கடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஜனவரி, 2018

தொழில் நிரந்தரமாக அமையாதது ஏன் ? சுய தொழில் & அடிமை தொழில் எது சிறந்தது ?


கேள்வி :
இதுவரை சரியான தொழில் அமையவில்லை, செய்யும் தொழில் வழியில் இருந்து யாதொரு முன்னேற்றமும் இல்லை, நான் சுயமாக சிறுதொழில் ஏதாவது செய்யலாமா? அல்லது ஓரிடத்தில் வேலைக்கு செல்வது நன்மையை தருமா ? இதுவரை மற்றவர்களிடம் அடிமை தொழில் ( வேலைக்கு ) மட்டுமே செய்து வருகிறேன், செய்யும் வேளையில் மனநிறைவு இல்லை, பொருளாதார முன்னேற்றமும் இல்லை, தயவு செய்து சரியான வழிக்காட்டுங்கள்.

பதில் :

 ஜீவன ஸ்தான வலிமை என்பது ஒவ்வொரு ஆண் மகனின் ஜாதகத்திலும் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, இது ஜாதகனின் சுய கவுரவத்தை செய்யும் தொழில் வழியில் இருந்து வாரி வழங்கும், அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரம் மிகவும் வலிமையுடன் இருப்பது, சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 10ம் பாவகம் வலிமை அற்று காணப்பட்டாலும், ஜாதகருக்கு ஜீவன வழியில் மறைமுகமான நன்மைகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 10ம் வீடும், கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு 10ம் வீடான மகரம் இரண்டும் கடுமையாக பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் தனிப்பட்ட தொழில் ரீதியான முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியையே வழங்கும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, தங்களது சுய ஜாதகத்தில்  தொழில் அமைப்பிற்கான விஷயங்களை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளலாம்  அன்பரே !


லக்கினம் : கும்பம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்

கேள்வி :

இதுவரை சரியான தொழில் அமையவில்லை, செய்யும் தொழில் வழியில் இருந்து யாதொரு முன்னேற்றமும் இல்லை ஏன் ?

பதில் :

 தங்களின் கேள்விக்கு இரண்டு காரணங்கள் உண்டு 1 ) சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானமான 10ம் வீடு கடுமையான பாதிப்பை பெற்று இருப்பது தங்களுக்கு சரியான தொழில் அமையாத நிலைக்கு அடிப்படை காரணமாக இருக்கின்றது, மேலும் தங்களின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் 10 பாகைகளும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமான கும்ப ராசியில் 23 பாகைகளையும் கொண்டுஇருப்பது தங்களின் தொழில் வழியிலான சிரமங்களுக்கு அடிப்படை காரணமாக அமைகின்றது, எனவே சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 10ம் பாவகமும் பாதிக்கப்பட்டு, காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும் 40% விகிதம் பாதிக்கப்படுவது, தங்களுக்கு தொழில் ரீதியாக சுபயோக பலாபலன்களை வழங்க மறுக்கின்றது என்பதே உண்மை நிலை.

2) தங்களுக்கு ( 09/09/2002 ல் ) ஆரம்பித்த சுக்கிரன் திசை சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,10ம் பாவக வழியில் இருந்து முழு வீச்சில் விரைய ஸ்தான பலனையே தனது திசைமுழுவதும் ஏற்று நடத்துவது தங்களின் தொழில், வேலை போன்றவற்றில் மிகுந்த பின்னடைவையும், திருப்தி அற்ற நிலையையும், நிரந்தரம் அற்ற தொழில் என்ற நிலையையும் தற்போழுது வரை தந்து கொண்டு இருக்கின்றது, இருப்பினும் தற்போழுது நடைபெறும் சனி புத்தி தங்களுக்கு லாப ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் மகரமும், பத்தாம் பாவகமும் வலிமை இழந்து காணப்பட்டால், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற மற்ற பாவகம் எவை? எவை ? என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வது ஜீவனத்திற்க்கான மாற்று வழியை  நமக்கு தெளிவுபடுத்தும், இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது தங்களது சுய ஜாதகத்தில் வீர்ய ஸ்தானம் மிக வலிமையுடன் காணப்படுகிறது, தங்களது வீரிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடான மேஷ ராசியில் 2 பாகையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம்  வீடான ரிஷப ராசியில் 26 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகத்தில் மிகவும் சிறப்பான விஷயமாகும், இந்த அமைப்பு தங்களுக்கு மக்கள் தொடர்பு வழியிலான சிறு வியாபாரம் மூலம் சகல சௌபாக்கியத்தை  நல்கும் அமைப்பாகும், எனவே தாங்கள் சிறு வியாபாரம் செய்வதன் மூலம் நல்ல வளர்ச்சியை பெறலாம், மேலும் சிறு எஜென்ஜி, தரகு தொழில் வழியிலான  நன்மைகள் பொருளாதார வளர்ச்சிகள் தங்களுக்கு எதிர்பாராத வண்ணம் வந்து சேரும் என்பதை கருத்தில் கொள்க, எனவே தாங்கள் வலிமை பெற்ற 3ம் பாவக வழியில் இருந்து ஜீவனத்தை தேடி நலம் பெறுவது தங்களின் வாழ்க்கையில் அபரிவிதமான யோக பலன்களை வாரி வழங்கும்.

 தங்களது ஜாதகத்தில் வலிமைபெற்ற பாவகம் என்ற நிலையில் 2ம் இடத்தில் இருப்பது லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் ஆகும், லாப ஸ்தானம் தங்களுக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடான தனுசு ராசியில் 8பாகைகளையும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடான மகர ராசியில் 20 பாகைகளையும் கொண்டிருப்பது சிறப்பான யோகத்தை தரும் அமைப்பாகும், இது தங்களுக்கு லாப ஸ்தான வழியில் இருந்து எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரும், குறிப்பாக சர மண் தத்துவ சார்ந்த பொருட்கள் வழியில் இருந்து நல்ல லாபத்தை தரும் என்பதை கருத்தில் கொண்டு அது சார்ந்த ஏஜென்ஜி எடுப்பது அல்லது சிறு வியாபாரம் செய்வது தங்களுக்கு மேலும் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், இதனால் செய்யும் தொழில் வழியில் மனநிறைவும் பொருளாதார நன்மைகளும் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

குறிப்பு :

  எதிர் வரும் புதன் கேது புத்திகள் தங்களுக்கு சிறப்பான வழியில் அதிர்ஷ்டங்களையும், சூரியன் திசை பாக்கிய ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டங்களையும் தருவது, தாங்கள் புதிதாக ஆரம்பிக்கும் சிறு வியாபார வழியில் நற்ப்பெயருடன் கூடிய அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதுடன், பொருளாதர தன்னிறைவை தரும் என்பதை கருத்தில் கொண்டு, விழிப்புணர்வுடன் வாழ்க்கையில் வெற்றிபெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 4 பிப்ரவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மீன லக்கினம்




சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீன  ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 12ல் ராகு பகவானும், 6ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

மீன இலக்கின சிறப்பு இயல்புகள் :

மீன ராசியை  ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் பொறுமையும் சுய கட்டுபாடும் அதிகரிக்கும், எண்ணத்தில் தெளிவும், சிறந்த செயல்திறனும் ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை வழங்கும், தனிப்பட்ட செயல்திறனும், மற்றவர்களை பின்பற்றாமல் சுய முயற்ச்சியின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் பெற்றவர்கள், கலைகளில் சிறந்து விளங்கும் யோகமும், சாஸ்திர ஞானமும் இயற்க்கையாவே அமைய பெற்றவர்கள், கல்வி கேள்விகளில் நல்ல அறிவும், மேற்கொள்ளும் லட்சியங்களில் வெற்றியையும் தங்கு தடையின்றி பெறுவார்கள், சுதந்திர மனபாண்மையும், விசாலமான அறிவு திறனும் ஜாதகரின் வாழ்க்கையில் பல வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், ஆன்மீகத்தில் வெற்றியும் பொது வாழ்க்கையில் தூய்மையையும் கடைபிடிக்கும் நல்லவர்கள், கலை துறையில் குறுகிய காலத்தில் பெயரையும் புகழையும் சம்பாதிக்கும் யோகத்தை  தரும், மீன இலக்கின அன்பர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது ஒரே சீராகவும், சரியான திட்டமிடுதல்களுக்கு ஏற்ப்ப சிறப்பாகவும் அமையும், மனதிற்கு எட்டாத விஷயங்களில் புலமை பெற்றவர்களாக திகழ்வார்கள், நல்ல மனோதத்துவ நிபுணர்களாக செயல்படும் தன்மை பெற்றவர்கள், சூழ்நிலையை சிறப்பாக கையாளும் வல்லமையை இயற்கையாகவே பெற்று இருப்பார்கள்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி மீன இலக்கின அன்பர்களுக்கு லக்கினத்தில் கேதுவும், 7ல் ராகுவும் சஞ்சாரம் செய்து இலக்கின பாவக வழியில் இருந்து நன்மைகளையும் களத்திர ஸ்தான வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும் வாரி வழங்கியது, ஆனால் தற்பொழுது 12ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவானால் தங்களின் வாழ்க்கையில் மன நிம்மதி மற்றும் சந்தோசம் அதிகரிக்கும், புதிய முதலீடுகளில் ஆர்வமும் லாபமும் உண்டாகும், இதுவரை வாழ்க்கையில் போராட்டங்களை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு நல்ல தீர்வுகளும், சிறப்பான விருத்திகளும் கிட்டும், தேவையற்ற வீண் செலவினங்கள் குறையும் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும், இதுவரை கனவாக இருந்த லட்சியங்கள் யாவும் பூர்த்தி அடையும்,  நிம்மதியான உறக்கம் தங்களின் மனதில் தெளிவான  சிந்தனையை தரும், குறைகள் அனைத்தும் விலகி வாழ்க்கையில் அனைத்து வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகும், வெகுநாள் மன குறைகள் தீரும், உறவுகள் வழியில் இருந்து நல்ல ஆதரவும் உதவியும்  கிடைக்க பெறுவீர்கள், அதிரடியான தொழில் முன்னேற்றங்கள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை வாரி வழங்கும், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், ஆன்மீக பெரியோர்களின் ஆசியும் தங்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைக்க பெறுவீர்கள், புதிய சொத்துகள், மற்றும் புதிய வண்டி வாகனம்  வாங்கும் யோகம்  உண்டாகும், வழக்குகளில் வெற்றி கிட்டும், தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம் மிகும், தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், கேதுபகவானின் சஞ்சாரம் தங்களின் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்.

6ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான்  தங்களின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ செய்வார், எதிரிகளின் செயல்களே தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், தன்னிறைவான தொடர் பொருளாதார வெற்றி, வீரியமிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும்  யோகம் என்ற போதிலும், வயிறு சார்ந்த தொந்தரவுகள் தங்களின் முன்னேற்றத்தை சிறிது பாதிக்க கூடும், பூர்வீகம் சார்ந்த சொத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு, செய்யும் தொழில் சிறப்பான முன்னேற்றத்தை பெரும் யோக காலமாக இந்த ராகு கேது பெயர்ச்சியை கருதலாம், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு போன்றவற்றில் தேர்ச்சியும், அரசு உத்தியோகமும் கிடைக்க வாய்ப்புண்டு, காவல் துறையில் பணியாற்றும் அன்பர்களுக்கு திடீர் பதவி உயர்வும், திறைமைக்கு   உண்டான பரிசும் கிடைக்க பெறுவார்கள், அரசியலில் உள்ள அன்பர்களுக்கு நல்ல பதவி தேடிவரும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நல்ல வருமானமும் தொழில் விருத்தியும் உண்டாகும், எடுக்கும் முயற்ச்சிகள் திடீர் வெற்றியையும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், இதுவரை   பகைமை பாராட்டிய அன்பர்கள் இனிவரும் காலங்களில் நண்பர்களாக மாற வாய்ப்புண்டு, தங்களின் மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றியை தரும், புதிய வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் தங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்து தரும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி மீன  இலக்கின அன்பர்களுக்கு 100% விகிதம் மன நிம்மதியையும், எதிர்பாராத தொழில் முன்னேற்றம் மற்றும் பதவி  உயர்வை வாரி  வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, மீன  இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் 12ம் பாவகம் மற்றும்  சத்ரு ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் மீன இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 12 மற்றும் 06ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே மீன இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 12,06ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 15 அக்டோபர், 2012

மறைவு ஸ்தானம் தரும் யோக பலன்கள் !


அண்ணே,

       

எனது கேள்விக்காகத் தாங்கள் நீண்ட ஒரு விளக்கம் தந்த மேன்மைக்கு நன்றி!. இது போல் ஒரு வலைப்பூவில் பாதகஸ்தானம் பற்றிக் கேள்வியெழுப்பியிருந்தேன். அதற்கு அந்த நண்பர் நீங்கள் சொல்வது போல் பாதகஸ்தானம்,பாதகஸ்தான அதிபதி என்பது பற்றியெல்லாம் புரதான ஜோதிட நூல்களில் கூட விளக்கம் இல்லை. நீங்கள் தேவையில்லாத விஷயத்தைப் பற்றிக் குழப்பிக்கொள்ள வேண்டாம் எனக் கூறியிருந்தார்.அவர் சொன்னது மறைவு ஸ்தானங்களை(6,8,12) மட்டும் பார்த்தால் போதும் இது ஒன்றும் அத்தனை முக்கியத்துவமில்லாதது என்று கூறியிருந்தார்.அதனால் தான் நான் தங்களிடம் என் மனதில் தோன்றிய ஐயத்தைக் குறித்து வினவினேன். நான் என் நண்பன் ஜாதகத்திலும்,என் தாயார் ஜாதகத்திலும் பாதகாதிபதிகளின் திசை நடந்த போது அவர்கள்பட்ட மனவேதனையை கேட்டும்,கண்டும் இருந்ததால் இதன் பாதகம் நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து அறியலானேன்.தங்களின் விளக்கத்தால் தெளிவும் அடைந்தேன். 
பல இளம் ஜோதிட ஆராதகர்கள் மறைவு ஸ்தானத்தைப் பற்றிக்கொண்டு 
இறங்க மறுக்கின்றனர்.பாதகஸ்தானமா? என்று எதிர்கேள்வி கேட்டு நமது மண்டையைக்காய வைக்கின்றனர்,அவர்களுக்கும் இந்தப் பதிவு பயன்படும்.
நன்றிகள் பல!!!



சந்தோசம் தம்பி இந்த இடத்தில் சிறு விளக்கம் தர கடமைப்பட்டு இருக்கிறேன் பாதக ஸ்தானத்தை பற்றி விளக்கம் சில பழமையான ஜோதிட நூல்களில் இருக்கிறது ஆனால் அதைபற்றி பல ஜோதிடர்களுக்கு நிச்சயம் தெரியாது காரணம் தனக்கு எல்லாமே தெரியும் என்ற எண்ணமும் சரியான புரிதல் இல்லாதது மட்டுமே  மேலும் பொதுவான ஜோதிட பலன்களை படித்து விட்டு ஜோதிடம் சொல்லும் நபர்களுக்கு இதை பற்றிய ஆராய்ச்சியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை அதை பற்றி நமக்கு என்ன கவலை அவர்கள் அனைவரும் தனக்கு ஒரு வருமானம் தரும் தொழிலாக மட்டுமே ஜோதிடத்தை பார்க்கின்றனர் ஆனால் நாமோ ஜோதிடகலையை இறையருள் நமக்கு தந்த ஒரு பொக்கிஷமாக பார்க்கிறோம் , இந்த பொக்கிஷத்தை சரியாக பயன்படுத்தினால் மனிதகுலம் நிச்சயம் வாழ்க்கையில் பல நன்மைகளை பெரும் என்பதே உண்மை, தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சரியான வாழ்க்கை பாதையினை ஜோதிட கணிதம் கொண்டு தெளிவாக தெரிந்து உள்ளது உள்ள படி சொன்னாலே மக்கள் அதன் படி தெளிவாக புரிதலுடன் வாழ்க்கையை சிறப்பாக நடத்துவார்கள் என்பது முற்றியும் சாத்திய படும் ஒரு விஷயமே .

பொதுவாக ஒரு ஜாதக அமைப்பில் மறைவு ஸ்தானம் என குறிப்பிட படும் , ஆறு ,எட்டு மற்றும் பனிரெண்டாம் பாவக வழியில் இருந்து கெடுதல் மட்டுமே நடக்கும் என்பது பாரம்பரிய ஜோதிட முறையில் சொல்லப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது, மேலும் இந்த பாவகத்திர்க்கு உட்பட்ட அதிபதிகளின் திசை மற்றும் புத்திகள் நடந்தால் தீமையை மட்டுமே செய்யும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது , உண்மையில் மறைவு ஸ்தானம் என குறிப்பிட படும் , ஆறு ,எட்டு மற்றும் பனிரெண்டாம் பாவகத்திர்க்கும் , லக்கினம் முதல் 12 பாவகத்திர்க்கும் இரண்டு வித குணம் உண்டு , சுய ஜாதகத்தில் மேற்கண்ட மறைவு ஸ்தானங்கள் மற்றும் மறைவு ஸ்தானங்களுக்கு அதிபதிகளின் திசைகள்  நல்ல பாவகங்களுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தினால் நன்மையை தரும் என்று எத்தனை ஜோதிடர்களுக்கு தெரியும் , அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் மேலும் மறைவு ஸ்தனங்களும் ஒரு ஜாதகனுக்கு நன்மையை தரும் எனும் உண்மை எத்தனை ஜோதிடர்கள் ஜோதிட கணிதம் கொண்டு அறிந்திருக்க கூடும் , மறைவு ஸ்தானங்கள் நல்ல நிலையில் இருந்து இதன் அதிபதிகளின் திசை மற்றும் புத்திகள் தரும் பலன்களை பற்றி இனி பார்ப்போம் .

ஆறாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மை :

திசை முழுவது சிறு சிறு அதிர்ஷ்டங்களை ஜாதகர் பெற்று கொண்டே இருப்பார் , உடலில் ஏற்ப்படும் உடல் நல குறைவுகள் , விரைவான குணம் பெரும் தன்மையை தரும் , கடன் பெறுவதாலும் , கொடுப்பதாலும் ஜாதகர் நன்மை பெறுவார் , எதிரிகளின் சொத்து ஜாதகருக்கு கிடைக்கும் , எதிரிகள் கூட நண்பர்கள் ஆகும் சூழ்நிலை உண்டாகும் , எதிரிகளின் செயல் ஜாதகருக்கு சாதகமாக மாறிவிடும் , ஜாதகரை எதிர்ப்பவர்கள் தோல்வியை தழுவ வேண்டி வரும், தொழில் முன்னேற்றம் என்பது மிக விரைவானதாக இருக்கும் , ஜாதகரின் வளர்ச்சி என்பது எவராலும் அறிந்து கொள்ள இயலாத அளவில் இருக்கும், மேலும் ஜாதகர் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றி பெரும் , தனது தாய் மாமன் வழியில் இருந்து அதிக நன்மை பெரும் யோகம் உண்டாகும் , கோர்ட் கேசு ஆகியவற்றில் ஜாதகருக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும், சுய ஜாதகத்தில் ஆறாம் வீடு வலிமை பெற்றால் மேற்கண்ட நன்மைகள் ஜாதகர் அனுபவிக்கும் யோகம் உண்டாகும் .

எட்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மை :

திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஜாதகருக்கு குபேர சம்பத்து உண்டாகும், லாட்டரி , புதையல் போன்ற அதிர்ஷ்டங்கள் கிடைக்க பெறுவார் , குறிப்பாக ஆயுள் காப்பீடு மற்றும் இன்சுரன்ஸ் துறைகளில் ஜாதகர் கொடி கட்டி பறக்கும் அளவிற்கு  வருமான வாய்ப்புகளை பெறுவார் , மேலும் திடீர் பொருள் வரவும் சொத்து சுக சேர்க்கையும் , எதிர்பாராத பண வரவும் , நிலபுலன் சேர்க்கையும் நிச்சயம் ஏற்ப்படும் , சுய ஜாதகத்தில் எட்டம் வீடு நல்ல நிலையில் இருந்து இந்த வீட்டின் பலன் நடந்தால் மேற்கண்ட நன்மையான பலன்கள் எல்லாம் குறுகிய காலத்தில் நிச்சயம் நடைபெறும் .

பனிரெண்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மை :

ஜாதகர் செய்த சிறு முதலீடு மூலம் மிகப்பெரிய வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் , தொழில் மற்றும் நிலம் நகை வண்டி வாகனம் போன்ற விஷயங்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் அபரிவிதமான செல்வாக்கு மற்றும் பண வரவு , ஆன்மீக வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றி , இறை நிலை பற்றிய தெளிவு தன்னை பற்றி தெரிந்து கொள்ளும் ஆற்றல் , மற்றவர்களின் மன நிலையை தெளிவாக தெரிந்து கொள்ளும் சிறப்பு தகுதிகள் , மன தத்துவ நிபுணர் ஆகும் யோகம் , ஜாதகர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே மன எண்ண ஆற்றல் மூலம் உலகில் நடப்பவைகளை தெரிந்து கொள்ளும் ஆற்றல் , முன்ஜென்ம நினைவுகள் , கர்ம வினை பதிவின் தன்மைகள் , கருமையத்தின் தன்மை , இறை நிலைக்கும் ஜாதகருக்கும் உள்ள தொடர்பு , போன்ற விஷயங்களும் , இதனால் கிடைக்கும் நன்மைகளையும் ஜாதகர் பெறுவது பனிரெண்டாம் வீடு மற்றும் அதிபதி  நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் யோகம் உண்டாகும் .

இதுவே ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீட்டு மற்றும் அதன் அதிபதியின் திசை நடக்கும் பொழுது , பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானதுடன் சம்பந்த பெற்று இருந்தால் , ஜாதகரை பூர்வீகத்தை விட்டே வெகு தொலைவு சென்று பரதேஷ ஜீவனம் செய்ய வைத்து விடும் எனவே  ஒவ்வொரு பாவகதிர்க்கும் நன்மை தீமை செய்யும் பலம் உண்டு என்பது இதன் மூலம் தெளிவாகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com

செவ்வாய், 31 ஜூலை, 2012

ஜாதகத்தில் புதன் வழங்கும் ராஜ யோக பலன்கள் !



 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு புதனின் வீடுகளாக மிதுனமும் , கன்னியும் அமைகிறது , இதில் புதன் ஒருவருக்கு இரண்டு விதமான பலனை தருகிறார் , ஒன்று சூரியனுடன் 14 பாகைக்குள் சேரும்பொழுது பாவியாகவும் , சூரியனுடன் சேராமல் 14 பாகைக்கு மேல் இருப்பின் சுபராகவும் இருக்கிறார் என்றும் பாரம்பரிய முறையில் பலன் காணுவார்கள் , நமது  ஜோதிட முறை படி , சூரியனுடன் 14 பாகைக்குள் சேரும்பொழுது கேந்திர அதிபதியாகவும் , சூரியனுடன் சேராமல் 14 பாகைக்கு மேல் இருப்பின் கோண அதிபதியாகவும் எடுத்து கொள்வோம் , இந்த முறை படி பார்க்கும் பொழுது, கால புருஷ தத்துவ அமைப்பில் மூன்றாம் வீட்டுக்கு அதிபதியாகவும் , ஆறாம் வீட்டுக்கு அதிபதியாகவும் வரும் புதன் ஒருவருடைய  ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு கிடைக்கும் யோக பலன்களை பற்றி இந்த பதிவில் காண்போம் .

 

 புதன் மிதுனத்தில் தரும் யோகம் :

 

கால புருஷ தத்துவ அமைப்பில் மூன்றாம் வீட்டுக்கு புதன்  அதிபதியாக அமர்ந்து  மிதுனத்தில் , உபய ராசி , காற்று தத்துவ அமைப்பை பெறுகிறார் , உபயம் என்றால் மற்றவர்கள் வாழ்க்கையில் பயன்படும் விதத்தில் செயல் படுவது , காற்று என்றால் ஜாதகரின் அறிவாற்றலை குறிக்கும் , எனவே ஜாதகரின் அறிவாற்றல் எந்த வகையிலாவது மக்களுக்கு நிச்சயம் பயன்படும் என்பதையே இந்த மிதுன ராசி குறிப்பிடுகிறது.

 

பொதுவாக நவ கிரகங்களால் ஏற்ப்படும் பாதிப்பான பலன்களை தடுத்து , ஜாதகருக்கு நன்மை தரும் அமைப்பு புதனுக்கு உண்டு என்று பல ஜோதிட நூல்களில் நாம் படித்திருக்க கூடும் , அதற்க்கு காரணம் என்ன என்று இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் , ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் மூன்றாம் வீட்டை வைத்து நாம் மனம் , எண்ணம் , ஜாதகரின் நண்பர்களால் வரும் நன்மை , சுய அறிவு , எழுத்தாற்றல் , பயணங்களால் வரும் நன்மை , தொலை தொடர்புகளால் ஜாதகருக்கு வரும் நன்மை, புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு , வருமுன் உணரும் தெய்வீக ஆற்றல் , நல்லவர்கள் தொடர்பு , எழுத்தாற்றல்  மூலம் மக்களிடம் ஏற்ப்படும் ஆதரவு, முயற்ச்சியால் கிடைக்கும் வெற்றி  ஆகியவற்றை குறிக்கும் .

 

இதன் படி பார்க்கும் பொழுது மனம் மற்றும் எண்ணம் ஆகியவற்றை முழுமையாக ஆளுமை செய்கின்ற பாவகம் மூன்றாம் வீடு என்றால் அது மிகையாகாது , ஒரு ஜாதகர் மன நிலை சிறப்பாக செயல் பட சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும் மூன்றாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியமாகிறது , மேலும் இந்த மூன்றாம் பாவகத்தை வைத்து ஜாதகரின் மன நிலையையும் , எண்ணத்தின் நிலையையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் , கிராமத்தில் ஒரு செலவாடை ஒன்று உண்டு அது " தம்பி உடையான் படைக்கு அஞ்சான் " என்பது , தைரியம் என்ற சொல்லுக்கும் , உடன் பிறப்பு என்ற அமைப்பிற்கும் இந்த மூன்றாம் பாவகம் முழுமையாக பொருந்துவதை நாம் இங்கே சற்றே கவனிக்க வேண்டுகிறோம் , தனது உடன் பிறப்பு இருப்பின்,  ஒருவருக்கு இயற்கையாகவே தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம்  நிச்சயம் வந்துவிடும் , எந்த ஒரு பிரச்சனைகளையும் தனது உடன் பிறப்பு உதவியுடன், மன உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்பதையே இந்த பாவக வழி நமக்கு உணர்த்துகிறது , பொதுவாகவே நமக்கு ஒரு உடன் பிறப்பு உள்ளது என்றாலே மனதில் ஒரு வித தைரியம் வரும் என்பதை எவராலும் மறுக்க இயலாது , எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் மூன்றாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் தனது உடன் பிறப்பு வழியில் இருந்து 100 சதவிகித நன்மை , ஆதரவு , தைரியம் , வெற்றி ஆகியவை கிடைக்க பெரும் என்பது நிச்சயம் .

 

ஒருவருடைய வாழ்க்கையில் இறுதிவரையிலும் , சிறு சிரமங்கள் வந்தாலும் அதற்காக வருத்தமும் , ஆதரவும் , ஓடிவந்து உதவி செய்யும் குணமும் தனது உடன் பிறப்பை தவிர வேறு யாரும் அல்ல என்பதே முற்றிலும் உண்மை , அப்படி பட்ட உடன் பிறப்பை பெற்ற அனைவரின் ஜாதக அமைப்பிலும் இந்த மூன்றாம் வீடு மிகவும் வலுமையாக அமைந்திருக்கும் , என்பதே உண்மை . எத்தனை அண்ணன் தம்பிகள் , அக்கா தங்கைகள் பாசமிகு வாழ்க்கை நாம் பார்த்திரிக்கிறோம் , தனது உடன் பிறப்புக்கு ஒன்று என்றால் துடித்து போகும் எத்தனையோ  சகோதர அமைப்புகள் நமது மண்ணில் இன்னும் உள்ளனர் , இதுவே ரத்த பாசத்திற்கு அடையாளம் . கால புருஷ தத்துவ அமைப்பிற்கு புதன் இந்த வீட்டிற்கு அதிபதியாக வந்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை , ஏனெனில் அதி புத்திசாலித்தனத்தால் மற்றவரை நல்ல நிலைக்கு எடுத்து செல்லும் ஆற்றல் கொண்டவராக புதன் விளங்குவதே இதற்க்கு காரணம் . இந்த புதன் மாதிரி உடன் பிறப்புகளும் நல்ல ஆலோசனைகளை நமக்கு தந்து, நல்வழி படுத்தும் பண்பு கொண்டவர்கள் என்பது சரியாக பொருந்தும் .

 

ஒருவருக்கு நல்ல எண்ணங்களும் , மன தைரியமும் , செய்யும் காரியங்களில் வெற்றிகளை பெற வேண்டும் எனில் நிச்சயம் இந்த மூன்றாம் பாவகமும் , மிதுன ராசியும் , புதனும் சிறப்பான நிலையில் சுய ஜாதகத்தில் அமைந்து இருக்க வேண்டும் .

 


புதன் கன்னியில் தரும் யோகம் :

 

கால புருஷ தத்துவத்திற்கு ஆறாம் வீட்டிற்கு புதன்  அதிபதியாக அமர்ந்து , உபய ராசியாகவும் , மண் தத்துவ அமைப்பை பெறுகிறார் , உபயம் என்றால் மற்றவர்கள் வாழ்க்கையில் பயன்படும் விதத்தில் செயல் படுவது ,மண் தத்துவம் எனும்பொழுது இந்த இடத்தில் , ஜாதகரின் உடல் , பொருள் , சொத்து , வண்டி வாகன , அமைப்பு , வியாபாரம் , ஆகிய வற்றை குறிப்பிடுகிறது .

 

மிதுன அமைப்பை சார்ந்தவர்கள் மக்களுக்கு தனது அறிவு வழியில் உதவும் அமைப்பை  பெறுவார்கள், கன்னி அமைப்பில் ஜாதகர் உடல் வழியில் மக்களுக்கு உதவும் அமைப்பை பெறுவார்கள் , தனது உடல் நிலையை பற்றி எவ்வித கவலையும் கொள்ளாமல் மக்கள் பணியாற்றும், அமைப்பை பெற்றவர்கள் யாவரும் இந்த கன்னி ராசி மற்றும் புதன் நல்ல நிலையில் அமைய பெற்றவர்களே , குறிப்பாக மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்துக்கு அழைத்து செல்லும் வாகன ஓட்டுனர்கள் , மக்களை இரவு பகல் பாராமல் காவல் காக்கும் , காவல் துறையினர் , ராணுவ வீரர்கள் , தனது தேசத்திற்கு புகழையும் , வெற்றியையும் பெற்று தரும் விளையாட்டு வீரார்கள் , மக்கள் நலனுக்காக பாடு படும் அரசியல் தலைவர்கள் , மக்கள் நல சேவகர்கள் போன்றோர்கள் இதற்க்கு உதராணமாக நாம் எடுத்து கொள்ளலாம்.

 

மேலும் நாட்டிற்கு வரும் தீமைகளை கண்டறிந்து , அவற்றை தடுத்து நிறுத்தும் பேராற்றல் கொண்டவர்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு ( கன்னி புதன் ) மிகவும் சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கும் , ரகசிய போலீஸ் , துப்பறியும் இலாகா , துதுவர்கள்  போன்ற பணிகளில் சிறப்பாக செயல்படும் அனைவர்க்கும் இந்த கன்னி புதன் சிறப்பாக அமைய பெற்றிருப்பார் , பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ள பன்முக திறமை, மற்றும்  வருமுன் தெரிந்து கொள்ளும் அதீத சக்தியுள்ள திறமையை பெற்றிருப்பது புதன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே முடியும் . மேலும் இவர்கள் எதிரிக்கு  சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இதற்க்கு காராணம் கன்னி புதனே , ஒருவருடைய ஜாதகத்தில் கன்னி புதன் நல்ல நிலையில் இருந்தால் எதிரியின் சொத்து ஜாதகருக்கு கிடைக்கும் , எதிரி செய்யும் அனைத்து காரியங்களும் ஜாதகருக்கு உபகாரமாகவே அமைந்து விடும் , மேலும் ஜாதகரை விழ்த்த எதிரிகள் செய்யும் அணைத்து வேலைகளும் ஜாதகருக்கு சாதகமாகவே அமைந்துவிடும் , அதனால் ஜாதகர் நன்மையே பெறுவார் , இவர்களிடம் நேரடியாக எதிர்த்து நிச்சயம் ஜெயிக்க முடியவே முடியாது .

 

கன்னி புதன் நல்ல நிலையில் உள்ள ஜாதக அமைப்பை பெற்றவர்கள் அதிகம் வழக்கறிஞர் தொழில் கொடிகட்டி பறக்கிறார்கள், என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை, மேலும் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை பெரும் அமைப்பை பெற்றவர்கள் அனைவருக்கும் சுய ஜாதகத்தில் கன்னி புதன் நிச்சயம் சிறப்பாக அமைய பெற்றிருக்கும், சட்டத்துறையில்  இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களுக்கு சிறப்பான இடம் நிச்சயம் உண்டு . மேலும் ஜாதகரின் உடல் நிலை பாதிப்புகள் எவ்விதத்திலும் கெடுதல் செய்யாது , விபத்துகளில்  ஜாதகருக்கு எவ்வித பாதிப்பையும் நிச்சயம் தராது , மனம் உடல் இரண்டும் எப்பொழுதும் ஜாதகருக்கு ஒத்துழைக்கும் , கடன் கொடுக்கல் வாங்கல்களில் ,  சூதாட்டத்தில் அபரிவிதமான சொத்துகளை பெற இந்த கன்னி புதன் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , முக்கியமாக பங்கு வர்த்தகம் , யூக வணிகத்தில் சிறப்பான வெற்றிகளை  பெற வேண்டும் எனில் நிச்சயம் சுய ஜாதகத்தில் ஆறாம் பாவகம் , கன்னி ராசி , புதன் ஆகிய அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தால் மட்டுமே முடியும் .   

 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696