருத்தில் கொள்ளவேண்டும், தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்ப்பின் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், வலிமை இழக்க செய்யின் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதை மட்டும் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது  மிக அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 26 ஆகஸ்ட், 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( கடக லக்கினம் )

 

 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!


கடகம் லக்கினம் :

காலபுருஷ தத்துவத்திற்க்கு 4ம் ராசியான கடகத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, உடல் உயிர் ஸ்தானமான 1ம் பாவகத்தில் ராகு பகவானும், களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! உண்மையில் இந்த சாயா கிரகங்களின் பெயர்ச்சியினால் 100% சதவிகித சுபயோகங்களை பெரும் அன்பர்கள் என்ற விதத்தில் கடக லக்கின அன்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம், லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க முன்னேற்றங்களை அதிரடியாக வாரி வழங்க இருக்கிறார் என்பதை கவனத்தில் கொண்டு, நன்மைகளை பெறுங்கள் கடக லக்கின அன்பர்களே! தங்களின் மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கும் வரும் யோக காலம் இது என்றால், அது மிகையில்லை, தங்களின் லட்ச்சியங்கள் நிறைவேறும், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும், புதிய சுக போக வாழ்க்கை உண்டாகும், உடல் மனம் இரண்டும் சிறப்பாக செயல்படும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும், திடீர் பதவிகள் தேடிவரும், இதுவரை இருந்து வந்த இன்னல்கள் யாவும் விரைவாக குறையும், புதிய வண்டி வாகனம் மற்றும் வீடு நிலம் வாங்க யோகம் உண்டாகும், தனது தாய் வழியிலான சொத்துக்கள் கடக லக்கின ஜாதகருக்கு தேடிவரும், புதிய வாய்ப்புகள் வீடு தேடிவரும், சுகபோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகத்தை ராகு பகவான்  தனது சஞ்சார காலத்தில் திகட்ட திகட்ட வாரி வழங்குவார், தெய்வீக சக்திகள் மூலம் தங்களின் வாழ்க்கையில் அதிசயத்தக்க நிகழ்வுகள் நடைமுறைக்கு  வரும், மனோரீதியான பிரச்சனைகளை மிக எளிதாக கையாண்டு தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்களை பெரும் யோக காலமாக இந்த சாயா கிரகங்களின் பெயர்ச்சி அமையவிருக்கிறது, கலைத்துறை, கல்வி துறை, தொழில் துறை உள்ள அன்பர்கள் அனைவரும் அபரிவிதமான வளர்ச்சியை பெறுவார்கள், மனதிற்கு இனிய சம்பவங்கள் தங்களின் வாழ்க்கையில் தொடர்ந்து நடைபெறும், தங்களின் புகழ் கீர்த்தி உலக பிரபல்யத்தை தேடித்தரும், இதுவரை இருந்த தடைகள் யாவும் தங்களைவிட்டு நீங்கி, வெற்றி திருமகளின் பரிபூர்ண ஆசியை பெரும் யோகத்தை தரும்.

களத்திர பாவக கேதுவின் சஞ்சாரம் கடக லக்கின அன்பர்களுக்கு மிக அருமையான இல்லற வாழ்க்கை துணையை அமைத்துத்தர இருக்கின்றது, தங்களின் தகுதிக்கு மீறிய இடத்தில் இருந்து வாழ்க்கை துணையை பெரும் யோகம் உண்டாகும், வசதி வாய்ப்புகள் நிறைந்த இடத்தில் இருந்து வரும் வாழ்க்கை துணை தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை தருவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இதுவரை திருமண தடையை சந்தித்து கொண்டு இருந்த வரன் வதுவுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து குறுகிய காலத்தில் மனதிற்கு இனிய வாழ்க்கை துணை அமையப்பெறுவார்கள், காதல் திருமணம் கைகூடி வரும், மனதில் நினைத்தவரையே வாழ்க்கை துணையாக பெற்று, சுபயோக வாழ்க்கையை கடக லக்கின அன்பர்கள் அமைத்துக்கொள்வார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, தெய்வீக பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், கடக லக்கின அன்பர்களுக்கு புதிய நடப்புறவு அல்லது கூட்டாளிகள் மூலம் பொருளாதார வளர்ச்சியை பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும், நேர்மையான வழியில் சொத்து சுக சேர்க்கையை பெற்று அதன் வழியிலான வருமானங்களை பெறுவதற்கு கடக லக்கின அன்பர்களுக்கு கேது பகவான் நல்லதொரு வாய்ப்புகளை வாரி வழங்குவர், வெளிநாடு வெளியூர் சென்று பெரும் தனசேர்க்கையை பெறுவதற்கு  கேது பகவான் முழு ஆசியையும் வாரி வழங்க இருக்கின்றார், தங்களின் வெளிநாடு கனவுகள் யாவும் பரிபூர்ணமாக நிறைவேறும், கடக லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் வாழ்க்கை துணை வழியிலான யோகம், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியிலான யோகம் வெளிநாடு மற்றும் வெளியூர் சார்ந்த சுபயோகங்கள் தேடி வரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் இதுவரை நல்ல தொழில் அமையாமல் போராடிக்கொண்டு இருந்த அன்பர்களுக்கு அதிர்ஷ்ட பரிசு காத்துகொண்டு இருக்கின்றது என்பதை வாழ்த்துக்களுடன் கூற கடமைப்பட்டு இருக்கின்றது "ஜோதிடதீபம்" கடக லக்கின அன்பர்களே இந்த சாயகிரகங்களின் பெயர்ச்சி தங்களின் வாழ்க்கையில் அளவில்லா சுபயோகங்களை தர காத்துகொண்டு இருக்கின்றது என்பதனை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட்டு, அதிர்ஷ்டங்களை அள்ளிச்செல்லுங்கள், தங்களின் வாழ்க்கையில் இனிவரும் 18மாதங்கள் ஓர் பொற்காலம்  என்றே சொல்லலாம், ராகு கேதுவின் உண்மை வலிமையினை  கடக லக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் பரிபூர்ணமாக உணர்வார்கள்  " வாழ்த்துக்கள் " " கேதுபகவான் கெடுப்பான்" என்ற பழமொழியினை பொய்யாக்கும் விதமாக, கடக லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் கேதுபகவான் வாரி கொடுப்பார் இதை கடக லக்கின அன்பர்கள் பரிபூர்ணமாக உணருவார்கள்.

குறிப்பு :

 கடக லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கடக லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( மிதுன லக்கினம் )



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!


மிதுனம் லக்கினம் :

காலபுருஷ தத்துவத்திற்க்கு 3ம் ராசியான மிதுனத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் ராகு பகவானும், ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! ராகு பகவானின் குடும்ப ஸ்தான சஞ்சாரம் தேய்பிறை காலங்களில் மிதம் மிஞ்சிய சுப யோகங்களை 2ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், மிதுன லக்கின அன்பர்களுக்கு சரளமான தனவரவை தரும், பேச்சு திறன் மூலம் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், தெய்வீக அனுகிரகம் மூலம் வாழ்க்கையில் சுப நிகழ்வுகள் நடைபெறும், திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்தவர்களுக்கு, தடைகள் நீங்கி நல்ல வாழ்க்கை துணையுடன் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் யோகம் உண்டாகும், புதிய தொழில் வழியில் இருந்து வருமானம் வரும், குறிப்பாக விவசாயம் மற்றும் உணவு பொருள் சார்ந்த தொழில் செய்து வரும் அன்பர்களுக்கு நல்ல வருமானமும் தனசேர்க்கையும் உண்டாகும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நன்மைகளை பெறுக, மேலும் வண்டி வாகனம், போக்குவரத்து தொழில் சார்ந்து இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் சிறப்பான வளர்ச்சியை வாரி வழங்கும், வரும் வருமானம் கடன்களை நிறைவு செய்து முழு உரிமையாளராக திகழும் யோகத்தை தரும், செழிப்பு மிக்க எதிர்காலத்தை தேய்பிறையில் ராகுவின் சஞ்சாரம், மிதுன லக்கின அன்பர்களுக்கு வாரி வழங்கும், வளர்பிறை காலத்தில் எதிர் மறையான இன்னல்களை மிதுன லக்கின அன்பர்கள் சந்திக்கும் சூழ்நிலையை தரும், வாக்கு வழியிலான தொல்லைகள் அதிகரிக்கும், முறையற்ற தெளிவற்ற வார்த்தைகள் கடுமையான இன்னல்களை தரும், வாக்குவாதம் கடுமையான நிம்மதியிழப்பை தரும், வளர்பிறை காலத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது மிதுன லக்கின அன்பர்களுக்கு சகல நலன்களையும் தரும், குறிப்பாக குடும்பத்தில் வாழ்க்கை துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சுமூக போக்கை கடைபிடிப்பதே சாலசிறந்தது, மேலும் மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையீடு செய்யாமல், தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பதே மிதுன லக்கின அன்பர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் சுக போகங்களை வாரி வழங்கும்.

 கேது பகவானின் ஆயுள் பாவக சஞ்சாரம் வாழ்க்கை துணை வழியிலான பொருள் வரவை அதிக அளவில் வாரி வழங்கும், மேலும் திடீர் அதிர்ஷ்டம் மூலம் பொருளாதார வளர்ச்சியை மிதுன லக்கின அன்பர்கள் அனைவரும் தனது தொழில் வழியில் இருந்து அபரிவிதமாக பெறுவார்கள், நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் வழியில் தன சேர்க்கை உண்டாகும், இதுவரை செய் தொழிலில் இன்னல்களை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம் வெகு வேகத்தில் தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், எதிர்பால் இனஅமைப்பினர் மூலம் சிறந்த செல்வாக்கை மிதுன லக்கின அன்பர்கள் பெறுவார்கள், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை அவரவர் செய்யும் தொழில் வழியில் இருந்து பெறுவார்கள், மிதுன லக்கின அன்பர்களுக்கு புதிய தொழில் துவக்க இதுவே சரியான நேரமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, புதிய முயற்சிகள் மற்றும் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் மிக அபரிவிதமான வளர்ச்சியை வாரி வழங்கும், கனவுகளும் நனவாகும் நேரமிது, எனவே மிதுன லக்கின அன்பர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளை பெற இறைஅருள் கருணை புரியட்டும், திடீர் செல்வ சேர்க்கையை தரும் என்பதால் அதை முறைப்படுத்துதலும், பாதுகாப்பதும் மிதுன லக்கின அன்பர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள் என்பதை கருத்தில் கொள்க.

  குறிப்பு :

 மிதுன லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மிதுன லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

9443355696

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( ரிஷப லக்கினம் )


சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

ரிஷப லக்கினம் :

காலபுருஷ தத்துவத்திற்க்கு 2ம் ராசியான ரிஷபத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் ராகு பகவானும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! ராகு பகவானின் வீர்ய ஸ்தான சஞ்சாரம் ரிஷப லக்கின அன்பர்களுக்கு முயற்சிக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி மேல் வெற்றி தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், சுய முன்னேற்றம் சார்ந்த திட்டமிடுதல்கள் யாவும் முழு அளவிலான நன்மைகளை தரும், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் யாவும் குறைந்து ஆதாராவும், உதவிகளும் தேடி வரும், ஜாதகரின் தனிப்பட்ட அபிலாசைகள் யாவும் நிறைவேறும், குறிப்பாக காதல் வெற்றி பெற்று இனிமையான இல்லற வாழ்க்கை அமையும், தெவீக பலம் கூடுவதால் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகள் நடைமுறைக்கு வரும், ஜாதகருக்கு எதிர்பால் இன சேர்க்கை மூலம் லாபங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் உண்டு, ரிஷப லக்கின அன்பர்களின் மனபயம் நீங்கி தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், செயல்பாடுகளில் வேகமும் விவேகமும் அதிகரிக்கும், புதிய முயற்சிகள் மூலம் ஜாதகரின் தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் ரிஷப லக்கின அன்பர்களுக்கு இந்த ராகு சஞ்சாரம் அபரிவிதமான வளர்ச்சியை வாரி வழங்கும், தெய்வீக நம்பிக்கை மேலோங்கும், வண்டி வாகனம் மற்றும் சொத்து வீடு ஆகியவற்றின் மூலம் ஜாதகர் தொடர் லாபங்களை பெரும் யோகத்தை தரும், தனம் சார்ந்த தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் ஏற்றமிகு சிறப்புகளை வாரி வழங்கும், முன்னேற்றத்தின்பால் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் ( ரிஷப லக்கின ) அபரிவிதமான வளர்ச்சியை தற்போழுது நிகழ்ந்துள்ள ராகு பகவானின் கடக ராசி சஞ்சாரம் தட்டாமல் தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை ரிஷப லக்கி அன்பர்களே!

கேது பகவானின் பாக்கிய ஸ்தான சஞ்சாரம், ரிஷப இலக்கின அன்பர்களுக்கு உகந்த நன்மைகளை தருமா ? என்றால் அது கேள்விக்குறியே, கேது பகவானின் பாக்கிய ஸ்தான சஞ்சாரம் சற்று கடுமையான விளைவுகளை தங்களுக்கு தர கூடும் என்பதால் எந்த ஓர் விஷயத்தையும் சற்று ஆலோசனை செய்து வயதில் பெரியோர் வார்த்தைகளை மதித்து செயல்படுவது தங்களுக்கு சகல நன்மைகளையும் தரும், இதில் சற்று கவனம் இன்றி செயல்பட்டால் வீண் அவ பெயரும் கௌரவ குறைவும் உண்டாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை, மனதில் நினைத்தவுடன் திரு தளங்களுக்கு சென்று வந்துவிடுவது தங்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்கும், தொழில் சார்ந்த நடவடிக்கைகளில், நல்ல ஆலோசகர் மற்றும் அனுபவஸ்தர் அறிவுரைபடி நடந்துகொள்வது தங்களுக்கு வீண் செலவினங்களை குறைக்க உதவும், நீடித்த தொழில் வெற்றிக்கு இதுவே உகந்த நன்மைகளை தரும், பொறுப்பு மிக்க செயல்பாடுகள் மூலம் தங்களுக்கு வரும் அவபெயரில் இருந்து தாங்கள் விடுபடலாம், தொழில் துறை கூட்டு தொழில் அல்லது சுய தொழில் செய்யும் அன்பர்கள் இனிவரும் காலங்களில் அதிக பொறுப்புடனும், நாவடக்கத்துடனும் நடந்துகொள்வது சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், தெய்வீக நம்பிக்கை உள்ளோர் குல தேவதை வழிபாட்டையும், பித்ரு வழிபாட்டையும் முறையாக செய்வது பாக்கிய ஸ்தான கேது சஞ்சார நிலையால் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், யோக வாழ்க்கையை நிலை நிறுத்தும், ரிஷப இலக்கின அன்பர்களுக்கு கேது பகவானின் சஞ்சாரம் சற்று இன்னல்களை தரும் என்பதை மறுப்பதற்கு இல்லை, முறையான ராகுகேது பிரீதி பாரிகாரங்கள் சகல நன்மைகளையும் தரும்.

குறிப்பு :

 ரிஷப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ரிஷப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

9443355696


வியாழன், 20 ஜூலை, 2017

7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா? நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன ?



7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா? நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன ?

 சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் அமர்வது ராகுகேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்று வர்ணிக்கப்படுகிறது, எந்த ஓர் லக்கினம் என்றாலும் சரி சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு உற்ப்பட்ட பாகையில் ராகுவோ அல்லது கேதுவோ அமர்வது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து முழு அளவிலான யோக பலன்களை தரும், குறிப்பாக ஜாதகர் லக்கின பாவக வழியில் இருந்து அனுபவிக்க வேண்டிய நன்மைகளையும் யோகங்களையும் பரிபூர்ணமாக அனுபவிப்பார், நீண்ட ஆயுள், நல்ல உடல் நலம், ஜாதகர் பெரும் புகழ் மற்றும் கீர்த்தி, நல்ல எண்ணங்கள், கட்டுப்பாடு, உடல் மற்றும் மனவலிமை, சரியான திட்டமிடுதல்கள், தனக்கு தேவையான நல்ல விஷயங்களை அனைவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் அறிவாற்றல், நேர்மை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் சிந்தித்து செயல்படும் தன்மை என்ற வகையில் ஜாதகர் நன்மைகளை பெறுவார், இது அணைத்தது லக்கினத்தினருக்கும் பொருந்தும் இனி தங்களது சுய ஜாதக அமைப்பில் ராகு கேது தரும் பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : கடகம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்திராடம் 2ம் பாதம்.

 கடக லக்கினம், லக்கினம் கடக ராசியில் 109.28.14 பாகையில் ஆரம்பித்து, சிம்ம ராசியில் 137.56.07 பாகை வரை வியாபித்து இருக்கின்றது, களத்திர ஸ்தானம் மகர ராசியில் 289.28.14 பாகையில் ஆரம்பித்து, கும்ப ராசியில் 317.56.27 பாகை வரை வியாபித்து இருக்கின்றது, தங்களது ஜாதகத்தில் மகரம் மற்றும் கடக ராசியில் ராகு கேது அமர்ந்த போதிலும், லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு உற்ப்பட்ட பாகைக்குள் ராகு கேது அமரவில்லை எனவே தங்களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் லக்கினத்தில் ராகு கேது அமரவில்லை என்பதை தெளிவு படுத்த "ஜோதிடதீபம்" விரும்புகிறது, மேலும் ராகு கேது மகரம் மற்றும் கடகத்தில் உள்ள 6ம் பாவகம்  மற்றும் 12ம் பாவகத்தில் உள்ளது என்பதே தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது அமர்ந்துள்ள உண்மை  நிலை, எனவே லக்கினத்தில் ராகு கேது எண்ணத்தை தவிர்த்து விடுங்கள், மேலும் அதை வைத்து பலன் காண முற்படுவதும் தவறான அணுகுமுறை என்பதில் தெளிவு பெறுங்கள்.

அடுத்து தங்களின் கேள்வி ராகு கேது தங்களது ஜாதகத்திற்கு அமர்ந்த பாவக வழியில் இருந்து தரும்  பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், 6ல் அமர்ந்த ராகு தங்களுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 12ல் அமர்ந்த கேது தங்களுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் தருகின்றனர், இருப்பினும் தற்போழுது  நடைபெறும் ராகு திசை தங்களுக்கு 4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் விரைய ஸ்தான பலனை தருவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து தங்களுக்கு கடுமையான இன்னல்களை தரும், குறிப்பாக மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுக வாழ்க்கைக்கு தடை, வண்டி வாகனம் மற்றும் வீடு நிலம் சார்ந்த இழப்புகள், உடல் நிலை பாதிப்பு, மருத்துவ செலவு, கடன் தொந்தரவு, எதிர் பாராத செலவுகள், தொழில் வழியில் இன்னல்கள், தொழில் முடக்கம், தொழிலாளர் பிரச்சனைகள், மனநிம்மதி இழப்பு, முதலீடு செய்த வகையில் இருந்து வரும் திடீர் இழப்புகள், மனப்போராட்டம், அனைத்திலும் முடக்கம் என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும்.

தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது தாம் அமர்ந்த பாவக வழியில் வலிமை பெற்று இருப்பினும், ராகு தனது திசையில் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது  தங்களுக்கு நன்மை தரும் அமைப்பு அல்ல என்பதனை  நினைவில் வைத்து செயல்படுங்கள், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்ப்பதற்கு உண்டான பரிகாரங்களை தேடி நலம் பெறுங்கள் "வாழ்த்துக்கள் "

குறிப்பு :

 ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெற்ற வலிமையை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன்களை கூறுவது முற்றிலும் தவறு, பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகத்தின் தன்மையை கருத்தில் கொண்டும் பலன் காண்பதே சரியான அணுகுமுறை என்பதே உண்மை, மேலும் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பினும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து நன்மைகள் மற்றும் யோகங்கள் நடைமுறைக்கு வரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 4 ஜூலை, 2017

காலசர்ப்ப தோஷமும், சுய ஜாதகத்தில் ராகுகேது தரும் பாதிப்புகளும் !


ஒருவரது சுய ஜாதகத்தில் தான் அமரும் பாவகத்தை முழுமையாக ஆளுமை செய்வதில் தனித்துவம் மற்றும் வல்லமை பெற்ற கிரகங்கள் ராகுகேது என்றால் அது மிகையில்லை, தான் அமர்ந்த பாவகத்தை முழுவதும் தமது கட்டுப்பாட்டிலும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் வலிமையையும் தனதாக்கிக்கொண்டு பலாபலன்களை தனது பலனாக தருவதில் சாயா கிரகங்களுக்கு நிகர் வேறு எதுவுமில்லை என்று மிக தெளிவாக கூறிவிடலாம், ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகங்களும் ( ஒரே பாவகத்தில் சேர்க்கை பெறுதல் ) தனது வலிமையை சாயா கிரகங்களே சுவீகரித்து கொள்ளும் தன்மையை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

  ராகு கேது தான் அமரும் பாவகத்தை வலிமை  சேர்க்கும் அமைப்பில் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் ராகு கேது அமர்ந்த பாவக வழியிலான நன்மைகளை முழு அளவில் பரிபூர்ணமாக பெறுவார், ஒருவேளை தான் அமர்ந்த பவகத்தை வலிமை அற்ற நிலைக்கு ராகு கேது ஆளாக்கினால், சம்பந்தப்பட்ட ஜாதகர் ராகு கேது அமர்ந்த பாவக வழியிலான இன்னல்களை நிச்சயம் தவிர்க்க இயலாது, உதாரணமாக சுய ஜாதகத்தில் ஒருவருக்கு குடும்பம் மற்றும் ஆயுள் பாவகத்தில் ராகு கேது அமர்ந்து வலிமை பெற்று இருப்பின் ஜாதகருக்கு, குடும்ப ஸ்தான வழியில் இருந்து நல்ல பேச்சு திறனும், நிறைவான வருமானம், நல்ல குடும்ப வாழ்க்கை, தன சேர்க்கை, பொருளாதார தன்னிறைவு, வாழ்க்கை துணையின் ஆதரவு, இனிமையான இல்லற வாழ்க்கை, போதுமான நிதி வசதி, தெளிந்த பேச்சு, கவரும் வார்த்தை பிரயோகம், மக்களை தனது வாக்கிற்கு கட்டுப்பட்டு நடக்கும் படியான வல்லமை, வாக்கு வன்மை, வாக்கு பலிதம், தெய்வீக பேச்சு திறன், வாக்கை தொழிலாக கொண்டு ஜீவிக்கும் யோகம், ஆன்மீக அனுபவம் என ஜாதகர் குடும்ப ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண யோக பலன்களை அனுபவிக்கும் அமைப்பை தரும்.

ஆயுள் ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு நீண்ட ஆயுள், வாழ்க்கை துணையின் வருமானம் மற்றும்  சொத்துக்கள் கிடைத்தல், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனவந்தன் ஆகும் யோகம், புதையல் யோகம் அல்லது அதற்க்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, மறைபொருள் வழியில் இருந்து வரும் ஜீவனம், ஆயுள் காப்பீடு, ஊக்க தொகை, மருத்துவ உபகரணம் மற்றும் ஆயுள் காக்கும் மருந்துகள் வழியிலான தன சேர்க்கை, மண்ணிற்கு அடியில் இருந்து கிடைக்கும் கனிம பொருட்கள் வழியிலான தன சேர்க்கை, புலனுக்கு அப்பாற்பட்ட அறிவு திறன் மூலம் பெரும் சுப யோகங்கள், தனது உயிர் அமைப்பின் பரிபூர்ணதுவத்தை உணரும் யோகம், பஞ்சபூதங்களின் ஆசியை பெரும் யோகம், தன்னிலை உணர்வு, உயிரின் ஓட்டத்தை கையாளும் வல்லமை என ஆயுள் பாவகத்தில் அமரும் சாயா கிரகங்கள் வலிமை பெற்ற நிலையில் இருந்து யோகங்களை வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் ஆயுள் பாவகத்தில் அமரும் ராகுகேது தாம் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கவில்லை எனில், ஜாதகரின் பாடு படு திண்டாட்டம் ஆகிவிடும், குறிப்பாக குடும்ப ஸ்தான வழியில் இருந்து திருமண தடை, நல்ல குடும்ப வாழ்க்கை அற்ற நிலை, வருமானம் அற்ற நிலை, சம்பாத்தியம் அனைத்தும் வீண் செலவு செய்யும் நிலை, வாக்கு வலிமை அற்ற நிலை, பேச்சிற்கு மதிப்பு அற்ற நிலை, பொருளாதார ரீதியான கடுமையான இன்னல்கள், எதிர்ப்புகள் மூலம் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை, அனைத்தும் எதிராக மாறும்  நிலை, உதாசீனம்  செய்யும் மனநிலை, பொறுப்பற்ற தன்மை, கடுமையான வார்த்தைகள், மற்றவர்களை நிந்தித்தல், பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி ஆற்றாமையால் மற்றவருக்கு இன்னல்களை ஏற்படும் தன்மை என ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.

ஆயுள் ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு திடீர் இழப்புகள், விபத்து, மருத்துவ செலவினங்கள், அடிகடி விபத்துகளை சந்தித்தால், எலும்பு முறிவு, உடல் ரீதியான பிரச்சனைகள், தெளிவில்லாத முடிவுகளால் வரும் திடீர் இழப்புகள், பாதுகாப்பு அற்ற சூழ்நிலை, மற்றவர்களின் ஆளுமைக்கு கிழ் வாழ்க்கையை வாழும் அமைப்பு, சுய மரியாதை இழக்கும் சூழ்நிலை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் திடீர் இழப்புகள், தெய்வீக சிந்தனை அற்ற தன்மை, எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இழப்புகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் ஜாதகர் பெரும் இழப்புகள் என ஜாதகரை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்கும்.

அடிப்படையில் சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி சம்பந்தப்பட்ட பவகத்தை வலிமை பெற செய்கிறதா ? வலிமை இழக்க செய்கிறதா ? என்பதில் தெளிவு பெற்ற பிறகே ராகு கேது தரும் பலாபலன்களை நிர்ணயம் செய்வது சால சிறந்தது, தான் அமர்ந்த பாவகத்திற்கு ராகு கேது தரும் பலாபலன்களை பற்றிய தெளிவு இல்லாமல் தோஷம் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகு முறையே, சுய ஜாதகத்தில் 1,2,5,6,7,8,12ம் பாவகங்களில் சாயா கிரகமான ராகு கேது அமர்வது தோஷத்தை தரும் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை, ராகு கேது மேற்கண்ட பாவகத்தில் அமர்ந்து இருந்தாலும், சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு வலிமையை தரும் அமைப்பில் இருப்பின், ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை அனுபவிப்பார்கள் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க  வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 17 மார்ச், 2017

ராகுகேது ( சர்ப்ப தோஷம் ) திருமண தடைகளை தருகின்றதா ? குரு திசை தரும் பலாபலன்கள் என்ன ?

 

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது (1,7) (2,8) (5,11) (6,12) வீடுகளில் அமர்வதும், அப்படி அமரும் சாயா கிரகங்களுக்குள் மற்ற கிரகங்கள் அனைத்தும் அடைபடுவதையு காலசர்ப்ப தோஷம் என்று வர்ணிக்கின்றனர், மேற்கண்ட வீடுகளில் அமரும் சாயா கிரகங்கள் ஜாதகருக்கு நாகதோஷம், சர்ப்ப தோஷம், ராகுகேது ஜாதகம் என்று கூறுவதும் உண்டு, மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகர்களுக்கு, அதை போன்றே சர்ப்ப தோஷம், நாகதோஷம், ராகுகேது தோஷம் உள்ள ஜாதகத்தையே திருமண வாழ்க்கையில் இணைப்பது உகந்தது என்ற கருத்தையும் சொல்வது உண்டு, மேலும் திருமணம் தாமதம் ஆக மேற்கண்ட தோஷங்கள் காரணமாக அமையும் என்ற கருத்தையும் முன்வைப்பது உண்டு, திருமணத்திற்கு பிறகு புத்திர பாக்கிய குறைபாடுகளையும் மேற்கண்ட தோஷங்கள் தரும் என்றும் கூறுவது உண்டு, மேற்கண்ட கருத்துக்கள் யாவும் சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் தாம் அமர்ந்த பாவகத்திற்கு தரும் வலிமையை பற்றி கருத்தில் கொள்ளாமலும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை நிலையை கருத்தில் கொள்ளாமலும், நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொள்ளாமலும், கூறப்படும் பொதுப்பலன்கள் என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது (1,7) (2,8) (5,11) (6,12) வீடுகளில் அமர்வது மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு இன்னல்களை தந்து விடாது, தான் அமர்ந்த பாவகத்தை முழுமையாக தனது ஆளுமைக்கு கொண்டுவரும் சாயாகிரகங்கள், சம்பந்தப்பட்ட பாவகத்தை பாதிப்பை தரும் நிலையில் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு இன்னல்களையும், துன்பத்தையும் தரும், தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இருப்பின், யாதொரு இன்னல்களையும் தாராமால், ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியிலான நன்மைகளை 100% விகிதம் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் அமரும் சாயா கிரகம் தரும் யோக அமைப்பை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 
லக்கினம் : மகரம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 2ம் பாதம் 

ஜாதகிக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவகங்கள் முறையே ராகுவும் கேதுவும் அமர்ந்து இருக்கின்றனர், லக்கினத்தில் அமர்ந்த ராகு ஜாதகிக்கு தான் அமர்ந்த நிலையில் முழு வலிமையை தருவதால் சுய ஜாதகத்தில் லக்கினம் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக சிறப்பாக வலிமையுடன் காணப்படுகிறது, களத்திர பாவகத்தில் அமர்ந்த கேதுவும் தான் அமர்ந்த நிலையில் முழு வலிமையை தருவதால் சுய ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக சிறப்பாக வலிமையுடன் காணப்படுகிறது, இதனால்  ஜாதகி லக்கின பாவக வழியில் இருந்து நல்ல உடல் ஆரோக்கியம், மனவலிமை, புகழ் கீர்த்தி, புத்திசாலித்தனம், வளரும் சூழ்நிலையில் சிறப்பு, சுய முயற்சியில் வெற்றி பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான  நன்மைகளை  100% விகிதம் பெறுகின்றார்.

களத்திர பாவகத்தில் வலிமை பெற்று அமரும் கேது பகவானால், ஜாதகிக்கு நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், மக்கள் செல்வாக்கு, பெயரும் புகழும் தேடிவரும் யோகம், கைராசி, செய்யும் தொழில் மூலம் பிரபல்ய யோகம், செல்லும் இடங்களில் ஜாதகிக்கு தேடிவரும் உதவிகள், அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம், பரந்த மனப்பக்குவம், எண்ணத்தின் வலிமை மூலம் சகல யோகங்களையும் பெரும் தன்மை, வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து பெரும் யோகம் என்ற வகையில் சுபயோகங்களை களத்திர ஸ்தானத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருக்கும் கேது பகவான் ஜாதகிக்கு வாரி வழங்குவார்.

ஜாதகியின் லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான 10ம் ராசியாகவும், களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான  4ம் ராசியாகவும் வலிமை பெற்று இருப்பது மேற்கண்ட லக்கினம் மற்றும் களத்திர பாவக வழியிலான நன்மைகளை முழு அளவில்  வாரி வழங்கும், கவுரவம் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கை, செய்யும் தொழில்  வழியில் நேர்மை மற்றும் உண்மையை கடைபிடிக்கும் வல்லமை, மற்றும் தொழில் வழியில் ஜாதகி காட்டும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை ஜாதகிக்கு மிதமிஞ்சிய யோக வாழ்க்கையை லக்கின வழியில் இருந்து ராகு பகவானால்  பெறுவார், களத்திர பாவக வழியில் இருந்து தனது வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும், அவர் வழியிலான அதிர்ஷ்ட வாழ்க்கையையும் ஜாதகி முழு அளவில் பெறுவார், வண்டி வாகன யோகம், சொத்து சுக சேர்க்கை , வசதி மிக்க நல்ல வீடு, சிறந்த குணநலன்கள், வெளியூர் வெளிநாடுகளில் சிறப்பு மிக்க எதிர்காலம் என்ற வகையில் ஜாதகிக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர பாவகங்கள் வலிமை பெறுவது சாயா கிரகங்களான ராகுகேதுவின் வலிமை மிக்க ஆளுமையினால்  என்றால் அது மிகையில்லை, மேலும் தான் அமர்ந்த பாவகத்திற்கு ராகு கேது  100% விகிதம் வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பதால், மேற்கண்ட ஜாதகி சாயா கிரகங்களால் யோக பலாபலன்களையே அனுபவிக்கிறார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், பலரது கருத்துப்படி மேற்கண்ட ஜாதகிக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் அமர்ந்த ராகு கேது திருமண வாழ்க்கையை தடை செய்வதாக  கூறியிருக்கின்றனர், உண்மையில் ஜாதகியின் திருமணம் தாமதம் ஆக காரணமாக இருப்பது தற்போழுது நடைபெறும் குரு திசையும், சனி புத்தியுமே என்றால் அது மிகையில்லை, ஏனெனில் தற்போழுது நடைபெறும் குரு திசையும் ஜாதகிக்கு 12ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறது, சனி புத்தியும் 12ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதால் ஜாதகிக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரவில்லை, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற  பாவக பலன் நடைமுறைக்கு வரும் பொழுது ஜாதகி எதிர்பாராத வகையில், முழு யோகம் நிறைந்த நல்லதொரு வாழ்க்கை துணையை நிச்ச்யம் பெறுவார், திருமணம் தாமதம் ஆவதும் ஜாதகிக்கு ஓர் வகையில் சுபயோகங்களை தரும், மேலும் திருமணம் தாமதம் ஆக காரணம் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசைபுத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தவில்லை என்பதே காரணமாக அமைகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696