சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!
1) மேஷ லக்கினம் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது மேஷ லக்கினத்திற்கு ராகு 6ம் பாவகத்திலும், கேது 12ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.
6ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் ஜாதகருக்கு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார், உடல் நல பாதிப்பை தந்த போதிலும் விரைவில் குணம் பெரும் யோகத்தை தருவார், எவ்வித தடையும் இன்றி அனைத்திலும் வெற்றியை வாரி வழங்கும் தன்மையை ராகு இங்கு சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகருக்கு வழங்குகிறார், வழக்கு, பிரச்சனைகளில் இருந்து ஜாதகருக்கு 100% சாதகமான பலன்களை வாரி வழங்குகிறார், தன்னம்பிக்கை அதிகருக்கும், நல்ல வேலையாட்கள் அமைவார்கள், சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் ஜாதகருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும், மேலும் ஒவ்வொரு மாதமும் ஜாதகருக்கு ஏதாவது ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு வந்துகொண்டே இருக்கும் இதன் மூலம் ஜாதகருக்கு எதிர்பாராத பொருட் சேர்க்கை, தன சேர்க்கை கிடைத்து கொண்டே இருக்கும் புதன் கேந்திர அதிபதியாக வருவதால், ஜாதகருக்கு கன்னியில் சஞ்சாரம் செய்யம் 18 மாதங்களுக்கும் ராகு யோகத்தை தருகிறார்.
12ல் சஞ்சாரம் கேது பகவான் ஜாதகருக்கு மன நிம்மதி என்ற அமைப்பில் இருந்து அதிக இனல்களை தரக்கூடும், தேவையற்ற விரையம், நிறைய செலவுகள், பங்கு சந்தை, முதலீடு செய்வதால் இழப்பு, அனைவராலும் தொல்லை தொந்தரவு, எதிர்பாராத விபத்து போன்ற இன்னல்கள் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்கள் யாவும் தோல்வியை தர கூடும், தொலைதூர பயணங்களால் ஜாதகர் பதிப்புகளை சந்திக்க கூடும், மறைமுக எதிரிகளால் துன்பமும் தொல்லைகளும் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், நிம்மதியான உறக்கம் கிடைக்க ஜாதகர் வெகு பிரயத்தனம் செய்ய வேண்டி வரும், அலைச்சல் அதிகமாகும், ஜாதகராலும் ஜாதகரை சார்ந்தவர்களாலும் அதிக இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.
2) ரிஷப லக்கினம் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் ராசியான ரிஷபத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ரிஷப லக்கினத்திற்கு 5ல் ராகுவும், 11ல் கேதுவும் இனி வரும் 18 மாதங்கள் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர், இந்த 18 மாதங்களிலும் ரிஷப இலக்கின ஜாதகர்களுக்கு எவ்வித யோக அவயோக பலன்களை வழங்க இருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.
உண்மையில் இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில் 18 மாதங்களும் 100% யோகத்தை அனுபவிக்கும் அன்பர்கள் இந்த ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்களே என்றால் அது மிகையில்லை, ஏனெனில் 5ல் அமரும் ராகு ஜாதகருக்கு இறை அருளின் பரிபூரண நல்லாசிகளை வாரி வழங்குவதும், 11ல் அமரும் கேது மிகுந்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவதுமே காரணமாக அமையும், 5ல் அமரும் ராகு ஜாதகருக்கு நல்ல நினைவாற்றலையும், சிறந்த சிந்தனை ஆற்றலையும் வாரி வழங்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், உதவி செய்ய பலர் முன் வருவார்கள், எங்கு சென்றாலும் ஜாதகர் வெற்றி மேல் வெற்றியை பெரும் யோகத்தை தரும், விளையாட்டு துறையை சார்ந்தவர்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறுவார்கள்.
கலை துறையை சார்ந்தவர்கள் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் யோக காலம் இது தன்னம்பிக்கை அதிகரிக்கும், இயல் இசை நாடக துறையை சார்ந்த ரிஷப இலக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவியும், பொருளாதார ரீதியாகவும், உலக புகழ் பெரும் யோகத்தையும் இந்த 18 மாதங்களில் ராகு பகவான் வாரி வழங்குவார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, குழந்தை பாக்கியம் அற்ற தம்பதிகளுக்கு புத்திர சந்தானம் உண்டாகும் , பங்கு சந்தை சார்ந்த தொழில்களில் இருப்பவர்கள் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் யோக காலம் இது, பாரம்பரிய தொழில்களில் செய்துவருபவர்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறுவாரகள், விவசாயம் செழித்து வளரும்.
11ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் ஜாதகருக்கு 18 மாதங்களும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்குவார், எதிர்பாராத தனசேர்க்கை உண்டாகும், ஜாதகர் மன நிலை மிகவும் தெளிவாக இருக்கும், எடுக்கும் ஒவ்வொரு காரியம் யாவும் ஜாதகருக்கு சாதகமாக அமைந்து வெற்றி மேல் வெற்றி தரும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஜாதகர் மிகவும் சிறப்பாக இருப்பார், ஜாதகரின் நேர்மறை எண்ணங்கள் ஜாதகருக்கு வெற்றி வாய்ப்புகளை 100% வெற்றியை வாரி வழங்கும், எதிலும் லாபம், வியாபர விருத்தி, சுப விரையம், திருமண வாய்ப்பு கைகூடும் யோகம், செல்வசெழிப்பு, வருமுன் காப்பது, நினைத்த எண்ணம் ஈடேறும் வாய்ப்பு, தாம்பத்திய வாழ்க்கையில் முன்னேற்றம், கணவன் மனைவி நல்லுறவு, பொதுமக்கள் ஆதரவு என்ற வகையிலும், ஆன்மீக வெற்றி, தெய்வீகத்தால் லாபம் என்ற வகையிலும் ரிஷப இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு யோகத்தை வாரி வழங்கும்.
குறிப்பு :
அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் மேஷ லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், மேஷ லக்கினத்திற்கு 6,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், இதை போன்றே யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் ரிஷப லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 5,11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.
மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696








