திங்கள், 18 ஆகஸ்ட், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 6


 சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

கும்ப லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, இந்த  ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது கும்ப லக்கினத்திற்கு ராகு 8ம் பாவகத்திலும், கேது 2ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

 கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 8ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், விபரீத ராஜயோகத்தை தருகிறார், இதுவரை ஜாதகருக்கு வராமல் இருந்த பொருள் உதவிகள், ஆதரவுகள் ஜாதகரை தேடி  வரும், எதிர்பாராத வகையில் பொருளாதார ரீதியான வெற்றிகள் ஜாதகருக்கு தேடி வந்து சேரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், செய்யும் விஷயங்கள் யாவும் திடீர் வெற்றியை தரும், பெரிய மனிதர்களின் ஆதரவு ஜாதகருக்கு பல விதங்களில் உதவிகரமாக அமையும், முன்னேற்றம் என்பது யாரும் எதிர்பாரா வண்ணம் ஜாதகருக்கு அமையும், உடல் நிலை மிகவும் சிறப்பாக அமையும், இதுவரை உடல் ரீதியாக இருந்து வந்த தொந்தரவுகள் விரைவாக குணம் பெரும் அமைப்பை தரும்.

கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 2ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், வருவாய் கடன் மற்றும் பணம் சம்பந்தம் பட்ட விஷயங்கள் தங்களுக்கு எதிர்பாராத லாபத்தை வாரி வழங்கும், வண்டி வாகனம் மற்றும் சுப விரைய செலவுகள் செய்யும் அமைப்பை தரும், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சிறு அறுவை சிகிச்சையை ஜாதகர் மேற்கொள்ளும் அமைப்பை தரக்கூடும், முன்பின் தெரியாத நபர்களாலும், வேற்று மதத்தினராலும் நன்மையையும் லாபமும் உண்டாகும், அவர்களால் ஜாதகருக்கு வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை ஏற்ப்படும், புதையல்கள் அல்லது அதற்க்கு நிகரான பொருள் வரவுகள் ஜாதகருக்கு ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இனி வரும் 18 மாதங்கள் மிகுந்த யோகத்தை வாரி வழங்கும்.

குறிப்பு :

 கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் தேவையில்லாத செலவினங்களை குறைத்து சேமிக்கும் பழக்கத்தை வைத்துகொள்வது இனிவரும் காலங்களில், சரியான நன்மைகளை பெறலாம், அவசிய தேவைகளுக்கு மட்டும் செலவு செய்வது நலம் தரும், பல முறை சிந்தித்து செலவுகளை செய்வது கும்ப லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மிகுந்த நன்மையை தரும்.

மீன லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, இந்த  ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது மீன லக்கினத்திற்கு ராகு 7ம் பாவகத்திலும், கேது 1ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 7ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், இது வரை திருமணம் ஆகாத அன்பர்களுக்கு, திருமண வாய்ப்பை திடீர் என அமைத்து தருகிறார், இனி வரும் 18 மாத காலத்திற்குள் மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திருமணம் இனிதே நடைபெறும், வரும் வாழ்க்கை துணை அமைப்பில் இருந்து ஜாதகர் மிகுந்த நன்மைகளை பெரும் யோகத்தை தரும், புதியதாக கூட்டு தொழில் செய்யும் யோகத்தை வழங்கும் ராகு பகவான் அதன் மூலம் மிகப்பெரிய லாபத்தை தருகிறார், இதன் வழியே ஜாதகர் பொருளாதார ரீதியான தன்னிறைவை பெரும் யோகம் உண்டாகும், அரசியலிலும் கூட்டு தொழில் அமைப்பிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும், மக்கள் ஆதரவும் அதன் வழி நன்மையும், இனி வரும் காலங்களில் மிகவும் சிறப்பாக அமையும்.

மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 1ல் சஞ்சாரம் செய்யும் கேது  பகவான், நல்ல உடல் ஆரோக்கியத்தையும், சிறந்த மன நலனையும் வாரி வழங்குகிறார், சுயமாக வாழ்க்கையில் முன்னேறும் அமைப்பையும், தன்னம்பிக்கையுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெரும் யோகத்தையும் தருகிறார், சிறந்த ஆன்மீக அன்பர்களின் அறிமுகமும், பெரியோர்களின் நல்லாசியும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகத்தை தரும், வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும், புதிய சிந்தனைகள் மீன லக்கினதரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரும்.

மீன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிகுந்த லாபத்தையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை.

குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் கும்ப லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் இதை போன்றே, யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் மீன லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.



வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - பாகம் 1


 ஜீவன ஸ்தானம் ஒருவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பாவகம், மேலும் ஒரு ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வைத்து அந்த ஜாதகரின் கௌரவம்,அந்தஸ்து சுய மரியாதை ஆகிய விஷயங்களை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும், ஜீவன பாவகத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொருவருக்கும் சரியான தொழில் அமைகிறது என்றால் அது மிகையில்லை, 12 ராசிகளும் , சர,ஸ்திர,உபய அமைப்புகளும், நெருப்பு,நிலம்,காற்று,நீர் தத்துவங்களும் சுய ஜாதகத்தில் ஒருவருக்கு எந்த விதமான ஜீவன வாழ்க்கையை, எந்த வயதில் அமைத்து தருகிறது என்பதை ஜாதக ரீதியாக தெளிவாக தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் தனது தொழில்,வேலை  மற்றும் பணியை சிறப்பாக செய்து வாழ்க்கையில் முன்னேற்றமும் வெற்றியும் காணலாம்.

ஒருவரின் ஜீவன அமைப்பை ( செய்யும் தொழில் அல்லது வேலை ) சுய  ஜாதகரீதியாக தெரிந்து கொள்வது, அந்த ஜாதகர் தனது ஜீவன வாழ்க்கையை சிறப்பாக  செய்ய பெரும் உதவியாக இருக்கும், அடிப்படையில்  ஒருவரது  ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் எந்த விதமான தொடர்புகளை  பெறுவது ஜாதகரின் தொழில் மற்றும் வேலை  வாய்ப்பினை கேள்வி குறியாக மற்றும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் அன்பர்களே !

ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் தொடர்பு பெற கூடாத நிலைகள் :

1) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானம் எனும் 7,9,11ம் பாவகங்களுடன் தொடர்பு பெற கூடாது , ஒரு வேலை ஜீவன ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகரை ஜீவன வழியில் இருந்து 200% இன்னல்களுக்கு வழிவகுத்துவிடும் மேலும் சுய கௌரவமும் அந்தஸ்தும் வெகுவாக பாதிக்க படும்  ( சர லக்கினத்திற்கு 11ம் வீடு பாதக ஸ்தானம், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு பாதக ஸ்தானம், உபய லக்கினத்திற்கு 7ம் வீடு பாதக ஸ்தானம்)

2) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம்,எதிரி மற்றும் பகை ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து பல எதிர்ப்புகளையும், எதிரிகளையும் உருவாக்கும், மேலும் செய்யும் தொழில் அமைப்பில், அதிக கடன் தொந்தரவுகளை உருவாக்கி தொழில் முடங்கும் சூழ்நிலையை தந்துவிடும், ஜாதகருக்கு 6ம் பாவகம் ஒரு வேலை சர ராசியாக இருப்பின், ஜாதகர் தனது தொழிலுக்கு மூடுவிழா, தொழில் செய்ய ஆரம்பித்த சில தினங்களிலேயே நடத்தி விடுவார், தேவையின்றி செய்யும் சில காரியங்களால், ஜாதகரின் தொழில் வாய்ப்புகள்  முடங்கி மிகப்பெரிய பின்னடைவை தந்துவிடும்.

3) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், திடீர்  இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, எதிர்பாராத சந்தர்பத்தில் திடீர் இழப்பை  தந்து, இதுவரை செய்துவந்த தனது தொழில்  அமைப்பிற்கு மூடுவிழா காணும் தன்மையை தரும், சுய ஜாதகத்தில் இந்த அமைப்பை பெறும் அன்பர்கள் தயவு செய்து மற்ற  பாவகங்களின் வலிமை உணர்ந்து தொழில் செய்வது நலம், இல்லை எனில் ஜாதகரின் ஜீவன வாழ்க்கை மிகப்பெரிய கேள்வி குறியாக மாறிவிடும், தொழில்  செய்யாமல் அடிமை ஜீவனம் மேற்கொள்ளும் அன்பர்களுக்கும் இந்த அமைப்பு அதிக துன்பத்தையே தரும், குறிப்பாக ஒரு இடத்தில் நிரந்தரமாக வேலை பார்க்க ஜாதகரால் இயலாது, எதிர்பாராத நேரத்தில் வேலையை விட்டு எக்காரணமும் தெரியாமல் நீக்கபடுவார்கள்.

ஜாதகர் தனது உழைப்பின் மூலம் சம்பாதித்த பணம் பொருள் அனைத்தையும் திடீர் என இழக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக மருத்துவ செலவினங்கள்,  விபத்து செலவினங்கள், மற்றவர்களை நம்பி கொடுக்கும் பணம்,  மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள், ஆகியவற்றில் பெரிய திடீர்  இழப்பையே ஜாதகர் சந்திக்கும் சூழ்நிலையை தரும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதாலும், மற்றவர்களுக்கு ஜாமீன் தருவதாலும் ஜாதகருக்கு மிகப்பெரிய இழப்பே ஏற்ப்படும், ஜாதகர் செய்யும் தொழிலும் கடுமையாக பாதிக்க படும்.

ஜாதகருக்கு 8ம் பாவகம் சர ராசியாக இருப்பின், மேற்கண்ட பாதிப்புகள்  மிக விரைவாக நடத்தும், ஜாதகரின் சிந்தனை எதுவும் பலன் தராது, ஜாதகருக்கு உதவி செய்யும் அன்பர்கள் யாரும் இல்லை என்ற சூழ்நிலையை தரும்.

4) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் செய்யும் தொழில் முதலீட்டையே வெகுவாக பதம் பார்க்கும், குறிப்பாக ஜாதகர் தொழில் ரீதியாக செய்த முதலீட்டை திரும்ப பெறுவது என்பது குதிரை கொம்பாக இருக்கும், தொழிலில் முதலீடு செய்துவிட்டு ஒவ்வொரு நாளும்  உறக்கமின்றி நிம்மதியின்றி தவிக்கும் சூழ்நிலையை தந்துவிடும், மனதளவில் அதிக இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்,  பெரும்பாலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் சமுதாயத்தில் பொருளாதார ரீதியான பின்னடைவை விரைவில் சந்திக்கிறார்கள், இவர்கள் தொழில் ரீதியாக மீண்டு வருவது என்பது இயலாத ஒரு காரியமே என்றால், அது மிகையில்லை அன்பர்களே !

இந்த அமைப்பை பெற்ற அன்பர்களுக்கு அடிமை ஜீவனம் சிறந்த  நன்மைகளை வாரி வழங்கும், சுய தொழில் செய்தால் மட்டுமே ஜாதகர் கடுமையாக பாதிக்க படுவார், ஒருவரிடமோ அல்லது ஒரு நிறுவனத்திலோ பணிபுரியும் பொழுது ஜாதகருக்கு  பெரிய இழப்புகள் எதுவும் நடை பெறுவதில்லை, மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் கூட்டு தொழில் செய்ய கூடாது ஏனெனில் ஜாதகர் தனது கூட்டாளியாலேயே ஏமாற்றப்பட கூடும், மேலும் செய்த முதலீடு, ஜாதகரின் கூட்டாளிக்கு மிகுந்த வளர்ச்சியை கொடுத்துவிடும்.

5) மேற்கண்ட விஷயங்களுடன் சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் பாவகமான மகரம் மிகவும் சிறப்பாக இருப்பது அவசியம், சிலர் தொழில் ரீதியாக பெரிய வெற்றிகளை பெற இயலாத நிலைக்கு காரணம் இதுவே, மேலும் சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் பாவகமான மகர ராசிக்கு அதிபதியான சனிபகவானும், சுய ஜாதகத்தில் 10ம் பாவகத்திர்க்கு அதிபதியான கிரகமும் எக்காரணத்தை கொண்டும் வக்கிரக நிலையை பெற கூடாது, மேற்கண்ட கிரகங்கள் வக்கிரக நிலை பெரும் பொழுது ஜாதகர் தொழில் ரீதியான வெற்றிகள் வாய்ப்புகள் வெறும் 10% நிலையிலேயே நின்றுவிடும், தொழில் ரீதியான சிரமங்கள் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், வக்கரகம் பெற்ற கிரகங்களுக்கு முறையாக வக்கரக நிவர்த்தி செய்யும் வரை ஜாதகர் ஜீவன வழியில் இருந்து நன்மையை பெற முடிவதில்லை.

இனி வரும் பதிவுகளில் ஜீவன ரீதியான பலன்கள் பற்றி விளக்கமாக காணலாம் அன்பர்களே!.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 16 ஆகஸ்ட், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 5




சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

தனுசு லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது தனுசு லக்கினத்திற்கு ராகு 10ம் பாவகத்திலும், கேது 4ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

தனுசு லக்கினத்திற்கு 10ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்குகிறார், குறிப்பாக தொழில் ரீதியான வெற்றிகள், வெளிநாடு வேலை வாய்ப்புகள், புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு, கூட்டு தொழில் செய்வதின் மூலம் மிகுந்த லாபம், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தை விரைவில் அடையும் யோகம், திடீர் பதவி உயர்வு, கை நிறைவான பொருள் வரவு, புதிய சிந்தனைகள், புதிய தொழில் யுக்திகள் மூலம் தனது தொழில் முன்னேற்றத்தை தக்க வைத்துகொள்ளும் யோகம், தங்கு தடையின்றி நடைபெறும் தொழிலால், தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இனி வரும் 18 மாதமும் 100% நன்மைகளை பெறுவார்கள்.

தனுசு லக்கினத்திற்கு 4ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் சிறப்பான நன்மைகளை எதிர்பார்க்க இயலாது, தனது வசமுள்ள சொத்துகளை விற்கும் சந்தர்ப்பமும், வண்டி வாகன அமைப்பில் இருந்து சிறு விரையங்களையும் செய்யும் சூழ்நிலையை உருவாக்க கூடும், மனதளவில் சிறு சிறு குழப்பங்களும் , சந்தேகமும் வந்து போகும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், நல்ல உறக்கம் அற்ற சூழ்நிலையை தர கூடும், குறிப்பாக தேவையற்ற மன கவலை தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மிகுந்த துன்பத்தை தரக்கூடும், இனி வரும் 18 மாதமும் மண்,மனை,வீடு, வண்டி வாகனம் சம்பந்தபட்ட விஷயங்களில் தனுசு லக்கினத்தை சார்ந்தவர்கள் அதிக கவனமாக இருப்பது மிகுந்த நலம் தரும், அதிக முதலீடு செய்யும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை, இல்லை எனில் தேவையில்லாத இழப்பை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

மகர லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகர ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது மகர லக்கினத்திற்கு ராகு 9ம் பாவகத்திலும், கேது 3ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

மகர லக்கினத்திற்கு 9ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு சிறந்த ஆன்மீக வெற்றியை வாரி வழங்குகிறார், குறிப்பாக பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகத்தை தருகிறார், சிறந்த ஆன்மீக பெரியவர்களின் சந்திப்பும், ஆசிர்வாதமும் மகர லக்கின்னதருக்கு சிறந்த நன்மைகளை வாரி வழங்கும், சிறந்த அறிவு திறன் உண்டாகும், எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான தீர்வு சொல்லும் புத்திசாலித்தனம் அதிகரிக்கும், சமுகத்தில் மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும், செய்யும் காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும், மக்களின் ஆதரவும் உதவியும் நிச்சயம் கிடைக்கும், சொந்த பந்தங்களின் நல்லாதரவு கிடைக்க பெறுவார்கள், இனி வரும் 18 மாதமும் ராகு பகவான் மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு 100% வெற்றியை தருகிறார்.

மகர லக்கினத்திற்கு 3ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றியை வாரி வழங்குகிறார், தன்னம்பிக்கை அதிகரிக்கும், சுய முயற்சியால் பல சாதனைகளை செய்யும் யோகம் உண்டாகும், கமிஷன் தரகு தொழில் செய்துவரும் அன்பர்களுக்கு மிகுந்த நன்மையை வாரி வழங்குகிறார், சிறு தொழில் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு மிகுந்த முன்னேற்றத்தை தரும் காலம் இது, குறுகிய காலத்தில் மிகுந்த லாபத்தை வாரி வழங்குவார், சிறு முதலீடுகள் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி தரும், வீடு கட்டும் யோகம் உண்டாகும், புதிய சொத்து சேர்க்கை வண்டிவாகன யோகமும் ஏற்ப்படும், முன்னோர்களின் சொத்துகள் தங்களுக்கு எதிர்பாராமல் கிடைக்கும், இதுவரை இருந்த பல சிக்கல்கள் சூரியனை கண்ட பனிபோல் மறையும், திருமணம் ஆகாத அன்பர்களுக்கு விரைவான திருமண யோகத்தை வாரி வழங்குகிறார், இனி வரும் 18 மாதமும் மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு யோக காலமே என்றால் அது மிகையில்லை.

மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிகுந்த லாபத்தையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை.

 குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் தனுசு லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் இதை போன்றே, யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் மகர லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 4



 சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

துலா லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது துலாம் லக்கினத்திற்கு ராகு 12ம் பாவகத்திலும், கேது 6ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

துலாம் லக்கினத்திற்கு 12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் துலாம் லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, முதலீடு செய்வதால் அதிக லாபத்தை தருவார், திடீரென நிலம் வீடு, வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை தருவார், எதிர்பாராத பதவி, மற்றும் திடீர் அந்தஸ்தை வாரி வழங்குகிறார், மேலும் இதுவரை உடல் ரீதியான பாதிப்பில் இருந்தவர்களுக்கு உடல் நிலை விரைவாக குணம் பெரும் வாய்ப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறார், வெளிநாடு சென்றுவரும் யோகம் தற்பொழுது ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு, வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கு திடீரென வேலைவாய்ப்பு அமைவதற்கு உண்டான சந்தர்ப்பம் வீடு தேடி வரும், இனி வரும் 18 மாதங்கள் ராகு பகவான் தங்களுக்கு மிகுந்த யோகத்தை 12ம் பாவக வழியில் இருந்து தருகிறார் என்பது மகிழ்ச்சியான விஷயமே.

துலாம் லக்கினத்திற்கு 6ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் துலாம் லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, மனோ ரீதியான தொந்தரவுகளை அதிகம் தருகிறார், தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாடு இழக்கும் சந்தர்ப்பங்கள் உண்டாகும், நினைக்கும் காரியங்கள் தடை ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, பணம் மற்றும் பொருள் சார்ந்த விஷயங்களில் சிறு இழப்பு ஏற்ப்படும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் உருவாகும் என்பதால் அதிக கவனமாக இருப்பது மிகுந்த நலம் தரும், வெளியூர் பயணங்களில் பணம் மற்றும் பொருள் விஷயங்களில் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், மற்றவரை நம்பி முதலீடு செய்யும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நல்லது இல்லை எனில் தேவையில்லாத பொருள் இழப்பு உண்டாகும்.

விருச்சிக லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம்ராசியான விருச்சிக ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது விருச்சிக லக்கினத்திற்கு ராகு 11ம் பாவகத்திலும், கேது 5ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

விருச்சிக லக்கினத்திற்கு 11ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, மிகுந்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்குகிறார், குறிப்பாக இனி வரும் 18 மாதங்களில் ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணமே இருக்கும் என்பதை மறுக்க இயலாது, தாங்கள் நினைக்கும் அனைத்தும் நடைபெறும், செய்ய வேண்டிய அனைத்து காரியங்களும் தங்கு தடையின்றி 100% சிறப்பாக நடைபெறும், எந்த ஒரு விஷயத்தையும் முற்போக்கு சிந்தனையுடன் அணுகுவது தங்களுக்கு மிகுந்த யோகத்தை பெற்று தரும், லாட்டரி, போட்டி, பந்தையங்கள், பங்கு வர்த்தகம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த லாபத்தை வாரி வழங்குகிறார் என்பது கவனிக்க தக்க விஷயம், இந்த ராகு கேது பெயர்ச்சி விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு 100% நன்மையை தருகிறார் என்பது உறுதி.

விருச்சிக லக்கினத்திற்கு 5ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, நல்ல ஆன்மீக வெற்றியை வாரி வழங்குகிறார், தன்னம்பிக்கை அதிகரிக்கும், இறை அருளின் கருணை பரிபூரணமாக கிடைக்க பெறுவீர்கள், குல தெய்வத்தின் பரிபூரண நல்லாசிகள் தங்களுக்கு இனி வரும் 18 மாத காலமும் நிறைவாக கிடைக்கும், அறிவு திறன் சிறப்பாக வேலை செய்யும், நல்ல நிம்மதியான வாழ்க்கை அமையும், இது வரை திருமணம் ஆகாத அன்பர்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமையும், சிறந்த ஆண் புத்திர சந்தானம் அமையும், குடும்பத்தில் மகிழ்சி பொங்கும், கலை துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலம் இது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல மாற்றங்களும், முன்னேற்றமும் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சியினால் அதிக லாபமும் அதிர்ஷ்டமும் பெரும் அன்பர்கள் இந்த விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களே என்றால் அது மிகையில்லை.

குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் துலா லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 6,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், இதை போன்றே யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் விருச்சிக லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 5,11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 13 ஆகஸ்ட், 2014

சுய ஜாதக ரீதியாக திருமணம் தாமதமாக காரணம் என்ன ?




பொதுவாக ஒருவரின் சுய ஜாதக அமைப்பில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகமும் கடுமையாக பாதிக்கப்படும் பொழுதே திருமணம் எனும் ஒரு சுப நிகழ்வு நடைபெறாமல் தாமதமாகும், அதிலும் சுய ஜாதகத்தில் ஆண் என்றாலும் சரி, பெண் என்றாலும் சரி எக்காரணத்தை கொண்டும் குடும்பம் மற்றும் களத்திர பாவகங்கள் பாதிக்க படாமல் இருப்பது திருமண வாழ்க்கையை சரியான வயதில் சீரும் சிறப்புமாக அமைத்து தரும்.

மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமான ரிஷபமும், களத்திர ஸ்தானமான துலாமும் பாதிக்க படாமல் இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை வாரி வழங்கும், மேலும் சிறப்பான மணமகனையோ, மணமகளையோ அமைத்து தரும் என்பது நிச்சயம்.

ஒருவேளை குடும்பம் மற்றும் களத்திர பாவகங்கள் பாதிக்க பட்ட போதிலும் இந்த இரண்டு பாவகங்களின் பலனை திருமண வயதில் நடைபெறும் திசை மற்றும் புத்தி ஏற்று நடத்தாமல் இருந்தால் ஜாதகருக்கு ஏதாவது ஒருவகையில் திருமணம் நடைபெற்று விடும், இதற்க்கு மாறாக திருமண வயதில் நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதிக்க பட்ட குடும்ப மற்றும் களத்திர பாவக பலனை ஏற்று நடத்தினால்,  ஜாதகரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்பு அதிகம், மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதக அன்பர்கள் பெரிய எதிர்பார்ப்புகளை தவிர்த்து, திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முன்வருவது சால சிறந்தது.

அல்லது தனது சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்களுக்கு அதிபதியாக வரும் கிரகங்களை ( இங்கு குறிப்பிடும் கிரகங்கள் சம்பந்தபட்ட பாவக ராசி அதிபதி அல்ல என்பதை கருத்தில் கொள்ளுங்கள் அன்பர்களே !) வழிபாடு செய்வதும், பாதிக்க பட்ட பாவகம் சார்ந்த  உறவுகளுக்கு நன்மை செய்வதும், அதன் வழியில் நடைபெறும் துன்பங்களில் இருந்தும், திருமண தடை அமைப்பில் இருந்தும் நன்மைகளை வாரி வழங்கும், குறிப்பாக திருமண தாமதத்தை தவிர்த்து விரைவில் திருமணம் நடைபெறும்.

உதாரணமாக :

கிழ்கண்ட ஜாதகத்தை சார்ந்தவருக்கு  வயது 30க்கு மேல் ஆகியும் திருமணம் நடைபெறவில்லை, என்ன காரணம் என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 4ம் பாதம் 

திருமணம் தாமதமாக காரணம் என்ன? என்பதை முதலில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.

1) குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் திடீர் இழப்பை தரக்கூடிய 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குடும்ப ஸ்தான அமைப்பை வெகுவாக பாதிக்கிறது.

2) களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதக ஸ்தானம் எனும் 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று களத்திர ஸ்தானத்தை வலுவாக 200% பாதிக்கிறது.

3) கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபமும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குடும்ப வாழ்க்கையை கேள்வி குறியாக மாற்றுகிறது.

4) கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் மட்டும் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோகத்தை வாரி வழங்குகிறது .

5) தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசையும் ( 22/03/2007 முதல் 22/03/2027 ) வரை 4,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருகிறது.


குறிப்பு : 

"குரு பார்த்தால் கோடி நன்மை"

இங்கே களத்திர பாவகத்தை "குரு பார்த்தால் கோடி நன்மை" என்பது பொய்யாகிறது, ஏனெனில் கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக வரும் குருபகவான் லக்கினத்தில் அமர்ந்து தானது கேந்திர ஸ்தானத்தை நேரெதிராக பார்வை செய்யும் பொழுது , தனது பாவகத்தை தானே கெடுத்து தீமை செய்கிறார் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம், இங்கே குரு பார்வை எவ்வளவு தீமை செய்கிறது, என்பது ஜாதகருக்கு இன்னும் திருமணம் ஆகாமல் தடை பெற்று கொண்டு இருப்பதை கவனத்தில் எடுத்துகொண்டாலே தெள்ள தெளிவாக புரிந்துகொள்ள இயலும்.

எனவே கோண வீடுகளான 1,5,9ம் பாவகதில் விழும் குரு பார்வை மட்டுமே நன்மை தரும், கேந்திர வீடுகளை பார்க்கும் குருபகவான் கேந்திர பாவகங்களுக்கு தீமையான பலன்களை தருவார் என்பது உறுதியாகிறது, மேலும் குரு பார்வை எல்லா பாவகங்களுக்கும் நன்மை செய்யும் என்பது உண்மைக்கு புறம்பானது என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, இதை பற்றி வேறு ஒரு பதிவில் காண்போம்.

எனவே குடும்ப ஸ்தானம் பாதிப்பதால், ஜாதகர் தனது வாழ்க்கைக்கு உகந்தவர் இவர்தான் என்று முடிவெடுக்கும் தகுதியை இழந்து விடுகிறார், மேலும் ஜாதகர் விரும்பு நபரையும் திருமணம் செய்துகொள்ள இயலாது ஏனெனில் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகர் விரும்பும் நபர் இவரை உண்மையாக நேசிக்க வாய்ப்பில்லை, அவரை ஜாதகர் கட்டாயத்தின் பேரில் திருமண செய்தாலும் ஜாதகருக்கு 200% தீமையை தருவார், திருமண வாழ்க்கை நீடிக்காது.

கால புருஷ தத்துவத்திற்கு குடும்ப ஸ்தானம் எனும் ரிஷபமும் பாதிக்க படுவதால் ஜாதகர் தான் தேர்ந்தெடுக்கும் திருமண வாழ்க்கையில் மன நிம்மதி இழப்பு என்ற ஒரு விஷயத்தை தவிர வேறு எதையும் நுகர இயலாது, தன்னிடம் உள்ள சேமிப்பு மற்றும் பணம் சொத்து மதிப்பு மரியாதை அனைத்தையும் இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்.

இந்த ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானம் எனும்  துலாம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான ஒரு விஷயம், இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது ஜாதகரை யார்  அதிகமாக நேசிக்கின்றாரோ அவரை முழுமனதாக ஏற்றுக்கொண்டு, மணவாழ்க்கையை சிறப்பாக  அமைத்துகொள்வது சால சிறந்தது.

மேற்கண்ட ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகம் மட்டும் சிறப்பாக இருப்பதால் சம்பந்த பட்ட ஜாதகரை விரும்பி வருபவரை ஏற்றுகொள்வது நல்லது என்று பரிந்துரை செய்வதிற்கு காரணம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகம் மிகவும் வலிமையாக இருப்பதால் ஜாதகரை விரும்பி வரும் அன்பரே! ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையாக வருவார், நல்ல அதிர்ஷ்ட வாழ்க்கையையும், சிறப்பான எதிர்காலத்தையும் அமைத்து தருவார். ஆகவே ஜாதகர் இதை கருத்தில் கொண்டு தனது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொள்வது சகல நிலைகளில் இருந்து நன்மை பயக்கும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகருக்கு பாவக வழியில் 2ம் பாவகத்திற்கு அதிபதியான புத பகவானுக்கும் , 7ம் பாவகத்திற்கு அதிபதியான ராகு பகவானுக்கும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் பாவகதிர்க்கு அதிபதியான சுக்கிர பகவானுக்கும் ஜோதிடதீபம் பரிந்துரை செய்யும் முறையான பரிகாரங்களை செய்து நலம் பெறுங்கள்.

மேலும் ஜாதகர் தனது தாயாருக்கு தேவையான  அனைத்து விஷயங்களையும் அவரது மனம் நோகாமல், செய்து கொடுப்பது அருமையான குடும்ப வாழ்க்கையை அமைத்து தரும். தனது முன்னோர்களுக்கு  செய்யவேண்டிய வழிபாடு மற்றும் இதர விஷயங்களை செய்வது தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரியவர்களிடம் நல்லாசிகளை பெறுவது அருமையான வாழ்க்கை துணையை அமைத்து தரும், எக்காரணத்தை கொண்டும் ஜாதகர் மற்றவரிடம் பேசும் பொழுது அதிக கவனமாக இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மை பயக்கும்., மேற்க்கண்டவை அனைத்தும் ஜாதகர் கடைபிடிக்கும் பொழுது பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்த்து யோக பலன்களை வாரி வழங்கும் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இரட்டையர்கள் ஜாதகத்தில் மாறுபடும் பாவக பலன்கள் !




 சுய ஜாதக ரீதியாக பாவக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையின் அடிப்படையில், தற்பொழுது நடைபெறும் திசை புத்தி ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மைக்கு ஏற்ப நன்மை தீமை பலன்களை நிர்ணயம் செய்யலாம், ஒட்டி பிறக்கும் இரட்டையர்களின் ஜாதகத்தில் ஜாதகமும் கிரக அமைப்புகளும் பொதுவாக அமைந்த போதிலும், இருவரின் குண நலன்கள், செயல்பாடுகள் நடைபெறும் பலாபலன்கள் வேறுபடுவதில் நிறைய வித்தியாசங்கள் உண்டு, இதை தெளிவாக தெரிந்து கொள்ள பாரம்பரிய ஜோதிட முறையில் வாய்ப்பு குறைவு, ஜாதக கணித முறையில் பெரிய வித்தியாசத்தை நாம் காணுவதற்கு சிரமமே உண்டாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

 கிழ்கண்ட இரட்டையர்களின் ஜாதக அமைப்பை பாரம்பரிய ஜோதிட கணிதத்தில் காணும்பொழுது பெரிய வித்தியாசங்களை காண இயலாத பொழுதும், நமது ஜோதிட கணித முறையில் பாவக வலிமைகள், பலன்கள் துல்லியமான வித்தியாசங்களை தெளிவாக தெரிந்துகொள்ள இயலும், இருவரின் ஜாதக அமைப்பில் பாவகங்களின் தொடர்புகளையும் வழங்கும் பலன்களையும் இனி காண்போம்!

உதாரண ஜாதகம் 1


பிறந்த தேதி : 14/12/1992
பிறந்த நேரம் : மாலை 04:16

பாவக தொடர்பு 

1) 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2) 2,6ம் வீடுகள் களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3) 3,8,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4) 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5) 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6) 9ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.

 தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை (15/10/2002 முதல் 15/10/2022 வரை) ஜாதகருக்கு 2,6ம் வீடுகள் களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2மற்றும் 6ம் பாவக வழியில் இருந்து நன்மையான பலன்களையும்,1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1மற்றும் 7ம் பாவக வழியில் இருந்து 200% தீமையான பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது.

 மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகர்  2,4,5,6,10ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 1,3,7,8,9,11,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் அனுபவிக்கும் தன்மை உண்டாகிறது, இதில் ஜாதகர்  2,4,5,6,10ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் வெற்றியையும், 1,3,7,8,9,11,12ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் தடையும் தொந்தரவுகளையும் எதிர்பாராத தோல்விகளையும் வாரி வழங்கும்.

 எனவே நன்மை தரும் பாவக பலன் நடைபெறும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொண்டும், தீமை தரும் பாவக பலன்கள் நடைபெறும் பொழுது எச்சரிக்கையாகவும் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த யோகத்தை பெறுவதற்கு அடித்தளமான அமையும்.

உதாரண ஜாதகம் 2


பிறந்த தேதி : 14/12/1992
பிறந்த நேரம் : மாலை 04:17

பாவக தொடர்பு 

1) 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2) 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3) 3,8,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4) 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5) 5,9ம் வீடுகள் பூர்வ எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6) 6ம் வீடு களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

 தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை (10/10/2002 முதல் 10/10/2022 வரை) ஜாதகருக்கு 6ம் வீடு களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 6ம் பாவக வழியில் இருந்து தீமையான பலன்களையும், 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1மற்றும் 7ம் பாவக வழியில் இருந்து 200% தீமையான பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது.

 மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகர்  2,4,10ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 1,3,5,6,7,8,9,11,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் அனுபவிக்கும் தன்மை உண்டாகிறது, இதில் ஜாதகர்  2,4,10ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் வெற்றியையும், 1,3,5,6,7,8,9,11,12ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் தடையும் தொந்தரவுகளையும் எதிர்பாராத தோல்விகளையும் வாரி வழங்கும்.

 எனவே நன்மை தரும் பாவக பலன் நடைபெறும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொண்டும், தீமை தரும் பாவக பலன்கள் நடைபெறும் பொழுது எச்சரிக்கையாகவும் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த யோகத்தை பெறுவதற்கு அடித்தளமான அமையும்.

 ஆக ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறந்த இந்த இரட்டையர்களுக்கு ஜாதக பாவக பலன்கள் தொடர்பு பெரும் அமைப்பில் வித்தியாசப்படுகின்றது, மேலும் தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஒருவருக்கு குறிப்பிட்ட பாவக வழியில் நன்மை தீமை பலன்களை கலந்தும், ஒருவருக்கு தீமையான பலன்களை மட்டுமே நடத்துகிறது, எனவே ஜாதகத்தில் பிறந்த நேரம் என்பது நிமிடம் மட்டுமல்ல சில நொடிகள் வித்தியாசம் பெரும் பொழுது ஜாதக பலன்கள் பாவக பலன்கள் மாறுபடும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து.

 இதனால் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் ஆனாலும் அவர்களின் குணம், செயல்பாடுகள், அறிவாற்றல், சுய விருப்பங்கள், ஆர்வம், உடலின் தன்மைகள், நடைபெறும் நன்னமை தீமைகள், கல்வி, வேலை, தொழில் போன்றவற்றில் வித்தியாசம் நிச்சயம் ஏற்ப்படும், ஒருவரின் ஜாதகத்தை போன்றே மற்ற ஒருவரது ஜாதகம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லவே இல்லை என்பதே உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 3




சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

சிம்ம லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது சிம்ம லக்கினத்திற்கு ராகு 2ம் பாவகத்திலும், கேது 8ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

 சிம்ம லக்கினத்திற்கு 2ல் சஞ்சாரம் செய்யும் ராகு சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு கை நிறைவான வருமான வாய்ப்பை வாரி வழங்குகிறார், இனிவரும் 18 மாதங்கள் தொழில் ரீதியான வருமான வாய்ப்புகள் வந்து குவியும், எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெரும், வாக்கு பலிதம் உண்டாகும், சொன்ன வாக்கை காப்பாற்றும் நிலை உண்டாகும், சிலருக்கு திடீரென திருமணம் அமைந்து அமைதியான குடும்ப வாழ்க்கை கிட்டும், இவரின் பேச்சுக்கு யாவரும் கட்டுபடுவார்கள், ராகு மண் தத்துவத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த 18 மாதங்கள், பொருள் வரவு வண்டி வாகன யோகம், வீடு கட்டும் யோகம், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் என்ற வகையில் நன்மைகளை ராகு பகவான்  வாரி வழங்குகிறார்.

 சிம்ம லக்கினத்திற்கு 8ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் சிம்மலக்கினதாருக்கு மன நிம்மதியை வலுவாக பதம் பார்க்க கூடும், தேவையில்லாத கவலை, அலைச்சல், பயனில்லாத காரியங்களை செய்து அதன் மூலம் மன நிம்மதி இழப்பையும், வீண் விரையங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை ஏற்ப்படுத்துவார், தன்னம்பிக்கை குறையும், எந்த ஒரு விஷயத்திலும் அக்கறையும் ஆர்வமும் இல்லாமல் வெகுவாக மனோ ரீதியான பாதிப்பிற்கு உட்படுத்துவார், எனவே இனி கேது மீனத்தில் சஞ்சாரம் செய்யும் 18 மாதங்களும் சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்கள், மற்றவர்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்ப்பது, மன நிம்மதிக்கு நன்மை பயக்கும், போதை வஸ்துக்களை தவிர்ப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்  திடீர் இழப்பு தவிர்க்கலாம்.

கன்னி லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான கன்னி ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது கன்னி லக்கினத்திற்கு ராகு 1ம் பாவகத்திலும், கேது 7ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

 கன்னி லக்கினத்திற்கு லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு மிகுந்த யோகத்தை இனி வரும் 18 மாதங்களுக்கு வாரி வழங்குகிறார் என்பதில் ஐயம் இல்லை, மேலும் சிறப்பான உடல் நலம் மற்றும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பை வாரி வழங்குகிறார், வெளியூர் மற்றும் வெளிநாடுகள் சென்றுவரும் யோகத்தை இனி வரும் காலங்களில் கன்னி லக்கினத்தை சார்ந்தவர்கள் தடையின்றி பெறுவார்கள், மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கு இது உகந்த காலமாக கருதலாம், உடல் நலம் வெகு விரைவில் குணம் பெரும், வங்கி கடன் பெறுவதற்கும், கடன் பெற்று தொழில் துவங்க சரியான காலம் இது மேலும் மற்றவர்களின் உதவி எதிர்பாராமல் தேடிவரும் என்பது குறிப்பிட தக்கது பொருளாதார ரீதியான வெற்றிகளை குவிக்கும் நேரம் என்றால் அது மிகை இல்லை.

 கன்னி லக்கினத்திற்கு களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேதுபகவான் வாழ்க்கை துணை வழியில் இருந்து சில இன்னல்களை தரக்கூடும், தேவையற்ற விஷயங்களுக்கு வீண் பிடிவாத தன்மையை அதிகமாக தரக்கூடும், முடிந்து போன விஷயங்களுக்காக சச்சரவில் ஈடுபட்டு மன நிம்மதியை வெகுவாக கெடுத்து கொள்ளும் தன்மையை தர கூடும், இருப்பினும் சிறந்த புண்ணிய திரு தளங்களுக்கு சென்றுவரும் யோகம் கிட்டும், சிறந்த ஆன்மீக அன்பர்களின் நட்புறவும், ஆன்மீக பெரியோர்களின் நல்லாசியும் கிடைக்கும், நண்பர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காமல் சில தோல்விகளை சந்திக்க வேண்டி வரும், எனவே கன்னி லக்கினத்தை சார்ந்தவர்கள் களத்திற ஸ்தான அமைப்பில் இருந்து சற்று கவனமாக இருப்பது நலம் தரும்.

குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் சிம்ம லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், இதை போன்றே யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் கன்னி லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696



திங்கள், 21 ஜூலை, 2014

மிதுன லக்கினம் - லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் !




கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடான மிதுன ராசியை லக்கினமாக கொண்ட ஜாதகருக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது, ஜாதகர் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

மிதுனம் கால புருஷ தத்துவத்திற்கு 3ம் ராசியாகவும் உபய காற்று தத்துவ ராசியாகவும் அமைவதால் ஜாதகரின் அறிவாற்றல் சிறந்து விளங்கும், ஜாதகர் தனது சகோதர வழியில் இருந்து 100 சதவிகித நன்மைகளை பெறுபவர் என்பது உறுதியாகிறது, எடுக்கும் முயற்சிகளில் எவ்வித இடையூறும் இன்றி பல வெற்றிகளை குவிப்பார்கள், தன்னம்பிக்கையான மன நிலை ஜாதகருக்கு பிறவியிலேயே அமைந்திருக்கும், எவ்வித சந்தர்ப்பத்தையும் மிகவும் சிறப்பாக கையாளும் வல்லமை பெற்றவர்கள்.

 மிதுன லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் சிறப்பாக விளங்கும் துறைகள் என்று எடுத்து கொண்டால், கல்வி துறை மற்றும் வியாபாரம் மற்றும் தொழில் துறை இது சார்ந்த தொழில்களில் ஜாதகர் பன்மடங்கு யோகங்களை அனுபவிக்கும் தன்மையை பெறுவார், ஜாதகர் செய்யும் சிறு வியாபாரமும் குறுகிய காலத்தில் வளர்ச்சி பெரும், ஜாதகர் அணுகும் வியாபார நுணக்கங்கள் எவராலும் கண்டுபிடிக்க இயலாது, தனிப்பட்ட விதத்தில் ஜாதகரின் தொழில் ரகசியங்கள் அமைந்திருக்கும்.

ஜாதகரின் உடல் நிலை மற்றும் மன நிலை மிகவும் சிறப்பாக வைத்திருக்கும் வித்தையை பிறவியிலேயே கற்று உணர்ந்திருப்பார், குறிப்பாக யோகம் , தியானம் போன்ற விஷயங்கள் ஜாதகருக்கு இயற்கையாகவே சித்திக்கும், எவ்வித சூழ்நிலையிலும் சுய கௌரவத்தை விட்டு கொடுக்காமல் வாழும் சிறந்த மனிதர்கள் என்றால் அது மிகையில்லை, தன்னை சார்ந்தவர்களின் வழ்க்கையிலூம் முன்னேற்றம் காண விரும்பும் மன நிலையை இயற்கையிலேயே பெற்றிருப்பர்கள், இதன் மூலம் இவர்களின் முன்னேற்றமும் அமைந்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு லக்கினம் மிக வலிமையாக அமையும் பொழுது, சூது லாட்டரி, குதிரை பந்தையம், விளையாட்டில் வெற்றி, போட்டி பந்தையங்களில் வெற்றி என்ற அமைப்பில் மிகுந்த யோகத்தை தரும், எதிர்பாராத வகையில் லாபத்தை வாரி வழங்கும், வட்டி தொழில், கமிஷன் தொழில் ஆகியவற்றில் மிகவும் திறமையாக செயல்பட்டு வருமானம் காணும் அன்பர்கள் இவர்களே என்றால் அது மிகையில்லை, தன்னிடம் உள்ள செல்வத்தை பன்மடங்கு பெருக்கும் வித்தை அறிந்தவர்கள், பண விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்ளும் மன நிலையை தரும்.

மிதுன லக்கினம் வலிமை பெற்று அமரும் பொழுது ஜாதகரின் கற்பனை ஆற்றலும், சிந்தனை ஆற்றலும் பன்மடங்கு வேலை செய்யும், சிறந்த கண்டுபிடிப்புகள் மற்றும் மனிதகுலம் சிறப்பாக வாழ தேவையான அறிய பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரர்கள் இவர்களே என்றால் அது மிகையில்லை, இவர்கள் கண்டுபிடித்த சில பொருட்கள் மனிதர்களின் உயிரை காக்கும் வல்லமை கொண்டவை, மேலும் பல சிரமமான வேலைகளை மிக எளிதாக செய்யும் பல கண்டுபிடிப்புகளை இந்த உலகத்திற்கு கொடுத்தவர்களும் மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களே.

  எந்த ஒரு சூழ்நிலையிலும் மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களை ஏமாற்ற இயலாது, மேலும் அது போன்ற சந்தர்பங்களை மிக எளிதாக கையாண்டு தவிர்த்துவிடும் தன்மை கொண்டவர்கள், இவர்கள் ஒருவரை ஏமாற்ற முடிவு செய்துவிட்டால் அதை தடுக்க கடவுள் வந்தாலும் இயலாது, இந்த அமைப்பு சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெற்று 7ம் பாவகம் பாதக ஸ்தானதுடன் தொடர்பு பெரும் பொழுது மட்டுமே நடைமுறைக்கு வரும்.

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் பாவகமாக வரும் மிதுனத்தை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது, ஜோதிடம் மற்றும் கணிதம் மிகவும் சிறப்பாக வரும், உடல் வலிமையை விட ஜாதகருக்கு மன வலிமையையும் அறிவாற்றலுமே சிறந்து விளங்கும், பல சதிவேலைகளின் மர்மங்களை இவர்கள் மிக எளிதில் கண்டுணர்ந்து தடுத்தது நிறுத்தும் வல்லமை பெற்றவர்கள், வியாபர துறையிலே கொடிகட்டி பறக்கும் பல அன்பர்கள் இந்த மிதுன லக்கினம் வலிமை பெற்றவர்களே என்றால் அது மிகையில்லை.

மிதுன ராசியை லக்கினமாக கொண்டு லக்கினம் வலிமை பெரும் அமைப்பை பற்றி  இனி பார்ப்போம் மிதுன  ராசியை லக்கினமாக பெற்றவர்களின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு 1,2,3,4,5,7,9,10 பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும், 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து தீய பலன்களை அனுபவிக்கும் நிலை உண்டாகும். பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் சம்பந்தபட்ட பாவக  வழியில் இருந்து 200 மடங்கு தீய பலன்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவார்.

ஆக மிதுன லக்கினமாக உள்ள ஜாதகருக்கு லக்கினம் 6,8,12 பாவகத்துடனும், பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது மட்டுமே அதிக தீமைகளை செய்யும் இலக்கின வழியில் இருந்து, மற்ற பாவகங்களான 1,2,3,4,5,7,9,10 ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது மிகுந்த நன்மையே தரும் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும்.

குறிப்பு : 

 லக்கினம் எந்த பாவகத்துடன் தொடர்பு பெறுகிறது என்பதை ஜாதகரின் சுய ஜாதகத்தை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 2 ஜூலை, 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 2



 சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

மிதுன லக்கினம் : 


 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மூன்றாம் ராசியான மிதுனத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது மிதுன லக்கினத்திற்கு ராகு 4ம் பாவகத்திலும், கேது 10ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.


 மிதுன லக்கினத்திற்கு 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் புதிய சொத்து, வண்டி, வாகனம், நில புலன்கள், இடம் வாங்கும் யோகத்தை தருவார், மேலும் கன்னி உபய மண் தத்துவ ராசி என்பதால் மிதுன இலக்கின அமைப்பை சார்ந்தவர்களுக்கு உடல் நிலை மிகவும் சிறப்பாக அமையும், உடல் ரீதியான பிரச்சனைகளில் வருத்தபடுவோர்களுக்கு, நல்ல ஆரோக்கியத்தையும், உடல் நலனில் முன்னேற்றத்தையும் வழங்குவார், வட்டி, வரவு செலவு, வங்கிகள் மூலம் ஆதாயம், கடன் கொடுப்பது, பெறுவது ஆகியவற்றால் நன்மை என்ற வகையில் மிதுன லக்கினத்தாருக்கு யோகத்தை வாரி வழங்குவார்.


இதுவரை சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்கு திடீர் என வீடு கட்டும் யோகத்தை வழங்குவார், புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை தருவார், போக்குவரத்து தொழில் செய்வோர்களுக்கு தமது தொழில் எதிர்பாராத முன்னேற்றத்தை பெறுவதை காணலாம், குறிப்பாக சரக்கு வாகனம் வைத்திருப்போருக்கு திடீர் முன்னேற்றம் உண்டாகும், வண்டி வாகன தொழில் செய்வோருக்கு அபரிவிதமான தொழில் விருத்தியை ராகு பகாஅன் வழங்குவார் இனி வரும் 18 மாதங்களுக்கு என்றால் அது மிகையில்லை, மேலும் சிமெண்ட்,செங்கல்,ஜல்லி,பெய்ன்ட் போன்ற பொருட்களை வியாபாரம் செய்பார்களுக்கும், கட்டிட தொழில் செய்பவர்களுக்கும் அபரிவிதமான வளர்ச்சியை தங்கு தடையின்றி தருவார்.

 மிதுன லக்கினத்திற்கு 10ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து  மன நிம்மதி இழப்பை தருவார், எதிர்பாரத வகையில் மற்றவர் செய்யும் தவறுகளுக்கு தான் பொறுப்பு ஏற்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவர், மேலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பது அரிது, தனக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் பகைமை பாராட்டாமல் இருப்பது சால சிறந்தது, இல்லை எனில் தேவையில்லாத மன கசப்பு ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, இனி வரும் 18 மாதங்களும் மிதுன லக்கினத்தை சார்ந்தவர்கள் மற்றவர்களிடம் பணிபுரியும் அமைப்பில் இருப்பின் அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நலம் தரும்.

 மேலும் தமது கௌரவத்திற்கு இழுக்கு ஏற்ப்படும் தன்மை வரக்கூடும் என்பதால் மிதுன லக்கினத்தை சார்ந்தவர்கள், எதிர் பாலினரிடம் அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நலம் தரும், மேலும் பொது காரியங்களில் முன் நிற்ப்பதை தவிர்ப்பது ஜாதகரின் கௌரவத்திற்கு எவ்வித பங்கத்தையும் விளைவிக்காது, ஆக மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு கேதுபகவன் எதிர்வரும் 18 மாதங்கள் தீமையான பலன்களை தரக்கூடும் என்பதால் அதிக கவனமுடன் இருப்பது நலம் தரும்.

கடக லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடகத்தை   லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! கடக லக்கினத்திற்கு 3ல் ராகுவும், 9ல் கேதுவும் இனி வரும் 18 மாதங்கள் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர், இந்த 18 மாதங்களிலும் கடக இலக்கின ஜாதகர்களுக்கு எவ்வித யோக அவயோக  பலன்களை வழங்க இருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

 தற்பொழுது பெயர்ச்சி பெற்றிருக்கும் ராகு கேது எனும் சாய கிரகங்களால் அதிக அளவிற்கு யோக பலன்களை அனுபவிக்கும் மற்றொரு லக்கினம் இந்த கடக லக்கினத்தை சார்ந்தவர்களே என்றால் அது மிகை இல்லை, குறிப்பாக லக்கினத்தில் இருந்து 3ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடக  லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு எடுக்கும் காரியங்களில் வெற்றியையும், நினைத்த எண்ணங்களை வெற்றிகரமாக முடிக்கும் வாய்ப்பையும் வாரி வழங்குவார், எதிர்பாராத லாபங்களை வாரி வழங்குவார், முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு முயற்ச்சிக்கும் காரியங்களில் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை வாரி வழங்குவார்.

 சகோதர வழியில் இருந்து நல்ல ஆதரவினை  பெரும் யோகம் உண்டாகும், கமிஷன் தரகு தொழில் செய்வோருக்கு இது ஒரு பொற்காலமாக கருதலாம், வீரியமிக்க செயல்களால் மக்களால் போற்ற படுவார்கள், விளையாட்டு வீரர்கள் மிகப்பெரிய வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் பெறுவார்கள், தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஏஜென்சி எடுத்து நடத்தும் அன்பர்களுக்கு செல்வ செழிப்பை வாரி வழங்கும், எதிரிகளை வெல்லும் ஆற்றல் அபரிவிதமாக உண்டாகும், பயணங்களினால் மிகப்பெரிய ஆதாயங்களை மிதுன  லக்கினத்தை சார்ந்தவர்கள் பெறுவார்கள் என்பது உறுதி.

 9ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மதிப்பிற்கு உரிய செயல்களையும், புகழ் மிக்க பொறுப்புகளையும் வாரி வழங்குவார், வெகுமதி கெளரவம் சமூக அந்தஸ்து என்ற வகையில் மிகுந்த நன்மைகளையும், தொழில் துறையில் நல்ல வளர்ச்சியையும் வாரி வழங்குவார், ஆன்மீகத்தில் கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இனி வரும் 18 மாத காலமும் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கும், குறிப்பாக இதுவரை செல்ல இயலாத புண்ணிய திரு தளங்களுக்கு சென்று வரும் யோகத்தை வாரி வழங்கும், ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் குரு மகான்களின் தரிசனமும், ஆசிர்வாதமும் ஒருங்கே கிடைக்கும் யோகம் உண்டாகும்.

 மேலும் கடக லக்கினத்தை சார்ந்தவர்களின் அறிவாற்றலும், சிந்தனை திறனும் கேது பகவானால் பன்மடங்கு உயர்ந்து நிற்கும், எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு சொல்லும் அளவிற்கும் தனி திறமையும், சமயோசித புத்திசாலிதனத்துடன் விளங்கும் யோகத்தை கேது பகவான் வாரி வழங்குவார், நல்ல ஆரோக்கியம் விரைவாக முடிவெடுக்கும் தன்மை, பல துறைகளில் ஆராய்ச்சி, உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி கல்விகளில் தேர்ச்சி, இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம், புதிய கண்டுபிடிப்பு, வெளிநாடுகள் செல்லும் யோகம், புதை பொருட்கள் மூலம் லாபம், லாட்டரியில் அதிர்ஷ்டம் என்ற வகையில் நன்மையை வாரி வழங்குகிறார்.

குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் மிதுன  லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், இதை போன்றே யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் கடக லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696