திங்கள், 2 ஜனவரி, 2012

கால சர்ப்ப தோஷம்



கால சர்ப்ப தோஷம் / யோகம்



ஒருவரது ஜாதகத்தில் இருந்தால், அவருக்கு ஏற்ப்படும் இன்னல்கள் எப்படி இருக்கும் :

 1 சரியான சூழலில் வாழும் வாய்ப்பு இருக்காது,
 2 நல்ல உடல் ஆரோக்கியம் பெற முடியாது,
 3 சிறப்பான கல்வியறிவு கிடைக்காது, கல்வியில் தடை ஏற்ப்படும்,
 4 நல்ல ஜீவனம் அமையாது, தொழில் முன்னேற்றம் கிடைக்காது, பரதேச  ஜீவனம் அமைந்து விடும்.
 5 வாழ்வில் நல்ல வாழ்க்கை துணையினை பெற முடியாது .
 6 இல்வாழ்க்கையில் தவறான தொடர்பால் நிம்மதி இன்மை, குடும்ப வாழ்வில் சிக்கல்கள் கணவன் மனைவி பிரிவு, குடும்பம் ஓரிடம் ஜாதகர் ஓரிடம் வசிக்கும் அமைப்பு.
 7 பொருளாதரத்தில் முன்னேற்றம் இன்மை, வறுமை, முதியவர்களிடம் சாபம் பெறுதல், விபத்து, குலதெய்வ சாபம், கடவுள் நிந்தனை, ஆன்மிக வாதிகளை நிந்தனை செய்தல் போன்ற குணங்கள் .
 8 மறைமுக வாழ்க்கை, பெண்களால் அவமானம், வெளிநாடுகளில் வாழும்பொழுது ஏற்ப்படும் பிரச்சனைகள்.
 9 சட்ட திட்டங்களை மீறுதல், அரச கோபத்துக்கு ஆளாகுதல், தாழ்வு மனப்பான்மை, மற்றவரை சார்ந்து வாழ்தல்.

இது மாதிரியான கெடுபலன்கள் ஜாதகர் அனுபவிப்பார் தமது 32 வது வயது வரை.



கால சர்ப்ப யோக நிலை :


தமது 32 வது வயதுக்குப் பிறகு ஜாதகருக்கு சுய ஜாதகத்துக்கு உட்ப்பட்டு அணைத்து ராஜ யோக பலன்களையும் கால சர்ப்ப யோகம்  வாரி வழங்கி விடும்.


இதுவரை இருந்த நிலை மாறி ஜாதகர் அனைத்து வசதி வாய்ப்புகளையும், குறுகிய காலங்களில் அடைந்து விடுவார்.


அரசியலில் வெற்றி, தொழில் வெற்றி, பொருளாதரத்தில் தன்னிறைவு ஆடை ஆபரண சேர்க்கை நல்ல வசதி மிக்க வீடு வண்டி வாகன அமைப்பு.

நல்ல வேலையாட்கள், தொழில் விருத்தி போன்ற நல்ல பலன்களை வெகு விரைவில் ஜாதகருக்கு வாரி வழங்கிவிடும் இந்த அமைப்பு.   

கால சர்ப்ப தோஷ நிலை, ஜாதகருக்கு பாதிக்காமல் இருக்க சரியான வழி என்ன என்பதை அடுத்த பதிவில் காண்போம் 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

கர்மவினை பதிவில் இருந்து விடுபட !



அனைவருக்கும் இனிய 2012  ஆங்கில  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
புது வருடத்தில் அனைவரும் அனைத்து நலனும், வளமும் பெற இறை அருள், நல்லாசி வழங்கட்டும் .

கர்மவினை பதிவில் இருந்து விடுபட ! 

திருவெண்காடு தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.

பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.

இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி.
மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.



இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.


இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.


சுவேதாரண்யர் (திருவெண்காடர்) : 

திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.


நடராஜர் :  

இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.


அகோர மூர்த்தி : 

ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.


சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.


அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.


பிரம்ம வித்யாம்பாள் :  

இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.


நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.


காளிதேவி :

 சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.


துர்க்கை தேவி : 

 துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.


புதன் பகவான் : 

 வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு.இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.


பிள்ளையிடுக்கி அம்மன்:

 திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார்.


இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது.


புதனுக்கு தனி சன்னதி: 

நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.


ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது.காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.


இத்தலத்தில் மூர்த்திகள்(திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), சக்தி(துர்க்கை, காளி, பிரம்மவித்யாம்பாள்),தீர்த்தம் (அக்னி தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்) தலவிருட்சம்(வடவால், வில்வம், கொன்றை ) என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு உள்ளது.


காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார். ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது.


சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது.


பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.



முக்குண நீராடல் : 

இத்தலத்தில் உள்ள அக்கினி,  சூரிய, சந்திர தீர்த்தங்களில் வளர்பிறை  புதன் கிழமைகளில், புதன் ஹோரையில் தலைக்கு, பச்சை பயிறு வைத்து முழுகி, புதனை தரிசனம் செய்வோருக்கு ஏழு ஜென்ம கர்ம வினை பதிவிலிருந்தும் விடுபட்டு சகல செல்வங்களையும் பெறுவார்கள் இது நடை முறையில் கண்ட உண்மை .

ஜோதிடன் வர்ஷன்








திங்கள், 26 டிசம்பர், 2011

பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவம்!



பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவம், ஒருவரது ஜாதகத்தில் வலுத்து நின்று திசையை நடத்தும் பொழுது அவருக்கு நடக்கும் பலாபலன் என்வென்று பார்ப்போம்.

1 தமது குலபெருமை காக்க ஒரு சிறப்பான ஆண்வாரிசு அமையும் , அக்குழந்தை கீர்த்தியுடனும், ஆரோக்கியமான வளர்ச்சியை பெற்று புத்திசாலி என பெயர் எடுக்கும்.

2 ஜாதகர் தமது பூர்விகம் எதுவோ அவ்விடத்தில் இருப்பதால் அனைத்து வளர்ச்சியும் அடைவார், குறிப்பாக நல்ல தொழில் முன்னேற்றம் பொருளாதரத்தில் தன்னிறைவு.

3 ஜாதகர் தமது முன்ஜென்மத்தில் செய்த அனைத்து நன்மைகளையும் இப்பிறப்பில் பிரதி பலனாக கிடைக்கும், அதனால் வாழ்வில் சகல முனேற்றமும் அடைவார், வருமுன் தெரிந்துகொள்ளும் ஆற்றல் இயற்கையாக அமையும்.

4 அரசு ஆதரவு, மக்கள் செல்வாக்கு , பெரிய மனிதர்கள் உதவி, நிலபுலன் வாங்கும் அமைப்பு , சொந்தமாக சகல வசதியுடன் புதிய வீடு அமையும், வண்டி வாகனம் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி, துவங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி என அனைத்து நலன்களும் கிடைக்கப் பெறுவார்.

5 மேலும் தியான தவ வாழ்கையில் வெற்றி, கடவுள் பக்தி, குலதெய்வ அருளாசி, தாய்மாமன் மூலம் அடையும் நன்மைகள், பூர்வீக சொத்துக்கள் ஜாதகருக்கு எவ்வித தடையும் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்பு, மந்திர சித்தி, தமது அறிவுரைகளை அனைவரும் மதித்து நடந்து கொள்ளுதல், நல்ல உடல் ஆரோக்கியம் போன்ற நல்ல பலன்கள் நடைபெறும்.

வியாழன், 22 டிசம்பர், 2011

வக்கிரக கிரகங்களின் பாதிப்பில் இருந்து விடுபட? !

வக்கிரக கிரகங்களின் பாதிப்பில் இருந்து விடுபட !

 திருவக்கரையில் அமர்ந்து தம்மை நாடி வருவோர்க்கு அனைவருக்கும், அனைத்து வளங்களையும், சகல நலன்களையும் ஏழை எளியவர் என எவ்வித பாகு பாடும் இல்லாமல், தமது நான்கிரண்டு கரங்களால் அனைவரையும் தாங்கி அருள் பாலிக்கிறாள் அன்பு தாய். அம்மாவை தரிசித்து வளமுடன் வாழுங்கள்.

இங்கு வந்து முறைப்படி வக்கிரக நிவர்த்தி செய்துகொள்ளும்  அனைவருக்கும், அல்ல அல்ல வழங்கும் அமுத சுரபி போல் அனைத்து நலன்களையும் பெற்று, வளமுடன் நலமுடன் வாழ்கின்றனர் .

வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள், இத்தலத்துக்கு வந்து வக்கிரகாரி, வக்கிரலிங்கம், வக்கிர சனிபகவான் ஆகியோரை வழிபட்டால் பயன் கிடைக்கும். 

திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும். இது திண்டிவனத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. புதுச்சேரி செல்லும் பாதையில் பெரும்பாக்கம் சென்று தெற்கில் 7 கி.மீ. செல்ல வேண்டும். இங்கு குண்டலி மகாமுனிவர் தவம் செய்து சமாதி பெற்றுள்ளார். 


அமாவாசை நாளில் பகல் 12 மணிக்கும், பவுர்ணமி நாளில் இரவு 12 மணிக்கும் காட்டப்படும் ஜோதிதரிசனம் நிகழ்ச்சி இங்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள குண்டலி முனிவரது ஜீவ சமாதியில் மனம் உருக வழிபட்டால் நினைத்தது நடக்கும். அங்கு 10 நிமிடம் தியானம் செய்தாலே போதும், மன சஞ்சலங்கள் பறந்தோடி விடும்.
இத்தலத்தில் 3 மாதம் பவுர்ணமி நாளில் தொடர்ந்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும். 


இத்தல வரலாறு வருமாறு:-
வக்கிரா சூரன் என்ற அசுரன் தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும்  சிவனிடம் வரம் கேட்டான். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரம் அளித்தார். வரம் பெற்றதும் வச்சிராசூரன்  தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். வக்கிராசூரன் பெண்களால் அழியா வரம் பெறவில்லை.
அவன் லிங்கத்தை கண்டத்தில் வைத்திருக்கும் போது கொல்ல முடியாது. அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்க வேண்டும் என்று மகாவிஷ்ணு யோசனை கூறினார். அதன்படி ஈஸ்வரி 16 கைகளுடன் பேருருவெடுத்து மகாவிஷ்ணு யோசனைப் படி வக்கிர துர்முகியை அழித்தாள்.
பின்னர் வக்கிராசூரனை அழித்தாள். பிறகு திருவக்கரை தலத்தில்  வடக்கு முகமாக அமர்ந்தாள். இதனால் அவளுக்கு அருள்மிகு வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது. வக்கிராசூரன் வழிபட்டதால் இத்தலம் திருவக்கரை எனப் பெயர் பெற்றது. இவ்வாலயத்தின் வடக்கு முகமான காளியின் எதிரில் வக்கிராசூரன் சிலை உள்ளது.
அவன் கண்டத்தில் லிங்கத்தை வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்று பெயர் ஏற்பட்டது. மன நிம்மதி வேண்டி வரும் பக்தர்களுக்கு இந்த சக்தி தலத்தில் நிம்மதி கிடைக்கிறது.
ஜோதிடன் வர்ஷன் 

வாழ்க வளமுடன் 

சனி, 17 டிசம்பர், 2011

கிரகங்கள் வக்கர நிலை ஜாதகருக்கு என்ன செய்யும் ?

கிரகங்கள் வக்கர நிலை ஜாதகருக்கு என்ன செய்யும் ?





ஜாதகரை நிச்சயம் பாதிக்கும். தாம் அமர்ந்த இல்லத்தை பொறுத்து இன்று ஜாதக ஆலோசனை பெற வந்த ஒருவருக்கு ஜனன ஜாதகத்தில் லக்கினம் , இரண்டாம் வீடுகள் முறையே சனி ,குரு, செவ்வாய் , புதன் ஆகிய கிரகங்கள்  வக்ரக நிலையில் இருந்தது.

அவருக்கு வயது 32 , இதுவரை அவர் அனுபவித்து வந்த பலன் என்னவென்று பார்த்த பொழுது, இரண்டில் உள்ள வக்ரக சனிபகவன் சம்பாதிக்கும் அறிவை கொடுத்து நல்ல வேலையாட்களை கொடுக்கவில்லை,  இதனால் அவரது தொழில் பல இன்னல்களை சந்தித்து இதுவரை போராடிக்கொண்டு இருக்கிறார்.

லக்கினத்தில் அமர்ந்த வக்ரக குரு, அளவிட முடியாத புத்திசாலிதனத்தை தந்து , அதனை பயன்  படுத்த முடியாத அளவிற்கு தடைகளை ஜாதகரே உருவாக்கி கொண்டிருக்கிறார், இவரது ஆலோசனையை கேட்பவர்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார், இவருக்கு பலன் தருவதில்லை.

வக்கிரக செவ்வாயோ இரண்டில் அமர்ந்து வருமானத்தை வெட்டி செலவு செய்ய வழி வகுத்துவிட்டார், லக்கினத்தில் அமர்ந்த வக்கிரக புத பகவான் மட்டும், பெரிய மனிதர்கள் தொடர்பு பெற வைத்து, தொழில் எப்படியாவது நடைபெற அருள் புரிந்து உள்ளார்.

இது அவரது சுயஜதகத்தின் அமைப்புப்படி. 

இது அனைவருக்கும் நடை பெற வாய்ப்பு இல்லை என்றாலும், வக்ரகம் பெற்ற சனி பகவான் தொழில் முறை பாதிப்பையும்,  வக்ரகம் பெற்ற குரு பகவான் செல்வநிலை காரிய தடைகளையும், வக்ரகம் பெற்ற செவ்வாய் பகவான் தேவையற்ற, கெட்ட நண்பர்கள் சகவாசமும், சில தவறான பழக்க வழக்கங்களையும், பெண்கள் சகவாசத்தையும் கொடுத்துள்ளார்.

புத பகவான் மட்டும் பெரிய மனிதர்கள் ஆதரவை பெறவைத்து, அதை முழுமையாக பயன் படுத்த முடியாத நிலையை உருவாக்கிவிட்டார்.


இந்நிலை மாற ஜாதகருக்கு நாங்கள் கொடுத்த ஆலோசனை என்ன நாளைய பதிவில் காண்போம் .

கெட்டவன் கெட்டால் கிட்டிடுமா ராஜ யோகம் ?

கெட்டவன் கெட்டால் கிட்டிடுமா ராஜ யோகம் ?




கெட்டவன் கெட்டால் கிட்டிடுமா ராஜ யோகம் ? 
ஒரு சின்ன  வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது, ஏன் என்றால் ஒருவர் ஜாதகத்தில் சில  ஜோதிடர்கள், சுபர் அசுபர் என கணக்கில் எடுத்து கொள்வது எப்படி என்றால், சூரியன், செவ்வாய், தேய்பிறை சந்திரன், சனி, சூரியனுடன் சேர்ந்தபுதன் ஆகியோர் அசுபர் என்றும், வளர்பிறை சந்திரன், குரு, தனித்த புதன், சுக்கிரன் ஆகியோர் சுபர் என்றும். அசுபர்கள் ஒருவரது ஜாதகத்தில் கெட்டால் அவர்கள் நன்மை செய்வார்கள் என்ற கருத்தினை பல ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

இது முற்றிலும் தவறான கருத்தாகும், எந்த ஒரு கிரகமும் தமது வீடுகளுக்கு நன்மைதரும் அமைப்பில் அமரவேண்டும், அப்பொழுதுதான் அந்த பாவம் நன்மையான பலன்களை வழங்கும், இல்லையென்றால் ஜாதகர் பாடு திண்டாடம்தான். 

சில ஜோதிடர்கள் அசுபர் என சொல்லும் சூரியன், செவ்வாய், தேய்பிறை சந்திரன், சனி, சூரியனுடன் சேர்ந்தபுதன் ஆகியோரது திசை புத்தி நடக்கும் காலங்களில் சகல முன்னேற்றங்களை  அடைந்த ஜாதகங்கள் நிறைய உண்டு,
சுபர் என சொல்லும் வளர்பிறை சந்திரன், குரு, தனித்த புதன், சுக்கிரன் ஆகியோரது திசை புத்தி நடக்கும் காலங்களில் அனைத்து தீமையான பலன்களை அனுபவித்தவரும் உண்டு, எனவே இது போன்ற வாயில் வந்ததை எல்லாம் வாக்கு என சொல்லி ஜாதகம் பார்க்கவந்தவரை, மண்டை காய வைக்கவேண்டாம் என சில ஜோதிடர்களை வேண்டுகிறேன்.

ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒரு நபருடன் மேற்கண்ட விவாதம் சென்ற வாரத்தில் நடந்ததை பதிவு செய்துள்ளேன்.

வெள்ளி, 16 டிசம்பர், 2011

ஐந்தாம் இடத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திர பாக்கியம் இல்லையா?




ஐந்தாம் இடத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திர பாக்கியம் இல்லையா? 

ஜாதக ஆலோசனை கேட்க வந்த ஒரு பெண்ணின் கேள்வி இது,  ஏனெனில் தாம் இதற்குமுன் பல ஜோதிடர்களிடம் தமது ஜாதகத்தை கொடுத்து ஆலோசனை கேட்ட பொழுது, ஜோதிடர்கள் அனைவரும் உங்களது ஜாதகத்தில், ஐந்தில் ராகு பகவன் இருப்பதால், ஐந்தாம் வீடு கெட்டுவிட்டதாகவும், குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும்  தெரிவித்ததாகவும் அப் பெண்மணி கூறினார்.

இதை கேட்டவுடன் தம்மை பெண்பார்க்க வந்த அனைவரும், தம்மை திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை எனவும், தமக்கு இந்நிலை மாற, தாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்,

அவரது ஜாதகத்தை ஆராய்ந்த பொழுது உண்மையில் ராகு ஐந்தில் இல்லை,( லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து கணித்த அமைப்பில்) நான்காம் வீட்டில் இருந்தார், மிகவும் நல்லநிலையில் ராகு அமர்ந்திருந்தார், பிறகு அந்த பெண்மணிக்கு ராகுவின் நிலை பற்றி தெளிவாக எடுத்து விளக்கம் தந்தோம்.

ராகுவினால் எவ்வித பாதிப்பும் உங்களுக்கு இல்லை எனவும், அவர் ஜாதக கட்டத்தில் தான் ஐந்தில் இருக்கிறார், ஆனால் லக்கினம் ஆரம்பிக்கும் பாகை கொண்டு பார்க்கும் பொழுது நான்காம் வீட்டில் உள்ளார், என்றும் அவர் நன்மையான பலன் மட்டுமே தந்து வருகிறர் என்றும், இதனால் ஐந்தாம் வீடு எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் தந்த பிறகே அவருக்கு நம்பிக்கை வந்தது.

மேலும் உங்களது திருமண தாமதத்திற்கு காரணம் களத்திர பாவம் பதிக்கப்பட்டது மட்டுமே என்று கூறி அதற்க்கு என்ன செய்தால் திருமணம் விரைவாகவும் சிறப்பாகவும் நடை பெரும் என்பதையும் கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தோம்.


ராகு கேது பகவான் ரிஷபம், மிதுனம், கடகம்,கன்னி, துலாம்,தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் அமர்ந்து அது ஐந்தாம் வீடாக வந்தால், ஜாதகருக்கு ஐந்தாம் பாவத்திற்கு 100 சதவிகித சுப பலன்களையே, பாகு பாடு இல்லாமல் தருகிறார் என்பதே உண்மை .


வியாழன், 15 டிசம்பர், 2011

ராகு கேதுவுடன் சூரியன்,சந்திரன் சேர்க்கை என்ன செய்யும்.

ராகு கேதுவுடன் சூரியன்,சந்திரன் சேர்க்கை என்ன செய்யும்?




சூரியனுடன், ராகு கேது எந்த ஒரு வீட்டிலும் சேர்ந்து இருந்தாலும் அந்தவீடு எந்த அமைப்பை பெறுகிறதோ, அதன் பலன் விருத்தி அடைவதில்லை , குறிப்பாக லக்கினமாக இருந்தால், ஜாதகர் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள், தாமதம் தோல்வி நிலை ஏற்ப்படுகிறது. 

மேலும் தமது கடின உழைப்பு வெற்றி பெறுவதில்லை,  அதிர்ஷ்டமில்ல நிலை ஏற்படுகிறது. பெரிய மனிதர்கள் உதவி கிடைப்பதில்லை, அரசு ஆதரவு  இல்ல நிலை, குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவற்ற நிலை, அரசியலில் பொதுமக்களிடம் வரவேற்ப்பு அற்ற நிலை போன்ற தீமையான பலன்களை மட்டுமே அனுபவிக்கின்றனர்.

இந்நிலை மாற சூரியகிரகண தோஷ நிவர்த்தி செய்வதினால் அணைத்து நன்மையான பலன்களையும் ஜாதகர் அனுபவிக்கலாம் என சாஸ்திரம்  வழி காட்டுகிறது .

இதே அமைப்பில் சந்திரனுடன் ராகு கேது சேர்க்கை ஜாதகருக்கு பொருள் ஆதார அமைப்பில் தடைகளை ஏற்ப்படுத்துகிறது, தொழில் தடை வண்டி வாகனம் சரியாக அமையாதது.

அனைத்தும் இருந்தும் சொகுசான வாழ்வினை அனுபவிக்க முடியாத நிலை , மனப்போராட்டம் மனோவியாதி, டென்சனான வாழ்க்கைமுறை, மனதினை ஒரு நிலை படுத்த முடியாத அமைப்பு போன்று தீமையான பலன்களே ஜாதகருக்கு நடக்கின்றது.

இந்நிலை மாற பௌர்ணமி வழிபாடு, சந்திர கிரகண தோஷ நிவர்த்தி செய்து நலம் பெறலாம்.  

புதன், 14 டிசம்பர், 2011

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு


ஒவ்வொரு மனிதர்க்கும் இறை அருளின் கருணையினால் ஜீவனம் என்பது ஏதாவது ஒரு வழியில் உணர்த்தப்பட்டு, அதில் தனி திறமையுடன் செயல்பட அறிவுத்திறனையும் நல்லவர் தொடர்புடன் தொழில் விருத்தியடைய விழிப்புணர்வையும் இயற்கையிலேயே அனைத்து மனிதர்களுக்கும் இறைவன் வழங்கியுள்ளார்.

இதில் அறிவையும் விழிப்புணர்வையும் பயன்படுத்துவதில் ஒவ்வொரு மனிதர்களிடையே 33 %, 66 %, 99 % சதவிகித வேறுபாடுகள் உண்டு, 99 சதவிகித அறிவையும் விழிப்புணர்வையும் பயன்படுத்துபவர்கள், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுகின்றனர்.

மற்றவர்கள் காலம், நேரம், யோகம் என்று காரணம் சொல்லி தொழில் முன்னேற்றம் இல்லாமல் தோல்வி அடைகின்றனர், இதை போன்று விரக்த்தியில் உள்ளவர்களுக்கும், 99 சதவிகித தொழில் வெற்றி  பெற எங்களது அமுதவர்ஷினி ஜோதிடம், சரியான ஆலோசனைகள் கடந்த 8 வருடமாக வாரி வழங்கி வருகிறது, வாருங்கள் வளமான தொழில் முனேற்றம் பெறுங்கள். 

ஒருவருக்கு எந்த தொழில் சிறப்பான முன்னேற்றம் தரும் , அது கூட்டு தொழிலா அல்லது தனிப்பட்ட தொழிலா என தெளிவாக தெரிந்து கொள்ள எம்மை தொடர்பு கொண்டு நல வாழ்வினை பெறுங்கள் . 


செவ்வாய், 13 டிசம்பர், 2011

செவ்வாய் தோஷம் பற்றிய உண்மை விளக்கம்

செவ்வாய் தோஷம் பற்றிய உண்மை விளக்கம்.




 ஜாதகத்தில் இலக்கணத்திற்கு  2 , 4  , 7  , 8  , 12  

 ஆகிய வீடுகளில் செவ்வாய்  இருந்தால், செவ்வாய் தோஷம் என்றும், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்துகொண்டால் மணவாழ்க்கை சிறப்பதில்லை என்றும் மக்களிடம் ஒரு தவறான புரிதல் உள்ளது.

சில ஜோதிடர்களிடம் கருத்து கேட்கும் பொழுது மக்களுக்கு சரியான பதில் கிடைப்பதில்லை, மேலும் பல விதிவிலக்கு உண்டு என்று மழுப்பலான பதில் மட்டுமே  வருகின்றது.

எங்களது பத்து வருட ஜோதிட ஆராய்ச்சியில் கிடைத்த பதில் என்னவென்று பார்ப்போம் :

1 , ஜாதகத்தில் இலக்கணத்திற்கு  2 , 4  , 7  , 8  , 12  ஆகிய வீடுகளில் செவ்வாய்  இருந்தால் அவர்கள் நிர்வாக திறமை மிக அதிகம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர்,

2, பத்தாயிரம் செவ்வாய் தோஷ ( மற்ற ஜோதிடர்கள் செவ்வாய் தோஷ ஜாதகம் என்று கணித்த )  ஜாதகங்களை ஆராய்ச்சி செய்ததில் 88 சதவிகித ஜாதகங்களில் செவ்வாய் தோஷம் ( இலக்கணம் ஆரம்பிக்கும் பாகை வைத்து கணிதம் செய்த முறையில் ) அற்ற ஜாதகங்கள் ஆகும் .

3, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்ததால், அவர்கள் வாழ்வில் ஒன்றும் தீமையான பலன்களை அனுபவிக்கவில்லை, மேலும் ஒருவருடைய ஜாதகம் ஒருவரை எவ்விதத்திலும் பதிக்கவில்லை, நல்வாழ்வினையே வழங்கியுள்ளது இதற்கு காரணமானவர் செவ்வாய் பகவனே என்பது கவனிக்க வேண்டிய விஷயம். 

4,   செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்ததால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறை உள்ள குழந்தைகளாக இருப்பார்கள் என்பதும் சுத்தமான மூடநம்பிக்கை, ஏனெனில் இப்படி பிறந்த குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாகவும், நல்லறிவுடன் திகழ்கின்றனர்.


5 , செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்து, வாழ்வில் பெரிய வெற்றிகளை பெற்ற மனிதர்களாக காணப்படவில்லை, சுய ஜாதக அமைப்புக்கு என்ன உண்டோ அதை மட்டுமே அனுபவித்து வருகின்றனர் . மேலும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் பெரிய சிறப்பான தகுதியுடன் இருப்பதாக தெரியவில்லை.


6 , எங்களது கணிப்பில் தெரிந்தவை முக்கியமானது என்னவென்றால், செவ்வாய் தோஷம் மனிதர்கள் வாழ்வில் எவ்வித பதிப்பான பலன்களையும் தருவதில்லை என்பதே உண்மை .

7 , மூட நம்பிக்கைகளை தவிர்த்து உண்மையான ஜோதிட அறிவை ஏற்று வாழ்க்கையை தன் நம்பிக்கையுடன் வாழுங்கள் .


8 , தமது மகன் மகள் வாழ்வில் செவ்வாய் தோஷம் எவ்வித பதிப்பையும் தருவதில்லை, என்ற உண்மையை உணர்ந்து ,அவர்களுக்கு சரியான வயதில், திருமண வாழ்க்கையை ,அமைத்து தாருங்கள். அவர்கள் வாழையடி வாழையாக வளமுடன் வாழட்டும் . 













வைடுரியம் கோமேதகம் மனிதர்கள் அணியலாம ?





வைடுரியம் கோமேதகம் மனிதர்கள் அணியலாம ?

ஜாதக ஆலோசனை பெற வந்தவர் ஒருவர் கேட்ட கேள்வி இது !
நிச்சயம் அணிய கூடாது, ஏனெனில் இவைகள் மற்றவர்களுக்கு அல்லது நவகிரகத்துக்கு தானம் கொடுக்கவே சாஸ்திரம் கட்டளை இடுகிறது.

இதை மீறி பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் ,அதிக கோபம் போர்குணம் , திருமணவாழ்வில் போராட்டம், எதிர்பாரத இழப்புகள் ஆகிய கெடுபலன் மட்டுமே அனுபவிக்கின்றனர் இதுவே உண்மையாகும் . 

வெளி நாடுகளில் ஒருவர் கெட்டு தீமையான பலன்கள் அனுபவிக்க வேண்டும் எனில் அவர்களுக்கு   வைடுரியம் கோமேதகம், இதில் ஏதாவது ஒன்றை தருவார்கள்.
இது நடைமுறை உண்மை.

இதை அணிந்த பிறகு அவர் அனைத்தையும் இழந்த மனிதர் ஆகிவிடுவார் என்பது கண்கூடாக கண்ட உண்மை, எனவே உங்கள் சுய  ஜாதகத்துக்கு மேன்மையை தரும் அதிர்ஷ்ட கற்களை அணிந்து நன்மை பெறுங்கள் .

ராகுகேது தோஷம் பற்றி ஒரு விளக்கம்



 ராகுகேது தோஷம் பற்றி ஒரு விளக்கம்

ஜாதகத்தில் நல்ல பலன் நடப்பதிற்கு, மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் ராகு கேது ஆவார்கள். இவர்கள் அமரும் இடத்திற்கு ஏற்ப 100 சதவித நன்மையோ தீமையோ பாகுபாடு இல்லாமல் வாரி வழங்கிவிடுகின்றனர்,

இதில் சோதிடர்களிடையே பல்வேறு கருத்துகள் உலா வருகின்றது , ஜாதகத்தில் ராகு கேது 1 , 2 , 5 ,7 ,8 ,12 , ஆகிய வீடுகளில் இருந்தால் சர்பதோஷம், எனவே மணமக்களுக்கு  இதேபோல் உள்ள சர்பதோஷ ஜாதகத்துடன் தான் திருமணம் அமைக்க வேண்டும் இல்லை என்றால், திருமண வாழ்க்கை நிலைக்காது ,என்ற கருத்து நிலவுகிறது, இது முற்றிலும் முட்டாள் தனமான கருத்தாகும், 

இதனால் வது வரன் பார்ப்போர் அனைவரும் ஜாதகத்தை துக்கி கொண்டடு தலையை பிய்த்துக்கொண்டு அலைகின்றனர், இதில் உண்மை என்னவென்றால் சில  ஜோதிடர்கள் சொல்லுவது போல்  ராகு கேது இருவரும் மேற்காணும் வீடுகளில் இருந்தாலும், திருமணவாழ்வில் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை சுய ஜாதகத்தில் குடும்பம்,களத்திர ஸ்தானம் எனும் இரு வீடுகளும் பாதிப்படைந்திருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை நிலைக்காது , என்பதை தெளிவாக மக்கள் தெரிந்து கொண்டு தமது மகன் மகள் வாழ்கையில் திருமணம் எனும் அகல் விளக்கினை ஏற்றிவைக்க பணிவுடன் வேண்டுகிறேன், 

இதில் ராகு கேது தோஷம் என்பதெல்லாம் சுத்தமான மூடநம்பிக்கை ஆகும் இதை பற்றி தெளிவு பெற எம்மை அணுகவும்.

மனித அறிவு மிகவும் சிறப்பாக செயல் பட வைப்பதில் ராகு கேதுவுக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதே உண்மையாகும் .

 
   

வியாழன், 8 டிசம்பர், 2011

திசா சந்திப்பு



என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒருவர் கேட்ட கேள்வி, தசா சந்திப்பு ஆண் பெண் ஜாதகத்தில் இருந்தால், திருமணம் செய்தல் கெடுதல் நேரும் ,என்று சில ஜோதிடர்கள் சொல்கின்றனர், இது உண்மையா ? 

இதை கேட்ட உடன், நான் அழுவாத, சிரிப்பத என்ற எண்ணம் வந்ததது .

ஒருவருடைய ஜாதகத்தில் ,ஒரு திசை நன்மையான பலன்களை, தந்துகொண்டு இருக்கும் பொழுது ,அவருக்கு வரும் துணையின் ஜாதகமும் நன்மையை மட்டுமே தரும், 
ஒருவருடைய ஜாதகத்தில், ஒரு திசை தீமையான  பலன்களை தந்துகொண்டு இருக்கும் பொழுது, அவருக்கு வரும் துணையின் ஜாதகமும் தீமையை  மட்டுமே தரும்,
இதுவே உண்மை .
 
திசா சந்திப்பு என்பது ஜோதிடர்கள் கண்டு பிடித்த ஒரு உச்சகட்ட நகைசுவையே என்று  தெரிந்து, மக்கள் இவைகளை தவிர்த்துவிட்டு தமது மகன் மகளுக்கு திருமண வாழ்வினை பருவத்தே செய்து, அவர்கள் தவறான வழிக்கு செல்லாமல் சரியான வயதில் திருமணம் செய்து நலவழ்வினை அவர்களுக்கு வழங்குங்கள் .