சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 10 பிப்ரவரி, 2024
சனி, 23 பிப்ரவரி, 2019
தொழில், திருமண யோகம் சுய ஜாதக ரீதியான ஆய்வு !
சுய ஜாதக பலாபலன்கள்
" அவனின்றி ஓர் அணுவும் அசையாது " என்பதற்கிணங்க சுய ஜாதக வலிமை இன்றி யாதொரு நிகழ்வுகளும் நிகழ வாய்ப்பில்லை என்பதே உண்மை நிலை, பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டே யாவருக்கும் நன்மை தீமைகளோ, யோக அவயோகங்களோ நடைமுறைக்கு வருகின்றது, கீழ்கண்ட உதாரண ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை என்ன ? அது தரும் யோக அவயோகம் என்ன ? நவ கிரகங்கள் தனது திசாபுத்திகளில் தரும் பலாபலன்கள் என்ன என்பதனை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
லக்கினம் : மகரம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : ரேவதி 4ம் பாதம்
ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :
1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதகத்தில் மிகவும் சிறப்பான அம்சமாகும், 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெற்றி புகழ், கீர்த்தி, சுய முன்னேற்றம், தெளிந்த நல்லறிவு, எதிர்ப்புக்களை களைந்து நலம் பெரும் தன்மை, முற்போக்கு சிந்தனை, நல்ல நண்பர்கள், பொதுமக்கள் ஆதரவு, சிறந்த கூட்டாளிகள், எதிர்பாராத முன்னேற்றம், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை, எதிர்பாலின சேர்க்கை வழியில் ஜாதகர் பெரும் முன்னேற்றம், தெய்வீக சிந்தனை, சமயோசித அறிவு திறன், உடல்நல குறைவில் இருந்து விரைவாக குணம் பெரும் யோகம், யோக உடற்பயிற்சியில் ஆர்வம், புதிய சிந்தனை, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் ஆதாயம், நட்பு வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் மற்றும் முன்னேற்றம் வெகு சிறப்பாக அமையும், பொதுமக்கள் சார்ந்த தொழில், வியாபாரம் அல்லது சேவைகள் மூலம் ஜாதகருக்கு அபரிவிதமான நன்மைகள் வந்து சேரும், வியாபார விருத்தி சிறப்பாக அமையும், ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல ஞானம் உண்டாகும் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.
7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த கூட்டாளிகள், சிறப்பான வெளிவட்டார பழக்க வழக்கங்கள், வியாபார முன்னேற்றம், சிறந்த தொழில் ஞானம், பல தொழில் புரியும் யோகம், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக மாறும் தன்மை, எண்ணத்தின் வழியில் சிறப்பான யோக வாழ்க்கையை பெரும் நிலை, தெய்வீக சிந்தனை, ஆன்மீகத்தில் ஈடுபாடு, வண்டி வாகன யோகம், கூட்டு தொழில் வழியிலான முன்னேற்றம், வெளிநாடு யோகம், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் ஆதரவு, அந்நியர் மூலம் ஆதாயம், வலிமை மிக்க கூட்டாளி, யோகமிக்க வாழ்க்கை துணை, வியாபார ரீதியான அபரிவித வளர்ச்சி, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் ஆதாயம், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தன்மை, கூட்டு முயற்சியின் மூலம் அபரிவித லாபம் என வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும்.
2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றம், எழுத்து வழியில் லாபம், பத்திரிகை துறையில் முன்னேற்றம், இனிமையான பேச்சு திறன், பயணங்கள் வழியிலான லாபம், வெளிநாட்டார் மூலம் முன்னேற்றம், ஆராய்ச்சி மனப்பான்மை, ஆன்மீகத்தில் தெளிவு, அரசியல் ஆளுமை, சாஸ்த்திரம், மருத்துவம் மற்றும் ஜோதிடத்தில் தேர்ச்சி, செயற்கரிய காரியங்களை சரியான திட்டமிடுதல்களுடன் செய்யும் வல்லமை, புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிகொள்ளும் தன்மை, வாக்கு வன்மை, எதிலும் தெளிவு என்ற வகையில் நன்மைகளை தரும்.
6ம் பாவக வழியில் இருந்து மருத்துவ துறையில் நல்ல ஞானம், பயணம் மூலம் லாபம் மற்றும் அதிர்ஷ்டம், வருமுன் உணரும் சக்தி, முன்னோர் செய்த புண்ணியத்தின் பலனை சுவீகரிக்கும் தன்மை, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம், கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விரைவாக வெளியேறும் தன்மை, மற்றவர் பணம் கையிருப்பு, போட்டி பந்தயங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, எதிர்ப்புகளை சமாளிக்கும் வல்லமை என சிறப்பான நன்மைகளை சத்ரு ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும்.
9ம் பாவக வழியில் இருந்து நல்ல கல்வி ஞானம், சிறந்த அறிவாளி, ஆய்வு கல்வியில் தேர்ச்சி, பயணங்கள் மூலம் நல்ல லாபம், சாஸ்திரத்தில் தேர்ச்சி, எதிர்பாராத முன்னேற்றம், பெரிய மனிதர்கள் ஆதரவு, பல தொழில் வழியிலான வருமான வாய்ப்பு, மண் தத்துவம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம், தெய்வீக ஞானம், சூழ்ந்தநிலை மற்றும் இடமாற்றத்தில் விருப்பம், அனைவரிடமும் நற்ப்பெயர் பெரும் தன்மை, அனைவரையும் அனுசரித்து செல்லும் மனப்பக்குவம், எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக வாழும் தன்மையை தரும், பாதிப்புகள் தானாக விலகும்.
சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :
3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும், குறிப்பாக 3ம் பாவக வழியில் இருந்து முயற்சிக்கும் காரியங்களில் தொய்வு, சகோதர வழி ஆதரவு இன்மை, செயல்பாடுகளில் வீரியமின்மை, தோல்வியால் துவண்டு போகும் தன்மை, சரியான விஷயங்களை கிரகிக்க இயலாத நிலை, தன்னம்பிக்கை பாதிக்கும், சுய முன்னேற்றம் தடை படும், உறவுகள் வழியிலான இன்னல்கள், எதையும் விரைவாக பெற இயலாமல் தடுமாறும் நிலையை உருவாக்கும்.
5ம் பாவக வழியில் இருந்து பூர்வீகத்தில் ஜீவனம் மேற்கொள்வதால் வரும் தொந்தரவுகள், சமயோசித அறிவு திறனில் பாதிப்பு, நுண்ணறிவு தன்மையில் குறைபாடு, ஆழ்ந்து சிந்திக்கும் வல்லமை அற்ற நிலை, குல தெய்வ சாபம், முன்னேற்ற தடைகள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சும் நிலை, சரியான முடிவுகளை எடுக்க இயலாமல் தடுமாறும் தன்மை, சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இன்னலுறும் நிலை, சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாமல் போராட்ட வாழ்க்கையை சுவீகரிக்கும் தன்மை என ஜாதகருக்கு அதீத துன்பங்களை தருவதுடன், முதலில் பெண் வாரிசை தரும்.
11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தின் தன்மை வெகுவாக குறையும், சுய உழைப்பு மட்டுமே ஜாதகருக்கான வாழ்க்கையினை உறுதி செய்யும், முற்போக்கு சிந்தனை குறைந்து பழமை வாதங்களில் ஆர்வம் அதிகரிக்கும், மனம் வெகுவாக பாதிக்கும், குழப்பமும் சந்தேக எண்ணங்களும் ஜாதகரின் வாழ்க்கையில் அதீத இன்னல்களை தரும், சில நேரங்களில் ஜாதகர் மேற்கொள்ளும் முடிவுகள் யாவும் பேரிழப்பை தரக்கூடும் என்பதை கருத்தில் நலம் பெறுவது அவசியமாகிறது.
8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது, 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, மருத்துவ செலவினங்கள், எதிர்பாராத மருத்துவ செலவுகள், அனைத்திலும் ஏமாற்றம், மனக்குழப்பம்,தலைவலி சார்ந்த இன்னல்கள், உடல் நல குறைபாடுகள், அதீத மனப்போராட்டம், அனைவராலும் ஏமாற்றம், அறுவை சிகிச்சை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார இழப்புகள், முன்னேற்ற தடை என்ற வகையில் இன்னல்களை தரும்.
10ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாட்டில் வேலை அல்லது தொழில் அமையும் தன்மை, போதிய வருமானம் இன்மை, அடிக்கடி இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம், வரவைவிட செலவு அதிகம், முரண்பட்ட கருத்துக்கள் மூலம் தொழில் அமைப்பில் சிக்கல்கள், கவுரவ குறை ஏற்படும் நிலை, நிலையற்ற தொழில், செய்யும் தொழிலில் அதிக போராட்டங்களை சந்திக்கும் நிலை, தனித்து செயல்படும் காரியங்களில் தொடர்ந்து இன்னல்களை சந்திக்கும் நிலை என்ற வகையில் துன்பங்களை தரக்கூடும்.
12ம் பாவக வழியில் இருந்து நிறைய செலவினங்கள், பங்கு சந்தை லாட்டரி தொழில் வழியில் இழப்புகள், சூது மூலம் பெரும்நஷ்டம், திருப்தி இல்லா வாழ்க்கை, அனைவராலும் நஷ்டம், விபத்து அதீத துன்பங்களை சந்திக்கும் நிலை, போதிய விழிப்புணர்வு அற்ற தன்மை, எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் தொல்லைகள் என்ற வகையில் இன்னல்களை தரும்.
நடைபெறும் சூரியன் திசை தரும் பலன்கள் : ( 05/12/2018 முதல் 04/12/2024 வரை)
ஜாதகருக்கு நடைபெறும் சூரியன் திசை 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று வலிமையான யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கையில் சிறப்பு, கைநிறைவான வருமானம், இனிமையான இல்லற வாழ்க்கை, வாக்கு வன்மை மூலம் சகல சௌபாக்கியம் என்ற வகையில் யோக வாழ்க்கையை தரும், மேலும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம், சத்ரு வழியில் ஆதாயம், மருத்துவ துறையில் சீரிய முன்னேற்றம், தெய்வீக அனுக்கிரகம், ஆன்மீக பெரியோர்கள் வழியில் வாழ்க்கையில் வெகு சிறப்பு, தனது சுய அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் தன்மை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.
அடுத்து வரும் சந்திரன் திசையும் ஜாதகருக்கு மேற்கண்ட 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று வலிமையான யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, எனவே எதிர் வரும் சந்திரன் திசையும் ஜாதகருக்கு மிகுந்த சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை வாழ்த்துக்கள்.
குறிப்பு :
சுய ஜாதக பலன் காண மூன்று விதி முறைகளை கையாள்வது அவசியமாகிறது, 1) சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையை பற்றி தெளிவாக உணர்வது, 2) நடைபெறும் திசைபுத்திகள் 12 பாவகங்களில் எந்த பாவக தொடர்பை பெற்று பலனை தருகிறது என்பதை பற்றி தெளிவாக உணர்வது, 3) திசை புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை வலிமை இன்மையை பற்றிய தெளிவு பெறுவது ஆகியவை சுய ஜாதக பலாபலன் துல்லியமாக கண்டுணர வாய்ப்பை வழங்கும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ஞாயிறு, 17 ஜூன், 2018
ராகு மஹா திசை தரும் இன்னல்களும், திருமணம் தொழில் சார்ந்த தடைகளும் !
சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோகங்களை நல்கும் அமைப்பாகும், மேலும் சாயா கிரகங்கள் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கும், மாறாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமையற்று அமர்வதும், வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் கடுமையான இன்னல்களை ஜாதகருக்கு பாரபட்சம் பார்க்காமல் வாரி வழங்கிவிடும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !
லக்கினம் : மேஷம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்
ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 4ல் அமர்ந்த ராகு வளர்பிறை சந்திரன் என்பதால் தான் அமர்ந்த பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்குகிறார், பாவக தொடர்பு வழியில் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற போதிலும், தனது வீட்டிற்கு சத்ரு ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், சுக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் யாதொரு நன்மையையும் பெற இயலாத சூழ்நிலையை தற்போழுது வரை பலாபலனாக வழங்கிக்கொண்டு இருக்கின்றது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடகத்திலேயே, ஜாதகருக்கு சுக ஸ்தானம் முழுவதும் வியாபித்து நிற்பது சிறப்பானது என்ற போதிலும், ராகு பகவானால் 100% விகித பாதிப்பிற்கு உள்ளாவது ஜாதகருக்கான சுபயோகங்களை 4ம் பாவக வழியில் இருந்து வெகுவாக தட்டிப்பறிக்கும்.
ஜாதகர் மேற்கொண்ட வண்டிவாகனம் சார்ந்த தொழில்கள் யாவும் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது சுக ஸ்தானமான 4ம் பாவக பாதிப்பே அன்றி வேறுஎதுவும் இல்லை, பொதுவாக சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியான கடகம் கடுமையாக பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பெயரில் சொத்து சுகம், வண்டிவாகனம் மற்றும் வீடு நிலம் போன்றவற்றை வைத்திருப்பது நல்லதல்ல, மீறி வைத்திற்குக்கும் பொழுது ஜாதகருக்கு அது சார்ந்த நஷ்டங்களை தவிர்க்க இயலாது என்பது கவனிக்கத்தக்கது, இதை உணராமலும், நடைபெறும் ராகு திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றி அறியாமலும், ஜாதகர் செய்த முதலீடுகள், ஆரம்பித்த தொழில், புதிதாக துவங்கிய காரியங்கள் யாவும் மிகுந்த நஷ்டத்தையே வழங்கியது, மேலும் ஜாதகருக்கு 37 வயது நிறைவடைந்ததும் திருமணம் கைகூடி வரவில்லை என்பது வருந்தத்தக்கது.
ஜாதகருக்கு ராகு அமர்ந்த நிலையிலும் வலிமை பெறவில்லை, தனது திசையிலும் 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, சம்பாதிக்கும் வருமானம், வரும் பொருள் வரவுகள் அனைத்தும் திடீர் இழப்பை தந்தது, ஜாதகரின் நிதி நிலைமை மிகவும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியது, ஜாதகருக்கு திடீர் மருத்துவ செலவினங்கள், எதிர்பாராத விபத்து , பொருளாதார சிக்கல்கள் யாவும் வாட்டி வதைத்தது, நிதி நிலையை சீர் செய்ய ஜாதகர் எடுத்த முடிவுகள், ஜாதகரின் பெற்றோர் சொத்துக்களுக்கும் இறையாயின , வீடு நிலம், தோட்டம் போன்றவை ஜாதகரின் கடன் பிரசனைகளுக்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்டது, இவையெல்லாம் ராகு மகா திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியதே காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை சந்திரன் புத்தி 5,11ம் வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை செய்வது, மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து ஓர் பெரிய மனிதரின் ஆதரவில் மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்கிக்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது, சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து குல தெய்வ அருளாலும், பித்ருக்கள் ஆசியாலும் மீண்டு வருவதற்கான சந்தர்ப்பங்களை நல்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு கிடைத்த வரப்பிரசாதம், சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகரை ஏதாவது ஒரு வகையில் கஷ்டங்களில் இருந்து மீட்டுஎடுக்கும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம், எதிர் வரும் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 1,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மகர ராசியில் வியாபித்து நிற்பது ஜாதகருக்கான ஜீவன யோகத்தை பரிபூர்ணமாக தர தயார் நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் சர மண் தத்துவம் சார்ந்த தொழில்களை தேர்வு செய்து சிறப்பான நன்மைகளை பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.
குறிப்பு :
மேற்கண்ட ஜாதகருக்கு சாயா கிரகங்களில் ராகு மட்டும் பாதிப்பை அமர்ந்த நிலையிலும், தனது தசையிலும் கடுமையாக தரும் அமைப்பில் உள்ளது ஆனால் கேது அமர்ந்த நிலையில் மிகுந்த வலிமையுடனும், தனது திசையில் 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சர இயக்கத்தில் மகர ராசியில் இருந்து 100% விகித யோக பலன்களை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எனவே ஜாதகருக்கு ராகு பாதிப்பை தந்த போதிலும், கேது அதற்க்கு நிகரான சுபயோகங்களை நல்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும், ஜாதகரின் முன்னேற்றம் கேது வின் மூலம் மிக அபரிவிதமானதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
வெள்ளி, 15 ஜூன், 2018
தொழிலில் ஏற்படும் பேரிழப்பை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது எப்படி? இதை ஜாதக ரீதியாக அறிந்துகொள்ள இயலுமா ?
இன்னும் நமது கிராமங்களில் " வல்லவனையும் தட்டுமாம் வழுக்குப்பாறை " என்று சிலேடையாக சொல்வதுடன், மிகுந்த தொழில் நுணுக்கம் கொண்டுள்ள ஒருவரை கூட மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி ஆரம்பித்த இடத்துக்கே கொண்டுவந்துவிடும் தன்மை பெற்றது "விதி" இதை மதியறிவு கொண்டு வெல்வது என்பது அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள 1,5,9ம் பாவகங்களின் வலிமை நிலையே என்றால் அது மிகையில்லை, ஒருவருக்கு வரும் யோக அவயோக நிலையை பற்றி வருமுன் தெளிவாக கட்டியம் கூற சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்களின் வலிமை நிலை அவசியமாகிறது, மேற்கண்ட பாவகங்களின் வலிமை, ஜாதகருக்கு எதிர்வர இருக்கின்ற நன்மை தீமையை பற்றி சுய அறிவுபூர்வமாகவோ, குல தெய்வ ஆசியின் மூலமாகவோ, ஆன்மீக பெரியவர்களின் அறிவுறுத்தல் மூலமாகவோ தெள்ள தெளிவாக எடுத்துரைத்து காக்கும், ஜாதகருக்கு வரும் இழப்பில் இருந்து பாதுகாப்பும், யோக அமைப்பில் இருந்து விழிப்புணர்வும் தந்து அருள் புரியும், ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !
லக்கினம் : துலாம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம்
மேற்கண்ட துலா லக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தான அதிபதியான சுக்கிரன் திசை 20/05/1998 முதல் 20/05/2018 தற்போழுது நடைமுறையில் உள்ளது, இந்த சுக்கிரன் திசை ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான யோக பலனை பாக்கிய ஸ்தான வழியில் இருந்து தந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க தக்க நன்மைகளை தருவதாகும், குறிப்பாக சுக்கிரன் திசையில் சனி புத்தி 20/03/2011 முதல் 20/05/2014 வரை ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சிறப்பான ராஜ யோக பலனை 2,4,10 பாவக வழியில் இருந்து வாரி வழங்கி இருக்கிறது சுக்கிரன் திசை ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து எதிலும் வெற்றி, புத்தி கூர்மை மூலம் ஆதாயம், சகல சௌபாக்கியம், போக்குவரத்து, ஏஜென்சி துறை லாபம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான நன்மைகள், வியாபார விருத்தி, நல்ல சிந்தனைகள் தரும் வெற்றி, கனிம சுரங்க பொருட்கள் மூலம் லாபம், நுண்ணறிவு திறன் மூலம் பெரும் அதிர்ஷ்டங்கள் என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து மிகுந்த மனவலிமை, விரைவாக சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமை அதன் வழியிலான முன்னேற்றங்கள், சமயோசித புத்தி சாலித்தனம், ஆய்வு திறன், நல்ல பழக்கங்கள் மூலம் நன்மைகளை பெறுதல் என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து நிறைவான அறிவு திறன், பயணங்கள் மூலம் லாபம், இடமாற்றம் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் மற்றும் சிறப்பான வளர்ச்சி பித்ருக்களின் ஆசி மூலம் வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுதல் என்ற வகையில் யோக பலனை வாரி வழங்கியது.
சுக்கிரன் திசையில் கடந்த சனி புத்தி சனி புத்தி 20/03/2011 முதல் 20/05/2014 வரை ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து தொழில் வழியிலான அபரிவித வருமானம், பேச்சு திறன் மூலம் வரும் வியாபர விருத்தி, லட்சியங்களை அடையும் வல்லமை, அதீத தனசேர்க்கையை சொந்த உழைப்பில் பெரும் வல்லமை, கவுரவம், அந்தஸ்து, புகழ், பரிசு அனைத்திலும் வெற்றி என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகும் தன்மை, மண் மணை வண்டி வாகன யோகம், ஆள் வசதி, பெரிய சொத்து சுக சேர்க்கை, அரசு மரியாதை மற்றும் கவுரவம், சமூக வாழ்க்கையில் வெற்றி, அரசியலில் ஆதாயம் என்ற வகையில் சிற்பபுகளை தரும், 10ம் பாவக வழியில் இருந்து தொழில் வழியிலான அபரிவித முன்னேற்றம், கம்பீரமான செயல்பாடுகள், தீர்க்கமான முடிவுகள் வழியில் பெரும் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, செய்தொழில் வழியிலான ராஜ யோகம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கி இருக்கிறது.
சுக்கிரன் திசையில் சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தி ( 20/05/2014 முதல் 20/03/2017 வரை ) ஜாதகருக்கு மிகுந்த சோதனை காலமாக மாறியது விதி செய்த கொடுமையாகவே கருதலாம், புதன் புத்தி ஜாதகருக்கு 6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் ஜாதகரை படு குழியில் தள்ளியது, 6ம் பாவக வழியில் இருந்து வரம்பு மீறிய கடன், மிதமிஞ்சிய செலவுகள், வேலையாட்கள் வழியிலான இழப்புகள், பொருளாதர பின்னடைவு, எதிரிகள் தொந்தரவு, அனைத்து இடங்களில் இருந்து வரும் எதிர்ப்புகள், எதிர்பாராத கடன்கள், ஜாமீன் கொடுப்பதால் வரும் இன்னல்கள், வாங்கும் கடன் அனைத்தும் திடீர் இழப்பை சந்திக்கும் நிலை, நிலையற்ற பொருளாதரம், எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்து போகும் தன்மை, எதிர்பாலின சேர்க்கையின் மூலம் திடீர் இன்னல்கள், நிம்மதி இன்மை, அனைத்திலும் தோல்வி, வழக்குகளில் சிக்கல்கள், சட்ட சிக்கல்கள், பொருள் இழப்பு என்ற வகையில் ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தர ஆரம்பித்தது.
8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை நல்கிய போதிலும், பேரிழப்பு, விபத்து, துயரம், மற்றவர்களால் வரும் துன்பங்கள், தீயநண்பர்கள் சகவாச தோஷம், திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை, எதிர்த்து போராட வலிமையற்ற சூழல், உதவி செய்ய யாருமற்ற தன்மை, வாழ்க்கை துணை வழியிலான இழப்புகள் மற்றும் துன்பங்கள், தெய்வீக அனுகிரகம் இன்மை, முரண்பட்ட செயல்பாடுகள், தாங்க இயலாத துன்பம், சொத்துக்களை இழக்கும் சூழ்நிலை, சொத்துக்கள் அனைத்தும் வீண் விரயமாகும் தன்மை, திருப்தி இல்லாத மனநிலை, ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபத்தில் அமைவதால், ஜாதகருக்கு வரும் வருமானம் மற்றும் கடன் யாவும் திடீர் இழப்பை சந்திக்கும் சூழ்நிலை, எதிரியின் பிடியில் இழப்பை சந்திக்கும் சூழல், அனைத்தையும் இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகுதல் என்ற வகையில் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை பாக்கியம் மற்றும் விரைய ஸ்தான அதிபதியான புதன் புத்தி தர ஆரம்பித்தது, மேலும் ஆயுள் பாவகம் ஸ்திர ராசி என்பதால் ஜாதகருக்கு வந்த இன்னல்கள் யாவும் வெகு காலம் ஆறாத ரணம், மறையாத சுவடை ஏற்படுத்தி ஜாதகருக்கு "நித்ய கண்டம் பூர்ண ஆயுசு" என்பதற்கு இணையான சூழலை உருவாக்கியது.
சுக்கிரன் திசை முடிவில் நடைபெற்ற கேது புத்தி ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தந்தது, ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சிறிய அளவில் மீண்டு வரும் வாய்ப்பை நல்கியது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாதிப்பை ஜாதகர் 5,9ம் பாவக வழியில் இருந்து உணர்ந்த போதிலும் லக்கினம் எனும் முதல் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது போதிய நிதி மேலாண்மை திறன் அற்றவர் என்பதனையும், திட்டமிட்டு செயல்படும் தன்மை அற்றவர் என்பதனையும் தெளிவுபடுத்துகிறது, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள், வாழ்க்கை துணை வழியிலான பேரிழப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆர்ப்பட்டவர் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகருக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் வல்லமை கொண்டது, இருப்பினும் சூரியன் திசையில் எதிர் வரும் சந்திரன் புத்தி 1,7,11ம் பாவக வழியில் இருந்து கடும் நெருக்கடிகளை தரும், மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டதை போன்ற உணர்வை ஜாதகர் பெறுவார், சுக்கிரன் திசையில் நடைபெற்ற சுபயோக பலன்கள் சூரியன் திசையில் நடைமுறைக்கு வந்த போதிலும், யோக காலம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும், ஜாதகர் சூரியன் திசையில் சந்திரன் புத்தியை எதிர்கொள்வது என்பது சற்று சவாலான விஷயமாகவே படுகிறது.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் யோக பலன்கள் பாவக வழியில் இருந்து வழங்கிய போதிலும், லக்கினம் வலிமையுடன் இருந்தால் மட்டுமே ஜாதகர் அதை முழுவதுமாக சுவீகரிக்க இயலும், லக்கினம் வலிமை இழப்பது அல்லது 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அனைத்தும் ஜாதகருக்கு மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை, கிரகிக்கும் வல்லமையை தாராது என்பதுடன் ஜாதகராலே அது விரயமாகும், மேற்கண்ட ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிதமிஞ்சிய யோக பலனை தரும் என்ற போதிலும், 1,7,11ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர், அவரது வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் ஜாதகரின் அதிர்ஷ்டமின்மை ஆகியவை ஜாதகருக்கு வரும் யோக பலனை கபளீகரம் செய்யும் என்பது கவனிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
சுக்கிரன் திசை முடிவில் நடைபெற்ற கேது புத்தி ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தந்தது, ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சிறிய அளவில் மீண்டு வரும் வாய்ப்பை நல்கியது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாதிப்பை ஜாதகர் 5,9ம் பாவக வழியில் இருந்து உணர்ந்த போதிலும் லக்கினம் எனும் முதல் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது போதிய நிதி மேலாண்மை திறன் அற்றவர் என்பதனையும், திட்டமிட்டு செயல்படும் தன்மை அற்றவர் என்பதனையும் தெளிவுபடுத்துகிறது, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள், வாழ்க்கை துணை வழியிலான பேரிழப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆர்ப்பட்டவர் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகருக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் வல்லமை கொண்டது, இருப்பினும் சூரியன் திசையில் எதிர் வரும் சந்திரன் புத்தி 1,7,11ம் பாவக வழியில் இருந்து கடும் நெருக்கடிகளை தரும், மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டதை போன்ற உணர்வை ஜாதகர் பெறுவார், சுக்கிரன் திசையில் நடைபெற்ற சுபயோக பலன்கள் சூரியன் திசையில் நடைமுறைக்கு வந்த போதிலும், யோக காலம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும், ஜாதகர் சூரியன் திசையில் சந்திரன் புத்தியை எதிர்கொள்வது என்பது சற்று சவாலான விஷயமாகவே படுகிறது.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் யோக பலன்கள் பாவக வழியில் இருந்து வழங்கிய போதிலும், லக்கினம் வலிமையுடன் இருந்தால் மட்டுமே ஜாதகர் அதை முழுவதுமாக சுவீகரிக்க இயலும், லக்கினம் வலிமை இழப்பது அல்லது 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அனைத்தும் ஜாதகருக்கு மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை, கிரகிக்கும் வல்லமையை தாராது என்பதுடன் ஜாதகராலே அது விரயமாகும், மேற்கண்ட ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிதமிஞ்சிய யோக பலனை தரும் என்ற போதிலும், 1,7,11ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர், அவரது வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் ஜாதகரின் அதிர்ஷ்டமின்மை ஆகியவை ஜாதகருக்கு வரும் யோக பலனை கபளீகரம் செய்யும் என்பது கவனிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
வியாழன், 31 மே, 2018
சுபயோகம் நிறைந்த வாழ்க்கை துணையின் ஜாதகம், இல்லற வாழ்க்கையை மகிழ்விக்குமா ?
சுபயோகம் நிறைந்த வாழ்க்கை துணையின் ஜாதகம், இல்லற வாழ்க்கையை மகிழ்விக்குமா? என்றால் நிச்சயம் மகிழ்விக்கும் இதில் மாற்று கருத்து இல்லை, தமக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் உள்ள குறைகள் யாவையும் நிவர்த்தி செய்து இனிமையான இல்லற வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே, பொதுவாக நமது சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமையற்று இருப்பின், நமக்கு வரும் வாழ்க்கை துணையின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, நமது ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமையுடனும், நமது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் மேற்கண்ட பாவகங்கள் வலிமையுடன் இருப்பின் நமது இல்லற வாழ்க்கை எவ்வித இன்னல்களையும் சந்திக்காமல் சுபயோகங்கள் நிறைந்த பரிபூர்ண தாம்பத்தியத்தை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !
லக்கினம் : மேஷம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம்.
ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :
1,7,9ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 1ம் பாவக வழியில் இருந்து எதிர்ப்புகள், எதிரிகள் மறையும் தன்மையை தரும், வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் அபரிவித வளர்ச்சியை தரும், கணவர் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை ஜாதகிக்கு பரிபூர்ண நிம்மதியையும், மனநிறைவையும் தரும், வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை ஜாதகிக்கு தன்னிறைவான பொருளாதர மேன்மையை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் உண்டு, வெற்றி புகழ் கீர்த்தி யாவும் ஜாதகிக்கு தேடி வரும், பொதுமக்கள் வழியிலான ஆதரவு ஜாதகிக்கு மிகுந்த சிறப்புகளை தரும், வியாபார விருத்தி என்பது ஜாதகிக்கு மிக சிறப்பாக அமையும், கணவரின் ஆதரவுடன் வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளை பெரும் யோகத்தை தரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகிக்கு நல்ல மதிப்பு மிக்க பதவிகளை வாரி வழங்கும், கணவருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும், வாழ்க்கை துணையுடன் இணைபிரியா தாம்பத்திய வாழ்க்கையை வழங்கும், கூட்டு முயற்சிகள் யாவும் வெற்றி தரும்.
7ம் பாவக வழியில் இருந்து ஜாதகி நல்ல ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை துணை, அவரின் முழு ஆதரவு, சக்தி வாய்ந்த கூட்டாளி, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் அதிர்ஷ்டம், வியாபாரத்தில் பரிபூர்ண வெற்றி, கூட்டு வியாபாரம், கூட்டு தொழில் வழியில் அபரிவித லாபம், கணவருக்கு அதிர்ஷ்டம், சமூக அந்தஸ்து மற்றும் உயர்பதவிகளை பெரும் அமைப்பு, இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி, நண்பர்கள் உதவியை பெறுதல், மதிப்பு மிக்க பொறுப்புகள் தேடிவரும் யோகம் எதிர்பாராத நன்மைகளை ஜாதகி பெறுவதற்கான வாய்ப்புகள், இல்லற வாழ்க்கையில் வெற்றி, எதிர்ப்புகளை கடந்து சுபயோகங்களை தன்னிறைவாக பெரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.
9ம் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்களுடன் சுமூக உறவு, பொது விவகாரங்களில் அதீத ஈடுபாடு, நம்பிக்கை மற்றும் கண்ணியம் நிறைந்த வியாபார ஆளுமை, அதிர்ஷ்டம் நிறைந்த கூட்டாளிகள், மிகசிறந்த நிர்வாக திறமை, மதிப்பு மிக்க செயல்கள் மூலம் வெற்றி பெரும் யோகம், தன்னம்பிக்கையும் தைரியமும் ஒருங்கே அமையப்பெற்ற ஜாதகி, தெய்வீக அனுக்கிரகமும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும் ஜாதகிக்கு யோகம் மிக்க சுப வாழ்க்கையை நல்கும், கல்வியில் தேர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் பட்டைய படிப்புகளில் மேன்மையை பெரும் யோகத்தை தரும்.
3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு தனது சகோதரவழி ஆதரவு உண்டாகும், எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியை தரும், சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க்கையில் குறுகிய காலத்தில் மேன்மையை பெறவும் யோகம் உண்டாகும், மனதைரியமும், தன்னம்பிக்கையும் ஜாதகியின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு நல்ல தீர்வுகளை தரும், நினைக்கும் காரியங்கள் வெற்றி பெரும், பல தொழில் செய்யும் யோகமும், சிறந்த நிர்வாக திறமையையும் தரும், எதையும் தாங்கும் மன வலிமை உண்டாகும், எதிரிகளை வெல்லும் யோகம் உண்டு, நல்ல மன நிலை, சிறந்த சிந்தனை, உண்மை சத்தியத்தை மதித்தல், தைரியம், பயணங்களில் விருப்பம், கல்வியால் மேன்மை, புதிய இடம், புதிய சிந்தனை, புதிய சூழ்நிலைகளில் ஜாதகியின் வெற்றி அதிகரிக்கும், வியாபாரம், தரகு தொழில், ஏஜென்சி துறையில் அதீத லாபங்களை வாரி வழங்கும், ஜாதகி மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் நல்ல வெற்றியை தரும்.
4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும், பெயரும் புகழும் அதிகரிக்கும், நல்ல குணம் ஜாதகியின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், மண் மனை வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, ஆள் வசதி, சிறந்த நிர்வாக திறமை, அனைத்து சுக போகங்களையும் பெரும் அமைப்பு, பெரிய சொத்துக்கள், விளையாட்டில் ஆர்வம், அரசு கவுரவம், சமூக வாழ்க்கையில் வெற்றி, அரசியலில் ஆதாயம், தனது பெயரில் இயங்கும் சொத்துக்கள் வழியில் இருந்து வரும் வருமானம், அசையும் அசையா சொத்துக்கள் வழியிலான லாபங்கள், சுய உழைப்பால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும்.
10 ம் பாவக வழியில் இருந்து உத்தியோகம், வியாபாரம், தொழில் முதலியவற்றில் அபரிவித லாபங்கள், கம்பீரம், தீர்க்கமான வாத திறமை, வாக்கு வன்மை மூலம் வெற்றி பெரும் யோகம், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, மென்மையான குணம் மூலம் தொழில் விருத்தியை பெரும் யோகம், சுய தொழில் அல்லது வியாபாரம் செய்வதன் மூலம் அபரிவித நன்மைகளையும் லாபங்களை பெரும் யோகத்தை தரும், கவுரவ பதவிகள் ஜாதகிக்கு தேடி வரும், அனைவரிடமும் நட்ப்புறவு, சுமுகமான சூழ்நிலையை கையாளும் தன்மையை தரும், கவுரவம் மிக்க பதவிகள் ஜாதகிக்கு தேடிவரும், சிறந்த நிர்வாக திறமையின் மூலம் ஜாதகி அபரிவித வெற்றிகளை பரிபூர்ணமாக பெறுவார்.
2,5,6,8,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும், இருப்பினும் 12ம் பாவகம் உபய ராசி என்பதால் ஜாதகிக்கு வரும் இன்னல்கள் யாவும் மிக குறைந்த ( 30% ) சதவிகிதத்திலேயே இருக்கும் என்பதால், பெரிய பாதிப்புகள் எதுவும் வர வாய்ப்பில்லை, 2ம் பாவக வழியில் இருந்து வார்த்தைகள் மூலம் வீண் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு, குறிப்பாக கணவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது, கையில் வரும் வருமானத்தை சேமிக்கும் பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது அவசியமாகிறது, இல்லையெனில் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும், அவசியமற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது, நிதி நிர்வாகம் சிறப்பாக அமைவது ஜாதகிக்கு மிகுந்த நன்மையை தரும், குடும்ப வாழ்க்கையில் வரும் சிறு சிறு இன்னல்களுக்கு தானே நிவர்தியை தேடிக்கொள்வது நல்லது, கலைகளில் நல்ல ஈடுபாட்டையும், தேர்ச்சியையும் தரும்.
5ம் பாவக வழியில் இருந்து ஜாதகி பூர்வீகத்தில் ஜீவிக்கும் வரை யாதொரு நன்மைகளையும் பெற இயலாது, இதனால் பெரும் நஷ்டமும், வீண் விரையங்களையும் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும், ஜாமீன் கொடுப்பதால் மிகப்பெரிய இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குழந்தைகள் வழியிலான பிரச்சனைகள், புத்திர பாக்கிய தடைகளை பூர்விகத்தில் ஜாதகி ஜீவிக்கும் வரை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மன நிம்மதி மனப்போராட்டம் அதிகரிக்கும், குல தெய்வத்தின் ஆசீர்வாதம் இன்மையால் ஜாதகிக்கு வரும் நன்மைகள் யாவும் தவறிவிட வாய்ப்பு அதிகம், ஜாதகியின் சமயோசித அறிவு திறனும், புத்திசாலித்தனமும் முழு அளவில் பயன் தாராது என்பதால் பூர்வீக ஜீவனத்தை தவிர்ப்பது நல்லது, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் ஜாதகிக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.
6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கடன் சார்ந்த இன்னல்கள் அதிகரிக்கும், கடன் கொடுப்பது வாங்குவது இரண்டும் மிகப்பெரிய இன்னல்களை தரும், வேலையாட்கள் மூலம் அதீத தொல்லைகள் உண்டாகும், தேவையற்ற வீண் செலவுகள், எதிர்பாராத மருத்துவ செலவினங்கள் ஜாதகிக்கு பெரும் இன்னல்களை தரும், நோய் எதிர்ப்பு திறன் குறைவு என்பதால் உடல் நலனில் அதிக அக்கறை கொள்ளவது நல்லது, எவரிடமும் பகைமை பாராட்டாமல் அனுசரித்து செல்வது ஜாதகிக்கு நல்ல மன நிம்மதியை தரும்.
8ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு விபத்து மூலம் மருத்துவ செலவினங்களை அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது , மனக்குழப்பம், நிம்மதி இழப்பு, உடல் நல பாதிப்பு தேவையற்ற செலவினங்கள் போன்றவை ஜாதகிக்கு அதீத இன்னல்களை தரக்கூடும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகிக்கு தாங்க இயலாத துன்பங்களை தரக்கூடும், தலைவலி மற்றும் கண் சார்ந்த இன்னல்களை தவிர்க்க சரியான தீர்வுகளை தேடுவது ஜாதகிக்கு நன்மைகளை தரும்.
11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி விரக்தி மனப்பான்மையை விட்டு விட்டு, நல்ல நம்பிக்கைகளை மனதில் மேற்கொள்வது நன்மையை தரும், தேவையற்ற கவலைகள் ஜாதகிக்கு வரும் அதிர்ஷ்டங்களை தடை செய்யும், அனைவராலும் இன்னல்கள் உண்டாகும் என்பதால் ஜாதகி விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்தை அதிகரித்துக்கொள்வது சகல நன்மைகளையும் தரும், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை எந்த காரணத்தை கொண்டு ஜாதகி தவிர்க்க கூடாது, தெளிவான சிந்தனை, சிறந்த முடிவெடுக்கும் தன்மை ஜாதகியின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
12ம் பாவக வழியில் இருந்து ஜாதகி நிறைய வீண் செலவுகள், பங்கு சந்தை லாட்டரியில் நஷ்டம், பெரும் முதலீடுகளில் ஏற்படும் பேரிழப்புகள், திருப்தி இல்லாத மனநிலை, அதீத கற்பனைகள், வீண் மன பயம் போன்றவை ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பெரும் தடைக்கற்களாக அமையும், நல்ல உறக்கம் அமைவது என்பது ஜாதகிக்கு பிரச்சனையாக அமையும், பொது வாழ்க்கையில் சில எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.
சுக்கிரன் திசை தரும் பலன்கள் ( 21/07/2001 முதல் 21/07/2021 வரை )
ஜாதகிக்கு சுக்கிரன் தனது திசையில் 5,6,8ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தருவது நல்லதல்ல, 5ம் பாவக வழியில் இருந்து பூர்வீக பாதிப்பும், கற்ற கல்வி பலன் தராத நிலையும், எதிர்பார்ப்புகள் யாவும் முழுமையை பெறாத தன்மையையும் உண்டாகும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் நலம் பாதிப்பது, எதிர்ப்பு மற்றும் எதிரி தொந்தரவு ஆகியவை ஜாதகியை வெகுவாக பாதிக்கும், 8ம் பாவக வழியில் இருந்து மற்றவர்களின் இழப்பு ஜாதகியை வெகுவாக பாதிக்கும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, நிதி நிலை பாதிப்பை தரும், விபத்தை தவிர்க்க இயலாது, மருத்துவ செலவினங்கள் வீண் விரயத்தை தரும்.
சுக்கிரன் திசையில் புதன் புத்தி வழங்கு பலன்கள் ( 21/07/2017 முதல் 21/05/2020 வரை )
புதன் புத்தி ஜாதகிக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக வாழ்க்கையை தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகிக்கு நினைக்கும் காரியங்கள் யாவும் பலிதம் பெரும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், நம்பிக்கையும், அதிர்ஷ்டமும் நல்ல சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்கும், தெய்வீக ஆசிர்வாதம் ஜாதகிக்கு நல்ல வெற்றிகளை தரும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் பரிபூர்ண நன்மைகளை தரும், வாழ்க்கை புதிய மாற்றங்களை கொண்டுவரும், புதன் புத்தி ஜாதகிக்கு பரிபூர்ண சுபயோகங்களை தன்னிறைவாக தருவது வரவேற்கத்தக்கது.
எதிர்வரும் சூரியன் திசை தரும் பலன்கள் ( 21/07/2021 முதல் 21/07/2027 வரை )
சூரியன் தனது திசையில் 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை வாரி வழங்குவது ஜாதகிக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து சுபயோக சுப வாழ்க்கையை தரும், நல்ல நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் மிகுந்த நன்மைகள் நடைபெறும், வெளிநாடு வெளியூர் அமைப்பில் இருந்து லாபங்களும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வியாபாரம் மற்றும் தொழில் முதலியவற்றில் இருந்து வரும் அபரிவித வளர்ச்சி ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவிகரமாக அமையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்பது ஜாதகிக்கு எதிர்வரும் சூரியன் திசை வாரி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை, சூரியன் திசையில் கணவர், நண்பர்கள், கூட்டாளி, கூட்டு முயற்சி, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து ஜாதகி 100% விகித சுபயோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை தரும்.
பரிகாரம் :
1) தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது ஜாதகிக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும்.
2) திருவெண்காடு சென்று முக்குண நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது.
3) குல தெய்வ வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்து வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தரும்.
4) ஜாதகி பழனி முருகனை வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று தரிசனம் செய்து சகல நலன்களை பெறலாம்.
5) திருப்பதி வருடம் ஒரு முறை வளர்பிறை திங்கள் அன்று சென்று ஸ்ரீ வாரி பெருமானை தரிசனம் செய்து வருவது பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான வழியிலான இன்னல்களையும் வெகுவாக தவிர்க்க உதவும்.
குறிப்பு :
மேற்கண்ட ஜாதகிக்கு 1,7ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் காணப்படுவதும், எதிர் வரும் சூரியன் திசை வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும் மிகுந்த சுபயோகங்களை நல்கும், இதனால் ஜாதகியின் கணவருக்கும், ஜாதகிக்கு பரஸ்பரம் யோக வாழ்க்கை அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்க்கை துணையின் ஜாதகம் மிக மிக வலிமையுடன் இருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்கும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355969
புதன், 17 ஜனவரி, 2018
தொழில் நிரந்தரமாக அமையாதது ஏன் ? சுய தொழில் & அடிமை தொழில் எது சிறந்தது ?
கேள்வி :
இதுவரை சரியான தொழில் அமையவில்லை, செய்யும் தொழில் வழியில் இருந்து யாதொரு முன்னேற்றமும் இல்லை, நான் சுயமாக சிறுதொழில் ஏதாவது செய்யலாமா? அல்லது ஓரிடத்தில் வேலைக்கு செல்வது நன்மையை தருமா ? இதுவரை மற்றவர்களிடம் அடிமை தொழில் ( வேலைக்கு ) மட்டுமே செய்து வருகிறேன், செய்யும் வேளையில் மனநிறைவு இல்லை, பொருளாதார முன்னேற்றமும் இல்லை, தயவு செய்து சரியான வழிக்காட்டுங்கள்.
பதில் :
ஜீவன ஸ்தான வலிமை என்பது ஒவ்வொரு ஆண் மகனின் ஜாதகத்திலும் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, இது ஜாதகனின் சுய கவுரவத்தை செய்யும் தொழில் வழியில் இருந்து வாரி வழங்கும், அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரம் மிகவும் வலிமையுடன் இருப்பது, சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 10ம் பாவகம் வலிமை அற்று காணப்பட்டாலும், ஜாதகருக்கு ஜீவன வழியில் மறைமுகமான நன்மைகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 10ம் வீடும், கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு 10ம் வீடான மகரம் இரண்டும் கடுமையாக பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் தனிப்பட்ட தொழில் ரீதியான முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியையே வழங்கும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, தங்களது சுய ஜாதகத்தில் தொழில் அமைப்பிற்கான விஷயங்களை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளலாம் அன்பரே !
லக்கினம் : கும்பம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்
கேள்வி :
இதுவரை சரியான தொழில் அமையவில்லை, செய்யும் தொழில் வழியில் இருந்து யாதொரு முன்னேற்றமும் இல்லை ஏன் ?
பதில் :
தங்களின் கேள்விக்கு இரண்டு காரணங்கள் உண்டு 1 ) சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானமான 10ம் வீடு கடுமையான பாதிப்பை பெற்று இருப்பது தங்களுக்கு சரியான தொழில் அமையாத நிலைக்கு அடிப்படை காரணமாக இருக்கின்றது, மேலும் தங்களின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் 10 பாகைகளும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமான கும்ப ராசியில் 23 பாகைகளையும் கொண்டுஇருப்பது தங்களின் தொழில் வழியிலான சிரமங்களுக்கு அடிப்படை காரணமாக அமைகின்றது, எனவே சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 10ம் பாவகமும் பாதிக்கப்பட்டு, காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும் 40% விகிதம் பாதிக்கப்படுவது, தங்களுக்கு தொழில் ரீதியாக சுபயோக பலாபலன்களை வழங்க மறுக்கின்றது என்பதே உண்மை நிலை.
2) தங்களுக்கு ( 09/09/2002 ல் ) ஆரம்பித்த சுக்கிரன் திசை சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,10ம் பாவக வழியில் இருந்து முழு வீச்சில் விரைய ஸ்தான பலனையே தனது திசைமுழுவதும் ஏற்று நடத்துவது தங்களின் தொழில், வேலை போன்றவற்றில் மிகுந்த பின்னடைவையும், திருப்தி அற்ற நிலையையும், நிரந்தரம் அற்ற தொழில் என்ற நிலையையும் தற்போழுது வரை தந்து கொண்டு இருக்கின்றது, இருப்பினும் தற்போழுது நடைபெறும் சனி புத்தி தங்களுக்கு லாப ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும்.
பொதுவாக சுய ஜாதகத்தில் மகரமும், பத்தாம் பாவகமும் வலிமை இழந்து காணப்பட்டால், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற மற்ற பாவகம் எவை? எவை ? என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வது ஜீவனத்திற்க்கான மாற்று வழியை நமக்கு தெளிவுபடுத்தும், இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது தங்களது சுய ஜாதகத்தில் வீர்ய ஸ்தானம் மிக வலிமையுடன் காணப்படுகிறது, தங்களது வீரிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடான மேஷ ராசியில் 2 பாகையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் வீடான ரிஷப ராசியில் 26 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகத்தில் மிகவும் சிறப்பான விஷயமாகும், இந்த அமைப்பு தங்களுக்கு மக்கள் தொடர்பு வழியிலான சிறு வியாபாரம் மூலம் சகல சௌபாக்கியத்தை நல்கும் அமைப்பாகும், எனவே தாங்கள் சிறு வியாபாரம் செய்வதன் மூலம் நல்ல வளர்ச்சியை பெறலாம், மேலும் சிறு எஜென்ஜி, தரகு தொழில் வழியிலான நன்மைகள் பொருளாதார வளர்ச்சிகள் தங்களுக்கு எதிர்பாராத வண்ணம் வந்து சேரும் என்பதை கருத்தில் கொள்க, எனவே தாங்கள் வலிமை பெற்ற 3ம் பாவக வழியில் இருந்து ஜீவனத்தை தேடி நலம் பெறுவது தங்களின் வாழ்க்கையில் அபரிவிதமான யோக பலன்களை வாரி வழங்கும்.
தங்களது ஜாதகத்தில் வலிமைபெற்ற பாவகம் என்ற நிலையில் 2ம் இடத்தில் இருப்பது லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் ஆகும், லாப ஸ்தானம் தங்களுக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடான தனுசு ராசியில் 8பாகைகளையும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடான மகர ராசியில் 20 பாகைகளையும் கொண்டிருப்பது சிறப்பான யோகத்தை தரும் அமைப்பாகும், இது தங்களுக்கு லாப ஸ்தான வழியில் இருந்து எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரும், குறிப்பாக சர மண் தத்துவ சார்ந்த பொருட்கள் வழியில் இருந்து நல்ல லாபத்தை தரும் என்பதை கருத்தில் கொண்டு அது சார்ந்த ஏஜென்ஜி எடுப்பது அல்லது சிறு வியாபாரம் செய்வது தங்களுக்கு மேலும் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், இதனால் செய்யும் தொழில் வழியில் மனநிறைவும் பொருளாதார நன்மைகளும் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
குறிப்பு :
எதிர் வரும் புதன் கேது புத்திகள் தங்களுக்கு சிறப்பான வழியில் அதிர்ஷ்டங்களையும், சூரியன் திசை பாக்கிய ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டங்களையும் தருவது, தாங்கள் புதிதாக ஆரம்பிக்கும் சிறு வியாபார வழியில் நற்ப்பெயருடன் கூடிய அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதுடன், பொருளாதர தன்னிறைவை தரும் என்பதை கருத்தில் கொண்டு, விழிப்புணர்வுடன் வாழ்க்கையில் வெற்றிபெறுங்கள்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ஞாயிறு, 14 ஜனவரி, 2018
சுய தொழில் செய்யலாமா ? எதிர்காலம் தொழில் ரீதியாக சுபயோகங்களை வழங்குமா ?
எனது ஜாதகம் சுய தொழில் செய்ய ஏற்ற ஜாதகமா ? கூட்டு தொழில் சிறப்பை தருமா ? எதிர்வரும் சூரியன் திசை மற்றும் சந்திரன் திசை எவ்வித பலாபலன்களை தரும் ?
பதில் :
ஒருவரின் சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசி வலிமை பெற்று, 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று இருப்பின் ஜாதகர் சுய தொழில் செய்ய அதீத வல்லமை உடையவர் என்பது தெளிவாகும், மேலும் லாப ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியிலான நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவதற்கான வாய்ப்புகளை நல்கும், பூர்வ புண்ணியம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் ரீதியான வெற்றிகளை சமயோசித அறிவாற்றலுடன் உறுதியாக பெறுவார் என்பதை தெளிவு படுத்தும், 6,8,12ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகர் தாம் செய்யும் தொழில் வழியிலான பொருளாதார முன்னேற்றங்களை அபரிவிதமாக பெறுவதை உறுதி செய்யும், 3,9ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகர் தாம் செய்யும் தொழிலில் எடுக்கும் உறுதி மிக்க செயல்களையும், முடிவு எடுக்கும் விஷயங்களில் சிறப்பான செயல்திறனையும், அதீத லாபம் பெறுவதற்கான திட்டமிடுதல்களையும், தொழில் வழியிலான நற்ப்பெயர், நீடித்த தொழில் வாய்ப்புகள் தலைமுறை கடந்த தொழில் வெற்றிகளை உறுதி செய்யும், 2ம் வீடு வலிமை பெறுவது ஜாதகருக்கு வரும் வருமான வாய்ப்புகளையும், பொருளாதார ஸ்திர தன்மையையும் உறுதி படுத்தும், ஒருவர் தொழில் வழியிலான மிகப்பெரிய வெற்றிகளை பெற மேற்சொன்ன பாவாக வலிமைகளை கொண்டிருப்பது அவசியமாகிறது, ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமல்ல, எனவே சுய ஜாதகத்தில் கேந்திர கோணங்கள் வலிமை பெற்று இருப்பதுடன் நடைபெறும் திசா புத்தி எதிர்வரும் திசா புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அன்பர்கள் சுய தொழில் செய்வதால் நிச்சயம் சிறப்பான வெற்றிகளை பெற இயலும்.
லக்கினம் : மிதுனம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 4ம் பாதம்
தங்களது சுய ஜாதக அமைப்பின் படி 1,3,5,9,10,11ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, 4ம் வீடு வலிமையுடனும், 2,6,7,12ம் வீடுகள் வலிமை அற்றும், 8ம் வீடு கடுமையான பாதிப்புடனும் இருப்பது தங்களின் சுய ஜாதக வலிமை நிலையாகும், தங்களின் முதல் கேள்விக்கான பதில் தாங்கள் நிச்சயம் சுய தொழில் செய்யலாம், ஏனெனில் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகளில் 7ம் வீட்டை தவிர மற்ற வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது சிறப்பான ஜீவன யோகத்தை நல்கும் 7ம் வீடு பாதிப்பது தங்களுக்கு கூட்டு தொழில் சிறப்பாக அமையாது என்பதுடன் வியாபாரம் சார்ந்த தொழில்களும் சற்று சிரமத்தை தரக்கூடும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
சுய ஜாதகத்தில் நெருப்பு தத்துவ ராசியான மேஷமும், காற்று தத்துவ ராசியான துலாமும் மிகவும் வலிமையுடன் இருப்பதால் தாங்கள் தொழில் நுட்பம் அல்லது அறிவார்ந்த தொழில்களில் மிகப்பெரிய வெற்றிகளை பெற இயலும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
கூட்டு தொழில் சிறப்பை தருமா ?
நிச்சயம் வாய்ப்பில்லை ஏனெனில் சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் வலிமை பெற்ற போதிலும் அது வாழ்க்கை துணை வழியிலான நன்மைகளை மட்டுமே நடைமுறைக்கு கொண்டுவரும், கூட்டு தொழில் செய்வதற்கு உண்டான களத்திர ஸ்தான வலிமை என்பது தங்களுக்கு சிறிதும் இல்லை என்பதை கருத்தில் கொள்வது தங்களது தொழில் மேன்மைக்கு சிறப்பான வெற்றிகளை தரும்.
எதிர்வரும் சூரியன் திசை மற்றும் சந்திரன் திசை எவ்வித பலாபலன்களை தரும் ?
சூரியன் திசை தங்களுக்கு 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பூர்வபுண்ணிய ஸ்தான பலனை ஏற்று நடத்திடுவது, தங்களின் அறிவார்ந்த முயற்சிகளுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றிகளை குறிக்கின்றது, தெய்வீக அனுக்கிரகத்தால் கலைகளில் தேர்ச்சி, புத்திசாலித்தனத்தால் ஆதாயம், பெற்ற குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கை, விரைவான பொருளாதார முன்னேற்றம், சுய சிந்தனை மூலம் பூர்வீகத்தில் யோக வாழ்க்கையை பெரும் அமைப்பு என எதிர்பாராத பரிபூர்ண நன்மைகளை தர சூரியன் திசை தங்களுக்காக காத்துகொண்டு இருக்கின்றது, அதற்க்கு அடுத்து வரும் சந்திரன் திசை சுக ஸ்தான வழியில் இருந்து சுகபோக யோக வாழ்க்கையை தன்னிறைவாக வாரி வழங்க தயார் நிலையில் இருப்பது தங்களின் வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கு கட்டியம் கூறுகிறது என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை, வாழ்த்துக்கள்.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் நிதி நிலையை சிறப்பிக்கும் 2,6,7,8,12ம் வீடுகள் பாதிக்கப்படுவது தங்களின் நிதி மேலாண்மையை கடுமையாக பாதிக்கும், எனவே நிதி நிலை சார்ந்த மேலாண்மையை தெளிவாக கற்றுணர்ந்து சுய தொழில் செய்வதே சிறப்பான நன்மைகளை தரும் அதிர்ஷ்டம் உள்ளது என்ற போதிலும் நிதி மேலாண்மை இல்லை எனில் யாதொரு பலாபலனும் முழுமை பெறாது என்பதை கருத்தில் கொள்க, மேலும் 8ம் வீடு கடுமையாக பாதிக்கப்படுவது மற்றவர்களை நம்பி அதிக முதலீடுகளை செய்வது தங்களின் தொழில் வாழ்க்கைக்கு தாங்களே மூடுவிழா நடத்துவதற்கு நிகரான பலாபலன்களை வழங்கிவிடும் என்பதை கருத்தில் கொள்க.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
சனி, 6 ஜனவரி, 2018
தொழில் வெற்றி, பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் சுய ஜாதக பாவக வலிமை !
சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றியும், தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து தரும் யோக அவயோகம், நன்மை மற்றும் தீமையை பற்றிய தெளிவும், விழிப்புணர்வும் நமக்கு கிடைத்துவிட்டால், நமது வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளையும் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு தடையேதும் இருக்காது என்பது மறுக்க இயலாத உண்மை, மேற்கண்ட விஷயங்கள் பற்றிய தெளிவுஎதும் இல்லாமல் செய்யப்படும் காரியங்களில், நமது உழைப்பும் நேரமும் வீண் விரையம் ஆவதை தவிர்க்க இயலாது, குறிப்பாக சுய ஜாதகத்தில் நமக்கு உகந்த தொழில் வாய்ப்பினை அறிந்து அதன் வழியில் நமது உழைப்பை போடும்பொழுது, நமது வெற்றியை எவராலும் தடுக்க இயலாது, பெரும்பாலான அன்பர்களின் வாழ்க்கை தமக்கு உகந்த ஜீவனத்தை தேடாத ஒரே காரணத்தால், அவர்களின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வசதி வாய்ப்புகள் கேள்விக்குறியாகிவிட அதிக வாய்ப்புகள் உள்ளது, நமது வாழ்க்கையின் ரகசியங்களை துல்லியமாக அறிந்துகொள்ள நமக்கு இறைவன் கொடுத்த ஓர் அட்ஷய பாத்திரம் நமது சுய ஜாதகமே, இதை கருத்தில் கொண்டு செயல்படுவோர் வாழ்க்கையில் தன்னிறைவான முன்னேற்றத்திற்கும், அதிர்ஷ்டகரமான சுபயோகங்களுக்கும் தடையேதும் இருக்காது அன்பர்களே, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.
சுய ஜாதகத்தில் ஒருவருக்கு வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து இன்னல்களும் நடைமுறைக்கு வருவது இயற்க்கை, வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலாபலன்களை சுவீகரிக்கவும், வலிமையற்ற பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும் நமக்கு சுய ஜாதகத்தின் அவசியம் மிகவும் தேவை படுகிறது, நவகிரகங்களின் திசா புத்திகள் நமக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது நமக்கு சுபயோக பலன்களும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது அவயோக பலன்களும் நிச்சயம் நடைமுறைக்கு வரும், இதை தெளிவாக நாம் உணர்ந்துகொள்ளும் பொழுது நமது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் பரிபூர்ணமாக வந்துசேரும் என்பதை மறுப்பதற்கில்லை, சுபயோக பலன்கள் நடைமுறைக்கு வரும் காலங்களின் நமது முயற்சிகளும், செயல்திறனும் அதிகரிப்பது நமக்கு தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகத்தால் நமது வாழ்க்கையில் சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும், கீழ்கண்ட ஜாதகருக்கு பாவக வலிமை வழங்கும் சுபயோக பலன்களை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
லக்கினம் : சிம்மம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்
ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :
1,3,9,11ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :
7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,8,12ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
இந்த சிம்மலக்கின ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி 1,2,3,4,5,9,10,11ம் வீடுகள் வலிமை பெற்ற பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் 1,2,3,4,5,9,10,11ம் பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும், 6,7,8,12ம் வீடுகள் வலிமை அற்ற பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் 6,7,8,12ம் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களை தரும்.
நமக்கு தற்போழுது தெரியவேண்டிய விஷயம் ஜாதகருக்கு சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் சரியான தொழில் எது ? தவிர்க்க வேண்டிய தொழில் எது ? நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தரும் பலாபலன்கள் என்ன ? என்பது மட்டுமே .
ஜாதகருக்கு உகந்த தொழில் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்ய ஜீவன ஸ்தான தொடர்பு மற்றும் அதன் வலிமையினை கருத்தில்கொள்வது அவசியமாகிறது, 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையை தெளிவுபடுத்துகிறது, ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால் ஜாதகர் சுய தொழில் செய்ய அருகத்தையுடையவர் என்பது உறுதியாகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாகவும், ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் 21 பாகையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியான மிதுனத்தில் 7 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகர் ஸ்திர தன்மையுடனான மண் தத்துவம் சார்ந்த தொழில்களை தேர்வு செய்வதே ஜாதகருக்கு அபரிவிதமான தொழில் வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், உதாரணமாக மண்ணில் கிடைக்கும் உலோக பொருட்கள், கற்கள், மணல், கட்டிட உபகரண பொருட்கள், வண்டி வாகனம் போன்ற தொழில்கள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக வெற்றி வாய்ப்புகளை தொழில் ரீதியாக வாரி வழங்கும், தனது பேச்சு திறனை கொண்டு முதலீடு ஏதும் செய்யாமல் செய்யும் தொழில்கள் வழியில் இருந்தும் ஜாதகருக்கு தொழில் அமையும், வட்டி தொழில் அல்லது ஆபரணங்களை அடகு பிடிக்கும் தொழில், வீட்டு உபகரண பொருட்கள், மின் உபகரண பொருட்கள் வழியில் இருந்தும் ஜாதகருக்கு முன்னேற்றம் உண்டாகும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதால் ஜாதகர் தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வதில் யாதொரு குழப்பமும் ஏற்படாது என்று தெளிவாக கூறமுடியும்.
ஜாதகர் தவிர்க்க வேண்டிய தொழில் என்பது சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற பாவக தொடர்பு வழியில் இருந்து உணர இயலும், மேற்கண்ட ஜாதகருக்கு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு என்பது 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது என்றால் அது மிகையில்லை, அடிப்படையிலேயே ஜாதகருக்கு கூட்டு தொழில் என்பது ஆகாத அமைப்பு என்பதை தெளிவு படுத்த ஜோதிடதீபம் கடமைப்பட்டுள்ளது, குறிப்பாக ஜாதகர் கூட்டு முயற்சி செய்யும் தொழில்கள் அனைத்திலும் கடுமையான விரையங்களை சந்திக்கவேண்டிவரும், வெளிநாடுகள் மற்றும் வெளியூர் ஏற்றுமதி சார்ந்த தொழிலால் ஜாதகர் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதால் கூட்டு முயற்சியை தவிர்ப்பது நல்லது, விரையஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான 4ம் வீடாகவும், சர நீர் ராசியாகவும் அமைவதால் அழியும் பொருட்களை வைத்து தொழில் செய்வதும் கடும் நஷ்டத்தை தரும், குறிப்பாக பல் பொருட்கள், தானியம், காய்கறி, உணவு பொருட்கள் என அன்றுஅன்று அழியும் நீர்த்துவம் சார்ந்த தொழில்களை தேர்வு செய்யாமல் இருப்பதே ஜாதகருக்கு சிறந்த எதிர்காலத்தை தரும்.
நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு நல்ல கல்வி அறிவை மட்டும் சிறப்பாக வழங்கியிருக்கிறது, சுக்கிரன் திசையில் கேது புத்தி ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மண் தத்துவம் சார்ந்த புதிய தொழில் வாய்ப்புகளை நல்கும், எதிர்வரும் சூரியன், திசை 2ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு கை நிறைவான வருமான வாய்ப்பை தனது பேச்சு திறன் மூலம் வாரி வழங்கும், சந்திரன் திசை 2,6,8,12ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது 2ம் பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தந்த போதிலும் 6,8,12ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது என்பது ஜாதகர் அவசியம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமாக உள்ளது, எதிர்வரும் சூரியன் திசையில் ஜாதகர் கூட்டு முயற்சியை தவிர்த்து சுய தொழில் செய்து நலம் பெறுவதே அவசியமாகிறது, குறிப்பாக ஜாதகர் அழிவு பொருட்களை அடிப்படையாக கொண்டு எந்த தொழிலும் செய்வது ஜாதகருக்கு உகந்தது அல்ல !
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
இந்த சிம்மலக்கின ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி 1,2,3,4,5,9,10,11ம் வீடுகள் வலிமை பெற்ற பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் 1,2,3,4,5,9,10,11ம் பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும், 6,7,8,12ம் வீடுகள் வலிமை அற்ற பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் 6,7,8,12ம் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களை தரும்.
நமக்கு தற்போழுது தெரியவேண்டிய விஷயம் ஜாதகருக்கு சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் சரியான தொழில் எது ? தவிர்க்க வேண்டிய தொழில் எது ? நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தரும் பலாபலன்கள் என்ன ? என்பது மட்டுமே .
ஜாதகருக்கு உகந்த தொழில் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்ய ஜீவன ஸ்தான தொடர்பு மற்றும் அதன் வலிமையினை கருத்தில்கொள்வது அவசியமாகிறது, 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையை தெளிவுபடுத்துகிறது, ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால் ஜாதகர் சுய தொழில் செய்ய அருகத்தையுடையவர் என்பது உறுதியாகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாகவும், ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் 21 பாகையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியான மிதுனத்தில் 7 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகர் ஸ்திர தன்மையுடனான மண் தத்துவம் சார்ந்த தொழில்களை தேர்வு செய்வதே ஜாதகருக்கு அபரிவிதமான தொழில் வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், உதாரணமாக மண்ணில் கிடைக்கும் உலோக பொருட்கள், கற்கள், மணல், கட்டிட உபகரண பொருட்கள், வண்டி வாகனம் போன்ற தொழில்கள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக வெற்றி வாய்ப்புகளை தொழில் ரீதியாக வாரி வழங்கும், தனது பேச்சு திறனை கொண்டு முதலீடு ஏதும் செய்யாமல் செய்யும் தொழில்கள் வழியில் இருந்தும் ஜாதகருக்கு தொழில் அமையும், வட்டி தொழில் அல்லது ஆபரணங்களை அடகு பிடிக்கும் தொழில், வீட்டு உபகரண பொருட்கள், மின் உபகரண பொருட்கள் வழியில் இருந்தும் ஜாதகருக்கு முன்னேற்றம் உண்டாகும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதால் ஜாதகர் தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வதில் யாதொரு குழப்பமும் ஏற்படாது என்று தெளிவாக கூறமுடியும்.
ஜாதகர் தவிர்க்க வேண்டிய தொழில் என்பது சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற பாவக தொடர்பு வழியில் இருந்து உணர இயலும், மேற்கண்ட ஜாதகருக்கு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு என்பது 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது என்றால் அது மிகையில்லை, அடிப்படையிலேயே ஜாதகருக்கு கூட்டு தொழில் என்பது ஆகாத அமைப்பு என்பதை தெளிவு படுத்த ஜோதிடதீபம் கடமைப்பட்டுள்ளது, குறிப்பாக ஜாதகர் கூட்டு முயற்சி செய்யும் தொழில்கள் அனைத்திலும் கடுமையான விரையங்களை சந்திக்கவேண்டிவரும், வெளிநாடுகள் மற்றும் வெளியூர் ஏற்றுமதி சார்ந்த தொழிலால் ஜாதகர் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதால் கூட்டு முயற்சியை தவிர்ப்பது நல்லது, விரையஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான 4ம் வீடாகவும், சர நீர் ராசியாகவும் அமைவதால் அழியும் பொருட்களை வைத்து தொழில் செய்வதும் கடும் நஷ்டத்தை தரும், குறிப்பாக பல் பொருட்கள், தானியம், காய்கறி, உணவு பொருட்கள் என அன்றுஅன்று அழியும் நீர்த்துவம் சார்ந்த தொழில்களை தேர்வு செய்யாமல் இருப்பதே ஜாதகருக்கு சிறந்த எதிர்காலத்தை தரும்.
நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு நல்ல கல்வி அறிவை மட்டும் சிறப்பாக வழங்கியிருக்கிறது, சுக்கிரன் திசையில் கேது புத்தி ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மண் தத்துவம் சார்ந்த புதிய தொழில் வாய்ப்புகளை நல்கும், எதிர்வரும் சூரியன், திசை 2ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு கை நிறைவான வருமான வாய்ப்பை தனது பேச்சு திறன் மூலம் வாரி வழங்கும், சந்திரன் திசை 2,6,8,12ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது 2ம் பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தந்த போதிலும் 6,8,12ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது என்பது ஜாதகர் அவசியம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமாக உள்ளது, எதிர்வரும் சூரியன் திசையில் ஜாதகர் கூட்டு முயற்சியை தவிர்த்து சுய தொழில் செய்து நலம் பெறுவதே அவசியமாகிறது, குறிப்பாக ஜாதகர் அழிவு பொருட்களை அடிப்படையாக கொண்டு எந்த தொழிலும் செய்வது ஜாதகருக்கு உகந்தது அல்ல !
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
திங்கள், 1 ஜனவரி, 2018
சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் முக்கியத்துவம் மற்றும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் ராஜயோக பலாபலன்கள் !
பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகிவற்றின் அடிப்படையில் கணிதம் செய்யப்படும் சுய ஜாதக வலிமை என்பது தனித்துவம் பெற்ற அமைப்பாகும், தனித்துவம் கொண்ட சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்நாளில் யாதொரு இன்னல்களையும் சந்திக்காமல் மிகவும் சிறப்பான முன்னேற்றங்களை தன்னிறைவாக பெறுவார் என்பதில் மாற்று கருத்து இல்லை, குறிப்பாக சுய ஜாதகத்தில் சம வீடுகள் எனப்படும் 1,3,11ம் பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கு வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையும், உடல் நலம் மனநலம் சிறந்து விளங்கும், பூர்ண ஆயுள் பலமும், புகழ் கீர்த்தி மற்றும் அதிகார யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், கோண வீடுகள் என்று அழைக்கப்படும் 5,9ம் பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகரின் கல்வி அறிவு, செயல்திறன் மற்றும் ஜாதகரின் தனி திறமைகளை வெளிப்படுத்தும், கேந்திர வீடுகள் எனப்படும் 2,4,6,7,8,10,12ம் பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கு வருமானம் குடும்பம், சொத்து சுகம் வண்டி வாகனம், குறுகிய கால அதிர்ஷ்டம் மற்றும் உடல் நலம், வாழ்க்கை துணை, நண்பர்கள், பொதுமக்கள் மற்றும் கூட்டு முயற்சியில் வெற்றி, திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை வழியிலான வருமான வாய்ப்பு, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, கெளரவம் மிக்க தொழில், சரியான தொழில் தேர்வு, பொருளாதார வளர்ச்சி, தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம், முதலீடுகளில் வரும் அதிக லாபம், மனநிறைவு, தாம்பத்திய இன்பம், அயன சயன சுகம் மற்றும் நல்ல உறக்கம் என்ற வகையில் சுபயோகங்களை நல்கும்.
ஜெனன நேரத்தில் அமையும் நமது சுய ஜாதகம் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஜெனன காலத்தில் அமையும் சுய ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பின், நமது வாழ்க்கையில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை அனுபவிக்க தடையேதும் இருக்காது என்பது மறுக்க இயலாத உண்மையாகும், இதை கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !
லக்கினம் : கன்னி
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 4ம் பாதம்
மேற்கண்ட கன்னி லக்கின ஜாதகருக்கு 1,2,3,4,5,6,7,9,10,11,12 ஆகிய 11வீடுகளும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், 8ம் வீடு மட்டும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம், ஜாதகரின் ஜெனன நேரம் மேற்கண்ட வலிமை மிக்க யோக ஜாதகத்தை வழங்கியிருப்பது ஜாதகருக்கு கிடைத்த பாக்கியம் என்றே சொல்லலாம், சுய ஜாதகம் லக்கினம் முதல் பதினோரு பாவகங்கள் வழியில் இருந்து யோக பலன்களை வழங்குவது என்பது ஜாதகருக்கு சிறப்பான யோக வாழ்க்கையை தங்குதடையின்றி வாரி வழங்கும், மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் எனும் 11ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியாகவும், சுக ஸ்தானமாகவும் அமைவதே மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும் ( கலியில் கடகம் வலுத்தவன் சகல யோகங்களையும் பெறுவான் என்ற வாக்கிற்கு பொருத்தமான ஜாதகம் ) , ஜாதகர் நல்ல கல்வி அறிவை பெற்று இருக்கின்றார், வளரும் சூழ்நிலையில் நல்ல யோக வாழ்க்கையுடன் கல்விக்காலம் நிறைவடைந்தவுடன், கடகம் குறிப்பிடும் வண்டி வாகன தொழில், விவசாயம் மற்றும் பால் பண்ணை தொழிலில் குறுகிய காலத்தில் அபரிவிதமான வளர்ச்சியை பெற்றிருப்பது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் தன்மையை காட்டுகிறது.
மேற்கண்ட ஜாதகர் லக்கின வழியில் இருந்து நீண்ட ஆயுள், புகழ் , கீர்த்தி, சுய முன்னேற்றம், வளரும் சூழ்நிலையில் யோக வாழ்க்கை, தன்னிறைவான பொருளாதார வசதிகள் என்றவகையிலும், 2ம் பாவக வழியில் அடிப்படைக்கல்வியில் வெற்றி, சிறந்த வாத திறமை, அருமையான குடும்ப வாழ்க்கை, கை நிறைவான வருமான வாய்ப்பு, தெய்வீக அனுகிரகம் சரளமான பணவசதி என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, சகல சௌபாக்கியம் வீரியமிக்க செயல்திறன், தைரியம் மற்றும் துணிச்சலான செயல்பாடுகள், பயமின்மையுடன் வெற்றிகொள்ளும் வாய்ப்பை நல்குகிறது, 4ம் பாவக வழியில் தாய் வழியிலான ஆதரவு சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், 5ம் பாவக வழியில் சமயோசித அறிவுத்திறன், கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, நல்ல புத்திர பாக்கியம் பூர்வீக சொத்தில் ஜீவிக்கும் யோகம், 6ம் பாவக வழியில் குறுகிய கால வெற்றி வாய்ப்புகள், எதிர்ப்புகள் தரும் நன்மைகள், எதிரியை வெல்லும் வல்லமை, நல்ல உடல் ஆரோக்கியம், விரைவாக குணம் பெரும் யோகம் 7ம் பாவக வழியில் சிறந்த வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள், கூட்டாளிகள், பொதுமக்கள் ஆதரவு, பிரபல்ய யோகம், தன்னிறைவான பொருளாதார வசதி, வெளிநாடுகளில் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியில் வெற்றிகள் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும்.
9ம் பாவக வழியில் ஜாதகருக்கு வருமுன் உணர்ந்து செயல்படும் தன்மையை தரும், ஆன்மீக வெற்றி, கடவுள் அனுக்கிரகம் மற்றும் பெரிய மனிதர்கள் ஆதரவை தரும், 10ம் பாவக வழியில் சுய கவுரவம், தொழில் வெற்றி, வாத திறமை செய்யும் செயல்களில் பொறுப்புணர்வு, தொழில் வழியிலான அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், சிறந்த ஆளுமை திறன், மதிப்புக்கு உரிய செயல்கள், சிறந்த திட்டமிடுதல் என்ற வகையில் சுபயோகங்களை தரும், 11ம் பாவக வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டம், தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி, மதிப்பு மிக்க செயல்பாடுகள், எதிர்பாராத அதிர்ஷ்டம், திட்டமிட்டு வெற்றியை பெரும் யோகம், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வல்லமை, நல்ல குணம், உதவி செய்யும் மனப்பான்மையை தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு திருப்திகரமான மனநிலை, போதும் என்ற மனம், நல்ல உறக்கம், அயன சயன சுகம், செய்த முதலீடுகள் வழியில் இருந்து வரும் மிதமிஞ்சிய லாபம், லட்சியங்கள் நிறைவேறும் தன்மை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும், மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகர் 11 பாவக வழியில் இருந்து பரிபூர்ண லாபங்களை தன்னிறைவாக பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
மேலும் தற்போழுது நடைபெறும் சூரியன் திசை 6ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகருக்கு குறுகிய கால வெற்றிகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எதிர்வரும் சந்திரன் திசை ஜாதகருக்கு சாதகம் இன்றி இருப்பதால் சந்திரன் திசையில் மிகவும் கவனமாக செயல்படுவது அவசியமாகிறது, சுய ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பதால் வாழ்க்கை முன்னேற்றங்கள் என்பது அபரிவிதமானதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
குறிப்பு :
சுய ஜாதக வலிமை என்பது சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து தன்னிறைவான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் பரிபூர்ண யோக பலன்களை தடையின்றி பெறுவார், மேற்கண்ட ஜாதகத்தில் அடுத்து வரும் சந்திரன் திசை வலிமை அற்ற பலனை ஏற்று நடத்துவது சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை சற்று தடை செய்யும் என்பது கவனிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 4ம் பாதம்
மேற்கண்ட கன்னி லக்கின ஜாதகருக்கு 1,2,3,4,5,6,7,9,10,11,12 ஆகிய 11வீடுகளும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், 8ம் வீடு மட்டும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம், ஜாதகரின் ஜெனன நேரம் மேற்கண்ட வலிமை மிக்க யோக ஜாதகத்தை வழங்கியிருப்பது ஜாதகருக்கு கிடைத்த பாக்கியம் என்றே சொல்லலாம், சுய ஜாதகம் லக்கினம் முதல் பதினோரு பாவகங்கள் வழியில் இருந்து யோக பலன்களை வழங்குவது என்பது ஜாதகருக்கு சிறப்பான யோக வாழ்க்கையை தங்குதடையின்றி வாரி வழங்கும், மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் எனும் 11ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியாகவும், சுக ஸ்தானமாகவும் அமைவதே மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும் ( கலியில் கடகம் வலுத்தவன் சகல யோகங்களையும் பெறுவான் என்ற வாக்கிற்கு பொருத்தமான ஜாதகம் ) , ஜாதகர் நல்ல கல்வி அறிவை பெற்று இருக்கின்றார், வளரும் சூழ்நிலையில் நல்ல யோக வாழ்க்கையுடன் கல்விக்காலம் நிறைவடைந்தவுடன், கடகம் குறிப்பிடும் வண்டி வாகன தொழில், விவசாயம் மற்றும் பால் பண்ணை தொழிலில் குறுகிய காலத்தில் அபரிவிதமான வளர்ச்சியை பெற்றிருப்பது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் தன்மையை காட்டுகிறது.
மேற்கண்ட ஜாதகர் லக்கின வழியில் இருந்து நீண்ட ஆயுள், புகழ் , கீர்த்தி, சுய முன்னேற்றம், வளரும் சூழ்நிலையில் யோக வாழ்க்கை, தன்னிறைவான பொருளாதார வசதிகள் என்றவகையிலும், 2ம் பாவக வழியில் அடிப்படைக்கல்வியில் வெற்றி, சிறந்த வாத திறமை, அருமையான குடும்ப வாழ்க்கை, கை நிறைவான வருமான வாய்ப்பு, தெய்வீக அனுகிரகம் சரளமான பணவசதி என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, சகல சௌபாக்கியம் வீரியமிக்க செயல்திறன், தைரியம் மற்றும் துணிச்சலான செயல்பாடுகள், பயமின்மையுடன் வெற்றிகொள்ளும் வாய்ப்பை நல்குகிறது, 4ம் பாவக வழியில் தாய் வழியிலான ஆதரவு சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், 5ம் பாவக வழியில் சமயோசித அறிவுத்திறன், கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, நல்ல புத்திர பாக்கியம் பூர்வீக சொத்தில் ஜீவிக்கும் யோகம், 6ம் பாவக வழியில் குறுகிய கால வெற்றி வாய்ப்புகள், எதிர்ப்புகள் தரும் நன்மைகள், எதிரியை வெல்லும் வல்லமை, நல்ல உடல் ஆரோக்கியம், விரைவாக குணம் பெரும் யோகம் 7ம் பாவக வழியில் சிறந்த வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள், கூட்டாளிகள், பொதுமக்கள் ஆதரவு, பிரபல்ய யோகம், தன்னிறைவான பொருளாதார வசதி, வெளிநாடுகளில் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியில் வெற்றிகள் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும்.
9ம் பாவக வழியில் ஜாதகருக்கு வருமுன் உணர்ந்து செயல்படும் தன்மையை தரும், ஆன்மீக வெற்றி, கடவுள் அனுக்கிரகம் மற்றும் பெரிய மனிதர்கள் ஆதரவை தரும், 10ம் பாவக வழியில் சுய கவுரவம், தொழில் வெற்றி, வாத திறமை செய்யும் செயல்களில் பொறுப்புணர்வு, தொழில் வழியிலான அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், சிறந்த ஆளுமை திறன், மதிப்புக்கு உரிய செயல்கள், சிறந்த திட்டமிடுதல் என்ற வகையில் சுபயோகங்களை தரும், 11ம் பாவக வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டம், தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி, மதிப்பு மிக்க செயல்பாடுகள், எதிர்பாராத அதிர்ஷ்டம், திட்டமிட்டு வெற்றியை பெரும் யோகம், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வல்லமை, நல்ல குணம், உதவி செய்யும் மனப்பான்மையை தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு திருப்திகரமான மனநிலை, போதும் என்ற மனம், நல்ல உறக்கம், அயன சயன சுகம், செய்த முதலீடுகள் வழியில் இருந்து வரும் மிதமிஞ்சிய லாபம், லட்சியங்கள் நிறைவேறும் தன்மை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும், மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகர் 11 பாவக வழியில் இருந்து பரிபூர்ண லாபங்களை தன்னிறைவாக பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
மேலும் தற்போழுது நடைபெறும் சூரியன் திசை 6ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகருக்கு குறுகிய கால வெற்றிகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எதிர்வரும் சந்திரன் திசை ஜாதகருக்கு சாதகம் இன்றி இருப்பதால் சந்திரன் திசையில் மிகவும் கவனமாக செயல்படுவது அவசியமாகிறது, சுய ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பதால் வாழ்க்கை முன்னேற்றங்கள் என்பது அபரிவிதமானதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
குறிப்பு :
சுய ஜாதக வலிமை என்பது சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து தன்னிறைவான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் பரிபூர்ண யோக பலன்களை தடையின்றி பெறுவார், மேற்கண்ட ஜாதகத்தில் அடுத்து வரும் சந்திரன் திசை வலிமை அற்ற பலனை ஏற்று நடத்துவது சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை சற்று தடை செய்யும் என்பது கவனிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
சனி, 25 நவம்பர், 2017
லக்கினாதிபதி சூரியன் திசை, விரையாதிபதி சந்திரன் திசை தரும் பலன்கள் என்ன ?
கேள்வி :
வணக்கம் எனது சுய ஜாதகத்தில் தற்போழுது சூரியன் திசை நடைமுறையில் உள்ளது, சூரியன் லக்கினாதிபதி என்பதால் எனக்கு நன்மையே செய்வார் என்றார்கள் ஆனால் இதுவரை எந்தவித நன்மையையும் சூரியன் திசை தரவில்லை, கடன் மட்டுமே அதிகரித்துள்ளது, எதிர்வரும் சந்திரன் திசை விரையாதிபதி திசை என்பதால், வீண் விரையமே ஏற்படும் என்கின்றனர், எதிர்காலத்தை நினைத்து மிகவும் கவலையாக உள்ளது, தயவு செய்து சந்திரன் திசை எனக்கு இன்னல்களை அதிகம் தருமா ? ஓரளவு நன்மையாவது செய்யுமா தெளிவுபடுத்த வேண்டுகிறேன், " நன்றி "
பதில் :
பொதுவாக சுப ஸ்தானங்களுக்கு அதிபதியான கிரகங்கள் மற்றும் கிரகங்களின் திசாபுத்திகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோக பலன்களை தரும் என்பதும், அசுப ஸ்தானங்களுக்கு அதிபதியான கிரகங்கள் மற்றும் கிரகங்களின் திசாபுத்திகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அவயோக பலன்களை தரும் என்பதும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றிய யாதொரு தெளிவும் இன்றி, பொதுப்படையாக சொல்லப்படும் கருத்துக்களே, ஒருவரின் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் தனிப்பட்ட முறையில் சுபயோக பலன்களையே, அவயோக பலன்களையே தனது திசாபுத்திகளில் ஏற்று நடத்தும் என்பது, சிறிதும் சுயஜாதக கணித அறிவு இல்லாமல் கற்பனையில் கூறப்படும் கருத்துக்களே, இதற்க்கு முக்கியத்துவம் தருவது என்பது நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நாமே தடைக்கற்களை உருவாக்கிக்கொள்வதற்கு இணையானது.
மேலும் கால புருஷ தத்துவ அமைப்ப்பிற்கு நமது சுய ஜாதகத்தில் நவ கிரகங்கள் பெரும் வலிமை நிலையை ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ) கருத்தில் கொண்டு, நமக்கு அவை நன்மை தீமை பலன்களை தரும் என்று கருதுவதும் சுய ஜாதக பாவக வலிமை பற்றிய கணித அறிவு இல்லாமல் கூறப்படும் தவறான கருத்துக்களே, சுய ஜாதக கணிதம் என்பது மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது அவையாவன :
1) ஓர் ஜாதகர் தனது பிறந்த குறிப்பை அடிப்படையாக கொண்டு ( பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ) பெறப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது, சுய ஜாதகத்தை இயக்குவதில் லக்கினமே முதன்மை வகிக்கிறது, இந்த லக்கினத்தை மூலாதாராமாக கொண்டு மற்ற பதினோரு பாவகங்களும் வலிமை அல்லது வலிமை அற்ற தன்மையை பெறுகின்றது ( லக்கினம் உற்பட ) இதில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் நன்மை மற்றும் சுபயோக பலன்களையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் தீமை மற்றும் அவயோக பலன்களை ஜாதகர் தனது வாழ்நாளில் அனுபவிக்கும் தன்மையை பெறுகிறார்.
2) ஓர் ஜாதகர் தனது பிறந்த குறிப்பை அடிப்படையாக கொண்டு ( பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ) பெறப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் பலாபலன்களையே, சுய ஜாதகத்தில் நவகிரகங்களின் திசாபுத்திகள் சுவீகரித்து தனது திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் வழங்குகிறது, நவகிரகங்கள் தான் அமர்ந்த இடத்தின் பலனையே, பார்த்த இடத்தின் பலனையே தனது திசாபுத்திகளில் தரும் என்று கருதுவதும், தான் பெற்ற ஆதிபத்யத்தின் பலனை தனது திசாபுத்திகளில் தரும் என்று கருதுவதும் உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை அல்லது புத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமை என்ன ? அது தரும் பலாபலன்கள் என்ன ? என்ற அடிப்படை விஷயம் அறியாமல் கற்பனையில் கூறப்படும் கருத்துக்களே என்றால் அது மிகையில்லை.
3) கோட்சார கிரகங்களின் பலன்கள் என்பது தற்போழுது பெரும்பாலும் சந்திரன் நின்ற இடத்தை ( ராசியை ) அடிப்படையாக கொண்டு பலன் கூறப்படுவதும் தவறான அணுகு முறையே, நமக்கு சுய ஜாதகம் உள்ளது என்றால் கோட்சார பலாபலன்களை நமது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் சம்பந்த படுத்தி கோட்சார பலன்களை அறிந்துகொள்வதே சரியானது, இதுவே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு துல்லியமான பலாபலன்களை கூறுவதற்கு ஏதுவானதாக அமையும், மேற்கூறிய விஷயங்களை, கேள்விகள் வினவிய அன்பரின் சுய ஜாதகத்துடன் பரீட்சித்து பார்த்து ( உதாரண ஜாதகமாக கொண்டு ) தெளிவு பெறுவோம் அன்பர்களே !
லக்கினம் : சிம்மம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம்
சூரியன் லக்கினாதிபதி, லக்கினாதிபதி திசை ஏன் நன்மையை தரவில்லை ?
பொதுவாக லக்கினாதிபதி என்ற முறையில் ஓர் ஜாதகருக்கு, லக்கினாதிபதி திசை நன்மையை தரும் என்பது தவறான கருத்து, லக்கினாதிபதி திசை என்றாலும் சரி, யோகாதிபதி திசை என்றாலும் சரி நமது ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை பொறுத்தே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோக பலன்களோ, அவயோக பலன்களோ நடைமுறைக்கு வரும், லக்கினாதிபதி என்ற ஓர் தகுதியை வைத்து, அவரது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் நன்மையை மட்டுமே வழங்கும் என்பது தவறான கருத்து, மேற்கண்ட ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகருக்கு லக்கினாதிபதி திசை என்றாலும், அவரது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 2,6,8,12ம் வீடுகளின் பலனை தனது திசையில் ஏற்றுநடத்துவதால் ஜாதகருக்கு லக்கினாதிபதி திசை நன்மைகளை தரவில்லை, சூரியன் திசை ஜாதகருக்கு ( 20/04/2012 முதல் 20/04/2018 வரை ) சுய ஜாதகத்தில் 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் விரைய ஸ்தான பலனை வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் இன்னல்கள், வருமான பாதிப்பு, வரும் வருமானம் மற்றும் தனம் விரையமாகும் தன்மை, வாக்கு வன்மை அற்ற நிலை என்றவகையில் இன்னல்களையும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் தொந்தரவுகள், எதிரி தொல்லை, கடன் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலை, வீண் அவப்பெயர், எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள் என்றவகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை வழியிலான வீண் செலவுகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் வீண் விரையம், மற்றவர்களை நம்பி தரும் பணம் மற்றும் பொருட்கள் வழியில் இருந்து வரும் திடீர் இழப்புகள் என்ற வகையில் இன்னல்களை தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் மன நிம்மதி கேள்விக்குறியாக மாறும், நிம்மதியின்றி அதிக மனஉளைச்சலை ஜாதகர் எதிர்கொள்ளும் நிலையை தரும், முதலீடுகளில் எதிர்பாராத பேரிழப்புகளை தரும், இதன் தாக்கம் ஜாதகரின் மனநிம்மதியை சீர்குலைக்கும், சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாமல் போராட்ட வாழ்க்கையை ஜாதகர் எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகவேண்டிய சூழ்நிலையை தரும், ஜாதகர் லக்கினாதிபதி திசை நன்மையை தரும் என்ற ஆலோசனையின் பெயரில் செய்த முதலீடுகள் அனைத்தும் வீண் விரையம் என்ற நிலையை அடைந்ததற்கு அடிப்படை காரணமே, சுய ஜாதகத்தில் சூரியன் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்தியது என்று தெரியாமல் வழங்கிய தவறான ஜாதக ஆலோசனையே என்றால் அது மிகையில்லை, நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தியிருந்தால் ஜாதகருக்கும் இது போன்ற தவறான ஜோதிட ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்காது, சிறந்த ஜோதிடர் கிடைத்திருப்பர், ஜாதகருக்கும் சரியான ஆலோசனை கிட்டியிருக்கும், விதியின் பயனை வெல்ல ஜாதகரின் குல தெய்வமும், பித்ருக்களின் ஆசியையும் பெற தவறிவிட்டார் என்பதுடன் உதாசீனம் செய்தார் என்பது வருந்தத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகரின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாகவும், சர நீர் ராசியாகவும் அமைவது ஜாதகரின் மனநிலையை வெகுவாக படுத்தியெடுத்துவிட்டது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை,
விரையாதிபதி சந்திரன் திசை விரையத்தை தரும், வீழ்ந்து கிடக்கும் ஜாதகரை விழிப்புணர்வுடன் வெற்றிகொள்ள செய்யுமா ?
எதிர்வரும் விரையாதிபதி சந்திரன் திசை தரும் பலன் என்ன? என்பதை காணுமுன் கிராமங்களில் உள்ள பெரியோர்கள் ஓர் " செலவேந்தரம் " ஒன்று சொல்வதுண்டு அதாவது " கப்பல் வியாபாரத்தில் விட்ட காசை, கட்டில் கயிறு திரித்து பெற முடியாது " என்று சொல்வதுண்டு இதற்க்கு அர்த்தம் நாம் எங்கு விட்டோமோ அங்கு இருந்துதான் அதை பெற முடியும் என்பதாக அமையும், எனவே ஜாதகர் லக்கினாதிபதி திசையில் வெகு விரயங்களை சந்தித்து விட்டார், ஆனால் விரைய ஸ்தான அதிபதியான சந்திரன் திசையோ ஜாதகருக்கு வலிமை பெற்ற 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்தி, ஜாதகருக்கு அபரிவிதாமான யோக வாழ்க்கையை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பது ஜாதகருக்கு தற்போழுது " ஜோதிடதீபம் " வழங்கும் சிறப்பான நல்ல செய்தியாகும், மேலும் சந்திரன் திசை முழுவதும் வலிமை பெற்ற வீரிய ஸ்தான பலன்கள் நடைபெறுவது ஜாதகரின் வெற்றி வாய்ப்புகளை தன்னிறைவாக வாரி வழங்கும், ஜாதகரின் வீரிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாகவும், சர காற்று ராசியாகவும் அமைவது வெளிநாடுகளில் இருந்து வரும் சரளமான பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பதுடன், ஜாதகர் இவையனைத்தையும் தனது அறிவு சார்ந்த முயற்சிகளில் இருந்து பரிபூர்ணமாக பெறுவார் என்பதை தெளிவுபடுத்துகிறது, ஜாதகரின் சமயோசித அறிவு புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் சகல விதங்களில் இருந்து தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை வாரி வழங்கும், ஜாதகரின் அறிவின் வீச்சு மிகவும் பிரமாண்டமானதாகவும், ஜாதகரின் அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள் உலக மக்களின் அவசிய தேவையை நிறைவு செய்வதாகவும் அமையும் என்பதை நினைத்து " ஜோதிடதீபம் " வியப்படைகிறது.
3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த செல்வசெழிப்பு, எதிரிகளை வெல்லுதல், நல்ல மனநிலை, சிறந்த சிந்தனை ஆற்றல், சத்தியத்தை மதித்தது நடப்பது, கல்வி கேள்விகளில் வெற்றி, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை, புதிய சிந்தனை மற்றும் புதிய வாய்ப்புகள், ஏஜென்ஜி துறை வழியிலான அபரிவித வளர்ச்சி என்ற எமது ஆசான் அருள்வேல் அய்யாவின் வாக்கிற்க்கு இணங்க, மேற்கண்ட சிம்ம லக்கின ஜாதகர் விரைய ஸ்தான அதிபதியான "சந்திரன்" திசையில் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுவார் என்பதை உறுதிபட தெரிவித்து, மேற்கண்ட ஜாதகருக்கு எதிர்வரும் விரைய ஸ்தான அதிபதி சந்திரன் திசை விரையத்தை தாராது என்ற மனஉறுதியை வழங்குவதுடன், சந்திரன் திசைக்கு பிறகு வரும் செவ்வாய் திசையும் 4,10ம் வீடுகள் வழியில் இருந்து சுபயோக பலன்களையும், செவ்வாய் திசைக்கு பிறகு வரும் ராகு திசை 5ம் வீடு வழியில் இருந்து சகல சௌபாக்கியத்துடன் கூடிய சுபயோக பலன்களையும் வாரி வழங்கும் என்ற திடமான ஜாதக உண்மையை கூற கடமைப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே தருவதால் ஜாதகருக்கு " வானமே எல்லை " என்பதை அறிவுறுத்துவதில் மகிழ்ச்சியும் மிதமிஞ்சிய இறை அருளின் கருணையை நினைத்து உவகை கொள்கிறது, எல்லாம் இறைஅருள் " வாழ்த்துக்கள் " அன்பரே !
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
செவ்வாய், 7 நவம்பர், 2017
தொழில் ஸ்தான வலிமையும், ஜாதகர் பெரும் தொழில் ரீதியான முன்னேற்றமும் !
சுய ஜாதக ரீதியான தொழில் நிர்ணயம் என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக அவசியமானது, ஏனெனில் கால விரையம் தவிர்க்கப்படும், ஜாதகருக்கு உகந்த தொழில் வாய்ப்பை தேர்வு செய்ய உதவி புரியும், தனது ஜீவன முன்னேற்றத்திற்கான திட்டமிடுதல்களை மிக துல்லியமாக செயல்படுத்தும் வல்லமையை ஜாதகர் இதன் மூலம் பெற இயலும், பொதுவாக தமக்கு உகந்த தொழில் வாய்ப்பினை தேர்வு செய்வதற்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையை கருத்தில் கொள்வதுடன் சதுர் கேந்திரங்களான லக்கினம், சுக ஸ்தானம், களத்திரம் மற்றும் ஜீவனம் எனும் நான்கு பாவகங்களின் வலிமையையும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரம் ஜாதகருக்கு எந்த பாவகமாக அமைந்தாலும் அது வலிமை பெற்று இருப்பது தன்னிறைவான தொழில் வெற்றிகளை வாரி வழங்கும்.
சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது மட்டுமே தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கிவிடுவது இல்லை, நடைமுறையிலும், எதிர்காலத்திலும் திசா புத்திகள் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனையே அல்லது வலிமை பெற்ற மற்ற பாவக பலனையே ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் தொழில் ரீதியான யோக பலன்களை அனுபவிக்கும் நிலையை தருகிறது, மேலும் நடைபெறும் திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகர் ஜீவன ஸ்தான வழியில் இருந்து பெரும் நன்மைகளுக்கு தடையேதும் இருக்காது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஓர் சிறப்பை தரும், அதாவது ஜாதகர் தனக்கு உகந்த தொழிலை சரியான வயதில், சரியான நேரத்தில் தேர்வு செய்து அதில் தேர்ச்சியை பெற்று திறன்மிக்க நபராக உருவாக்கி விடும்.
சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற அன்பர்களுக்கு தமக்கு உகந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளவும், அதன் பெயரில் ஈர்ப்பு ஏற்படுவதையும் இயற்கையே நிர்ணயம் செய்துவிடும், உதாரணமாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற அன்பர்களுக்கு தமக்கான தொழில் தொடர்புகளை மிக எளிதில் பெற்றுவிடுவார்கள், தனது நண்பர்கள் வழியிலோ அல்லது தான் கற்ற கல்வி வழியிலோ இது மிக எளிதாக அமைந்துவிடும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற நிலையில் உள்ள அன்பர்களுக்கே இது குதிரை கொம்பாக அமைந்துவிடும், தமக்கான சரியான தொழில் அமைப்பினை தேர்வு செய்வதற்க்கே நீண்ட நெடுங்காலம் ஆகிவிடும், மேலும் கால விரையத்தை ஜாதகரால் தவிர்க்க இயலாது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற அன்பர்களுக்கு நடைமுறையில் உள்ள திசா புத்திகளும், எதிர்வரும் திசா புத்திகளும் சற்று சாதகம் இன்றி இருப்பின் ஜீவன ரீதியான போராட்டங்களை ஜாதகரால் தவிர்க்க இயலாது.
எனவே சுய ஜாதக ரீதியாக பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் ஜாதகர் எந்தவிதமான தொழில் வாய்ப்புகளை தேர்வு செய்து முன்னேற்றம் பெற அருகதை பெற்றவர் என்பதில் தெளிவு பெற்ற பிறகு, சம்பந்தப்பட்ட ஜாதகர் அந்த தொழிலை தேர்வு செய்து நடத்தினால் நிச்சயம் அதில் 100% விகிதம் வெற்றி பெறுவார் என்பதில் மாற்று கருத்து இல்லை, சுய ஜாதகத்தில் தமக்கு பொருந்தாத தொழில்களை ஜாதகர் தவிர்த்துவிடுவதே சகல விதங்களிலும் நன்மையை தரும், உதாரணமாக ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற நீர் தத்துவ ராசிகளுடன் சம்பந்தம் பெற்று இருப்பின், ஜாதகர் நீர் தத்துவம் சார்ந்த தொழில்களை தவிர்த்து விடுவது நல்லது அதாவது விவசாயம், உணவு பொருட்கள், வஸ்த்திர வியாபாரம், அழிவு பொருட்கள் சார்ந்த வியாபரங்கள் மற்றும் தொழில்களை ஜாதகர் தவிர்த்து விடுவதே நல்லது ஏனெனில் மேற்கண்ட தொழில் வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த நஷ்டங்களையே சந்திக்கும் நிலையை தரும், ஜீவன ஸ்தான வலிமை மற்றும் தொழில் முன்னேற்றம் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.
லக்கினம் : மகரம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம்
ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :
1ம் வீடு உயிர் உடல் ஆகிய லக்கினத்துடனே தொடர்பு பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த சிறப்புகளை தரும் அமைப்பாகும், ஜாதகர் மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி, நல்ல உடல் ஆரோக்கியம், சிறந்த மன வலிமை, எதிர்ப்புகளை எதிர்கொண்டு நலம் பெரும் தன்மை, தீர்க்கமான அறிவு மற்றும் சிந்தனை திறன் வருமுன் காக்கும் வல்லமை, நோயில் இருந்து விரைவில் விடுபடும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும், மேலும் லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 13 பாகையும், இரண்டாம் ராசியான ரிஷபத்தில் 17 பாகையும் பெற்று இருப்பது ஜாதகருக்கு சுய கட்டுப்பாடுடன் கூடிய பொறுமையை தரும், நேர்மை மற்றும் சத்தியத்தை மதித்து நடக்கும் தன்மையை தரும், ஜாதகரின் செயல்பாடுகள் யாவும் நேர்மை மிகுந்ததாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
3,8,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் ஆராய்ச்சி மனநிலை அதிகரிக்கும், நல்ல ஞானத்தை வாரி வழங்கும், ஜாதகர் செய்யும் முயற்சிகள் நல்ல வெற்றிகளை பெற்று தரும், நல்ல புத்தி கூர்மை உண்டாகும் அனைத்திலும் வெற்றியை பெரும் யோகத்தை தரும், தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் ஜாதகருக்கு பொருளாதர தன்னிறைவை தரும், சாஸ்திர ஞானம் ஜோதிட அறிவு ஜாதகரின் முன்னேற்றத்தை விருத்தி செய்யும், வெளிநாட்டில் குடியேறும் அமைப்பு, போக்குவரத்து ஏஜென்சி மூலம் லாபம், சகல சௌபாக்கியம் என்ற வகையில் நன்மைகளையும், நல்ல சிந்தனை சிறந்த வாத திறமை, யோக பயிற்சி, கனிம பொருட்கள் மற்றும் சுரங்க பொருட்கள் மூலம் அதிக லாபம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் விருத்தி, நுண்ணறிவு திறன் மூலம் சிறப்பான திட்டமிடுதல்களை நடைமுறைக்கு கொண்டு வரும் வல்லமை என்றவிதத்தில் சுபயோங்களை வாரி வழங்கும்.
8ம் பாவக வழியில் இருந்து சட்ட ரீதியான விஷயங்களில் சாதகமான சூழ்நிலை, வழக்குகளில் வெற்றி மற்றும் சமாதான விரும்பி, அறிவுபூர்வமான செயல்பாடுகள், ரகசிய கலைகளில் ஆர்வம் மற்றும் தேர்ச்சியை தரும், வாழ்க்கை துணை வழியிலான நன்மைகளும் உண்டு, நல்ல நண்பர்கள் வழியில் இருந்து திடீர் செல்வாக்கை பெரும் யோகத்தை தரும், தெய்வீக சிந்தனை மூலம் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெரும் வாய்ப்பு உண்டாகும்.
9ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அபரிவிதமான அறிவு திறனும் புத்திசாலித்தனமும் எந்த ஓர் சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெரும் யோகத்தை தரும், பெரியோர் ஆசி மற்றும் பித்ருக்களின் ஆசி ஜாதகருக்கு வரும் இன்னல்களில் இருந்து விடுவித்து சுபயோகங்களை தரும், சிரமமான சூழ்நிலையை மிக எளிதாக வெற்றி பெரும் யோகத்தை தரும், பயணங்கள் மூலம் லாபமும், சூழ்நிலை மாற்றத்தில் விருப்பத்தையும் தரும், நல்ல ஞானம் உண்டாகும்.
4,10ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும்,சமூகத்தில் பெயரும் புகழும் உண்டாகும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டாகும், நிறைய ஆள் வசதி, சிறந்த நிர்வாக திறமை, பெரிய சொத்து சுக சேர்க்கை, விளையாட்டில் ஆர்வம், சமூக அந்தஸ்து, அரசியல் வெற்றி என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும், தனது தாய் வழியில் இருந்து சுப யோகங்களையும் லாபங்களையும் ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார்.
10ம் பாவக வழியில் இருந்து உத்தியோகம் வியாபாரம் மற்றும் தொழில் வழியில் இருந்து வெற்றி வாய்ப்புகள், தீர்க்கமான முடிவுகள் மற்றும் வாத திறமை, செய்யும் தொழில் வழியில் நல்ல முன்னேற்றம் மற்றும் திடீர் வளர்ச்சி, சர மண் தத்துவ தொழில், ஸ்திர காற்று தத்துவ தொழில் மூலம் அபரிவிதமான முன்னேற்றம் மற்றும் தன சேர்க்கை உண்டாகும், எதிர்பாராத நபர்கள் மூலம் தொழில் விருத்தி, கவுரவம் குறையாத யோக வாழ்க்கை என்ற வகையில் சிறப்புக்களை தரும், சுய தொழில் செய்வதற்கு உண்டான முழு தகுதியும் கொண்டவராக திகழ செய்யும், ஜாதகரின் லட்ச்சியம் மற்றும் திட்டமிடுதல்கள் யாவும் நடைமுறைக்கு வரும், மண் தத்துவம் சார்ந்த தொழில்களில் தனது அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் வெற்றிகளை பெறுவார், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும்.
7ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார முன்னேற்றம், இல்லற வாழ்க்கையில் சந்தோசம், வாழ்க்கை துணையின் ஆதரவும் அன்பும் பரிபூர்ணமாக கிடைத்தல், வெளிநாடு வெளியூரில் இருந்து வரும் தனவரவு, திடீர் அதிர்ஷ்டம், பொதுமக்கள் ஆதரவு, பொதுமக்கள் வழியிலான ஜீவன மேன்மை, அரசியலில் வெற்றி மற்றும் ஆதாயம் உண்டாகும், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் தன ஆதாயம் என்ற வகையில் சிறப்புகளை தரும், களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு காற்று மற்றும் நீர் தத்துவ ராசியில் வியாபித்து இருப்பது ஜாதகரின் அறிவு சார்ந்த செயல்பாடுகளிலும், மனஉறுதி என்ற அமைப்பிலும் சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும்.
12ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிரிகள் சூழ்ச்சி மற்றும் எதிர்ப்புகளே சாதகமாக மாறும் சூழ்நிலையை உருவாக்கும், பதவி உயர்வு தொழில் துறையில் அபரிவிதமான வளர்ச்சி, அதிர்ஷ்டம் என்ற வகையில் சிறப்புக்களை தரும், ரகசிய தொழில் வழியில் இருந்து வருமானம் உண்டாகும், நிம்மதியான உறக்கம் உண்டு, பெரிய முதலீடுகள் வழியில் எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை உண்டாகும், வீடு நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை தரும்.
ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :
2,6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், 2ம் பாவக வழியில் இருந்து குடும்பம் மற்றும் வாக்கு வழியில் இருந்து ஜாதகர் அதிக அளவில் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குடும்பத்தில் சிறு சிறு இன்னல்களை ஜாதகரால் தவிர்க்க இயலாது, குறிப்பாக ஜாதகர் பணம் சார்ந்த விஷயங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியமாகிறது ஏனெனில் தனம் சார்ந்த நடவடிக்கைகள் ஜாதகரின் வாழ்க்கையே கடுமையாக பாதித்துவிட வாய்ப்பு அதிகம், சரியான திட்டமிடுதல்களுடன் ஜாதகர் செயல்படவில்லை எனில் தன்னிடம் உள்ள செல்வங்கள் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலையை உருவாக்கும், குடும்பத்தில் சிரமங்கள் அதிக அளவில் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு , வீண் வாக்குவாதங்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கும்.
6ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிக அளவில் இன்னல்களை தரும், எதிரி தொந்தரவு, கடன் பிரச்சனைகள் ஜாதகரின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், வீண் மருத்துவ செலவினங்கள், திடீர் இழப்புகள் தவிர்க்க இயலாது, அதிக அளவிலான முதலீடுகள் சில நேரங்களில் தொழில் முடக்கத்தை தரக்கூடும், தெளிவான சிந்தனையுடன் செயல்படவில்லை எனில் கடுமையான பாதிப்புகளை ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.
11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் என்பது ஜாதகருக்கு சற்று குறைவென்றே சொல்லலாம், கடின உழைப்பு மட்டும் ஜாதகருக்கு வெற்றிகளை தரும், மேலும் ஜாதகரின் தன்னம்பிக்கை வெகுவாக குறையும் எதிர்ப்புகள் அதிக அளவில் இன்னல்களை தரும், சிந்தனை திறன் வெகுவாக பாதிக்க வாய்ப்பு உண்டு, புதிய முயற்சிகள் சில நேரங்களில் ஜாதகருக்கு பலன்தாராமல் போக வாய்ப்பு உண்டு, சரியான திட்டமிடுதல்களுடன் ஜாதகர் செயல்படுவது அவசியமாகிறது. மேலும் ஜாதகரின் செயல்திறனும் பெரிய அளவில் அதிகரிப்பது சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும்.
5ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு திடீர் நஷ்டம், வீண் விரையம், ஜாமீன் கொடுப்பதால் சிக்கல்கள், குழந்தைகள் வழியில் இருந்து வரும் சிரமங்கள், மன அமைதி இன்மை, தொல்லை தரும் தொடர்புகள், எப்பொழுதும் வீண் மனக்கவலை என்ற வகையில் இன்னல்களை தரும், மேலும் ஜாதகரின் இன்னல்களுக்கு உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை தரும், பொது வாழ்க்கையில் சில சிரமங்களை அதிக அளவில் தர கூடும், எதிர்ப்புகள் அற்ற வாழ்க்கையை ஜாதகர் நினைத்து பார்க்க இயலாது, ஜாதகரின் சுய சிந்தனையும் சில நேரங்களில் சரியான தீர்வுகளை தர மறுக்கும், குல தெய்வத்தின் நிந்தனை ஜாதகருக்கு வரும் இன்னல்களுக்கு மிக முக்கிய காரணமாக அமையும், பொது வாழ்க்கையில் சில இன்னல்களை ஜாதகர் அனுபவித்த ஆக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.
தற்போழுது நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் : ( 10/12/2003 முதல் 10/12/2021 வரை )
ராகு திசை ஜாதகருக்கு 2ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசையை நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பம், வருமானம் மற்றும் வாக்கு வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக ஜாதகரின் பொருளாதர நிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்படும், எதிர்ப்புகள் மிக அதிக அளவில் வந்து சேரும், பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாபம் மற்றும் விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் மனநிம்மதி மற்றும் அதிர்ஷ்டத்தை கேள்விக்குறியாக மாற்றும், ராகு திசை ஜாதகருக்கு சற்று அதிக அளவிலேயே பாதக ஸ்தான வழியிலான இன்னல்களை தந்து கொண்டு இருப்பது கண்கூடான உண்மை, மேலும் குடும்ப வாழ்க்கையிலும் ஜாதகர் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டு இருப்பார், வருமான பற்ற குறை வீண் வாக்குவாதங்கள், சச்சரவுகள் ஜாதகரின் இன்னல்களை வெகுவாக அதிகரிக்கும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் ராகு திசை ஜாதகரின் வாழ்க்கையில் தவிர்க்க இயலாத இன்னல்களை குடும்ப ஸ்தான வழியில் இருந்து தந்து கொண்டு இருக்கின்றது என்பதை ஜாதகர் கவனத்தில் கொள்வது மிக அவசியமாகிறது.
ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி வலிமை பெற்ற விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், குறிப்பாக முதலீடுகளில் நல்ல வருமான வாய்ப்பை நல்கும், நிம்மதி தரும் நிகழ்வுகள் தொழில் துறையில் இருந்து நடைமுறைக்கு வரும், தெய்வீக சிந்தனை மேலோங்கும்.
ராகு திசையில் எதிர்வரும் சூரியன் புத்தி ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும், புதிய சொத்துக்கள் வண்டி வாகன யோகம், வாகனம் சார்ந்த தொழில் துறையில் முன்னேற்றம், சுக போக யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மைகளை தரும், ஜீவன ஸ்தான வழியில் இருந்து திடீர் யோகம் ஜாதகருக்கு உண்டு நல்ல நண்பர்கள் மூலம் தொழில் விருத்தி உண்டாகும், எதிர்பாராத அதிர்ஷ்டம் ஜாதகருக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து பரிபூர்ணமாக கிடைக்கும்.
ராகு திசையில் அடுத்து வரும் சந்திரன் புத்தி விரைய ஸ்தான பலனையும், அதற்க்கு அடுத்து வரும் செவ்வாய் புத்தி பாதக ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையை சற்று பாதிக்க கூடும் என்பதால் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது.
குறிப்பு :
மேற்கண்ட ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பது சிறப்புக்களை வாரி வழங்கும் அமைப்பாகும், இது தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும் இருப்பினும் தற்போழுது நடைபெறும் ராகு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தரும் என்பதால், ராகு திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் புத்திகளில் மட்டும் ஜாதகர் தொழில் ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டு நலம் பெறலாம், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் புத்திகளில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் செய்துகொண்டு இருக்கும் விஷயங்களை மட்டும் கவனம் செலுத்துவது நல்லது, பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க உதவும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
வியாழன், 21 செப்டம்பர், 2017
ராகு திசை தரும் பலனும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பும் !
ஒருவரின் வாழ்க்கையில் அதிக அளவிலான இன்னல்களையும் துன்பங்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாரி வழங்கும் வல்லமை பாதக ஸ்தானத்திற்கு உண்டு, ஒருவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசை எந்த கிரகத்தின் திசை என்றாலும் சரி எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்த கூடாது, அப்படி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற முதுமொழிக்கு பொருத்தமான பலாபலன்களை தர ஆரம்பித்துவிடும், ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் பெரும் பின்னடைவையும், படுதோல்விகளையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் சுப யோகங்கள் இருப்பினும் அவையாவும் பாதக ஸ்தான பலன் நடைமுறையில் உள்ள பொழுது சுபயோக பலன்கள் அனைத்தையும் தடை செய்யும், வாழ்க்கையில் ஜாதகரின் ஆசை, கனவுகள் யாவும் கானல் நீராக போக அதிக வாய்ப்பு உள்ளது, மேலும் ஜாதகர் பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர் என்ற போதிலும், குடத்தில் இட்ட விளக்கு போல், பிரகாசம் குறைந்து பலனேதும் அற்ற வாழ்க்கையை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டிவரும், பாதக ஸ்தானம் தரும் பலாபலன்கள் பற்றி ஓர் சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !
லக்கினம் : மேஷம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம்
நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் : ( 10/12/2003 முதல் 10/12/2021 வரை )
ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை 2ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலாபலன்களை வழங்கி கொண்டு இருப்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிப்பை வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ரிஷப ராசியில் பாதியும், மிதுன ராசியில் பாதியும் வியாபித்து நின்று பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, ஜாதகரின் குடும்ப வாழ்க்கை சார்ந்த இன்னல்களையும், வருமானம் சார்ந்த இன்னல்களையும் கடுமையாக தருவதுடன், எடுக்கும் முயற்சிகள் யாவும் ஜாதகருக்கு பெரிய அளவிலான தொடர் தோல்விகளை வாரி வழங்கி கொண்டு இருப்பது, ஜாதகருக்கு மனம் உடல் சார்ந்த தொந்தரவுகளையும், மனசோர்வையும் தந்து கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் வருமானம் முழுவதும் மற்றவர்களுக்கே சென்றுகொண்டு இருக்கின்றது, ஜாதகரின் உழைப்பும், அறிவு திறனும் வீண் விரயமாகிறது, எந்த ஓர் விதத்திலும் ஜாதகர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க இயலாமல் தனது வாழ்க்கையை தானே போராட்ட நிலைக்கு ஆர்படுத்தி இருப்பது பாதக ஸ்தான வலிமையின் தாக்கத்தை காட்டுகிறது.
ஜாதகருக்கு கடந்த 15 வருடங்களாக ராகு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது என்பது சொல்ல இயலாத துன்பங்களையும் துயரங்களையும், எதிர்பாராத நஷ்டங்களையும், திடீர் இழப்புகளையும், மருத்துவ செலவினங்களையும் பாரபட்சம் பார்க்காமல் வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் மிக பெரிய தோல்விகளையும், நஷ்டங்களையும் மட்டுமே இதுவரை வழங்கி உள்ளது, ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கும்பம் மற்றும் மீனா ராசியில் வியாபித்து நிற்பது ஜாதகரின் அதிர்ஷ்டமின்மையும், தன்னம்பிக்கை குலையும் விதமான நிகழ்வுகளையும் இதுவரை தந்துகொண்டு இருப்பது, ஜாதகரை மனவிரக்கத்தியின் உச்சத்துக்கே அழைத்து சென்று கொண்டு இருக்கின்றது, ஒவ்வொரு நாளும் ஜாதகர், பொருளாதார நெருக்கடிகளை கடுமையாக அனுபவித்து கொண்டு இருப்பதும், வெளியில் சொல்ல இயலாத துன்பங்களை அனுபவித்து கொண்டு இருப்பதும் சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஏற்று நடத்தும் பாதக ஸ்தான பலாபலன்கள் என்றால் அது மிகையில்லை, எனவே ஒருவர் சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் படும் பாடு சொல்ல இயலாத துன்பங்களை தரும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம்.
இருப்பினும் ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி, அதற்க்கு அடுத்து வரும் சூரியன் புத்தி இரண்டும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை முறையே ஜீவனம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு பாதக ஸ்தான இன்னல்களுக்கு இடையே சிறிதளவு நன்மைகளை தரும், அதற்க்கு பிறகு வரும் சந்திரன் மற்றும் செவ்வாய் புத்திகள் ஜாதகருக்கு சாதகமாக இல்லை என்பது மிகுந்த இன்னல்களை ஏற்படுத்தும், ராகு திசைக்கு பிறகு வரும் குரு திசை ஜாதகருக்கு 3,8,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலன்களை தருவது ஜாதகருக்கு பாதக ஸ்தான இன்னல்களில் இருந்து விடுதலையை தரும்.
சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகரின் சொந்த புத்தியை குறிக்கும் மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகரின் சொந்த புத்தியில் செய்யும் காரியங்கள் யாவும் வீண் விரயத்தையும் பெரும் நஷ்டங்களையும் தரும், சுய ஜாதகத்தில் 9ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு பெரியோர் வழங்கும் சொல்புத்தியை குறிக்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 9ம் வீடு பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகர் பெரியோர், நல்ல நண்பர்கள் மாற்றும் ஆன்மீக குரு மார்கள் வழங்கும் அறிவுரையை ஏற்று நடந்து வாழ்க்கையில் சுப யோகங்களை அனுபவிக்கலாம், எதிர்வரும் குரு திசையும் அதையே " கட்டியம் " கூறுகிறது என்பது ஜாதகருக்கு இறைஅருள் வழங்கும் நல்ல வாய்ப்பாகவும், ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை அன்பர்களே !
குறிப்பு :
சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக பலன் என்ன? என்பதில் தெளிவு இல்லாத பொழுது, ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் கண்ணை கட்டிக்கொண்டு வழிதேடுவதற்கு இணையான பலாபலன்களை வழங்கி விடும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்வது நலம் தரும்.
ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை 2ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலாபலன்களை வழங்கி கொண்டு இருப்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிப்பை வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ரிஷப ராசியில் பாதியும், மிதுன ராசியில் பாதியும் வியாபித்து நின்று பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, ஜாதகரின் குடும்ப வாழ்க்கை சார்ந்த இன்னல்களையும், வருமானம் சார்ந்த இன்னல்களையும் கடுமையாக தருவதுடன், எடுக்கும் முயற்சிகள் யாவும் ஜாதகருக்கு பெரிய அளவிலான தொடர் தோல்விகளை வாரி வழங்கி கொண்டு இருப்பது, ஜாதகருக்கு மனம் உடல் சார்ந்த தொந்தரவுகளையும், மனசோர்வையும் தந்து கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் வருமானம் முழுவதும் மற்றவர்களுக்கே சென்றுகொண்டு இருக்கின்றது, ஜாதகரின் உழைப்பும், அறிவு திறனும் வீண் விரயமாகிறது, எந்த ஓர் விதத்திலும் ஜாதகர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க இயலாமல் தனது வாழ்க்கையை தானே போராட்ட நிலைக்கு ஆர்படுத்தி இருப்பது பாதக ஸ்தான வலிமையின் தாக்கத்தை காட்டுகிறது.
ஜாதகருக்கு கடந்த 15 வருடங்களாக ராகு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது என்பது சொல்ல இயலாத துன்பங்களையும் துயரங்களையும், எதிர்பாராத நஷ்டங்களையும், திடீர் இழப்புகளையும், மருத்துவ செலவினங்களையும் பாரபட்சம் பார்க்காமல் வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் மிக பெரிய தோல்விகளையும், நஷ்டங்களையும் மட்டுமே இதுவரை வழங்கி உள்ளது, ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கும்பம் மற்றும் மீனா ராசியில் வியாபித்து நிற்பது ஜாதகரின் அதிர்ஷ்டமின்மையும், தன்னம்பிக்கை குலையும் விதமான நிகழ்வுகளையும் இதுவரை தந்துகொண்டு இருப்பது, ஜாதகரை மனவிரக்கத்தியின் உச்சத்துக்கே அழைத்து சென்று கொண்டு இருக்கின்றது, ஒவ்வொரு நாளும் ஜாதகர், பொருளாதார நெருக்கடிகளை கடுமையாக அனுபவித்து கொண்டு இருப்பதும், வெளியில் சொல்ல இயலாத துன்பங்களை அனுபவித்து கொண்டு இருப்பதும் சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஏற்று நடத்தும் பாதக ஸ்தான பலாபலன்கள் என்றால் அது மிகையில்லை, எனவே ஒருவர் சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் படும் பாடு சொல்ல இயலாத துன்பங்களை தரும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம்.
இருப்பினும் ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி, அதற்க்கு அடுத்து வரும் சூரியன் புத்தி இரண்டும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை முறையே ஜீவனம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு பாதக ஸ்தான இன்னல்களுக்கு இடையே சிறிதளவு நன்மைகளை தரும், அதற்க்கு பிறகு வரும் சந்திரன் மற்றும் செவ்வாய் புத்திகள் ஜாதகருக்கு சாதகமாக இல்லை என்பது மிகுந்த இன்னல்களை ஏற்படுத்தும், ராகு திசைக்கு பிறகு வரும் குரு திசை ஜாதகருக்கு 3,8,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலன்களை தருவது ஜாதகருக்கு பாதக ஸ்தான இன்னல்களில் இருந்து விடுதலையை தரும்.
சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகரின் சொந்த புத்தியை குறிக்கும் மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகரின் சொந்த புத்தியில் செய்யும் காரியங்கள் யாவும் வீண் விரயத்தையும் பெரும் நஷ்டங்களையும் தரும், சுய ஜாதகத்தில் 9ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு பெரியோர் வழங்கும் சொல்புத்தியை குறிக்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 9ம் வீடு பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகர் பெரியோர், நல்ல நண்பர்கள் மாற்றும் ஆன்மீக குரு மார்கள் வழங்கும் அறிவுரையை ஏற்று நடந்து வாழ்க்கையில் சுப யோகங்களை அனுபவிக்கலாம், எதிர்வரும் குரு திசையும் அதையே " கட்டியம் " கூறுகிறது என்பது ஜாதகருக்கு இறைஅருள் வழங்கும் நல்ல வாய்ப்பாகவும், ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை அன்பர்களே !
குறிப்பு :
சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக பலன் என்ன? என்பதில் தெளிவு இல்லாத பொழுது, ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் கண்ணை கட்டிக்கொண்டு வழிதேடுவதற்கு இணையான பலாபலன்களை வழங்கி விடும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்வது நலம் தரும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ஞாயிறு, 23 ஏப்ரல், 2017
சுய ஜாதகம் என்றால் என்ன ? சுய ஜாதகத்தால் நமக்கு என்ன பயன் ?
உன் ஜாதகம்...
1) உன்னை நீ கெடுத்துக் கொண்டால்
ராகு திசை...
2)பிறரை நீ கெடுக்க நினைத்தால்
கேது திசை...
3)பிறரை நீ பழிவாங்க நினைத்தால்
சனி திசை...
4)உன் செல்வாக்கு உயர்ந்திட்டால்
செவ்வாய் திசை...
5)உனக்கு நல்புத்தி வந்துவிட்டால்
புதன் திசை...
6) நிலையான முயற்சி செய்தால்
சூரிய திசை...
7) நிலையற்ற செயல்களென்றால் அங்கே
சந்திர திசை...
8)உனக்காக நீ புண்ணியம் செய்தால்
சுக்ர திசை...
9)உலகிலுள்ள அனைவருக்காகவும் நீ புண்ணியம் செய்தால் உனக்கு குரு திசை...
நேர்மையாக வாழ்பவருக்கு அனைத்தும் சாதகம்,
பாவம் செய்தவருக்கே ஜாதகம்.
மேற்கண்ட தகவல் வாட்ஸ் அப்பில் வந்ததது, இதை பகிர்ந்த அன்பருக்கு உண்மையில் ஜோதிடம் என்றால் என்னவென்றே புரியவில்லை என்பதை தவிர வேறு என்னவென்று சொல்வது, இறுதியில் " நேர்மையாக வாழ்பவருக்கு அனைத்தும் சாதகம் " " பாவம் செய்தவருக்கே ஜாதகம் " என்ற தத்துவ வாசகம் வேறு, இதற்க்கு விளக்கம் தார " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது.
" அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது " என்பது இறைநிலையின் வலிமையை உணர நமக்கு பெரியோர் சொன்ன தத்துவ வார்த்தை, அதைப்போன்றே சுய ஜாதக வலிமை இன்றி சிறு அசைவையும் ஒருவர் நிகழ்த்த இயலாது என்பதனை " ஜோதிட சாஸ்திரம்" பற்றி தெளிவாக உணர்ந்த அறிவார்ந்த சான்றோர் பெருமக்கள் ஏற்றுக்கொள்வார்கள், ஏனெனில் ஒருவர் நேர்மையாளனாக திகழ்வதும், அநீதி இழைப்பவனாக இருப்பதும் சுய ஜாதகத்தின் வலிமை நிலையே என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறாமல் ஒருவன் நேர்மையாளனாக வாழ இயலாது, சுய ஜாதக வலிமை பெறாமல் ஓர் சிறு துரும்பை கூட அசைக்க இயலாது என்ற உண்மையை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
தத்துவங்களும் வாய் வார்த்தைகளும் ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கையை தந்துவிடாது, சுய ஜாதக வலிமையே ஒருவரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தரும், மேலும் அன்பர் பதிவு செய்த கருத்துக்கள் அணைத்தும் உண்மைக்கு புறம்பானது, ராகு, கேது, சனி, சந்திரன் திசைகள் ஒருவருக்கு இன்னல்களை தரும் என்ற விதத்திலும், செவ்வாய்,புதன்,சூரியன், குரு, சுக்கிரன் திசைகள் ஒருவருக்கு நன்மைகளை தரும் என்ற விதத்திலும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது, இது அடிப்படையிலே உண்மை அற்ற கருத்து, ஜோதிட சாஸ்த்திரம் பற்றிய ஓர் தெளிவில்லாமல் விரக்தியின் வெளிப்பாடாக, குத்து மதிப்பாக வாயில் வந்த வார்த்தையாக " ஜோதிடதீபம் " கருதுகிறது, இவர்கள் முதலில் சுய ஜாதகம் என்றால் என்ன? அதன் வலிமை நிலை என்றால் என்ன ? என்பதில் தெளிவு பெறுவது மிக்க நலம் தரும்.
உன்னை நீ கெடுத்துக் கொண்டால்
ராகு திசை...
அப்படியெனில் ராகு திசை நடைபெறும் அன்பர்கள் அனைவரும் அவரவர்களே தம்மை கெடுத்து கொள்வார்கள் என்ற விதத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற லக்கினத்தின் பலனை ராகு திசை ஏற்று நடத்தினால், ஜாதகர் தம்மை வாழ்க்கையில் மிக சிறந்தவனாக நிலை நிறுத்திக்கொள்வார், ஒழுக்க சீலராக திகழ்வார் என்பது தெரியுமா ?
பிறரை நீ கெடுக்க நினைத்தால்
கேது திசை...
வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை கேது திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் பிறருக்கு பலவிதங்களில் உபகார வாழ்க்கையை வழங்குவார் என்பது தெரியுமா ?
பிறரை நீ பழிவாங்க நினைத்தால்
சனி திசை...
வலிமை பெற்ற சத்ரு ஸ்தான பலனை சனி திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், எதிரியையும் நேசிக்கும் வல்லமை கொண்டவராகவும், மக்கள் செல்வாக்கை பெற்று உயர் பதவியை பெறுவார் என்பதும் தெரியுமா?
உன் செல்வாக்கு உயர்ந்திட்டால்
செவ்வாய் திசை...
வலிமை அற்ற ஆயுள் ஸ்தான பலனை செவ்வாய் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், அனைத்தையும் இழந்து நிர்கதியாக நிற்பர் என்பது தெரியுமா ?
உனக்கு நல்புத்தி வந்துவிட்டால்
புதன் திசை...
வலிமை அற்ற பூர்வ புண்ணிய ஸ்தான பலனை புதன் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் சுய அறிவு அற்ற ஓர் அறிவிளியாக இருப்பர் என்பது தெரியுமா?
நிலையான முயற்சி செய்தால்
சூரிய திசை...
வலிமை அற்ற சகோதர ஸ்தான பலனை சூரியன் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் யாவும் படுதோல்வி அடையும் என்பது தெரியுமா ?
நிலையற்ற செயல்களென்றால் அங்கே
சந்திர திசை...
வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை சந்திரன் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் தன்னம்பிக்கை மிக்கவராகவும், முற்போக்கு சிந்தனையும் உறுதியான மனபக்குவத்துடன் அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார் என்பது தெரியுமா?
உனக்காக நீ புண்ணியம் செய்தால்
சுக்ர திசை...
வலிமை அற்ற பாதக ஸ்தான பலனை சுக்கிரன் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் தானும் புண்ணியம் செய்யாமல், மற்றவர்கள் செய்யும் புண்ணிய காரியத்தையும் கெடுப்பார் என்பது தெரியுமா ?
உலகிலுள்ள அனைவருக்காகவும் நீ புண்ணியம் செய்தால் உனக்கு குரு திசை...
பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற 1,5,9ம் ஸ்தான பலனை குரு திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் பாவ காரியங்களுக்கான மொத்த உருவமாக திகழ்வார் என்பது தெரியுமா ?
சுய ஜாதக நிலையை பற்றியும், ஜோதிட சாஸ்திரம் பற்றியும் சிறிதும் அறியாமல், சுப கிரகங்கள் திசை நன்மையை செய்யும் என்றும், அசுப கிரகங்களின் திசை தீமையை செய்யும் என்றும் சொல்வது முற்றிலும் ஜோதிட சாஸ்திர உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதக வலிமை உணர்ந்தும், ஜோதிட சாஸ்திரம் பற்றிய தெளிவுடன் சுய ஜாதக பலாபலன் காண்பதே அனைவருக்கும் உகந்தது.
ஒருவர் புண்ணியம் செய்வதும், பாவம் செய்வதும் அவரவர் சுய ஜாதக வலிமையே அன்றி வேறு இல்லை, இதற்க்கு அடிப்படை காரணமாக திகழ்வதே சுய ஜாதக வலிமைதான் என்பதை உணர்வது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












