தெரிந்தோ தெரியாமலோ நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அய்யா சொன்னது முற்றிலும் உண்மை .
ஒருவனுக்கு இல்லற வாழ்விற்கு துணையாக வரும் இல்லத்தரசி நல்ல குணம் மற்றும் பதிபக்தி, அதிர்ஷ்டம் நிறைந்த அமைப்புடன் வந்தால், அவரது வாழ்க்கை பூலோக சொர்க்கம் இதுவே மாறி அமைந்து விட்டால், ஜாதகனது வாழ்க்கை போராட்டம் மற்றும் பூகம்பம் நிறைந்ததாக மாறிவிடுகிறது.
இதைப்பற்றி சற்றே சிந்தித்தால் கிடைக்கும் பதில் இதுவே :
சுய ஜாதக அமைப்பில் குடும்பம், மற்றும் களத்திரம் எனும் வீடுகள் சிறப்பாக அமைந்த ஒரு ஜாதகனுக்கு நிச்சயம், திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும், என்பதில் சந்தேகமே இல்லை ,
இதற்க்கு மாறாக அமைந்து விட்ட சில குடும்பங்களில் தனது மருமகள் வந்த நேரம்தான் எங்களது குடும்பம் இப்படி நொடிந்து விட்டது என்று அனைத்து பழியும் மருமகளின், தலையில் விடிந்து விடுகிறது , இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அந்த பெண்ணின் வாழ்க்கையும் , அவளது பெற்றோரும் என்பதை சற்றேனும் மணமகன் வீட்டினர் சிந்திப்பது இல்லை.
இதில் கணவன் மனைவிக்குள் எவ்வித சண்டை சச்சரவு இல்லாதா நிலையிலும், அவர்களது உறவினர்களால் நீதி மன்ற படிக்கட்டுகளில் காத்திருப்போர் ஏராளம் , இது போல் பாதிக்கப்பட்ட தம்பதிகள் அனைவரும் தம்மை ஒரு சுய பரிசோதனைக்கு உட்படித்திகொல்லுவது மிகவும் நன்மையை தரும். என்னென்றால் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ அவர்களது குழந்தைகள் தான் என்பது கசப்பான உண்மை
மேலும் இந்த இயந்திர காலத்தில் அன்பு, பாசம், பரிவு, இறக்கசுபாவம், எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல், ஓடி மறைந்துவிட்டது இந்த நிலை மாறி தம்பதியர் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் பொழுது, இந்த திருமணபந்தம் எவ்வளவு மதிப்பு மிக்கது எனும் உணரும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும் என்பது முற்றிலும் உண்மை .
இன்று ஜோதிட ஆலோசனை பெறவந்த (விவாகரத்து வரை சென்றுவிட்டவர்கள் ) தம்பதிகள் இருவரையும் சேர்த்து வைத்த திருப்தியில்.
ஜோதிடன் வர்ஷன்
9842421435
94433355696











