சனி, 20 அக்டோபர், 2012

புத்திர தோஷம் எனும் குழந்தை பாக்கியம் அற்ற நிலையை எப்படி நிர்ணயம் செய்வது ?



ஐயா வணக்கம்,

கேள்வி :

1.ஒரு ஜாதகரின் குழந்தைகளை நிர்ணயிப்பதற்கு ஒருவர் ஜாதகம் மட்டுமே போதுமா?அல்லது கணவன்,மனைவி இருவர் ஜாதகமும் சேர்த்து பார்த்தால்தான் முடிவுசெய்யமுடியுமா?


பதில் : 

நிச்சயமாக தம்பதியர் இருவரின் ஜாதகமும் தேவை , இவருடைய ஜாதக அமைப்பை வைத்து மட்டுமே குழந்தை பாக்கியம் என்ற பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் தன்மையை நிர்ணயம்  செய்ய முடியும் , அதன் அடிப்படையிலேயே குழந்தை பாக்கியம் உண்டா ? இல்லையா என்று தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் . ஒருவரின் ஜாதக அமைப்பை மட்டும் வைத்து குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்வது என்பது ஒரு  கை ஓசைக்கு சமமானது அன்பரே ! மேலும் தம்பதியரின் சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்க பட்டு இருந்தாலும் , ஒருவருக்கு வலிமையுடன் இருந்தால் நிச்சயம் பெண் குழந்தைக்கு கிடைப்பதற்கு  உண்டான வாய்ப்பு நிச்சயம் உண்டு . இதிலிருந்து ஒருவருக்காவது  புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் . இருவருக்கும் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து ஆண் குழந்தை இல்லத்திற்கு காரணம் தம்பதியர் தங்களுக்கு உகந்த திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருக்காமல் , பாதகத்தை தரும் வாயிர்ப்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பது மட்டுமே காரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு ஆண்குழந்தைகளே பிறக்கின்றன.

பதில் : 
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் சர ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் சர ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் ஆண் குழந்தைகளாக பிறக்கும் . மேற்கண்ட அமைப்பில் இருந்து அதாவது  ஜாதகர் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருந்து, தனது பூர்விகத்தை விட்டு வெளியே சென்று குடியிருந்தால் , ஜாதகருக்கு பெண் குழந்தைகளாகவே பிறக்க கூடும் , தனது பூர்வீகத்திற்கு திரும்ப வந்தவுடன் ஆண் வாரிசு நிச்சயம் அமையும் , இதையெல்லாம்  சுய ஜாதகம் கொண்டே பலன் நிர்ணயம் செய்ய முடியும் .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு பெண் குழந்தைகளே பிறக்கின்றன.

பதில் :
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் உபய ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் உபய  ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் பெண்  குழந்தைகளாக பிறக்கும் .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு இரண்டுமே பிறக்கின்றன.

பதில் : 
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் ஸ்திர  ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் ஸ்திர  ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , ஆண் பெண் என்று இரண்டு விதமான குழந்தைகளையும் பெரும் யோகம் உண்டாகும் .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன.

பதில் :
இது மேற்கண்ட அமைப்பில் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து , கருத்தரித்த நேரமும் , இடமும் இரட்டை குழந்தைகளுக்கு உண்டான அமைப்பை நிர்ணயம் செய்யும் .

கேள்வி :
சிலபேருக்கு குழந்தைகளே இல்லை.

பதில் :
இதற்க்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும் ,  தம்பதியரின் ஜாதக அமைப்பில் இவருடைய பூர்வ புண்ணியம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் , பூர்வ புண்ணியம் எனும் பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகனுக்கு இப்பிறவியில் தத்து புத்திர யோகம் மட்டுமே உண்டு அதுவும் ஜாதகர் செய்யும் குல தேவதை வழிபாட்டை பொறுத்து அமையும் .

கேள்வி :
இதை ஒரு ஜாதகரின் அல்லது தம்பதியின் ஜாதகங்களை வைக்து சரியாக அதாவது மிகச்சரியாக தெரிந்துகொள்ளமுடியுமா?உங்கள் அனுபவத்தை வைத்து பதிலை ஜோதிடதீபத்தில் அளிக்கவும்.

பதில் :
நிச்சயம் தம்பதியர் இருவரின்  ஜாதகத்தை வைத்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் , ஒருவரின் ஜாதக அமைப்பை வைத்து நிர்ணயம் செய்வது என்பது மிகவும் கடினம். மேலும் இதை எல்லாம்  அனுபவத்தை வைத்து சொல்ல இயலாது ஜோதிட கணிதத்தை வைத்து சரியாக சொல்லிவிட முடியும் அன்பரே ! ஜோதிடத்தில் கணிதம் மட்டுமே உண்டு அனுபவம் என்பது ஏது ?


கேள்வி :
கிராமவாசிகள் ஜோதிடரிடம் இந்த ஜாதகருக்கு எத்தன வாரிசு பிறக்கும்?அதுல ஆண் எத்தன பெண் எத்தன?மூத்தது ஆணா?பெண்ணா? இப்படியெல்லாம் கேட்கிறார்களே. இதற்கெல்லாம் உண்மையிலேயே மிகச்சரியான பதிலை ஜோதிடத்தின் மூலம் கூறமுடியுமா? முடியும் எனில் உங்கள் அனுபவத்தில் பார்த்த ஒரு உதாரண ஜாதகம் மூலம் விளக்கமுடியுமா?

பதில் :
கிராம வாசிகள் என்ன ? நகர வாசிகள் என்ன ? எல்லோருக்கும் ஒன்றேதான் , பாரம்பரிய ஜோதிட முறையில் பல ஜோதிடர்கள் பச்சிலை என்ற ( அதாவது மனோ தத்துவம் அல்லது மனோ ரீதியான அணுகு முறை பிறந்த ஜாதகத்தில் சில எழுத்துகள் மூலம் உடன் பிறப்பு பற்றி சொல்லும் தன்மை  ) ஒரு முறையை கடை பிடிக்கிறார்கள் , இதை வைத்து கொண்டுதான் பல அரை குறை ஜோதிடர்களின் பிழைப்பே ஓடுகிறது , நமது அமைப்பில் ஆருடம் மூலம் பிறப்பது ஆண் குழந்தைய அல்லது பெண் குழந்தையா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , மேலும் இதை பற்றி நான் அதிகம் சொல்ல விரும்ப வில்லை .

கேள்வி :
புத்திர தோஷம் என ஜோதிடம் ஆண் வாரிசை மட்டுமே குறிக்கிறது.புத்திரி தோஷம் என் பெண் பாலை குறிக்கவில்லை.எனவே ஒருவருக்கு ஏற்ப்படும் பெண் வாரிசை பற்றி அவர் ஜாதகம் மூலம் அறியமுடியாதா?முடியும் எனில் எப்படி?

பதில்:
புத்திர தோஷம் என்பதே பொதுவான ஒரு வார்த்தைதான் , இதில் ஆண் பெண் வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை , மேலும் புத்திரன் தோஷம் என்று இருந்திருந்தால் மட்டுமே உங்களின் கேள்வி சரியானதாக இருந்திருக்கும் என்பது எமது கருத்து , மேலும் ஜாதகருக்கு பெண் குழந்தை உண்டா என்பதை நிர்ணயம் செய்ய நிச்சயம் முடியும் , எப்படி எனில் இதற்க்கு தாங்கள் ஜோதிடத்தை நல்ல குரு மூலம் தெளிவாக  இருந்து கற்றுகொள்ள வேண்டும் .

கேள்வி :
புத்திர தோஷம் என்றால் என்ன? குழந்தைகளே இல்லாத நிலையா? ஆண் குழந்தைகளே இல்லாத நிலையா?

பதில் :
குழந்தைகளே இல்லாத நிலையையே புத்திர தோஷம் என்று சொல்ல இயலும் ,

கேள்வி :
ஆண்,பெண் குழந்தைகள் பிறந்தும் அந்த குழந்தை சில வருடங்கலில் அதாவது திருமணம்,வேலை போன்றவற்றிற்கு முன்பே அந்த வாரிசு அகால மரணம் அடைவது அல்லது மரணத்திற்கு ஒப்பான நிலை,அல்லது பெற்றோருக்கு உபயொகமில்லாமல் போவது. அந்த வாரிசால் பெற்றோர் அவமானம் அடைதல் புத்திர தோஷம் இதில் எது அடங்கும்? இதற்கான விரிவான பதிலை ஜோதிட தீபத்தில் எதிர்பார்க்கிறேன்

நன்றிகளுடன்,
ஜோதிட பித்தன்.

பதில் :
ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , எதிரி ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, ஆறாம் பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகனுக்கு பிறக்கும் குழந்தையால் ஜாதகன் அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் .

ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , ஆயுள் ஸ்தானம் மற்றும் திடீர் இழப்பு  எனும் எட்டாம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று எட்டாம்  பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகன் தனது குழந்தையை இழக்கும் தன்மையையோ அல்லது நிரந்தரமாக பிரியும் தன்மையையோ பெற கூடும் .

ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ,விரைய ஸ்தானம் எனும் 12 ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று எட்டாம்  பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகன் தனது குழந்தையின் அமைப்பில் இருந்து அதிக வீண் விரயங்களையும் , மன நிம்மதி இழப்பினையும்  சந்திக்க வேண்டி வரும் .

மேற்கண்ட பலன்கள் எல்லாம் சுய ஜாதக அமைப்பை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும் , புத்திர ஸ்தானம் எனும் ஒருபாவகத்தை வைத்து மட்டுமே நிர்ணயம் செய்து விட முடியாது .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  


திங்கள், 15 அக்டோபர், 2012

அஷ்டவர்க்க பரல்கள் ஜாதக பலனை நிர்ணயம் செய்யுமா ?



குருவிற்கு
மிக அருமையான விளக்கம். மேலும் சில வினாக்கள். கேள்விகளில் தவறு இருப்பின் மன்னிக்கவும் ஐயா.

பாதக ஸ்தானத்தில் அஷ்டவர்க்க படி அதிக பரல்கள் இருந்தால் மிக அதிக தீமை என்று எடுத்து கொள்ளலாமா?
 
பாவகங்களின் வலிமையை அஷ்டவர்க்கம் வைத்து முடிவு செய்யலாமா?


பதில் :

இரண்டுமே தவறான ஜோதிட கணித முறை அன்பரே ! காரணம் இந்த அஷ்ட வர்க்கத்தை வைத்து பலன் சொல்லுவது என்பது நிச்சயம் சரியான பலனை சொல்ல இயலாது என்பதே எனது கருத்து , மேலும் இதை பற்றி தெளிவாக ஆராய்சி செய்து பார்த்தாகி விட்டது , பலன்கள் சரியாக வரவில்லை .

ஒரு உபய இலக்கின ஜாதகருக்கு லாப ஸ்தானத்தின் பலன் நடக்கின்ற பொழுது லாப ஸ்தானத்தில் குறைவான பரல்கலையே பெற்றிருந்தும் மிகுந்த யோக அமைப்பையே தந்து இருக்கிறது , பாதக ஸ்தான பலனை நடத்தும் பொழுது பாதக ஸ்தானத்தில் குறைவான பரல்களை பெற்றிருந்தும் , ஜாதகர் கடுமையான தீய பலன்களையே அனுபவிக்க வேண்டி இருந்தது , எனவே அஷ்ட வர்க்க பரல்களை வைத்து பலன் நிர்ணயம் செய்வது என்பது நிச்சயம் ஜாதக பலன்களை சொல்ல இயலாது  என்பதே  எமது கருத்து .

போலி ஜோதிடர்கள் சொல்வது போல் வீடு கொடுத்தவன் , வீடு வாங்கியவன் , வீடு விற்றவன் என்று கதை அளப்பவர்களுக்கு  மட்டுமே இந்த அஷ்ட வர்க்க அமைப்பு  பயன் படும் நமது தெளிவான சரியான ஜோதிட பலன்களுக்கு இந்த அஷ்ட  வர்க்க கணிதம் நிச்சயம் உதவவில்லை என்பதே உண்மை .

ஒரு பாவகத்தின் வலிமையை , அந்த பாவகம் தொடர்பு பெறும் வீட்டின் நிலையில்  இருந்து மட்டுமே தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , லக்கினம்  ஒருவருக்கு பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் பொழுது லக்கினத்தில் எத்தனை பரல்கள் இருந்தாலும் ஜாதகரை காப்பாற்ற இயலாது , பாதக ஸ்தானத்தில்  எத்தனை பரல்கள் இருந்தாலும் காப்பாற்ற இயலாது , காரணம் தொடர்பு  பெறுவது பாதக ஸ்தானதுடன் எனவே லக்கினத்திற்கு எவ்வித தடையும்  இன்றி 200 மடங்கு தீமையான பலனை மட்டுமே சரியாக செய்யும் .

இதுவே மாறி லக்கினம்  லாப ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று லக்கினம் உபய ராசியாக இருந்தால் லக்கனத்தில் குறைவான பரல்கள் இருந்தாலும் , லாப ஸ்தானத்தில் குறைவான பரல்கள் இருந்தாலும் ஜாதகரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை  யாராலும் தடுக்க இயலாது , 100 மடங்கு நன்மையான பலனை ஜாதகருக்கு  குறிப்பிட்ட காலகட்டத்தில் வாரி வழங்கி விடும் ,இதில் எவ்வித சந்தேகமும்  இல்லை அன்பரே ! எனவே  இந்த அஷ்ட வர்க்க பரல்களை கொண்டு  எம்மால் நிச்சயம் சரியான ஜாதக பலனை நிர்ணயம் செய்ய முடியாது , மேலும் ஒரு பாவக பலனை நிர்ணயம் செய்ய அந்த பாவகம் எந்த வீட்டுடன்  தொடர்பு பெறுகிறது என்பதை வைத்தே சரியாக  துல்லியமாக நிர்ணயம்  செய்ய இயலும் .

நீங்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் உண்டான ஒரே பதில் அஷ்ட வர்க்க பரல்களை  வைத்து ஜாதக பலனை நிச்சயம் சரியாக சொல்ல முடியாது என்பதே  உண்மை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com

மறைவு ஸ்தானம் தரும் யோக பலன்கள் !


அண்ணே,

       

எனது கேள்விக்காகத் தாங்கள் நீண்ட ஒரு விளக்கம் தந்த மேன்மைக்கு நன்றி!. இது போல் ஒரு வலைப்பூவில் பாதகஸ்தானம் பற்றிக் கேள்வியெழுப்பியிருந்தேன். அதற்கு அந்த நண்பர் நீங்கள் சொல்வது போல் பாதகஸ்தானம்,பாதகஸ்தான அதிபதி என்பது பற்றியெல்லாம் புரதான ஜோதிட நூல்களில் கூட விளக்கம் இல்லை. நீங்கள் தேவையில்லாத விஷயத்தைப் பற்றிக் குழப்பிக்கொள்ள வேண்டாம் எனக் கூறியிருந்தார்.அவர் சொன்னது மறைவு ஸ்தானங்களை(6,8,12) மட்டும் பார்த்தால் போதும் இது ஒன்றும் அத்தனை முக்கியத்துவமில்லாதது என்று கூறியிருந்தார்.அதனால் தான் நான் தங்களிடம் என் மனதில் தோன்றிய ஐயத்தைக் குறித்து வினவினேன். நான் என் நண்பன் ஜாதகத்திலும்,என் தாயார் ஜாதகத்திலும் பாதகாதிபதிகளின் திசை நடந்த போது அவர்கள்பட்ட மனவேதனையை கேட்டும்,கண்டும் இருந்ததால் இதன் பாதகம் நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து அறியலானேன்.தங்களின் விளக்கத்தால் தெளிவும் அடைந்தேன். 
பல இளம் ஜோதிட ஆராதகர்கள் மறைவு ஸ்தானத்தைப் பற்றிக்கொண்டு 
இறங்க மறுக்கின்றனர்.பாதகஸ்தானமா? என்று எதிர்கேள்வி கேட்டு நமது மண்டையைக்காய வைக்கின்றனர்,அவர்களுக்கும் இந்தப் பதிவு பயன்படும்.
நன்றிகள் பல!!!



சந்தோசம் தம்பி இந்த இடத்தில் சிறு விளக்கம் தர கடமைப்பட்டு இருக்கிறேன் பாதக ஸ்தானத்தை பற்றி விளக்கம் சில பழமையான ஜோதிட நூல்களில் இருக்கிறது ஆனால் அதைபற்றி பல ஜோதிடர்களுக்கு நிச்சயம் தெரியாது காரணம் தனக்கு எல்லாமே தெரியும் என்ற எண்ணமும் சரியான புரிதல் இல்லாதது மட்டுமே  மேலும் பொதுவான ஜோதிட பலன்களை படித்து விட்டு ஜோதிடம் சொல்லும் நபர்களுக்கு இதை பற்றிய ஆராய்ச்சியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை அதை பற்றி நமக்கு என்ன கவலை அவர்கள் அனைவரும் தனக்கு ஒரு வருமானம் தரும் தொழிலாக மட்டுமே ஜோதிடத்தை பார்க்கின்றனர் ஆனால் நாமோ ஜோதிடகலையை இறையருள் நமக்கு தந்த ஒரு பொக்கிஷமாக பார்க்கிறோம் , இந்த பொக்கிஷத்தை சரியாக பயன்படுத்தினால் மனிதகுலம் நிச்சயம் வாழ்க்கையில் பல நன்மைகளை பெரும் என்பதே உண்மை, தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சரியான வாழ்க்கை பாதையினை ஜோதிட கணிதம் கொண்டு தெளிவாக தெரிந்து உள்ளது உள்ள படி சொன்னாலே மக்கள் அதன் படி தெளிவாக புரிதலுடன் வாழ்க்கையை சிறப்பாக நடத்துவார்கள் என்பது முற்றியும் சாத்திய படும் ஒரு விஷயமே .

பொதுவாக ஒரு ஜாதக அமைப்பில் மறைவு ஸ்தானம் என குறிப்பிட படும் , ஆறு ,எட்டு மற்றும் பனிரெண்டாம் பாவக வழியில் இருந்து கெடுதல் மட்டுமே நடக்கும் என்பது பாரம்பரிய ஜோதிட முறையில் சொல்லப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது, மேலும் இந்த பாவகத்திர்க்கு உட்பட்ட அதிபதிகளின் திசை மற்றும் புத்திகள் நடந்தால் தீமையை மட்டுமே செய்யும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது , உண்மையில் மறைவு ஸ்தானம் என குறிப்பிட படும் , ஆறு ,எட்டு மற்றும் பனிரெண்டாம் பாவகத்திர்க்கும் , லக்கினம் முதல் 12 பாவகத்திர்க்கும் இரண்டு வித குணம் உண்டு , சுய ஜாதகத்தில் மேற்கண்ட மறைவு ஸ்தானங்கள் மற்றும் மறைவு ஸ்தானங்களுக்கு அதிபதிகளின் திசைகள்  நல்ல பாவகங்களுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தினால் நன்மையை தரும் என்று எத்தனை ஜோதிடர்களுக்கு தெரியும் , அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் மேலும் மறைவு ஸ்தனங்களும் ஒரு ஜாதகனுக்கு நன்மையை தரும் எனும் உண்மை எத்தனை ஜோதிடர்கள் ஜோதிட கணிதம் கொண்டு அறிந்திருக்க கூடும் , மறைவு ஸ்தானங்கள் நல்ல நிலையில் இருந்து இதன் அதிபதிகளின் திசை மற்றும் புத்திகள் தரும் பலன்களை பற்றி இனி பார்ப்போம் .

ஆறாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மை :

திசை முழுவது சிறு சிறு அதிர்ஷ்டங்களை ஜாதகர் பெற்று கொண்டே இருப்பார் , உடலில் ஏற்ப்படும் உடல் நல குறைவுகள் , விரைவான குணம் பெரும் தன்மையை தரும் , கடன் பெறுவதாலும் , கொடுப்பதாலும் ஜாதகர் நன்மை பெறுவார் , எதிரிகளின் சொத்து ஜாதகருக்கு கிடைக்கும் , எதிரிகள் கூட நண்பர்கள் ஆகும் சூழ்நிலை உண்டாகும் , எதிரிகளின் செயல் ஜாதகருக்கு சாதகமாக மாறிவிடும் , ஜாதகரை எதிர்ப்பவர்கள் தோல்வியை தழுவ வேண்டி வரும், தொழில் முன்னேற்றம் என்பது மிக விரைவானதாக இருக்கும் , ஜாதகரின் வளர்ச்சி என்பது எவராலும் அறிந்து கொள்ள இயலாத அளவில் இருக்கும், மேலும் ஜாதகர் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றி பெரும் , தனது தாய் மாமன் வழியில் இருந்து அதிக நன்மை பெரும் யோகம் உண்டாகும் , கோர்ட் கேசு ஆகியவற்றில் ஜாதகருக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும், சுய ஜாதகத்தில் ஆறாம் வீடு வலிமை பெற்றால் மேற்கண்ட நன்மைகள் ஜாதகர் அனுபவிக்கும் யோகம் உண்டாகும் .

எட்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மை :

திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஜாதகருக்கு குபேர சம்பத்து உண்டாகும், லாட்டரி , புதையல் போன்ற அதிர்ஷ்டங்கள் கிடைக்க பெறுவார் , குறிப்பாக ஆயுள் காப்பீடு மற்றும் இன்சுரன்ஸ் துறைகளில் ஜாதகர் கொடி கட்டி பறக்கும் அளவிற்கு  வருமான வாய்ப்புகளை பெறுவார் , மேலும் திடீர் பொருள் வரவும் சொத்து சுக சேர்க்கையும் , எதிர்பாராத பண வரவும் , நிலபுலன் சேர்க்கையும் நிச்சயம் ஏற்ப்படும் , சுய ஜாதகத்தில் எட்டம் வீடு நல்ல நிலையில் இருந்து இந்த வீட்டின் பலன் நடந்தால் மேற்கண்ட நன்மையான பலன்கள் எல்லாம் குறுகிய காலத்தில் நிச்சயம் நடைபெறும் .

பனிரெண்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மை :

ஜாதகர் செய்த சிறு முதலீடு மூலம் மிகப்பெரிய வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் , தொழில் மற்றும் நிலம் நகை வண்டி வாகனம் போன்ற விஷயங்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் அபரிவிதமான செல்வாக்கு மற்றும் பண வரவு , ஆன்மீக வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றி , இறை நிலை பற்றிய தெளிவு தன்னை பற்றி தெரிந்து கொள்ளும் ஆற்றல் , மற்றவர்களின் மன நிலையை தெளிவாக தெரிந்து கொள்ளும் சிறப்பு தகுதிகள் , மன தத்துவ நிபுணர் ஆகும் யோகம் , ஜாதகர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே மன எண்ண ஆற்றல் மூலம் உலகில் நடப்பவைகளை தெரிந்து கொள்ளும் ஆற்றல் , முன்ஜென்ம நினைவுகள் , கர்ம வினை பதிவின் தன்மைகள் , கருமையத்தின் தன்மை , இறை நிலைக்கும் ஜாதகருக்கும் உள்ள தொடர்பு , போன்ற விஷயங்களும் , இதனால் கிடைக்கும் நன்மைகளையும் ஜாதகர் பெறுவது பனிரெண்டாம் வீடு மற்றும் அதிபதி  நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் யோகம் உண்டாகும் .

இதுவே ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீட்டு மற்றும் அதன் அதிபதியின் திசை நடக்கும் பொழுது , பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானதுடன் சம்பந்த பெற்று இருந்தால் , ஜாதகரை பூர்வீகத்தை விட்டே வெகு தொலைவு சென்று பரதேஷ ஜீவனம் செய்ய வைத்து விடும் எனவே  ஒவ்வொரு பாவகதிர்க்கும் நன்மை தீமை செய்யும் பலம் உண்டு என்பது இதன் மூலம் தெளிவாகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பாதக ஸ்தானத்தின் பலன் ஒரு ஜாதகருக்கு நடைபெற்றால் என்ன நடக்கும் ?



அண்ணே வணக்கம்,
      

உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் எப்போதும் பாதக ஸ்தானம் பற்றி அதிகம் குறிப்பிடுகிறீர்கள். மற்ற ஜோதிடர்கள் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை கேட்டால் லாப ஸ்தானம்,பாக்கிய ஸ்தானம்,களத்திர ஸ்தானம் எப்படி  நமக்குத் தீமை செய்யும் எனக்கேட்டு உடம்பு புல்லரிக்கச் செய்கின்றனர். அதில் எனக்கும் உடன்பாடு இல்லை தான்.பாதகஸ்தானம் எப்போதும் தீமையான பலன்களைத்தான் தருமா?.இல்லை பாதகஸ்தான அதிபதி தான் பாதகம் செய்யுமா?.இல்லை பாதகஸ்தான அமர்வு பெற்ற கிரகங்கள் தான் தீமை செய்யுமா?.இத்தனை செய்யுமா ஏன் என்றால் நீங்கள் சொல்லும் பாதகஸ்தானத் தொடர்பு பெற்ற கிரகங்களின் தசா,புத்திகள் எப்போதுமே நன்மை செய்யாது என்று கொள்ளலாமா?. நீங்கள் குறிப்பிடுவது ஒருவருக்கு (சரம் 11ம் அதிபதி,ஸ்திரம் 9ம் அதிபதி, உபயம் 7ம் அதிபதி)இந்த இடங்களின் ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் ஏதோ ஒருவகையில் தீமை மட்டுமே செய்யுமாயின் அந்தக் குறிப்பிட்ட ஆதிபத்திய வீடுகளின் பலனை நாம் அனுபவிக்கவே முடியாது. லாப‌மில்லாம‌ல்,ஒரு பாக்கிய‌மும் இல்லாம‌ல், ந‌ல்ல‌ ம‌னைவியில்லாம‌ல் த‌னிம‌னித‌ வாழ்வு எப்ப‌டி சாத்திய‌மாகிற‌து?. அத‌ற்கு இறை நிலை செய்துள்ள‌ மாற்றுவ‌ழிக‌ள் என்ன‌வாக‌ இருந்தால் அதை அவ‌ன் ச‌மாளிக்க‌ முடியும்.இத‌ற்குத் த‌ங்க‌ளிட‌மிருந்து ஒரு ப‌திலை ந‌ம‌து வ‌லைப்பூவில் அனைவ‌ர் அறிய‌த் த‌ருவீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்.


வணக்கம் தம்பி தங்களின் சந்தேகங்களை தீர்த்தது வைப்பது ஜோதிடன் என்ற முறையில் எனது கடமையும் கூட , தங்களின் கேள்வி எனக்கு மிகவும் ஆச்சரியத்தை தருகிறது , ஏனெனில் ஜோதிடத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சி உள்ளவர்களால் மட்டுமே இது போன்ற கேள்விகள் கேட்க்க இயலும் , இதிலிருந்து தங்களுக்கு ஜோதிட கலையின் மீது உள்ள அளவில்லா ஆர்வத்தை காட்டுகிறது , எவருக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தேடுதல் இருக்கிறதோ , அவர்களுக்கு நிச்சயம் அந்த விஷயம் நிச்சயம் கிடைக்கும் , கடந்த ௮ வருடங்களுக்கு முன்பு தங்களை போன்றே ஜோதிடத்தை பற்றி உண்மை விஷயங்களை அறிய அதிக தேடுதலுடன் இருந்தேன் , அந்த தேடுதலின் பலனாகவும் , இறை அருளின் கருணையினாலும் , எனக்கு ஜோதிடத்திற்கும் , ஆன்மிகத்திற்கு சரியான குரு எனக்கு கிடைத்தார் , அவர்களின் அருளால் ஜோதிடத்தில் தெளிவும் , ஆன்மீகத்தில் விழிப்புணர்வும் பெற்றேன் எனவே தங்களுக்கும் தங்களின் தேடுதலுக்கும் இறை அருள் நிச்சயம் சரியான பதிலையும் , தெளிவையும் தரும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை சரி இனி தங்களின் கேள்விக்கு உண்டான தெளிவான பதிலை பார்ப்போம் .


பாதகஸ்தானம் எப்போதும் தீமையான பலன்களைத்தான் தருமா?

பாதக ஸ்தானம் நிச்சயம் எப்பொழுது தீமையான பலனை மட்டுமே தரும் என்பதில் எவ்வித சந்தகமும் இல்லை உதரணமாக நமது வீட்டில் எரியும் விளக்குதானே அதை தொட்டால் நம்மை ஒன்றும் செய்து என்று சொல்ல முடியுமா ? உங்களது வீடு என்றாலும் உங்களது விளக்கு என்றாலும் அதில் எரியும் நெருப்பை தொட்டால் நிச்சயம் சுடவே செய்யும், "நெருப்பை தொட்டால் சுடும் என்பதே விதி"  இதை மாற்ற யாராலும் முடியாது , இதில் இருந்து தெரிவது பாதக ஸ்தானம் ஒருவருக்கு நிச்சயம் தீமையான பலன்களை மட்டுமே செய்யும் என்பது ஊறுதி .


இல்லை பாதகஸ்தான அதிபதி தான் பாதகம் செய்யுமா?.இல்லை பாதகஸ்தான அமர்வு பெற்ற கிரகங்கள் தான் தீமை செய்யுமா?

பாதக ஸ்தான அதிபதியும் கெடுதல் செய்ய மாட்டார் , பாதக ஸ்தானத்தில் அமர்ந்த கிரகமும் கெடுதல் செய்து , பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற கிரகத்தின் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் நடக்கும் பொழுது மட்டுமே , அதிக கெடுதலான பலனை அதாவது 200 மடங்கு கெடுதலான பலனை வாரி வழங்கும் , அந்த காலகட்டங்களில் ஜாதகர் தனது வாழ்நாளில் அனுபவிக்காத சிரமங்களையெல்லாம் அனுபவிக்க வேண்டி சூழ்நிலைக்கு தள்ள படுவார் , குறிப்பாக சர லக்கினம் பெற்ற ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை பாதக ஸ்தானமான பதினொன்றாம் பாவகத்தின் பலனை தரும் பொழுது ஜாதகர் லக்கினம்  மேஷம் என்றால் தனது முட்டல் தனமான நடவடிக்கையின் காரணமாக தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் , கடக லக்கினம் என்றால் தனது சொத்து சுகங்களை இழக்கும் தன்மையும் , உடல் நிலை பாதிப்புகளையும் சந்திக்க வேண்டி வரும் , துலாம் லக்கினம் என்றால் தனது அவசரமான செயல்களாலும் , முன்பின் யோசனை அற்ற செயல்களாலும் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் , மகர லக்கினம் என்றால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும் , மன நிலை பாதிப்பிற்கும் உட்பட வேண்டிய சூழ்நிலை  ஏற்ப்படும் குறிப்பாக மன நோயால் அதிகம் பாதிக்க படும் நபர்கள் இவர்களே .

நடக்கும் எந்த கிரகத்தின் திசை என்றாலும் , அந்த திசை நிச்சயம் பாதக ஸ்தானத்தின் பலனை செய்யாமல் இருந்தால் மட்டுமே நல்லது , பாரம்பரிய ஜோதிட முறையில் நல்ல கிரகம் என்று வர்ணிக்க படும்  சுக்கிரன் , குரு , சந்திரன், போன்ற கிரகங்களின் திசை நடந்தாலும் அந்த கிரகத்தின் திசை பாதக ஸ்தான பலனை செய்தால் ஜாதகர் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக மாறிவிடும் , நடப்பது என்னவே நல்ல கிரகத்தின் திசை தான் ஆனால் அந்த நல்ல கிரகம் தொடர்பு பெறுவதோ பாதக ஸ்தானம் எனவே நல்ல கிரகத்தின் திசையும் ஜாதகருக்கு பாதகமான பலனை 200 மடங்கு செய்யும் , உதாரணமாக என்னிடம் வந்த ஒரு நபருக்கு உபய லக்கினம் சுய ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி பெற்று இருந்தார் அவரின் திசை அப்பொழுது நடந்து கொண்டு இருந்தது , நடந்த சந்திரன் திசை பாதக ஸ்தான பலனை செய்து கொண்டிருந்தது எனவே ஜாதகர் தனது நண்பர்களுடன்  கூட்டு தொழில் செய்து தன்னிடம் இருந்த சொத்து , நிலபுலன்கள் அனைத்தையும் இழந்து நடு தெருவுக்கு வந்து விட்டார் , இதற்க்கு ஜாதகரின் வாழ்க்கை துணையும் உடந்தை இதற்க்கு காரணம் ஜாதகருக்கு நடந்த சந்திரன் திசை களத்திர பாவகம் எனும் பாதக ஸ்தான பலனை நடத்தியதே , தற்பொழுது விவாகரத்து பெற்று ஒரு நிறுவனத்தில் இருந்து வரும் சிறிய வருமானத்தை வைத்து தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் , இவருக்கு சந்திரன் திசை சந்திரன் புத்தியில் திருமணம் செய்ய சொல்லி எந்த ஒரு ஜோதிடனோ வழிகாட்டி இருக்கிறார் .

இதில் இருந்து தெரிவது நடக்கும் திசை எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரியாத ஜோதிடர்கள் சொல்வதை கேட்டு சில காரியங்கள் செய்யும் நபர்கள் பின்னலில் இதுமாதிரி கடுமையான பாதிப்பான பலன்களை அனுபவித்து , மீள முடியாத நிலைக்கு தள்ளபடுகிறார்கள் , இது போன்ற தவறான பலனை சொல்லும் போலி ஜோதிடனுக்கு மற்றவரின் வாழ்க்கையை பற்றி என்ன கவலை , ஏதாவது பரிகாரத்தை சொல்லி பணம் ஈட்டுவதே அவர்களின் குறியாக  இருக்கும், மேலும் பரிகாரம் என்பது என்னவென்றே தெரியாமல் மக்களும் மூட நம்பிக்கைக்கு ஆர்ப்பட்டு தங்களது பொருட்களை இழந்து கொண்டேதான் இருக்கிறார்கள் , பாரிகாரம் என்பதே தான் செய்த வினை பதிவினை தானே தீர்த்து கொள்வதுதான் , உங்களுக்கு தலை வலி என்றால்  நீங்கள் தான் மருந்து எடுத்து கொள்ள வேண்டும் , மருத்துவர் எடுத்து கொண்டால் , தங்களுக்கு எப்படி குணமாகும் .

பொதுவாக பாதக ஸ்தானமாக சர லக்கினத்திற்கு 11 ம் வீடும் , ஸ்திர லக்கினத்திற்கு 9 ம் வீடும் , உபய லக்கினத்திற்கு 7 ம் வீடும் வருகின்றது , இதில் சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்தின் பலன் நடக்கும் பொழுது ஜாதகர் துரதிர்ஷ்டத்தையும் , ஸ்திர லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்தின் பலன் நடக்கும் பொழுது ஜாதகர் தேவையில்ல அவ பெயரையும், நற்பெயருக்கு களங்கத்தையும், உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்தின் பலன் நடக்கும் பொழுது ஜாதகர் சமுதாயத்தில் மற்றவர்களால் அதிக இழப்புகளையும் , இல்லற வாழ்க்கையில் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும் .

நீங்கள் சொல்லும் பாதகஸ்தானத் தொடர்பு பெற்ற கிரகங்களின் தசா,புத்திகள் எப்போதுமே நன்மை செய்யாது என்று கொள்ளலாமா?

நிச்சயமாக இதில் என்ன சந்தேகம் , பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்ற கிரகத்தின் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் அனைத்தும் நிச்சயம் கெடுதலே செய்யும் இதற்க்கு நீங்கள் எந்த பரிகாரம் செய்தாலும் சரி வராது , ஜாதகர் தனது கருமையத்தை சுத்தம் செய்துகொண்டு , மனதை ஒரு நிலையாக வைத்து கொள்வது மட்டுமே நன்மையை தரும் , மேலும் அறிவில் விழிப்புணர்வுடன் இருப்பது சகல நன்மையை தரும் , சர லக்கினத்தை சார்ந்தவர்கள் மன உறுதியுடன் இருப்பதும் , ஸ்திர லக்கினத்தை சார்ந்தவர்கள் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமலும்,உபய லக்கினத்தை சார்ந்தவர்கள் நண்பர்கள், வாழ்க்கை துணை,பொதுமக்களிடம் அதிக கவனமாக இருப்பதும் ஜாதகரை தேவையாற்ற பிரச்சனைகளை இருந்து காப்பாற்றும் , நன்மையான பலனை தரும் .


 நீங்கள் குறிப்பிடுவது ஒருவருக்கு (சரம் 11ம் அதிபதி,ஸ்திரம் 9ம் அதிபதி, உபயம் 7ம் அதிபதி)இந்த இடங்களின் ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் ஏதோ ஒருவகையில் தீமை மட்டுமே செய்யுமாயின் அந்தக் குறிப்பிட்ட ஆதிபத்திய வீடுகளின் பலனை நாம் அனுபவிக்கவே முடியாது. லாப‌மில்லாம‌ல்,ஒரு பாக்கிய‌மும் இல்லாம‌ல், ந‌ல்ல‌ ம‌னைவியில்லாம‌ல் த‌னிம‌னித‌ வாழ்வு எப்ப‌டி சாத்திய‌மாகிற‌து?. அத‌ற்கு இறை நிலை செய்துள்ள‌ மாற்றுவ‌ழிக‌ள் என்ன‌வாக‌ இருந்தால் அதை அவ‌ன் ச‌மாளிக்க‌ முடியும்.இத‌ற்குத் த‌ங்க‌ளிட‌மிருந்து ஒரு ப‌திலை ந‌ம‌து வ‌லைப்பூவில் அனைவ‌ர் அறிய‌த் த‌ருவீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்.

இதற்கு மேற்கண்ட அமைப்பில் பதில் கொடுத்து விட்டோம் , இருப்பினும் சில விளக்கம் கொடுக்க கடமை பட்டு இருக்கிறோம் , அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் ஆனால் அந்த பாவகத்தின் பலன்கள் நடக்கும் திசையில் நடை பெறவில்லை என்றால் , நிச்சயம் அதன் கெடுதலான பலன்கள் நடை முறைக்கு வரவே வராது , எனவே அந்த பாவகங்கள் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது பற்றி நாம் எவ்வித கவலையும் பட தேவையில்லை , நன்மை என்றாலும் , தீமை என்றாலும் நடக்கும் திசையில் சம்பந்த பட்ட பாவகங்களின் பலன்கள் நடை முறைக்கு வந்தால் மட்டுமே நன்மை தீமை பலனை செய்யும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் . மேலும் சம்பந்த பட்ட லக்கினத்தின் பாதக ஸ்தானமாக வரும் ராசி,மற்றும் தத்துவம், கால புருஷ தத்துவத்திற்கு சம்பந்த பட்ட ராசி என்ன அமைப்பை பெறுகிறது  என்ன வென்பதை வைத்தே பலனை நிர்ணயம் செய்ய வேண்டும் தம்பி , மேலும் ஜாதக ரீதியான அனைத்து கேள்விகளுக்கும் எங்களால் முடிந்த அளவிற்கு தங்களுக்கு பதில் சொல்ல காத்து இருக்கிறது ஜோதிடதீபம் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  

வெள்ளி, 12 அக்டோபர், 2012

கேடு வரும் முன்னே கேது திசை வரும் பின்னே ?




கேள்வி :

வணக்கம் குருஜி நான் தற்பொழுது சிங்கப்பூரில் வசித்து வருகிறேன் பணி நிமித்தமாக , எனது பூர்விகம் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி , தங்களது வலை பூ அறிமுகம் எனக்கு கடந்த சில நாட்களாகவே அறிமுகம் , தாங்கள் தரும்  தெளிவான ஜாதக பலன்கள் என்னை வியப்படைய செய்கிறது , வாழ்த்துகள் .  தற்பொழுது எனக்கு திருமணம் செய்யும் யோகம் உண்டா ? எதிர் வரும் கேது திசையில் கெடுதல் தான் நடக்கும் என இதற்க்கு முன் பார்த்த ஜோதிடர்கள் அனைவரும் சொல்கின்றனர் குறிப்பாக " கேடு வரும் முன்னே கேது திசை வரும் பின்னே " என்று எனது வயிற்றில் ஒரு ஜோதிடர் புளியை கரைத்து விட்டிருக்கிறார் , இதனால் எனது மன நிம்மதியே போய்விட்டது கேது திசை எப்படி இருக்குமோ என்ற கவலையிலேயே நாட்கள் செல்கின்றன , ஒருவருக்கு கேது திசை நடந்தால் திருமணம் நடக்காது , திருமண தடை ஏற்ப்படும் என்றும் குழப்புகின்றனர் , மேலும் திருமணம் ஆகியிருந்தால் விவாகரத்து , பிரிவு ஏற்ப்படும் என்று பயமுறுத்துகின்றனர்  , தயவு செய்து சரியான ஜோதிட பலன்களை சொல்லுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் .

பதில் :

அன்பு நண்பருக்கு வணக்கம் தங்களது ஜாதக அமைப்பிற்கான துல்லியமான பலன்களை தெளிவாக தங்களது மின் அஞ்சலுக்கு அனுப்பி வைத்துள்ளோம் , படித்து தெளிவு பெறுங்கள் , மேலும் " கேடு வரும் முன்னே கேது திசை வரும் பின்னே " " ராகு திசை தீமை செய்யும் " " சனி போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை " ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது , பூராடம் நூலாடாது , மூலம் மாமனாருக்கு ஆகாது , போன்ற பழமொழிகள் ஜோதிடர்கள் தனது வாய்ஜாலத்தை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக சொல்லபட்ட ஒரு ரைமிங் வார்த்தைகள் , இதையெல்லாம் நம்பிக்கொண்டு , தங்களது வாழ்க்கையை நீங்கள் கெடுத்து கொள்ள வேண்டாம் .

" கேடு வரும் முன்னே கேது திசை வரும் பின்னே " என்பது முற்றிலும் ஜோதிட அறிவு அற்ற ஒரு அரை குறை ஜோதிடர் சொல்லும் வாய் ஜாலம் , மேலும் நடக்கும் கேது திசை எந்த பாவகத்தின் பலனை செய்கிறது , அந்த பாவகம் நல்ல நிலையில் இருக்கிறதா , பாதிக்க பட்டு இருக்கிறதா என்று ஜோதிட கணிதம் பற்றி தெரியாத ஒரு போலி ஜோதிடர்  சொல்லும் ஒரு ரைமிங் வார்த்தை , இதையெல்லாம்  ரூம் போட்டு யோசித்து சொல்வார்களோ ? இந்த மாதிரி சொல்லும் நபர்களுக்கெல்லாம் சினிமா துறையில் வசனகர்த்த வேலை காலியிருப்பதை தெரிவியுங்கள் அன்பரே .

 வாயில் என்ன வருகிறதோ அதை வாக்கு என்று சொல்லிக்கொண்டு திரியும் சில போலி ஜோதிடர்களின் நிலை கடைசியில் , ஒருவேளை உணவிற்கே அல்லாட  வேண்டிய சூழல் ஏற்ப்படத்தை கண்ணார கண்டவன் என்ற முறையில் சொல்கிறேன் , கிரகங்களின் நிலைகளை துல்லியமாக கணிதம் செய்ய தெரியாமல் , நடக்கும் திசை தரும் பலன்களை உண்மைக்கு மாறாக சொல்லும் போலி ஜோதிடர்களின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியமும் , பாக்கிய ஸ்தானமும் கடுமையாக பாதிக்க படும் என்பதே உண்மை , இதனால் பலன் கேட்க வந்தவரின் கர்ம வினை பதிவினையும் அந்த போலி ஜோதிடனே அனுபவிக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

மேலும் தங்களது ஜாதக அமைப்பில் நடக்க இருக்கும் கேது திசை 7 ம் வீடு 7 ம்  பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலன்களை வாரி வழங்க காத்திருக்கிறது என்பதே உண்மை , தங்களது திருமணமே கேது திசை கேது புத்தியில்தான்  சிறப்பாக அமையும் மேலும் லக்கினமும் , களத்திர பாவகமும் சர ராசியாக இருப்பதால் தங்களுக்கு வரும் வாழ்க்கை துணையின் வழியில்  தாங்கள் சகல யோகமும் நிச்சயம் இந்த கேது திசையில் பெறுவீர்கள் என்பது உறுதி , எனவே இந்த வாய் ஜால மன்னர்களின் வீண் வார்த்தைகளை நம்பி தேவை இல்லாமல் மனதை குழப்பி கொண்டு இருக்காமல் அடுத்தது என்ன என்பதை பற்றி யோசிக்க ஆரம்பியுங்கள் நண்பரே !

ஒருவருடைய ஜாதக அமைப்பில் நடக்கும் திசை எதுவென்றாலும் , அந்த திசை எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரியாத பொழுது , ஒரு ஜோதிடனுக்கு இந்த நிலை ஏற்ப்படுகிறது , அதாவது நல்ல கிரகங்கள் எல்லாம் நன்மையை செய்யும் , தீய கிரகங்கள் எல்லாம் தீமையை செய்யும் என்று குத்து மதிப்பாக ஜோதிட பலனை சொல்லி கொண்டு திரியும் நிலை ஏற்ப்படும் , சுக்கிரன் திசை எத்தனை பேருடைய வாழ்க்கையை பதம் பார்த்திருக்கிறது , ராகு கேது வின் திசை எத்தனை பேருடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை வாரி வழங்கி இருக்கிறது , குரு திசை எத்தனை பேருடைய வாழ்க்கையில் கபடி விளையாடி இருக்கிறது , சனி திசை எத்தனை பேருடைய வாழ்க்கையில் சகல சம்பந்துக்களையும் தந்து இருக்கிறது என்பதை ஜோதிட கணிதம் மூலம் கண்டறிந்தவன் என்ற முறையில் சொல்கிறோம் , ஜாதக உண்மை பலன்களை தெளிவாக சொல்லும் ஒரு சிறந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காணுங்கள் .

இந்த மாதிரி பழமொழி சொல்லிக்கொண்டு திரியும் போலி ஜோதிடரையும் , ஆக்டிவேசன் டிஆக்டிவேசன் செய்யும் நபர்களிடமும் தலையை கொடுத்து விட்டு , மண்டை காய  வேண்டாம் என்று சொல்வதை தவிர எங்களுக்கு  வேறு ஒன்றும் தெரியவில்லை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@mail .com  

திங்கள், 8 அக்டோபர், 2012

பனிரெண்டாம் வீட்டில் கேது அமர்ந்தால் மறு பிறவி இல்லையா ?



கேள்வி :

அய்யா எனது சுய ஜாதக அமைப்பில் லக்கினத்தில் இருந்து 12 ல் கேது அமர்ந்து இருக்கிறார் , எனது ஜாதக அமைப்பை காணும் ஜோதிடர்கள் அனைவரும் தங்களுக்கு இதுவே கடைசி பிறவி மறு ஜென்மம் தங்களுக்கு இல்லை என கூறுகின்றனர் , மேலும் தங்களுக்கு ஆன்மீக வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி கிடைக்கும் என்று சொல்கின்றனர் , தங்களுக்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையாது என்றும் சொல்கின்றனர் உண்மையில் எனக்கு ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் இல்லை, மேலும்  ஆன்மீகம் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது ,  நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் சரியான விளக்கம் தரவும் என பணிவுடன் வேண்டுகிறேன் .

பதில் :

அன்பு நண்பருக்கு  இனி தங்களுக்கு வேறு வழியே கிடையாது, காரணம் தங்களுடைய விதியை இதற்கு முன் பார்த்த ஜோதிடர்கள் நிர்ணயம் செய்து விட்டார்கள் , ருத்ராட்சம் பெற்றுகொண்டு ஆன்மீக கடலில் குதித்து விடுங்கள் , எங்களது ஊரில் ஒரு பெரியவர்கள் ஒரு செலவாடை சொல்வது உண்டு அதாவது " கேட்கிறவர் கேட்டால்  கடுகு , மொடா ( தானியம் கொட்டி வைக்கும் மண் பாத்திரம் ) சைசில் இருக்கிறது என்பார்களாம் " அது போல்  தங்களின் நிலை இருக்கிறது , தங்களுக்கு சொன்ன பலன்கள் அனைத்தும் பொது பலன்களே இது நிச்சயம் தங்களுக்கு ஒத்து வர சிறிதும் வாய்ப்பில்லை என்பதை இனி தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் .

உண்மையில் தங்களது ஜாதக அமைப்பில் பாவக முறைப்படி பதினொன்றாம் வீட்டிலேயே கேது அமர்ந்திருக்கிறார் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள் , பதினொன்றில் அமர்ந்த கேது தங்களுக்கு 100 சதவிகித நன்மையை செய்து கொண்டு இருக்கிறார் , இதன் மூலம் தங்களது வாழ்க்கை அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் , பூலோகத்தில் வாழ்வதற்கு தேவையான அனைத்து சொத்து சுகங்களையும் , யோக வாழ்க்கையும் தரும் , மேலும் வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்த நல் வாழ்க்கையாக அது இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை , ஒருவேளை இதற்க்கு முன் சந்தித்த ஜோதிடர்கள்  சில ஆன்மீக ஆனந்தாக்களின் அமைப்பை கருத்தில் கொண்டு தங்களை ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட சொல்லியிருப்பார்களோ? நண்பரே சற்றே தெளிவான சிந்தனையுடன் தாங்கள் இருப்பது தங்களுக்கு மிகசிறந்த யோக வாழ்க்கையை தரும் .

ஒருவர் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெறவும் , இறை அருளின் கருணையினால் மோட்சமும் , பிறவி அற்ற நிலையை பெறவும் அவரது சுய ஜாதக அமைப்பில் கடகம் எனும் ராசி 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் மேலும் அந்த ராசி ஜாதகருக்கு , லக்கினம் , பூர்வ புண்ணியம் , பாக்கிய ஸ்தானம் , மோட்ச ஸ்தானம்  என்ற பாவகங்களில் ஒரு பாவகமாக அமைப்பை பெற்று இருக்க வேண்டும் ,  இந்த அமைப்பை பெற்றவருக்கு மேற்கண்ட வீட்டின் பலன் நடை முறைக்கு வரும் பொழுது , இறை அருளின் கருணை ஜாதகரை தம்முடன் ஒன்றர இணைத்து கொண்டு , பிறவி அற்ற நிலைக்கு எடுத்து செல்லும் .

 காரணம் கடகம் சர நீர் ராசி , நீர் என்பது ஜாதகரின் மன சக்தியினையும் , இறை நிலையும்  ஒன்றாக இணைக்கும் சக்தி பெற்றது , இந்த ராசி நல்ல நிலையில் இருக்கும் ஜாதகருக்கு இந்த வீட்டின் பலன் நடை பெரும் பொழுது ஜாதகர் தனது கர்ம வினை பதிவினை முழுவதும் கழித்து கொள்ளும் வாய்ப்பினை பெறுவார் , மேலும் பிறவி அற்ற நிலைக்கு இறை அருள் ஜாதகர் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி எடுத்துகொள்ளும் என்பதே உண்மை , குறிப்பிட்ட காலகட்டத்தில் நல்ல ஆன்மிக குரு ஜாதகருக்கு அமைவார் அவரின் வழிகாட்டுதலில் ஜாதகர் , தனது கர்ம வினை பதிவை கழித்துக்கொண்டு பரிசுத்தம் பெற்று , பிறவி அற்று இறை நிலையுடன் ஒன்றாகும் யோக நிலையை பெறுகிறார் .

குறிப்பு : 

சிம்ம இலக்கின அமைப்பை சார்ந்தவர்களுக்கு லக்கினத்தில் இருந்து 12 ம் பாவகத்தில் கேது அமர்வது 100 சதவிகிதம் ஆன்மீக வாழ்க்கையில் நிச்சயம் வெற்றியை தரும் அதிலும் சம்பந்த பட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் தேய்  பிறை சந்திரனாக இருக்க வேண்டும் . ஒருவேளை வளர் பிறை சந்திரனாக இருந்து 12 ம் பாவகத்தில் கேது அமர்வது ஜாதகரை கற்பனை உலகத்தில் சஞ்சாரம் செய்ய வைத்து விடும் , ஜாதகரின் மனதில் தோன்றுவதெல்லாம் உண்மை என நம்ப ஆரம்பித்து விடுவார் , அதாவது உயர்வு மனபான்மை , தன்னிடம் எல்லா சக்தியும் குடி கொண்டு இருப்பதாக நினைத்து கொண்டு ( போலி சாமியார் , போலி மந்திரவாதி )  கற்பனையில் வாழ்க்கை நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உண்டு , இது இந்த லக்கினத்திற்கு மட்டும் அல்ல நீர் ராசிகள் கடுமையான பாதிப்பை பெரும் ஜாதக அமைப்பை சார்ந்த அனைவருக்கும் பொருந்தும் .

மனம் ஒருநிலை பெரும் பொழுதே ஜாதகர் ஆன்மீகத்தில் வெற்றி பெற முடியும் , அப்படி மனம் ஒரு நிலை பட வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் நீர் ராசிகள் மிகவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , குறிப்பாக கடகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அல்லது 12 ம பாவகம் 100 சதவிகிதம் மிகவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , இப்படி பட்ட நிலையில் இருப்பவர்களுக்கே ஆன்மீகத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் , வெறுமனே 12 ல் கேது அமர்ந்தால் மட்டுமே பிரிவி அற்ற பேரு நிலை கிடைத்து விட வாய்ப்பில்லை, அதிலும் ஜாதக அமைப்பில் 12 ம் பாவகத்தில் கேது இல்லை என்பதே உண்மை , எனவே யாரோ சொன்னார்கள் என்று மனதை குழப்பி கொள்ளாமல் , குடும்பத்திலும் தொழிலும் அதிக கவனம் செலுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் .



தங்களது ஜாதக அமைப்பில் கேது இருக்கும் பாவகம் பற்றி விளக்கம் :

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam @gmail .com  



சனி, 6 அக்டோபர், 2012

நட்சத்திர பொருத்தத்தில் ரச்சு பொருத்தம் இல்லை எனில் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?




அய்யா வணக்கம்  எனது பெற்றோர்கள்  எனக்கும் , எனது முறை பெண்ணிற்கும் ( மாமன் மகள் ) திருமணம் செய்யலாம் என முடிவு எடுத்து பொருத்தம் பார்த்தனர் , இதில் நட்சத்திர பொருத்ததில் ரச்சு பொருத்தம் ( கயிற்று பொருத்தம் ) இல்லை எனவும் திருமணம் செய்தால் , கணவனை இழக்க வேண்டி வரும் எனவும் ,நாங்கள் பார்த்த அனைத்து ஜோதிடர்களும் சொல்லுகின்றனர் , மேலும் பெண்ணிற்கு சர்ப்ப தோஷம் இருக்கிறது , பையனுக்கு சர்ப்ப தோஷம் இல்லை எனவும் இது திருமண வாழ்க்கையில் பிரிவை ஏற்ப்படுத்தும் என்று சொல்வதாலும் , எனது பெற்றோரும், மாமாவும் மிகவும் கவலை அடைந்துள்ளனர் , எங்களது இருவரது ஜாதகத்தையும் அனுப்பி வைத்துள்ளோம் தாங்கள் ஜாதகத்தில் உள்ள சரியான பலனை சொல்லவும் , உண்மையில் எனது மாமன் மகளும் நானும் மனதார விரும்புகிறோம் , நல்ல பதிலை தருவீர்கள் என்று நம்புகிறோம் .

அன்பு தம்பிக்கு ,

தங்களது இருவரது ஜாதக அமைப்பை வைத்து பார்க்கும் பொழுது , நட்சத்திர பொருத்ததில் மட்டுமே குறை உள்ளது ( அதாவது ரச்சு பொருத்தம் இல்லை ) இதை தாங்களும் தங்களது குடும்பத்தாரும் பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை , இதனால் தங்கள் உயிருக்கு எவ்வித பாதிப்பும் நிச்சயம் வராது , காரணம் தங்களது ஜாதகம் மிகவும் வலிமையாக காணப்படுகிறது , குறிப்பாக ஆயுள் பாவகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கிறது , மேலும் திருமண செய்ய பொருத்தம் பார்க்கும் பொழுது நட்சத்திர பொருத்தத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு திருமணம் செய்வது தவறான அணுகு முறை , மேலும் சர்ப்ப தோஷம் , நாக தோஷம் , செவ்வாய் தோஷம் என்று சொல்வதெல்லாம் ஜோதிடத்தை பற்றி சரியான  புரிதல் இல்லாதவர்களும் ஜோதிடத்தில் அடிப்படை அறிவு அற்றவர்களும் , கற்று குட்டிகளும் , அரை குறை ஜோதிடர்களும் சொல்லும் வாய் ஜாலமே அன்றி வேறில்லை , இதையெல்லாம் மக்கள் நம்பிக்கொண்டு தனது அருமை மகள் மகனின்  வாழ்க்கை பாதிக்க பெற்றோர்களே காரணமாக அமைந்து விடுகின்றனர் , எனவே இதில் இந்த பதிவை காணும் பெற்றோர்களாவது இனி விழிப்புணர்வுடன் இருப்பார்கள் என்று நம்புவோம் .

திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண் பெண் இருவரின் ஜாதக அமைப்பிலும் நல்ல நிலையில் இருக்க வேண்டிய பாவகங்கள் மொத்தம் நான்கு அவையாவன :

1 ) குடும்ப ஸ்தானம் 2 ) பூர்வ புண்ணியம்  3 ) களத்திர ஸ்தானம் 4 ) ஆயுள் பாவகம் 

மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் இருவருக்கும் இருந்தால் நிச்சயம் அவர்களின் திருமண வாழ்க்கையில் எவ்வித சிக்கலையும் தராது திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்து விடும் , இதில் குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது ஜாதகரின் வருமானம் ,பேச்சு, மனைவியுடன் சந்தோஷமாக வாழும் தன்மையை நிர்ணயம் செய்யும் , பூர்வ புண்ணியம்  ஜாதகருக்கு கிடைக்கும் வாரிசு அமைப்பையும் , இறை அருளின் கருணையினால் வாழ்க்கையில் ஏற்ப்படும் முன்னேற்றத்தையும் வழங்கும் , களத்திர பாவகம் தம்பதியரின் ஒற்றுமையும் , களத்திர வாழ்க்கையில் பெரும் சந்தோஷத்தையும் , சமுதாயத்தில் கிடைக்கும் மதிப்பு மரியாதையையும் குறிக்கும் , ஆயுள் பாவகம் வாழ்க்கையை துணையின் வழியில் இருந்து பெரும் நன்மைகளையும் , நீண்ட ஆயுளையும் , ஒருவொருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்லும் மனப்பான்மையையும் நிர்ணயம் செய்யும் .

எனவே மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் இருந்தால் நட்சத்திர பொருத்தம் எதுவும் தேவையில்லை , தாரளமாக திருமணம் செய்யலாம் எவ்வித பாதிப்பும் நிச்சயம் வர வாய்ப்பில்லை , ஒருவேளை நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 இருந்தாலும் , மேற்கண்ட பாவகங்கள் 6 ,8,12 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று இருந்தாலும் , பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருந்தால் மட்டுமே  திருமண வாழ்க்கை மூன்று மாதங்கள் கூட நிலைக்காது இதற்க்கு பல எடுத்துகாட்டுக்கள் நம்மிடம் உண்டு  .

ஆனால் தங்களது ஜாதக நிலையிலும் , தங்களது மாமன் மகள் அவர்களின் ஜாதக நிலையிலும் மேற்கண்ட வீடுகள் மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றது , உண்மையில் தங்களது மாமன் மகளின் ஜாதக நிலையில் குடும்ப ஸ்தானத்தையும் , ஆயுள் ஸ்தானத்தையும் வலிமையுடன் வைத்திருக்க காரனகர்த்தவே இந்த ராகுவும் கேதுவும்தான் . அப்படி இருக்கையில் தங்களது மாமன் மகளின் ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் என்று எந்த ஜோதிடர் சொன்னார் என்று எங்களுக்கு தெரியவில்லை, ராகு கேது என்றாலே கெடுதல்தான் செய்யும் என்பதின் வெளிப்பாடாகவே கருத வேண்டி இருக்கிறது , மேலும் பூர்வ புண்ணிய ஸ்தானம் தங்களது இருவரது ஜாதக அமைப்பிலும் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் , திருமணம் ஆனா சில மாதங்களிலேயே நல்ல யோகமான ஆண் வாரிசு கிடைக்கும் . 

தாங்கள் தங்களின் மாமன் மகளை திருமணம் செய்துகொள்வதால் தங்களுக்கு எவ்வித துன்பமும் வர வாய்ப்பில்லை என்பது உறுதி , மேலும் வாழ்க்கையில் சகல முன்னேற்றமே ஏற்ப்படும் , தொழில் , குடும்பம் , வாரிசு , தம்பதியர் ஒற்றுமை , மகிழ்வான இல்லற வாழ்க்கை என அனைத்துமே சிறப்பாக இருக்கும் , இதில் இந்த ரச்சு பொருத்தம் வந்து எந்த வித தொந்தரவும் தராது என்பது எமது தெளிவான பதில் , எனவே விரைவில் நல்ல முகூர்த்தம் பார்த்து திருமணம் செய்துகொண்டு நலமாக வாழ ஜோதிட தீபம் தங்களை வாழ்த்துகிறது இறை அருளின் கருணையினால் 16  வகை  செல்வமும் பெற்று புகழோடு வாழ்க வளமுடன் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com
  


வெள்ளி, 5 அக்டோபர், 2012

சுய ஜாதக அமைப்பில் லக்கினம் வலிமை பெரும் பொழுது ஒரு ஜாதகர் பெரும் நன்மைகள் - பகுதி 2.





லக்கினம் எதுவென்றாலும் ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை மேன்மை பெற உறுதுணை புரியும் , மேலும் லக்கினம் என்பது ஜாதகரின் தனி தன்மை , குண இயல்பு , உடல் நிலை , மன நிலை , ஜாதகரின் செயல்பாடுகள் , ஜாதகர் செய்த வினை பதிவின் தன்மை , அனுபவிக்க வேண்டிய நன்மை தீமை , வளரும் சூழ்நிலை , ஜாதகரின் ஆயுள் பலம் , தனிப்பட்ட புத்திசாலிதனம், ஜாதகரின் செயல் திறனின் வேகம் , ஒரு விஷயத்தை கிரகித்துகொள்ளும் அறிவாற்றல் , தனது பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு , போன்ற அமைப்புகளை நிர்ணயம் செய்வது இந்த லக்கினமே , எனவே லக்கினம் வலிமை பெற்றால் என்ன பலன் , வலிமை இழந்தால் என்ன பலன் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம் .


லக்கினம் வலிமை பெரும் அமைப்பு : 


ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினம் எனும் பாவகம் கீழ்கண்ட வீடுகளுடன் தொடர்பு பெற்றால் மிகுந்த நன்மையை தரும் , ஆனால் அந்த வீடு பாதக ஸ்தானமாக இருக்க கூடாது என்பது பொது விதி .

லக்கினம் ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதகரின் வசக்கையை அடிப்படையிலேயே கடுமையாக பாதிக்கும் , குறிப்பாக பெற்றோரின் ஆதரவை சிறு வயதிலேயே இழக்கும் சூழ்நிலை உண்டாகும் , அடிப்படை கல்வியில் தடை ஏற்ப்படும் , திடீரென நிகழும் அவயோக நிகழ்சிகளால் ஜாதகர் கடுமையாக பாதிக்க வாய்ப்பு உண்டு , மேலும் உடல் நிலையும் கடுமையாக பாதிக்க  படும், தன்னம்பிக்கை இழக்கும் அளவிற்கு ஜாதகரின் வாழ்வில் அடிக்கடி துன்பம் உண்டாகும் , எடுக்கும் முயற்சிகள் யாவும் தேல்வி பெரும் , மேலும் உடல் ஆரோக்கியம் , மன ஆரோக்கியம் கெடும் .

லக்கினம் பாக்கியம் எனும் ஒன்பதாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக ஜாதகர் சிறுவயது முதலே அனைத்திலும் தனி தன்மையுடன் விளங்கும் அளவிற்கு ஜாதகரின் அறிவாற்றல் அமைந்து விடும் , மேலும் அனைவரிடமும் அன்பாகவும் , பெருந்தன்மையாகவும் நடந்து கொள்ளும் மனநிலையை ஜாதகர் சிறு வயதிலேயே பெற்றிருப்பார் , சுய ஒழுக்கம் , கட்டுப்பாடு , நன்னடத்தை , என சிறப்பு குணங்களும் ஜாதகரிடம் சிறு வயதிலேயே அமைந்த விடும் , மேலும் கல்வி காலங்களில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும் , உடல் நிலை மன நிலை வளரும் சூழ்நிலை அனைத்தும் ஜாதகருக்கு மிகவும் சிறப்பாக அமைந்து விடும் . ஆனால் ஸ்திர  இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு இது பொருந்தாது , காரணம் ஸ்திர  லக்கினத்திற்கு பாதக ஸ்தானமே இந்த ஒன்பதாம் வீடுதான் .

லக்கினம் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதகருக்கு  சிறுவயதில் இருந்தே பல முன்னேற்றங்களை வாரி வழங்கும் , குறிப்பாக ஜாதகரின் தகப்பனார் ஜாதகர் பிறந்த சில நாட்களில் மிகப்பெரிய தொழில் முன்னேறத்தை பெறுவார் , மேலும் ஜாதகரின் உடல் நிலையும் , மன நிலையும் வளரும் சூழ்நிலையும் மிகவும் சிறப்பாக அமைந்து விடும் , சிறுவயதிலேயே நல்ல கல்வி அறிவினையும் , நிர்வாக திறைமையும் சிறப்பாக ஜாதகருக்கு அமைந்து விடும் , எதை செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம் எனும் மந்திரத்தை ஜாதகர் இயற்கையாக கற்று வைத்திருப்பார் .

லக்கினம் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதகர் பிறந்த சில மணி நேரத்தில் இருந்தே அதிர்ஷ்டத்தை வாரி வழங்க ஆரம்பித்து விடும் , தனது பெற்றோருக்கு அளவில்லா வசதி வாய்ப்பினை வாரி வழங்கும் ஜாதக அமைப்பு இது , மேலும் ஜாதகரின் உடல் நிலையும், மன நிலையும் வளரும் சூழ்நிலையும் மிக மிக சிறப்பாக அமைத்து விடும் , கல்வி காலங்களில் வகுப்பில் முதல் எண் பெரும் யோகம் உண்டாகும் , பட்ட படிப்பில் ஜாதகர் உலகம் வியக்கத்தக்க முன்னேற்றத்தை பெறுவார் , மேலும் சிறு வயது முதல் சகல யோகங்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , மேலும் ஜாதகர் எவ்வளவு வசதி படைத்திருந்தாலும் எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வார் , நல்ல குணமும் , சுய கட்டுப்பாடு , ஒழுக்கம் எல்லாம் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் .ஆனால் சர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு இது பொருந்தாது , காரணம் சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானமே இந்த 11 ம் வீடுதான் .

லக்கினம் விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதகரின் அடிப்படை வாழ்க்கையே கடுமையாக பாதிக்கும் , குறிப்பாக பெற்றோரிடம் இருந்து பிரிந்து தனிமையில் வாட வேண்டிய சூழ்நிலையை ஏற்ப்படுத்தி விடும் , குறிப்பாக ஹாஸ்டலில் படிக்கும் குழந்தைகளின் ஜாதக அமைப்பில் இந்த நிலை நிச்சயம் இருக்கும் , இதனால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை தந்து விடும் , அடிப்படை கல்வியில் பல தடைகள் ஏற்ப்படும் , உடல் நிலையும் , மன நிலையும் கெடும் , கற்பனையில் வாழ்க்கையை வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப்படுத்தி விடும் , தன்னம்பிக்கை குறையும் , தைரியம் குறையும் , சுய சிந்தனை அற்று மற்றவரை சார்ந்து வாழும் வாழ்க்கையை ஏற்ப்படுத்தி விடும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam @gmail .com  

வியாழன், 4 அக்டோபர், 2012

சுய ஜாதக அமைப்பில் லக்கினம் வலிமை பெரும் பொழுது ஒரு ஜாதகர் பெரும் நன்மைகள் - பகுதி 1.




லக்கினம் எதுவென்றாலும் ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை மேன்மை பெற உறுதுணை புரியும் , மேலும் லக்கினம் என்பது ஜாதகரின் தனி தன்மை , குண இயல்பு , உடல் நிலை , மன நிலை , ஜாதகரின் செயல்பாடுகள் , ஜாதகர் செய்த வினை பதிவின் தன்மை , அனுபவிக்க வேண்டிய நன்மை தீமை , வளரும் சூழ்நிலை , ஜாதகரின் ஆயுள் பலம் , தனிப்பட்ட புத்திசாலிதனம், ஜாதகரின் செயல் திறனின் வேகம் , ஒரு விஷயத்தை கிரகித்துகொள்ளும் அறிவாற்றல் , தனது பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு , போன்ற அமைப்புகளை நிர்ணயம் செய்வது இந்த லக்கினமே , எனவே லக்கினம் வலிமை பெற்றால் என்ன பலன் , வலிமை இழந்தால் என்ன பலன் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம் .


லக்கினம் வலிமை பெரும் அமைப்பு : 


ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினம் எனும் பாவகம் கீழ்கண்ட வீடுகளுடன் தொடர்பு பெற்றால் மிகுந்த நன்மையை தரும் , ஆனால் அந்த வீடு பாதக ஸ்தானமாக இருக்க கூடாது என்பது பொது விதி .


லக்கினம் முதல் வீடு எனும் இலக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெற்றால் , ஜாதகர் மிகுந்த யோகசாலி , அடிப்படையில் நல்ல வளரும் சூழ்நிலையை பெறுவார் , யாருடைய ஆதரவும் இன்றி சுயமாக வெற்றி பெரும் அமைப்பை பெறுவார் , தனித்து செயல் படும் தன்மையும், நல்ல உடல் ஆரோக்கியமும் , நல்ல மன நிலையம் , பூரண ஆயுளையும் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் , எவருக்கும் இன்னல்களை தர விரும்ப மாட்டார் தான் உண்டு தனது வேலை உண்டு என மிகவும் , பொறுப்பாக இருப்பார் , எவ்வித தீய பழக்க வழக்கமும் இன்றி நல்ல ஒழுக்கம் கொண்ட மனிதராக விளங்குவார் .


லக்கினம் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் , ஜாதகரின் வாக்கு வன்மை சிறப்பாக இருக்கும் , வியாபாரம் , வணிகம் இரண்டும் ஜாதகருக்கு சிறப்பாக வரும் , இயற்கையிலேயே ஜாதகர் லாப நோக்கம் இன்றி எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார் , ஜாதகரின் வாழ்க்கையில் உடல் ரீதியாக சிறு சிறு தொந்தரவுகள் வந்து நீங்கும் , மன தைரியமும் , தன்னம்பிக்கையும் , மிகுந்து காணப்படும் , அடிப்படை கல்வி மிகவும் சிறப்பாக தேர்ச்சி பெரும் தன்மையை தரும் , நல்ல மன நிம்மதியான குடும்ப வாழ்க்கை சரியான வயதில் நிச்சயம் அமையும் , பெருந்தன்மையான குணம் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் .


லக்கினம் சகோதர ஸ்தானம் எனும் மூன்றாம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் , ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலையை பெறுவார் , சிறு வயது முதற்கொண்டே அதிர்ஷ்டம் நிறைந்தவராக காணப்படுவார் , எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும் , தன்னம்பிக்கை , பரிபூரண ஆயுள் சிறப்பாக அமைந்து விடும் , சகோதரர்கள் ஜாதகருக்கு மிகுந்த நன்மையை செய்வார்கள் , குறிப்பாக வேற்று இனத்தவர் மூலம் ஜாதகர் சிறப்பான முன்னேற்றம் பெறுவார் .


லக்கினம் சுக ஸ்தானம் எனும் நான்காம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் , சிறப்பான உடல் நிலையும் மன நிலையும் பெற்றிருப்பார் , தனது தாயின் கருணையினாலும் ஆசியினாலும் வாழ்க்கையில் மிகப்பெரிய சொத்து சுகங்களையும் , வண்டி வாகன யோகங்களையும் , மேல் நிலை கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையும் , ஜாதகருக்கு தேவையானவைகள் சிறுவயது முதற்கொண்டே தடையின்றி கிடைக்க பெறுவார் , நல்ல வசதி மிக்க வீடு , வண்டி வாகனம் , சொகுசு வாழ்க்கை , விவசாயம் செய்வதால் லாபம் , கால்நடைகள் பண்ணை தோழிகளால்  மிகப்பெரிய அதிர்ஷ்ட வாழ்க்கை என ஜாதகர் சிறப்பான முன்னேற்றம் நிச்சயம் பெரும் யோகம் உண்டாகும் .


லக்கினம் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது 1000 ல் ஒரு ஜாதகத்தில் மட்டுமே இந்த அமைப்பு இருக்கும் , காரணம் ஜாதகரின் பெற்றோரும் , ஜாதகரும் செய்த புண்ணியத்தின் பலனாக இந்த அமைப்பு ஜாதகருக்கு இருக்கும் , மேலும் இறை அருளின் பரிபூரண நல்லாசிகள் ஜாதகரை எல்லா காலங்களிலும் நன்மையை வழங்கி கொண்டே இருக்கும், நல்ல உடல் ஆரோக்கியம் , சிறந்த அறிவாற்றல் , நேர்மையான குணம் , தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாடு கொண்ட நல்ல மனிதராக ஜாதகர் இருப்பார் , மேலும் ஆன்மீக வாழ்க்கையில் ஜாதகர் சிறந்து விளங்கும் பெரும் பாக்கியம் கிடக்கும் .


லக்கினம் பகை ஸ்தானம் எனும் ஆறாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , அடிப்படையில் இருந்தே ஜாதகருக்கு முன்னேற்ற தடையை ஏற்ப்படுத்தும் , உடல் ரீதியாக பல இன்னல்களை தந்து கொண்டே இருக்கும் , ஒருவேளை இந்த ஆறாம் வீடு கடகம்,விருச்சகம்,மீன ராசியாக அமைந்து லக்கினம் ஆறாம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக ஆகி விடும் காரணம் இது நீர் ராசியாக இருப்பதால் , அதிக மன உளைச்சலை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் , இதானால் உடல் நிலையும் , மன நிலையும் கடுமையாக பாதிக்க படும் இந்த அமைப்பு மிகவும் சிரமத்தை தரும் , வளரும் சூழ்நிலையும் சரியாக அமையாது , ஜாதகரை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் , தனது வாழ்க்கை பாதிக்க ஜாதகரே காரணமாக அமைந்து விடுவார் .


லக்கினம் களத்திரம் எனும் ஏழாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது மிகவும் சிறப்பான பலனை தரும் , தனது சிறு வயது முதல் சிறப்பான வளரும் சூழ்நிலையை பெற்று இருப்பார் , அனைவரும்  ஜாதகருடன் நட்பு பாராட்டுவார்கள் , ஜாதகரை பிடிக்காதவர்களே இல்லை எனலாம் , அதுமாதிரியான நல்ல நடத்தையும் சுய கட்டுப்பாடு ஒழுக்கமும் கொண்டு இருப்பார் , தனது நண்பர்கள் வழியிலும் , பொது மக்களின் ஆதரவிலும் வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை பெறுவார் , மிக பெரிய அரசியல் பதவிகளில் கொடி கட்டி பறக்கும் மா மனிதர்களின் ஜாதக அமைப்பில் இந்த பாவகம் சிறப்பாக இருக்கும் , அதிலும் ஏழாம் வீடு சர ராசியாக இருப்பது மிகப்பெரிய வெற்றிகளை பெற்று தரும் , ஆனால் உபய இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு இது பொருந்தாது , காரணம் உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானமே இந்த ஏழாம் வீடுதான் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam @gmail .com  


திங்கள், 1 அக்டோபர், 2012

எல்லாம் விதிப்படிதான் நடக்குமெனில் ஜாதகம் பார்ப்பது எதற்கு ? கடவுள் வழிபாடு எதற்கு ?



அருமையான கேள்வி, நடக்கும் நன்மை தீமை பலன்களை நமது மனம் ஏற்றுகொள்ளவும் , அடுத்தகட்ட நிகழ்வுக்கு மனிதனை எடுத்து செல்லவும் நிச்சயம் நமக்கு ஜோதிட ஆலோசனையும் , கடவுள் வழிபாடும் தேவை , ஒருவருக்கு சரியான ஜோதிட ஆலோசனை கிடைக்கிறது எனில் நிச்சயம் அவர் தனது வாழ்க்கை முறையை சரியான பாதையில் அமைத்துக்கொள்ள முடியும் , தேவையில்லாத காரியங்களை செய்துவிட்டு பிறகு தவிக்க வேண்டிய சந்தர்ப்பத்தை தாமே ஏற்ப்படுத்தி கொள்ள தேவையில்லையே , உண்மையில் தனக்கு ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் இல்லை என்று ஒருவருக்கு தெரியும் பொழுது தனது பெயரில் ஒருவர் தொழில் துவங்காமல் ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பவரின் பெயரில் ஆரம்பித்து நிச்சயம் வெற்றி காணலாமே? இதற்க்கு நிச்சயம் உறுதுணை புரியும் நமது ஜோதிட கலை 

( உண்மையில் ஒருவருடைய ஜீவன ஸ்தானம் எப்படி இருக்கின்றது என்று இன்னும் பல ஜோதிடர்களுக்கு தெரியவில்லை என்பது வேறு விஷயம் )


அடுத்து ஒருவருடைய வினைபதிவினாலேயே நன்மை தீமை பலன்கள் நடை முறைக்கு வருகிறது எனும் பொழுது , ஒரு தம்பதியரின் வாழ்க்கையில் நடக்கும் சண்டை சச்சரவுகள் , மன நிம்மதி இழப்பு , மேலும் பல இன்னல்கள் ஏற்ப்படும் பொழுது இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று உணராமல் தனது மனம் போல் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் ( அதாவது பிரிவு , விவாகரத்து ) அமைப்பில் இருந்து ஜாதகரை காப்பாற்றலாம் , எப்படி எனில் அய்யா தங்களின் வாழ்க்கையில் நடக்கும் தீமையான அமைப்பிற்கு காரணம் தங்களின் வினை பதிவே எனவே தங்களது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து வரும் இன்னல்களை மனம் உவந்து ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மையை மட்டும் செய்யுங்கள் நிச்சயம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்களின் கர்ம வினை பதிவு அகன்று சம்பந்த பட்ட அமைப்பில் இருந்து ( குடும்பம் , களத்திரம் ) நன்மையான பலனை அனுபவிக்க முடியும் என்ற உண்மையான ஜோதிட பலனை சொல்லி ஜாதகரை நெறி முறையான வாழ்க்கைக்கு வழிகாட்டலாம் , ஒருவேளை ஜாதகர் ஜோதிட ஆலோசனை பெறவில்லை எனில் தனது விதிப்படி மேலும் மேலும் கர்ம வினைபதிவை அதிகமாக செய்துகொண்டே இருப்பார் அதனால் சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து மேலும் மேலும் தீமையான பலன்களே நடை பெற்று கொண்டு இருக்கும் என்பதே உண்மை .


தனது ஜாதக அமைப்பின் படி என்ன இருக்கிறது என்று தெரியாமல் வாழ்க்கையில் போராடி கொண்டு இருப்பதை காட்டிலும் , சரியான வாழ்க்கையை வாழ்வதற்கு நமது ஜோதிட கலை பயன்படுகிறது எனும் பொழுது , ஜோதிடத்தை பயன் படுத்தி கொள்வதில் என்ன தவறு இருக்க போகிறது , உண்மையில் நாங்கள் சொல்லும் கோவில் வழிபாட்டிற்கு பின்னால் ஒரு சூட்ட்சமம் இருக்கிறது என்பதை எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை , மேலும் அதை பற்றி அவர் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை , உதரணமாக எந்த கடைக்கு சென்றால் காய்கறி வாங்கலாம் என்று ஒருவருக்கு தெரிந்தால் போதும். அது எங்கு விளைகிறது , விளைவிப்பவர் யார் , என்ன உரம் இடுகிறார் , எவ்வளவு நாட்களில் விளைச்சலுக்கு வருகிறது என்பது பற்றி விபரங்கள் எல்லாம் வாங்குபவர்க்கு தேவையில்லை , எந்த கடையில் காய்கறி கிடைகிறது ,என்று தெரிந்தால் மட்டுமே போதும் அங்கு சென்று வாங்கி வந்து குழம்பு வைத்து சாப்பிடலாம் அதனால் கிடைக்கும் சக்தியை உடலுக்கு பெற்று கொள்ளலாம் .


எனவே கோவில் வழிபாடுகளிலும் இதையே தான் நாம் பெற்று கொள்கிறோம் , ஒருவர் கோவில் வழிபாடு செய்வதும் , கடவுள் வழிபாடு செய்வதும் கூட சுய ஜாதகத்திற்கு உட்பட்டும் , வினை பதிவிற்கு உட்பட்டும் நடை பெறுகிறது என்பது எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை , அதாவது " நீ விதியை மதியால் வெல்வாய் எனில் " உனது ஜாதகத்தில் அப்படி பட்ட விதி இருக்கும் என்பதே உண்மை . ஒருவருக்கு பூர்வ புண்ணியம் , பாக்கியம் பாதிக்க பட்டு இருக்கிறது என்று வைத்து கொள்வோம் , அவருக்கு கோவில் வழிபாடும் , கடவுள் வழிபாடும் செய்ய நிச்சயம் யோகம் இல்லை , ஒருவேளை ஜாதகர் கோவில் வழிபாடு செய்ய முயற்ச்சித்தால் பல தடைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதே உண்மை , சம்பந்த பட்டவரின் நண்பரின் ஜாதகத்தில் மேற்கண்ட வீடுகள் வலிமை பெற்றிருந்து அவருடன் கோவில் வழிபாடு செய்யவும் , கடவுள் வழிபாடு செய்யவும் ஜாதகர் சேர்ந்து சென்றால் மட்டுமே ஜாதகருக்கு கடவுள் அனுகிரகம் கிடைக்க வாய்ப்பு உண்டு , இதற்க்கு அவரது நண்பரின் புண்ணிய பதிவே காரணம் .


நடக்கும் நன்மை தீமை , அனைத்திற்கும் நமது முன்வினை பதிவும் , கர்ம வினை பதிவுமே காரணம் , இதற்க்கு உட்ப்பட்டே பிறப்பில் நமது ஜாதகம் அமைகிறது , தமது சுய ஜாதக அமைப்பின் படி எந்த பாவகங்கள் நல்ல நிலையில் இருக்கிறது , எவையெல்லாம் பாதிக்க பட்டு இருக்கிறது என்று சிறந்த ஜோதிடரின் மூலம் தெளிவாக தெரிந்து கொண்டு , சம்பந்த பட்ட பாவகங்களில் இருந்து வரும் நன்மை தீமை பலன்களை ஏற்றுக்கொண்டு , கர்ம வினை பதிவை கழித்து கொள்ள இறைஅருள் நமக்கு தந்த, இந்த ஒரு அறிய வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்டு இறை நிலையின் உண்மையை இறுதியில் உணர்வதே சிறப்பு .


எடுத்து காட்டாக :


ஒருவருடைய ஜாதகத்தில் சகோதர ஸ்தானம் பாதிக்க பட்டு இருக்கிறது
எனில் , தனது சகோதர அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் ஏற்றுகொள்ளும் பொழுது , சிறிது காலத்தில் சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து தீமையான பலன்கள் கழிந்து , நன்மையான பலன்கள் நடை பெற ஆரம்பிக்கும் , அதாவது ஜாதகரின் மன தைரியம் அதிகமாகும் , தன்னம்பிக்கை கூடும் , சிறு பயணங்களால் யோகம் பெறுவார் , சகோதரர்களால் நன்மை அடைவார் , எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றி பெரும் , ஒருவேளை ஜாதகர் இதை உணராமல் மீண்டும் மீண்டும் சகோதர அமைப்பிற்கு இன்னல்கள் புரிந்தால் , சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து தீமையான பலன்களே அதிகம் நடை பெறும் என்பது குறிப்பிட தக்கது .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
jothidadeepam@gmail.com