மூலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 டிசம்பர், 2016

ஏழரை சனியின் தாக்கமா? சுய ஜாதக வலிமை இன்மையா ?



 பொதுவாக நாம் அதிக அளவில் இன்னலுறும் நேரங்களில் ஜோதிட ஆலோசனை பெரும் பொழுது பெரும்பாலும் சந்திரனுக்கு 12,1,2ல் சனி பகவான் சஞ்சாரம் செய்துகொண்டு இருப்பின், ஏழரை சனி காலம் இதன் காரணமாகவே தாங்கள் அதிகம் இன்னல்களை சந்திக்க வேண்டி  உள்ளது, எனவே சனி ப்ரீத்தி பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள் என்ற வழிகாட்டுதல்களை "ஜோதிடர்கள்" வழங்குவது உண்டு, இந்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒருவர் இன்னல்களை சந்திப்பதற்கும், சனி ராசிக்கு 12,1,2ல் சஞ்சாரம் செய்வதற்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்பதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு படுத்த விரும்புகின்றோம், ராசிக்கு நவகிரகங்களின் சஞ்சார நிலையை கருத்தில் கொண்டு பலன் நிர்ணயம் செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான பலாபலன்களை கூறுவதற்கு வழிவகுத்துவிடும், லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், 12 பாவகங்களை கருத்தில் கொண்டும் சுய ஜாதக பலன் அறிய முற்படுவதே சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நன்மைகளையும், சரியான திட்டமிடுதல்கள் மூலம் முன்னேற்றங்களையும் பெறுவதற்கு வழிவகுக்கும்.


லக்கினம் : ரிஷபம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம்

ஒருவருக்கு கடுமையான நெருக்கடிகளையும், இன்னல்களையும் வழங்குவது, ராசிக்கு சில இடங்களில் இருந்து சஞ்சாரம் செய்யும் கிரகங்களின் தாக்கம் என்பது உண்மையல்ல, ஒருவருக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் நிலை வெகு பரிதாபத்திற்க்கு உரியதாக மாறிவிடும், கிரகங்களின் கோட்சார வழங்கும் இன்னல்களை விட ( ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம குரு ) பல நூறு மடங்கு இன்னல்களை தந்து விடும், மேற்கண்ட ஜாதகருக்கு  தற்போழுது நடைபெறுவது சந்திரன் திசை, இவர் தரும் பலன்களை கருத்தில் கொண்டு இந்த ஜாதகத்தை ஆய்வு செய்வோம்.

பொதுவாக எந்த ஒரு ஜாதகருக்கும், சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற கூடாது, அப்படியே சம்பந்தம் பெற்றாலும், நவ கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகர் யோகம் பெற்றவரே, மாறாக நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் கத்தி அதோ கதிதான், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவார், எவராலும் மேற்கண்ட பாதிப்பில் இருந்து காப்பாற்ற இயலாது என்பதே உண்மை நிலை.

மேற்கண்ட ஜாதகருக்கு சந்திரன் திசை ( 24/07/2011 முதல் 23/07/2021 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு 3,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 11ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், முறையே விரையம், பாதக ஸ்தான பலனை நடத்திக்கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகர் மூன்றாம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் தோல்விகளையும், வீரியமிக்க செயல்திறன் அற்ற சூழ்நிலைகளையும் வழங்குகிறது, மேலும் சுய முயற்சி தடை பெரும், நிம்மதி அற்ற சூழ்நிலையை உருவாக்கும், 12ம் பாவக வழியில் இருந்து மனநிம்மதி இழப்பு, வீண் விரையம், அதிக மன போராட்டம், தெளிவற்ற வாழ்க்கை முறை, அதிக அளவிலான தொல்லைகள், பொருள் இழப்பு, சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியின்மையை தரும், மேற்கண்ட இன்னல்கள் ஜாதகருக்கு 100% விகிதம் நடைமுறைக்கு வரும், அடுத்து பாதக ஸ்தான தொடர்பை பெரும் லாப ஸ்தான வழியில் இருந்து ஜாதகரின் ஆசை மற்றும் எண்ணங்கள் யாவும் நிராசையாக மாறிவிடும், தன்னம்பிக்கை வெகுவாக கெடும், மூட நம்பிக்கை மற்றும் பிற்போக்கு தனமான எண்ணங்களால் ஜாதகர் சூழப்பட்டு தனது வாழ்க்கையே தானே பாதிப்பிற்கு உள்ளாக்குவார், ஜாதகருக்கு  வரும் இன்னல்களின் தாக்கம் பெரிய அளவிலான அமைப்பில் இருக்கும், துன்பத்தில் ஜாதகர் அனலில் இட்ட புழு போல் தவிக்க நேரும், சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும் 11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் அதிர்ஷ்டமற்ற வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மேலும் இதன் பாதிப்பு ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து  200% விகிதம் இருக்கும் என்பது வருந்தத்தக்கது.

மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்த ஜோதிடர்கள் ஜாதகருக்கு ஏழரை சனியின் தாக்கத்தினாலே பெரும் இன்னல்களை சந்தித்து கொண்டு இருக்கின்றார் என்பதாக கூறியிருக்கின்றனர், நடைபெறும் சந்திரன் திசை தரும்  விரையம் மற்றும் பாதக ஸ்தான பலனை பற்றி யாதொரு விஷயமும் கூறவில்லை என்பது கவனிக்க தக்கது, உண்மையில் மேற்கண்ட ஜாதகருக்கு விரைய ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் சந்திரன் திசையே 200% சதவிகித இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றார், எனவே  ராசியை அடிப்படையாக கொண்டும் நவ கிரகங்களின் கோட்சர நிலையை கொண்டும் பலன் காண்பதை தவிர்த்து, சுய ஜாதக பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டும், அந்த பாவகங்களுக்கு நவகிரகங்களின் கோட்சாரம் வழங்கும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் சுய ஜாதக பலன் காண முற்படுவதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு துல்லியமான பலாபலன்களை கூற உதவி புரியும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 20 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் சர,ஸ்திர,உபய ராசிகள் வழங்கும் பலாபலன்கள் !



ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்களின் தொடர்புகளின் வழியில், திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தும் நன்மை தீமை பலன்களில், சர,ஸ்திர,உபய ராசிகளுக்கு ஏற்ப நிறைய வேறுபாடுகள் உண்டு, பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் 12 வீடுகள் தான் தொடர்பு பெரும் பாவகங்கள் வழியில் இருந்து யோக அவயோக பலன்களை தருகிறது, இந்த 12 வீடுகளும் தொடர்பு பெரும் பாவகம், சர ராசியாக இருப்பின் விரைவான பலன்களையும், ஸ்திர ராசியாக இருப்பின் நீடித்த பலன்களையும், உபய ராசியாக இருப்பின் மேற்கண்ட இரண்டிற்கும் சம்பந்தம் இல்லாத பலன்களையும் தரும்.


குறிப்பாக ஒரு ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள திசை யோக பலனை தரும் நிலையில் இருக்கிறது என்று வைத்துகொண்டால், 1,4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜாதகருக்கு 1,4,7,10ம் வீடுகள் வழியில் இருந்து நன்மையை செய்கிறது எனில், ஜாதகருக்கு தொடர்பு பெரும் 10ம் பாவகம் சர ராசியாக இருப்பின், தான் தரவேண்டிய யோக பலன்களை திசை ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே வாரி வழங்கிவிடும், எடுத்துகாட்டாக ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் குறுகிய காலத்தில் வெகு விரைவாக அமையும். ஜாதகருக்கு தொடர்பு பெரும் 10ம் பாவகம் ஸ்திர  ராசியாக இருப்பின், தான் தரவேண்டிய யோக பலன்களை தனது திசை முழுவதும் தொடர்ந்து ஸ்திரமாக வழங்கிகொண்டே இருக்கும், உதாரணமாக ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் என்பது படிப்படியாக அமையும். ஜாதகருக்கு தொடர்பு பெரும் 10ம் பாவகம் உபய  ராசியாக இருப்பின், தான் தரவேண்டிய யோக பலன்களை மேற்கண்ட இரண்டு அமைப்பிற்கும் சாராமல் சிறிது சிறிதாக அமையும், உதாரணமாக ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவில் இல்லாமல் குறைவான நிலையிலேயே அமையும்.

மேற்கண்ட விதி யோக அவயோக நிலை இரண்டிற்கும் பொருந்தும், இதை ஓர்  உதாரண ஜாதகம் கொண்டு காண்பது சிறப்பாக அமையும் என்று "ஜோதிடதீபம்" கருதுகிறது.


லக்கினம் : தனுசு 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : மூலம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு யோகம் தரும் பாவகங்களாக அமைவது :

1) 1,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 
2) 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
3) 3ம் வீடு சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்.
4) 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் ஜாதகத்தில்  யோக அமைப்பாக கருதலாம், இதில் 10ம் பாவகம் உபய ராசியாகவும், 11ம் பாவகம் சர ராசியாகவும், 3,9ம் பாவகங்கள் ஸ்திர ராசியாகவும் ஜாதகிக்கு அமைகிறது.

ஜாதகிக்கு அவயோகம் தரும் பாவகங்களாக அமைவது :

1) 6,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
2) 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் ஜாதகத்தில் அவயோக அமைப்பாக கருதலாம், இதில் 8ம் பாவகம் சர ராசியாகவும், 12ம் பாவகம் ஸ்திர ராசியாகவும் ஜாதகிக்கு அமைகிறது.

ஜாதகிக்கு 10ம் பாவகம் உபய ராசியில் அமைந்து நன்மையை செய்வது குறிப்பிட்ட பாவக வழியில் சிறிய அளவிலேயே அமையும், 3,9ம் பாவகம் ஸ்திர ராசியாக அமைந்து நன்மையை செய்வதால் ஜாதகிக்கு குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நீடித்த 80% விகித நன்மையை தொடர்ந்து பெற்ற வண்ணம் இருப்பார், 11ம் பாவகம் சர ராசியாக அமைந்து நன்மை செய்வது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித நன்மையை விரைவாக குறுகிய காலத்தில் வாரி வழங்கும்.

ஜாதகிக்கு 8ம் பாவகம் சர ராசியாக அமைந்து தீமையை தருவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை குறுகிய காலத்தில் தரும், 12ம் பாவகம் ஸ்திர ராசியாக அமைத்து தீமையை தருவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 75% விகித இன்னல்களை தொடர்ந்து ஸ்திரமாக தந்துகொண்டே இருக்கும்.

மேற்கண்ட யோக அவயோக பலன்கள் ஜாதகிக்கு எப்பொழுது நடைமுறைக்கு  வரும் என்பதை இனி ஆய்வு செய்வோம் .

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் திசை சூரியன் திசை ( 13/08/2014 முதல் 13/08/2020 வரை ) 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 3ம் வீடு சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலனை தருவது 11ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோகத்தையும், 3ம் பாவக வழியில் இருந்து 80% விகித யோகத்தையும் தரும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் சந்திரன் திசை ( 13/08/2020 முதல் 13/08/2030 வரை ) 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 9ம் பாவக வழியில் இருந்து 80% விகித யோகத்தையும் தரும்.

ஜாதகிக்கு சந்திரன் திசைக்கு அடுத்து வரும் செவ்வாய் திசை ( 13/08/2030 முதல் 13/08/2037 வரை ) 6,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 75% இன்னல்களை செவ்வாய் திசை முழுவதும் தொடர்ந்து குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த வண்ணமே இருக்கும்.

ஜாதகிக்கு செவ்வாய் திசைக்கு அடுத்து வரும் ராகு திசை ( 13/08/2037 முதல் 14/08/2055 வரை )  6,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 75% இன்னல்களை செவ்வாய் திசை முழுவதும் தொடர்ந்து குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த வண்ணமே இருக்கும். எனவே ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் சூரியன் திசையும், எதிர்வரும் சந்திரன் திசையும் சரியான வயதில் நல்ல யோகத்தை தருவதால், குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து சர,ஸ்திர,உபய ராசிக்கு உற்பட்ட யோக பலன்களை அனுபவிக்கும் யோகத்தை தருவது வரவேற்க தக்கதே, தற்பொழுது நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் சிறப்பான நன்மைகளை செய்வதால் ஜாதகி கவலை கொள்ளாமல், தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் நடைமுறையில், எதிர்வரும் திசை அமைப்பில் இருந்து யோக பலன்களை அனுபவிப்பதே சிறப்பானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ?



கேள்வி :

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ? ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் திருமண வாழ்க்கை கடுமையாக பாதிக்க படுமா? 

பதில் :

 பொதுவாக திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு, பாரம்பரிய முறை படி நட்சத்திர பொருத்தம் காணும் பொழுது 10 பொருத்தங்களில் குறைந்த பட்சம் 6 பொருத்தம் வேண்டும் என்பதும், அதில் குறிப்பாக கயிற்று பொருத்தம் எனும் ரஜ்ஜு பொருத்தம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்யலாம், இல்லை எனில் திருமணம் செய்வது, தம்பதியர் ஒற்றுமைக்கும், திருமண வாழ்க்கைக்கும் பங்கம் வரும் என்றும், அதிக  பட்சமாக தம்பதியர் இருவரில் ஒருவருக்கு உயிர் சேதம் கூட ஏற்ப்படலாம் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் குறிப்பிடுவது உண்டு, இதை பற்றிய உண்மை விளக்கம் என்ன? என்பதை இந்த பதிவில் காண்போம் அன்பர்களே!

திருமண வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைய, மணமகன் மற்றும் மணமகளின் சுய ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைவதை விட ( ரஜ்ஜு பொருத்தம் உட்பட ) ஜாதக பொருத்தம் எனும் 12 பாவக அமைப்புகள் மிக வலிமையுடன் அமைவதே சிறந்தது, காரணம் ஒருவரின் திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வது, நட்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் அல்ல, சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமுமே என்றால் அது மிகையில்ல, ஒருவரின் திருமண வாழ்க்கையில் நட்சத்திர பொருத்தத்தின் பங்கு என்பது வெறும் 5% சதவிகிதமே, மீதி 95% சதவிகிதம் ஜாதகத்தின் பாவக அமைப்பே திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும்.

கடந்த 25 வருட காலங்களுக்கு முன்பு, திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வதற்கு, பெயர் பொருத்தம் மற்றும் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையில் வரும், நட்சத்திரத்தை கொண்டு  நட்சத்திர பொருத்தம் பார்த்து  திருமணம் செய்தனர், இதற்க்கு காரணம் அந்த காலகட்டங்களில் அனைவருக்கும் ஜாதக இருந்ததா? என்றால் ? நிச்சயம் இல்லை என்பதே அதன் பதில், மேலும் பிறந்த நேரம் என்பது சரியாக குறித்து வைத்து ஜாதகம் எழுதினார்களா என்றால் அதுவுமே ஒரு கேள்வி குறியே! ஆக திருமணம் செய்ய அவர்களுக்கு இருந்த ஒரே வழி நட்சத்திர பொருத்தம், மற்றும் நாம நட்சத்திர பொருத்தம், இதன் வழியில் பாரம்பரியமாக நட்சத்திர பொருத்தம் கண்டு திருமணம் செய்து வந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது, இந்த நவீன உலகத்தில் பிறந்த நேரத்தை மருத்துவரகள் தெளிவாக குறித்து கொடுத்து விடுகின்றனர், மேலும் முறையாக ஜோதிடம் பயின்றவர்கள் இறை அருளின் கருணையினால், ஜோதிட கணிதம் கொண்டு பிறந்த நேரத்தை சரியாக கணிதம் செய்துவிட முடியும்.

இங்கே ஜோதிடதீபம் குறிப்பிட விரும்புவது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையுடன் அமரும்பொழுது, ரஜ்ஜு பொருத்தம் எனும் ஒரு விஷயம் எதுவும் செய்வதில்லை, இதற்க்கு உதாரணம் நிறைய உண்டு, திருமணம் செய்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் ஒன்றையே காரணம் காட்டி திருமணத்தை தடை செய்வது, உண்மையில் ஜோதிடம் கணிதம் பற்றி ஒன்றும் தெரியாத கத்து குட்டிகள் செய்யும் ஒரு வேலை என்பதே ஆகும், ஏனெனில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 அமைந்தும் சிலரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி விடுவதற்கு காரணம் சுய ஜாதகத்தில், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் பாதிக்கபட்டு இருப்பதே என்றால் அது மிகையில்லை.

அடிப்படையில் நட்சத்திர பொருத்தம் மட்டும் நன்றாக அமைந்த இருவரின் ஜாதகத்தில், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும், பாதக ஸ்தானத்துடனோ அல்லது 6,8,12ம் பாவகங்களுடனோ தொடர்பு பெற்று இருக்குமாயின், இருவரின் திருமண வாழ்க்கை என்பது நெடுநாள் நீடிக்காது, குறுகிய காலத்தில் மணமுறிவுக்கு அழைத்து சென்று விடும், தற்பொழுது விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றம் முன்பு நிற்கும் தம்பதியர் அனைவரின் ஜாதகத்திலும், இந்த நிலையை இருப்பதை, அவர்களின் சுய ஜாதகத்தை பார்க்கும் பொழுது நாம் தெள்ள தெளிவாக காணலாம்.

 மேலும் தாமத திருமணம் என்ற ஒரு விஷயம் தற்பொழுது அதிகரித்து வருவதற்கு காரணம் சுய ஜாதகத்தில் மேற்கண்ட இரண்டு பாவகங்கள் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் என்பதே முற்றிலும் உண்மை, ஆக திருமணம் சிறப்பாக அமைய மணமகன் மற்றும் மணமகள் இருவரின் ஜாதகத்திலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களை பின்வரும் வரிகளில் ஜோதிடதீபம் தங்களுக்கு விளக்கமாக தெரிவிக்கிறது, இதை பின்பற்றி திருமண வாழ்க்கையை அமைத்துகொள்ளும் பொழுது, தம்பதியர் இருவரும் இல்லற வாழ்கையை மகிழ்ச்சியுடன், வாழையடி வாழையாக 16 வகை செல்வமும் பெற்று, சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்பதில் பெருமை கொள்கிறது ஜோதிடதீபம்.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

1) அடிப்படையில் இருவரின் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் மிகவும் சிறப்பாக இருப்பது, தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அமைத்து தரும், குடும்பத்தில் இனிமை நிலவ இருவரின் சம்பாசனை எனும் பேச்சே அடிப்படையாக அமைகிறது, ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளும் தன்மையும், அதனை சரியாகவும் உண்மையாகவும் புரிந்துகொள்ளும் தன்மையை தரும், தேவையின்றிய வீண் பேச்சுகளை தவிர்த்து, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உண்டான விஷயங்களை மட்டுமே பேசி, குடும்பத்தை சிறப்பாக நடத்த இந்த பாவகம் வலிமையுடன் அமைவது நல்லது.

மேலும் குடும்பம் நடத்துவதற்கு அவசிய தேவையான தன்னிறைவான, வருமானத்தை தருவது குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமே! சிலரின் வாழ்க்கையில் திருமணதிற்கு பிறகு மிகப்பெரிய பொருளாதார ரீதியான வெற்றியை பெறுவதற்கு காரணமாக அமைவது இதுவே என்றால், அது மிகையில்லை, மேலும் தனது குடும்பத்திற்காக சேமிக்கும் அமைப்பை தருவதும் இந்த இரண்டாம் பாவகமே, இந்த பாவகம் நல்ல நிலையில் அமையவில்லை எனில், நட்சத்திர பொருத்தம் எனும் ஒருவிஷயம் இதில் எந்த  ஒரு மாற்றத்தையும் தந்து விடாது.

2) அடுத்து இருவரின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் சிறப்பாக இருப்பது, தம்பதியர் இருவரின் எண்ணம் மற்றும் உடல் மொழிகள் , செயல்பாடுகளை சிறப்பாக புரிந்து கொள்ள முடியும், இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருக்கும் அமைப்பை தரும், களத்திர பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் ஒற்றுமையையும், ஒருமித்த இல்லற வாழ்க்கையின் வெற்றியையும் உறுதிபடுத்தும். தம்பதியரின் உடல் அமைப்பையும், மன அமைப்பையும் ஒருங்கிணைப்பது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமே, மேலும் ஒருவரை ஒருவர் சிறப்பாக புரிந்து கொண்டு, ஒருவருக்காக ஒருவர் விட்டுகொடுத்து வாழும் இனிமை நிறைந்த வாழ்க்கையை தருவது இந்த களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெற்று அமைந்தால் மட்டுமே சாத்திய படும்.

தம்பதியர் இருவரின் உடல் அமைப்பில் நல்ல தேஷஸ் மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்தை தருவதும், இந்த அமைப்பே இருவரின் வாழ்க்கையிலும் உடல் ரீதியான எந்த ஒரு பிரச்சனையும் தராமல், சிறந்த உடல் நலம், அறிவு திறன், சிறந்த சிந்தனை ஆற்றல், சரியான முடிவெடுக்கும் அறிவாற்றல் என்ற அமைப்பில் நன்மையான பலன்களை வாரி வழங்குவது, இந்த களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமே, மேலும் சமுதாயத்தில் நல்ல மதிப்பு அந்தஸ்து கௌரவம் போன்ற விஷயங்களை அதிகரிக்க செய்வதும், கூட்டு முயற்ச்சி, பொதுமக்கள் ஆதரவு அரசியல், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிறந்த நன்மைகளை வாரி வழங்குவது களத்திர பாவகத்தின் தன்மையும், தனக்கு அமையும் வாழ்க்கை துணையின் களத்திர பாவகத்தின் வலிமையுமே, இந்த களத்திர பாவகம் நல்ல நிலையில் அமையாத பொழுது, ரஜ்ஜு பொருத்தம் சிறப்பாக அமைந்தாலும் எந்த ஒரு நன்மையையும் வழங்காது, ரஜ்ஜு பொறுத்ததினால் எந்த ஒரு பயனும் இல்லை.

3) மேலும் தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது, தனது சந்ததிக்கு ஒரு சிறந்த ஆண் வாரிசை பெற்று தரும், தனது  சந்ததிகள் வழியில் வந்த அறிவாற்றலையும், புத்திசாலிதனத்தையும் மேம்படுத்தி வாழ்க்கையில் சிறந்த வெற்றி வாய்ப்பினை பெற்று தரும்.

4) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெறுவது, இருவரின் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும், உடல் ரீதியான தொடர்புகளால் பெரும் மகிழ்ச்சி மற்றும் இணக்கமான அன்பையும் உறுதிபடுத்தும், மேலும் ஆண்கள் ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெறுவது தனக்கு வரும் வாழ்க்கை துணையை சிறப்பாக வைத்திருக்கும் தன்மையை தரும் மேலும் இறுதி வரை தம்பதியர் ஒற்றுமையாக வாழும் யோகத்தை தங்கு தடையின்றி தரும்.

5) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெறுவது, பூரண  ஆயுளையும், கணவன் வழியில் இருந்து மனைவி பெரும் அதிர்ஷ்டம் மற்றும் வருமான யோகத்தையும், மனைவி வழியில் இருந்து கணவன் பெரும் அதிர்ஷ்டம் மற்றும் வருமான யோகத்தையும் அறிந்துகொள்ள இயலும், இருவரின் ஜீவன வருமான வாய்ப்புகள் பற்றியும், பொருளாதார முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் பற்றியும் தெளிவாக தெறிந்து கொள்ள இயலும்.

6) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெறுவது, இருவரின் அந்தரங்க வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியையும், மன நிம்மதியான வாழ்க்கையையும், போராட்டம் இல்லாத திருப்தியான
அமைதியான வாழ்க்கையை அமைத்து தரும், இருவருக்கும் உறவுகளில் கிடைக்கும் அந்தஸ்து கௌரவம் மற்றும் சிறப்பு மரியாதை போன்ற விஷயங்களை 12ம் பாவக வழியில் இருந்து தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

மேற்கண்ட விஷயங்களே திருமண வாழ்க்கைக்கு அவசியமாக சுய ஜாதக ரீதியாக நாம் கவனிக்க வேண்டும்.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய ஜாதக ரீதியாக தவிர்க்க  வேண்டிய விஷயங்கள் :

1) சுய ஜாதக ரீதியாக நட்சத்திர பொருத்தத்திற்கு முக்கியத்துவம் தந்து, ஜாதக பொருத்தத்தை உதாசீனம் செய்வது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தர வாய்ப்பில்லை. ஏனெனில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நிறைய பேர் பிறந்திருக்க வாய்ப்புண்டு, பிறந்த நேரப்படி ஜாதக பாவக அமைப்புகள் ஒருவருக்கு இருப்பதை போன்று மற்றவருக்கு இருக்க வாய்ப்பு இல்லை.

2) செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், தார தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் என்று வகைக்கு 5 அல்லது 6 தோஷங்களை பிரித்து வைத்து கொண்டு மக்களை குழப்புவது, சம்பந்தபட்ட ஜோதிடருக்கே பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து விடும்.

3) குறிப்பாக விரும்பி திருமணம் செய்துகொள்ளும் அன்பர்கள் மேற்கண்ட விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் திருமணம் செய்துகொள்வது நல்லது, திருமணம் செய்துகொண்ட பிறகு தங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களது திருமண வாழ்க்கைக்கு தாங்கள் கொடுக்கும் மதிப்பு.

4) ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

5) ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது, மூலம் மாமனாருக்கு ஆகாது என்று  நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு வந்த வாய்வழி செய்திகளை நம்பி திருமண வாழ்க்கையை தள்ளி போடுவதும், தவிர்ப்பதும் சுத்தமான மூட நம்பிக்கையே அன்றி வேறு எதுவும் அல்ல.

உண்மையான ஜாதக பலனை, சுய ஜாதக ரீதியாக தெரிந்துகொண்டு வாழ்கையில் சகல நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது , வாழ்த்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஜோதிட ஆலோசனை : சுக்கிரன் திசை வழங்கும் சுபயோக பலன்கள் !



மேற்க்கண்ட ஜாதகிக்கு நடந்து கொண்டு இருக்கும் சுக்கிரன் திசை , லக்கினம் , சகோதர ஸ்தானம் , பூர்வ புண்ணியம் , லாப ஸ்தானம் எனும் பாவகங்கள் அனைத்தும் ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகதுடன் சம்பந்தம் பெற்று தனது பலனை நடத்தி கொண்டு இருப்பது ஜாதகிக்கு மிகுந்த நன்மையை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது .

 மேலும் ஜாதகியின் ஜீவன ஸ்தானம் என்பது கடக ராசியாக வருவது 100 சதவிகித நன்மையை தரும் அமைப்பாக கருதலாம்  , கடந்த 1996 ல் ஆரம்பித்த சுக்கிர திசை ஜாதகிக்கு கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையையும் , சுயமாக யாருடைய உதவியும் இன்றி முன்னேற்றம் பெரும் யோகத்தையும் , பொருளாதார வாழ்க்கையில் தன்னிறைவான அமைப்பையும் , பட்ட படிப்பு முடிந்த உடன் ஒரு சிறந்த நிறுவனத்தில் நல்ல வருமானத்துடன் பணியாற்றும் யோகத்தையும் , எதிர்காலத்தில் தனது விருப்பபடி சிறந்த வாழ்க்கை துணையை திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பினையும் ஜாதகிக்கு நடந்து கொண்டு இருக்கும் சுக்கிரன் திசை தடையில்லாமல் வழங்கிக்கொண்டு இருக்கிறது .

இதற்க்கு காரணம் சுக்கிரன் திசை 1,3,5,11 ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவதே மேலும் அந்த ஜீவன ஸ்தானம் சர நீர் தத்துவ ராசியாக இருப்பது ஜாதகிக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது , லக்கினம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகியின் உடல்நிலை மன நிலை ஆகியவற்றையும் , ஜாதகியின் நல்ல குணத்தையும் , திறமை மிக்க அறிவாற்றலையும் தருகிறது வாழ்க்கையில் நல்ல அந்தஸ்தையும் கௌரவமான தொழில் முன்னேற்றத்தையும் தருகிறது , ஜாதகி நினைப்பதை அடையும் யோகத்தை தருகிறது .

 மூன்றாம் பாவகம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகி எடுக்கும் முயற்ச்சிகள் , எண்ணங்கள் யாவும் வெற்றி பெற வழி வகுக்கிறது , நினைத்ததை சாதிக்கும் யோகத்தை தருகிறது , மேலும் பொருளாதாரத்தில் தன்னிறைவையும் , பெரியவர்களை மதிக்கும் பண்பினையும் , சிறந்த புத்தி கூர்மையையும் , உறவு நண்பர்கள் ஆதரவையும் வழங்குகிறது ,.

பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது கலைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலை  தருகிறது , சிறப்பாக பாடும் வல்லமையும் , இனிய  குரல் வளத்தையும் தந்து இருக்கிறது , வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றத்தை  இந்த பாவகம் தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்கிறது , தான்  பெற போகும் குழந்தைகளாலும் ஜாதகி யோக அமைப்பினையே பெறுவார் , ஜாதகிக்கு குல தேவதை மற்றும் இறைநிலையின் அருள் எப்பொழுதும் நிறைந்து  நிற்கிறது .

லாப ஸ்தானம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு தொழில் ரீதியாக  படித்து முடித்த உடன் சிறப்பான நல்ல வேலை வாய்ப்பினை பெற்று தந்தது , மேலும் எதிர்காலத்தில் அரசு துறையில் பணியாற்றும் யோகத்தையும் தரும் , தனது பெற்றோருக்கு மிகுந்த யோகத்தை இதுவரை ஜாதகி தந்து கொண்டு இருப்பது  ஒரு சிறப்பான விஷயம் , குறிப்பாக தந்து தாயிக்கு மிகுந்த  யோகத்தை  தரும் அமைப்பு இது .

இந்த பெண்ணிற்கு மூல நட்சத்திரம் என்றாலும் ஜாதக அமைப்பு மிகுந்த  யோக நிலையில் இருப்பதால் இந்த பெண்ணை மணந்து கொள்ளும் நபருக்கு  யோகமான வாழ்க்கையே காத்துகொண்டு இருக்கிறது என்பதே உண்மை .

பொதுவாக பெண்ணின் ஜாதகம் இதை போன்று இருப்பது ஜாதகி மற்றும் ஜாதகியை சார்ந்தவர்களுக்கு  மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும் , மேலும் நட்சத்திரத்தால்  எவ்வித துன்பமும் வருவதிற்கு வாய்ப்பில்லை , மேலும் பிறந்த  நட்சத்திரம் ஒன்றை மட்டும் வைத்து பலன் காணுவது ஜாதக பலன்களை  சரியாக சொல்ல உதவாது .

மேற்கண்ட ஜாதகத்தில் யோக பலன்களை வாரி வழங்குவதில் முக்கிய பங்காற்றும் கிரகங்கள்  ராகு கேது என்றால் அது மிகையாகாது , காரணம் நான்காம்  பாவகத்தில் அமர்ந்த ராகுவும் , ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்த கேதுவும்  ஜாதகத்தில் தான் அமர்ந்த பாவக பலனை 100 சதவிகிதம் விருத்தி செய்வதே  இதற்க்கு காரணம், ஆக இந்த ஜாதக அமைப்பில் ராகு கேது இரண்டு கிரகமும்  மிகுந்த யோக பலன்களையே வழங்கிக்கொண்டு இருக்கிறது , இதன் காரணமாகவே   ஜாதகிக்கு நல்லவர்களின் அறிமுகமும் நடப்பும் வாழ்க்கையில்  கிடைக்கிறது , வாழ்க்கையில் பல முன்னேற்றங்களும் உண்டாகிறது  .

ஒருவருக்கு வாழ்க்கையில்  நல்ல நண்பர்கள் , நல்ல உறவினர்கள் , நல்ல மனிதர்களை இணைத்து வைப்பதில் ராகு கேது கிரகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு  , இந்த ஜாதகத்தில் அந்த அமைப்பு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடனும் , ஜீவன ஸ்தானமான பத்தாம் பாவக்துடனும் தொடர்பு அந்த பாவக வழியில் இருந்து  நல்லவர்கள் சேர்க்கையும் , முன்னேற்றத்தையும் தரும்  என்பதில் ஆச்சரியம் இல்லை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 15 ஜூன், 2012

மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாத ?



லக்கினம் முதல் மற்ற வீடுகள் அனைத்தும் மிகவும் நல்ல நிலையில் இருக்கும் அமைப்பை பெற்ற  ஜாதகி மிகவும் நல்ல குணங்களும் , யோக அமைப்பை பெற்றவராகவும் இருப்பார், மூல நடசத்திரம் என்ற ஒரே காரணத்திற்க்காக , ஜாதகியை தவிர்ப்பது முற்றிலும் தவறான அணுகு முறை .

ஒரு ஜாதகத்தில் நன்மையான, தீமையான  பலன்களை தருவது பாவகம் எனும் பனிரெண்டு வீடுகளே , நட்சத்திரமல்ல என்பதை உணருங்கள் , நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 அமைந்தாலும் , பாவகங்கள் நல்ல நிலையில் இல்லை எனில் வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்பதே உண்மை , நட்சத்திரத்தை வைத்து ஒரு ஜாதகத்தை நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகு முறை , இதனால் தம்பதியரின் வாழ்க்கை பாதிக்க படுமே அன்றி எவ்வித நன்மையையும் இல்லை.

உண்மையில் மூல நட்சத்திர  பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நபரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்பதெல்லாம், முற்றிலும் பிற்போக்கு தனமான வாதம், பொதுவாகவே மூல நட்சத்திரத்தில் பிறக்கும் பெண்கள் அதி புத்திசாலிகளாக இருப்பார்கள் காரணம் கேதுவின் நட்சத்திரம் அல்லவா இயற்கையாக இவர்களுக்கு புத்திகூர்மையும் அறிவில் சிறந்து விளங்கும் தன்மையும் அமைந்து விடும் , பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு சொல்வதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்பதே உண்மை காரணம்,  இந்த மூல நட்சத்திரம் உபய ராசி தனுசுவில் அமர்ந்து நெருப்பு தத்துவத்தை பெறுவதே இதற்க்கு காரணம்.

உபய ராசி : மற்றவர்களுக்கு பிரதி பலன் பாராமல் உதவி செய்யும் குணம் ,சுய கட்டுப்பாடு கொண்டவர்கள் பரந்த மனப்பான்மை கொண்ட உள்ளம் பெற்றவர்கள்.
உபய நெருப்பு தத்துவம் : இருளில்  வெளிச்சம் தரும் மெழுகு வர்த்திக்கு இணையாக ஒப்பிடலாம் இவர்களை. இவர்களின் வேகமாக சிந்திக்கும் ஆற்றல் மற்றவர்களின் இருளடைந்த வாழ்க்கையில் வெளிச்சத்தை காட்டும் , ஆனால்  மெழுகு வர்த்திக்கு எவ்வித பயனும் இல்லை.

 


இந்த மூல நட்சத்திர பெண்ணை மணந்து வாழ்க்கை நடத்த புகுந்த வீடு செல்லும் பொழுது அங்கு  தனது புத்தி சாலி தனமான நடவடிக்கையால் எல்லோரையும் கவர்ந்து விடும் தன்மை கொண்டவர் , நிர்வாக திறமையும் அதிகம் உண்டு,  எனவே இதுவரை குடும்ப நிர்வாகத்தை கவனித்து வந்த தனது கணவர் மற்றும் மாமனாருக்கு, தனது நல்ல ஆலோசனை சொல்லும் பொழுது கணவன் ஏற்றுகொள்ளும் தன்மையுடன் இருப்பார், ஆனால் மாமனார் ஏற்றுகொள்ள மறுப்பார் காரணம் நேற்று வந்தவள் எனக்கு ஆலோசனை சொல்வதா என்ற பிற்போக்கு எண்ணமே.

 இந்த இடத்தில் தான் மாமனாருக்கும் , மருமகளுக்கும் ஆகாமல் போய் விடுகிறது , இதை ஜோதிடர்கள் மிகை படுத்தி மூல நட்சத்திரம் என்றாலே மாமனாருக்கு ஆகாது என்ற வதந்தியை பரப்பி விட்டு விட்டனர் என்பதே உண்மை,  மக்களும் ஜோதிடர்கள் சொல்வதே வேதவாக்காக எடுத்து கொண்டு,  முலம்  மற்றும் இது போன்ற ஆகாத நட்சத்திரம் என்று சில ஜோதிடர்கள் குறிப்பிடும் நட்சத்திரம்,  பெற்ற பெண்களை ஒதுக்கி தள்ளி விடுகின்றனர்.  இதனால் இந்த நட்சத்திர அமைப்ப கொண்ட பெண்களின் பாடு மிகவும் பரிதாபத்திற்கு உரியது என்பதே உண்மை, மக்கள் இனியாவது வழிப்புணர்வு கொள்வார்களா ?   

   
எந்த ஒரு ஜோதிட நூல்களிலும்  மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது , மாமனாரின் உயிருக்கு ஆபத்து , என்று குறிப்பிட பட்டுள்ளதாக எங்களுக்கு தெரியவில்லை , அப்படி இருப்பின் தயவு கூர்ந்து எங்களது ஜோதிட தீப மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் .
 
ஆக இதில் இருந்து நாம் உணர்ந்து கொள்வது ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வது நட்சத்திரம் அல்ல சுய ஜாதாகமே என்பதே முற்றிலும் உண்மை .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696