நாக தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாக தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 ஜூலை, 2017

5ல் நின்ற ராகு தரும் யோக வாழ்க்கை, 11ல் நின்ற கேது தரும் அதிர்ஷ்டங்கள் !



கேள்வி :

5ல் ராகு அமர்வது ஜாதகருக்கு பேர் சொல்ல பிள்ளை இல்லை ( ஆண்  வாரிசு இல்லை ) என்பது உண்மையா ?

பதில் :

 இது முற்றிலும் தவறான கருத்து மேலும் ஜோதிடகணிதம் பற்றிய தெளிவு இல்லாமல் கூறும் பலனாகவும் சுய ஜாதக வலிமையை பற்றிய ஓர் தெளிவு இல்லாமல் கூறும் பொது கருத்தாகவே உள்ளது, 5ல் அமரும் ராகு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்திற்கு தரும் வலிமையை பற்றிய தெளிவில்லாமல் கூறப்படும் விஷயமாகவே கருத வேண்டியுள்ளது, 5ல் ராகு அமர்ந்து தான் அமர்ந்த பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கடுமையாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால் மட்டுமே மேற்கண்ட தங்களின் கேள்விக்கு பொருத்தமானதாக அமையும், ஒருவேளை அப்படிப்பட்ட நிலை இருப்பின் அதற்க்கு சரியான தீர்வு உண்டு என்பதால் அதைபற்றிய கவலை தேவையில்லை, மேலும் சுய ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்தாலே ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லை, ஆண் வாரிசு இல்லை என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதில் மாற்று கருத்து இல்லை, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகு கேது ஜாதகருக்கு தரும் யோக வாழ்க்கை பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் மேலும் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படும்  5ம் பாவகமான மீனத்தில் ராகு அமர்ந்து இருக்கின்றார், அதற்க்கு சம சப்தமாக லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் என்று அழைக்கப்படும் 11ம் பாவகமான கன்னியில் கேது அமர்ந்து இருக்கின்றார், சாய கிரகங்களான ராகு கேது மேற்கண்ட ஜாதகருக்கு  தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து வலிமை பெற்று யோகத்தை தருகின்றனரா ? அல்லது தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து வலிமை அற்று
அவயோகத்தை தருகின்றனரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதை தெளிவர அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட பாவகங்களின் அதிபதி ( பாரம்பரிய முறைபடி ) யார் என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது, 5 ம் பாவகத்திற்கு முழு முதற் சுப கிரகமாகவும் ( கோணஅதிபதி ) "பிரகஸ்பதி" என்று ஜோதிட சாஸ்திரத்தால் போற்றபடும் "குருபகவான்" பொறுப்பு ஏற்கிறார், 11ம் பாவகத்திற்க்கு ( கோண அதிபதி )  "வித்யாகாரகன்" என்று போற்றப்படும் புதபகவான் " பொறுப்பு ஏற்கிறார், இதில் பூர்வ புண்ணிய ஸ்தானம் கோண வீடாகவும், லாப ஸ்தானம் சம வீடாகவும் அமைவது  அங்கு அமரும் சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு சுப துவத்தை தந்து, சம்பந்தப்பட்ட 5,11ம் பாவகங்களுக்கு 100% விகித வலிமையை பெற்று தருகின்றது.

 இதன் காரணமாக சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமும், அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகமும் முழு வலிமை பெற்று ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும் அமைப்பை பெறுகின்றது. சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே புத்திர ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்தில் அமர்ந்த போதிலும், ஜாதகருக்கு புத்திர தடையை தாராமல் நல்ல யோகம் மிக்க புத்திர பாக்கியத்தை நல்கி இருக்கின்றது, யோகம் மிக்க ஓர் ஆண் வாரிசும், அதிர்ஷ்டமிக்க 2 பெண் குழந்தைகளும் ஜாதகருக்கு இறைஅருள் வாரி வழங்கி இருப்பது நடைமுறை உண்மை ஆகும், மேலும் இதுவே சுய ஜாதக வலிமை ஆகும், சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் சாயா கிரகங்களால் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது குழந்தைகளால் அதிர்ஷ்டம் மற்றும் சுபயோகங்களை 100% விகிதம் பெறுவார் என்பதற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம், ஜாதகருக்கு வாரிசு அமைந்தவுடன் ஜாதகர் பெற்ற முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானது, மேலும் ஜாதகருக்கு நடைபெற்ற திசாபுத்திகள் சாதகமாக அமைந்தது ஜாதகரின் சுபயோக வாழ்க்கையை உறுதி செய்தது.

 பொதுவாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெற்று தான் அமர்ந்த பாவகத்தை முழு அளவில் வலிமை பெற செய்வது முன் ஜென்ம கர்மவிணை பதிவினை இறைஅருளின் துணையுடன் கழித்துகொள்ளவும், பிறப்பில்லா யோக வாழ்க்கையை பெற்று ஜீவன் முக்தி பெறவும் சிறந்த வழிகாட்டுதல்களை வாரி வழங்கும், சிலருக்கு இளமையில் இன்னல்களையும், மத்திம வயதில் மிகுந்த யோக வாழ்க்கையையும், இறுதியில் மோட்சத்தையும் நல்கும் வல்லமை பெற்றது, இது அவரவர் சுய ஜாதக பாவக வலிமைக்கு ஏற்ப மாறுபடும், மேலும் தாம் அமர்ந்த பாவக வலிமைக்கு ஏற்ப யோக பலாபலன்களை ஸ்திரமாக வாரி வழங்கும், எது எப்படி இருப்பினும் சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்றவர்கள் "வாழ்ந்து கெட்டவர்கள் " அல்ல, கெட்டபின்பு வாழ்ந்து காட்டுபவர்கள் என்பதை மறுப்பதற்க்கு இல்லை.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி, அமர்ந்த பாவகத்திற்கு  தரும் வலிமை நிலையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே சால சிறந்தது, இதை தவிர்த்து 1,2,5,6,7,8,12ல் அமர்வது தோஷம் என்று முடிவு செய்வது சுய ஜாதக உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்பதை மனதில்  நிறுத்துவது அனைத்திற்கும் நன்மை பயக்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 7 ஜனவரி, 2015

சாய கிரகமான ராகு கேது சுய ஜாதகத்தில் வழங்கும் தனிப்பட்ட பலாபலன்கள்!




ராகு கேதுவாக கிரக அந்தஸ்து பெற்ற சுவர்ணபானு பிறப்பில் அரக்க  குலத்தை சார்ந்தவராக இருந்த போதிலும், தனது அறிவு திறனாலும், மாறுபட்ட சிந்தனையாலும் தேவர்களுக்கு மட்டும் கிடைக்க இருந்த அமுதத்தை அருந்தி, தெய்வ நிந்தனைக்கு ஆளாகி, விடா முயற்ச்சியாக இறை அருளின் கருணையை பெற்று, எவருடனும் ஒப்பிட முடியாத வல்லமையை பெற்று "ராகு கேது" கிரகமாக அந்தஸ்த்து பெரும் அமைப்பை பெற்றனர், மேலும் ஜாதக அமைப்பில் சாயகிரகங்கள் என்று வழங்கப்பட்டும், மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனிப்பட்ட செயல்பாடுகளையும், வலிமையையும் பெரும் தன்மையை பெறுகின்றனர் இந்த நிழல் கிரகங்கள் என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் வலிமை அல்லது வலிமை அற்ற தன்மையில் இருந்தாலும் , சம்பந்தபட்ட ஜாதகருக்கு வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்கு உண்டான வழிகாட்டுதலை சிறப்பாக எடுத்து சொல்லும் ஆற்றல் ராகுகேதுவுக்கு நிச்சயம் உண்டு, நல்ல நிலையில் உள்ள ஜாதகர் எவ்வளவு விரைவில் யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தருகிறார்களே, அதே அமைப்பை பாதிக்க பட்ட ஜாதகத்துக்கும் தங்கு தடையின்றி ராகு கேது வாரி வழங்கும், இருப்பினும் ஜாதகர் குறிப்பிட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உண்டான சரியான வாய்ப்பை நிச்சயம் தருகின்றனர்.

ராகு கேது கிரகங்களால் பாதிக்க படும் அன்பர்கள்! நிச்சயம் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உண்டான வழிமுறையை இறை அருளின் கருணையினால் நிச்சயம் பெறுவார்கள், சில அன்பர்களின் விடா முயர்ச்சியும், மாறுப்பட்ட அறிவு திறனும் சிறப்பாக செயல்பட இந்த அமைப்பே காரணம், எவ்வித துன்பத்தையும் எதிர்கொள்ளும் வல்லமையை சாயகிரகங்கள் வாரி வழங்கிவிடுவார்கள், உடல் ரீதியாக வரும் இன்னல்களை ராகுவும், மன ரீதியாக வரும் இன்னல்களை கேதுவும் சிறப்பாக எதிர்கொண்டு ஜாதகரை வாழ்க்கையில் சிறப்பான யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை 100% விகிதம் வழங்கிவிடுவது கவனிக்க தக்க விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

உடல் ரீதியாக வரும் பொழுது ராகு பகவான் ஜாதகரை மிகுந்த அளவில் உடல் பலத்தையும், வலிதாங்கும் உடல் அமைப்பையும், எந்த ஒரு சூழ்நிலையையும், சீதோஷ்ண நிலையையும் தாங்கும் வலிமையை தருகிறார், இறுதி வரை போராடும் உடல் வலிமையையும், எளிதில் வெற்றிகொள்ளும் சூட்சம விஷயங்களையும், உடனுக்கு உடன் பரிசோதனை செய்துகொள்ளும் வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் அமைத்து கொடுப்பது ராகு பகவானின் தன்மையே, மேலும் ஜாதகர் ஆய்வு நோக்கத்திலோ, புதிய கண்டுபிடிப்பு  நோக்கத்திலோ செய்யும் விஷயங்கள் 100% விகித வெற்றி வாய்ப்பை தருவதற்கு உண்டான சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்துவதும், ராகு பகவானே என்றால், அது மிகையில்லை, ஒரு ஜாதகர் போராடி வாழ்க்கையில் வெற்றி பெறுவது ராகுவின் கருணையினாலே.

மன ரீதியாக வரும் பொழுது கேது பகவான் ஜாதகருக்கு புலனுக்கு எட்டாத அறிவு சார்ந்த விஷயங்களை மிக எளிதாக உணரும் வண்ணம் வழிவகை செய்கிறார், சூட்சம அறிவு திறன் பிரபஞ்ச ரகசியம், தன்னிலை உணரும் ஆற்றல், தவ வலிமையின் மூலம் பல அறிய சாதனைகளை செய்யும் தன்மை, பின் வருவதை முன் உணரும் ஆற்றல், எடுத்த காரியத்தை சரியான திட்டமிடுதலுடன் சிறப்பாக நடத்தும் தன்மையை தருவது கேது பகவானே, பல மனிதர்களின் திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வாராமல், வெறும் திட்டத்துடனும் கற்பனையாகவும் நின்று விடுவதற்கு காரணகர்த்த கேது பகவானே என்றால் அது மிகையில்லை, அறிவு திறனையும் அது சார்ந்த மன ஆற்றலையும் பன்மடங்கு வலிமை சேர்க்கும் தன்மை பெற்றவர் கேது பகவான் என்றால் அது மிகையில்லை, ஜாதகரை மிக எளிமையாக வாழ்க்கையில் வெற்றி பெற செய்யும் தனித்துவமான ஆற்றல் கேது பகவானுக்கே நிச்சயம் உண்டு.

பொதுவாக ராகுகேது ஜாதகம், சர்ப்பதோஷம், நாக தோஷம், காலசர்ப்ப தோஷம் என்ற வார்த்தை விளையாடல்களை நம்பி, தங்களின் சுய ஜாதகத்தில் ராகு கேதுவின் வலிமையை உணராமல் வாழ்க்கையின் சிறப்பு முன்னேற்றங்களை தவறவிடாதீர்கள் அன்பர்களே! தாங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒருவகையில் நன்மையை தர சாயாகிரகங்கள் தயார் நிலையிலேயே உள்ளனர் என்பதை மறவாதீர்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696