ராகுகேது தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராகுகேது தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜூன், 2024

கூட்டுதிசை - திசாசந்தி ராகுதிசை இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறுவது திருமண வாழ்க்கையை பாதிக்குமா?

 

 கூட்டுதிசை அல்லது திசாசந்தி (மணமகன் மணமகள்) இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறுவது திருமண பொருத்தம் அற்ற நிலையையோ அல்லது இல்லற வாழ்க்கையில் பாதிப்பையோ தருமா ?

 கூட்டுதிசையோ அல்லது திசாசந்தியோ மணமகன் மணமகள் ஜாதகத்தில் இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறும் பொழுது இருவருக்கும் நடைபெரும் தசா அல்லது எதிர்வரும் தசைகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் திருமண வாழ்க்கை அல்லது இல்லற வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிப்பை தாராது, மாறாக வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மிகுந்த பாதிப்பை தரும், தசாசந்தி அல்லது ஏகதசை நடைபெறாத சூழ்நிலையிலும் வரன் வதுவுக்கு நடைபெறும் தசா புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது திருமண வாழ்க்கையில் இன்னல்களையும், இல்லற வாழ்க்கையில் கடுமையான பாதிப்பையும் தரக்கூடும் என்பது உண்மை நிலை, எனவே தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்திலும் நாம் கவனிக்க வேண்டியது சுய ஜாதக வலிமையோ அன்றி, ஏகதிசை, கூட்டுதிசை, திசாசந்தி, செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், களத்திரதோஷம், மாங்கல்யதோஷம் போன்ற சுய ஜாதக வலிமைக்கு புறம்பான விஷயங்கள் அல்ல என்பதை அன்பர்கள் உணருவது அவசியம், இதை ஓர் உதாரண ஜாதகங்கள் கொண்டு உண்மையையும் தெளிவையும் பெறுவோம் அன்பர்களே !

மணமகள் ஜாதகம் : 
 

லக்கினம் : ரிஷபம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 4ம் பாதம் 

 ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் மிக வலிமையாக இருப்பதுடன் தற்போழுது நடைபெறும் செவ்வாய் தசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான அமைப்பாகும், ஜாதகிக்கு செவ்வாய் தசை தான் கற்ற கல்வி வழியில் இருந்தும், குலதெய்வ ஆசிகள் வழியில் இருந்து  மிகப்பெரிய அளவிலான யோக வாழ்வை நல்கும் என்பது கவனிக்க தக்கது மேலும் எதிர்வரும் ராகு தசையும் வலிமை பெற்ற 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகிக்கு தொடர்ந்து சுபயோகங்களை 5,11ம் பாவக வழியில் வாரி வழங்கும், அதன் பின் வரும் குருமகா தசையும் 2,6,8ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக வழியில் சுபயோகங்களை வாரி வழங்குவது இல்லற வாழ்க்கையில் தன்னிறைவான யோக வாழ்வையே நல்கும் அமைப்பாகும், அடுத்து மணமகன் ஜாதக நிலையை கருத்தில் கொள்வோம்.

மணமகன் ஜாதகம் :


லக்கினம் : மகரம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : உத்ராடம் 1ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் மிக வலிமையாக இருப்பதுடன், ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் மிக மிக வலிமையாக இருப்பது கவனிக்க தக்க விஷயம், இது ஜாதகருக்கான சுபயோக வாழ்வை உறுதி படுத்தும் அம்சமாகும், தற்போழுது ஜாதகருக்கு நடைபெறும் ராகு தசை 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக வாழ்வை நல்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகர் வாழ்வில் சுயமாக வெற்றி பெறுபவராகவும், ஆரோக்க்கியம் கல்வி தொழில் போன்ற அமைப்புகளில் சுய ஆளுமைத்திறன் நிறைந்தவராகவும் காணப்படுவார், மேலும் எதிர்வரும் குரு மகா தசையும் 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்வை தொடர்ந்து நல்குவதுடன், அதன் பின் வரும் சனி மகாதசை 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளையும். 2,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனையும் ஏற்று நடத்துவது மிகுந்த சுபயோகங்களை இல்லற வாழ்க்கையில் நல்கும், எனவே மணமகள் மற்றும் மணமகன் இருவரது சுய ஜாதகமும் மிக மிக  வலிமையுடன் இருப்பதுடன், நடைபெறும் எதிர்வரும் தசை புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது வெற்றிகரமான இல்லற வாழ்வை வழங்கும் யோக அமைப்பாகும் என்பதை தெளிவாக பதிவு செய்கிறோம்.

இப்படி பட்ட யோக ஜாதக அமைப்பை தசாசந்தி கூட்டுதசை ஏகதசை நடப்பு என்று உண்மைக்கு புறம்பான விஷயங்களை பதிவு செய்வது சுயஜாதக வலிமை நிலையை கருத்தில் கொள்ளாமல்  கூறப்படும் தவறான கருத்துக்கள் என்பதை பொதுமக்கள் உணர்ந்து விழிப்புணர்வு பெறுவது அவசியமாகும்.

 சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படும் திருமணபொருத்தம் இல்லற வாழ்க்கையில்  சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பதே உண்மை நிலை அன்பர்களே "வாழ்த்துக்கள்"

ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வியாழன், 21 மார்ச், 2019

சுய ஜாதகத்தில் பாவக வலிமை வழியில் இருந்து ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை !


சுய ஜாதக பலன்கள்

ஒருவரது பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளை வைத்து முறையாக உயர் கணித சார ஜோதிட முறைப்படி கணிதம் செய்து, சுய ஜாதகத்தில் உள்ள லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை உணர்ந்து, நவகிரகங்களின் திசா புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் லக்கினம் முதல் 12 பாவகங்களின் எந்த தொடர்பை பெற்று பலன்களை வழங்குகிறது என்பதில் தெளிவு பெற்று சுய ஜாதக பலன் கூறும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக துல்லியமான பலாபலன்கள் கிடைக்க பெறுவதுடன், சிறப்பான நன்மைகளையும் எதிர்காலத்தில் யோகமிக்க வாழ்க்கையையும் தன்னிறைவாக பெறுவார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.
 

லக்கினம் : துலாம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 3ம் பாதம்

1,5,9,ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு லக்கின பாவக வழியில் இருந்து மதிப்பு மிக்க செயல்பாடுகள், அதிகாரம் மிக்க பொறுப்புகள், புகழ் மிக்க பதவிகள், வெகுமதி, கவுரவம், சமூகம் மற்றும் தொழில் துறையில் அபரிவித வளர்ச்சி அரசியலில் வெற்றி, வியாபாரத்தில் அதீத லாபங்கள் என்ற வகையிலும், நல்ல உடல் ஆரோக்கியம், மனதில் தெளிவு, மதி நுட்பம் கொண்டு அனைத்திலும் வெற்றி காணும் யோகம், என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும், சுய தொழில் வெற்றி, ஜீவன வழியில் முன்னேற்றம் என வாழ்க்கையில்  சகல சௌபாக்கியமும் உண்டாகும்.

5ம் பாவக வழியில் இருந்து கலைத்துறையில் வெற்றி, ஆராய்ச்சியில் வெற்றி , இயல் இசை நாடகம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம், குழந்தைகள் வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை, சமயோசித புத்திசாலி தானம் கொண்டு  வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு தீர்வு காணும் தன்மை என சகல சௌபாக்கியங்களையும் தரும், விளையாட்டில் ஆர்வம் குலதெய்வ அனுக்கிரகம், மேன்மை மிக்க பொறுப்புகள், புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான எதிர்காலத்தை தரும்.

9ம் பாவக வழியில் நுண்ணறிவு திறன், ஆராய்ச்சி கல்வியில் வெற்றி, அனைவரிடமும் நற்பெயர், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், உயர்ந்த பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், ஆன்மீகத்தில் வெற்றி,கடவுள் அனுக்கிரகம், செய்யும் காரியங்களில் பரிபூர்ண நன்மைகளை பெரும் யோகம், பித்ருக்களின் ஆசிர்வாதம், மிதம்மிஞ்சிய ஞானம் என்ற வகையில் சிறப்பை தரும்.

2,6,8,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெறுவது  ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து கல்வியில் தேர்ச்சி, நல்ல ஜீவனம் அமையும் தன்மை, கை நிறைவான வருமான வாய்ப்புகள், வியாபார ஞானம், நிர்வாக திறன், இனிமையான பேச்சு திறன், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, நல்ல நண்பர்கள், புகழ் பரிசு அனைத்திலும் வெற்றி என்ற வகையிலும், பொது மக்கள் ஆதரவு, வெளியூர் வெளிநாடு சென்று வரும் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் பெரும் அதீத வருமான வாய்ப்புகள் என சகல சௌபாக்கியமும் உண்டாகும்.

6ம் பாவக வழியில் இருந்து பதவியில் வெற்றி, உத்தியோக ஆர்வம், பதவியில் திடீர் உயர்வு, அதிகாரிகளிடம் இருந்து வரும் ஆதரவு, சொந்த முயற்சியில் முன்னேற்றம் பெரும் தன்மை, உடல் நலனில் அக்கறை, கடன் சார்ந்த வகையில் முன்னேற்றம், எதிர்பார்ப்புகள் அணைத்த்தும் நிறைவேறும் தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி என்ற வகையில் நன்மையை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து விபத்து அறுவை சிகிக்சை மூலம் உடல் ஆரோக்கியம் பெரும் தன்மை, மருத்துவ செலவினங்கள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு மற்றும் அன்பு, மனமகிழ்ச்சி, திருமணம் மூலம் யோக வாழ்க்கை, சரியான முடிவுகளை சரியான நேரங்களில் மேற்கொண்டு சகல வழிகளில் இருந்தும் நலம் பெரும் தன்மை, எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் அபரிவித முன்னேற்றம் என்ற வகையில் சுக போகங்களை வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து முதலீடுகள் வழியில் இருந்து வரும் அதீத வருமானம், தெய்வீக அனுக்கிரகம், ஆன்மீகத்தில் ஈடுபாடு, பொருளாதார தன்னிறைவு, அதிகப்படியான பொருளாதார வரவுகள், தெய்வீக ஆற்றல் வழியில் இருந்து வரும் முன்னேற்றம், புதிய வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் நலம் பெரும் தன்மை, உறவுகள் வழியிலான ஆதரவு, அனைவரின் ஆதரவு மூலம் பெரும் பொருளாதர முன்னேற்றம், மனநிம்மதி, தெளிவான சிந்தனை, நல்ல அயன சயன சுக போக வாழ்க்கை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மனவலிமை என்ற வகையில் சுக போகங்களை வாரி வழங்கும்.

3,11ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து நிலையான முன்னேற்றம், சுலப பொருள் வரவு, வீரியமிக்க செயல்பாடு, சகல சௌபாக்கியம், முயற்சிக்கும் காரியங்களில் வெற்றி, இசை ஆர்வம், தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அரசியலில் உயர் பதவி, தீர்க்காயுள், பெரியோர் ஆதரவு மற்றும் ஆசிகள், புத்தி கூர்மை, நியாயமான முறையில் வியாபார வெற்றி,  விவசாயத்தில் அதீத ஆர்வம், தெய்வீக சிந்தனை, லட்சியங்களை அடைதல், தன்னம்பிக்கை, நூல் ஆசிரியர், பத்திரிக்கை நிருபர், தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி, துணிந்து செயலாற்றும் திறன், அதிர்ஷ்டத்தின் தன்மையை முழுவதும் சுவீகரிக்கும் தன்மை சுய ஜாதகத்தில் உள்ள  யோக பலன்களை முழுவதும் அனுபவிக்கும் வல்லமை என சிறப்பான யோக வாழ்க்கையை நல்கும்.

11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், தொழில் வழியிலான அதிர்ஷ்ட வாய்ப்புகளை சுவீகரிக்கும் வல்லமை, முற்போக்கு சிந்தனை மற்றும் செயல்பாடுகள், புதுமை விரும்பி, அனைத்தையும் யூகிக்கும் வல்லமை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போராடி வெற்றி பெரும் மனவலிமை, போதுமென்ற மனம், பல தொழில் செய்யும் யோகம், உறவுகள் பெற்றோர்  வழியில் இருந்து பெரும் அதிர்ஷ்டங்கள் என வெகு சிறப்பான நன்மைகளை ஜாதகி பரிபூர்ணமாக பெறுவார்.

4ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 4ம் பாவக வழியில் இருந்து தந்தையாருக்கு மிகுந்த பாதிப்பு, ஜாதகியின் குணாதிசயம் வெகு சிறப்பாக அமையும், நல்ல தொழில் முன்னேற்றம், நல்ல குணம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, மண் மனை வண்டி வாகன யோக வழியில் பாதிப்பு, வீடு நிலம் இடம் போன்றவற்றில் இருந்து வரும் இழப்புகள், வாகனத்தில் வரும் வீண் செலவினங்கள், வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாத சூழ்நிலை, கருத்து வேறுபாடுகள், பிடிவாத குணம் அல்லது மனப்போராட்டம் வழியில் இருந்து வரும் இழப்புகள், திருமணத்திற்கு பிறகான யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மையை தரும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம், நல்ல அந்தஸ்துள்ள வாழ்க்கை துணை , அரசியலில் வெற்றி, வியாபாரத்தில் வெகு சிறப்பு, சமூக அந்தஸ்த்து, வாழ்க்கை துணையின் ஆதரவு பரிபூர்ணமாக கிடைக்கும் தன்மை, வெளிநாடுகள் சென்று வரும் யோகம், பிறந்த இடத்தை விட்டு வெகு  தொலைவு சென்ற பிறகு கிடைக்கும் ஜீவன மேன்மை, கூட்டு தொழில் வழியில் பெரும் சிறப்புகள், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், கூட்டு முயற்சியின்  வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை என்ற வகையில் மிகுந்த சிறப்பை தரும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், அரசு துறையில் பணியாற்றும் வல்லமை, ஜீவன வழியில் இருந்து வரும் படிப்படியான முன்னேற்றம், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, எதிர்பார்த்த விஷயங்கள் ஜாதகிக்கு தேடி வரும் தன்மை, கம்பீரமான வாழ்க்கை முறை, தீர்க்கமான வாத திறமை, சுய தொழில் செய்வதால் வரும் அபரிவித முன்னேற்றம், தெளிவான தொழில் ஞானம், திட்டமிட்டு செயலாற்றும் தன்மை, அனைவரையும் அனுசரித்து செல்லும் யோகம், புதிய மாற்றங்களை  ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை தரும்.

குறிப்பு :

பெரும்பாலான பாவக தொடர்புகள் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகிக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது, சுய ஜாதகத்தில் ராகு பகவான் லக்கினத்தில் ( துலாம் ) அமர்ந்து இருப்பது ஜாதகிக்கு ஜென்ம லக்கினம் 100% விகித வலிமையை பெற்று சிறப்பான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் ஜாதகியின் அறிவுத்திறன் வெகுவாக பிரகாசிக்கும், வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றி கிட்டும், மேலும் கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் ( மேஷம் ) அமர்ந்து இருப்பது ஜாதகிக்கு நல்ல யோகமிக்க வாழ்க்கை துணையை அமைத்து தரும் என்பதுடன், பிரபல்ய யோகமும் வியாபாரத்தில் விருத்தி, அரசியலில் வெற்றி என்ற நிலையை வாரி வழங்கும், கணவருக்கு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும், களத்திர ஸ்தான வழியில் இருந்து ஜாதகி பரிபூர்ண நன்மைகளை சிறப்பாக பெறுவார், வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 12 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மகர லக்கினம் ( 2019-2020 )




 மகர லக்கின அன்பர்களுக்கு சத்ரு மற்றும் அயன சயன பாவக வழியில் இருந்து யோக அவயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : மகரம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும், சர மண் தத்துவ ராசியாகவும் விளங்கும் மகர ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்திலும், விரைய ஸ்தானமான  12ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் சத்ரு ஸ்தானத்தில் அமைவது மகர லக்கின அன்பர்களுக்கு தேர்வு, போட்டி பந்தயம், வழக்குகளில் வெற்றியை தரும், உடல் நலனில் நல்ல ஆரோக்கியத்தையும், ஜாதகர் மேற்கொள்ளும் சுய முயற்சியில் வெற்றியையும் தரும், இது புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் மகர லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், குறிப்பாக ஜாதகரின் அறிவு திறன் மேலோங்கும், சத்ரு வழியில் இருந்து நன்மை உண்டாகும், கடன் பெறுவதால் முன்னேற்றம் ஏற்படும், கேட்ட இடத்தில் இருந்து தன உதவிகள் கிடைக்க பெறுவீர்கள், சரியான  தகவல் தங்களுக்கு  கிடைக்க பெற்று ஆதாயம் அதிக அளவில் கிடைக்கும், வியாபர துறையில் உள்ள அன்பர்களுக்கும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும், திடீர் வருமானம் குறுகிய காலங்களில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் உள்ளோருக்கு இனிவரும் காலம் நல்ல எதிர்காலத்தை தரும் என்பதுடன் பதவி உயர்வு நல்ல வெற்றி வாய்ப்புகள் உண்டாகும், துணிந்து செய்யும் காரியங்களில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், மருத்துவம் சார்ந்த தொழில் வழியில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்ல மாற்றங்களை வாரி வழங்குவதுடன் கைநிறைவான வருமானமும் சிறப்பாக கிடைக்க பெறுவீர்கள், சத்ரு ஸ்தான வழியில் எதிர்ப்புகளை வென்று நலம் பெரும் நேரமிது.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் மகர லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், எதிர் பாரத செலவுகள், வீண் விரையம், பொருளாதார சிக்கல்கள், எதிரிகள் தொந்தரவு, கடன் தொந்தரவு, மறைமுக எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள், நோய் பாதிப்பு, திடீர் மருத்துவ செலவினம், தாங்க இயலாத உடல் தொந்தரவுகள், வயிறு சார்ந்த இன்னல்கள், நரம்பு பாதிப்பு, தவறான புரிதல்கள் மூலம் வாழ்க்கையில் அடையும் நஷ்டங்கள், முன்னேற்ற தடை, தெளிவில்லாத நடவடிக்கைகள், சிந்தனை திறன் பாதிப்பு, உறவுகள் வழியில் இணக்கமற்ற சூழ்நிலை, அதீத உடல் பாதிப்பு, அறுவை சிகிக்சை, போராட்ட வாழ்க்கை முறை, எதிர்பாராத பொருள்இழப்பு , ஜாமீன் தருவதால் வரும் பாதிப்பு என சற்று சிரமங்களை அதிக அளவிலேயே தரக்கூடும்.

விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் மகர லக்கின அன்பர்களின் வாழ்க்கையில் அதீத மனப்போராட்டத்தையும், மனஅழுத்தத்தையும் வாரி வழங்கும், பெரியவர்கள், ஆன்மீக பெரியோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து சரியான விஷ்யங்களை மட்டுமே கிரகித்து நலம் பெற வேண்டிய நேரமிது, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு வீண் அவப்பெயர் உருவாக அதிக வாய்ப்பு உண்டு என்பதால் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது நலம் தரும், தெய்வீகத்தில் அதிக ஈடுபாடு மற்றும் பித்ரு வழிபாடு இரண்டும் தங்களுக்கான இன்னல்களை வெகுவாக குறைக்கும், மனதில் ஏற்படும் வீண் கற்பனைகளும், பயமும் தங்களின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும், போதிய தெளிவில்லாமல் தாங்களே பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும், மனதில் உள்ள ஆசைகள் யாவும் நிறைவேறாமல் வெறும் கற்பனையாகவே மாறிவிட அதிக வாய்ப்பு உண்டு, எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வீண் அவமானங்களும் துன்பங்களும் உருவாக வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு நலம் பெறுங்கள்.

வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காண முயற்சி செய்வது அவசியமானதாக  படுகிறது, சரியான புரிதலுடன் மனம்விட்டு பேசுவதே தங்களுக்கு நல்லது, நேர்மையில் சிறந்து விளங்கும் மகர லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் நேர்மைக்கு பல சவால்களை தரும் என்ற போதும், ஸ்திரமாக நின்று வெற்றி பெறுங்கள், வீட்டில் உள்ள பெரியோர்களை மதித்து நடந்து, அவர்கள் ஆசியுடன் வரும் இன்னல்களில் இருந்து விடுபடுங்கள் அன்பர்களே, மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டு கடமையில் இருந்து தவறாமல் கவுரவத்தை காப்பாற்ற வேண்டிய நேரமிது, கல்வித்துறையில் உள்ள அன்பர்களுக்கு சற்று சோதனைகளை அதிக அளவிலேயே தரக்கூடும், வீண் அவப்பெயரை தவிர்க்க கூட்டாளிகள் நண்பர்கள் போன்றோரை சரியாக தேர்வு செய்யவும், மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பதே தங்களுக்கான கவுரவத்தை காப்பாற்றும் அன்பர்களே.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 14 ஜனவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கடக லக்கினம் ( 2019-2020 )


  நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : கடகம்

 கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடு மற்றும் சுக ஸ்தானமாக விளங்கும் கடக லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் வீட்டில் ராகு பகவானும், சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டில் கேது பகவானும் சஞ்சாரம் செய்கின்றனர்,  12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு புதன் சூரியனுடன் ( கேந்திர அதிபதி ) சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் சிறந்த நன்மைகளை வாரி வழங்குவார், நிம்மதியான வாழ்க்கை, முதலீடுகளில் இருந்து வரும் லாபம், வெளியூர் வெளிநாடு சார்ந்த அமைப்பில் இருந்து வரும் நன்மைகள், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், நல்ல அயன சயன சுகம், திருப்தியான மனநிலை, நினைக்கும் எண்ணங்கள் பலிதம் பெரும் யோகம், வியாபார விருத்தி, தரகு தொழில் வழியில் இருந்து வரும் மிகுந்த லாபம், மிதம் மிஞ்சிய அதிர்ஷ்டம், முதலீடு செய்து அதன் வழியில் பெரும் வருமானம், தெய்வீக அனுபவம், ஆன்மீகத்தில் பெரும் வெற்றி, நல்ல சிந்தனைகள், வாழ்க்கை துணையுடனான அன்பு மற்றும் ஆதரவு, தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், எண்ணத்தின் வலிமை மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் தன்மை, பொருளாதரத்தில் எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டம் மூலம் யோக வாழ்க்கை மற்றும் தன்னிறைவான பண வசதி வாய்ப்புகள் என மிகசிறந்த நன்மைகளை தரும், அறிவில் தெளிவும் சிந்தனை திறனில் மாற்றமும் தங்களது வாழ்க்கையில் புதிய உத்வேகத்தை தரும், எதிர்ப்புகள் அனைத்தையும் தங்களது முயற்சியால் மிக எளிதாக கடந்து சென்று வெற்றி வாகை சூடும் வாய்ப்பை நல்கும்.

 அதே சமயம் 12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு புதன் சூரியனுடன் ( கோண அதிபதி ) சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் மிகுந்த துன்பத்தை வாரி வழங்குவார், குறிப்பாக தீய பழக்க வழக்கங்களில் அதீத ஈடுபாடு, லாகிரி வஸ்துக்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் தொந்தரவுகள், மனம் சார்ந்த நோயில் சிக்குண்டு இன்னலுறும் தன்மை, குடி நோயாளியாக மாறும் சூழ்நிலை, மற்றவர்களை நம்பி மோசம் போகும் தன்மை, செய்த முதலீடுகள் பேரிழப்பை சந்திக்கும் சூழ்நிலை, திருப்தி அற்ற வாழ்க்கை முறை, எதிர்ப்புகளை அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலை, வாழ்க்கை துணையுடனான மனப்போராட்டம், எதையும் துணிந்து செய்யும் வல்லமை இன்றி தடுமாறும் தன்மை, மற்றவர்களால் தவறாக புரிந்துகொண்டு குழப்பத்தை ஏற்படுத்துதல், சந்தேகம் நிலைத்தன்மை இல்லாமல் போராடும் போக்கு, தவறான வார்த்தை பிரயோகம், எதிர்பாராமல் செய்யும் தவறுகளால் பாதிப்பை சந்தித்தல், முன் யோசனை இன்றி செய்யும் காரியங்களால் ஏற்படும் கடுமையான பாதிப்பு வம்பு வழக்குகள் வழியில் இருந்து வரும் துன்பங்கள், உறுதியான மனநிலை இல்லாமல் போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மை, சிந்தனை சக்தி குறையும் நிலை, உடல் நிலையில் கடுமையான பாதிப்பு, வீண் மனபயம், கட்டுக்கடங்காத கற்பனை மூலம் வாழ்க்கையை சிதைத்து கொள்ளும் நிலை, எதிர்ப்புகளை அதிக அளவில் எதிர்கொண்டு தோல்வியை சந்திக்கும் நிலை, வீரியமிக்க செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்பு என்ற வகையில் மிகுந்த துன்பத்தை  தரும்.

 6ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமத்தை தரக்கூடும், கடன் சார்ந்த விஷயங்கள் கடுமையான நெருக்கடிகளை தரும், நண்பர்கள் எதிரியாக மாறக்கூடும், தனம் சார்ந்த விஷயங்களில் பற்றாக்குறை ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, முன்னேற்ற தடைகளும், தோல்விகளும் சற்று அதிக அளவில் தங்களுக்கு பாதிப்பை தரும் என்பதுடன் எதிரிகளின் தொல்லை அதிகமாக வாய்ப்பு உண்டு, மனநிம்மதி வெகுவாக பாதிக்கும், பெரியமனிதர்களின் கோபத்திற்கும், மேல் அதிகாரிகளின் தண்டனைக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், உடல்  ரீதியானபாதிப்பு தங்களின் வாழ்க்கையில் மிகுந்த தாமதத்தை தரக்கூடும், எதிர்காலம் சார்ந்த திட்டமிடுதல்கள் தங்களுக்கு நெருக்கடியை தரும், பொழுதுபோக்கு விஷயங்கள் வீண் செலவினங்களை ஏற்படுத்தும், தெய்வீக அனுக்கிரகம் பெற கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், உயர் கல்வி அல்லது பட்டைய படிப்புகளில் தடை உண்டாகும், உடல் நலனில் அக்கறை செலுத்த வில்லை எனில் வாழ்க்கையில் கடுமையான பின் விளைவுகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள், குறிப்பாக வயிறு சார்ந்த தொந்தரவுகள் இருப்பின் உடனடி கவனம் எடுத்து நலம் பெறுவது அவசியமாகிறது.

முடிந்த அளவு கடன் வாங்காமல் ஜீவனத்தை மேற்கொள்வது கவுரவத்தை தரும், புது முயற்சிகளை தவிர்ப்பதும், வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்லும் வார்த்தைகளை மதித்து நடப்பதும் சகல சௌபாக்கியங்களையும் தரும், எதிர்பாராத உடல் தொந்தரவு ஏற்படும் என்பதால் உடல் நலனில் அக்கறை கொள்வது தங்களது செயல்திறனில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும், தொழில் வழியில் அதிக கடன் பெறாமல் சிறப்பாக நிர்வாகத்தை மேற்கொள்வது சகல நலன்களையும் தரும், உறவுகளுடன் பகைத்துக்கொண்டு இன்னல்களை தேடிக்கொள்ளவேண்டாம், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளோர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய நேரமிது, ஆன்மீக திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்று வருவதும், சூரிய வழிபாடு மேற்கொள்வதும் தங்களுக்கு கேது பகவானின் சஞ்சார நிலையில் இருந்து வரும் இன்னல்களுக்கு நிவர்த்தியாக அமையும், புதிய தொழில் செய்ய விருப்பம் உள்ளோர் சுய ஜாதக வலிமை உணர்ந்து நலம் பெறுவது அவசியமாகிறது, இல்லையெனில் கடன் சார்ந்த நெருக்கடிகளில் மாட்டிக்கொள்ள நேரும், மேலும் எதிர்ப்புகள் பல வழிகளில் இருந்து வருவதால் தங்களின் செயல்திறன் வெகுவாக குறையும், வீட்டில் உள்ளோர் எவரும் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை, சுய மரியாதையும், சுய கெரவம் பாதிக்கும் என்பதால் அனைவரிடமும் கவனமாக நடந்துகொள்வது அவசியமாகிறது. ராகு கேதுவின் சஞ்சாரம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை நிலை.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் கடக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து கடக லக்கின அன்பர்கள் யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

சுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் ( திருமணம்,தொழில்,குழந்தைபாக்கியம் )


சுய ஜாதக ஆலோசணை


லக்கினம் : சிம்மம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 3ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், எடுக்கும் முடிவுகள் ஸ்திர தன்மையுடன் உறுதியாக அமையும் அமைப்பு, உடல் நலம், மனநலம் சிறப்பாக அமையும் தன்மை, எதிர்பாராத நன்மைகள் அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக பெரும் தன்மை, நம்பிக்கை லட்சியம் போன்றவை மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை, எதையும் சிறப்பாக செய்து வெற்றிகொள்ளும் யோகம், சுய முன்னேற்றம் பெறுவதில் ஆர்வம், முற்போக்கு கருத்துக்களை ஆமோதித்தல், புதிய சிந்தனை மற்றும் புதிய வாய்ப்புகளை சுவீகரிக்கும் வல்லமை, சுய ஆளுமை திறனுடன் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலத்தை பெரும் யோகம்,  சுய முயற்சியில் சகல சௌபாக்கியங்களையும் ஜாதகி தேடி பெரும் யோகம் உண்டாகும்.

5ம் பாவக வழியில் இருந்து கலைத்துறையில் பிரகாசமான எதிர்காலத்தை தருவதுடன், கலைகளில் தேர்ச்சியை தரும், நாடகம், திரைத்துறையில் புகழ் உண்டாகும், குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கை ஜாதகிக்கு பரிபூர்ணமாக உண்டாகும், விளையாட்டில் ஆர்வம், வாழ்க்கையில் உயர்ந்த நிலை, புத்திசாலித்தனம் மிக்க செயல்பாடுகள், அதீத கலைஆர்வம், இசையில் ஈடுபாடு என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், சுய அறிவு திறன் ஜாதகிக்கு பன்மடங்கு தொழில் விருத்தியையும், சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகியின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், கற்ற கல்வி ஜாதகிக்கு பெருமை மிக்க யோக வாழ்க்கையை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து  ஜாதகி பெருந்தன்மை மிக்க குணம் கொண்டவராக திகழ்வதுடன், அதீத அறிவு திறன் உள்ளவராக விளங்குவர், தன்னை விட வயதில் அதிகமுள்ள பெரியோர் அறிவுரையின் படி நடப்பதன் மூலம் வாழ்க்கையில் வியக்கத்தக்க நன்மைகளை பெறுவார், எதையும் பகுத்தறியும் தன்மை பெற்றவராக இருப்பர், ஜாதகியின் முன்னோர் செய்த புண்ணியத்தின் பலாபலன் ஜாதகிக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகிக்கு வெகுவான சுபயோகங்களை வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சுகபோக யோக வாழ்க்கையை பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, நிறைந்த நல்லறிவு ஜாதகிக்கு அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு தெளிந்த மனப்பான்மையும், பயமற்ற மனோநிலையையும் தரும், அதிர்ஷ்டகரமான நிகழ்வுகள் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத யோக வாழ்க்கையை பெறுவார், நல்ல குணம் ஜாதகியின் வாழ்க்கையில் சிறந்த நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை பெற்று தரும், அதிர்ஷ்டம் உள்ளவர் என்பதால் ஜாதகியின் வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக திகழும், அரசு துறை அல்லது அரசியல்வாதிகள் மூலம்  அபரிவித லாபங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு, நீடித்த அதிர்ஷ்டம் உள்ளதால் வாழ்க்கையில் தான் நினைத்ததை அடையும் யோகம் உண்டு என்பதுடன் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

2,4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தாமத திருமணம் என்ற போதிலும், தனம் சார்ந்த முன்னேற்றங்கள் உண்டு, பொருளாதார தன்னிறைவு ஏற்படும், குடும்ப  வாழ்க்கையில் சிக்கல்கள் உண்டு என்ற போதிலும், தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக அமையும், போட்டி, பந்தயம், தேர்வுகளில் அபரிவித வெற்றி உண்டு, மற்றவர்களிடம் கவனமாக பேசுவது அவசியமாகிறது, மருந்துகள் மூலம் லாபம் வருமானம் உண்டு, பண்ணை தொழில் வழியில் சிறப்பான முன்னேற்றம் உண்டு, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் எதிர்பாராத  நன்மைகளும் வெகுவான முன்னேற்றங்களும் உண்டாகும்.

4 ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு மன அழுத்தம் மற்றும் போராட்டத்தை தரும், நுண்ணறிவு ஞாபக சக்தி குறைபாட்டை தரும், வண்டி வாகன பாதிப்பு, திடீர் இழப்பும் ஏற்படும், தனது பெயரில் உள்ள சொத்துக்கள் திடீர் இழப்பை சந்திக்கக்கூடும், குணநலம் சார்ந்த பாதிப்பு உண்டாகும், தகப்பனாருக்கு வெகுவான பாதிப்பை தரும், மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதால் இன்னல்கள் அதிகரிக்கும், உறவுகள் வழியிலான துன்பங்கள் வெகுவான பாதிப்பையும் அமைதியின்மையையும் தரும்.

12ம் பாவக வழியில் இருந்து அடிப்படையில் மனநிம்மதி குறையும், தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்கள் உண்டாகும், அறிவில் விழிப்புணர்வு வெகுவாக குறையும், மனஅழுத்தம், மனப்போராட்டம் அதிகரிக்கும், திருப்தி இல்லாத தன்மை ஜாதகியின் வாழ்க்கையில் அளவிற்கு அதிகமான போராட்டங்களை வாரி வழங்கும் என்பதால், எதையும் பலமுறை சிந்தனை செய்து செயல்படுவது சகல சௌபாக்கியங்களையும் பெற வழிவகை அமைத்து தரும், இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு தானே சரியான தீர்வுகளை எடுப்பது சிறந்ததாக அமையும்.

3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து வெற்றியும், அதிர்ஷ்டமும் கொண்டவர் என்பதை உறுதி செய்யும், தான் மேற்கொள்ளும் காரியங்கள், முயற்சிக்கும் செயல்களில் முழு அளவிலான வெற்றியை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர், செல்வச்செழிப்பு, எதிரிகளை வெல்லுதல், நல்ல சிந்தனை, சிறந்த மனநிலை, உண்மை சத்தியத்தை மதித்தல், சாகசம் செய்வதில் ஆர்வம், துணிந்து எதையும் செய்யும் வல்லமை, பயணங்களில் விருப்பம், வெளியூர் வெளிநாடுகள் சென்று வரும் வாய்ப்பு, தகவல் தொழில்நுட்பம், எழுத்து துறை, கலைத்துறையில் வெற்றியை தரும், சகோதர வழி ஆதரவு உண்டு அல்லது அது சார்ந்த முன்னேற்றங்கள் உண்டாகும்.

7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம் அல்லது விருப்ப திருமணம் அமையும் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது, சுய ஜாதகம் வலிமை பெற்ற ஜாதகரை வாழ்க்கை துணையாக ஜாதகி தேர்வு செய்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர ஸ்தான தொடர்பை பெறுவது, ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் மிகுந்த யோகத்தை தரும் தன்மையை காட்டுகிறது, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை பெறுவார், இல்லற வாழ்க்கையில் மனமொத்த தம்பதிகளாக திகழும் யோகமுண்டு, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், எனவே திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் முன் ஜாதகி சரியான முடிவுகளை மேற்கொண்டு  நலம் பெறுவது  அவசியமாகிறது, ஜாதகிக்கு அமையும் கணவர் நல்லவர் என்பது கவனிக்கத்தக்கது.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு, குறிப்பாக வயிறு சார்ந்த இன்னல்கள் உண்டாகும், முயற்சிக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், கடன் மற்றும் எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் பாதிப்புகள் ஜாதகிக்கு சற்று கடினமாகவே அமைய கூடும், தெளிவற்ற  முடிவுகளால் ஜாதகி பெருவாரியான பாதிப்புகளை அனுபவிக்க நேரும், யாரிடமும் பகைமை பாராட்டாமல் நட்ப்புறவை பேணுவது சகல சௌபாக்கியங்களையும் தரும், வியாதியை எதிர்க்கும் தன்மை குறைவு என்பதால் வருமுன் காப்பது அவசியமாகிறது, அதிக அளவிலான செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரித்துக்கொள்வது நன்மையை தரும், கணவருக்கு பொருளாதார வெற்றியை நல்கும்.

 10ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 10ம் பாவக வழியில் இருந்து ஏஜென்சி, காண்ட்ராக்ட் தொழில் விருத்தியை தரும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஜீவனம் மூலம் நல்ல வெற்றி உண்டாகும், இருப்பினும் தாய் வழியிலான இன்னல்கள் அதிகரிக்கும்,  சுய தொழில் முயற்சிகள் பேரிழப்பை தரக்கூடும், மற்றவர்களால் கவுரவ குறைவு உண்டாகும் என்பதால் அதிக கவனம் தேவை , மக்கள் ஆதரவும் ஜீவன மேன்மையும்  ஜாதகிக்கு தேடிவரும், வாழ்நாள் முழுவதுமான ஜீவன முன்னேற்றம் சிறப்பாக அமையும், கவுரவம் அந்தஸ்து சுயமரியாதை சார்ந்த விஷயங்களில் வெகு கவனமுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது, தெய்வீக அனுகிரகம் மூலம் ஜாதகிக்கு செல்வவளம் அதிகரிக்கும், தொழில் வழியிலான தனித்திறமை கொண்டவராக விளங்குவார் என்ற போதிலும் சுய தொழில் வழியில் மிகப்பெரிய இழப்புகளையே தரும், மிகுந்த பொறுப்புணர்வு கடமையுள்ளம் கொண்டவராக இருப்பார் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, மருத்துவ சிகிக்சை, அனைத்திலும் ஏமாற்றம், மனக்குழப்பம், சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை, தலைவலி, கண்பாதிப்பு உடல்நலம் சார்ந்த தொல்லைகள் என்ற வகையில் வெகுவான பாதிப்பை தரும், வலிமை பெற்ற ஜாதகரை வாழ்க்கை துணையாக தேர்வு செய்யவில்லை எனில் ஜாதகியின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், வாழ்க்கை துணை வழியிலான பேரிழப்புகளை தவிர்க்க இயலாது என்பதுடன் விவாகரத்து அல்லது வாழ்க்கை துணையை பிரிந்து வாழும் சூழ்நிலையை தரக்கூடும்.


நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 21/05/2005 முதல் 21/05/2025    வரை )

நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு 6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலாபலன்களை தருவது ஜாதகிக்கு உகந்தது அல்ல, இது ஜாதகிக்கு உடல் நல பாதிப்பு, எதிரி தொல்லை, தீய சக்தி பாதிப்பு போன்ற இன்னல்களை வாரி வழங்கும், அனைவரிடமும் பகைமை பாராட்டும் தன்மையை தருவதுடன், எதிரியின் சதியில் இன்னலுறும் தன்மையை தரக்கூடும், கடன் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, உடல் நலம் மன நலம் இரண்டிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது, சுக்கிரன் திசையில் தற்போழுது நடைபெறும் சனி புத்தி 2,4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலாபலன்களை வாரி வழங்குவது ஜாதகிக்கு கடும் நெருக்கடிகளை தரும், அனைவரிடமும் மிகவும் கவனமாக இருப்பதுடன் வார்த்தைகளில் அதீத கவனம் செலுத்துவதும், இனிமையான பேச்சும் ஜாதகிக்கு நன்மையை தரும், தனது வாழ்க்கை சார்ந்த முடிவுகளை மிக கவனமாக மேற்கொள்வதும், தனது பெயரில் உள்ள சொத்துக்களை பாதுகாப்பதும் அவசியமாகிறது, குணநலன் சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் தேவை, நிம்மதியற்ற மனமும், சரியான தீர்வுகளை காண இயலாத தன்மையும் சுக்கிரனை புத்தி தரும் என்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை, பாதுகாப்பான பயணம் ஜாதகிக்கு நன்மையை தரும், சுக்கிரன் திசையில் சனி புத்தி ஜாதகிக்கு சற்று பின்னடைவை தரக்கூடும் என்பதால், திட்டமிட்டு செயலாற்றி நலம் பெறுவது அவசியமாகிறது.

எதிர்வரும் குரு திசை தரும் பலன்கள் : ( 21/05/2025 முதல் 21/05/2031 வரை )

எதிர்வரும் சூரியன் திசை ஜாதகிக்கு 1ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலாபலன்களை வாரி  வழங்குவது வரவேற்கத்தக்கது, ஜாதகியின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும் என்பதுடன், திருமணம், தொழில், குழந்தைகள் பொருளாதாரம் என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது வரவேற்க்கத்தக்க சிறப்பு அம்சமாகும்,அதிர்ஷ்டத்தின் தாக்கம் ஜாதகிக்கு சூரியன் திசையிலேயே பரிபூர்ணமாக கிடைக்கும்.

பரிகாரம் :

1) திருவக்கரை வளர்பிறை சனி கிழமை  சென்று சனி பகவானுக்கு வக்கிரக நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.
2) குலதெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் செய்து நலம் பெறுக.
3) வருடம் ஒருமுறை பழனி சென்று வருவது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
4) சர்ப்ப சாந்தி பரிகாரம் கால ஹஸ்த்தி சென்று முறையாக செய்து பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கலாம்.
5) தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 25 ஜூலை, 2018

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களின் வலிமை, ராகுகேதுவினால் ஜாதகர் பெரும் நன்மை !

 

 சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் முற்பகுதியில் சிறு சிறு இன்னல்களை தந்த போதிலும் ( வளரும் சூழ்நிலை பாதிப்பு, பெற்றோரை விட்டு பிரிந்து வாழும் சூழ்நிலை, கல்வியில் தடை, தொழில் வழியில் தடை, வாழ்க்கை துணையை தேடுதலில் இன்னல்கள், உடல் மனம் பாதிக்கும் தன்மை என்ற வகையில் ) பிற்பகுதியில் அபரிவிதமான யோக வாழ்க்கையை வழங்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும், மேலும் நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது, சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த நன்மையான பலாபலன்களையே வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, பொதுவாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு புலனுக்கு அப்பாற்பட்ட அறிவுத்திறனை வாரி வழங்கிவிடுகிறது, ஜாதகர் சுய ஒழுக்கம் மட்டும் கட்டுப்பாட்டை பேணும் தன்மை கொண்டவராக இருப்பின், அவரது வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சிகம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம்

இந்த விருச்சிக லக்கின ஜாதகருக்கு 5ல் ராகுவும், 11ல் கேதுவும் அமர்ந்திருப்பது மேலோட்டமாக காணும் பொழுது 5ல் அமர்ந்த ராகு புத்திர தோஷத்தை தரும் என்று  கருதக்கூடும், பாவக வழியிலான ஆய்வில் ராகு அமர்ந்த 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த வலிமை பெற்ற அமைப்பாகும், மேலும் ஜாதகரின் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீனராசியில் 8பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 21 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் மனம் மிக வேகமாக சஞ்சரிக்கு வல்லமை கொண்டது என்பதுடன் ஜாதகரின் மனதில் எண்ணிய காரியங்களை மிக விரைவாக முடிக்கும் வல்லமையை தரும், தனது சுய அறிவு திறன் மற்றும் அதி புத்திசாலித்தனம் இரண்டு ஜாதகருக்கு சரியான நேரத்தில் நல்லொதொரு பலாபலன்களை வாரி வழங்கும், ஜாதகரின் குல தெய்வ ஆசி செயற்கரிய காரியங்களை மிக எளிதாக செய்துமுடிக்கும் வல்லமையை தரும், நல்லோர் சேர்க்கையும், ஆன்மீக பெரியோரின் ஆசியும் ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க எதிர்காலத்தை வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தருவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியை வாரி வழங்கும்.

ராகு பகவானின் அமர்வு என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அயன சயன ஸ்தானமாகவும், ஜென்ம ஸ்தானமாகவும் அமைவது, ஜாதகரின் நல்லறிவும் ஆராய்ச்சி மனப்பக்குவமும் சிறப்பு மிக்க எதிர்காலத்தை அமைத்து தரும் மிதமிஞ்சிய நல்ல வாய்ப்புகளையே உருவாக்கி தரும், புதிய கண்டுபிடிப்புகள் அல்லது புதிய முயற்சிகளில் நல்லதோர் எதிர்காலத்தை தரும், ஜாதகரின் மனமும் உடலும் மிக சிறப்பாக இயங்கும் என்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை அற்றவர்கள்  ஓர்  காரியத்தை செயல்வடிவமாக பார்க்க பகிர்தனா கஷ்டங்களை சந்திக்கும் பொழுது சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெற்ற அன்பர்கள் மிக எளிதாக ஓர் செயலை செய்து செயல்வடிவம் காண்பார்கள், தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும்  ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும், எதையும் சாதிக்கும் வலிமையை  ஜாதகருக்கு  பரிபூர்ணமாக  நல்கும் என்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராகு 5ல் அமர்ந்து வலிமை பெறுவதும், 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுபயோக வாழ்க்கையை தருவதில் யாதொரு தடைகளையும் வழங்காது என்பது கவனிக்கத்தக்கது, தனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஜாதகர் 5ம் பாவக வழியில் செலுத்த ஆரம்பிக்கும் பொழுது 5ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான்  வழங்கும் சுபயோக வாழ்க்கையை யாதொரு தடையும் இன்றி  சுவீகரிக்கலாம்.

சம வீடான 11ல் கேது அமர்வது ஜாதகருக்கான அதிர்ஷ்டத்தை பரிபூர்ணமாக பெரும் வாய்ப்புகளை  வாரி வழங்கும், ஜாதகருக்கான அதிர்ஷ்டம் என்பது ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் வழியில் இருந்தும், சத்ருக்கள் வழியில் இருந்தும் வரக்கூடும் என்பதுடன், உபய மண் தத்துவம் சார்ந்த அமைப்பில் இருந்தும் சர காற்று தத்துவ அமைப்பில் இருந்தும் வந்து சேரும், மேலும் எதிர்பாலினம் நண்பர்கள், கூட்டாளிகள் வெளியூர் அல்லது வெளிநாடு என்ற அமைப்பில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை நல்கும், கேது பகவானின் வலிமை ஜாதகருக்கு அபரிவித நன்மைகளை சிந்தனை ஆற்றல் வழியில் இருந்து  வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, குறிப்பாக வியாபாரம் சார்ந்த அமைப்பில் ஜாதகரின் முன்னேற்றம் தன்னிறைவாக அமையும் அல்லது வெளிநாடுகளிலான ஜீவனம் ஜாதகருக்கு மிதமிஞ்சிய அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு 11ல் கேது வலிமை பெற்று அமர்வதுடன், சுய ஜாதகத்தில் பாவக  வழியிலான தொடர்பு என்பது 11ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது நிறைவான சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கும், நல்ல குணமும் ஜாதகரின் செயல்பாடுகளும் சமூக அந்தஸ்த்தை குறுகிய காலத்தில் பெற்றுத்தரும், ஜாதகரின் தன்னம்பிக்கை லட்சியம், மனோதிடம் போன்றவை 11ம் பாவக வழியில் இருந்து சில எதிர்பாராத நன்மைகளை தருவதுடன் சிறந்தவற்றை தேர்ந்துஎடுக்கும் வல்லமையை  தரும், வண்டிவாகன யோகம், வீடு நிலம் சார்ந்த தொழில்கள் வழியில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும் மிதமிஞ்சிய லாபங்கள் வந்து சேர்வதுடன் தொழில் விருத்தியும் அபரிவிதமாக அமையும், ஜாதகரின் லாப ஸ்தானத்தில் பெரும்பகுதி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியிலேயே வியாபித்து நிற்பது ( 21 பாகைகள் ) ஜாதகர் வெளிநாடுகளில் மிதமிஞ்சிய  அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறுவார் என்பதை கட்டியம் கூறுகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்க்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின், ஜாதகருக்கு விவரிக்க இயலாத சில தனி திறமைகளை கொண்டவராக திகழ்வார், தன்னிடம் உள்ள தனித்திறனை கண்டுணர்ந்து அதில் ஆர்வம் காட்டுவது ஜாதகருக்கான வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், பிரபல்ய யோகமும், உலகப்புகழ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை இந்த கட்டுரையில் பதிவு செய்ய "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 3 ஜூலை, 2018

ராகுகேது தோஷம் புத்திர பாக்கியத்தை தடைசெய்கிறதா ? ஆண் வாரிசு கிடைக்குமா ?


 கேள்வி :

 திருமண வாழ்க்கையில் இணைந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது, இதுவரை குழந்தைக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியை தந்துவிட்டது, மருத்துவ சிகிச்சையும் பலன் தரவில்லை, எங்களுக்கு நல்ல ஆண் வாரிசு அமைய வாய்ப்பு உள்ளதா? சர்ப்ப தோஷம் எங்களுக்கு புத்திர பாக்கியத்தில் தடை செய்கிறதா? இதற்க்கு சரியான தீர்வுதான் என்ன ?


லக்கினம் : கன்னி
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 1ம் பாதம்

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் நல்ல வாரிசு மற்றும் குழந்தை பாக்கியத்தை தரும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதுடன், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் தற்போழுது நடைபெறும் சூரியன் திசையும் தங்களுக்கு 4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்ட அயன சயன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எதிர்பாராத இன்னல்களையும், துன்பங்களையும் 4,8,12ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், சூரியன் திசையில் கேது புத்தி தங்களுக்கு 3,8ம் வீடுகள் பாதகம் மற்றும் விரைய ஸ்தான தொடர்பை பெற்று கடுமையான இன்னல்களை தருவது தங்களுக்கு உகந்ததல்ல, எனவே தங்களது சுய ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் கடுமையாக பாதிக்கப்பட்டு, நடைபெறும் சூரியன் திசையும் தங்களுக்கு ஜாதகம் இன்றி இருப்பது புத்திர பாக்கியத்தில் தடை தாமதங்களை வழங்குகிறது.

சாயா கிரகங்களான ராகுகேது தங்களது ஜாதகத்திற்கு தான் அமர்ந்த உயிர் உடலாகிய லக்கின ( கேது ) பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வதும், களத்திர ஸ்தானமாகிய 7ம் பாவகத்தை ( ராகு ) 100% விகிதம் வலிமை இழக்க செய்வதும் முரண்பட்ட பலாபலன்களை வழங்கும், லக்கினத்தில் அமர்ந்த கேது தங்களுக்கு உடல் ஆரோக்கியம், மனநலம், தெளிந்த நல்லறிவு, யோக வாழ்க்கை, வளரும் சூழ்நிலையில் சிறப்பு, புகழ் வெற்றி அந்தஸ்து என்ற வகையில் நன்மைகளையும், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தங்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் பொதுமக்கள் என்ற வகையில் இருந்து அதீத துன்பங்களை வாரி வழங்கும், எனவே சர்ப்ப தோஷம் தங்களது வாழ்க்கையில் புத்திர பாக்கியத்திற்கு தடையா அமையவில்லை, சுய ஜாதகத்தில் 5ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்றது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி கடுமையாக பாதிக்கப்பட்டதும், தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் காரணமாக அமைகிறது.

சந்திரன்,சனி மற்றும் புதன் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்கள் மட்டுமே தங்களுக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறது, இதில் புதன் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அதே வேளையில் 3,5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது மிகுந்த பாதிப்பை தரும், தங்களது ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் பாதிக்கப்பட்ட பாவக பலனையே ஏற்று நடத்துவதால் தங்களுக்கு இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை, எனவே தங்களது ஜாதகத்துடன் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தையும் தெளிவாக அறிந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுமா ? என்பதை உறுதி செய்யலாம், தம்பதியர் இருவரின் ஜாதகம் கொண்டு பாவக வலிமையை பற்றி தெளிவாக அறிந்துகொண்ட பிறகே தங்களது வினாவுக்கான பதில் தர இயலும் சகோதரி.

சரியான தீர்வு :

தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, இதுவே தங்களது இல்லற வாழ்க்கையில் புத்திர பாக்கியத்தை வழங்கவில்லை என்பதனால், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் எப்படிப்பட்ட வலிமையை பெற்று இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு ஓர் சரியான தீர்வை தர இயலும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மேற்கண்ட விஷயங்கள் வலிமை பெற்று இருப்பின் தங்களுக்கு நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு, ஒருவேளை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பின், தாங்களும் தங்களது வாழ்க்கை துணையும் மருத்துவ ஆலோசணையை நாடி, நல்லதொரு குழந்தையை பெறுவதே சரியான தீர்வாக இருக்கும், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 30 ஜூன், 2018

வாழ்க்கை துணையை ( மனைவி ) தேர்வு செய்வதில் தவறு இழைத்தால், வாழ்க்கை என்னவாகும்?


வாழ்க்கை துணையை ( மனைவி ) தேர்வு செய்வதில் தவறு இழைத்தால், வாழ்க்கை என்னவாகும்?

நிச்சயம் பேரிழப்பும், தாங்க இயலாத துன்பமுமே மிஞ்சும், " மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்பது முற்றிலும் உண்மையானதே, ஓர் உடல் ஈருயிர் என்ற தத்துவத்தின் படி கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் சுபயோகங்களையும், அவயோகங்களையும் பெரும் நிலை இருவரது சுய ஜாதகத்திலும் உண்டாகும், தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமையுடன் இருப்பதும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசா புத்தியும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் நல்கும், மாறாக வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை அற்றும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசாபுத்தியும் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்களையும், பாதிப்பு கடுமையாக இருப்பின் மணவாழ்க்கையில் பிரிவும், நிம்மதியற்ற சூழ்நிலையையும் உருவாக்கிவிடும், இதை கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம்.

ஜாதகிக்கு பெரும்பாலா வீடுகள் சத்ரு,ஆயுள் மற்றும் விரைய ஸ்தானத்துடனும், 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகிக்கு சிறப்பான நன்மைகளை  தரும் அமைப்பல்ல, குறிப்பாக  2,4,6,10ம் வீடுகளை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஜாதகுக்கு மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், ஜாதகி தனது விருப்பப்படி இல்லற வாழ்க்கையை புதன் திசை கேது  புத்தியில் தேர்வு செய்கிறார், புதன் தனது திசையில் ஜாதகிக்கு 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை தருவது, ஜாதகி சிந்திக்கும் திறனற்று செய்யும் காரியங்கள் வழியிலான இன்னல்களை புதன் திசையில் எதிர்கொள்ள தயார் நிலையில் நின்றிருப்பதை உறுதி செய்கிறது, கேது புத்தி ஜாதகிக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று திடீர் இழப்புகளையும், வாழ்க்கை துணை வழியிலான திடீர் பொருள் இழப்புகளையும், வாழ்க்கை துணைக்கு எதிர்பாராமல் வரும் பொருளாதர நெருக்கடிகளையும் பாரபட்சம் இன்றி வழங்குவதுடன், 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கும் ஜாதகரின் கணவரின் பேரில் இருந்த பூர்வீக சொத்துக்களை அனைத்தையும் மொத்தமாக இழந்து, பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்குகிறது.

இவையெல்லாம் திருமணம் ஆனா 5 வருடங்களுக்குள் நடைமுறைக்கு வருகின்றது, தனது பூர்வீகத்தை விட்டு வெளியே வெகு தொலைவு சென்று ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலையை, ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 200% விகிதம் பாதிக்கப்பட்ட 5ம் பாவக வழியில் இருந்தும், ஜாதகியின் கணவருக்கு சுய ஜாதகத்தில் 100% விகிதம் பாதிக்கப்பட்ட 5ம் பாவக வழியில் இருந்தும் பலாபலனாக நடைமுறைக்கு வருகின்றது, மேலும் ஜாதகிக்கு நடைபெறும் புதன் திசை 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது, ஜாதகியின் அறிவற்ற செயல்பாடுகளினால் அனைத்தையும் இழந்து தவிக்கும் சூழ்நிலையை தருகின்றது, அடிப்படையிலேயே ஜாதகிக்கு நிறைவான அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் 5ம் பாவக பாதிப்பினால் வலுவிழந்து நிற்பதால், ஆற்றில் அடித்து செல்லும் ஆலிலை போல் வாழ்க்கையில் தன்வசமும், கணவர் வசமும் இருந்த சொத்துக்கள், இடம், நிலம் போன்றவற்றை இழந்து தவிக்கும் சூழ்நிலையை தந்தது. அடிப்படையில் ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் நடைபெற்ற திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏக காலத்தில் ஏற்று நடத்தியது ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் குறுகிய காலத்தில் இல்லற வாழ்க்கையில் மனக்கசப்பையும், கடும் துன்பத்தையும் வாரி வழங்க ஆரம்பித்தது, தம்பதியர் இருவரும் எதிர்பாராத விஷயமாகும்.

பொருளாதார  சீர்குலைவு ஏற்பட்டால் இல்லற  வாழ்க்கையில் மகிழ்ச்சி எது ? அதுவே இவர்களது வாழ்க்கையிலும் நடைமுறைக்கு வந்தது, புதன் திசையில் சந்திரன் புத்தியில் இருவரும் ஆளுக்கொரு இடமாக பிரிந்து சென்றனர், ஜாதகி 5மாத கர்ப்பிணி என்ற சூழ்நிலையிலும் பிரிவை தவிர்க்க இயலவில்லை, இது  குழந்தை பிறப்பிற்கு பிறகும் 5 வருடங்கள் நீடித்தது என்பது கவனிக்கத்தக்கது, பிறந்த குழந்தையின் ஜாதகமும், பெற்றோருக்கு சாதகமான நன்மைகளை  தரவில்லை, பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்யும்  பொழுது பிறக்கும் குழந்தையும் யோகமற்றதாக பிறக்க கூடும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகியே நல்ல உதாரணம், ஜாதகியின் குழந்தையின் ஜாதகத்திலும் பெற்றோரை குறிக்கும் 4,10ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

ஜாதகிக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள கேது திசை 12ம் வீடு பூர்வ புண்ணிய  ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 8ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12,8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தருவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையை வெகுவாக பாதித்து இருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது, இருப்பினும் எதிர்வரும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 4ம் பாவகம் விருச்சிக ராசியில் முழுவதும் வியாபித்து நிற்பது திடீர் அதிர்ஷ்டம் என்ற வகையில் சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்கும், எனவே ஜாதகி சுக்கிரன் திசை தரும் சுபயோக பலன்களை தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறுக, " வாழ்த்துகள் "

குறிப்பு :

எந்த காரணத்தை கொண்டும் சுய ஜாதகம் வலிமையற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வது என்பது, இல்லற வாழ்க்கையில் சிறப்பை தாராது, பெரும்பாலும் விருப்ப திருமணங்கள் சுய ஜாதக வலிமையற்று அமைவதாலே பிரிவு என்ற நிலைக்கு ஆர்ப்படுகின்றனர், மேலும் தனது சந்ததிகளுக்கும் பெரும் துன்பத்தை தருகின்றனர், நமது வாழ்க்கை எப்படி இருப்பினும், நமது சந்ததியின் வாழ்க்கை சிறப்பாக அமைவது அவசியமாகிறது இதை கருத்தில் கொண்டாவது, விருப்ப திருணம் செய்வோர் சரியான தீர்வுகளை தேடுவது நன்மையை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 28 ஜூன், 2018

ராகுகேது தோஷம் என்ன செய்யும் ? திருமணம் தாமதமாக ராகுகேது தோஷம் காரணமாக இருக்கின்றதா ?


 கேள்வி :

 ஐயா வணக்கம்.என் மகனின் ஜாதகம் அனுப்பி உள்ளேன். 6 வருடமாக பெண் பார்த்து வருகிறேன் எதுவும் அமையவில்லை. 2ல் கேதுவும், 8ல் ராகுவும் இருப்பதல் திருமணம் நடக்க வாய்ப்பு குறைவு என்று கூறுகிறார்கள். அவர்கள் சொன்ன எல்லா பரிகாரங்களும் செய்து விட்டேன். தங்கள் என்ன காரணம் என்று பார்த்து கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில் :

2ல் கேதுவும், 8ல் ராகுவும் இருப்பதல் திருமணம் நடக்க வாய்ப்பு குறைவு என்பது தவறான கருத்தாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஏனெனில் தங்களது மகனின் ஜாதகத்தில் பாவக அமைப்பின் படி லக்கினம் எனும் முதல் பாவகம் கன்னி ராசியில் 167:04:58 பாகையில் ஆரம்பித்து, துலாம் ராசியில் 197:29:04 பாகைவரை வியாபித்து நிற்கிறது, கேது பகவான் லக்கினத்திற்கு உற்ப்பட்ட 195:14:48 பாகையில் அமர்ந்து இருப்பதே சரியானது, மேலும் ராகு பகவானும் களத்திர ஸ்தானத்திற்கு உற்ப்பட்ட 15:14:48 பாகையில் அமர்ந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது, மேலும் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவாக அமைப்பிற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பது வரவேற்கத்தக்கது, எனவே ஜாதகருக்கு ராகு கேது யாதொரு இன்னல்களும்  தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து தரவில்லை என்பதை கருத்தில் கொள்க, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினத்தில் கேது, களத்திர ஸ்தானத்தில் ராகு என்பதே சரியான நிலை, அடுத்து தங்களது மகனுக்கு திருமணம் தாமதமாக காரணம் என்ன ? என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பரே !



லக்கினம் : கன்னி
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : புனர்பூசம் 2ம் பாதம்

தங்களது மகனின் ஜாதகத்தில் 7ல் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இருந்தாலும், பாவக தொடர்பு வழியில் கடுமையாக பாதிக்கப்படுவது ஜாதகருக்கு உகந்ததல்ல, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் வரும் தடை தாமதத்திற்கு அடிப்படை காரணமாக விளங்குகிறது, ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த காரணத்தை கொண்டும் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் பாதிக்கப்படுவது நல்லதல்ல, அதுவும் தங்களது ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களுக்கு கடுமையான நெருக்கடிகளை தரும் அமைப்பாகும்.

கடந்த சனி திசை தங்களது மகனுக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை வாரி வழங்கியது திருமண வாழ்க்கை சார்ந்த முயற்சிகள் யாவிலும் பெரும் தோல்வியை தந்து இருக்க கூடும், தற்போழுது நடைமுறையில் உள்ள கேது புதன்  திசை 12ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முதலீடு செய்வதால் வரும் அதிர்ஷ்டத்தை மட்டுமே வழங்குகிறது, புதன் திசை கேது புத்தி 6.10ம் வீடுகள் ஆயுள் ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 1,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் வழங்கி இருக்கின்றது, தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது தாங்கள் எடுக்கும் திருமண முயற்சிகளை வெகுவாக பாதிப்பதுடன், ஜாதகருக்கு எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து இன்னல்களையும் தரும்.

தங்களது மகனுக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளும் முன் முறையாக ஜாதக ஆலோசனை பெற்று, அதன் பிறகு முயற்சி செய்து நலம் பெறுங்கள்.

குறிப்பு :

 ஜாதகருக்கு களத்திர ஸ்தான பாதிப்பு என்பது மிகுந்த இன்னல்களை ( 200% விகிதம் ) தரும் அமைப்பில் உள்ளதால், சரியான தீர்வை தேடுவதே தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், மேலும் ஜாதகருக்கு 6 பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதும், எதிர்வரும் சந்திரன் செவ்வாய் புத்திகள் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது மிகுந்த இன்னல்களை தரும் என்பதால், முறையாக  ஜாதக ஆலோசணை பெற்று நலம் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 16 ஜூன், 2018

கூட்டு திசை பாதிப்பை தருமா ? நட்சத்திர பொருத்தம் மட்டுமே திருமண வாழ்க்கையில் வெற்றியை தருமா ?



கேள்வி :

கிழ்கண்ட குறிப்பு திருமண பொருத்தம் பார்த்த பொழுது வழங்கியது, நட்சத்திர பொருத்தம் சிறப்பாக உள்ளதாலும், தோஷ நிர்ணயம் சிறப்பாக உள்ளதாலும் திருமணம் செய்யலாம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறினார், இதைமட்டும் கருத்தில் கொண்டு திருமணம் செய்யலாமா, தம்பதியர் திருமணத்திற்கு பிறகு சிறப்பான இல்லற வாழ்க்கையை பெறுவார்களா ?  கூட்டு திசை பாதிப்பை தருமா ?  நட்சத்திர பொருத்தம் மட்டுமே திருமண வாழ்க்கையில் வெற்றியை தருமா ? சரியான பதில் எதிர்பார்க்கிறேன் .


பதில் :

 மேற்கண்ட திருமண பொறுத்த குறிப்பை வைத்துகொண்டு, திருமணம் செய்வதுதென்பது கல்லை கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதற்கு நிகரான பலாபலன்களை தந்துவிடும், மேலும் நட்சத்திர பொருத்தம் என்பது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவதுதென்பது " காகம் அமர பனம்பழம் விழுந்த கதைதான் " திருமண வாழ்க்கையின் வெற்றியை நட்சத்திர பொருத்தமோ, கூட்டு திசையோ, கிரக தோஷ நிலையோ நிர்ணயம் செய்வதில்லை சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே நிர்ணயம் செய்கிறது என்பதனை உணருவது அவசியமாகிறது, தாங்கள் வழங்கியுள்ள பிறந்த குறிப்பை கொண்டு நமது உயர் கணித ஜோதிட முறைபடி பாவக வழிமையிலான பொருத்தத்தை தெளிவாக இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பரே !

பெண் ஜாதகம்

லக்கினம் : தனுசு
ராசி : விருச்சிகம்
நட்சத்திரம் : கேட்டை 2ம் பாதம்


ஆண் ஜாதகம்

லக்கினம் : தனசு
ராசி : கடகம்
நட்சத்திரம் : பூசம் 4ம் பாதம்


திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் 2,5,7,8,12ம் வீடுகளாகும், மேற்கண்ட வது வரன் இருவரின் ஜாதகத்திலும் 2,5,7,8,12ம் வீடுகள் பெரும் தொடர்பு அது தரும் நன்மை தீமையை பற்றி சிந்திப்போம் அன்பர்களே !

பெண் ஜாதகத்தில்

2,5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது, இது ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் திருமண தாமதம், குடும்ப வாழ்க்கையில் இன்னல்கள், போதிய வருமானம் இன்மை, ஸ்திர தன்மையற்ற வார்த்தைகள் என்ற விதத்திலும், 5ம் பாவக வழியில் இருந்து புத்திர பாக்கிய தடை, சமயோசித அறிவு திறனில் பாதிப்பு, கற்ற கல்வி வழியிலான யோக பலனை அனுபவிக்க இயலாத தன்மை, குலதெய்வ சாபம் என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள் என்ற போதிலும், திடீர் இழப்புகள், விபத்து, மருத்துவ செலவினங்கள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார இன்னல்கள் என்ற வகையில் பாதிப்பை தரும்.

 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது இது ஜாதகிக்கு 12ம் பாவக வழியில் இருந்து கடுமையான மனஅழுத்தம், மன போராட்டம், அனைவராலும் தொல்லை, தாம்பத்திய வாழ்க்கையில் பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும்

7ம் வீடு மட்டும் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் காணப்படுகிறது. இது ஜாதகிக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தரும், வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு மற்றும் யோக வாழ்க்கையை பெற்று தரும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து சிறப்பான நன்மைகளை ஜாதகிக்கு பரிபூர்ணமாக வாரி வழங்கும்.


ஆண் ஜாதகத்தில் 

2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் காணப்படுகிறது. இது ஜாதகருக்கு நன்மையை தரும் அமைப்பாகும், 2ம் பாவக வழியில் இருந்து சிறந்த குடும்ப வாழ்க்கை, நிறைவான வருமானம், இனிமையான பேச்சு திறன், பொருளாதார தன்னிறைவு என்ற வகையில் சிறப்புகளை தரும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியம், சமயோசித அறிவு திறன், தெய்வீக அனுக்கிரகம், கல்வி வழியிலான முன்னேற்றம் மற்றும் புத்திசாலித்தனத்தால் ஆதாயம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும்.

8ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் காணப்படுகிறது, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார உதவிகள், வாழ்க்கை துணையின் சொத்துக்கள் கிடைத்தால், நீண்ட ஆயுள், திடீர் அதிர்ஷ்டம் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது. இது ஜாதகருக்கு 12ம் பாவக வழியில் இருந்து கடுமையான மனஅழுத்தம், மன போராட்டம், அனைவராலும் தொல்லை, தாம்பத்திய வாழ்க்கையில் பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும், மேலும் இல்லற வாழ்க்கையில் அதிக அளவிலான மன உளைச்சலை தரும்.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகிதம் வலிமை அற்று காணப்படுகிறது, நல்ல வாழ்க்கை துணை அமைவது என்பது ஜாதகருக்கு குதிரை கொம்பாக அமையும், கூட்டாளிகள், நண்பர்கள், கூட்டு முயற்சி யாவும் ஜாதகருக்கு கடுமையான இழப்புகளையே ஏற்படுத்தும், வெளியூர் அல்லது வெளிவட்டார பழக்க வழக்கங்கள் ஜாதகருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை தரும், வலிமை அற்ற ஜாதகியை வாழ்க்கை துணையாக ஜாதகர் தேர்வு செய்தால், ஜாதகரின் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிடும் என்பது கவனிக்கத்தக்கது.

கூட்டு திசை தரும் பலன்கள் :

 ஜாதகிக்கு நடக்கும் சுக்கிரன் திசை 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்த பெற்று யோக பலனையும், 2ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனையும் தருகின்றது.

 ஜாதகருக்கு நடக்கும் சுக்கிரன் திசை 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை தருவது சிறப்பான நன்மைகளை தரும்.

கூட்டு திசை தோஷம் என்பது நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக பலன் பற்றி தெரியாத நிலையில் குத்துமதிப்பாக சொல்லப்படுவதாகும், கூட்டு திசை தோஷம் என்பது முற்றிலும் தவறான கருத்து, இதுபோன்ற அமைப்பு எந்த ஓர் ஜோதிட மூல நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என்பதே உண்மை.

குறிப்பு :

ஜாதகருக்கு வயது 32, ஜாதகிக்கு வயது 26 இருவருக்கும் திருமணம் தாமதமாக அடிப்படை காரணமே சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் ( ஆண் ) குடும்ப ஸ்தானம் ( பெண் ) வலிமை அற்று இருப்பதே, மேலும் இருவரது ஜாதகமும் பாவக வழியில் பொருத்தம் இன்றி  முற்றிலும் முரண் பட்ட தன்மையில் இருப்பதால், இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து, மன வாழ்க்கை முறிவு என்ற இறுதி நிலைக்கு கொண்டு செல்லும் எனவே திருமணத்தை தவிர்த்து, இருவரும் வலிமை பெற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வதே சரியான தீர்வாக அமையும், தாங்கள் அனுப்பிய திருமண பொருத்தம் சார்ந்த குறிப்பை வைத்துகொண்டு திருமண வாழ்க்கையில் நுழைவது தம்பதியருக்கு இல்லற வாழ்க்கையில் பிரிவு என்ற நிலைக்கே அழைத்து செல்லும் என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுக்கவும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 14 ஜூன், 2018

" களத்திர தோஷமும் " " சனி திசை நடப்பும் " திருமண தடைக்கு காரணமா? திருமணம் கைகூடி வருமா ?


கேள்வி :

 திருமணத்திற்க்கான முயற்சிகள் யாவும் இதுவரை பெரும் பின்னடைவையே தந்து இருக்கின்றது, கடந்த இருபது வருடங்களாக திருமணம் கைகூடி வரவில்லை, சுய ஜாதகத்தில் களத்திர தோஷம் என்கின்றனர், சனி திசை திருமண தடையை தருகிறது என்கின்றனர், உண்மை நிலை என்ன ? திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடி வருவதற்க்கு பரிகாரம் உண்டா ? எனது ஜாதகத்தில் உள்ள குறைகள் மற்றும் தோஷம் பற்றி விளக்கம் தர வேண்டுகின்றேன்.

பதில் :

ஒருவருக்கு திருமணம் தாமதமாக அடிப்படை காரணம் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் ( 2,5,7,8,12ம் ) வீடுகள் வலிமை அற்று காணப்படுவதும், பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்துவதும் காரணமாக அமையும், குறிப்பாக சுய ஜாதகத்தில் பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு இல்லற வாழ்க்கை அமைவதில் யாதொரு தடைகளும் தாமதமும் ஏற்படுவதில்லை, சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள், திருமணத்தை நடத்தி வைக்கும் பருவ வயதில் நடைமுறைக்கு வரும் பொழுதே மேற்கண்ட தங்களின் கேள்விக்கு உரித்தான விதத்தில், அதிக அளவிலான தடைகளும், திருமணத்தில் வெகு தாமதத்தையும் தருகின்றது, தங்களின் ஜாதகத்தில் உள்ள நிலையை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : மிதுனம்
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவாதிரை 2ம் பதம்

திருமணம் தாமதமாக காரணம் : 1

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் அடிப்படை வீடுகளான 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது முழு முதற்காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் எந்த ஓர் வீடும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, மேற்கண்ட தங்களின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு தனுசு ராசியில் அமைவதும் தங்களுக்கு, பித்ரு தோஷ வழியில் திருமணம் அமையாமல் வெகு தாமதங்களை வழங்கிய கொண்டு இருக்கின்றது, 2ம் பாவகம் தங்களுக்கு மிதுனத்திலேயே ஆரம்பித்த போதிலும் அதிக  அளவில் கடக ராசியிலே வியாபித்து நிற்பது குடும்ப வாழ்க்கையில் இன்பத்தை தராமல் தடை செய்கிறது, மேலும் இல்லற வாழ்க்கையில் ஜாதகர் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தருகின்றது.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் கூட்டு முயற்சி வழியிலான இன்னல்களை வெகுவாக தருகின்றது, திருமணம் வெகு தாமதமாக சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் 200% விகித பாதிப்பை பெறுவதும், அது சார்ந்த இன்னல்களை ஏக காலத்தில் அனுபவிப்பதும் காரணமாக அமைகிறது, குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவக வழியில் 200% விகித இன்னல்களை சந்திப்பதால் தங்களின் திருமண வாழ்விற்க்கான முயற்சிகள் யாவும் கடும் தோல்வியை சந்திக்கிறது, இதற்கான தீர்வை பதிவின் இறுதியில் காண்போம்.

திருமணம் தாமதமாக காரணம் : 2

 தங்களுக்கு 19/04/2002 முதல் 19/04/2021 வரை நடைபெறுகின்ற சனி மஹா திசையானது தங்களுக்கு 3,9,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 3,9,12ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்ற போதிலும், 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2,7ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தருவது தங்களுக்கு சனி மகா திசையில் சிறப்புகளை தரும் அம்சமல்ல, மேலும் 2ம் பாவக வழியில் இருந்து போதிய வருமானம் இன்மை, வாக்கு வழியிலான இன்னல்கள், குடும்பத்தில் சிரமம், தனம் சார்ந்த சிக்கல்கள், பொருளாதார முன்னேற்ற தடைகள், வரும் வருமானம் வீண் விரையமாகுதல் என்ற வகையில் சிரமங்களை தரும், 7ம் பாவாக வழியில் இருந்து திருமண தடை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியிலான தொந்தரவுகள், வியாபாரம் கடுமையாக பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை, எதிர்ப்புகள் அனைத்து இடங்களில் இருந்தும் வரும், சட்ட சிக்கல்கள், பொது வாழ்க்கை பாதிப்பு, எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து வரும் தொல்லைகள் என்ற வகையில் மிகுந்த சிரமங்களை தரும், சனி மகா திசை லாப ஸ்தான வழியில் அதிர்ஷ்டத்தை வழங்கிய போதிலும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்கள் தங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

சனி மஹா திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தியும் தங்களுக்கு கடுமையான திடீர் இழப்புகளை ஆயுள் பாவக வழியில் இருந்து வாரி வழங்கி கொண்டு இருப்பது சிறப்பானது அல்ல, இது மேலும் மேலும் கடுமையான இன்னல்களையே தரும், ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைவது தொழில் ரீதியான திடீர் இழப்புகளை குறிக்கிறது என்பதால் ராகு புத்தியில் தொழில் ரீதியாக மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய தருணமாகும்.

சனி மகா திசையில் எதிர்வரும் குரு புத்தி தங்களுக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5,11ம் பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சனி திசை குரு புத்தி காலத்தில் தங்களின் திருமண முயற்சி நல்ல வெற்றியை தரும், சிறந்த புத்திர பாக்கியம் அமையும், இவையெல்லாம் மிகுந்த அதிர்ஷ்டத்துடன் அமையும் என்பது கவனிக்கத்தக்கது, குரு புத்தி காலத்தை தாங்கள் பயனுள்ள வகையில் அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

1) திருவக்கரை சென்று புதனுக்கு வக்கிரக நிவர்த்தியும், சர்ப்ப சாந்தி பரிகாரமும் செய்து யோக வாழ்க்கையை பெறுவது ஜாதகருக்கு சிறப்புகளை தரும்.
2) திருவெண்காடு சென்று முக்குண நீராடுவது களத்திர தோஷ நிவர்த்தியை தரும், திருமண வாழ்க்கையிலான தடைகளை தகர்க்கும்.
3) திருப்பதி வருடம் ஒரு முறை சென்று வருவதும், ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் நீராடுவதும் தங்களின் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

எதிர் வரும் புதன் திசை தங்களுக்கு ஜீவன ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும் என்பது வரவேற்கத்தக்கது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 12 ஜூன், 2018

ஜாதக ஆலோசனை : பெண்கள் ஜாதகத்தில் சுபயோகங்கள் தரும் நன்மைகள் !

  

 ஓர் வலிமை மிக்க பெண்ணின் ஜாதகம் தன்னையும், தன்னை சார்ந்து ஜீவிப்பவர்களையும் வாழ்க்கையில் வெற்றி பெற செய்யும் வல்லமை கொண்டது, மேலும் வலிமை பெரும் பாவக வழியில் இருந்து, பெற்றோர்,சகோதர சகோதரிகள், உறவுகள், வாழ்க்கை துணை, குழந்தைகள், வாழ்க்கை துணை வழியிலான உறவுகள் அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்யும் யோகம் பெற்றவர்கள், எனவே நமக்கு வலிமை மிக்க ஜாதகம் பெற்ற தாய்,வாழ்க்கை துணை,குழந்தை கிடைப்பது நாம் செய்த புண்ணியம் மற்றும் பாக்கியத்தின் வலிமையே ஆகும், கீழ்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் தன்மையை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : மகரம் 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம்

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

ஒருவரது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்று அமைவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நாற்காலியில் நான்கு கால்களும் வலிமை பெற்று இருப்பதற்கு நிகரான யோக பலன்களை தரும், மேற்கண்ட ஜாதகிக்கு 1,4,7,10ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று நான்கு பாவகங்களும் முறையே, மகரம்,மேஷம்,கடகம் மற்றும் துலாம் ராசிகளில் வியாபித்து நிற்பது ஜாதகி ஸ்திரமான வலிமை பெற்ற யோக ஜாதகம் பெற்றவர் என்பதை கட்டியம் கூறுகிறது மேலும் மேற்கண்ட ராசிகள் யாவும் சர இயக்கத்தில் இயங்குவது யோக பலன்களை 100% விகிதம் சுவீகரித்து வழங்கும் என்பதை கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

1ம் வீடு ஜாதகிக்கு உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான செல்வத்தையும் வாரி வழங்கும், மேலும் லக்கினம் சர மண் தத்துவத்தில் 18 பாகைகளும், ஸ்திர காற்று தத்துவத்தில் 15 பாகைகளையும் கொண்டு இருப்பது ஆரோக்கியமான திரேகத்தையும், சிறந்த அறிவு திறனையும் வழங்கும், மேலும் ஜாதகியின் செயல்பாடுகள் யாவும் நேர்மை மிக்கதாகவும், அதன் வழியிலான அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக பெறுபவராகவும் இயங்க செய்யும், நிறைந்த நல்லறிவு, நேர்மையான குணம், செய்யும் காரியங்களில் சத்தியத்தை கடைபிடித்தல், அனைத்திலும் வெற்றி வாய்ப்பு, மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் பரிபூர்ணமாக நிறைவேறும் தன்மை, எதிர்ப்பவர்களை வென்று நலம் பெரும் தன்மை, மேன்மையான நோக்கங்கள், எதையும் சமாளிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

4,7,10ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு நல்ல குணாதிசயத்தை தரும், இளகிய மனமும், பரோஉபாகர மனநிலை ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் உதவி புரியும், மக்கள் தொடர்புள்ள துறைகளில் ஜாதகியை விருத்தி பெற செய்யும், மருத்துவம், ஹீலிங், மற்றும் மனநலம் சார்ந்த துறைகளில் ஜாதகிக்கு முழு வெற்றி கிட்டும், சமாதான குணம், பெருந்தன்மையான நடவடிக்கை மூலம் அனைவரையும் கவரும் தன்மையை தரும், மிக பெரிய சொத்து சுக சேர்க்கையை பெறுவதற்கான வல்லமை பெற்றவர், வீடு நிலம், இடம் ஆகியவற்றின் மூலம் நல்ல செல்வசேர்க்கை உண்டாகும், வண்டி வாகன யோகம்  உண்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் தன்னிறைவான பொருளாதர வளர்ச்சியை தரும், உறவுகள் வழியிலான ஆதரவு, தந்தைக்கு யோகம், தந்தையுடன் பாசமாக இருத்தல், தந்தையின் உறவுகள் வழியிலான யோக வாழ்க்கையை ஜாதகி பரிபூர்ணமாக பெறுவார்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள் மூலம் யோக வாழ்க்கை அமையும், திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை மிகவும் யோகமிக்கதாக அமையும், நல்ல வாழ்க்கை துணை ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமைவார், கணவர் வழியிலான நன்மைகளை வாழ்நாள் முழுவதும் பெறுவதற்கான யோகம் பெற்றவர், பொதுமக்களிடம் செல்வாக்கும், நம்பிக்கையும் மிக எளிதாக பெறுவதற்கான வாய்ப்புகளை தரும், செய்யும் செயல்களில் யாவிலும் பொதுநலம் பிரதிபலிக்கும், நேர்மறையான எண்ணங்கள் ஜாதகிக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் யோகம் உண்டாகும், ஜாதகியின் வாழ்க்கை மிகவும் பிரகாசம் மிக்கதாக அமையும், வியாபாரம் தொழில், கூட்டு தொழில், கூட்டு முயற்சிகள் யாவும் ஜாதகிக்கு நல்லதோர் வெற்றிகளை தொடர்ந்து வாரி வழங்கும், இல்லற வாழ்க்கை மிக இனிமையா அமையும், வாழ்க்கை துணையுடனான புரிதல்கள் இல்லற வாழ்க்கையையும், குடும்பத்திலும் சிறப்பான சுபயோகங்களை வாரி வழங்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகி வெளியூர் அல்லது வெளிநாடுகளில் ஜீவன மேன்மையை 100% விகிதம் பெறுவார், நல்ல வியாபர நுணுக்கங்களை தரும், பொதுமக்கள் ஆதரவு மற்றும் மரியாதை முழு அளவில் கிடைக்கும், சமூகத்தில் மதிக்கத்தக்க அந்தஸ்த்தை வெகு விரைவில் பெறுவார், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள் ஜாதகியை தேடி வரும், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் ஜாதகிக்கு செய்யும் தொழில் வழியிலான விருத்தி வெகு விரைவில் சீராகவும் அமையும், பல தொழில் புரியும் யோகம் உண்டு, தனது தாய்க்கு மிகுந்த யோகத்தை தருபவர், தாய் வழியிலான ஆதரவும், ஆசியையும் பரிபூர்ணமாக பெரும் யோகம் உண்டு, நிறைய சொத்து சுக சேர்க்கையை தனது சுய உழைப்பின் மூலம் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிக அளவில் உண்டாகும், அரசு மரியாதை மற்றும் கவுரவம் ஜாதகிக்கு தேடிவரும், செய்யும் தொழிலில்  வழியில் நேர்மையும், பெரும் புகழும் உண்டாகும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை ஜாதகிக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.

9ம் வீடு ஜாதகிக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றும், மிதமிஞ்சிய அறிவு திறன் ஜாதகியின் வாழ்க்கையில் வியக்கத்தகு முன்னேற்றங்களை நல்கும், தெய்வீக அனுக்கிரகமும், பித்துருக்கள் ஆசியும் ஜாதகிக்கு சுபயோக வாழ்க்கையை வாரி வழங்கும், முன்னேற்றம் என்பது ஜாதகிக்கு சிறப்பாக அமையும், தெளிவான சிந்தனை அறிவு, எதையும் சமாளிக்கும் சமயோசித அறிவு திறன், ஆன்மீக ஈடுபாடு ஆகியவை ஜாதகிக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகியின் கல்வி அறிவு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், ஆராய்ச்சி கல்வி, பட்டய படிப்பில் நல்ல தேர்ச்சியும், அதன் வழியிலான சுபயோகங்களையும் ஜாதகி பரிபூர்ணமாக பெறுவார், சுபயோகங்களை  பெறுவதில் தடையேதும் இருக்காது.

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,3,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு, கலைகளில் ஆர்வம் மற்றும் தேர்ச்சி, ஆய்வு கல்வியில் தேர்ச்சி, தாமத திருமணம், வருமானம் சார்ந்த இன்னல்கள், வாக்கின் வழியிலான இன்னல்கள், வீண் விரையம், வருமானம் சில நேரங்களில் தடைபடும் தன்மை என்ற வகையில் இன்னல்களை தரக்கூடும், குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையைத்தரும்.

3ம் பாவக வழியில் இருந்து மருந்துகள் மூலம் அபரிவித லாபத்தை தரும், அறிய கலைகளில் ஆர்வத்தையும் தேர்ச்சியையும் நல்கும், விட்டுக்கொடுக்கும் தன்மை, அயலார் மூலம் நல்ல லாபம், நீண்ட பயணம், சட்டம் மூலம் அதீத நன்மைகள், புதிய கண்டுபிடிப்புகள், தர்ம சிந்தனை, சத்தியத்தை மதித்து நடத்தல் என்ற வகையில் நன்மைகளை தரும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஜாதகிக்கு நல்ல வெற்றிகளை தரும், விடாமுயற்சி ஜாதகிக்கு சுபயோக வாழ்க்கையை நல்கும்.

12ம் பாவக வழியில் இருந்து நிறைய செலவுகள், வீண் விரையம் மருத்துவ செலவினங்கள், மன அழுத்தம், மனபோராட்டம், அனைவராலும் தொல்லைகள், துன்பங்கள், எதிர்பாராத இழப்புகள், நிம்மதி குறைவு, நல்ல உறக்கம் இன்மை, தாம்பத்தியம் சார்ந்த இன்னல்கள் என்ற வகையில் சிரமங்களை தரக்கூடும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நீண்ட  ஆயுளை தரும், இருப்பினும் திடீர் இழப்புகள், மருத்துவ செலவினங்கள் அதிகரிக்கும், பாதுகாப்பான பயணம் ஜாதகிக்கு மிகுந்த நன்மையை தரும், திருப்தி இல்லாத சூழ்நிலையில் அதீத மனஅழுத்தம் மற்றும் மனப்போராட்டத்தை தரக்கூடும், இழப்புகளை தவிர்க்க முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது, வாழ்க்கை துணை வழியிலான சிறு சிறு விரயம் தவிர்க்க இயலாது.

5,6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 5ம் பாவக வழியில் இருந்து புத்திர பாக்கியத்தில் தாமதத்தையும், கற்ற கல்விக்கு உண்டான வருமானம் அற்ற நிலையையும் தரும், குல தெய்வ சாபம் ஜாதகிக்கு பெரும் இன்னல்களை தரக்கூடும், சுபயோக நிகழ்வுகள் யாவும் ஜாதகிக்கு பெரும் தடை தாமதங்களை தரக்கூடும் என்பதால், குல தெய்வ வழிபாடு முறையாக செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.

6ம் பாவக வழியில் இருந்து எதிரிகள் தொந்தரவு அதிக அளவில் ஜாதகிக்கு இன்னல்களை தரக்கூடும், வயிறு சார்ந்த உடல் தொந்தரவுகள் கடுமையாக பாதிக்க கூடும், எவரிடமும் பகைமை பாராட்டாமல் ஜாதகி மிக இலகுவாக நடந்துகொள்ளது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், தனது சொத்துக்கள் மீது கடன் வாங்குவது மிகுந்த பாதிப்பை தரும், மற்றவருக்கு கடன் கொடுப்பது ஜாதகிக்கு பெரிய அளவிலான பாதிப்புகளை தரக்கூடும்.

11ம் பாவக வழியில் இருந்து, அதிர்ஷ்டம் சார்ந்த பின்னடைவுகள் ஜாதகிக்கு பெரும் பாதிப்பை தரும், விரக்தி மனப்பான்மை ஜாதகிக்கு மிகுந்த இன்னல்களை தரக்கூடும், தோல்வியை கண்டவுடன் அதீத மனபயம் சார்ந்த இன்னல்களை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும், கடின உழைப்பே ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளையும் சுபயோகங்களையும் வாரி வழங்கும்.

நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் ( 20/12/2012 முதல் 20/12/2028 வரை )

குரு திசை ஜாதகிக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை தந்த போதிலும், தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் புத்தி ஜாதகிக்கு 1ம் வீடு ஜாதகிக்கு உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1ம் பாவக வழியில் இருந்து சிறப்புகளை தருவது, ஜாதகிக்கு தொழில் ரீதியான வெற்றிகளை 100% விகிதம் வாரி வழங்கும், எதிர்பாராத சுப நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும், தெய்வீக அனுக்கிரகத்தால், ஜாதகிக்கு உயர் கல்வி, திருமணம், புதிய வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, வெளிநாடு யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும் என்பதால்,  நடைபெறும் புதன் புத்தி ஜாதகிக்கு சிறப்பான யோக வாழ்ககையே வாரி வழங்குகிறது.

குறிப்பு :

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 5,6,11ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது மட்டுமே சற்று கடுமையான இன்னல்களை தரும், விரைய ஸ்தான தொடர்பை பெரும் பாவக வழியில் இருந்து பெரிய அளவில் இன்னல்கள் நடைமுறைக்கு வாராது என்பதால், ஜாதகி 5,6,11ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 22 பிப்ரவரி, 2018

ஜாதக பொருத்தம் எப்படி உள்ளது? எனது மகளுக்கு ஏற்ற வரனா ? இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையுமா ?


கேள்வி :
கீழ்கண்ட வரனின் ஜாதகம் எனது மகளுக்கு பொருந்துமா ? திருமண வாழ்க்கை சிறப்பாக அமையுமா ? ஜாதக பொருத்தம் சார்ந்த விஷயங்களை தெளிவு படுத்தவும்,

பதில் :

 திருமண பொருத்தம் காண்பதில் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

1) வரன் வது இருவரது சுய ஜாதகத்திலும் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமை பற்றி தெளிவு பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும்.

2) வரன் வது இருவரது ஜாதகத்திலும் தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் ( ஏக திசை என்ற போதிலும் ) சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? என்பதில் தெளிவு பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும்.

3) வரன் வது இருவரது ஜாதகத்திலும் தற்போழுது  கோட்சார கிரகங்கள் தரும் பலாபலன் பற்றி தெளிவு பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும்.

4) மேற்கண்ட விஷயங்களை தவிர ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகுகேது ஜாதகம், களத்திர தோஷம் போன்ற மூட நம்பிக்கைகளை, புறம் தள்ளிவிட்டு, வரன் வது இருவரது சுய ஜாதகத்திலும் பாவக வலிமையின் அடிப்படையில் திருமணம் செய்வதே தாம்பத்திய வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

இனி அன்பரின் கேள்விக்குண்டான பதிலை பார்ப்போம்.

வரனின் பிறந்த தேதி : 26/09/1990
                                நேரம் : 08:45 AM 
                                இடம் : கோவை 


லக்கினம் : துலாம் 
ராசி : விருச்சிகம் 
நட்ஷத்திரம் : கேட்டை 4ம் பாதம்.

மேற்கண்ட வரனின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, குறிப்பாக 2,8ம் வீடுகள்  திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் இன்னல்களை தரும் அமைப்பாகும், 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் குடும்பம், வருமானம், வாக்கு வழியில் இருந்து கடுமையான இன்னல்களை சந்திப்பார், 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்ண ஆயுள் என்ற போதிலும், வாழ்க்கை துணைக்கு பொருளாதார ரீதியான பேரிழப்புகளை தருவார்.

5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் 5ம் பாவக வழியில் கடுமையான புத்திர தோஷத்தையும், சமயோசித அறிவு  திறனில் குறைகளையும், கற்ற கல்வி வழியிலான நன்மை அற்ற தன்மையையும் அனுபவிப்பார், குறிப்பாக ஜாதகரின் சிந்தனை திறனும், பூர்வீகமும் கடுமையாக பாதிக்கப்படும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணைக்கு கடுமையான தோஷத்தை தரும் அமைப்பாகும், ஜாதகரின் மணந்துகொள்ளும் ஜாதகியின் சுய ஜாதகம் வலிமை இன்றி இருப்பின், இல்லற வாழ்க்கை வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிடும், வாழ்க்கை துணையுடனான நெருக்கத்தை வெகுவாக குறைக்கும், மேலும் சுய ஜாதகத்தில் ஜாதகரின் லக்கினமும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியில் அமைந்து பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இல்லற வாழ்க்கையில் ஜாதகர் கடுமையான பாதிப்பை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபமும் வலிமையற்று உள்ளது, 7ம் ராசியான துலாமும் வலிமையற்று உள்ளது  என்பதுடன் சுய ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் வலிமையற்று காணப்படுகிறது என்பதால் ஜாதகரின் இல்லற வாழ்க்கை மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகும்.

அயன சயன ஸ்தானத்தை குறிக்கும் 12ம் வீடு பூர்வ புண்ணியமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அனைத்திலும் நஷ்டத்தை தரும், மேலும் புத்திரம் யோகம் சார்ந்த கடுமையான பாதிப்புகளை தரும், தாம்பத்திய வாழ்க்கையில் முரண்பட்ட பாதிப்புகளை ஜாதகர் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவர் என்பதால், தங்களது அருமை மகளுக்கு ஏற்ற வரன் இந்த  ஜாதகர் இல்லை என்பதை மட்டும் மிக தெளிவாக கூறி, வேறு நல்ல வரனாக தேடி திருமணம் நடத்தி வைக்க " ஜோதிடதீபம் " ஆலோசனை வழங்குகிறது.

குறிப்பு :

தங்களது மகளின் சுய ஜாதகத்தில் 2,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு  இருப்பதால், தாங்கள் பார்க்கும் வரனின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் மிக மிக வலிமையுடன் இருப்பதுடன், நடைமுறையில் உள்ள திசா புத்திகள், எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெற்ற பிறகே திருமணம் செய்து வைப்பது சகல நலன்களையும் தரும் என்பதை கருத்தில் கொள்க.
 
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696