புதன், 26 செப்டம்பர், 2012

ஒட்டி பிறந்த இரட்டையர் ஜாதகத்தில் நவ கிரகங்கள் தரும் வேறுபட்ட பலன்கள் !



மேற்கண்ட
 இரண்டு ஜாதக அமைப்பிற்கும் பிறப்பு நேரம் வெறும் 90 வினாடிகள் மட்டுமே , இருவருக்கும் ஒரே லக்கினம் , ஒரே ராசி , ஒரே நட்சத்திரம் இருப்பினும் ஜாதக பலன்களில் நிறைய வேறுபாடுகள் , இதற்க்கு காரணம் என்னவென்பதை இனி பார்ப்போம் .


முதல் ஜாதகம் அண்ணன் )

இவரது ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1 ,5 ,7 ம் பாவகங்கள் களத்திர ஸ்தானம் எனும் 7 ம் வீட்டுடன் தொடர்பு,
2 ,4  ம் பாவகங்கள் சுக ஸ்தானம் எனும் 4 ம் வீட்டுடன் தொடர்பு,
3  ம் பாவகம் சகோதர ஸ்தானம் எனும் 3 ம் வீட்டுடன் தொடர்பு,
10  ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானம் எனும் 10 ம் வீட்டுடன் தொடர்பு,
11ம் பாவகம் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு,

இவரது ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட  நிலையில் இருக்கும் பாவகங்கள் :

6 ,9 ம் பாவகங்கள் பாதக ஸ்தானம் எனும் 9 ம் வீட்டுடன் தொடர்பு,
ம் பாவகம் ஆயுள்  ஸ்தானம் எனும் 8 ம் வீட்டுடன் தொடர்பு,
12 ம் பாவகம் விரைய ஸ்தானம் எனும் 12 ம் வீட்டுடன் தொடர்பு,

மேற்கண்ட அமைப்பில் இருக்கும் ஜாதகருக்கு நடக்கும் சனி திசை 11ம் பாவகம் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்றும் , தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் ராகு புத்தி 1 ,5 ,7 ம் பாவகங்கள் களத்திர ஸ்தானம் எனும் 7 ம் வீட்டுடன் தொடர்பு பெற்றும் மிகுந்த யோக பலனை தருவதால் , ஜாதகருக்கு அரசு துறையில் நல்ல வேலையும் , அருமையான வாழ்க்கை துணையும் , கை நிறைய வருமானமும் நினைத்ததை சாதிக்கும் ஆற்றலும் தந்துகொண்டு இருக்கிறது , மேலும் இவாது ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்கள் ஜாதகருக்கு நடை பெரும் அனைத்து தசா புத்திகளுடன் சம்பந்தம் பெறாத காரணத்தால் , பாதிப்படைந்த வீடுகளின் பலன்கள் நடை முறைக்கு வர வாய்ப்பில்லை என்பது ஒரு வர பிரசாதமே !


இதே லக்கினம் , இதே ராசி , இதே நட்சத்திரம் பெற்ற இவரது சகோதரரின் ஜாதக பலனை இனி பார்ப்போம் 


இரண்டாவது ஜாதகம் தம்பி )

இவரது ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1 ,3 ,7 ம் பாவகங்கள் களத்திர ஸ்தானம் எனும் 7 ம் வீட்டுடன் தொடர்பு,
2 ம் பாவகம்  குடும்ப  ஸ்தானம் எனும் 2 ம் வீட்டுடன் தொடர்பு,
5 ,11 ம் பாவகங்கள் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு,
10 ம் பாவகம் ஜீவன  ஸ்தானம் எனும் 10 ம் வீட்டுடன் தொடர்பு,

இவரது ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட  நிலையில் இருக்கும் பாவகங்கள் :

4 ,8  ம் பாவகங்கள் ஆயுள் ஸ்தானம் எனும் 8 ம் வீட்டுடன் தொடர்பு,
6 ,9 ,12  ம் பாவகங்கள் விரைய  ஸ்தானம் எனும் 12 ம் வீட்டுடன் தொடர்பு,

மேற்கண்ட அமைப்பில் இருக்கும் ஜாதகருக்கு நடக்கும் சனி திசை 5 ,11 ம் பாவகங்கள் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று நன்மையை செய்தாலும் , தற்பொழுது நடக்கும் சனி திசை ராகு  புத்தி 6 ,9 ,12  ம் பாவகங்கள் களத்திர ஸ்தானம் எனும் 12 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று கெடுதலான பலனை தருவது துரதிர்ஷ்டமே, இதனால் ஜாதகர் தனது கல்விக்கு தொழில் புரிவதில் சிக்கல்கள் , சம்பந்தம் இல்லாத தொழிலை எடுத்து செய்வதால் அதிக துன்பம் , மன உளைச்சல் , இதன் காரணமாக போதை பழக்கத்திற்கு அடிமை ஆகி தனது உடல் நிலையை தானே கெடுத்து கொள்கிறார். 

 இதற்க்கு காரணம் 6 ,9 ,12  ம் பாவகங்கள் விரைய ஸ்தானம் எனும் 12 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவதே 6 ம் பாவகம் கடன் , உடல் நிலை , எதிரி தொந்தரவு , 9 ம் பாவகம் சமுதாயத்தில் நல்ல பெயர் , நல்ல குணம் , 12 வருமானத்தை தேவையில்லாமல் வீண் செலவு செய்து இழப்பது போன்ற பலன்களை ஜாதகருக்கு தற்பொழுது தந்து கொண்டு இருக்கிறது , மேலும் ஜாதகருக்கு இன்னும் திருமணமும் ஆகவில்லை , தவறான தொடர்புகளால் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டுள்ளார்.

மேற்கண்ட இரண்டு ஜாதக அமைப்பிலும் லக்கினத்தை அடிப்படையாக வைத்து பார்க்கும் பொழுது நவகிரகங்கள் அண்ணனுக்கு யோக பலன்களையும் , 90  வினாடிகள் இடைவெளியில் பிறந்த தம்பிக்கு அவ யோக பலன்களையும் தரும் பொழுது , தொலைகாட்சி நிகழ்சிகளில் சொல்லும்  ராசிபலன்கள் அனைவருக்கும் எப்படி சரியாக பொருந்தும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

ஏழரை சனி படுத்தும் பாடு , சனிபகவான் தரும் நன்மை தீமை பலன்கள் !




பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் சந்திரன்  இருக்கும் ராசிக்கும் , அதற்க்கு முன் பின் ராசிகளில் சனிபகவான்  கோட்சார ரீதியாக சஞ்சாரம் செய்யும் பொழுது ஏழரை சனி காலம் என்றும் , இதில் ராசிக்கு முன் சஞ்சாரம் செய்யும் பொழுது விறைய சனி என்றும் , ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது ஜென்ம சனி என்றும் , ராசிக்கு பின் சஞ்சாரம் செய்யும் பொழுது பாதசனி என்றும் குடும்ப சனி என்றும் , இந்த காலகட்டங்களில் ஜாதகர் மிகவும் வாழ்க்கையில் சிரம பட வேண்டும் என்றும் , குறிப்பிட்ட ஏழரை ஆண்டுகளில் ஜாதகரை சனி பகவான் படுத்தி எடுத்து விடுவார் என்றும் , உச்ச கட்டமாக மங்கு சனி , பொங்கு சனி , வாக்கு சனி , மரண சனி என்று சனிபகவானுக்கு நான்கு பிரிவுகளையும் தந்து ஜோதிடம் பார்க்க வந்தவரின் வயிற்றில் ஜோதிடர்கள் பலர் புளியை கரைப்பதுண்டு , நாம் இந்த பதிவில் இது உண்மையா ? இல்லை உண்மைக்கு மாறானத ? என்பதை சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் .



எடுத்து காட்டாக மேற்கண்ட மகர இலக்கின , கன்னி ராசியை சார்ந்த அன்பருக்கு மற்ற ஜோதிடரின் கருத்து படி பாத சனியின் காலகட்டம் நடை பெறுகிறது என்றும் , இந்த காலகட்டத்தில் ஜாதகர் வண்டி வாகனங்களில் செல்லக்கூடாது என்றும் , தேவையில்லாத மருத்துவ செலவுகளை தரும் என்றும் எச்சரித்து உள்ளனர் , மேலும் பெண் பிள்ளைகளுடன் பேசகூடாது என்றும் , நண்பர்களுடன் சேரக்கூடாது என்றும் , மீறி செய்தால் ஜாதகர் அதிக பாதிப்புகளை சந்திக்க வேண்டும் என்றும் பயமுறுத்தி உள்ளனர் , உச்சகட்டமாக நடக்கும் ராகு திசை ஜாதகருக்கு சொத்து வண்டி வாகனம் , தாய் வழியில் இருந்து இழப்புகளையே தரும் என்றும் , ஜாதகர் கலப்பு திருமணம் தனது விருப்ப படி செய்து கொள்வார் என்றும்  எச்சரிக்கையும் செய்துள்ளனர் .

கடந்த ஐந்து வருடமாக ஏழரை சனி காலகட்டத்தில் ஜாதகர் இருப்பதாலும் , மேலும் இது மங்கு சனியாக இருப்பதாலும் ஜாதகருக்கு அதிக துன்பமே வரும் என்று ஜாதக பலனாக கூறியுள்ளனர் , இதை கேட்ட ஜாதகரின் குடும்பம் மிரண்டு போய் ஜாதகரை , தற்ப்பொழுது எச்சரிக்கை என்ற பெயரில் தினமும் படுத்தி எடுத்து கொண்டு இருக்கின்றனர் , நமது நண்பரின் அறிவுறுத்தலின் பெயரில் எம்மிடம் ஜோதிட பலன் காண வந்திருந்தனர் , அவர்களுக்கு கிழ்கண்டவாறு சரியான ஜோதிட பலன்களை சொல்லி அனுப்பி வைத்தோம் .

ஜாதகரின் சுய ஜாதக அமைப்பின் படி தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் , ராகு திசை முதலில் கெடுதலை செய்யவில்லை என்பதை தெளிவு படுத்தினோம் காரணம் நடக்கும் ராகு திசை களத்திரம்  எனும் ஏழாம் பாவகம் 7 ம வீட்டுடன் தொடர்பு பெற்று சர நீர் ராசியாக அமைந்து மிகசிறந்த நன்மைகளை தந்துகொண்டு இருக்கிறது என்பதை எடுத்து சொன்னோம் , மேலும் நடக்கும் சனி புத்தியும் மேற்கண்ட வீட்டின் பலனையே தருவதால் எவ்வித பயமும் தேவையில்லை என்று விளக்கினோம் , மேலும் தற்பொழுது கோட்சார சனி பகவான் லக்கினத்திற்கு மிகுந்த நன்மையை வழங்கி கொண்டு இருப்பதை தெளிவு படுத்தினோம் , ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டே பலன் காண வேண்டும் என்றும் , ராசியை வைத்து பலன் காணக்கூடாது என்பதை சொல்லி , நடக்கும் ராகு திசை தரும் பலன்களை பற்றி எடுத்து சொல்லியும் , ஏழரை சனியின் காலத்தில் ஜாதகருக்கு எவ்வித துன்பமும் ஏற்ப்படாது என்றும் தெளிவு படுத்தி , இனி ஜாதகர் கடை பிடிக்க வேண்டியதை சொல்லி அனுப்பி வைத்தோம் .


உண்மையில் மேற்கண்ட ஜாதகருக்கு ராகு திசை தரும் பலன்களை பற்றி இனி பார்ப்போம் , ராகு திசை ஜாதகருக்கு ஆரம்பித்த காலம் முதற்கொண்டு நன்மையை மட்டுமே செய்து வருகிறது இதற்க்கு காரணம்  , ஜாதகர் சர லக்கினம் என்ற அமைப்பை பெற்று ராகு திசை களத்திர பாவக பலனை தருவதே , மேலும் இந்த ராசி சர நீர் ராசியாக அமைந்து 100 சதவிகித நன்மையே தருகிறது , இதனாலேயே ஜாதாகர் பள்ளி இறுதி ஆண்டில் சிறப்பான மதிப்பெண்களை பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்ந்தெடுக்கபட்டார் , மேலும் அரசு உதவியின் மூலமாகவே மருத்துவ கல்வி கற்கும் யோகம் உண்டானது , மேலும் ஜாதகருக்கு களத்திர பாவகம் சிறப்பாக இருப்பதால் பெற்றோர் நிச்சயம் செய்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளும் யோகமே  உண்டாகும் , மேலும் களத்திர பாவகம் பொது மக்களை மற்றும் நண்பர்களை குறிப்பதால் இவர்கள் வழியில் இருந்து ஜாதகர் யோக பலன்களையும் , முன்னேற்றத்தை மட்டுமே அனுபவிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை .

உண்மையில் இந்த ஜாதகருக்கு லக்கினாதிபதி என்ற முறையில் சனிபகவான் மிகுந்த நன்மைகளையே வாரி வழங்கி கொண்டு இருக்கிறார் , இதில் ஒருவேளை ஜாதகருக்கு நடக்கும் ராகு திசை மற்றும் புத்திகள் ஜீவன ஸ்தான வீட்டின் பலனை தந்து கொண்டு இருந்தால் மட்டுமே கேட்ச்சார சனியை பற்றி நாம் கவலை கொல்லாம் , ஏனெனில் ஜீவன ஸ்தானம் துலாம் ராசி அந்த ராசியுடன் தற்பொழுது சனி பகவான் கோட்சார ரீதியாக சம்பந்தம் பெறுகிறார் , அப்படியே இருந்தாலும் அந்த வீட்டிற்கு சனிபகவான் நன்மையை செய்கிறாரா? இல்லை தீமையை செய்கிறாரா ? என்று கண்டு உணர்ந்து சரியான ஜாதக பலனை சொல்ல வேண்டும் , குத்து மதிப்பாக ஏழரை சனி எனவே சனியால் தீமைதான் விளையும் என்று பலன் கூறுவது முற்றிலும் ஜோதிட சாஸ்திர அமைப்பிற்கு உண்மைக்கு புறம்பானது .

ஒருவேளை ஜோதிடர்களுக்கு நடக்கும் திசை புத்தி , எந்த வீடுகளின் பலன்களை தருகிறது என்று தெரியாத நிலையிலேயே இந்த அவலங்கள் நிகழும் , மேலும் பொதுவான ஜாதக பலன்களை சொல்லி ஜோதிடர்கள் தப்பித்து கொள்ளவே , இந்த ஏழரை சனி , அஷ்டம சனி , கோட்சார குரு , ராகு கேது சஞ்சாரங்கள் பயன்படுகிறது என்பதே முற்றிலும் உண்மை . முதலில் நடக்கும் திசை எந்த வீடுகளின் பலன்களை தருகிறது , அவை நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா ? அந்த வீடுகளுடன் ஏதாவது கோட்சார கிரகங்கள் சம்பந்த பெறுகிறதா ? அவை நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா ? என்பதை தெளிவாக கணிதம் செய்தால் மட்டுமே ஜாதக பலன் கேட்க வந்தவருக்கு சரியான பலனை சொல்ல முடியும் இல்லை எனில் , பொது பலனை சொல்லி குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியதுதான் , இதனால் ஜோதிடரும் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும் , ஜோதிடம் கேட்க வந்தவரும் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும் என்பதே உண்மை , இதனால் ஜோதிடத்தின் மேல் மக்களுக்கு நிச்சயம் நம்பிக்கை குறைவே உண்டாகும் .


வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 


வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மங்கலம் தரும் மகாலய அமாவாசை !



சுய ஜாதக ரீதியாக பூர்வ புண்ணியம் , மற்றும் பாக்கிய ஸ்தானங்கள் பாதிக்க படும் பொழுது , சம்பந்த பட்ட ஜாதகர் அனுபவிக்கு இன்னல்களுக்கு ஒரு அளவு இருக்காது , குறிப்பாக காரிய தடை , திருமண தடை , தொழில் முடக்கம் , குழந்தை பேரு இன்மை , மற்றவர்களால் ஏமாற்ற படும் சூழ்நிலை , வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது ஏற்ப்படும்  விபத்துகள் , எதிரிகள் தொல்லை , குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இன்மை , தெரிந்தே அறிவு மற்றும் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துகொள்ளும் சூழ்நிலை , பெற்றோருடன் சேர்ந்து வாழ முடியாத நிலை .

மேலும்  குடும்பத்துடன் சேர்ந்து இருக்க முடியாத சூழ்நிலை , பரதேச ஜீவனம் , எதிர்பாராத திடீர் இழப்புகள் , திடீர் ஆரோக்கிய சீர்கேடு , மன நிலை பாதிப்பு , முன்னேற்றம் இன்மை , தனது வாரிசுகள் தவறான வாழ்க்கை பாதையில் செல்லும் சூழ்நிலை , கல்வியில் தடை , பணியாற்றும் இடத்தில் தொந்தரவுகள் , உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமை , சமுதாயத்தில் அவப்பெயர் உண்டாகும் சூழ்நிலை , தன்னம்பிக்கை அற்ற நிலை , சுய கட்டுப்பாடு இல்லாமல் தான் தோன்றி தனமாக பரதேசம் போகும் சூழ்நிலை , குரு நிந்தனை , சதி பதி நிந்தனை , பிராமண நிந்தனை .

தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி ஜாதகர் தனது உடலை தானே கெடுத்து கொள்ளுதல் , பெண்களால் வரும் அவ பெயர்கள் , அவதூறுகள் , குடியிருக்க சரியான வீடு கிடைக்காத சூழ்நிலை , அருகில் உள்ளவர்களுடன் சுமூக நிலையை கடை பிடிக்காமல் பகையை வளர்த்துகொண்டு தானும் கேட்டு , மற்றவரையும் கெடுக்கும் சூழ்நிலை , பாவ செயல்களை எவ்வித குற்ற உணர்வும் இன்றி செய்யும் தன்மை , மற்றவரின் மனதை நோக செய்யும் தன்மை , ஜீவ காருண்யம் அற்ற நிலை , சுய வாழ்க்கையில் எவ்வித முன்னேறமும் இன்றி எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் தோல்வியை தழுவும் தன்மை , சோம்பேறி தனம் , உடல் பிணிகளால் துன்புறும் நிலை , என மனிதனாக பிறந்த அனைவரும் அனுபவிக்கும் தீமையான பலன்களில் இருந்து விடுபடவும் , சுய ஜாதக ரீதியாக இருக்கும் அவ யோகங்களை களைந்து , யோக பலன்களை அனுபவிக்கவும் எதிர் வரும் மகாலய அமாவாசை ஒவ்வொருவருக்கும்  சரியான சந்தர்ப்பத்தை தருகிறது எனவே பிராப்தம் உள்ளவர்கள் முறையாக , குல தெய்வ வழிபாட்டினையும் , பித்ரு கடன்களையும் சரியாக செய்து எதிர் வரும் காலங்களில் யோக வாழ்க்கையினை பெற உங்கள் அனைவருக்கும் இறைஅருள் கருணை புரியட்டும் .

குல தெய்வ வழிபாடு :

தனது குல தேவதை எதுவோ அந்த குல தேவதைக்கு எதிர்வரும் மகாலய அமாவாசை அன்று அதிகாலையிலேயே சென்று முன் பின் தெரியாத  20 நபர்களுக்கவது அண்ணதானம் செய்து குல தேவதையை சேவிப்பது அவசியம் குறிப்பாக உச்சிகால பூசையில் குல தேவதைக்கு பட்டு வஸ்தரம் சாற்றி வழிபடுவது சகல யோகங்களையும் தரும் , தன்னால் இயன்ற அளவிற்கு அண்ணதானம் செய்வது , ஜாதகருக்கும் ஜாதகரின் வாரிசுகளுக்கும் உடல் ஆரோக்கியம் , கல்வி , தொழில் , குடும்பம் , வாரிசு , செல்வவளம் ஆகியவற்றை தவறாமல் ஜாதகரின் குல தேவதை நிச்சயம் தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

பித்ரு கடன் :

தனது ரத்த உறவு சம்பந்தபட்ட முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையவும் ,முக்தி பெறவும் அவர்கள் வழியில் வந்த சந்ததியினர் கண்டிப்பாக செய்ய வேண்டிய கடைமைகளில் ஒன்று இந்த பித்ரு தர்ப்பணம் , இதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் , எதிர்பாராத விபத்துகள் நடை பெறாமல் தடுக்கவும் , பேரிழப்புகளை தவிர்க்கவும் , தொழில் முடக்கத்தை நீக்கவும் , வாழ்க்கையில் சகல யோகங்களையும் அனுபவிக்கும் படி சம்பந்த பட்ட முன்னோர்களின் ஆன்மா பரிபூரண நல்லாசிகளை வழங்க வேண்டும் எனில் தவறாமல் இந்த பித்ரு தர்ப்பணத்தை வருடம் தோறும் கடைபிடிப்பது அவசியம் , மேலும் பித்ரு தர்பணத்தை கடற்கரையில் தருவது ஜாதகருக்கும் அவரது  குடும்பத்திற்கும் விரைந்து பலன் தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

மேலும் இந்துவாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஐந்து கடமைகள் , உண்டு அவையாவன 1 ) குலதேவதை வழிபாடு 2 ) பித்ரு வழிபாடு 3 ) பெற்றோரிடம் பெரும் நல்லாசி 4 ) பிராமண தர்மம் 5 ) குரு மரியாதை  இவைகளை தவறாமல் கடை பிடித்து நபர்களுக்கு எம்பெருமானின் இதய கமலத்தில் குடிகொண்டுள்ள தாய் ஸ்ரீ சகல வளங்களையும் வாழ்நாள் முழுவதும் நிறைவாக  கொடுத்து , அவர்களது குலம் வாழையடி வாழையாக தளைத்து ஓங்க செய்வாள் என்பது ஆன்றோர் வாக்கு .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 20 செப்டம்பர், 2012

ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் பாதிக்கபட காரணங்கள் !



1 ) ஜாதகரும் ஜாதகரின் முன்னோர்களும் தனது குல தேவதையை முறையாக வழிபடாமல் , இருந்ததால் இருப்பதாலும் , தனது குல தெய்வத்தை நிந்தனை செய்ததாலும் , குலதெய்வத்திற்கு அடிமை செய்யும் நபர்களை கை விட்டாலும் , அவர்களுக்கு ஜீவனம் செய்ய உதவி செய்யாததினாலும் , குல தேவதையின் கோவில் பரமாரிப்புக்கு உதவி செய்யாததினாலும் , தனது முன்னோர்கள் குல தேவதைக்கு செய்து வந்த வழிபாட்டு முறைகளை மாற்றி அமைப்பதாலும் , குல தேவதை கோவிலில் உள்ள பசுவிற்கு ஆகாரம் தர மறுத்தாலும் , தன்னிடம் யாசகம் செய்வோரை மதியாமல் நிந்தனை செய்வதினாலும் , ஒருவருடைய சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


தனது வாரிசாக அமைந்த பெண்குழந்தையை மற்றவருக்கு தானம் செய்வதாலும் அல்லது சிசு கொலை செய்வதாலும் , தனது வாரிசாக அமைந்த பெண்குழந்தைக்கு தேவையானவற்றை நிறைவேற்றி தராமால் விட்டு விட்டாலும் , குடும்பத்தில் உள்ள பெண்களை மனம் நோக செய்தாலும் , துன்புறுத்தினாலும் , ஆகாரம் தராமல் பட்டினி போட்டாலும்சரியான வயதில் திருமணம் செய்து வைக்காமல் விட்டு விட்டாலும் , தனது குடும்ப பெண்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் தவிக்க விட்டு விட்டாலும் , அபலை பெண்களின் வாழ்க்கையில் துன்பத்தை தந்தாலும் , மற்றவர் வாழ்க்கை துணையை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலும் , தவறான எண்ணத்துடன் அணுகினாலும் , தவறான செய்கைக்கு துண்டினாலும் ,  சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


3 ) மற்றவர் குடும்ப விஷயங்களில் ஒருவர் எக்காரணத்தை கொண்டும் மூக்கை நுழைப்பது , தனது புண்ணிய பதிவுகளை இழக்கும் சூழ்நிலையை தந்து விடும் , குறிப்பாக சில இடங்களில் நாட்டாமை செய்யும் பல குடும்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போவதற்கு காரணம் குறிப்பிட்ட நபர்களுக்கு வரும் பிரச்சனைகளை அவர்களின் கர்ம வினை பதிவின் படி அனுபவிக்க விடாமல், தான் அந்த கர்ம வினை பதிவை தீர்வு சொல்வதின்  மூலம்  ஏற்றுக்கொள்ளும்  பொழுது தீர்ப்பு சொல்லும் நபரின் குடும்பம் கடுமையாக பாதிக்க படுகிறது என்பதே உண்மை , ஒரு காலத்தில் ஜமீன் பரம்பரையாக வாழ்ந்த நபர்கள் குடிசை  வாசியாக வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப்பட காரணம் மற்றவர்களின் வினை பதிவில் தலையீடு செய்வதே முக்கிய காரணம் , எனவே இதனால்   ஒருவருடைய சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


4 ) தனது ரத்த சம்பந்த பட்ட உறவினர்கள் , உடன்பிறப்புகளின் சொத்து சுகங்களை அகபரித்தாலும் , அவர்களின் வாழ்க்கையை கெடுத்தாலும் , தனது பெற்றோரை சரியாக கவனிக்காமல் சிரமப்பட வைத்தாலும் , நிந்தனை செய்தாலும் , மனம் நோக செய்தாலும் , பூர்வ புண்ணியம் பாதிக்கும் வாய்ப்பை தந்துவிடும் , குறிப்பாக தனது தாய் வழி பெற்றோர் , தகப்பன் வழி பெற்றோர்களை சிரம பட வைத்தாலும் , சதுர்வேதிகளையும் , பிராமணர்களையும் , சிவனடியார்களையும் ஏளனம் செய்வதாலும், நிந்தனை செய்வதாலும் , சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


5 ) விதவை மற்றும்  வாரிசு அற்றவர்களின்  சொத்துகளை ஜாதகர் ஏமாற்றி பெறுவதாலும், மாற்று திறனாளிகள் சொத்துகளை அகபரித்தலும் , மன நிலை பாதிக்க பட்ட நபர்களின் சொத்துகளை அகபரித்து கொண்டாலும் , வயதானவர்களின் உடைமைகளை வலுகட்டாயமாக அகபரித்து கொண்டாலும் , பூர்வ புண்ணியம் பதிக்க அதிக வாய்ப்பு உண்டாகும் , மேலும் கோவில் சொத்துகளை அகபரிப்பதால் 7 தலைமுறைக்கு பூர்வ புண்ணியம் பாதிப்படையும் , கோவில் பசுவினையும் , கற்றுகொடுத்த குருவின் குழந்தை , மற்றும் அவர் குடும்ப பெண்களை தவறன கண்ணோட்டத்துடன் பார்ப்பதும் , குருவிற்கு துரோகம்  செய்வதாலும் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


6 ) முக்கியமாக பஞ்சமாக பாதகங்களை செய்வதால் விரைவில் பூர்வ புண்ணியம் பாதிப்படையும் , எனவே மேற்கண்ட பாவ வினை பதிவுகளை செய்யாமல் , புண்ணிய பதிவுகளை செய்து நலம் பெற வேண்டும் , புண்ணியம் செய்யாவிட்டாலும் பாவங்களை செய்யாமல் தனது வாரிசுகளுக்கு நன்மையை  செய்துவிட்டு போவது நல்லது , என்ன காரணத்தால் நாம் பாதிக்க படுகிறோம் என்று கூட தெரியாமல் அவர்கள் சிரமப்பட வேண்டிவரும் , இதற்க்கு காரணம் நமது செய்கை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்வது அவசியம் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696