புதன்திசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன்திசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

ஜாதக ஆலோசணை : சனி திசை தரும் பலன் என்ன ? எதிர்வரும் புதன் திசை தரும் பலன் என்ன ?

ஜாதக ஆலோசணை



லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

1,3ம் வீடுகள் ஜாதகருக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஜென்ம லக்கின வழியில் இருந்து சிறந்த மனநிலை, தைரியம் மிக்க செயல்பாடுகள், துணிச்சலான செயல்திறன் மூலம் வெற்றிகொள்ளும் யோகம், சிறு பயணங்கள் மூலம் நன்மை, தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி, சகோதரம் மற்றும் சுற்றத்தாருடன் இணக்கமான சூழ்நிலையை கடைபிடித்தல், நல்ல நட்புறவு, அவர்கள் வழியில் இருந்து  பெரும் நன்மைகள், சரியாக மேற்கொள்ளும் முடிவுகள், தெய்வீக சிந்தனை, பொருளாதார மேம்பாடு சார்ந்த திட்டமிடுதல்கள், உடல் நலம் பேணும் தன்மை, எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் தன்மை தெய்வீக ஆற்றல் ஜாதகருக்கு உறுதுணை புரியும் யோகம், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, எதிர்பாராத நேரத்தில் ஜாதகருக்கு நிகழும் திடீர் யோக வாழ்க்கை என்ற வகையில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு செல்வச்செழிப்பு உண்டாகும், தைரியமாக எடுக்கும் முடிவுகள் வழியில் இருந்து அதிர்ஷ்டம் தேடிவரும், முற்போக்கு சிந்தனையுடன் வாழ்க்கையை மிக சிறப்பாக எடுத்து செல்லும் ஆற்றல், எதிரிகளை வென்று நன்மைகளை அடையும் யோகம் உண்டாகும்,   ஜாதகரின் மனநிலையில் தெளிவும் சிறப்பான சிந்தனைகளும்  மேலோங்கி நிற்கும் என்பதால் வாழ்க்கையில் சகல  சௌபாக்கியங்களையும்   தன்னிறைவாக பெறுவதற்கான யோகம் உண்டாகும், சத்தியத்தை மதித்தல் மற்றும் உண்மையை பேசுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்வதுடன்  அனைவரிடத்திலும் பிரபல்ய யோகத்தை நல்கும், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், லட்ச்சியங்கள் அனைத்திலும் வெற்றிகொள்ளும் யோகத்தை தரும், உறவினர் மற்றும் நண்பர்கள் வழியில் சிறப்பான சுபயோக வாழ்க்கையை வாரி வழங்கும் , தைரியம் சாகசம் போன்றவற்றில் ஈடுபாட்டை தரும், விளையாட்டில் வெற்றி, போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும், பயணம் மூலம்  லாபம் உண்டு, படிப்பு மற்றும் கல்வியில் சிறப்பான யோகங்களை வாரி வழங்கும்,  புதுமையை விரும்பும் தன்மை, புதுமையான சூழ்நிலைகளில் அதீத ஆர்வம், ஏஜென்சி துறையில் சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், கமிஷன் தொழில் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தன்னிறைவாக வாரி வழங்கும்.

2,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து மருத்துவ துறை சார்ந்த பணியில் வெற்றி வாய்ப்பையும் , அறிய கலைகளில் ஆர்வம் மற்றும் தேர்ச்சியை தரும், பணியில் திருப்தி அற்ற நிலையை தரக்கூடும், வாக்கின் வழியில் இருந்து இன்னல்கள் அதிக அளவில் வருவதற்கான வாய்ப்பு உண்டு, வருமானம் சில நேரங்களில் ஜாதகருக்கு எதிர்மறையான இன்னல்களை தரக்கூடும், பொருளாதர ரீதியான திட்டமிடுதல்கள் இல்லையெனில் ஜாதகரின் வருமானம் வெகுவான இழப்புகளை தரக்கூடும், பேச்சில் கவனம் தேவை என்பதுடன் சேமிப்பில் அதீத நாட்டத்தை செலுத்துவது ஜாதகருக்கு நன்மைகளை தரும், குடும்பத்தில் வரும் இன்னல்களை மிக சிறப்பாக கையாளும் வல்லமையை தரும் என்ற போதிலும், மன நிம்மதி வெகுவாக  பாதிக்க வாய்ப்பு உண்டு, பொருளாதார திட்டமிடுதல்கள் ஜாதகருக்கான இன்னலைகளை வெகுவாக குறைக்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டில் ஜீவனம் சிறப்பாக அமையும், தன்னிறைவான வருமான வாய்ப்பும் உண்டு, கவுரவம் குறையாத யோக வாழ்க்கை ஜாதகருக்கு உண்டு, வரவை விட சில நேரங்களில்  செலவு அதிக அளவில் வந்து  சேரும், தவிர்க்க இயலாத பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், முரண்பட்ட வருமான வாய்ப்பும் ஜாதகருக்கு உண்டாகும், செய் தொழில் வழியில் சில நேரங்களில் ஜாதகருக்கு மன நிம்மதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு, தொழில் முறையில் அனைவரிடமும் அனுசரித்து செல்வதே ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்யும், சுய தொழில் முயற்சி பின்னடைவை  தரும்,  வெளிநாடுகளில் ஜீவனம் மேக்கொள்ளும் பொழுது அபரிவிதமான  பொருளாதார சேர்க்கை உண்டு.

 12ம் பாவக வழியில் இருந்து நிறைய செலவினங்கள் மற்றும் கடும் பொருளாதார சிக்கல்களை அதிகரிக்கும், அனைவராலும் தொல்லை, துன்பங்கள் என வாழ்க்கையை சிரமத்துடன் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், நல்ல உறக்கம் கிட்டுவது அரிது, நிம்மதியற்ற தன்மை, மனப்போராட்டம், தாம்பத்திய வாழ்க்கையில் சிறு சிறு சிக்கல்கள், கருத்து ஒற்றுமை இன்மை இவை அனைத்தும் ஜாதகருக்கு கடும் நெருக்கடிகளை தரும், சரியான முடிவுகளை எடுக்க வில்லை எனில் அதீத துன்பத்தை ஜாதகர்  எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகருக்கு அதிக துன்பத்தை தரும்.

4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  4ம் பாவக வழியில் இருந்து பெற்றோர் வழியில் இருந்து வரும் சொத்துக்கள் கிடைக்கும் குறிப்பாக தகப்பனார் வழியில் இருந்து வரும் யோக  வாழ்க்கை சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், உயில் போனஸ் கிராஜுவிட்டி போன்றவற்றிலும் இஞ்சுரன்ஸ் வழியில் இருந்தும் ஜாதகருக்கான பொருளாதார உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்க பெரும், எதிர்பாராத விபத்து மூலம் வண்டி வாகனம் கடுமையான   பாதிப்பை அடைய கூடும், உடல் நலம் சற்று பாதிக்க வாய்ப்பு உண்டு, காரியங்களில் அதீத தடை தாமதங்களை சந்திக்கும் நிலையை தரும், தாயார் வழியில் இருந்து வரும் சில இன்னல்கள் ஜாதகருக்கு கவலை அளிக்கும் விதத்தில் அமையும், தனது பெயரில் உள்ள சொத்துக்கள்  வீடு வண்டி  வாகனங்களை மிக கவனமாக பாதுக்காக்க வேண்டிய கட்டாயம் ஜாதகருக்கு உண்டு என்பதுடன், தனது குணநலன் சார்ந்த விஷயங்களில்  சரியான  கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியமானது.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்ண ஆயுள் உண்டு, இருப்பினும் எதிர்பாராத  ஏமாற்றம், எதிர்பாராத திடீர் இன்னல்கள் ஜாதகரை சில  நேரங்களில் அதீத துன்பத்திற்க்கு ஆளாக்கும், விபத்து, உடல் நல பாதிப்பு போன்றவை ஜாதகருக்கு பொருளாதார சிக்கல்களை அதிகரிக்க கூடும், அனைவராலும் தொல்லை, எதிர்பாலின அமைப்பினர் மூலம் வரும் இன்னல்கள் ஜாதகருக்கான நெருக்கடிகளை அதிகரிக்கும், கவனமான பாதுகாப்பான  பயணம் ஜாதகருக்கு வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், நம்பிக்கை மிக்க செயல்பாடுகள் ஜாதகருக்கு மேற்கண்ட  இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும்.

5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்ட வாய்ப்பை தன்னிறைவாக வாரி வழங்கும், லாட்டரியில் திடீர் யோகம், கற்ற கல்வி வழியில் இருந்து வரும்  அதிர்ஷ்டம், எவ்வளவு துன்பம் வந்த போதிலும் சூரியனை கண்ட பனிபோல்  விலகிவிடும் தன்மை, குலதெய்வத்தின் பரிபூர்ண அருளாசி, சமயோசித  புத்திசாலித்தனம், இன்னல்கள் அனைத்தையும் தனது நுண்ணறிவு திறனால் வெற்றிகொள்ளும் வாய்ப்பு, தான் பெற்ற குழந்தைகள் வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் சுபயோக வாழ்க்கை, நம்பிக்கை மிக்க   எதிர்காலம் எதிர்பாராத உதவிகள் ஜாதகரை வந்து சேரும் தன்மை, அனைவரின் அன்பையும் பெற்று வாழ்க்கையில் முன்னேறும் தன்மை, புத்திசாலித்தனத்தால் ஆதாயமும் லாபமும் உண்டாகும், எப்பொழுதும் மகிழ்ச்சி, குழந்தை குடும்பத்துடன் தன்னிறைவான யோக வாழ்க்கை என்ற வகையில்  ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை உண்டாகும், வெளிநாடு ஜீவனமும், குடியுரிமையும் திடீரென அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு முற்போக்கு சிந்தனையும், பொறுப்பு  மிக்க செயல்பாட்டையும் வாரி  வழங்கும், நல்ல அதிஷ்டத்தை ஜாதகர் தனது வாழ்நாள் முழுவதும் சுவீகரிக்கும் வல்லமையை தரும், லட்சியங்களை விடாமுயற்சியுடன் போராடி பெரும் யோகம் உண்டு, ஜாதகரின் நல்ல  குணம் அனைவராலும் விரும்ப படும், எடுக்கும் காரியங்கள்  யாவிலும் தன்னிறைவான அதிர்ஷ்டங்களையே ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஆன்மீக பெரியோர்களின்  ஆசீர்வாதம் ஜாதகருக்கு புதிய உத்வேகத்தையும், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தரும், எந்த சூழ்நிலையிலும் ஜாதகர் தனது தன்னம்பிக்கையை விடாமல் ஸ்த்திரமாக நின்று யோக வாழ்க்கையை பெறுவார் என்பதை இந்த மதிப்பு மிக்க லாப ஸ்தானம் எடுத்துரைக்கிறது, சரியான  திட்டமிடுதல்கள் ஜாதகரின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும், லாப  ஸ்தான வலிமை ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது.

6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சபந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்,  கடன் உடல்நல பாதிப்பு குறிப்பாக வயிறு சார்ந்த இன்னல்கள், எதிரிகள் தொந்தரவு, அதீத எதிர்ப்புகள் கடன் கொடுத்தவர் வாங்கியவர்கள் வழியில் இருந்து  வரும் இன்னல்கள் எதிர்பாரா மருத்துவ செலவினங்கள், எதிரிகள் வழியில்  இருந்து வரும் துன்பங்கள், அடிக்கடி உடல் நல பாதிப்பை சந்திக்கும் தன்மை, முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டையாக அமையும் சில  பிரச்சனைகள், தெய்வீக அனுகூலத்தை பெற வாய்ப்பில்லாமல் தடைகளை  சந்தித்தல், மாந்திரீக பாதிப்பு, செயல் முடக்கம், சுபயோகங்களை தடை செய்யும் தன்மை என்ற வகையில் ஜாதகருக்கு 200% விகித  இன்னல்களை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அறிவு திறன் முழுமையாக முடக்கப்படும் தன்மை , மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதால் வரும் இன்னல்கள், தெளிவில்லாத சிந்தனை, முடிவெடுக்க முடியாமல்  தடுமாறும் சூழ்நிலை எதிர்ப்புகளை கையாள தெரியாமல் சிரமப்படும் நிலை, தெய்வீக உதவியை பெற இயலாமல் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், சமூகத்தில் பெரிய மனிதர்களிடம் பகைமை  பாராட்டும் தன்மை, உறுதியில்லாமல்  சில முடிவுகளை மேற்கொண்டு  அதன் வழியிலான துன்பங்களை அதிக அளவில்  அனுபவிக்கும் நிலை என்ற வகையிலும், எதிர்பாலின சேர்க்கை வழியில் தேவையற்ற இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரக்கூடும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  அதீத யோக வாழ்க்கையை களத்திர ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், நல்ல வாழ்க்கை துணை அவரது பரிபூர்ண ஒத்துழைப்பு மற்றும் தன்னலமற்ற ஆதரவு, நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த கூட்டாளிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை மற்றும் குடியுரிமை, நிறைவான பொருளாதர சேர்க்கை, நிம்மதியான யோக வாழ்க்கை, தனித்திறமையான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், நினைத்தைதை அடையும் வல்லமை, தன்னிடம் உள்ள தனி திறமையை கொண்டு வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெறுதல், கூட்டு முயற்சி வழியில் இருந்து வரும் யோகம், வெளிநாடுகள் சென்று சிறப்பான வரவேற்பை பெரும் தன்மை, ஏற்றுமதி இறக்குமதி  வியாபாரம் செய்வதன் மூலம் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, பொதுமக்கள் ஆதரவு, அதிகார பதவி, சிறந்த நிர்வாக திறமை என்ற வகையில் ஜாதகரின் வாழ்க்கையில் சகலவிதங்களில் இருந்து அபரிவிதமான முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகர் களத்திர ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தரும்.

நடைபெறும்  சனி திசை தரும் பலன்கள் : ( 11/03/2003 முதல் 11/3/2022 வரை )

தற்போழுது நடைபெறும் சனி மகா திசை ஜாதகருக்கு 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் சுபயோக பலாபலன்களை வாரி வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இது ஜாதகருக்கு  7ம் பாவக வழியில் இருந்து தனி  திறனை வெளிப்படுத்தும், ஜாதகரின் வியாபாரம் மற்றும் தொழில் சார்ந்த நன்மைகளை அதிகரிக்கும், வாழ்க்கை துணையுடனான யோக வாழ்க்கையை முழுவதும் சுவீகரிக்கும்  தன்மையை  தரும் எதிர்ப்புகள் விலகும், வெளியூர் அல்லது  வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் ஜாதகரின் பொருளாதார தேவைகளை பூர்த்தி  செய்யும், நம்பிக்கை மிக்க செயல்பாடுகள் வழியில் இருந்து ஜாதகரின் யோக வாழ்க்கை பரிபூர்ண துவத்தை அடையும், குறிப்பாக ஜாதகரின் சுய வலிமை பிரகாசிக்கும் நேரமாக  இது அமைவதுடன் சனி திசை  மிகுந்த நன்மைகளையே வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

சனி மகா திசையில் தற்போழுது நடைபெறும் குரு புத்தியும் மேற்கண்ட 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் சுபயோக பலாபலன்களை ஏக காலத்தில் வாரி வழங்குவதால் ஜாதகர் எதிர்வரும் காலங்களில் சுபயோக பலாபலன்களையே தன்னிறைவாக பெறுவார் .

எதிர்வரும் புதன் திசை தரும் பலன்கள் : ( 11/03/2022 முதல் 11/3/2039 வரை )

ஜாதகருக்கு எதிர் வரும் புதன் மகா திசை 1,3ம் வீடுகள் ஜாதகருக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை நல்குவது வரவேற்கத்தக்கது, புதன் திசை ஜாதகருக்கு நல்ல மனநிலை, சிறந்த உடல் ஆரோக்கியம், பயணங்கள்  மூலம் அதீத லாபங்கள் நிரந்தர குடியுரிமை, கோர்ட் கேஸ், வழக்குகள் வழியிலான தீர்வுகள்,  சாதகமான சூழ்நிலை, எதிர்ப்புகள் விலகுதல்,  நினைத்த காரியம் நிறைவேறுதல், சகோதர வழி ஆதரவு, உறவுகளுடன் நல்ல பற்றுதல், தெய்வீக அனுகூலம், தைரியமாக சரியான  முடிவுகளை மேற்கொள்ளும் தன்மை, எதிர்பார்த்த மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் சரியான நேரமாக புதன் திசை அமையும் மேலும் 3ம் பாவக வழியில் இருந்து நிறைவான செல்வச்செழிப்பு, பொருளாதர முன்னேற்றம், எதிரி மற்றும் எதிர்ப்புகளை வெல்லுதல், மனோதைரியம், தன்னம்பிக்கை சுய கட்டுப்பாடு, முற்போக்கு சிந்தனை என சகல  ஐஸ்வர்யங்களும் ஜாதகரை தேடிவரும் யோக காலம் இந்த புதன் திசை  என்று தெளிவாக கூறலாம் வாழ்த்துக்கள் அன்பரே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 28 மே, 2019

வெளிநாடு யோகம், தொழில் முன்னேற்றம் - ஜாதக ஆலோசணை !


கேள்விகள்:

1.தற்போது அவருக்கு புதன் தசை சுக்கிர புக்தி நடக்கிறது.
இங்கு நாங்கள் (அமெரிக்காவில்) பல வருடங்களாக இருந்தும் நிரந்தர குடியுரிமை (Green card) கிடைக்க மிக தாமதமாகிறது. அதனால் செய்யும் வேலையில் சிறிது பயம்  இருந்து கொண்டு இருக்கிறது.  Green card க்கு அப்ளையும்  செய்தாகி விட்டது. இன்னும் கிடைக்கவில்லை எப்போது கிடைக்கும்?


பதில் :

 நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று யோக பலன்களை தருவது வரவேற்கத்தக்கது, ஜாதகருக்கு இந்த புதன் திசை தனது சுய உழைப்பின் வழியில் இருந்தும், கற்ற கல்வி, சமயோசித அறிவு திறன் வழியில் இருந்தும், குலதெய்வ ஆசியின் மூலம் சகல சௌபாக்கியத்தையும் தரும், களத்திர ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும், வெளிநாடுகளில் சிறப்பான முன்னேற்றத்தையும் தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து யோக வாழ்க்கையை வாரி  வழங்கும், நண்பர்கள் கூட்டு முயற்சி சிறப்பான வெற்றியை தரும், வெளிநாட்டில் ஜீவிக்கும் யோகம் உண்டாகும், லாப ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் பரிபூர்ண அதிர்ஷ்டத்தை பெறுவதுடன், தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை அதிகரிக்கும், எதிர்ப்புகள் யாவும் களைந்து வெற்றி பெரும் யோகம் உண்டாகும், வெளிநாடு வாழ் குடியுரிமை 24/04/2020க்கு மேல் உறுதியாக கிடைக்கும், நடைபெறும் சுக்கிரன் புத்தி குடியுரிமை அமைப்பில் தாமதத்தை தரக்கூடும்.

2. முதல் பெண் குழந்தை கிடைக்க தாமதம் (5 வருடம்). தற்போது அவளுக்கு 8 வயது. அடுத்து ஆண் குழந்தை உண்டா??

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தை குறிக்கும் 5ம் பாவகம் மிக வலிமையாக இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இருப்பினும் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையை அறிந்த பிறகே தங்களுக்கு ஆண் வாரிசு அமையுமா ? என்பதை துல்லியமாக கூற இயலும்.

3. இப்போது இருக்கும் வீடு அவ்வளவு திருப்தியாக இல்லை. வீட்டை விற்று இங்கே வேறு ஊருக்கு செல்லலாமா?

பதில் :

எதிர்வரும் சூரியன் புத்தியில் 24/04/2020க்கு மேல் முயற்சி செய்வது வெற்றியை தரும், தாராளாமாக வேறு இடத்திற்கு குடிபெயரெலாம்.


4. இங்கு நிரந்தர குடியுரிமை உண்டெனில் business ஆரம்பிக்கலாமா?

பதில் :

நிச்சயமாக குடியுரிமை கிடைக்கும், தாராளமாக தாங்கள் சுய தொழில் அல்லது  கூட்டு தொழில் ஆரம்பிக்கலாம்.

5.மேலும் எனது கணவரது regular predictions பற்றியும் வேண்டிய பரிகாரம் பற்றியும் விரிவாக தெரியப்படுத்தவும்.

பதில் சுய ஜாதகத்தில்  1,5,7,11ம் வீடுகள் லாபஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் 2,4,8,10ம் வீடுகளும் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும், குறிப்பாக 2ம் பாவக வழியில் இருந்து வருமானம், இனிமையான பேச்சு திறன், குடும்ப வாழ்க்கையில் வெற்றி, இனிமையான வாழ்க்கை என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், நல்ல வசதி மிக்க வீடு, நல்ல குணம் என்ற அமைப்பில் சிறப்பை தரும், 8ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் யோகம், வருமானம், பொருளாதார உதவிகள், ஆதரவு என்ற வகையிலும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை தரும், மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வ சேர்க்கை  அதிகரிக்கும், 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தொழில் வழியில் முழு யோகத்தையும் அனுபவிக்கும் வல்லமையை தரும், தொழில் ரீதியான விருத்தி சிறப்பாக அமையும்.

மேலும் 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறந்த  ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகத்தை தருவதுடன் ஆண் வாரிசுக்கான வாய்ப்பை தரும், ஆன்மீக பெரியோர்கள் வழியில் இருந்து வரும் ஆசி ஜாதகருக்கு சகல சௌபாக்கியத்தையும் தரும்.

3,6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது மட்டும் ஜாதகருக்கு சற்று கடுமையான நெருக்கடிகளை தரக்கூடும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் சில தோல்விகளை சந்திக்கும் சூழ்நிலையை தந்த போதிலும் விடா முயற்சி சகல சௌபாக்கியத்தையும் தரும், 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் உடல் நலனில் அதீத அக்கறை கொள்வதும், கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபடுவதும் அவசியமாகிறது, எதிரிகள் தொந்தரவு அதிகம் பாதிக்கும் என்பதால், யாரிடமும் பகைமை பாராட்டாமல் நடந்து கொள்வது சகல நலன்களையும் தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு கடுமையான மனப்போராட்டத்தை தரக்கூடும், மன அழுத்தம் மற்றும் உறக்கமின்மையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது, முதலீடு செய்யுமுன் சிந்தனை  செய்து கவனமுடன் செயல்படுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 22 பிப்ரவரி, 2018

தொழில் ஸ்தானம் பெரும் வலிமை, ஜாதகர் பெரும் ராஜயோக பலாபலன்கள் !



  தனக்கு உகந்த தொழில் அமைப்பினை சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் அமைத்துக்கொள்ளும் பொழுது, ஜாதகரின் முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும் என்பது உறுதி செய்யப்பட்ட விஷயமாகும், பரபரப்பான இந்த உலகத்தில் நேர விரையம் என்பது நமது வாழ்க்கையில் நமக்கு வரும் அதிர்ஷ்டங்களை தவறவிட செய்யும் தன்மையை பெற்றது, எனவே நமது சுய ஜாதக வலிமையை பற்றிய ஓர் தெளிவுடன் நமது வாழ்க்கையை எதிர்கொள்வோம் எனில், நமக்கு வரும் வாய்ப்புகளையும், அதிர்ஷ்டங்களையும், நாமே சுவீகரிக்கும் வல்லமையை தந்து விடும்.

 தனது வாழ்க்கையில் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் பெறக்கூடிய விஷயங்களை அறிந்திறாத பொழுது நமது நோக்கமும் லட்சியமும் வெகுவாக உடையும், உதாரணமாக நமக்கு பொருத்தமான தொழில் எதுவென்று நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படுமாயின், நாம் வெகுவாக நேர விரையத்தை சந்திக்கும் நிலையை தருவதுடன் சுய முன்னேற்றம் என்பதும் கடுமையாக பாதிக்கப்படும், சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தான வலிமை மற்ற பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையில் ஓர் தொழிலை நாம் தேர்வு செய்தொம் எனில், செய்யும் தொழில் வழியிலான வெற்றி வாய்ப்புகளை எவராலும் தட்டிப்பறிக்க இயலாது, மேலும் தன்னிறைவான ஜீவன முன்னேற்றம் என்பது மிகவும் சிறப்பாக அமையும், இதை கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கன்னி
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 2ம் பாதம்

மேற்கண்ட ஜாதகர் ஓர் இளம் கோடீஸ்வரர் என்றால் நம்ப முடிகிறதா ? உங்களுக்கு , ஜாதகர் கேட்க வந்ததென்னவோ திருமணத்தை பற்றித்தான், ஆனால் அவரது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் தன்மை இந்த பதிவினை எழுத தூண்டியது, ஜாதகர் ஓர் பட்டதாரி, கடந்த 3 வருடங்களுக்கு முன் ஓர் தொழிலை சிறு முதலீட்டில் துவங்குகிறார், துவங்கி குறிகிய காலத்தில் ஜாதகருக்கு வெற்றி மேல் வெற்றி, தொடர்ந்து தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பை பெற ஆரம்பிக்கிறார், ஜாதகரின் தன்னம்பிக்கையுடனான கடின உழைப்பும், சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையும் ஜாதகரை தொழில் ரீதியாக மிகவும் மதிப்பு மிக்க இடத்தில் அமரவைக்கிறது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 ஜாதகருக்கு 1,2,3,4,5,6,7,8,9,10,11,12 ஆகி அனைத்து வீடுகளும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகர் பரிபூர்ண யோக ஜாதகம் பெற்றவர் என்பதை தெளிவுபடுத்துகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 5,9ம் வீடுகள் ஜாதகருக்கு  சிறந்த கல்வி அறிவையும், சமயோசித புத்திசாலித்தனத்துடன் கூடிய அறிவு திறனையும் வாரி வழங்கி இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இது ஜாதகருக்கு சரியான கல்வி மற்றும் சரியான தொழில் அறிமுகத்தை உகந்த காலத்தில் வழங்கி இருக்கிறது, 1,4,7,10ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  லக்கின வழியில் இருந்து நல்ல கல்வி வளரும் சூழ்நிலையில் சிறப்பு, சிறந்த உடல் மற்றும் மன நலம், புகழ் வெற்றி கீர்த்தி போன்ற யோகங்களையும், 4ம் பாவக வழியில் இருந்து தன்னிறைவான சுகபோக யோகம், சொகுசு வீடு வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, நல்ல குணத்தை வழங்கி இருக்கிறது, 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் மக்கள் ஆதரவு, கூட்டு தொழில் வழியில் இருந்து பெரும் சுபயோகம், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தன்னிறைவான வருமான வாய்ப்புகள், சிறந்த வியாபர திறமை என மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கி இருக்கிறது, 10ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் திறமை, தீர்க்கமான வாத திறமை, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், செய்யும் தொழில் வழியில் இருந்து வரும் வெற்றிகள், சுய முன்னேற்றம், வியாபாரம் மூலம் விருத்தி என ஜாதகர் ஜீவன ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவித்துக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

6,8,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது 6ம் பாவக  வழியில் இருந்து நினைத்த எண்ணம் நிறைவேறும் தன்மை, மிக எளிதான வெற்றி வாய்ப்புகள், அதீத புத்திகூர்மை மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெரும் யோகம், கூலியாட்கள், வேலையாட்கள் மூலம் அபரிவித வளர்ச்சியுடன் கூடிய பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் நன்மைகளை தந்துகொண்டு இருக்கின்றது, 8ம் பாவக வழியில் இருந்து லட்சியம் நிறைவேறும் தன்மை, போட்டி வழக்குகளில் வெற்றி, கூட்டு தொழில் மூலம் லாபம், நிறைவான மன நிலை, திடீர் அதிர்ஷ்டம் என்றவகையில் சிறப்புகளை வழங்கி உள்ளது, 12ம் பாவக வழியில் இருந்து நிறைய லாபம், முதலீடுகளில் இருந்து வரும் பெரும் செல்வம், வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம், அதிர்ஷ்டத்துடன் கூடிய சுப விரையம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கி உள்ளது.

2,3,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து தனது பேச்சு திறன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெரும் யோகத்தை தருவதுடன், சிறந்த வருமான வாய்ப்பையும் நல்கியுள்ளது, குடும்பத்தில் மகிழ்ச்சி, தெளிவான பேச்சு திறன் என ஜாதகருக்கு மேலும் நன்மைகளை தருவது கவனிக்கத்தக்கது, 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மேற்கொள்ளும் விஷயங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி, வீரியமிக்க செயல்பாடுகள், எண்ணத்தின் வலிமை, சிறந்த வியாபார யுக்தி, அதிக வாகன வசதி, விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் முன்னேற்றம், நிறைய சொத்து சுக சேர்க்கை, தர்ம சிந்தனை, ஜோதிடம் மற்றும் கணிதத்தில் விழிப்புணர்வு என்ற வகையில் சிறப்புகளை தருவதுடன், எதிர்வரும் திருமணத்திற்கு பிறகான அதீத அதிர்ஷ்டங்களை வாரி  வழங்கும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி, மேற்கொள்ளும் விஷயங்கள் அனைத்திலும் லாபத்தை தரும், மேலும் ஜாதகரின் நல்ல குணம் வாழ்க்கையில் சகல சம்பத்துக்களையும் வாரி வழங்கும்.

நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று தனது திசையை தொழில் ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை நல்குவதுடன், எதிர்வரும் கேது திசை 9ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று தொழில் வழியிலான நற்ப்பெயரை பெற்று  தரும், கேது திசைக்கு பிறகு வரும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று சுக்கிரன் திசை முழுவதும் நன்மைகளை தருவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும்.

குறிப்பு :

 மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பதால், முழு சுபயோகம் பெற்றவர் என்பதுடன் கிரகங்களினால் வரும் நன்மைகளை மட்டுமே ஜாதகர் எதிர்கொள்வார் என்பது கவனிக்கத்தக்கது, இவருக்கு பாதிப்பான பலாபலன்கள் ஏதும் நடைமுறைக்கு வாராது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும் வாழ்த்துக்கள் அன்பரே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 11 நவம்பர், 2017

திருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்குமா? ஏக திசை நடப்பு !


கேள்வி :

 அய்யா எனக்கும் எனது வாழ்க்கை துணைக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறோம், எங்களது ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் இருவருக்கும் புதன் திசை நடைபெறுவதால் " ஏக திசை நடப்பு " இதனால் இல்லற வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது விவாகரத்து நிச்சயம் என்று கூறுகின்றனர், நாங்கள் மீண்டும் இல்லற வாழ்க்கையில் இணைந்து வாழ வாய்ப்பு உண்டா ? தெளிவான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.


ஜாதகி

லக்கினம் : சிம்மம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம்


ஜாதகர்

லக்கினம் : மிதுனம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : பூசம் 1ம் பாதம்

தங்களது இருவரது ஜாதகத்திலும் ஏக காலத்தில் புதன் திசை நடைபெறுவது உண்மைதான், அதே சமயம் இருவருக்கும் நடைபெறும் புதன் திசை பாதிக்கப்பட்ட  பாவக பலனை ஏற்று நடத்துவதும் தங்களது இல்லற வாழ்க்கையில்  இன்னல்களை தரும் என்பதும் உண்மைதான் ஆனால் அது விவாகரத்தை தரும் என்பது முற்றிலும் தவறான கருத்து, தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் ஏக காலத்தில் நடைபெறும் ஒரே கிரகத்தின் திசை விவாகரத்தை தரும் என்பதெல்லாம் கற்பனையின் அதிஉட்ச நிலை என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை, தங்களது இருவரது சுய ஜாதகத்திலும் ஏக காலத்தில் நடைபெறும் புதன் திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு நிலையை பற்றி தெரியாமல் விவாரகாரத்து நடைபெறும் என்று  கூறிய விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது.

பொதுவாக கணவன் மனைவி இருவரது சுய ஜாதகத்திலும் நடைபெறும் ஏக திசை இன்னல்களை தரும் என்று கருதுவதும் தவறான அணுகுமுறையே, தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் நடைபெறும் ஏக திசை சுய ஜாதகத்தில் ஏற்று  நடத்தும் பாவக தொடர்புகளின் வலிமை மற்றும் அது தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டு தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும், தங்களது இருவரது சுய ஜாதகத்திலும் நடைபெறும் புதன் திசை தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டு தங்களுக்கான ஆலோசனையை ஜோதிடதீபம் கீழ்கண்ட வரிகளில் வழங்குகிறது.

ஜாதகிக்கு நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் : ( 28/03/2010 முதல் 28/03/2027  வரை )

 தங்களுக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை 5,9ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விறைய  ஸ்தான பலனை தந்துகொண்டு இருக்கின்றது, மேலும் தங்களது விறைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுகம் மற்றும் மாத்ரு ஸ்தானமாக அமைவது தங்களின் சுக போக வாழ்க்கையில் நிம்மதியின்மையை தருகின்றது, குறிப்பாக வாழ்க்கை துணையுடனான அந்தரங்க வாழ்க்கையில் சிறு சிறு மன சஞ்சலங்களை அனுபவிக்கும் நிலையை தருகின்றது, மேலும் நிம்மதி இன்மை அனைவராலும் தொல்லை தொந்தரவுகள் என்ற வகையிலும் பாதிப்பை தருகின்றது, 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ ஆசியின்மையையும், தெளிவான சிந்தனை இன்றி தவறான முடிவுகளை மேற்கொள்ளும் நிலையை தருகின்றது, குழந்தை பாக்கியம் இன்மை தங்களது இல்லற வாழ்க்கையில் ஓர் பிணைப்பை தாராமல் வெற்றிடத்தை ஏற்ப்படுத்துகிறது, 9ம் பாவக வழியில் இருந்து பித்ரு ஆசியின்மையின் காரணமாக இல்லற வாழ்க்கையில் சிரமங்களை தருகின்றது, அறிவார்ந்த செயல்பாடுகள் தங்களிடம் இல்லாத காரணத்தால் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று பகுத்தறிந்து செயல்படும் தன்மை குறைகிறது, இதனால் தங்களுக்கு வரும் ஆலோசனைகளை அப்படியே நம்பி வாழ்க்கை துணையுடன் பிரிந்து நிற்பது நல்லது அல்ல, மேலும் தங்களது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களின் குடும்ப வாழ்க்கையில், தங்களது பேச்சின் மூலம் பல இன்னல்களை ஏற்ப்படுத்தும், நிம்மதியின்மையைதரும், இது தங்களது ஜாதகத்தில் உள்ள குறை என்பதுடன், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது குடும்ப வாழ்க்கையில் நிச்சயம் சிரமங்களை தரும் அமைப்பாகும், இருப்பினும் தற்பொழுது நடைபெறும் புதன் திசை இருவருக்கும் பாதிக்கப்பட்ட குடும்ப ஸ்தான பலனை  ஏற்று நடத்தவில்லை என்பதால் இல்லற வாழ்க்கையில் பெரிய அளவிலான பாதிப்பை தாராது, மேலும் தங்களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது, தாங்கள் நல்ல வாழ்க்கை துணையை பெற்று  இருக்கின்றீர்கள் என்பதை தெளிவு படுத்துகிறது.

ஜாதகருக்கு நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் : ( 19 /03/2013 முதல் 19/03/2030  வரை )

தங்களது கணவரது ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் புதன் திசை 3,6,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விறைய ஸ்தான பலனை தருவது தங்களின் தாம்பத்திய வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களை  தரும் அமைப்பாகும், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நன்மைகளை அனுபவித்த போதிலும், 6ம் பாவக வழியில் இருந்து கடன், உடல் நல பாதிப்பு, எதிர்ப்பு என்ற வகையில் இன்னல்களையும், 12ம் பாவக வழியில் இருந்து திடீர் நஷ்டம், மன உளைச்சல் மற்றும் போராட்டம், வீண் கற்பனை என்றவகையில் இன்னல்களை தரும், இவரது ஜாதகத்திலும் குடும்ப  ஸ்தானம் பாதக ஸ்தான தொடர்பை பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது, இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தரும் அமைப்பாகவே படுகிறது, ஆனால் தாங்கள் இருவரது ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு வலிமை பெற்று இருப்பது தங்களுக்கு இல்லற வாழ்க்கையில் விவாகரத்தை தாராது, சிறு சிறு பிரிவுகள் நிச்சயம் வரும், தாங்கள் இருவரும் இதை உணர்ந்து தங்களது தாம்பத்திய வாழ்க்கையை புனிதமாக்கிகொள்வது தங்களது கையிலேயே உள்ளது என்பதை அழுத்தமாக பதிவு செய்ய " ஜோதிடதீபம் " விரும்புகிறது, மேலும் தங்களுக்கு வயதும் மிக மிக குறைவு என்பதால் தங்களைவிட வயதில் மூத்தோர்களிடம் ஆலோசனை பெற்று இல்லறவாழ்க்கை சிறப்பாக எதிர்கொள்ளுங்கள், தங்களின் வாழ்க்கை துணைக்காக சில பல விஷயங்களில் விட்டுகொடுத்து செல்வது தங்களின் எதிர்காலத்தை  சிறப்பாக அமைத்து தரும், தங்களின் எதிர்கால சந்ததிகளுக்கு சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை அமைத்து தரும், சிலர் கூறும் பிற்போக்கு தனமான சுய ஜாதகத்தில் இல்லாத, உண்மைக்கு புறம்பான வாதங்களை தங்களது நினைவில் நிறுத்தாமல், சிறப்பான தாம்பத்திய வாழ்க்கையை வாழுங்கள், தங்களின் இருவரது சுய ஜாதகத்திலும் பல பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பது தங்களின் இல்லற வாழ்க்கையில் பிரிவை தாராது என்று நம்பிக்கை கொள்ளலாம்.

 தங்களது இருவரது சுய ஜாதகத்திலும் அடுத்து வரும் கேது திசை தங்களுக்கு 8ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களை தரும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் எதிர் வரும் கேது திசை பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்தி சிறப்புகளை தர இருக்கின்றது என்பது வரவேற்கத்தக்க விஷயம், அடுத்து வரும் சுக்கிரன் திசையும் இருவருக்கு ஜாதகத்தில் ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறந்த எதிர்காலத்தை தரும் என்பதை கருத்தில் கொண்டு சிறப்பான தாம்பத்திய வாழ்க்கையை பெறுங்கள் வாழ்த்துக்கள்.

குறிப்பு :

தாங்கள் இருவருக்கும் தற்போழுது நடைமுறையில் புதன் திசை நடைபெற்றாலும் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தரும் என்பது மட்டுமே உண்மை, ஆனால் விவாகரத்தை தாராது என்பதை கருத்தில் கொண்டு இனிமையான இல்லற வாழ்க்கையை பெறுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 18 ஜூலை, 2017

சனி மகா திசை தரும் பலாபலன் என்ன ? எதிர்வரும் புதன் திசை தரும் பலாபலன்கள் என்ன ?


 சுய ஜாதகத்தில் சனி திசை நடைபெறும் பொழுது பெரும்பாலும் நாம் அனைவரும் நமக்கு இன்னல்களே நடைபெறும் என்று கருதுவது உண்டு, மேலும் சனி திசை என்பது வாழ்க்கையில் இன்னல்களையும், துன்பங்களையும் வாரி வழங்கும் அமைப்பை பெற்றது என்ற கருத்தும் பரவலாக உண்டு, மனித வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் காரணகர்த்தாவாக சனிபகவானை உருவகபடுத்துபவர்களும் உண்டு, இன்னும் சிலர், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று, ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு சனிபகவானின் சஞ்சார நிலையை கருத்தில் கொண்டு பெரும் இன்னல்களை தருபவர் என்று சனிபகவானை துவேசிப்பவர்களும் உண்டு, மேற்கண்ட விஷயங்கள் யாவும் சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலையை பற்றிய தெளிவு இல்லாமலும், நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையின் தன்மையை பற்றிய புரிதல் இல்லாமலும், சொல்லப்படும் கட்டுக்கதையாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, அடிப்படையில் சுய ஜாதகம் இருக்கும் பொழுது ராசியை வைத்து பலாபலன் காண முற்படுவதே தவறான ஓர் அணுகுமுறை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம், லக்கினத்தையும் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும் கருத்தில் கொண்டு பலாபலன் காண முற்படுவதே சரியான மற்றும் துல்லியமான ஜாதக பலன்கள் காண வழிவகுக்கும், ஜாதகரின் கேள்விக்கு உண்டான பதிலை அவரது சுய ஜாதக அமைப்பை வைத்து பலாபலன் எப்படி காண்பது என்பதனை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது  சனி திசை ( 13/03/2013 முதல் 12/03/2022 வரை ) நடைமுறையில் உள்ளது நடைபெறும் சனி  திசை ஜாதகருக்கு வழங்கும் பலன்கள் என்ன என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை வலிமை பெற்ற 7ம் வீடு களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் ஸ்திரமாக 7ம் பாவக பலனை மட்டும் ஏற்று நடத்துகிறது, ஜாதர் விருச்சிக லக்கினம்  என்பதால் 7ம் பாவகம் ஜாதகருக்கு ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் அமைகிறது, மேலும் 7ம் பாவகம் ஜாதகருக்கு ரிஷபத்தில் 32:32:05 பாகையில் ஆரம்பித்து மிதுனத்தில் 61:17:18 பாகையில் முடிவடைகிறது, பெரும்பாலும் 7ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வாக்கு ஸ்தானமான ரிஷப ராசியில் வியாபித்து இருப்பது, வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் சனி திசை முழுவதும் ஜாதகத்துக்கு  7ம் வீடு களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது வரவேக்க தக்க அம்சமாகும்.

இதனால் ஜாதகர் சனி திசையில் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சகல  சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகத்தை தரும், மேலும் தனது  நண்பர்கள் உதவி, கூட்டாளிகள் உதவி, வெளிநாடுகளில் இருந்து வருமான வாய்ப்பு, அயல் தேசத்தில் ஜீவன வாழ்க்கையை மேற்கொள்ளும் யோகம், ஸ்திரமான வருமானங்கள், இனிமையான பேச்சு திறன் மூலம் அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், பொதுமக்கள் ஆதரவு, சமூக அந்தஸ்து, தெய்வீக அனுக்கிரகம் மூலம் வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் பெரும் யோகம் உண்டாகும், குறிப்பாக ஜாதகரின் குடும்ப  வாழ்க்கை சிறப்பாக அமையும், கைநிறைவான வருமானம் வந்து சேரும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், ஜாதகரின் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சு திறமையால் தனது வாழ்க்கையை மிக சிறப்பானதாக மாற்றி கொள்ளும் யோகம் பெற்றவராகிறார், மேலும் தனது வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும், அவர்கள் வழியிலான நன்மைகளையும் ஜாதகர் பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகம் உண்டு, சனி திசை ஜாதகருக்கு வெளியூர், வெளிநாடு, வியாபாரம், பொதுமக்கள், அயல் தேச லாபங்கள் என்ற வகையில் சுபயோகங்களை ஸ்திரமாக வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், ஜாதகருக்கு சனி திசை நடைபெற்றாலும், சனி தனது திசையில் வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் தரும்.

எனவே சுய ஜாதகத்தில் பாவ கிரகத்தின் திசை, புத்தி  ( சூரியன், செவ்வாய், சனி, தேய்பிறைசந்திரன், ராகு,கேது ) நடைபெற்றால் தீய பலன்கள் நடைபெறும் என்று நினைப்பது முற்றிலும் தவறு, எந்த ஓர் கிரகத்தின் திசாபுத்தி நடைபெற்றாலும், நடைபெறும் திசாபுத்தி அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, அதற்க்கான உண்மையான பலாபலனை அறிந்து வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

ஜாதகருக்கு அடுத்து வரும் புதன் திசை தரும் பலாபலன்களை சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

புதன் திசை ( 12/03/2022 முதல் 13/03/2039 ) ஜாதகருக்கு 1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராஜ யோக பலனை தருவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகரின் வீர்ய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும், சர மண் தத்துவ ராசியான மகரத்தில் வியாபித்து இருப்பது, ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும் யோகத்தை தரும், சனி திசையை விட புதன் திசை ஜாதகருக்கு 1,3ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை நல்கும், எதிர்பாராத முன்னேற்றம் மற்றும் ஜீவன வழியிலான லாபங்களை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவார், அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை முழு அளவில் ஜாதகர் ஜீவன வழியில் இருந்து பெறுவார், அபரிவிதமான தொழில் வளர்ச்சி, எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி, சுலப பொருள் வரவு, மக்களின் பேராதரவு, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் லாபங்கள், தெய்வீக அனுபவங்கள், மண், மணை, வண்டி வாகன சேர்க்கை, எதிர்பாராத அதிர்ஷ்டம் என ஜாதகரின் வாழ்கையில் புதன் திசை மிகுந்த நன்மைகளை பரிபூர்ணமாக வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை களத்திர பாவக வழியில் இருந்து சுப யோகங்களையும், புதன் திசை வீர்ய ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களையும் வாரி வழங்குவது, அவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெற்றுள்ள சுபதுவத்தை எடுத்துரைக்கிறது, எனவே நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பின், நமக்கு எந்த கிரகத்தின் திசாபுத்தி நடைபெற்றாலும் யோக பலனே நடைமுறைக்கு வரும், நமது ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின் நமக்கு நடைபெறுவது குரு,சுக்கிரன் போன்ற சுப கிரகத்தின் திசை என்றாலும் அவயோக பலன்களே நடைமுறைக்கு வரும் என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, கிரகங்களின் திசாபுத்திகள் நமக்கு நன்மையையும் தீமையையும் தருவதில்லை, நமது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே நமக்கு நன்மையையும் தீமையையும் தருகின்றது என்பதே உண்மை அன்பர்களே, எனவே அவரவர் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு ஜாதக பலாபலன்கள் காண்பதே மிக துல்லியமான பலாபலன்களை காண இயலும் என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

சுய தொழில் அடிமை தொழில் எது சிறப்பை தரும்? புத்திர பாக்கியம் உண்டா ?

கேள்வி :

ஐயா நான் 27/7/84 இரவு 9.50க்கு ஆரணியில்  பிறந்தேன், பிறகு அங்கு இருந்து நான் 6ம் வகுப்பு படிக்கும் தருவாயில் அப்பாவுக்கு தொழில் நஷ்டம் ஏற்ப்பட திருவண்ணாமலைக்கு வந்தோம், 2009; 2011 நான் தொழில் தொடங்கினேன் இரண்டு வருடம் கடுமையான பொருள் சேதம் 10 லட்சம் நஷ்டம்,  அங்கு இருந்து சென்னை வந்தேன் ஆறு வருடம் வேலை பார்த்தேன், தற்பொழுது தொழில் தொடங்கினேன் man power contract இந்த தொழிலும் பண நஷ்டம் வருகின்றது,  இந்த தொழில் நடத்தலாமா?  இல்லை அடிமை தொழிலுக்கே போகலாமா? ஐயா எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் இல்லை, தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

பதில் :

 ஒருவரின் வாழ்க்கையில் கடந்த,நிகழும், எதிர்வரும் மூன்று காலங்களில் நடைபெறும் பலாபலன்கள் பற்றியும், தனது ஜாதகப்படி தனக்கு உள்ள பலம், பலமின்மை, தகுதி, தகுதியின்மை, யோகம் அவயோகம் பற்றிய கேள்விகளுக்கு சரியான பதில் மற்றும் விளக்கத்தை தருவதில் " ஜோதிட சாஸ்திரம் " பயன்படுகிறது என்றால் அது மிகையில்லை, தனது சுய ஜாதகத்தின் வலிமையை பற்றி சிறிதும் அறியாமலேயே, வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கும் அன்பர்களின் ஜாதகத்தில், 5,9ம் பாவக வலிமை இன்மை வெகுவாக தனது ஆளுமையை செலுத்தி கொண்டு இருக்கின்றது என்பதை தவிர வேறு எதுவும் இல்லை அன்பர்களே ! சரியான ஜோதிட பலன் அறிந்துகொள்வதர்க்கே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட கேள்வியை வினவியிருக்கும் அன்பரின் ஜாதக வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல், ஜாதகர் தனது வாழ்க்கையில் மிகுந்த போராட்டங்களை தற்பொழுது வரை சந்தித்துக்கொண்டு இருக்கின்றார் என்பது அவரது சுய ஜாதகத்தில் சில பாவகங்களின் வலிமை இன்மையை தெளிவுபடுத்துகிறது எனும் பொழுது விதியின் வலிமையை நினைத்து வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

ஜாதகருக்கு கடந்த சனி திசை வழங்கிய பலன்களை மட்டும் இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! தற்பொழுது நடைபெறும் புதன் திசை, எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் பற்றி ஜாதகருக்கு பிராப்தம் இருப்பின் முறையாக ஜாதக ஆலோசனை பெற்று கொள்ள இறை அருள் கருணை புரியட்டும்.


லக்கினம் : மீனம்
ராசி : கடகம்
நட்சத்திரம் : புனர்பூசம் 4ம் பாதம்

ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் யோகம் அவயோக நிலைகளை பற்றி தெளிவு படுத்தும், மேலும் நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை நிலையை பற்றி தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நவகிரகங்களின் திசாபுத்திகள் தரும் நன்மை தீமையை பற்றி மிகத்துல்லியமாக காண வழிவகை செய்யும், மேற்கண்ட ஜாதகருக்கு கடந்த சனி  திசை ( 25/04/1988 முதல் 25/04/2007 வரை ) தனது திசையில் வழங்கிய பலன்களையும், ஜாதகர் அதனால் பெற்ற நன்மை தீமையை பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

சனி திசை ஜாதகருக்கு பால்ய வயதில் வந்துள்ளது, மேலும் சனி திசை 12ம் வீடு திடீர் இழப்பை தரும் 8ம் பாவகமான ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியிருக்கிறது, நடைபெற்ற சனி திசை காலங்களில் ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலை அற்ற தன்மை, உடல் நல பாதிப்பு, கல்வியில் தடை, கற்ற கல்வி வழியிலான பலன்களை அனுபவிக்கும் தன்மை இல்லாதது, எந்த ஒரு விஷயத்தையும் போரடி பெறவேண்டிய கட்டாயம், என சனி திசை மிகுந்த இன்னல்களையே வாரி வழங்கி இருக்கின்றது.

மேலும் ஜாதகரின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாகவும், சர காற்று தத்துவ ராசியிலும் அமைகிறது, 12ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாகவும், ஸ்திர காற்று தத்துவ ராசியிலும் அமைவது, ஜாதகர் பொதுமக்கள், வியாபாரம், கூட்டு முயற்சி, சுய தொழில் ( அறிவு சார்ந்த ), ஆகியவற்றை அடிப்படையாக செய்வதற்கு உகந்தவர் அல்ல என்பது தெளிவு படுத்துகிறது, சுய ஜாதகத்தில் காற்று தத்துவ ராசி பாதிக்கபடுவது, ஜாதகரின் அறிவு சார்ந்த முயற்சிகளில் இன்னல்களையும், துன்பத்தையும் தரும் என்பது கவனிக்கதக்கது, இது ஜாதகர் தொழில் துவங்கிய காலங்களில் நடைமுறைக்கு வந்து எதிர்பாராத இழப்புகளையும், நஷ்டங்களையும் வழங்கி இருக்கின்றது.

சுய தொழில் துவங்குவது ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமை கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டிய ஒன்று, மேலும் ஜாதகர் வேலைக்கு செல்வது சிறப்பனதா ? என்பதை சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் முடிவு செய்வது சரியான தீர்வை தரும், புத்திர பாக்கியம் சார்ந்த கேள்விகளுக்கு தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் உள்ள 5ம் பாவக வலிமையின் அடிப்படையில் முடிவு  செய்ய வேண்டும் என்பதால் ஜாதகர் முறையான ஜாதக ஆலோசனை கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

லக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடுமையான இன்னல்களை தர காரணம் என்ன ? எனது ஜாதகம் யோக ஜாதகமா?


கேள்வி :

எந்த லக்கனம் என்றாலும், அந்த லக்கினத்திற்கு அதிபதியான கிரகத்தின் திசை நன்மையையே தரும் என்றும், யோக அதிபதிகளின் திசையும் ஜாதகருக்கு பரிபூர்ண யோகங்களை நல்கும் என்றும் கூறுகின்றனர், ஆனால் கடந்த சனி திசை ( லக்கினாதிபதி ) எனக்கு மிகப்பெரிய இன்னல்களையும் மீள முடியா துயரங்களையுமே பலனாக தந்தது, சனி திசையில் நான்பட்ட கஷ்டத்திற்கு ஓர் அளவில்லை எனலாம், இது எதனால், தற்போழுது நடைபெறும் புதன் திசையாவது எனக்கு நன்மைகளை தருமா ? 6,9க்கு உடையவன் இன்னல்களை தரக்கூடும் என்கின்றனர், எனது ஜாதகம் யோக ஜாதகமா?

பதில் :

ஒருவரது ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை அறியாமலும், நவகிரகங்களின் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவகங்கள் ஜாதகருக்கு தரும் நன்மை தீமையை பற்றி அறியாமலும், பொது கருத்தாக , சுப கிரகங்களின் திசாபுத்தி நன்மையையும், அசுப கிரகங்களின் திசாபுத்தி இன்னல்களையும் தரும்  என்று பலன் கூறுவதும், ஜாதக கணிதம் அறியாமல் கூறும் தவறான அணுகுமுறையாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் காலபுருஷ தத்துவத்திற்கு நவகிரகங்கள் பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு, சமம்,பகை,நீச்சம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு
ஆட்சி,உச்சம்,நட்பு, சமம் நிலையில் இருக்கும் கிரகம் மற்றும் கிரகத்தின் திசை யோகங்களை தரும் என்றும், பகை,நீச்சம் நிலையில் இருக்கும் கிரகம் மற்றும் கிரகத்தின் திசை அவயோகங்களை தரும் என்று பலன் கூறுவதும், ஜாதக கணிதம் அறியாமல் நவகிரகங்கள் தனது திசாபுத்தியில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை மற்றும் யோகம் அவயோகம் பற்றிய புரிதல் இல்லாமலும் கூறும் பொது பலனாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை பற்றி ஓர் தெளிவு இல்லை எனில் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான பலாபலன்கள் கூற இயலாது, மேலும் நடந்த,நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றிய புரிதல் இல்லாத பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தனது கற்பனை மூலம் " ஜாதக பலன்களை " வாய் ஜாலம் மூலம் நிகழ்த்த இயலுமோ அன்றி, கூறும் பலாபலன்கள் ஜாதக வலிமையின் அடிப்படையிலானதாக அமைய சிறிதும் வாய்ப்பு இல்லை, இதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையின் முன்னேற்றங்களுக்கு உண்டான திட்டமிடுதல்களை நடைமுறை படுத்துவது, சம்பந்தபட்ட ஜாதகருக்கு மிகப்பெரிய சவால்களை வாரி வழங்கும், என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையிலேயே ஜாதகர் இயங்குகிறார், பாவக வலிமை தரும் யோக அவயோகங்களையே நவ கிரகங்களின் திசாபுத்தி காலத்தில் ஜாதகர் அனுபவிக்கின்றார், என்பதை கீழ்கண்ட அன்பரின் ஜாதகத்தின் மூலம் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு, தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 1ம் பாதம்

லக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடுமையான இன்னல்களை தர காரணம் என்ன ?

 நவகிரகங்கள் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையே தனது திசாபுத்திகளில் காலங்களில் ஏற்று நடத்துகிறது, தனிப்பட்ட முறையிலான யோக அவயோகங்களை தர நவ கிரகங்களுக்கு வலிமை இல்லை என்பதை அடிப்படையில் புரிந்துகொள்வது நல்லது, மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினாதிபதியின் திசையான சனிதிசை, லக்கினாதிபதி என்பதால் ஜாதகருக்கு யோகங்களை தருவார் என்று ஜாதக பலனாக கூறப்பட்டு இருக்கின்றது, ஆனால் லக்கினாதிபதியான சனி திசை ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,7,8,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசை முழுவதும், பாதக ஸ்தானத்தால் 200% விகிதம் பாதிக்கப்பட்ட 1,7,8,10ம் வீடுகளின் பலனை ஏற்று நடத்தியிருக்கிறது, இதனால் ஜாதகர் சனி திசை முழுவதும் பாதக ஸ்தானம் தரும் கடுமையான இன்னல்களின் பிடியில் மாட்டிக்கொண்டு இன்னலுறும் சூழ்நிலையை தந்து இருக்கின்றது, லக்கினவழியில் இருந்து ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலையில் இல்லாமல் தவிக்கும் தன்மையையும், உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த இன்னல்களில் துன்புறும் தன்மையையும், லக்கினாதிபதி திசை தந்து இருக்கின்றது, மேலும் ஜாதகரின் வளர்ச்சி சீரிய முறையில் இல்லாமல் பல தடைகளையும் தாமதங்களையும் சந்தித்து இருக்கின்றார், அடிப்படையில் கல்வி, உடல்நலம், வருமானம், தொழில், திருமணம் ஆகிய வழிகளில் ஜாதகர் அதிக இன்னல்களை சந்தித்து இருக்கின்றார்.

7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் சேர்க்கை இன்மை, கூட்டு முயற்சி தோல்வி, சமூகத்தில் போராட்டம், குறுகிய வட்டத்தில் ஜாதகர் இன்னலுறும் தன்மை என்ற வகையிலும், எதிர்பால் அமைப்பினரால் இன்னல்களையும் சந்திக்கும் நிலையை தந்து இருக்கின்றது, 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகள், மருத்துவ செலவினங்கள், வீண் தனவிரையம், உடல்நல கேடு, எதிர்பாராத செலவினங்கள், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களின் திடீர் இழப்பு என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து வேலை தொழிலில் முன்னேற்றம் இன்மை, ஜீவன ரீதியான கடுமையான  இன்னல்கள், போராட்டம், தன்னம்பிக்கை பாதிக்கும் விதமான செயல்பாடுகள், தெளிவில்லாத வாழ்க்கை முறை, சுய முன்னேற்றத்தில் அக்கறை இன்மை, தகுதிக்கு உகந்த செயல்களை செய்யாமல், பொழுது போக்கு அம்சங்களில் அதீத ஆர்வம் மற்றும் ஈடுபாடு ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பதித்து இருக்கின்றது, கடந்த லக்கினாதிபதியின் திசையான சனி திசையில்.

எனவே ஜாதகருக்கு நடைபெற்ற திசை லக்கினாதிபதியின் (சனி ) திசை என்றாலும், அவர் ஏற்று நடத்தியது 1,7,8,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலன் என்பதனால் ஜாதகர் 1,7,8,10ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை சனி திசையில் அனுபவிக்கும் நிலையை தந்தது, எனவே சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பலன் கூற வேண்டும், அதுவே ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சிறந்த வழி காட்டுதல்களாக அமையும், மாறாக லக்கினாதிபதி திசை, யோகாதிபதி திசை, ராசியாதிபதி திசை, சுப கிரகத்தின் திசை என்பதால் நன்மையை செய்யும் என்று கூறுவது முற்றிலும் பாவக வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல் கூறும் வார்த்தைகளாகவே அமையும், தங்களுக்கு கடந்த சனி திசை ( லக்கினாதிபதி திசை என்ற போதிலும் ) அவர் ஏற்று நடத்தியது பாதக ஸ்தான பலன் என்பதால் தாங்கள் 1,7,8,10ம் பாவக வழியிலான கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது என்பதே முற்றிலும் உண்மை அன்பரே !

நடைபெறும் புதன் திசை நன்மையை தருமா ?

நிச்சயமாக மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும், ஏனெனில் நடைபெறும் புதன் தசை தங்களுக்கு 6,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விபரீத ராஜயோகத்தை வாரி வழங்குகிறது, குறிப்பாக தொழில் ரீதியான வெற்றிகள் மிதமிஞ்சிய அளவில் இந்த புதன் திசை தங்களுக்கு தரும், சொந்த முயற்சியில் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம், சொத்து சுக சேர்க்கை, திடீர் அதிஷ்டம் என புதன் திசை தங்களுக்கு சிறந்த நன்மைகளை 100% விகிதம் தர காத்துகொண்டு இருக்கின்றது, 6,9க்கு அதிபதி என்ற போதிலும் அவர் ஏற்று நடத்துவது வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலன் என்பதால் மிகுந்த யோகமும், நன்மையையும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், "வாழ்த்துக்கள்"

எனது ஜாதகம் யோக ஜாதகமா ?

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளை தாங்கள் உணர்ந்து செயல்படுவது அவசியமாகிறது, அடிப்படையில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு வரும் சிறப்பான யோகங்களை தாங்களே உதறித்தள்ளும் தள்ளும் சூழ்நிலையை தரும், மேலும் போதிய விழிப்புணர்வு இன்றி வாழ்க்கையில் வரும் நன்மைகளை  தாங்கள் தட்டி கழிக்க கூடும், எனவே முறையான ஜாதக ஆலோசனை தங்களுக்கு சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிக்க வழிவகுக்கும், முறையான பீரிதி பரிகாரங்கள், தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும், வாரி வழங்கும். முறையான ஜாதக ஆலோசனை தங்களுக்கு அவசியம் தேவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696