திங்கள், 29 அக்டோபர், 2012

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதை போன்று, சுய ஜாதகத்தில் யோகம் இருந்தும் அனுபவிக்க முடியாத ஜாதக நிலை !






மேற்கண்ட ஜாதகத்தில் லக்கினம் , சுகம் , களத்திரம் , ஜீவனம் எனும் நான்கு வீடுகளும் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகத்தில் ஒரு சிறப்பான யோக நிலை , மேலும் இந்த நான்கு வீடுகளும் ஜீவன ஸ்தானமான சர மகர ராசியுடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த யோக பலனை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை , குறிப்பாக லக்கினம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின் உடல் மனம் இரண்டு அமைப்பிலும் நன்மைகளை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் , நல்ல வளரும் சூழ்நிலை , நேர்மையான குணம் , பெரியோர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படும் தன்மை , சுய கட்டுபாடு , ஒழுக்கம் போன்ற விஷயங்களில் சிறப்பான பலன்களை வழங்கும் .

சுக ஸ்தானம் எனும் நான்காம் பாவகம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது , ஜாதகருக்கு தாயின் வழியில் ஆதரவும் , தனது அம்மாவிற்கு நன்மைகளையும் , தாய் பாசமுடன் வளரும் தன்மையும் , நல்ல வண்டி வாகன யோகமும் , வசதி மிக்க வீடு , சிறப்பான கல்வி , உயர் கல்வி , பட்டபடிப்பு , கல்விகாலங்களில் சிறந்து விளங்கும் தன்மை , தனது சுய உழைப்பால் வண்டி வாகனம் , சொத்து சுகம் , போன்றவைகளை வாங்கும் யோகம் என நான்காம் பாவக அமைப்பில் இறுதி நன்மைகளை வாரி வழங்கும் .

களத்திர ஸ்தானம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் சேர்க்கையும் , சமுதாயத்தில் சிறப்பான நற்பெயரும் , பொது மக்கள் செல்வாக்கும் , பெண் நண்பர்கள் மூலம் அளவில்லா நன்மைகளும் , வெளிநாடுகளில் இருந்து அளவில்லா செல்வ வளமும் , வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றமும்  உண்டாகும் . மேலும் ஜாதகரின் கூட்டாளிகள் மூலம் சிறப்பான எதிர்காலம் கிடைக்கும் , வாழ்க்கை துணை வழியில் இருந்து சகல யோகமும் நிச்சயம் உண்டாகும் , தன்னம்பிக்கை அதிகரிக்கும் , விரைவான சுறுசுறுப்பான செயல் திறன் கொண்டவராக இருப்பார் .

பத்தாம் வீடு ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , செய்யும் தொழில்களில் எல்லாம் வெற்றிமேல் வெற்றி உண்டாகும் , தனது தகப்பனாருக்கு சொத்து சுக சேர்க்கையும் , ஜீவன மேன்மையும் வாரி வழங்கும் , குறிப்பாக ஜாதகர் செய்யும் தொழில்கள் எல்லாம் 100 சதவிகிதம் வெற்றி பெரும் மருத்துவம் சார்ந்த தொழில்களில் கொடி கட்டி பறக்கும் அளவிற்கு முன்னேற்றம் உண்டாகும் , நல்ல கைராசி , மக்கள் செல்வாக்கு , கூட்டு தொழில் செய்வதால் முன்னேற்றம் மற்றும் அளவில்லா வருமானம் , சுயமாக சிந்தனை செய்து வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம் என ஜீவன வழியில் வெற்றியை தரும் .

மேற்கண்ட  நன்மையான பலன்கள் எல்லாம் ஜாதகருக்கு சூரியன் மற்றும் செவ்வாய் திசையில்,சூரியன் மற்றும் செவ்வாய் புத்திசூரியன் மற்றும் செவ்வாய் அந்தரம்,சூரியன் மற்றும் செவ்வாய் சூட்சமம் போன்ற அமைப்பில் மட்டுமே நடை பெறுகிறது , தற்பொழுது நடக்கும் சூரியன் திசை மேற்கண்ட வீடுகளின் பலனை நடத்துவது நன்மையை தரும் , அடுத்து வரும் சந்திரன் திசை பாதக ஸ்தான பலனை செய்கிறது , அதற்க்கு அடுத்து வரும் செவ்வாய் திசை மேற்கண்ட வீடுகளின் பலனை நடத்துவது நன்மையை தரும் , ஆனால் இதற்க்கு பிறகு வரும் அனைத்து திசைகளும் முறையே ராகு திசை விரைய ஸ்தான பலனையும் , குரு திசை பாதக ஸ்தான பலனையும் ,சனி திசை எட்டாம் வீட்டு பலனை செய்வதும் ஜாதகருக்கு 200 சதவிகிதம் மிகுந்த பாதிப்பையே வாரி வழங்கும் , நன்மையான பலன்கள் இந்த திசைகளில் நடப்பது என்பது மிகவும் குறைவே .

எனவே மேற்கண்ட ஜாதக அமைப்பில் சூரியன் திசையும் , செவ்வாய் திசையும் சிறு வயதிலேயே ஜாதகத்தில் நடைமுறைக்கு வந்துவிடுவதால் , ஜாதகர் அதிக நன்மைகளை பெற  முடியாது , ஏனெனில் அது ஜாதகரின் குழந்தை பருவம் மற்றும் கல்வி காலம் என்பதால் , உடல் நிலை , வளரும் சூழ்நிலை ,கல்வியில் மட்டுமே யோக நிலை நன்மையை செய்யும் , தொழில் , திருமணம் , வாழ்க்கையில் முன்னேற்றம் போன்றவைகள் நடை பெரும் காலமான 23 வயது முதல் 60 வயது வரை நடக்கும் திசையாவும் தீமையான பலனையே வாரி வழங்குவதால் , ஜாதகத்தில் வலிமை பெரும் பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் எவ்வித நன்மையையும் பெற முடியாது என்பதால் , ஜாதகத்தில் யோக அமைப்பு இருந்தும் , பலன் அனுபவிக்க முடியாத படி ஜாதகருக்கு தடைகளை தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

ஆக ஜாதகத்தில் யோகம் இருப்பது பெரிய விஷயமல்ல , அந்த யோக பலன்கள்  நடைமுறையில் திசை, புத்தி, அந்தரம், மற்றும்  சூட்சமத்தில் நடந்து பலன் தர வேண்டும் , அப்பொழுதுதான் ஜாதகர்  யோக வாழ்க்கையை பெற முடியும் , இல்லை எனில் ஜாதகர் நிலை இலவுகாத்த கிளி கதைக்கு ஒப்பாக இருக்கும் , யோக வாழ்க்கையை நினைத்து வெறும் கனவு மட்டுமே காண  முடியும் நடை முறையில் , சிரமத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டி வரும் , இதனால் யோக நிலைகள் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொண்ட  சில அரை குறை  ஜோதிடர்கள் உங்களது ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கிறது , இந்த யோகம் இருக்கிறது என்று உசுப்பேத்தி உசுபேத்தி உங்களை ரணகளமாக்க கூடும் , தங்களது ஜாதக அமைப்பின் படி உள்ள உண்மை நிலையை தெளிவாக தெரிந்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுங்கள் , வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com

வியாழன், 25 அக்டோபர், 2012

பாவகம் தரும் தீய பலன்களில் இருந்து ஜாதகர் எப்படி நன்மையை பெறுவது ?





ஐயா வணக்கம்,

ஒரு பாவகம் பலமுல்லதா இல்லையா என்பதற்கு பல ஜோதிடர்கள் பல
கருத்துவேறுபாடுகளை கொண்டுள்ளனர்.அதிலும் பாவாதிபதி பலமில்லாமல்
இருந்தால் காரக கிரகம் பலமாக இருந்தாலும் சரி என்கிறார்கள்.மேலும் ஒரு
பாவத்தில் அமர்ந்த கிரகத்தை வைத்தே பலனை சொல்லிவிடுகிறார்கள்.உதாரணமாக
5ல் பாவி இருந்தாலே புத்திர தோஷம், 7ல் பாவி இருந்தாலே களத்திர
தோஷம்...இப்படியாக.

பாவக அதிபதியை பற்றிய கவலை நமக்கு தேவை இல்லை ஏனெனில் அவர் எங்கு அமர்ந்தாலும் அந்த பாவகத்திர்க்கு நன்மையை செய்தால் மட்டுமே போதும் , அவர் ஆட்சி பெற்றால் என்ன ? உச்சம் பெற்றால் என்ன ? பகை பெற்றால் என்ன , நீச்சம் பெற்றால் என்ன லக்கினத்திற்கு நல்லது செய்தால் போதும் , எடுத்து காட்டாக சிம்மலக்கினத்திர்க்கு மேஷத்தில் உச்சம் பெற்று மேஷத்தில் அமர்ந்தால் ஜாதகர் இலக்கின அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை அனுபவிப்பார் , எனவே லக்கினம் முதற்கொண்டு ௧௨ பாவகமும் வலிமை பெறுவதே அவசியம் , காரக அதிபதிகளை பற்றி நாம் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை அது பொது பலனுடன் சேர்ந்தது காரகர்கள் சுய ஜாதகத்தை கட்டுபடுத்தும் தகுதி அற்றவர்கள் , எனவே பாவகம் வலிமை பெறுவதே முக்கியம் , அதுவே ஜாதகருக்கு நன்மைகளை வாரி வழங்கும் . மேலும் பாவி, சுபர் , தோஷம் என்பதெல்லாம் ஜோதிடத்தை பற்றிய தெளிவு இல்லாமல் குத்து மதிப்பாக பலன் சொல்லும் ஜோதிடர்கள் சொல்லும் வாய் ஜாலம் அன்பரே !  

ஆனால் கிருஷ்ணமூர்த்தி பத்ததி,பாஸ்கரா பத்ததி போன்றவை இதை அபத்தம் என்கின்றன.
எனில் பண்டைய நூல்களில் கூறப்பட்டது தவறா?அல்லது இன்றைய நிலமைக்கு ஒவ்வாததா?

பண்டைய நூல்கள் ஜோதிடத்தை மறைமுகமாக வைத்திருக்கும் சில விஷயங்களை நம்மவர்கள் தவறாக பொருள் கொண்டு பார்ப்பதாலேயே இந்த நிலை ஏற்ப்படுகிறது , அந்த நூல்களில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒன்பது அர்த்தங்கள் இருக்கின்றன , அவற்றை வாங்கி படிப்பதால் தெளிவு கிடைக்காது , நல்ல குரு முகமாக ஜோதிடத்தை கற்று அதன் மூலம் ஜோதிட கலையை  வளர்ப்பதே சால சிறந்தது , கிருஷ்ணமூர்த்தி பத்ததி,பாஸ்கர பத்ததி போன்ற ஜோதிட முறைகள் சொல்வது 100 க்கு 100 உண்மையே ! மேலும் லக்கினத்திற்கு பலன் காணுவது போல் ஒவ்வொரு பாவக்த்திர்க்கும் பலன் காணுவது சரியான ஜோதிட பலனை சொல்ல உதவி புரியும் .

மேலும் ராகு,கேது எங்கே இருந்தாலும் தோஷம் என்றும் சனி யை கொடிய
பாவியாகவும் சித்தரிக்கின்றனர்.இது சரியா?


இது முற்றிலும் தவறான அணுகு முறை , ராகு கேது மற்றும் சனியை பற்றிய போதிய ஜோதிட அறிவு அற்ற ஜோதிடர்களே இவ்வாறு சொல்ல வாய்ப்பு உண்டு , மேலும் ராகு கேது பற்றிய விளக்கங்கள் நமது ஜோதிடதீபத்தில், தெளிவாக எழுதியிருக்கிறோம் படித்து தெளிவு பெறுங்கள் . மேலும் ராகு கேது , சனி  ஆகிய கிரகங்களும் மற்ற கிரகங்கள் போலவே வினை பதிவிற்கு ஏற்றவாறு நன்மை தீமை பலனையே தரும் இவைகளுக்கு வேறு எந்த சிறப்பு தகுதியும் இல்லை , மேலும் இவை தீமையான பலனை மட்டும்தான் செய்யும் என்பது ஜோதிடத்தை பற்றிய அடிப்படை அறிவு அற்றவர்கள் சொல்லும் ஒரு வாய் ஜாலமே ! இதில் சிறிதும் உண்மை இல்லை, ஆனால்  ராகு கேது கிரகங்கள் மட்டும் தான் அமர்ந்த இடத்தின் பலனை முழுவதும் உரிமை எடுத்துகொண்டு நன்மை தீமை பலனை வினை பதிவிற்கு ஏற்றார் போல் செய்யும் என்பதே உண்மை . இதில் மாற்ற கிரகங்கள் எதுவும் தலையீடு செய்ய இயலாது ஏன் ?  அந்த பாவக அதிபதி கூட எதுவும் செய்ய இயலாது .

ஒரு பாவம் பலம் இழந்துள்ளது என்பதற்கும் ஒரு பாவம் பலன்தர இயலாமல் உள்ளது
(அதாவது பாதகஸ்தான தொடர்பு போன்றவற்றால்)
என்பதை எப்படி நிர்ணயிக்கமுடியும்?



ஜோதிட கணிதம் கொண்டு ஒரு பாவகம் எப்படி இருக்கிறது என்று , தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் இதற்க்கு தாங்கள் அடிப்படையில் இருந்து ஜோதிடத்தை நல்ல குரு மூலம் கற்றுகொள்வது நல்லது .

ஒரு பாவம் பலம் இழந்திருந்தால் அவன் கடைதேர அதாவது அந்த பாவக பலன்
கிடைக்க என்ன வழி?



ஒரு ஜாதகத்தில் ஒரு பாவகம் பாதிக்க பட்டு இருந்தாலும் சரி பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருந்தாலும் சரி நடப்பு திசை மற்றும் புத்தியில் அந்த வீடுகளின் பலன்கள் நடை பெற்றால் மட்டுமே தீமையான பலனை தரும் , நடப்பு திசை மற்றும் புத்தியில் அந்த வீடுகளின் பலன்கள் நடை பெறாமல் இருந்தால் பாதிக்கபட்ட வீடுகளின் பலனகளை பற்றி நாம் எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை அன்பரே ! ஒருவேளை அந்த பாவக பலன் நடை பெற்றால் ஜாதக அந்த பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்ருகொள்வதும் , விழிப்புணர்வுடன் இருந்து தீய செயல்களில் ஈடுபடாமல் இருப்பது மட்டுமே ஜாதகரை காப்பாற்றும் , உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் 12 வீடு 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நடப்பு திசை 12 ம் பாவக பலனை செய்யுமானால் ஜாதகர் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகாமல் இருப்பது அதிக நன்மையை தரும் .

ஒரு பாவகம் அவனுக்கு எதிராக இருந்தால் அதாவது அவனுக்கு தீங்கு செய்யும்
நிலையில் இருந்தால்,அந்த பாவகத்தின் நல்ல பலனை ஜாதகர் பெற என்ன வழி?
அன்புடன்,
ஜோதிட பித்தன்

சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து வரும் தீய பலன்களை ஏற்று கொண்டு கர்ம வினை பதிவினை தீர்த்து கொள்ளவேண்டும் , உதாரணமாக களத்திர ஸ்தானம் பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்ருகொள்வதும் அவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்துவருவதும் ஜாதகரை தீய பலன்களில் இருந்து விரைவில் மீட்டு எடுக்கும் , மேற்கண்ட களத்திர ஸ்தானம் பாதிக்க படும் பொழுது நண்பர்கள் , பொதுமக்கள் வழியில் இருந்தும் தீமையான பலன்கள் நடை பெரும் இருப்பினும் , அதை ஏற்றுக்கொண்டு , அவர்களுக்கு நன்மை செய்வதே சிறந்தது .


அதாவது மேற்கண்ட படத்தில் இருப்பது போல் தம்மை  நாடி  வரும் அதிக விஷம் கொண்ட தீமையை செய்யும்  நாக சர்பத்திர்க்கும் சிவா பெருமான் அன்புடன் , அருள் தருவது போல் , சுய ஜாதகத்தில் தீமையான பலன்கள் நடை பெரும் பொழுது, ஜாதகர் யாரிடமும் கோபம் கொள்ளாமல் அன்பை மட்டுமே செலுத்தி அவர்களுக்கு நன்மை மட்டுமே செய்யும் பொழுது , தீமைகள் களைந்து நன்மைகள் நடைபெறும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  


பாவகம் தரும் நன்மை தீமை பலன் நிர்ணயம் செய்வது எப்படி ?





அண்ணே,
    
தாங்கள் தரும் விளக்கங்கள் உண்மையிலேயே வியப்பானது. நான் இதுவரை பல வலைப்பூக்களில் ஜோதிடத்தைப் பற்றியும்,அதன் நிர்வாகஸ்தர்கள் தரும் விளக்கங்களையும் படித்திருக்கிறேன்.அனைவரும் அடிப்படைப்பாடங்களைப் பற்றி மட்டுமே தான் விளக்கம் தருகின்றனர்.எப்படியெனில் குரு உச்சமா?,சனி நீசமா?,5 ல் ராகு,கேதுவா?,சந்திரன் நீசமா? இப்படி ஒவ்வொருவரும் அதைப்பற்றி அவரவர் பாணியில் எழுதுகின்றனர். இப்படியிருக்க வேண்டும்,அப்படியிருக்க வேண்டும் எனவும் எழுதுகின்றனர். ஆனால் அந்த உச்ச, நீசம்,ஆட்சி,பகை,அஸ்தமனம் என்று ஒவ்வொரு நிலையும் பெற்ற கிரகங்கள் தனிமனித வாழ்வில் சில மன ரீதியான(குணங்கள்) பாதிப்புகளைத் தான் செய்கின்றன.
   
உதாரணத்திற்கு லக்கினத்தில் சூரியன் இருப்பவர்கள் எதிலும் வளைந்து கொடுக்கும் தன்மையற்றவர்களாகவும்,ஈகோ அதிகமுடையவர்களாகவும்,குரு இருந்தால் சமூகத்தில் மரியாதை மிக்கவர்களாகவும்,சனி இருந்தால் மிகவும் நிதானமான செயல்பாடு உடையவர்களாகவும் இருக்கின்றனர்.இது போல் 12 பாவகத்திற்கும் தகுந்தாற்போல் குணங்களை மாற்றுகின்றன. கிரக அமர்வு என்பது பற்றி ஜோதிட தீபம் எந்தமாதிரியான நிலைப்பாட்டை கையாள்கிறது. மேலும் ஒரு ஜாதகத்தின் தசா,புத்திக்கு ஜனன ஜாதக‌க் கிரக நிலையை ஜோதிடதீபம் எவ்வாறு பயன்படுத்துகிறது. பாரம்பரிய ஜோதிடத்தில் லக்கினாதிபன் 9 ல் இருந்தால் வரம் வாங்கி வந்தவன்,11ல் இருந்தால் அதிர்ஷ்டமுடையவன்,7ல் இருந்தால் தன்னம்பிக்கை,தன் முயற்சியுடையவன்,5ல் இருந்தால் புண்ணியம் செய்தவன் இப்படி ஒவ்வொரு பாவத்திற்கும் தகுந்தாற்போல் பலன்களைச் சொல்கின்றனர்.இது பற்றிய தங்கள் கருத்து என்ன?.

பதில் :

அன்பு தம்பிக்கு முதலில் ஒரு அடிப்படை விஷயத்தை மக்களும் , ஜோதிடர்களும் புரிந்து கொள்ள வேண்டும் , நவ கிரகங்களை அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது மிகவும் அபத்தமான விஷயம் , ஒரு ஜாதகத்தில் நவகிரகங்கள் அமர்வு என்பது அவரவர் கருமைய ( கர்ம வினை பதிவு ) பதிவுகளின் அடிப்படையிலேயே அமைகிறது , அந்த கிரகம் அப்படி இருக்க வேண்டும் , இந்த கிரகம் இப்படி இருந்தால் யோகம் என்று யாரும் நவ கிரகங்களுக்கு கட்டளை இட முடியவே முடியாது , காரணம் தனது கடமையை நவ கிரகங்கள் எவ்வித தங்கு தடையும் இன்றி சரியாக செய்து கொண்டு இருக்கிறது , இருக்கும் . மேலும் நமது ஜாதகத்தில் என்ன இருக்கிறதோ அதை சொல்வது மட்டுமே ஜோதிடனின் கடமை , அதை விட்டு விட்டு அப்படி இருந்தால் நன்மையாக இருக்கும் , இப்படி இருந்தால் நன்மையாக இருக்கும் என்று சொல்வதெல்லாம் உச்சகட்ட நகைசுவையாகவே எங்களுக்கு  தோன்றுகிறது .

 இதை விட இந்த 20 பதாம் நூற்றாண்டின் நகை சுவை என்னவென்றால் நவகிரகத்தை தனது வேலைகாரர்கள் போல் எண்ணி அக்டிவேசன் டி அக்டிவேசன் செய்வதாகத்தான் இருக்கும் , மேலும் ஜோதிடத்தை பற்றிய புரிதல் என்பது மிகவும் குறைவாக உள்ள ஜோதிடர்களே இவ்வாறு பிதற்றி கொண்டு இருக்க கூடும் , அதாவது பல ஜோதிடர்கள் நவகிரகங்களின் பொது பலனையே தம்மை நாடி வரும் நபர்களுக்கு சொல்லி வருகின்றனர் , அது உண்மை அல்ல , ஒவ்வொருவருடைய சுய ஜாதக அமைப்பிற்கும் லக்கினம் முதற்கொண்டு 12 பாவக அமைப்பின் அடிப்படையிலேயே ஜோதிட கணிதம் கொண்டு காண வேண்டும்.

 உண்மையில் ஜோதிட பலன் சொல்லும் முறையே தவறு என்றுதான் நான் சொல்வேன் எப்படி எனில் , மற்ற ஜோதிடர்கள் பொதுவாக  ஒரு ஜாதகத்திற்கு பலனை நிர்ணயம் செய்யும் பொழுது நவகிரகங்கள் லக்கினத்திற்கு எப்படி இருக்கிறது என்ற அடிப்படையிலேயே பலனை சொல்லுகின்றனர் , இது முற்றிலும் தவறு , காரணம் ஒரு ஜாதகத்தில்  லக்கினம் பற்றி தெரிய வேண்டும் எனில் லக்கினாதிபதி , அல்லது லக்கினத்தில் அமர்ந்த கிரகம் பார்த்த கிரகம் ஆகியவற்றை வைத்து லக்கினத்தின் தன்மையை நிர்ணயம் செய்து விட முடியும் , இதில் லக்கினாதிபதி உச்சமா ஆட்சியா , சமமா, நட்பா பகையா , நிச்சமா என்பதை பற்றி கவலை பட தேவையில்லை லக்கினத்திற்கு லக்கினாதிபதி எந்த பாவகத்தில் இருக்கிறார் என்று தெரிந்தாலே போதும்.

எடுத்து காட்டாக சிம்ம லக்கினத்திற்கு லக்கினத்தில் ஆட்சி பெற்று அமரும் சூரியனால் ஜாதகரின் லக்கினம் 100 சதவிகிதம் பாதிக்க படும், ஆனால் சிம்ம லக்கினத்திற்கு சூரியன் துலாம் ராசியில் நீச்சம் பெற்று அமர்வது அளவில்லா வெற்றியை தரும் லக்கினமும் 100 சதவிகிதம் யோக நிலையை பெரும் , இதில் லக்கினத்தை ஏதாவது கிரகங்கள் அமர்ந்தாலோ  பார்த்தலோ  அதற்க்குண்டான நன்மை தீமை பலனையும் சேர்த்து லக்கினத்தின் முழு பலனையும் நிர்ணயம் செய்ய வேண்டும் , இந்த அமைப்பிலேயே அனைத்து பாவகங்களுக்கும் பலன் நிர்ணயம் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் , ஒவ்வொரு பாவகமும் என்ன நிலையில் இருக்கிறது என்று தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் , மேற்கண்ட முறையில் பாவகங்களின்  நிலையை நிர்ணயம் செய்து விட்டால் , நடக்கும் திசை மற்றும் புத்தி என்ன செய்யும் என்று தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் , ஜாதக பலன் கேட்க்க வந்தவருக்கு உண்மையான சரியான ஜோதிட பலனை ஜோதிட கணித முறைப்படி தெளிவாக சொல்ல இயலும் .

பொதுவாக கிரக அமர்வு என்பது ஒவ்வொரு பாவக அமைப்பிற்கும் என்ன விதமான பலனை தருகிறது என்று கணிதம் செய்வதே சிறப்பு , மேற்கண்ட சிம்ம இலக்கின  ஜாதகருக்கு லக்கினத்தில் சூரியன் அமர்ந்து அவருடனே ராகுவோ அல்லது கேதுவோ அமர்ந்தால் சூரியன் அமர்ந்ததற்கு உண்டான பலன் நடை பெற சிறிதும் வாய்ப்பே இல்லை , அங்கு அமரும் ராகுவோ கேதுவோ லக்கினத்திற்கு உண்டான முழுமையான பலனையும் எடுத்துகொண்டு பலனை தரும், பொதுவாக லக்கினத்தில் அமரும் சாய கிரகங்கள் லக்கினத்திற்கு 100 சதவிகிதம் நன்மையை மட்டுமே செய்யும் எனவே ஜாதகர் இலக்கின அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையையே பெறுவார் என்பதே உண்மை.

 இங்கே சூரியன் லக்கினத்தில் அமர்ந்தாலும் லக்கினத்திற்கு கெடுதலான பலனை செய்ய முடியாது , சாய கிரகங்களே லக்கினத்தை முழுமையாக ஆளுமை செய்யும் அதுவும் நன்மையான பலன்களையே செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை , இதுவே சாயா கிரகங்களின் தனி தன்மை . இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ராகு கேது கிரகங்கள் லக்கினத்திற்கு உட்பட்ட பாகையில்தான் இருக்கிறதா ? என்று லக்கினம் ஆரம்பிக்கும் பாகை அமைப்பை கொண்டே நிர்ணயம் செய்ய வேண்டும் . 

இதை போன்றே மற்ற பாவக அமைப்பினையும் ஜோதிட கணிதம் கொண்டு சரியாக கிரக அமர்வுகளை நிர்ணயம் செய்து பலன் கூறினால் ஜோதிட பலன்கள் துல்லியமாகவும் சரியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை , மேலும் ஒரு கிரகம் ஆட்சி , உச்சம் பெற்றால் நன்மைகளை வாரி வழங்கும் என்று நிர்ணயம் செய்வதும் அதன் திசை புத்தி வந்தால் நன்மைகளை வாரி வழங்கும் என்று நிர்ணயம் செய்வதும் பொது பலன்களே , இந்த பலன்கள் சுய ஜாதகத்தை கட்டுபடுத்த வாய்ப்பே இல்லை , நீச்சம் அல்லது பகை பெற்ற கிரகத்தின் திசை நல்ல பாவகங்களின் பலனை தரும் என்றால் இங்கே  அந்த நீச்சம் அல்லது பகை பெற்ற கிரகத்தின்  திசை நன்மைகளையே வாரி வழங்கும் , ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசை ஒருவேளை பாதிக்கபட்ட பாவகத்தின் பலனை செய்தால் ( குறிப்பாக பாதக ஸ்தான பலனை செய்தால் ) ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபமாக மாறி விடும் கிரகம் என்னவோ உச்சத்தில்தான் இருக்கும் அது தரும் பாவக பலன் ஜாதகரை தப்பி காய வைத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை .

ஒவ்வொரு கிரகமும் சுய ஜாதகத்தில் எங்கு எப்படி அமர்ந்தாலும் ஒவ்வொரு பாவகத்திர்க்கும் எவ்வித பலனை தருகிறது என்பதை மட்டும் நிர்ணயம் செய்து பலன் காணவேண்டும் , ஒவ்வொரு பாவகமும் எப்படி பட்ட நிலையில் இருக்கிறது என்று பார்ப்பதும் , நடப்பு திசை எந்த பாவகத்தின் பலனை தருகிறது அந்த பாவகம் நல்ல நிலையில் இருக்கிறதா பாதிக்க பட்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் , குறிப்பிட்ட பாவகம் நல்ல நிலையில் இருந்தால் நடப்பு திசை சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து நன்மையை தரும் , பாதிக்க பட்டு இருந்தால் சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து நடப்பு திசை தீமையான பலனை தரும் . 

எனவே ஜோதிடதீபத்திர்க்கு ஜோதிட கணிதத்தை அடிப்படையாக கொண்டே பலனை நிர்ணயம் செய்யும் , எக்காரணத்தை கொண்டும் பொது பலனை ஜாதக பலனாக சொல்லி மக்களை முட்டாளாக மாற்றாது மக்களின் மூட நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பொருள் ஆதாயம் தேடாது , ஜோதிடம் என்றாலே வாழ்க்கையை விதிப்படி நல்லதாக அமைத்துகொள்வது அல்லது விதியை ஏற்றுக்கொள்வது என்றுதானே பொருள் அன்பரே !

ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர் குரு, சுக்கிரன்,சூரியனுடன் சேராத புதன் , வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்கினதிபதியாக வந்து அவர்கள் லக்கினத்திற்கு ஒன்பதில் அமர்ந்தால் மட்டுமே நன்மையை தரும் . தவிர சூரியன் , தேய்பிறை சந்திரன் சூரியனுடன் சேர்ந்த புதன் , செவ்வாய் , சனி ஆகிய கிரகங்கள் இலக்கின அதிபதியாக வந்து லக்கினத்திற்கு ஒன்பதில் அமர்ந்தால் ஜாதகருக்கு கெடுதலே செய்யும் . 

அதே போலலக்கினாதிபதி  மேற்கண்ட எந்த கிரகம் என்றாலும் லக்கினத்திற்கு பதினொன்றில் அமர்வது மட்டும் யோகத்தை தரும் , 

ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர் குரு, சுக்கிரன்,சூரியனுடன் சேராத புதன் , வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்கினதிபதியாக வந்து அவர்கள் லக்கினத்திற்கு ஏழாம் பாவகத்தில் அமர்வது  ஜாதகருக்கு 100 சதவிகிதம் கெடுதலே செய்யும், ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர்சூரியன் , தேய்பிறை சந்திரன் சூரியனுடன் சேர்ந்த புதன் , செவ்வாய் , சனி ஆகிய கிரகங்கள் இலக்கின அதிபதியாக வந்து லக்கினத்திற்கு  ஏழாம் பாவகத்தில் அமர்வது  ஜாதகருக்கு 100 சதவிகிதம் நன்மையை வாரி வழங்கும் . 

ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர் குரு, சுக்கிரன்,சூரியனுடன் சேராத புதன் , வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்கினதிபதியாக வந்து அவர்கள் லக்கினத்திற்கு ஐந்தில் அமர்வது ஜாதகருக்கு 100 சதவிகிதம் நன்மையை வாரி வழங்கும் , ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர்  சூரியன் , தேய்பிறை சந்திரன் சூரியனுடன் சேர்ந்த புதன் , செவ்வாய் , சனி ஆகிய கிரகங்கள் இலக்கின அதிபதியாக வந்து லக்கினத்திற்கு ஐந்தில் அமர்வது ஜாதகரை பூர்வீகத்தை விட்டே ஒட்டி விடும் தம்பி சந்தேகம் தீர்ந்ததா .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
94433555696
jothidadeepam@gmail.com  

ஜோதிட ஆலோசனை : அதிர்ஷ்டம் மற்றும் யோக ஜாதக அமைப்பு



ஜாதக பொது பலன் 


லக்கினம் : மீனம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : பரணி 1 ம் பாதம் 

ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

லக்கினம் மற்றும் இரண்டாம் வீடுகள் , குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகர் அளவற்ற தனலாபத்தை பெற்று தரும் , நிலையான தொழில் அமைப்பையும் , அரசு துறையில் ஆதரவினையும் , அளவற்ற வருமானத்தையும் , தொழில் முறையில் எதிர்பாராத முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் , ஜாதகரின் இனிமையான பேச்சும் செயல்பாடுகளும் மக்களை கவரும் வண்ணத்தில் இருக்கும் , கை நிறைய வருமானத்தை தரும் தொழில்கள் யாவும் ஜாதகருக்கு கைவர பெறும் யோகம் உண்டாகும் , அபரிவிதமான பேச்சு ஆற்றலும் , அமைதியான குடும்ப வாழ்க்கையும் ஜாதகருக்கு நிச்சயம் அமையும் .

4 ம் வீடு சுக ஸ்தானம் எனும் நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நிறைய சொத்து , சொகுசு வண்டி வாகனம் , அனைத்து வசதியும் கொண்ட சொந்த வீடு , சொந்த ஊரில்  இருக்க விருப்பம் , கல்வி நிறுவனங்கள் , தொழில் நிறுவனங்கள் நடத்தும் யோகம் , வண்டி வாகன தொழில்களில் சிறப்பான முனேற்றம் , நிலம்  வீடு வாங்கி விற்பதால் அதிக லாபம் , தனது சுய உழைப்பால் சகல சொத்து சுகத்தினையும் பெரும் யோகம் , என ஜாதகரை பல வகையில் முன்னேற்றத்திற்கு எடுத்து செல்லும் இந்த நான்காம் பாவகம் , இதற்க்கு காரணம் ஜாதகரின் தாய் என்பதில் சந்தேகம் இல்லை காலம் முழுவது தனது தாயிக்கு ஜாதகர் கட்டுபட்டு இருப்பது அவசியம் , மேலும் அவர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்வது அவசியம் , தங்களது தாயாரின் பாக்கியத்தால் நிறைய செல்வ வளங்களை தாங்கள் நிச்சயம் பெறுவீர்கள் அன்பரே ! வாழ்த்துகள் .

குறிப்பு : எக்காரணத்தை கொண்டும் தாங்கள் வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பது அவசியம் , ஏனெனில் அப்படி குடியிருந்தால் மட்டுமே தாங்கள் ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை முழுவதும் பெற முடியும் .

5 பாவகம் லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது , தங்களது பூர்வீகத்தில் குடியிருப்பதால் சகல யோகமும் பெரும் அமைப்பை பெறுவீர்கள் , தங்களது ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருப்பது 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கும் , குல தேவதையின் அருளாற்றல் தங்களுக்கு எப்பொழுதும் நிறைந்து நிற்கும் , எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பாட்டாலும்  அவற்றில் இருந்து தங்களுக்கு நன்மையே நடக்கும் , நல்ல ஆரோக்கியமும் , குழந்தை மற்றும் வாரிசு அமைப்பில் நல்ல பலனும் , கலை ஆர்வமும் , தோட்டம் சொத்து வண்டி வாகனம் மூலம் யோகமும் , கடவுள் வழிபாட்டில் ஆர்வமும் , இறைநிலையின் கருணையை பெறும் யோகமும் உண்டாகும், ஆக தாங்கள் பூர்வ புண்ணிய அமைப்பில் இருந்து யோக பலன்களையே அனுபவிக்கும் தன்மை உண்டாகும் .

8 ,11 ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , மிகுந்த அதிர்ஷ்ட அமைப்பை பெற்று தரும் , மேலும் தங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி என்பது இதன் மூலம் உறுதியாகிறது , இதில் எட்டாம் வீடு லாபத்துடன் சம்பந்தம் பெறுவது திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையில் வெற்றியை நிச்சயம் தரும் , பூமியில் மனிதன் வாழ்வதற்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெற்று தரும் யோகம் உண்டாகும் , வாழ்நாள் முழுவதும் ஜாதகர் அதிர்ஷ்டத்தின் அமைப்புகளை நிலையாக அனுபவித்து கொண்டே இருக்கும் யோகம் உண்டு , ஜாதகரின் நல்ல குணம் ஜாதகரை எப்பொழுதும் நல்ல நிலைக்கே எடுத்து செல்லும் , தன்னம்பிக்கை அதிகமாகும் , ஜாதக அமைப்பிலேயே மிகவும் யோக அமைப்பாக இதை கருதலாம் எனவே வாழ்க்கையில் சகல யோகத்தையும் நிச்சயம் வாரி வழங்கும் .

10 ம் வீடு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , இயல் இசை நாடகம் , திரைப்பட துறையில் சகல யோகமும் , தொழில் முறையில் அதிக வருமானத்தையும், விளையாட்டு துறையில் அபரிவிதமான முன்னேற்றத்தையும் , வியாபாரம் சுய தொழில் செய்வதால் அளவில்லா முன்னேற்றத்தை வாரி வழங்கும் , குறிப்பாக ஜாதகர் முயற்ச்சி செய்தால் அதிர்ஷ்டத்தின் மூலம் திரை துறையில் அளவில்லா முன்னேற்றத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் :

3 ,6 ,9 ,12 ம் வீடுகள் விரைய ஸ்தானம் எனும் 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியை தர கூடும் , மன கவலைகளால் உடல் நிலை சிறிது பாதிக்க கூடும் , கவனமாக இல்லாவிட்டால் தங்களுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட கூடும் , அதிக மன உளைச்சல்களையும் , அதிகமான மன போராட்டத்தையும் தர கூடும் , இது தன்னம்பிக்கையை அதிகம் குறைக்கும் , சில நேரங்களில் முன்னேறத்தை தடுக்க கூடும் , அதிக முதலீடுகளை மற்றவர்களை நம்பி செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் இல்லையெனில் அதிக இன்னல்களை சந்திக்க கூடும் , எனவே மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து தாங்கள் அதிக சிரமங்களை அனுபவிக்க வேண்டி வருவதால் நாங்கள் பரிந்துரை செய்யும் பரிகாரங்களை தாங்களே செய்து நன்மை பெருக .

7 ம் வீடு பாதக ஸ்தானம் எனும் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , தங்களது ஜாதக அமைப்பிலேயே அதிக கெடுதலை செய்யும்,  மேற்க்கண்ட பாவக அமைப்பில் இருந்து தங்களுக்கு எதிர்பாராத இன்னல்கள் வர கூடும் , குறிப்பாக வாழ்க்கை துணை , நண்பர்கள் , பொது மக்கள் போன்ற அமைப்புகளில் 200 சதவிகிதம் கெடுதலை செய்ய கூடும் , தான்கள் திருமணம் செய்து கொள்ளும் முன் பெண்ணின் ஜாதகத்தில் களத்திர பாவகம் மற்றும் குடும்ப ஸ்தானம் என்ற பாவகங்கள் நல்ல நிலையில் இருக்கும் சாதகமாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வது திருமண வாழ்க்கையில் அதிக இன்னல்களை தராமல் , தங்களுக்கு நன்மையை தரும் , ஒரு வேலை தங்களது வாழ்க்கை துணையின் வழியில் சில சிரமங்கள் ஏற்படின் அதை மனம் உவந்து ஏற்றுக்கொண்டு , தங்களது வாழ்க்கை துணைக்கு நன்மை மட்டுமே செய்து வாருங்கள் , காரணம் தங்களது ஜாதக அமைப்பிலேயே களத்திர ஸ்தானம் அதிகம் பாதிக்க பட்டு இருக்கிறது .

நடக்கும் திசை தரும் பலன்கள் :( சந்திரன் திசை 14 /10 /2011 முதல் 14 /10 /2021 வரை )

5 பாவகம் லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று சந்திரன் திசை லக்கினத்தின் பலனை செய்கிறது , லக்கினம் என்பது உபய ராசியாக இருப்பதால் 40 சதவிகிதம் மட்டுமே நன்மையான பலன்களை ஐந்தாம் பாவக அமைப்பில் இருந்தும் , இலக்கின அமைப்பில் இருந்தும் வழங்கும் , இந்த கால அமைப்பில் உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது அதிக நன்மையை தரும் .
 
தற்பொழுது நடக்கும் சந்திரன் திசை செவ்வாய் புத்தி 4 ம் வீடு சுக ஸ்தானம் எனும் நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சொத்து சுகம் , வண்டி வாகனம் , உயர் கல்வி போன்ற விஷயங்களில் நன்மைகளை வாரி வழங்கும்.

அடுத்து வரும் ராகு புத்தி  7 ம் வீடு பாதக ஸ்தானம் எனும் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கெடுதலும் , 5 பாவகம் லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது அதிக நன்மைகளையும் , கலந்து தரும் , திருமணம் சம்பந்தபட்ட விஷயங்களை இந்த ராகு புத்தியில் தவிர்ப்பது அவசியம் .

மேலும் விரிவான ஜாதக பலன்களை அலைபேசி அல்லது தொலை பேசி மூலம் தெரிந்து கொள்ளுங்கள் அன்பரே !



பரிகாரம் :

1  ) தினமும் சூரிய நமஸ்காரம் காலை 5 மணிக்கே எழுந்து செய்து வரவும் .
2 ) திருவக்கரை சென்று குரு பகவானுக்கு வக்கரக நிவர்த்தி செய்வது சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும் .
3 ) திருப்பதி வருடம் ஒரு முறை வளர் பிறை திங்கள் அன்று சென்று ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் நீராடி பெருமாளை தரிசித்து வருவது அதிக நன்மைகளை தரும் .
4 ) களத்திர ஸ்தானம் சம்பந்த பட்ட விஷயங்களில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க தனி மின்னஞ்சல் மூலம், செய்ய வேண்டி பரிகாரத்தை அனுப்பி வைக்கிறோம் .
5 ) இரத்தின பரிந்துரையினையும் தனி மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கிறோம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696
jothidadeepam@gmail.com  

சனி, 20 அக்டோபர், 2012

புத்திர தோஷம் எனும் குழந்தை பாக்கியம் அற்ற நிலையை எப்படி நிர்ணயம் செய்வது ?



ஐயா வணக்கம்,

கேள்வி :

1.ஒரு ஜாதகரின் குழந்தைகளை நிர்ணயிப்பதற்கு ஒருவர் ஜாதகம் மட்டுமே போதுமா?அல்லது கணவன்,மனைவி இருவர் ஜாதகமும் சேர்த்து பார்த்தால்தான் முடிவுசெய்யமுடியுமா?


பதில் : 

நிச்சயமாக தம்பதியர் இருவரின் ஜாதகமும் தேவை , இவருடைய ஜாதக அமைப்பை வைத்து மட்டுமே குழந்தை பாக்கியம் என்ற பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் தன்மையை நிர்ணயம்  செய்ய முடியும் , அதன் அடிப்படையிலேயே குழந்தை பாக்கியம் உண்டா ? இல்லையா என்று தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் . ஒருவரின் ஜாதக அமைப்பை மட்டும் வைத்து குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்வது என்பது ஒரு  கை ஓசைக்கு சமமானது அன்பரே ! மேலும் தம்பதியரின் சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்க பட்டு இருந்தாலும் , ஒருவருக்கு வலிமையுடன் இருந்தால் நிச்சயம் பெண் குழந்தைக்கு கிடைப்பதற்கு  உண்டான வாய்ப்பு நிச்சயம் உண்டு . இதிலிருந்து ஒருவருக்காவது  புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் . இருவருக்கும் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து ஆண் குழந்தை இல்லத்திற்கு காரணம் தம்பதியர் தங்களுக்கு உகந்த திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருக்காமல் , பாதகத்தை தரும் வாயிர்ப்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பது மட்டுமே காரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு ஆண்குழந்தைகளே பிறக்கின்றன.

பதில் : 
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் சர ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் சர ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் ஆண் குழந்தைகளாக பிறக்கும் . மேற்கண்ட அமைப்பில் இருந்து அதாவது  ஜாதகர் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருந்து, தனது பூர்விகத்தை விட்டு வெளியே சென்று குடியிருந்தால் , ஜாதகருக்கு பெண் குழந்தைகளாகவே பிறக்க கூடும் , தனது பூர்வீகத்திற்கு திரும்ப வந்தவுடன் ஆண் வாரிசு நிச்சயம் அமையும் , இதையெல்லாம்  சுய ஜாதகம் கொண்டே பலன் நிர்ணயம் செய்ய முடியும் .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு பெண் குழந்தைகளே பிறக்கின்றன.

பதில் :
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் உபய ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் உபய  ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் பெண்  குழந்தைகளாக பிறக்கும் .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு இரண்டுமே பிறக்கின்றன.

பதில் : 
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் ஸ்திர  ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் ஸ்திர  ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , ஆண் பெண் என்று இரண்டு விதமான குழந்தைகளையும் பெரும் யோகம் உண்டாகும் .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன.

பதில் :
இது மேற்கண்ட அமைப்பில் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து , கருத்தரித்த நேரமும் , இடமும் இரட்டை குழந்தைகளுக்கு உண்டான அமைப்பை நிர்ணயம் செய்யும் .

கேள்வி :
சிலபேருக்கு குழந்தைகளே இல்லை.

பதில் :
இதற்க்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும் ,  தம்பதியரின் ஜாதக அமைப்பில் இவருடைய பூர்வ புண்ணியம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் , பூர்வ புண்ணியம் எனும் பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகனுக்கு இப்பிறவியில் தத்து புத்திர யோகம் மட்டுமே உண்டு அதுவும் ஜாதகர் செய்யும் குல தேவதை வழிபாட்டை பொறுத்து அமையும் .

கேள்வி :
இதை ஒரு ஜாதகரின் அல்லது தம்பதியின் ஜாதகங்களை வைக்து சரியாக அதாவது மிகச்சரியாக தெரிந்துகொள்ளமுடியுமா?உங்கள் அனுபவத்தை வைத்து பதிலை ஜோதிடதீபத்தில் அளிக்கவும்.

பதில் :
நிச்சயம் தம்பதியர் இருவரின்  ஜாதகத்தை வைத்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் , ஒருவரின் ஜாதக அமைப்பை வைத்து நிர்ணயம் செய்வது என்பது மிகவும் கடினம். மேலும் இதை எல்லாம்  அனுபவத்தை வைத்து சொல்ல இயலாது ஜோதிட கணிதத்தை வைத்து சரியாக சொல்லிவிட முடியும் அன்பரே ! ஜோதிடத்தில் கணிதம் மட்டுமே உண்டு அனுபவம் என்பது ஏது ?


கேள்வி :
கிராமவாசிகள் ஜோதிடரிடம் இந்த ஜாதகருக்கு எத்தன வாரிசு பிறக்கும்?அதுல ஆண் எத்தன பெண் எத்தன?மூத்தது ஆணா?பெண்ணா? இப்படியெல்லாம் கேட்கிறார்களே. இதற்கெல்லாம் உண்மையிலேயே மிகச்சரியான பதிலை ஜோதிடத்தின் மூலம் கூறமுடியுமா? முடியும் எனில் உங்கள் அனுபவத்தில் பார்த்த ஒரு உதாரண ஜாதகம் மூலம் விளக்கமுடியுமா?

பதில் :
கிராம வாசிகள் என்ன ? நகர வாசிகள் என்ன ? எல்லோருக்கும் ஒன்றேதான் , பாரம்பரிய ஜோதிட முறையில் பல ஜோதிடர்கள் பச்சிலை என்ற ( அதாவது மனோ தத்துவம் அல்லது மனோ ரீதியான அணுகு முறை பிறந்த ஜாதகத்தில் சில எழுத்துகள் மூலம் உடன் பிறப்பு பற்றி சொல்லும் தன்மை  ) ஒரு முறையை கடை பிடிக்கிறார்கள் , இதை வைத்து கொண்டுதான் பல அரை குறை ஜோதிடர்களின் பிழைப்பே ஓடுகிறது , நமது அமைப்பில் ஆருடம் மூலம் பிறப்பது ஆண் குழந்தைய அல்லது பெண் குழந்தையா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , மேலும் இதை பற்றி நான் அதிகம் சொல்ல விரும்ப வில்லை .

கேள்வி :
புத்திர தோஷம் என ஜோதிடம் ஆண் வாரிசை மட்டுமே குறிக்கிறது.புத்திரி தோஷம் என் பெண் பாலை குறிக்கவில்லை.எனவே ஒருவருக்கு ஏற்ப்படும் பெண் வாரிசை பற்றி அவர் ஜாதகம் மூலம் அறியமுடியாதா?முடியும் எனில் எப்படி?

பதில்:
புத்திர தோஷம் என்பதே பொதுவான ஒரு வார்த்தைதான் , இதில் ஆண் பெண் வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை , மேலும் புத்திரன் தோஷம் என்று இருந்திருந்தால் மட்டுமே உங்களின் கேள்வி சரியானதாக இருந்திருக்கும் என்பது எமது கருத்து , மேலும் ஜாதகருக்கு பெண் குழந்தை உண்டா என்பதை நிர்ணயம் செய்ய நிச்சயம் முடியும் , எப்படி எனில் இதற்க்கு தாங்கள் ஜோதிடத்தை நல்ல குரு மூலம் தெளிவாக  இருந்து கற்றுகொள்ள வேண்டும் .

கேள்வி :
புத்திர தோஷம் என்றால் என்ன? குழந்தைகளே இல்லாத நிலையா? ஆண் குழந்தைகளே இல்லாத நிலையா?

பதில் :
குழந்தைகளே இல்லாத நிலையையே புத்திர தோஷம் என்று சொல்ல இயலும் ,

கேள்வி :
ஆண்,பெண் குழந்தைகள் பிறந்தும் அந்த குழந்தை சில வருடங்கலில் அதாவது திருமணம்,வேலை போன்றவற்றிற்கு முன்பே அந்த வாரிசு அகால மரணம் அடைவது அல்லது மரணத்திற்கு ஒப்பான நிலை,அல்லது பெற்றோருக்கு உபயொகமில்லாமல் போவது. அந்த வாரிசால் பெற்றோர் அவமானம் அடைதல் புத்திர தோஷம் இதில் எது அடங்கும்? இதற்கான விரிவான பதிலை ஜோதிட தீபத்தில் எதிர்பார்க்கிறேன்

நன்றிகளுடன்,
ஜோதிட பித்தன்.

பதில் :
ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , எதிரி ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, ஆறாம் பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகனுக்கு பிறக்கும் குழந்தையால் ஜாதகன் அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் .

ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , ஆயுள் ஸ்தானம் மற்றும் திடீர் இழப்பு  எனும் எட்டாம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று எட்டாம்  பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகன் தனது குழந்தையை இழக்கும் தன்மையையோ அல்லது நிரந்தரமாக பிரியும் தன்மையையோ பெற கூடும் .

ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ,விரைய ஸ்தானம் எனும் 12 ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று எட்டாம்  பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகன் தனது குழந்தையின் அமைப்பில் இருந்து அதிக வீண் விரயங்களையும் , மன நிம்மதி இழப்பினையும்  சந்திக்க வேண்டி வரும் .

மேற்கண்ட பலன்கள் எல்லாம் சுய ஜாதக அமைப்பை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும் , புத்திர ஸ்தானம் எனும் ஒருபாவகத்தை வைத்து மட்டுமே நிர்ணயம் செய்து விட முடியாது .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  


திங்கள், 15 அக்டோபர், 2012

அஷ்டவர்க்க பரல்கள் ஜாதக பலனை நிர்ணயம் செய்யுமா ?



குருவிற்கு
மிக அருமையான விளக்கம். மேலும் சில வினாக்கள். கேள்விகளில் தவறு இருப்பின் மன்னிக்கவும் ஐயா.

பாதக ஸ்தானத்தில் அஷ்டவர்க்க படி அதிக பரல்கள் இருந்தால் மிக அதிக தீமை என்று எடுத்து கொள்ளலாமா?
 
பாவகங்களின் வலிமையை அஷ்டவர்க்கம் வைத்து முடிவு செய்யலாமா?


பதில் :

இரண்டுமே தவறான ஜோதிட கணித முறை அன்பரே ! காரணம் இந்த அஷ்ட வர்க்கத்தை வைத்து பலன் சொல்லுவது என்பது நிச்சயம் சரியான பலனை சொல்ல இயலாது என்பதே எனது கருத்து , மேலும் இதை பற்றி தெளிவாக ஆராய்சி செய்து பார்த்தாகி விட்டது , பலன்கள் சரியாக வரவில்லை .

ஒரு உபய இலக்கின ஜாதகருக்கு லாப ஸ்தானத்தின் பலன் நடக்கின்ற பொழுது லாப ஸ்தானத்தில் குறைவான பரல்கலையே பெற்றிருந்தும் மிகுந்த யோக அமைப்பையே தந்து இருக்கிறது , பாதக ஸ்தான பலனை நடத்தும் பொழுது பாதக ஸ்தானத்தில் குறைவான பரல்களை பெற்றிருந்தும் , ஜாதகர் கடுமையான தீய பலன்களையே அனுபவிக்க வேண்டி இருந்தது , எனவே அஷ்ட வர்க்க பரல்களை வைத்து பலன் நிர்ணயம் செய்வது என்பது நிச்சயம் ஜாதக பலன்களை சொல்ல இயலாது  என்பதே  எமது கருத்து .

போலி ஜோதிடர்கள் சொல்வது போல் வீடு கொடுத்தவன் , வீடு வாங்கியவன் , வீடு விற்றவன் என்று கதை அளப்பவர்களுக்கு  மட்டுமே இந்த அஷ்ட வர்க்க அமைப்பு  பயன் படும் நமது தெளிவான சரியான ஜோதிட பலன்களுக்கு இந்த அஷ்ட  வர்க்க கணிதம் நிச்சயம் உதவவில்லை என்பதே உண்மை .

ஒரு பாவகத்தின் வலிமையை , அந்த பாவகம் தொடர்பு பெறும் வீட்டின் நிலையில்  இருந்து மட்டுமே தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , லக்கினம்  ஒருவருக்கு பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் பொழுது லக்கினத்தில் எத்தனை பரல்கள் இருந்தாலும் ஜாதகரை காப்பாற்ற இயலாது , பாதக ஸ்தானத்தில்  எத்தனை பரல்கள் இருந்தாலும் காப்பாற்ற இயலாது , காரணம் தொடர்பு  பெறுவது பாதக ஸ்தானதுடன் எனவே லக்கினத்திற்கு எவ்வித தடையும்  இன்றி 200 மடங்கு தீமையான பலனை மட்டுமே சரியாக செய்யும் .

இதுவே மாறி லக்கினம்  லாப ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று லக்கினம் உபய ராசியாக இருந்தால் லக்கனத்தில் குறைவான பரல்கள் இருந்தாலும் , லாப ஸ்தானத்தில் குறைவான பரல்கள் இருந்தாலும் ஜாதகரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை  யாராலும் தடுக்க இயலாது , 100 மடங்கு நன்மையான பலனை ஜாதகருக்கு  குறிப்பிட்ட காலகட்டத்தில் வாரி வழங்கி விடும் ,இதில் எவ்வித சந்தேகமும்  இல்லை அன்பரே ! எனவே  இந்த அஷ்ட வர்க்க பரல்களை கொண்டு  எம்மால் நிச்சயம் சரியான ஜாதக பலனை நிர்ணயம் செய்ய முடியாது , மேலும் ஒரு பாவக பலனை நிர்ணயம் செய்ய அந்த பாவகம் எந்த வீட்டுடன்  தொடர்பு பெறுகிறது என்பதை வைத்தே சரியாக  துல்லியமாக நிர்ணயம்  செய்ய இயலும் .

நீங்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் உண்டான ஒரே பதில் அஷ்ட வர்க்க பரல்களை  வைத்து ஜாதக பலனை நிச்சயம் சரியாக சொல்ல முடியாது என்பதே  உண்மை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com