வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கபட்டு இருந்த போதிலும் ஜாதகர், நன்மையான பலன்களை அனுபவிப்பது எப்படி ?



 இது ஒரு சிறந்த கேள்வியாக ஜோதிடதீபம் கருதுகிறது, பொதுவாக எந்த ஒரு விஷயமும் சரி, யோக அவயோக பலன்களும் சரி சுய ஜாதக விதிகளுக்கு உட்பட்டே நடைபெறும், சுய ஜாதகத்தில் இல்லாத ஒன்றை நாம் எந்த விதத்திலும் அனுபவிக்க இயலாது, உதாரணமாக ஒரு அவயோக ஜாதகம் எக்காரணத்தை கொண்டும் ராஜ யோக பலன்களை அனுபவிக்க இயலாது, அதேபோல் ராஜயோக ஜாதகம் பெற்ற ஒருவரை, அவயோக பலன்களை அனுபவிக்க வைக்க இயலாது, தாங்கள் கூறியது போல் சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கபட்டு இருக்கும் ஒருவர் எந்த காலத்திலும் யோக பலன்களை அனுபவிக்க இயலாது.

 சம்பந்தபட்ட ஜாதகத்தில் ஏதாவது ஒரு பாவகம் மிக வலிமையுடன் இருக்கும், அந்த வலிமை பெற்ற பாவகத்தின் பலனை தற்பொழுது நடைபெறும் திசை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது முக்கியம் அல்ல, நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் மிகுந்த யோக பலன்களை, நடைமுறையில் அனுபவிக்க இயலும், இதை கிழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு விளக்கமாக காணலாம் அன்பர்களே !

உதாரண ஜாதகம் 1



 மேற்கண்ட மீன இலக்கின ஜாதகருக்கு

1) 1,3,5,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது, எனவே மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் 200 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்,.

2) 4,8,12ம் விடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து 60 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

3) 2,6ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் வீடு பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து முறையே ஜாதகர் 30 சதவிகிதம் மற்றும் 60 சதவிகித யோக பலன்களை அனுபவிக்க இயலும், 

4) 11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 100 சதவிகித யோக பலன்களை அனுபவிக்க வைக்கும்.

இது மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் நிலை, தற்பொழுது நடைபெறும் திசை ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே, நடைபெறும் திசை ஜாதகருக்கு யோக பலன்களை வழங்குமா ? அவயோக பலன்களை வழங்குமா ? என்பது தெளிவாக தெரியும், தற்பொழுது ஜாதகருக்கு சுக்கிர திசை ( 28/05/2012 முதல் 28/05/2032 வரை ) நடைபெறுகிறது.

 இந்த சுக்கிர திசை ஜாதகருக்கு எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை கவனிக்கும் பொழுது சுக்கிரன், தசா என்ற அமைப்பில் இருந்து 1,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருகிறார், எனவே ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை பாதக ஸ்தான பலனை தருகிறது என்பது உறுதியாகிறது, மேலும் பாதக ஸ்தான பலனை எந்த எந்த வீடுகள் வழியில் இருந்து அனுபவிக்கிறார் என்பதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது.

1ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகரின், வளரும் சூழ்நிலை அமைப்பிலும், உடல் ரீதியான அமைப்பிலும் பல எதிர்ப்புகளையும், தொந்தரவுகளை எதிர்கொள்ள வைக்கும், ஜாதகரின் பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வாய்ப்பில்லை, நல்ல நண்பர்கள் சேர்க்கையும் ஜாதகருக்கு அமையாது, ஜாதகரே தனது வாழ்க்கையை கெடுத்து கொண்டு தன்னை சார்ந்தவருக்கும் துன்பத்தை தருவார்.7ம் பாவகம் உபய மண் தத்துவம் என்பதால் உடல் நிலை பாதிப்பும், பொருள் இழப்பும் தவிர்க்க இயலாது.

5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகரின் பூர்வீகம் எதுவோ? அங்கு ஜீவனம் செய்ய இயலாத சூழ்நிலையை தரும், குறிப்பாக எல்லை கடந்து பரதேச ஜீவனத்தை மேற்கொள்ள வைக்கும், மேலும் ஜாதகருக்கு சுய அறிவும் வேலை செய்யாது, நல்லவர்  சொல் பேச்சும் கேட்க மாட்டார், 5ம் பாவகம் பாதிக்க படுவது ஜாதகருக்கு சிந்தனை ஆற்றல் மற்றும் அறிவு திறன் போன்ற விஷயங்களை வெகுவாக பாதிக்க வைக்கும், இறை அருளின் கருணையை பெற இயலாது, ஜாதகருக்கு உதவ எவரும் முன்வரமாட்டார்கள்.

9ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகரின் செயல்கள் அனைத்தும், மற்றவர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகும், தேவையில்லாமல் மற்றவரிடம் அவ பெயரை சம்பாதித்து கொடுக்கும், மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்து தனது பெயரை கெடுத்து கொள்ளும் சம்பவங்களும் உருவாகலாம், தனிப்பட்ட  வாழ்க்கையிலும், நண்பர்கள் அமைப்பில் இருந்தும், பொது வாழ்க்கை சமுக அமைப்பில் இருந்தும், ஜாதகருக்கு கடுமையான எதிர்ப்புகளும், விமர்சனங்களுமே தொடர்ந்து வரும்.

ஆக ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை நிறைய எதிர்ப்புகளை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போடும் வாய்ப்பை தருகிறார், சுய ஜாதகத்தில் 11ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் சமாளித்து, வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிறது.

உதாரண ஜாதகம் 2


மேற்கண்ட துலா இலக்கின ஜாதகிக்கு 

1) 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து, ஜாதகிக்கு 200 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

2) 2ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து, ஜாதகிக்கு 60 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

3) 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 30 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

4) 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 30 சதவிகித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

5) 4,8ம் வீடுகள் குடும்ப  ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 60 சதவிகித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

6) 10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 30 சதவிகித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

 இது மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் நிலை, தற்பொழுது நடைபெறும் திசை ஜாதகிக்கு எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே, நடைபெறும் திசை ஜாதகிக்கு யோக பலன்களை வழங்குமா ? அவயோக பலன்களை வழங்குமா ? என்பது தெளிவாக தெரியும், தற்பொழுதுஜாதகிக்கு ராகு திசை ( 29/01/2010 முதல் 29/01/2028 வரை ) நடைபெறுகிறது, இந்த ராகு திசை ஜாதகிக்கு எந்த பாவக  பலனை ஏற்று நடத்துகிறது என்று கவனிக்கும் பொழுது ராகு, புத்தி என்ற அமைப்பில் நின்று 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசையை ராகு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது எனவே ஜாதகி 3,9ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை பெறுகிறார்.

3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகளில் இருந்து வெற்றி, போட்டி பந்தயங்களில் வெற்றி, தேர்வில் வெற்றி, மக்கள் செல்வாக்கு, நினைத்ததை அடையும் யோகம், நல்ல ஆரோக்கியமான உடல் நிலை அமைப்பு, தன்னம்பிக்கையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் மனபக்குவம், பலமுறை சிந்தித்து செயல்படும் யோகம் என்றவகையில் மிகுந்த யோக பலன்களை 3ம் பாவக வழியில் இருந்து தருகிறது.

9ம் பாவக வழியில் இருந்து சமுதாயத்தில் நல்ல பெயர், அந்தஸ்து, சுய கெளரவம், சுய மரியாதையுடன் வாழும் யோகத்தை தருகிறது, உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியில் மிகப்பெரிய வெற்றி, தான் கற்ற கல்வியினால் யோக வாழ்க்கை, பெயரரும் புகழும் கிடைக்கும் யோகம், தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி என்றவகையில் நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு  இருக்கிறது, மேலும் ராகு திசைக்கு அடுத்து வரும் குரு திசையும் 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது குரு திசையிலும் மேற்கண்ட யோக பலன்களையே ஜாதகிக்கு தரும் என்பது உறுதியாகிறது.

இந்த இரண்டு ஜாதகத்திலும் 1ம் உற்பட சில பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கபட்டு இருந்த போதிலும், தற்பொழுது நடைபெறும் திசை வழங்கும் பலன்கள் மாறுபட்டு ஒருவருக்கு தீமையான பலன்களையும், ஒருவருக்கு நன்மையான பலன்களையும் தருகிறது, இதில் முதல் உதாரண ஜாதகத்தில் நடைபெறும் திசை தீமையான பலன்களையும், இரண்டாம் உதாரண ஜாதகத்தில் நடைபெறும் திசை மிகுந்த நன்மையான பலன்களையும் தருகிறது, எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கபட்டு இருந்த போதிலும், நடைபெறும் திசை நல்ல நிலையில் இருக்கும் பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு நன்மையான பலன்களே நடைபெறும்.

ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் வலிமை பெற்று இருந்த போதிலும், நடைபெறும் திசை பாதிக்கபட்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் எவ்வித நன்மையையும் பெற இயலாது, சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களையே அனுபவிக்க வேண்டிவரும், மேற்கண்ட உதாரண ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசை சுக்கிரன் திசை என்றாலும், அவர் ஏற்று நடத்துவது பாதக ஸ்தான பலனை  என்பதால் ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து படும் இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஒரு அளவு இருக்காது என்பதே உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வியாழன், 21 ஆகஸ்ட், 2014

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ?



கேள்வி :

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ? ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் திருமண வாழ்க்கை கடுமையாக பாதிக்க படுமா? 

பதில் :

 பொதுவாக திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு, பாரம்பரிய முறை படி நட்சத்திர பொருத்தம் காணும் பொழுது 10 பொருத்தங்களில் குறைந்த பட்சம் 6 பொருத்தம் வேண்டும் என்பதும், அதில் குறிப்பாக கயிற்று பொருத்தம் எனும் ரஜ்ஜு பொருத்தம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்யலாம், இல்லை எனில் திருமணம் செய்வது, தம்பதியர் ஒற்றுமைக்கும், திருமண வாழ்க்கைக்கும் பங்கம் வரும் என்றும், அதிக  பட்சமாக தம்பதியர் இருவரில் ஒருவருக்கு உயிர் சேதம் கூட ஏற்ப்படலாம் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் குறிப்பிடுவது உண்டு, இதை பற்றிய உண்மை விளக்கம் என்ன? என்பதை இந்த பதிவில் காண்போம் அன்பர்களே!

திருமண வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைய, மணமகன் மற்றும் மணமகளின் சுய ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைவதை விட ( ரஜ்ஜு பொருத்தம் உட்பட ) ஜாதக பொருத்தம் எனும் 12 பாவக அமைப்புகள் மிக வலிமையுடன் அமைவதே சிறந்தது, காரணம் ஒருவரின் திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வது, நட்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் அல்ல, சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமுமே என்றால் அது மிகையில்ல, ஒருவரின் திருமண வாழ்க்கையில் நட்சத்திர பொருத்தத்தின் பங்கு என்பது வெறும் 5% சதவிகிதமே, மீதி 95% சதவிகிதம் ஜாதகத்தின் பாவக அமைப்பே திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும்.

கடந்த 25 வருட காலங்களுக்கு முன்பு, திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வதற்கு, பெயர் பொருத்தம் மற்றும் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையில் வரும், நட்சத்திரத்தை கொண்டு  நட்சத்திர பொருத்தம் பார்த்து  திருமணம் செய்தனர், இதற்க்கு காரணம் அந்த காலகட்டங்களில் அனைவருக்கும் ஜாதக இருந்ததா? என்றால் ? நிச்சயம் இல்லை என்பதே அதன் பதில், மேலும் பிறந்த நேரம் என்பது சரியாக குறித்து வைத்து ஜாதகம் எழுதினார்களா என்றால் அதுவுமே ஒரு கேள்வி குறியே! ஆக திருமணம் செய்ய அவர்களுக்கு இருந்த ஒரே வழி நட்சத்திர பொருத்தம், மற்றும் நாம நட்சத்திர பொருத்தம், இதன் வழியில் பாரம்பரியமாக நட்சத்திர பொருத்தம் கண்டு திருமணம் செய்து வந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது, இந்த நவீன உலகத்தில் பிறந்த நேரத்தை மருத்துவரகள் தெளிவாக குறித்து கொடுத்து விடுகின்றனர், மேலும் முறையாக ஜோதிடம் பயின்றவர்கள் இறை அருளின் கருணையினால், ஜோதிட கணிதம் கொண்டு பிறந்த நேரத்தை சரியாக கணிதம் செய்துவிட முடியும்.

இங்கே ஜோதிடதீபம் குறிப்பிட விரும்புவது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையுடன் அமரும்பொழுது, ரஜ்ஜு பொருத்தம் எனும் ஒரு விஷயம் எதுவும் செய்வதில்லை, இதற்க்கு உதாரணம் நிறைய உண்டு, திருமணம் செய்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் ஒன்றையே காரணம் காட்டி திருமணத்தை தடை செய்வது, உண்மையில் ஜோதிடம் கணிதம் பற்றி ஒன்றும் தெரியாத கத்து குட்டிகள் செய்யும் ஒரு வேலை என்பதே ஆகும், ஏனெனில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 அமைந்தும் சிலரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி விடுவதற்கு காரணம் சுய ஜாதகத்தில், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் பாதிக்கபட்டு இருப்பதே என்றால் அது மிகையில்லை.

அடிப்படையில் நட்சத்திர பொருத்தம் மட்டும் நன்றாக அமைந்த இருவரின் ஜாதகத்தில், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும், பாதக ஸ்தானத்துடனோ அல்லது 6,8,12ம் பாவகங்களுடனோ தொடர்பு பெற்று இருக்குமாயின், இருவரின் திருமண வாழ்க்கை என்பது நெடுநாள் நீடிக்காது, குறுகிய காலத்தில் மணமுறிவுக்கு அழைத்து சென்று விடும், தற்பொழுது விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றம் முன்பு நிற்கும் தம்பதியர் அனைவரின் ஜாதகத்திலும், இந்த நிலையை இருப்பதை, அவர்களின் சுய ஜாதகத்தை பார்க்கும் பொழுது நாம் தெள்ள தெளிவாக காணலாம்.

 மேலும் தாமத திருமணம் என்ற ஒரு விஷயம் தற்பொழுது அதிகரித்து வருவதற்கு காரணம் சுய ஜாதகத்தில் மேற்கண்ட இரண்டு பாவகங்கள் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் என்பதே முற்றிலும் உண்மை, ஆக திருமணம் சிறப்பாக அமைய மணமகன் மற்றும் மணமகள் இருவரின் ஜாதகத்திலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களை பின்வரும் வரிகளில் ஜோதிடதீபம் தங்களுக்கு விளக்கமாக தெரிவிக்கிறது, இதை பின்பற்றி திருமண வாழ்க்கையை அமைத்துகொள்ளும் பொழுது, தம்பதியர் இருவரும் இல்லற வாழ்கையை மகிழ்ச்சியுடன், வாழையடி வாழையாக 16 வகை செல்வமும் பெற்று, சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்பதில் பெருமை கொள்கிறது ஜோதிடதீபம்.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

1) அடிப்படையில் இருவரின் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் மிகவும் சிறப்பாக இருப்பது, தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அமைத்து தரும், குடும்பத்தில் இனிமை நிலவ இருவரின் சம்பாசனை எனும் பேச்சே அடிப்படையாக அமைகிறது, ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளும் தன்மையும், அதனை சரியாகவும் உண்மையாகவும் புரிந்துகொள்ளும் தன்மையை தரும், தேவையின்றிய வீண் பேச்சுகளை தவிர்த்து, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உண்டான விஷயங்களை மட்டுமே பேசி, குடும்பத்தை சிறப்பாக நடத்த இந்த பாவகம் வலிமையுடன் அமைவது நல்லது.

மேலும் குடும்பம் நடத்துவதற்கு அவசிய தேவையான தன்னிறைவான, வருமானத்தை தருவது குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமே! சிலரின் வாழ்க்கையில் திருமணதிற்கு பிறகு மிகப்பெரிய பொருளாதார ரீதியான வெற்றியை பெறுவதற்கு காரணமாக அமைவது இதுவே என்றால், அது மிகையில்லை, மேலும் தனது குடும்பத்திற்காக சேமிக்கும் அமைப்பை தருவதும் இந்த இரண்டாம் பாவகமே, இந்த பாவகம் நல்ல நிலையில் அமையவில்லை எனில், நட்சத்திர பொருத்தம் எனும் ஒருவிஷயம் இதில் எந்த  ஒரு மாற்றத்தையும் தந்து விடாது.

2) அடுத்து இருவரின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் சிறப்பாக இருப்பது, தம்பதியர் இருவரின் எண்ணம் மற்றும் உடல் மொழிகள் , செயல்பாடுகளை சிறப்பாக புரிந்து கொள்ள முடியும், இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருக்கும் அமைப்பை தரும், களத்திர பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் ஒற்றுமையையும், ஒருமித்த இல்லற வாழ்க்கையின் வெற்றியையும் உறுதிபடுத்தும். தம்பதியரின் உடல் அமைப்பையும், மன அமைப்பையும் ஒருங்கிணைப்பது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமே, மேலும் ஒருவரை ஒருவர் சிறப்பாக புரிந்து கொண்டு, ஒருவருக்காக ஒருவர் விட்டுகொடுத்து வாழும் இனிமை நிறைந்த வாழ்க்கையை தருவது இந்த களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெற்று அமைந்தால் மட்டுமே சாத்திய படும்.

தம்பதியர் இருவரின் உடல் அமைப்பில் நல்ல தேஷஸ் மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்தை தருவதும், இந்த அமைப்பே இருவரின் வாழ்க்கையிலும் உடல் ரீதியான எந்த ஒரு பிரச்சனையும் தராமல், சிறந்த உடல் நலம், அறிவு திறன், சிறந்த சிந்தனை ஆற்றல், சரியான முடிவெடுக்கும் அறிவாற்றல் என்ற அமைப்பில் நன்மையான பலன்களை வாரி வழங்குவது, இந்த களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமே, மேலும் சமுதாயத்தில் நல்ல மதிப்பு அந்தஸ்து கௌரவம் போன்ற விஷயங்களை அதிகரிக்க செய்வதும், கூட்டு முயற்ச்சி, பொதுமக்கள் ஆதரவு அரசியல், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிறந்த நன்மைகளை வாரி வழங்குவது களத்திர பாவகத்தின் தன்மையும், தனக்கு அமையும் வாழ்க்கை துணையின் களத்திர பாவகத்தின் வலிமையுமே, இந்த களத்திர பாவகம் நல்ல நிலையில் அமையாத பொழுது, ரஜ்ஜு பொருத்தம் சிறப்பாக அமைந்தாலும் எந்த ஒரு நன்மையையும் வழங்காது, ரஜ்ஜு பொறுத்ததினால் எந்த ஒரு பயனும் இல்லை.

3) மேலும் தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது, தனது சந்ததிக்கு ஒரு சிறந்த ஆண் வாரிசை பெற்று தரும், தனது  சந்ததிகள் வழியில் வந்த அறிவாற்றலையும், புத்திசாலிதனத்தையும் மேம்படுத்தி வாழ்க்கையில் சிறந்த வெற்றி வாய்ப்பினை பெற்று தரும்.

4) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெறுவது, இருவரின் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும், உடல் ரீதியான தொடர்புகளால் பெரும் மகிழ்ச்சி மற்றும் இணக்கமான அன்பையும் உறுதிபடுத்தும், மேலும் ஆண்கள் ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெறுவது தனக்கு வரும் வாழ்க்கை துணையை சிறப்பாக வைத்திருக்கும் தன்மையை தரும் மேலும் இறுதி வரை தம்பதியர் ஒற்றுமையாக வாழும் யோகத்தை தங்கு தடையின்றி தரும்.

5) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெறுவது, பூரண  ஆயுளையும், கணவன் வழியில் இருந்து மனைவி பெரும் அதிர்ஷ்டம் மற்றும் வருமான யோகத்தையும், மனைவி வழியில் இருந்து கணவன் பெரும் அதிர்ஷ்டம் மற்றும் வருமான யோகத்தையும் அறிந்துகொள்ள இயலும், இருவரின் ஜீவன வருமான வாய்ப்புகள் பற்றியும், பொருளாதார முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் பற்றியும் தெளிவாக தெறிந்து கொள்ள இயலும்.

6) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெறுவது, இருவரின் அந்தரங்க வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியையும், மன நிம்மதியான வாழ்க்கையையும், போராட்டம் இல்லாத திருப்தியான
அமைதியான வாழ்க்கையை அமைத்து தரும், இருவருக்கும் உறவுகளில் கிடைக்கும் அந்தஸ்து கௌரவம் மற்றும் சிறப்பு மரியாதை போன்ற விஷயங்களை 12ம் பாவக வழியில் இருந்து தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

மேற்கண்ட விஷயங்களே திருமண வாழ்க்கைக்கு அவசியமாக சுய ஜாதக ரீதியாக நாம் கவனிக்க வேண்டும்.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய ஜாதக ரீதியாக தவிர்க்க  வேண்டிய விஷயங்கள் :

1) சுய ஜாதக ரீதியாக நட்சத்திர பொருத்தத்திற்கு முக்கியத்துவம் தந்து, ஜாதக பொருத்தத்தை உதாசீனம் செய்வது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தர வாய்ப்பில்லை. ஏனெனில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நிறைய பேர் பிறந்திருக்க வாய்ப்புண்டு, பிறந்த நேரப்படி ஜாதக பாவக அமைப்புகள் ஒருவருக்கு இருப்பதை போன்று மற்றவருக்கு இருக்க வாய்ப்பு இல்லை.

2) செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், தார தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் என்று வகைக்கு 5 அல்லது 6 தோஷங்களை பிரித்து வைத்து கொண்டு மக்களை குழப்புவது, சம்பந்தபட்ட ஜோதிடருக்கே பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து விடும்.

3) குறிப்பாக விரும்பி திருமணம் செய்துகொள்ளும் அன்பர்கள் மேற்கண்ட விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் திருமணம் செய்துகொள்வது நல்லது, திருமணம் செய்துகொண்ட பிறகு தங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களது திருமண வாழ்க்கைக்கு தாங்கள் கொடுக்கும் மதிப்பு.

4) ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

5) ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது, மூலம் மாமனாருக்கு ஆகாது என்று  நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு வந்த வாய்வழி செய்திகளை நம்பி திருமண வாழ்க்கையை தள்ளி போடுவதும், தவிர்ப்பதும் சுத்தமான மூட நம்பிக்கையே அன்றி வேறு எதுவும் அல்ல.

உண்மையான ஜாதக பலனை, சுய ஜாதக ரீதியாக தெரிந்துகொண்டு வாழ்கையில் சகல நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது , வாழ்த்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


திங்கள், 18 ஆகஸ்ட், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 6


 சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

கும்ப லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, இந்த  ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது கும்ப லக்கினத்திற்கு ராகு 8ம் பாவகத்திலும், கேது 2ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

 கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 8ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், விபரீத ராஜயோகத்தை தருகிறார், இதுவரை ஜாதகருக்கு வராமல் இருந்த பொருள் உதவிகள், ஆதரவுகள் ஜாதகரை தேடி  வரும், எதிர்பாராத வகையில் பொருளாதார ரீதியான வெற்றிகள் ஜாதகருக்கு தேடி வந்து சேரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், செய்யும் விஷயங்கள் யாவும் திடீர் வெற்றியை தரும், பெரிய மனிதர்களின் ஆதரவு ஜாதகருக்கு பல விதங்களில் உதவிகரமாக அமையும், முன்னேற்றம் என்பது யாரும் எதிர்பாரா வண்ணம் ஜாதகருக்கு அமையும், உடல் நிலை மிகவும் சிறப்பாக அமையும், இதுவரை உடல் ரீதியாக இருந்து வந்த தொந்தரவுகள் விரைவாக குணம் பெரும் அமைப்பை தரும்.

கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 2ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், வருவாய் கடன் மற்றும் பணம் சம்பந்தம் பட்ட விஷயங்கள் தங்களுக்கு எதிர்பாராத லாபத்தை வாரி வழங்கும், வண்டி வாகனம் மற்றும் சுப விரைய செலவுகள் செய்யும் அமைப்பை தரும், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சிறு அறுவை சிகிச்சையை ஜாதகர் மேற்கொள்ளும் அமைப்பை தரக்கூடும், முன்பின் தெரியாத நபர்களாலும், வேற்று மதத்தினராலும் நன்மையையும் லாபமும் உண்டாகும், அவர்களால் ஜாதகருக்கு வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை ஏற்ப்படும், புதையல்கள் அல்லது அதற்க்கு நிகரான பொருள் வரவுகள் ஜாதகருக்கு ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இனி வரும் 18 மாதங்கள் மிகுந்த யோகத்தை வாரி வழங்கும்.

குறிப்பு :

 கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் தேவையில்லாத செலவினங்களை குறைத்து சேமிக்கும் பழக்கத்தை வைத்துகொள்வது இனிவரும் காலங்களில், சரியான நன்மைகளை பெறலாம், அவசிய தேவைகளுக்கு மட்டும் செலவு செய்வது நலம் தரும், பல முறை சிந்தித்து செலவுகளை செய்வது கும்ப லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மிகுந்த நன்மையை தரும்.

மீன லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, இந்த  ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது மீன லக்கினத்திற்கு ராகு 7ம் பாவகத்திலும், கேது 1ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 7ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், இது வரை திருமணம் ஆகாத அன்பர்களுக்கு, திருமண வாய்ப்பை திடீர் என அமைத்து தருகிறார், இனி வரும் 18 மாத காலத்திற்குள் மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திருமணம் இனிதே நடைபெறும், வரும் வாழ்க்கை துணை அமைப்பில் இருந்து ஜாதகர் மிகுந்த நன்மைகளை பெரும் யோகத்தை தரும், புதியதாக கூட்டு தொழில் செய்யும் யோகத்தை வழங்கும் ராகு பகவான் அதன் மூலம் மிகப்பெரிய லாபத்தை தருகிறார், இதன் வழியே ஜாதகர் பொருளாதார ரீதியான தன்னிறைவை பெரும் யோகம் உண்டாகும், அரசியலிலும் கூட்டு தொழில் அமைப்பிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும், மக்கள் ஆதரவும் அதன் வழி நன்மையும், இனி வரும் காலங்களில் மிகவும் சிறப்பாக அமையும்.

மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 1ல் சஞ்சாரம் செய்யும் கேது  பகவான், நல்ல உடல் ஆரோக்கியத்தையும், சிறந்த மன நலனையும் வாரி வழங்குகிறார், சுயமாக வாழ்க்கையில் முன்னேறும் அமைப்பையும், தன்னம்பிக்கையுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெரும் யோகத்தையும் தருகிறார், சிறந்த ஆன்மீக அன்பர்களின் அறிமுகமும், பெரியோர்களின் நல்லாசியும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகத்தை தரும், வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும், புதிய சிந்தனைகள் மீன லக்கினதரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரும்.

மீன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிகுந்த லாபத்தையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை.

குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் கும்ப லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் இதை போன்றே, யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் மீன லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.



வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - பாகம் 1


 ஜீவன ஸ்தானம் ஒருவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பாவகம், மேலும் ஒரு ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வைத்து அந்த ஜாதகரின் கௌரவம்,அந்தஸ்து சுய மரியாதை ஆகிய விஷயங்களை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும், ஜீவன பாவகத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொருவருக்கும் சரியான தொழில் அமைகிறது என்றால் அது மிகையில்லை, 12 ராசிகளும் , சர,ஸ்திர,உபய அமைப்புகளும், நெருப்பு,நிலம்,காற்று,நீர் தத்துவங்களும் சுய ஜாதகத்தில் ஒருவருக்கு எந்த விதமான ஜீவன வாழ்க்கையை, எந்த வயதில் அமைத்து தருகிறது என்பதை ஜாதக ரீதியாக தெளிவாக தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் தனது தொழில்,வேலை  மற்றும் பணியை சிறப்பாக செய்து வாழ்க்கையில் முன்னேற்றமும் வெற்றியும் காணலாம்.

ஒருவரின் ஜீவன அமைப்பை ( செய்யும் தொழில் அல்லது வேலை ) சுய  ஜாதகரீதியாக தெரிந்து கொள்வது, அந்த ஜாதகர் தனது ஜீவன வாழ்க்கையை சிறப்பாக  செய்ய பெரும் உதவியாக இருக்கும், அடிப்படையில்  ஒருவரது  ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் எந்த விதமான தொடர்புகளை  பெறுவது ஜாதகரின் தொழில் மற்றும் வேலை  வாய்ப்பினை கேள்வி குறியாக மற்றும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் அன்பர்களே !

ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் தொடர்பு பெற கூடாத நிலைகள் :

1) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானம் எனும் 7,9,11ம் பாவகங்களுடன் தொடர்பு பெற கூடாது , ஒரு வேலை ஜீவன ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகரை ஜீவன வழியில் இருந்து 200% இன்னல்களுக்கு வழிவகுத்துவிடும் மேலும் சுய கௌரவமும் அந்தஸ்தும் வெகுவாக பாதிக்க படும்  ( சர லக்கினத்திற்கு 11ம் வீடு பாதக ஸ்தானம், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு பாதக ஸ்தானம், உபய லக்கினத்திற்கு 7ம் வீடு பாதக ஸ்தானம்)

2) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம்,எதிரி மற்றும் பகை ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து பல எதிர்ப்புகளையும், எதிரிகளையும் உருவாக்கும், மேலும் செய்யும் தொழில் அமைப்பில், அதிக கடன் தொந்தரவுகளை உருவாக்கி தொழில் முடங்கும் சூழ்நிலையை தந்துவிடும், ஜாதகருக்கு 6ம் பாவகம் ஒரு வேலை சர ராசியாக இருப்பின், ஜாதகர் தனது தொழிலுக்கு மூடுவிழா, தொழில் செய்ய ஆரம்பித்த சில தினங்களிலேயே நடத்தி விடுவார், தேவையின்றி செய்யும் சில காரியங்களால், ஜாதகரின் தொழில் வாய்ப்புகள்  முடங்கி மிகப்பெரிய பின்னடைவை தந்துவிடும்.

3) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், திடீர்  இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, எதிர்பாராத சந்தர்பத்தில் திடீர் இழப்பை  தந்து, இதுவரை செய்துவந்த தனது தொழில்  அமைப்பிற்கு மூடுவிழா காணும் தன்மையை தரும், சுய ஜாதகத்தில் இந்த அமைப்பை பெறும் அன்பர்கள் தயவு செய்து மற்ற  பாவகங்களின் வலிமை உணர்ந்து தொழில் செய்வது நலம், இல்லை எனில் ஜாதகரின் ஜீவன வாழ்க்கை மிகப்பெரிய கேள்வி குறியாக மாறிவிடும், தொழில்  செய்யாமல் அடிமை ஜீவனம் மேற்கொள்ளும் அன்பர்களுக்கும் இந்த அமைப்பு அதிக துன்பத்தையே தரும், குறிப்பாக ஒரு இடத்தில் நிரந்தரமாக வேலை பார்க்க ஜாதகரால் இயலாது, எதிர்பாராத நேரத்தில் வேலையை விட்டு எக்காரணமும் தெரியாமல் நீக்கபடுவார்கள்.

ஜாதகர் தனது உழைப்பின் மூலம் சம்பாதித்த பணம் பொருள் அனைத்தையும் திடீர் என இழக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக மருத்துவ செலவினங்கள்,  விபத்து செலவினங்கள், மற்றவர்களை நம்பி கொடுக்கும் பணம்,  மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள், ஆகியவற்றில் பெரிய திடீர்  இழப்பையே ஜாதகர் சந்திக்கும் சூழ்நிலையை தரும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதாலும், மற்றவர்களுக்கு ஜாமீன் தருவதாலும் ஜாதகருக்கு மிகப்பெரிய இழப்பே ஏற்ப்படும், ஜாதகர் செய்யும் தொழிலும் கடுமையாக பாதிக்க படும்.

ஜாதகருக்கு 8ம் பாவகம் சர ராசியாக இருப்பின், மேற்கண்ட பாதிப்புகள்  மிக விரைவாக நடத்தும், ஜாதகரின் சிந்தனை எதுவும் பலன் தராது, ஜாதகருக்கு உதவி செய்யும் அன்பர்கள் யாரும் இல்லை என்ற சூழ்நிலையை தரும்.

4) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் செய்யும் தொழில் முதலீட்டையே வெகுவாக பதம் பார்க்கும், குறிப்பாக ஜாதகர் தொழில் ரீதியாக செய்த முதலீட்டை திரும்ப பெறுவது என்பது குதிரை கொம்பாக இருக்கும், தொழிலில் முதலீடு செய்துவிட்டு ஒவ்வொரு நாளும்  உறக்கமின்றி நிம்மதியின்றி தவிக்கும் சூழ்நிலையை தந்துவிடும், மனதளவில் அதிக இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்,  பெரும்பாலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் சமுதாயத்தில் பொருளாதார ரீதியான பின்னடைவை விரைவில் சந்திக்கிறார்கள், இவர்கள் தொழில் ரீதியாக மீண்டு வருவது என்பது இயலாத ஒரு காரியமே என்றால், அது மிகையில்லை அன்பர்களே !

இந்த அமைப்பை பெற்ற அன்பர்களுக்கு அடிமை ஜீவனம் சிறந்த  நன்மைகளை வாரி வழங்கும், சுய தொழில் செய்தால் மட்டுமே ஜாதகர் கடுமையாக பாதிக்க படுவார், ஒருவரிடமோ அல்லது ஒரு நிறுவனத்திலோ பணிபுரியும் பொழுது ஜாதகருக்கு  பெரிய இழப்புகள் எதுவும் நடை பெறுவதில்லை, மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் கூட்டு தொழில் செய்ய கூடாது ஏனெனில் ஜாதகர் தனது கூட்டாளியாலேயே ஏமாற்றப்பட கூடும், மேலும் செய்த முதலீடு, ஜாதகரின் கூட்டாளிக்கு மிகுந்த வளர்ச்சியை கொடுத்துவிடும்.

5) மேற்கண்ட விஷயங்களுடன் சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் பாவகமான மகரம் மிகவும் சிறப்பாக இருப்பது அவசியம், சிலர் தொழில் ரீதியாக பெரிய வெற்றிகளை பெற இயலாத நிலைக்கு காரணம் இதுவே, மேலும் சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் பாவகமான மகர ராசிக்கு அதிபதியான சனிபகவானும், சுய ஜாதகத்தில் 10ம் பாவகத்திர்க்கு அதிபதியான கிரகமும் எக்காரணத்தை கொண்டும் வக்கிரக நிலையை பெற கூடாது, மேற்கண்ட கிரகங்கள் வக்கிரக நிலை பெரும் பொழுது ஜாதகர் தொழில் ரீதியான வெற்றிகள் வாய்ப்புகள் வெறும் 10% நிலையிலேயே நின்றுவிடும், தொழில் ரீதியான சிரமங்கள் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், வக்கரகம் பெற்ற கிரகங்களுக்கு முறையாக வக்கரக நிவர்த்தி செய்யும் வரை ஜாதகர் ஜீவன வழியில் இருந்து நன்மையை பெற முடிவதில்லை.

இனி வரும் பதிவுகளில் ஜீவன ரீதியான பலன்கள் பற்றி விளக்கமாக காணலாம் அன்பர்களே!.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 16 ஆகஸ்ட், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 5




சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

தனுசு லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது தனுசு லக்கினத்திற்கு ராகு 10ம் பாவகத்திலும், கேது 4ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

தனுசு லக்கினத்திற்கு 10ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்குகிறார், குறிப்பாக தொழில் ரீதியான வெற்றிகள், வெளிநாடு வேலை வாய்ப்புகள், புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு, கூட்டு தொழில் செய்வதின் மூலம் மிகுந்த லாபம், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தை விரைவில் அடையும் யோகம், திடீர் பதவி உயர்வு, கை நிறைவான பொருள் வரவு, புதிய சிந்தனைகள், புதிய தொழில் யுக்திகள் மூலம் தனது தொழில் முன்னேற்றத்தை தக்க வைத்துகொள்ளும் யோகம், தங்கு தடையின்றி நடைபெறும் தொழிலால், தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இனி வரும் 18 மாதமும் 100% நன்மைகளை பெறுவார்கள்.

தனுசு லக்கினத்திற்கு 4ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் சிறப்பான நன்மைகளை எதிர்பார்க்க இயலாது, தனது வசமுள்ள சொத்துகளை விற்கும் சந்தர்ப்பமும், வண்டி வாகன அமைப்பில் இருந்து சிறு விரையங்களையும் செய்யும் சூழ்நிலையை உருவாக்க கூடும், மனதளவில் சிறு சிறு குழப்பங்களும் , சந்தேகமும் வந்து போகும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், நல்ல உறக்கம் அற்ற சூழ்நிலையை தர கூடும், குறிப்பாக தேவையற்ற மன கவலை தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மிகுந்த துன்பத்தை தரக்கூடும், இனி வரும் 18 மாதமும் மண்,மனை,வீடு, வண்டி வாகனம் சம்பந்தபட்ட விஷயங்களில் தனுசு லக்கினத்தை சார்ந்தவர்கள் அதிக கவனமாக இருப்பது மிகுந்த நலம் தரும், அதிக முதலீடு செய்யும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை, இல்லை எனில் தேவையில்லாத இழப்பை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

மகர லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகர ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது மகர லக்கினத்திற்கு ராகு 9ம் பாவகத்திலும், கேது 3ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

மகர லக்கினத்திற்கு 9ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு சிறந்த ஆன்மீக வெற்றியை வாரி வழங்குகிறார், குறிப்பாக பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகத்தை தருகிறார், சிறந்த ஆன்மீக பெரியவர்களின் சந்திப்பும், ஆசிர்வாதமும் மகர லக்கின்னதருக்கு சிறந்த நன்மைகளை வாரி வழங்கும், சிறந்த அறிவு திறன் உண்டாகும், எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான தீர்வு சொல்லும் புத்திசாலித்தனம் அதிகரிக்கும், சமுகத்தில் மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும், செய்யும் காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும், மக்களின் ஆதரவும் உதவியும் நிச்சயம் கிடைக்கும், சொந்த பந்தங்களின் நல்லாதரவு கிடைக்க பெறுவார்கள், இனி வரும் 18 மாதமும் ராகு பகவான் மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு 100% வெற்றியை தருகிறார்.

மகர லக்கினத்திற்கு 3ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றியை வாரி வழங்குகிறார், தன்னம்பிக்கை அதிகரிக்கும், சுய முயற்சியால் பல சாதனைகளை செய்யும் யோகம் உண்டாகும், கமிஷன் தரகு தொழில் செய்துவரும் அன்பர்களுக்கு மிகுந்த நன்மையை வாரி வழங்குகிறார், சிறு தொழில் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு மிகுந்த முன்னேற்றத்தை தரும் காலம் இது, குறுகிய காலத்தில் மிகுந்த லாபத்தை வாரி வழங்குவார், சிறு முதலீடுகள் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி தரும், வீடு கட்டும் யோகம் உண்டாகும், புதிய சொத்து சேர்க்கை வண்டிவாகன யோகமும் ஏற்ப்படும், முன்னோர்களின் சொத்துகள் தங்களுக்கு எதிர்பாராமல் கிடைக்கும், இதுவரை இருந்த பல சிக்கல்கள் சூரியனை கண்ட பனிபோல் மறையும், திருமணம் ஆகாத அன்பர்களுக்கு விரைவான திருமண யோகத்தை வாரி வழங்குகிறார், இனி வரும் 18 மாதமும் மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு யோக காலமே என்றால் அது மிகையில்லை.

மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிகுந்த லாபத்தையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை.

 குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் தனுசு லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் இதை போன்றே, யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் மகர லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 4



 சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

துலா லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது துலாம் லக்கினத்திற்கு ராகு 12ம் பாவகத்திலும், கேது 6ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

துலாம் லக்கினத்திற்கு 12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் துலாம் லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, முதலீடு செய்வதால் அதிக லாபத்தை தருவார், திடீரென நிலம் வீடு, வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை தருவார், எதிர்பாராத பதவி, மற்றும் திடீர் அந்தஸ்தை வாரி வழங்குகிறார், மேலும் இதுவரை உடல் ரீதியான பாதிப்பில் இருந்தவர்களுக்கு உடல் நிலை விரைவாக குணம் பெரும் வாய்ப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறார், வெளிநாடு சென்றுவரும் யோகம் தற்பொழுது ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு, வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கு திடீரென வேலைவாய்ப்பு அமைவதற்கு உண்டான சந்தர்ப்பம் வீடு தேடி வரும், இனி வரும் 18 மாதங்கள் ராகு பகவான் தங்களுக்கு மிகுந்த யோகத்தை 12ம் பாவக வழியில் இருந்து தருகிறார் என்பது மகிழ்ச்சியான விஷயமே.

துலாம் லக்கினத்திற்கு 6ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் துலாம் லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, மனோ ரீதியான தொந்தரவுகளை அதிகம் தருகிறார், தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாடு இழக்கும் சந்தர்ப்பங்கள் உண்டாகும், நினைக்கும் காரியங்கள் தடை ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, பணம் மற்றும் பொருள் சார்ந்த விஷயங்களில் சிறு இழப்பு ஏற்ப்படும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் உருவாகும் என்பதால் அதிக கவனமாக இருப்பது மிகுந்த நலம் தரும், வெளியூர் பயணங்களில் பணம் மற்றும் பொருள் விஷயங்களில் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், மற்றவரை நம்பி முதலீடு செய்யும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நல்லது இல்லை எனில் தேவையில்லாத பொருள் இழப்பு உண்டாகும்.

விருச்சிக லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம்ராசியான விருச்சிக ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது விருச்சிக லக்கினத்திற்கு ராகு 11ம் பாவகத்திலும், கேது 5ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

விருச்சிக லக்கினத்திற்கு 11ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, மிகுந்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்குகிறார், குறிப்பாக இனி வரும் 18 மாதங்களில் ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணமே இருக்கும் என்பதை மறுக்க இயலாது, தாங்கள் நினைக்கும் அனைத்தும் நடைபெறும், செய்ய வேண்டிய அனைத்து காரியங்களும் தங்கு தடையின்றி 100% சிறப்பாக நடைபெறும், எந்த ஒரு விஷயத்தையும் முற்போக்கு சிந்தனையுடன் அணுகுவது தங்களுக்கு மிகுந்த யோகத்தை பெற்று தரும், லாட்டரி, போட்டி, பந்தையங்கள், பங்கு வர்த்தகம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த லாபத்தை வாரி வழங்குகிறார் என்பது கவனிக்க தக்க விஷயம், இந்த ராகு கேது பெயர்ச்சி விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு 100% நன்மையை தருகிறார் என்பது உறுதி.

விருச்சிக லக்கினத்திற்கு 5ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, நல்ல ஆன்மீக வெற்றியை வாரி வழங்குகிறார், தன்னம்பிக்கை அதிகரிக்கும், இறை அருளின் கருணை பரிபூரணமாக கிடைக்க பெறுவீர்கள், குல தெய்வத்தின் பரிபூரண நல்லாசிகள் தங்களுக்கு இனி வரும் 18 மாத காலமும் நிறைவாக கிடைக்கும், அறிவு திறன் சிறப்பாக வேலை செய்யும், நல்ல நிம்மதியான வாழ்க்கை அமையும், இது வரை திருமணம் ஆகாத அன்பர்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமையும், சிறந்த ஆண் புத்திர சந்தானம் அமையும், குடும்பத்தில் மகிழ்சி பொங்கும், கலை துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலம் இது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல மாற்றங்களும், முன்னேற்றமும் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சியினால் அதிக லாபமும் அதிர்ஷ்டமும் பெரும் அன்பர்கள் இந்த விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களே என்றால் அது மிகையில்லை.

குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் துலா லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 6,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், இதை போன்றே யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் விருச்சிக லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 5,11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 13 ஆகஸ்ட், 2014

சுய ஜாதக ரீதியாக திருமணம் தாமதமாக காரணம் என்ன ?




பொதுவாக ஒருவரின் சுய ஜாதக அமைப்பில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகமும் கடுமையாக பாதிக்கப்படும் பொழுதே திருமணம் எனும் ஒரு சுப நிகழ்வு நடைபெறாமல் தாமதமாகும், அதிலும் சுய ஜாதகத்தில் ஆண் என்றாலும் சரி, பெண் என்றாலும் சரி எக்காரணத்தை கொண்டும் குடும்பம் மற்றும் களத்திர பாவகங்கள் பாதிக்க படாமல் இருப்பது திருமண வாழ்க்கையை சரியான வயதில் சீரும் சிறப்புமாக அமைத்து தரும்.

மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமான ரிஷபமும், களத்திர ஸ்தானமான துலாமும் பாதிக்க படாமல் இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை வாரி வழங்கும், மேலும் சிறப்பான மணமகனையோ, மணமகளையோ அமைத்து தரும் என்பது நிச்சயம்.

ஒருவேளை குடும்பம் மற்றும் களத்திர பாவகங்கள் பாதிக்க பட்ட போதிலும் இந்த இரண்டு பாவகங்களின் பலனை திருமண வயதில் நடைபெறும் திசை மற்றும் புத்தி ஏற்று நடத்தாமல் இருந்தால் ஜாதகருக்கு ஏதாவது ஒருவகையில் திருமணம் நடைபெற்று விடும், இதற்க்கு மாறாக திருமண வயதில் நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதிக்க பட்ட குடும்ப மற்றும் களத்திர பாவக பலனை ஏற்று நடத்தினால்,  ஜாதகரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்பு அதிகம், மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதக அன்பர்கள் பெரிய எதிர்பார்ப்புகளை தவிர்த்து, திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முன்வருவது சால சிறந்தது.

அல்லது தனது சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்களுக்கு அதிபதியாக வரும் கிரகங்களை ( இங்கு குறிப்பிடும் கிரகங்கள் சம்பந்தபட்ட பாவக ராசி அதிபதி அல்ல என்பதை கருத்தில் கொள்ளுங்கள் அன்பர்களே !) வழிபாடு செய்வதும், பாதிக்க பட்ட பாவகம் சார்ந்த  உறவுகளுக்கு நன்மை செய்வதும், அதன் வழியில் நடைபெறும் துன்பங்களில் இருந்தும், திருமண தடை அமைப்பில் இருந்தும் நன்மைகளை வாரி வழங்கும், குறிப்பாக திருமண தாமதத்தை தவிர்த்து விரைவில் திருமணம் நடைபெறும்.

உதாரணமாக :

கிழ்கண்ட ஜாதகத்தை சார்ந்தவருக்கு  வயது 30க்கு மேல் ஆகியும் திருமணம் நடைபெறவில்லை, என்ன காரணம் என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 4ம் பாதம் 

திருமணம் தாமதமாக காரணம் என்ன? என்பதை முதலில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.

1) குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் திடீர் இழப்பை தரக்கூடிய 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குடும்ப ஸ்தான அமைப்பை வெகுவாக பாதிக்கிறது.

2) களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதக ஸ்தானம் எனும் 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று களத்திர ஸ்தானத்தை வலுவாக 200% பாதிக்கிறது.

3) கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபமும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குடும்ப வாழ்க்கையை கேள்வி குறியாக மாற்றுகிறது.

4) கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் மட்டும் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோகத்தை வாரி வழங்குகிறது .

5) தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசையும் ( 22/03/2007 முதல் 22/03/2027 ) வரை 4,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருகிறது.


குறிப்பு : 

"குரு பார்த்தால் கோடி நன்மை"

இங்கே களத்திர பாவகத்தை "குரு பார்த்தால் கோடி நன்மை" என்பது பொய்யாகிறது, ஏனெனில் கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக வரும் குருபகவான் லக்கினத்தில் அமர்ந்து தானது கேந்திர ஸ்தானத்தை நேரெதிராக பார்வை செய்யும் பொழுது , தனது பாவகத்தை தானே கெடுத்து தீமை செய்கிறார் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம், இங்கே குரு பார்வை எவ்வளவு தீமை செய்கிறது, என்பது ஜாதகருக்கு இன்னும் திருமணம் ஆகாமல் தடை பெற்று கொண்டு இருப்பதை கவனத்தில் எடுத்துகொண்டாலே தெள்ள தெளிவாக புரிந்துகொள்ள இயலும்.

எனவே கோண வீடுகளான 1,5,9ம் பாவகதில் விழும் குரு பார்வை மட்டுமே நன்மை தரும், கேந்திர வீடுகளை பார்க்கும் குருபகவான் கேந்திர பாவகங்களுக்கு தீமையான பலன்களை தருவார் என்பது உறுதியாகிறது, மேலும் குரு பார்வை எல்லா பாவகங்களுக்கும் நன்மை செய்யும் என்பது உண்மைக்கு புறம்பானது என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, இதை பற்றி வேறு ஒரு பதிவில் காண்போம்.

எனவே குடும்ப ஸ்தானம் பாதிப்பதால், ஜாதகர் தனது வாழ்க்கைக்கு உகந்தவர் இவர்தான் என்று முடிவெடுக்கும் தகுதியை இழந்து விடுகிறார், மேலும் ஜாதகர் விரும்பு நபரையும் திருமணம் செய்துகொள்ள இயலாது ஏனெனில் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகர் விரும்பும் நபர் இவரை உண்மையாக நேசிக்க வாய்ப்பில்லை, அவரை ஜாதகர் கட்டாயத்தின் பேரில் திருமண செய்தாலும் ஜாதகருக்கு 200% தீமையை தருவார், திருமண வாழ்க்கை நீடிக்காது.

கால புருஷ தத்துவத்திற்கு குடும்ப ஸ்தானம் எனும் ரிஷபமும் பாதிக்க படுவதால் ஜாதகர் தான் தேர்ந்தெடுக்கும் திருமண வாழ்க்கையில் மன நிம்மதி இழப்பு என்ற ஒரு விஷயத்தை தவிர வேறு எதையும் நுகர இயலாது, தன்னிடம் உள்ள சேமிப்பு மற்றும் பணம் சொத்து மதிப்பு மரியாதை அனைத்தையும் இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்.

இந்த ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானம் எனும்  துலாம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான ஒரு விஷயம், இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது ஜாதகரை யார்  அதிகமாக நேசிக்கின்றாரோ அவரை முழுமனதாக ஏற்றுக்கொண்டு, மணவாழ்க்கையை சிறப்பாக  அமைத்துகொள்வது சால சிறந்தது.

மேற்கண்ட ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகம் மட்டும் சிறப்பாக இருப்பதால் சம்பந்த பட்ட ஜாதகரை விரும்பி வருபவரை ஏற்றுகொள்வது நல்லது என்று பரிந்துரை செய்வதிற்கு காரணம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகம் மிகவும் வலிமையாக இருப்பதால் ஜாதகரை விரும்பி வரும் அன்பரே! ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையாக வருவார், நல்ல அதிர்ஷ்ட வாழ்க்கையையும், சிறப்பான எதிர்காலத்தையும் அமைத்து தருவார். ஆகவே ஜாதகர் இதை கருத்தில் கொண்டு தனது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொள்வது சகல நிலைகளில் இருந்து நன்மை பயக்கும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகருக்கு பாவக வழியில் 2ம் பாவகத்திற்கு அதிபதியான புத பகவானுக்கும் , 7ம் பாவகத்திற்கு அதிபதியான ராகு பகவானுக்கும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் பாவகதிர்க்கு அதிபதியான சுக்கிர பகவானுக்கும் ஜோதிடதீபம் பரிந்துரை செய்யும் முறையான பரிகாரங்களை செய்து நலம் பெறுங்கள்.

மேலும் ஜாதகர் தனது தாயாருக்கு தேவையான  அனைத்து விஷயங்களையும் அவரது மனம் நோகாமல், செய்து கொடுப்பது அருமையான குடும்ப வாழ்க்கையை அமைத்து தரும். தனது முன்னோர்களுக்கு  செய்யவேண்டிய வழிபாடு மற்றும் இதர விஷயங்களை செய்வது தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரியவர்களிடம் நல்லாசிகளை பெறுவது அருமையான வாழ்க்கை துணையை அமைத்து தரும், எக்காரணத்தை கொண்டும் ஜாதகர் மற்றவரிடம் பேசும் பொழுது அதிக கவனமாக இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மை பயக்கும்., மேற்க்கண்டவை அனைத்தும் ஜாதகர் கடைபிடிக்கும் பொழுது பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்த்து யோக பலன்களை வாரி வழங்கும் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இரட்டையர்கள் ஜாதகத்தில் மாறுபடும் பாவக பலன்கள் !




 சுய ஜாதக ரீதியாக பாவக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையின் அடிப்படையில், தற்பொழுது நடைபெறும் திசை புத்தி ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மைக்கு ஏற்ப நன்மை தீமை பலன்களை நிர்ணயம் செய்யலாம், ஒட்டி பிறக்கும் இரட்டையர்களின் ஜாதகத்தில் ஜாதகமும் கிரக அமைப்புகளும் பொதுவாக அமைந்த போதிலும், இருவரின் குண நலன்கள், செயல்பாடுகள் நடைபெறும் பலாபலன்கள் வேறுபடுவதில் நிறைய வித்தியாசங்கள் உண்டு, இதை தெளிவாக தெரிந்து கொள்ள பாரம்பரிய ஜோதிட முறையில் வாய்ப்பு குறைவு, ஜாதக கணித முறையில் பெரிய வித்தியாசத்தை நாம் காணுவதற்கு சிரமமே உண்டாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

 கிழ்கண்ட இரட்டையர்களின் ஜாதக அமைப்பை பாரம்பரிய ஜோதிட கணிதத்தில் காணும்பொழுது பெரிய வித்தியாசங்களை காண இயலாத பொழுதும், நமது ஜோதிட கணித முறையில் பாவக வலிமைகள், பலன்கள் துல்லியமான வித்தியாசங்களை தெளிவாக தெரிந்துகொள்ள இயலும், இருவரின் ஜாதக அமைப்பில் பாவகங்களின் தொடர்புகளையும் வழங்கும் பலன்களையும் இனி காண்போம்!

உதாரண ஜாதகம் 1


பிறந்த தேதி : 14/12/1992
பிறந்த நேரம் : மாலை 04:16

பாவக தொடர்பு 

1) 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2) 2,6ம் வீடுகள் களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3) 3,8,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4) 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5) 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6) 9ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.

 தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை (15/10/2002 முதல் 15/10/2022 வரை) ஜாதகருக்கு 2,6ம் வீடுகள் களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2மற்றும் 6ம் பாவக வழியில் இருந்து நன்மையான பலன்களையும்,1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1மற்றும் 7ம் பாவக வழியில் இருந்து 200% தீமையான பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது.

 மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகர்  2,4,5,6,10ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 1,3,7,8,9,11,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் அனுபவிக்கும் தன்மை உண்டாகிறது, இதில் ஜாதகர்  2,4,5,6,10ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் வெற்றியையும், 1,3,7,8,9,11,12ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் தடையும் தொந்தரவுகளையும் எதிர்பாராத தோல்விகளையும் வாரி வழங்கும்.

 எனவே நன்மை தரும் பாவக பலன் நடைபெறும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொண்டும், தீமை தரும் பாவக பலன்கள் நடைபெறும் பொழுது எச்சரிக்கையாகவும் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த யோகத்தை பெறுவதற்கு அடித்தளமான அமையும்.

உதாரண ஜாதகம் 2


பிறந்த தேதி : 14/12/1992
பிறந்த நேரம் : மாலை 04:17

பாவக தொடர்பு 

1) 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2) 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3) 3,8,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4) 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5) 5,9ம் வீடுகள் பூர்வ எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6) 6ம் வீடு களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

 தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை (10/10/2002 முதல் 10/10/2022 வரை) ஜாதகருக்கு 6ம் வீடு களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 6ம் பாவக வழியில் இருந்து தீமையான பலன்களையும், 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1மற்றும் 7ம் பாவக வழியில் இருந்து 200% தீமையான பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது.

 மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகர்  2,4,10ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 1,3,5,6,7,8,9,11,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் அனுபவிக்கும் தன்மை உண்டாகிறது, இதில் ஜாதகர்  2,4,10ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் வெற்றியையும், 1,3,5,6,7,8,9,11,12ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் தடையும் தொந்தரவுகளையும் எதிர்பாராத தோல்விகளையும் வாரி வழங்கும்.

 எனவே நன்மை தரும் பாவக பலன் நடைபெறும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொண்டும், தீமை தரும் பாவக பலன்கள் நடைபெறும் பொழுது எச்சரிக்கையாகவும் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த யோகத்தை பெறுவதற்கு அடித்தளமான அமையும்.

 ஆக ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறந்த இந்த இரட்டையர்களுக்கு ஜாதக பாவக பலன்கள் தொடர்பு பெரும் அமைப்பில் வித்தியாசப்படுகின்றது, மேலும் தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஒருவருக்கு குறிப்பிட்ட பாவக வழியில் நன்மை தீமை பலன்களை கலந்தும், ஒருவருக்கு தீமையான பலன்களை மட்டுமே நடத்துகிறது, எனவே ஜாதகத்தில் பிறந்த நேரம் என்பது நிமிடம் மட்டுமல்ல சில நொடிகள் வித்தியாசம் பெரும் பொழுது ஜாதக பலன்கள் பாவக பலன்கள் மாறுபடும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து.

 இதனால் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் ஆனாலும் அவர்களின் குணம், செயல்பாடுகள், அறிவாற்றல், சுய விருப்பங்கள், ஆர்வம், உடலின் தன்மைகள், நடைபெறும் நன்னமை தீமைகள், கல்வி, வேலை, தொழில் போன்றவற்றில் வித்தியாசம் நிச்சயம் ஏற்ப்படும், ஒருவரின் ஜாதகத்தை போன்றே மற்ற ஒருவரது ஜாதகம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லவே இல்லை என்பதே உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 3




சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

சிம்ம லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது சிம்ம லக்கினத்திற்கு ராகு 2ம் பாவகத்திலும், கேது 8ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

 சிம்ம லக்கினத்திற்கு 2ல் சஞ்சாரம் செய்யும் ராகு சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு கை நிறைவான வருமான வாய்ப்பை வாரி வழங்குகிறார், இனிவரும் 18 மாதங்கள் தொழில் ரீதியான வருமான வாய்ப்புகள் வந்து குவியும், எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெரும், வாக்கு பலிதம் உண்டாகும், சொன்ன வாக்கை காப்பாற்றும் நிலை உண்டாகும், சிலருக்கு திடீரென திருமணம் அமைந்து அமைதியான குடும்ப வாழ்க்கை கிட்டும், இவரின் பேச்சுக்கு யாவரும் கட்டுபடுவார்கள், ராகு மண் தத்துவத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த 18 மாதங்கள், பொருள் வரவு வண்டி வாகன யோகம், வீடு கட்டும் யோகம், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் என்ற வகையில் நன்மைகளை ராகு பகவான்  வாரி வழங்குகிறார்.

 சிம்ம லக்கினத்திற்கு 8ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் சிம்மலக்கினதாருக்கு மன நிம்மதியை வலுவாக பதம் பார்க்க கூடும், தேவையில்லாத கவலை, அலைச்சல், பயனில்லாத காரியங்களை செய்து அதன் மூலம் மன நிம்மதி இழப்பையும், வீண் விரையங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை ஏற்ப்படுத்துவார், தன்னம்பிக்கை குறையும், எந்த ஒரு விஷயத்திலும் அக்கறையும் ஆர்வமும் இல்லாமல் வெகுவாக மனோ ரீதியான பாதிப்பிற்கு உட்படுத்துவார், எனவே இனி கேது மீனத்தில் சஞ்சாரம் செய்யும் 18 மாதங்களும் சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்கள், மற்றவர்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்ப்பது, மன நிம்மதிக்கு நன்மை பயக்கும், போதை வஸ்துக்களை தவிர்ப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்  திடீர் இழப்பு தவிர்க்கலாம்.

கன்னி லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான கன்னி ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது கன்னி லக்கினத்திற்கு ராகு 1ம் பாவகத்திலும், கேது 7ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

 கன்னி லக்கினத்திற்கு லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு மிகுந்த யோகத்தை இனி வரும் 18 மாதங்களுக்கு வாரி வழங்குகிறார் என்பதில் ஐயம் இல்லை, மேலும் சிறப்பான உடல் நலம் மற்றும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பை வாரி வழங்குகிறார், வெளியூர் மற்றும் வெளிநாடுகள் சென்றுவரும் யோகத்தை இனி வரும் காலங்களில் கன்னி லக்கினத்தை சார்ந்தவர்கள் தடையின்றி பெறுவார்கள், மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கு இது உகந்த காலமாக கருதலாம், உடல் நலம் வெகு விரைவில் குணம் பெரும், வங்கி கடன் பெறுவதற்கும், கடன் பெற்று தொழில் துவங்க சரியான காலம் இது மேலும் மற்றவர்களின் உதவி எதிர்பாராமல் தேடிவரும் என்பது குறிப்பிட தக்கது பொருளாதார ரீதியான வெற்றிகளை குவிக்கும் நேரம் என்றால் அது மிகை இல்லை.

 கன்னி லக்கினத்திற்கு களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேதுபகவான் வாழ்க்கை துணை வழியில் இருந்து சில இன்னல்களை தரக்கூடும், தேவையற்ற விஷயங்களுக்கு வீண் பிடிவாத தன்மையை அதிகமாக தரக்கூடும், முடிந்து போன விஷயங்களுக்காக சச்சரவில் ஈடுபட்டு மன நிம்மதியை வெகுவாக கெடுத்து கொள்ளும் தன்மையை தர கூடும், இருப்பினும் சிறந்த புண்ணிய திரு தளங்களுக்கு சென்றுவரும் யோகம் கிட்டும், சிறந்த ஆன்மீக அன்பர்களின் நட்புறவும், ஆன்மீக பெரியோர்களின் நல்லாசியும் கிடைக்கும், நண்பர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காமல் சில தோல்விகளை சந்திக்க வேண்டி வரும், எனவே கன்னி லக்கினத்தை சார்ந்தவர்கள் களத்திற ஸ்தான அமைப்பில் இருந்து சற்று கவனமாக இருப்பது நலம் தரும்.

குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் சிம்ம லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், இதை போன்றே யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் கன்னி லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696