கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 மே, 2018

திருமணம் தாமதமாக காரணம் என்ன ? யோகமான வாழ்க்கை துணை அமையுமா ? அமையாத ?


 " பருவத்தில் பயிர் " செய்யவில்லை எனில், இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், பொதுவாக தொழில், பொருளாதரம் , சமூக அந்தஸ்து, சுய முன்னேற்றம், வசதி வாய்ப்புகள் போன்றவற்றை முன்னிறுத்தி பருவ வயதில் இல்லறவாழ்க்கையில் இணையாமல் தாமாதப்படுத்துவதும், தள்ளிபோடுவதும் ஆண் பெண் இருபாலருக்கும் பருவ வயது கடந்த பிறகு கடும் நெருக்கடிகளை வாரி வழங்க ஆரம்பித்து விடும், சரியான வரனோ அல்லது வதுவோ அமைவது என்பது குதிரைக்கொம்பாக மாறிவிடும், காலம் கடந்து செய்யும் திருமண வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கும் தம்பதியரே அதிகம் உண்டு, குறிப்பாக ஆணுக்கு 27, பெண்ணுக்கு 24 அகவைக்குள் இல்லற வாழ்க்கையில் இணைந்துவிடுவது நல்லது இதற்க்கு அதிகமாக தாமதம் ஆவது என்பது தவறான ஆலோசனையின் பெயரில் நமது வாழ்க்கைக்கு நாமே இன்னல்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு இணையானதாக அமைந்துவிடும்.

 பொதுவாக சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது ஆண் அல்லது பெண் இருவருக்கும் சரியான பருவ வயதில் இல்லற வாழ்க்கையில் இணையும் வாய்ப்பை நல்கிவிடும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்ட ஆண் அல்லது பெண்ணிற்கு மட்டுமே திருமண வாழ்க்கை என்பது வெகு கால தாமதத்தை ஏற்படுத்தும், குறிப்பாக மேற்கண்ட வீடுகள் பாதிக்கப்பட்டு நடைபெறும் திசாபுத்தியும் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரோ, ஜாதகியோ இல்லற வாழ்க்கையில் இணைய இயலாமல், பலவித தடைகளையும் தாமதங்களும் சந்தித்து, எவ்வித சுகபோகங்களையும் சுவீகரிக்க வலிமையின்றி தவிக்கும் சூழ்நிலையை தரும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை அற்ற ஜாதகரோ, ஜாதகியோ எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பதை மட்டும் உறுதி செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவது சம்பந்தப்பட்ட அன்பர்களுக்கு சகல  சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்க, திருமணம் தாமதமாக சுய ஜாதக ரீதியான உண்மையான காரணம் என்ன என்பதனை இன்றை பதிவில் இரு உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : மேஷம்
நட்சத்திரம் :  அஸ்வினி 2ம் பாதம்

ஜாதகருக்கு அகவை 43 நடைபெறுகிறது, திருமணத்திற்க்கான முயற்சிகள் யாவும் பெரும் தோல்வியையே சந்தித்தது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமை பெற்று இருப்பின்னும், ஜாதகருக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், இதற்கான காரணத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையற்று காணப்படுகிறது, மேலும் ஜாதகரின் ஆயுள் ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக அமைந்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது வருந்தத்தக்கது, எனவே ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் ஆயுள் பாவகம் 100% விகிதம் வலிமை அற்றும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்க்கு களத்திர ஸ்தானமான துலாம் வலிமை அற்றும் இருப்பது ஜாதகரின் திருமண வாழ்க்கை தடைகளுக்கும், தாமதத்திற்க்கும் அடிப்படை காரணமாக விளங்கிறது.

மேலும் ஜாதகருக்கு ( 01/02/2006 முதல் 01/02/2016 வரை ) நடைமுறைக்கு வந்த சந்திரன் திசை 10 வருடமும் 2ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் தீமையான பலன்களை 2ம் பாவக வழியில் இருந்து வாரிவழங்கியது ஜாதகரின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றியதுடன் கடும் நிதி பிரச்சனையை தந்தது, சந்திரன் திசை முழுவதுமான திருமண முயற்சிகள் ஜாதகருக்கு மிகப்பெரிய தோல்விகளை தந்தது என்பதே உண்மை, அதற்க்கு அடுத்து தற்போழுது நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ( 01/02/2016 முதல் 01/02/2023 வரை ) ஜாதகருக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை வழங்கிய போதும், 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 2,8ம் பாவக வழியிலான இன்னல்களை வழங்கி திருமண தடைகளையும், பொருளாதார சீரழிவுகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகரின் திருமண ஆசைகளுக்கு பெரும் தடைக்கற்களாக அமைந்துவிட்டது, எதிர்வரும் புதன் புத்தியில் ஜாதகரின் சீரிய முயற்சி இருப்பின், திருமண வாழ்க்கை கைகூடி வரலாம், இறை அருள் கருணை புரியட்டும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் ராசியும் கடுமையாக பாதிக்கப்பட்டும், சந்திரன் மற்றும் செவ்வாய் திசை வலிமையற்ற 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தியதுமே ஜாதகரின் திருமண தடைகளுக்கு அடிப்படை காரணம் என்பதை தெளிவுற கூற இயலும், ஜாதகர் யாதொரு எதிர்பார்ப்பும் இன்றி, சுய ஜாதகம் வலிமையுள்ள வாழ்க்கை துணையை தேர்வு செய்ய "ஜோதிடதீபம்" பரிந்துரை செய்கிறது. " வாழ்த்துக்கள் "


லக்கினம் : கன்னி
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 1ம் பாதம்

ஜாதகிக்கு அகவை 31 நடைபெற்று கொண்டு இருக்கின்றது, திருமணத்திற்க்கான முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்தித்துள்ளது, இதற்கான காரணம் ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களையும், 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித இன்னல்களையும், 12ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 80% விகித இன்னல்களை தந்துகொண்டு இருப்பது திருமண தடைகளுக்கான அடிப்படை காரணங்கள், மேலும் தற்போழுது நடைபெறும் சனி திசை 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் வழியிலான நன்மைகளை மட்டுமே வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது, மேலும் சனி திசையில் சந்திரன்,செவ்வாய்,ராகு புத்திகள் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்தியதும், தற்போழுது நடைபெறும் குரு புத்தி பாதிக்கப்பட்ட 4,8,12ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும் ஜாதகிக்கு திருமண வாழ்விற்க்கான யாதொரு அறிகுறியையும் காட்டவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

எதிர் வரும் புதன் திசையும் ஜாதகிக்கு 3,7,11ம் வீடுகள் பாதகஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை வாரி வழங்குவது ஜாதகிக்கு உகந்த நன்மைகளை தர சிறிதும் வாய்ப்பில்லை என்பதனால், சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் வரனின் ஜாதகத்தை தேர்வு செய்து இல்லற வாழ்க்கையில் நலம் பெறுவதே சாலச்சிறந்தது என்பதை கவனத்தில் கொள்க.

குறிப்பு :

சுய ஜாதகம் வலிமை அற்று இருப்பின் தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிக மிக வலிமையுடன் இருப்பதாக தேர்வு செய்து திருமண வாழ்க்கையை இனிமையாக அமைத்துகொள்வதே புத்திசாலித்தனம் என்பதை அறிவுறுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

வாழ்க்கை துணையை தேர்வு செய்யுமுன் ஜாதகத்தில் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் !


கேள்வி :

 எனது  விருப்படி வாழ்க்கை துணையாக தேர்வு செய்தது பொருத்தமானதா? எனது தேர்வு சரிதானா ? திருமண வாழ்க்கை, எதிர்காலம் சரியாக அமையுமா?
பிறந்த குறிப்பு - தேதி ( 01/01/1991 ) நேரம் ( 05:55 AM ) இடம் ( அந்தியூர்  )



பதில் :

தங்களின் விருப்ப தேர்வு மிக மிக தவறானதாக " ஜோதிடதீபம் " கருதுகிறது, தங்களுக்கு உகந்த கணவராக இவர் அமைவார் என்று உறுதியாக கூற இயலாது, ஏனெனில் இவரது ஜாதகம் மிகவும் வலிமை அற்றதாக காணப்படுகிறது, குறிப்பாக திருமண வாழ்க்கையை சிறப்பிக்கும் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது, மேலும் தங்களின் ஜாதகத்திலும் 2,5,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது இல்லற வாழ்க்கையில் கடுமையான பிரிவை தரக்கூடும் என்பதே நிதர்சனமான உண்மை, இவரது ஜாதக வலிமையை கீழ்கண்ட வாறு வகைப்படுத்தலாம் .

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

4,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

3,6,8,9,11,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும் அமைப்பாகும்.

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பு  :

1ம் வீடு லக்கின பாவகமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

அடிப்படையில் ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் பாவகம் கால புருஷ தத்துவ  அமைப்பிற்கு ( ஆயுள்  ) 8ம் வீடாக அமைவதும், ஸ்திர நீர் தத்துவ ராசியில் அமைவதும் தாங்கள் இவரை கணவராக ஏற்றுக்கொண்ட பிறகு தாங்கள் மனரீதியாக கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மேலும் சொல்ல இயலாத மனஅழுத்தத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையும், முரண்பட்ட வாழ்க்கையை வாழும் சூழ்நிலையை தந்துவிடும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது என்பதனை மனதில் கொண்டு விழிப்புணர்வுடன் தாங்கள் செயல்படுவதே தங்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து தரும் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள்.

சுக ஸ்தானமான 4ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் குணம்  சார்ந்த விஷயங்களில் இன்னல்களை தரும், தெளிவான மன இயல்பை ஜாதகருக்கு தாராது, குறுகிய மனப்பக்குவம் கொண்டவராக இருக்க கூடும், மேலும் வண்டிவாகனம், வீடு போன்றவைகள் சிறப்பாக அமையாததுடன், இழப்புகளையும் தரும், 3ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது வீரியமிக்க செயல்பாடுகளை தாராது, தன்னம்பிக்கை தைரியம் வெகுவாக குறையும், 6ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது கடுமையான  உடல் நல பாதிப்பு, எதிரி தொந்தரவு  மற்றும் கடன் தொல்லைகளை தரும், 8ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகர்  மணந்துகொள்ளும் பெண்ணிற்கு கடுமையான நெருக்கடிகளை தரும், இவர் வழியிலான பொருளாதார சிக்கல்களை கடுமையாக தரும், 9ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது அறிவு திறன் பாதிப்பு மற்றும் எதையும் பெறுவதற்கு ஜாதகர் கடுமையான போராட்டங்களை  சந்திக்கும் சூழ்நிலையை  தரும், உதவ யாரும் அற்ற தன்மையை தரும், 11ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது அதிர்ஷ்டமற்றவர் என்பதுடன், பிற்போக்கு தனமான செயல்பாடுகளில் ஆர்வத்தை தரும், தன்னம்பிக்கை என்பது ஜாதகருக்கு  வெகுவாக குறையும், மற்றவரை சார்ந்து வாழும் வாழ்க்கையை  தரும், 12ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியின்மையையும், வீண் கவலை, மனபயம், தெளிவில்லாத சிந்தனை மூலம் வாழ்க்கையை கடுமையான சிக்கல்களுக்கு ஆளாக்கிக்கொள்ளும் சூழ்நிலையை தரும், தாம்பத்திய வாழ்க்கை நீடிக்காத நிலையை தரக்கூடும், கடுமையான கருத்து வேறுபாடு அதிகமாக வரும்.

தற்போழுது நடைபெறும் சனி திசையும், எதிர்வரும் புதன் திசையும் ஜாதகருக்கு 8ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்று முழு  வீச்சில் பாதக ஸ்தான பலனை மட்டுமே நடைமுறைக்கு கொண்டு வருவது, ஜாதகரை மணந்துகொள்ளும் வாழ்க்கை துணைக்கு கடுமையான இன்னல்களை பாரபட்சம் இன்றி வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

தங்களின் சுய ஜாதகத்திலும் 2,5,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது திருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்வதே சாலச்சிறந்தது, திருமண வாழ்க்கைக்கு சிறிதும் பொருத்தம் அற்ற நபரை தேர்வு செய்து படுகுழியில் வீழ்ந்து கண்ணீர் வடிப்பதை தவிர்க்குமாறு தங்களுக்கு " ஜோதிடதீபம் " அறிவுறுத்துகிறது.

குறிப்பு :

வாழ்க்கை துணியை தாங்கள் விருப்பப்படி தேர்வு செய்தது மிக மிக தவறு, சிறிதும் தங்களுக்கு பொருத்தமில்லாதது, திருமண வாழ்க்கை சிறப்பிக்க வாய்ப்பு இல்லை, எதிர்காலம் சூன்யமாகிவிட அதிக வாய்ப்பு உள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 8 ஏப்ரல், 2017

அதிர்ஷ்டம் நிறைந்த மனைவி அமையும் யோகமும், திருமண பொருத்தமும் !


 திருமண வாழ்க்கையில் யோகத்தையும், தம்பதியா வாழ்க்கையில் மனமகிழ்வையும் வாரி வழங்குவதில் நட்ச்சத்திர பொருத்தத்தை விட சுய ஜாதக பாவக வலிமையே முதன்மை வகிக்கிறது என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகம் வலிமை உள்ள ஓர் வரனையோ அல்லது வதுவையோ திருமணம் செய்துகொள்ளும் அன்பர்களுக்கு தனது ஜாதகம் பாவக வலிமை குறைவாக இருந்தாலும், இல்லற வாழ்க்கை யோகம் நிறைந்ததாகவும், மகிழ்ச்சிக்கு எப்பொழுதும் குறைவு இல்லாத நிலையையும் தரும், எனவே தனது வாழ்க்கை துணையாக வரும் அன்பரின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொள்வது சம்பந்தப்பட்ட வரனுக்கோ வதுவுக்கோ மிகுந்த நன்மைகளையும் யோகங்களையும் தரும் என்றால் அது மிகையில்லை.

தனது ஜாதகம் வலிமை அற்று இருந்த போதிலும், தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை தனக்கு சாதகமாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் பெற்றி பெரும் யோகம் சிலருக்கே உண்டு, தனது ஜாதக வலிமை தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமை  இரண்டில் சிறப்பானது எது என்பதை தெளிவாக உணர்ந்து அதன் வழியில் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம் எனலாம், இதை ஓர் உதாரண ஜாதகம்  கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சகம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம்

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சிறப்பான குடும்ப வாழ்க்கை, கைநிறைவான வருமான வாய்ப்புகள், இனிமையான பேச்சு திறமை, பொருளாதாரத்தில் தன்னிறைவு என்ற வகையில் யோகத்தையும், சிறந்த அறிவு திறன், அதிபுத்திசாலித்தனம், தெய்வீக அனுக்கிரகம், கற்ற கல்வி  வழியிலான முன்னேற்றம், தனது குழந்தைகள் வழியில் சிறப்பு, சூழ்நிலைகளை சிறப்பாக கையாளும் வல்லமை, எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான திட்டமிடுதல்கள் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணை வழியிலான  பொருளாதார உதவி, முழுமையான ஆதரவு, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, நீடித்த அதிர்ஷ்டம் நல்ல குணம், வாழ்க்கை துணையின் மூலம் ஜாதகர் பொருளாதார ரீதியாக மிக பெரிய அந்தஸ்த்தை பெரும் யோகம், மிதம்மிஞ்சிய தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை மூலம் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் யோக வாழ்க்கையை பெரும் தன்மை, எதிர்பாலின அமைப்பினரால் மிகுந்த முன்னேற்றத்தை பெரும் அமைப்பு என்ற வகையில் நன்மைகளை தரும்.

தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 18/09/2016 முதல் 18/09/2036 வரை )

சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுக்கிரன் திசை 20 வருடமும் 2,5ம் பாவக வழியிலான நன்மைகளையும் யோகங்களையும் தரும், ஜாதகரின் 5ம் பாவகம் மீனத்தில் 7 பாகைகளும் மேஷத்தில் 21 பாகைகளும் வியாபித்து இருப்பது ஜாதகருக்கு வரும் யோகத்தின் தன்மையை மிக பெரிய அளவில் தரும், குறிப்பாக ஜாதகருக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், நிறைவான வருமானமும், பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும், நல்ல புத்திர பாக்கியம் கிட்டும், தனது புத்திசாலித்தனத்தால் தனது வாழ்க்கையை ஜாதகர் மிகுந்த யோகமுள்ளதாக மாற்றிக்கொள்ளும் வல்லமையை சுக்கிரன் வாரி வழங்கும், அதற்க்கு ஜாதகரின் வலிமை பெற்ற 2,5ம் பாவகங்கள் காரணமாக அமையும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட 1,3,7,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும், 4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட 4,6,10,12ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும் என்ற போதிலும், ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவது மேற்கண்ட பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களை தவிர்க்க உதவும், மேலும் ஜாதகர் தேர்வு செய்த வாழ்க்கை துணையின் ஜாதகம் ஜாதகருக்கு தரும் யோக பலன்களை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : சிம்மம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்

ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,5,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகியின் லாப ஸ்தானம் மிதுனத்தில் 1 பாகையும், கடகத்தில் 29 பாகையும் கொண்டு இருப்பது 100% விகித அதிர்ஷ்டங்களை 1,3,5,9ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், லக்கின வழியில் இருந்து அதிர்ஷ்டம், நீண்ட ஆயுள், நல்ல குணம், குபேர யோகம், நல்ல ஆரோக்கியம், தெளிவான சிந்தனை, சுய கட்டுப்பாடு, எதிர்பாராத நீடித்த அதிர்ஷ்டங்கள் என்ற வகையில் யோகத்தை தரும், 3ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியம், வியாபர விருத்தி, துவங்கும் காரியங்களில் வெற்றி வாய்ப்பு, அனைத்திலும் சுபம் என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து நிறைவான புத்திசாலித்தனம், கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, மதிப்பு மிக்க செய்லபாடுகள், தன்னம்பிக்கை, சிறப்பான புத்திர பாக்கிய யோகம், குழந்தைகள் வழியிலான யோகம் என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து நல்ல குணம், பொறுப்பு மிக்க வாழ்க்கை, பெரியோர் ஆசிர்வாதம், பெரிய மனிதர்கள் ஆதாரவு, ஆன்மீக ஈடுபாடு, ஆன்மீகத்தில் வெற்றி, தெய்வீக அனுபவம், தன்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வல்லமை, நல்ல பெருந்தன்மையான மனம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

4,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, நிறைய சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கை துணையின் உதவிகளுடன் புதிய சொத்துக்கள் மற்றும் வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம், நிலம் வண்டி வாகனம் சார்ந்த தொழில்கள் வழியிலான வருமானம் வாய்ப்பு என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், வாழ்க்கை துணைக்கு யோகம், திடீர் அதிர்ஷ்டம், புதையலுக்கு நிகரான சொத்து சுக  சேர்க்கையை தனது தொழில் வழியில் இருந்து பெரும் யோகம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

7,11ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகி யோகம் மிக்க வாழ்க்கை துணையை பெறுவார், தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி, கணவருக்கு யோகம், கணவர் வழியில் இருந்து பரஸ்பர யோக வாழ்க்கை, சமூக அந்தஸ்து, உயர் பதவி, மக்கள் செல்வாக்கு, வெளிநாடு மற்றும் வெளியூர் வழியிலான முன்னேற்றங்கள் என்ற வகையிலும், திடீர் அதிர்ஷ்டம், தெய்வீக அனுகூலம், தன்னம்பிக்கை, வியாபார விருத்தி, செல்வாக்கு, அரசு பதவி மற்றும் ஆதாயம் என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

மேலும் தற்போழுது நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் : ( 10/04/2006 முதல் 10/04/2022 )

ஜாதகிக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள குரு திசை 4,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,8ம் பாவக வழியிலான நன்மைகளையும் யோகங்களையும் தந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், குறிப்பாக ஜாதகி 4ம் பாவக வழியில் இருந்து சுகபோக வாழ்க்கையையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் மற்றும் எதிர்பாராத முன்னேற்றத்தையும் தரும், மேலும் தனது கணவன் வழியிலான  கவுரவ வாழ்க்கையையும் திடீர் அந்தஸ்த்தையும் பெறுவார். எதிர்வரும் சனி திசையும் ஜாதகிக்கு 3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை  தருவது சனி திசை முழுவதுமான சிறப்புகளை தரும், எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,10ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 2,10ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களையும், 6,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 6,12ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும் தரும் இருப்பினும் தற்போழுது நடைபெறும் குரு திசை, எதிர்வரும் சனி திசை  இரண்டும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால் ஜாதகிக்கு பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்கள் எதுவும் நடைபெறாது என்பது வரவேற்கத்தக்க  அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகர்  தனது ஜாதகத்தில் 8பாவகங்கள் வலிமை அற்று இருந்த போதிலும், வாழ்க்கை துணையாக வரும் ஜாதகியின் சுய ஜாதகம் வலிமை  பெற்று இருப்பதாக தேர்வு செய்தது வரவேற்கத்தக்க அம்சம், அதற்க்கு காரணமாக ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் தசையும், வலிமை பெற்ற 5ம்  பாவகமுமே காரணமாக அமைந்திருப்பது ஜாதகருக்கு இறை அருள் தந்த  வரம் என்றே சொல்லலாம்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 5 மார்ச், 2017

1 நிமிடத்தில் திருமணம் பொருத்தம் பார்க்கலாம் !


கேள்வி :

1 நிமிடத்தில் திருமணம் பொருத்தம் பார்க்கலாம், என்ற புத்தகத்தை பார்த்து  பத்துக்கு ஒன்பது  பொருத்தம் உண்டு என்பதை உறுதி செய்தபின் ( பெண் நட்சத்திரம் திருவோணம் 2ம் பாதம், எனது நட்சத்திரம் பூராடம் 4ம் பாதம் ) , கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு  பெரியோர் முடிவு செய்து திருமணம் செய்துகொண்டோம், கடந்த மாதம் விவாகரத்து நடந்துவிட்டது, திருமண வாழ்க்கை மணமுறிவுக்கு அழைத்து சென்றது ஏன் ? சுய ஜாதக விபரம் அனுப்பி உள்ளேன்... விளக்கம் தர வேண்டுகின்றேன்.

பதில் :

  காக்க பிரியாணி சாப்பிட்டா காக்க குரல் வரமா ?  " உன்னிகிருஷ்ணன் " குரலா வரும்? என்ற திரைப்பட நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது அன்பரே தங்களின் கேள்வியை படிக்கும் பொழுது,  திருமண வாழ்க்கையை தசவித பொருத்தம் எனும் நட்ச்சத்திர பொருத்தம் 10 பொருத்தங்கள் மட்டுமே நிர்ணயம் செய்கிறது என்ற தங்களின் அறியாமையை எண்ணி சற்று வருத்தமாக உள்ளது, தம்பதியரின் திருமண வாழ்க்கையை வெற்றியடைய சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை, நடைபெறும் திசை, எதிர்வரும் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மை, சம்பந்தப்பட்ட பாவகங்களுக்கு கோட்சர கிரகங்கள் தரும் தாக்கம் போன்றவை மிக முக்கியமானதா அமையும் என்பதை கருத்தில் கொள்ளாமல், நட்ச்சத்திர பொருத்தம் மட்டுமே இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் என்று கருதுவது முற்றிலும் ஜோதிட உண்மைக்கு புறம்பானதாகவே கருத வேண்டி உள்ளது, தங்களது இருவரின் சுய ஜாதக வலிமையை பற்றியும், தங்களது  திருமண வாழ்க்கை பிரிவை தந்தது ஏன்?  என்பது பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு தெளிவு பெறுவோம் அன்பரே

ஜாதகர்



லக்கினம் : துலாம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 4ம் பாதம்


ஆண் ஜாதகத்தில், திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் ( 2,5,7,8,12 )

தங்களது ஜாதகத்தில் 2.8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

5ம் வீடு  சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று உடல்  ரீதியான இன்னல்களை தருகின்றது.

7ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது, தங்களுக்கு வரும் வாழ்க்கை துணை மிகவும் உயர்ந்த குணம் உடையவர், தங்களுக்கு நன்மைகளை தருபவர் என்பதை உறுதி செய்கிறது.

தங்களது ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் பாவகங்களான ( 2,5,7,8,12 ) வீடுகளில் 7ம் வீடு மட்டும் வலிமை பெற்று இருக்கின்றது, மற்ற பாவகங்கள்  மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அடிப்படையிலேயே தங்களது சுய ஜாதகம் பாதிக்கப்பட்டு உள்ளது சற்று கவலை தரும் விஷயமாகும், சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் எனும் 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக மோசமான விளைவுகளை தரும் அமைப்பாகும்.

தங்களுக்கு ஆறுதலான விஷயம் யாதெனில் தற்போழுது நடைபெறும் ராகு திசை வலிமை பெற்ற களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மட்டும் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், களத்திர ஸ்தானம் வலிமை பெற்றது தங்களுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து  தந்து இருக்கின்றது.

ஜாதகி


லக்கினம் : ரிஷபம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 2ம் பாதம்

பெண் ஜாதகத்தில், திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் ( 2,5,7,8,12 )

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, இது தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்து இனிமையான பேச்சு, சிறப்பான குடும்ப வாழ்க்கை, நல்ல வருமானத்தை தரும், வாழ்க்கை துணையின் மூலம் நல்ல பொருளாதார உதவி, செல்வ செழிப்பை தரும்.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் வீடு திடீர் இழப்பை தரும்  ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது ( தங்களது ஜாதகத்திலும் புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, இது தங்களுக்கு குழந்தை பாக்கியத்தில் மிகுந்த தடைகளை தரும். )

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, தங்களுக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு, அன்பு மற்றும் அன்னியோனிய இல்லற வாழ்க்கையை வழங்கும்.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 12ம் வீடு  விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, தங்களது  ஜாதகத்திலும் 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, இது தங்களது அந்தரங்க வாழ்க்கையில்  மகிழ்ச்சி அற்ற தன்மையையும், திருப்தி இல்லாத இல்லற வாழ்க்கையையும் தரும்.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை 3,6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை நடத்திக்கொண்டு இருப்பது தங்களது வாழ்க்கை  துணைக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி  வழங்கும்.

தங்களுக்கு நடைபெறும் ராகு திசை சிறப்பான நன்மைகளையும், தங்களது  வாழ்க்கை துணைக்கு நடைபெறும் ராகு திசை கடுமையான பாதிப்புகளையும் தருகின்றது என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், ( இதில் ஏக திசை பொருத்தம் என்பதை கருத்தில் கொள்ள கூடாது ) மேலும் தங்களுக்கு தற்போழுது நடைபெறும் புதன் புத்தி களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தி நன்மையை செய்த போதிலும், தங்களது வாழ்க்கை துணைக்கு நடைபெறும் சந்திரன் புத்தி விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்துகிறது.

தங்களது சுய ஜாதகத்தில் 2,5,8,12ம் பாவகங்கள் வலிமை இல்லை, இருப்பினும் நடைபெறும் திசாபுத்தி நன்மையை தருகின்றது.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7,8ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கின்றது நடைபெறும் திசாபுத்தி கடுமையான இன்னல்களை தருகிறது.

தங்களின் திருமண வாழ்க்கை பிரிவுக்கு காரணமாக தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்தியே காரணமாக அமைந்தாலும், தங்களது நடவடிக்கைகளும், சுய ஜாதக வலிமை இன்மையும் அதற்க்கு  மூல காரணமாக அமைந்து விட்டது, தங்களது வாழ்க்கை துணைக்காக தங்கள் நிறைய விஷயங்களை விட்டுக்கொடுத்து சென்று இருக்க வேண்டும் என்பதே "ஜோதிடதீபத்தின்" கருத்து.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ( 2,5,7,8,12 ) பாவகங்கள் வலிமை குன்றி இருப்பின், தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ( 2,5,7,8,12 ) பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பதுடன், இருவருக்கும் நடைபெறும் திசை எதுவென்றாலும், வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அமைப்பில் இருக்குமாறும் தேர்வு செய்வது, திருமண வாழ்க்கை வெற்றிகரமாக நடத்த வழிவகுக்கும், என்பதை கருத்தில் கொள்வது நல்லது, இதற்க்கு முரணாக வாழ்க்கை துணையை தேர்வு செய்தால் இல்லற வாழ்க்கை வெகு விரைவில் கசந்து இன்னல்களை அதிக அளவில் தந்து, திருமண வாழ்க்கையில் பிரிவை தந்துவிடும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா ?


கேள்வி :

 8ல் செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா ? கீழ்கண்ட செவ்வாய் தோஷம் அற்ற ஜாதகரை திருமணம் செய்துகொண்டால் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் ?

பதில் : 

ஒருவரது சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் யாதொரு தோஷத்தையும் தருவதாக கருதவில்லை, ஏனெனில் சுய ஜாதகத்தை இயங்குவதே லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெரும் பொழுது ஜாதகர் யோக பலன்களையும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை அற்று இருக்கும் பொழுது ஜாதகர் அவயோக பலாபலன்களையம்  அனுபவிக்கும் நிலையை தருகின்றன, இதுவே எதார்த்தமான உண்மை நிலை, இதில் செவ்வாய் தோஷம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு விஷயமாகவே  " ஜோதிடதீபம் " கருதுகிறது, இதை பற்றி கிழ்கண்ட ஜாதகங்களை கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : தனுசு 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : கிருத்திகை 1ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்தில் உள்ளது போல் தேற்றம் இருந்தாலும், பாவக கணிதம் கொண்டு காணும் பொழுது உண்மையில் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்திலே அமர்ந்து இருக்கின்றார், எனவே அவர் 8ம் வீட்டில் உள்ளார் என்பதே தவறான கணிதமாகவும், 7ல் அமர்ந்த செவ்வாய் பகவானால் தங்களுக்கு இன்னல்கள் உண்டா என்பதை பார்க்கும் பொழுது, சுய ஜாதகத்தில் 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, எனவே களத்திர ஸ்தானம் மிகவும் வலிமை பெறுவது சிறப்பான யோக அமைப்பாகும், அங்கே அமரும் செவ்வாய் பகவானும் தங்களுக்கு யாதொரு தோஷத்தையும், வலிமை இழப்பையும் தரவில்லை என்பதே உண்மை நிலை.

செவ்வாய் தோஷம் என்பது அடிப்படை ஆதாரம் அற்ற ஓர் விஷயமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, செவ்வாய் தோஷம் என்று சொன்னதினால் நிறைய திருமணம் நின்று இருக்க கூடுமே அன்றி, செவ்வாய் 2,4,7,8,12ல் அமர்ந்து இருப்பதால் திருமணம் நின்று இருக்க வாய்ப்பு இல்லை, எனவே இனிவரும் காலங்களில் செவ்வாய் தோஷம் என்பதை கருத்தில் கொள்ளாமல், சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சிறப்பான இல்லற வாழ்க்கையை நல்கும், மேலும் தற்போழுது நடைபெறும் ராகு திசை தங்களுக்கு 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 11ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் தருவது சிறப்பான யோக வாழ்க்கையை சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், அடுத்து வரும் குரு திசையும் 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 11ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையே தருவதால், எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும்.

தங்களது ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும்  1,2,5,7,8,12ம் வீடுகளில் 1,7ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது யோகங்களையும்,  2,5,8,12ம் வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பது சற்று சிரமத்தை தரக்கூடும், எனவே தங்களது வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் அன்பரது சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமையாக இருப்பதை கருத்தில் கொண்டு, தங்களது இல்லற வாழ்க்கையை அமைத்து கொள்வது சிறப்பான யோக வாழ்க்கையை தரும், இதை கருத்தில் கொண்டு கீழ்கண்ட வரனின் ஜாதகத்தை ஆய்வு செய்து தெளிவு பெறுவோம்.


லக்கினம் : சிம்மம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம்.

 இந்த ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும்  1,2,5,7,8,12ம் வீடுகளில் 1,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 2,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், குறிப்பாக 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களின் இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் அம்சமாகும், எனவே தாங்கள் தேர்வு செய்த ஜாதகம் தங்களின் ஜாதகத்தை விட மிகவும் வலிமையாக இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும்.

தற்போழுது ஜாதகருக்கு நடக்கும் குரு திசை 2,6,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனையே ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும், அடுத்து வரும் சனி திசையும் 2,6,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனையே ஏற்று நடத்த இருப்பது சிறப்பான யோகத்தை தரும் அம்சமாகும், எனவே தங்களது தேர்வு மிசிறந்ததாக கருதுகிறோம், மேலும் இருவருக்கும் தற்போழுது, எதிர்வர இருக்கும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை நடத்துவது  இல்லற வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம்.

மேலும் தங்களின் ஜாதகப்படியும், தாங்கள் தேர்வு செய்த ஜாதகப்படியும் முறையான பிரீத்தி பரிகாரங்களை செய்து கொண்டடு, வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும்  பெறலாம், வாழ்த்துகள்.

குறிப்பு :

 சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின், ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் போன்ற எந்த ஒரு தோஷமும் யாதொரு இன்னல்களையும் தாராது, சுய ஜாதக வலிமை இழக்கும் பொழுது, சுய ஜாதகத்தில் எவ்வித கிரக சேர்க்கை, கிரகயோகம், பரிவர்த்தனை யோகம் இருந்தாலும் யாதொரு பயனும் இருக்காது என்பதில் தெளிவு பெறுங்கள், தங்களது ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும், அதனால் எந்த ஒரு தோஷமும் தங்களுக்கு இல்லை, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது தங்களின் வாழ்க்கையில் இனிமையான, பொருத்தமான இல்லற வாழ்க்கையை அமைத்து தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 26 ஜனவரி, 2017

திருமண வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியில்லை, எதிர்காலம் எப்படி இருக்கும்?


கேள்வி :
காதல் திருமண வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியில்லை, கணவருடன் நித்தம் சண்டை சஞ்சாரவு, எங்களது எதிர்காலம்  எப்படி இருக்கும், மணவாழ்க்கையில் பிரிவு நேருமோ ? ஆண் குழந்தை ஒன்று உள்ளது, 
எங்களது மூவரின் ஜாதகம் எப்படி உள்ளது?

பதில் : 

சுய ஜாதக பாவக வலிமை உணராமல், விருப்பத்தின் அடிப்படையில் காதல் திருமணம் செய்வது, இன்னல்களை தருவதில் வியப்பில்லை, பெரும்பாலும் சுய ஜாதகம் வலிமையாக இருக்கும் பொழுது காதல் வாழ்க்கை கசப்பதில்லை, சுய ஜாதகம் வலிமை அற்று காணப்படும் பொழுது தாம்பத்திய வாழ்க்கையில் மிகுந்த இன்னல்களை தருகின்றது, சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கப்படும் பொழுது, காதல் திருமண வாழ்க்கை கடந்து, இல்லற வாழ்க்கையில் பிரிவை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, மேற்கண்ட தம்பதியர் விருப்பமனம் முடித்தவர்கள், இவர்களது சுய ஜாதக வலிமையையும், இனிவரும் எதிர்கால வாழ்க்கையை பற்றியும், இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

ஜாதகி 

லக்கினம் : கடகம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம் 

ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

3ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்,
6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையாகும்.

ஜாதகிக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :
1,7,10,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும்.
2,4,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களையும்.
9,12ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் தரும்.

தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை தரும் பலன்கள் ( 11/11/2016 முதல் 11/11/2026 வரை ) 

ஜாதகிக்கு கடந்த சூரியன் திசை 9,12ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தந்துள்ளது, ஆனால் தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை 3ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது வரவேற்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகிக்கு சந்திரன் திசை சிறப்பான நன்மைகளை தரும், இனிவரும் சந்திரன் திசை 10 வருட காலமும் மிகுந்த யோகங்களை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.


ஜாதகர் 

லக்கினம் : கன்னி 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 3ம் பாதம் 

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்,
4,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்,
5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் ஆகும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்,
12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்.

தற்போழுது நடைபெறும் சுக்கிரனை திசை தரும் பலன்களை : ( 07/11/2012 முதல்  07/11/2032 வரை )
தற்போழுது நடைபெறும் சுக்கிரனை திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான நன்மைகளை, 100% சதவிகிதம் வாரி வழங்குகிறது.

தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் மிகவும் வலிமையான ஜாதகம் கணவரின் ஜாதகமே, இதில் மனைவியின் ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு உகந்தது அல்ல, மேலும் ஜாதகி தனது ஜாதக வலிமையை உணர்ந்து, தனக்கு வாய்த்த கணவர் யோகமானவர் என்பதை கருத்தில் கொண்டு, சிறப்பாக இல்லற வாழ்க்கையை எதிர்கொள்வதே நல்லது, ஏனெனில் கணவரினால் ஜாதகிக்கு யாதொரு பாதிப்பும் இல்லை, ஜாதகி மட்டும் தனது நாவை அடக்கி குடும்ப வாழ்க்கையை சிறப்பாக மேற்கொள்வதே ஜாதகிக்கு சிறந்தது, இல்லை எனில் ஜாதகியின் சுய ஜாதக வலிமை இன்மை, இல்லற வாழ்க்கையில் துன்பத்தை தந்து, பிரிவை நோக்கி நகர்த்தி செல்லும், இருவரது ஜாதகத்திலும் 2ம் வீடான குடும்ப  ஸ்தானம் வலிமை இழப்பது, தேவையற்ற வாக்குவாதத்தை வளர்க்கும் என்பதால், தனது காதலுக்கு மரியாதை செய்து இருவரும் நாவடக்கத்துடன் இல்லற வாழ்க்கையை இனிமையாக நடத்துவதே சாலச்சிறந்தது, மேலும் தற்போழுது இருவருக்கும் நடைபெறும் திசைகளான, சந்திரன் மற்றும் சுக்கிரன் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல யோகங்களையும் தரும்.

 மேலும் இருவரது சுயஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது, தனது ஆண் குழந்தை வழியில் இருந்து மிதமிஞ்சிய யோக பலன்களை வாரி வழங்கும், இதனால் குழந்தையின் பொருட்டாவது தங்களுக்கு இல்லற வாழ்க்கையில் பிரிவு வர வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு, வாழும் வாழ்க்கையை சிறப்பு மிக்கதாக மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு :

மேற்கண்ட தம்பதியரின் ஜாதகத்தில் மனைவியின் ஜாதகம் வலிமை இன்றி இருந்த போதிலும், கணவரின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது இல்லற வாழ்க்கையில் பிரிவை தாராது, மேலும் கணவர் எந்த சூழ்நிலையிலும் தனது வாழ்க்கை துணையை கைவிடமாட்டார் என்பது அவரது ஜாதக வலிமையில் இருந்து தெரிய வருகிறது, எனவே வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் ஒவ்வொருவரும், குறிப்பாக காதல் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் அனைவரும், தனது ஜாதக வலிமையை விட, தனக்கு வாழ்க்கை துணையாக வர இருக்கும் வரன் அல்லது வதுவின் சுய ஜாதகம் மிக மிக வலிமை மிக்கதாக தேர்வு செய்துவிட்டால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு யாதொரு குறையும் இருக்காது என்பதனை " ஜோதிடதீபம் " இங்கே அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறது.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 25 ஜனவரி, 2017

மனைவியின் ஜாதகம் வலிமை பெற்று இருப்பது கணவனுக்கு யோகத்தை தருமா ?



 வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் நன்மை சேர்க்கும் அமைப்பாகும், தனக்கு அமைந்த மனைவியின் ஜாதகம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோகங்களை தருவதில் தவறுவதில்லை, அதே சமயம் மனைவியின் ஜாதகம் வலிமை அற்று இருப்பின் அது சார்ந்த இன்னல்களையும் கணவனுக்கு தரும் என்பதை கவனத்தில் கொள்வது நலம், எனவே தனக்கு அமையும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதற்கு முன்பு, அவரது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை,புத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் தேர்வு செய்வதே சாலச்சிறந்தது, கீழ்கண்ட ஜாதகம் தனக்கு வாழ்க்கை துணையாக அமைந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா? என்ற கேள்விக்கு உண்டான பதிலை சம்பந்தப்பட்ட ஜாதக வழி ஆய்வு மூலம், சிந்தனைக்கு எடுத்த்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியிலான நன்மைகளை ஜாதகியின் வாழ்க்கையில் வாரி வழங்கும்.

3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியிலான நன்மைகளை ஜாதகியின் வாழ்க்கையில் 
ஸ்திரமாக, அதிர்ஷ்டத்துடன் வழங்கும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள்.

2,4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியிலான இன்னல்களை ஜாதகியின் வாழ்க்கையில் ஸ்திரமாக தரக்கூடும், குறிப்பாக திருமண வாழ்க்கையில் தடை தாமதங்களை தரும்.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை தரும் பலன்கள் :

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி  ஜாதகிக்கு 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது ஜாதகிக்கு உகந்தது அல்ல, மேலும் அடுத்து வரும் ராகு புத்தி வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாகும், எனவே ஜாதகிக்கு 28/05/2017 தேதிக்கு மேல் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும். 

எதிர்வரும் ராகு திசை தரும் பலன்கள் :

எதிர்வரும் ராகு திசை முழுவதும் ஜாதகிக்கு 3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, முழு வீச்சில் களத்திர ஸ்தான பலனை தருவது, ஜாதகிக்கும் ஜாதகியின் வாழ்க்கை துணைக்கும் அபரிவிதமான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும் 11ம் வீடாக அமைவது, தம்பதியருக்கு அறிவார்ந்த செய்கையினாலும், புத்திகூர்மையினாலும் ஸ்திரமான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், செவ்வாய் திசையில் தம்பதியர் சிறிது இன்னல்களை சந்தித்த போதிலும், ராகு திசை பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும்.

திருமண வாழ்க்கை :

ஜாதகிக்கு 2,12ம் வீடுகள் பாதிக்கப்படுவது இல்லற வாழ்க்கையில் தடை தாமதத்தை தந்த போதிலும், 1,5,7,9,11ம் பாவகங்கள் மிகவும் வலிமையாக இருப்பது சிறப்பான இல்லற வாழ்க்கையை தரும், ஜாதகி வருமானம், தனது வார்த்தைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும், களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது தனது கணவனுக்கு யோகத்தை தரும் அமைப்பாகும், எனவே ஜாதகியை மணந்து கொள்ளும் வரனுக்கு யோக வாழ்க்கையே கிட்டும், மேலும் தனது வாழ்க்கை துணையுடனான இணக்கம், ஜாதகிக்கு வாழ்க்கையில் இறுதிவரை வரும் என்பதால், ஜாதகியின் கணவனுக்கு நன்மையே, மேலும் எதிர்வரும் ராகு திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது யோகம் மிகுந்த இல்லற வாழ்க்கையை தரும். 

குறிப்பு :

ஜாதகிக்கு எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பதே ஓர் யோகம்தான், மேலும் சுய ஜாதகத்தில் 1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகிக்கு வரும் கணவனுக்கு 100% விகித யோக பலன்களை வாரி வழங்கும், என்பதால் இது ஒரு வலிமை பெற்ற யோக ஜாதகமே, இதனால் ஜாதகியின் கணவரும் சுபயோக பலாபலன்களை நிச்சயம் பெறுவார்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 5 டிசம்பர், 2016

சுய ஜாதகத்தின் படி மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமா ?


 "நிச்சயமாக" இதில் மாற்று கருத்து இல்லை எனலாம், ஒரு ஆண் மகனின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் வல்லமை அவருக்கு வரும் யோகம் நிறைந்த மனைவி மூலம் சாத்தியப்படும் என்பதிற்கு நிறைய உதாரணங்கள் உண்டு, தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர், வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தேர்வு செய்யும் பொழுது தனது ஜாதகம் வலிமையற்று இருப்பினும், தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமைக்கு ஏற்ற நன்மைகளையும், யோகங்களையும் நிச்சயம் பெற இயலும், மாறாக வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை அற்று இருப்பின் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்கள் சுய ஜாதகத்தில் இருப்பினும் அதன் பலாபலன்கள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக நடைமுறைக்கு வாராது என்பதே முற்றிலும் உண்மை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : மேஷம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம் 

ஜாதகிக்கு 1,3,5,9ம் வீடுகள் உயிர் உடல் என்று வர்ணிக்கப்படும் முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், அடுத்து 2ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ஆனால் 4,6,7,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், குறிப்பாக ஜாதக 8,12ம் பாவக வழியில் இருந்து 80% விகித இன்னல்களையும், 11ம் பாவக வழியில் இருந்து 200% சதவிகித இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

அடிப்படையில் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய சுய ஜாதகத்தில் குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு, பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடு, களத்திர ஸ்தானமான 7ம் வீடு, ஆயுள் ஸ்தானமான 8ம் வீடு, விரைய ஸ்தானமான 12ம் வீடு ஆகியவை மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியம், மேலும் லாபம் மற்றும் அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படும் 11ம் வீடு மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, குடும்ப ஸ்தானம் வலிமை பெறுவது குடும்பத்தில் ஒற்றுமையையும், நல்ல வருமான வாய்ப்பையும், பூர்வ புண்ணியம் வலிமை பெறுவது நல்ல வாரிசையும், சிறந்த அறிவு திறனையும், களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது கணவருடன் அன்பு நிறைந்த ஒற்றுமை, கருத்து வேறுபாடு அற்ற யோக வாழ்க்கை, இணை பிரியா நிலை, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளும் மன நிலை மற்றும் மனஒற்றுமை, தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றியையும், ஆயுள் ஸ்தானம் வலிமை பெறுவது தனக்கு நல்ல ஆயுளையும் பூர்ண சுமங்கலி யோகத்தையும், தன கணவனுக்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையையும், திருமணதிற்கு பிறகு வாழ்க்கையில்  பெரும் திடீர் முன்னேற்றத்தையும், விரைய ஸ்தானம் வலிமை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் குறையில்லாத நிலையையும், திருப்தியான வாழ்க்கை மற்றும் மனநிறைவையும், மனநிம்மதியையும், குழப்பம் அற்ற மனநிலை மற்றும் நிம்மதியான இல்லற வாழ்க்கையையும் சிறப்பாக வழங்கும்.

லாப ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகியின் அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையின் தன்மையை உறுதி படுத்தும், மேலும் ஜாதகி கொண்டுள்ள தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை, வரும் எதிர்ப்புகளை கையாளும் தன்மை, மற்றவர்களுடன் உண்டான நன்னடத்தை, அனுசரித்து செல்லும் குணம், குடும்பம் மற்றும் வாழ்க்கை துணையின் நிலையறிந்து செயல்படும் சமோயோசித புத்திசாலித்தனம், எந்த ஒரு சூழ்நிலையையும் சிறப்பாக கையாளும் வல்லமை, ஒரு திறமைமிக்க நிர்வாகியாக செயல்படும் யோகம் என்ற வகையில் யோக பலன்களை தரும்.

ஆனால் மேற்கண்ட ஜாதகியை திருமணம் செய்த அன்பரின் சுய ஜாதகம் சற்று வலிமையுடன் இருப்பதால் குடும்ப வாழ்க்கை பல பிரச்சனைகளுக்கு இடையில் ஓடிக்கொண்டு இருக்கின்றது, இருப்பினும் ஜாதகியின் கணவர் பல பொருளாதார சிக்கல்களை திருமணம் ஆன சில வருடங்களிலேயே அனுபவித்து கொண்டு இருப்பது கண்கூடான உண்மை, ஜாதகிக்கு சுக ஸ்தான பாதிப்பு நல்ல குணமற்ற தன்மையையும், சுக போகங்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையையும், சத்ரு ஸ்தான பாதிப்பு கடன், எதிரி, உடல்நல பாதிப்பையும், களத்திர ஸ்தான பாதிப்பு வாழ்க்கை துணையுடன் உண்டான புரிதல் மற்றும் இணக்கம் அற்ற தன்மையையும், தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்களையும், ஆயுள் ஸ்தான பாதிப்பு கணவனுக்கு பேரிழப்புகள், மருத்துவ செலவினம் மற்றும் பொருளாதார சிக்கல்களையும், ஜீவன ஸ்தான பாதிப்பு கௌரவம்,அந்தஸ்து, சுயமரியாதை அற்ற சூழ்நிலைகளையும், சிறப்பான தொழில் முன்னேற்றம் இன்மையையும், விறைய ஸ்தான பாதிப்பு தாம்பத்திய வாழ்க்கையில் நிம்மதி இன்மையையும், அதிக அளவிலான மன போராட்டம், மன உளைச்சல், மன நோய் மற்றும் மனபிரழ்ச்சியை வழங்கி கொண்டு இருக்கின்றது, இதற்க்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல் தற்பொழுது நடைபெறும் சூரியன் திசையும் ( 06/05/2012 முதல் 07/05/2018 வரை ) எதிர் வரும் சந்திரன் திசையும் ( 07/05/2018 முதல் 06/05/2018 வரை ) 4,6,7,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது, ஜாதகியின் இல்லற வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.

மேலும் ஜாதகியின் லாப ஸ்தான பாதிப்பு ( பாதக ஸ்தான தொடர்பை பெறுவதால் ) ஜாதகியின் வாழ்க்கையையே மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றும், முரண்பட்ட சிந்தனை, பிற்போக்குத்தனமான செய்கைகள், முட்டாள்தனம், தன்னுடன் உள்ளவர்களை அனுசரித்து செல்லும் பக்குவம் இன்மை, அனைத்திற்கும் கோவம் கொள்ளும் குணம், சிறு விஷயத்தையும் பெரிதாக்கும் தன்மை, குற்ற உணர்ச்சி, குற்றம் கண்டுபிடிக்கும் தன்மை என ஜாதகியே தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்ள அதிக வாய்ப்பு உண்டு, எனவே சுக்கிரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைபெறும் பாதக ஸ்தான பலனில் இருந்து விடுபட சரியான தீர்வுகளை தேடவில்லை எனில், இல்லறவாழ்க்கை ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கும், ஜாதகியின் கணவனையும் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்பதுமட்டும் உண்மை.

குறிப்பு :

திருமணம் செய்துகொள்ளும் முன் வரன் வது இருவரும், தனது ஜாதக வலிமையையும், தனது வாழ்க்கை துணையாக வர இருக்கும் ஜீவனின் ஜாதகத்தையும் கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவது சாலச்சிறந்தது, மாறாக 10 பொருத்தத்தை மட்டும் கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையை தேர்வு செய்யும் பொழுது சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின் யாதொரு இன்னல்களும் இல்லை, சுய ஜாதகம் வலிமை இழப்பின், தாம்பத்திய வாழ்க்கை சில நாட்களிலேயே மனக்கசப்பை ஏற்படுத்தி, மணவாழ்க்கையில் பிரிவைத்தந்துவிடும். ( மேற்கண்ட ஜாதகி தனது ஜாதக நிலையை உணர்ந்து தனது கணவனுக்கும் உறவுகளுக்கும் பணிந்து நடந்து சிறப்பாக இல்லற வாழ்க்கையை நடத்த வேண்டும், அதற்க்கு ஜாதகி முறையான பிரீதி பரிகாரங்களை நாடுவதே நலம் தரும் )

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 1 நவம்பர், 2016

பெண்கள் ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமையும் திருமண தடைகளும் !



சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது மிக மிக அவசியமாகிறது, இதில் ஆண் பெண் வேறுபாடுகள் எதுவும் இல்லை எனலாம், இருப்பினும் பெண்களின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கையயை நிர்ணயம் செய்யும், குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும்  7ம் பாவகமும் வலிமை இழப்பது சம்பந்தப்பட்ட ஜாதகிக்கு உகந்தது அல்ல, மறைவு ஸ்தான தொடர்பை பெறுவது திருமண வாழ்க்கையில் தடைகளையும் வெகு தாமாதத்தையும் வழங்கும், மேலும் தாமதமாக திருமணம் நடைபெற்றாலும், இல்லற வாழ்க்கையில் தொல்லைகளையும் துன்பங்களையும் தரும், மன வாழ்க்கையில் பிரிவு, தம்பதியர் ஒற்றுமை இன்மை, பொருளாதார சிக்கல்கள், உறவுகள் ஆதரவின்மை சிரமங்களை அதிக அளவில் தரக்கூடும், பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகியின் திருமண வாழ்க்கைக்கே தடைகல்லாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு, மேலும் எதிர்பால் அமைப்பினரிடம் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க ஜாதகி பெரிய அளவில் போராடும் சூழ்நிலையை தரும்.

மேற்கண்ட பாதிப்புகள் ஆணின் ஜாதகத்தில் இருப்பின் ஜாதகர் சமூகத்தின் விமர்சனத்தில் இருந்து தப்பிக்கும் வழி உண்டு, ஆனால் பெண்களின் ஜாதகத்தில் இருப்பின் சமூகத்தின் விமர்சனத்தில் இருந்து தப்புவது என்பது இயலாத காரியம், ஜாதக வலிமை இன்மை பெண்களின் மன பாதிப்புகளை வெகுவாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : ரேவதி 3ம் பாதம் 

ஜாதகிக்கு வயது 41 முடிவடைந்து விட்டது, இதுவரை திருமணத்திற்கு எடுத்த முயற்ச்சிகள் யாவும் தோல்வியை தழுவின, ஜாதகிக்கு வரும் வரன்கள் யாவும் ஏதாவது ஒரு வழியில் தட்டி சென்றது, திருமணத்திற்கு உண்டான முயற்ச்சிகள் யாவும் பெரிய பின்னடைவை சந்தித்தது, எவ்வித பரிகாரமும் பலன் தரவில்லை, இதற்கு காரணம் என்ன? என்பதை அவரது ஜாதக ரீதியாக ஆய்வு செய்வோம் அன்பர்களே.

1) ஒருவரது சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் குடும்பம்,களத்திரம் மற்றும் விறையம் என்று அழைக்கப்படும் 2,7,12 ம் வீடுகளாகும், மேற்கண்ட ஜாதகத்தில் 2,7,12 ம் வீடுகள் பெரும் தொடர்பை ஆய்வு செய்வோம் அன்பர்களே, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், அயன சயன ஸ்தானம் எனும் 12ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

2) ஜாதகிக்கு 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து 200 சதவிகித இன்னல்களை வாரி வழங்கும் அமைப்பாகும், 12ம் வீடு விறைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது மன நிம்மதி இழப்பையும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற நிலையையும் தரும் அமைப்பாகும்.

3) மேற்கண்ட பாதிப்புகள் ஜாதகிக்கு இருந்த போதிலும் திருமண வயதில் ( 18 முதல் 27 வயது வரை ) நடைமுறையில் இருந்த திசை வழங்கிய பலன்களை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஜாதகிக்கு ( 08/08/1989 முதல் 08/08/2009 வரை ) நடைபெற்றது சுக்கிரன் திசை, இந்த சுக்கிரன் திசை 2௦ வருடமும்  ஜாதகிக்கு 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி உள்ளது என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திய சுக்கிரன் திசை ஜாதகிக்கு திருமணத்திற்கு உண்டான வாய்ப்பை சிறிதும் வழங்கவில்லை, நடைபெற்றது சுக்கிரன் திசை என்றாலும் அவர் ஏற்று நடத்தியது பாதக ஸ்தான பலன் என்பதால் ஜாதகிக்கு, திருமண வாழ்க்கை அமையவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

4) சுக்கிரன் திசைக்கு பிறகு நடைபெற்ற சூரியன் திசை 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனே தொடர்பு பெற்று பலனை நடத்தியது, ஜாதகிக்கு கல்வியில் நல்ல யோகத்தை மட்டும் தந்தது இல்லற வாழ்க்கை சார்ந்த யாதொரு நன்மையையும் தர வில்லை, தற்பொழுது நடைபெறும் சந்திரன் திசை ஜாதகிக்கு விறைய ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதும் ஜாதகிக்கு உகந்தது அல்ல என்பதை தெளிவு படுத்த விரும்புகிறோம்.

எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டு, நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையையும் தெளிவாக தெரிந்துகொண்டு, இல்லற வாழ்க்கையினை அமைத்து கொள்வதே சால சிறந்தது, மேற்கண்ட ஜாதகி தனது சுய விருப்பங்களுக்கு முன் உரிமை தாராமல், தனக்கு வரும் கணவரின் சுய ஜாதகத்தில் 2,7,12ம் பாவகங்கள் வலிமை பெற்ற ஓர் வரனை சரியான வயதில் தேர்வு செய்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பதை, ஜாதகி உணர்ந்து செயல்பட்டு இருப்பின், திருமணம் தாமதம் ஆகியிருக்க வாய்ப்பில்லை, இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமைந்து இருக்கும், மாறாக ஜாதகி தனது சுய விருப்பங்களுக்கும், கற்பனை வாழ்க்கை துணைக்கும் முன்னுரிமை தந்ததால், பெண்களுக்கு சரியான வயதில் நிகழ வேண்டிய திருமண வாழ்க்கை இந்த பெண்ணிற்கு இதுவரை நிகழவில்லை என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

திருமண வாழ்க்கை பொறுத்தவரை வரனோ, வதுவோ தமது சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டே இல்லற வாழ்க்கையை தேர்வு செய்வது அவசியமாகிறது, இல்லை எனில் இல்லற வாழ்க்கையில் வரும் மன கசப்பையும், பிரிவையும் தவிர்க்க இயலாது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 19 மார்ச், 2016

திருமண தடை மற்றும் தாமத திருமணம் ஏற்ப்பட காரணம் என்ன ?

 

 ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதை அந்த ஜாதகரின் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானமே நிர்ணயம் செய்கிறது, சுய ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் என்று அழைக்கப்படும் 2ம் வீடும், களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும் 7ம் வீடும் வலிமை பெறுவது எந்த ஒரு ஜாதகருக்கும் சரியான கால நேரத்தில், திருமண வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வைத்துவிடும், மாறாக 2,7ம் வீடுகள் பாதிக்க படும் பொழுது, ஜாதகரின் திருமண முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவும், கால தாமத திருமணமும், திருமண தடைகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், 2,7ம் வீடுகள் பாதிப்பது திருமண வயதில் உள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் சிறப்பான வாழ்க்கையை அமைத்து தருவதில்லை, இவர்கள் எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் மிகப்பெரிய தோல்விகளையே சந்திக்கிறது என்பது கண்கூடான உண்மை, திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருக்கும் ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஸ்வினி 2ம் பாதம் 

ஜாதகருக்கு வயது 40 மேல் ஆகிவிட்டது, பெண் பார்க்கும் படலத்தை தொடர்ந்து  செய்துகொண்டு உள்ளார், இருப்பினும் ஜாதகருக்கு உகந்த வாழ்க்கை துணை கிடைக்க வில்லை, மேலும் திருமனத்திர்க்காக ஜாதகர் எடுக்கும் ஒவ்வொரு முயர்ச்சியும் ஜாதகருக்கு தொடர்ந்து தோல்வி மேல் தோல்விகளையே வாரி வழங்கி கொண்டு இருப்பது ஜாதகருக்கும் ஜாதகரின் குடும்பத்தாருக்கும் பெரிய மன கலக்கத்தையும், வெளியில் சொல்ல இயலாத துன்பத்தையும் தந்து கொண்டு இருக்கிறது, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாதகர் பெண் தேடினாலும் இன்னும் கிடைத்தபாடில்லை, திருமண தாமதத்திற்கு ஜாதக ரீதியான காரணங்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே!

ஜாதகருக்கு மீன லக்கினம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம், பொதுவாக சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் வலிமை பெற்றால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான வயதில் நல்ல முறையில் திருமணம் நடைபெற்று விடும், இந்த ஜாதகருக்கு அடிப்படையிலேயே 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும், 7ம் வீடு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும், 2,7ம் வீடுகள்  கடுமையாக பாதிக்க பட்டு இருப்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, களத்திர ஸ்தானமாக அமைந்து ஆயுள் பாவகம் 100% விகிதம் பாதிக்க படுவது ஜாதகரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிறது.

சுய ஜாதகத்தில் லக்கினம் விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் யாவும், ஜாதகர் மூலமாகவே விரையம் ஆவதை உறுதிபடுத்துகிறது, ஜாதகரின் கற்பனையும் எண்ணத்தின் விளைவும் தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளையும் வீண் விரையம் செய்வதை தெளிவாக காட்டுகிறது, லக்கினம் விரைய ஸ்தானமான  12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு எதிலும் திருப்தி இல்லாத மன நிலையை காட்டுகிறது, தமக்கு வரும் வாழ்க்கை துணை பற்றி ஜாதகரே ஒரு கற்பனையில் நீந்திக்கொண்டு, தமக்கு வரும் நல்ல, நல்ல பெண் ஜாதகங்களை தவிர்த்தது, திருமணம் நடைபெறாமல் ஜாதகரை 40 வயதுக்கு மேல் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது, திருமண வாழ்க்கை என்பது சரியான வயதில் நடைபெற்றால் மட்டுமே இல்லறம் சிறக்கும் என்ற விஷயம் ஜாதகருக்கு இதுவரை புரியாதது, ஜாதகரின் இலக்கினம் பாதிக்கும் தன்மையில் இருந்து "ஜோதிடதீபம்" தெளிவாக உணர்ந்து கொண்டது.

ஜாதகருக்கு 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது ஒருபக்கம் இருப்பினும், 02/02/2006 முதல் 02/02/2016 வரை நடைபெற்ற சந்திரன் திசை 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, சந்திரன் திசை முழுவதும் 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை அமையாமலும், வருமான ரீதியான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததிர்க்கு ஒப்பான பலன்களை தந்தது, சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதிப்பதே திருமண வாழ்க்கையில் தடைகளை தரும், நடைபெறும் திசாபுத்தியும் பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் படும் அவஸ்தையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு எவ்வித பலன்களை வழங்குகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே! தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 8ம் பாவக பலனையே செவ்வாய் திசையும் ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு வந்த சோதனை காலம் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை, எனவே செவ்வாய் திசையில் செவ்வாய் புத்தியில் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது, ஆனால் செவ்வாய் திசையில், ராகு புத்தியும், குரு புத்தியும் சற்று நிறைவான நன்மையை செய்வதால் 30/06/2016க்கு மேல் தமக்கு வரும் வதுவின் ஜாதகத்தை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமணம் செய்துகொள்வது சால சிறந்தது, இல்லை எனில் ஜாதகரின் கதி அதோ கதிதான்.

திருமண தடையும், திருமணம் தாமதம் ஆக காரணம் சம்பந்த பட்ட ஜாதகரின் 2,7ம் வீடுகளின் வலிமையின் தன்மையே என்றால் அது மிகையில்லை, மேற்கண்ட அமைப்பில் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதிக்க பட்டு இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகத்தின் திசா அல்லது புத்திகள்  நடைபெறும் பொழுது திருமணத்திற்கு உண்டான முழு முயற்ச்சியில் இறங்கி நல்ல இல்லற வாழ்க்கையை தேடிகொள்வது 100% விகித நன்மைகளை  நிச்சயம் தரும், எனவே திருமணம் ஆகாமல் தாமதம், மற்றும் தடைகளை சந்தித்து வரும் அன்பர்கள், தமக்கு உகந்த நேரத்தை தேர்வு செய்து இல்லற வாழ்க்கையில் இணைத்துகொள்வது வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ?



கேள்வி :

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ? ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் திருமண வாழ்க்கை கடுமையாக பாதிக்க படுமா? 

பதில் :

 பொதுவாக திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு, பாரம்பரிய முறை படி நட்சத்திர பொருத்தம் காணும் பொழுது 10 பொருத்தங்களில் குறைந்த பட்சம் 6 பொருத்தம் வேண்டும் என்பதும், அதில் குறிப்பாக கயிற்று பொருத்தம் எனும் ரஜ்ஜு பொருத்தம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்யலாம், இல்லை எனில் திருமணம் செய்வது, தம்பதியர் ஒற்றுமைக்கும், திருமண வாழ்க்கைக்கும் பங்கம் வரும் என்றும், அதிக  பட்சமாக தம்பதியர் இருவரில் ஒருவருக்கு உயிர் சேதம் கூட ஏற்ப்படலாம் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் குறிப்பிடுவது உண்டு, இதை பற்றிய உண்மை விளக்கம் என்ன? என்பதை இந்த பதிவில் காண்போம் அன்பர்களே!

திருமண வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைய, மணமகன் மற்றும் மணமகளின் சுய ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைவதை விட ( ரஜ்ஜு பொருத்தம் உட்பட ) ஜாதக பொருத்தம் எனும் 12 பாவக அமைப்புகள் மிக வலிமையுடன் அமைவதே சிறந்தது, காரணம் ஒருவரின் திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வது, நட்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் அல்ல, சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமுமே என்றால் அது மிகையில்ல, ஒருவரின் திருமண வாழ்க்கையில் நட்சத்திர பொருத்தத்தின் பங்கு என்பது வெறும் 5% சதவிகிதமே, மீதி 95% சதவிகிதம் ஜாதகத்தின் பாவக அமைப்பே திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும்.

கடந்த 25 வருட காலங்களுக்கு முன்பு, திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வதற்கு, பெயர் பொருத்தம் மற்றும் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையில் வரும், நட்சத்திரத்தை கொண்டு  நட்சத்திர பொருத்தம் பார்த்து  திருமணம் செய்தனர், இதற்க்கு காரணம் அந்த காலகட்டங்களில் அனைவருக்கும் ஜாதக இருந்ததா? என்றால் ? நிச்சயம் இல்லை என்பதே அதன் பதில், மேலும் பிறந்த நேரம் என்பது சரியாக குறித்து வைத்து ஜாதகம் எழுதினார்களா என்றால் அதுவுமே ஒரு கேள்வி குறியே! ஆக திருமணம் செய்ய அவர்களுக்கு இருந்த ஒரே வழி நட்சத்திர பொருத்தம், மற்றும் நாம நட்சத்திர பொருத்தம், இதன் வழியில் பாரம்பரியமாக நட்சத்திர பொருத்தம் கண்டு திருமணம் செய்து வந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது, இந்த நவீன உலகத்தில் பிறந்த நேரத்தை மருத்துவரகள் தெளிவாக குறித்து கொடுத்து விடுகின்றனர், மேலும் முறையாக ஜோதிடம் பயின்றவர்கள் இறை அருளின் கருணையினால், ஜோதிட கணிதம் கொண்டு பிறந்த நேரத்தை சரியாக கணிதம் செய்துவிட முடியும்.

இங்கே ஜோதிடதீபம் குறிப்பிட விரும்புவது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையுடன் அமரும்பொழுது, ரஜ்ஜு பொருத்தம் எனும் ஒரு விஷயம் எதுவும் செய்வதில்லை, இதற்க்கு உதாரணம் நிறைய உண்டு, திருமணம் செய்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் ஒன்றையே காரணம் காட்டி திருமணத்தை தடை செய்வது, உண்மையில் ஜோதிடம் கணிதம் பற்றி ஒன்றும் தெரியாத கத்து குட்டிகள் செய்யும் ஒரு வேலை என்பதே ஆகும், ஏனெனில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 அமைந்தும் சிலரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி விடுவதற்கு காரணம் சுய ஜாதகத்தில், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் பாதிக்கபட்டு இருப்பதே என்றால் அது மிகையில்லை.

அடிப்படையில் நட்சத்திர பொருத்தம் மட்டும் நன்றாக அமைந்த இருவரின் ஜாதகத்தில், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும், பாதக ஸ்தானத்துடனோ அல்லது 6,8,12ம் பாவகங்களுடனோ தொடர்பு பெற்று இருக்குமாயின், இருவரின் திருமண வாழ்க்கை என்பது நெடுநாள் நீடிக்காது, குறுகிய காலத்தில் மணமுறிவுக்கு அழைத்து சென்று விடும், தற்பொழுது விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றம் முன்பு நிற்கும் தம்பதியர் அனைவரின் ஜாதகத்திலும், இந்த நிலையை இருப்பதை, அவர்களின் சுய ஜாதகத்தை பார்க்கும் பொழுது நாம் தெள்ள தெளிவாக காணலாம்.

 மேலும் தாமத திருமணம் என்ற ஒரு விஷயம் தற்பொழுது அதிகரித்து வருவதற்கு காரணம் சுய ஜாதகத்தில் மேற்கண்ட இரண்டு பாவகங்கள் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் என்பதே முற்றிலும் உண்மை, ஆக திருமணம் சிறப்பாக அமைய மணமகன் மற்றும் மணமகள் இருவரின் ஜாதகத்திலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களை பின்வரும் வரிகளில் ஜோதிடதீபம் தங்களுக்கு விளக்கமாக தெரிவிக்கிறது, இதை பின்பற்றி திருமண வாழ்க்கையை அமைத்துகொள்ளும் பொழுது, தம்பதியர் இருவரும் இல்லற வாழ்கையை மகிழ்ச்சியுடன், வாழையடி வாழையாக 16 வகை செல்வமும் பெற்று, சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்பதில் பெருமை கொள்கிறது ஜோதிடதீபம்.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

1) அடிப்படையில் இருவரின் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் மிகவும் சிறப்பாக இருப்பது, தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அமைத்து தரும், குடும்பத்தில் இனிமை நிலவ இருவரின் சம்பாசனை எனும் பேச்சே அடிப்படையாக அமைகிறது, ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளும் தன்மையும், அதனை சரியாகவும் உண்மையாகவும் புரிந்துகொள்ளும் தன்மையை தரும், தேவையின்றிய வீண் பேச்சுகளை தவிர்த்து, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உண்டான விஷயங்களை மட்டுமே பேசி, குடும்பத்தை சிறப்பாக நடத்த இந்த பாவகம் வலிமையுடன் அமைவது நல்லது.

மேலும் குடும்பம் நடத்துவதற்கு அவசிய தேவையான தன்னிறைவான, வருமானத்தை தருவது குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமே! சிலரின் வாழ்க்கையில் திருமணதிற்கு பிறகு மிகப்பெரிய பொருளாதார ரீதியான வெற்றியை பெறுவதற்கு காரணமாக அமைவது இதுவே என்றால், அது மிகையில்லை, மேலும் தனது குடும்பத்திற்காக சேமிக்கும் அமைப்பை தருவதும் இந்த இரண்டாம் பாவகமே, இந்த பாவகம் நல்ல நிலையில் அமையவில்லை எனில், நட்சத்திர பொருத்தம் எனும் ஒருவிஷயம் இதில் எந்த  ஒரு மாற்றத்தையும் தந்து விடாது.

2) அடுத்து இருவரின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் சிறப்பாக இருப்பது, தம்பதியர் இருவரின் எண்ணம் மற்றும் உடல் மொழிகள் , செயல்பாடுகளை சிறப்பாக புரிந்து கொள்ள முடியும், இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருக்கும் அமைப்பை தரும், களத்திர பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் ஒற்றுமையையும், ஒருமித்த இல்லற வாழ்க்கையின் வெற்றியையும் உறுதிபடுத்தும். தம்பதியரின் உடல் அமைப்பையும், மன அமைப்பையும் ஒருங்கிணைப்பது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமே, மேலும் ஒருவரை ஒருவர் சிறப்பாக புரிந்து கொண்டு, ஒருவருக்காக ஒருவர் விட்டுகொடுத்து வாழும் இனிமை நிறைந்த வாழ்க்கையை தருவது இந்த களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெற்று அமைந்தால் மட்டுமே சாத்திய படும்.

தம்பதியர் இருவரின் உடல் அமைப்பில் நல்ல தேஷஸ் மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்தை தருவதும், இந்த அமைப்பே இருவரின் வாழ்க்கையிலும் உடல் ரீதியான எந்த ஒரு பிரச்சனையும் தராமல், சிறந்த உடல் நலம், அறிவு திறன், சிறந்த சிந்தனை ஆற்றல், சரியான முடிவெடுக்கும் அறிவாற்றல் என்ற அமைப்பில் நன்மையான பலன்களை வாரி வழங்குவது, இந்த களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமே, மேலும் சமுதாயத்தில் நல்ல மதிப்பு அந்தஸ்து கௌரவம் போன்ற விஷயங்களை அதிகரிக்க செய்வதும், கூட்டு முயற்ச்சி, பொதுமக்கள் ஆதரவு அரசியல், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிறந்த நன்மைகளை வாரி வழங்குவது களத்திர பாவகத்தின் தன்மையும், தனக்கு அமையும் வாழ்க்கை துணையின் களத்திர பாவகத்தின் வலிமையுமே, இந்த களத்திர பாவகம் நல்ல நிலையில் அமையாத பொழுது, ரஜ்ஜு பொருத்தம் சிறப்பாக அமைந்தாலும் எந்த ஒரு நன்மையையும் வழங்காது, ரஜ்ஜு பொறுத்ததினால் எந்த ஒரு பயனும் இல்லை.

3) மேலும் தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது, தனது சந்ததிக்கு ஒரு சிறந்த ஆண் வாரிசை பெற்று தரும், தனது  சந்ததிகள் வழியில் வந்த அறிவாற்றலையும், புத்திசாலிதனத்தையும் மேம்படுத்தி வாழ்க்கையில் சிறந்த வெற்றி வாய்ப்பினை பெற்று தரும்.

4) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெறுவது, இருவரின் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும், உடல் ரீதியான தொடர்புகளால் பெரும் மகிழ்ச்சி மற்றும் இணக்கமான அன்பையும் உறுதிபடுத்தும், மேலும் ஆண்கள் ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெறுவது தனக்கு வரும் வாழ்க்கை துணையை சிறப்பாக வைத்திருக்கும் தன்மையை தரும் மேலும் இறுதி வரை தம்பதியர் ஒற்றுமையாக வாழும் யோகத்தை தங்கு தடையின்றி தரும்.

5) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெறுவது, பூரண  ஆயுளையும், கணவன் வழியில் இருந்து மனைவி பெரும் அதிர்ஷ்டம் மற்றும் வருமான யோகத்தையும், மனைவி வழியில் இருந்து கணவன் பெரும் அதிர்ஷ்டம் மற்றும் வருமான யோகத்தையும் அறிந்துகொள்ள இயலும், இருவரின் ஜீவன வருமான வாய்ப்புகள் பற்றியும், பொருளாதார முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் பற்றியும் தெளிவாக தெறிந்து கொள்ள இயலும்.

6) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெறுவது, இருவரின் அந்தரங்க வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியையும், மன நிம்மதியான வாழ்க்கையையும், போராட்டம் இல்லாத திருப்தியான
அமைதியான வாழ்க்கையை அமைத்து தரும், இருவருக்கும் உறவுகளில் கிடைக்கும் அந்தஸ்து கௌரவம் மற்றும் சிறப்பு மரியாதை போன்ற விஷயங்களை 12ம் பாவக வழியில் இருந்து தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

மேற்கண்ட விஷயங்களே திருமண வாழ்க்கைக்கு அவசியமாக சுய ஜாதக ரீதியாக நாம் கவனிக்க வேண்டும்.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய ஜாதக ரீதியாக தவிர்க்க  வேண்டிய விஷயங்கள் :

1) சுய ஜாதக ரீதியாக நட்சத்திர பொருத்தத்திற்கு முக்கியத்துவம் தந்து, ஜாதக பொருத்தத்தை உதாசீனம் செய்வது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தர வாய்ப்பில்லை. ஏனெனில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நிறைய பேர் பிறந்திருக்க வாய்ப்புண்டு, பிறந்த நேரப்படி ஜாதக பாவக அமைப்புகள் ஒருவருக்கு இருப்பதை போன்று மற்றவருக்கு இருக்க வாய்ப்பு இல்லை.

2) செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், தார தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் என்று வகைக்கு 5 அல்லது 6 தோஷங்களை பிரித்து வைத்து கொண்டு மக்களை குழப்புவது, சம்பந்தபட்ட ஜோதிடருக்கே பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து விடும்.

3) குறிப்பாக விரும்பி திருமணம் செய்துகொள்ளும் அன்பர்கள் மேற்கண்ட விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் திருமணம் செய்துகொள்வது நல்லது, திருமணம் செய்துகொண்ட பிறகு தங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களது திருமண வாழ்க்கைக்கு தாங்கள் கொடுக்கும் மதிப்பு.

4) ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

5) ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது, மூலம் மாமனாருக்கு ஆகாது என்று  நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு வந்த வாய்வழி செய்திகளை நம்பி திருமண வாழ்க்கையை தள்ளி போடுவதும், தவிர்ப்பதும் சுத்தமான மூட நம்பிக்கையே அன்றி வேறு எதுவும் அல்ல.

உண்மையான ஜாதக பலனை, சுய ஜாதக ரீதியாக தெரிந்துகொண்டு வாழ்கையில் சகல நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது , வாழ்த்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696