செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சுய ஜாதக ஆலோசனை, கேள்வி பதில்


கேள்விகள்


1.என் ஜாதகத்தி அனைத்து கிரகாமும்  ராகு கேதுக்குள் அடக்கியுள்ளது இது கால சர்பதோஷமா?

 கேள்வியே தவறாக உள்ளது, கேது ராகுவுக்குள் அனைத்து கிரகங்களும் அடங்கி உள்ளதை, ராகு கேதுக்குள் அடக்கியுள்ளது என்று கூறுகிறீர்கள், இருப்பினும் இது கால சர்ப்ப தோஷம் அல்ல என்பதை தெளிவாக சொல்லலாம், மேலும் 4 ம் பாவகத்தில் அமர்ந்துள்ள ராகு அந்த பாவகத்திற்கு வலிமையும், 10ம் பாவகத்தில் அமர்ந்துள்ள கேது அந்த பாவகத்திற்கு வலிமை அற்ற நிலையையும் தருகின்றனர்.

2.எனது  ஜாதகத்தில் உள்ள யோகங்கள்  மற்றும் அவயோகங்கள் என்ன?என்  எதிர்காலம் எப்படியுள்ளது?

ஜாதகத்தில் 2,4,6,8,9,12ம் பாவகங்கள் பாதிக்கபடுவது அவயோகமாகவும், 1,3,5,7,10,11ம் பாவகங்கள் வலிமை பெறுவது யோக அமைப்பாகவும் கருதலாம், மேலும் 4,7,10ம் பாவக வழியில் இருந்து தங்களுக்கு யோக பலன்கள் பரிபூர்ணமாக நடைமுறைக்கு வரும்.

3.எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் ? திருமணம் தாடைக்கான கரணம் என்ன ?

தங்களுக்கு களத்திர பாவக பலனை ஏற்று நடத்துவதுமான புதன் அந்தரம் எதிர்வரும் ( 02/03/2017 to 21/06/2017 ) வரையிலான காலகட்டத்தில் திருமணம் சிறப்பாக நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது, தங்களது திருமண தாமதத்திற்கு காரணமாக சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவக வலிமை அற்ற தன்மையே முழு முதற்க் காரணமாகிறது, எனவே தங்களுக்கு திருமணம் தாமதமாகவே அமையும்.

4.என்ன பரிகாரம் செய்யவேண்டும் ?

அண்ணதானம் செய்வதும், குல தெய்வ வழிபாடு, சப்த கன்னிமார் வழிபாடும் களத்திர வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

5.நல்ல பண்புள்ள பெண் மனைவியாக அமையுமா ?

நல்ல யோகமுள்ள வாழ்க்கை துணை அமையும், இருப்பினும் வாக்குவாதம் புரியும் குணம் அவர்களுக்கு இயற்கையாக அமைந்திருக்கும்.

6.எப்படிப்பட்ட இடத்திலிருந்து  பெண் மனைவியாக அமையும் ? எந்த திசை இருந்து அமையும் ?

நல்ல வசதி பெற்ற இடத்தில் இருந்து வாழ்க்கை துணை அமையும், தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து மேற்கு, வடக்கு திசையில் இருந்து அமையும், வாழ்க்கை துணையின் ஊர் வெகு தொலைவில் இருக்கும்.

7.அந்த பெண்ணுடன்  பிறந்தவர்கள் எத்தனைபேர் ?

ஒரு சகோதரர் உண்டு

8.பணியில் உள்ள பெண்தான் மனைவியாக அமையுமா?

நிச்சயமாக பணியில் உள்ள பெண்தான் வாழ்க்கை துணையாக அமையும்.

9.எனது பெற்றோர் உடல் நலம் குறித்து விளக்கவும்?

பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை 

10.எனது ஜாதகத்தில்  புத்திரபாக்கியம் எப்படி உள்ளது? எத்தனை  குழந்தை பிறக்கும் ?

பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உண்டு, மூன்று குழந்தைகள் உண்டு.

11.நான் சொந்தத்தொழில் செய்யலாமா அல்லது  வெளிநாடு செல்லவாய்ப்பு உள்ளதா ?

சொந்த தொழில் கூட்டாக செய்யலாம், இருப்பினும் வெளிநாட்டில் மிகசிறந்த யோக வாழ்க்கையை பெற இயலும், எதிர்காலம் தங்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்கும்.


12.எனது ஜாதகத்தில் லக்கினமும் ராசியும்  ஒன்றாக உள்ளது மற்றும் குரு சந்திரனோடு  சேர்த்து  மகரத்தில்  நீச்சம் அடைத்துள்ளதால் குரு பலன்கள் கிடைக்காத ?

சுய ஜாதக அமைப்பின் படி லக்கினம் மிக மிக வலிமையாக இருப்பது தங்களுக்கு மிகுந்த நன்மைகளையும் யோகங்களையும் வழங்கும், லக்கினத்தில் அமர்ந்த கிரகம் நீசம் பெறுவதால் தங்களுக்கு யாதொரு பாதிப்பும் வாராது, மேலும் குரு நீச நிலையை பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கே, தங்களது லக்கினத்திற்கு அல்ல என்பதை கவனத்தில் கொள்க, மேலும் லக்கினம் வலிமை பெறுவது தங்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் வாரி வழங்கும்.

12. என் ஜாதகத்தில்  குருவும்  சந்திரனும்  அதன் பலன் என்னா எப்பொழுது வேலைசெய்யும் ?

புதன் மற்றும் கேது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் இலக்கின பாவக பலன் நடைமுறைக்கு வரும்.

13. மூன்றாம் இடமான மீனத்தி சுக்கிரன்  செவ்வாய் உள்ளது ஆதன் பலன் என்ன?

வீரியமிக்க செயல்பாடுகள், நல்ல அயன சயன சுகம், விளையாட்டு மற்றும் கலைகளில் அதிக ஆர்வம், எதிர்பால் இன கவர்ச்சி, சிறந்த நிர்வாக திறமை, அறிய கலைகளில் தேர்ச்சியை தரும்.


14.  வாக்கிய பஞ்சகம்  முறைப்படி என் ஜாதகத்தில்  10ல்  கேது மற்றும் சனி  சேர்த்து உள்ளது , அனால் திருக்கணித முறைப்படி  10ல் கேது , மற்றும் 11ல் சனி  உள்ளது இதன் பலன்கள் மாறுமா ?

தங்களது சுய ஜாதக அமைப்பின் படி, ஜீவன ஸ்தானம் எனும் 10,11ம் பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்கது, மேலும் மேற்கண்ட இரண்டு பாவகங்களும் சிறிதேனும் பாதிப்பை பெறவில்லை என்பதனால், தங்களுக்கு யாதொரு தீமையும் நேராது என்பதை கவனத்தில் கொள்க, தற்பொழுது நடைபெறும் குரு திசை 1௦ம் வீடு வலிமை பெற்ற சுக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தங்களின் வாழ்க்கையில் ஜீவனம் மற்றும் சுக ஸ்தான வழியில் இருந்து அளவில்லா யோக பலன்களே நடைமுறைக்கு வரும் என்பதால் மகிழ்ச்சி கொள்க, வாழ்த்துகள் 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - தனுசு லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "தனுசு" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                      

தனுசு லக்கினம் :

10ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தனுசு லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, தனசு லக்கினத்திற்கு அதிபதியான குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது தனுசு இலக்கின அன்பர்களுக்கு உகந்தது அல்ல என்றே சொல்லலாம், ஜீவன ரீதியான இன்னல்களை அதிக அளவில் தரக்கூடும், மேலும் கௌரவம் சுய மரியாதை, பதவி ஆகியவற்றிற்கு இன்னல்கள் வர அதிக வாய்ப்புள்ளது, அடிமை தொழில் செய்யும் தனுசு இலக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது, பணிபுரியும் இடத்தில் இருந்து அதிக தொல்லைகள் வர வாய்ப்பு உண்டு, எதிர்பால் அமைப்பினரிடம் அதிக கவனமாக இருப்பது சகல நலன்களையும் தரும், இல்லை எனில் வீண் அவபெயரும் துன்பமும் உண்டாகும், மேல் அதிகாரிகளிடம் சுமுக போக்கை கடைபிடிப்பது தங்களின் ஜீவன வாழ்க்கையில் மேன்மையை தரும், வாக்குவாதத்தை தவிர்ப்பது தங்களின் முன்னேற்றத்தை உறுதி படுத்தும், மேலும் உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள் இருப்பின் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், வீண் விரையத்தை தவிர்க்க உதவும், தொழில் செய்யும் அன்பர்கள் புதிய முயற்ச்சிகளை மேற்கொள்வது மிகுந்த இன்னல்களை தர கூடும், செய்யும் தொழிலில் எவ்வித தடைகளும் ஏற்ப்படாமல் சிறந்த நிர்வாகத்தை மேற்கொள்வது தங்களின் தொழில் ரீதியான வெற்றிகளை உறுதிபடுத்தும், பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்ப்பது சகல நலன்களையும் தரும், கடன் பெற்று செய்யும் தொழில்கள் அல்லது காரியங்கள் தங்களுக்கு மிகப்பெரிய இன்னல்களை தரக்கூடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் தொழில் அல்லது ஜீவனத்தை மேற்கொள்வது தனுசு இலக்கின அன்பர்களுக்கு மிகுந்த பாதுகாப்பை தரும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது, தனுசு லக்கின அன்பர்களுக்கு, வருமான ரீதியான பிரச்சனைகளையும், குடும்ப வாழ்க்கையில் இன்னல்களையும் தரக்கூடும், தங்களின் கட்டுப்பாடு அற்ற வார்த்தைகள் தங்களின் மன நிம்மதியை கேள்விக்குறியாக்கும், வரவுக்கு மீறிய செலவினங்கள் தங்களின் கடன் சுமையை அதிகரிக்கும், தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதே தங்களுக்கு தனசு இலக்கின அன்பர்களுக்கு  நன்மைகளை தரும், வாழ்க்கை துணையுடன் உண்டான பிரச்சனைகளை சுமுகமாக பேசி தீர்வு காண்பதும், முடிந்த அளவு எதிர்வாதம் புரியாமல் இருப்பதும் தங்களின் இல்லறவழ்க்கையை இனிமையாக நடத்த வழிவகுக்கும், மேலும் இதுவரை இருந்த வருமானத்தை விட அதிகபடியான வருமான வாய்ப்புகளை தாங்கள் தேடிகொள்வது மிகுந்த நன்மையை தரும், பெரும்பாலும் தங்களின் வாக்கின் வழியில் இருந்தே இன்னல்கள் வர கூடும் என்பதால், எவரிடம் பேசினாலும் வார்த்தைகளில் கவனம் கொள்வது தங்களுக்கு மிகுந்த நன்மையை தரும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, தனுசு லக்கின அன்பர்களுக்கு இடம் வீடு வண்டி வாகனம் சார்ந்த சிறு விரையங்களை அல்லது சுப  விரையங்களை ஏற்படுத்த கூடும், மேலும் புதிய சொத்துகளை வாங்கும் பொழுதும் வண்டி வாகனங்களை வாங்கும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள்வது நலம் தரும் ஏமாற்றங்களை தவிர்க்க உதவும், தாயார் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்வது நலம் தரும், தேவைகளை வெகுவாக குறைத்துகொல்வதும், ஆடம்பர விஷயங்களை தவிர்த்து விடுவதும் தங்களுக்கு மிகுந்த யோகத்தை தரும், முடிந்த அளவு கோவில் வழிபடு ஆன்மீக ஈடுபாடு தங்களின் இன்னல்களை களைய வழிவகுக்கும், கையில் உள்ள சொத்துகளை விற்று பணம் சேர்க்க உகந்த காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையக்கூடும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய காலம் இது இல்லை எனில் வீண் அவபெயரும், பதவியில் சிக்கல்களும் ஏற்பட கூடும், அதிக அளவில் மன உறுதியுடன் செயல்படுவது எதிர்கால வாழ்க்கையில் தங்களின் முன்னேற்றத்தை அதிகரிக்கும், பொது காரியங்களில் அல்லது மற்றவர் விஷயங்களில் ஆர்வம் செலுத்துவதை தவிர்ப்பது நலம் தரும் மேலும், சுய முன்னேற்றத்திலும் உடல் ஆரோக்கியத்திலும்  மிகுந்த அக்கறையுடன் இருப்பதும், குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்வதும் தங்களின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது, தனசு லக்கின அன்பர்களுக்கு, சிரசு சார்ந்த இன்னல்களை தர கூடும், மேலும் உடல் ரீதியான தொந்தரவுகளும் இன்னல்களும் அதிகரிக்கும், அக உறுப்புகள் சார்ந்த கோளாறுகள் தங்களுக்கு சிறு சிறு இன்னல்களை தரக்கூடும், கடன் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை உடன் இருப்பது நலம் தரும், எதிர்பார்ப்புகள் சில நேரங்களில் நடைபெறாமல் போக வாய்ப்பு உண்டு, மன பயமும் மன கிலேசமும் தங்களின் முன்னேற்றத்தை பாதிக்க கூடும், இருப்பினும் தன வரவு சரளமாக இருக்கும், மற்றவர்கள் செல்வம் தங்களின் கட்டுப்பாட்டில் வரும் என்பதால் கவனமாக கையாள்வது தங்களின் பெயருக்கு புகழ் சேர்க்கும், மறை பொருள் வழியில் இருந்து வருமானம் உண்டாகும், வட்டி தொழில் அல்லது கமிஷன் வியாபாரத்தில் உள்ள அன்பர்களுக்கு அளவில்லா செல்வ சேர்க்கை உண்டாகும், பொது மக்களிடம் அதிக நம்பிக்கையும் ஆதரவும் எதிர்பாராமல் கிடைக்கக் பெறுவீர்கள், போட்டி பந்தையம், தேர்தலில் பிரகாசமான வெற்றி வாய்ப்பும், சிறப்பான எதிர்காலமும் உண்டாகும்.

குறிப்பு :

தனுசு லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - விருச்சிக லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "விருச்சிக" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                      

விருச்சிக லக்கினம்

11ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் ராஜயோக பலன்களை வாரி வழங்குவார் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை 11ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையையும், தெளிவான சிந்தனைகளையும் வாரி வழங்குவார், மனதில் உள்ள எண்ணங்களும் ஆசைகளும் பரிபூர்ணமாக நிறைவேறும், உடல் நலம் மற்றும் மன நலம் விருச்சிக லக்கின அன்பர்களுக்க சிறப்பான நன்மை பெறுவதற்கு உண்டான உகந்த பாதையை அமைத்து தரும், மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், பொது வாழ்க்கையில் தேர்தலில் வெற்றி கிட்டும், மருத்துவ துறையில்  பணியாற்றும் அன்பர்களின் வாழ்க்கையில் சகல நலன்களுக்கும் மிக பெரிய முன்னேற்றமும் உண்டாகும், வியாபாரிகளுக்கு உகந்த யோக காலமாக  இனிவரும் ஒரு வருடம் அமையும், மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் நோக்கி அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு விருச்சிக லக்கின அன்பர்களுக்கு மிக சிறந்த யோக பலன்களை  வழங்க "தேவகுரு"  தயாராக உள்ளார் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையில் சகல யோகங்களையும் இனிவரும் ஒரு வருட காலத்திற்கு விருச்சிக லக்கின அன்பர்களுக்கு குரு பகவான் வாரி வழங்குவார் என்பது விருச்சிக அன்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது, விருச்சிக லக்கின அன்பர்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் நல்கும் அமைப்பாகும், தேர்வுகளில் வெற்றி, பதவி உயர்வு, ஆபரணம் மற்றும் வஸ்திர சேர்க்கை உண்டாகும், புதிய சொத்துக்கள் வண்டி வாகனம், வீடு ஆகியவை எதிர்பாராமல் வந்து சேரும், எடுக்கும் முயற்ச்சிகள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், சுய தொழில் அல்லது வியாபாரம் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் ஒரு வருடம் யோக காலமாக அமையும், புதிய முயற்ச்சிகள் கைகூடி வரும், வீண் மன பயம் அகலும், தெய்வ சிந்தனை மேலோங்கும், திடீர் பயணங்கள் மூலம் அபரிவிதமான லாபங்கள் வந்து சேரும், பல தொழில் செய்யும் யோகமும், செய்யும் தொழில் மூலம் அதிக லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வெளிநாடுகள் அல்லது வெளியூரில் இருந்து நல்ல செய்தியும், திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகும், சிந்தனை செய்யும் காரியங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், இன்சூரன்ஸ் துறையில் உள்ள அன்பர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும், இயற்கையாகவே தொழில் துறையும், தொழில் துறையில் பணியாற்றும் அன்பர்களுக்கும்  மிகுந்த லாபமும் அதிர்ஷ்டமும் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது, விருச்சிக லக்கின அன்பர்களுக்கு அறிவு சார்ந்த முயற்ச்சிகள் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், கல்வி துறையில் உள்ள அன்பர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு உண்டாகும், புதிய கண்டுபிடிப்புகள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு ராஜ யோக வாழ்க்கையை நல்கும், நல்ல புத்திர பாக்கியமும் ஆண் வாரிசும் அமையும், குல தெய்வத்தின் ஆசியினால் வாழ்க்கையில் சகல யோகங்களையும் தங்கு தடையின்றி பெரும் யோகத்தை நல்கும், தடைபட்ட காரியங்கள் யாவும் சிறப்பாக நடைபெறும், எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான திட்டமிடுதல்கள் மற்றும் வழிமுறைகள் நடைமுறைக்கு வரும், ஆன்மீக வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு யோகங்களை வாரி வழங்கும், திருத்தல பயணம் மற்றும் ஆன்மீக பெரியோர் ஆசிர்வாதம் எதிர்பாராமல் அமையும், மன நிம்மதியும் மன நிறைவும் பரிபூர்ணமாக கிடைக்க பெறுவீர்கள், நல்ல அயன சயன சுகத்தையும், இறை அருளின் கருணையும் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு தடையின்றி இனிவரும் காலங்களில் கிடைக்கும், வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவின் மூலம் அறிய பல நிகழ்வுகளை நிகழ்த்த குருபகவான் சஞ்சார நிலை தங்களுக்கு வல்லமையை வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது, விருச்சிக லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் வழியில் இருந்து நிறைய செலவினங்களை வாரி வழங்கும், வருமானம் நிறைவாக வந்த போதிலும் செலவுகளை கட்டுக்குள் வைப்பது குதிரை கொம்பாக இருக்கும், வாக்குவாதம் எதிர்பாராத சில பிரச்சனைகளை தரும், குறிப்பாக வாழ்க்கை துணையுடனான வாக்குவாதம் மிக பெரிய இன்னல்களை தரும், மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அவமானத்தையும், கௌரவ குறைவையும் தரும், செல்லும் இடங்களில் மிகுந்த கவனமுடன் சூழ்நிலைகளை கையாள்வது  தங்களுக்கு சிறந்த நன்மைகளை தரும், அதிகமாக சிந்தனை செய்து செயல்படுவது தங்களின் மன நிம்மதியை  காப்பாற்றும், திருமண தடைகள் நீங்கும் இருப்பினும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் அதிக கவனம் தேவை என்பதை கருத்தில் கொள்க, பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வது தங்களின் வாழ்க்கையில் மிகுந்த  இன்னல்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

விருச்சிக லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 11,3,5,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 10 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - துலாம் லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "துலாம்" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

துலாம் லக்கினம் 

துலாம் லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான், துலாம் லக்கின அன்பர்களுக்கு இனி வரும் ஒருவருட காலம், விரைய ஸ்தான வழியில் இருந்து சில இன்னல்களை தரக்கூடும், குறிப்பாக உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள், வயிறு சார்ந்த தொந்தரவுகள், வீண் விரையம் என்ற வகையில் இன்னல்களை தர கூடும், வீடு நிலம், வண்டி வாகன யோகம் என்ற வகையில் சுப விரைய செலவுகளையும், திருமணம் மற்றும் சுப விசேஷங்கள் என்ற வகையில் செலவுகளையும் தர வாய்ப்புண்டு, விவசாயம் மற்றும் பண்ணை தொழில் செய்ப்பவர்க்ளுக்கு நல்ல வருமானம் வர வாய்ப்பு அதிகம் உண்டு, பயணங்களில் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும், எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, தமது உடமைகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்வதும், பயணங்களில் அதிக பாதுகாப்பை கையாள்வதும், தங்களக்கு திடீர் இழப்புகளில் இருந்து காப்பாற்றும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, தங்களின் தொழில் மற்றும் சொத்து சார்ந்த தொந்தரவுகளை அதிகரிக்க கூடும், மேலும் விரைந்து முடிவெடுக்கும் விஷயங்கள் யாவும் தங்களுக்கு அதிக இன்னல்களையும் துன்பங்களையும் தர கூடும், ஏமாற்றங்கள் அதிக அளவில் வர வாய்ப்பு உண்டு, குறிப்பாக தொழில் தொழிலாளர் மாற்று வேலை ஆட்களுடன் அதிக விழிப்புணர்வுடன் நடந்துகொள்வது நலம் தரும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு நல்ல விருத்தியை தந்த போதிலும், மிகப்பெரிய சட்ட சிக்கல்களை அதிகரிக்கும், வாகன தொழில் விருத்தி அடையும் இருப்பினும் நிலையற்ற தொழில் அமைப்பினை வழங்கும், புதிய சொத்துக்கள் வீடு நிலம் போன்றவற்றை வாங்கும் முன் அதிக கவனம் தேவை, மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது மிகப்பெரிய அவ பெயரையும், பின்னடைவையும் தரக்கூடும், வாழ்க்கை துணையுடன் சுமுக போக்கை கையாள்வது நல்லது இல்லையெனில்  தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்க கூடும்,

 குரு பகவான் தனது 7ம் பார்வையை சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது, துலாம்  லக்கின அன்பர்களுக்கு, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ செய்யும் யோகத்தை தரும், வம்பு வழக்கு, போட்டி பந்தயம் மற்றும் எதிர்ப்புகள் யாவும் அகன்று நன்மைகளும் அதிர்ஷ்டமும் உண்டாகும், இருப்பினும் தீராத மன கவலையையும், குறையையும் தரும், மருத்துவ செலவை தவிர்க்க இயலாது, முதலீடுகளில் இருந்து திடீர் வருமானம் உண்டாக வாய்ப்பு உண்டு, நிம்மதியான உறக்கம் கெடும், வீண் அலைச்சல் தங்கள் உடல் நிலையை வெகுவாக பாதிக்கும், எதிர்பால் இன அமைப்பினரிடம் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், இல்லை எனில் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அவ பெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்குவது, ஆதரவு தருவது இரண்டும் தங்களின் வாழ்க்கையை வெகுவாக பதம்பார்க்கும், உறவுகளின் ஆதரவின்மை தங்களுக்கு நல்ல வாழ்க்கை பாடத்தை கற்று தரும், தாம் உண்டு தமது வேலை உண்டு என்று இருப்பது தங்களின் மனதுக்கும், உடலுக்கும்  சகல நலன்களையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தை வசீகரிப்பது, துலா லக்கின அன்பர்களுக்கு, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வழங்க கூடும், வெளிநாடுகளில் இருந்து அல்லது வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிகப்படியான வருமானம் திடீரென வந்து சேரும், இருப்பினும் விபத்து மற்றும் வீண் செலவுகள் தங்களை வெகுவாக சிரமப்படுத்தும், பெரிய சொத்துக்கள் வாங்க இனிவரும் காலம் வழிவகுக்கும், பொது வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலம் உண்டு, அரசியலில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டாகும், இன்சூரன்ஸ் மற்றும் வாகன காப்பீடு துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றம் மிகுந்த யோக காலம் இதுவாக அமைய  வாய்ப்பு உண்டு, பொதுமக்கள் வழியில் இருந்து அதிகப்படியான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும், வெளிநாட்டில் உள்ள சில அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாக வாய்ப்பு உண்டு, மன வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது சோதனை மிகுந்த காலமாக அமையும், வீண் பேச்சு, வீண் வாதம் தங்களின் இல்லற வாழ்க்கையை  வெகுவாக பாதிக்கும் என்பதால்  மௌனம் காப்பது சகல நலன்களையும் தரும் இல்லற வாசிகளுக்கு, மேலேயும் மனபயம் துலாம் லக்கின அன்பர்களை வாட்டி வதைக்கும்.

 குறிப்பு :

துலா லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 12,4,6,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஜாதக ஆலோசனை : வேலை மற்றும் திருமண யோகம் !


கேள்வி பதில் :

1) எதிர்காலம் எப்படி இருக்கும்? நல்ல வேலை நல்ல சம்பளத்துடன் அமையுமா? வெளிநாடு யோகம் உண்டா ?   

அன்பு சகோதரிக்கு " வணக்கம் " 

தங்களின் சுய ஜாதக அமைப்பின் படி எதிர்கால வாழ்க்கை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, தற்போழுது நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையை வைத்து தெளிவாக அறிந்துகொள்ளலாம், தற்போழுது தங்களுக்கு சுக்கிரன் திசை ( 07/05/2012 முதல் 07/05/2032 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு 2,4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஸ்திர நெருப்பு ராசியான சிம்ம வீட்டின் பலனை ஏற்று நடத்துகிறது, எனவே சுக்கிரன் திசை தங்களுக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இழப்பு, வருமானம் இன்மை வாக்கினால் துன்பம் மற்றும் இன்னல்களையும், 4ம் பாவக வழியில் இருந்து தகப்பனார் மற்றும் சுக போக வாழ்க்கையில் இன்னல்களையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்பு,வீண் செலவு,ஏமாற்றம் மற்றும் மருத்துவ செலவு உடல் நல குறைபாட்டினையும் வழங்கும், 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை, மன நிம்மதி இழப்பு, எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றம் தரும் நிலை, மன அழுத்தம், மன போராட்டம், அனைத்திலும் விரையம் என்ற வகையில் பலன்களை தரும், எனவே தங்களுக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை அவயோக பலன்களை ஸ்திரமாக வாரி வழங்கிகின்றது என்பது மட்டும் உண்மை, மேலும் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில் சந்திரன் புத்தி  ( 06/09/2016 முதல் 07/05/2018 வரை ) 1,9ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சகல நன்மைகளையும் வாரி வழங்கும் லக்கின பாவக வழியில் இருந்து சில அதிர்ஷ்டங்களை முன்னேற்றங்களையும் பெரும் யோகம் உண்டாகும், எடுக்கும் முயற்சிகள் லாபம் தரும் அதிர்ஷ்டகரமான சில நிகழ்வுகள் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

அடுத்து வரும் சூரியன் திசை 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது தங்களுக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து அதாவது குழந்தை பாக்கியம் மற்றும் களத்திர பாவக வழியில் இருந்து அதிக அளவில் ( 200% சதவிகித ) இன்னல்களை வழங்க வாய்ப்பு உண்டு என்பதால், சரியான வாழ்க்கை துணையை தங்கள் தேர்வு செய்வது அவசியமாகிறது.


 2) கல்யாணம் எப்போது நடக்கும்? எப்படி பட்ட துணை அமையும். பரிகாரம் செய்தால் தான் திருமணம் நடைபெறுமா?

தற்போழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை சந்திரன் புத்தியில்  ( 06/09/2016 முதல் 07/05/2018 வரை ) திருமணத்திற்கு உண்டான முயற்சி எடுத்தால் தங்களுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற அதிக வாய்ப்புள்ளது, மேலும் தங்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல், சுய ஜாதகம் வலிமை உள்ள ஒரு வரனை தேர்வு செய்தால் தங்களின் வாழ்க்கை சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், தங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஊரிலேயே இருந்து நல்ல வரன் வர வாய்ப்பு உண்டு, சுய ஜாதகத்தில் 2,7,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்படுவதால் திருமணம் நடைபெற முறையான பரிகாரங்களை நாடுவதே மிகுந்த நன்மைகளை தங்களுக்கு வாரி வழங்கும், குறிப்பாக களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு திருமண தடைகளை ஏற்படுத்தும், இதற்கான பரிகாரங்களை முறைப்படி அறிந்து நலம் பெறுவது அவசியமாகிறது.


3) தற்போது உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்க பட்டுள்ளது. காரணம் என்ன ?

நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு சாதகமாக இன்றி இருப்பதும், சுய ஜாதகத்தில் நெருப்பு மற்றும் மண் தத்துவ ராசிகள் கடுமையாக பாதிக்கப்படுவதும் தங்களுக்கு மிகுந்த இன்னல்களை உடல் மற்றும் மனம் ரீதியாக வாரி வழங்கும், இதற்கான பரிகாரங்களை மேற்கொள்வதும் உடல் மற்றும் மன நலனில் அக்கறை செலுத்துவதும் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.


4) சில சோதிடர்கள் எனக்கு திருமணம் நான்கு ஆண்டுகளுக்க மேல் ஆகும் என்கிறார்கள்? உண்மையில் திருமணம் நடைபெறுமா?

  இந்த கூற்றில் சிறிதும் உண்மை இல்லை தங்கள், சில விஷயங்களில் விரைவாக முடிவு எடுத்தல் எதிர்வரும் 3 மாதங்களில் தங்களுக்கு சிறப்பாக திருமணம் நடைபெறும், தடைகள் யாவும் தகர்ந்து, இனிமையான இல்லறம் அமைய அதிக வாய்ப்பு உண்டு என்பதால் விரைவாக சில முயற்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

5) மாப்பிள்ளை திசை வீடு குடும்பம் படிப்பு ஜாதி வேற்று மதம் இனம் அமையுமா. வேற்று இனத்தில் திருமணம் செய்தால் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள்  ஏற்படுமா?                         

வடகிழக்கு அல்லது வடக்கு சார்ந்த திசைகளில் இருந்து வாழ்க்கை துணை அமையும், மிக அருகாமையில் வாழ்க்கை துணையின் இல்லம் அமைந்து இருக்கும், நல்ல கல்வி மற்றும் சிறப்பான பணியில் இருப்பார், வேற்று ஜாதியில் திருமணம் தங்களுக்கு நன்மைகளை தரும், வேற்று இனத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கையில் யோகமும் முன்னேற்றமும் உண்டாகும்.

6) குழந்தை பாக்கியம் உண்டா?

நிச்சயம் உண்டு முதலில் பெண் குழந்தை அமைய அதிக வாய்ப்பு உள்ளது, இருப்பினும் தங்களது எதிர்கால வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை உணர்ந்து தெளிவாக சொல்ல இயலும்.
                        
7) எனக்கு பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவு இன்றி உள்ளேன். கல்யாண வரன் பார்ப்பதில் நண்பர்களின் ஆதரவுமில்லை. இப்படிப்பட்ட சூழலில் உண்மையில் திருமணம் நடைபெறுமா? 

நிச்சயம் நடைபெறும், தங்களுக்கு திருமணம் சார்ந்த விஷயங்களில் உதவி வரும், குல தெய்வத்தின் ஆசியுடன் வாழ்க்கையில் திருமணம் சிறப்பாக நடைபெறம், எதிர்காலம் தங்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்கும்.

8) ஐயா நான் தற்போது பிறந்த ஊரில் உள்ளேன். குறைந்த வருவாயில் வேலை. நான் வேலை தேடி இடமாற்றம் சென்றால் சிறப்பாக இருக்குமா? 

இது ஒரு "உத்தமமான சிந்தனை" தங்கள் விரைவில் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் செய்வதற்கு உண்டான முயற்சியை மேற்கொள்வது நல்லது, மேலும் தாங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது வெளியூர் அல்லது வெளிநாட்டில் ஜீவனம் செய்ப்பவராக தேர்வு செய்வது சகல நலன்களையும் வாரி வழங்கும், இல்லற வாழ்க்கையில் வரும் யோகத்தை உறுதி செய்யும்.

9) வேலை கிடைப்பதில் மற்றும் வரன் சரியாக அமைவதில்லை மற்றும் வருவதுமில்லை. இடமாற்றம் செய்தால் கல்யாணம் மற்றும் வேலைக்கு சரி வருமா?                         

சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், இடமாற்றம் தங்களுக்கு மிகுந்த யோகத்தை வாரி வழங்கும், குறிப்பாக தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் தேடுவதும், வாழ்க்கை துணையை தேடுவதும் தங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை நன்மைகளையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் பூர்வீக ஸ்தானம் எனும் 5ம் வீடு  பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு அளவில்லா இன்னல்களை வாரி வழங்கும், பூர்வீகத்தில் குடியிருக்கும் வரையிலும், எனவே இதில் இருந்து தப்பிக்க நல்ல உபாயம் தங்களது பூர்வீகத்தில் இருந்து 100 மைல் தொலைவிற்கு அப்பால் சென்று குடியிருப்பது சகல நலன்களையும் வாரி வழங்கும்.
                        
10) என்னுடைய திருமணம் நடைபெறும் பொழுது பெற்றோர் உடன் இருப்பார்களா?                         

நிச்சயம் இருப்பார்கள், இருப்பினும் தங்களது விருப்பப்படி திருமணம் நடைபெறும், இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

11) திருமணம் வேலை மற்றும் எந்த வேலையிலும் தடைகள் இருப்பதை களைய பரிகாரம் உள்ளனவா?

தங்களது சுய ஜாதகத்தில் 3,5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சகோதரம்,பூர்வபுண்ணியம் மற்றும் களத்திர வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், மேலும் 2,4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்பம்,சுகம்,ஆயுள் மற்றும் விரைய பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை தரும் அமைப்பாகும், எனவே மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும், மேற்கண்ட பாவக வழியில் இருந்து நன்மைகளை பெறவும், முறையான பிரீதி பரிகாரங்களை பற்றி நேரில் வந்து தெளிவாக ஆலோசனை பெற்று, தங்களது வாழ்க்கையில் சகல நலன்களையும் பெற "ஜோதிடதீபம்" வாழ்த்தி வரவேற்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

குரு திசையில் திருமண தடைகள் ஏற்ப்பட காரணம் என்ன? திருமணம் எப்பொழுது நடைபெறும் ?


திருமணம் நடைபெறாமல் தடைகளையும் தாமதங்களையும் சந்திக்கும் ஒவ்வொரு ஜாதகருக்கும் ( ஆண் பெண் ) சுய ஜாதக வலிமை இன்மையே காரணமாக அமையும் என்றால் அது மிகையில், திருமண தடைக்கு காரணமாக அமையும் சில ஜாதக ரீதியான காரணங்களை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே ! 

திருமண தடைக்கு ஜாதக ரீதியான காரணங்கள் :

1) சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் உயிர் உடலாகிய லக்கினம் எனும் முதல் பாவகம், குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம், களத்திர ஸ்தானமான 7ம் பாவகம், அயனசயன ஸ்தானமான 12ம் பாவகம், திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் ஜாதகத்தில் வலிமை அற்று காணப்பட்டால், நிச்சயம் சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

2) சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம், 7ம் வீடான துலாம், 12ம் வீடான மீனம் ஆகியவைகள் கடுமையாக பாதிக்கப்படுமாயின், சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

3)  திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் உள்ள திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம், பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினாலோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலோ, சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

4) திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் கோட்சார கிரகங்களினால், 1,2,7,12ம் பாவகங்கள் பாதிக்கப்படுமாயின் சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

5) திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் சுய ஜாதகத்தில் மேற்கண்ட விஷயங்கள் யாவும் இல்லாத பொழுது, ஜாதகரே தனது சுய ஜாதகத்தை யோக பங்கத்திற்கு காரணமாக இருந்தால் ( சகவாச தோஷம் ) சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

6) திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் தமக்கு வரும் யோக பலன்களை வேண்டாம் என்று உதறும் தன்மை ( பல காரணங்களால் ) கொண்டு  இருப்பாரெனில் சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

இதை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : துலாம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 1ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகிக்கு வயது 28 நடந்துகொண்டு இருக்கின்றது, திருமணத்திற்க்காக எடுத்த முயற்ச்சிகள் யாவும் தோல்வியில் முடிவடைந்து விட்டது, மேலோட்டமாக ஜாதகத்தை பார்க்கும் பொழுது எவ்வித தோஷமும் அற்ற ஜாதகமாக தெரிந்தாலும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களில் குடும்பம் மற்றும் ஜீவன ஸ்தானத்தை தவிர மற்ற அணைத்தது பாவகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதும், 1,5,7 மற்றும் 11ம் வீடுகள் 200% விகித இன்னல்களை தரும்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது கவலைக்கு உரிய விஷயமாகும், மேலும் கடந்த ராகு திசை ஜாதகிக்கு பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான (3,9ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் ) பலனை ஏற்று நடத்தியது ஜாதகியின் வாழ்க்கையில் திருமண முயற்ச்சிகளில் மிகப்பெரிய பின்னடைவை தந்தது, இருப்பினும் தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்க தக்கது ( 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் ) மேலும் தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி ஆயுள் பாவகமான 8ம் பாவக பலனை ( 4,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் )  ஏற்று நடத்துவது இன்னல்களை தரும் அமைப்பாகும்.

மேற்கண்ட ஜாதகிக்கு திருமண தாமதம் ஆக காரணங்கள் கீழ்வருமாறு வகை படுத்தலாம்.

1) சுய ஜாதகத்தில் 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் , குறிப்பாக களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் ஜாதகிக்கு திருமண தடைகளை வழங்குவதற்கு முழு முதற் காரணமாக அமைகிறது, ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மேஷ ராசியில் அமைவது, தெளிவான முடிவுகளை ஜாதகி மேற்கொள்ள இயலாத சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகியின் சுய முடிவுகள் தாமதங்களையும் இன்னல்களையும் வழங்கும்.

2) கடந்த ராகு திசை ( விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தி ) ஜாதகிக்கு திருமண வாய்ப்புகளை வெகுவாக தடை செய்தது, தற்போழுது நடைபெறும் குரு திசை ஜீவன ஸ்தான வழியில் மட்டும் நன்மைகளை தருகிறது, குரு திசையில் தற்போழுது நடைபெறும் சனி புத்தியும் ஜாதகிக்கு சாதகமான அமைப்பில் இல்லை என்பது வருந்தத்தக்கது.

3) நடைபெறும் குரு திசை நன்மையை வழங்கி, சனி புத்தி இன்னல்களை தருவது திருமண முயற்ச்சிகளை தடை செய்கிறது, மேலும் கேட்சார கிரக நிலையும் ஜாதகிக்கு சாதகமாக இல்லை.

4) அடிப்படையில் சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமை இழந்து காணப்படுவதும், களத்திர ஸ்தானம் பாதிக்கப்படுவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம், 7ம் வீடான துலாம், 12ம் வீடான மீனம் ஆகியவைகள் கடுமையாக பாதிக்கப்படுவதும், ஜாதகிக்கு இல்லற வாழ்க்கை அமைவதில் அதிக தடைகளையும் தாமதங்களையும் வழங்குகிறது, 

ஜாதகிக்கு திருமணம் கைகூடும் கால நேரம் :

தற்போழுது நடைபெறும் குரு திசை, சனி புத்தியில் எதிர்வரும் செவ்வாய் அந்தரத்தில் ( 26/01/2017 முதல் 21/03/2017 வரை ) திருமண வாய்ப்புகள் கைகூடி வரும், கூடி வரும் நல்ல வாய்ப்பினை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டு ஜாதகிக்கு நல்ல இல்லற வாழ்க்கையை அமைத்து தருவது அவசியமாகிறது, இதை தவிர்த்தால் குரு திசை சனி புத்தியில் வரும் குரு அந்தரத்திலோ, அதற்க்கு அடுத்து வரும் புதன் திசை புதன் புத்தியிலோ ஜாதகிக்கு திருமணம் கைகூடி வரும் வாய்ப்பு உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும்.

குறிப்பு :

ஜாதகிக்கு சுய ஜாதகம் சற்று வலிமை குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு, தமக்கு வரும் வரன் ஜாதகத்தை வலிமை மிக்கதாக தேர்வு செய்வது, தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், மாறாக வலு குறைவான வரன் ஜாதகத்தை தேர்வு செய்தால், தாம்பத்திய வாழ்க்கையில் பல இன்னல்களை ஜாதகி எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 31 ஆகஸ்ட், 2016

சுக்கிரன் திசை வழங்கிய அவயோகமும், ஜாதகரின் கலைத்துறை மோகமும் !




சுய ஜாதகத்தில் ஒருவருக்கு சுக்கிரன் திசை நடைமுறைக்கு வரும் பொழுது, சம்பந்த பட்ட ஜாதகருக்கு, ஆலோசனை வழங்கும் அன்பர்கள் சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் இனி வரும் காலங்களில் ஜாதகர் பெறுவார் என்றும், அவரது கனவுகளும் லட்சியங்களும் தங்கு தடையின்றி நிறைவேறும் என்றும், வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோக நிலை சுக்கிரன் திசை காலங்களில் ஜாதகருக்கு ஏற்படும் என்று சொல்வது உண்டு, பொதுவாக பார்க்கும் பொழுது சுக்கிர திசை நடைமுறையில் உள்ள அன்பர்களுக்கு இது பெரும் மகிழ்வையும் பேரானந்தத்தையும் நிச்சயம் தரும், இதை வேத வாக்காக கொண்டு சுய ஜாதக வலிமையை அறியாமல் சம்பந்தப்பட்ட ஜாதகர் சில முடிவுகளை மேற்கொண்டால், எதிர்பாராத இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், ஒருவேளை நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களும் நிச்சயம் தரும், மாறாக பாதிக்கப்பட்ட பாவக பலனையே, பாதக ஸ்தான பலனையே நடைபெறும் சுக்கிரன் திசை ஏற்று நடத்தினால் ஜாதகர் கதி அதோ கதிதான்.

சுக்கிரன் திசை தரும் நன்மை மற்றும் தீமையை பற்றி கீழ்கண்ட ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 3ம் பாதம் 

ஜாதகரின் லட்சியம் கலை துறையில் இயக்குனராக பிரகாசிப்பது, சுய ஜாதக வலிமை நிலை அதற்க்கு முரணாக அமைந்துள்ளது, ஒருவர் கலை துறையில் பிரகாசிக்க சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகமும், லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகமும், நீர் தத்துவ ராசிகளும் மிகவும் வலிமை பெற்று இருப்பது அவசியம், மேலும் ஜாதகர் கலை துறையில் முயற்ச்சி செய்யும் காலத்தில் அப்பொழுது நடைமுறையில் உள்ள திசை மற்றும் புத்திகள் வலிமை பெற்ற 5,11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரை குறுகிய காலத்தில் தனது லட்ச்சியங்களை  அடைவதற்கு வழிவகுக்கும், மேலும் இயக்குனராக பிரகாசிக்க சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்களும் மிக மிக வலிமை பெறுவது அவசியமாகிறது, மேலும் ஜாதகர் கலை துறையில் முயற்ச்சி செய்யும் காலத்தில் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஜாதகருக்கு சாதகமான அமைப்பில் இருப்பின் ஜாதகரின் வெற்றி நிச்சயம், மாறாக நடைபெறும் திசாபுத்திகள் ஜாதகருக்கு பாதகமாக இருந்து விட்டால் ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் வீண் விரையமாக மாறிவிட வாய்ப்புண்டு.

மேற்கண்ட ஜாதகர் கலை துறையில் முயற்ச்சி செய்த காலகட்டங்களில் நடைமுறையில் சுக்கிரன் தனது திசையை ( 03/02/1994 முதல் 03/02/2014 வரை ) நடத்தியுள்ளார், மேலும் சுக்கிரன் தான் ஏற்று நடத்திய பாவக தொடர்பானது 6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை முழு வீச்சில் வழங்கி உள்ளது, ஜாதகரின் விரைய ஸ்தானம் ( மிதுன ராசியில் 81:39:17 பாகையில் ஆரம்பித்து கடக ராசியில் 110:43:48 பாகையில் முடிவடைகிறது ) மிதுனம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரியம் மற்றும் முயற்ச்சி ஸ்தானமாக அமைந்து பாதிக்கப்படுவதும், கடகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக அமைந்து பாதிக்கப்படுவதும் ஜாதகருக்கு சாதகமான விஷயம் அல்ல என்பதை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் ஜாதகரின் 12ம் பாவகம் மிதுனம் மற்றும் கடகம் எனும் இரண்டு ராசிகளில் வியாபித்து இருப்பது உபய கற்று தத்துவ ராசியான மிதுனத்தில் 12ம் பாவாகம் அமைவது ஜாதகர் எடுக்கும் முயற்ச்சியில் தோல்வியையும், சர நீர் தத்துவ ராசியான கடகத்தில் 12ம் பாவகம் வியாபித்து இருப்பது ஜாதகரின் கற்பனை வளத்தில் குறைவையும் தருகிறது, மேலும் இது சார்ந்த விஷயங்களில் ஜாதகர் ஈடுபடும் பொழுது வீண் விரையத்தை சந்திக்கும் சூழ்நிலையை தருகிறது.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகர் தனிப்பட்ட சுய தொழில் மூலம் வெற்றி பெற இயலாது என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் கவுரவம் அந்தஸ்து மற்றும் சுய மரியாதை ஜாதகருக்கு வெகுவாக பாதிக்கப்படும், என்பதால் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை உள்ள பாவகம் எதுவென்று அறிந்து அது சார்ந்த முயற்ச்சிகளை மேற்கொள்வது சகல நன்மைகளையும் தரும், மேற்கண்ட ஜாதகருக்கு நடைபெற்ற சுக்கிரன் திசை 6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை வழங்கி இருக்கின்றது, தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ( 03/02/2014 முதல் 03/02/2020 வரை ) 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனையே வழங்கி கொண்டு இருப்பது ஜாதகர் பெரும் ஜீவன வழியிலான இன்னல்களை தெளிவாக்குகிறது, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களான குடும்பம் மற்றும் வீரிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் நன்மைகளை பெறுவதற்கு முயற்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

 1,2,4,7,9,11ம் வீடுகள் வாக்கு ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்க தக்கது, மேலும் 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக சிறந்த யோக அமைப்பாகும்,  இதனால் ஜாதகருக்கு வாக்கு,குடும்பம் மற்றும் வியாபாரம், ஏஜென்சி தொடர்புகள் வழியில் இருந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும், ஜாதகருக்கு வலிமை பெற்ற 2,3ம் பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் யாதென்று அறிந்து அந்த காலகட்டங்களில் 2,3ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பெற முயற்ச்சிப்பதே உகந்ததாக அமையும், சுய ஜாதக வலிமைக்கு உகந்த ஜீவனங்களை ஜாதகர் தேடும்பொழுது ஏமாற்றங்கள் நிச்சயம் வர வாய்ப்பில்லை என்பதை ஜாதகர் உணர்வது அவசியமாகிறது, விரைய ஸ்தான பாவகத்திற்கு ஒரு வலிமை உண்டு, மிதமிஞ்சிய கற்பனைகளை வாரி வழங்கும் வல்லமை பெற்றது, சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகரின் கற்பனை திறன் மூலம் பல அறிய நிகழ்வுகளை நிகழ்த்த இயலும், 12ம் பாவகம் வலிமை அற்று இருப்பின் வீண் கற்பனைகளையும், நிறைவேறாத கனவுகளையும் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் நிலையை தந்து விடும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 5,8ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகரை கலை துறையில் பிரகாசிக்க இயலாத சூழ்நிலையை தந்து விட்டது, மேலும் நடந்த சுக்கிரன் திசை தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை இரண்டும் ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட 12ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது, ஜாதகரின் முயற்ச்சிகள் யாவற்றையும் கானல்நீர் ஆக மாறிவிட்டது, இருப்பினும் சுய ஜாதகத்தில் 2,3ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஸ்திரமான நன்மைகள் நடைமுறைக்கு வரும் என்பதை ஜாதகர் கவனத்தில் கொள்வது நல்லது, எனவே ஜாதகர் 2,3ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை, கால நேரம் மற்றும் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் எதுவென்று அறிந்து வாழ்க்கையில் நலம் பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஜாதக ஆலோசனை : ராகு திசை தரும் பலன்களும், சுய ஜாதக வலிமையும் !

ஜாதக பொது பலன்கள்


லக்கினம் : துலாம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்


ஜாதகத்தில் வலிமையான பாவகங்கள்

1,2,3,4,5ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நண்பர்கள் ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, வெளிநாடுகளில் யோக வாழ்க்கை தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் சிறப்பான வாழ்க்கை சூழ்நிலை, அரசியலில் வெற்றி, தர்ம சிந்தனை, சிறந்த மனப்பக்குவம், பொருத்தன்மையான நடவடிக்கைகள், அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம், செய்யும் காரியங்களில் அதிக கவனம், விரோதிகள் அற்ற வாழ்க்கை, கூட்டு முயற்சிகளில் அபரிவிதமான லாபங்கள், திருமணம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் செல்வாக்கு மற்றும் ஆதரவு, அரசியலில் வெற்றி, வெளிநாடுகளில் இருந்து வரும் ஜீவன முன்னேற்றம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் வரும் லாபம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

2ம் பாவக வழியில் இருந்து கூட்டாளிகள் மற்றும் கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான லாபம், வெளிநாடு வேலை வாய்ப்பு, வெளிநாடுகளில் நல்ல வருமான வாய்ப்பு, பேச்சின் மூலம் வெற்றி, ஒப்பந்த தொழில்களில் அபரிவிதமான லாபங்கள், பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவின் மூலம் திடீர் முன்னேற்றம் பெரும் யோகம், எதிர்பால் அமைப்பினர் மூலம் வருமான வாய்ப்புகள், அனைவரின் ஆதரவும் கிடைக்கும் தன்மை, எதிரிகளுக்கு தோல்வியை பரிசளிக்கும் வல்லமை, சட்டத்தின் ஆதரவு கிடைத்தல், வழக்குகளில் வெற்றி, செய்யும் தொழில் அல்லது பணியில் முதல் நிலையை பெரும் யோகம், திடீர் பதவி உயர்வு, சிறப்பு மிகுந்த குடும்ப வாழ்க்கை, இனிமை நிறைந்த வார்த்தைகள் மற்றும் பேச்சு திறமை, வேகமிக்க துல்லியமான செயல் மூலம் நிச்சய வெற்றியை பெரும் யோகம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் எடுக்கும் செயல்கள் வெற்றி பெரும் யோகம், சகோதர வழியில் ஆதரவு, தீர்க்கமான வாத திறமை, திருமணம் மூலம் நிறைவான அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நல்லுறவு, பொது வாழ்க்கையில் வெற்றி, விவேகத்துடன் கூடிய வீரம், இளமையில் திருமண யோகம், வீரியமிக்க செயல்திறன், பயணம் மூலம் லாபம், விவசாயம் மூலம் நல்ல அதிர்ஷ்டம், உல்லாச விரும்பி, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, வியாபரம் செய்வதின் மூலம் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் பெரும் அமைப்பு, குறுகிய காலத்தில் தனவந்தன் ஆகும் யோகம், எதிர்பால் அமைப்பினரிடம் மிக எளிதாக பழகும் வாய்ப்பு, வருமுன் உணரும் சக்தி, செய்வதை திருந்த செய்யும் யோகம், திட்டமிடும் விஷயங்களை வெற்றிகரமாக முடிக்கும் வல்லமை பெற்றவர்.

4 ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வாழ்க்கை துணையுடன் இனிமையான வாழ்க்கையை பெரும் யோகம் உண்டாகும், சாதுர்யமாக சொத்து சுகங்களை சேர்க்கும் வல்லமை, சாமதானம் மூலம் மிகப்பெரிய சொத்து சுக சேர்க்கை உண்டாகும், வீடு,வண்டி வாகன யோகம், வீடு கட்டி வாடகைக்கு அல்லது விற்ப்பனை செய்யும் யோகம், சொந்த பந்தங்கள் மூலம் அதிர்ஷ்டம் பெரும் யோகம், வெளிநாடுகளில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்யும் தன்மை, பெரிய மனிதர்கள் மூலம் நல்ல லாபம், பெற்றோர் வழி ஆதரவை பெரிய அளவில் பெரும் யோகம், தாய் வழியில் இருந்து நல்லாசிகளும், முன்னேற்றத்தையும் பெரும் அமைப்பு, பொது வாழ்க்கையில் முன்னேற்றம், புதிய சொத்துகளை சுயமாக வாங்கும் யோகம், நல்ல குணம், அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்ளும் அமைப்பு, சுக போகங்களுக்கு குறைவில்லா யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தீர்க்கமான அறிவு திறன்,  சமயோசித புத்திசாலித்தனம், வருமுன் உணரும் அதீத சக்தி, கற்ற கல்வி வழியில் இருந்து யோகம் பெரும் அமைப்பு, தன்னம்பிக்கை குறையாத செயல்பாடுகள், மெய் பொருள் காணும் அறிவு திறன், எவரிடமும் ஏமாறாத குணம், கூட்டாளியின் ஆதரவு பொதுமக்கள் ஆதரவு, தமக்கு வரும் இன்னல்களை மிக எளிதாக கையாளும் வல்லமை, பொது காரியங்களில் ஆர்வம் மற்றும் அதன் வழியில் இருந்து ஜாதகர்  பெரும் யோக வாழ்க்கை, எதிர்ப்புகள் மூலமும் நன்மையை பெரும் யோகம், குல தேவதையின் பரிபூர்ண நல்லாசிகள், நல்ல குழந்தை பாக்கியம், செல்லும் இடங்களில் எல்லாம் பெரும் சிறப்பான வரவேற்ப்பு, தனது அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் அனைத்தையும் சாதிக்கும் யோகத்தை தரும்.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் தடையின்றி தரும், மிகசிறந்த அறிவு திறன், ஆன்மீக வெற்றி, ஆன்மீக பெரியோர்கள் ஆசியை பெரும் யோகம், புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், வேறு இடங்களுக்கு சென்ற ஜீவன வழியில் புகழ் பெரும் யோகம், தன்னிறைவான வசதி வாய்ப்புகளை பெரும் யோகம், எந்த ஒரு சூழ்நிலையிலும் ஜாதகருக்கு உதவ வரும் நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்கள், எடுக்கும் முயற்ச்சிகளில் இறை அருளால் பெரும் வெற்றி வாய்ப்புகள், பந்தையம் மற்றும் போட்டிகளில் நிச்சய வெற்றி, பரோபகரமான செயல்பாடுகள், மற்றவர்களுக்கு உதவும் மனபக்குவம், சிந்தனை மூலம் வாழ்க்கையில் வெற்றிகளை படிபடியாக பெரும் யோகம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

10 ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் சுய ஜீவன வெற்றிகளை அதிகரிக்கும், தீர்க்கமான வாத திறமை மூலம் வெற்றிகளை பெரும் யோகத்தை தரும், மேலும் உத்தியோகம், வியாபரம், மற்றும் தொழில்களில் வெற்றி மேல் வெற்றி பெரும் யோகத்தை தரும், ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று கடக ராசியில் அமைவது, உணவு பொருட்கள் சார்ந்த தொழில்களில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், மனிதர்களுக்கு தேவையான உணவு பெருட்கள் சார்ந்த எந்த ஒரு தொழிலையும் தேர்வு செய்து நடத்தினால், ஜாதகருக்கு அபரிவிதமான வருவாயினை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கும், செய்யும் தொழிலில் நல்ல அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் ஜாதகர் சிறப்பாக பெறுவார், கௌரவம் குறையாத யோக வாழ்க்கை உண்டாகும், பொறுப்பு மிக்க பதவிகளை அலங்கரிக்கும் யோகம் ஜாதகருக்கு நிச்சயம் உண்டு.

11ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து வீடு வண்டி வாகன யோகம் உண்டாகும், அனைத்தும் ஜாதகருக்கு புதியதாக அமையும், உலகில் உள்ள அனைத்து நாகரிக வஸ்துக்களையும் வாங்கும் யோகம் உண்டாகும், புதிய கருவிகள் ஜாதகரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை வாரி வழங்கும், உலகத்திற்கு ஏற்ற வகையில் தனது முன்னேற்றத்தை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டே இருப்பர் என்பது கவனிக்க தக்கது, நிம்மதியான யோக வாழ்க்கை உண்டாகும், ஜாதகர் மனதில் நினைக்கும் நன்மைகள் யாவும் நிச்சயம் நடைமுறைக்கு வரும், எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கையும், அனைவராலும் நன்மைகளை பெரும் யோகத்தையும் தரும், தாய் செய்த புண்ணியத்தின் பலனை ஜாதகர் சிறப்பாக பெறுவார்.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு உடல் சார்ந்த சிறு சிறு தொந்தரவுகளை தரும், மருத்துவம் மூலம் குணமடையும், தேர்வு,போட்டி,பந்தயம் மற்றும் வழக்குகளில் வெற்றி கிட்டும், பிறருக்கு ஜாதகர் சில நேரங்களில் தொல்லை கொடுக்கும் நிலை உருவாகலாம், எதிரிகளுக்கு இன்னல்களை தரும் ஜாதகர், கடன் கொடுப்பது பெறுவது இரண்டு விஷயங்களும் ஜாதகருக்கு மிகுந்த துன்பத்தை தர கூடும், ஜாமீன் கொடுப்பது ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை வரவழைக்கும்.

7 ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பித்தம் சார்ந்த தொந்தரவுகளை வாரி வழங்கும், தனது புத்திசாலித்தனம் சில நேரங்களில் ஜாதகருக்கு பயன் தாராது, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் ஜாதகருக்கு செய்யும் நன்மையான விஷயங்களை ஜாதகர் தவறாக புரிந்துகொண்டு எடுக்கும் முடிவுகள் யாவும் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் இன்னல்களை தர கூடும், அதிக அளவில் ஜாதகர் பொறுமையை கடைபிடிப்பது சகல நன்மைகளையும் தரும், ஜாதகர் செய்யும் விஷயங்கள் இலை மறை காய்மறையாக இருப்பதே சகல நன்மைகளையும் தரும், நண்பர்களையும் வாழ்க்கை துணையையும் தேர்வு செய்யும் பொழுது ஜாதகர் மிகுந்த கவனத்துடன் இருப்பது நெடுநாள் நன்மைகளை வாரி வழங்கும், யாரிடமும் மிகுந்த எச்சரிக்கையாக பழகுவது ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் நன்மைகளை வாரி வழங்கும்.

8,12 ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னல்கள் 8ம் பாவக வழியில் இருந்து வழங்கும், விபத்து, மருத்துவ செலவினங்கள், மன குழப்பம், திடீர் முடிவுகளால் வரும் பேரிழப்பு, அறுவை சிகிச்சை மூலம் குணம் பெரும் கட்டாயம், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இன்மை, சுய முடிவுகள் சில நேரங்களில் ஜாதகருக்கு இழப்புகளை தர கூடும், உடல் நலனில் அதிக அக்கறை கொள்வது ஜாதகருக்கு நன்மையை தரும், பாதுகாப்பான பயணம் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும்.

12 ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிறைய விறைய செலவுகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பங்கு சந்தை மூலம் திடீர் இழப்புகளை சந்திக்கும் நிலையை தரும், திருப்தி அற்ற மன நிலை, அதிக மன போராட்டம், வீண் மன பயம் ஆகியவை ஜாதகரின் முன்னேற்றத்திற்கு மிகபெரிய தடைகளை தரும், சொத்துகளை நிர்வகிப்பதில் அதிக அக்கறை செலுத்துவது ஜாதகருக்கு வரும் பெரிய இழப்புகளை தவிர்க்க உதவும், மன நிம்மதி பெற தியானம், யோகம் பயில்வது சகல நலன்களையும் தரும், ஜாதகர் எக்காரணத்தை கொண்டு தீய பழக்க வழக்கங்களுக்கு ஆர்படுவது மிகுந்த இன்னல்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் :
( 04/08/2005  முதல் 04/08/2023 வரை )

ஜாதகருக்கு தற்ப்பொழுது நடைபெறும் ராகு திசை 8,12 ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது உகந்தது அல்ல என்ற போதிலும், மேற்கண்ட பாவக வழியில் இருந்து பாதிப்புகள் ஜாதகருக்கு மிக குறைந்த அளவிலேயே இருக்கும், சுய ஜாதகத்தில் 7ல் அமர்ந்த ராகு மிகவும் வலிமையுடன் இருந்த போதிலும், தனது திசையில் 12ம் பாவக பலனை ஏற்று நடத்திடுவது ஜாதகருக்கு நன்மைகளை வழங்காது, ராகு திசையில் தற்போழுது நடைபெறும் கேது புக்தி ( 03/02/2016 முதல் 21/02/2017 வரை ) எடுக்கும் முயற்சசிகளில் வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும், சிறப்பான நபர்களின் தொடர்பு மூலம் ஜாதகரின் உலகம் விரிவடையும், அந்நிய தேசத்து நபர்கள், வேற்று மதத்தினர் உதவிகள் மூலம் நல்ல முன்னேற்றத்தையும் வியாபர விருத்தியையும் பெரும் யோகம் உண்டாகும், ஜாதகர் புதிய யோக வாழ்க்கையை ஆரம்பிக்க ஏற்ற யோக காலம் இதுவே என்று தெளிவாக கூறலாம்.

மேலும் அடுத்து வரும் சுக்கிரன் புத்தி ( 21/02/2017 முதல் 21/02/2020 வரை ) 10 ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அபரிவிதமான தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதால் ஜாதகர் தொழில் ரீதியாக சில திட்டமிடுதல்களை மேற்கொள்வது சால சிறந்து, சுக்கிரன் புத்தி காலத்தில் ஜாதகருக்கு தன்னிறைவான ஜீவன முன்னேற்றம் என்பது 100 சதவிகிதம் துல்லியமாக அமையும் என்பதால், விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளை பெறுவது அவசியமாகிறது, செய்யும் தொழிலில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெரும் யோக காலமாக ராகு திசை சுக்கிரன் புத்தி அமையும், வாழ்த்துகள்

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

மாமனாருக்கு ஆகாத மூல நட்சத்திரமும், சுய ஜாதக பாவக வலிமையையும் !


 திருமண பொருத்தம் காண்பதில் மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்பது ஜோதிட ரீதியாக உள்ள கருத்து, எனவே மூல நட்சத்திரம் கொண்ட பெண்களை, திருமணம் செய்துகொள்ள தகப்பனார் உள்ள வரன்கள் வெகுவாக தயங்குகின்றனர், மூல நடசத்திரம் கொண்ட வதுவை திருமணம் செய்து கொள்ளும் வரனுக்கு தகப்பனார் இல்லாமல் இருப்பது அதி முக்கியமாக கருதபடுகிறது, இதன் உண்மை நிலையை பற்றி கிழ்கண்ட பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, மூல நட்சத்திரம் கொண்ட ஒரு பெண்ணின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொண்டு தெளிவு பெறுவோம், திருமண வாழ்க்கையினை நிர்ணயம் செய்வது தசவித பொருத்தமான நட்ச்சத்திர பொருத்தம் மட்டும் அல்ல என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையே தம்பதியரின் வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கு காரணமாக அமைகிறது, நட்ஷத்திரம் என்ற ஒரு விஷயத்தை மட்டும் கருத்தில் கொண்டு பொருத்தம் காண்பது, சிறப்பான யோகம் உள்ள நல்ல ஜாதகங்களை நாமே தவிர்க்கிறோம் என்பதே உண்மை நிலை.


லக்கினம் : கும்பம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,2,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3,9ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்பு :

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகிக்கு பெரும்பாலான பாவக தொடர்புகள் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகியின் யோக நிலையை தெளிவுபடுத்துகிறது, மேலும் தற்போழுது நடைபெறும் திசையான சூரியன் மட்டும் சற்று சிரமங்களை தந்துகொண்டு இருப்பதால் ( 3,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று சூரியன் திசை விரைய பாவக பலனை வழங்கிக்கொண்டு இருக்கின்றது) , திருமண வாழ்க்கை தள்ளி போகின்றது, நினைத்த காரியங்கள் கைகூடி வாராமல் தாமதம் ஏற்படுகிறது, ஆனால் அடுத்து வரும் சந்திரன் திசை ஜாதகிக்கு 4,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, சந்திரன் திசை ஆரம்பத்தில் இருந்து ஜாதகிக்கு நல்ல யோகங்கள் ஏற்படும், நினைத்த காரியங்கள் கைகூடி வரும், மேலும் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,7ம் வீடுகள் ஜாதகிக்கு மிகவும் வலிமையுடன் இருப்பது, ஜாதகியை திருமணம் செய்துகொள்ளும் அன்பருக்கு மிகுந்த நன்மையையும் யோகத்தையும் வாரி வழங்கும், நல்ல புத்திர பாக்கியம் உண்டாகும், இல்லறவாழ்க்கையில் மகிழ்ச்சியும் யோகமும் உண்டாகும்.

இந்த ஜாதகியை மூல நட்ஷத்திரம் என்ற ஒரே காரணத்துக்காக தவிர்ப்பது முற்றிலும் தவறானதாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஒருவரின் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது அவரின் சுய ஜாதக பாவக வலிமையே அன்றி, நட்ஷத்திரமும் ராசியும் அல்ல என்பதனை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதக வலிமை என்பது மிக சிறப்பாக அமைந்திருப்பது, ஜாதகி மிகுந்த யோகதாரி என்பதை தெளிவு படுத்துகிறது, அடிப்படையில் சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுது, நட்ச்சத்திர பொருத்தத்திற்கு முக்கிய துவம் தர தேவையில்லை என்பதே உண்மை நிலை, மேலும் நட்ச்சத்திர பொருத்தங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை அற்று இருப்பின் தம்பதியரின் வாழ்க்கை மிக சிறப்பாக அமைவதில்லை, அதே சமயம் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருந்து, நட்ச்சத்திர பொருத்தம் இல்லை என்றாலும் தாம்பத்திய வாழ்க்கையில் யாதொரு இன்னல்களும் வர வாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

மேற்கண்ட ஜாதகிக்கு திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை சிறப்ப அமையும் என்பதனை எதிர்வரும் திசை மற்றும் புத்திகள் ஏற்று நடத்தும் பாவக பலன்களில் இருந்து நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும், உதாரணமாக ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் சூரியன் திசைக்கு அடுத்து வரும் சந்திரன் திசை வலிமை பெற்ற 4,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், சந்திரனுக்கு அடுத்து வரும் திசையான செவ்வாய் வலிமை பெற்ற 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், செவ்வாய் திசைக்கு அடுத்து வரும் ராகு திசையும் வலிமை பெற்ற 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், தொடர்ந்து நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் அமைப்பாகும், மேலும் ஜாதகிக்கு 2,7ம் வீடுகள் வலிமை பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சகல யோகங்களையும் ஜாதகியும் பெறுவார், ஜாதகியால் அவரது வாழ்க்கை துணையும் பெறுவார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இந்த ஜாதகிக்கு மூல நட்ஷத்திரம் என்ற போதிலும் சுய ஜாதகம் வலிமை பெறுவது தன்னிறைவான யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

எனவே திருமண பொருத்தம் காண்பதில் நட்ச்சத்திர பொருத்தத்தை மட்டும் கருத்தில் கொண்டு முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதை "ஜோதிடதீபம்" பதிவு செய்ய விரும்புகிறது, மேலும் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையை கருத்தில் கொண்டு திருமண பொருத்தம் காண்பதே தம்பதியரின் யோக வாழ்க்கையை 100% விகிதம் உறுதிப்படுத்தும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ( அவயோகங்கள் ) ஜாதகருக்கு பலன் தராமல் போவதற்கு காரணம் என்ன?


சில அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் ( பாவக வலிமை ) இருந்த போதிலும், ஜாதகர் அதனால் பலன் ஏதும் பெற இயலாமல், வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்து கொண்டு இருப்பர், சில அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் அவயோகங்கள் ( பாவக வலிமை அற்ற நிலை ) இருந்த போதிலு, அதனால் ஜாதகர் எவ்வித இன்னல்களையும் அனுபவிக்காமல் சுக போக வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருப்பர், இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி வருவது இயற்கையே, இதன் உண்மை நிலையை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

ஒருவரது சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் இருப்பது மட்டும் சம்பந்த ஜாதகருக்கு, நன்மைகளையும், வெற்றிகளையும் வழங்கி விடாது, சுபயோகங்கள் வழங்கும் பாவக தொடர்பை, ( நடைமுறையில் உள்ள திசாபுத்திகளோ அல்லது எதிர்வரும் திசாபுத்திகளோ ) ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு  சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், இது சுபயோகங்களுக்கு உண்டான சிறப்பு அம்சம்.

 ஒருவரது சுய ஜாதகத்தில் அவயோகங்கள் இருந்து அந்த அவயோகங்களை வழங்கும் பாவக பலனை ( வலிமை அற்ற பாவகம் ) நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில், சுய ஜாதகத்தில் உள்ள அவயோக பலாபலன்கள் ஜாதகருக்கு நிச்சயம் நடைமுறைக்கு வாராது, மேலும் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான உறவுகளுடன் உள்ள நல்லுறவு பாதிக்கப்படும் அவ்வளவே, எனவே சுய ஜாதகத்தில் உள்ள அவயோக பலாபலன்களை திசாபுத்திகள் ஏற்று நடத்ததே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு " மிகுந்த நன்மையாக " கருதலாம்.

இதை பற்றி இரண்டு உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!

சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தும், அவயோக பலனை அனுபவிக்கும் ஜாதக நிலை :


லக்கினம் : சிம்மம் 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : உத்திரம் 4ம் பாதம் 

இந்த சிம்ம லக்கின ஜாதகருக்கு 1,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கினம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண யோகங்களை அனுபவிக்கும் தன்மையை  தரும், 2,8,10,12ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,8,10,12ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், யோகங்களையும் வாரி வழங்கும், மேலும் 3ம் வீடு லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 11ம் வீடு களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு 3,4,11ம் பாவக வழியில் இருந்து யோகங்களை வாரி வழங்கும் அமைப்பாகும்.

ஜாதகருக்கு 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது 200% மடங்கு கடுமையான இன்னல்களை வாரி வழங்கும் என்பது  இவரது ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட நிலை ஆகும்.

இவரது ஜாதகத்தில் சுபயோக பலன்களை 1,2,3,4,5,8,10,11,12 வீடுகள் ஆகிய 9பாவகங்கள் வழங்குகின்றது.

இவரது ஜாதகத்தில் அவயோக பலன்களை 6,7,9 வீடுகள் ஆகிய 3பாவகங்கள் மட்டுமே  வழங்குகின்றது.

இருப்பினும் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு ( 18/01/2013 முதல் 18/01/2031 வரை ) பாதக ஸ்தானமான 9ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, இது ஜாதகருக்கு பாதக ஸ்தான வழியில் இருந்து 200%  சதவிகித இன்னல்களையும்  துன்பங்களையும் வாரி வழங்கும் அமைப்பாகும், மேலும் இதனால் ஜாதகர் ராகு திசை முழுவதும், வீண் அவப்பெயர், கல்வியில் தடை, தீய செய்கையின் மூலம் தமது ஆரோக்கியத்தை தாமே கெடுத்து கொள்ளுதல், வீண் அலைச்சல், முன்னேற்ற தடை, ஜீவன மேன்மை இன்றி சிரமம் அனுபவிக்கும் தன்மை என்ற வகையில் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

அடுத்து வரும் குரு திசை ஜாதகருக்கு ( 18/01/2031 முதல் 18/01/2047 வரை ) சத்ரு ஸ்தானமான  6ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, இது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், இதனால் ஜாதகரின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படும், கடன் தொந்தரவுகள், மறைமுக எதிரி தொல்லை அதிகரிக்கும், தொழில் முடக்கம் மற்றும் பணியில் எதிர்ப்பு நிரந்தரம் இல்லாத நிலை என்ற வகையில் இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் கற்றுக்கொண்ட தீய பழக்கங்களினால் ஏற்படும் உடல் தொந்தரவுகளை, குரு திசை காலகட்டத்தில் எதிர்கொள்ளும் நிலையை தரும்.

அதற்க்கு அடுத்து வரும் சனி திசை ஜாதகருக்கு ( 18/01/2047 முதல் 18/01/2066 வரை ) 7ம் வீடு களத்திர ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு மிகுந்த மன உளைச்சலையும், மனப்போராட்டத்தையும் வாரி வழங்கும், நிம்மதியற்ற நிலை, வீண் மனபயம் என்ற வகையில் இன்னல்களை தரும், ஏற்படும் விரயத்தை ஜாதகரால் தடுத்து நிறுத்த இயலாது என்பதுடன், அனைவராலும் தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்த போதிலும், நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஜாதகருக்கு வலிமை பெற்ற ( சுபயோகம் ) பாவக பலனை ஏற்று நடத்தாத காரணத்தால், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்த போதிலும் யாதொரு நன்மையையும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வாராது.

சுய ஜாதகம் வலிமை அற்று இருந்தும், யோக பலனை அனுபவிக்கும் ஜாதக நிலை :


லக்கினம் : துலாம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 2ம் பாதம் 

மேற்கண்ட துலாம் லக்கின ஜாதகருக்கு 1,3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், 2,4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்த்திரமான இன்னல்களையும், 6,12ம் வீடுகள் முறையே சத்ரு ஸ்தானத்துடனும், விரைய ஸ்தானத்துடனும் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து மிகுந்த துன்பங்களை, இன்னல்களையும் தரும்.

மேலும் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 7ம் பாவக வழியில் 100% விகித யோகத்தையும்,

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 10ம் பாவக வழியில் 100% விகித யோகத்தையும் வாரி வழங்கும்.

 இவரது ஜாதகத்தில் 1,2,3,4,5,6,8,9,11,12 வீடுகள் ஆகிய 10 பாவகங்கள் அவயோக பலன்களை வழங்குகிறது.

இவரது ஜாதகத்தில் 7,10 வீடுகள் ஆகிய 2 பாவகங்கள் மட்டுமே யோக பலன்களை வாரி வழங்குகிறது.

இருப்பினும் தற்போழுது நடைபெறும் ராகு திசை ( 07/09/2009 முதல் 07/09/2027 வரை  ) ஜாதகருக்கு வலிமை பெற்ற 7,10ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, எனவே ஜாதகருக்கு நல்ல நண்பர்கள், கூட்டாளிகள், பொதுமக்கள் ஆதரவு, பிரபல்ய யோகம், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் நல்ல வாய்ப்புகள், கூட்டு முயற்ச்சியால் பெரும் வெற்றி வாய்ப்புகள், புகழ் மற்றும் அரசு கவுரவம், சமூகத்தில் அனைவரும் மதிக்கும் வண்ணம் அமையும் ஜாதகரின் செயல்பாடுகள், நல்ல ஜீவனம், செய்யும் தொழில் வழியில் இருந்து நல்ல முன்னேற்றம் என்ற வகையில் ராகு திசை முழுவதும் 7,10ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையே ஜாதகருக்கு வாரி வழங்கும்.

அடுத்தது வரும் குரு திசையும் ( 07/09/2027 முதல் 07/09/2043 வரை ) ஜாதகருக்கு வலிமை பெற்ற 7ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது, வரவேற்க தக்க அம்சமாகும், இந்த காலத்தில் ஜாதகர் தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகங்களையும், நண்பர்கள்,கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து அதிக ஆதாயம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தையும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக செல்வ சேர்க்கையையும் தங்கு தடையின்றி பெறுவார், மேலும் குரு திசை முழுவதும் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையே ஜாதகருக்கு வாரி வழங்கும்.

மேற்கண்ட இரண்டு ஜாதகங்களில் யோகம் மற்றும் அவயோகங்கள் இருந்த போதிலும் நடைமுறை மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் முதல் ஜாதகருக்கு பாதகமாகவும், இரண்டாம் ஜாதகருக்கு சாதகமாகவும் அமைவது, " விதி வலியது "  என்பதை தெளிவாக விளங்க செய்கிறது.

முதல் ஜாதகருக்கு சுபயோகங்கள் இருந்தும் அவை நடைமுறைக்கு வாராதது ஜாதகரின் துர்பாக்கிய நிலையையும், இரண்டாம் ஜாதகருக்கு அவயோகங்கள்  இருந்தும் அவை நடைமுறைக்கு வாராதது ஜாதகரின்  அதிர்ஷ்டத்தையும் கட்டியம் கூறுகிறது.

இதைத்தான் பெரியோர்கள் முதல் ஜாதகருக்கு  "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை" என்றும்.

இரண்டாம் ஜாதகருக்கு " தலைக்கு வந்தது தலை பாதுகையுடன் சென்றது " என்றும்  சிலேடையாக சொல்லியிருக்க கூடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

7 ல் ராகு பகவான் களத்திர தோஷத்தை தரும் பொழுது, எதிர்வரும் தனது திசையில் களத்திர பாவக வழியில் இன்னல்களை தருமா?


சுய ஜாதகத்தில் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு வலிமை சேர்க்கும் விதத்தில் ராகு பகவான் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், ராகு பகவான் அமர்ந்த பாவக வழியில் இருந்து யோகங்களையும் நன்மைகளையும் வாரி வழங்கிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை, அதே போல் ராகு பகவான் தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும் அமைப்பில் இருப்பின், ஜாதகர் அவர் தரும் தீய பலாபலன்களில் இருந்து விடுபடுவது சிரமமே, ஒருவரது ஜாதகத்தில் ராகு பகவான் வலிமை பெற்று இருந்தாலோ, வலிமை அற்று இருந்தாலோ தான் தரவேண்டிய பலாபலன்களை நிச்சயம் தரும், ஆனால் அதை தனது தசாபுத்திகளில் தரும் என்று எண்ணுவது முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானது. 

ஒருவருக்கு ராகு திசை நடைபெறும் பொழுது, தான் அமர்ந்த பாவக பலனை தரும் என்பதும், நவ கிரகங்கள் தான் அமர்ந்த பாவக பலனையும், பார்த்த பாவக பலனையுமே தனது திசா புத்திகளில் வழங்கும் என்பதும் முற்றிலும் தவறான கணிப்பே, இதை பற்றி ஓர் பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, தற்பொழுது கேள்விக்கு வருவோம் கிழ்கண்ட ஜாதகருக்கு 7ம் பாவகத்திர்க்கு பாதிப்பை தரும் ராகு, தனது திசையில் 7ம் பாவக வழியில் இருந்து தீமையை தருமா? இதற்கான பதில் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : மீனம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்ராடம் 2ம் பாதம் 

ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான் கடுமையான பாதிப்பை வாரி வழங்குவது உண்மையே, இதனால் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஆரோக்கிய குறைவை பெறுவது உறுதி, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிக இன்னல்களும் பொருள் இழப்பும் உண்டாகும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, பொது வாழ்க்கை மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து இன்னல்களும் துன்பங்களும் எதிர்பாராத நேரத்தில் வரும் என்பது ராகு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதற்கு உண்டான பலாபலன்கள், ஆனால் மேற்கண்ட பலன்களை எதிர்வரும் ராகு திசையில் வழங்கும் என்பது முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானதே ஏனெனில், எதிர்வரும் ராகு திசை பாதிக்கப்பட்ட களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை, எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது.

எனவே ராகு திசை முழுவதும் ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பத்தில் மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை, எதிர்பார்த்த வருமான வாய்ப்புகள் வந்து சேரும் யோகம், வாக்கு வன்மை அதிகரிக்கும், ஜாதகரின் பேச்சிற்கு எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கிடைக்கும், வாக்கின் வழியில் வருமானம் அதிகரிக்கும், கை நிறைவான வருமானமும், அளவற்ற செல்வ சேர்க்கையும் லட்ஷமிகடாட்ஷம் உண்டாகும், ஜாதகரின் 2ம் வீடு சர நெருப்பு ராசியான மேஷத்தில் அமைவதும், ஜாதகருக்கு விரைவான யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகருக்கு களத்திர ஸ்தானத்தை ராகு பகவான் பாதிப்பிற்கு உள்ளாக்கினாலும், தனது திசை மற்றும் புத்திகளில் வலிமை பெற்ற 2ம் பாவக பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், தனது திசாபுத்திகளில் பாதிக்கப்பட்ட பாவக பலனையே வழங்கும் என்பது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகும், மேலும் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் வலிமை பெற்று இருப்பின் தனது திசாபுத்திகளில் யோகங்களையும், நன்மையையும் வாரி வழங்கும் என்பதும் முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதே, நவ கிரகங்கள் தனது திசா புத்திகளில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை கருத்தில் கொண்டு சுய ஜாதகத்திற்கு பலன் காண முற்படுவதே சாலச்சிறந்தது.

மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை நடைமுறைக்கு கொண்டுவரும் திசாபுத்திகள் எது? என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே! 

ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சூரியன் திசாபுத்தி மட்டுமே, எனவே ஜாதகர் சூரியன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில்  களத்திர ஸ்தான வழியிலான இன்னல்களையும் துன்பங்களையும் நிச்சயம் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இந்த காலங்களில்  ஜாதகர் வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள்  வழியில் இருந்து வரும் இன்னல்களை மிக கவனமாக எதிர்கொண்டு நன்மைகளை பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

நவகிரக திசாபுத்திகள் ஒருவரின் சுய ஜாதகத்தில் உள்ள பாவக பலனை ஏற்று நடத்தவே உரிமை பெற்றவை, மேலும் தனிப்பட்ட இயக்கத்தில் நன்மை தீமை பலாபலன்களை வழங்க நவகிரகங்கள் தகுதி அற்றவை என்பதை கருத்தில் கொள்வது நலம், மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெற்று இருப்பது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் திசாபுத்திகள் யாவும் நன்மைகளையே வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை  நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தாமல், பாதிக்கப்பட்ட பாவக பலனை மட்டுமே ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகங்கள் இருந்த  போதிலும் எவ்வித பயனும் இல்லை என்பதை கருத்தில் கொள்வது  அவசியமாகிறது, இதை போன்றே சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை மட்டுமே நவகிரக திசாபுத்திகள் ஏற்று நடத்தினால், பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து யாதொரு துன்பமும் ஜாதகருக்கு நேராது என்பது ஜாதகருக்கு உள்ள சிறப்பு அமசமாகும், இது பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - கன்னி லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "கன்னி" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

கன்னி லக்கினம் 

கன்னி லக்கின அன்பர்களுக்கு லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான், நல்ல தீர்க்கமான அறிவு திறனை வாரி வழங்குவார், உடல் நலம் மற்றும் மன நலம் சிறந்து விளங்கும், ஆரோக்கிய குறைகள் இருப்பின் பூரண குண நலம் பெரும் யோகம் உண்டாகும், நல்ல தன சேர்க்கை உண்டாகும், கடன் பெறுவது கொடுப்பதால் நல்ல லாபம் மற்றும் முன்னேற்றம் உண்டாகும், எதிர்ப்புகள் அகலும், ஜாதகரின் வார்த்தைகளுக்கு நல்ல மதிப்பு மரியாதை உண்டாகும், குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சி உண்டாகும், வியாபாரம் மற்றும் சிறு தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் 1 வருடம் நல்ல வருமான வாய்ப்பை வாரி வழங்கும், போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும், லாட்டரி யோகம் உண்டாகும், எதிரிகளும் நண்பர்கள் ஆகும் யோகம் உண்டு, இருப்பினும் ஜாதகர் தனது சுய முன்னேற்றத்தில் அதிக அக்கறையுடன் செயல்படுவது நல்லது, ஜாதகருக்கே தெரியாமல், மற்றவர்களால் இன்னல்கள் ஏற்பட்ட அதிக வாய்ப்புண்டு, மருத்துவ சிகிச்சை தேவை எனில் உடனடி கவனம் செலுத்தி, குண நலம் பெறுவது அவசியமாகிறது, லக்கின வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த நன்மைகள் பெறுவது இந்த குரு பெயர்ச்சி "கன்னி" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் சிறப்பு அம்சமாகும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க செய்யும், பூர்வீகத்தில் ஜீவனம் செய்யும் அன்பர்களுக்கு தொழில் முன்னேற்றத்தை வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வாரி வழங்கும், தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று பெயரும் புகழும் சம்பாதிக்கும் யோகத்தை வாரி வழங்கும், இதுவரை தொழில் அமையாத கன்னி லக்கின அன்பர்களுக்கு திடீரென தொழில் வாய்ப்புகள் அமையும், புதிய தொழில் துவங்கும் யோகம் உண்டாகும், இருப்பினும் ஜாதகரின் அறிவு திறனை முழு வீச்சில் செயல்படுத்த இயலாத சூழ்நிலையை தரும், புத்திர பாக்கியம் மருத்துவ சிகிச்சையின் பெயரில் கிடைக்க பெறுவார்கள், தொழில் ஞானம் ஜாதகருக்கு இருந்த போதிலும் பொறுமையை கடைபிடிக்கும் நேரம் இது என்பதால் மேல் அதிகாரிகளிடம் சுமூகப்போக்கை கடைபிடிப்பது "கன்னி" லக்கின அன்பர்களுக்கு நன்மைகளை தரும், மேலும் தனது குழந்தைகளின் மீது அதிக அக்கறை கொள்வதும், அவர்களின் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதும் தங்களுக்கும் தங்களது வாரிசுகளுக்கும் நன்மை பயக்கும், குல தேவதை வழிபாடும், புண்ணிய சேத்திர வழிபாடும் தங்களுக்கு சகல வழிகளில் இருந்தும் யோகத்தை வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது, கன்னி லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிக அளவில் மன உளைச்சலை வாரி வழங்கும், பொது காரியங்களில் ஈடுபடுவது தங்களுக்கு கவுரவ குறைகளை தரக்கூடும், தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் ஈடுபடுவது தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய இடர்பாடுகளை வாரி வழங்க வாய்ப்புண்டு, மன நிம்மதி வெகுவாக குறையும், புதிய கூட்டு முயற்ச்சி தங்களுக்கு நன்மைகளை வழங்க வாய்ப்பில்லை என்பதால், அவற்றை தவிர்ப்பது நலம் தரும், வெளியூர் வெளிநாடுகள் செல்லும் பொழுது அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு பயணம் மேற்கொள்வது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும், மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி நிற்பதே தங்களுக்கு சகல நன்மையையும் தரும், குறிப்பாக எதிர்பால் அமைப்பினரிடம் அதிக எச்சரிக்கையாக பழகுவது நலம் தரும், இல்லையெனில் அவர்களால் அதிக துன்பத்திற்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், கன்னி லக்கின அன்பர்களுக்கு குரு பகவானின் 7ம் பார்வை களத்திர பாவகத்திற்கு அதிக நெருக்கடிகளை தருகிறது என்பதால், வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் அதிக கவனமுடன் நடந்துகொள்வது சகல நன்மைகளையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தை வசீகரிப்பது, கன்னி லக்கின அன்பர்களுக்கு பெரிய மனிதர்கள் ஆதரவும், சமூகத்தில் அந்தஸ்தும் உண்டாகும், பல திருத்தலங்களுக்கு புண்ணிய யாத்திரை சென்றுவரும் யோகம் உண்டாகும், நல்ல குரு அமைவார், அதன் வழியில் இருந்து ஜாதகர் சகல நன்மைகளையும் பெரும் யோகம் உண்டாகும், ஆராய்ச்சி மற்றும் பட்டய கல்வியில் தேர்ச்சி உண்டாகும், குடும்ப வாழ்க்கையிலும், வருமான ரீதியாகவும் தங்களுக்கு மிகுந்த முன்னேற்றம் உண்டாகும், இதுவரை பிரிந்து இருந்த தம்பதியர்கள் பெரிய மனிதர்களின் உதவி மூலம் இல்லற வாழ்க்கையில் ஒன்று இணையும் யோகம் உண்டாகும், ஜாதகரின் வார்த்தைகளுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல  வரவேற்பும் ராஜ மரியாதையும் கிடைக்கப்பெறுவீர்கள், மனதில் உள்ள பயம் அகலும், கலையை தொழிலாக செய்யும் அன்பர்களுக்கு யோகங்கள் வந்து சேரும், அரசு மரியாதை மற்றும் கவுரவம் கிடைக்க பெறுவீர்கள், கன்னி இலக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒரு வருட காலம் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஸ்திரமான நன்மைகளும் யோகங்களும் உண்டாகும், மேலும் புதிய கண்டு பிடிப்புகள், புதிய சிந்தனைகள் ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நீண்ட கால யோகங்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

கன்னி லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 1,5,7,9ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696