செவ்வாய், 17 அக்டோபர், 2017

சுய ஜாதக வலிமை நிலையும், ஜாதகரின் மனபயமும் !

 
 
 "ஜோதிடம்" என்பது நமது வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், விழிப்புணர்வுடன் கூடிய தெளிந்த நல்லறிவையும் தரவேண்டும், மாறாக மூடநம்பிக்கைகளையும், நம்பிக்கையை குலைக்கும் விதமான பயமுறுத்தல்களையும் கொண்டதாக இருக்க கூடாது, பொதுவாக ஓர் ஜாதகர் சமுதாயத்தில் சுய வாழ்க்கையில் தன்னிறைவான முன்னேற்றங்களை பெற்று சுபயோக வாழ்க்கையை பெறுவதற்கு மூன்று அன்பர்களின் வழிகாட்டுதல்கள் மிக முக்கியமாக தேவை, அந்த மூன்று நபர்களின்  சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்குமாயின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையினை பெறுவதற்கு தடையேதும் இருக்காது, முதலில் நல்ல மருத்துவர் ஆலோசனையை பெறுவது ஜாதகரின் உடல் நிலையில் சிறப்பான ஆரோக்கியத்தை தரும், நல்ல வழக்கறிஞர் ஆலோசனையை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான வாழ்க்கை பாதையினை அமைத்து தரும், நல்ல ஜோதிடரின் ஆலோசனையை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றங்களையும், சுபயோகங்களையும் வாரி வழங்கும்.

 ஒரு ஜாதகத்தில் இல்லாத விஷயத்தை நவகிரகங்கள் தருவதாக மிகைபடுத்தி கூறுவது உண்மைக்கு புறம்பானது, பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரை மிக சிறப்பாக செயல்பட வைக்கும், மேலும் பூரண ஆயுளை தரும், தான் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகரை ஏதாவது ஓர் வழியில் ஜீவிக்க வைக்கும், இதை போன்றே லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் தான் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகரை தனது வலிமைக்கு ஏற்றார் போல் இயக்கும், கிழ்கண்ட ஜாதகரின் கேள்விக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமைக்கு உற்பட்ட உண்மையான பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஜாதகர் இதற்க்கு முன் ஜாதக ஆலோசனை பெற்ற இடத்தில் கூறப்பட்ட கருத்துக்களை முதலில் பார்ப்போம்.


( 1. ஜாதகருக்கு . .கேது கொடி பிடிக்க **கால ஸர்ப்ப தோஷம் ** இது கடைசி வரை தொடர்வது .!! ) 

ஜோதிடதீபத்தின் கருத்து :

கால சர்ப்ப தோஷத்திற்கு இலக்கணம் ராகுகேது க்குள் அணைத்தது கிரகங்களும் அடக்கம் பெறுவது, மேற்கண்ட ஜாதகத்தில் ராகு 260:43:58 பாகையில் அமர்ந்திருக்கிறது, அதற்க்கு முன் சந்திரன் 251:56:46 பாக்கையிலும், செவ்வாய் 257:15:38 பாக்கையிலும் அமர்ந்து இருக்கின்றனர் எனவே கால சர்ப்ப தோஷம் என்பது இல்லை என்பதால் ராகு கேது கொடி பிடித்தால் நமக்கு என்ன?  குத்தூசி பிடித்தால் நமக்கு என்ன ? மேலும் இதற்கும் சுய ஜாதக வலிமைக்கும் சம்பந்தம் இல்லை.

( 2.லக்கினாதிபதி புதன் நீசமாகி தன வீட்டை பார்க்கிறான் ..அதனால் ஓரளவு உயிர் வாழ்வு .10% )

ஜோதிடதீபத்தின் கருத்து :

லக்கினாதிபதி நீசம் பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கான நிலை இதை சுய ஜாதகத்துடன் தொடர்பு படுத்துவது அபத்தமான செயல், மேலும் சுய ஜாதகத்தில் ஜாதகரின் லக்கின அதிபதி குரு பகவான் ஆவர் இதை நன்கு ஜோதிட கணிதம் அறிந்தவர்கள் மிக எளிதாக தெரிந்துகொள்ள இயலும். லக்கினம் எனும் முதல் வீடு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் லக்கினம் 100% விகிதம் வலிமை பெறுவதை கட்டியம் கூறுகிறது, எனவே ஜாதகர் பூர்ண ஆயுளுடன் ஜீவித்து நிற்பார் என்பதை தெளிவு படுத்துகிறது.

( 3. கல்வி 5ம் வீட்டில் குரு [நீசமானாலும் ஒரு 40 சதவீதம் வேலை செய்வார் குரு மட்டும் ]இருப்பதால் கொஞ்சம் நுண்ணறிவுடன் செயல்பட்டு பூர்வ புண்ணியமும் சேர்ந்து தகவல் தொழில் நுட்பம் பயின்றார் .... வெளி நாட்டில் வேலை .உபய ராசி என்பதால் ...அம்சத்தில் 10 ல் ராஹு வெளி நாடு கடத்தியது ..!! ) 

ஜோதிடதீபத்தின் கருத்து :

ஜாதகரின் லக்கினம் மற்றும் 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதாலும் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் வியாபித்து நிற்பது, ஜாதகருக்கு சிறப்பு மிக்க ஜீவன முன்னேற்றத்தை தனது சுய அறிவு மற்றும் புத்திசாலித்தனம் கொண்டு வாழ்க்கையில் பெற வேண்டிய சுபயோகங்களை பரிபூர்ணமாக பெறு வைக்கிறது, என்பதே உண்மை நிலை. 5ம் வீடு சர ராசி என்பதனால் அயல் தேசம் சென்று ஜீவனம் செய்யும் யோகத்தை தருகிறது.

( 4.. கர்மகாரகனான சனி தனது 10 ம் பார்வையாக தன வீடு கும்பத்தை பார்ப்பது .அது லக்கினத்திற்கு 6ம் வீடு ருணம் .???அது ஒரு கஷ்டம் ...)

ஜோதிடதீபத்தின் கருத்து :

சனி பகவான் தனது வர்க்க கிரகமான சுக்கிரனின் வீட்டில் ( ரிஷபத்தில் ) அமர்ந்து தனது வீட்டை தானே பார்ப்பது ( கேந்திர பலம் பெற்று ) மேலும் வலு சேர்க்கும் அமைப்பாகும், மேலும் 6ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு வரும் உடல் நிலை பாதிப்புகளை ஜாதகரின் குலதெய்வ ஆசியின் மூலம் தனது சமயோசித புத்திசாலித்தனம் கொண்டு வெற்றிகாண்பார், சனி பார்வையினால் யாதொரு கஷ்டமும் ஜாதகருக்கு இல்லை, இதை சொன்னவருக்கு வேண்டுமாயின் ஏதாவது ஓர் கஷ்டம் சனியின் மூலம் வரலாம்.

( 5.. 6ம் வீட்டில் சூரியன் தலை பாகத்திற்கு அதிபதி ஆதாலால் ***மூளையில் கட்டி** ஏற்பட்டு ஜாதகர் **.மூளை புற்று ** நோயால் அவதி படுகிறார்...கீமோ தெரபி தொடர்ர்ந்தால்???? ..மொத்த உடலும் ஊனம் ஏற்பாடும் .மருத்துவ நிபுணர்கள் கருத்து படுத்தய படுக்கை ..)

ஜோதிடதீபத்தின் கருத்து :

சத்ரு ஸ்தானத்தில் நிற்கும் சூரியன் ஜாதகருக்கு ஸ்திர காற்று தத்துவ ராசி மூலம் நிறைவான அறிவு மற்றும் தன்னம்பிக்கையை வழங்கி தனது வாழ்க்கையில் எதிர்த்து போராடி வெற்றி பெரும் தன்மையை தருகின்றார், ஜாதகருக்கு வரும் நோய், எதிர்ப்பு, கடன் போன்ற இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும் வல்லமையை தருகின்றார், எனவே ஜாதகரின் நம்பிக்கை மற்றும் முயற்சி வீண் போக வாய்ப்பில்லை, 6ல் சூரியன் மருத்துவ சிகிச்சையின் மூலம் விரைவாக குணம் பெறுதலை குறிக்கும்.

( 6.,அஷ்ட வர்க்க பரல் ..ஜாதகருக்கு 8 மிடம் 16//28 பரல்களே .இது மிக குறைவானது  ஆயுள் ..???? ) 

ஜோதிடதீபத்தின் கருத்து :

இயற்கை நியதிகளை நிர்ணயம் செய்ய இறை நிலையால் மட்டுமே முடியும் எனும் பொழுது, ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்ய மருத்துவராலும் முடியாது, ஜோதிடராலும் முடியாது, மேலும் பரல்கள் ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்கின்றது என்பது கேலிக்கூத்து.


( 7.,உபய ராசி உபய லக்கினம் ஆதலால் வெளி நாட்டில் வேலை ...)

ஜோதிடதீபத்தின் கருத்து :

உபய ராசி உபய லக்கினத்தில் உள்ளார்கள் அனைவரும் இனி வெளிநாடு ஜீவனத்தை தேடுவதே உகந்தது, உள்நாட்டில் வேலையில்லை, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 1,5ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது சிறப்பான தகுதி மற்றும் திறமைகளை வழங்கியிருக்கிறது, ஜாதகரின்  சுய உழைப்பின் மூலம் வெளிநாட்டில் பணியாற்றும் யோகத்தை பெற்று இருக்கின்றார்.

( 8..திருமணம் நடந்தது கொஞ்சம் உறவு பெண் மிக அருமையான பெண்மணி ..1 ஆண் 1 பெண் குழைந்தை ...குழைந்தைகளுக்கு தந்தையின் நிலைமை தெரியும் குறுகிய ஆயுள் என!! )

ஜோதிடதீபத்தின் கருத்து :

சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு நல்ல புத்திர பாக்கியத்தை தந்து இருக்கின்றது, மேலும் வாழ்க்கையில் அவர்கள் வழியிலான சுபயோகங்களை பெறுவதற்கு வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து வாங்கிக்கொண்டு இருக்கின்றது.


( 9.,...8 மிடத்திற்கு 12 மிடமான மீனம் .அதிபதி குரு 5ம் வீட்டில் நீசமாகி போனான் உத்தேசமாக அடுத்துவரக்கூடிய ராஹு திசையின் குரு புக்தி இவருக்கு கடுமையான கண்டம் ..!!!!! தனுசு ராசிக்கு 12ல்விருச்சிகத்தில் குரு வரும்நேரம் கண்டம் 2018..ஜூலை .)

ஜோதிடதீபத்தின் கருத்து :

ஜாதகருக்கு ராகு திசை மற்றும் குரு புத்தி ஏற்று நடத்தும் பாவக பலன் பற்றி ஏதும் அறியாத நிலையில் கூறப்படும் கருத்து இது என்றே சொல்ல தோன்றுகிறது, ஜாதகருக்கு கடந்த செவ்வாய் திசை 2,4,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான மன பயத்தையும் இழப்புகளையும் வாரி வழங்கி இருக்கின்றது, ஆனால் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 6ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலன்களை தருவது ஜாதகரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், உடல் மனம் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட சரியான மருத்துவரை காணும் யோகத்தை தரும், மன பயம் நீங்கும், ராகு திசையில் எதிர் வரும் குரு புத்தியும் 6ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலன்களை தருவது ஜாதகரின் வாழ்க்கையில் ஓர் நம்பிக்கையை பெற்று தரும், வீண் மரண பயத்தை போக்கி தனது உடல் நலத்தை தானே தேற்றும் தன்மையை தரும், ராகு தசை குரு புத்தி ஜாதகருக்கு மரணத்தை தாராது என்பதே உண்மை நிலை.

( .10.,ஏழரை சனி ஜென்ம ராசிக்கு வருவது ஒரு பாதிப்பு ..கர்மகாரகனான இவரின் 3ம் பார்வை 6 மிடத்தை பார்ப்பது கண்டத்தை ஏற்படுத்தும் )

 ஜோதிடதீபத்தின் கருத்து :

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஏழரை சனியை வைத்துக்கொண்டு ஜோதிடர்கள் காலத்தை ஓட்டுவார்கள் என்று தெரியவில்லை, சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை, தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக தொடர்பு, அந்த பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை வலிமை இன்மை ஆகிவை கொண்டு சுய ஜாதக பலாபலன்கள் காண இயலாத பொழுது, ஏழரை சனி, அஷ்டம சனி, கால சர்ப்ப தோஷம் என பல காரணங்களை சொல்லி தானும் குழம்பி ஜோதிடம் பார்க்க வந்தவரையும் குழப்பி வினைப்பதிவின் தாக்கத்தை அதிகரித்துக்கொண்டே செல்வது ஜோதிடர்களின் விதியை வெகுவாக பாதிக்கும் என்பது மட்டும் சத்தியம்.

( 11.,அம்சத்தை கவனிக்கும் போது சற்று பரவாயில்லை என தோன்றும் லக்கினாதிபதி சனி தன வீட்டை பார்ப்பது .. . .)

ஜோதிடதீபத்தின் கருத்து :

பாவக தொடர்புகளிலேயே அனைத்தையும் அறிந்துகொள்ளும் பொழுது,  அம்ச நிலையை பற்றி சிந்திப்பது வீண் வேலை.

( 12., அஷ்ட வர்க பரல் லக்கினம் [1] 27.,33.,33.,36.,28.,28.,24.,**16.**27.,26.,32.,27..!!!!!...8மிடத்தில் பரல் 16 ஆயுள் குறைவு .25 வரை பரல்கள் சரி பரவாயில்லை என கொள்ளலாம் ..அதற்கும் கீழ் என் வரும்போது அந்த வீடு பாதிப்பு ..!!!.)

ஜோதிடதீபத்தின் கருத்து :

அஷ்டவர்க்க பரல்கள் கொண்டு எந்தவித பலாபலன்களை ஜோதிடரால் நிர்ணயம் செய்ய இயலாது என்பதே உண்மை.

( 13.,சுய வர்க்கபரலும் லக்கினம் .4.,5.,4.,5.,5.,5.,4.,4.,..ஆக இதில் சராசரியா 4 பரல்கள் சுயவர்கத்தில்4 பரல் இருந்தாலே போதும் என கொள்ளலாம் . )

ஜோதிடதீபத்தின் கருத்து :

அஷ்டவர்க்க பரல்கள் கொண்டு எந்தவித பலாபலன்களை ஜோதிடரால் நிர்ணயம் செய்ய இயலாது என்பதே உண்மை.

( 14..,ஜாதகர் வெளி நாட்டில் இருப்பதா..???உள்நாட்டில் வந்துஉறவுகளுடன் இருப்பதா ???.மில்லியன் டாலர் கேள்வி.???? )

ஜோதிடதீபத்தின் கருத்து :

சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலை தெரியவில்லை எனில் உடனே மில்லியன் டாலர் கேள்வி என்பதா ? என்ன கொடுமை இது ? ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் வீடு மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது, எனவே சந்தேகம் இன்றி தெளிவாக சொல்லலாம் ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவித்து இருப்பதே சகல நலன்களையும் வாரி வழங்கும், குலதெய்வ ஆசியுடன் குழந்தைகளின் பாசத்துடன் பூர்வீக ஜீவனமே ஜாதகருக்கு உகந்தது.

( 15..,எனது யோசனை இந்திய வந்து உறவுகளுடன் இருப்பது ..!!!)

ஜோதிடதீபத்தின் கருத்து :

யோசனை தேவையில்லை சுய ஜாதகம் சொல்வது என்ன என்பதே முக்கியம்.

( 16.,ஜோதிட ஜாம்பவான்கள் என்ன சொல்கிறீர்கள் .

எதிர்கால பலன் என்றில்லை ..???இது வித்தியாசமான ஜாதகம் என்பதால் பதிந்துள்ளேன். 
இதே போல் ஒரு எனக்கு நெருங்கிய உறவினர். மூளை டூமர் ஆபரேஷன் செய்தார். ஆனால் 6 மாதம் டூமர் மீண்டும் வளர்ச்சி ..தற்போது ஜாதகர் இல்லை ..!!!.. ) 

ஜோதிடதீபத்தின் கருத்து :

ஒரு ஜாதகத்தை போல் மற்றோரு ஜாதகம் இருக்காது என்ற அடிப்படை விஷயம் எப்பொழுது புரிய வருகிறதோ அப்பொழுதுதான் சுய ஜாதக பலாபலன்கள் பற்றிய தெளிவு கிடைக்கும். மேலும் எந்த ஒரு ஜோதிட ஜாம்பவான்களாலும் ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்ய இயலாது, ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை வலிமை பெற்ற பலாபலன்களை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் சுபயோகங்களை தரும் என்பதால் வீண் பயமின்றி எதிர்காலத்தை ஜாதகர் எதிர்கொள்வதே சால சிறந்தது.


குறிப்பு :

 கிராமங்களில் ஓர் செலவேந்திரம் ஒன்று உண்டு அதாவது " அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் " என்று அதை போன்று உள்ளது மேற்கண்ட ஜாதகரின் நிலை, ஜாதகர் எம்மிடம் ஆலோசனை பெற வந்தது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அப்பொழுதே ஜாதகர் தனக்கு மருத்துவர்கள் 6 மாதம் தான் கெடு வைத்திருக்கின்றனர் என்றார், இப்பொழுது இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும், ஜாதகர் மின் அஞ்சல் மூலம் ஆலோசனை பெறுகிறார் எனும் பொழுது, ஜாதகரின் உயிருக்கும் உடலுக்கும் பாதிப்பு இல்லை, ஜாதகரின் மனம் மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது இதற்க்கு அவரது சுய ஜாதகத்தில் 2,3,4,7,8,10,11,12ம் வீடுகள் அனைத்தும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதே காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் 12ம் வீடு மனம் சார்ந்த கற்பனைகளை அதிகரிக்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 2,3,4,7,8,10,11,12ம் பாவக வழியில் இருந்து வரும் மிதம் மிஞ்சிய கற்பனைகள் ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து கொண்டு இருக்கின்றது, கடந்த செவ்வாய் திசையில் ஜாதகர் 2,4,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை முழு வீச்சில் நடத்தியது பெரிய அளவிலான மன பயத்தை ஏற்படுத்தி தனக்கு வந்த உடல் தொந்தரவு தீர்க்க இயலாத பிரச்சனை என்று ஜாதகரையே மிக ஆழமாக ஆள் மனதில் நம்ப வைத்தது, இதன் தாக்கத்தையே ஜாதகர் தற்போழுது ராகு திசையிலும் அனுபவித்து கொண்டு இருக்கின்றார், ராகு திசை வலிமை பெற்ற பாவக பலனை தருவதால், ஜாதகர் இந்த வீண் மனபயத்தில் இருந்து விரைந்து மீட்டு எடுக்கும், தனது பூர்வீகத்தில் ஜீவிக்கும் பொழுது வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோகங்கள் நடைமுறைக்கு வரும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 12 அக்டோபர், 2017

சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இழப்பதால், ஜாதகருக்கு ஏற்படும் இன்னல்கள் !



 " எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் " என்பதற்கு இணங்க சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் உடல் என்று வர்ணிக்கப்படும் லக்கினமே பிரதானம் ஆகும், சுய ஜாதக பலன்கான சம்பந்தப்பட்ட நபரின் லக்கினமே அடிப்படையாக விளங்குகிறது,  இது சம்பந்தப்பட்ட நபரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் என்ற குறிப்பை கொண்டு  கணிதம் செய்யப்படும், அதன் அடிப்படையில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை வலிமை அற்ற தன்மை நிர்ணயம் செய்யபடுகிறது, ஒருவரது சுய ஜாதக பலாபலன்கள் பற்றி தெளிவு பெற நிச்சயம் அவரது லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை புத்தி மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டும், சுய ஜாதக பலன் காண்பது அவசியமாகிறது.

அதன் அடிப்படையில் சுய ஜாதகத்தில் முதல் பாவகமான லக்கினம் வலிமை பெறுவது மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக அவயோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை பரிபூர்ணமாக பெற்று இருக்கும், மாறாக சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை அற்று காணப்படுவது ஜாதகர் மற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மை தீமைகளை ஏற்றுக்கொள்ளும் வல்லமையை இழந்து காணப்படும், லக்கினம் பாதிப்படைவது என்பது சுய ஜாதகத்தில் முதல் வீடு மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது ( லக்கினாதிபதி 6,8,12ல் மறைவது என்பதல்ல ) ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும், மேலும் லக்கினம் எனும் முதல் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையை கணிக்க இயலாத கடுமையான பாதிப்பை தரும் ( சர லக்கினத்திற்கு 11ம் வீடும், ஸ்திர லக்கினத்திற்க்கு 9ம் வீடும், உபய லக்கினத்திற்க்கு 7ம் வீடும் பாதக ஸ்தானமாகும் ) ஒருவரது ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்களுடன் சம்பந்தம் பெரும் லக்கினம் மிகவும் பாதிப்பிற்க்கு ஆளாகி, ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும்.

லக்கினம் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகரின் உடல் நிலை மற்றும் மனநிலை வெகுவாக பாதிக்கும், நோய் எதிர்ப்பு தன்மை குறையும், ஜாதகரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் ஜாதகருக்கே எதிராக திரும்பும், வளரும் காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு இடையில் ஜாதகர் போராடி முன்னுக்குவரும் நிலையை தரும் அல்லது முன்னேற்றம் அற்ற நிலையில் தோல்வியை தரும், ஜாதகருக்கு அதிக அளவிலான எதிரிகளும், எதிர்ப்புகளும் தொடர்ந்து வரும் இதை சமாளிக்கும் வல்லமையும் ஜாதகருக்கு மிக குறைவாகவே அமைந்து இருக்கும், அடிக்கடி உடல் நலம் பாதிப்படையும், குறுகிய காலத்தில் மருத்துவ செலவினங்களை சந்திக்கும் நிலையை தரும், எதிரியின் பலமே உயர்ந்து நிற்கும், எதிர்மறையான எண்ணங்கள் ஜாதகரின் உடல் மனம் இரண்டையும் கடுமையாக பாதிக்கும், இதுவே ஜாதகரின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், சில நேரங்களில் எதிரியின் மிரட்டலுக்கு பயந்து போகும் நிலையை  தரும், அதிக பொறுப்புகளை சுமக்கும் வல்லமையற்றவராக திகழ்வார்கள், சிறு உடல் தொந்தரவுக்கே அதிக மனபயம் கொண்டு தானும் பாதித்து தன்னை சார்ந்தவர்களையும் படுத்தி எடுக்கும் தன்மையை பெற்றவர்கள் என்பதால் இவர்களை மற்றவர்கள் கையாள அதிகம் சிரமப்படுவார்கள், மேற்கண்ட அமைப்பில் உள்ள வாழ்க்கை துணையை பெற்ற அன்பர்களின் பாடுதான் ரொம்ப சிரமம்.

லக்கினம் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகருக்கு வரும் எதிர்பாராத இழப்புகள் தாங்க இயலாவண்ணம் இருக்கும், தான் செய்யும் செய்கைகள் தனக்கு இன்னல்களை தரும் என்று நன்கு தெரிந்து இருந்தும் அசட்டு தைரியத்துடன் அதில் ஈடுபட்டு இழப்புகளை சந்திப்பார்கள், விபத்து, வீண் விரையம் போன்றவற்றை ஜாதகர் தவிர்க்க இயலாது, சில நேரங்களில்  இவர்கள் எடுக்கும் முடிவுகள் பலரது வாழ்க்கையையும் பாழ்படுத்திவிடும், குறிப்பாக வாழ்க்கை துணைக்கு தாங்க இயலாத இன்னல்களை தருவார்கள், நண்பர்கள் அனைவரும் இவர்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள், சுய சிந்தனை என்பது ஜாதகருக்கு இழப்புகளையே  ஏற்படுத்தும், மனம் குறுக்கியவட்டத்தில் இருந்து வெளிவர மறுக்கும், தவறான திட்டமிடுதல்கள் மூலம் கடுமையான இழப்புகளை ஜாதகரும் சந்தித்து, ஜாதகரால் மற்றவர்களும் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும், பெரும்பாலும் ஜாதகரின் சிந்தனை எதிர்மறையான எண்ணங்களால் சூழப்பட்ட மனநிலையில் அதிக போராட்டங்களை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகர் பலமுறை முயற்சித்தே சிறு வெற்றிகளை பெறவேண்டியிருக்கும், தீவிரமான எண்ணங்கள் ஜாதகரின் வாழ்க்கையை பல சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கு வித்திடும், கிணற்றுத்தவளையாய் வாழ்க்கையில் விழிப்புணர்வு அற்று தனது வாழ்க்கையை தானே பாதிப்பிற்கு ஆளாக்கும் தன்மையை தரும்.

லக்கினம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகரின் மனநிம்மதி கெடும், நல்ல உறக்கம் இன்றி பரிதவிக்கும் நிலையை தரும், ஜாதகர் தீட்டும் பெரிய அளவிலான திட்டங்கள் இறுதியில் முழு தோல்வியை  தரும், ஆண் பெண் உறவுகள் வழியிலான பேரிழப்புக்களை அதிக அளவில்  சந்திக்கும் நிலையை தரும், தனக்கு உகந்த துணையை சரியாக தேர்வு செய்யாமல் அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களை சந்தித்து நிம்மதி இல்லாமல் வாழ்க்கையில் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டி வரும், ஆன்மீகத்தில் நாட்டம் இன்றி நாத்திக செயல்பாட்டினை தரும், தெளிவில்லாத சிந்தனை ஜாதகரின் மனநிம்மதியை பறிக்கும், முதலீடு செய்வதால் பேரிழப்புகளை சந்திக்கும் நிலையை தரும், அதிக அளவில் மனநோய் சார்ந்த தொந்தரவுகளால் பாதிப்படையும் நிலையை தரும், மற்றவர்களால் தானும், தன்னால் மற்றவர்களும் நிம்மதியற்று மனோ ரீதியாக  போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், கற்பனையே  வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொண்டு  இன்னலுறும் தன்மையை தரும், திரை துறை சார்ந்த விஷயங்களில் வீண் கற்பனை செய்துகொண்டு வாழ்க்கையை கெடுத்துக்கொள்பவர்கள் அதிக அளவில் மேற்கண்ட அமைப்பை பெற்றவர்களே, சுய அறிவு சொல்வதை கருத்தில் கொள்ளாமல் தனது மனம்போன போக்கில் தனது வாழ்க்கையை வாழ்ந்து, யாதொரு பிரயோசனம் இன்றி ஜீவிக்கும் தன்மையை தரும், சில நபர்கள் தாங்க இயலாத மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை முயற்சி செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதும் உண்டு, 12ம் பாவகம் நீர் தத்துவ ராசி எனில் ஜாதகரின் நிலை மிகவும்  பரிதாபத்திற்க்கு உரியதாக மாறிவிடும்.

லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( சரலக்கினம் )

அடிப்படையில் தன்னம்பிக்கையே ஜாதகருக்கு இருக்காது, செய்யும் காரியங்கள் யாவும் பிற்போக்கு தனமாகவும், மூட பழக்க வழக்கங்களை ஆதரிக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும், மிக மிக பழமைவாதிகளாக தனது வாழ்க்கையை சுருக்கிக்கொண்டு போராட்டத்தை மட்டுமே ஆயுதமாக கொண்டு வாழ்க்கையில் இன்னலுறுவார்கள், இவர்களால் மற்றவர்களுக்கு சிறிதும் நன்மை உண்டாகாது என்பதுடன், தனது வாழ்க்கையையும் தானே கெடுத்துக்கொள்வார்கள், அனைத்திற்கும் எதிர்ப்புவாதமே சரியானது என்று பிடிவாதம் செய்ப்பவர்கள், தேக ஆரோக்கியம் மற்றும் அறிவார்ந்த செயல்களில் ஈடுபாடு காட்டாமல், மற்றவர்கள் செய்வதை தானும் செய்து மிகப்பெரிய தோல்விகளை சந்திப்பார்கள், பொறுப்பற்ற தன்மை அதிகம் காணப்படும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் சிறிதும் இருக்காது, பகுத்தறிந்து செயல்படும் தன்மை இன்றி வேதனையை விலைகொடுத்து வாங்கிக்கொள்வார்கள், மற்றவர்களால் செய்யமுடியும் காரியத்தையும் தனது செய்கையின் மூலம் பாதிப்படைய செய்வார்கள், மற்றவர்களை முன்னிறுத்தி அதன் பின்னால் தனது ஜீவனத்தை மேற்கொள்வார்கள், எதிர்ப்புகள் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும், மற்றவர்களை சார்ந்து வாழும் சூழ்நிலையை தந்துவிடும், தெய்வீக அனுக்கிரகம் சிறிதும் இருக்காது, இவருடன்  சார்ந்தவர்கள் சுய ஜாதகம் வலிமை பெறவில்லை எனில், அவர்களின்  கதி அதோ கதிதான், சர லக்கினத்திற்க்கு அடிப்படையே வேகம்தான் ஆனால் இவர்களின் செயல்திறன் சிறிதும் அதற்க்கு பொருந்தவண்ணம் இருக்கும், சுய கட்டுப்பாடு, மனவலிமை, உடல் வலிமை, அறிவின் திறன் போன்றவை ஜாதகரின் வாழ்க்கையை விட்டே விலகி சென்றுவிடும்.

லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( ஸ்திர லக்கினம் )

 ஜாதகருக்கு சமூகத்தில் நற்பெயர் கிடைப்பது அரிது, பலரது கண்டிப்புக்கு ஆளாகும்  சூழ்நிலையை தரும், அறிவுத்திறன் என்பது ஜாதகருக்கு எதிர்மறையாக வேலை செய்யும், தொடர்ந்து பாதிப்புகளை தரும் விஷயங்களில் ஈடுபட்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்வார்கள், குறிப்பாக தனது உடலுக்கும் மனதுக்கும் ஒவ்வாத காரியங்களில் ஈடுபட்டு இன்னலுறும் தன்மையை தரும், முதியவர்கள், ஆன்மீக பெரியோர்களின் நிந்தனைக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், யாதொரு அறிவுரையும் ஜாதகருக்கு பலன்தராது, தானே அறிவாளி என்ற எண்ணத்தை மனதில் நிலை நிறுத்தி நல்லோர்களின் சாபத்திற்கு  ஆளாகும் சூழ்நிலையை தரும், கற்ற கல்வி பலன்தராது, மிக உயர்ந்த இடத்தில் இருந்த போதிலும் செயல்பாடுகள் அதற்க்கு ஈடானதாக இருக்காது, எந்த காரியத்திலும் வெற்றி பெற ஜாதகர் கடுமையாக போராடவேண்டிவரும், தீயபழக்க வழக்கங்கள் ஜாதகருக்கு மிக எளிதில் சுவீகரிக்கபடும், அதில் இருந்து விடுபட ஜாதகர் மரண போராட்டம் நடத்த வேண்டியிருக்கும், செய்யக்கூடாத காரியங்களை செய்துவிட்டு அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் எதிர்கொள்ள இயலாமல் தவிப்பர், இறையருள் ஆசிர்வாதமும் பித்ரு ஆசிர்வாதமும் ஜாதகருக்கு சிறிதும் இன்றி வாழ்க்கையில் போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலைய தரும், உண்மையான ஆன்மீகத்தை நாடாமல் போலி வேசதாரிகளை நம்பி தமது  வாழ்க்கையை தாமே கெடுத்துகொல்வர்கள், அறிவில் விழிப்பு நிலை ஏற்ப்படாது , அறிவார்ந்த பெரியோர்கள் சொல்லும் அறிவுரையும் ஜாதகருக்கு பலன் தாராது, சில நேரங்களில் இவர்களின் செய்கைகள் என்பது விட்டில் பூச்சிகளுக்கு நிகராக அமைந்திருக்கும், தான் செய்யும் செயல்கள் யாவும் சரியென்று வீண் வாதம் செய்து, தவறான சேர்க்கையின் மூலம் தனது  வாழ்க்கை தானே பாதிப்பிற்கு ஆளாக்கி இன்னலுருவார்கள்.

லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( உபய லக்கினம் )

ஜாதகரின் சேர்க்கையும், வெளிவட்டார பழக்க வழக்கமும், எதிர்ப்பால் இன சேர்க்கையும் ஜாதகரின் வாழ்க்கையை முழு அளவில் பாதிப்பிற்கு ஆளாக்கும் , மற்றவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு சுய சிந்தனை இன்றி செய்யும் ஒவ்வொரு  காரியங்களிலும்  மிகப்பெரிய தோல்விகளை சந்திப்பார்கள், சுய ஆளுமை இன்றி வாழ்க்கையில் தொடர்ந்து இன்னல்களை அனுபவிக்கும் நிலையை தரும், பெரும்பாலும் தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையை போராட்ட களமாக மாற்றி அவதியுறும் தன்மையை தரும், மேலும் மேற்கண்ட நபர்களால் சிறிதும் நன்மையை பெற இயலாத அன்பர்கள் என்றால் அது மிகையில்லை, தனிப்பட்ட முறையில் சுய முன்னேற்றம் பெரும் யோகம் அற்றவர்கள், தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை சரியாக தேர்வு செய்யும் வல்லமை அற்றவர்கள் என்பதுடன், பிரபல்ய யோகம் பெற தகுதியற்றவர்கள், பாதக ஸ்தானம் நீர் ராசிஎனில் சம்பந்தப்பட்ட ஜாதகர் எதிர்ப்பால் இன அமைப்பினரால் ஏமாற்றப்பட்டு, மன நோயாளியாக அவதியுற நேரும், குறிப்பாக அதிக அளவிலான குடி நோயாளிகள் அனைவரும் சுய ஜாதகத்தில் நீர் தத்துவ ராசி பதிக்கப்பட்ட நிலையில்  இருப்பதை கவனிக்க முடிகிறது.


குறிப்பு :

சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தான தொடர்பை பெற கூடாது, அப்படியே பெற்று இருந்தாலும் நடைபெறும் எதிவரும் திசாபுத்திகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்ற இலக்கின பாவக பலனை  ஏற்று நடத்தாமல் இருப்பதே ஜாதகருக்கு நன்மையை தரும், ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற இலக்கின பாவக பலனை தற்பொழுது எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை அனலில் இட்ட மெழுகு போல் உருக வேண்டியிருக்கும், மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஒருவரின் வாழ்க்கையில் சிறப்புகளை தருவதில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் தொடர்பு பெரும் பாவக நிலையை கருத்தில் கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவதே ஒவ்வொருவருக்கும் சுபயோகங்களை வாரி  வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 9 அக்டோபர், 2017

ஜாதக ஆலோசனை : சுய ஜாதகத்தில் உள்ள யோகம் தரும் நன்மைகள் மற்றும் முன்னேற்றம் !



 சுய ஜாதகப்படி ஒருவரது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலை, தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்கள் மற்றும் எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.

லக்கினம் : கன்னி
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 3ம் பாதம்


ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம்.
2,4,8,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.
9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நோய் எதிர்ப்பு சக்தி, சிறந்த உடல்நலம், வருமுன் காக்கும் வல்லமை, வளரும் சூழ்நிலையில் யோக வாழ்க்கை, சிறந்த கல்வி, நல்ல தொழில் வாய்ப்பு, எடுக்கும் காரியங்களில் வெற்றி என்ற வகையில் சிறப்புகளை தரும் லக்கினம் கன்னி என்பதால் உபய மண் தத்துவ அமைப்பில்  இருந்து ஜாதகி சிறப்புகளை வெகுவாக பெரும் யோகத்தை தரும், போதும் என்ற மனம், எதிர்ப்புகளை மிக எளிதாக கடந்து செல்லும் யோகம், வாழ்க்கையை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக வாழும் யோகத்தை தரும், இருப்பினும் தான் எடுக்கும் முடிவில் இருந்து பின்வாங்கும் தன்மையை தராமல் துணிந்து வெற்றிகாணும் யோகத்தை நல்கும்.

2,4,8,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதகத்தில்  மிகவும் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்பாக கருதலாம், ஜாதகி 2ம் பாவக வழியில் இருந்து நல்ல இல்லற வாழ்க்கை, கைநிறைவான வருமான வாய்ப்புகள், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், இனிமையான பேச்சு திறன், தெய்வீக அனுபவம், தனது பேச்சில் புத்திசாலித்தனம் மிளிரும் யோகம், அதிர்ஷ்டம் மற்றும் நண்பர்கள் உதவி மூலம் வெற்றிகரமான யோக வாழ்க்கை, செல்வச்செழிப்பு மிக்க யோக வாழ்க்கையை தரும்.

4ம் பாவக வழியில் இருந்து சுகபோக யோக வாழ்க்கை, தனது தகப்பனாருக்கு யோகம் தரும் தன்மை, போதும் என்ற மனநிலை, நல்ல குணம், அனைவரையும் அனுசரித்து ஆளுமை செய்யும் யோகம், மண் மனை வண்டி வாகன யோகம், நிறைய சொத்துக்கள், அரசியலில் வெற்றி, வெளிநாடுகளில் ஜீவிக்கும் யோகம், பெரிய மனிதர்கள் ஆசீர்வாதம் மற்றும் ஆதரவு,வியாதியில் இருந்து விரைவில் குணமடையும் யோகம், சுலபத்தில் வெற்றி, சுகபோகங்களை, சொத்து ஆபரணம் மற்றும் சிறந்த வசிப்பிடம் ஆகியவைகளை பரிபூர்ணமாக தனது தகப்பனாரின் ஆசி மூலம் பெரும் யோகத்தை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகி தனது எண்ணம் மற்றும் லட்சியங்களில் வெற்றிகாணும் யோகத்தை தரும், நீண்ட ஆயுள், நீடித்த அதிர்ஷ்ட்த்தை பிறவியில் இருந்தே பெற்றிருக்கும் தன்மையை தரும், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பரிபூர்ண சுபயோகங்களை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றும் வாழ்க்கை துணையை ஜாதகி பெற்று வாழ்க்கையில் நலம் பெரும் தன்மையை 8ம் பாவக வலிமை உறுதி செய்கிறது, ஜாதகியின் நண்பர்கள் வழியில் இருந்தும் பொருளாதார நன்மைகளை பெறுவதற்கு வாய்ப்புகளை வழங்கும், வெளிநாடுகள் அல்லது வெளியூரில் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி மிகுந்த அதிர்ஷ்டசாலியாக திகழ்வார், அனைத்திலும் நல்ல லாபம், மெய்பொருள் காண்பது அறிவு என்ற குறளுக்கு இலக்கணமாக திகழ்வார், முற்போக்கு சிந்தனை, புதுமை விரும்பியாக இருப்பது ஜாதகியின் வாழ்க்கையை சுவாரஷ்யம் மிக்கதாக மாற்றும், ஜாதகியின் குணாதிசயம் அனைவராலும் போற்றுதலுக்கு உரியதாக இருக்கும், தெய்வீக அனுக்கிரகம் இயற்கையிலேயே அமைந்து இருப்பதால் வாழ்க்கை ஜாதகிக்கு முழு அதிர்ஷ்டம் நிறைந்ததாகவே காணப்படும், நல்ல மனமும், நல்ல எண்ணமும் ஜாதகியின் வாழ்க்கையை பிரகாசம் மிக்கதாக மாற்றும், சுய ஜாதகத்தில் கடகம் லாப ஸ்தானமாக அமைவது வாழ்க்கையில் அளவில்லா சுபயோகங்களை வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து நிறைவான லாபங்கள், முதலீடுகளில் இருந்து வரும் வருமானம், நல்ல உறக்கம், ஆன்மீகத்தில் வெற்றி, முக்தி நிலை, தெய்வீக அனுக்கிரகம், நல்ல மன நிம்மதி, தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி, வாழ்க்கை துணையுடனான அன்னியோன்யம், தனது வழியில் இருந்து மற்றவர்களுக்கு தரும் உதவிகள் என ஜாதகி சிறப்பு மிக்க நல்வாழ்க்கையை வாழும் யோகத்தை தரும்.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் அறிவு திறன் வாழ்க்கையில் வரும் இன்னல்களை மிக சிறப்பாக எதிர்கொள்ளும் யோகம் உண்டாகும், தனது பித்ருக்கள் வழியிலான ஆசியின் மூலம் வாழ்நாளில் யாதொரு இன்னல்களையும் அனுபவிக்காமல் சுபயோகங்களையே தரும், தான் கற்ற கல்வி வழியிலான நன்மைகளையும் முன்னேற்றங்களையும் ஜாதகி தங்குதடையின்றி பெறுவார், இடம்மாற்றம் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பத்தை தரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகிக்கு எப்பொழுதும் அமைந்திருக்கும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சிறந்த உத்தியோகம், வியாபாரம் மற்றும் தொழில் வழியிலான நன்மைகளை பரிபூர்ணமாக வாரி வழங்கும், கம்பீரம் மிக்கவாழ்க்கை கவுரவம் குறையாத யோக வாழ்க்கை தரும், தீர்க்கமான வாதத்திறமையை தரும், ஜீவனத்திற்க்கு எந்த காலத்திலும் குறைவு இருக்காது, தனது தாய் வழியில் இருந்து ஜாதகி சுய கவுரவம், அந்தஸ்து, சுய மரியாதையுடன் வாழ்வதற்கான யோகத்தை நல்கும், உண்மை சத்தியம் ஆகியவற்றை மதித்து நடக்கும் வல்லமை பெற்றவர் என்பதுடன் மற்றவர்களையும் பின்பற்ற செய்யும் மதிநுட்பத்தை தரும், ஜாதகியின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீர்ய ஸ்தானமாக அமைவது ஜாதகி கல்வி கேள்விகளில்  சிறந்து விளங்கும் தன்மையையும், கணிதத்தில் நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் தன்மையை தரும்.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தேர்வில் வெற்றி, தேர்தலில் வெற்றி, வழக்குகளில் வெற்றி என்றவகையில் நன்மைகளையும், வயிறு சார்ந்த தொந்தரவுகளையும், கடன் சார்ந்த இன்னல்களையும் தரும், மற்றவர்கள் வழியில் இருந்து வரும் எதிர்ப்புகளை அனுசரித்து செல்லும் தன்மையை வளர்த்துக்கொள்வதே நல்லது, யாரிடமும் பகைமை பாராட்டாமல் சுமுக போக்கை கடைபிடிப்பதே சால சிறந்தது, பிறர் வழியில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவது ஜாதகிக்கு மிகுந்த சவால்களை தரும்.

3,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ( பாதக ஸ்தான தொடர்பு ) ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும்  சில முயற்சிகளை தடை செய்யும், சகோதர வழி ஆதரவை உதறித்தள்ளும் நிலையை தரும், 5ம் பாவக வழியில் இருந்து பூர்வீக ஜீவனத்தை தடை செய்யும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணையுடனான சிறு சிறு கருத்து வேறுபாடுகளை தரும், வாழ்க்கை துணையுடனான புரிதல் குறையும்.

சனி திசை குரு புத்தி தரும் பலன்கள் : ( 26/08/2017 முதல் 08/03/2020 )

சனி திசை ஜாதகிக்கு 1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலன்களை வழங்கிக்கொண்டு இருப்பது சிறப்பான நன்மைகளை தரும், சனி  திசையில் குரு புத்தி ஜாதகிக்கு 3,5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் பாதக ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும், ஜீவன ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களையும் வாரி வழங்குகிறது.

அடுத்து வரும் புதன் திசை தரும் பலன்கள் ( 08/03/2020 முதல் 08/03/2037 வரை )

 எதிர் வரும் புதன் திசை ஜாதகிக்கு 1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை வழங்குவது ஜாதகிக்கு சிறப்பான எதிர்கால வாழ்க்கையை தரும், லக்கின பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நல்ல உடல் நலம், மனநலம், சுபயோகங்கள் நிறைந்த வாழ்க்கை என ஜாதகிக்கு பல சிறப்புகளை வாரி வழங்க தயார் நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

எல்லா நேரமும் நல்ல நேரமே ! லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்ற ஜாதகத்திற்க்கு !


கேள்வி  :

 சுப அசுபங்களை நீக்க வேண்டிய ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களும். செவ்வாய், சனி, சூரியன் போன்ற ஹோரைகளும், சந்திராஷ்டமம், அஷ்டம சனி, ஏழரை சனி, பாத சனி, விரைய சனி, போன்றவைகளும், சனி, ராகு, செவ்வாய், சூரியன், கேது போன்ற இன்னல்களை தரும் என்று கருதப்படும் திசா புத்திகளும் யார் ஒருவருக்கு நன்மையை தரும் ? ஒரு வேலை மேற்கண்ட விஷயங்கள் யாவும் எவருக்கும் நன்மையை தாராத ? கெடு பலனை மட்டுமே தருமா ? உண்மை என்ன ?

பதில் :

 தாங்கள் வினவியிருக்கும் கேள்விக்கு விளக்கமான பதிலை இன்றைய பதிவில்  சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஒருவரின் வாழ்க்கையில் நல்ல நேரம் எது என்பதனையும், கெட்ட நேரம் எது என்பதனையும் நிர்ணயம் செய்யும் முழு உரிமை அவரது சுய ஜாதகத்திற்க்கே உண்டு என்றால் அது மறுக்க இயலாத உண்மை கீழ்கண்ட ஜாதகருக்கு நல்ல நேரம் எது? என்பதனையும் கெட்ட நேரம் எது?  என்பதனையும் அவரது சுய ஜாதகம் எப்படி நிர்ணயம் செய்கிறது என்ற அழகினை இந்த பதிவில் ரசிப்போம்  வாருங்கள் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : சதயம் 2ம் பாதம்

ஜாதகருக்கு  லக்கினம், ராசி இரண்டுமே கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாபம்  மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடான ஸ்திர காற்று ராசியான கும்பத்தில் அமைவது, அடிப்படையிலேயே ஜாதகர் பரிபூர்ண அதிர்ஷ்டத்தை பெரும் யோகம் பெற்றவர் என்பதை தெளிவு படுத்துகிறது, அடுத்து ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை நிலையை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,8,9,10,12 வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெற்று இருப்பது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பதை உறுதி செய்கிறது, மேற்கண்ட ஜாதகருக்கு வாழ்க்கையில் எல்லா நேரமும் நல்ல நேரமே என்று தெளிவாக சொல்லிவிட முடியும் ஏனெனில் சுய ஜாதக வலிமையே ஒருவரின் வாழ்க்கையில் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரத்தை நிர்ணயம் செய்கிறது, ஜாதகர் ஜெனன காலத்தில் ராகு திசை 12வருடம், 7மாதம், 27நாட்கள் இருப்புடன் தனது பூவுலக வாழ்க்கையை துவங்கி இருக்கிறார், ராகு தனது திசையில் 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை நடத்தியது ஜாதகருக்கு நல்ல உடல் ஆரோக்கியம், தெளிவான மனநிலையை வாரி வழங்கி இருக்கிறது இதன் காரணமாக ஜாதகரின் அடிப்படை கல்வி சிறப்பாக அமைந்திருக்கிறது, வளரும் சூழ்நிலையில்  நல்ல நன்மைகளையும் பொருளாதர சிறப்புகளையும் பெற்று வாழ்க்கையில் சுப யோகங்களை அனுபவித்திருக்கின்றார், அதன் பிறகு நடைபெற்ற குரு திசை ஜாதகருக்கு 3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை நடத்தியது ஜாதகரின் முயற்சிகள் யாவும் நல்ல வெற்றியை தந்து இருக்கின்றது, ஜாதகரின் கல்வி முழுமை பெற்று இருக்கின்றது, சிறந்த மேல்நிலை பட்டபடிப்பையும், ஆராய்ச்சி கல்வியையும் யாரும் எதிர்பாரா வண்ணம் சிறப்பாக பெற்று இருப்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

ஜாதகரின் சிறந்த கல்வி தகுதி சிறப்பான சுய தொழில் வாய்ப்பையும் அதன் வழியிலான அபரிவிதமான முன்னேற்றங்களையும் வாரி வழங்கி இருப்பதற்கு, சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றது, மேலும் சரியான வயதில் திருமண வாழ்க்கை அமைந்தது, உடனே நல்ல புத்திர பாக்கியம் பெற்றது, வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு மற்றும் அன்பு ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைத்தது என ஜாதகருக்கு தொடர்ந்து சுபயோக பலாபலன்கள் அனைத்தும் நடைபெற சுய ஜாதக வலிமையே உறுதுணையாக நின்று இருப்பது கண்கூடான உண்மை, மேலும் குரு திசை காலத்திலேயே ஜாதகர் மூன்று விதமான  தொழில் வழியில் இருந்து தன்னிறைவான வருமானங்களை எவ்வித தொய்வும் இன்றி பெற்றதற்க்கும் சுய ஜாதக வலிமையே காரணம் என்றால் அது மிகையில்லை அன்பர்களே !

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 8,10 வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலாபலன்களை குடும்பம் மற்றும் வீர்ய ஸ்தான வழியில் இருந்து சிறப்பாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது, ஜாதகர் மற்றும் ஜாதகரின் முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலனும், பாக்கியத்தின் வலிமையுமே என்றால் அது மிகையில்லை, அடுத்து  வரும் புதன் திசையும் ஜாதகருக்கு 6வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கை தன்னிறைவான சுபயோக வாழ்க்கை என்பதை கட்டியம் கூறுகிறது அன்பர்களே !

எனவே ஒருவரது சுய ஜாதகம் வலிமை பெற்று, நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் அனைத்தும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் முழு அளவில் யோகம் பெற்றவர் ஆகிறார், இவருக்கு ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களும் சுபயோகங்களையே வாரி வழங்கும், கெட்ட நேரம் என்ற ஓர்  விஷயம் ஜாதகரின் நிழலை கூட நெருங்காது, ஆனால் சுய ஜாதகம் வலிமை அற்று நடைபெரும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் உலகின் மிகசிறந்த சாஸ்த்திர வல்லுநர்களை கொண்டு நல்ல நேரம் கணித்து செயல்பட்டாலும் கூட, ஜாதகருக்கு அந்த நேரம் கெட்ட நேரமாகவே அமையும், நல்ல நேரமும் கெட்ட நேரமும் சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே அமைகிறது என்ற  உண்மையை அனைவரும் உணர்வது அவசியமாகிறது என்பதனை " ஜோதிடதீபம் " தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளது.

மேலும் சுப அசுபங்களை நீக்க வேண்டிய ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களும். செவ்வாய், சனி, சூரியன் போன்ற ஹோரைகளும், சந்திராஷ்டமம், அஷ்டம சனி, ஏழரை சனி, பாத சனி, விரைய சனி, போன்றவைகளும், சனி, ராகு, செவ்வாய், சூரியன், கேது போன்ற இன்னல்களை தரும் என்று கருதப்படும் திசா புத்திகளும் சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே கருத்தில்கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதனை அனைவரும் கடைபிடித்தால் எல்லா நேரமும் நமக்கு நல்ல சுபயோக நேரமே, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 4 அக்டோபர், 2017

வெளிநாடு அல்லது வெளியூர் சென்று தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?


 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சுப யோகங்களை வாரி வழங்கும், மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை இழப்பது ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளில் எந்த ஒரு வீடும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட  ஜாதகருக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல என்பதே உண்மை நிலை, சுய ஜாதகத்தில் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் செய்யும் அமைப்பிற்க்கு அந்த காலத்தில் "பரதேஷ ஜீவனம்" என்று அழைத்தனர், இன்று அது மிகவும் பெருமைக்கு உரிய ஒன்றாக கருதப்படுகிறது.

 சுய ஜாதகத்தில் 5ம் வீடு வலிமை இழப்பதும், 7,12ம் வீடுகள் வலிமை பெறுவதும் ஓர் ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் ஜீவன வாழ்க்கையை அமைத்து தரும், 8,11ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்து தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம்  மற்றும் கைநிறைவான தன சேர்க்கையை வாரி வழங்கும், லக்கினம் முதல்  பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை ஜாதகரின் வாழ்க்கையில் எங்கு இருப்பினும் சுபயோகங்களையே நல்கும், கீழ்கண்ட ஜாதகரின் கேள்வியான, வெளிநாடு அல்லது வெளியூர் சென்று தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?  தற்ப்பொழுது வெளியூரில் செய்து வரும் தொழில் இன்னல்களையும் கடன் சுமையையும் ஏற்படுத்தியதற்க்கு காரணம் என்ன ? என்பதற்கு உண்டான பதிலை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : உத்ராடம்

 வெளிநாடு சென்று வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு சுய ஜாதகத்தில் அடிப்படையில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு 7ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வெளிநாடு வெளியூர் கனவை நிராசையாக மாற்றுகிறது, வெளிநாடு சென்று ஜீவனம் தேடும் யோகம் அற்றவர் என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் சுய ஜாதகத்தில் அயன சயன ஸ்தானம் என்று அழைக்கப்படும் 12ம் பாவகம் வலிமை பெறுவது வெளிநாடுகளில் ஜாதகரின் வாழ்க்கை முறையை தெளிவுபடுத்தும், இந்த ஜாதகத்தி மேற்கண்ட அயன சயன ஸ்தானம் வலிமை குறைந்து காணப்படுவது ஜாதகரின் வெளியூர் வெளிநாடுகளில் வாழும் வாழ்க்கையானது மனநிம்மதி அற்றதாகவும், அதிக போராட்டங்களை எதிர்கொள்ளும் தன்மையை கொண்டதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேற்கண்ட விஷயங்களை விட தற்போழுது நடைபெறும் திசை தரும் பலன்கள் என்ன ? என்பதே ஜாதகரின் நிகழ்கால வாழ்க்கையை படம்பிடித்து காட்டும்.

ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள திசை ராகு திசை தரும் பலாபலன்கள் : ( 12/04/2006 முதல் 12/04/2024 வரை )

ராகு தனது திசையில் ஜாதகருக்கு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படும் 6ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சத்ரு ஸ்தான வழியில் விரையங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது, இதனால் ஜாதகர் கடன்பட்டு செய்த தொழில்கள் யாவும் கடும் நஷ்டத்தை தந்தது, ஜாதகருக்கு அதிக அளவிலான கடன் சுமை ஜாதகரின் மனநிம்மதியை வெகுவாக பாதித்தது, இதனால் ஜாதகரின் மன நிம்மதி கெட்டு தெளிவற்ற செயல்பாடுகள் மூலம் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திக்கொண்டார், பொதுவாக சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் மற்றும் பாக்கியம் எனும் 9ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லாமல் தான் அமர்ந்த இடத்தில் ( பூர்வீகம் ) இருந்துகொண்டே சகல சௌபாக்கியங்களையும் தன்னை தேடிவர செய்யலாம், பூர்வீகம் பாதிப்பு அடைந்து இருந்தால் மட்டுமே ஜாதகர் வெளியூர் வெளிநாடு ( பரதேசஜீவனம் ) சென்று ஜீவனம் தேடலாம், அதுவும் சுய ஜாதகத்தில் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாவகங்கள் வலிமை பெற்று, நடைமுறையில் உள்ள திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், மாறாக குறிப்பிடப்பட்டுள்ள பாவகங்கள் வலிமை அற்று இருப்பின் தனது பூர்வீகத்திற்கு அருகிலேயே ஜீவன வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சாலசிறந்தது.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டு பலனை, விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று தருவது, ஜாதகரின் வாழ்க்கையில் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகளை தருகின்றது மேலும் ஜாதகரின் 6ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாக அமைவது ஜாதகரின் வருமானம் சார்ந்த விஷயங்களை கேள்விக்குறியாக மாற்றுகிறது, ஜாதகருக்கு வரும் வருமானம் வீண் விரையம் ஆகிறது, ஜாதகரின் பேச்சு மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாக்குகிறது, 12ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக அமைவது வெளிநாடு வெளியூர் சென்று ஜீவிப்பது ஜாதகருக்கு மிக பெரிய இழப்புகளையும், அறிவு சார்ந்த முயற்சிகளில் தோல்வி மற்றும் மனநிம்மதி இழப்பையும் வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை அற்றும், நடைபெறும் ராகு திசை வலிமை  அற்ற பாவக பலனையும் ஏற்று நடத்துவதே ஜாதகரின் வெளியூர் சார்ந்த தொழில் வழியில் இருந்து கடுமையான தோல்வியை தந்து இருக்கின்றது, மேலும் ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் தேடி நலம் பெறுவதற்க்கு உண்டான வாய்ப்புகள் சிறிதும் இல்லை என்பதே மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை, அடுத்து வரும் குரு திசையும் ஜாதகருக்க சாதகமின்றி இருப்பது ஜாதகரின் வெளியூர் வெளிநாடு கனவுகளை வெகுவாக சிதைக்கும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுவதே ஜாதகருக்கு உகந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

திருமண பொருத்தம் நிர்ணயம் : சுய ஜாதகத்தில் கிரகங்களின் அமர்வு முக்கியமா ? சுய ஜாதகத்தில் 12 பாவக வலிமை முக்கியமா ?


பொதுவாக திருமண பொருத்தம் காணும் பொழுது வரன் வது இருவரது சுய ஜாதகத்திலும் கிரகங்கள் அமர்ந்த நிலையை வைத்தும், நட்சத்திர பொருத்தங்களை வைத்தும், நடைபெறும் திசை மற்றும் புத்திகள் சுப கிரக திசாபுத்திகளா? என்பதை கருத்தில் கொண்டும், கிரக தோஷம், ராகுகேது தோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் என வகைக்கு ஓர் தோஷங்களை சொல்லியும், ஏக திசை, திசா சந்திப்பு எனும் நடைமுறைக்கு சற்றும் ஒத்துவராத காரணங்களை சொல்லி, பொருத்தம் உள்ள ஜாதகங்களை பொருத்தமற்றது என்றும், பொருத்தம் அற்ற ஜாதகங்களை பொருத்தம் உள்ளது என்றும் பலரது இல்லற வாழ்க்கையை பாதிப்பிற்கு ஆளாக்கி, தனது வினைபதிவையும் அதிகரித்து கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு சில உண்மைகளை கூற " ஜோதிடதீபம் " கடமை பட்டுள்ளது, அதாவது சுய ஜாதக வலிமை என்பாது இரட்டை குழந்தையாக பிறந்த 30 வினாடிகள் வித்தியாசம் மட்டுமே கொண்டுள்ளவர்களுக்கும் பாவக வலிமையில் வெகு மாற்றங்களை தரும் எனும் பொழுது சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையை கருத்தில் கொண்டு பலன் நிர்ணயம் செய்வது என்பது முற்றிலும் சுய ஜாதக வலிமை நிலைக்கு புறம்பானது.

நட்ச்சத்திர பொருத்தம் :

திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வதில் இதுவரை அனைவராலும் கடைபிடிக்கும் முறை இது, உண்மையில் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை அற்று இருப்பின் மேற்கண்ட நட்ச்சத்திர பொருத்தம் என்பது 10க்கு 10 இருப்பினும் திருமண வாழ்க்கை சிறப்பிக்காது, குறிப்பாக ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் திருமணம் செய்ய கூடாது என்று சொல்லும் வாதம் என்பது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை நிலையை பற்றி சிறிதும் அறிந்திராமல் சொல்லப்படும் ஓர் குருட்டு தனமான அணுகுமுறையே என்றால் அது மிகையில்லை, ரஜ்ஜு பொருத்தம் அற்று திருமணம் செய்ய அன்பர்கள் பல பேர் வாழ்க்கையில் தாம்பத்திய வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருப்பதை உதாரண ஜாதகம் கொண்டும் விளக்கம் தரமுடியும், மேலும் சுய தம்பதியர் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பின் இந்த ரஜ்ஜு பொருத்தம் எந்த விதத்திலும் திருமண வாழ்க்கை நிச்சயம் பாதிக்காது, நட்ஷத்திர பொறுத்த நிர்ணயம் என்பது சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பின், நட்ச்சத்திர பொருத்தத்தை கருத்தில் கொள்ளாமல் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யலாம், மேலும் சுய ஜாதகம் இல்லாமல் வெறும் பெயரை மற்றும் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் நட்ஷத்திரம் கண்டு பொருத்தம் நிர்ணயம் செய்த தலைமுறைக்கு வேண்டுமானால் இது பொருந்தும், பிறந்த தேதி, நேரம், இடம் ஆகிவற்றை கையில் வைத்திற்குக்கும் அன்பர்களுக்கு நட்ச்சத்திர பொருத்தம் என்பது தேவையற்றது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையும், நடைபெரும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை நிலையும் தெளிவாக தெரிந்தால் போதும்.

கிரகங்கள் அமர்வு நிலை :

கிரகங்கள் சுய ஜாதகத்தில் அமர்வதை வைத்து பொருத்தம் நிர்ணயம் செய்வது, அதாவது பெண்கள் ஜாதகத்தில் 8ல் சனி, செவ்வாய், ராகு அமர்வது விதவை தோஷம் என்று சொல்வது கேலி கூத்து, பெண்களின் சுய ஜாதகத்தில் 8ம் பாவக வலிமை நிலையை சிறிதும் உணராமல் கூறப்படும் உளறல் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை, பெண்களின் ஜாதகத்தில் 8ல் சனி, செவ்வாய், ராகு அமர்ந்து இருந்தாலும், 8ம் பாவகம் சுய ஜாதக அமைப்பின்படி வலிமை பெற்று இருப்பின் விதவை தோஷத்தை ஏற்படுத்தாது, மாறாக தனது கணவன் வழியில் இருந்து ஜாதகி பெரும் பொருளாதார வசதி வாய்ப்பை குறிக்கும், சுக போகங்களை குறிக்கும், தம்பதியரின் உடல் ஆரோக்கியத்தை குறிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் இணைவதன் மூலம் தம்பதியர் பெரும் அதிர்ஷ்டத்தை குறிக்கும், ஆக ஜாதகத்தில் 8ல் சனி, செவ்வாய், ராகு அமர்வது விதவை தோஷம் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான கருத்து, அவர்களுக்கு சுய ஜாதக பாவக வலிமை பற்றிய தெளிவு சிறிதும் இல்லை என்பதே உண்மை நிலை, மேலும் பெண்கள் ஜாதகத்தில் 7ல் சூரியன் சனி இருப்பது தோஷம் என்பதும் களத்திரம் மற்றும் குடும்ப ஸ்தானங்களில் கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டும், லக்கினம் முதல் 12 பாவகங்களில் கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டும் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகு முறை, லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொள்வதே சாலச்சிறந்தது.

 அதை போன்றே ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையை கருத்தில் கொண்டு திருமணம் செய்வது என்பதும் தவறான அணுகுமுறை, ஆண் பெண் ஜாதகங்களின்  திருமண பொருத்தம் காணும் பொழுது கீழ்கண்ட பாவக வலிமைக்கும், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமைக்கும் முக்கியத்துவம் தந்து பொருத்தம் நிர்ணயம் செய்வதே சரியான அணுகுமுறை, வரன் வது ஜாதகத்தில் 1,2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பிக்கும், அதே போன்று நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது தாம்பத்திய வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து தரும்.

ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், ரஜ்ஜு பொருத்தம், காலசர்ப்ப தோஷம், சனி தோஷம், ஏழரை சனி தோஷம், களத்திர தோஷம் என்ற மூட நம்பிக்கையில் கவனம் செலுத்தாமல், வரன் வது ஜாதகத்தில் பாவக வலிமைக்கும், நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகளுக்கும் முக்கியத்துவம் தந்து பொருத்தம் நிர்ணயம் செய்வதே சரியான அணுகு முறை அன்பர்களே ! சுய ஜாதக  வலிமையை பற்றியும், அதன் அடிப்படையில் பொருத்தம் நிர்ணயம் செய்வது பற்றியும் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கன்னி
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 3ம் பாதம்

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று இருப்பதும், 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையில் தடை தாமதங்களையும், நல்ல இல்லற வாழ்க்கையை அமையாத நிலையையும் கட்டியம் கூறுகிறது, மேலும் நடைபெறும் குரு திசை 11ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதக ஸ்தான பலாபலன்களை முழு வீச்சில் தந்து கொண்டு இருப்பது ஜாதகியின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிக்கொண்டு இருப்பது வருத்தத்திற்க்கு உரிய விஷயமாகும்.

 எனவே சுய  ஜாதகத்தில் ஜாதகிக்கு திருமண வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை அற்று இருப்பதும், நடைபெறும் திசா புத்தி வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் திருமணம் சார்ந்த தடைகளையும் இன்னல்களையும் வழங்கிகொண்டு இருக்கின்றது,எனவே இந்த ஜாதகிக்கு சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர்  ஜாதகரை திருமணம் செய்து வைத்தால் மட்டுமே இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும், மாறாக இதை போன்றே வலிமை அற்ற ஜாதகரை நட்ச்சத்திர பொருத்தம் மற்றும் இதர பல தோஷ பொருத்தங்கள் உள்ளது என்று  இல்லற வாழ்க்கையில் இணைத்தால் சில மாதங்களிலேயே திருமண வாழ்க்கை கசந்து, வெகு விரைவில் பிரிவினையை தந்து விடும்.

குறிப்பு :

 திருமண பொருத்தம் காணும்பொழுது வரன் வது  ஜாதகத்தில் பாவக வலிமைக்கும் முக்கியத்துவம் தந்து பொருத்தம் நிர்ணயம் செய்வதே தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றிகரமான முன்னேற்றங்களையும், சந்தோஷமான இல்லற வாழ்க்கையையும் தரும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது என்பதை பதிவு செய்ய "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 21 செப்டம்பர், 2017

ராகு திசை தரும் பலனும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பும் !



 ஒருவரின் வாழ்க்கையில் அதிக அளவிலான இன்னல்களையும் துன்பங்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாரி வழங்கும் வல்லமை பாதக ஸ்தானத்திற்கு உண்டு, ஒருவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசை எந்த கிரகத்தின் திசை என்றாலும் சரி எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்த கூடாது, அப்படி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற முதுமொழிக்கு பொருத்தமான பலாபலன்களை தர ஆரம்பித்துவிடும், ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் பெரும் பின்னடைவையும், படுதோல்விகளையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் சுப யோகங்கள் இருப்பினும் அவையாவும் பாதக ஸ்தான பலன் நடைமுறையில் உள்ள பொழுது சுபயோக பலன்கள் அனைத்தையும் தடை செய்யும், வாழ்க்கையில் ஜாதகரின் ஆசை, கனவுகள் யாவும் கானல் நீராக போக அதிக வாய்ப்பு உள்ளது, மேலும் ஜாதகர் பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர் என்ற போதிலும், குடத்தில் இட்ட விளக்கு போல், பிரகாசம் குறைந்து பலனேதும் அற்ற வாழ்க்கையை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டிவரும், பாதக ஸ்தானம் தரும் பலாபலன்கள் பற்றி ஓர் சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மேஷம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம் 

 நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் : ( 10/12/2003 முதல் 10/12/2021 வரை )

 ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை 2ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலாபலன்களை வழங்கி கொண்டு இருப்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிப்பை வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ரிஷப ராசியில் பாதியும், மிதுன ராசியில் பாதியும் வியாபித்து நின்று பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, ஜாதகரின் குடும்ப வாழ்க்கை சார்ந்த இன்னல்களையும், வருமானம் சார்ந்த இன்னல்களையும் கடுமையாக தருவதுடன், எடுக்கும் முயற்சிகள் யாவும் ஜாதகருக்கு பெரிய அளவிலான தொடர் தோல்விகளை வாரி வழங்கி கொண்டு இருப்பது, ஜாதகருக்கு மனம் உடல் சார்ந்த தொந்தரவுகளையும், மனசோர்வையும் தந்து கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் வருமானம் முழுவதும் மற்றவர்களுக்கே சென்றுகொண்டு இருக்கின்றது, ஜாதகரின் உழைப்பும், அறிவு திறனும் வீண் விரயமாகிறது, எந்த ஓர் விதத்திலும் ஜாதகர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க இயலாமல் தனது வாழ்க்கையை தானே போராட்ட நிலைக்கு ஆர்படுத்தி இருப்பது பாதக ஸ்தான வலிமையின் தாக்கத்தை காட்டுகிறது.

ஜாதகருக்கு கடந்த 15 வருடங்களாக ராகு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது என்பது சொல்ல இயலாத துன்பங்களையும் துயரங்களையும், எதிர்பாராத நஷ்டங்களையும், திடீர் இழப்புகளையும், மருத்துவ செலவினங்களையும் பாரபட்சம் பார்க்காமல் வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் மிக பெரிய தோல்விகளையும், நஷ்டங்களையும் மட்டுமே இதுவரை வழங்கி உள்ளது, ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கும்பம் மற்றும் மீனா ராசியில் வியாபித்து நிற்பது ஜாதகரின் அதிர்ஷ்டமின்மையும், தன்னம்பிக்கை குலையும் விதமான நிகழ்வுகளையும் இதுவரை தந்துகொண்டு இருப்பது, ஜாதகரை  மனவிரக்கத்தியின் உச்சத்துக்கே அழைத்து சென்று கொண்டு இருக்கின்றது, ஒவ்வொரு நாளும் ஜாதகர், பொருளாதார நெருக்கடிகளை கடுமையாக அனுபவித்து கொண்டு இருப்பதும், வெளியில் சொல்ல இயலாத துன்பங்களை அனுபவித்து கொண்டு இருப்பதும் சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஏற்று நடத்தும் பாதக ஸ்தான பலாபலன்கள் என்றால் அது மிகையில்லை, எனவே ஒருவர் சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று  நடத்தினால் ஜாதகர் படும் பாடு சொல்ல இயலாத துன்பங்களை தரும் என்பதற்கு மேற்கண்ட  ஜாதகமே நல்ல உதாரணம்.

இருப்பினும் ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி, அதற்க்கு அடுத்து வரும் சூரியன் புத்தி இரண்டும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை முறையே ஜீவனம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு பாதக ஸ்தான இன்னல்களுக்கு இடையே சிறிதளவு நன்மைகளை தரும், அதற்க்கு பிறகு வரும் சந்திரன் மற்றும் செவ்வாய் புத்திகள் ஜாதகருக்கு சாதகமாக இல்லை என்பது மிகுந்த இன்னல்களை ஏற்படுத்தும், ராகு திசைக்கு பிறகு வரும் குரு திசை ஜாதகருக்கு 3,8,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலன்களை தருவது ஜாதகருக்கு பாதக ஸ்தான இன்னல்களில் இருந்து விடுதலையை தரும்.

சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை  பெற்று இருப்பது ஜாதகரின் சொந்த புத்தியை குறிக்கும் மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகரின் சொந்த புத்தியில் செய்யும் காரியங்கள் யாவும் வீண் விரயத்தையும் பெரும் நஷ்டங்களையும் தரும், சுய ஜாதகத்தில் 9ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு பெரியோர் வழங்கும் சொல்புத்தியை குறிக்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 9ம் வீடு பாக்கிய ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெறுவதால் ஜாதகர் பெரியோர், நல்ல நண்பர்கள் மாற்றும் ஆன்மீக குரு மார்கள் வழங்கும் அறிவுரையை ஏற்று நடந்து வாழ்க்கையில் சுப யோகங்களை அனுபவிக்கலாம், எதிர்வரும் குரு திசையும் அதையே " கட்டியம் " கூறுகிறது என்பது ஜாதகருக்கு இறைஅருள் வழங்கும் நல்ல வாய்ப்பாகவும், ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை அன்பர்களே !

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை  ஏற்று நடத்தும் பாவக பலன் என்ன? என்பதில் தெளிவு இல்லாத பொழுது, ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் கண்ணை கட்டிக்கொண்டு வழிதேடுவதற்கு இணையான பலாபலன்களை  வழங்கி விடும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்வது நலம் தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

மஹா காவேரி புஷ்கர விழா சிறப்புகள்

 

 எது " பாவத்தை " போக்குகிறதோ அது தீர்த்தமாகும்,  " நீரின்றி அமையாது உலகு " என்ற வாக்கிற்கு இணங்க  நமது இந்து தர்மத்தில் பஞ்ச பூதங்களை அடிப்படையாக கொண்டே இறை வழிபாடு யாவும் ஆன்மீக பெரியோர்கள், வேத விர்ப்பனர்கள் மற்றும் முன்னோர்களின் வழிகாட்டுதல்களின் படி மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கின்றது, பஞ்ச பூதங்களில் " அப்பு " என்று அழைக்கப்படும் நீர் புனித நீராக பிரகஸ்பதி எனும் குரு பகவானின் அருளாசியால் தற்பொழுது காவிரி நதியில் ஜீவகலப்பு பெற்று, மண்ணில் வாழும் மாந்தர்கள் அனைவரது கர்ம வினை பதிவினை கழித்துகொள்ள நல்லதோர் வாய்ப்பினை நம் அனைவருக்கும் காவிரி தாய்  உருவில் இறைஅருள் வழங்கி உள்ளது, இதை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு சாஸ்திர விதிகளுக்கு உற்ப்பட்டு ஸ்நானம் செய்து சகல சௌபாக்கியங்களையும், பெற இறை அருள் கருணை புரிய " ஜோதிடதீபம் " பிராத்தனை செய்கிறது.

 புஷ்கரம் என்பவர் ஈரேழு புவனங்களிலும் உள்ள மூனரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியாவர், இவர் பிரம் தேவரிடம் ஜீவித்து இருந்தார், இவரை பிரகஸ்பதி என்று தேவர் முனிவர்களால் போற்றபடும் முழு முதற் சுப கிரகமான குரு பகவான் தனக்கு உரிதாக்கிகொள்ள பிரம்ம தேவரிடம் யாசிக்க, அதன்படி குரு எந்த ராசியில் சஞ்சாரம் செய்கின்றாரோ, அந்த ராசிக்கு உரிய புனித ஜீவநதியில் புஷ்கரம் வாசம் செய்ய சுவீகரிக்கபட்டார், இந்த வகையில் " பிரகஸ்பதி " துலாம் ராசியில் பிரவேசிக்கும் பொது " ஸ்ரீ காவேரி புஷ்கரமாகும் " தற்பொழுது நிகழ்வில் உள்ள புஷ்கரமானது 144 வருடத்திற்கு ஒரு முறை நிகழும் " ஸ்ரீ மஹா காவேரி புஷ்கரமாகும் " இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தீர்த்தமாடுதல் நமது சகல பாவங்களையும், தீவினைகளை போக்கும் வல்லமை பெற்றது.

 மேலும் நமது பூர்வ ஜென்ம பாவங்கள் யாவும் நீங்கும், அனைத்து தோஷங்களும் விலகி யோகபலன்கள் நடைமுறைக்கு வரும், பலவித சாப, கோப, பாதக தோஷங்கள் விலகும், மன குழப்பங்கள் அகன்று தெளிவான சிந்தனை உண்டாகும், திருமண வாழ்க்கை எண்ணியபடி நடைபெறும், சந்தான பாக்கியம் உண்டாகும், தொழில் வியாபரம் மற்றும் விவசாயம் செழிக்கும், ஞானம், தெளிவு, கல்வி கேள்விகளில் தேர்ச்சி உண்டாகும், குருபகவானின் அருட்கடாட்சம் உண்டாகும், சுய ஜாதகத்தில் உள்ள பஞ்சமாக தோஷங்கள் நீங்கி சுபத்துவம் உண்டாகும், நீர் வளம் பெருகி பஞ்சம் நீங்கும், மழை உண்டாகி பூவுலகம் செழிக்கும், அஷ்ட ஐஸ்வர்யம் உண்டாகும், லட்சுமி குபேர திருவருள் கிட்டும், நமது விருப்பங்கள் யாவும் பூர்த்தியாகும்.

மஹா காவேரி புஷ்கர விழா சிறப்புகள் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர பாவகமாக இறை அருள் நிர்ணயம் செய்த துலாம் ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யும் புண்ய காலத்தில் ஏற்ப்படும் " மஹா காவேரி புஷ்கரம் " என்பது துலாம் ராசி மற்றும் துலாம் லக்கினம் கொண்ட அன்பர்கள் ஸ்நானம் செய்யும் பொழுது, வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும் மேலும் கும்பம்,மேஷம், மிதுன ராசி மற்றும்  இலக்கின அன்பர்கள் ஸ்நானம் செய்யும் பொழுது வாழ்க்கையில் சுபயோக நிகழ்வுகள் எதிர்பாரா வண்ணம் நிகழும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் குரு பகவானால் பாதிக்கப்பட்ட பாவகங்கள் ஏதாவது இருப்பின் அது சார்ந்த இன்னல்கள் யாவும் முழுமையாக தீரும், என்பது சிறப்பு விஷயம் ஆகும்.

மஹா காவேரி புஷ்கர விழா நடைபெறும் தேதி,நேரம் மற்றும் இடம் விபரம் :

பிராப்தம் உள்ளோர் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் பெறுங்கள்


குறிப்பு :

மேலே உள்ள அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெற்றுகொள்ளவும்,.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 16 செப்டம்பர், 2017

தொழில் ஸ்தானம் தரும் யோக வாழ்க்கை : கூட்டு தொழில் செய்வது சரியானதா ? சுய தொழில் செய்வது சரியானதா ?


" அவனின்றி ஓர் அணுவும் அசையாது, அனைத்து இயக்கங்களுக்கும் காரணம் இறைவன் ” என்பதற்க்கு இணங்க சுய ஜாதகத்தில் " லக்கினம் " எனும் முதல் பாவகம் ஓர் ஜாதகரை இயக்குவதில் முன்னுரிமை பெறுகிறது, லக்கினம் என்பது அவரவர் பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிய காரணிகளால் நிர்ணயம் செய்படுகிறது, லக்கினத்தில் அடிப்படையாக கொண்டு 12பாவகங்களின் வலிமை நிலையும் சுய ஜாதகத்தில் நிர்ணயிக்கபடுகிறது என்றால் அது மிகையில்லை அன்பர்களே ! இதில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவகம் நான்காவது கேந்திரமாகவும், ஜாதகரின் ஜீவன வாழ்க்கையை பற்றியும் தெளிவுபடுத்துகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெற்று கேந்திரம் மற்றும் கோண பாவகங்களுடன் தொடர்பு பெற்றோ, வீரியம் மற்றும் லாப ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் ஜீவன வாழ்க்கை என்பது அபரிவிதமான முன்னேற்றங்களுடன், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை பெற்று இந்த புவியில் சுயமரியாதை,கௌரவம் மற்றும் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கையை தனது வாழ்நாளில் சுவீகாரம் செய்யும் வல்லமை பெற்றவர் என்பது உறுதியாகும்.

 மாறாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10 வீடு, மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெற்றோ, தனது லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருப்பின் ஜாதகரின் ஜீவன வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், ஜாதகருக்கு தனது ஜீவனத்தை கௌரவமாக நடத்த வாய்ப்பு இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கும், ஜீவன ரீதியாக ஜாதகர் வெறும் திட்டமிடுதல்களை மட்டுமே செய்ய இயலும் நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது குதிரை கொம்பாக இருக்கும், குறிப்பாக ஜாதகரின் 10ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கும், மேலும் கௌரவ குறைவான வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், ஜாதகர் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்விகளை வாரி வழங்கும், ஜாதகரின் நம்பிக்கையும், செயல்திறனும் முற்றிலும் பாதிக்கப்பட்டு, போராட்டம் ஒன்றே வாழ்க்கையாக மாறிவிட வாய்ப்பு உண்டு, ஜாதகரின் அறிவுரையை ஏற்கும் அனைவரும் வெற்றிமேல் வெற்றி பெறுவார், ஆனால் ஜாதகருக்கோ தோல்வி ஒன்றே பரிசாக கிடைக்கும், இதை தவிர்க்க ஜாதகர் தனது சுய ஜாதகத்தில் உள்ள மற்ற பாவகங்களின் வலிமை பயன்படுத்தி நலம்பெறலாம், இதற்க்கு தனது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை பற்றி தெளிவு பெற்று இருப்பதும், நடைபெறும் திசா புத்திகள் மற்றும் எதிவரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை பற்றி தெளிவு பெற்று இருப்பதும் அவசியமாகிறது.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று நடைமுறையில் உள்ள திசா புத்தியும், எதிர்வரும் திசாபுத்தியும் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் ஜீவன வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், செய்யும் தொழில் மற்றும் பணியில் தன்னிறைவான முன்னேற்றங்களை பெற்றும் ஜீவன ரீதியாக யோக வாழ்க்கையை பெறுவார் என்பது உறுதி, கிழ்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன பாவக வலிமை, கூட்டு தொழில் யோகம் மற்றும் தற்பொழுது நடைபெறும் திசை தரும் பலன்கள், எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றிய விரிவான விளக்கத்தை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : துலாம்
ராசி : கும்பம்
நட்சத்திரம் : அவிட்டம் 4ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் வீடுகள், தொடர்பு படுத்தும் பாவகம் பற்றி பார்ப்போம் அன்பர்களே 4,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மிகுந்த வலிமையுடன் இருப்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு சுக ஸ்தானம் எனும் 4ம் வீடாக அமைவது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், இதானால்  ஜாதகரின் ஜீவன வலிமை மேலும் மெருகேறி அதி அற்ப்புதமான ஜீவன முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஜாதகருக்கு 4,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மாத்ரு ஸ்தான வழியில் இருந்து நல்ல சுக போகங்களை தான் செய்யும் தொழில் வழியில் இருந்து ஜாதகர் பெறுவார், மண் மனை, வண்டி வாகனம் சார்ந்த தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தரும், தனது தாயார் வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கையையும், நிதி உதவிகளையும் பெரும் யோகம் பெற்றவர், போக்குவரத்து தொழில் வண்டிவாகனம் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சியை தரும், சரக்கு உந்து, போருந்து, சொகுசு வாகனங்கள் மூலம் வாழ்க்கையில் ஜாதகருக்கு நல்ல வருமானமும், முன்னேற்றமும் உண்டாகும்.

ஆயுள் ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு மருத்துவ துறை, அல்லது மருந்து பொருட்கள், ஆயுள் காப்பீடு, இன்சூரன்சு, மருத்துவ உபகரணம் சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகரின் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார உதவிகள் ஜாதகரை மதிப்பு மிக்க தொழில் அதிபர் என்ற நிலைக்கு குறுகியகாலத்தில் உயர்த்தும், தனது திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி என்பது ஜாதகரே நினைத்து பார்க்காத வண்ணம் அமையும் என்பது சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை, மேலும் ஜாதகரின் ஆயுள் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளையும், வாழ்க்கை துணை வழியிலான தன சேர்க்கையையும் எதிர்பாராத நேரங்களில், திடீர் அதிர்ஷ்டமாக வாரி வழங்கும், தனம் சார்ந்த தொழில்களில் குறிப்பாக நிதி நிறுவனம், வட்டி தொழில், வாக்கு வன்மையின் மூலம் பெரும் வாருமானம் என ஜாதகரின் ஜீவன வாழ்க்கைக்கு மேலும் மேலும் மெருகேற்றும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அமசமாகும்.

பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகர் பேராசிரியர், கல்வி துறை சார்ந்த தொழில்களில் மிகப்பெரிய வருமான வாய்ப்புகளை தரும், கல்வி கூடங்கள் நடத்துவது, கல்வி பணி சார்ந்த தொழில்களில் ஈடுபடுவது மூலம் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவது மூலம் மிகப்பெரிய வெற்றிகளை பெறலாம், அல்லது தனது முன்னோர்கள் செய்து வந்த பாரம்பரிய தொழில்களில் நல்ல வெற்றி வாய்ப்புகளை பெறலாம், அறிவு சார்ந்த தொழில்கள், ஆன்மீக தொழில் போன்றவற்றில் சிறப்புகளை தரும்

ஜீவன ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியிலான பலாபலன்களை முழு அளவில் பெறுவதற்கு தகுதி உள்ளவர் என்பது உறுதியாகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தான அதிபதி புதன் என்பதால் ( உயர் கணித ஜோதிட விதிபடி ) ஜாதகரின் மன ஆற்றலும் அறிவு திறனும் ஒருங்கே இணைந்து செயல்படும், இதனால் ஜாதகரின் மனதில் எண்ணிய காரியங்கள் மற்றும் தொழில் முன்னேற்றங்களை வெற்றிகரமாக தனது அறிவு திறன் கொண்டு தொடர்ந்து பெற்ற வண்ணமே இருப்பார் என்பது மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் தொழில் வன்மையும், தெளிவான திட்டமிடுதல்களும் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளையும், கை நிறைவான வருமானங்களையும் வாரி வழங்கிய வண்ணமே இருக்கும், ஜாதகர் கை தேர்ந்த வியாபாரியாகவும், திறமை மிக்க தொழில் அதிபராகவும் பரிணமிக்க சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தான வலிமை நூறு சதவிகிதம் உதவி புரியும், ஜீவன ஸ்தானம் சர ராசியில் வலிமை பெற்று இருப்பது  குறுகியகாலத்தில் "கோடிஸ்வர " யோகத்தை நல்கும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சர நீர் தத்துவ ராசியில் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் செய் தொழிலில் தன்னிறைவான முன்னேற்றங்களை தொடர்ந்து பெறுபவர் என்பதுடன், அழிவு நிலை பொருட்களான உணவு பொருட்கள், தானியம், எண்ணை பொருட்கள், துணி மற்றும் நீர் தத்துவம் சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வளர்ச்சியை பெறுபவர் என்பதை உறுதி செய்கிறது.

மேற்கண்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமையுடன் இருப்பதும், ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகர் சுப யோகங்களை தடையின்றி பெறுவார் என்பதும் தெளிவாகிறது, அடுத்து தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு தரும் பலன்களை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், குரு திசை ஜாதகருக்கு 7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் 200% விகித இன்னல்களை நடத்தி கொண்டு இருப்பது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தும், அதனால் உண்டாகும் யோக வாழ்க்கை பெற இயலாத சூழ்நிலையை உருவாக்கும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றநிலையை தருவது வருத்தத்திற்கு உரிய ஒன்றாக் கருத வேண்டியுள்ளது, அடுத்து வரும் சனி திசை ஜாதகருக்கு 9ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது தொழில் ரீதியான யோக பலன்களை அனுபவிக்கும் யோக அமைப்பை தரும், குரு திசை ஜாதகருக்கு சிறப்பை தரவில்லை என்பதே உண்மை நிலை, நடப்பது குரு திசை தானே, நன்மையை செய்யும் என்று கருதி ஜாதகர் செயல்பட்டால், அனைத்தையும் பாதக ஸ்தான வழியில் இழந்து இன்னலுற நேரும் என்பதை கருத்தில் கொள்வது ஜாதகருக்கு நன்மையை தரும், ஏனெனில் நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கின்றது.

ஜாதகர் கூட்டு தொழில் செய்யலாமா ?

சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலேயே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு ஆகும், இது ஜாதகரின் வாழ்க்கையில் 7,11ம் பாவக வழியில் இருந்து அளவில்லா இன்னல்களை தரும், குறிப்பாக கூட்டாளி, நண்பர்கள், வெளிவட்டாரம்  சார்ந்த விஷயங்களில் இருந்து ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், கூட்டு தொழில் செய்ய சுய ஜாதகத்தில் 7ம் வீடு மிக மிக வலிமையுடன் இருப்பதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் வலிமை பெற்று இருப்பதும் அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய தோல்விகளையும், நஷ்டங்களையும் ஏற்ப்படுத்தும், எதிர்பால் இன சேர்க்கை மூலம் ஜாதகர் தனது ஜீவன முன்னேற்றத்திற்கு தானே தடைகளை ஏற்ப்படுத்திகொண்டு இன்னளுருவார் என்பது உறுதியாக தெரிவதால், தயவு செய்து கூட்டு தொழில் செய்வதை தவிர்ப்பதே சால சிறந்தது, பொருளாதர கஷ்டத்தில் இருந்து ஜாதகர் தப்பிக்க இயலும் என்பதே சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் 7ம் வீடு வலிமை அற்று இருப்பது ( பாதக ஸ்தான தொடர்பு ) ஜாதகர் கூட்டு தொழில் செய்ய அருகதை அற்றவர் என்பதை உறுதிபடுத்துகிறது, மேலும் நடைபெறும் குரு திசை சாதகம் இன்றி இருப்பது ஜாதகர் ஏதாவது ஓர் பணியில் ஈடுபடுவதே நன்மைகளை தரும், எதிர்வரும் சனி திசையில் சுய தொழில் சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறலாம், "வாழ்த்துகள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


வியாழன், 14 செப்டம்பர், 2017

கணவன் மனைவி பிரிவுக்கு காரணமாக அமையும் பாதக ஸ்தானம் !

 

ஒருவரது வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களை தருவது, பாதக ஸ்தானம் தொடர்பும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளுமே என்றால் அது மிகையில், எந்த ஓர் ஜாதகருக்கும் லக்கினம் முதல் 12 பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது என்பது அவ்வளவு நல்லதல்ல, குறிப்பாக சுய ஜாதகத்தில் 1,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் நடைபெறும் சுப நிகழ்வுகள் அனைத்திற்கும் கடுமையான தடைகளையும் தாமதங்களும் வாரி வழங்கிவிடும், ஜாதகருக்கு தாங்க இயலாத துன்பங்களை 200% விகிதம் தந்துவிட வாய்ப்புள்ளது, குறிப்பாக நடைபெறும் அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் கதி அதோகதிதான், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

இல்லற வாழ்க்கையில் சந்தோஷத்தையும், மன மகிழ்வுடன் கூடிய யோக வாழ்க்கையை வாரி வழங்குவது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையும், நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் வலிமை பெற்ற பாவக பலனுமே என்றால் அது மிகையில், கீழ்கண்ட ஜாதகருக்கு தனது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை பற்றி புரிதலும், தனக்கு தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் தரும் பலாபலன்கள் பற்றிய தெளிவு இல்லாமல், தனது வாழ்க்கைக்கு தானே இன்னல்களை ஏற்படுத்திக்கொண்டு இருப்பது கவலைதரும் விஷயமே, அடிப்படையில் தனது ஜாதகம் பாதிப்பை தருகிறதா? அல்லது தனது வாழ்க்கை துணையின் ஜாதகம் பாதிப்பை தருகிறதா? என்பதை உணராமல், தனது வாழ்க்கை துணையே நடைபெறும் அனைத்து இன்னல்களுக்கும் காரணம் என்று குற்றம் சுமத்தும் மனப்பான்மையுடன் தனது இனிமையான இல்லற வாழ்க்கையை தானே பாதிப்பிற்கு ஆளாக்கி கொள்ளும் நிலையை பார்க்கும் பொழுது ஒருவேளை "விதி" வலியதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது.

சுய புத்தியுடன் ஒருவர் செயல்பட சுய ஜாதகத்தில் 1,5ம் பாவகம் மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, அல்லது பெரியவர்கள் சொல் புத்தியுடன் செயல்பட்டு வாழ்க்கையில் நலம் பெறுவதற்கு 1,9ம் பாவகம் மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடந்துகொள்ள வேண்டிய நிலையை தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை வழங்குவதை ஜாதகர் அவசியம் புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், ஏனெனில் தற்போழுது  நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தரும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், ஜாதகரின் வீண் பிடிவாதமும், அனுசரித்து செல்லும் மனப்பக்குவம் இல்லாதது ஜாதகரின் இல்லற வாழ்க்கையை சூன்யம் என்ற நிலைக்கு எடுத்து சென்றுவிட வாய்ப்பு அதிகம் உள்ளது, நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு ஜாதகமான பலனை ஏற்று நடத்தவில்லை என்பதே உண்மை நிலை.


லக்கினம் : கும்பம் 
ராசி : விருச்சிகம் 
நட்ஷத்திரம் : கேட்டை 2ம் பாதம் 

ஜாதகருக்கு தற்போழுது சந்திரன் திசை நடைபெறுகிறது ( 17/03/2016 முதல் 17/03/2026 வரை ) நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு 6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 6,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் 6ம் பாவக  வழியில் இருந்து தனது உடல் நிலையை தானே கெடுத்துக்கொள்ளுதல், தனது உறவினர் அனைவரிடமும் பகைமை பாராட்டுதல் ( தனது வாழ்க்கை துணை மற்றும் தனது வாரிசுடனும் ) கடன் மற்றும் எதிர்ப்புகள் மூலம் தனது எதிர்காலத்தை சிதைத்துக்கொள்ளுதல், வயிறு சார்ந்த இன்னல்களை சந்தித்தால், தேவையற்ற விரைய செலவினங்கள், வீண் வம்பு வழக்கு, குணக்கேடான விஷயங்களில் இறங்கி தனது உடல் மனம் இரண்டையும் கெடுத்துக்கொள்ளுதல், அறிவுரை சொல்பவரையே எதிரியாக பார்க்கும் மனநிலை என்ற வகையில் இன்னல்களை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் பித்ரு சாபம், ஜாதகரை இயங்கவிடாமல்  செய்யும், இறையருளின் கருணையையும், பெரியோர் சொல்லும் மதிப்பு மிக்க வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ளாமல், தனது செயல்பாடுகளே சரியானது என்ற எண்ணத்தில் முரண்பட்ட காரியங்களை செய்து இன்னலுறும் அமைப்பை தரும், பாக்கியத்தின் பலாபலன்களை சிறிதும் அனுபவிக்க இயலாமல், அதன்வழியிலான பாவ செயல்களை அதிகம் செய்து தனது வாழ்க்கையை மிகப்பெரிய பாதிப்புகளுக்கு ஆளாக்கும் தன்மையை ஜாதகர் பெறுவது வேதனைக்குரியது, குறிப்பாக ஜாதகருக்கு 2,5,7,8ம் பாவகங்கள் வலிமையுடன் அமைந்து நல்ல வாழ்க்கை துணை மற்றும் நல்ல வாரிசு அமைந்த போதிலும், ஜாதகர் அவர்கள் அனைவரையும் வெறுப்புடன் கையாண்டு பகைமையை வளர்த்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாக்குவது 6,9ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவதும், நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதுமே அடிப்படை காரணமாக அமைகிறது, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழி மற்றும் உறவுகள் வழியில் இருந்து வரும் யோக பலன்களை ஜாதகர் உதறித்தள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்குவதும் பாதக ஸ்தான பலன்கள் நடைமுறையில் உள்ளதே காரணமாக அமைகிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் ஜாதகரின் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பதே, தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை ஜாதகர் பயன்படுத்திக்கொண்டு நலம் பெற, அவருடன் சேர்ந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதே சாலச்சிறந்தது, ஆனால் அதை ஜாதகர் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறதா ? என்றால் சந்தேகம்தான், அடிப்படையில் நமது சுய ஜாதகம் வலிமை அற்று காணப்படும் பொழுதும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுதும் நாம் நம்மை சார்ந்தவர்களின் வலிமை பெற்ற ஜாதக யோக பலன்களை  சுவீகரித்து நலம் பெறுவதே நல்லது, மாறாக தனது நிலையை உணராமல், தனது செயல்பாடுகளில் அதீத நம்பிக்கை கொண்டு இறங்குவது படுகுழியில் தள்ளிவிடும், பெரும்பாலும் நிறைய அன்பர்கள் இந்த தவறை மிக தெளிவாக செய்கிறார்கள், மேற்கண்ட ஜாதகர் உற்பட, தனது சுய ஜாதக வலிமை நிலையை உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம்.

மேற்கண்ட ஜாதகரின் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் சனி திசை ( 06/11/2014 முதல் 06/11/2033 வரை ) வலிமை பெற்ற 1,4,7,10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும், ஜாதகரது சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை பெற்ற தொடர்பு அதற்க்கு காரணமாக அமைகிறது என்ற உண்மையை உணர்ந்து செயல்பட்டால், ஜாதகரின் இல்லற வாழ்க்கை சுபத்துவம் பெரும், மாறாக தனது செயல்பாடுகளுக்கு நியாயம் கற்ப்பித்துக்கொண்டு, பிடிவாதத்துடன் செயல்பட்டால் ஜாதகரின் பாதக ஸ்தான தொடர்பும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் சந்திரன் திசையும், ஜாதகரின் வாழ்க்கையை நிச்சயம் அலங்கோலம் ஆக்கிவிடும் என்பதுமட்டும் உண்மை.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளில் எந்த ஓர் வீடும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து வரும் 200% விகித இன்னல்களை ஜாதகர் அனுபவித்து கழித்துக்கொள்வதும், முறையான பீரிதி பரிகாரங்களை மேற்கொள்வதும் மிக மிக அவசியமாகிறது, உதாரணமாக சுய ஜாதகத்தில் ஒருவருக்கு 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், தனது வாழ்க்கை துணையை வலிமை பெற்ற ஜாதகமாக தேர்வு செய்வது அவசியமாகிறது, மேலும் தன்னுடன் சேர்க்கை பெரும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் குணாதிசயம் அறிந்து பழகுவதும், நல்லோருடன் நட்பு வைத்துக்கொள்வது, சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்தே ஒருவர் கடுமையான இன்னல்களை சந்திக்கவேண்டிவரும் என்ற விஷயத்தை உணர்வது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 11 செப்டம்பர், 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( சிம்ம லக்கினம் )



 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!


சிம்ம லக்கினம் :

காலபுருஷ தத்துவத்திற்க்கு 5ம் ராசியான சிம்மத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, அயனசயன  ஸ்தானமான 12ம் பாவகத்தில் ராகு பகவானும்,  சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! இயற்கையாக சாய கிரகங்களான ராகு கேது தான் அமரும் பாவகத்தை வலிமை பெற செய்தால் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் 100% விகித யோக பலன்களை தங்கு தடையின்றி பெறுவார், ஒருவேளை பாதிப்படைய செய்தால் விதிவிலக்கு இல்லாமல் 100% விகித அவயோக பலன்களை ஜாதகர் அனுபவித்தே ஆகவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திடும், அயன சயன ஸ்தானமான கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு தேய்பிறை காலங்களில் அபரிவிதமான சுபயோக பலாபலன்களை வாரி வழங்க தயக்கம் காட்ட மாட்டார், அதே நேரம் தேய்பிறை காலங்களில் சிம்ம லக்கின அன்பர்களின் பாடு பெரும்பாடாக மாறிவிட வாய்ப்பு உண்டு, வளர்பிறை காலங்களில் மன மகிழ்விக்கும் நிகழ்வுகள் எதிர்பாராமல் நடைமுறைக்கு வரும், மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும், சுக போகங்களுக்கு குறைவு இருக்காது, வண்டி வாகன வழியில் லாபமும், இடம் வீடு நிலம் சார்ந்த வழியில் இருந்து நன்மைகளும் உண்டாகும், நெடுநாள் ஆசைகள் யாவும் நிறைவேறும், மனதில் புத்துணர்வும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், தெய்வீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், திடீர் செல்வாக்கின் மூலம் பெரும் செல்வ சேர்க்கை   ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு, ராகுவின் வளர்பிறை சஞ்சாரம் அயன சயன ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும், ராகுவின் தேய்பிறை சஞ்சாரம் மனநிம்மதியை கேள்விக்குறியாக்கும், தெளிவில்லாமல் குழப்ப மனநிலையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தோல்விகள் தங்களின் மனதை வெகுவாக பாதிக்கும், முயற்சிக்கும் காரியங்கள் தோல்வியை தந்து, மனபயத்தையும், கிலேசத்தையும்  ஏற்படுத்தும் என்பதனால் தேய்பிறை காலங்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

சத்ரு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேது சிம்மலக்கின அன்பர்களுக்கு வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும், போட்டி பந்தயம், தேர்வு ஆகியவற்றில் வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், தொழில் ரீதியான கடன் தொந்த்தரவுகளில் சிக்குண்ட சிம்ம லக்கின அன்பர்களுக்கு விரைவில் தீர்வு ஏற்பட்டு, கடன்கள் அடைபடும்,உடல்  உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிம்ம லக்கின அன்பர்களுக்கு நிரந்தர தீர்வு உண்டாகும், உடல் ஆரயோக்கியம் மேம்படும், எதிரிகள் மூலம் வளர்ச்சியை பெரும் யோகம் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தையும் களைந்து, வெற்றிநடை போடும் நேரமிது, கேதுவின் சஞ்சாரம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத அனுபவத்தையும், அதிரடியான சுப மாற்றங்களையும் வாரி வழங்கும், புதிய சிந்தனைகள், புதிய செயல்பாடுகள் யாவும் பலன்தரும் காலமிது, ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி, ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம், அதிரடியான தொழில் வளர்ச்சி மூலம் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெரும் யோகம் உண்டாகும், எதிர்பாராமல் வாழ்க்கையில் குறுகிய காலத்தில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டு என்பதனால் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளை பெறுங்கள் சிம்ம லக்கின அன்பர்களே! முழு முதற்கடவுள் தங்களின் வாழ்க்கையில் சுபயோகங்களை சத்ரு ஸ்தான வழியில் வழியில் இருந்து வாரி வழங்க உள்ளார், அவரின் அருள் பெற்று நலம் பெறுங்கள் " வாழ்த்துக்கள் "

குறிப்பு :

 சிம்ம லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் சிம்ம லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696


தொழில் முன்னேற்றமும் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையும் !

 
ஒருவரின் வாழ்க்கை கௌரவ குறைவின்றி, சிறப்பாக இயங்க  அடிப்படையாக காரணமாக அமைவது அவரது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஜாதகருக்கு நல்ல ஜீவனத்தை வழங்குவதில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவக வலிமை முதன்மை வகிக்கிறது, மேலும் கேந்திர ஸ்தானம் எனும் 1,4,7,10ம் பாவகங்களும், கோண ஸ்தானம் எனும் 1,5,9ம் பாவகங்களும் சுய ஜாதகத்தில் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் துன்பம் இல்லா சுபயோக வாழ்க்கையினை பெறுவதற்கு தடை ஏதும்  இருக்காது, மேலும் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் ஏற்று நடத்தும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறை இல்லை என்றே சொல்லலாம், கீழ்க்கண்ட உதாரண ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை மற்றும் அதன் அடிப்படையில் ஜாதகர் பெரும் நன்மைகளை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : ஸ்வாதி 4ம் பாதம்

 ஜாதகர் தனுசு லக்கினம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியை ஜாதகர் லக்கினமாக பெற்று இருப்பது கவனிக்க தக்க விஷயமாகும், மேலும் லக்கினம் எனும் முதல் வீடு தொடர்பு பெறுவது தனது  லக்கினத்திற்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் ( 9ம் பாவகம் ஜாதகருக்கு  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணியம் என்று அழைக்கப்படும் சிம்ம ராசியில் அமைவது கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சமாகும்  ) ஜாதகரின் லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கியமாகவும், லக்கினம் தொடர்பு பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ  புண்ணியமாகவும் அமைவது ஜாதகரின் லக்கினம் பெரும் வலிமையை நமக்கு தெளிவு படுத்துகிறது, ஜாதகர் மிதம் மிஞ்சிய அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் நிரம்ப பெற்றவர் என்பதை தெளிவு படுத்துகிறது, அடிப்படையில் ஓர் ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது ஜாதகரின் உயிர், உடல் மற்றும் மனம் சார்ந்த வலிமையை உறுதிபடுத்தும், ஜாதகருக்கு லக்கினம் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஸ்திரமான நன்மைகளை தொடர்ந்து பெறுவார் என்பது வரவேற்க்கதக்க சிறப்பு அம்சமாகும், தொழில் துறையில் சிறந்து விளங்க முதலில் லக்கினம் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெற்றால் மட்டுமே ஜாதகர் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வல்லமை பெற்றவர் என்பதும் சுய ஆளுமை மற்றும் நிர்வாக திறன் கொண்டவர் என்பதும் உறுதியாகும், தான் செய்யும் தொழில் வழியிலான நன்மைகளை ஜாதகரே பெரும் யோகம் பெற்றவர் என்பதனையும் உறுதி படுத்தும், லக்கினம் வலிமை பெற வில்லை எனில் ஜாதகரின் உழைப்பு தொழில் வல்லமை அனைத்தும் மற்றவர்களுக்கு பயன்படும் நிலையை தரும்,மேலும் தொழில் ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கும் வலிமை இன்றி சுய ஆளுமை திறன் இன்றி செய்தொழிலில் பெருத்த நஷ்டங்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது தொழில் மட்டுமல்ல அனைத்திற்கும் நல்லது, மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இறைஅருளின் பரிபூர்ண கருணையையும், வருமுன் உணரும் வல்லமையையும் பெற்றவர் என்பதனையும் தெளிவு படுத்துகிறது, இதனால் ஜாதகர் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பவர் என்பது உறுதியாகிறது.

சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் தான்  தொழில் ரீதியாகவும், வியாபார நோக்கத்திலும் சொத்து, பொருட்கள் மற்றும் வண்டி வாகனங்களை முதலீடு செய்யும் யோகம் பெற்றவர் என்பதுடன், தொழில் ரீதியான நடவடிக்கை மற்றும் திட்டமிடுதல்களை மிக சிறப்பாக செய்யும் செயல்படுத்தும் யோகம் பெற்றவர் என்பதனை உறுதிப்படுத்துகிறது, நல்ல குணமும் அனுசரித்தது செல்லும் மனமும் ஜாதகரை தொழில் ரீதியான வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும், மேலும் ஜாதகர் தமது சுய உழைப்பின் மூலம் சொத்து வண்டி வாகனம் மற்றும் பொருள் வரவை தங்கு தடையின்றி பெரு[பெறுபவர் என்பதனை உறுதிப்படுத்துகிறது.

சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை பெறுவது மக்கள் தொடர்பு மற்றும் வியாபர நுணுக்கம், வியாபாரத்தில் வெற்றி என்ற வகையில் சுபயோகங்களை  வாரி வழங்கும், பல வெளிநாடுகள் அல்லது வெளியூர் வழியிலான வியாபர விருத்தியை தரும், அந்நிய நபர்கள் அறிமுகம் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான லாபங்கள் அதிகரிக்கும், கூட்டு தொழில் அல்லது கூட்டாளிகள் மூலம் ஜாதகர் வாழ்க்கையில் நிகரில்லா வளர்ச்சியை பெறுபவர் என்பதனை மிக தெளிவாக உறுதிபடுத்துகிறது, மேலும் ஜாதகர் செய்யும் தொழில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றிகளை தரும் என்பதுடன், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பொருளாதர தன்னிறைவை எதிர்பாரா வண்ணம் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

சுய ஜாதகத்தில் 10ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் சுய தொழில் செய்வதன் மூலம் அபரிவிதமான வெற்றிகளை தொடர்ந்து பெறுபவர் என்பதுடன் ஸ்திரமான தொழில் முன்னேற்றங்களை பெறுபவர் என்பதும் தெளிவாகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சத்ரு ஸ்தானமாக அமைவது ஜாதகர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழிலை தேர்வு செய்து வெற்றி காண்பார் என்பதுடன், ஜாதகரின் தொழில் எதிரிகள் மூலமே ஜாதகருக்கு தொழில் வெற்றிகள் தேடிவரும் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து கை நிறைவான வருமான வாய்ப்பை பெறுபவர் என்பதுடன் பொருளாதார முன்னேற்றத்தை தொடர்ந்து பெரும் அமைப்பை தரும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம் தொடர்ந்து அதிர்ஷ்டம் மற்றும் தன வரவை தொடர்ந்து தரும், ஜாதகரின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மிகப்பெரிய லாபங்களை வாரி வழங்கும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தொடர் அதிர்ஷ்டத்துடன் கூடிய மிகுந்த தன லாபத்தை பெரும் யோகத்தை தரும், தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையுடன் கூடிய திட்டமிடுதல்கள் ஜாதகரின் வாழ்க்கையை மிகவும் யோகம் மிக்கதாக மாற்றும்.

1,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு இலக்கின வழியிலான சுபயோக பலன்களையும், 3ம் பாவக வழியிலனா சகல சௌபாக்கியம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி என்ற நிலையை தரும், வியாபர விருத்தி என்பது ஜாதகருக்கு மிக அபரிவிதமாக அமையும், தோல்வி அற்ற நிலை என்பதுடன் மிகுந்த மன வலிமையை ஜாதகருக்கு வாரி வழங்கும், வீரியமிக்க செயல்திறன் மூலம் ஜாதகர் சகல நன்மைகளையும் பெறுவார், 9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு அனுபவ அறிவு அதிக அளவில் அதிகரிக்கும், தெளிவான சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன் இயற்கையாக அமைந்து இருக்கும், தனது வாழ்க்கையை மிகவும் பயனுள்ளதாக மாற்றத்தக்க வல்லமை பெற்றவர் என்பது சிறப்பு தகுதியாகும்.

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 8,12 ம் பாவகத்தை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் தொழில் அதிபர் என்ற நிலைக்கு உயர்த்தும் வல்லமை பெற்றது என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

சுய ஜாதகத்தில் 10பாவகங்கள் வலிமை பெற்றதுடன் தற்போழுது  நடைபெறும்  சனி திசை வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவதுடன், எதிர்வரும் புதன் திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் பாவகம் வலிமை பெறுவதுடன் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற லாபம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் தொழில் வெற்றிகளை வாரி வழங்கும் என்பதே மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள தொழில் சார்ந்த பாவக வலிமை நிலை, மேலும் ஜாதகர் தொழில் ரீதியாக மிக பெரிய வெற்றிகளை  பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696