சர்ப்பயோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்ப்பயோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கன்னி லக்கினம் ( 2019-2020 )


கன்னி லக்கின அன்பர்கள் சோதனைகளை வெற்றிகொள்ளும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : கன்னி

காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சத்ரு ஸ்தானமாகவும், உபய மண் தத்துவ ராசியாகவும் விளங்கும் கன்னி ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்திலும், சுக ஸ்தானமான 4ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் ஜீவன ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திரதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே யோக பலன்கள் கன்னி லக்கின அன்பர்களுக்கு வெகுவான சிறப்புகளை வழங்கும், குறிப்பாக செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதா அமையும், கமிஷன், தரகு, வியாபாரம் சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை வாரி வழங்கும், கவுரவம் அந்தஸ்து மேலோங்கி நிற்கும், உயர்பதவிகள் செய் தொழில் வெற்றி என ஜாதகரின் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான யோக பலன்கள் தேடி வரும், புதிய முயற்சிகள் யாவும் பலிதம் பெரும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஊடக துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத யோக வாழ்க்கை அமையும், கன்னி லக்கின அன்பர்களின் அறிவு திறன் எதிர்பாராத சுபயோகங்களை சுவீகரிக்க செய்யும் எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து வெற்றிநடை போடும் நேரமிது, சுய தொழில் செய்யசரியானநேரமாக இதை கருதலாம், மேலும் தொழில் வழியிலான முன்னேற்றம் என்பதும் படி படியாக அமையும், அரசியலில் கவுரவ பதவி உண்டு, பொதுமக்கள் ஆதரவு மேலோங்கும், தூர தேச பிரயாணம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை வாரி வழங்கும், தகப்பனார் வழியிலான ஆதரவு தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும், உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் நிச்சயம் உண்டு என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் கன்னி லக்கின அன்பர்கள் மிகுந்த சோதனைகளை எதிர்கொள்ளும் தன்மையை தரும் குறிப்பாக கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே சகல நலன்களையும் தரும், எதிர்ப்புகள் அதிக அளவில் வரும் என்பதுடன், ஜீவன வழியிலான சிரமங்களை அதிக அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது மிகுந்த நன்மையை தரும், தொழில் வழியிலான முன்னேற்ற தடைகள், தாமதங்களை தவிர்க்க இயலாது, கூட்டு தொழில் செய்யும் அன்பர்கள் தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருந்து தொழில் முன்னேற்றத்தை கவனிப்பது அவசியமாகிறது, மனக்கசப்புகளை தவிர்த்து ஜீவன முன்ன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக செயல்படுவது அவசியமாகிறது, தொழில் வழியினாலான பணப்பரிமாற்றம் தங்களுக்கு சில நேரங்களில் வெகுவான இழப்புகளை தரும் என்பதால் கவனமுடன் பணத்தை கையாள்வது அவசியமாகிறது, தங்களின் முன்னேற்றம் தங்களின் முயற்சியில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், முயற்சி இன்மை தங்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்த கூடும் என்பதை மறவாதீர்கள் கன்னி லக்கின அன்பர்களே !

கேது பகவானின் சஞ்சாரம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் அமைவதும், 4ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைவதும் கவனிக்கத்தக்கது, கன்னி லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது உகந்ததது அல்ல, மேலும் தனுசு கோண அதிபதி வீடாக அமைவது 100% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து கடும் நெருக்கடிகளை தரும், சுகபோக விஷயங்களுக்கு வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலை தரும், ஆடம்பர பொருட்கள் சுவீகரிப்பதன் மூலம் வீண் விரையம் ஆகும், பொருளாதார ரீதியான சிக்கல் அதிகரிக்கும், வீடு, நிலம், இடம் சார்ந்த அமைப்புகளில் இருந்து வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் கடும் மனநிம்மதி இழப்பை தரக்கூடும், முன்னேற்ற தடைகள் மூலம் வாழ்க்கையில் அதீத போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும், பெரியவர்கள் ஆதரவு இன்றி தனித்து செயல்படும் சூழ்நிலையை தரும், அனைத்திலும் போராட்டம் என்ற சூழ்நிலையையையும், தோல்வியால் இன்னலுறும் தன்மையையும் தரும், எதிர்ப்புகள் பல விதங்களில் தங்களை பாதிக்கும், நல்ல குணம், பரந்த மனப்பக்குவம் இரண்டையும் மேம்படுத்திக்கொள்வது மிகுந்த சிறப்பை தரும், சுக ஸ்தான வழியில் இருந்து சற்று கடுமையான இன்னல்கள் தங்களுக்கு வந்த போதிலும், நல்ல குணம் கொண்டு அனைத்தையும் வெல்லுங்கள்.

வண்டி வாகனம், சொத்து, வீடு நிலம், இடம் ஆகிவற்றில் இருந்து தங்களுக்கு எதிர்பாராத இழப்புகள் அல்லது சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இழப்புகளை தவிருங்கள், வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த பாதுகாப்புடன் செல்வதே தங்களுக்கு நன்மைபயக்கும், வீண் மருத்துவ செலவினங்களை தவிர்க்கலாம், பெற்ற தாயை பேணி காப்பதும், அவர்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதுமே தங்களுக்கு மிகுந்த நன்மைகளை சுக ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், அருங்குணங்களை சீரமைப்பதும், பொறாமை, கோபம், பதட்டம் போன்றவற்றை  தவிர்ப்பதும் தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், புதிதாக சொத்து வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கும் முன் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு முயற்சிப்பது நன்மை தரும், முடிந்த அளவு பொறுமையை கடைபிடித்து கேது பகவான் சுக ஸ்தான வழியில் இருந்து தரும் இன்னல்களை தவிர்க்க முற்படுங்கள், உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் தடையை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் கடினமான உழைப்பை கையில் எடுத்து வெற்றி பெறுங்கள், எந்த சூழ்நிலையிலும் நல்ல குணத்துடன் ஸ்திரமாக நின்று வெற்றியை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 10,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் கன்னி லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து கன்னி லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

ராகு கேது தரும் சுபயோக பலாபலன்கள் - சுய ஜாதக ஆலோசணை


  சுய ஜாதகங்களில் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகங்களை வலிமை பெற செய்வது என்பது, ஜாதகருக்கு மிகுந்த சிறப்புகளை தரும் அமைப்பாகும், தான் அமர்ந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் ராகு கேது, ஜாதகருக்கு வழங்கும் சுபயோகங்கள் என்பது அளவிடமுடியாதது என்றால் அது மிகையாகாது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே, கீழ்கண்ட ஜாதகருக்கு லக்கினத்தில் கேது, களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்து உள்ளது என்பது மேலோட்டமாக பார்க்கும் பொழுது நமக்கு தெரியவரும், ஆனால் ஜாதகருக்கு ராகு கேது கும்பத்தில் உள்ள 6ம் பாவகத்தில் ராகு பகவானும், சிம்மத்தில் உள்ள 12ம் பாவகத்தில் கேது பகவானும் அமர்ந்து இருப்பதே சரியான அமைப்பு, எனவே ஜாதகருக்கு சத்ரு ஸ்தானத்தில் ராகு பகவானும், விரையஸ்தானத்தில் கேது பகவானும் வலிமை பெற்று அமர்ந்திருப்பது ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.


லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

ராகு கேது மேற்கண்ட ஜாதகருக்கு சத்ரு மற்றும் விறை ஸ்தானத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது எந்த விதத்தில் ஜாதகருக்கு நன்மையை தரும் என்ற கேள்வி எழுவது இயற்கையே, பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களுக்கும் நன்மை தீமையை செய்யும் வல்லமை உண்டு, உதாரணமாக சுய ஜாதகத்தில் லக்கினம் ஒரு ஜாதகருக்கு பாதக ஸ்தான தொடர்பை பெற்று இருப்பின், ஜாதகரின் வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையாது, கல்வியில் தடை, வேலை வாய்ப்பில் தடை, உடல் பாதிப்பு மற்றும் ஜாதகர் தன்னை தானே பாதிப்பிற்கு ஆளாக்கி கொள்ளும் நிலை என்ற வகையில் இன்னல்களை தரும், அதை போன்றே சுய ஜாதகத்தில் சத்ரு ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 6ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் ஜாதகர் தான் நினைக்கும் காரியங்கள் யாவினையும் வெற்றிகரமாக நடத்தும் வல்லமையை பெற்றவராகவும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்வார், மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்த ராகு பகவான் ஜாதகருக்கு பாவக தொடர்பு வழியில் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருகின்றார்.

எனவே ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து ஜீவன மேன்மையை பெறுவார், இது ஜாதகருக்கு பதவியில் வெற்றி வாய்ப்பு, உத்தியோகம் செய்வதில் சீரிய ஆர்வம், திடீர் பதவி உயர்வு, அதிகாரிகளிடம் நற்பெயர், சுய முயற்சியில் வாழ்க்கையில் வெற்றி பெரும் தன்மை என ஜாதகரை மிக சிறப்பு மிக்கவராக பிரகாசிக்க செய்யும், ஜாதகரின் சத்ரு ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10,11ம் வீடாகவும், சர மண் ஸ்திர காற்று ராசியில் வியாபித்து நிற்பது ஜாதகருக்கு தொழில் வழியிலான முன்னேற்றம் மற்றும் அதீத லாபங்களை வாரி வழங்கும், ஜாதகரின் முன்னேற்றம் என்பது ஜாதகரின் மன இயல்பின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக அமையும், சத்ரு ஸ்தானம் என்றவுடன் ஜாதகருக்கு அது இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்தாகும், சத்ரு ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஓர் ஜாதகருக்கு நல்ல உடல் நிலை மற்றும் சிறந்த ஆரோக்கியத்தை வாரி வழங்கும், ஜாதகருக்கு வரும் உடல் ரீதியான பாதிப்பில் இருந்து வெகு விரைவில் மீண்டு வரும் யோகத்தை நல்குவதுடன், தனது வாழ்க்கை துணையை தனது வாழ்நாள் முழுவதும் மிகுந்த பாசமுடன் வைத்திருக்கும் குணத்தை தரும் என்பது சிறப்பு விஷயமாகும்.

12ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடகத்தில் ஆரம்பித்து, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மத்தில் 12 பாகை வரை வியாபித்தது நிற்கிறது, சிம்மத்தில் 12ம் பாவகத்திற்கு உற்ப்பட்ட இடத்தில் கேது அமர்ந்து இருப்பது, ஜாதகருக்கு மிகுந்த அயன சயன சுகத்தை தரும், ( பனிரெண்டில் கேது அமர்வது பிறப்பில்லா நிலையை தரும் என்பதற்கு இந்த ஜாதகம் நல்ல உதாரணம் ) கேது பனிரெண்டில் வலிமை பெற்று அமர்ந்து இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு மோட்ஷ வாழ்க்கை நல்கும், வலிமை அற்று அமர்ந்து இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையை கேள்விக்குறியாகிவிடும், மேற்கண்ட ஜாதகருக்கு 12ல் வலிமை பெற்று அமர்ந்த கேது ஜாதகருக்கு பாவக வழியில் ஜீவன ஸ்தானத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, எதிரிகள் செய்யும் சூழ்ச்சியே மிகுந்த பேரதிர்ஷ்டத்தை வாரி வழங்கிவிடும், தான் செய்யும் பணியில் எதிர்பாராத பதவி உயர்வு, வருமான உயர்வு என்ற அமைப்பில் சிறப்பை தரும் , சுய தொழில் செய்ப்பவர் எனில் ஜாதகருக்கு தொழில் துறையிலான அதிர்ஷ்டம் என்பது ஓர் அளவில்லாமல் அமையும், ஜாதகர் செய்யும் தொழில் முதலீடுகள் மிக பெரிய லாபத்தை வாரி வழங்கும்.

இல்லற வாழ்க்கையில் நல்ல அயன சயன சுக போகத்தை வாரி வழங்குவதுடன், ஜாதகரின் வாழ்க்கையில் நிறைவான சொத்து சுக சேர்க்கைகள் உண்டாகும், அதீத கற்பனைகள் கூட ஜாதகருக்கு நடைமுறைக்கு  வரும் என்பது சாயா கிரகங்கள் செய்யும் மாயாஜாலமாகும், சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமையுடன் அமர்ந்து இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் வாழ்க்கையில் மிரளத்தக்க அதிசயங்கள் நடைபெறும் என்பது மட்டும் உண்மை.

குறிப்பு :

 ராகுகேது சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்து இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்ட  பாவகத்தை வலிமை பெற செய்கிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, ஒருவேளை தான் அமர்ந்த பாவகத்தை ராகு கேது வலிமை பெற செய்யவில்லை எனில், ஜாதகருக்கு அமர்ந்த பாவக வழியில் இருந்து வரும் இன்னல்கள் என்பது தாங்க இயலாத வகையில் அமையும் என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 21 நவம்பர், 2017

ராகுகேது தோஷம் தரும் பாதிப்புகள் என்ன ? 1ல் அமர்ந்த கேதுவும், 7ல் அமர்ந்த ராகுவும் ஜாதகருக்கு தரும் பலாபலன்கள் என்ன ?


 ராகுகேது எனும் சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் 1,2,5,6,7,8,12 வீடுகளில் ஜெனன ஜாதகத்தில் அமர்ந்து இருப்பது  ராகுகேது தோஷமாகவும், சர்ப்ப தோஷமாகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது, இந்த நிலையை சுய ஜாதகத்தில் பெற்ற அன்பர்கள் சாயாகிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்களால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகும் தன்மையை தரும் என்றும், கல்வி,தொழில்,திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தில் தடைகளையும், தாமதங்களையும் ஏற்படுத்தும் என்றும், இதனால் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகும் என்ற கருத்து ஸ்திரமாக இருக்கின்றது, சுய ஜாதகத்தில் சாயாகிரகங்கள் மேற்கண்ட வீடுகளில் அமர்ந்திருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தோஷத்தை தரும் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்தாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, மேற்கண்ட வீடுகளில் அமர்ந்திருக்கும் ராகு கேது இன்னல்களை மட்டுமே சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவதும் தவறான கருத்தே என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் எந்த ஓர் பாவகத்தில் ராகுகேது அமர்ந்தாலும், தான் அமர்ந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் வல்லமை, சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு நிச்சயம் உண்டு, தான் அமர்ந்த பாவகத்தில் சேர்ந்த மற்ற கிரகங்களின் பலாபலன்களை தானே சுவீகரித்து ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை வழங்கும் வல்லமையும் சாயாகிரகங்களுக்கு பரிபூர்ணமாக உண்டு, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : ஸ்வாதி 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு ஜெனன ஜாதகத்தில் லக்கினத்தில் கேதுவும், ஏழாம் பாவகத்தில் ராகுவும் அமர்ந்து இருப்பதை கருத்தில் கொண்டு ஜாதகருக்கு சர்ப்பதோஷம் என்று முடிவு செய்வது மிகவும் தவறான அணுகுமுறையாகும், ராகு கேது உண்மையில் அமர்ந்த பாவகம் எது ? என்பதில் முதலில் தெளிவு வேண்டும், ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் கும்ப ராசியில் 325:47:55 பாகையில் ஆரம்பித்து, மேஷ ராசியில் 000:32:21 பாகையில் முடிவடைகிறது, கேது அமர்ந்திருப்பது கும்ப ராசியில் உள்ள 316:55:40 பாகையில் என்பதனால் ஜாதகருக்கு கேது கும்ப ராசியில் உள்ள 12ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே சரியானது, அதை போன்றே நேரெதிராக சிம்மத்தில் அமர்ந்திருக்கும் ராகுவும் சிம்மத்தில் உள்ள 6ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே சரியான ஜாதக கணிதமாகும், எனவே மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் மற்றும் 7ல் கேது ராகு அமர்ந்த தோற்றத்தை தந்தாலும் பாவக கணித முறைப்படி 12ம் பாவகம் மற்றும் 6ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதே முற்றிலும் சரியானதாகும்.

பாவங்கள் முறையே 6,12ல் அமர்ந்த சாயா கிரகங்களான ராகுகேது ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்கள் என்ன ? என்பதே அடுத்த கேள்வி சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு முறையே 6,12ல் அமர்ந்த ராகுகேது முழு வலிமை பெற்று சுபத்துவத்தை பெற்று இருப்பதால் ஜாதகர் 6,12ம் பாவக வழியில் இருந்து 100% சதவிகித நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவார் என்பதே மிக சரியான ஜோதிட கணிதமாகும்.

ஜாதகருக்கு 6ல் வலிமை பெற்ற ராகு அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும், எதிரிகள் வழியில் இருந்து நன்மைகளையும், மருத்துவ உபகரணம் மருந்துகள் மூலம் அபரிவிதமான லாபங்களை பெற்று தருவார், ஜாதகரின் உடல் வலிமை மற்றும் மனவலிமை அதிகரிக்கும், சிம்மத்தில் உள்ள 6ல் அமர்ந்த ராகு ஜாதகரின் ஆன்மீக வெற்றியை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து செல்லும், யோக கலையிலும் சாஸ்த்திரம் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கும் தன்மையை தருவது ஜாதகருக்கு கிடைத்த ஆசிர்வாதம் ஆகும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருப்பது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகுவின் சிறப்பு அம்சத்தாலே என்றால் அது மிகையில்லை, ஜாதகரின் வாக்கு வன்மையும், அதிகார வல்லமையும் சிறப்பான நிர்வாக திறமையும் பெருவாரியான வெற்றிகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், 6ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு குறுகிய கால வெற்றி வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கிக்கொண்டு இருப்பதும், ஸ்திர நெருப்பு தத்துவ அமைப்பில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகளும் மிகவும் அபரிவிதமானதாக இருப்பதை ஜாதகர் தனது சிறு வயதில் இருந்தே பரிபூர்ணமாக உணர்ந்துகொண்டு இருக்கின்றார், மேலும் ஜாதகரின் வெற்றிகொள்ளும் திறன் அதிகரித்து இருப்பதற்கும் அடிப்படை காரணமாக அமைவது ஜெனன காலத்தில் 6ம் பாவகத்தில் நின்ற ராகு பகவானே என்றால் அது மிகையில்லை.

ஜாதகருக்கு 12ல் வலிமை பெற்ற கேது பகவான், நல்ல மனநிம்மதியை தனது அறிவார்ந்த செயல்கள் மூலம் பரிபூர்ணமாக பெறுவதை உறுதிப்படுத்துகிறது, அயனசயன ஸ்தானத்தில் அமர்ந்த கேது ஜாதகருக்கு நல்ல ஆன்மீகவாதிகளின் ஆசீர்வாதத்தையும், தெய்வீகம் நிறைந்த பல திருத்தல தரிசனங்களையும் சிறப்பாக வழங்கியுள்ளது, நல்ல உறக்கம் ஜாதகரின் உடல் நலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது, தெளிவான சிந்தனையுடன் ஜாதகர் எடுக்கும் முடிவுகள் பரிபூர்ண வெற்றிகளை வாரி வழங்குகிறது, யோக வாழ்க்கையில் நல்ல ஞானத்தை பெற ஜாதகருக்கு கும்பத்தில் அமர்ந்த கேது வாரி வழங்குகிறார், ஜாதகரின் எண்ணம் மற்றும் லட்சியம் நிறைவேற முழுவீச்சில் உதவி புரிவது ஜாதகத்தில் 12ல் அமர்ந்த கேது பகவானே என்றால் அது மிகையில்லை, ராகுகேது இரண்டு சாயா கிரகங்களும் ஸ்திர ராசியான சிம்மம் மற்றும் கும்ப ராசியில் அமர்ந்திருப்பது, ஸ்திரமான பலாபலன்களை ஜாதகருக்கு வழங்க தவறுவதில்லை, அயன சயன ஸ்தானம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமான 11ம் வீடாக அமைவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தை 12ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், முதலீடுகளில் இருந்து ஜாதகருக்கு வரும் வருமானம் ஜாதகரின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்கிறது, ஜாதகரின் மனநிம்மதி, தெளிவான சிந்தனை, போதும் என்ற மனது திருப்திகரமான யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறது.

மேற்கண்ட ஜாதகரின் வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கு அடிப்படை காரணகர்த்தாவாக விளங்குவதே சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமர்ந்திருக்கும் சாயா கிரகங்களான ராகு கேது பகவானே என்றால் அது மிகையில்லை அன்பர்களே, சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் ராகு கேது அமர்ந்தாலும் தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்யும் நிலையில் ராகுகேது இருப்பின் நிச்சயம் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவார், மாறாக சுய ஜாதகத்தில் வலிமை அற்று அமர்ந்து இருக்கும் ( எந்த பாவகம் என்றாலும் சரி ) ராகு கேது ஜாதகருக்கு அவயோக பலாபலன்களை வாரி வழங்க தவறுவதில்லை என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில்  1,2,5,6,7,8,12 வீடுகளில் ஜெனன ஜாதகத்தில் அமர்ந்து இருப்பது மட்டுமே தோஷத்தை தாராது, லக்கினம் முதல் 12 பாவகத்தில் அமர்ந்து இருக்கும் ராகுகேது தான் அமர்ந்த பாவக வழியில் வலிமை பெற்று இருப்பின் சுபயோக பலாபலன்களையும், வலிமை அற்று இருப்பின் தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து அவயோக பலாபலன்களை தரும் என்பதை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வதே சரியான ஜோதிட கணித முறையாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696