வாக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 டிசம்பர், 2016

சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் ( 2,6,8,12 ) வலிமை இழந்தால் ஜாதகருக்கு நன்மை நடைபெறுமா ?


 சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் எனும் 2,6,8,12ம் வீடுகள் வலிமை இழந்து காணப்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வாழ்க்கையில் நன்மைகளை தரும் என்பது பொதுவான கருத்து, தீய ஸ்தானங்கள் வலிமை இழப்பது ஜாதகருக்கு நன்மைதரும், தீமைகள் வெகுவாக குறையும் என்பது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெற்று இருப்பதே சம்பந்த பட்ட ஜாதகருக்கு யோகத்தை நல்கும் அமைப்பாகும், துர் ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் 2,6,8,12 ம் வீடுகள் வலிமை இழப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரை மேற்கண்ட பாவக வழியில் இருந்து தரும் இன்னல்களை அதிகரிக்கும், அடிப்படையில் மறைவு ஸ்தானங்களாக கருதப்படும், 2,6,8,12ம் வீடுகள் ஒரு ஜாதகருக்கு இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது தவறான அணுகுமுறையே, மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கு தனது பாவக நிலையில் இருந்து நன்மைகளையும் தரும்  என்பதை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன் காண முற்படுவதே சால சிறந்தது.


மறைவு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் 2,6,8,12 பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் :

1) 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் குடும்ப வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சி, சந்தோசம், நிம்மதி, நிலையான வருமானம், இனிமையான பேச்சு திறன், வாக்கு பலிதம், வருமானம் மூலம் ஜாதகர் பெரும் பொருளாதார வளர்ச்சி, ஜாதகருக்கு வருமானம் வரும் வாய்ப்புகள், தொடர் வருமானம், ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம், ஜாதகரின் வாழ்க்கை துணை ஜாதகருக்கு தரும் ஆதரவு, பொருளாதார திட்டமிடுதல்கள், சேமிப்பு, தனசேர்க்கை, கையிருப்பு, தனலாபம், தொழில் லாபம், அளவற்ற செல்வம், வரவு செலவுகள் சிறப்பு, சொத்துக்கள் மூலம் வருமானம் பெறுதல், கல்வியின் வழியில் வருமானம், அறிவு பூர்வமான செயல்களினால் வெற்றி, என ஜாதகரின் வருமான வாய்ப்புகளை சிறப்படைய செய்ய நிச்சயம் சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

2) 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தமக்கு வரும் உடல் தொந்தரவுகளை எதிர்க்கும் வல்லமை, ஜாதகருக்கு வரும் எதிர்ப்பு மற்றும் சவால்களை சரியான விதத்தில் எதிர்கொண்டு வெற்றி பெரும் யோகம், தேர்வு மற்றும் தேர்தல்களில் வெற்றி, வட்டி வரவு செலவு, கடன் மூலம் யோக வாழ்க்கை, பணியாளர்கள் மூலம் நன்மை மாற்றும் ஒத்துழைப்பு, மருந்து மற்றும் மருத்துவ உபகரணம் மூலம் லாபம், வழக்குகளில் வெற்றி மற்றும் லாபம் சூது மற்றும் பங்கு சந்தைகளில் லாபம், அனைத்திலும் வெற்றி, எந்த தடையும் இனி அனைத்திலும் வெற்றி பெரும் யோகம், சமாதான பிரியர், பணியாற்றுவதில் ஆர்வம், தோல்வி மற்றும் ஏமாற்றங்களே ஜாதகருக்கு வெற்றியாக மாறுதல் என்ற வகையில் நன்மைகளை பெற சுய ஜாதகத்தில் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

3) 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பூர்ண ஆயுள் பலம், விபத்துகள் மற்றும் இழப்பு அற்ற வாழ்க்கை, உயில் மூலம் லாபம், திடீர் அதிர்ஷ்டம், புதையல் யோகம், இன்சூரன்ஜ், பங்கு வர்த்தகத்தில் லாபம், லாட்டரி மற்றும் பரம்பரை சொத்துக்கள், பெண்கள் வழியில் லாபம், மற்றவர் பணம் கையிருப்பு, எதிர்பாராத யோக வாழ்க்கை, திடீர் தன சேர்க்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, அவர்கள் வழியில் கிடைக்கும் சொத்து சுக  சேர்க்கை, வெற்றிகரமான வியாபரம், எதிர்பாராத திடீர் லாபம், மருத்துவ துறையில் செல்வ சேர்க்கை, தந்தை மற்றும் முன்னோர்களின் சொத்துக்களை சுவீகரிக்கும் வல்லமை, அந்நியரின் சொத்துக்களை பராமரிக்கும் மற்றும் அனுபவிக்கும் யோகம், பினாமி வழியிலான சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம் என்ற வகையில் நன்மைகளை பெற சுய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

4) 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக முதலீடுகள் செய்வதால் பெரும் தன்னிறைவான பொருளாதர முன்னேற்றம், திருப்தியான யோக வாழ்க்கை, வெளிநாடுகள் மற்றும் வெளியூரில் பிரபல்யம் மற்றும் சொத்து சேர்க்கை, மருத்துவம் மற்றும் மருந்துகள் மூலம் மிகுந்த லாபம், பயணம் மூலம் லாபங்கள், அறிய இரத்தின சேர்க்கை, புதையல் மற்றும் மண்ணிற்கு கீழ் கிடைக்கும் உலோக பொருள்கள் மூலம் லாபம், மனோதத்துவத்தில் நிபுணத்துவம், புலனுக்கு அப்பாற்ப்பட்ட சக்திகள் இயங்குவதன் மூலம் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, தாம்பத்திய இன்பம், சுகபோகம், கூட்டு செயல்களில் லாபம், திடீர் லாட்டரி யோகமும் தன சேர்க்கையும் உண்டாகும், திடீர் பொருள் வரவு என்ற வகையில் என்ற வகையில் நன்மைகளை பெற சுய ஜாதகத்தில் விரைய ஸ்தானமான 12ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதுடன், 5,11ம் வீடுகளும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் பொருளாதாரம், குடும்பம், சுய முன்னேற்றம், அதிர்ஷ்டம், மற்றும் தன லாபம் ஆகியவற்றை பதம் பார்க்கும் அமைப்பாகும், 5ம் வீடு பாதிப்படைவது, ஜாதகருக்கு புத்திர பாக்கியத்திர்க்கு தடையையும், 11ம் வீடு பாதிப்பது ஜாதகரின் தன்னம்பிக்கை, அதிர்ஷ்டம், சுய லாபங்களை கேள்விக்குறியாக்கும், மேலும் ஜாதகரின் விரைய ஸ்தானம் ஸ்திர ராசியில் அமைவது நிலையான சிரமங்களை மேற்கண்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும்.
 
மேலும் தற்போழுது நடைபெறும் சனி திசை ( 31/12/2012 முதல் 01/01/2032 ) 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு மிகுந்த சிரமத்தை தனது திசையில் தரும் அமைப்பாகும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டது இன்னல்களை தரும் அமைப்பு என்ற போதிலும், தற்போழுது நடைபெறும் சனி திசை விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்திடுவது ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், தரப்பொழுது நடைபெறும் சனி திசை காலத்தில் ஜாதகர் பெருவாரியான அமைப்பில் குடும்பம் மற்றும் பொருளாதர சிக்கல்களையும், ஜீவன மேன்மையற்ற தன்மையையும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர், ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில் வாழ்க்கை துணையுடனனான இன்னல்களையும், வருமானம் சார்ந்த தொந்தரவுகளும் தற்போழுது அதிக அளவில் இருப்பது கவனிக்க தக்கது, மேலும் சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வல்லமையை கூட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை தரவில்லை என்பது, சனி திசை 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஸ்திரமான விரைய ஸ்தான பலனை தருவதே அன்றி வேறு எதுவும் இல்லை அன்பர்களே!

எனவே சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் வலிமை இழப்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த கடுமையான பாதிப்புகளை தரும் என்பதே முற்றிலும்  உண்மை, மாறாக சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் வலிமை இழப்பது நன்மையை தரும் என்று கருதுவது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகவே அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 20 ஜூன், 2016

தொழில் மற்றும் லாப ஸ்தான வலிமையையும், அபரிவிதமான பொருளாதார முன்னேற்றமும் !


"ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்."

"ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்."

மிக பெரிய தொழில் வெற்றிகளையும், ஜீவன முன்னேறங்களையும் பெறுவதற்கு மேற்கண்ட திருக்குறள் படிப்பினையாக அமையும், சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப, தமக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பை தேர்வு செய்துவிட்டால், ஜீவன வழியில் தன்னிறைவான முன்னேற்றம் பெறுவது என்பது இயல்பாகவே நடைபெற ஆரம்பித்துவிடும், பொருளாதார வசதி வாய்ப்புகளும், வண்டிவாகன யோகமும், சொத்து சுக சேர்க்கையும் சம்பந்த பட்ட ஜாதகரை தேடிவரும், ஜாதகரால் இயலாத காரியம் ஒன்று இல்லை என்ற நிலையை தரும், இதற்க்கு சுய ஜாதகத்தில் பாவக வலிமை சிறப்பாக அமைவது அவசியமாகிறது, கிழ்காணும் உதாரண ஜாதகத்தில் ஜீவனம் மற்றும் லாப ஸ்தான வலிமையை பற்றி, இந்த பதிவில் சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்சத்திரம் : பூசம் 3ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,3,4,5,7,8,9,11,12ம் வீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது.

2,6,10ம் வீடுகள் ஜீவனம் மற்றும் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது.

மேற்கண்ட ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும், மேலும் நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கையில் யோகங்களுக்கு குறைவிருக்காது, ஜாதகரின் முன்னேற்றத்திற்கு தடையிருக்காது.

பொதுவாக ஜீவன ஸ்தான வலிமை  என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் தனிப்பட்ட தொழில் முன்னேற்றத்தையும், தன்னிறைவான பொருளாதார நன்மைகளையும் வாரி வழங்கும், ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் ஞானத்தையும், லாபஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தையும், தான் அனுபவிக்க இருக்கும் யோக பலன்களின் தன்மையையும் அறிவுறுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு கற்ற கல்வி வழியில் இருந்து வாக்கு வன்மையும், மிகசிறந்த பேச்சு திறனையும், 2ம் பாவக வழியில் இருந்து கிடைக்க பெறுவார், மேலும் வாக்கு வழியில் இருந்து பொதுமக்கள் ஆதரவையும், மக்கள் செல்வாக்கையும், பேச்சை ஆதராமாக கொண்ட வருமான வாய்ப்பையும் பெறுவார், 6ம் பாவக வழியில் இருந்து திடீர் தொழில் வெற்றிகளையும் தொடர் வருமான வாய்ப்புகளையும் தரும், தன்னிறைவான வருமானம் எதிர்பாரமால் கிடைக்க பெறுவார், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தும் சாதகமாக மாறும், தான் செய்யும் தொழிலில் நுண்ணறிவு திறனையும், சிறந்து விளங்கும் தன்மையையும் தரும், 10ம் பாவக வழியில் இருந்து செய்யும் தொழிலில் வெற்றியையும், தன்னிறைவான தொழில் முன்னேற்றத்தையும் தரும், சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும், கௌரவம் குறைவில்லா வாழ்க்கையயும், அரசு  ஆதரவும் உண்டாகும், அடிப்படையிலேயே வியாபர நுணுக்கமும், அறிவு திறனும் பெற்று இருப்பார், வாழ்க்கையில் ஜீவன வழியில் எவ்வித தடைகளும் வர வாய்ப்பில்லை, வந்த போதிலும் அதை சிறப்பாக கையாண்டு வெற்றி பெரும் வல்லமையை தரும்.

ஜீவன ஸ்தான அதிபதியாக சுக்கிரன் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல சுக போகங்களை வாரி வழங்கும், ஆடை ஆபரணம், வண்டி வாகனம், பொதுமக்கள் மக்கள் விரும்பு உயர் மதிப்பு கொண்ட ஆடம்பர பொருட்கள், கலை துறை போன்ற தொழில்களில் நல்ல வெற்றி வாய்ப்பும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வியாபரத்தில் அபரிவிதமான ஜீவன முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், சொல்வ செழிப்பு தேடிவந்து குவியும், இந்த ஜாதகம் குறைந்த முதலீட்டில் அபரிவிதமான லாபங்களை குறுகிய காலத்தில் குவிக்கும் ஜாதக அமைப்பாகும், மேலும் சொந்த முயற்ச்சியில் சகல முன்னேற்றங்களையும் பெரும் யோக அமைப்பை தரும், பல தொழில் செய்யும் அறிவு திறனையும், பல வழிகளில் இருந்து வருமானங்களையும் வாரி வழங்கும், தனது முடிவில் இருந்து மாறாத மன நிலையையும், உறுதியான செயல்பாடுகள் மூலம் வெற்றியை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் சிந்தனை மற்றும் அறிவு திறனே சகல நிலைகளில் இருந்தும் ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும், தனக்கென்று ஒரு வழிமுறையை கையாண்டு வெற்றி பெரும் யோகத்தை தரும், திட்டமிடுதல்களும் செயல்பாடுகளும் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளை வாரி வழங்கும்.

1,3,4,5,7,8,9,11,12ம் வீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் இலக்கின வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலை, நல்ல உடல் மனம் நலம், முற்போக்கு சிந்தனை, அனைத்திலும் அதிர்ஷ்டத்தை பெரும் யோகத்தை தரும், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றியை பெரும் யோகம் உண்டாகும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சியில் வெற்றி, வியாபரத்தின் மூலம் சகல யோகங்களையும் பெரும் தன்மை, பயணங்களில் லாபம், சமயோசித புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை மற்றும் வீரியமிக்க செயல்பாடுகள், மனதில் நினைத்ததை சாதிக்கும் வல்லமை, அதிகார யோகம், கட்டளையிடும் இடத்தில் நிற்கும்  யோகம், சகல சௌபாக்கியம் என்ற வகையில் யோகங்களை வாரி வழங்கும்.

4ம் பாவக வழியில் சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், சகல வசதிமிக்க வீடு, மற்றும் நிறுவனம், செய்யும் தொழில் வழங்கும் லாபங்களை சொத்துகளாக மாற்றும் யோகம், சுக போகங்களை அனுபவிக்கும் தன்மை, செல்லும் இடங்களில் நல்ல வரவேற்ப்பு, நல்ல குணநலம், பெருந்தன்மையான மனம், சகலருக்கும் உதவும் தன்மை,  தன்னை சார்ந்தவர்களை ஆதரிக்கும் குணம், உதவி செய்வதன் மூலம் நற்ப்பெயர், பெற்றோர் வழி ஆதரவு, மிதமிஞ்சிய சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கையில் வரும் செல்வ சேர்க்கையை கண்டு கர்வம் கொள்ளாத மன நிலை, எப்போதும் எளிமையை கடைபிடிக்கும் மன நிலையை தரும். 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியில் இருந்து பலன்பெறுதல், சமயோசித புத்திசாலித்தனம், எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவு திறன் கொண்டு வெல்லும் யோகம், மனம் தளர்வடையா தன்மை, அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், எந்த சூழ்நிலையிலும் உதவி செய்யும் உறவுகள் மற்றும் நண்பர்கள், மாற்று இனம் மாற்றும் மதத்தினரும் ஆதரவு தரும் நன்னடத்தை, தர்மத்தையும் உண்மையையும் போற்றும் குணம், பொதுவாழ்க்கையில் நேர்மை, போதும் என்ற மன நிலை, குல தேவதையின் பரிபூரண நல்லாசிகள் எந்த சூழ்நிலையிலும் ஜாதகரை காக்கும் வல்லமை, புதுமை விரும்பி, ஆராய்ச்சி மன நிலை, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகிற்க்கு சகல நன்மைகளையும் தரும் யோகம் என ஜாதகர்
 பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து சகல யோகங்களையும் தரும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகர் முறியடித்து நன்மையை பெறுவார்.

7ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், கலைதுறையில் செல்வாக்கு, அதிக லாபம், கூட்டு முயற்ச்சியின் மூலம் லாபம், பொதுமக்கள் ஆதரவு மற்றும் செல்வாக்கு, தன்னிறைவான வியாபர விருத்தி, உலக புகழ், பல தொழில்களை நிர்வகிக்கும் வல்லமை, நல்ல வலிமை மிக்க கூட்டாளி, செல்லும் இடங்களில் நல்ல பெயரும் புகழும் உண்டாகும் யோகம், குறுகிய காலத்தில் சகல செல்வாக்கையும் பெரும் யோகம், வியாபாரத்தின் மூலம் சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் என களத்திர வழியில் இருந்து சிறப்பான நன்மைகள் உண்டாகும், 8ம் பாவக  வழியில் இருந்து புதையல் யோகம், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வருமானம் மற்றும் சொத்துகள், கூட்டாளியின் மூலம் லாபம் பெரும் யோகம், நீண்ட ஆயுள், மிகப்பெரிய லட்சியங்கள் மற்றும் திட்டமிடுதல்களை சுவீகரிக்கும் வல்லமை, திடீர் பொருள் வரவு என ஆயுள் பாவக நன்மைகளை தங்கு தடையின்றி பெரும் யோகத்தை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து நல்லறிவு, ஆன்மீக ஞானம், பெரியோர் ஆசிர்வாதம், புண்ணியம் மிக்க செயல்பாடுகள், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், பல்துறை அறிவு திறன், நல்ல கல்வி அறிவு, ஆராய்ச்சி மூலம் புதுமையான கண்டுபிடிப்புகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறும் யோகம், அனைவரிடமும் நற்ப்பெயர் பெரும் யோகம், சமூகத்தில் நன்மதிப்பு, பெயரும் புகழும் தேடிவரும் தன்மை, பெருதன்மை மிக்க நற்குண நலன்கள் மூலம் அனைவரின் ஆதரவையும் பெறுதல், புகழ் மிக்க பொறுப்புகளை நிர்வகிக்கும் வல்லமை, அனைவரையும் ஆதரிக்கும் யோகம், பித்ருக்கள் ஆசிர்வாதம் என ஜாதகர் பாக்கிய ஸ்தான பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்டசாலி, முற்போக்கு சிந்தனை, நினைத்ததை பெரும் யோகம், நல்ல குணம், எதிர்ப்புகளை வெற்றியாக்கும் தனித்தன்மை, செல்வ நிலையில் திருப்தி, தேடி வரும் வெற்றி வாய்ப்புகள், அபரிவிதமான செல்வசெழிப்பு, அனைத்திலும் லாபம், லாபநோக்க சிந்தனை, வெற்றிக்கான சரியான திட்டமிடுதல்கள், வருமுன் உணரும் மனநிலை என லாப ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து முதலீடுகளில் நல்ல லாபம், நல்ல உறக்கம், ஆன்மீக வெற்றி, நிறைய சொத்துகள், திருப்தியான மன நிலை தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி, நல்ல மன நிம்மதி, எதிர்காலத்திர்க்கான சேமிப்பு, அசையும் அசையா சொத்துகள், பொது வாழ்க்கையில் நேர்மை, தொழில் முதலீடுகள் நல்ல லாபம் தரும் யோகம் என அயன சயன சுக போகங்களை வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையை விட, லாப ஸ்தான வலிமை மேலோங்கி நிற்பது, சிறப்பான தொழில் வெற்றிகளையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், எனவே சுய தொழில் மூலம் குறுகிய கால வெற்றிகளை வாரி வழங்கும், மேலும் எதிர்வரும் சுக்கிரன் திசையில் நல்ல தொழில் வளர்ச்சியையும், அதற்க்கு பிறகு வரும் சூரியன், சந்திரன், செவ்வாய் திசைகளில் அபரிவிதமான லாபங்களையும் தரும் என்பதால் ஜாதகர் பின்யோக ஜாதகர் என்பது உறுதியாகிறது, 45 வருடங்களுக்கு மேல் ராஜ யோகங்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 4 ஜூன், 2014

ரிஷப லக்கினம் - இலக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் !




கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷப ராசியை லக்கினமாக கொண்ட ஜாதகருக்கு, லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

 ரிஷபம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாகவும் ஸ்திர மண் தத்துவ ராசியாக அமைவதால் ஜாதகர் மிகவும் பொறுமைசாலியாக திகழ்வார், மண் தத்துவம் ஜாதகரின் உடல் அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கு உதவும், ஜாதகரின் உடல் வலிமையையும் மிகவும் சிறப்பாக இருக்கும், உடல் உறுப்புகளின் இயக்கம் மிகவும் செம்மையாக அமையும், எனவே ஜாதகரின் மன நிலையும் உடல் வலிமையையும் ஜாதகருக்கு ஆயுள் முழுவதும் சிறப்பாக அமைந்து விடும்.

 பொதுவாக ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்கள், எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையாளும் தன்மை பெற்றவர்கள், இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டே சகல அமைப்புகளிலும் வெற்றி காணும்  குணம் கொண்டவர்கள், சிந்தனை செய்யாமல் எந்த ஒரு காரியத்திலும் இறங்கமாட்டார்கள், இவர்களின் பொறுமையும் சிந்தனை ஆற்றலும் படிப்படியான வெற்றிகளை தொடர்ந்து வழங்கி கொண்டே  இருக்கும், பேச்சு திறைமை மிக்கவர்களாக இருப்பார்கள், தனது பேச்சாற்றல் மூலம் மக்களை கட்டிபோடும் வல்லமை பெற்றவர்கள்,

 இவர்களின் வளரும் சூழ்நிலை என்பது மிகவும் வசதிமிக்க இடத்தில் அமையும், சகல செல்வங்களும் பிறவியில் இருந்தே நுகரும் யோகம் பெற்றவர்கள், கலைகளில் அதிக ஈடுபடும், தேர்ச்சியும் அடையும் யோகம் உண்டாகும், தான் எடுத்துக்கொண்ட துறையில் தன்னிகரற்று விளங்கும் யோகத்தை தரும், இசையில் மிகுந்த ஆர்வமும் தன்னிகரற்ற தனி திறமையும் கொண்டவர்கள், பல்வேறு இசை வாத்தியங்களை சிறப்பாக கையாளும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள்.

 ரிஷப லக்கினத்திற்கு மேற்கண்ட சிறப்புகள் இருந்த போதிலும், சற்று பயந்த  சுபாவம் கொண்டவர்களாகவே இருப்பார்கள், பிரச்சனைகள் உள்ள இடங்களில் இவர்கள்  இருக்க விரும்புவதில்லை, மேலும் தனிமையில் இருப்பதும் இவர்களுக்கு பிடிக்காத ஒன்றாகவே கருதலாம், இரவில் தனியாக செல்வதற்கு இவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை, லக்கினத்துடன் செவ்வாய் அல்லது ராகு சம்பந்தம் பெரும் பொழுது மேர்கண்டதிர்க்கு எதிர்மறையான பலன்களே நடைபெறும், ஜாதகர் எவ்வித பயமும் இல்லாமல் மிகுந்த தைரியாசாலியாகவும் வீரம் மிகுந்தவராகவும் காணப்படுவார்.

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாக ரிஷபம் அமைவதால், இந்த லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு வாக்கு பலிதம் இயற்கையாக அமைந்துவிடும், தன சேர்க்கை ஜாதகருக்கு தாரளமாக குறைவின்றி வரும், அல்ல அல்ல குறையாத செல்வ சேர்க்கை உண்டாகும், ஜாதகர் சொல்லும் நல்வாக்கு எப்பொழுதும் பலிதம் பெரும், இறைஅருளும் ஜாதகருக்கு இயற்கையாகவே கிடைக்கும், ஆன்மீக பெரியோரின் ஆசிர்வாதம் ஜாதகருக்கு இளம் வயதிலே கிடைக்க பெரும் யோகம் பெற்றவர்கள், இவர்களின் வளர்ச்சி என்பது எவ்வித சிரமங்கள் இன்றி மிகவும் சிறப்பாக அமையும்.

மற்றவர்களை நம்பி ஏமாறுவதற்கு உண்டான வாய்ப்புகள் ஜாதகருக்கு அடிகடி வர கூடும், கள்ளம் கபடம் அற்ற இவரின் குணத்தை பலர் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டபோதிலும், மன்னிக்கும் மனப்பான்மையை இயற்கையாக பெற்று இருப்பார்கள், எவ்வித சூழ்நிலையிலும் நேர்மை மாறாத குணத்தையும், தன்னம்பிக்கையையும் கைவிடாத மன நிலையும் ஜாதகர் பெற்று இருப்பார்.

கலை துறையில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், சிறந்த படைப்புகளை மக்களுக்கு எளிதில் "விளங்கும் வண்ணம்" மக்களிடம் கொண்டு செல்லும் ஆற்றல் பெற்றவர்கள் , தனது வித்தியாசமான அணுகு முறையால் பல புதுமைகளை கலைத்துறையில் பயன்படுத்தி  அதில் 100% வெற்றியை பெறுபவர்களும் இவர்களே என்றால் அது மிகையல்ல, இனிமையான குரல் வளம் கொண்டவர்கள் என்பதால் இசை துறையில் நல்ல எதிர்காலம் உண்டு முறையான பயிற்ச்சி ஜாதகருக்கு உலக புகழ் சேர்க்கும்.

ரிஷப ராசியை லக்கினமாக கொண்டு லக்கினம் வலிமை பெரும் அமைப்பை பற்றி  இனி பார்ப்போம் ரிஷப ராசியை லக்கினமாக பெற்றவர்களின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு 1,2,3,4,5,7,9,10 பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும், 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து தீய பலன்களை அனுபவிக்கும் நிலை உண்டாகும். பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் சம்பந்தபட்ட பாவக  வழியில் இருந்து 200 மடங்கு தீய பலன்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவார்.

ஆக ரிஷப லக்கினமாக உள்ள ஜாதகருக்கு லக்கினம் 6,8,12 பாவகத்துடனும், பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது மட்டுமே அதிக தீமைகளை செய்யும் இலக்கின வழியில் இருந்து, மற்ற பாவகங்களான 1,2,3,4,5,7,9,10 ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது மிகுந்த நன்மையே தரும் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும்.

குறிப்பு : 

 லக்கினம் எந்த பாவகத்துடன் தொடர்பு பெறுகிறது என்பதை ஜாதகரின் சுய ஜாதகத்தை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696