சனிதிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனிதிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

ஜாதக ஆலோசணை : சனி திசை தரும் பலன் என்ன ? எதிர்வரும் புதன் திசை தரும் பலன் என்ன ?

ஜாதக ஆலோசணை



லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

1,3ம் வீடுகள் ஜாதகருக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஜென்ம லக்கின வழியில் இருந்து சிறந்த மனநிலை, தைரியம் மிக்க செயல்பாடுகள், துணிச்சலான செயல்திறன் மூலம் வெற்றிகொள்ளும் யோகம், சிறு பயணங்கள் மூலம் நன்மை, தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி, சகோதரம் மற்றும் சுற்றத்தாருடன் இணக்கமான சூழ்நிலையை கடைபிடித்தல், நல்ல நட்புறவு, அவர்கள் வழியில் இருந்து  பெரும் நன்மைகள், சரியாக மேற்கொள்ளும் முடிவுகள், தெய்வீக சிந்தனை, பொருளாதார மேம்பாடு சார்ந்த திட்டமிடுதல்கள், உடல் நலம் பேணும் தன்மை, எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் தன்மை தெய்வீக ஆற்றல் ஜாதகருக்கு உறுதுணை புரியும் யோகம், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, எதிர்பாராத நேரத்தில் ஜாதகருக்கு நிகழும் திடீர் யோக வாழ்க்கை என்ற வகையில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு செல்வச்செழிப்பு உண்டாகும், தைரியமாக எடுக்கும் முடிவுகள் வழியில் இருந்து அதிர்ஷ்டம் தேடிவரும், முற்போக்கு சிந்தனையுடன் வாழ்க்கையை மிக சிறப்பாக எடுத்து செல்லும் ஆற்றல், எதிரிகளை வென்று நன்மைகளை அடையும் யோகம் உண்டாகும்,   ஜாதகரின் மனநிலையில் தெளிவும் சிறப்பான சிந்தனைகளும்  மேலோங்கி நிற்கும் என்பதால் வாழ்க்கையில் சகல  சௌபாக்கியங்களையும்   தன்னிறைவாக பெறுவதற்கான யோகம் உண்டாகும், சத்தியத்தை மதித்தல் மற்றும் உண்மையை பேசுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்வதுடன்  அனைவரிடத்திலும் பிரபல்ய யோகத்தை நல்கும், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், லட்ச்சியங்கள் அனைத்திலும் வெற்றிகொள்ளும் யோகத்தை தரும், உறவினர் மற்றும் நண்பர்கள் வழியில் சிறப்பான சுபயோக வாழ்க்கையை வாரி வழங்கும் , தைரியம் சாகசம் போன்றவற்றில் ஈடுபாட்டை தரும், விளையாட்டில் வெற்றி, போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும், பயணம் மூலம்  லாபம் உண்டு, படிப்பு மற்றும் கல்வியில் சிறப்பான யோகங்களை வாரி வழங்கும்,  புதுமையை விரும்பும் தன்மை, புதுமையான சூழ்நிலைகளில் அதீத ஆர்வம், ஏஜென்சி துறையில் சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், கமிஷன் தொழில் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தன்னிறைவாக வாரி வழங்கும்.

2,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து மருத்துவ துறை சார்ந்த பணியில் வெற்றி வாய்ப்பையும் , அறிய கலைகளில் ஆர்வம் மற்றும் தேர்ச்சியை தரும், பணியில் திருப்தி அற்ற நிலையை தரக்கூடும், வாக்கின் வழியில் இருந்து இன்னல்கள் அதிக அளவில் வருவதற்கான வாய்ப்பு உண்டு, வருமானம் சில நேரங்களில் ஜாதகருக்கு எதிர்மறையான இன்னல்களை தரக்கூடும், பொருளாதர ரீதியான திட்டமிடுதல்கள் இல்லையெனில் ஜாதகரின் வருமானம் வெகுவான இழப்புகளை தரக்கூடும், பேச்சில் கவனம் தேவை என்பதுடன் சேமிப்பில் அதீத நாட்டத்தை செலுத்துவது ஜாதகருக்கு நன்மைகளை தரும், குடும்பத்தில் வரும் இன்னல்களை மிக சிறப்பாக கையாளும் வல்லமையை தரும் என்ற போதிலும், மன நிம்மதி வெகுவாக  பாதிக்க வாய்ப்பு உண்டு, பொருளாதார திட்டமிடுதல்கள் ஜாதகருக்கான இன்னலைகளை வெகுவாக குறைக்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டில் ஜீவனம் சிறப்பாக அமையும், தன்னிறைவான வருமான வாய்ப்பும் உண்டு, கவுரவம் குறையாத யோக வாழ்க்கை ஜாதகருக்கு உண்டு, வரவை விட சில நேரங்களில்  செலவு அதிக அளவில் வந்து  சேரும், தவிர்க்க இயலாத பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், முரண்பட்ட வருமான வாய்ப்பும் ஜாதகருக்கு உண்டாகும், செய் தொழில் வழியில் சில நேரங்களில் ஜாதகருக்கு மன நிம்மதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு, தொழில் முறையில் அனைவரிடமும் அனுசரித்து செல்வதே ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்யும், சுய தொழில் முயற்சி பின்னடைவை  தரும்,  வெளிநாடுகளில் ஜீவனம் மேக்கொள்ளும் பொழுது அபரிவிதமான  பொருளாதார சேர்க்கை உண்டு.

 12ம் பாவக வழியில் இருந்து நிறைய செலவினங்கள் மற்றும் கடும் பொருளாதார சிக்கல்களை அதிகரிக்கும், அனைவராலும் தொல்லை, துன்பங்கள் என வாழ்க்கையை சிரமத்துடன் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், நல்ல உறக்கம் கிட்டுவது அரிது, நிம்மதியற்ற தன்மை, மனப்போராட்டம், தாம்பத்திய வாழ்க்கையில் சிறு சிறு சிக்கல்கள், கருத்து ஒற்றுமை இன்மை இவை அனைத்தும் ஜாதகருக்கு கடும் நெருக்கடிகளை தரும், சரியான முடிவுகளை எடுக்க வில்லை எனில் அதீத துன்பத்தை ஜாதகர்  எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகருக்கு அதிக துன்பத்தை தரும்.

4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  4ம் பாவக வழியில் இருந்து பெற்றோர் வழியில் இருந்து வரும் சொத்துக்கள் கிடைக்கும் குறிப்பாக தகப்பனார் வழியில் இருந்து வரும் யோக  வாழ்க்கை சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், உயில் போனஸ் கிராஜுவிட்டி போன்றவற்றிலும் இஞ்சுரன்ஸ் வழியில் இருந்தும் ஜாதகருக்கான பொருளாதார உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்க பெரும், எதிர்பாராத விபத்து மூலம் வண்டி வாகனம் கடுமையான   பாதிப்பை அடைய கூடும், உடல் நலம் சற்று பாதிக்க வாய்ப்பு உண்டு, காரியங்களில் அதீத தடை தாமதங்களை சந்திக்கும் நிலையை தரும், தாயார் வழியில் இருந்து வரும் சில இன்னல்கள் ஜாதகருக்கு கவலை அளிக்கும் விதத்தில் அமையும், தனது பெயரில் உள்ள சொத்துக்கள்  வீடு வண்டி  வாகனங்களை மிக கவனமாக பாதுக்காக்க வேண்டிய கட்டாயம் ஜாதகருக்கு உண்டு என்பதுடன், தனது குணநலன் சார்ந்த விஷயங்களில்  சரியான  கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியமானது.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்ண ஆயுள் உண்டு, இருப்பினும் எதிர்பாராத  ஏமாற்றம், எதிர்பாராத திடீர் இன்னல்கள் ஜாதகரை சில  நேரங்களில் அதீத துன்பத்திற்க்கு ஆளாக்கும், விபத்து, உடல் நல பாதிப்பு போன்றவை ஜாதகருக்கு பொருளாதார சிக்கல்களை அதிகரிக்க கூடும், அனைவராலும் தொல்லை, எதிர்பாலின அமைப்பினர் மூலம் வரும் இன்னல்கள் ஜாதகருக்கான நெருக்கடிகளை அதிகரிக்கும், கவனமான பாதுகாப்பான  பயணம் ஜாதகருக்கு வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், நம்பிக்கை மிக்க செயல்பாடுகள் ஜாதகருக்கு மேற்கண்ட  இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும்.

5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்ட வாய்ப்பை தன்னிறைவாக வாரி வழங்கும், லாட்டரியில் திடீர் யோகம், கற்ற கல்வி வழியில் இருந்து வரும்  அதிர்ஷ்டம், எவ்வளவு துன்பம் வந்த போதிலும் சூரியனை கண்ட பனிபோல்  விலகிவிடும் தன்மை, குலதெய்வத்தின் பரிபூர்ண அருளாசி, சமயோசித  புத்திசாலித்தனம், இன்னல்கள் அனைத்தையும் தனது நுண்ணறிவு திறனால் வெற்றிகொள்ளும் வாய்ப்பு, தான் பெற்ற குழந்தைகள் வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் சுபயோக வாழ்க்கை, நம்பிக்கை மிக்க   எதிர்காலம் எதிர்பாராத உதவிகள் ஜாதகரை வந்து சேரும் தன்மை, அனைவரின் அன்பையும் பெற்று வாழ்க்கையில் முன்னேறும் தன்மை, புத்திசாலித்தனத்தால் ஆதாயமும் லாபமும் உண்டாகும், எப்பொழுதும் மகிழ்ச்சி, குழந்தை குடும்பத்துடன் தன்னிறைவான யோக வாழ்க்கை என்ற வகையில்  ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை உண்டாகும், வெளிநாடு ஜீவனமும், குடியுரிமையும் திடீரென அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு முற்போக்கு சிந்தனையும், பொறுப்பு  மிக்க செயல்பாட்டையும் வாரி  வழங்கும், நல்ல அதிஷ்டத்தை ஜாதகர் தனது வாழ்நாள் முழுவதும் சுவீகரிக்கும் வல்லமையை தரும், லட்சியங்களை விடாமுயற்சியுடன் போராடி பெரும் யோகம் உண்டு, ஜாதகரின் நல்ல  குணம் அனைவராலும் விரும்ப படும், எடுக்கும் காரியங்கள்  யாவிலும் தன்னிறைவான அதிர்ஷ்டங்களையே ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஆன்மீக பெரியோர்களின்  ஆசீர்வாதம் ஜாதகருக்கு புதிய உத்வேகத்தையும், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தரும், எந்த சூழ்நிலையிலும் ஜாதகர் தனது தன்னம்பிக்கையை விடாமல் ஸ்த்திரமாக நின்று யோக வாழ்க்கையை பெறுவார் என்பதை இந்த மதிப்பு மிக்க லாப ஸ்தானம் எடுத்துரைக்கிறது, சரியான  திட்டமிடுதல்கள் ஜாதகரின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும், லாப  ஸ்தான வலிமை ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது.

6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சபந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்,  கடன் உடல்நல பாதிப்பு குறிப்பாக வயிறு சார்ந்த இன்னல்கள், எதிரிகள் தொந்தரவு, அதீத எதிர்ப்புகள் கடன் கொடுத்தவர் வாங்கியவர்கள் வழியில் இருந்து  வரும் இன்னல்கள் எதிர்பாரா மருத்துவ செலவினங்கள், எதிரிகள் வழியில்  இருந்து வரும் துன்பங்கள், அடிக்கடி உடல் நல பாதிப்பை சந்திக்கும் தன்மை, முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டையாக அமையும் சில  பிரச்சனைகள், தெய்வீக அனுகூலத்தை பெற வாய்ப்பில்லாமல் தடைகளை  சந்தித்தல், மாந்திரீக பாதிப்பு, செயல் முடக்கம், சுபயோகங்களை தடை செய்யும் தன்மை என்ற வகையில் ஜாதகருக்கு 200% விகித  இன்னல்களை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அறிவு திறன் முழுமையாக முடக்கப்படும் தன்மை , மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதால் வரும் இன்னல்கள், தெளிவில்லாத சிந்தனை, முடிவெடுக்க முடியாமல்  தடுமாறும் சூழ்நிலை எதிர்ப்புகளை கையாள தெரியாமல் சிரமப்படும் நிலை, தெய்வீக உதவியை பெற இயலாமல் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், சமூகத்தில் பெரிய மனிதர்களிடம் பகைமை  பாராட்டும் தன்மை, உறுதியில்லாமல்  சில முடிவுகளை மேற்கொண்டு  அதன் வழியிலான துன்பங்களை அதிக அளவில்  அனுபவிக்கும் நிலை என்ற வகையிலும், எதிர்பாலின சேர்க்கை வழியில் தேவையற்ற இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரக்கூடும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  அதீத யோக வாழ்க்கையை களத்திர ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், நல்ல வாழ்க்கை துணை அவரது பரிபூர்ண ஒத்துழைப்பு மற்றும் தன்னலமற்ற ஆதரவு, நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த கூட்டாளிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை மற்றும் குடியுரிமை, நிறைவான பொருளாதர சேர்க்கை, நிம்மதியான யோக வாழ்க்கை, தனித்திறமையான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், நினைத்தைதை அடையும் வல்லமை, தன்னிடம் உள்ள தனி திறமையை கொண்டு வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெறுதல், கூட்டு முயற்சி வழியில் இருந்து வரும் யோகம், வெளிநாடுகள் சென்று சிறப்பான வரவேற்பை பெரும் தன்மை, ஏற்றுமதி இறக்குமதி  வியாபாரம் செய்வதன் மூலம் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, பொதுமக்கள் ஆதரவு, அதிகார பதவி, சிறந்த நிர்வாக திறமை என்ற வகையில் ஜாதகரின் வாழ்க்கையில் சகலவிதங்களில் இருந்து அபரிவிதமான முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகர் களத்திர ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தரும்.

நடைபெறும்  சனி திசை தரும் பலன்கள் : ( 11/03/2003 முதல் 11/3/2022 வரை )

தற்போழுது நடைபெறும் சனி மகா திசை ஜாதகருக்கு 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் சுபயோக பலாபலன்களை வாரி வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இது ஜாதகருக்கு  7ம் பாவக வழியில் இருந்து தனி  திறனை வெளிப்படுத்தும், ஜாதகரின் வியாபாரம் மற்றும் தொழில் சார்ந்த நன்மைகளை அதிகரிக்கும், வாழ்க்கை துணையுடனான யோக வாழ்க்கையை முழுவதும் சுவீகரிக்கும்  தன்மையை  தரும் எதிர்ப்புகள் விலகும், வெளியூர் அல்லது  வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் ஜாதகரின் பொருளாதார தேவைகளை பூர்த்தி  செய்யும், நம்பிக்கை மிக்க செயல்பாடுகள் வழியில் இருந்து ஜாதகரின் யோக வாழ்க்கை பரிபூர்ண துவத்தை அடையும், குறிப்பாக ஜாதகரின் சுய வலிமை பிரகாசிக்கும் நேரமாக  இது அமைவதுடன் சனி திசை  மிகுந்த நன்மைகளையே வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

சனி மகா திசையில் தற்போழுது நடைபெறும் குரு புத்தியும் மேற்கண்ட 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் சுபயோக பலாபலன்களை ஏக காலத்தில் வாரி வழங்குவதால் ஜாதகர் எதிர்வரும் காலங்களில் சுபயோக பலாபலன்களையே தன்னிறைவாக பெறுவார் .

எதிர்வரும் புதன் திசை தரும் பலன்கள் : ( 11/03/2022 முதல் 11/3/2039 வரை )

ஜாதகருக்கு எதிர் வரும் புதன் மகா திசை 1,3ம் வீடுகள் ஜாதகருக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை நல்குவது வரவேற்கத்தக்கது, புதன் திசை ஜாதகருக்கு நல்ல மனநிலை, சிறந்த உடல் ஆரோக்கியம், பயணங்கள்  மூலம் அதீத லாபங்கள் நிரந்தர குடியுரிமை, கோர்ட் கேஸ், வழக்குகள் வழியிலான தீர்வுகள்,  சாதகமான சூழ்நிலை, எதிர்ப்புகள் விலகுதல்,  நினைத்த காரியம் நிறைவேறுதல், சகோதர வழி ஆதரவு, உறவுகளுடன் நல்ல பற்றுதல், தெய்வீக அனுகூலம், தைரியமாக சரியான  முடிவுகளை மேற்கொள்ளும் தன்மை, எதிர்பார்த்த மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் சரியான நேரமாக புதன் திசை அமையும் மேலும் 3ம் பாவக வழியில் இருந்து நிறைவான செல்வச்செழிப்பு, பொருளாதர முன்னேற்றம், எதிரி மற்றும் எதிர்ப்புகளை வெல்லுதல், மனோதைரியம், தன்னம்பிக்கை சுய கட்டுப்பாடு, முற்போக்கு சிந்தனை என சகல  ஐஸ்வர்யங்களும் ஜாதகரை தேடிவரும் யோக காலம் இந்த புதன் திசை  என்று தெளிவாக கூறலாம் வாழ்த்துக்கள் அன்பரே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 6 அக்டோபர், 2018

ஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா ? சிறப்பான வேலை அமையுமா ?


கேள்வி :

பிறந்த தேதி : 04.05.1995. 
பிறந்த நேரம் : இரவு 10.10. 
இடம் : கும்பகோணம். 

1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார். அதற்கு நேரம் காலம் நன்றாக உள்ளதா என்று ஆய்வு செய்து சொல்ல வேண்டுகிறேன். 

2) லக்னாதிபதி 12ல் இருப்பதும், 4ம்இடம், 6ம்இடம், 8ம் இடங்களைப் பார்ப்பதும், 6ஆம் அதிபதி உச்ச மாகி குரு பார்வை பெறுவதால் உள்ள பலன். 

3) செவ்வாய் 8இல் நீசபங்கமாகி குரு பார்ப்பதால் உள்ள பலன். 

4) சந்திரன் ஸப்தம கேந்திரத்தில் இருக்கும் பலன்கள். 

5) சனியின் 3ம் இட பலன்கள், பார்வை பலன்களை பார்த்து சொல்ல வேண்டுகிறேன். 

6) ராகு 11லும்,கேது 5ல்இருக்கும்(சூரியனின் சேர்ந்து) 
பலன்கள். 

7) சனியின் 2,3 இட ஆதிபத்யம் சனி திசை யில் எப்படி இருக்கும். செவ்வாய், குரு, சுக்கிரன், பாதகாதிபதியின் சாரத்தில் இருக்கும் பலன்கள். 


பதில் :

1) நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சற்று கடுமையான இன்னல்களை தருவது கவலை தரும் விஷயம் என்ற போதிலும், குரு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு புத்தி ஜாதகருக்கு 2,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் யோக பலன்களை தருவது வரவேற்கத்தக்கது, எனவே ஜாதகர் ராகு புத்தியில் கல்வி சார்ந்த விஷயங்களில் நல்லதொரு முன்னேற்றங்களையும், வெற்றியையும் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை, இருப்பினும் சுய ஜாதகத்தில் வெளியூர் அல்லது வெளிநாடு சார்ந்த முன்னேற்றங்களை குறிக்கும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வெளிநாடு சார்ந்த கல்வி அமைப்பில் வெகுவான தடைகளை தரக்கூடும் என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது, இருப்பினும் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ( லாப ஸ்தானம் ) வரவேற்கத்தக்கது வெளிநாட்டில் கல்வி சார்ந்த வெற்றிகளை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதிப்பது வெளிநாடு செல்வதில் அதீத தடைகளை தரக்கூடும், நடைபெறும் ராகு புத்தி மிகவும் வலிமை பெற்ற 2,5,11ம் வீடுகளின் பலாபலன்களை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு கல்வி சார்ந்த விஷயங்களில் அபரிவிதமான நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகர் பூர்வீகத்தில் ( தமிழகத்தில் ) கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்வது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், மேலும் ஜாதகர் தனது உடல் நலம், நிதி மேலாண்மை, நண்பர்கள் கூட்டாளிகள்  அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை மிக நுணுக்கமாக கையாண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

2) லக்கினாதிபதி 12ல் இருப்பது ஜாதகருக்கு சற்று இன்னல்களை தரும் என்ற போதிலும், லக்கினம் எனும் முதல் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது, ஜாதகருக்கு சுய ஒழுக்கம், பெரியோர் ஆதரவு, பித்ருக்கள் ஆசி என்ற விதத்தில் யோகத்தை தரும், கல்வியில் வெற்றியும், அறிவு திறன் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்கும், ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றத்தை தருவதுடன் பட்டய படிப்பில் மிகப்பெரிய வெற்றியும், முதல் நிலையையும் தரும். குருவின் பார்வைகள் சுய ஜாதகத்திற்கு வலிமை சேர்க்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது இருப்பினும் 4ம் வீடு சற்று வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்கது, 6,8ம் வீடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, சுக்கிரன் குரு பார்வை பெறுவதும் சிறப்பானததல்ல.

3) செவ்வாய் குரு பார்வை பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்பதுடன், உடல் வலிமையை அதிகரிக்கும், இருப்பினும் சுய ஜாதகத்தில் 8ம் வீடு பாதிக்கப்படுவது ஜாதகருக்கு ரண சிகிச்சையை தரக்கூடும், வாழ்க்கை துணை வழியில், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத இழப்புகளையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

4) சந்திரன் இங்கு நிற்பது கடுமையான இன்னல்களை தரக்கூடும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் தாங்க இயலாத  மனத்துயரத்தை தருவதை தவிர்க்க இயலாது, லக்கினத்தை பார்வை செய்வது ஜாதகருக்கு சற்று நன்மையை தரும் என்பதுடன், வரும் இன்னல்களில் இருந்து விடுபட சரியான முன்யோசனைகளை வழங்கும்.

5) சனி தான் அமர்ந்த நிலையில் நன்மையையும், 6ம் பார்வை அமைப்பில் யோகத்தையும், 7ம் பார்வை அமைப்பில் இன்னல்களையும், 10ம் பார்வை அமைப்பில் துன்பத்தையும் தரக்கூடும் என்ற போதிலும், பொதுவாக சனி பகவான் ஜாதகருக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை வழங்குகின்றார் என்பது கவனிக்கத்தக்கது, நல்லோர் சேர்க்கை ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

6) உண்மையி ஜாதகருக்கு 4ல் ( பாவக கணித முறைப்படி ) மேஷத்தில் அமர்ந்து சிறப்பான நன்மைகளை தருவது கவனிக்கத்தக்கது, சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நல்ல குணம், வண்டி வாகன யோகம், வடக்கு திசை வாயிற்படி உள்ள வீடுகளில் குடியிருப்பதால் வரும் யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மைகளையே தருகின்றது, 10ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு ஜீவனம் சார்ந்த இன்னல்களையும் மற்றவர்களால் வரும் வீண் அவப்பெயரையும் தவிர்க்க இயலாமல் வழங்குவது வருத்தத்த்திற்கு உரியது, ஜாதகர் எந்த காரணத்தை கொண்டும் சுய மரியாதை இழக்கும் விதத்திலான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது, நல்ல தொழில் விருத்தி ராகு பகவானால் உண்டாகும்.

7) சனி திசை ஜாதகருக்கு 2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக தொடர்பை பெற்று சுபயோகங்களையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெற்று வீடு வண்டி வாகன யோகம் என்ற வகையில் நன்மைகளையும் ஒருசேர வழங்குவது வரவேற்க தக்கது, தற்போழுது நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை தருவது மட்டுமே ஜாதகருக்கான நெருக்கடிகளை அதிர்க்காரிக்கும், எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 2,4,5ம் வீடுகள் வழியில் இருந்து சுபயோக சுக வாழ்க்கையை தருவது வரவேற்க தக்கது, வாழ்த்துக்கள்.

செவ்வாய், குரு பகவானின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  ஜாதகருக்கு கடுமையான இன்னல்களையும், சுக்கிரனின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நன்மையையும் தரும். எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 2,4,5ம் வீடுகள் வழியில் இருந்து சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்க காத்து இருப்பது வரவேற்க தக்கது, ஜாதகருக்கு நல்லதொரு வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்க்கை இல்லை எனில் வாழ்க்கை மிகவும் துன்ப நிலைக்கு எடுத்துச்செல்லும் என்பதை கவனத்தில் கொள்க, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்க்கை அவசியம் என்பதை வலியுறுத்தவும், வாழ்த்துக்கள்.

பரிகாரம் :

1) தினமும் சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது சிறப்பான எதிர்காலத்தை தரும்.
2) திருவக்கரை வக்கிர காளி அம்மன் கோவிலுக்கு சென்று முறையாக குரு பகவானுக்கு வக்கிரகநிவர்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.
3) சனி பிரீதி வழிபாடு ஜாதகருக்கான இன்னல்களில் இருந்து நலம் தரும், பாதக ஸ்தான இன்னல்களை வெகுவாக குறைக்கும்.
4) வருடம் ஒரு முறை பழனி சென்று வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
5) குல தெய்வ வழிபாடு எதிர்வரும் புரட்டாசி அமாவாசை அன்று செய்து நலம் பெறவும், அண்ணதானம் செய்து வழிபடுவது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 13 ஜூலை, 2018

ஜாதக ஆலோசணை : தொழில் முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்திக்க காரணம் என்ன ? சுய தொழில் செய்ய வாய்ப்பே இல்லையா ?

 

கேள்வி :


 தொழில் முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்திக்க காரணம் என்ன ? சுய தொழில் செய்ய வாய்ப்பே இல்லையா ?

பதில் : 

சுய ஜாதகத்தில் கேந்திர கோணங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசா புத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் வலிமையை தருவதும் ஓர் ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகர் செய்யும் சுய தொழில் சிறப்பு மிக்க வளர்ச்சியை பெற்று, தன்னிறைவான பொருளாதர முன்னேற்றத்தை தரும், மாறாக சுய ஜாதகம் வலிமை அற்ற, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தி, கோட்சார கிரகமும் ஏற்று ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இல்லை எனில் ஜாதகரின் பாடு படுதிண்டாட்டம்தான், பொருள் நஷ்டம், நேரவிரையம், கடன் தொந்தரவு, பலவிதங்களில் இருந்துவரும் இன்னல்கள் என்ற விதத்தில் ஜாதகர் கடுமையான பின் விளைவுகளை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கும் என்பதில் சந்தேகமில்லை அன்பரே, இன்றைய பதிவில் தங்களது ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : கும்பம் 
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : சதயம் 2ம் பாதம் 

சுய தொழில் முயற்சியை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் தனது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டு செயல்படுவதும், நடைபெறும் எதிர்வரும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு செயல்படுவதும் வெற்றிகரமான தொழில் வாய்ப்புகளை நல்கி, தன்னிறைவான பொருளாதர வளர்ச்சியை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்யும், 5,9ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகருக்கு தொழில் சார்ந்த நல்லறிவையும், சமயோசித புத்திசாலித்தனத்தையும், தெளிவான திட்டமிடுதல்களையும் வழங்கும், 2,6,8,12ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகருக்கு தொழில் வழியிலான பொருளாதர தன்னிறைவை வழங்கும், சரளமான பண வசதியை வாரி வழங்கும், 3,11ம் வீடுகள் ஜாதகர் மேற்கொண்ட முயற்சிக்கான வெற்றிகளையும், சரியான தகவல் தொடர்புகளையும், வீரியமிக்க செயல்திறனையும், அளவில்லா அதிர்ஷ்ட வாய்ப்புகளையும், தன்னம்பிக்கை மிக்க மனநிலையுடன் கூடிய முற்போக்கு சிந்தனையையும் வாரி வழங்கும், ஜாதகர் செய்யும் தொழில் வழியிலான லாபங்களை பரிபூர்ணமாக அனுபவிக்க 3,11ம் வீடுகளின் வலிமை அவசியம் தேவைப்படுகிறது.

தங்களது ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள்  மிக மிக வலிமையுடன் காணப்படுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும் அன்பரே, இருப்பினும் தங்களது தொழில் சார்ந்த முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்திக்க அடிப்படை காரணம் ஒன்று உண்டு அது 5ம் பாவக வலிமையாகும், ஒருவரது சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் வீடு வலிமை பெற்று இருப்பின் தனது தொழில் சார்ந்த முயற்சிகள் யாவினையும் ஜாதகர் தந்தது பூர்வீகம் சார்ந்த இடங்களிலேயே அமைத்துக்கொள்வதை  உறுதி செய்யவேண்டும், ஏனெனில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையே ஜாதகருக்கான வெற்றிகளை நிர்ணயம் செய்கிறது, தங்களது ஜாதகத்தில் 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  மிகவும் வலிமையுடன் காணப்படுவது தங்களுக்கான தொழில் வெற்றிகளை பூர்வீகத்தில் ஜீவிப்பதால் மட்டுமே பெற இயலும், தாங்கள் இதுவரை முயற்சித்த தொழில் சார்ந்த விஷயங்கள் யாவும் தங்களது பூர்வீகத்தில் இருந்து வெகு தொலைவுக்கு அப்பால் ( 300 கிமீ ) அமைந்ததால் 5ம் பாவகம் வலுவிழந்து சமயோசித அறிவை வழங்கவில்லை, 11ம் பாவகம் தங்களுக்கான லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் வழங்கவில்லை என்பதே உண்மை நிலை.

மேலும் தொழில் சார்ந்த முயற்சிக்கான  நேரத்தில் தங்களுக்கு சனி திசை நடைமுறையில் இருப்பதும், சனி தனது திசையில் 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவாக பலனை ஏற்று நடத்துவதும், 8,10ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும் வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்ற போதிலும், மேற்கண்ட பாவகங்கள் குறிக்கும் தொழிலை தேர்வு செய்யாமல் முரண்பட்ட தொழிலை தேர்வு செய்தது தங்களுக்கான தொழில் வெற்றிகளை பரிபூர்ணமாக தரவில்லை என்பதே உண்மை, 2ம் பாவகம் குறிப்பது சிறு வியாபாரம் அல்லது வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பொழுது  போக்கு அம்சங்களை குறிக்கின்றது, 3ம் வீடு தங்களுக்கு கமிஷன் , தரகு, ஏஜென்சி, தகவல் தொழில் நுட்பம், தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்கள், மின்சாரம், மின்சார உபகரண பொருட்கள் வழியிலான வியாபாரம், காண்ட்ராக்ட் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில் போன்றவற்றில் பரிபூர்ண வெற்றிகளை தரும் பொழுது, அதுசாராத தொழில்களை சுவீகரித்தது  தங்களது ஜீவன மேன்மையை வெகுவாக பாதித்தது, மேலும் தொழில் நிர்ணயம் செய்த இடம் தங்களது பூர்வீகத்திற்க்கு கட்டுப்படாமல் போனது தங்களின் தொழில் சார்ந்த முயற்சிகள் யாவையும் படுதோல்வியடைய செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் புத்தி தங்களுக்கு 4,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று யோக வாழ்க்கையை நல்குவது சிறப்பானதே, 10ம் வீடு தங்களது ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர நீர் ராசியில் அமைவதால் உணவு பொருட்கள் சார்ந்த தொழில், தானிய வியாபாரம், விவசாய விளைபொருட்கள், போன்றவற்றை ஜீவனமாக தங்களது பூர்வீகத்தில் ஜீவித்து இருந்து ஏற்று கொள்வது, தங்களுக்கான தொழில் வெற்றியை உறுதி செய்யும், 4ம் வீடு வண்டி வாகனம், இடம், பொருள், வீடு மற்றும் வீட்டு உபயோக பொருட்களை குறிக்கும், 7ம் வீடு பொதுமக்கள், வியாபாரம், கூட்டு முயற்சி, கூட்டு தொழில் போன்றவற்றை குறிக்கும், எனவே தாங்கள் எந்த தொழில் செய்தாலும் சரி தங்களது பூர்வீகத்தில் இருந்துகொண்டு செய்யுங்கள் அது பரிபூர்ண வெற்றிவாய்ப்பை வாரி வழங்குவதுடன், நிறைவான பொருளாதர வசதியையும் பெற்று தரும்.

எதிர்வரும் புதன் திசை 6ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை தருவது வரவேற்கத்தக்கது, இதில் ஏஜென்சி, காண்ட்ராக்ட் தொழில், தரகு தொழில், கமிஷன் வியாபாரம் போன்றவற்றை பூர்வீகத்தில் நிர்ணயம் செய்து பரிபூர்ண நன்மைகளை பெறுங்கள் , எதிர்வரும் புதன் திசை தங்களுக்கு குறுகிய காலத்தில் தொடர் லாபங்களை, அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும் என்பதால் அது சார்ந்த திட்டமிடுதல்களை மேற்கொண்டு நலம் பெறுங்கள் வாழ்த்துகள்.

குறிப்பு :

சனி திசையில் எதிர்வரும்  ராகு புத்தி 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையை தருவது பொருளாதர நன்மைகளை வாரி வழங்கும், சனி திசையில் குரு புத்தி 3ம் வீடு லாப  ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை தருவது புதுவிதமான தொழில் முயற்சிகளுக்கு உகந்த நேரமாகும் சனி திசை குரு புத்தியில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நல்லதோர் ஜீவன வாழ்க்கையை தேடிக்கொண்டு, புதன் திசை தரும் யோக பலன்களை பரிபூர்ணமாக சுவீகரியுங்கள், வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 26 ஜூன், 2018

" தத்து பரிகாரம் " செய்வது எங்களது குழந்தைக்கும், எங்களுக்கும் சுபயோகங்களை வழங்குமா ?


கேள்வி :

 எங்களது குழந்தையின் ஜாதகத்தில் கிரகங்கள் பாதிப்பில் உள்ளதாலும், பெற்றோரை குறிக்கும் 4,9ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாலும் எங்களது குழந்தைக்கும், எங்களுக்கும் கடுமையான இன்னல்களை தரும் என்றும், குழந்தைக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை பெற்றோரான எங்களிடம் இருந்து பிரிவினையை தரும், எனவே எங்களது பெற்றோரிடம் குழந்தை வளர்வதே தங்களுக்கு நல்லது என்கின்றனர், மேலும் குழந்தையை "தத்து" பரிகாரம் செய்து கொடுப்பதே அனைத்திற்க்கும் தீர்வாக அமையும் என்கின்றனர், இது உண்மையா? எங்களது குழந்தையை தத்து பரிகாரம் செய்து கொடுக்கலாமா ? தத்து பரிகாரம் முறையாக செய்வது எப்படி ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன்.


பதில் :

 மேற்கண்ட உதாரண ஜாதகமே "தத்து" பரிகாரம் செய்வதற்க்கான அனைத்து தகுதியும் உள்ள ஜாதகம் அன்பரே.

 தங்களது குழந்தையின் ஜாதகத்தில் தத்து பரிகாரம் செய்வதற்கான சிறு பாதிப்பு கூட இல்லை, அதற்க்கான அவசியமும் இல்லை என்பதே உண்மை நிலை, எனவே  தங்களது குழந்தையை தத்து பரிகாரம் செய்துதரவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை என்பதை உணருங்கள், மேலும் தங்களது குழந்தையின் ஜாதகத்தில் 1,4,5,7,9,10 ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம்  பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதுடன் 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  சுக ஸ்தானமான கடக ராசியில் வியாபித்து நிற்பது தங்களுக்கும், தங்களது குழந்தைக்கும் சுபயோக பலாபலன்களையே வாரி வழங்கும், மேலும் நடைபெறும் சனி திசை குழந்தைக்கு 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் நன்மைகளை தருவது சிறப்பு மிக்க கல்வி காலத்தையும், கல்வியில் தேர்ச்சியையும், ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, தெளிவான சிந்தனை, தெளிந்த நல்லறிவு என்றவகையில் நன்மைகளை வாரி வழங்கும் என்பதால் தாங்கள்  யாதொரு மனவேதனையும் கொள்ளாமல், தங்களது குழந்தையை தாங்களே பாசமுடன் வளர்ப்பது நல்லது என்பதை கருத்தில் கொள்ளுங்கள், குழந்தையின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும்  4,10ம் வீடுகள்  மிகுந்த வலிமையுடன் இருப்பது தங்களுக்கே சிறப்பான அதிர்ஷ்டத்தை தரும் என்பதை நினைவில் கொண்டு நலம் பெறுங்கள்.

மேற்கண்ட உதாரண ஜாதகரை ஏன்? தத்து பரிகாரம் செய்யவேண்டும் என்பதை சற்று விரிவாக இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

லக்கினம் : துலாம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : ரேவதி 3ம் பாதம் 

பொதுவாக சுய ஜாதகத்தில் தாய்,தந்தையை குறிக்கும் பாவகங்களான 4,10ம் வீடுகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே அவரை  தத்து பரிகாரம் செய்து தரவேண்டும், குறிப்பாக 4,10ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது,  சத்ரு ஸ்தானமான 6ம் பாவக தொடர்பை பெறுவது, திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக தொடர்பை பெறுவது, விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது, போன்றவை மட்டுமே குழந்தை மற்றும் பெற்றோருக்கு இடையிலான உறவில் பிரிவு, மிகுந்த இன்னல்கள், போராட்ட வாழ்க்கை, ஆயுள் பங்கம் என்றவகையில் சிரமங்களை தரக்கூடும், அதுவும் குழந்தைக்கு நடைமுறையில் உள்ள திசாபுத்திகள், மேற்கண்ட பாதிப்பை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தீய பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், என்பதை கருத்தில் கொள்க. 

உதாரண ஜாதகத்தில்  4,10ம் வீடுகள்  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அடிப்படையிலேயே பெற்றோருக்கு கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், இது ஜாதகருக்கும் ஜாதகரின் பெற்றோருக்கும் 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், பெற்றோருடன் சேர்ந்து ஜீவிக்க இயலாத நிலை, பெற்றோருக்கு வரும் பொருளாதர இன்னல்கள், நிலையற்ற தன்மையிலான வாழ்க்கை,  ஜாதகருக்கு வரும் உடல் மன நலம் சார்ந்த பாதிப்பு, போராட்ட வாழ்க்கை, ஒவ்வொரு விஷயத்தையும் போராடி பெறவேண்டிய நிலை, என்ற வகையில் பாதிப்பை தரும், மேலும் லக்கினம் விரைய ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு  வளரும் சூழ்நிலையில் எதிர்பாராத பாதிப்புகளை சந்திக்கும் நிலையினை தரும், எடுக்கும் முயற்சிகள் தடைபெறும், அதிர்ஷ்டமின்மை ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், மேலும் நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது, ஜாதகரே விருப்பப்பட்டாலும், தனது பெற்றோருடன் ஜீவிக்க இயலாது என்பது கவனிக்கத்தக்கது.

இதுபோன்ற நிலையை கொண்ட ஜாதகரை அவர்களது பெற்றோர், தமது குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு தத்து பரிகாரம் செய்து தருவது, சிறப்பான நன்மைகளை ஜாதகருக்கும், ஜாதகரின் பெற்றோருக்கும் வாரி வழங்கும், ( என்ன செய்வது ஜாதகருக்கு கொஞ்சம் வயது அதிகம் ) எனவே தத்து பரிகாரம் செய்யுமுன் சுய ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் பாவகங்கள், லக்கினம், பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தான வலிமையை கருத்தில் கொண்டு தத்து பரிகாரம் செய்வது சிறப்பை தரும்.

குறிப்பு :

கன்னி லக்கினம், மிதுன ராசி, திருவாதிரை நட்ஷத்திரம் கொண்ட  தங்களது குழந்தையின் ஜாதகத்தில், பெரும்பாலான பாவக தொடர்புகள் மிகவும் வலிமையுடன்  உள்ளது, மேலும் பெற்றோரை குறிக்கும் 4,10ம் வீடுகள் மிக வலிமையுடனும், லக்கினம், பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தானம் போன்றவை மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது, தவறான அறிவுரையின் பேரில் தங்களது குழந்தையை தத்து பரிகாரம் செய்துவிடாதீர்கள், ஏனெனில் குழந்தை வழியிலாக வரும் சுபயோகங்கள் தங்களுக்கு கிடைக்காமல் விரையமாகிவிட அதிக வாய்ப்பு உள்ளது, எனேவ தங்களது குழந்தையுடன் சேர்ந்து வாழ்ந்து சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுங்கள் என்பதே " ஜோதிடதீபம்" வழங்கும் துல்லியமான ஆலோசனை வாழ்த்துகள்

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

சுய ஜாதக பலாபலன்கள் : சுப, அவயோக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள் !



சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் அல்லது அவயோகங்கள் இருப்பது முக்கியமல்ல, நடைபெறும் திசா புத்தி, எதிர்வரும் திசா புத்தி சுபயோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், அதுபோன்றே பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களையும், துன்பங்களையும் நடைபெறும் திசா புத்தி அல்லது எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே அவயோக பலாபலன்கள்  நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 கீழ்கண்ட ஜாதகருக்கு, 1,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பாபந்தம் பெறுவதும், 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் அவயோக அமைப்பாகும், 2,5,8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுபயோகங்களை நல்கும் அமைப்பாகும், தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து உடல் நல குறைவை தந்த போதிலும், 9 பாவக வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூரணமாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், எதிர் வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோகங்களை தருவது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் அமைப்பாகும்.


லக்கினம் : தனுசு
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பாபந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து அருங்கலைகளில் ஆர்வத்தை தரும், யோகம் பக்தி போன்ற விஷயங்களில் தேர்ச்சியை தரும், தனிமை விருப்பம், தொலைதூர பயணங்களில் அதீத ஆர்வம், முதலீடுகளில் அதிக விருப்பம் என்றவகையில் நன்மைகளை தந்த போதிலும், அனைவராலும் தொல்லை மற்றும் துன்பத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மறைமுக எதிரிகள் தொந்தரவு, தடங்கல், அடிக்கடி வைத்திய செலவு, ஏமாற்றம், துன்பம், சதி வேலைகளால் இன்னலுறும் தன்மையை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், நல்லவர்களை காண்பது ஜாதகருக்கு அரிதிலும் அரிதாக அமையும், தேவையற்ற குழப்பமும் நிம்மதியின்மையும், ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் துன்பங்களை தரும், வீண் கற்பனை ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்து வரும் சுபயோகங்களை சுவீகரிக்க இயலாத நிலையை தரும், தன்னம்பிக்கையையும், சுய கட்டுப்பாட்டையும் ஜாதகர் அதிகம் வளர்த்துக்கொள்வது நல்லது, எந்த ஓர் காரியத்தையும் பலமுறை ஆலோசனை செய்து முடிவெடுப்பதே சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இழப்பது கடுமையான பின்னடைவுகளை ஜாதகருக்கு  தரும் என்பதால் முறையான பரிகாரங்களை மேற்கொண்டு சகல நலன்களையும் பெறுக.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைய விரைய செலவுகளை தரும், சேமிப்பு எதிர்பாராத விஷயங்களால் வீணடிக்கப்படும், தாம்பத்திய வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், நல்ல உறக்கம் அமைவது கேள்விக்குறியே, மனநிம்மதி இழப்பு, மனஅழுத்தம், மனப்போராட்டம் என சகல நிலைகளில் இருந்தும் பெருத்த துன்பத்தை தரும், மனஒருமைப்பாடு ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடும், தெளிவில்லாத மனநிலை மற்றும் சிந்தனை ஆகியவை ஜாதகருக்கு பெருத்த சேதாரங்களை வழங்கக்கூடும், பங்கு சந்தை, சூது மூலம் நஷ்டத்தை தரும், அனைவராலும் தொல்லை மற்றும் எதிர்பாராத விபத்தை ஏற்படுத்தும், விடாமுயற்சியுடன் போராடி வாழ்க்கையில் வெற்றி பெரும் சூழ்நிலையை தரும்.

2,5,8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக  வழியில் இருந்து எழுத்து பேச்சு, கலைத்துறை போன்ற அமைப்புகளில் சிறப்பான முன்னேற்றத்தை தரும், எண்ணத்தின் வலிமை அதிகமாகும், கைநிறைவான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், நிலையான வருமான வாய்ப்பு ஜாதகருக்கு தேடி வரும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சகல சம்பத்தும் பெறுவதற்கான யோகம் உண்டு,  விளம்பர துறை, இலக்கியம், எஜென்ஜி, கமிஷன், தரகு தொழில், எதிர்பாராத லாபம், இனிமையான பேச்சு திறன் மூலம் பெரும் வியாபார விருத்தி என சகல சௌபாக்கியங்களையும் நல்கும்.

5ம் பாவக வழியில் இருந்து எஜென்ஜி விளையாட்டு உபகரணம், இசைக்கருவிகள்,  தைரிய செயல்பாடுகள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை, இறுதி நேரத்தில் பிரச்சனைகளில் இருந்து விடுபடுதல், மந்திர உபதேசம் பெறுதல், வாக்கு வன்மை குல தெய்வ ஆசிர்வாதம், தெய்வீக அனுக்கிரகம், நினைத்தைதை சாதிக்கும் யோகம், பெரும் செல்வாக்கு, தீர்வுகளை அறியும் யோகம், பொதுவாழ்க்கையில் பெயரும் புகழும் உண்டாகும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து லாட்டரியில் அதிர்ஷ்டம், சுலப வழி வருமானம், இன்சூரன்ஸ் போனஸ் போன்றவற்றில் நல்ல லாபம், திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார தன்னிறைவு, திடீர் பதவி மற்றும் அந்தஸ்து தேடி வரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து பயணங்களில் விருப்பம், எழுத்து மற்றும் புத்தம் எழுதும் ஆற்றல், மாற்றத்தை முன்னெடுக்கும் வல்லமை, வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்கு, கமிஷன், எஜென்ஜி மூலம் அபரிவித லாபம், மனோதைரியம், தன்னம்பிக்கை ஓங்கும் குணாதிசயம், எதையும் அதிர்ஷ்டம் மூலம் பெரும் ஆற்றல், பொது வாழ்க்கையில் வெற்றி என்றவகையில் சிறப்புகளை தரும், வியாபாரத்தில் மிகுந்த லாபத்தை தரும்.

3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மருந்துகள் மூலம் மிகுந்த லாபத்தை தரும், அரிய கலைகளில் ஜீவித மேன்மையையும், விட்டுக்கொடுக்கும் தன்மையால் மிகுந்த லாபத்தையும் ஜாதகர் பெறுவார், அயல் தேசம் மற்றும் அயலார் மூலம் சிறந்த நன்மைகள் தேடி வரும், புதிய கண்டுபிடிப்பு, சட்டம் மூலம் நன்மை, தர்ம சிந்தனை, நேர்மையான வழியில் முன்னேற்றங்களை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மண் மனை வண்டி வாகன யோகம், சொந்த ஊரில் ஜீவிக்கும் தன்மை, கல்வி மற்றும் நிர்வாக துறையில் சிறந்து விளங்கும் தன்மை, வடக்கு வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜீவனம் செய்யும் பொழுது சிறப்பான முன்னேற்றங்களை பெரும் யோகத்தை நல்கும்.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு தேர்வு போட்டி பந்தயங்களில் வெற்றி, உடல் நல பாதிப்பு தொடர் சிகிச்சை மேற்கொள்ளும் சூழ்நிலை, வியாதியை எதிர்க்கும் தன்மை அற்ற நிலை, சிறந்த வேலை வாய்ப்பு மூலம் முன்னேற்றம் பெரும் யோகம், பிறரால் கடுமையான தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை, முன்னேற்றம் என்பது எதிரிகளால் வெகுவாக பாதிக்கப்படும் தன்மை, உடல் மனம் சார்ந்த சிக்கல்களில் சிரமப்படும் நிலை என பாதிப்புகளை தரும்.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை வாழ்க்கை துணை வழியில் இருந்து வாரி வழங்கும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் எதிர்பாராத இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும் வெளிவட்டார பழக்க வழக்கம் கடுமையாக பாதிக்கப்படும், வாழ்க்கை துணைக்கு கடுமையான இன்னல்களை உருவாக்கும், திருமண வாழ்க்கையில் கடுமையான பாதிப்பு மற்றும் இல்லற வாழ்க்கையில் துன்பங்களை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் எதிர்பாலினத்தல் வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், சுய ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகத்தில் களத்திர ஸ்தானமே முதலிடம் பெறுகிறது என்பதால், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் மிக கவனமுடன் எதிர்கொள்வதே சால சிறந்தது மேலும் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது, இல்லை எனில் இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்பு உள்ளது.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த அறிவு திறனை வாரி வழக்கும், எதையும் தனது அறிவு திறன் கொண்டு வெற்றிகொள்ளும் வாய்ப்பை தரும், முன்னேர்களின் ஆசிர்வாதம் சிறந்த வாழ்க்கை பாதையை அமைத்து தரும், தெய்வீக தரிசனம், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்ககையில் பல மாற்றங்களை வாரி வழங்கும், யோகம் மற்றும் தெய்வீகம் ஜாதகருக்கு சிறந்த நன்மையை வாரி வழங்கும்.

10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு செய்யும் தொழில் அல்லது வேளையில் மிகுந்த லாபத்தை தரும், குறுகிய காலத்தில் தொழில் வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமை உண்டு, பல தொழில் செய்யும் யோகத்தை நல்கும், எதிர்பாராத அதிர்ஷ்டம் மூலம் கை நிறைவான வருமான வாய்ப்புகளை ஜாதகர் பெறுவார், பெற்றோர் வழியிலான நன்மைகளை ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், சுய உழைப்பில் வாழ்க்கையில் பெருத்த நன்மைகளை அனுபவிக்கும் தன்மையை தரும், கவுரவம் குறையாத தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும்.

நடைபெறும் குரு திசை ராகு புத்தி தரும் பலாபலன்கள் : ( 02/05/2017 முதல் 26/09/2019 வரை )

நடைபெறும் குரு திசை ராகு புத்தி ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், சுபயோக பலன்களை தருவதால் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை வெகுவாக அனுபவிக்கும் தன்மையை தரும், எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும், முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சுபயோகங்கள் ஜாதகருக்கு தேடி வரும், வெகுநாள் பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும்.

எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் : ( 26/09/2019 முதல் 05/09/2038 வரை )

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது ஜாதகர் எதிர்பாராத தொழில் வெற்றிகளை அனுபவிக்கும் யோகத்தை தரும், சுய சிந்தனை மற்றும் சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய தொழில் வெற்றிகளை பெறுவார், ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியில் அமைவது ஜாதகரின் வியாபார விருத்தி 100% விகிதம் மிகவும் சிறப்பான முன்னேற்றங்களை பெரும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் சனி திசை ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை லாப ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் லாபங்களை அதிர்ஷ்டங்களை முழுவீச்சில் சனிதிசையில் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்த்துக்கள்.

குறிப்பு :

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் இருப்பினும் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வலிமையான பாவக பலனை ஏற்று நடத்துவதால், ஜாதகர் சுபயோக பலன்களையே அனுபவிப்பார் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவாக பலன்கள் என்ன என்பதில் தெளிவு பெறுவதே சகல நிலைகளில் இருந்து சிறப்புகளை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 5 பிப்ரவரி, 2018

சனி திசை ( எதிர் வரும் ) தரும் பலாபலன்களும், சுய ஜாதக வலிமையின்மையும்!

 

 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்புகளை தரும்,  ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது ஜாதகருக்கு சிறப்புகளை தரும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதனால் வரும் இன்னல்களை ஜாதகர் சந்திக்காமல், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளை மட்டுமே ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், கீழ்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை ராகு புத்தி தரும் பலாபலன்கள் பற்றியும், எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் பற்றியும் இன்றை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : ரோகிணி 4ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினம் உற்பட பல பாவகங்கள் வலிமையற்று காணப்பட்ட போதிலும், வலிமை பெற்ற பாவக பலனையே கடந்த ராகு திசை ஏற்று நடத்தியிருப்பது ஜாதகருக்கு சுபயோக பலன்களை வழங்கியதுடன், அதற்க்கு அடுத்து தற்போழுது நடைமுறையில் உள்ள குரு திசையை 2,5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் வழங்கிக்கொண்டு இருக்கின்றது, ஜாதகர் குரு திசையில் 2,5,8ம் பாவக வழியில் இன்னல்களையும், 6,10ம் பாவக வழியில் சுபயோகங்களையும் பெற்றுக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை ராகு  புத்தி வழங்கும் பலன்களை சிந்திப்போம், தற்போழுது நடைபெறும் ராகு புத்தி ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுக ஸ்தான வழியில் இருந்து நன்மைகளை தருவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், எனவே ஜாதகர் தற்போழுது 4ம் பாவக வழியிலான நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமையை தந்துகொண்டு இருக்கின்றது என்பது வரவேற்கத்தக்க சிறப்புஅம்சமாகும்.

 இனி ஜாதகருக்கு அடுத்துவரும் சனி திசை தரும் பலாபலன்கள் என்ன ? என்பதே அதிமுக்கியமான கேள்வி, ஜாதகருக்கு எதிர்வரும் சனி திசை 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் அதிர்ஷ்டத்தை வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடான மகர ராசியில் 13 பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடான கும்ப ராசியில் 18 பாகைகளையும் கொண்டிருப்பது மிகுந்த நன்மைகளை குறுகியகாலத்தில் வாரி வழங்கும் அமைப்பாகும், ஜாதகரின் தொழில் சர மண் தத்துவம் சார்ந்து அமைந்திருப்பது மேலும்  வலுசேர்க்கும் அமைப்பாகும், ஜாதகர் சனி திசை காலத்தில் 11ம் பாவக வழியில் இருந்து நல்ல அதிர்ஷ்டத்தையும், சுபயோகங்களையும் சர மண் மற்றும்  ஸ்திர காற்று தத்துவ அமைப்பில் இருந்து தன்னிறைவாக பெறுவார் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,2,3,5,7,8,9,12 என 8 வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும் எதிர்வரும் சனி திசை வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமையை தரும், ஜாதகர் தனது தொழில்  அமைப்புகளில் இருந்தும், தனது அறிவுத்திறன் மூலமும் நல்ல அதிர்ஷ்ட  வாய்ப்புகளை தன்னிறைவாக பெறுவார், எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும், நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பது மேற்கண்ட ஜாதகத்தின் மூலம் நாம் அறிந்துகொள்ளும் விஷயமாகும், நடைபெறுவது சுப கிரகத்தின் திசையா ? அசுப கிரகத்தின் திசையா? என்று ஆய்வு செய்வதைவிட, நடைபெறும் திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? என்பதில் தெளிவு பெறுவதே மிக துல்லியமான ஜாதக பலாபலன்களை கண்டுணர வாய்ப்பளிக்கும் வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 20 ஜனவரி, 2018

குரு திசை இன்னல்களை தருவதேன்? எதிர்வரும் சனி திசை யோக பலனை தருமா ?


கேள்வி :
 
 தற்போழுது நடைபெறும் குரு திசை மிகுந்த சிரமத்தையே தந்துகொண்டு இருக்கின்றது, எதிர்வரும் சனி திசை நன்மையை தருமா ? சனி திசை எனது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லுமா ? எதிர்காலம் எப்படி அமையும்.

பதில் :

 குரு முழுமுதற் சுபகிரகம் என்பதால் தனது திசையில் சுபயோக பலன்களை வழங்கும் என்ற கருத்து பொதுவானதாக இருந்த போதிலும், சுய ஜாதகம் வலிமை இன்றி இருப்பின் மேற்கண்ட கருத்து சிறிதும் பொருந்தாது என்பதே உண்மை நிலை, தங்களது ஜாதகத்திற்கும் இது மிக பொருத்தமாக அமைந்துவிட்டதுதான் விதியின் விளையாட்டு என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் இல்லை, நவகிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஒருவருக்கு தனிப்பட்ட முறையிலான பலாபலன்களை வழங்கும் என்று கருதுவது முற்றிலும் தவறான அணுகுமுறை, சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் தன்மையையே தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களின்  நவகிரகங்கள் நடைமுறைக்கு கொண்டுவரும், கோட்சார கிரகங்கள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு தரும் கோட்சார பலன்கள் பாவக பலன்களை விருத்தி செய்யும், இதுவே அடிப்படை, இதை தங்களது சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பரே !


லக்கினம் : கன்னி 
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : அவிட்டம் 4ம் பாதம்

தற்போழுது நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் : ( 14/11/2003 முதல் 14/11/2019 வரை  )

தங்களது சுய ஜாதகத்தில் 5ல் நின்ற குரு பகவான் தனது திசையில் 2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் விரைய ஸ்தான பலனை தனது திசை முழுவதும் நடைமுறைப்படுத்துகிறது, குரு சுப கிரகம் என்ற போதிலும் தனது திசையில் கடுமையாக பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திடுவது தங்களது வாழ்க்கையில் 2ம் பாவக வழியில் இருந்து குடும்ப வாழ்க்கையில் இன்னல்கள், வாக்கின் வழியில் வரும் சிரமம்ங்கள், வருமானம் விரையமாகுதல், பொருளாதர சிக்கல் என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் சுகபோகம் இன்மை, நல்ல வீடு அமையாத நிலை, வண்டி வாகன யோகம் இன்மை, குணம் சார்ந்த விஷயங்களில் பாதிப்பு என்ற வகையில் சிரமங்களை தரும், 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் நல பாதிப்பு , கடன் தொந்தரவுகள், எதிரி தொல்லை, அனைவராலும் சிரமம், வீண் மருத்துவ செலவினங்கள்  என்ற வகையில் இன்னல்களை தரும், 10ம் பாவக வழியில் இருந்து நல்ல கவுரவமான தொழில் அமையாத நிலை, ஜீவன வழியிலான தொந்தரவுகள், நிலையான தொழில் வாய்ப்பு அமையாத நிலை, எதிர்பாராத தொழில் இழப்புகள் மற்றும் நஷ்டம், கவுரவ பாதிப்பு என்ற வகையில் சிரமங்களை தரும், 12ம் பாவக வழியில் இருந்து அனைத்திலும் நஷ்டம், மன நிம்மதியின்மை, கடுமையான மனஅழுத்தம், போராட்டகாரமான வாழ்க்கை, வீண் விரையம், தெளிவில்லாத சிந்தனை, அனைவராலும் தொல்லை என்ற நிலையை தரும்.

 தங்களுக்கு குரு திசை நடைமுறையில் உள்ள போதிலும், குரு 2,4,6,10,12ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தருவது தங்களின் வாழ்க்கையை  வெகுவாக பாதிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை, குரு திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தியும் தங்களுக்கு 2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் விரைய ஸ்தான பலனை தனது புத்தியில் நடைமுறைக்கு கொண்டு வருவது தங்களின் வாழ்க்கையில் சற்று கடுமையான பாதிப்பை தரும் என்பதை மறுப்பதற்க்கு இல்லை.

எதிர்வரும் சனி திசை ( 14/11/2019 முதல் 14/11/2038 வரை ) தங்களுக்கு கடுமையான சோதனைகளை தரவே காத்துகொண்டு இருக்கின்றது என்பது வருத்தத்திற்குரியது, எனவே தாங்கள் சனி திசை,சனி புத்தி, சனி அந்தர காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது, ஏனெனில் தங்களுக்கு எதிர்வரும் சனி திசை 1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும் என்பது அவசியம் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும், ஒருவருக்கு பாதக ஸ்தான பலன்கள் நடைமுறைக்கு வரும் பொழுது ஜாதகர் மிகவும் கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது நல்லது இல்லை எனில், முரண்பட்ட வாழ்க்கையில் சிக்குண்டு " பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையின் " நிலையை தந்துவிடும்.

குறிப்பு :

சனி திசை காலத்தில் தாங்கள், தங்களின்  உடல் நலம் மனநலம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை  கொள்வது நல்லது, பெரியோரின் ஆலோசணையின் பெயரில் செய்யும் காரியங்கள் யாவும் தங்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் நல்கும், நல்ல ஆன்மீக பெரியோரின் ஆசீர்வாதமும், தீட்சையும் தங்களுக்கு சனி திசை தரும் இன்னல்களில் இருந்து காத்துஅருளும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள், எதிர்காலம் நன்றாக அமைவது என்பது தங்களின் கைகளிலேயே உள்ளது " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 16 நவம்பர், 2017

ஜாதக ஆலோசணை : சுய ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் !



 எதிர்காலத்தை பற்றியும், நிகழ்கால நடைமுறைகளை பற்றியும், தனது சுய முன்னேற்றம் பற்றியும் ஜாதகரின் கேள்விகள் நமது சிந்தனையை தூண்டும்விதமாக அமைவதை பாராட்ட வார்த்தைகள் இல்லை, சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் ஜாதகரின் எதிர்கால திட்டமிடுதல்கள் மற்றும் செயல்பாட்டிற்கான ஆயத்த நிலையில் ஜாதகர் இருப்பதை இது தெளிவுபடுத்துகிறது, " வாழ்த்துக்கள் " அன்பரே !


லக்கினம் : துலாம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 1ம் பாதம்

ஜாதகரின் கேள்விகள் என்ன? அதற்க்கான விளக்கம் மற்றும் பதில்கள் என்ன? என்பதனை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

கேள்வி :

எனது ஜாதகத்தில் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள்ளதா? தற்போது செய்யலாமா? நிலைத்து நீடிக்குமா?

பதில் :

தங்களின் ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும், தங்களது சுய ஜாதகத்திற்கு ஜீவன ஸ்தானமான கடகமும் மிகவும் வலிமையுடன் இருப்பதால் தாங்கள் சுய தொழில் செய்வதற்கான முழு தகுதியை பெற்று இருக்கின்ரீர்கள் என்பதை உறுதிபட சொல்ல இயலும், மேலும் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது தங்களின் சுய  தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும், குறிப்பக தங்களின் ஜீவன ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் சார்ந்த தொழில் வழியில் இருந்து பரிபூர்ண வெற்றிகளை தடையின்றி பெறுவீர்கள் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம்,சுகம்,களத்திரம் மற்றும் ஜீவனம் எனும் நான்கு கேந்திர பாவகங்களும் வலிமையுடன் இருப்பது தங்களை ஓர் தொழில் அதிபராக முன்னெடுத்து செல்லும் என்பதால் தங்கள் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள்ளது என்பதை "ஜோதிடதீபம்" உறுதியாக பதிவு செய்கிறது.

தற்போழுது நடைபெறும் சனி திசை, சனி புத்தி சொந்த தொழில் செய்ய சாதகம் இன்றி இருக்கின்றது, எதிர்வரும் சனி திசையில் புதன் புத்தி சுய தொழில் செய்ய முழு வலிமையை தருகின்றது என்பதால், புதன் புத்தியில் தாங்கள்  சுய தொழில் முயற்சியை மேற்கொள்ளலாம்.

தாங்கள் செய்யும் தொழில் நீடித்து நின்று விருத்தி பெரும் என்பதை தங்களின்  ஜீவன ஸ்தான வலிமையையும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியின் வலிமையையும் தெளிவாக உறுதி செய்கிறது.

கேள்வி :

எப்படிப்பட்ட தொழில்கள் எனக்கு சரியாக வரும்? உதாரணமாக டிராவல் ஏஜென்ட்டு, கமிஷன் தொழில், விளம்பரம், டிசைனிங்,
என் கையில் காசு தங்குமா? சேமிப்பு வருமா?

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவகங்கள் 7,10ம் வீடுகள் ஆகும், எனவே தாங்கள் FMCG சார்ந்த அணைத்தது தொழில்களும் சரியாக வரும், உணவகம், துணி கடை, வண்டி வாகன தொழில், பால் பொருட்கள், தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள் நல்ல முன்னேற்றத்தை தரும் மேலும் தாங்கள் கூறியபடி டிராவல் ஏஜென்ட்டு, கமிஷன் தொழில், விளம்பரம், டிசைனிங் தொழில்களும் நல்ல விருத்தியை தரும், மக்கள் தொடர்புள்ள அணைத்து தொழில்களும் தங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும்.

கையில் காசு தங்குவது சற்று சிரமம்தான் எனவே செலவுகளை குறைத்துக்கொண்டு சேமிப்பை அதிகரிப்பதே நல்லது, சுய ஜாதகத்தில் 2ம் வீடு வலிமை அற்று இருப்பது நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடுதல் அற்றவர் என்பதை தெளிவாக கூறுகிறது, கையில் இருக்கும் பணம் தங்களுக்கு வீண் விரையம்  ஆகும் என்பதால், வங்கியில் பணத்தை வைத்து கையாள்வதே தங்களின் தனம் சார்ந்த இன்னல்களுக்கு தீர்வாக அமையும், தங்கள் மன உறுதியுடன் சேமித்தால் நிச்சயம் சேமிப்பு தங்களை தேடி வரும்.

கேள்வி :

எனது ஜாதகத்தில் 10ம் பாவகத்தை பற்றி சொல்லுங்கள்
பங்கு  மார்கெட் தொழில் நமக்கு சரி வருமா?

பதில் :

தங்களுக்கு 4,10ம் வீடுகள்  ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக சிறப்பான யோகத்தை தரும் நிலையாகும், குறிப்பாக 4ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகம், சொந்த வீடு மற்றும்  நிலபுலன்கள் வாங்கும் யோகம், வண்டி வாகன தொழில் வழியில் இருந்து வருமானம், நல்ல குணம், தாயார் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, சுய சம்பாத்தியம், நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகுதல், சிறந்த நிர்வாக திறமை மூலம் பல தொழில் நிர்வகிக்கும் வல்லமை, பெரிய சொத்துக்கள், அரசு கவுரவம், சமூகம் மற்றும் அரசியலில் வெற்றி என்றவகையில் சிறப்புகளை தரும்.

10ம் பாவக வழியில் இருந்து  நல்ல உத்தியோகம், வியாபர விருத்தி, செய்யும்  தொழில் வழியில் இருந்து முன்னேற்றம், கம்பீரமான நிர்வாக திறமை, சுய தொழில் செய்வதன் மூலம் வாழ்க்கையில் சகல சம்பத்துக்களையும் பெரும் அமைப்பு, சிறந்த வாத திறமை மூலம் சாதகமான பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புக்களை தரும், கவுரவம் குறையாத யோக  வாழ்க்கையை தரும், தங்களின் பரந்த மனப்பக்குவம் அனைவராலும் கவரப்பட்டு தொழில் ரீதியான நன்மைகளை தரும்,  ஜீவன ஸ்தானம்  என்பது சர நீர் தத்துவ ராசியில் அமைவதால், தங்கள் மனதில் என்ன நினைக்கிண்றீர்களோ அதுவே நடைமுறைக்கு வரும், எனவே தங்களின் எண்ணத்தின் வலிமையை அதிகரித்துக்கொள்வது  சகல சௌபாக்கியங்களையும்  தரும், நீர்த்துவம் சார்ந்த தொழில் வழியில் இருந்து தங்களுக்கு  அபரிவிதமான வருமான வாய்ப்புகள் வந்து சேரும் என்பதால், நீர்த்தத்துவம் சார்ந்த தொழில்களை சுவீகரித்து 100% விகித நன்மைகளை பெறுங்கள், வாழ்த்துக்கள்.

பங்கு வர்த்தக தொழில் தங்களை படுகுழியில் தள்ளிவிட்டுவிடும் என்பதால் அதன் சுவாசம் கூட படாமல் தாங்கள் நடந்துகொள்வது நல்லது, பங்கு வர்த்தக துறையில் வெற்றி பெறுவதற்கான பாவக வலிமை தங்களது ஜாதகத்தில் சிறிதும் இல்லை என்பதை கருத்தில் கொள்க என்று "ஜோதிடதீபம்" தங்களை எச்சரிக்கை செய்கிறது.

கேள்வி :

வீட்டு மனை வாங்கியாச்சு. சொந்த வீடு எப்போது கட்டுவேன்?

பதில் :

சொந்தவீடு கட்ட எதிர்வரும் சனி திசையில் புதன் புத்தி வழிவகை செய்யும், வடக்கு, தெற்கு சார்ந்த வாயிற்படி கொண்ட வீட்டை நிர்ணயித்து சகல நலன்களையும் பெறுங்கள், வாழ்த்துக்கள்.

கேள்வி :

நான் செய்ய வேண்டிய கர்மவினை கழிப்பு பற்றி சொல்லுங்கள் ?

பதில் :

சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 3,5,9,11ம் பாவக வழியில் இருந்து வரும்  இன்னல்களை ஏற்று அது சார்ந்த உறவுகளுக்கு நன்மை செய்து நலம் பெறுங்கள் உதாரணமாக, உடன் பிறப்பு, குழந்தைகள், பித்ருக்கள், இளைய சகோதரம் என்ற வகையில் கர்மா வினை பாதிப்பை கழித்துக்கொள்வது நல்லது.

கேள்வி :

தற்பொழுது ராகு கேது பெயர்ச்சி மற்றும் வரப்போகும் சனிப் பெயர்ச்சி யோக பலன்களை தருமா?

பதில் :

ராகு கேது முழு வீச்சில் சுபயோக பலன்களை 4,10ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்குகிறது , சனி பெயர்ச்சி யாதொரு பலாபலன்களை தங்களுக்கு தற்போழுது  தரவில்லை என்பதே உண்மை நிலை.

கேள்வி :

தொழில் ஸ்தான வலிமையும், நான் பெரும் தொழில் ரீதியான முன்னேற்றமும் ! வெளிநாட்டில் தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?

பதில் :

தொழில் ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது தங்களுக்கு சிறப்புகளை வாரி வழங்கும், தொழில் ரீதியான முன்னேற்றம் என்பதும் சிறப்பாக சீரிய முறையில் படிப்படியாக  அமையும், தங்களுக்கு சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமையுடன் இருப்பது வெளிநாட்டில் தொழில் ரீதியான முன்னேற்றம் என்பது  மிகவும் அபரிவிதமானதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை குறிப்பாக தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களை தாங்கள் தேர்வு செய்து வெளிநாடுகளில் சிறப்பான முன்னேற்றங்களை பெறலாம்.

கேள்வி :

கூட்டு தொழில் செய்வது சரியானதா ? சுய தொழில் செய்வது சரியானதா?

பதில் :

கூட்டு தொழில் வெளிநாடுகளில் செய்வது சிறப்பான வளர்ச்சியை தரும், சுய தொழில் செய்வதும் தங்களுக்கு எதிர்பாராத முன்னேற்றத்தையே வாரி வழங்கும்  என்பதால், சுய தொழில் செய்யவும், கூட்டு தொழில்  செய்யவும் தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது தங்களின் விருப்பம் எதுவோ ? அதை தேர்வு செய்து வெற்றி காணலாம்.

கேள்வி :

களத்திர ஸ்தானமும், குடும்ப ஸ்தானமும் பாதிக்கப்பட்டுல்லதா?

பதில் :

குடும்ப ஸ்தானம் மட்டும் சிறிது பாதிக்கப்பட்டு இருக்கின்றது, களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது தங்களுக்கு 7ம் பாவக வழியில் இருந்து  100% விகித சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும்.

கேள்வி :

சர லக்கினத்திற்கு 11ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமைவதால், லாப ஸ்தான வழியில் இருந்து யோகங்களை பெற முடியுமா?

பதில் :

3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், நிச்சயம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் 3,5,9,11ம் பாவாக வழியில் இருந்து தங்களால் சுபயோக பலன்களை பெற இயலாது, எனவே மேற்கண்ட பாவக  பலனை ஏற்று நடத்தும் ராகு,சனி திசா புத்திகளில் எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது தங்களுக்கு நன்மையை தரும்.

கேள்வி :

சனி திசை  தொழில் முன்னேற்றமும் எப்படி அமையும் ?

பதில் :

சனி திசையில் சனி புத்தி மற்றும் ராகு புத்தியை தவிர மற்ற புத்திகள் வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்துவதால், தங்களின் தொழில் முன்னேற்றம் மிகவும் சிறப்பாகவே அமையும், மேலும் தாங்கள் சனி திசையில் சனி புத்தி, ராகு  புத்தியில் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது சகல விதங்களில் நன்மையை  தரும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 14 நவம்பர், 2017

தொழில் ஸ்தான வலிமை தரும் கைநிறைவான வருமான வாய்ப்புகள் !

 
 
சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில் ஒருவர் தனது தொழிலை நிர்ணயம் செய்வது என்பது, ஜாதகர் தனது வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை பெறுவதற்கான ஸ்திரமான அடித்தளம் என்றால் அது மிகையில், தமக்கு சற்றும் பொருந்தாத தொழிலை தேர்வு செய்வது என்பது ஜாதகர் தமது வாழ்க்கையில் அதிக அளவிலான போராட்டங்களையும் இன்னல்களையும் எதிர்கொள்ளவதற்கான ஆயத்த பணி இதை அனுபவித்தவர்களுக்கு தெளிவாக புரியும், தமது ஜாதக வலிமைக்கு உகந்த தொழிலை ஜாதகர் தேர்வு செய்யும் பொழுது ஜாதகரின் உழைப்பு, அறிவு திறன், முன்னெற்றம் மற்றும் பொருளாதார தன்னிறைவு அனைத்தும் ஒரு நேர்கோட்டில் இயங்கி தொழில் ரீதியான வெற்றி வாய்ப்புகளை பரிபூர்ணமாக பெற வழிவகை செய்யும், மாறாக சுயஜாதக வலிமைக்கு சற்றும் பொருந்தாத தொழிலை ஜாதகர் தேர்வு செய்யும் பொழுது அடிப்படையில் நேர விரையம் என்பது அதிகரிக்கும், ஆர்வம் குறையும், உழைப்பின் தரம் குறையும், நம்பிக்கை அற்ற தன்மை  தொழில் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும், குறுகிய காலத்தில் பெறவேண்டிய நன்மைகளை ஜாதகர் நெடுங்காலம் காத்திருந்து சிறிய அளவில் அனுபவிக்கும் தன்மையை தரும், மேலும் ஜாதகரின் தொழில் வல்லமை " குடத்தில் இட்ட விளக்கு போல் பிரகாசம் இன்றி " அவதியுற நேரும், தமக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வது என்பது சுய ஜாதகத்தின் அடிப்படையில் அமைவதே ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத்தரும்.

சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் வலிமை அற்ற பாவக தொடர்பை பெறுவது ஜாதகரின் தொழில் வாய்ப்புகளை தடை செய்யும், பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகரின் தொழில் வாய்ப்புகளை கேள்விக்குறியாக மாற்றும் ஜாதகருக்கு ஓர் நல்ல வேலை அல்லது தொழில் அமைவது என்பதே குதிரை கொம்பாக மாறிவிடும், எனவே சுய ஜாதகத்தில் எந்த காரணத்தை கொண்டும் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை அற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உகந்தது அல்ல என்பதை கருத்தில் கொள்வது  நல்லது பெரும்பாலான அன்பர்கள் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமை அற்று காணப்படுவதாலேயே சுய தொழில் முயற்சி செய்து பேரிழப்புகளையும், பெரும் நஷ்டங்களையும் சந்திக்கின்றனர்.

ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது தொழில் ஸ்தான அமைப்பில் இருந்து  ஜாதகருக்கு தொழில் முன்னேற்றங்களை நல்குகின்றதோ ? அதை போன்றே களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு வலிமை பெறுவது ஜாதகரின் கூட்டு தொழில் அமைப்பை நிர்ணயம் செய்கின்றது, பெரும்பாலும் 7ம் வீடு வலிமை அற்ற தன்மையில் அமைந்து கூட்டு தொழில் செய்து அதனால் ஏற்பட்ட நஷ்டத்தால் நடுத்தெருவில் நின்றவர்கள் ஏராளம் எனலாம், சுய ஜாதகத்தில்  களத்திர ஸ்தானம் வலிமை அற்று இருக்கின்றது என்றால், எக்காரணத்தை கொண்டும் சம்பந்தப்பட்ட ஜாதகர் கூட்டு தொழில் முயற்சியில் இறங்குவது என்பது சரியானது அல்ல இதை உதாசீன படுத்தினால் ஜாதகர் " புலிவாலை பிடித்த கதைதான் " குறிப்பாக 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கும் ஜாதகர் கூட்டு தொழில் செய்வது என்பது மடியில் கல்லைக்கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதற்கு நிகரான பலாபலன்களை தந்துவிடும், ஜாதகர் இதில் இருந்து மீண்டு வருவது என்பது மிக மிக சிரமமே, எனவே சுய தொழில் கூட்டு தொழில் நிர்ணயம் என்பது சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்வதே சாலச்சிறந்தது.

 கீழ்கண்ட உதாரண ஜாதகத்தை கொண்டு ஜீவன ஸ்தான வலிமையை பற்றியும் , ஜாதகர் அதன் வழியில் இருந்து பெரும் தன்னிறைவான வருமான வாய்ப்புகளை பற்றியும் தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம் 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம்2ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும், சுய ஜாதகத்தில்  ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் என்பது மிக வலிமையுடன் இருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது, ஓர் ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் வலிமை பெறுவது என்பது ஜாதகருக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை எவ்வித தடையும் இல்லாமல் வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகர் ஓர் இடத்தில் பணிபுரியவும், சுய தொழில் செய்யவும் முழு தகுதி உடையவர் என்பதை ஜீவன ஸ்தான வலிமையே உறுதிப்படுத்தும். 

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது அதாவது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் கீழ்கண்டவாறு அமைகிறது.

1,3,6,7,9,12ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் லக்கின பாவக வழியில் இருந்து நல்ல ஆரோக்கியம், சிறந்த மனநிலை, வளரும் சூழ்நிலையில் அதிர்ஷ்டம் தெளிந்த நல்லறிவு என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, தன்னம்பிக்கை மாறாத தன்மை, முழு முயற்சியுடன் செயல்பட்டு நன்மைகளை பெறுதல், சகல சௌபாக்கியம், சிறந்த வியாபார அறிவு, செய்யும் காரியங்களில் நேர்மை, தொழில் வழியில் சத்தியத்தை கடைபிடித்தல், மக்களின் நம்பிககையை பரிபூர்ணமாக பெரும் யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும், 6ம் பாவக வழியில் இருந்து குறிகிய கால வருமான  வாய்ப்புகளை பெறுதல், எதிரியின் சொத்து ஜாதகருக்கு கிடைத்தால், நல்ல வேலைஆட்கள், வாங்கி உதவி, கேட்கும் இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவி என்றவையில் நன்மையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் பொருளாதர உதவிகளை பெறுதல், கூட்டு தொழில் செய்வதால் ஜாதகருக்கு நல்ல வருமானம் கிடைத்தால், மக்கள் செல்வாக்கு , பிரபல்ய யோகம், வெளிநாடுகளில் இருந்து வரும் தனசேர்க்கை என்ற வகையில் சிறப்புகளை தரும், 9ம் பாவக வழியில் இருந்து பெற்றோர் வழியில் சொத்து மற்றும் முன்னோர்கள் சொத்துக்களை பெறுதல், நற்பெயர், ஸ்திரமான தொழில் முன்னேற்றம் நிறைவான வருமானம் என்ற வகையில் சிறப்பை தரும், 12ம் பாவக வழியில் இருந்து நன்றாக சேமிக்கும் வல்லமை, சிக்கன பேர்வாழி, லட்சியத்தின்  வழியில் பெரும் தனசேர்க்கையை பெரும் யோகம், நல்ல மனநிம்மதி திருப்தியான யோக வாழ்ககையை தரும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் 4ம் பாவக வழியில் இருந்து வண்டி வாகன யோகம், சொத்து  சுக சேர்க்கை, வீடு மனை யோகம், அது சார்ந்த தொழில் வழியில் லாபம் மற்றும் சுய முயற்சியின் மூலம் பெரிய சொத்துக்களை பெரும் அமைப்பை தரும், குறிப்பாக ஜாதகருக்கு நல்ல பொருளாதார முன்னேற்றத்தை சுக ஸ்தான வழியில் இருந்து தரும், 10ம் பாவக வழியில் இருந்து கவுரவம் குறையாத தொழில் முன்னேற்றம், செய்யும் தொழில் வழியிலான வருமானம் மற்றும் சிறந்த நிர்வாக திறமை, சமூக அந்தஸ்து, பல தொழில் செய்யும் யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடான தனுசு ராசியில் 8 பாகையும், புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடான மகரத்தில் 22 பாகையும் கொண்டு இருப்பது ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தை சிறப்பாக அமைத்து தரும், ஜாதகர் உபய நெருப்பு மற்றும் சர மண் தத்துவ அமைப்பில் இருந்து தொழில் விருத்தியை பெறுவதை உறுதி செய்கிறது.

5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சமயோசித புத்திசாலித்தனத்தை தரும், இது சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிக முக்கியமானது, ஏனெனில் சரியான நேரத்தில் சரியான திட்டமிடுதல்களை மேற்கொள்வதும் தொழில் ரீதியான நன்மைகளை வாரி வழங்கும்.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தை உறுதி செய்கிறது, சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாக இதை கருதலாம், ஜாதகர் எது செய்தாலும் அதனால் ஏற்படும் நன்மைகளை ஜாதகரும் ஜாதகரை சார்ந்தவர்களும் அனுபவிக்க சுய ஜாதகத்தில் லாபம் மற்றும் அதிஷ்டம் என்று அலைக்கும் 11ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது மிக மிக அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் இது வலிமை பெறவில்லை எனில் ஜாதகர் சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்து வரும் சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க இயலாது, மேற்கண்ட ஜாதகருக்கு 11ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகரின் ஜீவன ஸ்தான யோக பலன்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தருகின்றது, சுய ஜாதகத்தில் 11ம் பாவகம் வலிமை பெறவில்லை எனில் ஜாதகரின் உழைப்பும் யோகமும் மற்றவர்களால் சுவீகரிக்க படும் என்பது கவனிக்கத்தக்கது.

வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்ற போதிலும் நம்பிக்கையின் பெயரில் செய்யும் அதிக முதலீடுகள் கடுமையான நஷ்டங்களை ஏற்படுத்தும், தனது மேற்பார்வையின் கீழ் இல்லாத தொழில் வழியில் இருந்து நஷ்டங்களே உண்டாகும், விபத்து, மருத்துவ செலவினங்கள், மற்றவர்கள் வழியிலான நஷ்டங்கள் என சற்று பாதிப்பை தரக்கூடும்.

2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது குடும்ப செலவினங்களை அதிகரிக்கும், தொழில் வழியிலான ஆதரவு ஜாதகருக்கு குடும்பத்தில் இருந்து கிடைக்க வாய்ப்பு இல்லை, சில நேரங்களில் பணத்திற்க்காக பெரிய அளவிலான திண்டாட்டங்களை சந்திக்கும் நிலையை தரும், வாக்கு வன்மை எதிர்பாராத இன்னல்களை உருவாக்கும்.

மேற்கண்டவை சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் அடிப்படையில் ஜாதகர் பெரும் நன்மைகள் தீமைகள், ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான சுப யோக பலன்களை தருவது எப்பொழுது? அவயோக பலன்களை தருவது எப்பொழுது? என்று நிர்ணயம் செய்வது நவகிரகங்களின் திசா புத்திகளே, அதை உணர்ந்து ஜாதகர் செயல்பட்டால் மட்டுமே ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றிகள் கைகூடி வரும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்றுநடத்தும் திசாபுத்திகளில் ஜாதகரின் தொழில் ரீதியான முயற்சிகள் நல்ல பலன்களையும், வலிமை அற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகளில் ஜாதகரின் தொழில் ரீதியான முயற்சிகள் அவயோக பலன்களையும் தரும், தற்போழுது நடைபெறும் திசை ஜாதகருக்கு தரும் பலாபலன்கள் என்ன? என்பதை பார்ப்போம்.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனை தருவது, ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பம், வருமானம் மற்றும் தொழில் சார்ந்த அமைப்பில் இருந்து வீண் விரயங்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எனவே சுய ஜாதகம் மிகுந்த வலிமையுடன் காணப்பட்டாலும், நடைபெறும் குரு திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாதது ஜாதகருக்கு ஜீவன ரீதியான நன்மைகளை பெற இயலாமல் போராடும் சூழ்நிலையே தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஜாதகர் சுய தொழில் அல்லது கூட்டு தொழில்  செய்ய முழு தகுதியை பெற்ற போதிலும், தற்போழுது நடைமுறையில் உள்ள குரு திசை சாதகம் இன்றி இருப்பது " கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த " கதையாவே உள்ளது, எல்லாம் விதியின் விளையாட்டு என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஜாதக ஆலோசணை : அதிர்ஷ்டகரமான சுபயோகங்களை நடைமுறைக்கு கொண்டுவரும் திசா புத்திகள் !



சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் என்பது பாவக வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது, வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஓர் ஜாதகர் சுபயோகங்களை அனுபவிப்பதற்க்கு நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் மூல காரணமாக அமைகிறது என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் அவயோகங்கள் என்ன என்பதனையும், அவை திசா  புத்திகளில் எப்படி நடைமுறைக்கு வருகின்றது என்பதனையும் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகர் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் தனுசு ராசியை லக்கினமாக பெற்று இருக்கின்றார், லக்கினம் என்பது ஜாதகருக்கு தனுசு ராசியில் (  254:33:18 ) பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் ( 284:38:46 ) பாகை வரை வியாபித்து நிற்கிறது, எனவே ஜாதகருக்கு லக்கினம் என்பது தனுசு என்ற போதிலும் மகர ராசியின் தன்மையும் ஜாதகருக்கு கலந்து நிற்கின்றது, ஜாதகர் உபய நெருப்பு தத்துவ அமைப்பிற்க்கான  குணாதிசயமும், சர மண் தத்துவத்திற்க்கு உண்டான குணாதிசயமும் பெற்று இருப்பார், ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக தொடர்புகள் என்ன ? வலிமை பெற்ற பாவக தொடர்புகள் எவை ? வலிமை அற்ற  பாவக தொடர்புகள் எவை ? என்பதனை இனி காண்போம்.

வலிமை பெற்ற பாவக  தொடர்புகள் :

1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,5,11ம் வீடுகள்  லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  இருப்பது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகளாகும்.

வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்பு ஆகும்.

1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து கல்வியில் தேர்ச்சி, மண் மணை வண்டி வாகன யோகம் உண்டாகும், தாய் வழி சொத்துக்கள் கிடைத்தல், கலை துறையில் ஆர்வம், நுண்ணறிவுத்திறன், சுக போக வாழ்க்கை, சிறப்பான நல்ல குணம், தனது கற்பனை திறன் மூலம் பல சாதனைகளை செய்யும் வல்லமை, திருப்திகரமான யோக வாழ்க்கை என்ற அமைப்பில் நன்மைகளை தரும், 3ம் பாவக  வழியில் நிறைவான பொருளாதரா சேர்க்கை, சொகுசு வாகன யோகம், பின்யோக  ஜாதகம், சந்தோசம் மற்றும் மனநிறைவு பெண்கள் வழியில் ஆதரவு, போட்டி பந்தங்களில் எளிதில் வெற்றி பெரும் யோகம், போக்குவரத்துக்கு தொழில் செய்யும் யோகம், வீட்டு மிருகங்கள் மூலம் அதித லாபம், விவசாயத்தில் அதிர்ஷ்டம் மற்றும் லாபம், அரசியல் வெற்றி அரசியல்வாதிகள் மூலம் லாபம் என்றவகையில் சிறப்புகளை தரும், 4ம் பாவக வழியில் இருந்து நிறைவான சொத்து சுக சேர்க்கை சொந்த உழைப்பில் புதிய சொத்துகளை பெரும் யோகம், சுக போகங்களுக்கு குறைவில்லா வாழ்க்கை முறை, நல்ல குணாதிசயம், தெய்வீக நம்பிக்கை மூலம் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெரும் அமைப்பு, தனது தாய் வழியில் இருந்து வரும் சுபயோகங்கள், தீர்கமான முடிவுகள் மூலம் ஆதாயம் என்ற வகையில் நன்மைகளை தரும்.

 2,5,11ம் வீடுகள்  லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் அமைப்பே  ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்புகளாக கருதலாம், 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி, தனது பேச்சு திறன் மூலம் அதிர்ஷ்டங்களை தொடர்ந்து பெரும் யோகத்தை தரும், நண்பர்கள் வழியில் இருந்து சிறப்புகளை வாரி வழங்கும், தன ஆதாயம் பரிபூர்ணமாக ஜாதகருக்கு கிடைக்கும், இயக்க நிலையில் உள்ள மண் தத்துவம் சார்ந்த தொழில்கள் வழியில் இருந்து ஜாதகருக்கு அபரிவிதமான வருமான வாய்ப்புகள் உண்டாகும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கற்ற கல்வி வழியில் இருந்து முன்னேற்றங்கள் உண்டாகும், தனது புத்டிசாலிதனத்தல் யோக வாழ்க்கை உண்டாகும், எப்பொழுதும் மகிழ்சிகரமான யோக வாழ்க்கை உண்டு, குழந்தை மற்றும் குடும்பத்தாருடன் சந்தோசம் உண்டாகும், இறை அருளின் கருணை மூலம் ஜாதகரின் வெற்றிகரமான யோக வாழ்க்கை உறுதி செய்யப்படும். 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தின் தாக்கம் ஜாதகருக்கு சற்று அதிகமாகவே அமையும், தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் அணுகும் வல்லமையை தரும், எதிர்ப்புகள் இருப்பின் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும், நம்பிக்கையுடன் ஜாதகர் செய்யும் விஷயங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும், ஜாதகரின் எண்ணம் என்னவோ ? அதுவே ஜாதகரின் வாழ்க்கையாக மலரும்.

6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து பயணம் மூலம் அதிர்ஷ்டம் மற்றும் லாபம் உண்டாகும், எதிரிகள் செய்யும் சூழ்சிகள் வழியில் இருந்து ஜாதகருக்கு நன்மை நடைபெறும், உடல் நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உயர்கல்வி பட்டய கல்வி அல்லது கௌரவ பட்டம் பெரும் யோகம் உண்டாகும், 9ம் பாவக வழியில் இருந்து அறிவார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம், பயணங்களில் விருப்பம், ஆராய்ச்சி மனப்பான்மை, தெய்வீக அனுகிரகம், செய்யும் செயல்களில் நல்ல முன்னேற்றம், தெளிவான சிந்தனை மூலம் வாழ்க்கையில் நன்மைகளை பெரும் அமைப்பு, பெரிய மனிதர்கள் ஆதரவு, சமூக அந்தஸ்து, ஆன்மீக வெற்றி என்ற வகையில் சிறப்புகளை தரும், 12ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் யோக வாழ்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வ வளம், பயணம் மூலம் அதிக லாபம், உல்லாச வாழ்க்கை, தொழில் மற்றும் இருப்பிட மாற்றம் மூலம் சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் தன்மை, போதும் என்ற மனம், இறைஅருளின் கருணையை பரிபூர்ணமாக பெரும் அமைப்பு, தெய்வீக அனுபவம், நல்ல ஞானம் மற்றும் ஆன்மீக பெரியோரின் கருணையை பெரும் அமைப்பு என்ற வகையில் சிறப்புகளை தரும்.

7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம் மூலம் யோக வாழ்க்கை, நல்ல அந்தஸ்து மற்றும் வசதி மிக்க வாழ்க்கை துணையை பெறுதல், வாழ்க்கை துணை வழியிலான முன்னேற்றம், திருமணத்திற்கு பிறகான அபரிதவித வளர்ச்சி, அரசியல் செல்வாக்கு, வியாபர விருத்தி, சமூக அந்தஸ்து மூலம் உயர் பதவிகள் என நன்மைகளை தரும், நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் என ஜாதகரை அபரிவிதமான வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும்.

10ம் பாவக வழியில் இருந்து உத்தியோகம் மற்றும் வியாபாரம் சார்ந்த வெற்றி வாய்ப்புகள் தேடிவரும், கௌரவம் குறையாத யோக வாழ்கையை தரும், செய்யும் தொழில் முழு வெற்றியை தரும், கம்பீர யோக வாழ்க்கை, தீர்க்கமான முடிவுகள் மூலம் அதிர்ஷ்டம் என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், தெய்வீக அனுபவம் மூலம் முன்னேற்றம் உண்டாகும், பல தொழில் செய்யும் யோகம் உண்டு, ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை வாரி வழங்கும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிர்பாராத இழப்புகளை தரும், எதிர்பாலின சேர்க்கை மூலமா தொல்லைகள் அதிகரிக்கும், மனம் ஒருநிலை படுவது வெகு சிரமம், வாழ்க்கையில் ஏமாற்றம் மற்றும் மற்றவர்கள் மூலம் அதிக இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், திருப்தி அற்ற வாழ்க்கையை தரும், இருப்பினும் நீண்ட ஆயுள் உண்டாகும், வாழ்க்கை துணை வழியில் இருந்து சில நேரங்களில் பொருளாதார முடக்கங்கள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, விபத்து, துயரம், வியாதிகள் மூலம் இன்னல்களை தரும்.

மேற்கண்ட வகையில் ஜாதகருக்கு சுய ஜாதக பலாபலன்கள் சிறப்புகளை பொது பலனாக தருகின்ற போதிலும், ஜாதகருக்கு கடந்த ராகு திசை தந்த பலாபலன்கள் என்ன ? தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் என்ன ? என்பதனை கண்டுணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்படுவதே ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், ஓர் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் ( சுபயோகங்கள் ) இருந்தாலும் நடைமுறையில் உள்ள திசா புத்திகள், எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலன்களை ஏற்று நடத்தினால் மட்டுமே சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஜாதகருக்கு நன்மைகளையும், யோகங்களையும் தரும் என்பதை கருத்தில் கொள்வது நலம் தரும்.

ஜாதகருக்கு கடந்த ராகு திசை தந்த பலாபலன்கள் ( 12/07/1992 முதல் 12/07/2010 வரை ) 

ராகு திசை ஜாதகருக்கு 18 வருட காலம் தனது திசையில் ஜாதகருக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை ஆயுள் பாவக வழியில் இருந்து வாரி வழங்கி இருக்கிறது, ராகு திசை ஜாதகருக்கு பால்ய பருவம் என்பதனால் ஜாதகரின் கல்வி பாதிப்பு, வளரும் சூழ்நிலை சரியில்லா நிலை, உடல் ஆரோக்கிய பாதிப்புகள், திடீர் மருத்துவ செலவு, விபத்து, பொருளாதார செலவினங்கள் என்ற வகையில் சிரமங்களை தந்து இருக்கின்றது, மேலும் ஜாதகரின் ஆயுள் ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக ( கடகம் ) அமைவது ஜாதகரின் மன நிலையை கடுமையாக பாதித்து செயல்முடக்கத்தை தந்து இருக்கின்றது, சர தத்துவ அமைப்பில் இருந்து தர வேண்டிய இன்னல்களை 100 % விகிதம் விரைவாக வாரி வழங்கி இருக்கின்றது, ஜாதகரின் மனதின் ஆசைகள் யாவும் நிறைவேறாமல் வீண் மன ஏக்கத்தை மட்டுமே அனுபவிக்கும் நிலைக்கு ஆளாக்கி இருக்கின்றது, ஜாதகருக்கு அடிப்படையில் கிடைக்க வேண்டிய கல்வி,நல்ல தொழில் ,திருமண ஆகியவை கிடைக்கவில்லை, மேலும்  பொருளாதர முன்னேற்றமும் தடை பெற்றது, சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகத்தை தவிர மற்ற பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சுப யோகங்கள் இருப்பினும் அதை ராகு திசையில் ஜாதகர் பெற இயலாத சூழ்நிலையை தந்து இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை தரும் பலாபலன்கள் ( 12/07/2010 முதல் 12/07/2026 வரை ) 

தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள்  லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை வாரி வழங்கிக்கொண்டு  இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஏனெனில் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பு இதுவே ஆகும் எனவே ஜாதகர் குரு திசையில் சிறப்பு மிக்க சுபயோகங்களை 2ம் பாவக வழியில் இருந்து வருமானம், பேச்சு திறன், குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார தன்னிறைவு, நிறைவான வசதி வாய்ப்புகள் என ஜாதகரின் வாழ்க்கை எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், ஜாதகரின் 2ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைவது ஜாதகரின் வருமானத்தை ஜீவன வழியில் இருந்து தரும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் குல தெய்வ அனுக்கிரகம் மூலம் சகல சௌபாக்கியத்தையும் தரும், தனது அதிபுத்திசாலித்தனம் மூலம் அதிர்ஷ்டங்களை தங்கு தடையின்றி பெறுவார் நல்ல நண்பர்கள் சேர்க்கை உண்டாகும், கலைத்துறையில் பிரபல்யம் உண்டாகும், கலைகளில் தேர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு, திருமணம் மூலம் அதிர்ஷ்டம் மற்றும் நல்ல குழந்தை பேரு உண்டாகும். 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அதிர்ஷ்டம்  சகல நிலைகளில் இருந்து முன்னேற்றத்தை வாரி வழங்கும், குறிப்பாக  ஜாதகரின் லட்சியங்கள் நடைமுறைக்கு வரும், எதிர்ப்புகளை களைந்து  வெற்றி நடை போடும் யோக காலமாக இதை கருதலாம், அதிர்ஷ்டத்தின் மூலம் ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமையும், உடல் நலம் தேறும், மனதைரியம் அதிகரிக்கும், குரு திசை ஜாதகருக்கு சுய ஜாதகத்திலேயே மிகவும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் எனலாம், ஜாதகருக்கு இது சுப யோகங்களை 11ம் பாவக வழியில் இருந்து தரும்.

அடுத்துவரும் சனி திசை தரும் பலாபலன்கள் ( 12/07/2026 முதல் 12/07/2045 வரை)

ஜாதகருக்கு எதிர்வரும் சனி திசை 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது சனி திசை முழுவதுமான ஜீவன முன்னேற்றத்தை தரும் அமைப்பாகும், ஜாதகரின் கவுரவம் அதிகரிக்கும், செய்யும் தொழில் வழியில் இருந்து அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், ஜாதகருக்கு பல தொழில் செய்யும் யோகத்தை இது தருகிறது, கடின உழைப்பின் மூலம் ராஜயோக வாழ்க்கையை ஜாதகருக்கு சனி திசை 10ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், எனவே எதிர்வரும் சனி திசையும் ஜாதகருக்கு மிகவும் சாதகமான பலாபலன்களையே தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு பெரும்பாலான ( 11 பாவகங்கள் ) பாவகங்கள் வலிமையுடன் இருந்தாலும் கடந்த ராகு திசை ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியதால் ஜாதகருக்கு கடந்த ராகு திசை இன்னல்களையும் சிரமங்களையும் வாரி வழங்கியது, ஆனால் தற்போழுது நடைபெறும் குரு திசையும் எதிர்வரும் சனி திசையும் வலிமை பெற்ற லாபம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை  ஏற்று நடத்துவதால் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் சிறப்பான நன்மைகளை தர ஆரம்பித்து இருப்பது ஜாதகரின் சுபயோகங்கள் நடைமுறைக்கு வர இருப்பதை கட்டியம் கூறுகிறது என்பதை மறுக்க இயலாத உண்மையாகும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பது  மட்டுமே ஜாதகருக்கு நன்மையை தாராது, சுபயோகங்கள் பெற்ற பாவக பலனை நடைமுறையில் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே அதனால் வரும் சுபயோகங்களை ஜாதகர் சுவீகரிக்க இயலும் என்ற விஷயத்தை கருத்தில் கொள்வது நலம் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 16 செப்டம்பர், 2017

தொழில் ஸ்தானம் தரும் யோக வாழ்க்கை : கூட்டு தொழில் செய்வது சரியானதா ? சுய தொழில் செய்வது சரியானதா ?


" அவனின்றி ஓர் அணுவும் அசையாது, அனைத்து இயக்கங்களுக்கும் காரணம் இறைவன் ” என்பதற்க்கு இணங்க சுய ஜாதகத்தில் " லக்கினம் " எனும் முதல் பாவகம் ஓர் ஜாதகரை இயக்குவதில் முன்னுரிமை பெறுகிறது, லக்கினம் என்பது அவரவர் பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிய காரணிகளால் நிர்ணயம் செய்படுகிறது, லக்கினத்தில் அடிப்படையாக கொண்டு 12பாவகங்களின் வலிமை நிலையும் சுய ஜாதகத்தில் நிர்ணயிக்கபடுகிறது என்றால் அது மிகையில்லை அன்பர்களே ! இதில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவகம் நான்காவது கேந்திரமாகவும், ஜாதகரின் ஜீவன வாழ்க்கையை பற்றியும் தெளிவுபடுத்துகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெற்று கேந்திரம் மற்றும் கோண பாவகங்களுடன் தொடர்பு பெற்றோ, வீரியம் மற்றும் லாப ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் ஜீவன வாழ்க்கை என்பது அபரிவிதமான முன்னேற்றங்களுடன், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை பெற்று இந்த புவியில் சுயமரியாதை,கௌரவம் மற்றும் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கையை தனது வாழ்நாளில் சுவீகாரம் செய்யும் வல்லமை பெற்றவர் என்பது உறுதியாகும்.

 மாறாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10 வீடு, மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெற்றோ, தனது லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருப்பின் ஜாதகரின் ஜீவன வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், ஜாதகருக்கு தனது ஜீவனத்தை கௌரவமாக நடத்த வாய்ப்பு இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கும், ஜீவன ரீதியாக ஜாதகர் வெறும் திட்டமிடுதல்களை மட்டுமே செய்ய இயலும் நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது குதிரை கொம்பாக இருக்கும், குறிப்பாக ஜாதகரின் 10ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கும், மேலும் கௌரவ குறைவான வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், ஜாதகர் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்விகளை வாரி வழங்கும், ஜாதகரின் நம்பிக்கையும், செயல்திறனும் முற்றிலும் பாதிக்கப்பட்டு, போராட்டம் ஒன்றே வாழ்க்கையாக மாறிவிட வாய்ப்பு உண்டு, ஜாதகரின் அறிவுரையை ஏற்கும் அனைவரும் வெற்றிமேல் வெற்றி பெறுவார், ஆனால் ஜாதகருக்கோ தோல்வி ஒன்றே பரிசாக கிடைக்கும், இதை தவிர்க்க ஜாதகர் தனது சுய ஜாதகத்தில் உள்ள மற்ற பாவகங்களின் வலிமை பயன்படுத்தி நலம்பெறலாம், இதற்க்கு தனது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை பற்றி தெளிவு பெற்று இருப்பதும், நடைபெறும் திசா புத்திகள் மற்றும் எதிவரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை பற்றி தெளிவு பெற்று இருப்பதும் அவசியமாகிறது.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று நடைமுறையில் உள்ள திசா புத்தியும், எதிர்வரும் திசாபுத்தியும் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் ஜீவன வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், செய்யும் தொழில் மற்றும் பணியில் தன்னிறைவான முன்னேற்றங்களை பெற்றும் ஜீவன ரீதியாக யோக வாழ்க்கையை பெறுவார் என்பது உறுதி, கிழ்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன பாவக வலிமை, கூட்டு தொழில் யோகம் மற்றும் தற்பொழுது நடைபெறும் திசை தரும் பலன்கள், எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றிய விரிவான விளக்கத்தை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : துலாம்
ராசி : கும்பம்
நட்சத்திரம் : அவிட்டம் 4ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் வீடுகள், தொடர்பு படுத்தும் பாவகம் பற்றி பார்ப்போம் அன்பர்களே 4,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மிகுந்த வலிமையுடன் இருப்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு சுக ஸ்தானம் எனும் 4ம் வீடாக அமைவது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், இதானால்  ஜாதகரின் ஜீவன வலிமை மேலும் மெருகேறி அதி அற்ப்புதமான ஜீவன முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஜாதகருக்கு 4,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மாத்ரு ஸ்தான வழியில் இருந்து நல்ல சுக போகங்களை தான் செய்யும் தொழில் வழியில் இருந்து ஜாதகர் பெறுவார், மண் மனை, வண்டி வாகனம் சார்ந்த தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தரும், தனது தாயார் வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கையையும், நிதி உதவிகளையும் பெரும் யோகம் பெற்றவர், போக்குவரத்து தொழில் வண்டிவாகனம் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சியை தரும், சரக்கு உந்து, போருந்து, சொகுசு வாகனங்கள் மூலம் வாழ்க்கையில் ஜாதகருக்கு நல்ல வருமானமும், முன்னேற்றமும் உண்டாகும்.

ஆயுள் ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு மருத்துவ துறை, அல்லது மருந்து பொருட்கள், ஆயுள் காப்பீடு, இன்சூரன்சு, மருத்துவ உபகரணம் சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகரின் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார உதவிகள் ஜாதகரை மதிப்பு மிக்க தொழில் அதிபர் என்ற நிலைக்கு குறுகியகாலத்தில் உயர்த்தும், தனது திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி என்பது ஜாதகரே நினைத்து பார்க்காத வண்ணம் அமையும் என்பது சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை, மேலும் ஜாதகரின் ஆயுள் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளையும், வாழ்க்கை துணை வழியிலான தன சேர்க்கையையும் எதிர்பாராத நேரங்களில், திடீர் அதிர்ஷ்டமாக வாரி வழங்கும், தனம் சார்ந்த தொழில்களில் குறிப்பாக நிதி நிறுவனம், வட்டி தொழில், வாக்கு வன்மையின் மூலம் பெரும் வாருமானம் என ஜாதகரின் ஜீவன வாழ்க்கைக்கு மேலும் மேலும் மெருகேற்றும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அமசமாகும்.

பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகர் பேராசிரியர், கல்வி துறை சார்ந்த தொழில்களில் மிகப்பெரிய வருமான வாய்ப்புகளை தரும், கல்வி கூடங்கள் நடத்துவது, கல்வி பணி சார்ந்த தொழில்களில் ஈடுபடுவது மூலம் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவது மூலம் மிகப்பெரிய வெற்றிகளை பெறலாம், அல்லது தனது முன்னோர்கள் செய்து வந்த பாரம்பரிய தொழில்களில் நல்ல வெற்றி வாய்ப்புகளை பெறலாம், அறிவு சார்ந்த தொழில்கள், ஆன்மீக தொழில் போன்றவற்றில் சிறப்புகளை தரும்

ஜீவன ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியிலான பலாபலன்களை முழு அளவில் பெறுவதற்கு தகுதி உள்ளவர் என்பது உறுதியாகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தான அதிபதி புதன் என்பதால் ( உயர் கணித ஜோதிட விதிபடி ) ஜாதகரின் மன ஆற்றலும் அறிவு திறனும் ஒருங்கே இணைந்து செயல்படும், இதனால் ஜாதகரின் மனதில் எண்ணிய காரியங்கள் மற்றும் தொழில் முன்னேற்றங்களை வெற்றிகரமாக தனது அறிவு திறன் கொண்டு தொடர்ந்து பெற்ற வண்ணமே இருப்பார் என்பது மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் தொழில் வன்மையும், தெளிவான திட்டமிடுதல்களும் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளையும், கை நிறைவான வருமானங்களையும் வாரி வழங்கிய வண்ணமே இருக்கும், ஜாதகர் கை தேர்ந்த வியாபாரியாகவும், திறமை மிக்க தொழில் அதிபராகவும் பரிணமிக்க சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தான வலிமை நூறு சதவிகிதம் உதவி புரியும், ஜீவன ஸ்தானம் சர ராசியில் வலிமை பெற்று இருப்பது  குறுகியகாலத்தில் "கோடிஸ்வர " யோகத்தை நல்கும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சர நீர் தத்துவ ராசியில் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் செய் தொழிலில் தன்னிறைவான முன்னேற்றங்களை தொடர்ந்து பெறுபவர் என்பதுடன், அழிவு நிலை பொருட்களான உணவு பொருட்கள், தானியம், எண்ணை பொருட்கள், துணி மற்றும் நீர் தத்துவம் சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வளர்ச்சியை பெறுபவர் என்பதை உறுதி செய்கிறது.

மேற்கண்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமையுடன் இருப்பதும், ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகர் சுப யோகங்களை தடையின்றி பெறுவார் என்பதும் தெளிவாகிறது, அடுத்து தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு தரும் பலன்களை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், குரு திசை ஜாதகருக்கு 7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் 200% விகித இன்னல்களை நடத்தி கொண்டு இருப்பது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தும், அதனால் உண்டாகும் யோக வாழ்க்கை பெற இயலாத சூழ்நிலையை உருவாக்கும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றநிலையை தருவது வருத்தத்திற்கு உரிய ஒன்றாக் கருத வேண்டியுள்ளது, அடுத்து வரும் சனி திசை ஜாதகருக்கு 9ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது தொழில் ரீதியான யோக பலன்களை அனுபவிக்கும் யோக அமைப்பை தரும், குரு திசை ஜாதகருக்கு சிறப்பை தரவில்லை என்பதே உண்மை நிலை, நடப்பது குரு திசை தானே, நன்மையை செய்யும் என்று கருதி ஜாதகர் செயல்பட்டால், அனைத்தையும் பாதக ஸ்தான வழியில் இழந்து இன்னலுற நேரும் என்பதை கருத்தில் கொள்வது ஜாதகருக்கு நன்மையை தரும், ஏனெனில் நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கின்றது.

ஜாதகர் கூட்டு தொழில் செய்யலாமா ?

சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலேயே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு ஆகும், இது ஜாதகரின் வாழ்க்கையில் 7,11ம் பாவக வழியில் இருந்து அளவில்லா இன்னல்களை தரும், குறிப்பாக கூட்டாளி, நண்பர்கள், வெளிவட்டாரம்  சார்ந்த விஷயங்களில் இருந்து ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், கூட்டு தொழில் செய்ய சுய ஜாதகத்தில் 7ம் வீடு மிக மிக வலிமையுடன் இருப்பதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் வலிமை பெற்று இருப்பதும் அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய தோல்விகளையும், நஷ்டங்களையும் ஏற்ப்படுத்தும், எதிர்பால் இன சேர்க்கை மூலம் ஜாதகர் தனது ஜீவன முன்னேற்றத்திற்கு தானே தடைகளை ஏற்ப்படுத்திகொண்டு இன்னளுருவார் என்பது உறுதியாக தெரிவதால், தயவு செய்து கூட்டு தொழில் செய்வதை தவிர்ப்பதே சால சிறந்தது, பொருளாதர கஷ்டத்தில் இருந்து ஜாதகர் தப்பிக்க இயலும் என்பதே சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் 7ம் வீடு வலிமை அற்று இருப்பது ( பாதக ஸ்தான தொடர்பு ) ஜாதகர் கூட்டு தொழில் செய்ய அருகதை அற்றவர் என்பதை உறுதிபடுத்துகிறது, மேலும் நடைபெறும் குரு திசை சாதகம் இன்றி இருப்பது ஜாதகர் ஏதாவது ஓர் பணியில் ஈடுபடுவதே நன்மைகளை தரும், எதிர்வரும் சனி திசையில் சுய தொழில் சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறலாம், "வாழ்த்துகள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696