சிம்மராசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிம்மராசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 மார்ச், 2025

சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 29.03.2025 முதல் 03.06.2027 )

குறிப்பு : சனிதிசை, சனிபுத்தி, சனிஅந்தரம் மற்றும் சனிசூட்டசமம் நடைபெறும் சிம்மராசி அன்பர்களுக்கு மட்டும் இது பொருந்தும். 

சிம்ம ராசிக்கு 29.03.2025 அன்று இரவு 07:25க்கு கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடையும் "சனிபகவான்" 03.06.2027 அன்று நள்ளிரவு 01:54 வரை, கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்து மற்றும் பதினொன்றுக்கு அதிபதி என்ற நிலையில் சிம்ம ராசியினருக்கு அஷ்டம சனியாக தரும் பலன்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

எதிர் வர்க்க கிரகமான சனி பகவான் சிம்ம ராசிக்கு ஆயுள் ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கு காலம் "அஷ்டம சனி" என்ற நிலையில் சிம்ம ராசி அன்பர்களுக்கு எதிர்பாராத சில திடீர் இழப்புகளை தனது வாழ்க்கை துணை, நண்பர்கள், ரத்த உறவுகள் மற்றும் சொந்த பந்தங்கள் மூலம் ஏற்படுத்த கூடும், தங்களது மேலதிகாரிகள் மூலம் வரும் எதிர்ப்புகளை தவிர்க்க இயலாது, இதனால் வரும் மனஅழுத்தம், மனப்போராட்டம் தங்களது சுய செயல்பாடுகளில் தடை தாமதங்களை தரக்கூடும் என்பதை அறிவுறுத்த கடமைப்பட்டு உள்ளோம், குறிப்பாக தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் பல பின்னடைவுகளை தரகூடும், மேலும் ஆண் நண்பர்கள் பெண் நண்பர்கள் எதிர்பாலினர் மூலம் வெகுவான பொருள் இழப்புகளை அல்லது நஷ்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரக்கூடும், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட இன்னல்களில் இருந்து விடுபட மருத்துவ காப்பீடு மிக மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் என்பது தங்களது வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், சிம்மராசி அன்பர்கள் அல்லது குழந்தைகள் நீர்நிலைகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்லும் பொழுது மிகுந்த பாதுகாப்புடன் சென்று வருவது அவசியமானது, உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை உடன் நடந்து கொள்ளவது சிறப்பு, நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது மேற்கண்ட இன்னல்கள் ஏற்படாமல் சுபயோக பலன்களே நடைமுறைக்கு  வரும் என்பதால் சுய ஜாதக வலிமை உணர்ந்து வாழ்க்கையை வெற்றிகொள்ளுங்கள்.


சிம்மராசிக்கு வெளிநாடுகள் அல்லது வெளியூர் வழியில் இருந்து சில எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும், கூட்டு முயற்சி அல்லது கூட்டு தொழில் வழியில் இருந்து எதிர்பாராத சுபயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மாற்று மதத்தினர் வழியிலான சுபயோக பலன்கள் அதிகரிக்கும், தெய்வீக காரியங்களில் ஆன்மீக வழிபாடுகள் வழியில் இருந்து ராஜயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், நிலவர்த்தகம் கனிம பொருட்கள் வழியிலான லாபங்கள் அதிகரிக்கும், ஆபத்தான நேரங்களில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள், பொருளாதார நிலைகளில் நல்ல முன்னேற்றமும், புதிய வீடு வண்டி வாகன யோகம் சார்ந்த விஷயங்களை முழுமையாக சுவீகரிக்கும் யோகம் உண்டு, வெகுநாளாக தடைபட்ட திருமணம் இனி சிறப்பாக நடைமுறைக்கு வரும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்படைய விட்டுக்கொடுத்து செல்லும் தன்மையை அதிகஅளவில்  பின்பற்றி நலம் பெறுங்கள்.

தனது 6ம் பார்வையால் சிம்மராசி அன்பர்களுக்கு ஜென்ம ராசி எனும் 1ம் பாவகத்தை வசீகரிக்கும் ( சிம்ம ராசியை ) சனிபகவான் கலைத்துறை சார்ந்த வெற்றிகளை சிறப்பாக வாரி வழங்குவதுடன், புகழ்மிக்க பொறுப்புகளையும், அதிகார பதவிகளையும் சுவீகரிக்கும் யோகத்தை தருவது கவனிக்க தக்கது, மேலும் காதலில் வெற்றி காதல் திருமணம் கைகூடி வரும் யோகம், குறுகியகாலத்தில் பிரபல்ய யோகம் பெரும் அமைப்பு, தனது துறை சார்ந்த ஞானம் வழியிலான வெற்றிகள், செய்யும் தொழில் வழியில் இருந்து வரும் வெற்றிவாய்ப்புகள், முதலீடுகள் வழியில் இருந்து வரும் லாபம் அதிர்ஷ்டம், வாடிக்கையாளர்கள் மூலம் கிடைக்க பெரும் தொழில் வளர்ச்சி, புதிய சிந்தனை மற்றும் திட்டமிடுதல்கள் மூலம் பெரும் யோக வாழ்க்கை, திடீர் தன சேர்க்கை, பல தொழில் செய்யும் யோகம், வெளிநாடுகள் வழியில் திடீர் அதிர்ஷ்டம், சிறந்த நிர்வாக திறன்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், புதிய நிறுவனம் மற்றும் புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம், குலதெய்வ அனுகிரகத்தால் தொட்டதெல்லாம் வெற்றி பெரும் அமைப்பு என இனிவரும் காலங்களில் ஜென்ம ராசி வழியிலான நன்மைகள் அனைத்தும் தடையின்றி நடைமுறைக்கு வந்த போதிலும், அன்பு பாசம்  ஆகிய விஷயங்களுக்கு ஏங்கி தவிக்கும் சூழ்நிலையை தரும், பெற்றோர்கள் கூட தங்களை சரியாக புரிந்துகொண்டு அன்பு பாராட்ட இயலாத சூழலைத்தரும், வாழ்க்கை துணை வழியிலான எதிர்ப்பு பெற்ற பிள்ளைகள் வழியிலான தொல்லைகள் அதிகரிக்கும், மனநிம்மதி தேடி அதிக அளவில் அலையும் நிலையை தரக்கூடும், எனவே குலதெய்வ வழிபாடும், பித்ரு வழிபாடும் முறையாக செய்யும் பொழுது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும்.

 தனது 7ம் பார்வையால் சிம்மராசி அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிக்கும் ( கன்னி ராசியை ) சனிபகவான் தனது வர்க்க வீடு என்பதால் சிம்மராசியினர் தனது சுய முயற்சி மற்றும் சுய தேடுதல் வழியிலான வருமான வாய்ப்புகளை தன்னிறைவாக பெரும் யோகம் காலம் இது, இதுவரை இருந்துவந்த நிதி சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட்டு சரளமான பொருளாதரா வளர்ச்சியை பெரும் யோகத்தை தரும், தங்களின் பேச்சு மற்றும் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பு மரியாதை உண்டாகும், செல்வாக்கும் சொல்வாக்கும் சமூகத்தில்  மதிப்பு மிக்க மாமனிதாராக வலம்வரச்செய்யும், சொன்னதை செய்து வெற்றிகொள்ளும் யோகம் உண்டு, இருப்பினும் குடும்பத்தில் சில இன்னல்கள் இடர்பாடுகள் ஏற்படும், பொருளாதர தேவைகளை நிவர்த்தி செய்த போதிலும், குடும்ப உறுப்பினர்கள் ஏக்கங்களை நிவர்த்தி செய்ய இயலாத சூழல் ஏற்படும், வேலை நிமித்தம் காரணமாக குடும்பத்தை விட்டு வெளியில் சென்று ஜீவிக்கும் நிலை வரலாம் அல்லது பிரிந்து இருக்கும் சூழ்நிலையை தரக்கூடும், சுய முயற்சிகள் யாவும் வெற்றிமேல் வெற்றியை தரும், விவசாயம் மற்றும் பண்ணை தொழில்கள் தங்களுக்கு மிகுந்த லாபத்தை தரும், புதிய தொழில் செய்வதற்கான அத்துணை வாய்ப்புகளும் கைகூடி வரும், உணவு உடை இருப்பிடம் சார்ந்த தொழில் வழியில் அபரிவிதமான லாபம் உண்டாகும், அரசியல் ரீதியான முன்னேற்றம் மற்றும் அதிகார பதவிகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகத்தை சனிபகவான் இனிவரும் காலங்களில் பரிபூர்ணமாக வழங்குவார்.

தனது 10ம் பார்வையால் சிம்மராசி அன்பர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிக்கும் ( தனுசு ராசியை ) சனிபகவான், சிம்மராசி பெண்களுக்கு யோகம் நிறைந்த ஆண்வாரிசை வழங்குவதுடன், இதுவரை இருந்துவந்த ஏக்கங்கள் யாவற்றையும் பரிபூரணமாக நிறைவேற்றுவார், மேலும் மாணவர்களுக்கு தாங்கள் விரும்பிய கல்வியை தேர்வு செய்யும் யோகத்தையும், உயர்கல்வி அல்லது பட்டைய படிப்பு சார்ந்த வெற்றிகளை முழுமையாக சுவீகரிக்கும் யோகத்தை தருவார், கற்ற கல்வி வழியிலான தொழில் அல்லது வேலைவாய்ப்பை பெரும் யோகம், புது முயற்சிகள் சார்ந்த நிலைகளில் வெற்றிவாய்ப்பு, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட முன்னேற்றம், கனவுகளும் லட்சியங்களும் நிறைவேறும் யோகம், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்லும் அமைப்பு, சமூக அந்தஸ்து, சமுதாய பெரிய மனிதர்கள் வழியிலான ஆதரவு, பொருளாதார உதவிகள், நீண்ட கால லட்சியங்களை வெற்றிகொள்ளும் யோகம், வெளியூர் வெளிநாடு பயணங்கள் வழியிலான லாபங்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்த அமைப்புகளில் சிறப்பான முன்னேற்றம், மருத்துவம் மருத்துவ துறை சார்ந்த கல்வியால் அதீத லாபம், தைரியமாக அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெரும் யோகம், கூட்டு முயற்சி கூட்டு தொழில் வழியிலான லாபங்கள், எதிர்ப்புகள் யாவும் தங்களுக்கு சாதகமாக மாரி சுபயோகங்களை வழங்கும் அமைப்பு என மிகுந்த நன்மைகளை தரும். 

 விபரீத ராஜயோகம் என்பது தங்களுக்கு இனிவரும் காலங்களில் எதிர்பாராத நன்மைகளையும், அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் முழுமையாக வழங்கும், பொதுகாரியங்களில் ஈடுபடும் பொழுது சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம், இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கும், தயக்கங்கள் நீங்கி தெளிவு பிறக்கும், அறிவுபூர்வமான நடவடிக்கைகள் தங்களின் வாழ்க்கையில் ஓர் புதிய ஆரம்பத்தை தரும், மனதளவில் இருந்த பாதிப்புகள் நீங்கி, மனதைரியம், சுயசிந்தனை, சிறந்த திட்டமிடுதல்கள் தரும் வெற்றிகளை சுவீகரிக்கும் யோகம் உண்டாகும்.

ஜோதிடன் வர்ஷன்

9443355696

சனி, 27 ஜனவரி, 2024

சிம்மராசி உத்திரம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

  


 சிம்மராசி "உத்திரம்" நட்சத்திரம் கடின உழைப்பும் ஸ்திர தன்மையான அறிவாற்றலும் சமயோசித புத்திசாலித்தனமும் பரிபூரணமாக நிறைந்த அற்புத நட்சத்திரம், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் வீரியமிக்க வெற்றிகளை பதிவு செய்வார்கள், தன்னை பின்பற்றி வாழ அனைவரையும் உற்சாகப்படுத்தும் அன்பர்கள், பிரதிபலன் பாராமல் அனைவருக்கும் நன்மைகளையும், பேதம் பாராமல் மக்களுக்கான சேவைகளை செய்வத்தில் வல்லவர்கள், அன்பு பாராட்டுதல், உறவுகளை அனுசரித்து செல்லுதல், தன்னை சார்ந்து இருக்கு அன்பர்களுக்கான வழிகாட்டுதல், சுயநலம் இன்றி பொதுநலன் காத்தல், உயரிய நோக்கங்கள், சமுதாய விழிப்புணர்வு, வெற்றிகளை அனைவருடன் பகிர்ந்து கொள்ளுதல், எதிர்பாலினர் சேர்க்கை வழியிலான நன்மைகளையும் முன்னேற்றங்களையும் சுவீகரித்தல், தெய்வீக சிந்தனை, ஆன்மீக வெற்றி அரசுத்துறை சார்ந்த பணிகளை இலகுவாக கையாளுதல், அரசாட்சி செய்யும் யோகம், நிதி மேலாண்மை சார்ந்த திட்டமிடுதல்களை வெகு அற்புதமாக கையாளுதல், வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கும் தொழில்களை வெகு விரைவில் மீட்டு எடுத்து முன்னேற்றங்களையும், அபரிவிதமான வளர்ச்சியினையும் சுவீகரிக்கும் தன்மை, உறவுகளும் நட்புகளும் புடைசூழ யோக வாழ்வை சுவீகரிக்கும் பேராற்றல் என மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

கும்பகோணம் அருகில் அமைந்துள் சூரியன் நவக்கிரக தலம் "சூரியனார் கோவில்"  உத்திரம் நட்சத்திரம் அன்பர்களுக்கு ஆளுமை திறனையும் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தன்னிறைவாக வாரி வழங்கும் திருக்கோவிலாகும், வளர்பிறை ஞாயிற்று கிழமை அன்று காலை சூரிய ஹோரையில் செம்பருத்தி மாலை மற்றும் சிகப்பு வர்ண பட்டாடை சாற்றி வழிபடும் உத்திர நட்சத்திர அன்பர்களுக்கு, வாழ்வில் பெருந்தன்மையான குணத்தையும், தலைமை பொறுப்பேற்கும் வலிமையையும், கல்வி கேள்விகளில் மிகப்பெரிய ஆளுமைத்திறனையும், முற்போக்கு சிந்தனையையும், நேர்மறை எண்ணத்தின் வழியிலான வெற்றி வாய்ப்புக்களையும், நிலைத்து நின்று ஸ்திர தன்மையுடன் தனது வெற்றிகளை பதிவு செய்யும் யோகத்தையும், அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த பணிகளை சுவீகரிக்கும் நிலையையும் வெகு விரைவாக வழங்குவார் மேலும் உடல் வலிமை மனஉறுதி இரண்டையும் ஏககாலத்தில் உத்திர நட்சத்திர அன்பர்கள் பெற்று நலமடைவார்கள், தொழில் ரீதியான தடைகள் நீங்கும், புதிய தொழில் வாய்ப்புகள் மேலோங்கும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றங்கள் வெகு அற்புதமாக வந்து சேரும், மலைபோல் வந்த சிரமங்கள் பனிபோல் விலகும், சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்க பெறுவதுடன் எதிர்பாராத முன்னேற்றங்கள் வெகு சிறப்பாக வந்து சேரும், செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றங்கள் உத்திர நட்சத்திர அன்பர்களுக்கு முழுஅளவில் கிடைக்க பெறுவார்கள்.

வருடம் ஒருமுறை  "சூரியனார் கோவில்" சென்று வரும் உத்திர நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் அரசருக்கு நிகரான யோக வாழ்வை சுவீகரிப்பதுடன் பொதுமக்கள் ஆதரவு, தொழில் சாதனைகள், எதிர்பாலினர் ஆதரவு, வசதி வாய்ப்புகள் நிறைந்த சொகுசு வாழ்க்கை, சுயமாக செயல்பட்டு தனசேர்க்கை பெறுதல், சமுதாயத்தில் உயரிய பதவிகள், கலைத்துறையில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் தொழில் யோகம், மருத்துவம் தொழில் நுட்பம் நிதிமேலாண்மை போன்றவற்றில் அபரிவிதமான முன்னேற்றங்கள், சுய சம்பாத்தியம், பொருளாதார முன்னேற்றங்கள், மண் மனை வண்டி வாகன யோகங்கள் என்ற வகையில் அபரிவிதமான வளர்ச்சி வாய்ப்புகள், தடைகள் யாவும் நீங்கி சுபயோக வாழ்வை சுவீகரிக்கும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை வரி வழங்கும்.

 குறிப்பு :

 சிம்மராசியில் "உத்திரம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், ஸ்திர தன்மையான ஆளுமை திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்கள், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகள் வழியிலான நன்மைகளையும், பொதுமக்கள் செல்வாக்கில் நிலையான வெற்றிகளையும் சுவீகரிப்பார்கள், இயல் இசை நாடகம் போன்ற கலைத்துறையில் மிகப்பெரிய  முன்னேற்றத்தையும், அதிக அளவிலான செல்வத்திற்கும்  சொந்தக்காரர்கள் என்பதனால், இவர்களது வளர்ச்சி அசுர வேகத்தில் அமையும், வாழ்வை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்பதை பற்றியும்,அனைவரையும் அனுசரித்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், மேற்சொன்ன "சூரியனார் கோவில்" வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதுடன் அரசியல் ஆதாயத்தையும் முழுமையாக பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

வியாழன், 25 ஜனவரி, 2024

சிம்மராசி பூரம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

  

 சிம்மராசி "பூரம்" நட்சத்திரம் "கலை உலக இளவரசன் கவிஞர்களுக்கு கதாநாயகன் " என்பதற்கு இணங்க தனது செயல்பாடுகளை முன்னெடுக்கும் அற்புத நட்சத்திரம், சுயகட்டுப்பாடு சிறந்த நிர்வாகத்திறமை அதீத தைரியம் தன்னம்பிக்கை, உடல் நலம் பேணுவதில் வல்லவர்கள், என்றும் இளமை என்பதற்கு இணங்க வயோதிகத்திலும் துடிப்புடன் செயல்படுதல், வயதை கணிக்க இயலாத தன்மை, ரகசிய கலைகளை கற்றுணர்ந்து தேர்ச்சி பெறுதல், தெளிவான சிந்தனை, குழப்பம் அற்ற மனநிலை, நினைத்தது நிறைவேற்றும் செயல்பாடுகள், சுதந்திர மனப்பான்மை, எதிர்கால வாழ்வை சிறப்பாக மகிழ்ச்சிகரமாக வாழும் தன்மை, தன்னிறைவான பொருளாதார சேர்க்கை, சிறப்பு தொழில் நுண்ணறிவு துறை சார்ந்த ஞானம், எதையும் சமாளிக்கும் வல்லமை, எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இயங்குதல், தொழில் ரீதியான வளர்ச்சியை விரைவாக சுவீகரித்தல் என்ற வகையில் சிறப்பைத்தரும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

 கடலூர் மாவட்டம் "சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர்" கோவில் "பூரம்" நட்சத்திர அன்பர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் திருக்கோவிலாகும், இங்கு வளர்பிறையில் வரும் ஞாயிற்று கிழமை அன்று சிகப்பு வர்ண பட்டு வஸ்திரம் சாற்றி சிகப்புதாமரை மலர்கள் சாற்றி வழிபடும் பூர நட்சத்திர அன்பர்கள் 14 நாட்களில் அரசு ஆதாயம், அரசு வேலை வாய்ப்பு, அரசுத்துறை சார்ந்த மானியங்கள், அரசியல்வாதிகளில் ஆதரவு என மிக சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும், மேலும் கலைத்துறையில் இயங்கும் அன்பர்களுக்கு தனது தனித்திறமையையும் படைப்பாற்றலையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் தன்மையை தரும், நேர்த்தியான விஷயங்களை கடைபிடிக்கும் பூர நட்சத்திர அன்பர்களுக்கு இத்திருக்கோவில் வெற்றிமேல் வெற்றியை பெற்றுத்தரும் என்றால் அது மிகையாகாது, பூர்வீக சொத்துக்கள் சார்ந்த இன்னல்களை எதிர்கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு சரியான தீர்வையும்  தனது பக்கமுள்ள ஞாயமான கோரிக்கைகளையும் வென்று எடுக்கும் வல்லமையையும் தருவதுடன், சுகபோக யோக வாழ்வை நல்கும் தன்மை பெற்றவர், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றிகொள்ளும் மனஉறுதி, போட்டி பந்தயம் மற்றும் வழக்குகளில் அபரிவிதமான வெற்றிகள், விளையாட்டு துறையில்  சாதிக்கும் பேராற்றல், அரசியலில் தனது வலிமையை வெகு சிறப்பாக பிரயோகிக்கும் வல்லமை என மிகுந்த சிறப்புகளை தரும்.

 வருடம் ஒருமுறை சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் சென்று வரும் பூர நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் பொதுமக்களின் ஆதரவு, உறவுகளின் அன்பு, பூர்வீக சொத்துக்களை சுவீகரிக்கும் யோகம், உடல் ரீதியான சுறுசுறுப்பு, தெய்வீக ஆளுமை, தெய்வ தரிசனம், குறுகிய காலத்தில் உலக பிரபல்யம் அடைதல், இயல்பான வாழ்வை மகிழ்ச்சிகரமாக வாழ்வது, வாழ்வின் நெறிமுறைகளை உணர்ந்து புரிந்து வெற்றிகரமாக ஜீவனம் செய்வது, உடல் ஆரோக்கியத்தில் மேன்மை, பலபுண்ணிய திருத்தலங்களுக்கும்  சுற்றுலா தலங்களுக்கும் சென்று வரும் யோகம், கண்ணியமிக்க செயல்பாடுகள், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் பேராதரவு என்ற வகையில் சிறப்புக்களை வாரி வழங்குவார், குறிப்பாக பூரம் நட்சத்திர பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, அரசியல் ரீதியான செல்வாக்கு, திருமணயோகம், நல்லதொரு ஆண் வாரிசு, பொருளாதார முன்னேற்றம், புதிய தொழில் வழியிலான வெற்றிகள், வெளிநாடுகள் பயணம் மூலம் தொழில் விருத்தி அல்லது  வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, புதிய சந்தர்ப்பங்கள், புதிய வாய்ப்புகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகம் என்ற வகையில் வெற்றிகளை "சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர்" தன்னிறைவாக வாரி வழங்குவார்.

குறிப்பு :

சிம்மராசியில் "பூரம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், ரகசிய கலைகளில் தேர்ச்சியும் வெகு ஜன மக்கள் ஆதரவும் உண்டாகும், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகளை சர்வநாசம் செய்யும் வலிமை பெற்றவர்கள் இவர்களது செயல்பாடுகள் மிகவும் வலிமையானது என்பதனால், எதிர்ப்பவர்கள் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியது, கலைத்துறையில் மிகப்பெரிய சாதனைகளுக்கும், மிகப்பெரிய செயல்பாடுகளுக்கும் சொந்தக்காரர்கள் என்பதனால், இவர்களுது கற்பனை திறன் என்பது மிகப்பெரிய காரியங்களை சாதிக்கும் தன்மையுடன் காணப்படும், வாழ்வை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்பதை பற்றியும், வாழ்க்கையை புரிந்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், மேற்சொன்ன "சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர்" வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

திங்கள், 22 ஜனவரி, 2024

சிம்மராசி மகம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

  


சிம்மராசி "மகம்" நட்சத்திரம் பிரம்மாண்டத்தையும் பிரமிப்பையும் வெகு சிறப்பாக பிரதிபலிக்கும் அற்புத நட்சத்திரம் ஆன்மீகத்தில் வெற்றி இறைநிலை தேடுதலில் அதீத ஆர்வம், வருமுன் கண்டுணரும் சக்தி, அரசியலில் சிறப்பான ஆளுமை திறன், மெய்பொருள் கண்டுணரும் யோகம், அரசு பதவிகளில் உயர் நிலையை மிக குறுகிய காலத்தில் சுவீகரிக்கும் தன்மை, இந்திய ஆட்சி பணிகளுக்கான தேர்வுகளில் நல்ல தேர்ச்சியை பெறுவதன் மூலம் வாழ்வில் சாதனை படைக்கும் பேராற்றல், பொதுமக்கள் ஆதரவின் மூலம் மிக உயரிய பதவிகளை அடையும் தன்மை, பாரம்பரிய பெருமைகளை கட்டிக்காத்தல், பரம்பரை பரம்பரையாக தனது ஜீவன வாழ்க்கையை மேம்படுத்துதல், சிந்தனையை ஒருமுக படுத்துதல், செயல்பாடுகளில் அதீத வீரியம், லட்சியங்களை வென்று எடுத்து சாதனை புரிதல், எதிர்கால வாழ்வில் திட்டமிடுதலுடன் வெற்றி காணுதல், துறைசார்ந்த ஞானம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தை சுவீகரித்தல் என்ற வகையில் சிறப்பை தரும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

  சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ள "பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்"  ஜெகம் ஆளும் "மக" நட்சத்திர அன்பர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் திருக்கோவிலாகும், இங்கு வளர்பிறையில் வரும் ஞாயிற்று கிழமை அல்லது சதுர்த்தி திதி அன்று வெள்ளெருக்கு மாலை சாற்றி சிகப்புதாமரை மலர்கள் சாற்றி வழிபடும் மகநட்சத்திர அன்பர்கள் 10 நாட்களில் அனைத்தையும் சாதிக்கும் வல்லவர்களாக திகழ்வார்கள், ஞானமும் அறிவும் இவர்களுக்கு வெகுவாக கைகொடுக்கும், சமயோசித அறிவு திறன் என்பது இவர்களின் வாழ்க்கையை பலமடங்கு சுபயோக வாழ்வை பெற்றுத்தரும், கல்வி கேள்விகளில் புலமை, தொழில்நுட்ப்ப அறிவாற்றல், கலைத்துறையில் மிகப்பெரிய வளர்ச்சி, இயல் இசை நாடகம் எழுத்து கவிதை போன்றவற்றில் மிகப்பெரிய ஆளுமை திறன், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றங்கள், ஞானமும் அறிவும் பெற்ற பெரியோர்களின் ஆசிர்வாதத்தை பெறுதல் அதன் வழியிலான சிறப்பு முன்னேற்றங்கள், கவலைகள் யாவும் மறைந்து மனதில் புத்துணர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகளை பெறுதல், மிதம் மிஞ்சிய மனமகிழ்வு பொதுவாழ்க்கையில் புகழ்மிக்க பொறுப்புகள் தேடிவரும் தன்மை, கோபுர உச்சியில் சென்று அரசாளும் யோகம், மூதாதையர் ஆசி, அரசு மரியாதை பெறுதல், விரும்பிய வாழ்வை வெற்றிகரமாக சுவீகரித்தல், எதிர்பாலினர் சேர்க்கை மற்றும் அவர்களால் விரும்படுத்தல், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்தல், ஆன்மீக வாழ்வில் உச்சம் தொடுதல், பிறவி அற்ற நிலையை எய்துதல், தனது வழியில் மற்றவர்களை புகழ்பெற செய்தல், தன்னம்பிக்கை, சுயமரியாதை, அறிவார்ந்த செயல்பாடுகள், தெய்வீக வாழ்வில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தல், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் வல்லமை, எதிர்பாராத திடீர் முன்னேற்றங்கள் என்ற வகையில் ராஜயோக வாழ்வை வாரி வழங்கும்.

 வருடம் ஒருமுறை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சென்று வரும் மக நட்ச்சத்திர அன்பர்கள் தமது இல்லற வாழ்வில் வரும் இன்னல்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி கரமான குடும்ப வாழ்வை சுவீகரிப்பார்கள், குறிப்பாக மக நட்ச்சத்திர பெண்களின் வாழ்வில் சுய முன்னேற்றமும், தொழில் வளர்ச்சியும் நிச்சயம் உண்டு புகழ் மிக்க தொழில் அதிபர்களாக திகழ செய்வதுடன் தனக்கு பொருத்தமான வாழ்க்கை துணையையும் பெற்று மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் பேராற்றல் உண்டாகும், திருமண தடை அகலும் புத்திர பாக்கியம் உண்டாகும், தொழில் விருத்தி கல்வியில் வெற்றி என சகல நிலைகளில் இருந்தும் தன்னிறைவான முன்னேற்றங்களை வாரி வழங்கும், பதவி உயர்வு அரசுத்துறை ஆதாயம், அரசு பதவிகளை பெறுதல் அரசு வேலைவாய்ப்பு போன்ற முன்னேற்றங்கள் என இவர்களது வாழ்வில் வெகு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், மகநட்சத்திர பெண்கள் தமது வாழ்வில் சாதனைகள் புரிய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் எப்பொழுதும் துணை நிற்பார்.

  குறிப்பு :

சிம்மராசியில் "மகம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், பாரம்பரிய பெருமைகளையும், மக்கள் செல்வாக்கு, தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு, ஆன்மீக பெரியோர் ஆசி என சிறப்பான ஆன்மீக நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகளை சர்வநாசம் செய்யும் வலிமை பெற்றவர்கள் இவர்களது வாக்கு மிகவும் வலிமையானது என்பதனால், அனைவருக்கும் நல்ல வார்த்தைகளை பிரயோகம் செய்வது நலம், மிகப்பெரிய சாதனைகளுக்கும், மிகப்பெரிய செயல்பாடுகளுக்கும் சொந்தக்காரர்கள் என்பதனால், இவர்களுது சிந்தனை என்பது மிகப்பெரிய காரியங்களை சாதிக்கும் தன்மையுடன் இருப்பது நலம், குறுகிய மனப்பான்மையின்றி பொதுநலம் சார்ந்து செயல்படும் பொழுது இவர்களது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கும், மேற்சொன்ன பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

சனி, 25 நவம்பர், 2017

லக்கினாதிபதி சூரியன் திசை, விரையாதிபதி சந்திரன் திசை தரும் பலன்கள் என்ன ?



கேள்வி :

 வணக்கம் எனது சுய ஜாதகத்தில் தற்போழுது சூரியன் திசை நடைமுறையில் உள்ளது, சூரியன் லக்கினாதிபதி என்பதால் எனக்கு நன்மையே செய்வார் என்றார்கள் ஆனால் இதுவரை எந்தவித நன்மையையும் சூரியன் திசை தரவில்லை, கடன் மட்டுமே அதிகரித்துள்ளது, எதிர்வரும் சந்திரன் திசை விரையாதிபதி திசை என்பதால், வீண் விரையமே ஏற்படும் என்கின்றனர், எதிர்காலத்தை நினைத்து மிகவும் கவலையாக உள்ளது, தயவு செய்து சந்திரன் திசை எனக்கு இன்னல்களை அதிகம் தருமா ? ஓரளவு நன்மையாவது செய்யுமா தெளிவுபடுத்த வேண்டுகிறேன், " நன்றி "

பதில் :

  பொதுவாக சுப ஸ்தானங்களுக்கு அதிபதியான கிரகங்கள் மற்றும் கிரகங்களின் திசாபுத்திகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோக பலன்களை தரும் என்பதும், அசுப ஸ்தானங்களுக்கு அதிபதியான கிரகங்கள் மற்றும் கிரகங்களின் திசாபுத்திகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அவயோக பலன்களை தரும் என்பதும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றிய யாதொரு தெளிவும் இன்றி, பொதுப்படையாக சொல்லப்படும் கருத்துக்களே, ஒருவரின் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் தனிப்பட்ட முறையில் சுபயோக பலன்களையே, அவயோக பலன்களையே தனது திசாபுத்திகளில் ஏற்று நடத்தும் என்பது, சிறிதும் சுயஜாதக கணித அறிவு இல்லாமல் கற்பனையில் கூறப்படும் கருத்துக்களே, இதற்க்கு முக்கியத்துவம் தருவது என்பது நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நாமே தடைக்கற்களை உருவாக்கிக்கொள்வதற்கு இணையானது.

 மேலும் கால புருஷ தத்துவ அமைப்ப்பிற்கு நமது சுய ஜாதகத்தில் நவ கிரகங்கள் பெரும் வலிமை நிலையை ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ) கருத்தில் கொண்டு, நமக்கு அவை நன்மை தீமை பலன்களை தரும் என்று கருதுவதும் சுய ஜாதக பாவக வலிமை பற்றிய கணித அறிவு இல்லாமல் கூறப்படும் தவறான கருத்துக்களே, சுய ஜாதக கணிதம் என்பது மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது அவையாவன :

1) ஓர் ஜாதகர் தனது பிறந்த குறிப்பை அடிப்படையாக கொண்டு ( பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ) பெறப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது, சுய ஜாதகத்தை இயக்குவதில் லக்கினமே முதன்மை வகிக்கிறது, இந்த லக்கினத்தை மூலாதாராமாக கொண்டு மற்ற பதினோரு பாவகங்களும் வலிமை அல்லது வலிமை அற்ற தன்மையை பெறுகின்றது ( லக்கினம் உற்பட ) இதில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் நன்மை மற்றும் சுபயோக பலன்களையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் தீமை மற்றும் அவயோக பலன்களை ஜாதகர் தனது வாழ்நாளில் அனுபவிக்கும் தன்மையை பெறுகிறார்.

2) ஓர் ஜாதகர் தனது பிறந்த குறிப்பை அடிப்படையாக கொண்டு ( பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ) பெறப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் பலாபலன்களையே, சுய ஜாதகத்தில் நவகிரகங்களின் திசாபுத்திகள் சுவீகரித்து தனது திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் வழங்குகிறது, நவகிரகங்கள் தான் அமர்ந்த இடத்தின் பலனையே, பார்த்த இடத்தின் பலனையே தனது திசாபுத்திகளில் தரும் என்று கருதுவதும், தான் பெற்ற ஆதிபத்யத்தின் பலனை தனது திசாபுத்திகளில் தரும் என்று கருதுவதும் உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை அல்லது புத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமை என்ன ? அது தரும் பலாபலன்கள் என்ன ? என்ற அடிப்படை விஷயம் அறியாமல் கற்பனையில் கூறப்படும் கருத்துக்களே என்றால் அது மிகையில்லை.

3) கோட்சார கிரகங்களின் பலன்கள் என்பது தற்போழுது பெரும்பாலும் சந்திரன் நின்ற இடத்தை ( ராசியை ) அடிப்படையாக கொண்டு பலன் கூறப்படுவதும் தவறான அணுகு முறையே, நமக்கு சுய ஜாதகம் உள்ளது என்றால் கோட்சார பலாபலன்களை நமது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் சம்பந்த படுத்தி கோட்சார பலன்களை அறிந்துகொள்வதே சரியானது, இதுவே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு துல்லியமான பலாபலன்களை கூறுவதற்கு ஏதுவானதாக அமையும், மேற்கூறிய விஷயங்களை, கேள்விகள் வினவிய அன்பரின் சுய ஜாதகத்துடன் பரீட்சித்து பார்த்து ( உதாரண ஜாதகமாக கொண்டு ) தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம்

சூரியன் லக்கினாதிபதி, லக்கினாதிபதி திசை ஏன் நன்மையை தரவில்லை ?

பொதுவாக லக்கினாதிபதி என்ற முறையில் ஓர் ஜாதகருக்கு, லக்கினாதிபதி திசை நன்மையை தரும் என்பது தவறான கருத்து, லக்கினாதிபதி திசை என்றாலும் சரி, யோகாதிபதி திசை என்றாலும் சரி நமது ஜாதகத்தில் எந்த பாவக  பலனை ஏற்று நடத்துகிறது என்பதை பொறுத்தே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோக பலன்களோ, அவயோக பலன்களோ நடைமுறைக்கு வரும், லக்கினாதிபதி என்ற ஓர் தகுதியை வைத்து, அவரது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் நன்மையை மட்டுமே வழங்கும் என்பது தவறான கருத்து, மேற்கண்ட ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகருக்கு லக்கினாதிபதி திசை என்றாலும், அவரது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 2,6,8,12ம் வீடுகளின் பலனை தனது திசையில் ஏற்றுநடத்துவதால் ஜாதகருக்கு லக்கினாதிபதி திசை நன்மைகளை தரவில்லை, சூரியன் திசை ஜாதகருக்கு ( 20/04/2012 முதல் 20/04/2018 வரை ) சுய ஜாதகத்தில் 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் விரைய ஸ்தான பலனை வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் இன்னல்கள், வருமான  பாதிப்பு, வரும் வருமானம் மற்றும் தனம் விரையமாகும் தன்மை, வாக்கு வன்மை அற்ற நிலை என்றவகையில் இன்னல்களையும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் தொந்தரவுகள், எதிரி தொல்லை, கடன் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலை, வீண் அவப்பெயர், எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள் என்றவகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை வழியிலான வீண் செலவுகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் வீண் விரையம், மற்றவர்களை நம்பி தரும் பணம் மற்றும் பொருட்கள் வழியில் இருந்து வரும் திடீர் இழப்புகள் என்ற வகையில் இன்னல்களை தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் மன நிம்மதி கேள்விக்குறியாக மாறும், நிம்மதியின்றி அதிக மனஉளைச்சலை ஜாதகர் எதிர்கொள்ளும் நிலையை தரும், முதலீடுகளில் எதிர்பாராத பேரிழப்புகளை தரும், இதன் தாக்கம் ஜாதகரின் மனநிம்மதியை சீர்குலைக்கும், சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாமல் போராட்ட வாழ்க்கையை ஜாதகர் எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகவேண்டிய சூழ்நிலையை தரும், ஜாதகர் லக்கினாதிபதி திசை நன்மையை தரும் என்ற ஆலோசனையின் பெயரில் செய்த முதலீடுகள் அனைத்தும் வீண் விரையம் என்ற நிலையை அடைந்ததற்கு அடிப்படை காரணமே, சுய ஜாதகத்தில் சூரியன் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்தியது  என்று தெரியாமல் வழங்கிய தவறான ஜாதக ஆலோசனையே என்றால் அது மிகையில்லை, நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தியிருந்தால் ஜாதகருக்கும் இது போன்ற தவறான ஜோதிட  ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்காது, சிறந்த ஜோதிடர் கிடைத்திருப்பர், ஜாதகருக்கும் சரியான ஆலோசனை கிட்டியிருக்கும், விதியின்  பயனை வெல்ல ஜாதகரின் குல தெய்வமும், பித்ருக்களின் ஆசியையும் பெற தவறிவிட்டார் என்பதுடன் உதாசீனம் செய்தார் என்பது வருந்தத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகரின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாகவும், சர நீர் ராசியாகவும் அமைவது ஜாதகரின் மனநிலையை வெகுவாக படுத்தியெடுத்துவிட்டது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை,

விரையாதிபதி சந்திரன் திசை விரையத்தை தரும், வீழ்ந்து கிடக்கும் ஜாதகரை விழிப்புணர்வுடன் வெற்றிகொள்ள செய்யுமா ?

 எதிர்வரும் விரையாதிபதி சந்திரன் திசை தரும் பலன் என்ன? என்பதை காணுமுன் கிராமங்களில் உள்ள பெரியோர்கள் ஓர் " செலவேந்தரம் " ஒன்று சொல்வதுண்டு அதாவது " கப்பல் வியாபாரத்தில் விட்ட காசை, கட்டில் கயிறு திரித்து பெற முடியாது " என்று சொல்வதுண்டு இதற்க்கு அர்த்தம் நாம் எங்கு விட்டோமோ அங்கு இருந்துதான் அதை பெற முடியும் என்பதாக அமையும், எனவே ஜாதகர் லக்கினாதிபதி திசையில் வெகு விரயங்களை சந்தித்து விட்டார், ஆனால் விரைய ஸ்தான அதிபதியான சந்திரன் திசையோ ஜாதகருக்கு வலிமை பெற்ற  3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்தி, ஜாதகருக்கு அபரிவிதாமான யோக வாழ்க்கையை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பது ஜாதகருக்கு தற்போழுது " ஜோதிடதீபம் " வழங்கும் சிறப்பான நல்ல செய்தியாகும், மேலும் சந்திரன் திசை முழுவதும் வலிமை பெற்ற வீரிய ஸ்தான பலன்கள் நடைபெறுவது ஜாதகரின் வெற்றி வாய்ப்புகளை தன்னிறைவாக வாரி வழங்கும், ஜாதகரின் வீரிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாகவும், சர காற்று ராசியாகவும் அமைவது  வெளிநாடுகளில் இருந்து வரும் சரளமான பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பதுடன், ஜாதகர் இவையனைத்தையும் தனது அறிவு சார்ந்த முயற்சிகளில் இருந்து பரிபூர்ணமாக பெறுவார் என்பதை தெளிவுபடுத்துகிறது, ஜாதகரின் சமயோசித அறிவு புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் சகல விதங்களில் இருந்து தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை வாரி வழங்கும், ஜாதகரின் அறிவின் வீச்சு மிகவும் பிரமாண்டமானதாகவும், ஜாதகரின் அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள் உலக மக்களின் அவசிய தேவையை நிறைவு செய்வதாகவும் அமையும் என்பதை நினைத்து " ஜோதிடதீபம் " வியப்படைகிறது.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த செல்வசெழிப்பு, எதிரிகளை வெல்லுதல், நல்ல மனநிலை, சிறந்த சிந்தனை ஆற்றல், சத்தியத்தை மதித்தது நடப்பது, கல்வி கேள்விகளில் வெற்றி, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை, புதிய சிந்தனை மற்றும் புதிய  வாய்ப்புகள், ஏஜென்ஜி துறை வழியிலான அபரிவித வளர்ச்சி என்ற எமது  ஆசான் அருள்வேல் அய்யாவின் வாக்கிற்க்கு இணங்க, மேற்கண்ட சிம்ம லக்கின ஜாதகர் விரைய ஸ்தான அதிபதியான "சந்திரன்" திசையில் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுவார் என்பதை உறுதிபட தெரிவித்து, மேற்கண்ட ஜாதகருக்கு எதிர்வரும் விரைய ஸ்தான அதிபதி சந்திரன் திசை விரையத்தை தாராது என்ற மனஉறுதியை வழங்குவதுடன், சந்திரன் திசைக்கு பிறகு வரும் செவ்வாய் திசையும் 4,10ம் வீடுகள் வழியில் இருந்து  சுபயோக பலன்களையும், செவ்வாய் திசைக்கு பிறகு வரும் ராகு திசை  5ம் வீடு வழியில் இருந்து சகல சௌபாக்கியத்துடன் கூடிய சுபயோக பலன்களையும் வாரி வழங்கும் என்ற திடமான ஜாதக உண்மையை கூற கடமைப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே தருவதால் ஜாதகருக்கு " வானமே எல்லை " என்பதை அறிவுறுத்துவதில் மகிழ்ச்சியும் மிதமிஞ்சிய இறை அருளின் கருணையை நினைத்து உவகை கொள்கிறது, எல்லாம் இறைஅருள் " வாழ்த்துக்கள் " அன்பரே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 26 ஜூலை, 2012

சூரிய பகவான் வழங்கும் சுபயோக பலன்கள் !



கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சிம்மம் ஐந்தாம் வீடாகவும் , ஸ்திர நெருப்பு ராசியாகவும் அமைகிறது , இந்த ராசிக்கு அதிபதியாக சூரியன் பொறுப்பேற்கிறார் , மேலும் ஒருவருடைய ஜாதக அமைப்பில் சூரியன் மற்றும் , சிம்ம ராசி ஆகியன நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் அனுபவிக்கும் நன்மைகள் என்னவென்பதை இந்த பதிவில் நாம் காணலாம் , நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருத படும் கிரகம் சூரிய பகவானே , கரணம் அனைத்து கிரகங்களையும் ஆளுமை செய்யும் தன்மை இந்த சூரியனுக்கே உண்டு மேலும் , மற்ற கிரகங்களை வக்கரகம் செய்யும் சக்தியும் அஸ்தமனம் பெற செய்யும் சக்தியும் சூரிய பகவானுக்கு உள்ள சிறப்பு அம்சங்கள் அப்படிபட்ட சூரிய பகவான் , ஒருவருடைய ஜாதக அமைப்பில் எந்த நிலையிலும் பாதிப்பு அடையாமல் இருப்பது, ஜாதகருக்கு அதிக நன்மையான பலன்களை வாரிவழங்க எதுவாக அமையும் .

 

மேலும் கால புருஷ தத்துவத்திற்கு ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக வரும் காரணத்தால் , ஒருவருக்கு குல தெய்வம் எதுவென்று தெரியாத சூழ்நிலை ஏற்ப்படும் பொழுது அவருக்கு உண்டான குல தேவதை எதுவென்று உணர்த்தும் தன்மை இந்த சூரிய பகவானுக்கு உண்டு , அதாவது தொடர்ந்து ஒரு ஜாதகார் அதிகாலையில் முறைப்படி சூரிய நமஸ்காரம் செய்துவருவாரே ஆயின் , சூரிய பகவானின் அருளால் அவருடைய குல தேவதை ஒரு மண்டல காலத்தில் நிச்சயம் தெரிய  வரும் , மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் ராஜாங்கத்தில் பரிபாலனம் செய்ய வேண்டுமெனில்  சூரிய பகவானின் அருளாசியில்லாமல் நிச்சயம் நடக்க வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை , குறிப்பாக மக்கள் ஆதரவு பெறவேண்டும் எனில் சுய ஜாதகத்தில் சிம்ம வீடும் , சூரிய பகவானும் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் , அரசியலில் உயர்பதவிகளை வகிக்க நிச்சயம் சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக இருந்தால் மட்டுமே  தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று மிகசிறந்த அரசியல் வாதியாக திகழ முடியும் .

 

சிம்ம ராசி கால புருஷ தத்துவத்திற்கு பூர்வ புண்ணிய அமைப்பை பெறுகிறது , மிகசிறந்த ஆன்மீக வாதிகளின் சுய ஜாதக அமைப்பில் இந்த சிம்ம வீடு 100 சதவிகிதம் நல்ல நிலையில் , இருப்பதை பார்க்கலாம், மிகசிறந்த அரசியல்வாதி , தனி திறன் பொருந்திய மருத்துவர்கள் , மக்களை காக்கும் பொறுப்பில் உள்ள நேர்மை மாறாத காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் , சட்ட நிபுணர்கள் , கல்வியாளர்கள், பொது நல மக்கள் சேவகர்கள் , நாட்டின் மிகப்பெரிய பதவிகளில் சிறப்பாக செயல்படும் ஆட்சியாளர்கள் என இவர்களின் பட்டியல் மிகவும் அதிகமே , பிறப்பில் அதிக வசதி வாய்ப்பு அற்ற நிலையில் இருந்தாலும் ஜாதகரின் வயது கூட கூட அதிக யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை பெற்றவர்களின் ஜாதகங்களில் எல்லாம்  சிம்ம வீடும் , சூரிய பகவானும் மிக சிறப்பான நிலைகளில் நிச்சயம் அமைந்து இருக்கும் .

 

சில குழந்தைகள் கல்விகாலங்களில் படிப்பு மற்றும் சிறப்பு திறன் போன்றவற்றில் சிறந்து விளங்குவதற்கு சூரிய பகவானும் , சிம்ம வீடுமே காரணமாக அமைகிறது , அதிலும் மிகமுக்கியமாக மருத்துவ துறைசார்ந்த படிப்புகளில் சிறந்து விளங்க மேற்கண்ட அமைப்பு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே முடியும் , இல்லையெனில் யாரும் மருத்துவ துறைக்குள்  அடியெடுத்து வைக்க கூட இயலாது , ஒரு குழந்தை சிறு வயது முதல் சிறப்பான திறமை , கல்வி , புதுமையான சிந்தனை , படைப்பாற்றல் ஆகியவை அமைய வேண்டும் எனில் தினமும் அதிகாலையில் எழுந்து சூரியன் வருமுன் சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நிச்சயம் வாழ்க்கையில் சகல நலன்களும் கிடைக்க பெறுவார் இது கண்கூடாக கண்ட உண்மை , கல்வி கேள்விகளிலும் , கலைகளிலும் சிறந்து விளங்க சூரியனின் அருள் இருந்தால் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை தரும் .

 

எனவே தனது குழந்தை சிறப்பான திறமைகளுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்து பெற்றோர்களும் , குழந்தைகளுக்கு சிறு வயது முதல் சூரிய வழிபாட்டினை கற்றுகொடுக்க வேண்டியது அவசியமாகிறது , இதை பின்பற்றும் குழந்தைகள் அனைத்தும் எந்த சூழ்நிலையையும் சமாளித்து , தனது லட்ச்சியம் மற்றும் குறிக்கோள்களை நிச்சயம் அடைவார்கள் , இதில் ஒரு சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால் அடிப்படையில் இருந்து சூரிய வழிபாடு செய்து வரும் அனைவரும் , நல்ல குணங்களும் , சிறந்த ஒழுக்கமான நடவடிக்கையும் , அனைவரிடமும் அன்பு செலுத்தும் குணமும் , பெருந்தன்மையான குண அமைப்பையும் பெறுகின்றனர் .

 

சூரியன் உலகத்திர்க்கெல்லாம் ஒளி தரும் தன்மை போல் சுய ஜாதகத்தில் சூரியன் மற்றும் சிம்ம வீடு நன்றாக அமைய பெற்றவர்கள் , 100 சதவிகித வெற்றிகரமான வாழ்க்கையை பெற்று மற்றவருக்கு உபயோகமான வாழ்க்கையை வாழ்ந்து விட்டு செல்லும் யோகம் பெற்றவர்களாகவே இருப்பது ஒரு சிறப்பான விஷயம் . நவகிரகங்களில் சூரியனுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு மற்ற கிரகங்களால் ஏற்ப்படும் துன்பங்களில் இருந்து ஒரு ஜாதகர் விடுபட சூரிய நமஸ்காரம் தினமும் செய்து வந்தால்  நிச்சயம் நன்மை கிடைக்கும் , இந்த நன்மையை வழங்கும் அதிகாரம் சூரியனுக்கு மட்டுமே உண்டு . மேலும் பல சிவ ஸ்தலங்களுக்கு சென்று வழிபடும் யோகம், ஒருவருக்கு சுய ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே கிடைக்கிறது , மேலும் பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக செய்பவர்கள் அனைவருக்கு சுய ஜாதகத்தில் சூரியன் மற்றும் சிம்ம வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே கிடக்கிறது , பஞ்சபூதங்கள் பற்றிய ஆய்விற்கு சூரியன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே விளக்கம் பெற முடியும் .

 

எனவே ஒவ்வொருவருடை வாழ்க்கையிலும் சூரிய பகவான் மிகப்பெரிய மாற்றங்களை தர வேண்டும் எனில் , சூரிய வழிபாடு அல்லது பிரதோஷ வழிபாடு செய்வது மிகசிறந்த நன்மைகளை தரும் , முடியாதவர்கள் வருடத்தில் இரண்டு முறை வரும் சனி பிரதோஷ வழிபாட்டினையாவது மேற்கொள்ளுவது மிக பெரிய நன்மைகளை வாரி வழங்கும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 2 ஜூலை, 2012

சிம்ம லக்கினத்திற்கு லக்கினாதிபதி சூரியன் அமர்ந்த இட பலன்கள் !



லக்கினாதிபதி  சூரியன் லக்கினத்தில் அமர்ந்தால் :

ஜாதகர் பாடு படு திண்டாட்டமாக அமைந்து விடும் , ஜாதகரே தனது வாழ்க்கையை கெடுத்து கொள்வார் இங்கு சூரியன் ஆட்சி பெற்று அமர்ந்தாலும் , ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் தர மாட்டார் , மேலும் ஜாதகர் தனது பூர்விகத்தில் வாழ முடியாத நிலை ஏற்ப்படும் , உதவி செய்ய யாரும் வர மாட்டார்கள் , மக்கள் ஆதரவும் கிடைக்காது , அவர்கள் வழயில் இருந்து ஜாதகர் 100 சதவிகிதம் தீமையான பலன்களையே அனுபவிக்க வேண்டி வரும் , ஜாதகர் சிந்தனை செய்யாமல் செய்யும் காரிங்கள் அனைத்தாலும் மனநிம்மதி இழக்க வேண்டி வரும் , தன்னம்பிக்கை குறையும் , முயற்ச்சி இன்மை , சோம்பல் ஜாதகரை முடக்கி விடும் , ஜாதகர் எந்த விதத்திலும் செயல் பட்டாலும் அதற்க்கு பல தடைகளும் , தொந்தரவுகளும் வரும் , சிறு வயது முதற்கொண்டே பாசத்திற்காக எங்கும் சூழ்நிலையும் , நல்ல இடத்தில் வளரும் சூழ்நிலையும் ஏற்ப்படாது , பல போராட்டங்களை வாழ்க்கையில் சந்திக்க வேண்டி வரும் , ஆக இந்த அமைப்பு ஜாதகருக்கு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் இரண்டாம் பாவகம் கன்னி ராசியில் அமர்ந்தால் :

ஜாதகரின் வாக்கில் இருந்து வரும் வார்த்தைகள் மற்றவரை அதிகம் மனம் நோக செய்யும் , போகும் இடங்களில் எல்லாம் வம்பு தும்புக்கு செல்ல நேரும் அதனால் தேவையில்லாத தொந்தரவுகளை ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும் மேலும் மன நிம்மதி என்பதை தனது வாக்கால் தொலைக்க வேண்டி வரும் , ஜாதகர் ஈட்டும் வருமானம் அனைத்தையும் மனம் போன  போக்கில் செலவு செய்ய நேரும் , இதனால் குடும்பத்தில் எப்பொழுது சண்டை சச்சரவுகளை தவிர்க்க இயலாது , உறவினர்களிடமும் நல்ல பெயர் கிடைக்காது , பல இடங்களில் இருந்து துன்பங்களை அனுபவிக்க நேரும் , ஜாதகரின் தனம் குடும்பம்  வாக்கு என்ற நிலையில் இருந்து லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் மூன்றாம் பாவகம் துலாம்  ராசியில் அமர்ந்தால் :

ஜாதகரின் வாழ்க்கையில் செய்யும் முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றி பெரும் , அதன்மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவார் சூரியன் இங்கு நீச நிலையில் அமர்ந்தாலும் லக்கினத்திற்கு மிகசிறந்த நன்மைகளையே வாரி வழங்குவார் , துலாம் சர காற்று தத்துவம் என்பதால் ஜாதகர் ஒவ்வொரு விசயத்தையும் அறிவுபூர்வமாக அணுகும் தன்மை கொண்டவராக  இருப்பார் , இதனால் அனைவரும் நன்மையடைவார்கள் . ஜாதகருக்கு வரும் துன்பங்கள் யாவையும் அறிவின் வழியில் தீர்வு கண்டு நன்மை பெறுவார் , ஜாதகருக்கு மக்கள் செல்வாக்கும், ஜன ரஞ்சக எழுத்தாற்றலும், மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை , பத்திரிகை உலகில் ஜாதகருக்கு நிச்சயம் மிகசிறந்த எதிர்காலம் அமையும் , அரசு துறையில் பணியாற்றும் யோகமும் கிடைக்கும் இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான  பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் நான்காம்  பாவகம் விருச்சக ராசியில் அமர்ந்தால் :

மிக சிறந்த யோகம் லக்கினத்திற்கு ஏற்ப்படும். திடீர் அதிர்ஷ்டம் , புதையல் கிடைத்தல் , மண்ணில் கிடைக்கும் அறிய வகை பொருட்களால் நிறைய லாபம் , வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வ வளம் , புதிய கண்டுபிடிப்புகளால் ஜாதகர் திடீர் என வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் வாய்ப்பு , அறிய வகை பொருட்களை வாங்கி விற்பதால் வரும் லாபம் , உயர்கல்வியால் அமையும் தொழில் வாய்ப்புகள் அதன் வழி முன்னேற்றம் , மக்கள் தொடர்பில் ஜாதகருக்கு வரும் யோகம் , வெளிநாடுகளில் அதிர்ஷ்ட வாழ்க்கை , வெளிநாடுகளில் தொழில் முதலீடு செய்யும் யோகம் , பழைய வண்டி வாகனங்களை வாங்கி விற்பதால் வரும் அதிக லாபம் , செய்யும் தொழில் விரைவான முன்னேற்றம் , சிறப்பான குணம் மற்றவரை மதிக்கும் பெருந்தன்மை எந்த சூழ்நிலையிலும் நேர்மை மாறாத குணம் என  இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான  பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் ஐந்தாம் பாவகம் தனுசு  ராசியில் அமர்ந்தால் :

ஜாதகரை தனது பூர்வீகத்தை விட்டே ஒட்டி விடும் , உதவி செய்ய யாரும் இல்லாத சூழ்நிலைக்கு தள்ள படுவார் , குலதெய்வமும் ஜாதகருக்கு நன்மை செய்யாது , வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் , பூர்வீகத்தில் இருக்கும் வரை ஜாதகருக்கு சிறிதும் நன்மையில்லை , தனது பூர்வீக சொத்துகளை திடீர் என இழக்க வேண்டி வரும் , மன உறுதி ஜாதகருக்கு இருக்காது , மற்றவரை நம்பி நடு ஆற்றில் இறங்கியது போல தவிக்க வேண்டி வரும் , குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்ப்படும் , விருப்ப மனம் செய்தால் ஜாதகருக்கு பிரிவு நிச்சயம், இருதார யோகம் ஏற்ப்படும் , இல்லை எனில் மற்ற பெண்களுடன் சகவாசம் ஏற்ப்படும் அதனால் ஜாதகர் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை ஏற்ப்படும் , அவசரபட்டு எடுக்கும் முடிவுகள் அனைத்து ஜாதகருக்கு எந்த விதத்திலும் நன்மை செய்யாது ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் ஆறாம் பாவகம் மகர ராசியில் அமர்ந்தால் :

ஜாதகர் மற்றவர்களிடம் சூழ்நிலை கைதியாக படாத பாடு பட வேண்டி வரும் , மனதளவில் மிகுந்த தைரியசாலியாக இருந்தாலும் ஜாதகருக்கு நடக்கும் பலன்கள் யாவும் மன உறுதியை தவிடு பொடியாக்கி விடும் ,கூண்டில் அடைக்க பெற்ற  அடிபட்ட சிங்கத்தின் நிலை ஜாதகருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் , வாழ்க்கையில் சில நேரங்களில் திடீர் அதிர்ஷ்டம் வரும் ஆனால் ஜாதகர் அதை பயன்படுத்தி கொள்ள மறுப்பார் , எதிர்கள் அதிகம் இருப்பினும் அவர்களால் ஜாதகருக்கு மிக சிறந்த நன்மையே நடக்கும் , இவரை பகைத்து கொண்டவர்களின் வாழ்க்கை சர்வ நாசம் என்பதில் சந்தேகம் இல்லை , ஜாதகர் தனது எண்ண ஆற்றல்களை செழுமை படுத்தினால் நிச்சயம் இவரை போன்று யாரும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற முடியாது , அரசியலில் இந்த அமைப்பை பெற்ற ஜாதகரை ஒரு கட்சி நிற்க வைத்தால் எதிர்கட்சியை சேர்ந்தவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 50 க்கு 50 சதவிகித நன்மை தீமை பலனையே கலந்து  தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் ஏழாம் பாவகம் கும்ப  ராசியில் அமர்ந்தால் :

ஜாதகரின் வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக அமைந்து விடும் , நல்ல சிறப்பான கல்வி , மக்கள் செல்வாக்கு , பலதார யோகம் , மனைவி வழியில் இருந்து மிகசிறந்த நன்மைகளை பெரும் யோகம் , எங்கு சென்றாலும் அனைவராலும் விரும்பப்படும் நல்ல குணம் , பெருந்தன்மை கடமை கண்ணியம் கட்டுபாடு போன்ற உயர் குணங்கள் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் , அரசியலில் மிகசிறந்த பதவிகளை அலங்கரிக்கும் யோகம் , அதிரடியான வெற்றிகள் அதன் மூலம் வாழ்க்கையில் சகல யோகங்களையும் ஜாதகர் பெறுவார் , பெரிய மனிதர்களின் ஆதரவு , மக்கள் ஆதரவு ஜாதகரை மிக சிறந்த அரசியல் வாதியாக மாற்றி விடும் , தன்னம்பிக்கை எந்த சூழ்நிலையிலும் ஜாதகரை காப்பாற்றும் , ஆன்மீக வாதிகளின் ஆசிர்வாதமும் அருளாசியும் ஜாதகருக்கு என்றும் துணை நிற்கும் ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் எட்டாம் பாவகம் மீன ராசியில் அமர்ந்தால் :

ஜாதகரின் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிடும் , ஜாதகரின் மன ஆற்றல் , மன உறுதி அனைத்தும் ஒரு காலத்தில் சிதைந்து விடும் மன அழுத்த நோயினால் ஜாதகர் படாத பாடு பட வேண்டி இருக்கும் , ஜாதகரை யாரும் புரிந்துகொள்ள முன் வர மாட்டார்கள் , நாளடைவில் இதுவே ஜாதகரை அதிகம் பாதிக்கும் , இதனால் கவனக்குறைவு ஏற்ப்படும் பல விபத்துகளை சந்திக்க வேண்டி வரும் , இதனால் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும் ஜாதகருக்கு மன அழுத்தம் அதிகமாகி விட வாய்ப்பு உண்டு , தனது வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து அதிக இழப்புகளை ஜாதகர் சந்திக்க வேண்டி வரும் ,ஆனால் வாழ்க்கை துணை ஜாதகரை புரிதுகொள்ள சிறிதும் முன்வர மாட்டார் , இதனால் ஜாதகர் வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்கு உரிய நிலைக்கு தள்ளப்படுவார் , ஜாதகருக்கு நல்ல குணம் , உதவும் மனப்பான்மை இருந்தாலும் இதனால் மற்றவர்கள் மட்டுமே பயன் பெறுவார்கள் ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் இல்லை ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .


லக்கினாதிபதி சூரியன் ஒன்பதாம் பாவகம் மேஷ ராசியில் அமர்ந்தால் :

ஜாதகர் யாரிடமும் நல்ல பெயர் வாங்க முடியாது , நன்மை என்று செய்யும் காரிங்கள் அனைத்தும் ஜாதகருக்கு தீமையில் போய் முடியும் , குறிப்பாக பெண்களிடம் ஜாதகர் கவனமாக இல்லை எனில் தேவையில்லாமல் அவ பெயரை சந்திக்க வேண்டி வரும் , செய்யும் காரியங்கள் அனைத்து அவசர அவசரமாக செய்து விட்டு பின்பு புலம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும், ஜாதகருக்கு உதவிட யாரும் வர மாட்டார்கள் . இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் தன்னை விட வயதில் பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று வாழ்க்கை நடத்துவது மிகசிறந்த நன்மைகளை தரும் , அல்லது வெளியூர் , வெளிநாடு சென்று வசிப்பது நன்மையை தரும் , மேலும் ஜாதகர் அனைவரையும் அனுசரித்து செல்லும் குணத்தை கடை பிடிப்பது ஜாதகருக்கு மிக மிக அவசியம் ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் பத்தாம் பாவகம் ரிஷப ராசியில் அமர்ந்தால் :

ஜாதகருக்கு நல்ல வருமானத்தை தந்துவிடும் , மிகசிறந்த வியாபார அறிவை சிறு வயதிலேயே ஜாதகர் பெற்றுவிடுவார் , குறிப்பாக அடிப்படையில் வியாபாரம் செய்யும் வணிகர்கள் குடும்பத்தில் ஜாதகர் பிறந்திருக்கும் யோகம் உண்டு. அமர்ந்த இடத்திலிருந்து அனைத்து செல்வங்களையும் ஜாதகர் பெறுவார் . சிறந்த வியாபாரிகள் , நிர்வாக திறமை பெற்றவர்கள் , ஆளுமை திறன் கொண்ட அரசியல்வாதிகள் , மக்கள் நலம் போற்றும் ஆன்மீகவாதிகள் , மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் கைராசி மருத்துவர்கள் , மன நல மருத்துவர்கள் , சிறந்த ஆற்ருபடுத்துதல் திறன் கொண்டவர்கள் , மக்களுக்கு சிறப்பாக பணியாற்றும் அரசு உழியர்கள் , என சகல துறைகளிலும் சிறந்து விளங்கும் தன்மை கொண்டவர்கள் , இவர்களிடம் உள்ள சுய நலத்தில் பொது நலம் கலந்தே இருக்கும் .ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

லக்கினாதிபதி சூரியன் பதினொன்றாம் பாவகம் மிதுன ராசியில் அமர்ந்தால் :

அதிர்ஷ்ட தேவதையின் அருட் கடாட்சம் பெற்றவர்கள் , நீண்ட நிறைவான அதிர்ஷ்டம் கொண்டவர்கள் . இவர்களுக்கு வரும் அதிர்ஷ்டங்கள் அனைத்தும் தனது அறிவை மூலதனாமாக கொண்டு பெற்றதாகவே இருக்கும் , குறிப்பாக பத்ரிக்கை உலகில் கோடி கட்டி பறக்கும் நபர்கள் பலர் இந்த அமைப்பை பெற்றவர்களே , குறிப்பாக எழுத்து மற்றும் எழுது பொருட்கள் , அச்சு துறை , விளம்பர துறை , தகவல் தொழில் நுட்ப பிரிவு , வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்கு மதி தொழில்களில் சிறப்பாக விளங்கும் யோகம் , மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களில் சிறந்து விளங்குபவர்கள் என இவர்களது பட்டியல் நீலம் அதிகம் , சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் இங்கு அமர்வது லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

லக்கினாதிபதி சூரியன் பனிரெண்டாம்  பாவகம் கடக ராசியில் அமர்ந்தால் :


மன நிம்மதி என்ன விலை என்று கேட்பவர்கள் , எந்த விதத்திலாவது  ஜாதகருக்கு மனக்குறை இருந்து கொண்டே இருக்கும் , சரியான காலத்தில் ஜாதகருக்கு எதுவும் அமையாது , இதனால் அதிக மன உளைச்சலுடன் வாழும் சூழ்நிலைக்கு தள்ள படுவார் , இவர்கள் எந்த வகையிலாவது குடி பழக்கத்திற்கு , தீய பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் ஜாதகார் அதிலிருந்து  விடுபடுவது என்பது நிச்சயம் நடக்காது , இவர்கள் அனைவரும் நல்ல ஆன்மீக வாதிகளிடம் ஆசி பெறுவதும் , தீட்சை பெறுவது ஜாதகருக்கு தான் யார் என்ற உண்மையை புரிய வைக்கும் , அதன்வழி ஆன்மிக வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம் அமைய பெறுவார்கள் , இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் சிறுவயதில் இருந்தே அதிக கவனம் எடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும் அப்பொழுதுதான் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் , ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

குறிப்பு :

பொதுவாக சிம்மலக்கின அமைப்பை பெற்ற ஜாதகர்களுக்கு நல்ல பாசம், அன்பு கிடைப்பதில்லை , இதனால் சிறு வயதிலேயே பாதை மாறி போய்விடும் நிலை ஜாதகருக்கு ஏற்ப்படுவதர்க்கு முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்களே  என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் , இந்த இலக்கின அமைப்பை பெற்ற குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர்கள்  அதிக பாசத்தை காட்டி வளர்ப்பது ஜாதகரை சமுதாயத்தில் மிகசிறந்த மனிதனாக மாற்றி விடும் . இவர்கள் அனைவரும் மலை நீரை போன்றவர்கள் நல்ல முறையில் பயன் படுத்தினால் இவர்காளால் சமுதாயத்திற்கு மிகசிறப்பாக பயன்படுவார்கள் , இல்லை எனில் அவர்கள் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாக மாறியதற்கு அவர்களின் பெற்றோரே காரணம் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696