ஞாயிறு, 18 டிசம்பர், 2016

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் ரிஷபம்!


  சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ரிஷப லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் ராசியான ரிஷப ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மேஷ லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், பொறுமையின் சிகரமாக விளங்கும் ரிஷப லக்கின அன்பர்களுக்கு, இதுவரை களத்திர பாவகத்தில் சஞ்சாரம் செய்த சனி பகவான் தங்களுக்கு மிகுந்த அளவில் இன்னல்களை கடந்த காலங்களில் வழங்கி இருக்க கூடும், குறிப்பாக வாழ்க்கை துணை, எதிர்ப்பால் இனம், பொதுமக்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் என்ற வகையில் இன்னல்களை தந்து இருக்க அதிக வாய்ப்பு உண்டு, தற்போழுது ஆயுள் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனிபகவான் தங்களுக்கு முழு முதல் யோகங்களை நல்கும் வல்லமையை பெறுவதால் யாதொரு துன்பமும் நிகழ வாய்ப்பு இல்லை மேலும், ஜீவன ஸ்தான அதிபதி தனது பாவகத்திற்கு 11ல் சஞ்சாரம் செய்வது அளவில்லா யோகங்களை வாரி வழங்கும் அமைப்பை தரும், இது வரை தொழில் மற்றும் ஜீவன வழியில் இன்னல்களை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு, அளவில்லா யோகங்களை வாரி வழங்குவர், கவுரவம் மற்றும் சுய மரியாதை அதிகரிக்கும், தொழில் வளர்ச்சி என்பது மிக பெரிய அளவில் அமையும், வேலைவாய்ப்பு அற்ற அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி தன்னிறைவான ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும், திடீர் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டங்கள் தங்களை தேடிவரும், சமூகத்தில் நற்பெயரும் அந்தஸ்தும் அதிகரிக்கும், பொதுவாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு யோககாலமாக இந்த சனி பெயர்ச்சி அமையும், தடைபெற்ற காரியங்கள் யாவும் தங்களுக்கு தடையின்றி நடைபெறும், தெளிவான சிந்தனையும், திட்டமிட்ட செயல்பாடுகளும், தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும், வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரிய சொத்துக்களும், தனசேர்க்கையும் வந்து சேரும், வாழ்க்கை துணை, உறவுகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் ஆதரவு தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சுகபோகங்களை வாரி வழங்கும், தங்களின் வாழ்க்கையை மதிப்பு மிக்கதாக மாற்றும் வல்லமை இந்த சனி பெயர்ச்சிக்கு உண்டு என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளலாம்.

1ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (ரிஷபம் ராசி மற்றும் சுக்கிரன் ) ஒரே வர்க்கம் என்பதனால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு, மிதம்மிஞ்சிய கடமை உணர்வை வழங்குவார், பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அனைத்து காரியங்களிலும் வெற்றியை பெரும் யோகத்தை நல்குவார், உடல் ஆரோக்கியம், மன நலம் மேம்படும், புதிய சிந்தனை மற்றும் புதிய யுக்திகள் தங்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் , சுய மரியாதை, புகழ் கீர்த்தி என தங்களின் பெயருக்கு அதிக வலு சேர்க்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், விழிப்புணர்வு மற்றும் சுறுசுறுப்பு  தங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும், பண புழக்கம் அதிகரிக்கும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், உறவுகள் வழியில் தன உதவிகளையும் பெரிய அளவில் கிடைக்க பெரும், தங்களின் வார்த்தைகளுக்கு நல்ல மதிப்பு மரியாதை இருக்கும், வாக்கு வன்மை அதிகரிப்பதால் அனைவரிடமும் நன்மதிப்பு உண்டாகும், திடீர் திருமணம் நடைபெற வாய்ப்பு அதிகம் உண்டு என்பதால், சுப செலவுகள் அதிக அளவில் ஏற்படக்கூடும், கல்வி காலங்களில் உள்ள மாணவ மாணவியருக்கு சிறப்பான திடீர் வெற்றிகளை வாரி வழங்கும், புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும், புதிதாக துவங்கும் தொழில் வழியில் இருந்து நல்ல  வருமான வாய்ப்புகள் வந்து சேரும், உறவுகள் வழியில் இருந்து ஒற்றுமையும், உதவிகளும் தேடிவரும், தங்களின் ஆசைகள் யாவும் திடீரென நிறைவேறும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் தங்களின் புகழ் மிக்க யோக வாழ்க்கையை சிறப்படைய செய்யும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும்.

2ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (மிதுன ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு, கை நிறைவான வருமானங்களை வாரி வழங்குவர், வியாபர விருத்தி எதிர்பாராத யோகங்களை நல்கும், தனிப்பட்ட தேவைகள் யாவும் நிறைவேறும், அதிக செல்வ சேர்க்கை, சௌபாக்கியம் தேடிவரும், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து தங்களின் வாழ்க்கையில் வெற்றிகளை வாரி குவிக்கும் வாய்ப்புகளை இந்த சனி பெயர்ச்சி நல்கும், குறிப்பாக தரகு, கமிஷன், ஏஜென்ட் போன்ற விஷயங்களில் ஜீவனம் செய்யும் அன்பர்களுக்கு குறைவில்லா  வருமான வாய்ப்புகளை வாரி வழங்குவார், அறிவார்ந்த செயல்களில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை சந்திக்கும் யோக காலமாக கருதலாம் , அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் யோகத்தை நல்கும், அடிப்படையில் இருந்து தங்களின் ஜீவன வாழ்க்கை மாற்றம் தரும், தேர்வு, தேர்தல், போட்டி பந்தயங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு நல்லதொரு இடத்தில் இருந்து வாழ்க்கை துணை அமையும், பொதுமக்கள் ஆதரவு தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை வாரி வழங்கும், செய்யும் செயல்கள் யாவிலும் வெற்றியே உண்டாகும், திரை துறை, கலை துறையில் உள்ள  அன்பர்களுக்கு ஏற்றமிகு யோக வாழ்க்கையை இந்த சனி பெயர்ச்சி நல்கும் , தெளிவான சிந்தனையுடன் வரும் நல்ல வாய்ப்புகளை ரிஷப லக்கின  அன்பர்கள் அனைவரும் பெற்று நலம் பெற வேண்டிய நேரம் இது என்றால்  அது மிகையில்லை.

5ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (கன்னி ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு சிறு சிறு நன்மைகளை தந்த போதிலும், புத்திர ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக தங்களின் குழந்தைகள் மற்றும் வாரிசுகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்டவேண்டிய நேரமிது, அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் தங்களின் கவனம் மிக அதிகம் இருப்பது நல்லது, அவர்களுக்கு வரும் உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு  உடனடி தீர்வு காணவில்லை எனில் தங்களுக்கு பொருள் இழப்பும், மன நிம்மதியும் வெகுவாக பாதிக்கும், எனவே இந்த சனி பெயர்ச்சி காலத்தில் தங்களது குல தேவதைக்கு செய்ய வேண்டிய முறைகளை சிறப்பாக செய்து, தங்களுக்கும் தங்களது குழந்தைகளுக்கும் வர இருக்கும் இன்னல்களில் இருந்து விடுபட " ஜோதிடதீபம் " அறிவுறுத்துகிறது, மேலும் தங்களின் சிந்தனை ஆற்றல்  வெகுவாக குறையும் என்பதாலும், சோம்பேறித்தனம் அதிகரிக்கும் என்பதாலும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து வருவது தங்களுக்கும், தங்களை சார்ந்தவர்களுக்கும் மிகுந்த நன்மைகளை தரும், தங்களின் பூர்வீக சொத்துக்களை முறையாக பராமரிப்பதுடன், வீண் விரையம் செய்யாமல் காப்பாற்றுவது தங்களுக்கு நல்லது, மேலும் மற்றவர்கள் ஆலோசனைகள் பேரில் செய்யும் காரியங்கள் யாவும் தங்களின் வாழ்க்கையில் பெரும் இழப்பை தரும் என்பதால், சுய முடிவில் அதிக அக்கறை கொள்வது நல்லது இல்லை எனில் ஏமாற்றங்களை தவிர்க்க இயலாது, கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து தாங்கள் விலகி இருக்க வேண்டிய நேரம் இது, ஆன்மிகம் மற்றும் தெய்வீகத்தில் அதிக நாட்டம் கொள்வது தங்களுக்கு சிறப்புகளை வாரி வழங்கும், தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் பலமுறை ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்துவதே, தங்களின் வாழ்க்கைக்கு உகந்த நன்மைகளை வழங்கும், பொருள் விரயங்களை தவிர்க்கவும், விபத்துகளை தவிர்க்கவும் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணங்களை மேற்கொள்வது தங்களுக்கு நல்லது, ஆன்மீக பெரியோரின் ஆசி தங்களுக்கு வரும் இன்னல்களை  வெகுவாக குறைக்கும், நல்ல மன நிம்மதியை தரும்.

குறிப்பு :

 ரிஷப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 8,1,2,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 8,1,2,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ரிஷப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 16 டிசம்பர், 2016

வாழ்க்கையின் முன்னேற்றங்களை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தின் பங்கு !


"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
  கருதி இடத்தான் செயின்"

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

அந்த கால நேரத்தை துல்லியமாக அறிந்துணர்ந்து செயல்பட உதவுவதே, ஜோதிட சாஸ்த்திரம் என்றால் அது மிகையில், சுய ஜாதகத்தை கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெறக்கூடிய நன்மை தீமை, யோக அவயோகங்களின் தன்மையை பற்றி ஜோதிடகணிதம் கொண்டு தெளிவுற கூற இயலும், குறிப்பாக ஒரு ஜாதகரின், உடல் நலம், மனநலம், கல்வி, தொழில், திருமணம், பொருளாதர முன்னேற்றம், புத்திரபாக்கியம், சொத்துசுகம், வண்டி வாகன  யோகம், புகழ் அந்தஸ்து, மனநிம்மதி மற்றும் ஆன்மீக வெற்றி என ஜாதகர் ஜாதகர் வினவும் ஒவ்வொரு கேள்விக்கும் துல்லியமான பதில்களை நல்குவதே, ஜோதிடசாஸ்த்திரம், சுய ஜாதக ஆலோசனையின் அடிப்படையில் மேற்கொள்ளும் காரியங்கள் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தன்னிறைவான யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, கீழ்கண்ட ஜாதகருக்கு, சுய ஜாதக வலிமையின் அடிப்படையில், வழங்கும் ஆலோசனை பற்றியும், அவரது கேள்விகளுக்கு உண்டான பதில் பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


ஜாதகரின் கேள்வி :

தனது ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை ?

1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கினம் மற்றும் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும்.

2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்பம்,சுகம்,சத்ரு,ஜீவனம் மற்றும் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஸ்திரமான இன்னல்களையும்.

3,5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வீரியம், பூர்வபுண்ணியம், களத்திர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த யோக பலன்களையும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஆயுள் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் ( ஆயுள் பாவகம் சர நெருப்பு தத்துவ ராசி என்பதால் ஜாதகருக்கு பூர்ண ஆயுள் என்றபோதிலும் பித்தம் சார்ந்த உடல் தொந்தரவுகளை ஜாதகர் வாழ்நாள் முழுவதும் சந்திப்பார் )

11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிதம் மிஞ்சிய யோக பலன்களை அளவில்லாமல் வாரி வழங்கும்.

எனவே ஜாதகர் 3,5,7,11ம் வீடுகள் வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளையும்,

2,4,6,8,10,12ம் வீடுகள் வழியில் இருந்து இன்னல்களையும், 1,9ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் அனுபவிக்கும் சூழ்நிலையை தரும்.


தற்பொழுது நடைபெறும் திசா புத்தி வழங்கும் பலன்கள் ?

தற்போழுது நடைபெறும் குரு திசை ( 14/11/2003 முதல் 14/11/2019 வரை ) ஜாதகருக்கு 2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பம்,சுகம்,சத்ரு,ஜீவனம் மற்றும் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கின்றது இதனால் ஜாதகரின் கல்வி பாதிக்கப்படும், வண்டி வாகனங்கள் மூலம் விரைய செலவு, உடல் உபாதை, விபத்து, தொழில் வேலை வாய்ப்பு இன்மை, மனஅழுத்தம் மற்றும் அதிக மன போராட்டங்களை வழங்கும்.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் புத்தி( 14/07/2016 முதல் 20/06/2017 வரை ) 3,5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வீரியம், பூர்வபுண்ணியம், களத்திர ஸ்தான வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சி மற்றும் காரியங்களில் வெற்றி, குல தேவதை மற்றும் புத்திசாலித்தனம் மூலம் யோகம், நண்பர்கள் மற்றும் எதிர்ப்பால் இன அமைப்பினர் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டாகும், எதிர் வரும் சனி திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது நல்லது.

ஜாதகருக்கு உகந்த  தொழில்  

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களான பாக்கியம் மற்றும் லாப ஸ்தானம் தொடர்பான ஜீவன வாழ்க்கையை ஜாதகர் கூட்டாகவோ, அல்லது அடிமை தொழிலாகவோ ஏற்று ஜீவனம் முன்னேற்றம் பெறுவதே உகந்தது, குறிப்பாக ஜாதகர் ஆசிரிய பணி அல்லது வாக்கு வன்மையை தொழிலாக ஏற்று ஜீவனம் செய்யலாம், உணவு பொருட்கள் சார்ந்த தொழிலை தேர்வு செய்து கூட்டு முயற்சியில் நலம் பெறலாம், நீர் தத்துவம் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு பன்மடங்கு லாபம் தரும் இருப்பினும் தனிப்பட்ட முறையில் தொழில் செய்வது உகந்தது அல்ல கூட்டு முயற்ச்சியே நல்ல பலன் தரும், தானிய வியாபாரம் ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும், மிதமிஞ்சிய முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்த்துவது உகந்தது அல்ல என்பதை ஜாதகர் உணர்வது அவசியமாகிறது, மேலும் தனது குடும்பத்தில் உள்ள பெரியோர் சொல்லும் வார்த்தைகளை மதித்து நடந்து வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மேஷம்!



 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

மேஷ லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷ ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மேஷ லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், இதுவரை ஆயுள் பாவகத்தில் சஞ்சாரம் செய்த சனி பகவான் தங்களுக்கு மிகுந்த அளவில் இன்னல்களை கடந்த காலங்களில் வழங்கி இருக்க கூடும், ஆனால் இனி வரும் காலங்களில் தங்களின் லாப ஸ்தான அதிபதி தனது பாவகத்திற்கு 11ம் ராசியில் சஞ்சாரம் செய்வது மீதம் மிகுந்த லாபத்தை தரும், தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் அதிகரிக்கும், புதிய முயற்சிகள் கைகூடி வரும், புதிய வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை தரும், கட்டுப்பாடு அற்ற சுதந்திர வாழ்க்கையில் பரிபூர்ண நன்மைகளை தாங்கள் இனிவரும் காலங்களில் அனுபவிக்கும் யோகத்தை தரும், அரசு அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தில் உள்ளோருக்கு அளவில்லா நன்மைகளையும் யோகத்தையும் வாரி வழங்கும், காவல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த துறைகளில் உள்ளோருக்கு இனிவரும் காலம் பல யோக பலன்களை தார் முனைப்புடன் இருப்பது உறுதியாகிறது, அதிர்ஷ்டம் மற்றும் லாபம் இரண்டும் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை தரும், தங்களின் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் மற்றும் ஸ்திரமான மனஉறுதி அதிகரிக்கும் காலம் இதுவே, மேலும் குறுகிய கால யோக பலன்கள் மிக விரைவாக தங்களுக்கு நடைமுறைக்கு வரும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் தங்களின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தொழில் துறையில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான லாபங்களும் சிறப்பான முன்னேற்றங்களும் உண்டு, தங்களின் ஜீவன ரீதியான திட்டமிடுதல்களுக்கு, இனி வரும் காலம் நல்ல முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, இந்த சனி பெயர்ச்சி லக்கின பாவகத்திற்கு யாதொரு நன்மை தீமையை வழங்க வில்லை என்பதனால் தங்களின் உடல் நலம் மற்றும் மனநலம் சிறந்து விளங்கும், சனி பகவானின் பாக்கிய ஸ்தான சஞ்சாரம், தங்களின் வாழ்க்கையில் நற்பெயரையும், புகழையும் பெற்று தரும், சமூகத்தில் பெரிய மனிதர் என்ற அந்தஸ்த்தை வழங்கும், நல்லோர், ஆன்மீக பெரியோர், முன்னோர் ஆசிர்வாதத்துடன் வாழ்க்கையில் தடைகளை தகர்த்துஎறிந்து முன்னேற்றப்பாதையில் வெற்றிநடை போடும் யோக காலமாக இதை கருதலாம்.

2ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (ரிஷபம் ராசி மற்றும் சுக்கிரன் ) ஒரே வர்க்கம் என்பதனால் மேஷ லக்கின அன்பர்களுக்கு தன்னிறைவான வருமான வாய்ப்பை வாரி வழங்குவார், மேலும் சரளமான பேச்சு திறனையும், அனைவர் இடத்திலும் தனது வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதையையும் வாரி வழங்கும் தாங்கள் சொல்லும் வார்த்தைகளை கேட்டு அதன்படி நடக்க அனைவரும் தயார் நிலையில் இருப்பார்கள், சரளமான பண வசதி, மிதமிஞ்சிய வருமான வாய்ப்பு, குடும்ப வாழ்க்கையில் சந்தோசம், திடீர் திருமண யோகம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, புதிய சொத்து, புதிய வாகனம் வாங்கும் யோகம் என தங்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து எதிர்பாரா லாபங்களை தங்களுக்கு வாரி வழங்கும், வாக்கு பலிதம் உண்டாகும், தங்கள் வழங்கும் வாழ்த்துக்கள் நடைமுறையில் நல்ல பலன்களை தரும், போதுமான அளவிற்கு பொருளாதார வசதி வாய்ப்புகள் உண்டாகும், தெளிவான முடிவுகளை கையாண்டு, வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து சேரும், பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு பதவிகள் தேடிவரும், இதுவரை வாழ்க்கையில் போராட்டங்களை சந்தித்தது கொண்டு இருந்த அன்பர்களுக்கு, எதிர்பாராத திருப்பங்கள் மூலம் நன்மைகள்  நடைமுறைக்கு வரும், குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும், கணவன் மனைவி பிரிவு நிலை மாறி ஒற்றுமையுடன் குடும்ப வாழ்க்கையில் ஜீவிக்கும் யோகம் உண்டாகும், தாம்பத்த்ய வாழ்க்கையில் சகல நலன்களும் உண்டாகும், 6ம் இட சனி பார்வை தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சுப யோகங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும். ( சனி பார்வை இன்னல்களை தரும் என்பது முற்றிலும் தவறான கருத்து, புராண கதைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் ஜோதிட கணிதத்திற்கு இது முற்றிலும் பொருந்தாது, வலிமை பெற்ற சனி பார்வையும் யோகத்தை நல்கும் )

3ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (மிதுன ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் மேஷ லக்கின அன்பர்களுக்கு எடுக்கும் காரியங்களில் வெற்றிகளை வாரி வழங்கும், வியாபாரம் செய்துகொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் தன்னிறைவான வியாபார விருத்தியை நல்கும், பயணங்கள் மூலம் நல்ல முன்னேற்றமும் விருத்தியும் உண்டாகும், இதுவரை தடைபெற்று வந்த காரியங்கள்  யாவும் தடையின்றி நிறைவேறும், சகோதர வழி ஆதரவு, செல்வசெழிப்பு, கமிஷன் மற்றும் தரகு சார்ந்த தொழில் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், எழுத்து மற்றும் பத்திரிகை துறை, தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் ஒரு யோக காலமாகவே அமையும், தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள ரகசியங்கள் காக்கப்படும், கல்வி மற்றும்  விளையாட்டு  துறையில் உள்ள நபர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றங்கள் உண்டாகும், சுய தொழில் மற்றும் சிறு தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கும், ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பும் தங்களின் வாழ்க்கையில் அளவில்லா யோகங்களை நல்கும், எதிர்ப்படும் தீமைகள் யாவும் வெகுவாக குறையும், குடும்ப நலன் சார்ந்த திட்டங்கள் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும், வீரியமிக்க செயல்திறன் மூலம் அறிய பல வெற்றிகளை குவிக்கும் யோக காலமாக இந்த சனி பெயர்ச்சியை கருதலாம், தங்களுக்கு வரும் இடர்பாடுகள் அனைத்தும் காணாமல் போகும், எதிரியும் தங்களிடம் நட்பு பாராட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள், வெகுநாள் லட்சியங்கள் குறுகிய காலத்தில் தங்களுக்கு நிறைவேறும், பொது நலன் சார்ந்த விஷயங்களில் நல்ல ஈடுபாடு உண்டாகும், வணிகமும் செய்யும் தொழிலும் தங்களுக்கு பரிபூர்ண லாபங்களை வாரி வழங்கும், 7ம் இட சனி பார்வை தங்களின் வாழ்க்கையில் மதிப்பு மிக்க செயல்களையும், புகழ் மிக்க பொறுப்புகளையும் நல்கும்.

6ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (கன்னி ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் மேஷ லக்கின அன்பர்களுக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தும் மிகுந்த நன்மையையே வாரி வழங்கும், உடல் நலம் சார்ந்த இன்னல்கள் இருப்பின் இனிவரும் காலங்களில் படிப்படியாக குறையும், மருத்துவ செலவினங்கள் வெகுவாக குறையும், கடன் மற்றும் கொடுக்கல் வாங்கல் மூலம் பொருளாதார நிலைமை விரைவில் சீரடையும், தனிப்பட்ட முயற்சிகள் தங்களுக்கு நல்லதொரு வெற்றியை தரும், இதுவரை நல்ல வேலை இன்றி தவித்தவருக்கு உடனடியாக சிறப்பான வேலை அமையும், வெளிநாடு யோகமும், கூட்டு தொழில் மூலம் முன்னேற்றமும் உண்டாகும், திடீர் பதவி தங்களை தேடிவரும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு சீரான முன்னேற்றங்களை நல்கும், விவசாயம் மற்றும் உணவு பொருட்கள் சார்ந்த தொழில்களை செய்து வரும் அன்பர்களுக்கு அளவில்லா  முன்னேற்றங்களை தரும், மருத்துவம் சார்ந்த தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு  சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், குறுகிய காலத்தில் நல்ல பிரபல்யம் உண்டாகும், நீண்ட நாள் உடல் தொந்தரவுகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும், மீளா கடனில் தவித்த அன்பர்களுக்கு நல்லதொரு தீர்வு கிட்டும், உறவுகள் வழியில் உதவிகளும், பொதுமக்கள் ஆதரவின் மூலம் நன்மைகளும் தங்களுக்கு தேடிவரும், 10ம் இட சனிப்பார்வை தங்களின் உடல் நலனில் நல்ல முன்னேற்றத்தையும், தொழில் ரீதியான விருத்தியையும் வாரி வழங்கும்.

குறிப்பு :

 மேஷ லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 9,2,3,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 9,2,3,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேஷ லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 9 டிசம்பர், 2016

காலம் நேரம் ஜாதகருக்கு சாதகமாக ( திசா,புத்தி ) இல்லை எனில், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் பலன் ஏதுமில்லை !


 சுய ஜாதகத்தில் பல வித சுப யோகங்கள் இருந்த போதிலும் நடைபெறும் திசை அல்லது புத்தி யோகங்களை தரும் பாவக பலனை ஏற்று நடத்தாமல், வலிமை இழந்த அவயோக பலன்களை தரும் பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஆளாகும் ( நடைபெறும் திசை புத்தி முழு சுப கிரகங்களான குரு,சுக்கிரன்,சந்திரன்,புதன் என்றாலும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல) , குறிப்பாக திசை மற்றும் புத்தி ஏற்று நடத்தும் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் இன்னல்களை எதிகொள்ளும் நிலைக்கு தள்ளபடுவார், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பினும் அதனால் ஜாதகருக்கு யாதொரு நன்மையையும் நடைபெறாது, குறிப்பிட்ட பாவக பலனை ( பாதிக்கப்பட்ட ) ஏற்று நடத்தும் திசா புத்திகள் காலம் முடிந்து, வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்தி காலம் நடைமுறைக்கு வரும் பொழுதே ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்க இயலும், வலிமை பெற்ற பாவக ஏற்று நடத்தும் திசா புத்திகள் எவை எவை என்று உணர்ந்து காற்று உள்ளபொழுதே துற்றி கொள்ளவேண்டும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம்.


லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 1ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறுவது சுக்கிரன் திசை ( 28/12/2000 முதல் 28/12/2020 வரை ) சுக்கிரன் தனது திசையில் 6,10ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், குறிப்பாக வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு அளவில்லா யோகங்களை நல்கியது, பொருளாதார ரீதியான நன்மைகள் ஜாதகருக்கு பன்மடங்கு கிடைத்தது, முன்னோர்கள் சொத்தை விற்று ரொக்கமாக பெரும் தொகை கைக்கு வந்து சேர்ந்தது, சுக்கிரன் திசை சூரியன் புத்தியில் ஒரு பெரும் தொகையும், சுக்கிரன் திசை செவ்வாய் புத்தியில் ஒரு பெரும் தொகையும் ஜாதகருக்கு கையில் கிடைக்கப்பெற்றார், சூரியன் புத்திக்கு அடுத்து வந்த சந்திரன் புத்தியில் ஜாதகருக்கு நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் எதிர்ப்பால் இன சேர்க்கைகள் அதிகரித்தது ( 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சந்திரன் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியது இதற்க்கு காரணமாக அமைந்தது ) அவர்களின் ஆலோசனைப்படி செவ்வாய் புத்திக்கு பிறகு வந்த ராகு புத்தியில் ஜாதகர் நடைபோட ஆரம்பித்தார், இது ஜாதகரின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

சுக்கிரன் திசையில் நடைபெற்ற ராகு புத்தி ஜாதகருக்கு 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, வந்த வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக வீண் விரையமாக துவங்கியது, சுக்கிரன் திசையில் ராகு புத்திக்கு அடுத்து வந்த குருபுத்தியும், சனி புத்தியும் ( 27/02/2011 முதல் 28/12/2016 வரை) முழு வீச்சில் 4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் 4ம் பாவக வழியில் இருந்து இருந்த சொத்து,இடம், வண்டி வாகனம், பொருள் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலையை தந்தது, 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வந்த  திடீர் இழப்புகள் அளவில்லா வண்ணம் அமைந்தது, நண்பர்கள் எதிர்ப்பால் இன அமைப்பினர் மூலம் ஜாதகரின் வாழ்க்கையில் திடீர் இழப்புகள் அதிகரித்தது, 12ம் பாவாக வழியில் இருந்து ஜாதகருக்கு பெரும் தொகை, முதலீடு செய்த இடத்தில் இருந்து வீண் விரையமானது, தொடர் பேரிழப்புகளால் ஜாதகரின் வாழ்க்கை முற்றிலும் முடங்கியது, ஜாதகர் செய்ய நினைத்த தொழில்களில் எல்லாம் தோல்வி மேல் தோல்வி அடைந்தது, வழிகாட்டும் நல்ல அன்பர்கள் இல்லாத சூழ்நிலையில் ஜாதகரின் வாழ்க்கை முழுவதும் நசிந்தது.

ஜாதகருக்கு நடைபெற்று கொண்டு இருக்கும் திசை மிதமிஞ்சிய நன்மைகளை தந்த போதிலும், நடைபெறும் புத்திகள் ஜாதகருக்கு சாதகமற்று இருப்பது, திசை தரும் யோக பலன்களை முழுமையாக அனுபவிக்கும் வல்லமையை இழந்து, வீண் விரையம் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு இருப்பது வருத்தத்திற்கு உரியது, சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்திகள் யோக பலன்களை தரும் நேரம் பார்த்து, தொழில் துவங்குவது, புதிய முயற்சிகளில் இறங்குவதே ஜாதகருக்கு உகந்த நன்மைகளை தரும், தனது எண்ணங்கள் மற்றும் லட்ச்சியங்களை முழுவதுமாக அடைவதற்கு உண்டான வாய்ப்புகளை வழங்கும் என்பதை கவனத்தில் கொண்டு, ஜாதகர் நடந்து இருந்தால் வாழ்க்கையில் யாதொரு துன்பமும் நடைபெற்று இருக்க வாய்ப்பில்லை, குறிப்பாக சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் எது என்று தெளிவாக தெரிந்து, சம்பந்தப்பட்ட பாவக வழியிலான உபதேசங்களை தவிர்த்து, வலிமை பெற்ற பாவக வழியிலான அறிவுரைகளை ஏற்று ஓர் ஜாதகர் செயல்பட்டால், நிச்சயம் வெற்றி மேல் வெற்றிதான், மேற்கண்ட ஜாதகருக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதே 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், எனவே ஜாதகர் தனது நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்ப்பால் இன அமைப்பினரிடம் மற்றும் சற்று எச்சரிக்கையாக நடந்துகொண்டு இருந்தால், இவ்வளவு பேரிழப்புகளை ஜாதகர் சந்தித்து இருக்க வேண்டிய சூழ்நிலை நிச்சயம் வந்திருக்க வாய்ப்பு இல்லை, மேலும் ஜாதகரின் சொத்தும் அழிந்து இருக்க வாய்ப்பில்லை, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்படுவது, தனக்கு வரும் வாழ்க்கை துணையை ஜாதகர் தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது, இல்லையெனில் ஜாதகரின் வாழ்க்கை நரகம் ஆவதை எவராலும் தடுக்க இயலாது.

இனி வர இருக்கும் சுக்கிரன் திசையில், புதன் புத்தி ( 28/12/2016 முதல் 28/10/2019 வரை ) ஜாதகருக்கு நல்லதொரு யோக வாழ்க்கையை தர இருக்கின்றது இதை ஜாதகர் புரிந்துகொண்டு, வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெற ஆயத்தமாக்கலாம், மீண்டும் ஜாதகர் சகவாச தோஷத்தை கையில் எடுப்பராயின், வாழ்க்கையே சூனியம் ஆக வாய்ப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்வது நலம், மேலும் தன்னிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களில்  இருந்து மீண்டு வருவது அவசியமாகிறது, ஏனெனில் ஜாதகரின் யோக நிலை அப்பொழுதுதான் முழு அளவில் பலன்தர ஆரம்பிக்கும், புதன் புத்தி ஜாதகருக்கு 6,10ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான நன்மைகளை தர தயார் நிலையில் உள்ளது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

ஜாதகரின் குல தேவதையும், முன்னோர்கள் செய்த பாக்கியமும் ஜாதகரை காத்து  அருள் புரியட்டும், " வாழ்த்துக்கள் அன்பரே "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 5 டிசம்பர், 2016

சுய ஜாதகத்தின் படி மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமா ?


 "நிச்சயமாக" இதில் மாற்று கருத்து இல்லை எனலாம், ஒரு ஆண் மகனின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் வல்லமை அவருக்கு வரும் யோகம் நிறைந்த மனைவி மூலம் சாத்தியப்படும் என்பதிற்கு நிறைய உதாரணங்கள் உண்டு, தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர், வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தேர்வு செய்யும் பொழுது தனது ஜாதகம் வலிமையற்று இருப்பினும், தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமைக்கு ஏற்ற நன்மைகளையும், யோகங்களையும் நிச்சயம் பெற இயலும், மாறாக வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை அற்று இருப்பின் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்கள் சுய ஜாதகத்தில் இருப்பினும் அதன் பலாபலன்கள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக நடைமுறைக்கு வாராது என்பதே முற்றிலும் உண்மை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : மேஷம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம் 

ஜாதகிக்கு 1,3,5,9ம் வீடுகள் உயிர் உடல் என்று வர்ணிக்கப்படும் முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், அடுத்து 2ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ஆனால் 4,6,7,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், குறிப்பாக ஜாதக 8,12ம் பாவக வழியில் இருந்து 80% விகித இன்னல்களையும், 11ம் பாவக வழியில் இருந்து 200% சதவிகித இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

அடிப்படையில் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய சுய ஜாதகத்தில் குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு, பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடு, களத்திர ஸ்தானமான 7ம் வீடு, ஆயுள் ஸ்தானமான 8ம் வீடு, விரைய ஸ்தானமான 12ம் வீடு ஆகியவை மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியம், மேலும் லாபம் மற்றும் அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படும் 11ம் வீடு மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, குடும்ப ஸ்தானம் வலிமை பெறுவது குடும்பத்தில் ஒற்றுமையையும், நல்ல வருமான வாய்ப்பையும், பூர்வ புண்ணியம் வலிமை பெறுவது நல்ல வாரிசையும், சிறந்த அறிவு திறனையும், களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது கணவருடன் அன்பு நிறைந்த ஒற்றுமை, கருத்து வேறுபாடு அற்ற யோக வாழ்க்கை, இணை பிரியா நிலை, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளும் மன நிலை மற்றும் மனஒற்றுமை, தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றியையும், ஆயுள் ஸ்தானம் வலிமை பெறுவது தனக்கு நல்ல ஆயுளையும் பூர்ண சுமங்கலி யோகத்தையும், தன கணவனுக்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையையும், திருமணதிற்கு பிறகு வாழ்க்கையில்  பெரும் திடீர் முன்னேற்றத்தையும், விரைய ஸ்தானம் வலிமை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் குறையில்லாத நிலையையும், திருப்தியான வாழ்க்கை மற்றும் மனநிறைவையும், மனநிம்மதியையும், குழப்பம் அற்ற மனநிலை மற்றும் நிம்மதியான இல்லற வாழ்க்கையையும் சிறப்பாக வழங்கும்.

லாப ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகியின் அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையின் தன்மையை உறுதி படுத்தும், மேலும் ஜாதகி கொண்டுள்ள தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை, வரும் எதிர்ப்புகளை கையாளும் தன்மை, மற்றவர்களுடன் உண்டான நன்னடத்தை, அனுசரித்து செல்லும் குணம், குடும்பம் மற்றும் வாழ்க்கை துணையின் நிலையறிந்து செயல்படும் சமோயோசித புத்திசாலித்தனம், எந்த ஒரு சூழ்நிலையையும் சிறப்பாக கையாளும் வல்லமை, ஒரு திறமைமிக்க நிர்வாகியாக செயல்படும் யோகம் என்ற வகையில் யோக பலன்களை தரும்.

ஆனால் மேற்கண்ட ஜாதகியை திருமணம் செய்த அன்பரின் சுய ஜாதகம் சற்று வலிமையுடன் இருப்பதால் குடும்ப வாழ்க்கை பல பிரச்சனைகளுக்கு இடையில் ஓடிக்கொண்டு இருக்கின்றது, இருப்பினும் ஜாதகியின் கணவர் பல பொருளாதார சிக்கல்களை திருமணம் ஆன சில வருடங்களிலேயே அனுபவித்து கொண்டு இருப்பது கண்கூடான உண்மை, ஜாதகிக்கு சுக ஸ்தான பாதிப்பு நல்ல குணமற்ற தன்மையையும், சுக போகங்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையையும், சத்ரு ஸ்தான பாதிப்பு கடன், எதிரி, உடல்நல பாதிப்பையும், களத்திர ஸ்தான பாதிப்பு வாழ்க்கை துணையுடன் உண்டான புரிதல் மற்றும் இணக்கம் அற்ற தன்மையையும், தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்களையும், ஆயுள் ஸ்தான பாதிப்பு கணவனுக்கு பேரிழப்புகள், மருத்துவ செலவினம் மற்றும் பொருளாதார சிக்கல்களையும், ஜீவன ஸ்தான பாதிப்பு கௌரவம்,அந்தஸ்து, சுயமரியாதை அற்ற சூழ்நிலைகளையும், சிறப்பான தொழில் முன்னேற்றம் இன்மையையும், விறைய ஸ்தான பாதிப்பு தாம்பத்திய வாழ்க்கையில் நிம்மதி இன்மையையும், அதிக அளவிலான மன போராட்டம், மன உளைச்சல், மன நோய் மற்றும் மனபிரழ்ச்சியை வழங்கி கொண்டு இருக்கின்றது, இதற்க்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல் தற்பொழுது நடைபெறும் சூரியன் திசையும் ( 06/05/2012 முதல் 07/05/2018 வரை ) எதிர் வரும் சந்திரன் திசையும் ( 07/05/2018 முதல் 06/05/2018 வரை ) 4,6,7,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது, ஜாதகியின் இல்லற வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.

மேலும் ஜாதகியின் லாப ஸ்தான பாதிப்பு ( பாதக ஸ்தான தொடர்பை பெறுவதால் ) ஜாதகியின் வாழ்க்கையையே மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றும், முரண்பட்ட சிந்தனை, பிற்போக்குத்தனமான செய்கைகள், முட்டாள்தனம், தன்னுடன் உள்ளவர்களை அனுசரித்து செல்லும் பக்குவம் இன்மை, அனைத்திற்கும் கோவம் கொள்ளும் குணம், சிறு விஷயத்தையும் பெரிதாக்கும் தன்மை, குற்ற உணர்ச்சி, குற்றம் கண்டுபிடிக்கும் தன்மை என ஜாதகியே தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்ள அதிக வாய்ப்பு உண்டு, எனவே சுக்கிரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைபெறும் பாதக ஸ்தான பலனில் இருந்து விடுபட சரியான தீர்வுகளை தேடவில்லை எனில், இல்லறவாழ்க்கை ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கும், ஜாதகியின் கணவனையும் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்பதுமட்டும் உண்மை.

குறிப்பு :

திருமணம் செய்துகொள்ளும் முன் வரன் வது இருவரும், தனது ஜாதக வலிமையையும், தனது வாழ்க்கை துணையாக வர இருக்கும் ஜீவனின் ஜாதகத்தையும் கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவது சாலச்சிறந்தது, மாறாக 10 பொருத்தத்தை மட்டும் கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையை தேர்வு செய்யும் பொழுது சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின் யாதொரு இன்னல்களும் இல்லை, சுய ஜாதகம் வலிமை இழப்பின், தாம்பத்திய வாழ்க்கை சில நாட்களிலேயே மனக்கசப்பை ஏற்படுத்தி, மணவாழ்க்கையில் பிரிவைத்தந்துவிடும். ( மேற்கண்ட ஜாதகி தனது ஜாதக நிலையை உணர்ந்து தனது கணவனுக்கும் உறவுகளுக்கும் பணிந்து நடந்து சிறப்பாக இல்லற வாழ்க்கையை நடத்த வேண்டும், அதற்க்கு ஜாதகி முறையான பிரீதி பரிகாரங்களை நாடுவதே நலம் தரும் )

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 3 டிசம்பர், 2016

நடைபெறும் புதன் திசை, எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை ஆகியவற்றில் சுப பலன்களை தரும் திசை எது ?


 சுய ஜாதகங்களில் நடைபெறும் நவ கிரகங்களின் திசாபுத்திகள், தனிப்பட்ட முறையில் ஜாதகருக்கு யோகங்களையோ அவயோகங்களையோ வழங்குவதில்லை, சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெற்ற வலிமையையே நவகிரகங்கள் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் ஏற்று நடத்துகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து யோகம் மற்றும்  நன்மைகளையும், வலிமை அற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து அவயோகம் மற்றும் தீமைகளையும் தருகின்றது, பெரும்பாலும் சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை தனது காலங்களில் நீடித்த நன்மை தீமை பலன்களை தருவதில் முதலிடம் பெறுகிறது, புத்தி மத்திம கால நன்மை தீமை பலன்களை தருவதில் இரண்டாம் இடமும், அந்தரம் குறுகிய கால நன்மை தீமை பலன்களை தருவதில் மூன்றாம் இடமும், சூட்சமம் மிக குறுகிய கால நன்மை தீமை பலன்களை தருவதில் நான்காம் இடமும் பெறுகின்றது, இத்துடன் நவ கிரகங்களின் கோட்சார சஞ்சார நிலை தரும் யோக அவயோக நிகழ்வுகளும் கருத்தில் கொண்டு பலன் காண, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தெளிவான பலாபலன்கள் நிச்சயம் கிடைக்க பெறலாம்.

தங்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் கீழ்வருமாறு :

1) தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு சுப பலன்களை தரவில்லை எனலாம், ஏனெனில் தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு 3,4,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,6,12ம் பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்துகிறது, இது தங்களுக்கு உகந்த அமைப்பு அல்ல, எனவே தங்கள் வீடு,வண்டி வாகனம், கடன், எதிரி தொந்தரவு, மறைமுக எதிர்ப்புகள், தொழில் முடக்கம், எடுக்கும் காரியங்களில் இன்னல்கள் மற்றும் முயற்சிகள் தோல்வி அடையும் சூழ்நிலை, மற்றும் உறக்கமின்மை, சிந்தனை திறன் குறைவு, மனநிம்மதி இன்மை, குழப்பம், தெளிவின்மை, ஆகியவற்றால் இன்னலுற அதிக வாய்ப்பு உண்டு, புதன் திசை தங்களுக்கு விரைய ஸ்தான பலனையே தருவது தங்களுக்கு நிச்சயம் மேற்கண்ட பாவகவழியில் இன்னல்களை தரும்.

புதன் திசையில் தற்போழுது நடைபெறும் சனி புத்தியும் ( 04/06/2014 முதல் 11/02/2017 வரை ) தங்களுக்கு 4,12ம்  பாவக பலனையே ஏற்று நடத்துவது சிறப்பான விஷயம் அல்ல, விரைய ஸ்தான வழியில் தங்கள் வெகுவான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், எனவே தற்போழுது நடைபெறும் புதன் திசையும் தங்களுக்கு சுப பலன்களை தரவில்லை, புதன் திசையில் நடைபெறும் சனி புத்தியும் சுப பலன்களை தரவில்லை, என்பதே உண்மை நிலை.

2) எதிர்வரும் கேது திசை ( 11/02/2017 முதல் 12/02/2024 வரை ) தங்களுக்கு 5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் நன்மைகளை தருவது வரவேற்க தக்கது, மேலும் தங்களின் லாப ஸ்தானம் சர ராசி மண் தத்துவத்தில் அமைவது 100% சதவிகித யோக பலன்களை தரும் அமைப்பாகும், எனவே தாங்கள் எதிர்வரும் கேது திசை காலங்களில் தங்களின் வாழ்க்கையில் 5ம் பாவக வழியில் சுய அறிவு திறனால் லாபம், அதிர்ஷ்டம், கற்ற கல்வி மற்றும் கலை மூலம் யோகம், அதிபுத்திசாலித்தனத்தால் யோக வாழ்க்கை பெறுதல், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்க்கரமாக வாழும் சூழ்நிலை, தமது குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, எண்ணம் மற்றும் லட்சியங்கள் நிறைவேறுதல், நெடுநாள் ஆசை பரிபூர்ணமாக நிறைவேறும் யோகம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதர முன்னேற்றம், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் லாபங்கள், எதிர்பாராத செல்வ சேர்க்கை, திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் லாபம் என்ற வகையில் நன்மைகள் உண்டாகும்,

11ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் அனைத்து காரியங்களிலும் தங்களுக்கு வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும், லாபங்கள் அபரிவிதமான வந்து சேரும், மனதில் நினைக்கும் காரியங்கள் யாவும் நடைமுறைக்கும் வரும், தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் அதிகரிக்கும், பரிபூர்ண யோக வாழ்க்கைக்கு யாதொரு தடையும் ஏற்படாது, சிறப்பான இடத்தில் திருமணம் நடைபெறும், வாழ்க்கை துணை வழியில் இருந்து லாபம் மற்றும் அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் யோகத்தை தரும், தற்போழுது நடைபெறும் புதன் திசையை விட எதிர்வரும் கேது திசை தங்களின் வாழ்க்கையில் 5,8,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், என்பதில் மாற்று கருத்து இல்லை ( பொதுவாக கேது திசை அனைவருக்கும் இன்னல்களை தரும் என்று சொல்வதுண்டு, இது தங்களின் சுய ஜாதகத்திற்கு சிறிதும் பொருந்தாது என்பதை நினைவில் கொள்க )

3) கேது திசைக்கு அடுத்து வரும் சுக்கிரன் திசை ( 12/02/2024 முதல் 12/02/2044 வரை ) தங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் தரும் திசையாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பரே  ஏனெனில் சுக்கிரன் திசை தங்களுக்கு வலிமை பெற்ற 1,5,7,8,11 வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று யோக பலன்களை தருவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% சதவிகித யோக பலன்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், லக்கின வழியில் இருந்து அதிக லாபம் மற்றும் எதிர்பாராத அதிர்ஷ்டம், திடீர் தனசேர்க்கை, மற்றும் பொருளாதார தன்னிறைவு, அனைவரின் ஆதரவை பெரும் யோகம், வருமுன் உணர்ந்து செயல்படும் தன்மை, எண்ணம் நிறைவேறும் யோகம், குழந்தைகள் மூலம் யோக வாழ்க்கை, தன்னம்பிக்கை மிக்க மனநிலை, சோர்வு அறிய யோக வாழ்க்கை, ஆசைகள் அனைத்தும் நிறைவேறுதல் என தங்களின் வாழ்க்கையில் சகல யோகமும் சுக்கிரன் திசையில்  நடைமுறைக்கு வரும்.

 மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்து நன்மைகள், வாழ்க்கை துணையின் ஆதரவு, பொருளாதார இன்னல்களில் இருந்து விடுபடும் யோகம், பொதுமக்களின் ஆதரவு, அரசியலில் வெற்றி, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் சகல நிலைகளிலும் சுப யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை, எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக மாறும் யோகம், வியாபாரம் மூலம் அதிர்ஷ்டம், வெளிநாடு மற்றும் வெளியூரில் இருந்து வரும் யோக வாழ்க்கை, கூட்டு முயற்சி மற்றும் கூட்டு தொழில் மூலம் தங்களின் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் என்ற வகையில் சுக்கிரன் திசை தங்களுக்கு சுபயோக பலன்களை வாரி வழங்கும், மேலும் சுக்கிரன் திசை காலத்தில் கேது திசையில் நடைபெற்ற 5,8,11ம் பாவக யோக பலாபலன்களும் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது.

எனவே தங்களுக்கு தற்போழுது நடைபெறும் புதன் திசை அவயோக பலன்களையே வழங்கி உள்ளது, எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை சிறப்பான சுபயோக பலன்களை வழங்க தயாராக உள்ளது என்பது மட்டும் உறுதி எதிர்வரும் கேது,சுக்கிரன் திசை தரும் யோக பலன்களை அனுபவிக்க தங்கள் சரியான திட்டமிடுதல்களுடன் செயல்படுவது உகந்ததாக அமையும் என்பது சரியானதாக இருக்கும் "வாழ்த்துக்கள்" அன்பரே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் ( 2,6,8,12 ) வலிமை இழந்தால் ஜாதகருக்கு நன்மை நடைபெறுமா ?


 சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் எனும் 2,6,8,12ம் வீடுகள் வலிமை இழந்து காணப்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வாழ்க்கையில் நன்மைகளை தரும் என்பது பொதுவான கருத்து, தீய ஸ்தானங்கள் வலிமை இழப்பது ஜாதகருக்கு நன்மைதரும், தீமைகள் வெகுவாக குறையும் என்பது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெற்று இருப்பதே சம்பந்த பட்ட ஜாதகருக்கு யோகத்தை நல்கும் அமைப்பாகும், துர் ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் 2,6,8,12 ம் வீடுகள் வலிமை இழப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரை மேற்கண்ட பாவக வழியில் இருந்து தரும் இன்னல்களை அதிகரிக்கும், அடிப்படையில் மறைவு ஸ்தானங்களாக கருதப்படும், 2,6,8,12ம் வீடுகள் ஒரு ஜாதகருக்கு இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது தவறான அணுகுமுறையே, மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கு தனது பாவக நிலையில் இருந்து நன்மைகளையும் தரும்  என்பதை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன் காண முற்படுவதே சால சிறந்தது.


மறைவு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் 2,6,8,12 பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் :

1) 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் குடும்ப வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சி, சந்தோசம், நிம்மதி, நிலையான வருமானம், இனிமையான பேச்சு திறன், வாக்கு பலிதம், வருமானம் மூலம் ஜாதகர் பெரும் பொருளாதார வளர்ச்சி, ஜாதகருக்கு வருமானம் வரும் வாய்ப்புகள், தொடர் வருமானம், ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம், ஜாதகரின் வாழ்க்கை துணை ஜாதகருக்கு தரும் ஆதரவு, பொருளாதார திட்டமிடுதல்கள், சேமிப்பு, தனசேர்க்கை, கையிருப்பு, தனலாபம், தொழில் லாபம், அளவற்ற செல்வம், வரவு செலவுகள் சிறப்பு, சொத்துக்கள் மூலம் வருமானம் பெறுதல், கல்வியின் வழியில் வருமானம், அறிவு பூர்வமான செயல்களினால் வெற்றி, என ஜாதகரின் வருமான வாய்ப்புகளை சிறப்படைய செய்ய நிச்சயம் சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

2) 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தமக்கு வரும் உடல் தொந்தரவுகளை எதிர்க்கும் வல்லமை, ஜாதகருக்கு வரும் எதிர்ப்பு மற்றும் சவால்களை சரியான விதத்தில் எதிர்கொண்டு வெற்றி பெரும் யோகம், தேர்வு மற்றும் தேர்தல்களில் வெற்றி, வட்டி வரவு செலவு, கடன் மூலம் யோக வாழ்க்கை, பணியாளர்கள் மூலம் நன்மை மாற்றும் ஒத்துழைப்பு, மருந்து மற்றும் மருத்துவ உபகரணம் மூலம் லாபம், வழக்குகளில் வெற்றி மற்றும் லாபம் சூது மற்றும் பங்கு சந்தைகளில் லாபம், அனைத்திலும் வெற்றி, எந்த தடையும் இனி அனைத்திலும் வெற்றி பெரும் யோகம், சமாதான பிரியர், பணியாற்றுவதில் ஆர்வம், தோல்வி மற்றும் ஏமாற்றங்களே ஜாதகருக்கு வெற்றியாக மாறுதல் என்ற வகையில் நன்மைகளை பெற சுய ஜாதகத்தில் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

3) 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பூர்ண ஆயுள் பலம், விபத்துகள் மற்றும் இழப்பு அற்ற வாழ்க்கை, உயில் மூலம் லாபம், திடீர் அதிர்ஷ்டம், புதையல் யோகம், இன்சூரன்ஜ், பங்கு வர்த்தகத்தில் லாபம், லாட்டரி மற்றும் பரம்பரை சொத்துக்கள், பெண்கள் வழியில் லாபம், மற்றவர் பணம் கையிருப்பு, எதிர்பாராத யோக வாழ்க்கை, திடீர் தன சேர்க்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, அவர்கள் வழியில் கிடைக்கும் சொத்து சுக  சேர்க்கை, வெற்றிகரமான வியாபரம், எதிர்பாராத திடீர் லாபம், மருத்துவ துறையில் செல்வ சேர்க்கை, தந்தை மற்றும் முன்னோர்களின் சொத்துக்களை சுவீகரிக்கும் வல்லமை, அந்நியரின் சொத்துக்களை பராமரிக்கும் மற்றும் அனுபவிக்கும் யோகம், பினாமி வழியிலான சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம் என்ற வகையில் நன்மைகளை பெற சுய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

4) 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக முதலீடுகள் செய்வதால் பெரும் தன்னிறைவான பொருளாதர முன்னேற்றம், திருப்தியான யோக வாழ்க்கை, வெளிநாடுகள் மற்றும் வெளியூரில் பிரபல்யம் மற்றும் சொத்து சேர்க்கை, மருத்துவம் மற்றும் மருந்துகள் மூலம் மிகுந்த லாபம், பயணம் மூலம் லாபங்கள், அறிய இரத்தின சேர்க்கை, புதையல் மற்றும் மண்ணிற்கு கீழ் கிடைக்கும் உலோக பொருள்கள் மூலம் லாபம், மனோதத்துவத்தில் நிபுணத்துவம், புலனுக்கு அப்பாற்ப்பட்ட சக்திகள் இயங்குவதன் மூலம் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, தாம்பத்திய இன்பம், சுகபோகம், கூட்டு செயல்களில் லாபம், திடீர் லாட்டரி யோகமும் தன சேர்க்கையும் உண்டாகும், திடீர் பொருள் வரவு என்ற வகையில் என்ற வகையில் நன்மைகளை பெற சுய ஜாதகத்தில் விரைய ஸ்தானமான 12ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதுடன், 5,11ம் வீடுகளும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் பொருளாதாரம், குடும்பம், சுய முன்னேற்றம், அதிர்ஷ்டம், மற்றும் தன லாபம் ஆகியவற்றை பதம் பார்க்கும் அமைப்பாகும், 5ம் வீடு பாதிப்படைவது, ஜாதகருக்கு புத்திர பாக்கியத்திர்க்கு தடையையும், 11ம் வீடு பாதிப்பது ஜாதகரின் தன்னம்பிக்கை, அதிர்ஷ்டம், சுய லாபங்களை கேள்விக்குறியாக்கும், மேலும் ஜாதகரின் விரைய ஸ்தானம் ஸ்திர ராசியில் அமைவது நிலையான சிரமங்களை மேற்கண்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும்.
 
மேலும் தற்போழுது நடைபெறும் சனி திசை ( 31/12/2012 முதல் 01/01/2032 ) 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு மிகுந்த சிரமத்தை தனது திசையில் தரும் அமைப்பாகும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டது இன்னல்களை தரும் அமைப்பு என்ற போதிலும், தற்போழுது நடைபெறும் சனி திசை விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்திடுவது ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், தரப்பொழுது நடைபெறும் சனி திசை காலத்தில் ஜாதகர் பெருவாரியான அமைப்பில் குடும்பம் மற்றும் பொருளாதர சிக்கல்களையும், ஜீவன மேன்மையற்ற தன்மையையும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர், ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில் வாழ்க்கை துணையுடனனான இன்னல்களையும், வருமானம் சார்ந்த தொந்தரவுகளும் தற்போழுது அதிக அளவில் இருப்பது கவனிக்க தக்கது, மேலும் சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வல்லமையை கூட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை தரவில்லை என்பது, சனி திசை 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஸ்திரமான விரைய ஸ்தான பலனை தருவதே அன்றி வேறு எதுவும் இல்லை அன்பர்களே!

எனவே சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் வலிமை இழப்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த கடுமையான பாதிப்புகளை தரும் என்பதே முற்றிலும்  உண்மை, மாறாக சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் வலிமை இழப்பது நன்மையை தரும் என்று கருதுவது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகவே அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 11 நவம்பர், 2016

சனி திசை தரும் தொழில் முன்னேற்றமும், தொழில் வெற்றிகளையும் வழங்கும் ஜீவன ஸ்தான வலிமையும் !


" உத்தியோகம் புருஷ லட்சணம் " என்ற பழமொழிக்கு உதாரணமாக வாழ வேண்டும் எனில் ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் அதற்க்கு வலிமை சேர்க்கும் பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது அவசியமாகிறது, குறிப்பாக ஜீவன ஸ்தானம் மட்டும் வலிமை பெறுவதை விட சுய ஜாதகத்தில் ஜீவன வாழ்க்கையுடன் தொடர்பு பெரும் பாவகங்களும் வலிமைபெறுவது சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், சுயமாக தொழில் செய்து அதில் வெற்றிகரமாக திகழ சுய ஜாதகத்தில் 1,3,4,5,7,9,10,11 வீடுகள் வலிமை பெற்று காணப்படுவது அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் நிர்வாக வல்லமையை வழங்கும், வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தொழில் வகையில் மற்றவர்களுடனான தொடர்பையும், இணக்கமான சூழ்நிலையை சிறப்பாக அமைத்து தரும், சுக ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் இடம்,பொருள் மற்றும் சொத்துக்களை நிர்வகிக்கும் வல்லமையையும், சுய பொருள் சேர்க்கையும் வழங்கும், பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதர் தமது தொழில் மேல் கொண்டுள்ள ஆராவத்தையும், நுண் அறிவு திறனையும், தெளிவான சிந்தனையுடன் கூடிய திட்டமிடுதல்களையும் வழங்கும், தொழில் வழியில் ஜாதகர் பெரும் படி படியான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்.
களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தனது தொழில் வழியில் செய்யும் வியாபார யுக்திகளையும், பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ஜாதகர் கொண்டுள்ள உறவை வலுவாக்கும், மேலும் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஜாதகரின் தனி திறனை வெளிப்படுத்தும், பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தனது தொழில் வழியில் நல்ல பெயரையும், நம்பிக்கையையும், பொது மக்கள் மத்தியில்  பிரபல்யம் பெரும் யோகத்தை தரும், ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு உகந்த தொழில் எது என்பதை தெளிவு படுத்தும், ஜாதகர் செய்யும் தொழில் வகைகளை நிர்ணயம் செய்யும், ஜாதகருக்குள்ள  உள்ள பன்முக தொழில் வல்லமையை  தெளிவு படுத்தும், தான் செய்யும் தொழில் வழியில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்யும், ஜாதகர் சுய தொழில் செய்ய உகந்தவரா? கூட்டு தொழில் செய்ய உகந்தவரா? அடிமை தொழில் செய்ய உகந்தவரா? அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரியும் யோகம் பெற்றவரா? சிறுகுறு தொழில், நடுத்தர தொழில் மற்றும் பெரும் முதலீடுகள் கொண்ட தொழில்களை எதை செய்ய அருகதை கொண்டவர் என்பதை தெளிவுபடுத்தும்.

லாப ஸ்தானம் ஜாதகர் தனது தொழில் மற்றும் சுய ஜாதக வலிமையின் அடிப்படியில் பெரும் லாபங்கள், அதிர்ஷ்டங்கள், சுயமுன்னேற்றம், முயற்ச்சியில் பெரும் வெற்றி, நீடித்த அதிர்ஷ்டம், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றிகொள்ளும் யோகம், தேடிவரும் பதவி, புகழ், தொழில் முன்னேற்றம், சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் யோகம், சரியான திட்டமிடுதல்கள், மற்றவர்கள் ஆதரவை பரிபூர்ணமாக பெரும் யோகம், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, முற்போக்கு சிந்தனை, லட்ச்சியம் மற்றும் கனவுகளை நடைமுறைக்கு கொண்டு வரும் வல்லமை, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, அனைத்து சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெரும் வல்லமை, சுய முன்னேற்றம், அதிபுத்திசாலித்தனம், சரியான திட்டமிடுதல்கள், தொலைநோக்கு பார்வை மூலம் தனது தொழில் முன்னேற்றத்தை சிறப்பாக எடுத்து செல்லும் வல்லமை, ஆராய்ச்சி மனப்பக்குவம், எதையும் சுய அறிவு கொண்டு நிர்ணயம் செய்தல், என ஜாதகர் தொழில் ரீதியாக பெரும் நன்மைகள் அனைத்தையும் ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவதை லாபஸ்தானமே நிர்ணயம் செய்கிறது, ஓர் ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசை எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகரை நிச்ச்யம் சிறந்த தொழில் அதிபராக இந்த உலகத்திற்கு வழங்கும்.

இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம்.


லக்கினம் : தனுசு
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : சதயம் 2ம் பாதம்.

ஜாதகருக்கு மேற்கண்ட கட்டுரையில் கூறியது போன்று அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது, குறிப்பாக 1,3ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் வியாபர விருத்தி பெரும் யோகம் பெற்றவர் என்பதனையும், 2,5ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் செய்யும் தொழில் நல்ல வருமானமும், நம்பிக்கை மற்றும் நார்ப்பெயர் எடுப்பவர் என்பதனையும், சுய அறிவு திறனும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வாழ்க்கையில் சுய முன்னேற்றம் பெறுபவர் என்பதனையும், 4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சொத்து சுக சேர்க்கை, வீடு, நிலம் மற்றும் வண்டி வாகன யோகம் மூலம் ஜீவன வாழ்க்கை பெறுபவர் என்பதனையும், கூட்டு முயற்ச்சி மற்றும் கூட்டு தொழிலில் வெற்றி பெறுபவர் என்பதனையும், செய்யும் தொழில் வழியில் நல்ல முன்னேற்றமும் விருத்தியும் பெரும் யோகம் கொண்டவர் என்பதனையும் தெளிவுபடுத்துகிறது, 9ம் வீடு சத்ரு ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெறுவது குறுகிய கால ஜீவன வெற்றிகளையும், சமூக தொழில் முறை அந்தஸ்த்தையும் பெறுபவர் என்பதனையும் உறுதி செய்கிறது.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் 100% சதவிகித தொழில் வெற்றியையும், அளவில்லா லாபம் மற்றும்  அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்குவது, ஜாதகத்திற்க்கே சிகரம் வைத்தார் போல் சிறப்பான யோக வாழ்க்கையை தரும் அமைப்பாகும், மேலும் ஜாதகரின் எண்ணங்கள் மற்றும் கனவுகள் யாவும் நடைமுறைக்கு வரும், தொழில் ரீதியான பெரும் வெற்றிகளை ஜாதகர் பெறுவார், ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாகவும், சர காற்று ராசியாகவும் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் வாழ்க்கை துணை,பொதுமக்கள்,நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து சிறப்பான முன்னேற்றங்களையும் அதிர்ஷ்ட வாழ்க்கையையும் பெறுவார் என்பதை  உறுதி செய்கிறது.

தற்போழுது நடைபெறும் சனி திசை ( 06/11/2010 முதல் 06/11/2029 வரை ) வலிமை பெற்ற குடும்பம்,பூர்வபுண்ணியம் மற்றும் லாப ஸ்தான பலன்களையே ஏற்று நடத்துவது ஜாதகரின் தொழில் விருத்தியை பன்மடங்கு வாரி வழங்கும், சகல விஷயங்களில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்ட வாயுப்புக்களையும், கை நிறைவான வருமான வாய்ப்புகளையும் தங்கு தடையின்றி வழங்கும், சனி திசை ஜாதகருக்கு தொழில் ரீதியாக 100% விகித வெற்றிகளை வழங்குவது வரவேற்க தக்கது, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 8 நவம்பர், 2016

ராகு திசை வழங்கும் கலைத்துறை வாழ்வு, திரைபட துறையில் ஜாதகரின் வெற்றிகள் !

 
 
இறை அருளின் கருணையினால், கலை துறையில் பல சாதனைகளையும், வெற்றிகளையும் குவித்த பல அன்பர்கள் இருப்பினும், திரையுலக மார்க்கண்டேயர் என்று அழைக்கப்படும் அன்பரின் புதல்வர்களில் முன்னவரின் ஜாதகம் இது, பொதுவாக திரைபட துறையில் பிரபல்யம் பெறுவது என்பது எளிதான ஒன்று அல்ல என்றே சொல்லலாம், கலை துறையில் திரைபட துறை மட்டுமல்ல ஆய கலைகள் 64 ற்கும் இது பொருந்தும், கலைத்துறையில் பிரகாசிக்க இறை அருளின் பரிபூர்ண கருணை நிச்சயம் தேவை, மேலும் சுய ஜாதகம் வலிமை பெறுவது மிக மிக முக்கியம் என்பதில் மாற்று கருத்து இல்லை, இந்த பதிவில் திரையுலக மார்க்கண்டேயரின் புதல்வர்களில் முன்னவரின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்ராடம் 2ம் பாதம் 

ஜாதகருக்கு ரிஷப லக்கினம், சுய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 8ம் பாவாகத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அமைப்பாகும்,பொதுவாக சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு இருக்கும் கலை ஆர்வத்தை தெளிவு படுத்தும், மேலும் ஜாதகர் கலைத்துறையில் பெரும் வெற்றிகளை குறிக்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது ஜாதகர் கலைத்துறையில் அதிர்ஷ்டவாழ்க்கையை பெறுபவர் என்பதை உறுதி படுத்துகிறது, 5ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரை கலைத்துறையில் ஆர்வத்தையும், கடின உழைப்பின் மூலம் வெற்றிகளை பெரும் யோகத்தை தந்தது, மேலும் சுய அறிவு திறன், சமயோசித புத்திசாலித்தனம், தனது செயல்களில் விவேகம் மற்றும் விழிப்புணர்வுடன் செயல்படும் தன்மை, எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்தும் வல்லமை, சுய அறிவு கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம், கற்ற கல்வியை தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சிறப்பாக பயன்படுத்தும் நுண்ணறிவு திறன், அதிபுத்திசாலித்தனம், நல்ல குணங்கள், குல தேவதை மற்றும் கலைமகளின் பரிபூர்ண நல்லாசிகளை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், சிறப்பான நினைவு திறனும், அறிவார்ந்த செயல்களும் ஜாதகரின் வாழ்க்கையில் அளவில்லா யோகங்களை வாரி வழங்கும்.

கலைத்துறையில் மக்கள் செல்வாக்கையும், பிரபல தன்மையை பெறுவதற்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது, ஜாதகருக்கு 1,2,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது ஜாதகர் லக்கின வழியில் இருந்து மக்கள் செல்வாக்கையும், பொதுமக்களுடனான தொடர்பையும் சிறப்பாக வழங்குகிறது, 2ம் பாவக வழியில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரம் மூலம் வருமான வாய்ப்பை பெரும் யோகத்தை வழங்குகிறது, ஜாதகரின் பேச்சு மற்றும் இயக்கம் மூலம் வருமான வாய்ப்பை பெரும் யோகத்தை தருகிறது, 7ம் பாவக வழியில் இருந்து மக்கள் தொடர்பு, மக்கள் ஆதரவு, வெகுஜன வசீகரம், பொதுமக்களிடம் பிரபல்யம் அடைதல், வியாபர விருத்தி, வாழ்க்கை துணை ஆதரவு, கூட்டு முயற்ச்சி வெற்றி பெறுதல், கலைத்துறை பிரபல்ய யோகம், எதிர்பாராத வெற்றிகள், தன்னம்பிக்கை மிக்க செயல்பாடுகள், அனைவராலும் விரும்பப்படும் தன்மை, பொறுப்பு மிக்க செயல்கள், நல்ல மனம், சமூக அந்தஸ்து, சமூக நலனில் அக்கறை, சுய முன்னேற்றம், தடைகளை தகர்த்து வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், வெளிநாடுகளில் பிரபல்யம் மற்றும் வியாபர விருத்தி, மக்கள் தொடர்புள்ள பணிகளில் வெற்றிமேல் வெற்றி என்றவகையில் யோகங்களை வாரி வழங்கும், கலைத்துறையில் ஜாதகரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணிகள் 1,2,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது என்றால் அது மிகையில்லை.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் கொண்ட லட்ச்சியங்களில் வெற்றிபெறும் தன்மையை குறிக்கும், ஜாதகருக்கு  வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது மிகசிறந்த வியாபர நுணுக்கம் பெற்றவர் என்பதும், " காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்ளும் " வல்லமை பெற்றவர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது, மேலும் ஜாதகர் செய்யும் விஷயங்கள் யாவிலும் வெற்றியை வாரி வழங்கும், ஜாதகரின் முயற்சிகள் எந்த காரணத்தைக்கொண்டும் தோல்வியை தர வாய்ப்பில்லை என்பதால், ஜாதகர் தொடர் வெற்றிகளை பெறுவதற்கு அருகதை பெற்றவர் ஆகிறார், மேலும் கணிதம்,ஜோதிடம்,கலை,இசை போன்றவற்றில் ஈடுபாட்டையும் தேர்ச்சியையும் தரும், தன்னம்பிக்கை மிதமிஞ்சிய அளவில் காணப்படும், ஜாதகர் பெரும் வெற்றிகளுக்கு வீரியஸ்தான ( கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியாக வருவதும், சர நீர் தத்துவ ராசியாக அமைவதும் கலை துறை வெற்றிகளை வழங்குகிறது ) வலிமையையும் மிக முக்கிய காரணியாக அமையும், மேலும் ஜாதகருக்கு 6,9,12ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சத்ரு ஸ்தான வழியில் இருந்து எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் யோகத்தையும், குறுகிய கால லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெரும் நிலையை தருகிறது, பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு நற்பெயரும், பெருந்தன்மையான செயல்பாடுகளையும் தருகிறது, அனைவரிடமும் இணக்கமான செயல்பாட்டினையும், அறிவுபூர்வமான செயல்திறனையும் வாரி வழங்கும், பெரியோர் ஆதரவும், நல்ல மனிதர்களின் சேர்க்கையும் ஜாதகரின் வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும், அயனசயன ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல நிம்மதியான வாழ்க்கையும், முதலீடுகளில் வரும் திடீர் லாபத்தையும் தரும், போதும் என்ற மனமும், நிம்மதி மிக்க யோக வாழ்க்கையையும் தரும், நிம்மதியான உறக்கம் கிட்டும், யோக கலையில் தேர்ச்சியை தரும், மனதில் நினைத்த எண்ணங்கள் மற்றும் லட்ச்சியங்கள் யாவும் நிறைவேறும்.

தொழில் வெற்றிகளை பெறுவதற்கு சுய  ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியமாகிறது, இவரது ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் ஜீவன வெற்றிகளை உறுதி செய்கிறது, மேலும் ஜாதகர் தனது பெற்றோர்கள் வழியில் இருந்து பெரும் யோகத்தையும் சிறப்பாக நிர்ணயம் செய்கிறது, தன்னிகரில்லா ஜீவன முன்னேற்றத்தை ஜீவன ஸ்தான வலிமையே ஜாதகருக்கு வாரி வழங்குகிறது, 4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சுயமாக சொத்து சுக சேர்க்கையை பெரும் வல்லமையை பெறுகிறார், மேலும் ஜாதகருக்கு  சுக ஸ்தானமும், ஜீவன ஸ்தானமும் வலிமை பெற்று ஸ்திர ராசியில் அமைவது நிலையான ஜீவனத்தை வழங்கும் அமைப்பை தருகிறது,மேலும் ஜாதகர் தனது ஜீவன வாழ்க்கையில் தனித்திறமையுடன் செயல்படும் வல்லமையும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பினை பெரும் யோகத்தையும் தருகிறது.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தந்த போதிலும், வாழ்க்கை துணை வழியில் இருந்து  சிறு சிறு இழப்புகளை தரும், விபத்துகள் மற்றும் மருத்துவ செலவுகளை தரும் என்பது மட்டும் மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள ஒரே ஒரு குறை எனலாம், ஆனால் இதனால் பெரிய பாதிப்புகள் ஜாதகருக்கு இல்லை.

மேற்கண்ட ஜாதகத்தில் பெரும்பாலும் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்று இருப்பது சிறப்பான யோகம் என்ற போதிலும், ஜாதகர் கலை துறையில் வாழ்க்கையை துவங்கியதில் இருந்து இன்று வரை தொடர் முன்னேற்றத்தை வழங்கி கொண்டு இருப்பதற்கு காரணம், 19/02/1996 முதல் 19/02/2014 வரை நடைபெற்ற ராகு திசை 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 3,11ம் பாவக பலனை ஏற்று நடத்தியதே காரணமாக அமைந்தது, ஜாதகர் கலைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகு திசை முடியும் வரை 3,11ம் பாவக வழியில் இருந்து முழு அளவில் யோக பலன்களை வாரி வழங்கியது ஜாதகரின் கலைத்துறை வெற்றிகளை 100% விகிதம்  உறுதிப்படுத்தியது, மேலும் தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6,9,12ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 3,11ம் பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது, ஜாதகர் கலைத்துறையில் குருதிசை முழுவதும் தொடர் வெற்றிகளை எதிர்காலத்திலும் வழங்கும் என்பது ஜாதகருக்கு இறைஅருள் கொடுத்த வரமே, மேலும் இனிவரும் எதிர்காலம் ஜாதகரை தனது துறையில் பன்முகம் கொண்ட திறமைசாலியாக மாற்றி அமைக்கும் என்பது மட்டும் உறுதி, மேலும் ஜாதகருக்கு பாவக அதிபதிகள் என்ற முறையில் செவ்வாய்,குரு,புதன் மற்றும் சுக்கிரன் வலிமை பெற்று யோக பலன்களை வழங்குவது வரவேற்க தக்க அம்சமே, மேலும் குரு திசைக்கு அடுத்து வரும் சனி திசை மட்டுமே ஜாதகருக்கு இன்னல்களை தரக்கூடும்.


குறிப்பு :

கலைத்துறையில் சிறப்பான வெற்றிகளை பெறுவதற்கு சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் சுய ஜாதகம் வலிமை பெறுவது ஜாதகரை கலைத்துறையில் புகழ் மிக்க கலைஞனாக நிலை நிறுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 5 நவம்பர், 2016

சுய தொழில் அல்லது அடிமைத்தொழில் எதை தேர்வு செய்வது?


கேள்வி :

வணக்கம், கடந்த 10 வருடங்களுக்கு முன் சுயமாக தொழில் செய்து, மிகப்பெரிய நஷ்டம், தற்போழுது திருப்தி இன்றி ஓர் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு இருக்கின்றேன், வருமான பற்றாக்குறை, பொருளாதார சிக்கல்கள் அதிகம் உள்ளது, சுய தொழில் செய்ய வாய்ப்பு தற்போழுது நண்பர்கள் வழியில் இருந்து வருகின்றது, துணிந்து செய்யலாமா? அல்லது தற்போழுது உள்ள வேலையிலேயே தொடர்ந்து இருக்கலாமா ? தெளிவான விளக்கம் தேவை.


பதில் :

ஒருவரது சுய ஜாதகத்தில் தொழில் வெற்றிகளை வழங்கும் பாவகங்கள் (1,4,7,10,11 ) வலிமை பெற்று இருந்தால் நிச்சயம் சுய தொழில் செய்யலாம், தட்டாமல் செய்யும் தொழிலில் வெற்றிகளை வாரி குவிக்கும், அபரிவிதமான தொழில் வளர்ச்சியை வாரி வழங்கும், குறிப்பாக ஒருவரது ஜீவன ஸ்தானம் உபய ராசியில் அமைந்து ( உபய லக்கின அன்பர்கள் அனைவரையும் சாரும் ) வலிமை பெற்றும்,  லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடு தனது பாவகத்துடன் தொடர்பு பெற்றும் வலிமையுடன் இருந்தால் ஜாதகர் சுய தொழில் செய்வதற்கு யோகம் பெற்றவர் எனலாம், தங்களது ஜாதக வலிமை நிலை மிகவும் அபரிவிதமாக உள்ளது தெளிவாகிறது, பெரும்பாலான பாவகங்கள் தங்களுக்கு மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, தொழிலை குறிக்கும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம், லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம், இது தங்களது ஜாதகத்தில் சுய தொழில் செய்வதற்கு உகந்த அமைப்பாகும், எனவே தங்கள் சுய தொழில் செய்ய வல்லமை உடையவர் எனலாம்.

மேலும் தங்களது ஜாதகத்தில் சுய தொழில் செய்வதற்கு வலிமை சேர்க்கும் பாவகங்களான லக்கினம் எனும் முதல் வீடு வலிமை பெறுவது, தங்களின் தொழில் ஆர்வத்தையும், முழு வீச்சில் செயல்படும் தன்னம்பிக்கையும்  தெளிவு படுத்துகிறது, நான்காம் பாவகம் வலிமை பெறுவது வண்டி வாகன தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தையும், எதிர்காலத்தையும் தரும் என்பதை தெளிவு படுத்துகிறது, களத்திர ஸ்தானம் வலிமை  பெறுவது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் தொழில்  முன்னேற்றங்களை பெறுபவர் என்பதை தெளிவு படுத்துகிறது, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஓர் இடத்தில் பணியாற்றுவதைவிட, சுய தொழில் செய்வதே தங்களுக்கு பொருத்தமானது என்பதை தெளிவு படுத்துகிறது, லாப ஸ்தானம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில் அபரிவிதமான  அதிர்ஷ்டத்தையும் மிகப்பெரிய லாபங்களை பெரும் யோகம் கொண்டவர் என்பது 100% சதவிகிதம் தெளிவாகிறது, மேற்கண்ட விஷயங்கள் ஒருவரது ஜாதகத்தில் சுய தொழில் செய்ய வல்லமை உள்ளவரா? என்பதை உறுதி படுத்த பயன்படும்.

மேலும் தங்களின் ஜாதகத்தில் வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது, சிறந்த  வியாபார நுணுக்கம் பெற்றவர் என்பதும் செய்யும் தொழிலில் நல்ல விருத்தியை  பெறுபவர் என்பதும் தெளிவாகிறது, சரியான திடடமிடுதல்களுடன் தனது தொழிலினை முன்னேற்ற பாதையில் நடத்திச்செல்லும், தன்மை பெற்றவர் என்பதும் தெளிவாகிறது, பூர்வ  புண்ணியம் வலிமை பெறுவது தங்களின் அறிவு திறனும், புத்திசாலித்தனமும், தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை நல்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது, சத்ரு ஸ்தானம் வலிமை  பெறுவது தொழில் முறை எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், எதிரிகளின் வழியில் நன்மையை அனுபவிக்கும் யோகம் பெற்றவர் என்பதனையும், பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில் நற்பெயரும், பிரபல்யமும் வழங்கும் என்பது உறுதியாகிறது.

தங்களது சுய ஜாதகம் சுய தொழில் செய்வதற்கு முழு தகுதி கொண்டதாக இருப்பதால் 100% சதவிகிதம் தங்கள் சுய தொழில் செய்வதே சாலசிறந்து, ஓர் இடத்தில் பணியாற்ற உகந்தது அல்ல என்பதை ஜோதிடதீபம் தெளிவுற விளக்கம்  தர கடமைப்பட்டுள்ளது, அடுத்து சுய ஜாதகம் மிகவும் வலிமை பெற்று இருந்தும் இதற்க்கு முன் செய்த தொழில் பெரும் நஷ்டத்தை வழங்கியதற்கு இரண்டு காரணங்களை சொல்லாம்,

1) தாங்கள்  தொழில் துவங்கிய நேரத்தில் தங்களுக்கு நடைபெற்ற சந்திரன் திசை  2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, இதன் காரணமாகவே தாங்கள் செய்த தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது, ஒருவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது முக்கியம் அல்ல, நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டும் அதற்குண்டான யோக பலன்களை ஜாதகர் அனுபவிக்க இயலும், தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசையும், எதிர்வரும் ராகு மற்றும் குரு திசையும் தங்களுக்கு மிகப்பெரிய அளவிலான நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும்  தர தயாராக உள்ளதால், இதுவே தாங்கள் சுய தொழில் செய்ய சரியான நேரம் எனலாம்.

2) தங்களது சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், தங்கள் இதற்க்கு  முன் துவங்கிய தொழில் தங்களது பூர்வீகத்தில் இல்லமால், வெகு தொலைவு சென்று வேறு மாவட்டத்தில் ஆரம்பித்தது தவறு, சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் எந்த ஒரு தொழிலையும் தனது பூர்வீகத்திர்க்கு உற்ப்பட்ட இடத்திலேயே நிர்வகிப்பது நல்ல முன்னேற்றத்தை தரும், தங்களுக்கு நடந்த சந்திரன் திசை சிறப்பான நன்மைகளை தாராததும், செய்யும் தொழில் பூர்வீகத்தில் அமையாததும் மட்டுமே தங்களுக்கு திடீர் பேரிழப்பை தந்தது என்று தெளிவுற சொல்லலாம், இனிவரும் காலங்களில் இந்த தவறை செய்யாமல் நன்மை பெறுக.

சுய தொழில் செய்ய தகுதி உள்ள ஜாதகம் என்ற போதிலும், தங்களது ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்கப்படுவது, தங்களுக்கு வாக்கு வழியில் இன்னல்களையும், வரும் வருமானத்தை வீண் செலவு செய்யும் தன்மையையும் தெளிவுபடுத்துகிறது, 8ம் பாவகம் பாதிக்கப்படுவது மற்றவர்களை நம்பி முதலீடு செய்வது உகந்தது அல்ல, தங்களின்  கட்டுப்பாட்டில் அனைத்தையும் நிர்வகிப்பதே சாலசிறந்தது, மேற்க்கண்ட இரண்டு விஷயங்களிலும் தங்கள் அதிக கவனமுடன் செயல்படுவது தங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், நீர்த்துவம் சார்ந்த தொழில்களை தவிர்ப்பது நலம் தரும், வண்டி வாகனம் மற்றும் கட்டுமான துறை தங்களுக்கு அளவில்லா தொழில் வளர்ச்சியை வாரி வழங்கும்.


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 4 நவம்பர், 2016

கிரக சேர்க்கை மற்றும் பார்வை மூலம் ஜாதகத்தில் சுபயோகங்களை நிர்ணயம் செய்வதும், அதன் வழியில் யோக பலன்களை எதிர்பார்ப்பதும் உகந்ததா ?



பெரும்பாலும் சுய ஜாதகங்களில், சுப கிரகங்கள் சேர்க்கை மற்றும் பார்வையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோகங்கள் இருப்பின், யோகங்களை தரும் கிரகமும், அந்த கிரகங்களின் திசா புத்திகளும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை என்றே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் சில பாவகங்களின் சுப கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டு யோக பெற்ற ஜாதகம் என்றும், அசுப கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டு அவயோகம் பெற்ற ஜாதகம் என்றும் நிர்ணயம் செய்வதில் உண்மை இல்லை என்பதை தெளிவு படுத்தவும் விருப்பம் கொள்கிறது.

உதாரணமாக ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறக்கும் இரட்டையர் ஜாதகங்களில் ஒரேமாதிரியான கிரக அமர்வு இருப்பினும், இருவரின் வாழ்க்கை முறை ஒரேமாதிரியான அமைப்பில் இருப்பதில்லை, இருவருக்கும் அவரவர் ஜாதகங்களில் ஒரே மாதிரியான கிரக சேர்க்கை, கிரகங்களின் பார்வை, கிரகங்களின் யோக அமைப்புகள் இருப்பினும், நடைமுறையில் அவரவர் வாழ்க்கையில் முற்றிலும் வித்தியாசனமான பலாபலன்களே நடைமுறைக்கு வருகிறது, எனவே சுய ஜாதகங்களில் உள்ள கிரக சேர்க்கையையும், பார்வையும் வைத்து இது யோக ஜாதகம் என்று முடிவு செய்வதும், அவயோக ஜாதகம் என்று முடிவு செய்வதும் முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு முரணான தவறான அணுகுமுறை என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே!

அடிப்படையில் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கு தனிப்பட்ட சுய ஜாதகம் உண்டு என்பதனையும், அந்த ஜாதகம் ஒருவருக்கு இருப்பதுபோல் மற்றவருக்கு இருக்காது என்பதும் மாற்ற இயலாத விதி மேலும் இதை ஒவ்வொருவரின் கைரேகைக்கு ஒப்பிடலாம், ஒருவருக்கு உள்ளதுபோல் மற்றவர்க்கு கைரேகை அமைய வாய்ப்பில்லை என்பதுபோல், ஒருவரது ஜாதகம் போல் மற்றோருவருக்கு இருக்க வாய்ப்பே இல்லை எனலாம், மேலோட்ட்மாக கிரகங்களின் அமர்வு நிலை மற்றும் பார்வையை வைத்து காணும் பொழுது இந்த விஷயங்கள் பிடிபட வாய்ப்பு இல்லை, சுய ஜாதக பாவக வலிமைக்கு முக்கியத்துவம் தந்து ஜாதகத்தை ஆய்வு செய்யும் பொழுது நிச்சயம் நம்மால் உணர இயலும்.

கிரக அமர்வு நிலை, கிரக சேர்க்கை நிலை, கிரகங்களின் பார்வை நிலை, மற்றும் நவ கிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ஆகியவைகளை கொண்டு சுய ஜாதகத்திற்கு பலன் நிர்ணயம் செய்வது மண் குதிரையை நம்பி நடு ஆற்றில் இறங்குவதற்கு பொருத்தமானது, மேலும் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையை பற்றியும், நவகிரகங்கள் தனது திசையில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை பற்றியும், அது தரும் பலாபலன்கள் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் பலன் கூறுவது என்பதும் முற்றிலும் தவறான அணுகுமுறையே, இதனால் நிச்சயம் தவறான பலாபலன்களை கூற அதிக வாய்ப்பு உண்டு, சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு பலன்காண முற்படுவதே வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சிறப்பான நல்வழியை காட்டும், அதுவே நமது வாழ்க்கையில் விழிப்புணர்வை தந்து வெற்றிகரமான யோக வாழ்க்கையை நல்கும்.

சுய ஜாதகத்தில் பாவக வலிமையையும், நவகிரகங்கள் தனது திசையில் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையையும், அது தரும் பலன்கள் பற்றியும், தெளிவான விளக்கம் ஒரு ஜாதகருக்கு கிடைக்குமெனில், அந்த ஜாதகர் நிச்சயம் தமது வாழ்க்கையை சிறப்பாக முன்னேற்ற பாதையில் அமைத்துக்கொள்ள இயலும் உதாரணமாக, ஒருவருக்கு எதிர்வரும் திசை ஏற்று நடத்தும் பாவக பலனை பற்றி தெளிவாக தெரிந்து இருப்பின் நன்மை நடைபெறும்  பொழுது ஜாதகர் அதை பரிபூர்ணமாக ஏற்றுக்கொள்ளவும், தீமை நடைபெறும் பொழுது ஜாதகர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு திட்டமிட்ட வாழ்க்கையை பெறுவதற்கும் உதவும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், இதற்க்கு ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


ஜாதகருக்கு லக்கினம் : மீனம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 3ம் பாதம்

ஜாதகரின் கேள்வி :

1) நடைபெறும் ராகு திசையில் சந்திரன் புத்தி தரும் பலன்கள் யாது? அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் என்ன?

நடைபெறும் ராகு திசையில் சந்திரன் புத்தி 7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது தங்களுக்கு உகந்தது அல்ல, எனவே சந்திரன் புத்தி நடைபெறும் காலத்தில் தங்கள் களத்திர ஸ்தான வழியில் இருந்து தாமத திருமணம், எதிர்ப்பால் அமைப்பினரிடம் இருந்து இன்னல்கள், நண்பர்கள் வழியில் இருந்து துன்பங்கள் என மனநிம்மதி இழப்பையும், மனபோராட்டத்தையும் வாரி வழங்கும், மேலும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வீண் விரையங்களும், துன்பங்களும், மருத்துவ செலவினங்களும் ஏற்பட்ட வாய்ப்பு உண்டாகும் என்பதால் சந்திரன் புத்தியில் தங்கள் 7,12ம் பாவக வழியில் இருந்து எச்சரிக்கை உடன் நடந்து கொள்வது நல்லது.

எதிர் வரும் குரு திசை தங்களுக்கு உடல் உயிராகிய 1ம் வீடு லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று முதல் பாவக பலனையே ஏற்று நடத்துவது வரவேற்க தக்கது, குரு திசை 16 வருடங்களும் தங்களுக்கு லக்கின வழியில் இருந்து புகழ்,வெற்றி,கீர்த்தி என அனைத்து நன்மைகளும் நடைமுறைக்கு வரும், தங்களது லக்கினம் மீனத்தில் 340:45:13 பாகையில் ஆரம்பித்தது மேஷத்தில் 014:16:57 பாகையில் முடிவு பெறுவதால் உபய நீர் தத்துவத்திற்கு உண்டான பரந்த மனபக்குவத்தையும், மனதில் நினைக்கும் காரியங்களில் வெற்றிகளையும், சர நெருப்பு தத்துவத்திற்க்கான வீரியம் மிக்க செயல்பாடுகளையும், சுய கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்க நெறியையும் பேணும் வல்லமையை வாரி வழங்கும், மேலும் சுறு சுறுப்புடன் செயல்பட்டு நினைத்த  காரியத்தை வெற்றி கொள்ளும் வல்லமையை வாரி வழங்கும், லட்சியங்கள் யாவும் நிறைவேறும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், திருப்தியையும் போதும் என்ற மன நிறைவையும் நல்கும், எனவே குரு திசை தங்களுக்கு யோகம் மிகுந்த நல்வாழ்க்கையை லக்கின வழியில் இருந்து வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகருக்கு உண்டான பலன்கள் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டும், திசை,புத்தி ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை அடிப்படையாக கொண்டு தெளிவாக விளக்கம் தர சுய ஜாதக கணிதம் நமக்கு மிகவும் உதவியாக அமைந்தது, இதன் அடிப்படையில் ஜாதகர் துல்லியமாக தமது வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள இயலும்,

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய் மற்றும் ராகுகேது தோஷம் திருமண தடைகளை தருமா? திருமணம் தாமதம் ஆக காரணம் என்ன ?


கேள்வி :

எனது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் மற்றும் ராகு கேது தோஷம் உள்ளதால் திருமணம் தாமதம் ஆகின்றது என்கின்றனர், இது உண்மையா? எனக்கு வரும் வாழ்க்கை துணை பற்றி விளக்கம் தருக.


பதில் :

தங்களது சுய ஜாதக அமைப்பின் படி பெரும்பாலான பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அமைப்பாகும், தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே ஆயுள் பாவகமான 8ம் பாவகத்திலும், குடும்ப ஸ்தானமான 2 ம் பாவகத்திலும் அமர்ந்து இருப்பது உறுதியாகிறது, ஆனால் செவ்வாய் தங்களுக்கு மிதுன ராசியில் அமர்ந்து இருந்த போதிலும் நான்காம் பாவகத்தில் அமரவில்லை, மிதுன ராசியில் மூன்றாம் பாவகத்திற்கு உற்ப்பட்ட பாகையில் அமர்ந்து இருக்கின்றார் ( தங்களுக்கு மூன்றாம் பாவகம் ரிஷப ராசியில் 41:48:06 பாகையில் ஆரம்பித்து மிதுனம்  ராசியில் 68:13:04 பாகையில் முடிவடைகிறது, மேலும் செவ்வாய் மூன்றாம் பாவகத்திற்கு உற்ப்பட்ட 60:57:24 பாகையில் அமர்ந்து இருக்கின்றார் ) எனவே  அடிப்படையில் தங்களது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை  என்பதே உண்மை நிலை ( செவ்வாய் தோஷம் என்பது ஆய்வுக்கு உரிய விஷயம் ) தங்களது ஜாதகத்தில் ராகுகேது மட்டும் முறையே 8,2ம் பாவகங்களில் அமர்ந்து இருக்கின்றனர், செவ்வாய் 3ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார்.

தங்களது கேள்விக்கு வருவோம் திருமண தாமதத்திற்கு காரணமாக தங்களது ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை இழப்பதும், தங்களின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாக அமைவதையும் காரணமாக எடுத்துக்கொள்ளலாம், ஆனால் இதற்க்கு காரணமாக சர்ப்ப கிரகங்கள் மீது குற்றம் சாற்ற இயலாது ஏனெனில் 2,8ம் வீடுகளுக்கு அதிபதி புதன், 2ம் பாவகத்தில் அமர்ந்த கேது தனது நிலையில் இருந்து  குடும்ப ஸ்தானத்திற்கு வலிமையை தருகிறார், 8ம் பாவகத்தில் அமர்ந்த ராகு மட்டும் தனது நிலையில் இருந்து ஆயுள் ஸ்தானத்திற்கு முழுவீச்சில் இன்னல்களை தருகிறார், செவ்வாய் அமர்ந்த 3ம் பாவகம் தங்களது ஜாதகத்தில் மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது, எனவே செவ்வாய் பகவானால் தங்களுக்கு திருமணம் தடைபெற வாய்ப்பு இல்லை என்பது தெளிவான உண்மை, தங்களின் கேள்வியில் உள்ளது போல் ராகுகேது, செவ்வாய் தங்களது திருமண வாழ்க்கையில் யாதொரு தடைகளையும் தரவில்லை.

திருமணம் தாமதம் ஆக  காரணம் என்ன ?

தங்களுக்கு கடந்த சந்திரன் திசையே திருமண வாழ்க்கையை அமைத்து தரவில்லை  எனலாம், திருமணம் செய்ய வேண்டிய பருவ வயதில் நடைபெற்ற சந்திரன்  திசை ( 01/02.2006 முதல் 01/02/2016 வரை ) 10 வருடங்களும் தங்களுக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை இழந்த ஆயுள் ஸ்தான பலனை ஏற்று நடத்தியதே காரணமாக அமைந்தது, சந்திரன் திசை ஏற்று நடத்திய ஆயுள் பாவகம்  கால புருஷ தத்துவத்திற்கு களத்திர ஸ்தானமாக அமைந்ததால், கடந்த சந்திரன் திசை காலத்தில் தாங்கள் திருமணத்திற்க்காக எடுத்த முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது, நல்ல நண்பர்கள் சேர்க்கையை தரவில்லை, நல்ல வேலை மற்றும் ஊதியம் அமையவில்லை, வரும் வருமானம் அனைத்தும் வீண் விறையத்தை தந்தது, மேலும் எதிர்பால் அமைப்பினரிடம் இருந்து வரும் இன்னல்கள் மூலம் எதிர்பாராத இழப்புகளை தந்தது, மேலும் சிந்திக்கும் திறனை குறைத்து, மன நிம்மதியிழப்பையும், மன போராட்டத்தையும் அதிகரித்தது, இதனால் தங்களின்  வாழ்க்கை சந்திரன் திசை காலத்தில் ( 10 வருடங்களும் ) அதிக துன்பங்களும், காரிய தடைகளையும், ஜீவனம் முன்னேற்றம் அற்ற நிலையையும் வழங்கியது, தங்களின் திருமண வாழ்க்கை தடைபட இதுவே காரணமாக அமைந்து விட்டது, எனவே தங்களின் திருமணம் தடைபெற ராகுகேது  மற்றும் செவ்வாய் தோஷம் காரணம் அல்ல என்பதில் தெளிவு பெறுங்கள்.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 01/02/2016 முதல் 01/02/2023 வரை ) தங்களுக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை இழந்த ஆயுள் ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மேற்கண்ட பாவக வழியில் இன்னல்களை தந்த போதிலும், 1,3,7,12ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற வீரிய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும் எனவே செவ்வாய் திசையில் 7ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், தங்களின் திருமண முயற்ச்சிகள் உடனடி  வெற்றியை தரும், சிறப்பான வாழ்க்கை துணை நிச்சயம் அமையும், மேலும் தங்களின் வாழ்க்கை துணை வடகிழக்கு திசையில் வெகு தொலைவிற்கு அப்பால்  இருந்து வரும் வாய்ப்பு உண்டாகும், வரும் வாழ்க்கை துணை சிறந்த நிர்வாக திறனும், ஆளுமையும் கொண்டு இருப்பர், இருப்பினும் பேச்சு அதிகமிருக்கும், வரும் வார்த்தைகள் தங்களை சிறிது  பாதிக்கும், செவ்வாய் திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தியில் நிச்சயம் தங்களுக்கு திருமணம் சிறப்பாக நடைபெறும். ( எந்த ஒரு ஜாதகருக்கும் திருமணம் தாமதம் ஆனால் அதற்க்கு காரணமாக நிச்சயம் சுய ஜாதகத்தில் 2,7,12ம் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் அல்லது நடைபெறும் திசை பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், எனவே அதன் நிலை அறிந்து அதற்கான பரிகாரங்களை நாடினால் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மை உண்டாகும், சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும் ) 

குறிப்பு :

அடுத்து வரும் ராகு திசையும், குரு திசையும் தங்களுக்கு அபரிவிதமான ராஜயோக பலன்களை தர காத்துகொண்டு இருக்கின்றது என்பது, தங்களின் வாழ்க்கையில் வரும் பின் யோகத்திற்கு எடுத்துக்காட்டு, தங்களின் வாழ்க்கையில் தற்போழுது நடைபெறும் செவ்வாய், அடுத்தது வரும் ராகு, அதற்க்கு  அடுத்து வரும் குரு திசை வலிமைபெற்ற சில பாவகங்களின் பலனை மட்டும் ஏற்று நடத்துவது, தங்களின் வாழ்க்கையில் மறக்க இயலாதாக முன்னேற்றத்தையும், ராஜ யோக பலன்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க அமசமாகும், இதன் பலாபலன்களை தெளிவாக உணர்ந்து சகல நலன்களும் பெற்று வாழ்க, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 1 நவம்பர், 2016

பெண்கள் ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமையும் திருமண தடைகளும் !



சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது மிக மிக அவசியமாகிறது, இதில் ஆண் பெண் வேறுபாடுகள் எதுவும் இல்லை எனலாம், இருப்பினும் பெண்களின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கையயை நிர்ணயம் செய்யும், குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும்  7ம் பாவகமும் வலிமை இழப்பது சம்பந்தப்பட்ட ஜாதகிக்கு உகந்தது அல்ல, மறைவு ஸ்தான தொடர்பை பெறுவது திருமண வாழ்க்கையில் தடைகளையும் வெகு தாமாதத்தையும் வழங்கும், மேலும் தாமதமாக திருமணம் நடைபெற்றாலும், இல்லற வாழ்க்கையில் தொல்லைகளையும் துன்பங்களையும் தரும், மன வாழ்க்கையில் பிரிவு, தம்பதியர் ஒற்றுமை இன்மை, பொருளாதார சிக்கல்கள், உறவுகள் ஆதரவின்மை சிரமங்களை அதிக அளவில் தரக்கூடும், பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகியின் திருமண வாழ்க்கைக்கே தடைகல்லாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு, மேலும் எதிர்பால் அமைப்பினரிடம் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க ஜாதகி பெரிய அளவில் போராடும் சூழ்நிலையை தரும்.

மேற்கண்ட பாதிப்புகள் ஆணின் ஜாதகத்தில் இருப்பின் ஜாதகர் சமூகத்தின் விமர்சனத்தில் இருந்து தப்பிக்கும் வழி உண்டு, ஆனால் பெண்களின் ஜாதகத்தில் இருப்பின் சமூகத்தின் விமர்சனத்தில் இருந்து தப்புவது என்பது இயலாத காரியம், ஜாதக வலிமை இன்மை பெண்களின் மன பாதிப்புகளை வெகுவாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : ரேவதி 3ம் பாதம் 

ஜாதகிக்கு வயது 41 முடிவடைந்து விட்டது, இதுவரை திருமணத்திற்கு எடுத்த முயற்ச்சிகள் யாவும் தோல்வியை தழுவின, ஜாதகிக்கு வரும் வரன்கள் யாவும் ஏதாவது ஒரு வழியில் தட்டி சென்றது, திருமணத்திற்கு உண்டான முயற்ச்சிகள் யாவும் பெரிய பின்னடைவை சந்தித்தது, எவ்வித பரிகாரமும் பலன் தரவில்லை, இதற்கு காரணம் என்ன? என்பதை அவரது ஜாதக ரீதியாக ஆய்வு செய்வோம் அன்பர்களே.

1) ஒருவரது சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் குடும்பம்,களத்திரம் மற்றும் விறையம் என்று அழைக்கப்படும் 2,7,12 ம் வீடுகளாகும், மேற்கண்ட ஜாதகத்தில் 2,7,12 ம் வீடுகள் பெரும் தொடர்பை ஆய்வு செய்வோம் அன்பர்களே, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், அயன சயன ஸ்தானம் எனும் 12ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

2) ஜாதகிக்கு 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து 200 சதவிகித இன்னல்களை வாரி வழங்கும் அமைப்பாகும், 12ம் வீடு விறைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது மன நிம்மதி இழப்பையும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற நிலையையும் தரும் அமைப்பாகும்.

3) மேற்கண்ட பாதிப்புகள் ஜாதகிக்கு இருந்த போதிலும் திருமண வயதில் ( 18 முதல் 27 வயது வரை ) நடைமுறையில் இருந்த திசை வழங்கிய பலன்களை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஜாதகிக்கு ( 08/08/1989 முதல் 08/08/2009 வரை ) நடைபெற்றது சுக்கிரன் திசை, இந்த சுக்கிரன் திசை 2௦ வருடமும்  ஜாதகிக்கு 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி உள்ளது என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திய சுக்கிரன் திசை ஜாதகிக்கு திருமணத்திற்கு உண்டான வாய்ப்பை சிறிதும் வழங்கவில்லை, நடைபெற்றது சுக்கிரன் திசை என்றாலும் அவர் ஏற்று நடத்தியது பாதக ஸ்தான பலன் என்பதால் ஜாதகிக்கு, திருமண வாழ்க்கை அமையவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

4) சுக்கிரன் திசைக்கு பிறகு நடைபெற்ற சூரியன் திசை 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனே தொடர்பு பெற்று பலனை நடத்தியது, ஜாதகிக்கு கல்வியில் நல்ல யோகத்தை மட்டும் தந்தது இல்லற வாழ்க்கை சார்ந்த யாதொரு நன்மையையும் தர வில்லை, தற்பொழுது நடைபெறும் சந்திரன் திசை ஜாதகிக்கு விறைய ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதும் ஜாதகிக்கு உகந்தது அல்ல என்பதை தெளிவு படுத்த விரும்புகிறோம்.

எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டு, நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையையும் தெளிவாக தெரிந்துகொண்டு, இல்லற வாழ்க்கையினை அமைத்து கொள்வதே சால சிறந்தது, மேற்கண்ட ஜாதகி தனது சுய விருப்பங்களுக்கு முன் உரிமை தாராமல், தனக்கு வரும் கணவரின் சுய ஜாதகத்தில் 2,7,12ம் பாவகங்கள் வலிமை பெற்ற ஓர் வரனை சரியான வயதில் தேர்வு செய்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பதை, ஜாதகி உணர்ந்து செயல்பட்டு இருப்பின், திருமணம் தாமதம் ஆகியிருக்க வாய்ப்பில்லை, இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமைந்து இருக்கும், மாறாக ஜாதகி தனது சுய விருப்பங்களுக்கும், கற்பனை வாழ்க்கை துணைக்கும் முன்னுரிமை தந்ததால், பெண்களுக்கு சரியான வயதில் நிகழ வேண்டிய திருமண வாழ்க்கை இந்த பெண்ணிற்கு இதுவரை நிகழவில்லை என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

திருமண வாழ்க்கை பொறுத்தவரை வரனோ, வதுவோ தமது சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டே இல்லற வாழ்க்கையை தேர்வு செய்வது அவசியமாகிறது, இல்லை எனில் இல்லற வாழ்க்கையில் வரும் மன கசப்பையும், பிரிவையும் தவிர்க்க இயலாது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696