சனி, 16 ஜூன், 2018

கூட்டு திசை பாதிப்பை தருமா ? நட்சத்திர பொருத்தம் மட்டுமே திருமண வாழ்க்கையில் வெற்றியை தருமா ?



கேள்வி :

கிழ்கண்ட குறிப்பு திருமண பொருத்தம் பார்த்த பொழுது வழங்கியது, நட்சத்திர பொருத்தம் சிறப்பாக உள்ளதாலும், தோஷ நிர்ணயம் சிறப்பாக உள்ளதாலும் திருமணம் செய்யலாம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறினார், இதைமட்டும் கருத்தில் கொண்டு திருமணம் செய்யலாமா, தம்பதியர் திருமணத்திற்கு பிறகு சிறப்பான இல்லற வாழ்க்கையை பெறுவார்களா ?  கூட்டு திசை பாதிப்பை தருமா ?  நட்சத்திர பொருத்தம் மட்டுமே திருமண வாழ்க்கையில் வெற்றியை தருமா ? சரியான பதில் எதிர்பார்க்கிறேன் .


பதில் :

 மேற்கண்ட திருமண பொறுத்த குறிப்பை வைத்துகொண்டு, திருமணம் செய்வதுதென்பது கல்லை கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதற்கு நிகரான பலாபலன்களை தந்துவிடும், மேலும் நட்சத்திர பொருத்தம் என்பது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவதுதென்பது " காகம் அமர பனம்பழம் விழுந்த கதைதான் " திருமண வாழ்க்கையின் வெற்றியை நட்சத்திர பொருத்தமோ, கூட்டு திசையோ, கிரக தோஷ நிலையோ நிர்ணயம் செய்வதில்லை சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே நிர்ணயம் செய்கிறது என்பதனை உணருவது அவசியமாகிறது, தாங்கள் வழங்கியுள்ள பிறந்த குறிப்பை கொண்டு நமது உயர் கணித ஜோதிட முறைபடி பாவக வழிமையிலான பொருத்தத்தை தெளிவாக இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பரே !

பெண் ஜாதகம்

லக்கினம் : தனுசு
ராசி : விருச்சிகம்
நட்சத்திரம் : கேட்டை 2ம் பாதம்


ஆண் ஜாதகம்

லக்கினம் : தனசு
ராசி : கடகம்
நட்சத்திரம் : பூசம் 4ம் பாதம்


திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் 2,5,7,8,12ம் வீடுகளாகும், மேற்கண்ட வது வரன் இருவரின் ஜாதகத்திலும் 2,5,7,8,12ம் வீடுகள் பெரும் தொடர்பு அது தரும் நன்மை தீமையை பற்றி சிந்திப்போம் அன்பர்களே !

பெண் ஜாதகத்தில்

2,5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது, இது ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் திருமண தாமதம், குடும்ப வாழ்க்கையில் இன்னல்கள், போதிய வருமானம் இன்மை, ஸ்திர தன்மையற்ற வார்த்தைகள் என்ற விதத்திலும், 5ம் பாவக வழியில் இருந்து புத்திர பாக்கிய தடை, சமயோசித அறிவு திறனில் பாதிப்பு, கற்ற கல்வி வழியிலான யோக பலனை அனுபவிக்க இயலாத தன்மை, குலதெய்வ சாபம் என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள் என்ற போதிலும், திடீர் இழப்புகள், விபத்து, மருத்துவ செலவினங்கள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார இன்னல்கள் என்ற வகையில் பாதிப்பை தரும்.

 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது இது ஜாதகிக்கு 12ம் பாவக வழியில் இருந்து கடுமையான மனஅழுத்தம், மன போராட்டம், அனைவராலும் தொல்லை, தாம்பத்திய வாழ்க்கையில் பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும்

7ம் வீடு மட்டும் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் காணப்படுகிறது. இது ஜாதகிக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தரும், வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு மற்றும் யோக வாழ்க்கையை பெற்று தரும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து சிறப்பான நன்மைகளை ஜாதகிக்கு பரிபூர்ணமாக வாரி வழங்கும்.


ஆண் ஜாதகத்தில் 

2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் காணப்படுகிறது. இது ஜாதகருக்கு நன்மையை தரும் அமைப்பாகும், 2ம் பாவக வழியில் இருந்து சிறந்த குடும்ப வாழ்க்கை, நிறைவான வருமானம், இனிமையான பேச்சு திறன், பொருளாதார தன்னிறைவு என்ற வகையில் சிறப்புகளை தரும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியம், சமயோசித அறிவு திறன், தெய்வீக அனுக்கிரகம், கல்வி வழியிலான முன்னேற்றம் மற்றும் புத்திசாலித்தனத்தால் ஆதாயம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும்.

8ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் காணப்படுகிறது, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார உதவிகள், வாழ்க்கை துணையின் சொத்துக்கள் கிடைத்தால், நீண்ட ஆயுள், திடீர் அதிர்ஷ்டம் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது. இது ஜாதகருக்கு 12ம் பாவக வழியில் இருந்து கடுமையான மனஅழுத்தம், மன போராட்டம், அனைவராலும் தொல்லை, தாம்பத்திய வாழ்க்கையில் பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும், மேலும் இல்லற வாழ்க்கையில் அதிக அளவிலான மன உளைச்சலை தரும்.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகிதம் வலிமை அற்று காணப்படுகிறது, நல்ல வாழ்க்கை துணை அமைவது என்பது ஜாதகருக்கு குதிரை கொம்பாக அமையும், கூட்டாளிகள், நண்பர்கள், கூட்டு முயற்சி யாவும் ஜாதகருக்கு கடுமையான இழப்புகளையே ஏற்படுத்தும், வெளியூர் அல்லது வெளிவட்டார பழக்க வழக்கங்கள் ஜாதகருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை தரும், வலிமை அற்ற ஜாதகியை வாழ்க்கை துணையாக ஜாதகர் தேர்வு செய்தால், ஜாதகரின் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிடும் என்பது கவனிக்கத்தக்கது.

கூட்டு திசை தரும் பலன்கள் :

 ஜாதகிக்கு நடக்கும் சுக்கிரன் திசை 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்த பெற்று யோக பலனையும், 2ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனையும் தருகின்றது.

 ஜாதகருக்கு நடக்கும் சுக்கிரன் திசை 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை தருவது சிறப்பான நன்மைகளை தரும்.

கூட்டு திசை தோஷம் என்பது நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக பலன் பற்றி தெரியாத நிலையில் குத்துமதிப்பாக சொல்லப்படுவதாகும், கூட்டு திசை தோஷம் என்பது முற்றிலும் தவறான கருத்து, இதுபோன்ற அமைப்பு எந்த ஓர் ஜோதிட மூல நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என்பதே உண்மை.

குறிப்பு :

ஜாதகருக்கு வயது 32, ஜாதகிக்கு வயது 26 இருவருக்கும் திருமணம் தாமதமாக அடிப்படை காரணமே சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் ( ஆண் ) குடும்ப ஸ்தானம் ( பெண் ) வலிமை அற்று இருப்பதே, மேலும் இருவரது ஜாதகமும் பாவக வழியில் பொருத்தம் இன்றி  முற்றிலும் முரண் பட்ட தன்மையில் இருப்பதால், இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து, மன வாழ்க்கை முறிவு என்ற இறுதி நிலைக்கு கொண்டு செல்லும் எனவே திருமணத்தை தவிர்த்து, இருவரும் வலிமை பெற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வதே சரியான தீர்வாக அமையும், தாங்கள் அனுப்பிய திருமண பொருத்தம் சார்ந்த குறிப்பை வைத்துகொண்டு திருமண வாழ்க்கையில் நுழைவது தம்பதியருக்கு இல்லற வாழ்க்கையில் பிரிவு என்ற நிலைக்கே அழைத்து செல்லும் என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுக்கவும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 15 ஜூன், 2018

தொழிலில் ஏற்படும் பேரிழப்பை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது எப்படி? இதை ஜாதக ரீதியாக அறிந்துகொள்ள இயலுமா ?



  இன்னும் நமது கிராமங்களில் " வல்லவனையும் தட்டுமாம் வழுக்குப்பாறை " என்று சிலேடையாக சொல்வதுடன், மிகுந்த தொழில் நுணுக்கம் கொண்டுள்ள ஒருவரை கூட மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி ஆரம்பித்த இடத்துக்கே கொண்டுவந்துவிடும் தன்மை பெற்றது "விதி" இதை மதியறிவு கொண்டு வெல்வது என்பது அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள 1,5,9ம் பாவகங்களின் வலிமை நிலையே என்றால் அது மிகையில்லை, ஒருவருக்கு வரும் யோக அவயோக நிலையை பற்றி வருமுன் தெளிவாக கட்டியம் கூற சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்களின் வலிமை நிலை அவசியமாகிறது, மேற்கண்ட பாவகங்களின் வலிமை, ஜாதகருக்கு எதிர்வர இருக்கின்ற நன்மை தீமையை பற்றி சுய அறிவுபூர்வமாகவோ, குல தெய்வ ஆசியின் மூலமாகவோ, ஆன்மீக பெரியவர்களின் அறிவுறுத்தல் மூலமாகவோ தெள்ள தெளிவாக எடுத்துரைத்து காக்கும், ஜாதகருக்கு வரும் இழப்பில் இருந்து பாதுகாப்பும், யோக அமைப்பில் இருந்து விழிப்புணர்வும் தந்து அருள் புரியும், ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : துலாம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : ஆயில்யம் 

 மேற்கண்ட துலா லக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தான அதிபதியான சுக்கிரன் திசை 20/05/1998 முதல் 20/05/2018 தற்போழுது நடைமுறையில் உள்ளது, இந்த சுக்கிரன் திசை ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான யோக பலனை பாக்கிய ஸ்தான வழியில் இருந்து தந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க தக்க நன்மைகளை தருவதாகும், குறிப்பாக சுக்கிரன் திசையில் சனி புத்தி 20/03/2011 முதல் 20/05/2014 வரை ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சிறப்பான ராஜ யோக பலனை 2,4,10 பாவக வழியில் இருந்து வாரி வழங்கி இருக்கிறது சுக்கிரன் திசை ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து எதிலும் வெற்றி, புத்தி கூர்மை மூலம் ஆதாயம், சகல சௌபாக்கியம், போக்குவரத்து, ஏஜென்சி துறை லாபம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான நன்மைகள், வியாபார விருத்தி, நல்ல  சிந்தனைகள் தரும் வெற்றி, கனிம சுரங்க பொருட்கள் மூலம் லாபம், நுண்ணறிவு திறன்  மூலம் பெரும் அதிர்ஷ்டங்கள் என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து மிகுந்த மனவலிமை, விரைவாக சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமை அதன் வழியிலான முன்னேற்றங்கள், சமயோசித புத்தி சாலித்தனம், ஆய்வு திறன், நல்ல பழக்கங்கள் மூலம் நன்மைகளை பெறுதல் என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து நிறைவான அறிவு திறன், பயணங்கள் மூலம் லாபம், இடமாற்றம் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் மற்றும் சிறப்பான வளர்ச்சி பித்ருக்களின் ஆசி மூலம் வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுதல் என்ற வகையில் யோக பலனை வாரி வழங்கியது.

சுக்கிரன் திசையில் கடந்த சனி புத்தி சனி புத்தி 20/03/2011 முதல் 20/05/2014 வரை ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து தொழில் வழியிலான அபரிவித வருமானம், பேச்சு திறன் மூலம் வரும் வியாபர விருத்தி, லட்சியங்களை அடையும் வல்லமை, அதீத தனசேர்க்கையை சொந்த உழைப்பில் பெரும் வல்லமை, கவுரவம், அந்தஸ்து, புகழ், பரிசு அனைத்திலும் வெற்றி என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகும் தன்மை, மண் மணை வண்டி வாகன யோகம், ஆள் வசதி, பெரிய சொத்து சுக சேர்க்கை, அரசு மரியாதை மற்றும் கவுரவம், சமூக வாழ்க்கையில் வெற்றி, அரசியலில் ஆதாயம் என்ற வகையில் சிற்பபுகளை தரும், 10ம் பாவக வழியில் இருந்து தொழில் வழியிலான அபரிவித முன்னேற்றம், கம்பீரமான செயல்பாடுகள், தீர்க்கமான முடிவுகள் வழியில் பெரும் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, செய்தொழில் வழியிலான ராஜ யோகம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கி இருக்கிறது.

சுக்கிரன் திசையில் சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தி ( 20/05/2014 முதல் 20/03/2017 வரை ) ஜாதகருக்கு மிகுந்த சோதனை காலமாக மாறியது விதி செய்த கொடுமையாகவே கருதலாம், புதன் புத்தி ஜாதகருக்கு 6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் ஜாதகரை படு குழியில் தள்ளியது, 6ம் பாவக வழியில் இருந்து வரம்பு மீறிய கடன், மிதமிஞ்சிய செலவுகள், வேலையாட்கள் வழியிலான இழப்புகள், பொருளாதர பின்னடைவு, எதிரிகள் தொந்தரவு, அனைத்து இடங்களில் இருந்து வரும் எதிர்ப்புகள், எதிர்பாராத கடன்கள், ஜாமீன் கொடுப்பதால் வரும் இன்னல்கள், வாங்கும் கடன் அனைத்தும் திடீர் இழப்பை சந்திக்கும் நிலை, நிலையற்ற பொருளாதரம், எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்து போகும் தன்மை, எதிர்பாலின சேர்க்கையின் மூலம் திடீர் இன்னல்கள், நிம்மதி இன்மை, அனைத்திலும் தோல்வி, வழக்குகளில் சிக்கல்கள், சட்ட சிக்கல்கள், பொருள் இழப்பு என்ற வகையில் ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தர ஆரம்பித்தது.

8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை நல்கிய போதிலும், பேரிழப்பு, விபத்து, துயரம், மற்றவர்களால் வரும் துன்பங்கள், தீயநண்பர்கள் சகவாச தோஷம், திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை, எதிர்த்து போராட வலிமையற்ற சூழல், உதவி செய்ய யாருமற்ற தன்மை, வாழ்க்கை துணை வழியிலான இழப்புகள் மற்றும் துன்பங்கள், தெய்வீக அனுகிரகம் இன்மை, முரண்பட்ட செயல்பாடுகள், தாங்க இயலாத துன்பம், சொத்துக்களை இழக்கும் சூழ்நிலை, சொத்துக்கள் அனைத்தும் வீண் விரயமாகும் தன்மை, திருப்தி இல்லாத மனநிலை, ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபத்தில் அமைவதால், ஜாதகருக்கு வரும் வருமானம் மற்றும் கடன் யாவும் திடீர் இழப்பை சந்திக்கும் சூழ்நிலை, எதிரியின் பிடியில் இழப்பை சந்திக்கும் சூழல், அனைத்தையும் இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகுதல் என்ற வகையில் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை பாக்கியம் மற்றும் விரைய ஸ்தான அதிபதியான புதன் புத்தி தர ஆரம்பித்தது, மேலும் ஆயுள் பாவகம் ஸ்திர ராசி என்பதால் ஜாதகருக்கு வந்த இன்னல்கள் யாவும் வெகு காலம் ஆறாத ரணம், மறையாத சுவடை ஏற்படுத்தி ஜாதகருக்கு "நித்ய கண்டம் பூர்ண ஆயுசு" என்பதற்கு இணையான சூழலை உருவாக்கியது.

சுக்கிரன் திசை முடிவில் நடைபெற்ற கேது புத்தி ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தந்தது, ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சிறிய அளவில் மீண்டு வரும் வாய்ப்பை நல்கியது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாதிப்பை ஜாதகர் 5,9ம் பாவக வழியில் இருந்து உணர்ந்த போதிலும் லக்கினம் எனும் முதல் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது போதிய நிதி மேலாண்மை திறன் அற்றவர் என்பதனையும், திட்டமிட்டு செயல்படும் தன்மை அற்றவர் என்பதனையும் தெளிவுபடுத்துகிறது, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள், வாழ்க்கை துணை வழியிலான பேரிழப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆர்ப்பட்டவர் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகருக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் வல்லமை கொண்டது, இருப்பினும் சூரியன் திசையில் எதிர் வரும் சந்திரன் புத்தி 1,7,11ம் பாவக வழியில் இருந்து கடும் நெருக்கடிகளை தரும், மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டதை போன்ற உணர்வை ஜாதகர் பெறுவார், சுக்கிரன் திசையில் நடைபெற்ற சுபயோக பலன்கள் சூரியன் திசையில் நடைமுறைக்கு வந்த போதிலும், யோக காலம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும், ஜாதகர் சூரியன் திசையில் சந்திரன் புத்தியை எதிர்கொள்வது என்பது சற்று சவாலான விஷயமாகவே படுகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் யோக பலன்கள் பாவக வழியில் இருந்து வழங்கிய போதிலும், லக்கினம் வலிமையுடன் இருந்தால் மட்டுமே ஜாதகர் அதை முழுவதுமாக சுவீகரிக்க இயலும், லக்கினம் வலிமை இழப்பது அல்லது 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அனைத்தும் ஜாதகருக்கு மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை, கிரகிக்கும் வல்லமையை தாராது என்பதுடன் ஜாதகராலே அது விரயமாகும், மேற்கண்ட ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிதமிஞ்சிய யோக பலனை தரும் என்ற போதிலும், 1,7,11ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர், அவரது வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் ஜாதகரின் அதிர்ஷ்டமின்மை ஆகியவை ஜாதகருக்கு வரும் யோக பலனை கபளீகரம் செய்யும் என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 14 ஜூன், 2018

" களத்திர தோஷமும் " " சனி திசை நடப்பும் " திருமண தடைக்கு காரணமா? திருமணம் கைகூடி வருமா ?


கேள்வி :

 திருமணத்திற்க்கான முயற்சிகள் யாவும் இதுவரை பெரும் பின்னடைவையே தந்து இருக்கின்றது, கடந்த இருபது வருடங்களாக திருமணம் கைகூடி வரவில்லை, சுய ஜாதகத்தில் களத்திர தோஷம் என்கின்றனர், சனி திசை திருமண தடையை தருகிறது என்கின்றனர், உண்மை நிலை என்ன ? திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடி வருவதற்க்கு பரிகாரம் உண்டா ? எனது ஜாதகத்தில் உள்ள குறைகள் மற்றும் தோஷம் பற்றி விளக்கம் தர வேண்டுகின்றேன்.

பதில் :

ஒருவருக்கு திருமணம் தாமதமாக அடிப்படை காரணம் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் ( 2,5,7,8,12ம் ) வீடுகள் வலிமை அற்று காணப்படுவதும், பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்துவதும் காரணமாக அமையும், குறிப்பாக சுய ஜாதகத்தில் பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு இல்லற வாழ்க்கை அமைவதில் யாதொரு தடைகளும் தாமதமும் ஏற்படுவதில்லை, சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள், திருமணத்தை நடத்தி வைக்கும் பருவ வயதில் நடைமுறைக்கு வரும் பொழுதே மேற்கண்ட தங்களின் கேள்விக்கு உரித்தான விதத்தில், அதிக அளவிலான தடைகளும், திருமணத்தில் வெகு தாமதத்தையும் தருகின்றது, தங்களின் ஜாதகத்தில் உள்ள நிலையை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : மிதுனம்
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவாதிரை 2ம் பதம்

திருமணம் தாமதமாக காரணம் : 1

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் அடிப்படை வீடுகளான 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது முழு முதற்காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் எந்த ஓர் வீடும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, மேற்கண்ட தங்களின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு தனுசு ராசியில் அமைவதும் தங்களுக்கு, பித்ரு தோஷ வழியில் திருமணம் அமையாமல் வெகு தாமதங்களை வழங்கிய கொண்டு இருக்கின்றது, 2ம் பாவகம் தங்களுக்கு மிதுனத்திலேயே ஆரம்பித்த போதிலும் அதிக  அளவில் கடக ராசியிலே வியாபித்து நிற்பது குடும்ப வாழ்க்கையில் இன்பத்தை தராமல் தடை செய்கிறது, மேலும் இல்லற வாழ்க்கையில் ஜாதகர் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தருகின்றது.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் கூட்டு முயற்சி வழியிலான இன்னல்களை வெகுவாக தருகின்றது, திருமணம் வெகு தாமதமாக சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் 200% விகித பாதிப்பை பெறுவதும், அது சார்ந்த இன்னல்களை ஏக காலத்தில் அனுபவிப்பதும் காரணமாக அமைகிறது, குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவக வழியில் 200% விகித இன்னல்களை சந்திப்பதால் தங்களின் திருமண வாழ்விற்க்கான முயற்சிகள் யாவும் கடும் தோல்வியை சந்திக்கிறது, இதற்கான தீர்வை பதிவின் இறுதியில் காண்போம்.

திருமணம் தாமதமாக காரணம் : 2

 தங்களுக்கு 19/04/2002 முதல் 19/04/2021 வரை நடைபெறுகின்ற சனி மஹா திசையானது தங்களுக்கு 3,9,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 3,9,12ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்ற போதிலும், 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2,7ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தருவது தங்களுக்கு சனி மகா திசையில் சிறப்புகளை தரும் அம்சமல்ல, மேலும் 2ம் பாவக வழியில் இருந்து போதிய வருமானம் இன்மை, வாக்கு வழியிலான இன்னல்கள், குடும்பத்தில் சிரமம், தனம் சார்ந்த சிக்கல்கள், பொருளாதார முன்னேற்ற தடைகள், வரும் வருமானம் வீண் விரையமாகுதல் என்ற வகையில் சிரமங்களை தரும், 7ம் பாவாக வழியில் இருந்து திருமண தடை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியிலான தொந்தரவுகள், வியாபாரம் கடுமையாக பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை, எதிர்ப்புகள் அனைத்து இடங்களில் இருந்தும் வரும், சட்ட சிக்கல்கள், பொது வாழ்க்கை பாதிப்பு, எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து வரும் தொல்லைகள் என்ற வகையில் மிகுந்த சிரமங்களை தரும், சனி மகா திசை லாப ஸ்தான வழியில் அதிர்ஷ்டத்தை வழங்கிய போதிலும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்கள் தங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

சனி மஹா திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தியும் தங்களுக்கு கடுமையான திடீர் இழப்புகளை ஆயுள் பாவக வழியில் இருந்து வாரி வழங்கி கொண்டு இருப்பது சிறப்பானது அல்ல, இது மேலும் மேலும் கடுமையான இன்னல்களையே தரும், ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைவது தொழில் ரீதியான திடீர் இழப்புகளை குறிக்கிறது என்பதால் ராகு புத்தியில் தொழில் ரீதியாக மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய தருணமாகும்.

சனி மகா திசையில் எதிர்வரும் குரு புத்தி தங்களுக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5,11ம் பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சனி திசை குரு புத்தி காலத்தில் தங்களின் திருமண முயற்சி நல்ல வெற்றியை தரும், சிறந்த புத்திர பாக்கியம் அமையும், இவையெல்லாம் மிகுந்த அதிர்ஷ்டத்துடன் அமையும் என்பது கவனிக்கத்தக்கது, குரு புத்தி காலத்தை தாங்கள் பயனுள்ள வகையில் அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

1) திருவக்கரை சென்று புதனுக்கு வக்கிரக நிவர்த்தியும், சர்ப்ப சாந்தி பரிகாரமும் செய்து யோக வாழ்க்கையை பெறுவது ஜாதகருக்கு சிறப்புகளை தரும்.
2) திருவெண்காடு சென்று முக்குண நீராடுவது களத்திர தோஷ நிவர்த்தியை தரும், திருமண வாழ்க்கையிலான தடைகளை தகர்க்கும்.
3) திருப்பதி வருடம் ஒரு முறை சென்று வருவதும், ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் நீராடுவதும் தங்களின் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

எதிர் வரும் புதன் திசை தங்களுக்கு ஜீவன ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும் என்பது வரவேற்கத்தக்கது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 12 ஜூன், 2018

ஜாதக ஆலோசனை : பெண்கள் ஜாதகத்தில் சுபயோகங்கள் தரும் நன்மைகள் !

  

 ஓர் வலிமை மிக்க பெண்ணின் ஜாதகம் தன்னையும், தன்னை சார்ந்து ஜீவிப்பவர்களையும் வாழ்க்கையில் வெற்றி பெற செய்யும் வல்லமை கொண்டது, மேலும் வலிமை பெரும் பாவக வழியில் இருந்து, பெற்றோர்,சகோதர சகோதரிகள், உறவுகள், வாழ்க்கை துணை, குழந்தைகள், வாழ்க்கை துணை வழியிலான உறவுகள் அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்யும் யோகம் பெற்றவர்கள், எனவே நமக்கு வலிமை மிக்க ஜாதகம் பெற்ற தாய்,வாழ்க்கை துணை,குழந்தை கிடைப்பது நாம் செய்த புண்ணியம் மற்றும் பாக்கியத்தின் வலிமையே ஆகும், கீழ்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் தன்மையை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : மகரம் 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம்

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

ஒருவரது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்று அமைவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நாற்காலியில் நான்கு கால்களும் வலிமை பெற்று இருப்பதற்கு நிகரான யோக பலன்களை தரும், மேற்கண்ட ஜாதகிக்கு 1,4,7,10ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று நான்கு பாவகங்களும் முறையே, மகரம்,மேஷம்,கடகம் மற்றும் துலாம் ராசிகளில் வியாபித்து நிற்பது ஜாதகி ஸ்திரமான வலிமை பெற்ற யோக ஜாதகம் பெற்றவர் என்பதை கட்டியம் கூறுகிறது மேலும் மேற்கண்ட ராசிகள் யாவும் சர இயக்கத்தில் இயங்குவது யோக பலன்களை 100% விகிதம் சுவீகரித்து வழங்கும் என்பதை கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

1ம் வீடு ஜாதகிக்கு உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான செல்வத்தையும் வாரி வழங்கும், மேலும் லக்கினம் சர மண் தத்துவத்தில் 18 பாகைகளும், ஸ்திர காற்று தத்துவத்தில் 15 பாகைகளையும் கொண்டு இருப்பது ஆரோக்கியமான திரேகத்தையும், சிறந்த அறிவு திறனையும் வழங்கும், மேலும் ஜாதகியின் செயல்பாடுகள் யாவும் நேர்மை மிக்கதாகவும், அதன் வழியிலான அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக பெறுபவராகவும் இயங்க செய்யும், நிறைந்த நல்லறிவு, நேர்மையான குணம், செய்யும் காரியங்களில் சத்தியத்தை கடைபிடித்தல், அனைத்திலும் வெற்றி வாய்ப்பு, மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் பரிபூர்ணமாக நிறைவேறும் தன்மை, எதிர்ப்பவர்களை வென்று நலம் பெரும் தன்மை, மேன்மையான நோக்கங்கள், எதையும் சமாளிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

4,7,10ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு நல்ல குணாதிசயத்தை தரும், இளகிய மனமும், பரோஉபாகர மனநிலை ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் உதவி புரியும், மக்கள் தொடர்புள்ள துறைகளில் ஜாதகியை விருத்தி பெற செய்யும், மருத்துவம், ஹீலிங், மற்றும் மனநலம் சார்ந்த துறைகளில் ஜாதகிக்கு முழு வெற்றி கிட்டும், சமாதான குணம், பெருந்தன்மையான நடவடிக்கை மூலம் அனைவரையும் கவரும் தன்மையை தரும், மிக பெரிய சொத்து சுக சேர்க்கையை பெறுவதற்கான வல்லமை பெற்றவர், வீடு நிலம், இடம் ஆகியவற்றின் மூலம் நல்ல செல்வசேர்க்கை உண்டாகும், வண்டி வாகன யோகம்  உண்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் தன்னிறைவான பொருளாதர வளர்ச்சியை தரும், உறவுகள் வழியிலான ஆதரவு, தந்தைக்கு யோகம், தந்தையுடன் பாசமாக இருத்தல், தந்தையின் உறவுகள் வழியிலான யோக வாழ்க்கையை ஜாதகி பரிபூர்ணமாக பெறுவார்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள் மூலம் யோக வாழ்க்கை அமையும், திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை மிகவும் யோகமிக்கதாக அமையும், நல்ல வாழ்க்கை துணை ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமைவார், கணவர் வழியிலான நன்மைகளை வாழ்நாள் முழுவதும் பெறுவதற்கான யோகம் பெற்றவர், பொதுமக்களிடம் செல்வாக்கும், நம்பிக்கையும் மிக எளிதாக பெறுவதற்கான வாய்ப்புகளை தரும், செய்யும் செயல்களில் யாவிலும் பொதுநலம் பிரதிபலிக்கும், நேர்மறையான எண்ணங்கள் ஜாதகிக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் யோகம் உண்டாகும், ஜாதகியின் வாழ்க்கை மிகவும் பிரகாசம் மிக்கதாக அமையும், வியாபாரம் தொழில், கூட்டு தொழில், கூட்டு முயற்சிகள் யாவும் ஜாதகிக்கு நல்லதோர் வெற்றிகளை தொடர்ந்து வாரி வழங்கும், இல்லற வாழ்க்கை மிக இனிமையா அமையும், வாழ்க்கை துணையுடனான புரிதல்கள் இல்லற வாழ்க்கையையும், குடும்பத்திலும் சிறப்பான சுபயோகங்களை வாரி வழங்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகி வெளியூர் அல்லது வெளிநாடுகளில் ஜீவன மேன்மையை 100% விகிதம் பெறுவார், நல்ல வியாபர நுணுக்கங்களை தரும், பொதுமக்கள் ஆதரவு மற்றும் மரியாதை முழு அளவில் கிடைக்கும், சமூகத்தில் மதிக்கத்தக்க அந்தஸ்த்தை வெகு விரைவில் பெறுவார், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள் ஜாதகியை தேடி வரும், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் ஜாதகிக்கு செய்யும் தொழில் வழியிலான விருத்தி வெகு விரைவில் சீராகவும் அமையும், பல தொழில் புரியும் யோகம் உண்டு, தனது தாய்க்கு மிகுந்த யோகத்தை தருபவர், தாய் வழியிலான ஆதரவும், ஆசியையும் பரிபூர்ணமாக பெரும் யோகம் உண்டு, நிறைய சொத்து சுக சேர்க்கையை தனது சுய உழைப்பின் மூலம் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிக அளவில் உண்டாகும், அரசு மரியாதை மற்றும் கவுரவம் ஜாதகிக்கு தேடிவரும், செய்யும் தொழிலில்  வழியில் நேர்மையும், பெரும் புகழும் உண்டாகும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை ஜாதகிக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.

9ம் வீடு ஜாதகிக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றும், மிதமிஞ்சிய அறிவு திறன் ஜாதகியின் வாழ்க்கையில் வியக்கத்தகு முன்னேற்றங்களை நல்கும், தெய்வீக அனுக்கிரகமும், பித்துருக்கள் ஆசியும் ஜாதகிக்கு சுபயோக வாழ்க்கையை வாரி வழங்கும், முன்னேற்றம் என்பது ஜாதகிக்கு சிறப்பாக அமையும், தெளிவான சிந்தனை அறிவு, எதையும் சமாளிக்கும் சமயோசித அறிவு திறன், ஆன்மீக ஈடுபாடு ஆகியவை ஜாதகிக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகியின் கல்வி அறிவு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், ஆராய்ச்சி கல்வி, பட்டய படிப்பில் நல்ல தேர்ச்சியும், அதன் வழியிலான சுபயோகங்களையும் ஜாதகி பரிபூர்ணமாக பெறுவார், சுபயோகங்களை  பெறுவதில் தடையேதும் இருக்காது.

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,3,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு, கலைகளில் ஆர்வம் மற்றும் தேர்ச்சி, ஆய்வு கல்வியில் தேர்ச்சி, தாமத திருமணம், வருமானம் சார்ந்த இன்னல்கள், வாக்கின் வழியிலான இன்னல்கள், வீண் விரையம், வருமானம் சில நேரங்களில் தடைபடும் தன்மை என்ற வகையில் இன்னல்களை தரக்கூடும், குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையைத்தரும்.

3ம் பாவக வழியில் இருந்து மருந்துகள் மூலம் அபரிவித லாபத்தை தரும், அறிய கலைகளில் ஆர்வத்தையும் தேர்ச்சியையும் நல்கும், விட்டுக்கொடுக்கும் தன்மை, அயலார் மூலம் நல்ல லாபம், நீண்ட பயணம், சட்டம் மூலம் அதீத நன்மைகள், புதிய கண்டுபிடிப்புகள், தர்ம சிந்தனை, சத்தியத்தை மதித்து நடத்தல் என்ற வகையில் நன்மைகளை தரும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஜாதகிக்கு நல்ல வெற்றிகளை தரும், விடாமுயற்சி ஜாதகிக்கு சுபயோக வாழ்க்கையை நல்கும்.

12ம் பாவக வழியில் இருந்து நிறைய செலவுகள், வீண் விரையம் மருத்துவ செலவினங்கள், மன அழுத்தம், மனபோராட்டம், அனைவராலும் தொல்லைகள், துன்பங்கள், எதிர்பாராத இழப்புகள், நிம்மதி குறைவு, நல்ல உறக்கம் இன்மை, தாம்பத்தியம் சார்ந்த இன்னல்கள் என்ற வகையில் சிரமங்களை தரக்கூடும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நீண்ட  ஆயுளை தரும், இருப்பினும் திடீர் இழப்புகள், மருத்துவ செலவினங்கள் அதிகரிக்கும், பாதுகாப்பான பயணம் ஜாதகிக்கு மிகுந்த நன்மையை தரும், திருப்தி இல்லாத சூழ்நிலையில் அதீத மனஅழுத்தம் மற்றும் மனப்போராட்டத்தை தரக்கூடும், இழப்புகளை தவிர்க்க முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது, வாழ்க்கை துணை வழியிலான சிறு சிறு விரயம் தவிர்க்க இயலாது.

5,6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 5ம் பாவக வழியில் இருந்து புத்திர பாக்கியத்தில் தாமதத்தையும், கற்ற கல்விக்கு உண்டான வருமானம் அற்ற நிலையையும் தரும், குல தெய்வ சாபம் ஜாதகிக்கு பெரும் இன்னல்களை தரக்கூடும், சுபயோக நிகழ்வுகள் யாவும் ஜாதகிக்கு பெரும் தடை தாமதங்களை தரக்கூடும் என்பதால், குல தெய்வ வழிபாடு முறையாக செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.

6ம் பாவக வழியில் இருந்து எதிரிகள் தொந்தரவு அதிக அளவில் ஜாதகிக்கு இன்னல்களை தரக்கூடும், வயிறு சார்ந்த உடல் தொந்தரவுகள் கடுமையாக பாதிக்க கூடும், எவரிடமும் பகைமை பாராட்டாமல் ஜாதகி மிக இலகுவாக நடந்துகொள்ளது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், தனது சொத்துக்கள் மீது கடன் வாங்குவது மிகுந்த பாதிப்பை தரும், மற்றவருக்கு கடன் கொடுப்பது ஜாதகிக்கு பெரிய அளவிலான பாதிப்புகளை தரக்கூடும்.

11ம் பாவக வழியில் இருந்து, அதிர்ஷ்டம் சார்ந்த பின்னடைவுகள் ஜாதகிக்கு பெரும் பாதிப்பை தரும், விரக்தி மனப்பான்மை ஜாதகிக்கு மிகுந்த இன்னல்களை தரக்கூடும், தோல்வியை கண்டவுடன் அதீத மனபயம் சார்ந்த இன்னல்களை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும், கடின உழைப்பே ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளையும் சுபயோகங்களையும் வாரி வழங்கும்.

நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் ( 20/12/2012 முதல் 20/12/2028 வரை )

குரு திசை ஜாதகிக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை தந்த போதிலும், தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் புத்தி ஜாதகிக்கு 1ம் வீடு ஜாதகிக்கு உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1ம் பாவக வழியில் இருந்து சிறப்புகளை தருவது, ஜாதகிக்கு தொழில் ரீதியான வெற்றிகளை 100% விகிதம் வாரி வழங்கும், எதிர்பாராத சுப நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும், தெய்வீக அனுக்கிரகத்தால், ஜாதகிக்கு உயர் கல்வி, திருமணம், புதிய வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, வெளிநாடு யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும் என்பதால்,  நடைபெறும் புதன் புத்தி ஜாதகிக்கு சிறப்பான யோக வாழ்ககையே வாரி வழங்குகிறது.

குறிப்பு :

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 5,6,11ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது மட்டுமே சற்று கடுமையான இன்னல்களை தரும், விரைய ஸ்தான தொடர்பை பெரும் பாவக வழியில் இருந்து பெரிய அளவில் இன்னல்கள் நடைமுறைக்கு வாராது என்பதால், ஜாதகி 5,6,11ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 10 ஜூன், 2018

ராகு திசை தரும் இன்னல்களும், சுய ஜாதகத்தில் அமர்ந்த நிலையில் தரும் பாதிப்புகளும் !


 சுய ஜாதகங்களில் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை அற்ற நிலையில் அமர்ந்து, தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்துவது சம்பந்தம்பட்ட ஜாதகருக்கு வெகுவான சிரமங்களை தரக்கூடும், குறிப்பாக பாதக ஸ்தான தொடர்பை பெற்ற வீடுகளின் பலனை தனது திசையில் தருவது ஜாதகரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றிவிடும் தன்மை கொண்டது, கீழ்கண்ட ஜாதகருக்கு, சாயா கிரகங்கள் தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து தரும் பலன்கள் பற்றியும், நடைமுறையில் உள்ள ராகு திசை தரும் பலன்கள் பற்றியும் இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! மேலும் ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றியும், எதிர்வரும் குரு திசை தரும் பலாபலன்கள் பற்றியும் இன்றை பதிவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : கடகம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : உத்திரம்3ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,3ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நல்ல மனநிலையை தரும், பயணங்களில்ஆர்வம், சகோதரர் மற்றும் உறவுகளுடன் சுமூக நிலை, நல்ல நடப்புறவு, அவர்கள் வழியிலான ஆதரவு மற்றும் உதவிகளை பெரும் வாய்ப்பு என்ற அமைப்பில் நன்மைகளை தரும், மேலும் வளரும் சூழ்நிலையில் ஜாதகருக்கு தெளிவான திட்டமிடுதல்களை மேற்கொள்ளும் வல்லமையை தரும், மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் ஜாதகருக்கு பூர்ண விருத்தியை தரும், வாக்கில் தெளிவு, உண்மையை மதித்தல், முற்போக்கு சிந்தனை, விடா முயற்சி, எதிர்ப்புகளை புறம்தள்ளி வெற்றியை ஈட்டும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும், நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும், உடல் நலம் சார்ந்த விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிட்டும், தேடுதல் மட்டுமே ஜாதகருக்கு அபரிவிதமான யோக வாழ்க்கையை வழங்கும், நீண்ட ஆயுள் உண்டு என்ற போதிலும் உடல் நலம் சார்ந்த இன்னல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது, சிறந்த எழுத்தாளர் மற்றும் இலக்கிய ஆளுமையை ஜாதகருக்கு பிறவியிலேயே வழங்கிவிடும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஜாதகரை முழு வேகத்தில் முன்னேற்ற பாதையில் பயணிக்க வைக்கும், மின்னணு உபகரணங்கள் ஜாதகருக்கு சிறப்பான தொழில்  வாய்ப்பை நல்கும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த செல்வ செழிப்புடன் வாழ்வதற்கான வாய்ப்புகளை வாரி வழங்கும், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகவும், எதிரிகளை வெல்லும் யோகம் பெற்றவராகவும் ஜாதகர் விளங்குவார், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் யாவும் நல்ல வெற்றிகளையும் சிறப்பான முன்னேற்றங்களையும் வாரி வழங்கும், எந்த சூழ்நிலையையும் சிறப்பாக கையாளும் அறிவு திறன் உண்டாகும், உடல் வலிமையை விட மனவலிமையை  அதிக அளவில் பெற்றவராக ஜாதகர் திகழ்வார் என்பது கவனிக்கத்தக்கது, தெய்வீக அனுக்கிரகம் மூலம் ஜாதகர்  மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் நல்ல வெற்றிகளை வாரி வழங்கும், சத்தியத்தை மதித்தலும், உண்மையை ஆதரிப்பதும் ஜாதகருக்கான சிறப்பு குணாதிசயம், உயர் கல்வி வழியிலான முன்னேற்றம் மிகவும் அபரிவிதமாக அமையும், மாற்றங்களை கிரகித்துக்கொள்ளும் வல்லமை, புதிய சூழ்நிலைகளை விரும்பும் மனம், ஏஜென்சி எடுத்து செய்யும் அனைத்து தொழில்களிலும் நல்ல வருமான வாய்ப்பு என்ற வகையில் ஜாதகருக்கு வீரிய ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும்.

2,4ம் வீடுகள் ஜாதகருக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகத்தை பரிபூர்ணமாக நல்கும், கனிம பொருட்கள் மூலம் ஜாதகருக்கு சிறப்பான தொழில் முன்னேற்றம் உண்டாகும், சொந்த ஊரில் சிறப்பும், தனது தாய் வழியிலான சுபயோகங்களையும் ஜாதகர் முழு அளவில் பெறுவார், பொதுமக்கள் சேவையாக வண்டி வாகன போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தொழில்களில் அபரிவித வளர்ச்சியினை ஜாதகர் பெறுவது இயற்கையாக நிகழும், தனது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் வண்டிவாகனங்கள் ஜாதகருக்கு நிலையான வருமான வாய்ப்பை நல்கும், வீடடிற்கு தேவையான உபகரண பொருட்கள் விற்பனை செய்வதன் மூலம் ஜாதகருக்கு சிறப்பான தொழில் விருத்தி உண்டாகும், பொதுமக்கள்  ஆதரவுடன்  செய்யும் தொழில்கள் யாவிலும் ஜாதகருக்கு  நிறைவான  வருமானம் வந்து சேரும், மேலும் ஜாதகரின் வாக்கு வன்மை  அதிகரிப்பதால் ஜோதிடம், கணிதம், தரகு தொழில்கள் மூலமும் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

4ம் பாவக வழியில் இருந்து சுய உழைப்பின் மூலம் மண் மனை வண்டி வாகனம், சொந்த ஊரில் செல்வாக்கு, கல்வி துறையில் சிறப்பான எதிர்காலம்,  உயர் கல்வியில் வெற்றி, நெறியுடைய நன்னடத்தை, ஒழுக்கம், நல்ல குணம் என்ற  வகையில் சிறப்பை தரும், முறையான மக்கள் ஆதரவு ஜாதகருக்கு சிறப்பான அரசியல் பதவிகளை தரக்கூடும், வீடு கட்ட தேவையான பொருட்கள் சார்ந்த வணிகம் ஜாதகருக்கு அபரிவித வளர்ச்சியை தரும், தெளிவான சிந்தனை மற்றும் திட்டமிட்டு காரியமாற்றும் வல்லமை இரண்டும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், சொந்த வியாபாரம் ஜாதகருக்கு அபரிவித வளர்ச்சியை தரும், ட்ராவலிங் ஏஜென்சி மூலம் நல்ல லாபம் உண்டாகும், கமிஷன் சார்ந்த வண்டி வாகன விற்பனையும் ஜாதகருக்கு சிறப்பான பொருளாதர வளர்ச்சியை தரும்.

5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 5ம் பாவக வழியில் இருந்து கல்வியில் தடை, சுபகாரியங்களில் தடை, தெய்வீக  அனுக்கிரகம் இன்மை, குலதெய்வ சாபம், குழந்தைகள் வழியிலான இன்னல்கள், கற்ற கல்வி வழியிலான வளர்ச்சியை பெற இயலாமல் தவிக்கும் நிலை, உதவி செய்ய வருபவர்களுக்கு நேரும் இன்னல்கள், சோர்வு, முயற்சி தடைபடும் தன்மை, உதவி செய்ய யாருமற்ற சூழ்நிலை, எதிர்பாராத துன்பங்கள், நீண்ட போராட்டம், போதிய வசதி வாய்ப்பு இன்மை என்ற வகையில் சிரமங்களை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கூட்டு தொழில் வழியிலான முன்னேற்றம் இன்மை, திருமண தாமதம், எதிர்பாலினர் வழியிலான இன்னல்கள், பொது காரியங்களில் தொய்வு, வாழ்க்கையை சிரமத்துடன் எதிகொள்ளும் தன்மை, பொறுப்புகளை இறுதி நேரத்தில் தவறவிடும் தன்மை, வாழ்க்கை துணைக்கு வரும் இன்னல்கள், கூலியாட்கள் மூலம் வரும் இன்னல்கள், எதிர்ப்புகளை அதிக அளவில் சமாளிக்க வேண்டிய கட்டாயம், என்ற வகையில் ஜாதகருக்கு மிகுந்த நெருக்கடிகளை தரும், வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமையின்றி தேர்வு செய்துவிட்டால், இல்லற வாழ்க்கையில் மிகுந்த இன்னல்களை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டிய காட்டயத்தை தந்து விடும், எந்த காரணத்தை கொண்டும் ஜாதகர் கூட்டு தொழில் செய்வது சரியான நன்மைகளை தாராது.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்டமின்மையான  வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை முற்போக்கு சிந்தனை போன்ற விஷயங்கள் ஜாதகருக்கு வெகுவாக பாதிக்கப்படும், மெய்பொருள் காண்பது அறிவு என்ற வாக்கிற்க்கு புறம்பான செயல்பாடுகளை தரும், புதிய முயற்சி  மேற்கொள்ள வெகுவான தடைகளையும் தாமதங்களும் ஜாதகர் சந்திக்கும் நிலையை தரும், அதிர்ஷ்டம் என்பது ஜாதகருக்கு வெகு தூரம் நிற்கும் என்ற போதிலும், கடின உழைப்பின் வழியில் சகல சௌபாக்கியங்களையும் ஜாதகர் தன்னிறைவாக பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, முரண்பட்ட கருத்துக்களை விட்டுவிட்டு முற்போக்கு சிந்தனையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது ஜாதகருக்கு சிறப்புகளை தரும்.

 6,8,10,12ம் வீடுகள் ஜாதகருக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 6ம் பாவக வழியில் இருந்து கடன் கொடுத்தவர்களால் மிகுந்த  இன்னல்கள், கடன் பெற்றவர்களால் நிதி நிலை பாதிப்பு என்ற வகையில் கடும் இன்னல்களை தரும், நல்ல வேலையாட்கள் அமைவது சிரமம், வேலை நிறுத்தத்தால் பொருளாதர இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலை, தேவையற்ற வீண் செலவுகள், எதிர்பாராத மருத்துவ செலவினங்கள் என்ற வகையில் இன்னல்களை தரும், எவரிடமும் பகைமை பாராட்டாமல் சுமுக போக்கை கடைபிடிப்பது ஜாதகருக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு விபத்து, மருத்துவ செலவுகள், அனைத்திலும் ஏமாற்றம், மனகுழப்பம் மற்றும் போராட்டம், அறுவை சிகிசை மேற்கொள்ளும் சூழ்நிலை, வீண் கற்பனைகள், மரண பயம், போதிய விழிப்புணர்வு இன்மை, தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டு இன்னலுறும் தன்மை, மருத்துவத்தால் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காணும் அமைப்பு என்ற போதிலும், ஜாதகருக்கு மன அழுத்தம் அதிகமாகும்.

10ம் பாவக வழியில் இருந்து வெளியூர் வெளிநாடு சார்ந்த தொழில்களில் நல்ல முன்னேற்றம், திடீர் தொழில் முடக்கம், வரவைவிட செலவு அதிகரிக்கும் தன்மை, கவுரவம் மற்றும் சுய மரியாதை பாதிக்கும் தன்மை, எதிர்பாராத தொழில் வழியிலான பொருளாதர சிக்கல்கள் என்ற வகையில் இன்னல்களை தரும், உகந்த காலநேரம் அறிந்து நலம் பெறுவது அவசியமாகிறது .

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைய செலவினங்கள் வரும், எதிர்பாராத  பொருளாதர சிக்கல்கள் மனநிம்மதியை பாதிக்கும், உறக்கம் கெடும், பங்கு சந்தை மற்றும் லாட்டரியில் இழப்பை தரும், திருப்தியில்லை என்ற  சூழ்நிலையை உருவாக்கும், அனைவராலும் அதிக இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை, எதிர்ப்புகள் வழியிலான முன்னேற்றத்தடை, வீண் மனபயம் அதீத கற்பனை, மனசஞ்சலம், கிலேசம் போன்றவை ஜாதகரை வெகுவாக பாதிக்கும், அயன சயன சுகம் கெடும்.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9 ம் பாவகத்துடன் சம்பந்த பெறுவது ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து உயர் கல்வி ஆய்வு கல்வி மூலம் அபரிவித செல்வாக்கையும், சிறந்த வேலை வாய்ப்பையும் நல்கும், பெரிய மனிதர்கள் ஆதரவும், ஆன்மீக பெரியோர்களின் ஆசியும் ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும், அனைவரிடமும் நற்பெயர் உண்டாகும், பரந்த மனப்பக்குவம் ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும், பித்ருக்கள் ஆசி ஜாதகருக்கு நல்லதொரு இல்லறவாழ்க்கையை நல்கும், சிறந்த அறிவு திறன் உள்ளதால் ஜாதகருக்கு வரும் இன்னல்களை மிக  எளிதாக கையாளும் வல்லமை உண்டாகும், சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள இறை அருள் ஜாதகருக்கு சிறப்பான வாய்ப்புகளை நல்கும்.

 நடைபெறும் ராகு திசையும், எதிர்வரும் குரு திசையும் ஜாதகருக்கு  5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடந்த 10/08/2006 முதல் கடுமையான இன்னல்களை  வழங்கி கொண்டு இருப்பது ஜாதகருக்கு வாழ்க்கையில் பெரிய பின்னடைவுகளை தந்துகொண்டு இருப்பது கவலைப்படத்தக்கது என்ற போதிலும் தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசை சுக்கிரன் புத்திக்கு அடுத்து  வரும் சூரியன் புத்தி ( 1,3-3 ), சந்திரன் புத்தி ( 4-4 ), செவ்வாய் புத்தி ( 9-9) ஆகியவை வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால் ஜாதகர் சிறப்பான யோக வாழ்க்கையை மேற்கண்ட பாவக தொடர்புகள் வழியில் இருந்து  பரிபூர்ணமாக பெறுவார்.

ஜாதகருக்கு  சுய ஜாதகத்தில் பாவக வழியில் 2ல் அமர்ந்த கேது தான் அமர்ந்த பாவத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில்  இருப்பதும், பாவக தொடர்பு வழியில் சுக ஸ்தான தொடர்பை பெறுவதும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை தரும், சிறப்பான குடும்ப வாழ்க்கை, கைநிறைவான வருமானம், தொடர் முன்னேற்றம், பொருளாதர வசதி வாய்ப்புகள் என்ற வகையில் சுபயோகங்களை நல்கும்.

சுய ஜாதகத்தில் பாவக வழியில் 8ல் அமர்ந்த ராகு தான் அமர்ந்த பாவத்திற்கு வலிமை அற்ற அமைப்பில்  இருப்பது பெருவாரியான இன்னல்களை தரும், மனம்  சார்ந்த போராட்டம், திடீர் இழப்பு மருத்துவ செலவினங்கள், மனபயம் என்ற  வகையில் சிரமங்களை தருவது வருந்தத்தக்கது, மேலும் ராகு தனது திசையில் 5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று பலாபலன்களை  தருவது, மிகுந்த இன்னல்களை தரும், மேற்கண்ட ஜாதகருக்கு ராகு சுய ஜாதகத்தில் வலிமை அற்றும், தனது திசையில் இன்னல்களையும் தருவது வருந்தத்தக்கது.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பினும், பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ராகு,குரு பகவான்கள் மட்டுமே ஏற்று நடத்துவது ஜாதகருக்கு கிடைத்த கொடையாக கருதலாம், எனவே ஜாதகர் ராகு,குரு திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் மட்டும் மேற்கண்ட பாவக வழியில் ( 5,7,11) மிகுந்த எச்சரிக்கையுடன்  இருந்து நலம் பெறுவது அவசியமாகிறது, மற்ற கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு சிறப்பான வலிமை  பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த நன்மைகளே நடைமுறைக்கு வரும், மேற்க்கண்ட அமைப்பு ஜாதகருக்கு கடுமையான பாவக பாதிப்பை பெற்ற போதிலும், அதனால் வரும் இன்னல்கள் வெகுவாக குறையும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 8 ஜூன், 2018

சுபயோக ஜாதகத்தில் பாவக தொடர்புகள் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் !

 

 சுய ஜாதகம் வலிமை பெறுவது ஒவ்வொருவருக்கும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், நன்மைகளையும் வாரி வழங்கும், இறை அருளின் கருணையினால் வெகு சில ஜாதகங்களே லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் வலிமை பெற்று அமைகிறது, சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் ஜாதகத்தை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! ஜாதகர் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் பெரும் நன்மைகளையும் யோக வாழ்க்கையையும் இக்கட்டுரையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : ரிஷபம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்

 ஜாதகருக்கு ரிஷப லக்கினம், லக்கினம் மற்றும் சில வீடுகளும் சுபத்துவம் பெற்ற பாவகங்களுடனே சம்பந்தம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் தற்போழுது நடைபெறும் திசா புத்தி, எதிர்வரும் திசாபுத்திகள் தரும் சுபயோகங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்,

ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :

1,2,6,8ம் வீடுகள் உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, ஒழுக்கம் சுய கட்டுப்பாடு மற்றும் தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், சிறந்த மனப்பக்குவம், அனைத்தையும் அனுசரித்து செல்லும் குணம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், பல்துறை நுண்ணறிவு, பொறுமை சகிப்பு தன்மை, திட்டமிட்டு செயல்படும் யோகம், நீண்ட ஆயுள், மனதில் தெளிவு, எதிரிகளை வெல்லும் வல்லமை, இனிமையான பேச்சு திறன், கடவுள் ஈடுபாடு ஆன்மீக வெற்றி மனமும் உடலும் ஒருங்கே சிறப்பாக செயல்படும் தன்மை, வெற்றி, புகழ், கீர்த்தி மற்றும் சுய அந்தஸ்துடன் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெரும் தன்மையை தரும்.

2ம் பாவக வழியில் இருந்து இனிமையான வாக்குவன்மை, பேச்சின் மூலம் காரியம் சாதிக்கும் யோகம், வார்த்தைகளில் வெளிப்படும் கம்பீரம் மற்றும் தைரியம், உறுதியான நிலைப்பாடு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, குடும்பத்தாருடன் நல்லுறவு, பொருளாதார ரீதியான வெற்றி வாய்ப்புகள், தன்னிறைவான வசதி வாய்ப்புகள், கைநிறைவான வருமானம், தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வல்லமை, சுய தொழில் வழியிலான வருமானம், வியாபாரம் மூலம் வரும் அபரிவித தனசேர்க்கை, பேச்சில் உறுதி, அனைவரையும் மதிக்கும் குணம், வலிமை மிக்க பதவிகள், வாழ்க்கை துணை வழியிலான பொருள் வரவு மற்றும் தன சேர்க்கை, வாக்கு வன்மையை தொழில் முதலீடாக பெரும் யோகம், எதிர்ப்புகளை சமாளித்து வெற்றிபெறும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும், வயிறு சார்ந்த தொந்தரவுகள் சற்று பாதிப்பை தரக்கூடும், செய்யும் தொழில் மற்றும் பணியில் நேர்மையை தரும், எடுத்த காரியங்களில் அபரிவிதமான வெற்றியை பெறுவார், அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், புதிய சிந்தனை ஜாதகருக்கு நல்ல வெற்றிகளை வழங்கும், கடன் சார்ந்த இன்னல்கள் ஜாதகருக்கு சற்று சிரமங்களை தரக்கூடும், பொது காரியங்களில் ஈடுபாடு, சமூக அக்கறை அதிகரிக்கும், எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் வல்லமை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள் உண்டு, தொல்லைகள் யாவும் ஜாதகருக்கு புது உத்வேகத்தை தரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமை, மிக எளிதாக அனைத்தையும்  சாதிக்கும் வல்லமை, இன்சூரன்ஸ் துறையில் அபரிவித லாபத்தை வாரி வழங்கும், விபத்து மருத்துவ சிகிசையை தவிர்க்க இயலாது, அறுவை சிகிக்சை மூலம் உடல் நலம் பெரும் வாய்ப்பு உண்டு, மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகளில் அதீத கவனம் ஜாதகருக்கு தேவை என்பதை மனதில் கொள்வது அவசியமாகிறது.

3,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அபிலாசைகள் அனைத்தும் நிறைவேறும், லட்சியம் மற்றும் கனவுகள் ஜாதகருக்கு குறுகிய காலத்தில் நடைமுறைக்கு வரும், வியாபாரத்தில் நல்ல விருத்தியும், அதிகப்படியான வண்டி வாகன யோகமும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், விவசாயம் மற்றும் விவசாய உபகரணம் மூலம் பெருத்த லாபம் உண்டாகும், நிறைய சொத்து சுக சேர்க்கை, வீடு நிலம் சார்ந்த லாபம், தர்மத்தை நம்புதல் கடைபிடித்தல், கணிதம் மற்றும் சாஸ்திரத்தில் தேர்ச்சி, திருமணத்திற்கு பிறகான அபரிவித வளர்ச்சி, தெய்வீக அனுக்கிரகம் என்ற வகையில் ஜாதகர் பரிபூர்ண நன்மைகளை பெறுவார்.

5ம் பவாக வழியில் இருந்து ஜாதகருக்கு லாட்டரியில் யோகம் உண்டாகும், முதலீடுகள் மற்றும் வியாபாரம் சார்ந்த லாபங்கள் அதிக அளவில் கிடைக்கும், தனது சமயோசித புத்திசாலித்தனத்தால் ஜாதகர் பன்மடங்கு வளர்ச்சியை குறுகிய காலத்தில் பெறுவார், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை தரும், எப்பொழுதும் மகிழ்ச்சி, மனைவி மற்றும் குடும்பத்துடன் சுமுக போக்கு, குழந்தைகள் வழியிலான அதிர்ஷ்டம், கற்ற கல்வி  வழியிலான யோகம், வருமுன் காக்கும் வல்லமை, தெய்வீக அனுக்கிரகம்  மற்றும் குலதெய்வ ஆசிர்வாதம் மூலம் வாழ்க்கையில் சகல  சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை  தரும், நல்ல ஆண் வாரிசு அமையும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தெய்வீக அனுக்கிரகம் பெற்ற திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெற்று வாழ்க்கையை மிக  யோகமிக்கதாக மாற்றிக்கொள்ளும் வல்லமை உண்டாகும், தெளிந்த நல்லறிவு ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், முன்னோர்களின் புண்ணிய பதிவுகள் வழியில் இருந்து ஜாதகர் சிறப்பான சுபயோகங்களை பெறுவார், யோகமிக்க புத்திரபேறுகளை அடையும் நிலையம், அவர்கள் வழியிலான யோக பலன்களையும் ஜாதகர் தங்கு தடையின்றி  பெறுவார், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு நிறைவேறும், வருமுன் உணர்ந்து செயல்படும் தன்மையை தரும், எவ்வளவு பெரிய சிரமங்கள் ஏற்பட்டாலும் அதில் இருந்து குறுகிய காலத்தில் வெளிப்படும் தன்மையை தரும், ஜாதகரின் அறிவாற்றல் பெருமைப்படத்தக்க விஷயங்களில் ஈடுபட்டு அதன்வழியிலான நன்மைகளை  பரிபூர்ணமாக அனுபவிக்க வைக்கும், ஆன்மீகத்தில் வெற்றி உண்டாகும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டத்தை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார், ஜாதகரின் மேன்மையான நல்ல குணம் அனைவரிடத்திலும் நற்ப்பெயரை பெற்று தரும், யோகமிக்க எதிர்காலம் ஜாதகருக்கு சிறப்பு மிக்க நன்மைகளை தரும், மனநிம்மதியும், ஒருமைப்பாடும் ஜாதகருக்கு வியக்கத்தக்க வெற்றி வாய்ப்புகளை நல்கும், பல தொழில் புரிவதற்கான சந்தர்ப்பங்கள் வந்து  சேரும், ஜாதகரின் தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை நல்கும், புதிய முயற்சிகள் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றத்தை தரும், நம்பிக்கை மிகுந்த மனவலிமை ஜாதகரின் வெற்றிகளுக்கு அடிப்படை காரணமாக அமையும்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மண் மனை வண்டி வாகனம், சொத்து சுகம், இடம் நிலம் சார்ந்த அமைப்புகளில் இருந்து சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், தனது சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் மிக பெரிய சொத்துக்களை வாங்கும் வல்லமையை தரும், ஜாதகரின் நல்ல குணம் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை தரும், போதிய வசதி வாய்ப்புகளை ஜாதகர் குறுகிய காலத்தில் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிக அளவில் ஏற்படும், வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜாதகர் ஜீவனம் மேற்கொள்வது சகல சௌபாக்கியத்தையும், பெரும் செல்வ சேர்க்கையையும் வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகரின் வளர்ச்சி வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் மிகவும் அபரிவிதமானதாக அமையும், சொத்துக்களை நிர்வகிக்கும் வல்லமையை ஜாதகர் பெறுவது அவசியமாகிறது.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியிலான முழு ஆதரவை தரும்,  திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிகவும் சிறப்பாக அமையும், இணக்கமான சூழ்நிலையை வாழ்க்கை துணையுடன் பெறுவது ஜாதகருக்கு மென்மேலும் யோக வாழ்க்கையை நல்கும், தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி, அன்னியோனிய இல்லற வாழ்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும், மேலும் ஜாதகருக்கு  நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், வலிமை மிக்க கூட்டு தொழில் வழியிலான முன்னேற்றம், வெளிநாடுகளில் யோகம், குடியுரிமை பெரும் வாய்ப்பு, பிரபல்ய யோகம், பொது வாழ்க்கையில் வெற்றி, மக்கள் ஆதரவு, வியாபாரம் சுய தொழில் செய்வதன் மூலம் அதீத லாபம் என்ற வகையில் சிறப்புகளை தரும், கலைத்துறையில் ஈடுபாடு, கலைகளில் தேர்ச்சியும் உண்டாகும்.

10,12ம்  வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, தொழில், வணிகம், வியாபாரம் போன்றவற்றில் சிறப்பான வளர்ச்சியை தரும், சுய தொழில் செய்வதன் மூலம் அபரிவித முன்னேற்றம் உண்டாகும், கவுரவம் மிக்க பதவிகள் தேடி வரும், சுய முன்னேற்றம் சார்ந்த  நடவடிக்கைகள் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளை வாரி வழங்கும்,  ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடான கும்ப ராசியில் அமைவது வரவேற்கத்தக்கது, ஜாதகரின் அறிவு திறன் சார்ந்த ஜீவன அமைப்புகளில் மிக பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், தொழில் வழியில் எதிர்பாராத லாபங்களும் அதிர்ஷ்டமும் உண்டாகும், சுய தொழில் செய்வதே ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நீண்ட கால தொழில் முதலீடுகள் அபரிவித வளர்ச்சியை தரும், குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியை ஜாதகர் முதலீடுகள் வழியில் இருந்தும், தொழில் வழியில் இருந்தும் பெறுவார், ஆன்மீகத்தில் நல்ல வெற்றி உண்டாகும், போதும் என்ற மனமும், திருப்தியான மனநிறைவும் ஜாதகருக்கு அயன சயன ஸ்தான வழியில் இருந்து முழுமையாக கிடைக்கும், மனதில் உள்ள ஆசைகள் மற்றும் விருப்பங்கள் யாவும் நிறைவேறும், திடீர் மாற்றங்கள் ஜாதகருக்கு திகைப்பை தந்தபோதிலும், அதுவே ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருப்பது அவசியமாகிறது.

எதிர் வரும் குரு திசை தரும் பலன்கள் ( 19/07/2018 முதல் 19/07/2034 )

3,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று எதிர்வரும் குரு திசை ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் தொடர்பு பெரும் வீடுகள் அமைப்பில் இருந்து மிகுந்த நன்மைகளை வாரி வழங்க தயார் நிலையில் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த யோக வாழ்க்கையை நல்கும், நடைமுறையில் உள்ள ராகு திசை ஜாதகருக்கு 6ம் வீடு லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று சற்று சிரமங்களை தந்துகொண்டு இருப்பது போராட்ட வாழ்க்கை தரும், ஆனால் எதிர்வரும் குரு திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திடுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் என்பதில் சந்தேகமில்லை, ஜாதகர் 3,5,9,11ம் பாவக வழியிலான பலன்களை சுவீகரிக்க ஆயத்தமாக இருப்பது அவசியமாகிறது, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 7 ஜூன், 2018

ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை சுவீகரிக்கவும், அவயோகங்களை தவிர்க்கவும் நாம் கடைபிடிக்க வேண்டியது என்ன ?


 ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை சுவீகரிக்கவும், அவயோகங்களை தவிர்க்கவும் நாம் கடைபிடிக்க வேண்டியது என்ன ? குறிப்பாக பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து விடுபட முறையான நிவர்த்தி பரிகாரம் உண்டு எனில் தெளிவாக விளக்கம் தர வேண்டுகிறோம், எனது ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வழியில் இருந்து பெரும் யோக அவயோக நிகழ்வுகள் பற்றி விளக்கம் தரவும் வேண்டுகிறோம்.


லக்கினம் : கன்னி
ராசி : மேஷம்
நட்சத்திரம் : பரணி 1ம் பாதம்

1,3ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிக்கல்கள், உடல் மனம் சார்ந்த இன்னல்கள், தெளிவில்லாத முடிவுகள், மனோ பயம், வீரியம் குறையும் தன்மை, தானாகவே இன்னல்களை தேடிக்கொள்ளும் நிலை, நோய் எதிர்ப்பு திறன் குறைவு, வீண் கற்பனைகள், திட்டமிடுதல்கள் யாவும் செயல் வடிவம் பெற இயலாத நிலை, கற்பனையில் ஜீவிக்கும் தன்மை, ஜாதகரால் மற்றவர்களும், மற்றவர்களால் ஜாதகருக்கும் இன்னல்கள் ஏற்படும் நிலை, மன உறுதி, தன்னம்பிக்கை குறையும் தன்மை, தனக்கு வரும் நன்மைகளை ஜாதகரே உதறித்தள்ளும் நிலை, நிலையற்ற மனம், அலைபாயும் சிந்தனைகள், நல்லோர் சேர்க்கையை தவிர்க்கும் நிலை, பெரியோர் ஆசியை பெற முடியாமல் தவிக்கும் நிலை, உறுதியற்ற மனநிலை, செய்யும் காரியங்களில் நேர்த்தியை கடைபிடிக்காத தன்மை, சுய கட்டுப்பாடு இழக்கும் நிலை, சிந்தனையும் செயலும் முழு வடிவம் பெற இயலாத சூழ்நிலை என்ற வகையில் இன்னல்களை தரும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு எடுக்கும் முயற்சிகள் யாவும் முழுமை பெற முடியாத சூழ்நிலை, மனதைரியம் இழந்து இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை, முழு முயற்சி இன்றி பின்வாங்கும் குணம், எதிர்ப்பு திறன் குறைவு, வீரியமிக்க காரியங்களில் ஆர்வம் இன்மை, எதிர்பாராத வாய்ப்புகளை முறையாக பயன்படுத்த முடியாமல் வீண் விரையம் செய்யும் நிலை, எதையும் எதிர்கொள்ள வலிமை இன்றி தவிக்கும் நிலை, சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்துவரும் நன்மைகளை முழு அளவில் சுவீகரிக்க இயலாமல் போராடும் தன்மை, எதிர்ப்புகளை கண்டு பின்வாங்கும் குணம், லாபம் அதிர்ஷ்டம் இரண்டையும் தவறவிடும் குணம்,சீரிய முயற்சி இன்மை, சுய கட்டுப்பாடு இழத்தல், சபல குணம், எதிலும் ஆர்வம் இன்றி தவிக்கும் நிலை, சரியானவற்றை தவிர்த்து, இன்னல்களை தேடி சென்று அனுபவிக்கும் நிலை என்ற வகையில் இன்னல்களை தரும், கமிஷன் மற்றும் சிறு தொழில் வழியிலான நஷ்டங்கள், வியாபார முடக்கம், சரியான தொழில் தேர்வை செய்வதில் குழப்பம் மற்றும் தாமதம் என்ற வகையில் பெரும் சிரமங்களை ஜாதகருக்கு தர கூடும்.

2,4,6,10,12ம் வீடுகள் ஜாதகருக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் படிப்பு எழுத்து, கல்வி மற்றும் புத்தக வெளியீடு மூலம் வருவாய் கிட்டும், பேச்சு திறன் மூலம் நல்ல தான்சேர்க்கை உண்டாகும், விளம்பர துறையில் கொடிகட்டி பறக்கும் யோகம் உண்டு, இலக்கியம் மற்றும் ஆய்வு சார்ந்த துறையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், ஏஜென்சி துறையில் அதீத வருமானம், கமிஷன் மற்றும் ட்ராவலிங்க ஏஜென்ட் மூலம் அபரிவித லாபம் கிட்டும், தூதுவர், தரகு தொழில், சிறு பிரயாணங்கள் மூலம் லாபம், வாக்கு வன்மையின் மூலம் வருமானம் பெரும் வல்லமை ஜாதகருக்கு உண்டு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், தன்னிறைவான பொருளாதர வசதி வாய்ப்புகள் கிட்டும், சேமிக்கும் வழக்கம் ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை தரும்.

4ம் மனநிலை பாதிப்பு மற்றும் நியாபக சக்தி குறையும், வீடு  வாகனம் அடிக்கடி பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு, கால்நடை மற்றும் பயணங்கள் மூலம் பணவிரயம் உண்டாகும், காண்ட்ராக்ட் தொழிலில் தொல்லைகள், சுக போக வாழ்க்கைக்கு தடைகள், குணம் சார்ந்த பாதிப்பு, போட்டி மனப்பான்மை, குறுகிய எண்ணங்களால் பெரிய சாதனைகளை தவறவிடும் தன்மை, அமைதியின்மை, மனசஞ்சலம், மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதால் பெருத்த இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை என்ற வகையில் இன்னல்களை தரும், ஜாதகர் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்வது சகல நலன்களையும் தரும், குணம் சார்ந்த நடவடிக்கைகளில் மிகுந்த நேர்மையை கடைபிடிப்பது ஜாதகருக்கு நன்மையை தரும்.

6ம் பாவக வழியில் இருந்து ஏஜென்சி காண்டராக்ட் தொழில் வழியில் திடீர் லாபம், குறுகிய காலத்தில் ஜீவன மேன்மையை பெரும் தன்மை, உடல் நலம் சார்ந்த இன்னல்கள், வயிறு மற்றும் நரம்பு சார்ந்த பாதிப்புகள், எதிரிகள் மூலம் லாபம் அடையும் தன்மை, எழுத்து மற்றும் சுய சிந்தனை மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும், எவரிடமும் ஜாதகர் பகைமை பாராட்டாமல் இருப்பதே சகல சௌபாக்கியங்களையும் தரும், மற்றவர் பணம் ஜாதகருக்கு உதவி புரியும், கடன் கொடுப்பது மற்றும் வாங்குவதால் நன்மையையும், யோகமும் உண்டாகும், நிதி நிறுவனம் சார்ந்த தொழில்களில் சிறப்பான விருத்தி உண்டாகும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கமிஷன் அடிப்படையில் செய்யும் எந்த தொழிலும் அபரிவித வெற்றியை வாரி வழங்கும், ஏஜென்சி, கான்ராக்ட், மற்றும் தரகு தொழில் மூலம் ஜாதகர் மிகப்பெரிய தான சேர்க்கையை பெறுவார், அந்நிய நபரால் ஜாதகருக்கு அபரிவித தொழில் முன்னேற்றம் உண்டாகும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை ஜாதகருக்கு தொழில் ஸ்தான அமைப்பில் இருந்து பரிபூர்ணமாக கிடைக்கும், எழுத்து மற்றும் பேச்சு திறன் மூலம் ஜாதகர் அபரிவித சுபயோகங்களை தன்னிறைவாக பெறுவார், ஜீவன ஸ்தானம் தொடர்பு பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர நீர் ராசியான விருச்சகம் என்பதால், உணவு பொருட்கள், பால் பொருட்கள், காய்கறி, நீர், மளிகை, அரிசி, தானியம், விவசாய விளைபொருட்கள், மீன், திரவ பொருட்கள், ஆயில், பெட்ரோல், எண்ணெய்வித்துக்கள், இறக்குமதி பொருட்கள், ஆயுள் காப்பீட்டு துறை, மருத்துவ உபகரணம், மருந்து பொருட்கள், வண்டிவாகனம், தானியம், கால்நடை தீவனம், மாவு பொருட்கள், மாவு மில், அரசி மில் என ஜாதகருக்கு விருப்பமான தொழிலை தேர்வு செய்து பரிபூர்ண வெற்றி காணலாம், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடாகவும், உபய காற்று ராசியில் அமைவதால் ஜாதகர் சிறு வியாபாரம் மூலம் குறுகிய காலத்தில் பெரும் தனசேர்க்கையை பெறுவதற்கான வாய்ப்புகளை நல்கும், வியாபாரம் ஜாதகருக்கு பரிபூர்ண வெற்றியை தரும், நான்கு சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகன ஏஜென்சி எடுப்பது ஜாதகருக்கு பரிபூர்ண பொருளாதார முன்னேற்றத்தை நல்கும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெளிநாடுகளில் இருந்துவரும் பொருட்கள் மூலம் அபரிவித லாபங்களை பெறுவார், முதலீடுகள் வழியிலான அதிர்ஷ்டம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக உண்டு, நீண்டகால முதலீடுகள் ஜாதகருக்கு பெருத்த லாபத்தை தரும், வேற்று மதத்தினர், வேற்று சமூகத்தினர் மூலம் ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும், இல்லற வாழ்க்கையில் நிறைவும், தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷமும் கிட்டும், வாழ்க்கை துணையின் ஆதரவு ஜாதகருக்கு பெரும் சுபயோகங்களை தரும், நிம்மதியான உறக்கம் ஜாதகருக்கு சிறப்பான வழிமுறைகளை தரும், கனவுகளில் ஜாதகரின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும், பெரும் சொத்துக்கள், பெரும் பொருள் வரவுகளை ஜாதகர் முழு அளவில் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

5,7ம் வீடுகள் ஜாதகருக்கு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் ஆகும், மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் 100% விகித சுபயோகங்களை சுவீகரிக்கும் வல்லமை உண்டாகும் குறிப்பாக 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் லாட்டரியில் யோகம், புத்திசாலித்தனத்தால் ஆதாயம், எப்போதும் மகிழ்ச்சி சந்தோசம், குழந்தைகள் வழியிலான சுபயோகங்கள், எதிர்பாரத அதிர்ஷ்ட வாழ்க்கை, எந்த ஓர் சூழ்நிலையிலும் ஜாதகர் போராடி வெற்றி பெரும் அமைப்பு, குலதெய்வ அனுக்கிரகத்தால் அனைத்தையும் வெற்றி கொள்ளும் வல்லமை, பொது வாழ்க்கையில் அபரிவித வளர்ச்சி, குழந்தை, மனைவி குடும்பத்தாருடன் இணக்கமான சூழ்நிலையில் மகிழ்ச்சியுடன் வாழும் தன்மை, நிறைந்த அறிவாற்றல், சமயோசித புத்திசாலித்தனம், எதையும் ஏற்றுக்கொள்ளும் வல்லமை, ஜாதகருக்கு வரும் பிரச்சனைகளே, யோக வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து தரும் நிலை என ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டங்களை பெறுவார், ஜாதகருக்கு நல்ல ஆண் வாரிசு அமையும், அதன் பிறகான வளர்ச்சி ஜாதகரே எதிர்பார்த்திராத வண்ணம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் யோகம் மிக்க வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், சக்தி மிகுந்த கூட்டு தொழில் விருத்தி, வெளிநாடுகளில் இருந்து வரும் அபரிவித வளர்ச்சி, தெய்வீக அனுக்கிரகத்தால் கிடைக்கும் நல்ல நட்புறவுகள், எதையும் சமாளிக்கும் வல்லமை, வாழ்க்கை துணையுடனான இணக்கம் மற்றும் இணைபிரியாத யோக வாழ்க்கை, எதிர்பால் இன கவர்ச்சி, பொது வாழ்க்கையில் முன்னேற்றம், அரசியலில் வெற்றி, வியாபாரம் மற்றும் சுய தொழில் செய்வதால் வரும் அதீத லாபங்கள், பொதுமக்களிடம் நன்மதிப்பு, உயர்பதவிகளை அலங்கரிக்கும் யோகம், ஜாதகரின் கூட்டு முயற்சி யாவும் பலிதம் பெரும் அமைப்பு, திருமணத்திற்கு பிறகான அசுர வளர்ச்சி, வெளிநாடுகளுக்கு வியாபார நிமித்தமாக சென்று வரும் யோகம் என்ற வகையில் பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும்.

8,11ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 8ம் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுளை தரும் என்ற போதிலும், ஆரோக்கிய குறைவை உண்டாக்கும், அடிக்கடி மருத்துவ செலவினங்கள் ஏற்படும், விபத்து, சிகிச்சை என்ற வகையில் இன்னல்களை தரக்கூடும் வாழ்க்கை துணைக்காக நிறைய செலவினங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், வாழ்க்கையில் எதிர்பாராத ஏமாற்றங்கள், துயரம், வியாதியால் இன்னலுறும் தன்மை, திருப்தி இல்லாதா மனநிலை என்ற வகையில் சிரமங்களை தரக்கூடும்.

11ம் பாவக வழியில் இருந்து திருப்தி இல்லாத மனம், அதீத மனக்கவலைகள், வீண் மனபயம், பெரியவர்கள், அரசு, கூட்டாளிகள் மூலம் அதிக சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை, இறுதியில் கிடைக்க வேண்டிய லாபங்களை தவற விடுதல், தகப்பனார் வழியிலான சொத்துக்களை சுவீகரிக்கும் யோகம் என்றவகையில் பலாபலன்களை தரும், ஜாதகரின் தன்னம்பிக்கையும், மனஉறுதியும் வெகுவாக குறையும், சிறு ஏமாற்றத்தையும் தாங்க இயலாத மனநிலையை தரும், முற்போக்கு சிந்தனையில் நாட்டமின்றி, பிற்போக்குத்தனமான விஷயங்களில் அதீத ஈடுபாட்டை தரும், எதிர்மறை எண்ணங்களும், தோல்வி மனப்பான்மையும் ஜாதகரை வெகுவாக படுத்தி எடுக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 9ம் பாவக வழியில் இருந்து நிறைவான அறிவு திறனை வழங்கும், பயனவிருப்பம் மற்றும் அதன் வழியிலான லாபங்கள் உண்டாகும், சிறந்த ஆன்மீக பெரியோர்களின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், புனிதமிக்க திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத விருப்பத்தை தரும், ஜாதகருக்கு வரும் இன்னல்கள் யாவும், பித்ருக்கள் ஆசியினால் வெகுவாக குறையும், சுய ஜாதகத்தில் உள்ள சுப யோகங்களை சுவீகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும், சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழ்வதற்கான வழிமுறைகள் ஜாதகருக்கு தேடி வரும், அரசியல் லாபம், பெரியமனிதர்கள் ஆதரவு, கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம் போன்றவை ஜாதகருக்கு சுபயோக சுப வாழ்க்கையை வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 வீடுகளும் தாம் தொடர்பு பெரும் பாவக  வழியிலான நன்மை தீமைகளை பற்றிய தெளிவான விபரங்களை அறிந்தோம், இனி ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை சுவீகரித்து எப்படி? வலிமை அற்ற பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை  தவிர்ப்பது எப்படி ? என்பதனை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ஜாதகருக்கு சுக்கிரன், செவ்வாய்,ராகு,சனி மற்றும் கேது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலாபலன்கள் நடைமுறைக்கு வருவதால், மேற்கண்ட கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் ஜாதகர் மேற்கொள்ளும் காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும், இதை சுய ஜாதக ரீதியாக உணர்ந்து ஜாதகர் நலம் பெறுவது அவசியமாகிறது.

ஜாதகருக்கு சூரியன்,புதன் மற்றும் குரு திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக பலன் நடைமுறைக்கு வருவதால், திடீர் இழப்பை தவிர்க்கும் விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது, மேலும் ஆயுள் பாவகம் ஜாதகருக்கு சர நெருப்பு ராசி என்பதால், சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், சத்தியத்தை மதித்து நடப்பது, அனைவரிடமும் சுமூகமாக நடந்துகொள்ளுதல், அவசரப்பட்டு எந்த ஓர் காரியத்திலும் இறங்காமல், நன்கு சிந்தனை செய்து நலம் பெறுவது அவசியமாகிறது, பொறுமையும், திட்டமிடுதலும் ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பை தரும்.

ஜாதகத்தில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் ஒரே கிரகம் சந்திரன் மட்டுமே எனவே ஜாதகர் சந்திரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் லக்கினம் மற்றும் வீரிய ஸ்தான வழியிலான பலன்களை மிக சிறப்பாக கையாள்வது அவசியமாகிறது, குறிப்பாக சந்திரனின் அந்தர காலம் ஜாதகருக்கு சில கடுமையான சிரமங்களை தரக்கூடும் என்பதால், உடல் நலம் மனநலம் சார்ந்த விஷயங்களில் அதீத அக்கறை, ஆன்மீக பெரியோர் ஆசி, இறை வழிபாடு, முறையான பரிகாரங்களை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது, ஜாதகர் தன்னைப்பற்றி ஓர் தெளிவான கண்ணோட்டத்தில் சந்திரன் திசையினை எதிர்கொள்வது சிறப்பான யோக வாழ்க்கையினை வாரி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

பாதக ஸ்தான தொடர்பை பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் என்ன ?

 

 லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த ஓர் பாவகமும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது நல்லதல்ல, குறிப்பாக லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகரை வெகுவாக படுத்தி எடுக்கும், நடைபெறும் திசா புத்தி அல்லது எதிர்வரும் திசா புத்திகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோ கதிதான், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பை பெரும் பாவக பலனை நவகிரகங்களின் திசாபுத்திகள் ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சில அன்பர்களுக்கு மேற்கண்ட அமைப்பு இருப்பது வரவேற்கத்தக்கது, சில அன்பர்களுக்கு பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவக பலனை நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஏற்று நடத்துவது ஜாதகருக்கு போராட்டம் மிகுந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்துவிடுகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !



லக்கினம் : கன்னி
ராசி : தனசு
நட்சத்திரம் : பூராடம் 4ம் பாதம்

1,3ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிக்கல்கள், உடல் மனம் சார்ந்த இன்னல்கள், தெளிவில்லாத முடிவுகள், மனோ பயம், வீரியம் குறையும் தன்மை, தானாகவே இன்னல்களை தேடிக்கொள்ளும் நிலை, நோய் எதிர்ப்பு திறன் குறைவு, வீண் கற்பனைகள், திட்டமிடுதல்கள் யாவும் செயல் வடிவம் பெற இயலாத நிலை, கற்பனையில் ஜீவிக்கும் தன்மை, ஜாதகரால் மற்றவர்களும், மற்றவர்களால் ஜாதகருக்கும் இன்னல்கள் ஏற்படும் நிலை, மன உறுதி, தன்னம்பிக்கை குறையும் தன்மை, தனக்கு வரும் நன்மைகளை ஜாதகரே உதறித்தள்ளும் நிலை, நிலையற்ற மனம், அலைபாயும் சிந்தனைகள், நல்லோர் சேர்க்கையை தவிர்க்கும் நிலை, பெரியோர் ஆசியை பெற முடியாமல் தவிக்கும் நிலை, உறுதியற்ற மனநிலை, செய்யும் காரியங்களில் நேர்த்தியை கடைபிடிக்காத தன்மை, சுய கட்டுப்பாடு இழக்கும் நிலை, சிந்தனையும் செயலும் முழு வடிவம் பெற இயலாத சூழ்நிலை என்ற வகையில் இன்னல்களை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு எடுக்கும் முயற்சிகள் யாவும் முழுமை பெற முடியாத சூழ்நிலை, மனதைரியம் இழந்து இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை, முழு முயற்சி இன்றி பின்வாங்கும் குணம், எதிர்ப்பு திறன் குறைவு, வீரியமிக்க காரியங்களில் ஆர்வம் இன்மை, எதிர்பாராத வாய்ப்புகளை முறையாக பயன்படுத்த முடியாமல் வீண் விரையம் செய்யும் நிலை, எதையும் எதிர்கொள்ள வலிமை இன்றி தவிக்கும் நிலை, சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்துவரும் நன்மைகளை முழு அளவில் சுவீகரிக்க இயலாமல் போராடும் தன்மை, எதிர்ப்புகளை கண்டு பின்வாங்கும் குணம், லாபம் அதிர்ஷ்டம் இரண்டையும் தவறவிடும் சூழ்நிலை, சீரிய முயற்சி இன்மை, சுய கட்டுப்பாடு இழத்தல், சபல குணம், எதிலும் ஆர்வம் இன்றி தவிக்கும் நிலை, சரியானவற்றை தவிர்த்து, இன்னல்களை தேடி சென்று அனுபவிக்கும் நிலை என்ற வகையில் இன்னல்களை தரும், கூட்டு தொழில் வழியிலான நஷ்டங்கள், வியாபார முடக்கம், சரியான தொழில் தேர்வை செய்வதில் குழப்பம் மற்றும் தாமதம் என்ற வகையில் பெரும் சிரமங்களை ஜாதகருக்கு தர கூடும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தந்த போதிலும், தற்போழுது நடைபெறும் ராகு திசை 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த சுபயோகத்தை நல்குவது ஜாதகருக்கு முழு வீச்சில் 5ம் பாவக வழியிலான சுபயோகங்களை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகருக்கு 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு தொழில் ஸ்தானமாக வருவது வரவேற்கத்தக்கது, ஜாதகர் தனது சமயோசித அறிவு திறன் கொண்டு தனது தொழிலை மிக சிறப்பாக வளர்த்து எடுக்கும் வல்லமையை தரும், ஜாதகருக்கு தொழில் நுட்பம் சார்ந்த நல்லறிவு எதிர்பாரத ஜீவன மேன்மையை வாரி வழங்கும், மண் தத்துவம் சார்ந்த நுண்ணறிவும், வண்டி வாகனம் சொத்து சுக சேர்க்கை, சுய மரியாதை கவுரவம், அந்தஸ்து போன்றவை ஜாதகரை தேடிவரும், பல தொழில் புரியும் யோகமும், அதன் வழியிலான விருத்தியும் மென்மேலும் சுபயோகங்களை வாரி  வழங்கும்.

சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்ற போதிலும், நடைமுறையில் உள்ள ராகு திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பூர்வ புண்ணிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ராகு திசைக்கு அடுத்து வரும் குரு திசையும் வலிமை பெற்ற பாக்கிய ஸ்தான பலனை தருவது தொடர் நன்மைகளை தரும் அமைப்பாகும், பாதக ஸ்தான தொடர்பை பெற்றாலும் நவகிரகங்களின் திசா புத்தி பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது ஜாதகருக்கு சிறப்பான சுபயோகங்களை தருவதற்கு நிகரானது, மேற்கண்ட இரண்டு ஜாதகத்திலும் பாதக ஸ்தான தொடர்பு இருந்த போதிலும், முதலாவது ஜாதகர் பாதக ஸ்தான பலனை சந்திரன் திசையில் சுவீகரிக்கும் நிலையையும், இரண்டாவது ஜாதகர் ராகு திசையில் பாதக ஸ்தான பலனை சுவீகரிக்காத நிலையையும் தருவது கவனிக்கத்தக்கதாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 5 ஜூன், 2018

வரனின் ஜாதகம் யோகம் மிக்கதா ? இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையுமா ?


 சுய ஜாதகம் வலிமை மிக்க வாழ்க்கை துணையை நாம் தேர்வு செய்யும் பொழுது நமது இல்லற வாழ்க்கை மென்மேலும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, பெண்களுக்கு நல்ல வரன் அமைவது என்பது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் அமைப்பாகும், தாங்கள் அனுப்பி உள்ள வரனின் ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றியும், தாங்கள் இந்த வரனை வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் பட்சத்தில் அதன் மூலம் தாங்கள் பெரும் யோக அவயோகம் பற்றியும் இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் சகோதரி, வரனின் ஜாதகம் யோகம் மிக்கதா ? இந்த வரனை தங்களின் வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் பொழுது தங்களின் இல்லற வாழ்க்கை மேன்மை பெறுமா என்பதை " ஜோதிடதீபம் " வழங்கும் ஆலோசனையுடன் தங்களின் இல்லற வாழ்க்கையை துவங்குங்கள்..


லக்கினம் : சிம்மம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 1ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,2,3,5,6,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து சிறப்பான வளரும் சூழ்நிலையையும், தெளிந்த நல்லறிவையும், சமயோசித அறிவு திறனையும், ஆன்மீகத்தில் ஆர்வத்தையும், சிறந்த உடல் நலத்தையும், நீண்ட ஆயுள், புகழ், வெற்றி, கீர்த்தியுடன் சுபயோக வாழ்க்கையை நல்கும், 2ம் பாவக வழியில் இருந்து நிறைவான வருமானம், குடும்பத்தில் மகிழ்ச்சி, இனிமையான பேச்சு, தொழில் வழியிலான தன சேர்க்கை, தெய்வீக அனுகிரகம், பொருளாதார தன்னிறைவு என்ற வகையில் சிறப்புகளை தரும், 3ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், சகல சௌபாக்கியம், முயற்சிக்கும் காரியங்கள் வெற்றி, வீரியமிக்க செயல் திறன், சகோதர வழி ஆதரவு, தைரியம், தன்னம்பிக்கை, ஏஜென்சி துறையில் வெற்றி என்ற வகையில் யோகத்தை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், தனது அதீத புத்திசாலித்தனத்தால் ஆதாயம், தெய்வீக அனுக்கிரகம், புதிய முயற்சிகள் மூலம் வெற்றி ஆராய்ச்சி, கலைத்துறையில் வெற்றி, குழந்தைகள் மூலம் லாபம் என்ற வகையிலும், 6ம் பாவக வழியில் இருந்து எதிரிகளால் நன்மை, கடன் சார்ந்த விஷயங்களில் இருந்து வரும் லாபம், குறுகிய காலத்தில் பெருளாதார தன்னிறைவு, எதிர்ப்புகள் அனைத்தும் வெற்றியாக மாறுதல், பொருளாதர தன்னிறைவு என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள் போனஸ், கிராஜுவிட்டி, பங்கு மூலம் லாபம், இன்சூரன்ஸ் துறையில் நல்ல முன்னேற்றம், பரம்பரை சொத்து, செல்வம் போன்றவை மூலம் லாபம் பெறுதல், மருத்துவ துறையில் நிறைந்த லாபம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் என்ற வகையில் சிறப்புகளை தரும், 11ம் பாவக வழியில் இருந்து நல்ல குணம், நீடித்த அதிர்ஷ்டம், தெய்வீக அனுக்கிரகம், புதிய சூழ்நிலைகளில் நல்ல வெற்றியை பெரும் யோகம், முற்போக்கு  சிந்தனை, சுய தேடுதல் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியிலான முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும், ஜாதகரின் திருமணத்திற்கு பிறகான முன்னேற்றம் என்பது வியக்கத்தக்க வகையில் அமையும், எதிர்பாராத அதிர்ஷ்டம், வெளிநாடுகளில் இருந்து வரும் யோகம், பொதுமக்களிடம் மதிப்பு மரியாதை, அரசு கவுரவம், பெரிய பதவிகள், நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள், கூட்டு தொழில் வழியிலான அதிர்ஷ்டம் என்ற வகையில் சிறப்புகளை  வாரி வழங்கும், வாழ்க்கை துணையினால் ஜாதகருக்கும், ஜாதகரால் வாழ்க்கை துணைக்கும் மிகுந்த நன்மைகளையும் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் அமையும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு வீடு வண்டி வாகனம் மற்றும் சொத்து சுக சேர்க்கை சுய உழைப்பின் மூலம் பெறுவதற்கான வாய்ப்பை பெறுவார், சுக போகங்களுக்கு குறைவு இருக்காது, பல தொழில் செய்வதற்க்கான வாய்ப்புகள் உண்டாகும், நல்லோர் சேர்க்கை, சிறந்த நல்ல குணம், பெருந்தன்மையான மனம் போன்றவை ஜாதகரின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிலையான தொழில், கவுரவம், அந்தஸ்து உண்டாகும், சுய தொழில் அல்லது பணியில் தன்னிறைவான யோகங்களை பெரும் அமைப்பு, பொது வாழ்வில் மதிப்பு மரியாதை, கம்பீரம் மிக்க செயல்பாடுகள், தொழில் வெற்றி என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் 9ம் பாவக வழியில் இருந்து கடுமையான பித்ரு தோஷம் உண்டாவதால், சுபாகரியங்கள் யாவும் தடை தாமாதமாக நடைபெறும், ஆன்மீக வெற்றி பெற ஜாதகர் சற்று சிரமங்களை சந்திக்க நேரலாம், பெரிய மனிதர்கள், ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெற மிகுந்த தடைகளை தாண்டி பயணிக்கும் சூழ்நிலையை தரும், சில நேரங்களில் ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு பெருத்த சேதம்உண்டாக கூடும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதீத மனஅழுத்தம், போராட்டம் போன்றவற்றை அனுபவிக்கும் நிலையை தரும், நிம்மதி குறைவு, நல்ல உறக்கமின்மை போன்றவை ஜாதகரின் செயல்பாடுகளை முடக்கி வைக்கும், உடல் நல பாதிப்பு அல்லது சோர்வு ஜாதகரை பாதிக்க கூடும், மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகருக்கு பெரும் மனவேதனையை தரக்கூடும்.

நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோகங்களையும், 9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தருவது கவனிக்கத்தக்கது, ராகு திசையில் சுக்கிரன் புத்தி ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோகங்களை தருவது ஜாதகருக்கு சொத்து சுக சேர்க்கை மற்றும் தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும் என்பது சிறப்பு அம்சமாகும்.

எதிர் வரும் குரு திசை ஜாதகருக்கு 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோகங்களை நல்குவது ஜாதகருக்கு 11்ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், குழந்தைகள் மூலம் யோகம், நல்ல  வாரிசு, தனது கல்வியின் மூலம் உயர் பதவிகளை அலங்கரிக்கும் யோகம், கலைத்துறையில் வெற்றி, முன்னேற்றம் என்பது அபரிவிதமான அமைப்பில் ஜாதகருக்கு தேடிவரும், குரு திசை ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

சகோதரி தங்களுக்கு வந்துள்ள வரனின் ஜாதகம், தங்களது ஜாதகத்தின் வலிமையை விட 200% விகிதம் சிறப்பாக உள்ளதால், தாங்கள் இந்த வரனை வாழ்க்கை துணையாக தேர்வு செய்து யோகமிக்க இல்லற வாழ்க்கையை பெற " ஜோதிடதீபம் " ஆலோசணையை வாரி வழங்குகிறது, தங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை இவரே என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, வாழ்த்துக்கள்.....


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 31 மே, 2018

சுபயோகம் நிறைந்த வாழ்க்கை துணையின் ஜாதகம், இல்லற வாழ்க்கையை மகிழ்விக்குமா ?

 

 சுபயோகம் நிறைந்த வாழ்க்கை துணையின் ஜாதகம், இல்லற வாழ்க்கையை மகிழ்விக்குமா? என்றால் நிச்சயம் மகிழ்விக்கும் இதில் மாற்று கருத்து இல்லை, தமக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் உள்ள குறைகள் யாவையும் நிவர்த்தி செய்து இனிமையான இல்லற வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே, பொதுவாக நமது சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமையற்று இருப்பின், நமக்கு வரும் வாழ்க்கை துணையின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, நமது ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமையுடனும், நமது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் மேற்கண்ட பாவகங்கள் வலிமையுடன் இருப்பின் நமது இல்லற வாழ்க்கை எவ்வித இன்னல்களையும் சந்திக்காமல் சுபயோகங்கள் நிறைந்த பரிபூர்ண தாம்பத்தியத்தை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !



லக்கினம் : மேஷம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம்.

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,7,9ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 1ம் பாவக வழியில் இருந்து எதிர்ப்புகள், எதிரிகள் மறையும் தன்மையை தரும், வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் அபரிவித வளர்ச்சியை தரும், கணவர் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை ஜாதகிக்கு பரிபூர்ண நிம்மதியையும், மனநிறைவையும் தரும், வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை ஜாதகிக்கு தன்னிறைவான பொருளாதர மேன்மையை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் உண்டு, வெற்றி புகழ் கீர்த்தி யாவும் ஜாதகிக்கு தேடி வரும், பொதுமக்கள் வழியிலான ஆதரவு ஜாதகிக்கு மிகுந்த சிறப்புகளை தரும், வியாபார விருத்தி என்பது ஜாதகிக்கு மிக சிறப்பாக அமையும், கணவரின் ஆதரவுடன் வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளை பெரும் யோகத்தை தரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகிக்கு நல்ல மதிப்பு மிக்க பதவிகளை வாரி வழங்கும், கணவருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும், வாழ்க்கை துணையுடன் இணைபிரியா தாம்பத்திய வாழ்க்கையை வழங்கும், கூட்டு முயற்சிகள் யாவும் வெற்றி தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகி நல்ல ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை துணை, அவரின் முழு ஆதரவு, சக்தி வாய்ந்த கூட்டாளி, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் அதிர்ஷ்டம், வியாபாரத்தில் பரிபூர்ண வெற்றி, கூட்டு வியாபாரம், கூட்டு தொழில் வழியில் அபரிவித லாபம், கணவருக்கு அதிர்ஷ்டம், சமூக அந்தஸ்து மற்றும் உயர்பதவிகளை பெரும் அமைப்பு, இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி, நண்பர்கள் உதவியை பெறுதல், மதிப்பு மிக்க பொறுப்புகள் தேடிவரும் யோகம் எதிர்பாராத நன்மைகளை ஜாதகி பெறுவதற்கான வாய்ப்புகள், இல்லற வாழ்க்கையில் வெற்றி, எதிர்ப்புகளை கடந்து சுபயோகங்களை தன்னிறைவாக பெரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

 9ம் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்களுடன் சுமூக உறவு, பொது விவகாரங்களில் அதீத ஈடுபாடு, நம்பிக்கை மற்றும் கண்ணியம் நிறைந்த வியாபார ஆளுமை, அதிர்ஷ்டம் நிறைந்த கூட்டாளிகள், மிகசிறந்த நிர்வாக திறமை, மதிப்பு மிக்க செயல்கள் மூலம் வெற்றி பெரும் யோகம், தன்னம்பிக்கையும் தைரியமும் ஒருங்கே அமையப்பெற்ற ஜாதகி, தெய்வீக அனுக்கிரகமும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும் ஜாதகிக்கு  யோகம் மிக்க சுப வாழ்க்கையை நல்கும், கல்வியில் தேர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் பட்டைய படிப்புகளில் மேன்மையை பெரும் யோகத்தை தரும்.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு தனது சகோதரவழி ஆதரவு உண்டாகும், எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியை தரும், சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க்கையில் குறுகிய காலத்தில் மேன்மையை பெறவும் யோகம் உண்டாகும், மனதைரியமும், தன்னம்பிக்கையும் ஜாதகியின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு நல்ல தீர்வுகளை  தரும், நினைக்கும் காரியங்கள் வெற்றி பெரும், பல தொழில் செய்யும் யோகமும், சிறந்த நிர்வாக திறமையையும் தரும், எதையும் தாங்கும் மன வலிமை உண்டாகும், எதிரிகளை வெல்லும் யோகம் உண்டு, நல்ல மன நிலை, சிறந்த சிந்தனை, உண்மை சத்தியத்தை மதித்தல், தைரியம், பயணங்களில் விருப்பம், கல்வியால் மேன்மை, புதிய இடம், புதிய சிந்தனை, புதிய  சூழ்நிலைகளில் ஜாதகியின் வெற்றி அதிகரிக்கும், வியாபாரம், தரகு தொழில், ஏஜென்சி துறையில் அதீத லாபங்களை வாரி வழங்கும், ஜாதகி மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் நல்ல வெற்றியை தரும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும், பெயரும் புகழும் அதிகரிக்கும், நல்ல குணம் ஜாதகியின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், மண் மனை வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, ஆள் வசதி, சிறந்த நிர்வாக திறமை, அனைத்து சுக போகங்களையும் பெரும் அமைப்பு, பெரிய சொத்துக்கள், விளையாட்டில் ஆர்வம், அரசு கவுரவம், சமூக வாழ்க்கையில் வெற்றி, அரசியலில் ஆதாயம், தனது பெயரில் இயங்கும் சொத்துக்கள் வழியில் இருந்து வரும் வருமானம், அசையும் அசையா சொத்துக்கள் வழியிலான லாபங்கள், சுய உழைப்பால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

10 ம் பாவக வழியில் இருந்து உத்தியோகம், வியாபாரம், தொழில் முதலியவற்றில் அபரிவித லாபங்கள், கம்பீரம், தீர்க்கமான வாத திறமை, வாக்கு வன்மை மூலம் வெற்றி பெரும் யோகம், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, மென்மையான  குணம் மூலம் தொழில் விருத்தியை பெரும் யோகம், சுய தொழில் அல்லது வியாபாரம் செய்வதன் மூலம் அபரிவித நன்மைகளையும் லாபங்களை  பெரும் யோகத்தை தரும், கவுரவ பதவிகள் ஜாதகிக்கு தேடி வரும், அனைவரிடமும் நட்ப்புறவு, சுமுகமான சூழ்நிலையை கையாளும் தன்மையை தரும், கவுரவம் மிக்க பதவிகள் ஜாதகிக்கு தேடிவரும், சிறந்த நிர்வாக திறமையின் மூலம் ஜாதகி அபரிவித வெற்றிகளை பரிபூர்ணமாக பெறுவார்.

2,5,6,8,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும், இருப்பினும் 12ம் பாவகம் உபய ராசி என்பதால் ஜாதகிக்கு வரும் இன்னல்கள் யாவும் மிக குறைந்த ( 30% ) சதவிகிதத்திலேயே இருக்கும் என்பதால், பெரிய பாதிப்புகள் எதுவும் வர வாய்ப்பில்லை, 2ம் பாவக வழியில் இருந்து வார்த்தைகள் மூலம் வீண் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு, குறிப்பாக கணவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது, கையில் வரும் வருமானத்தை  சேமிக்கும் பழக்கத்தை நடைமுறைக்கு  கொண்டுவருவது அவசியமாகிறது, இல்லையெனில் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும், அவசியமற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது, நிதி நிர்வாகம் சிறப்பாக அமைவது ஜாதகிக்கு மிகுந்த நன்மையை தரும், குடும்ப வாழ்க்கையில் வரும் சிறு சிறு இன்னல்களுக்கு தானே நிவர்தியை தேடிக்கொள்வது நல்லது, கலைகளில் நல்ல ஈடுபாட்டையும், தேர்ச்சியையும் தரும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகி பூர்வீகத்தில் ஜீவிக்கும் வரை யாதொரு  நன்மைகளையும் பெற இயலாது, இதனால் பெரும் நஷ்டமும், வீண் விரையங்களையும் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும், ஜாமீன் கொடுப்பதால் மிகப்பெரிய இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குழந்தைகள் வழியிலான பிரச்சனைகள், புத்திர பாக்கிய தடைகளை பூர்விகத்தில் ஜாதகி ஜீவிக்கும் வரை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மன நிம்மதி மனப்போராட்டம் அதிகரிக்கும், குல தெய்வத்தின் ஆசீர்வாதம் இன்மையால் ஜாதகிக்கு  வரும் நன்மைகள் யாவும் தவறிவிட வாய்ப்பு அதிகம், ஜாதகியின் சமயோசித அறிவு திறனும், புத்திசாலித்தனமும் முழு அளவில் பயன் தாராது என்பதால் பூர்வீக ஜீவனத்தை தவிர்ப்பது நல்லது, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் ஜாதகிக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கடன் சார்ந்த இன்னல்கள் அதிகரிக்கும், கடன் கொடுப்பது வாங்குவது இரண்டும் மிகப்பெரிய இன்னல்களை தரும், வேலையாட்கள் மூலம்  அதீத தொல்லைகள்  உண்டாகும், தேவையற்ற வீண் செலவுகள், எதிர்பாராத மருத்துவ செலவினங்கள் ஜாதகிக்கு பெரும் இன்னல்களை தரும், நோய் எதிர்ப்பு திறன் குறைவு என்பதால் உடல் நலனில் அதிக அக்கறை கொள்ளவது நல்லது, எவரிடமும் பகைமை பாராட்டாமல் அனுசரித்து செல்வது ஜாதகிக்கு நல்ல மன நிம்மதியை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு விபத்து மூலம் மருத்துவ செலவினங்களை அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது , மனக்குழப்பம், நிம்மதி இழப்பு, உடல் நல பாதிப்பு தேவையற்ற செலவினங்கள் போன்றவை ஜாதகிக்கு அதீத இன்னல்களை தரக்கூடும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகிக்கு தாங்க இயலாத துன்பங்களை தரக்கூடும், தலைவலி மற்றும் கண் சார்ந்த இன்னல்களை தவிர்க்க சரியான தீர்வுகளை தேடுவது ஜாதகிக்கு நன்மைகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி விரக்தி மனப்பான்மையை விட்டு விட்டு, நல்ல நம்பிக்கைகளை மனதில் மேற்கொள்வது நன்மையை தரும், தேவையற்ற கவலைகள் ஜாதகிக்கு வரும் அதிர்ஷ்டங்களை தடை செய்யும், அனைவராலும் இன்னல்கள் உண்டாகும் என்பதால் ஜாதகி விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்தை அதிகரித்துக்கொள்வது சகல நன்மைகளையும்  தரும், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை எந்த காரணத்தை கொண்டு ஜாதகி தவிர்க்க கூடாது, தெளிவான சிந்தனை, சிறந்த முடிவெடுக்கும் தன்மை ஜாதகியின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகி நிறைய வீண் செலவுகள், பங்கு சந்தை லாட்டரியில் நஷ்டம், பெரும் முதலீடுகளில் ஏற்படும் பேரிழப்புகள், திருப்தி இல்லாத மனநிலை, அதீத கற்பனைகள், வீண் மன பயம் போன்றவை ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பெரும் தடைக்கற்களாக அமையும், நல்ல உறக்கம் அமைவது என்பது ஜாதகிக்கு பிரச்சனையாக அமையும், பொது வாழ்க்கையில் சில எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

சுக்கிரன் திசை தரும் பலன்கள்  ( 21/07/2001 முதல் 21/07/2021 வரை ) 

ஜாதகிக்கு சுக்கிரன் தனது திசையில் 5,6,8ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தருவது நல்லதல்ல, 5ம் பாவக வழியில்  இருந்து பூர்வீக பாதிப்பும், கற்ற கல்வி பலன் தராத நிலையும், எதிர்பார்ப்புகள் யாவும் முழுமையை பெறாத தன்மையையும் உண்டாகும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் நலம் பாதிப்பது, எதிர்ப்பு மற்றும் எதிரி தொந்தரவு ஆகியவை ஜாதகியை வெகுவாக பாதிக்கும், 8ம் பாவக வழியில் இருந்து மற்றவர்களின் இழப்பு ஜாதகியை வெகுவாக பாதிக்கும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, நிதி நிலை பாதிப்பை தரும், விபத்தை தவிர்க்க இயலாது, மருத்துவ செலவினங்கள் வீண் விரயத்தை தரும்.

சுக்கிரன் திசையில் புதன் புத்தி வழங்கு பலன்கள்  ( 21/07/2017 முதல் 21/05/2020 வரை )

புதன் புத்தி ஜாதகிக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக வாழ்க்கையை தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகிக்கு நினைக்கும் காரியங்கள் யாவும் பலிதம் பெரும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், நம்பிக்கையும், அதிர்ஷ்டமும் நல்ல சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்கும், தெய்வீக ஆசிர்வாதம் ஜாதகிக்கு நல்ல வெற்றிகளை தரும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் பரிபூர்ண நன்மைகளை தரும், வாழ்க்கை புதிய மாற்றங்களை கொண்டுவரும், புதன் புத்தி ஜாதகிக்கு பரிபூர்ண சுபயோகங்களை தன்னிறைவாக தருவது வரவேற்கத்தக்கது.

எதிர்வரும் சூரியன் திசை தரும் பலன்கள் ( 21/07/2021 முதல் 21/07/2027 வரை )

சூரியன் தனது திசையில் 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை வாரி  வழங்குவது ஜாதகிக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து சுபயோக சுப வாழ்க்கையை தரும், நல்ல நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் மிகுந்த நன்மைகள் நடைபெறும், வெளிநாடு வெளியூர் அமைப்பில் இருந்து லாபங்களும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வியாபாரம் மற்றும் தொழில் முதலியவற்றில் இருந்து வரும் அபரிவித வளர்ச்சி ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவிகரமாக அமையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்பது ஜாதகிக்கு எதிர்வரும் சூரியன் திசை வாரி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை, சூரியன் திசையில் கணவர், நண்பர்கள், கூட்டாளி, கூட்டு முயற்சி, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து ஜாதகி 100% விகித சுபயோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

பரிகாரம் :

1) தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது ஜாதகிக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும்.

2) திருவெண்காடு சென்று முக்குண நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது.

3) குல தெய்வ வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்து வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தரும்.

4) ஜாதகி பழனி முருகனை வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று தரிசனம் செய்து சகல நலன்களை பெறலாம்.

5) திருப்பதி வருடம் ஒரு முறை வளர்பிறை திங்கள் அன்று சென்று ஸ்ரீ வாரி பெருமானை தரிசனம் செய்து வருவது பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான வழியிலான இன்னல்களையும் வெகுவாக தவிர்க்க உதவும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகிக்கு 1,7ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் காணப்படுவதும், எதிர் வரும் சூரியன் திசை வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும் மிகுந்த சுபயோகங்களை நல்கும், இதனால் ஜாதகியின் கணவருக்கும், ஜாதகிக்கு பரஸ்பரம் யோக வாழ்க்கை அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்க்கை துணையின் ஜாதகம் மிக மிக வலிமையுடன் இருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355969