புதன், 11 ஜனவரி, 2017

காதல் கைகூடுமா ? எனது காதலர் மூலம் நல்ல இல்லற வாழ்க்கை அமையுமா?



கேள்வி :

 கடந்த ஒரு வருடமாக நான் ஒருவரை காதலித்துக்கொண்டு இருக்கின்றேன், அவரை திருமணம் செய்துகொள்ள இயலுமா? எனது  அவரை திருமணம் செய்துகொண்டால்  எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? தற்போழுது படித்துக்கொண்டு இருக்கின்றேன் நல்ல வேலை கிடைக்குமா?



லக்கினம் : கன்னி 
ராசி : விருச்சிகம் 
நட்ஷத்திரம் : விசாகம் 4ம் பாதம் 

 கடந்த ஒரு வருடமாக நான் ஒருவரை காதலித்துக்கொண்டு இருக்கின்றேன், அவரை திருமணம் செய்துகொள்ள இயலுமா?

பதில் : 

சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களின் காதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும், தாங்கள் விரும்பும் நபர் தங்களுக்கு மிகுந்த இன்னல்களையும் திடீர் இழப்புகளையும் ஏற்படுத்துவார், தாங்கள் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால், பிராண ஆபத்துகள் கூட ஏற்படலாம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, தங்களது ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமை குன்றி காணப்படுகிறது என்பதால், சற்று எச்சரிக்கையுடன் இருப்பதே தங்களுக்கு நன்மையை தரும், இல்லை எனில் தற்போழுது கற்றுக்கொண்டு இருக்கும் கல்வியில் தடை ஏற்படும், சம்பந்தப்பட்ட நபரால், தாங்கள் பலவித துன்பத்திற்க்கு ஆளாவீர்கள் என்பது மட்டும் உண்மை, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இன்றி இருப்பதும் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களுக்கு பெருவாரியான இன்னல்களை தாங்களே தேடிக்கொள்ளும் சூழ்நிலையை தரும், தங்களின் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை பெரியோர்களின் அறிவுரைப்படியும், தாங்களே நன்கு ஆலோசித்து முடிவு செய்வது நலம் இல்லை எனில் தங்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும்.

பெற்றோர் இதற்க்கு சம்மதம் தெரிவிப்பார்களா?

நிச்சயம் சம்மதிக்க வாய்ப்பில்லை, ஏனெனில் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தை விட, பெற்றோரை குறிக்கும் 4,10ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது, 4ம் பாவகம் தந்தை வழியிலும், 10ம் பாவகம் தாய் வழியிலும் தடைகளை ஏற்படுத்துவார்கள், தாங்களது ஜாதகத்திலும் லக்கினம் வலிமை இல்லை என்பதால் தாங்கள் துணிந்து ஓர் முடிவை எடுக்க இயலாது , களத்திர ஸ்தானமும் வலிமை இல்லை என்பதால் தங்களது காதலரும் விட்டால் போதும் என்று ஓடிவிடும் நிலையில் இருப்பார்.

அவரை திருமணம் செய்துகொண்டால்  எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?

தங்களது காதலரை திருமணம் செய்துகொள்ள தங்களுக்கு சிறிதும் வாய்ப்பு இல்லை, ஒரு வேலை வறட்டு பிடிவாதமாக திருமணம் செய்துகொண்டால், மண் குதிரையை நம்பி நடு ஆற்றில் இறங்கியதற்கு ஒப்பான பலன்களை தாங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும், மறுமணம் அல்லது பிராண ஆபத்து உண்டாகும்.

தற்போழுது படித்துக்கொண்டு இருக்கின்றேன் நல்ல வேலை கிடைக்குமா?

இது ஞாயமான கேள்வி தங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், ஒரு பட்டய படிப்பிற்கு பிறகு நல்ல வேலை அமையும், இதன் மூலம் தங்களது வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், தற்போழுது உள்ள இனக்கவர்ச்சியை காதல் என்று நம்பி தங்களது வாழ்க்கையை தாங்களே கெடுத்துக்கொள்ள வேண்டாம், சுய ஜாதகத்தில் ஜீவனம் மற்றும் லாபஸ்தானங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பதும், தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு 5,11ம் வீடுங்கள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்த பெற்று முழு வீச்சில் 100% விகித நன்மைகளை செய்வதால் அதற்குண்டான நன்மைகளை தேடி பெறுங்கள், நல்ல சிந்தனை தெளிவான அறிவாற்றல் தங்களின் வாழ்க்கைக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், மனம் சொன்னபடி நடப்பதை விட்டு விட்டு, அறிவு சொல்லும் நல்ல விஷயங்களை ஏற்று சகல அதிர்ஷ்டங்களையும் பெறுக  வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 10 ஜனவரி, 2017

கேது திசை தரும் கெடுதல்களும், சுய ஜாதகத்தில் கேது பகவான் பெரும் வலிமையும் !


 சாயா கிரகங்களான ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமர்வது மிதமிஞ்சிய யோக பலன்களை வாரி வழங்கும், என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் தாம் அமரும் பாவகத்தை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வல்லமை சாயா கிரகங்களுக்கு உண்டு, கீழ்க்கண்ட ஜாதகருக்கு எதிர்வரும் கேது திசை தரும் பலன்கள் என்ன? கேது திசையில் ஜாதகர் அனுபவிக்கும் யோக அவயோகங்கள் பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

பொதுவாக சுய ஜாதக வலிமை என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து தரும், சுய ஜாதகம் வலிமை அற்ற நிலையில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும், சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பானது அல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இதனை தவிர்க்கவும் இயலாது என்பது வருந்தத்தக்க விஷயமாகும், இதை கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : மகரம் 
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 3ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1ம் வீடு களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான யோக வாழ்க்கையை ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நல்கும்.

2,6,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வருமானம், சிறந்த குடும்பம், வாக்கு வன்மை, பொருளாதர ரீதியான தன்னிறைவு என்ற வகையிலும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து பதவியில் வெற்றி, அதிகாரிகள் அன்பு, உத்தியோக ஆர்வம், சொந்த முயற்ச்சியில் முன்னேற்றம் ஜீவன ரீதியான முன்னேற்றங்கள் என்ற வகையிலும், களத்திர ஸ்தான வழியில் இருந்து தாமத திருமணம், நல்ல வாழ்க்கை துணை, அரசியல் வெற்றிகள், வியாபாரத்தில் வெற்றி, சமூக அந்தஸ்த்து என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

4,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு கடுமையான இன்னல்களையும், 4ம் பாவக வழியில் இருந்து சுக போகங்களில் தடைகளையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், 10ம் பாவக வழியில் இருந்து நிலையான ஜீவனம் அற்ற தன்மையையும் வாரி வழங்கும்.

ஜாதகத்தில் கடுமையான பாதிப்பை தரும் பாவக தொடர்புகள் :

3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 3ம் பாவக வழியில் எடுக்கும் முயற்சிகளில் தோல்விகளையும், 5ம் பாவக வழியில் இருந்து பூர்வீக ஜீவனம் அற்ற நிலையையும், சமயோசித அறிவுத்திறன் அற்ற நிலையையும், 9ம் பாவக வழியில் இருந்து யாருடைய உதவியையும் பெற இயலாத நிலை, 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமற்ற தன்மையையும் தரும், ஜாதகத்திலே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகங்கள் மேற்கண்ட 3,5,9,11 என்றால் அது மிகையில்லை, எனவே ஜாதகருக்கு 4 பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, மேலும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகரை வெகுவாக பாதிக்கும்.

தற்போழுது நடைபெறும் புதன் திசை ( 28/02/2000 முதல் 28/02/2017 வரை ) ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை தந்துகொண்டு இருக்கின்றது, திடீர் இழப்புகள், மனஅழுத்தம், மன நிம்மதியின்மை, கடும் குழப்பம், மனப்போராட்டம் என புதன் திசை ஜாதகருக்கு யோகம் அற்ற நிலையினையே தருகின்றது.

எதிர் வரும் கேது திசை ( 28/02/2017 முதல் 28/02/2024 வரை ) தரும் பலன்களை ஜாதகர் எதிர்கொள்வதுதான், அவருக்கு இருக்கும் சவால், ஏனெனில் 3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை மட்டும் ஏற்று நடத்துகிறது, இதனால் ஜாதகர் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர்  எடுக்கும் முயற்சிகள் அனைத்த்தும் வெற்றியை தாராது, 5ம் பாவக வழியில் கற்ற கல்வியில் சுய அறிவு திறனும் பலன் தாராது, பூர்வீக ஜீவனம் அற்ற நிலையை தரும், 9ம் பாவக வழியில் இருந்து பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்காமல் துன்பப்படும் நிலையை தரும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பிற்போக்கு தனமான செயகைகளினால் தனது வாழ்விற்கு தானே துன்பத்தை தேடிக்கொள்வார், அதிர்ஷ்டம் ஜாதகருக்கு வெகு தொலைவிலேயே நின்றுகொள்ளும், கேது திசை முழுவதும் நடைபெறும் பாதக ஸ்தான பலனை ஜாதகர் எதிர்கொள்வது என்பது சற்று சிரமமான காரியமாகவே அமையும், மேலும் இந்த கேது திசை ஜாதகருக்கு இளமை  பருவத்தில் நடைபெற்று, பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும், ஆனால் சுய ஜாதகத்தில் கேது பகவான் 5ல் அமர்வதும் வலிமை பெற்று இருப்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

குறிப்பு :

ஜாதகரை முறையான ப்ரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெற முயற்சிக்கலாம், மேலும் 3,5,9,11ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை அனுபவித்து கழித்துக்கொள்வதே சாலச்சிறந்தது, சுக்கிர வழிபாடு செய்வது ஜாதகருக்கு மென்மையான யோக பலன்களை வாரி வழங்கும்.


திங்கள், 9 ஜனவரி, 2017

ஏழரை சனியின் பாதிப்பு கடுமையாக இருக்கும் விபத்து, இழப்பு, விரையம் என இன்னல்களை தரும் என்கின்றனர், இதற்க்கு பரிகாரம் என்ன?


 கேள்வி :

எதிர்வரும்  ஏழரை சனியின் பாதிப்பு கடுமையாக இருக்கும் விபத்து, இழப்பு, விரையம் என இன்னல்களை தரும் என்கின்றனர், இதற்க்கு பரிகாரம் என்ன? எனது ஜாதகப்படி எதிர்காலம் எப்படி இருக்கும்? சற்று மனபயமும் குழப்பமாகவும் உள்ளது, இதற்க்கு சரியான தீர்வு வேண்டுகின்றேன்.

பதில் :

கடந்த தலைமுறையினரை சார்ந்த அன்பர்களின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவை சரியாக தெரியாத நிலையில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் முதல் எழுத்தை கருத்தில் கொண்டும், நாம நட்ஷத்திரம் கண்டறிந்து அதன் மூலம் ராசியை அடிப்படையாக கொண்டு சம்பந்தபட்ட நபருக்கு ராசி பலன் கண்டு, எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான அறிவுரைகளை ஜோதிடர்கள் வழங்கினார், இது கடந்த தலைமுறையினருக்கு ஓரளவு மன ஆறுதல்களையும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையையும் ஏற்பட்ட செய்தது, தற்போழுது உள்ள தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு இந்த பிரச்சனை 100% விகிதம் இல்லை எனலாம், ஏனெனில் ஒவ்வொருவரின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவை அனைவருக்கும் சரியாக தெரிந்து இருக்கின்றது,( இன்னும் ஒருபடி மேலே சென்று மக்கள் தமக்கு பிறக்கும் குழந்தையை நல்ல நேரத்தில் அறுவை சிகிசிச்சையின் மூலம் பெற்றுக்கொள்கின்றனர், இது எந்தளவுக்கு சரி என்பது ஆய்வுக்கு உற்ப்பட்டது ) இவற்றின் துணை கொண்டு ஒருவருக்கு மிக துல்லியமாக சுய ஜாதகத்தை கணிதம் செய்து விடலாம், இதை ஓர் கணினி சில நொடிகளில் செய்து விடுகிறது, கால மாற்றத்தில் தற்போழுது உள்ள தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை எனலாம், எனவே நாம நட்ஷத்திரம் கொண்டு ராசிபலன் காணவேண்டிய கட்டாயம் இந்த தலைமுறையினருக்கு இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் ஒருவரது லக்கினம் தெரியும் பொழுது, ராசியை அடிப்படையாக கொண்டு பலன்காண வேண்டிய கட்டாயமும் இல்லை, எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் எனும் முது மொழிக்கு ஏற்ப, சுய ஜாதகத்தில் சகல விஷயங்களையும் கட்டுப்படுத்துவதும், யோக அவயோக, நன்மை தீமை பலன்களை வழங்குவது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையே என்றால் அது மிகையாகாது, மேலும் ஒருவரது சுய ஜாதகத்தை கொண்டு பலன் காண முற்படும் பொழுது சந்திரன் அமர்ந்த ராசியை கொண்டு பலன் காண வேண்டிய அவசியமில்லை என்பதை இந்த பதிவில் தெளிவாக விளக்கம் தர "ஜோதிடதீபம்" கடமை பட்டுள்ளது.

சுய ஜாதகம் கொண்டு பலன் காணும் பொழுது நமக்கு கிடைக்கும் நன்மைகள் :

1) சுய ஜாதகம் கொண்டு பலன் காணும் பொழுது ஜாதகர் பிறந்த லக்கினத்தை கொண்டே பலன் காணலாம் எனும் பொழுது, சந்திரன் நின்ற ராசிக்கு உண்டான பலாபலன் பற்றி நாம் கருத்தில் கொள்ள தேவையில்லை, நமக்கு சுய ஜாதகம் இல்லாதா நிலையிலே நாம நட்ஷத்திரம் கொண்டு ராசிபலன் காணலாம்.

2) லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பற்றி தெளிவாக அறிந்துகொள்ளும் பொழுது, ஜாதகருக்கு உள்ள யோகம் மற்றும் அவயோகம் பற்றிய ஒரு தெளிவும், இதனால் ஜாதகர் அனுபவிக்கும் நன்மை தீமை பற்றி தெளிவாகவும், துல்லியமாகவும் தெரிந்துகொள்ள இயலும்.

3) நவ கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகர் நவ கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் தரும் யோக அவயோகம் மற்றும் ஜாதகர் பெரும் நன்மை தீமையை பற்றி மிக மிக துல்லியமாகவும் உண்மையாகவும் தெரிந்துகொள்ள இயலும்.

4) தற்போழுது நடைமுறையில் உள்ள நவ கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு, கோட்சார கிரகங்கள் தரும் தரும் நன்மை தீமை பற்றி தெளிவு பெரும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெற கூடிய யோக அவயோக நிகழ்வுகள் மிக துல்லியமாக அறிந்துணர்ந்து, அவரின் வாழ்க்கையில் வரும் யோகங்களை ஏற்று கொள்ளவும், அவயோகங்களை கிரகித்து கொள்ளவும் அறிவுரைகளை நிச்சயம் வழங்க முடியும்.

5)  மேற்கண்ட முறையில் லக்கினத்தை கொண்டு ஒருவருக்கு துல்லியமான சுய ஜாதக பலன் காண்பது போல், சந்திரன் நின்ற ராசியை அடிப்படையாக கொண்டும், நாம நட்ஷத்திர ராசியை கொண்டும் ஒருவருக்கு  நிச்சயம் துல்லியமான பலன் காண இயலாது என்பதை உறுதி படுத்துகிறோம், ஒருவேளை ராசியை வைத்து பலன் கண்டு அது சரியாக இருப்பின் "காகம் அமர பனம்பழம் விழுந்த" கதையாகவே அமையும்.

இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

கீழ்கண்ட ஜாதகருக்கு  ஜோதிடர்கள் அறிவுறுத்திய விஷயம், ஜாதகர் மகர ராசி என்பதனால் எதிர்வரும் சனி பெயர்ச்சி ஏழரை சனியாக அமைவதால், ஏழரை சனியின் பாதிப்பு கடுமையாக இருக்கும், இதனால் விபத்து, இழப்பு, விரையம் என இன்னல்களை தரும், தங்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்படும், குடும்பத்தில் நிம்மதி இருக்காது, கடன் தொந்தரவு அதிகரிக்கும், திடீர் விபத்து மூலம் வீண் மருத்துவ செலவுகள் வரும், சண்டை சச்சரவு, வம்பு வழக்கு, உடல் நல பாதிப்பு , உறவுகள் மனகசப்பு, குழந்தைகள் வழியில் இன்னல்கள் என கடுமையான இன்னல்களை எதிர் வரும் ஏழரை சனி தரும், என்று சந்திரன் நின்ற ராசியை அடிப்படையாக கொண்டு, ஜாதக ஆலோசணை வழங்கப்பட்டு இருக்கின்றது, இனி அவரது சுய ஜாதகத்தை கொண்டு அவரது சுய ஜாதக வலிமை, நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக பலன்கள் தரும் நன்மை தீமை, அதற்க்கு கோட்சார கிரகங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : கன்னி 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 

ஜாதகருக்கு மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,5,7,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், இதனால் ஜாதகர் 1,3,5,7,11ம் பாவக வழியில் இருந்து 100% விகித சுபயோக பலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் ஆகிறார்.

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

2ம் வீடு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, இனிமையான குடும்ப வாழ்க்கையையும், கைநிறைவான வருமான வாய்ப்புகளையும், இனிமையான பேச்சு திறமையையும் தரும், தனம் சார்ந்த சிக்கல்கள் ஏதும் ஜாதகருக்கு வாராது.
6,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6,8,9,10ம் பாவக வழியில் இருந்து 70% விகித சுபயோகங்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 4,12ம் பாவக வழியில் இருந்து ஸ்த்திரமான 70% விகித இன்னல்களை தரும், குறிப்பாக மேற்கண்ட பாவக வழியிலான பாதிப்பை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் மட்டும் ஜாதகர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமையுடன் இருப்பதால் ஜாதகருக்கு சுய ஜாதகம் 95% விகித மிக மிக வலிமையுடன் உள்ளது என்பதால், முழு அளவிலான யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை கொண்டவர் என்பது உறுதியாகிறது.

ஜாதகருக்கு தற்போழுது குரு மஹா திசை ( 23/03/2013 முதல்  23/03/2029 வரை ) நடைபெறுகின்றது, தனது திசையில் குரு பகவான் ஜாதகருக்கு 6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனை ஏற்று நடத்துகின்றார், இதானால் ஜாதகர் ஜீவன வழியில் நல்ல முன்னேற்றமும், கவுரவம் மற்றும் அந்தஸ்த்து குறையாத யோக வாழ்க்கையையும் பெறுவார் மேலும் குறுகிய கால லாபங்களை ஜாதகர் தனது தொழில் ரீதியாக பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தரும், எனவே குரு திசை முழுவதும் ஜாதகருக்கு ஜீவன வழியிலான நன்மைகளே நடைபெறும், தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி ( 12/05/2015 முதல் 22/11/2017 வரை ) நடைமுறையில் உள்ளது, சனி புத்தியும் ஜாதகருக்கு  6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனையே ஏற்று நடத்துகின்றார், எனவே ஜாதகருக்கு நடைபெறும் குரு திசையும், சனி புத்தியும் வலிமை பெற்ற 6,10ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது ஜாதகருக்கு ஜீவன ரீதியான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும்.

குரு திசையில் அடுத்து வரும் புதன் புத்தி ( 22/11/2017 முதல் 28/02/2020 வரை ) தனது புத்தியில் 1,3,5,7,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராஜயோக பலன்களை வாரி வழங்குவது, ஜாதகருக்கு 1,3,5,7,11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை தன்னிறைவாக வாரி வழங்கும், குரு திசையில் கேது புத்தி ஜாதகருக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் ரீதியான திடீர் அதிர்ஷ்டங்களையும், குரு திசையில் சுக்கிரன் புத்தி  8,9ம் வீடுகள்  ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 8ம் பாவக வழியில் தொழில் ரீதியாக திடீர் அதிர்ஷ்டத்தையும், 9ம் பாவக வழியில் சமூக அந்தஸ்து மற்றும் பெயரும் புகழையும் ஜீவன ரீதியாக வழங்கும். எனவே ஏழரை சனி நடைபெறும் நேரமான ஏழரை வருடமும் ஜாதகருக்கு ஜீவனம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளே சுய ஜாதக ரீதியாக நடைபெறுகின்றது என்பது உறுதியாகிறது அன்பர்களே, மேலும் தற்போழுது நடைபெற இருக்கின்ற சனி பெயர்ச்சி மேற்கண்ட திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு சம சப்த்த பார்வையாக சனி பகவான், தனது வர்க்க கிரகமான புதனுக்கு உரிய மிதுன ராசியை வசீகரித்து, ஜாதகருக்கு மென்மேலும் ஜீவன ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் மிகுந்த லாபத்தை தரும், வியாபார விருத்தி, செல்வச்செழிப்பு என்ற வகையில் ஜீவன ஸ்தானத்தை வசீகரிக்கும் கோட்சார சனி ஜாதகருக்கு நன்மையே செய்கின்றார் என்பதும் உறுதியாகிறது.

எனவே எதிர்வர இருக்கும் சனி பெயர்ச்சியால் ( மகர ராசிக்கு ஏழரை சனி என்ற வாதம் சுய ஜாதகம் வலிமை பெறுவதாலும், நடைபெறும் திசாபுத்தி ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதாலும் எடுபடாது ) மேற்கண்ட ஜாதகருக்கு எவ்வித துன்பமும் சிறிதும் இல்லை என்பதே சுய ஜாதக ரீதியான உண்மை நிலை என்பதை "ஜோதிடதீபம்" இந்த பதிவில் தெளிவு படுத்துகிறது.

குறிப்பு :

 ஒருவரது சுய ஜாதகம் மிகவும் வலிமை பெற்று இருந்தாலோ, தற்போழுது நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருந்தாலோ, கோட்சார கிரகங்களினால் யாதொரு பாதிப்பு இருக்காது என்பதே உண்மை நிலை, மேலும் சந்திரன் நின்ற ராசியை வைத்து பலன்காண முற்படுவது சம்பந்தப்பட்ட நபரின் மனம் சார்ந்த விஷயங்களை மட்டுமே பாதிக்கும், சுய ஜாதக வலிமையை சிறிதும் பாதிக்காது என்பது 100% விகித உண்மை என்பதை இங்கே "ஜோதிடதீபம்" பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 7 ஜனவரி, 2017

தொழில் நிர்ணயம் : சுய தொழில் செய்வதற்கு ( பால் பண்ணை ) ஏற்ற ஜாதகமா ?


கேள்வி :

புதியதாக சுய தொழில் துவங்கலாம் என்று இருக்கின்றேன், எனது ஜாதகம் சுய தொழில் செய்வதற்கு ஏற்றதா? குறிப்பாக பால் பண்ணை வைத்து வியாபரம் செய்யலாம் என்று இருக்கின்றேன், இந்த தொழில் எனக்கு லாபகரமாக அமையுமா? தொழில் முன்னேற்றம் எப்படி அமையும்? தொழில் துவங்க இது உகந்த நேரமா? சற்று விரிவான விளக்கம் தரவும்.


லக்கினம் : கன்னி 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : புனர்பூசம் 4ம் பாதம் 

பதில் :

" உத்தியோகம் புருஷ லட்சணம் " என்ற முதுமொழிக்கு ஏற்ப ஒருவர் செய்யும் தொழில், அவருக்கு சமூகத்திலும், உறவுகள் வழியிலும் மிகுந்த மதிப்பு மரியாதை மற்றும் கௌரவத்தை பெற்று தரும் என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, தாம் பெற்ற தொடர்புகளுக்கு ஏற்ற நன்மை தீமை பலன்களை பாரபட்சம் இன்றி வாரி வழங்கும், இதில் ஒருவரது ஜீவன ( சுய தொழில் ) வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் ஜாதகத்தில் கர்ம ஸ்தானம் எனும் 10ம் பாவக வலிமை மட்டும் அல்ல, மற்ற பாவகங்களின் வலிமையையும் கருத்தில் கொண்டு சரியான தொழிலை தேர்வு செய்வதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு 100% விகித தொழில் வெற்றிகளை வாரி வழங்கும், மேற்கண்ட ஜாதகருக்கு பொருத்தமான வெற்றியை நல்கும் தொழில் எது? என்பதனையும், அவரது கேள்விகளுக்கு உண்டான பதில் என்ன? என்பதனையும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சுய தொழில் மூலம் வெற்றிவாகை சூட சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

1) நான்கு கேந்திரங்களான ( 1,4,7,10 ம் ) பாவகங்கள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருப்பது தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்க அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகரின் சுய உழைப்பு, தொழில் மீது ஜாதகர் காட்டும் ஆர்வம், தொழில் நுணுக்கம் ஆகியவற்றை ஜாதகர் கிரகித்துக்கொள்ளும் பேராற்றல் என ஜீவன ஸ்தான வெற்றியை நிர்ணயம் செய்ய லக்கினம் வலிமை பெறுவது மிக முக்கியமாகிறது, சுக ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தொழில் வழியில் பயன்படுத்திடும் உபகரணங்கள் சார்ந்த அறிவு, அதன் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள், தொழிலார்களிடம் காட்டும் இணக்கம் மற்றும் நல்ல குணம், வண்டி,வாகனம், இடம் மற்றும் தொழில் ஸ்தாபனம் மூலம் ஜாதகர் பெரும் யோகங்கள் பற்றி சுக ஸ்தானமே நிர்ணயம் செய்யும்.

 களத்திர ஸ்தானம் வலிமை ஜாதகர் செய்யும் தொழிலில் கூட்டு முயற்ச்சி, கூட்டாளிகள் மூலம் ஜாதகர் பெரும் யோகம், வியாபார விருத்தி, பொதுமக்களுடனான அறிமுகம், ஏற்றுமதி இறக்குமதி மூலம் ஜாதகர் பெரும் யோகம், பிரபல்ய யோகம் என ஜாதகர் செய்யும் தொழில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற களத்திர ஸ்தான வலிமை அவசியமாகிறது, ஜீவன ஸ்தான வலிமை ஜாதகர் தான் செய்யும் தொழில் மீதான ஈடுபாடு மற்றும் அக்கறையை காட்டும், மேலும் சுய தொழில் செய்வதற்கு ஏற்றவர்தானா? என்பதை நிர்ணயம் செய்வதே ஜீவன ஸ்தான வலிமைதான், மேலும் ஜாதகர் செய்யும் தொழில் வெற்றியினை 100% விகிதம் நிர்ணயம் செய்வது ஜீவன ஸ்தான வலிமையே என்றால் அது மிகையில்லை, தொழில் வழியில் ஜாதகர் எடுக்கும் முடிவுகள், சரியான தனக்கு உகந்த தொழில் தேர்வு, ஸ்திர தன்மையிலான விருத்தி, எந்த சூழ்நிலையிலும் தனது தொழிலை திறம்பட நடத்தும் நிர்வாக திறமை, தனது கட்டளைக்கு அனைவரையும் அடிபணிய செய்யும் வல்லமை, தனது செயல்கள் மூலம் சிறப்பாக தொழிலை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் யோகம், சரியான முடிவுகளை சரியான நேரத்தில் மேற்கொள்ளும் தனித்திறமை என, ஒருவரது ஜீவன வாழ்க்கையில் பெரும்பாலான திட்டமிடுதல்களை நடைமுறைக்கு கொண்டுவர சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமை அவசியமாகிறது.

2) கோண ஸ்தானங்களான ( 5,9 ம்  ) பாவகங்கள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு தொழில் ரீதியாக அறிவு பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்கும், சரியான தொழில் தேர்வை செய்வதற்கு அடிப்படையாக விளங்குவது  மேற்கண்ட பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறான தொழிலை தேர்வு செய்து அதில் மிகுந்த நஷ்டத்தை அனுபவிக்கும் நிலையை தாராது, சரியான நபர்கள், சரியான தொழில் எது என்பதனை மிக துல்லியமாக ஜாதகருக்கு உள்ளுணர்வாக உணர்த்துவது மேற்கண்ட பாவகங்களின் வலிமையே, பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் அறிவு திறனையும் சமயோசித புத்திசாலித்தனத்தையும், காலநேரம் அறிந்து செயல்படும் நேர்த்தியான ( smart work ) வேலைபாட்டினை வாரி வழங்கும் வல்லமை கொண்டது, பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் ரீதியான அனுபவத்தையும், வருமுன் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்தும், தனது தொழில் வளர்ச்சிக்கான சரியான நபர்களை தன்னுடன் இணைத்து வைக்கும் வல்லமை பாக்கிய ஸ்தானத்திற்கு அதிகம் உண்டு, மேலும் தனது தொழில் ரீதியான நற்ப்பெயரை பொதுமக்கள் மனதில் வேரூன்ற செய்யும் வல்லமையும் இந்த பாக்கிய ஸ்தானத்திற்கு உண்டு, எனவே சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் வலிமைபெறுவது சம்பந்தபட்ட ஜாதகரின் அறிவார்ந்த செயல்பாடுகளை மேன்மைப்படுத்தும்.

3) சுய ஜாதகத்தில் ( 2,6,8,12 ம் ) பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் வருமான வாய்ப்பு, பேச்சு திறன், வாக்கு வன்மையையும், 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் குறுகிய கால லாபங்களை, சத்ரு வழியில் வரும் வெற்றிகளையும், 8ம் பாவக வழியில் இருந்து செய்தொழிலில் கிடைக்கும் புதையலுக்கு நிகரான வருமானத்தையும், 12ம் பாவக வழியில் செய்த முதலீடுகள் வழியில் இருந்து பெரும் மிதமிஞ்சிய லாபங்களை குறிக்கும், தானம் சார்ந்த முன்னேற்றம் மற்றும் பொருளாதார தன்னிறைவை மேற்கண்ட பாவக வலிமையே நிர்ணயம் செய்யும்.

4) சுய ஜாதகத்தில் ( 3,11 ம் ) பாவகங்கள்  வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு, 3ம் பாவக வலிமையே ஜாதகர் எடுக்கும் முயற்சிகளில் பெரும் வெற்றிகளையும், செல்வ செழிப்பையும் தரும், சுய தொழில் மூலம் வெற்றிவாகை சூட 3ம் பாவகம் மிக மிக வலிமையாக இருப்பது அவசியமாகிறது, 11ம் பாவக வலிமை செய்தொழில் ஜாதகர் பெரும் அதிர்ஷ்டம் மற்றும் தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை, புதிய முயற்சிகள் மூலம் லாபங்களை குவிக்கும் யோகம், நீடித்த அதிர்ஷ்டம், திட்டமிடுதல்கள் அனைத்தையும் நடைமுறைக்கு கொண்டுவரும் யோகம் என சகல யோகங்களையும் ஜாதகருக்கு ஜீவன ரீதியாக வாரி வழங்கும்.

5) மேற்கண்ட பாவக வலிமையுடன், தற்போழுது நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசைகளும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகர் வெற்றிகரமான தொழில் அதிபராக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை, ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், நடைபெறும் திசை மற்றும் எதிர்வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் ஏற்று நடத்தினால், சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதானால் யாதொரு இன்னல்களும் ஏற்படாது, நடைபெறும் திசை தரும் நன்மையான பலாபலன்களை ஜாதகர் ஜீவன ரீதியான வெற்றிகளை அனுபவிக்க செய்யும் என்பது கண்கூடான உண்மை.

ஜாதகரின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :

1) எனது ஜாதகம் சுய தொழில் செய்வதற்கு ஏற்றதா?

நிச்சயமாக ஏற்றது, ஏனெனில் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பதால் 100% விகித தொழில் வெற்றிகளை வாரி வழங்கும்.

2) பால் பண்ணை வைத்து வியாபரம் செய்யலாம் என்று இருக்கின்றேன், இந்த தொழில் எனக்கு லாபகரமாக அமையுமா?

சுய ஜாதகத்தில் சர நீர் தத்துவ ராசியான கடகம் 100% விகிதம் வலிமை பெற்று லாப ஸ்தானமாக அமைவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம்  ராசியாகவும் அமைவதால் பால் பண்ணை வியாபாரம் தங்களுக்கு மிக பொருத்தமான தொழிலாக அமையும், மேலும் ஸ்திர நீர் ராசியான விருச்சிகம் மற்றும்  உபய நீர் ராசியான மீனமும் வலிமை பெற்று இருப்பது தங்களை இந்த தொழிலில் கொடிகட்டி பறக்க வைக்கும், சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பதால் தங்களுக்கு இந்த தொழில் மிக மிக லாபகரமாக அமையும்.

3) தொழில் முன்னேற்றம் எப்படி அமையும்? தொழில் துவங்க இது உகந்த நேரமா?

சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் நல்ல வலிமையுடன் இருப்பது தங்களுக்கு சிறப்பான தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும், அதில் சிறிதளவும் மாற்றம் இல்லை, மேலும் உதாரணம் சொல்ல வேண்டும் எனில் Amul நிறுவனம் பெற்ற வெற்றிக்கு ஒப்பான தொழில் முன்னேற்றத்தை தங்களுக்கு வாரி வழங்கும். தொழில் துவங்க இதுவே காலதாமதம் என்று சொல்லவே "ஜோதிடதீபம்" கடமைபட்டுள்ளது.

தற்போழுது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் புதன் திசை ( 09/12/2001 முதல் 09/12/2018 வரை ) 1,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பெரிய அளவிலான வெற்றிகளை தரவில்லை என்ற போதிலும், எதிர்வரும் கேது திசை ( 09/12/2018 முதல் 09/12/2025 வரை ) தங்களுக்கு 2,6,10,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் யோக பலன்களை தருவதாலும், இதுவே தங்கள் சுய தொழில் துவங்க சரியான நேரம், மேலும் தற்போழுது நடைபெறும் புதன் திசை சனி புத்தியும்  2,6,10,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது சுய தொழில் துவங்குவதற்கு உண்டான நல்ல வாய்ப்பை வாரி வழங்கும், மேலும் கேது திசைக்கு பிறகு வரும் சுக்கிரன் திசை ( 09/12/2025 முதல் 09/12/2045 வரை )  4ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் 100% விகித யோக பலனையே தருவது தங்களுக்கு செய்யும் தொழில் வழியில் இருந்து ராஜயோக பலன்களையும், அபரிவிதமான தொழில் வளர்ச்சியையும் வாரி வழங்கும், எனவே காலதாமதம் இன்றி உடனடியாக சுய தொழில் செய்வதற்கு உண்டான ஆயத்த பணிகளை மேற்கொள்ளுங்கள், இறைஅருள் தங்களுக்கு துணை நிற்கும் "வாழ்த்துக்கள்"

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 6 ஜனவரி, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கடகம்!


சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

கடகம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடக ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கடக லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், கலியுக வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் கடக ராசியினை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு இதுவரை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவானால், தங்களின் சிந்தனை மற்றும் அறிவு திறன் எதுவும் தங்களுக்கு பயன்படாமல், வாழ்க்கையிலும் முன்னேற்றம் இல்லாமல் வெகுவான சிரமங்களை அனுபவித்திருக்க கூடும், ஆனால் தற்போழுது  சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கும் சனிபகவான் தங்களின் வாழ்க்கையில் அளவில்லா யோகங்களை வாரி வழங்க இருக்கின்றார் என்பது, சனி பெயர்ச்சி தரும் வரப்பிரசாதம் ஆகும்.

6ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு திடீர் அந்தஸ்து மற்றும் உயர்பதவியை வாரி வழங்குவார், குறுகிய கால முன்னேற்றங்களை சந்திப்பதற்கு உண்டான வாய்ப்புகள் தங்களுக்கு தேடி வரும், போட்டி பந்தயம், தேர்வு தேர்தலில் வெற்றி உண்டாகும், சட்ட ரீதியான உதவிகள் தங்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும், உடல் நலம் மிக சிறப்பாக அமையும், வெகுநாள் உடல் தொந்தரவுகள் தங்களுக்கு நீங்க அதிக வாய்ப்பு உண்டு, கேட்ட இடத்தில் இருந்து தனஉதவிகள் வந்து சேரும், எதிரிகளின் செயல்கள் தங்களுக்கு மிகுந்த யோகத்தை தரும், திடீர் தன பிரப்பர்த்தி, வங்கிகள் வழியிலான உதவிகள் தங்களுக்கு விரைவாக கிடைக்கும், சகல விதமான முயற்சிகளுக்கும் நல்ல வெற்றி கிட்டும், கல்வியில் நல்ல முன்னேற்றமும், உயர்கல்வி மற்றும் பட்டைய படிப்பு மூலம் சமூக அந்தஸ்து உயரும், அதன் வழியில் நல்ல வேலைவாய்ப்பும், புதிய தொழில் அமையவும் அதிக வாய்ப்பு உண்டு, புதிய வீடு வண்டி வாகனம் வாங்க யோகம் உண்டு, தங்களது முன்னோர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் வாய்ப்பும் கிடைக்க பெறுவீர்கள், எதிர்ப்பவர்கள் அனைவரும் செயல் இழந்து நிற்ப்பார்கள், எதிர்ப்புகள் அனைத்தும் "சூரியனை கண்ட பனிபோல்" விலகும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து சிறப்பான நன்மைகளையும், பொருளாதார ரீதியான முன்னேற்றம் மற்றும் தன்னிறைவை சத்ரு ஸ்தான சஞ்சார நிலையில் இருந்து சனி பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார்.

11ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்குவார், தன்னம்பிக்கையும் மனஉறுதியும் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை வாரி வழங்கும், குடும்பத்தில் மனமகிழ்சியும், இல்லற வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு, இதுவரை திருமண தடைகளை சந்தித்துக்கொண்டு இருந்த வரன் வதுவிற்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமைந்து மிக பொருத்தமான வாழ்க்கை துணையை அடைவீர்கள், கைநிறைவான வருமான வாய்ப்புகளும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் மற்றும் பணவரவும் தங்களின் வாழ்க்கையில் புதுவிதமான உத்வேகத்தை தரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையும், லட்ச்சியங்கள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றும் வல்லமையும் உண்டாகும், அபரிவிதமான பேச்சு திறன் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் யோகத்தை வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் தேர்ச்சி, கலைகளில் ஈடுபாடு, திடீர் பிரபல்ய யோகம் என மக்கள் செல்வாக்கையும் வாரி வழங்கும், கலைத்துறைகளான இயல்,இசை,நாடக துறையில் இருப்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எதிர்பாராத நன்மைகளையும் அளவில்லா   முன்னேற்றங்களையும் சிறப்பாக வாரி வழங்குவார், புதிய சொத்துக்கள் அல்லது வண்டி வாகனம் வாங்க யோகம் உண்டு, சமூகத்தில் மக்கள் ஆதரவின் மூலம் தங்களுக்கு பொறுப்பு மிக்க பதவிகள் தேடிவரும்.

12ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு, முதலீடுகள் வழியிலான பெரும் செல்வ சேர்க்கையை பெறுவதற்கு வழிவகை செய்வார், நெடுநாள் முதலீடுகள் வழியிலான அளவில்லா வருமானங்களை பெறுவதற்கு உண்டான யோக நேரம் இதுவாகும், தாங்கள் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றி மேல் வெற்றிகளை தரும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தொடர் வெற்றிகளை வாரி வழங்கும் யோக காலமிது, கமிஷன் தரகு மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் ஈடுபடுவோருக்கு அபரிவிதமான முன்னேற்றம், சரளமான பணவசதி வாய்ப்புகள் வந்து சேரும், எதிர்பார்த்த விஷயங்கள் யாவும் தங்களுக்கு வெற்றிவாய்ப்பை நல்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் சுகபோகங்களும், ஆன்மீகத்தில் வெற்றியும் உண்டாகும், புதிய நபர்கள் மற்றும் வேற்று மதத்தினர் மூலம் அபரிவிதமான தொழில் வளர்ச்சியை பெறுவீர்கள், சுக ஜீவனத்திற்கு யாதொரு குறைகளும் இல்லை எனலாம், தாங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், ஆன்மீக பெரியோர் மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை தடையின்றி பெரும் யோகம் உண்டாகும், முன்னோர்களின் சொத்துக்கள் மற்றும் சகோதரர்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம் உண்டாகும், தங்களின் மனதில் உள்ள அனைத்து ஆசைகளும் தடையின்றி நிறைவேறும், இந்த சனி பெயர்ச்சி தங்களுக்கு மிக பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

3ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு, சகோதர வழி ஆதரவும், சீரிய முயற்சியிலான வெற்றிகளையும் வாரி வழங்குவார், உடல் நிலையில் நல்ல முன்னேற்றமும், செய்யும் காரியங்கள் யாவிலும் வெற்றி வாய்ப்பையும் நல்குவார், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தியும், வியாபார விருத்தியும் உண்டாகும், தன்னிறைவான பண வசதி தங்களை தேடி வரும், நிதி நிறுவனம் மற்றும் வட்டி தொழில் செய்யும் அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி எதிர்பார்த்த வருமான வாய்ப்புகளையும், சிறப்பான முன்னேற்றங்களையும் வாரி வழங்குவார், புதிய நண்பர்களின் அறிமுகம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்களை தரும், செல்வந்தர்களின் ஆதரவும், உதவியும் தன்னிறைவாக தங்களுக்கு கிடைக்கும், புதிய முயற்ச்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு உண்டான யோக காலமாக சனி பகவானின் 10ம் பார்வை தங்களுக்கு அமையும், மண்ணில் கிடைக்கும் பொருட்கள் வழியிலான விருத்திகள் அதிகரிக்கும், குறிப்பாக சுரங்க பொருட்கள், உலோக பொருட்கள், உயர் மதிப்பு கொண்ட உலகம் மற்றும் ரத்தினங்கள் மூலம் எதிர்பாராத லாபங்களை கடக லக்கின அன்பர்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு, விவசாயம் அல்லது உணவு பொருட்கள் சார்ந்த தொழில் துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு யோக வாழ்க்கையை சனி பகவான் வாரி வழங்குவார், தங்களுக்கு இதுவரை இருந்த வந்த இன்னல்கள் யாவும் மறைந்து, மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும், கடக லக்கின அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி ராஜயோக பலாபலன்களை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பு :

 கடக லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 6,11,12,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  6,11,12,3ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கடக லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 5 ஜனவரி, 2017

சுய தொழில் செய்யலாமா? அல்லது வேலைக்கு செல்வது நல்லதா? நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் என்ன ?


கேள்வி :

2005 முதல் 2015 ம் வருடம் வரை வெளிநாட்டில் பணியாற்றினேன், தற்போழுது சொந்த ஊரில் சுய தொழில் செய்யலாம் என்று இருக்கின்றேன்? எனது ஜாதகப்படி சுய தொழில் செய்தால் முன்னேற்றம் உண்டா? அல்லது வேலைக்கு செல்வதே நன்மையை தருமா? தற்போழுது நடைபெறும் புதன் திசை எனக்கு நன்மைகளை வழங்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும்.


லக்கினம் : மிதுனம்
 ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவாதிரை 3ம் பாதம்

எனது ஜாதகப்படி சுய தொழில் செய்தால் முன்னேற்றம் உண்டா? அல்லது வேலைக்கு செல்வதே நன்மையை தருமா?

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பது வரவேற்க தக்க விஷயமாகும்,  ஏனெனில் சுய ஜாதகத்தில் மேற்கண்ட வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுயமாக ஜீவன வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவும், மேலும் தங்களது ஜாதகத்தில் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவதும் ஜீவன ஸ்தானம் உபய ராசியில் அமைவதும் சிறப்பான விஷயம், 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது செய்யும் தொழில் வழியில் தனது அறிவு திறனை பயன்படுத்தி சிறப்பான முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், ஜீவன ஸ்தானம் தொடர்பு உபய ராசியுடனும், லாப ஸ்தான தொடர்பு சர ராசியுடன் சம்பந்தம் பெறுவது  தங்களுக்கு சுய தொழில் விருத்தியினை பன்மடங்கு வாரி வழங்கும்.

மேலும் 2,4,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், 2ம் பாவக வழியில் இருந்து பன்மடங்கு லாபத்தையும், கைநிறைவான வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்கும், இனிமையான குடும்ப வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இல்லற வாழ்க்கையை வழங்கும், 4ம் பாவக வழியில் இருந்து வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, சுகபோகங்கள், இடம் நிலம், வீடு  மற்றும் நிறுவனம் ஆகியவற்றில் முதலீடு மற்றும் அதன்வழியில் ஆதாயம் மற்றும் லாபம் பெரும் யோகத்தை தரும், 7ம் பாவக வழியில் இருந்து கூட்டு முயற்சியில் வெற்றி, கூட்டு தொழிலில் அபரிவிதமான லாபம், வியாபாரம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் அபரிவிதமான லாபம், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழில் வாய்ப்புகள் என தன்னிறைவான தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும் அமைப்பாகும், எனவே தங்களது சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது, சுய தொழில் செய்வதே சாலச்சிறந்த யோக வாழ்க்கையை நல்கும், மேலும் தாங்கள் செய்யும் தொழில் தனிப்பட்ட முறையிலும் அமையலாம் அல்லது கூட்டு தொழில் முறையிலும் அமையலாம், இதில் எந்த பிரச்சனையும் இல்லை, தங்களின் முடிவே இறுதியானது, தனித்து செயல்பட்டாலும், கூட்டு தொழில் செய்தாலும் தங்களுக்கு 100% விகித வெற்றியே உண்டாகும், வேலைக்கு செல்வது தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய அளவிலான முன்னேற்றங்களை வழங்க வாய்ப்பு இல்லை, சுய தொழில் செய்வதே தங்களின் முன்னேற்றத்திற்கும், எதிர்கால யோக வாழ்க்கைக்கும் உகந்ததாக அமையும்.

தற்போழுது நடைபெறும் புதன் திசை எனக்கு நன்மைகளை வழங்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும்.

தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு 2,4,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 11ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 5,11ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, எனவே புதன் திசை முழுவதும் தாங்கள் 2,4,5,7,11ம் பாவக வழியில் இருந்து சிறப்பான யோங்களையே பெறுவீர்கள் என்பதனால், புதன் திசை தங்களுக்கு 100% விகித யோகங்களை தனக்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதனால் புதன் திசை தரும் யோக பலன்களை தாங்கள் ஏற்றுக்கொள்ளும் வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள், எதிர்கால வாழ்க்கை தங்களுக்கு மிகவும் பிரகாசமாக உள்ளது என்பதே தங்களின் ஜாதக நிலை, ஒருவரது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்றும், லாப ஸ்தானமான 11ம் வீடும் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் சுய தொழில் செய்து வெற்றி காணலாம், மேலும் நடைமுறையில் உள்ள திசையும் வலிமை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் ஜீவன வாழ்க்கையில் தோல்வி என்பதே இல்லை என்பதனால், தாங்கள் சுய தொழில் செய்வதற்கு உண்டான ஆயத்த பணிகளை இனி மேற்கொள்ளலாம், இதுவே "ஜோதிடதீபம்" தங்களுக்கு வழங்கும் ஆலோசனை வாழ்த்துக்கள்.

குறிப்பு :

ஜீவன ஸ்தானம் தங்களுக்கு உபய ராசியிலும், லாப ஸ்தானம் சர ராசியிலும் அமைவது தொழில் அதிபர் எனும் அந்தஸ்த்தை விரைந்து வழங்கும் அமைப்பாகும் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் ஜீவன ஸ்தான, லாப ஸ்தான அதிபதியாக வரும் கிரகத்தை கருத்தில் கொண்டு சரியான தொழிலை தேர்வு செய்து நலம் பெறுக.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

எனது ஜாதகம் யோக ஜாதகமா? அவயோக ஜாதகமா? தெளிவுபடுத்துங்கள் !

 

சுய ஜாதக வலிமையை நிர்ணயம் செய்வதில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களுக்கும் உரிமை உள்ளது எனலாம், குறிப்பாக சுய ஜாதகத்தில் கோண வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் அறிவு திறனையும், கேந்திர வீடுகள் வலிமை பெறுவது வசதி வாய்ப்பு மற்றும் பொருளாதார யோகங்களையும், சமவீடுகள் வலிமை பெறுவது செயலாற்றும் காரியங்களில் வெற்றிவாய்ப்பையும், புகழையும் வாரி வழங்கும், இதன் அடிப்படையில் சுய ஜாதகத்தில் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டு ஆய்வு செய்தால், ஒருவரது ஜாதகம் யோக ஜாதகமா? அவயோக ஜாதகமா? என்பதில் தெளிவு பெறலாம், மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகள் மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகரின் வாழ்க்கையில் அவயோகங்களை வாரி வழங்கும், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ( சர லக்கினத்திற்கு 11ம் வீடு பாதக ஸ்தானம், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு பாதக ஸ்தானம், உபய லக்கினத்திற்கு 7ம் வீடு பாதக ஸ்தானம் ) கடுமையான அவயோகங்களை வாரி வழங்கும், ஜாதகரால் தவிர்க்க இயலாத இன்னல்களுக்கு ஆளாக்கும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கன்னி 
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : அவிட்டம் 4ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகரின் கேள்வி எனது ஜாதகம் யோக ஜாதகமா? அவயோக ஜாதகமா? 

ஒருவரின் ஜாதகத்தில் யோக அவயோகங்களை நிர்ணயம் செய்வதில் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே அடிப்படையாக அமைகிறது, இவரது ஜாதகத்தில்  லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் தொடர்புகளை பற்றி ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகத்தில் வலிமையுள்ள பாவக தொடர்புகள் :

3,5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 3,5,7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு யோக பலன்களை வழங்கும்.

11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மீதம் மிஞ்சிய யோக பலன்களை 11ம் பாவக வழியில் இருந்து முழு வீச்சில் தரும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2,4,6,10,12ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களையும் ( பொருளாதாரம்) வாரி வழங்கும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 8ம் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுளை தந்தபோதிலும், திடீர் இழப்புகளையும், மருத்துவ செலவுகளையும் வாரி வழங்கும்.

1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை எவ்வித தாட்சண்ணியம் இன்றி வாரி வழங்கும், மேலும் சுய ஜாதகத்திலே கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு இதுவே என்றால், அது மிகையல்ல.

எனவே மேற்கண்ட ஜாதகத்தில் 9,11ம் பாவாக வழியில் இருந்து ஜாதகருக்கு யோக  நிகழ்வுகள் நடைமுறைக்கு வந்த போதிலும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் மற்றும் விரைய ஸ்தான தொடர்புகள் பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், எனவே இவரது ஜாதகத்தில் பெரும்பாலான பாவக தொடர்புகள் பாதிக்கப்பட்டு இருப்பதால், சுய ஜாதகத்தில் யோகங்களை தரும் பாவக வழியிலான நன்மைகளையும் ஜாதகரால் பெற இயலாது என்பதே உண்மையான ஜாதக நிலை.

மேற்கண்ட ஜாதகத்தில் யோகங்களை தரும் பாவாக தொடர்பும் உண்டு, அவயோகங்களை தரும் பாவக தொடர்பு உண்டு என்பதால், மிதயோக ஜாதகம் என்று உறுதி செய்யலாம், மேலும் தற்போழுது நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் முறையே விரைய ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதால், ஜாதகருக்கு வெகுவான அவயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும், நடைபெறும் குரு திசை தரும் இன்னல்களை விட, எதிர்வரும் சனி திசையே ஜாதகருக்கு மிதமிஞ்சிய அவயோக பலன்களை வாரி வழங்கும், ஏனெனில் எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்   பெற்று கடுமையான அவயோக பலன்களை பாதக ஸ்தான வழியில் இருந்து  நடத்த ஆரம்பிக்கும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன் 
 ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 2 ஜனவரி, 2017

திருமணம் தாமதம் ஆக காரணம் சர்ப்பதோஷமா ? நல்ல கணவர் கிடைப்பாரா ?


கேள்வி :

 அய்யா எனக்கு தற்போழுது வயது 29 ஆகிறது, திருமணம் தாமதமாக சர்ப்ப தோஷம் என்பதை காரணமாக சொல்கின்றனர், எனது திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன? நல்ல அன்பான, பொருத்தமான கணவர் கிடைப்பாரா? திருமணம் எப்பொழுது நடைபெறும்? 



பதில் :

லக்கினம் : கும்பம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 2ம் பாதம்.

தங்களது சுய ஜாதகத்தில் சாயாகிரகங்கள் எனும் ராகு கேது முறையே 2,8ம் பாவகங்களில் அமர்ந்து சம்பந்தப்பட்ட பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றனர், மேலும் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகமும் கடுமையான பாதிப்பை பெற்று உள்ளது தங்களது ஜாதகத்தில், களத்திர வாழ்க்கை மற்றும் குடும்பம் சார்ந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், இதனால் தங்களுக்கு திருமண தடைகளும், திருமணம் சார்ந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் படுதோல்வியையும் தருகின்றது, ஒருவரது சுய ஜாதகத்தில் குடும்பம் அல்லது களத்திர ஸ்தானம் இரண்டில் ஒன்று பாதிக்கப்படுமாயின் சிறிது காலதாமதத்திற்க்கு பிறகு இல்லற வாழ்க்கை அமையும், இருப்பினும் தாம்பத்திய வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களை தரக்கூடும், குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் இரண்டும் பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உக்காந்ததல்ல, ஏனெனில் திருமண வாழ்க்கை வெகு தாமதமாக, காலம் தாழ்ந்தே நடைபெறும், நடைபெற்றாலும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று சொல்வதற்கு இல்லை.

தங்களின் ஜாதகத்தில் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகுகேது, தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களும், களத்திர ஸ்தானம் வலிமை இன்மை, தடைபட்ட திருமண வாழ்க்கையும் தரும் என்பதே உண்மை, திருமணம் தாமதமாக உண்மையான காரணம் மேற்கண்ட ஜாதகத்தில் 2,7,8ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்படுவதும், சாயா கிரகங்களின் வலிமை இன்மையும் காரணமாக அமைகிறது, மேலும் சுய ஜாதகத்தில் கால புருஷ  தத்துவ அமைப்பிற்கு குடும்பம் மற்றும் களத்திர வீடு என்று அழைக்கப்படும், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகள் தங்களுக்கு முறையே சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானமாக அமைந்து இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, இதனால் தங்களது சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு  2,7 ம் பாவகங்களும் பாதிக்கப்பட்டு, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்பம் மற்றும் களத்திரம் என்று அழைக்கப்படும் ரிஷபம் மற்றும் துலாம் ராசியும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால், தங்களுக்கு திருமணம் ஆக இவ்வளவு தடைகளும், தாமதங்களும் ஏற்படுகிறது.

தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை ( 19/09/2015 முதல் 18/09/2032 வரை ) தங்களுக்கு 1,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளையும் தந்து கொண்டு இருப்பது தெளிவாகிறது, புதன் திசை வலிமை அற்ற 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது தங்களது திருமண வாழ்க்கையில் வரும் தடைகளுக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு உண்டான பாவகங்கள் வலிமை அற்று, நடைபெறும் திசையும் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால், தங்களின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது, தற்போழுது நடைபெறும் புதன் திசை புதன்   புத்தியில் திருமண வாழ்க்கை அமைய சற்று வாய்ப்பு குறைவு, அடுத்து வரும் கேது புத்தியிலும் வாய்ப்பு குறைவு, அதற்க்கு அடுத்து வரும் சுக்கிரன் புத்தியில் 2ம் பாவாக பலன் நடைமுறைக்கு வருவதால், சுக்கிரன் புத்தியில் திருமணம் நடைபெற அதிக வாய்ப்பு உண்டு, தற்போழுது நடைபெறும் புதன் புத்தியில் சனியின் அந்தரத்தில் நடைபெறவும் சிறிது வாய்ப்பு உண்டு, எனவே காலம் அறிந்து செயல்படவும்.

குறிப்பு :

 தங்களது சுய ஜாதகத்தில் பெரும்பாலான  பாவகங்கள் கடுமையான பாதிப்பில் உள்ளதால், தங்களுக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள்  மிக மிக வலிமை உள்ளதாக தேர்வு செய்வது அவசியமாகிறது, சர்ப்ப கிரகங்களின் தாக்குதல்களில் இருந்து விடுபட, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகில் உள்ள தங்கமேடு "தம்பிக்களை அய்யன்" கோவிலுக்கு சென்று சர்ப்ப சாந்தி பரிகாரம் மேற்கொண்டு நலம் பெறுக.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மிதுனம்!


சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

மிதுனம் லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மூன்றாம் ராசியான மிதுன ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மிதுன லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், அறிவின் பிறப்பிடமாகவும், வீரத்தின் விளைநிலமாகவும் விளங்கும் மிதுன லக்கின அன்பர்களுக்கு, இதுவரை சத்ரு பாவகத்தில் சஞ்சாரம் செய்த சனி பகவான் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை கடந்த காலங்களில் வழங்கி இருக்க கூடும், குறிப்பாக எதிர்பாராத வரவு, எதிரிகளை வெல்லும் ஆற்றல், போட்டி பந்தயங்களில் தேர்ச்சி, அனைத்திலும் வெற்றி என்ற நிலையில் நன்மைகளை வழங்கியிருக்க கூடும், தற்போழுது களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு சஞ்சாரம் செய்யும் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தார கூடும், வாழ்க்கை துணை, நண்பர்கள், மற்றும் கூட்டாளிகள் மூலம் தேவையற்ற இன்னல்களை சந்திக்கும் நிலையை தரும், மற்றவர்களால் தங்களின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படும், பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் சற்று எச்சரிக்கை உணர்வுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது சகல நலன்களையும் தரும், எதிர்ப்புகள் தங்களின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், பொதுநலம் சார்ந்து செயல்படும் காரியங்கள் யாவும் தங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும் என்பதால் தான் உண்டு தனது  வேலை  உண்டு என்று இருப்பது தங்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை தரும், பெரிய மனிதர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர் வழியில் இருந்து ஆசிகளையும், வாழ்த்துக்களையும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புக்களை தாங்கள் ஏற்படுத்திக்கொள்வது சாலச்சிறந்தது, பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வழிபடுவதும், அதன்வழியில் சனியின் சஞ்சார பலன்களை குறைத்துக்கொள்வதும் தங்களின் வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும்.

12ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (ரிஷபம் ராசி மற்றும் சுக்கிரன் ) ஒரே வர்க்கம் என்பதனால் மிதுன லக்கின அன்பர்களுக்கு, முதலீடுகளில் நல்ல லாபம் கிட்டும், புதிய முதலீடுகளை அதிக அளவில் செய்து வெற்றி காணலாம், இருப்பினும் தங்களுக்கு வரும் வருமானம் வீண் விரையம் ஆக அதிக வாய்ப்பு உண்டு, இதனால் மன நிம்மதி வெகுவாக பாதிக்கப்படும், வீண் மனபயமும், பொறுமை இன்மையும் தங்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும், மற்றவர்களை நம்பி செய்யும் எந்த  காரியமும் தங்களுக்கு பெரிய அளவிலான துன்பங்களை தரும், மருத்துவ செலவுகள், வண்டிவாகனம் மூலம் திடீர் செலவுகள், உடல்நலம் பாதிப்பின் மூலம் நிம்மதி குறைவு, குடும்பத்தில் மகிழ்ச்சி இன்மை, தெளிவற்ற சிந்தனை, அனைவராலும் தொல்லைகள் துன்பங்கள் என ஸ்திரமான இன்னல்களை எதிர்கொள்ளும் தன்மையை தரும், எந்த ஒரு காரியத்தை செய்வதென்றாலும் அதிக அக்கறையும், பெரியோர்களின் ஆலோசனை படியும் மேற்கொள்வது தங்களின் எதிர்கால வாழ்க்கையிற் சிறப்பிக்க செய்யும், நிதானம் தங்களின் வாழ்க்கையில் சனிபகவானின் திருஷ்ட்டி நிலையில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க  உதவும்.

1ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (மிதுன ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் மிதுன லக்கின அன்பர்களுக்கு, கை நிறைவான வருமானங்களை வாரி வழங்குவர், லக்கின வழியில் இருந்து உடல் ஆரோக்கியம் மேம்படும், சிந்தனை ஆற்றலும், செயல்திறனும் அதிகரிக்கும், வியாபார விருத்தி தங்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை வாரி வழங்கும், கமிஷன், தரகு, பங்கு வர்த்தக தொழில் துறையில் உள்ள அன்பர்களுக்கு இது மிகுந்த யோகங்களை தரும் காலமாகும், சகோதர வழி ஆதரவு அதிக அளவில் கிட்டும், புதிய தொழில் வாய்ப்புகள் தங்களை தேடிவரும், செல்வ சேர்க்கை, புகழ் மிக்க பொறுப்புகள் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை தரும், தெளிவான முடிவுகளால் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் நல்ல லாபம் உண்டாகும், பல வெளிநாடுகளுக்கு சென்றுவரும் யோகமும், அதன் வழியில் ஆதாயமும் தங்களுக்கு  அதிக அளவில் கிட்டும், உடல்,மனம் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு பலவித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் வெற்றியை நோக்கி பயணிக்கும் சிறப்பு மிக்க வலிமையை இந்த சனிபகவானின் திருஷ்ட்டி நிலை தங்களின் லக்கினத்திற்கு வாரி வழங்கும்.

4ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் ( கன்னி ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் மிதுன லக்கின அன்பர்களுக்கு, புதிய சொத்து சுக சேர்க்கையை தந்த போதிலும், மாத்ரு ஸ்தான வழியில் இருந்து தாயாருக்கு உடல்நல குறைவை தரக்கூடும், வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்க இயலாது, வண்டி வாகனம் மூலம் திடீர் இழப்பு மற்றும் செலவுகள் அதிகரிக்கும், தனது வசம் உள்ள சொத்துக்களை விற்று ரொக்கமாக பெரும் நிலையை தரும், அதன் மூலம் வரும் செல்வம் தங்களுக்கு விரயத்தை தரும், வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வது தங்களுக்கு உகந்த நன்மைகளை தரும், தொழில் விருத்தி சார்ந்த முடிவுகளை மேற்கொள்ளும் முன் பலமுறை யோசனை செய்து செய்யப்படுவது நல்லது, வண்டிவாகன தொழில்களில் உள்ள அன்பர்கள் தங்களது வாகனங்களை பராமரிப்பதில் அதிககவனம் செலுத்துவது நல்லது, இல்லை எனில் வீண் விரையங்களையும், தொல்லைகளையும் தவிர்க்க இயலாது, தெளிவான முடிவுகளை மேற்கொள்ளவில்லை எனில் தங்களின் எதிர்கால வாழ்க்கை வெகுவாக பாதிக்கும், சனிபகவானின் திருஷ்ட்டி நிலை தங்களின் வாழ்க்கையில் சுகபோகங்களுக்கு தடைகளையும், இன்னல்களையும் ஏற்படுத்தும்.

குறிப்பு :

 மிதுன லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 7,12,1,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 7,12,1,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மிதுன லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 30 டிசம்பர், 2016

5,11ல் ராகு கேது பெரும் வலிமையும், தனது திசையில் தரும் பலாபலன்களும் !


சுய ஜாதகங்களில் நவகிரகங்கள் ராசியில் வலிமை பெற்று இருப்பதும் ( ஆட்சி, உச்சம், நட்பு ,சமம்) ராசியில் வலிமை அற்று இருப்பதும் ( நீச்சம், பகை ) சுப கிரகங்களுடன் சேர்க்கை பெற்று இருப்பதும், பார்வை பெற்று இருப்பதும், அசுப கிரகங்களின் சேர்க்கை பெற்று இருப்பதும், பார்வை பெற்று இருப்பதும், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நடைமுறையில் வரும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் யோக அவயோக பலாபலன்களை தரும் என்ற கருத்து உள்ளது, இது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு முரண்பட்ட கருத்தாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, அதாவது சுய ஜாதகத்தில் வலிமை ( ஆட்சி, உச்சம், நட்பு ,சமம்) பெற்ற கிரகத்தின் திசை நடக்கும் பொழுது யோக பலன்களையும், வலிமை ( நீச்சம், பகை ) அற்ற கிரகத்தின் திசை நடக்கும் பொழுது அவயோக பலன்களையும் தரும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது, இது சிறிதும் ஏற்புடையது அல்ல, ஏனெனில் ஒருவருக்கு நடைபெறும் யோக அவயோக நிகழ்வுகளை நிர்ணயம் செய்யவது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, கீழ்கண்ட மிதுன லக்கின ஜாதகருக்கு 11ல் அமர்ந்த ராகு பகவான் அந்த பாவகத்தை மிகுந்த வலிமையுடையதாக திகழ செய்கிறார், இவரது ஜாதகத்தில் மிகுந்த வலிமையுடைய பாவகம் எதுவெனில் 5,11 எனலாம், சாயா கிரகங்கள் முறையே 11,5 என்ற நிலையில் அமர்ந்து சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு 100% விகித வலிமையை தருகின்றனர், எனவே தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலத்தில் சாயா கிரகங்களான ராகுகேது ஜாதகருக்கு தரும் பலன்கள் என்ன? என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : மிதுனம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : அஸ்தம் 1ம் பாதம்

ஜாதகருக்கு ராகு திசை தற்போழுது நடைமுறையில் உள்ளது ( 10/07/2002 முதல் 09/07/2020 வரை ) 11 ல் வலிமை பெற்று அமர்ந்துள்ள ராகு திசை ஜாதகருக்கு தனது திசையில் 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கின்றது, எனவே தற்போழுது நடைபெறும் ராகு திசையில் ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து கடன்,உடல் நலம், எதிரி தொல்லை என மிகுந்த இன்னல்களையும் மன உளைச்சல்களையும், 9ம் பாவக வழியில் இருந்து கல்வியில் தடைகளையும், காரிய தடைகளையும், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தையும், பெரியோர் மற்றும் பெற்றோர் வார்த்தைகளை மதிக்காமல் நடந்து சமூகத்தில் வீண் அவ பெயரையும் சம்பாதிக்கும் நிலையை தந்து கொண்டு இருக்கிறது, மேலும் தனது பித்ருக்கள்  வழியிலான சாபங்களையும், அறிவு பூர்வமற்ற செயல்களினால் தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்ளும் நிலையை தந்து கொண்டு இருக்கின்றது, 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஏற்படும் இழப்புகள் கொஞ்சம் அதிக அளவிலேயே உள்ளது, மேலும் மன அழுத்தம் மன போராட்டம், எதிர்ப்புகளை சமாளிக்க இயலாத சூழ்நிலை, விபத்து, பொருள் இழப்பு என கடுமையான இன்னல்களுக்கு ஜாதகர் ஆளாக்கிக்கொண்டு இருக்கிறார், ஜாதகருக்கு ஏற்படும் இழப்புகளை ஜாதகரால் தவிர்க்கவே இயலவில்லை, ஊரில் உள்ள உறவுகளும், சொந்த பந்தங்களும் ஜாதகரை மதிப்பதில்லை , அனைவருக்கும் எதிரி என்ற சூழ்நிலையை தற்போழுது நடைபெறும் ராகு திசை 6,9,12ம் பாவக வழியில் இருந்து வழங்கி கொண்டு இருக்கின்றது, இது சாயா கிரகங்களில் 11ல் வலிமை பெற்ற ராகு பகவான் தனது திசையில் தரும் பலன்கள்.

ஜாதகருக்கு கேது திசை பல வருடங்களுக்கு பிறகு வந்தாலும் மற்ற கிரகங்களின் திசையில், புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் தரும் பலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற கேது ஜாதகருக்கு புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், பலர் சுய ஜாதகத்தில் 5ல் அமரும் ராகு கேது புத்திர பாக்கியத்தை தடை செய்யும் என்பர், ஆனால் 5ல் வலிமை பெற்று அமரும் ராகு கேது ஜாதகருக்கு முதல் குழந்தையாக ஆண் வாரிசை வழங்கும், ஒருவேளை 5ல் வலிமை அற்று ராகு கேது அமர்ந்து இருப்பின் ஜாதகருக்கு ஆண் வாரிசை நல்காது பெண் குழந்தை உண்டு என்பது அனுபவபூர்வமான உண்மை, மேற்கண்ட ஜாதகருக்கு 5ல் வலிமை பெற்ற கேது தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு ஜீவனம் மற்றும் தொழில் வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், கேது தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் ஜாதகர் 2ம் பாவக வழியில் கை நிறைவான வருமானமும், செய் தொழில் முதலீடும், அபரிவிதமான லாபங்களை பெறுவார், 4ம் பாவக வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், இடம் வீடு புதிய சொத்துக்கள் மற்றும் சுகபோக யோகங்களை பெறுவார், தனது தாய் வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை பெறுவார், 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அபரிவிதமான தொழில் வளர்ச்சியையும், சிறப்பு மிக்க முன்னேற்றங்களையும், தங்கு தடையின்றி பெறுவார், சுய கவுரவம் மேலோங்கும், அதிகார பதவிகள் ஜாதகரை தேடி வரும், இது சாயா கிரகங்களில் 5ல் வலிமை பெற்ற கேது பகவான் தனது திசையில் தரும் பலன்கள்.

எனவே சுய ஜாதகத்தில் 5,11ல் சாயா கிரகங்கள் அமர்ந்த போதிலும், தனது  திசையில் அமர்ந்த பாவக பலனை ஏற்று நடத்தவில்லை என்பதை கவனத்தில் கொள்க, மேலும் தனது திசையில் ராகு 12ம் பாவக பலனையும், கேது 10ம் பாவக பலனையும்  ஏற்று நடத்துவதே உண்மை இதை முறையாக ஜாதக கணிதம் கொண்டு உணர்ந்து பலாபலன் காண முற்படுவதே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான வாழ்க்கையை அமைத்து தர உதவும் சிறப்பான நன்மைகளையும்  நல்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 27 டிசம்பர், 2016

இல்லற வாழ்வை நரகம் ஆக்கும் பொருத்தமில்லா வாழ்க்கை துணை !


" நித்தியகண்டம் பூர்ணஆயுசு " என்ற நிலைக்கு ஆளாக்கும் வல்லமை பெற்றது சுய ஜாதக வலிமை அறியாமல் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது என்பது, பொதுவாக பருவவயதில் வரும் இனக்கவர்ச்சியை மட்டும் அடிப்படையாக கொண்டு இல்லற (காதல் ) வாழ்க்கையில் இணையும் அன்பர்களுக்கு! ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் ஆக மொத்தம் 90 நாட்களில் இல்லற வாழ்க்கை தனது இறுதி அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தது விடும், கணவன் செய்வது மனைவிக்கு பிடிக்காது, மனைவி செய்வது கணவனுக்கு முற்றிலும் பிடிக்காமல், வாக்குவாதம் அதிகரிக்கும், சமாதானம் செய்ய முற்படுபவரின் கருத்துக்கள் தம்பதியரின் காதுகளுக்கு சென்று அடைவதற்குள், மணவாழ்க்கையில் பிரிவை நோக்கி இருவரும் சென்றுவிடுவார்கள், நலம்விரும்பிகளின் ஆலோசனைகள் யாவும் வீண் விரையம் ஆகும், பெற்றோரின் ஆதரவு உள்ளவர்கள் அடிப்படை ஜீவனத்திற்கு யாதொரு சிரமமும் இன்றி வாழ்வதற்கு வழி உண்டு, பெற்றோர் ஆதரவை இழந்தவர்களின் அஸ்த்திவாரமே ஆட்டம் காணும், தன்னிடம் பல திறமைகள் இருப்பினும் யாவும் ஜாதகருக்கோ ஜாதகிக்கோ உகந்த நேரத்தில் பலன் தாராது, மேலும் பிரிவினால் வந்த மன அழுத்தம், மனஉளைச்சல் ஜாதகரையும், ஜாதகியையும் வெகுவாக பாதிக்கும், உடல் நலம் கெடும், மனநலம் பாதிக்கும், பொருளாதார சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தை பற்றியான கவலைகள் பூதாகரமாக கிளம்பி நிற்பதை, அந்த தருணத்தில் தான் உணரும் வாய்ப்பை பெறுவார்கள், விதியின் வலிமையை உணர்வார்கள், பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களில் சேர்ந்து வாழும் வாய்ப்பு கொஞ்சம் அதிகம், காதல் திருமணங்களில் அந்த வாய்ப்பு என்பதே இல்லை, திருமண வாழ்க்கையை நடத்தி வைத்த நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வெறும் பார்வையாளராக மட்டுமே இருப்பார்கள் என்பதை உணருவதற்க்கே இவர்களுக்கு வெகு காலம் ஆகும், இதனால் "ஜோதிடதீபம்" காதலுக்கு எதிரி என்ற எண்ணம் வேண்டாம், சுய ஜாதகம் வலிமை பெற்ற காதலர்களின் வாழ்க்கையே மென்மேலும் பன்மடங்கு யோக வாழ்க்கையை பெற்று இருக்கிறது, சுய ஜாதகம் வலிமை அற்று பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட விவாகரத்துக்கு சென்று இருக்கின்றது, இது அவரவர் ஜாதக வலிமையை அடிப்படையாக கொண்டது.

கீழ்கண்ட தம்பதியரின் வாழ்க்கையும் அப்படிப்பட்டதே, உறவுகளால் இல்லற வாழ்க்கையில் இணைந்தவர்களின் தற்போதைய நிலை பரிதாபத்திற்க்கு உரியது, தசவித பொருத்தம் கண்டும், சுய ஜாதக வலிமை அற்றதால் இல்லற வாழ்க்கையில் குறுகிய காலத்தில் பிரிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றனர், இந்த தம்பதியர், இவர்களது சுய ஜாதக வலிமையையும், நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்களை பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய தம்பதியரின் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்களை கருத்தில் எடுத்துக்கொள்வோம் அன்பர்களே :

1) குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் வலிமை பெறுவது வரன் வதுவின் சங்கமத்தில் அவசியமாகிறது, இனிமை நிறைந்த வார்த்தைகளும், சிறப்பான குடும்ப வாழ்க்கையையும் நல்கும் வலிமை பெற்றது என்பதனால் தம்பதியரின் ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது மிக மிக முக்கியமாகிறது. ( பெரும்பாலும் தம்பதியருக்குள் வரும் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே வாய்தானே )
2) பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் அறிவு திறனையும், தமக்கு ஏற்படும் இன்னல்களை களைவதற்கு உண்டான சமயோசித புத்திசாலித்தனத்தையும், பொறுமையான குணத்தையும் நல்குவது புத்திர ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவக வலிமையே, மேலும் தனது குலம் செழிக்க திருமணம் ஆனா சில வருடங்களிலேயே நல்ல வாரிசை வழங்குவதும் பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே, மேலும் தம்பதியரின் ஒருமித்த கருத்து மற்றும் அறிவு திறனை ஒரே நேர்கோட்டில் இணைப்பது மேற்கண்ட 5ம் பாவகமே என்பதனால் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் மிக மிக முக்கியமாகிறது.
3) களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் வாழ்க்கையை நகமும் சதையும் போன்ற உணர்வை தருவது, இருவரின் மனமும் உடலும் ஒன்றற ஜீவசக்தி விரையம் இன்றி கலக்க உதவுவது களத்திர ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது இணையை பிரியாமல் சேர்ந்து வாழும் யோகத்தை வழங்குவது ( பெரும்பாலான காதலர்களின் வாழ்க்கையை வெற்றிபெற வைப்பதற்கு களத்திர ஸ்தான வலிமையே அடிப்படையாக அமைகிறது ) மேலும் தம்பதியர் இருவரின் வாழ்க்கையில் கவுரவம் மரியாதை, சமூக மதிப்பை பெரிய அளவில் வாரி வழங்குவது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவக வலிமையே, சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை குன்றி இருப்பின் தனது வாழ்க்கை துணையை தானே தேர்வு செய்வது என்பது கண்ணை கட்டிக்கொண்டு பாலும் கிணற்றில் விழுவதற்கு சமமானது என்பதை அணைத்தது யுவன் மற்றும் யுவதிகளும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது.
4) ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் ஆயுளை விருத்தி செய்யும் என்பதுடன், திருமணத்திற்கு பிறகான திடீர் அதிர்ஷ்டங்களை உறுதி செய்யும், கணவன் மனைவி வழியில் இருந்தும், மனைவி கணவன் வழியில் இருந்தும் பெரும் தனசேர்க்கையை பற்றி தெரிவிக்கும் பாவகம் என்பதால், தம்பதியரின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட ஆயுள் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது, மேற்கண்ட பாவகம் வலிமை இழக்கும் பொழுது பரஸ்பரம் கணவன் மனைவிக்கு வரும் திடீர் இழப்புகளையும், விபத்து மற்றும் மருத்துவ செலவுகளையும் தவிர்க்க இயலாது, பெரும்பாலும் ஆயுள் பாவகம் வலிமை இழந்த வாழ்க்கை துணையை பெரும் அன்பர்களின் வாழ்க்கையில் விதி வெகுவாக விளையாடும், ( மனைவியோ கணவனோ ) காலடி எடுத்து வைத்த நேரம் அனைத்தும் இழந்து ஆண்டியாய் போனது அந்த குடும்பம் என்று ஊரார் பரிகாசிக்கும் நிலையை தந்துவிடும்.
5) அதிர்ஷ்டம் மற்றும் லாபம் எனும் பதினொன்றாம் பாவகம் வலிமை பெறுவது பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் கொண்டுள்ள தன்னம்பிக்கை, ஈடுபாடு, முற்போக்கு சிந்தனை, எதையும் நேர்மறை எண்ணங்கள் கொண்டு சிந்திக்கும் வல்லமை, அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தின் முழு பலனை தம்பதியர் அனுபவிக்கும் யோகம், எதிர்கால வாழ்க்கையை யோகம் நிறைந்ததாக அமைத்துக்கொள்ளும் சரியான திட்டமிடுதல்கள் என தாம்பத்திய வாழ்க்கையின் 100% விகித வெற்றியை நிர்ணயம் செய்வது தம்பதியரின் ஜாதகத்தில் உள்ள லாபஸ்தானம் எனும் 11ம் பாவக வலிமையே, எனவே தம்பதியரின் சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெறுவது மிக மிக அவசியமாகிறது.
6) அயன சயன ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வலிமை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் உடல் ரீதியாக வழங்கும் சந்தோஷங்களையும், மனநிறைவையும், நிம்மதியான யோக வாழ்க்கையையும் நிர்ணயம் செய்கிறது, தம்பதியரின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட அயன சயன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் அந்நியோன்னிய இல்லற இன்பங்களை வாரி வழங்கும், உடல் மனம் ரீதியான உணர்வுகளை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் மதித்து நடந்துகொள்ளும் யோகத்தை தரும், தாம்பத்திய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் வல்லமையை தம்பதியர் இருவருக்கும் தரும், நல்ல ஆன்மீக வெற்றியையும், இறை அருளின் பரிபூர்ண ஆசிகளையும் வழங்கும் வல்லமை கொண்டது, மேற்கண்ட பாவகம் வலிமை இழக்கும் பொழுதே தாம்பத்திய அந்நியோன்னிய வாழ்க்கையில் மனக்கசப்பை தருகிறது, இல்லற வாழ்க்கையில் பேரிழப்புகளையும், தவறான உறவுகள் வழியில் இன்னல்களை தேடிக்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆர்ப்படுகிறார்கள், இதனால் இல்லற வாழ்க்கை 200% விகித இன்னல்களை சந்திக்கிறது என்பது கவனிக்க தக்க விஷயமாகிறது.


ஜாதகி


லக்கினம் : மீனம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சுவாதி 3ம் பாதம்

ஜாதகிக்கு அடிப்படையில் லக்கினம் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கும், லக்கினம் வலிமை இழப்பது ஜாதகிக்கு உகந்தது அல்ல, மேலும் ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து இழப்புகளை பெரிய அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தரும், குடும்ப ஸ்தானமும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக பதம் பார்க்கும், ஜாதகியின் வார்த்தைகள் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இன்மையை தரும், பொருளாதார சிக்கல்களை கடுமையாக, ஜாதகிக்கு ஜாதகியின் கணவருக்கும் தரும், 5ம் பாவக வலிமை பெறுவது ஜாதகிக்கு சிறப்பான விஷயம் என்றாலும், இது நடைமுறைக்கு வர ஜாதகிக்கு நல்லதொரு குழந்தை ( ஆண் ) பாக்கியம் அமைவது அவசியமாகிறது, களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது எண்ணிலடங்கா துன்பங்களை வாழ்க்கை துணை வழியில் இருந்தும், எதிர்ப்பால் இன அமைப்பினரிடமும் ஜாதகி சந்திக்கும் துர்பாக்கிய நிலையை தரும், நண்பர்கள்,உறவுகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உயிர் பயத்தை தரும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது தன் கணவனுக்கு திடீர் யோகங்களை தரும், ஜாதகிக்கு பூர்ண ஆயுள் அமைப்பை தரும், இருப்பினும் தனது கணவரால் ஜாதகிக்கு யாதொரு நன்மையையும் இல்லை என்பது கவனிக்க தக்கது, லாப ஸ்தானம் வலிமை இழப்பது ஜாதகிக்கு அதிர்ஷ்டம் அற்ற வாழ்க்கையையும், தன்னம்பிக்கை இன்மையையும், பிற்போக்குத்தனமான செய்கையினால் தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்ளும் சூழ்நிலையை தரும், அயன சயன ஸ்தானம் வலிமை இழப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியற்ற நிலையையும், மன கட்டுப்பாடு இன்றி சிந்திக்கும் தன்மையையும், வீண் விரையங்களையும், அனைவராலும் கடுமையான தொல்லைகளை சந்திக்கும் சூழ்நிலையையும் தரும், இல்லற வாழ்க்கையில் தேவையில்லாத சகவாசத்தை தந்து, விரைவாக குடும்ப வாழ்க்கைக்கு மூடு விழா நடத்தும், ஆனால் தற்போழுது நடைபெறும் சனி திசையும், புதன் புத்தியும் ஜாதகிக்கு 5,10ம் பாவக வழியில் இருந்து யோகத்தை தருவது வரவேற்க தக்க அம்சமாகும்.

ஜாதகர்


லக்கினம் : மிதுனம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஷ்வினி 1ம் பாதம்

ஜாதகருக்கு லக்கினம் மற்றும் குடும்ப ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் 5ம் பாவகம் வலிமை பெறுவது சிறப்பான விஷயம் 100% விகித யோகத்தை பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து தரும், களத்திர ஸ்தானம் வலிமை இழப்பது வாழ்க்கை துணையுடனான நெருக்கத்தை குறைக்கும், வாழ்க்கை துணை வழியில் திடீர் இழப்பை தரும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது, ஜாதகருக்கு நீண்ட ஆயுளையும், வாழ்க்கை துணையை நிந்தனை செய்யும் தன்மையை தரும், லாப ஸ்தானம் வலிமை இழப்பது எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவி செல்லும், தன்னம்பிக்கை குறையும், பிற்போக்கு தனமான வாதம் ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், அயன சயன ஸ்தானம் வலிமை இழப்பது தாம்பத்திய வாழ்க்கையில் மனக்கசப்பை ஏற்படுத்தும், மன நிம்மதி குறையும், எதிர்பால் உறவுகள் மூலம் ஜாதகரின் வாழ்க்கை அதிக அளவிலான இன்னல்களையும், சிக்கல்களையும் வழங்கும், தம்பதியருக்குள் மகிழ்ச்சி இன்மையும், கவர்ச்சி இன்மையும் அதிகரித்து பிரிவில் கொண்டுவந்து நிறுத்தும், ஜாதகருக்கு சில பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், ஜாதகரின் சகவாச தோஷம் ஜாதகரை படுகுழியில் தள்ளும்.

மேற்கண்ட தம்பதியரின் வாழ்க்கையில் சுய ஜாதக வலிமை இன்மையே பிரிவை நோக்கி அழைத்து சென்றுகொண்டு இருக்கின்றது, இதற்க்கு தம்பதியரின் சுய ஜாதக வலிமை இன்மையே மிக முக்கிய காரணமாக அமைகிறது, தற்போழுது நடைபெறும் சூரியன் திசை சனி புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும், அடுத்து வரும் புதன் புத்தி தம்பதியரின் இல்லற வாழ்க்கைக்கு சிறப்பான நன்மைகளை வழங்க வாய்ப்பு இல்லை என்பதே முற்றிலும் உண்மை.

குறிப்பு :

திருமணத்திற்கு முன்பு சுய ஜாதக பாவக வலிமையை அறிந்து, இல்லற வாழ்க்கையை ஏற்று கொள்வதே புத்திசாலித்தனம், இதில் தவறு இழைத்தால் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய தவறு செய்தத்திற்கு உண்டான இன்னல்களை தம்பதியர் சந்திக்க வேண்டி வரும், தம்பதியரின் ஒருவரது ஜாதகமாவது பாவக ரீதியாக வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 26 டிசம்பர், 2016

திருமண பொருத்தம் : வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முன் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் !


" திருமணம் ஆயிரம் காலத்து பயிர் " என்ற முது மொழிக்கு ஏற்ப, தனது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையவும், தனது சந்ததிகளின் வாழ்க்கை சிறப்பு மிக்க எதிர்காலத்தை பெறவும், வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும், வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் தவறு இழைப்பது, "முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்ற நிலைக்கு சம்பந்தப்பட்டவரை அழைத்து சென்று விடும், பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் தசவித பொருத்தத்திற்கு ( நட்ச்சத்திர பொருத்தம் ) தரும் முக்கியத்துவத்தை சற்று சுய ஜாதக பாவக வலிமைக்கும் தருவது அவசியமாகிறது, ஏனெனில் சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே முதன்மை வகிக்கின்றது, நட்ச்சத்திர பொருத்தத்தின் தாக்கம் இல்லற வாழ்க்கையில் மிக குறைந்த அளவிலேயே இருக்கும், ஆனால் சுய ஜாதக பாவக வலிமையே இல்லற வாழ்க்கையில் வரும் நன்மை தீமை, யோக அவயோகங்களுக்கு முழு காரணமாக அமையும் என்பதனால் வரன் வது ஆகியோரின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைப்பது சாலச்சிறந்தது.


லக்கினம் : மேஷம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : கேட்டை 4ம் பாதம்

மேற்கண்ட வதுவை தேர்வு செய்த மணமகனின் சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானம் மிகுந்த வலிமை பெற்று இருப்பது வரவேற்க தக்க அமசமாகும், எனவே ஜாதகர் தேர்வு செய்த வாழ்க்கை துணை ஜாதகருக்கு யோகங்களை தரும் பொருத்தம் உள்ளவரா என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகிக்கு 1,7ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கின வழியில் இருந்து நிறைவான யோகங்களையும், அதிபுத்திசாலித்தனம் கொண்டவராகவும் இருப்பர், களத்திர ஸ்தான வழியில் இருந்து நல்ல யோகங்களையும், சிறந்த அறிவுக்கூர்மை கொண்ட வாழ்க்கை துணையையும், கடவுள் அனுகிரகம் பரிபூர்ணமாக கொண்ட ஒரு வாழ்க்கை துணையை பெறுபவர் என்பது சிறப்பான விஷயமாகும்.

2,8,9ம் வீடுகள் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்ப ஸ்தான வழியில் இருந்து மிகுந்த யோகங்களை பெரும் ஜாதகி என்பதுடன், தனது குடும்ப வாழ்க்கையில் சகல சம்பத்துக்களையும் நிறைவாக பெறுபவர் என்பது உறுதியாகிறது, ஆயுள் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுளை கொண்டவர் என்பதும், தனது கணவன் வழியில் இருந்து நிறைவான நன்மைகளை தங்கு தடையின்றி பெறுபவர் என்பதும் உறுதியாகிறது, பாக்கிய ஸ்தான வழியில் இருந்து நல்ல பெருந்தன்மையான மன நிலை, அனைவரையும் அனுசரித்து செல்லும் யோகம், பெரியோர் ஆசிர்வாதம், கடவுளின் பரிபூர்ண அருளாசியை பெரும் யோகம், சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் நிறைந்த நடவடிக்கை மூலம் அனைவரையும் வசீகரிக்கும் யோகத்தை தரும்.

5ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும், தனது வாழ்க்கை துணைக்கும், தனது குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் பெரிய அளவில் பயன்தரும், மேலும் தனது குழந்தைகளுக்கு சிறப்பு மிக்க எதிர்காலத்தை அமைத்து தரும் வல்லமையை பெற்றவர் என்பதும் உறுதியாகிறது, ஜாதகியை திருமணம் செய்துகொள்ளும் அன்பருக்கு பரிபூர்ண யோகங்களை வழங்கும் சிறப்புக்களை பெற்ற ஜாதகி  என்பது உறுதியாகிறது, மேலும் ஜாதகியின் அறிவு திறன்,கல்வி மற்றும் அதி புத்திசாலித்தனம் ஆகியவை ஜாதகியின் வாழ்க்கையில் சகல யோகங்களை வாரி வழங்கும், சிறந்த நிர்வாக திறமை கொண்டவர், இல்லற வாழ்க்கை மிக சிறப்பாக எடுத்து செல்லும் யோகம் பெற்றவர்.

சுய ஜாதகத்தில் 12ம் வீடு மட்டும் பாதிக்கப்படுவது, ஜாதகியின் தாம்பத்திய வாழ்க்கையில் நிகழும் சிறுசிறு குறைபாடுகளை தெளிவு படுத்துகிறது, எனவே 12ம் வீடு உபய ராசி என்பதனால் இதனால் யாதொரு பாதிப்பு வாராது என்பதை கருத்தில் கொண்டு திருமண வாழ்க்கையில் இணைக்கலாம், மேலும் வரனின் சுய ஜாதகத்தில் 12ம் வீடு வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கை சார்ந்த இன்னல்களை களைந்து, ஒற்றுமை நிறைந்த தாம்பத்திய வாழ்க்கையும், மகிழ்ச்சி நிறைந்த குடும்ப வாழ்க்கையையும் வழங்கும் என்பதினால், இவர்களை இல்லறவாழ்க்கையில் 100% விகிதம் இணைக்கலாம்.

மேலும் தற்போழுது நடைபெறும் சூரியன் திசை, எதிர்வரும் சந்திரன் திசை மிகவும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால், திருமண வாழ்க்கை  மற்றும் இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பது கவனிக்கத்தக்க  அம்சமாகும்.

குறிப்பு :

மன இயல்புகளை மட்டும் வெளிப்படுத்தும் நட்சத்திர பொருத்தம், தாம்பத்திய வாழ்க்கையின் வெற்றியை  நிர்ணயம் செய்யாது. லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, தம்பதியரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் நல்கும், எனவே திருமண பொருத்தம் காண்பதில் நட்சத்திர பொருத்தம் எனும் தசவித பொருத்தங்கள் 5 % விகித சம்பந்தத்தையும், சுய ஜாதக பாவக ( வலிமை ) பொருத்தங்கள் 100% விகித சம்பந்தத்தையும் தரும் என்பதால், சுய ஜாதக வலிமை அடிப்படையில் திருமண பொருத்தம் காண்பதே தாம்பத்திய வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
   
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 19 டிசம்பர், 2016

ஏழரை சனியின் தாக்கமா? சுய ஜாதக வலிமை இன்மையா ?



 பொதுவாக நாம் அதிக அளவில் இன்னலுறும் நேரங்களில் ஜோதிட ஆலோசனை பெரும் பொழுது பெரும்பாலும் சந்திரனுக்கு 12,1,2ல் சனி பகவான் சஞ்சாரம் செய்துகொண்டு இருப்பின், ஏழரை சனி காலம் இதன் காரணமாகவே தாங்கள் அதிகம் இன்னல்களை சந்திக்க வேண்டி  உள்ளது, எனவே சனி ப்ரீத்தி பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள் என்ற வழிகாட்டுதல்களை "ஜோதிடர்கள்" வழங்குவது உண்டு, இந்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒருவர் இன்னல்களை சந்திப்பதற்கும், சனி ராசிக்கு 12,1,2ல் சஞ்சாரம் செய்வதற்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்பதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு படுத்த விரும்புகின்றோம், ராசிக்கு நவகிரகங்களின் சஞ்சார நிலையை கருத்தில் கொண்டு பலன் நிர்ணயம் செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான பலாபலன்களை கூறுவதற்கு வழிவகுத்துவிடும், லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், 12 பாவகங்களை கருத்தில் கொண்டும் சுய ஜாதக பலன் அறிய முற்படுவதே சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நன்மைகளையும், சரியான திட்டமிடுதல்கள் மூலம் முன்னேற்றங்களையும் பெறுவதற்கு வழிவகுக்கும்.


லக்கினம் : ரிஷபம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம்

ஒருவருக்கு கடுமையான நெருக்கடிகளையும், இன்னல்களையும் வழங்குவது, ராசிக்கு சில இடங்களில் இருந்து சஞ்சாரம் செய்யும் கிரகங்களின் தாக்கம் என்பது உண்மையல்ல, ஒருவருக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் நிலை வெகு பரிதாபத்திற்க்கு உரியதாக மாறிவிடும், கிரகங்களின் கோட்சார வழங்கும் இன்னல்களை விட ( ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம குரு ) பல நூறு மடங்கு இன்னல்களை தந்து விடும், மேற்கண்ட ஜாதகருக்கு  தற்போழுது நடைபெறுவது சந்திரன் திசை, இவர் தரும் பலன்களை கருத்தில் கொண்டு இந்த ஜாதகத்தை ஆய்வு செய்வோம்.

பொதுவாக எந்த ஒரு ஜாதகருக்கும், சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற கூடாது, அப்படியே சம்பந்தம் பெற்றாலும், நவ கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகர் யோகம் பெற்றவரே, மாறாக நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் கத்தி அதோ கதிதான், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவார், எவராலும் மேற்கண்ட பாதிப்பில் இருந்து காப்பாற்ற இயலாது என்பதே உண்மை நிலை.

மேற்கண்ட ஜாதகருக்கு சந்திரன் திசை ( 24/07/2011 முதல் 23/07/2021 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு 3,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 11ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், முறையே விரையம், பாதக ஸ்தான பலனை நடத்திக்கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகர் மூன்றாம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் தோல்விகளையும், வீரியமிக்க செயல்திறன் அற்ற சூழ்நிலைகளையும் வழங்குகிறது, மேலும் சுய முயற்சி தடை பெரும், நிம்மதி அற்ற சூழ்நிலையை உருவாக்கும், 12ம் பாவக வழியில் இருந்து மனநிம்மதி இழப்பு, வீண் விரையம், அதிக மன போராட்டம், தெளிவற்ற வாழ்க்கை முறை, அதிக அளவிலான தொல்லைகள், பொருள் இழப்பு, சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியின்மையை தரும், மேற்கண்ட இன்னல்கள் ஜாதகருக்கு 100% விகிதம் நடைமுறைக்கு வரும், அடுத்து பாதக ஸ்தான தொடர்பை பெரும் லாப ஸ்தான வழியில் இருந்து ஜாதகரின் ஆசை மற்றும் எண்ணங்கள் யாவும் நிராசையாக மாறிவிடும், தன்னம்பிக்கை வெகுவாக கெடும், மூட நம்பிக்கை மற்றும் பிற்போக்கு தனமான எண்ணங்களால் ஜாதகர் சூழப்பட்டு தனது வாழ்க்கையே தானே பாதிப்பிற்கு உள்ளாக்குவார், ஜாதகருக்கு  வரும் இன்னல்களின் தாக்கம் பெரிய அளவிலான அமைப்பில் இருக்கும், துன்பத்தில் ஜாதகர் அனலில் இட்ட புழு போல் தவிக்க நேரும், சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும் 11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் அதிர்ஷ்டமற்ற வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மேலும் இதன் பாதிப்பு ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து  200% விகிதம் இருக்கும் என்பது வருந்தத்தக்கது.

மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்த ஜோதிடர்கள் ஜாதகருக்கு ஏழரை சனியின் தாக்கத்தினாலே பெரும் இன்னல்களை சந்தித்து கொண்டு இருக்கின்றார் என்பதாக கூறியிருக்கின்றனர், நடைபெறும் சந்திரன் திசை தரும்  விரையம் மற்றும் பாதக ஸ்தான பலனை பற்றி யாதொரு விஷயமும் கூறவில்லை என்பது கவனிக்க தக்கது, உண்மையில் மேற்கண்ட ஜாதகருக்கு விரைய ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் சந்திரன் திசையே 200% சதவிகித இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றார், எனவே  ராசியை அடிப்படையாக கொண்டும் நவ கிரகங்களின் கோட்சர நிலையை கொண்டும் பலன் காண்பதை தவிர்த்து, சுய ஜாதக பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டும், அந்த பாவகங்களுக்கு நவகிரகங்களின் கோட்சாரம் வழங்கும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் சுய ஜாதக பலன் காண முற்படுவதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு துல்லியமான பலாபலன்களை கூற உதவி புரியும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696