புதன், 6 டிசம்பர், 2023

ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு !

 "ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரம்" கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு இரண்டாம் ராசியாகவும், ஸ்திர நில தத்துவ ராசியாகவும் விளங்கும் ரிஷப ராசியில் "சூரியனின்" கார்த்திகை நட்சத்திரத்தை, தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்களுக்கு, வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.

 சூரியனார் கோயில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகே அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு வளர்பிறை ஞாயிறு அன்று சென்று, அதிகாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் சூரிய ஹோரையில் சூரிய பகவானை தாமரை மலர் அல்லது வெள்ளெருக்கு மலர் மாலை மற்றும் ஆரஞ்சு மஞ்சள் கலந்த வர்ண வஸ்திரம் சாற்றி, இறைவனை தரிசனம் செய்து வழிபடும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கு வாழ்வில் மேற்கண்ட சுபயோகங்கள் யாவும் 3 மாத காலத்தில் நடைமுறைக்கு வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட விஷயமாகும்.

  ரிஷபராசி கார்த்திகை நட்சத்திர அன்பர்கள் பொதுவாகவே மருத்துவத்திலும், தற்காப்பு கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்வார்கள், புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள், மருத்துவ ரீதியான உபகரணங்கள் போன்றவற்றை மிக சிறப்பாக கையாளும் அறிவுத்திறன் கொண்டவர்கள், மனிதர்களின் உடல் ரீதியான பிணிகளை நிவர்த்தி செய்யவும் அவர்களுக்கு உடல் மனம் ஆகிய நிலைகளில் சுகமளிக்கும் கைராசி பெற்றவர்கள், இவர்களது கரங்கள் தொட்டவுடன் மற்றவர்கள் உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் சுகம் பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது, வீர தீர செயல்களில் அதீத ஆர்வம் கொண்டவர்கள், ரகசிய கலைகளை சரியாக பிரயோகம் செய்யும் வல்லமை பெற்றவர்கள், சாதார நிலையில் இருந்து உலக புகழ் பெரும் யோகமும் பொருளாதர ரீதியான தன்னிறைவை மிக குறுகிய காலத்தில் சுவீகரிக்கும் யோகம் பெற்றவர்கள், தனக்கு கீழ் மிக பெரிய சாம்ராஜ்ஜியத்தையே நிறுவும் திறன் பெற்றவர்கள் என்பது பிறவியிலே ( சிறு வயதுமுதல் அனைத்திலும் முன்னிலை ) மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் தன்மை பெற்றவர்கள், சமூகத்திற்கு சரியான வழிகாட்டியாகவும், சீர்திருத்த வாழ்வியலை மிக எளிதாக மக்களிடம் நடைமுறைப்படுத்தும் வல்லமையும், எதிர்கால வாழ்வை சிறப்பாக எதிர்கொள்ளும் தன்மையை பொருளாதார அறிவுடன் மற்றவர்களுக்கு வழங்கும் யோகம் பெற்றவர்கள், இவர்களது பெற்றோரும், உற்றார் உறவினர்களும், இவரை சார்ந்து வாழ்வோரும் சகலவிதமான சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக பெற்று சுகமடைவர்.

குறிப்பு :

 கார்த்திகை நட்சத்திரத்தை தமது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள் இயற்கையாவே ( ஹீலிங் பவர் ) சுகமளிக்கும் வல்லமை கொண்டவர்கள், மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைகளில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும் வல்லமை பெற்றவர்கள், அறிய கலைகளை கற்றுணர்ந்து பிரயோகம் செய்யும் தன்மை சிறுவயது முதலே இவர்களுக்கு இறையருள் வழங்கி இருக்கும், செய்யும் காரியங்களில் ஒரு நேர்த்தியான விஷயங்களை கடைபிடிப்பார்கள், இவர்களது ரகசியங்களை எவரும் அறிய இயலாது என்பது கவனிக்கத்தக்கது, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 


ஜோதிடன் வர்ஷன் 

9443355696

திங்கள், 4 டிசம்பர், 2023

மேஷராசி கார்த்திகை நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு !

 "கார்த்திகை அகஇருளை அகற்றும் அகல்விளக்கு" அறியாமை எனும் அகஇருளை  அகற்றி "அறிவு" எனும் சுடரொளி  பிரகாசிக்க வைக்கும் அற்புதமான நட்சத்திரம், கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு முதல் நெருப்பு தத்துவ ராசியான மேஷ ராசியில் பிறந்து, சூரியனின் கார்த்திகை 1 ம் பாதத்தை ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்களுக்கு, அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை என்பதற்கு இணங்க

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

என்ற திரு குறளுக்கு ஏற்ப தமது வாழ்வில் அறிவுத்திறன் கொண்டு எதிலும் முன்னிலை பெரும் அற்புதமான நட்சத்திரம், தமது வாழ்க்கையில் சிறந்த நிர்வாக திறனை சிறு வயது முதலே சிறப்பாக பெற்று இருப்பார்கள், எந்த ஒரு கடுமையான சூழல்களையும் மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை பெற்று இருப்பார்கள், அரசு முதன்மை பணிகளை ( இந்திய ஆட்சி பணி ) மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள், செல்லும் இடமெல்லாம் புகழ் பெரும் யோகம் பெற்றவர்கள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நேர்மை, உண்மை, சத்தியம் போன்றவற்றை கடைபிடிக்கும் ஒழுக்கசீலர்கள், தம்மை சார்ந்தவர்களுக்கு சரியான பாதையை வழிகாட்டும் வல்லவர்கள், சுய கட்டுப்பாடு, நேர்த்தியான செயல்பாடுகள், வருமுன் காக்கும் பேராற்றல், பிறப்பின் அருமை உணர்ந்து செய்யப்படும் தன்மை, சரியான நேரத்தில் சரியான காரியங்களை செய்யும் வல்லமை, எதிர்ப்புகளை மிக எளிதாக சமாளிக்கும் பேச்சு திறன், அதிகாரம் செய்யும் யோகம், அனைவரையும் தமது பேச்சுக்கு கட்டுப்பட செய்யும் வலிமை, புதிய சிந்தனை, புதிய அணுகுமுறை, தனக்கான பாதையை தானே கட்டமைத்துக்கொள்ளும் யோகம் என்ற வகையில் சிறந்த நற்பலன்களை பெரும் அன்பர்கள் இவர்களே என்றால் அது மிகையாகாது, மிகுந்த வலிமை பெற்ற கார்த்திகை நட்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் சகல சௌபாக்கியம் மற்றும் சுபயோகங்களை தன்னிறைவாக பெற, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.

"நினைத்தாலே முக்தி நல்கும் திருவண்ணாமலை" திருக்கோவிலே கார்த்திகை நட்ஷத்திரம் முதல் பாதத்தில் பிறந்த "மேஷ ராசி" அன்பர்களுக்கு வெற்றியை பரிபூரணமாக வழங்கும் திருத்தலமாகும், தமது ஜென்ம நட்சத்திரம் அன்றோ அல்லது வளர்பிறை ஞாயிற்று கிழமை அன்றோ அண்ணாமலையாரை அபிஷேக திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து, மஞ்சள் அல்லது வெண் பட்டாடை சாற்றி வழிபாடு செய்வோருக்கு, அரசியல் ஆதாயம், அரசு பதவி, அரசு வேலைவாய்ப்பு, அமைதியான இல்லற வாழ்க்கை, உடல் மற்றும் மனதில் சிறப்பான முன்னேற்றம், பிறவி பயனை முழுமையாக சுவீகரிக்கும் ஆற்றல், கல்வியில்  தேர்ச்சி, நிர்வாக திறன் அதிகம் தேவைப்படும் துறைகளில் வெற்றி வாய்ப்புகள், சுய முன்னேற்றத்தில் அதீத ஆர்வம், தொழில் வழியிலான அபரிவிதமான வளர்ச்சி, ஆன்மீக ரீதியான வெற்றி, மணிபூரகம் சிறப்பாக  செயல்படும் தன்மை, நேர்மையான வழியில் சொத்து சுக சேர்க்கை, புகழுடன் தோன்றும் புத்திரபாக்கியம், பெற்ற பிள்ளைகள் வழியிலான சௌபாக்கியம், தடைகள் யாவும் தகர்த்தெறிந்து முன்னிலை பெரும் அமைப்பு என வாழ்வில் பல வியக்கத்தக்க நல்மாற்றங்களை முழுமையாக வாரி வழங்கும்.

 குறிப்பு :

 கார்த்திகை முதல் பாதத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்றோ அல்லது ஜென்ம லக்கினம் இந்த நட்ஷத்திரத்தில் முதல் பாதத்தில் அமைய பெற்ற அன்பர்கள் அரசு பதவிகளையும் அதிகார பதவிகளையும் மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வார்கள், மேலும் பொது மக்கள் நன்மதிப்பை பெற்று அரசாளும் யோகமும் இவர்களுக்கு உண்டு, ஆய கலைகளில் "ஜோதிட துறையில் " தேர்ச்சி பெற சுய ஜாதகத்தில் இந்த நட்சத்திரம் வலிமை பெற்று இருப்பது அவசியமானது, முக்காலங்களை கண்டுணரும் வல்லமையை தரும், திரு அண்ணாமலையார்  வழிபாடு கார்த்திகை நட்ஷத்திர அன்பர்கள் வாழ்வில் புகழ் மிக்க பொறுப்புகளையும் "ராஜயோகத்தையும்" தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696


சனி, 2 டிசம்பர், 2023

மேஷராசி பரணி நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு !


 "பரணி தரணி ஆளும்" என்பதற்கு இணங்க 
கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு முதல் நெருப்பு தத்துவ ராசியான மேஷ ராசியில் பிறந்து, சுக்கிரனின் பரணி நட்ஷத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்களுக்கு, இறையருள் கலைஞானமும், சாஸ்திர ஞானமும் ஒருங்கே அமையப்பெற்ற   திறமையாளர்களாக திகழும் தன்மையை நல்கும், இவர்கள் தமது வாழ்வில் உடல் நலம் மனோ வலிமை, தெய்வீக வெற்றி, கல்வி கேள்விகளில் தேர்ச்சி, தொழில்வழியிலான அபரிவிதமான முன்னேற்றம், கவுரவமான பதவி, இனிமையான வாழ்க்கை துணை, நல்லதோர் இல்லற வாழ்க்கை, அறவழியிலான தனசேர்க்கை, புகழ் மிக்க பொறுப்புகள், வேற்று நாடுகளில் இருந்து வரும் பொருளாதார முன்னேற்றம் போன்ற சுபயோகங்களை தன்னிறைவாக பெற, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.

 நாகபட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வரர் திருக்கோவில் "பரணி" நட்ஷத்திரத்தை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் 100% விகிதம் வாரி வழங்கும் திருக்கோவில் ஆகும், அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன, வருடம் ஒரு முறை வளர்பிறை ஞாயிறு அன்று சூரியன் அல்லது செவ்வாய் ஹோரையில் செவ்வரளி மலர்கள் கொண்டும், சிகப்பு வர்ண பட்டு வஸ்த்திரம் சாற்றியும் மனமுருக தங்களின் கோரிக்கைகளை வேண்டுதல் செய்ய, பரணி நட்ச்சத்திர அதிதேவதையான அக்னி பகவான் தங்களின் கோரிக்கைகளை 16 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து அருளாசி வழங்குவார்.

 "பரணி தரணி ஆளும்" என்பதற்கு இணங்க முழுமையான ராஜயோக வாழ்வை வழங்கும் ரகசிய இறைவழிபாடு இதுவே ஆகும், எனவே பரணி நட்சத்திர அன்பர்கள் தங்களது சுய ஜாதக வலிமைக்கு ஏற்ற நன்னாளில் மேற்கண்ட வழிபாட்டினை வெகு சிறப்பாக முன்னெடுக்கும் பொழுது தங்களின் வாழ்க்கையில் பல வியக்கத்தக்க மாற்றத்தையும், தரணி ஆளும் யோகத்தையும் பரிபூர்ணமாக பெற இயலும்.

குறிப்பு :

  பரணி நட்ச்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது ஜென்ம லக்கினம் இந்த நட்ஷத்திரத்தில் அமைந்த அன்பர்கள் மிகுந்த கலாரசனை பெற்றவர்களாக திகழ்வார்கள், கலைத்துறையில் கதா நாயகன் கதா நாயகியாக குறுகிய காலத்தில் புகழ் மிக்க வாழ்க்கையை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள், மேலும் பொது மக்கள் நன்மதிப்பை பெற்று அரசாளும் யோகமும் இவர்களுக்கு உண்டு என்பதனால், இந்த இறை வழிபாடு அவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

வெள்ளி, 1 டிசம்பர், 2023

மேஷராசி அஸ்வினி நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் இறைவழிபாடு !

 


 கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு முதல் ராசியான மேஷ ராசி "அஸ்வினி" நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்கு தமது வாழ்வில் தன்னிறைவான சுகபோகங்களை சுவீகரிக்கவும், உடல்நலம் மனோவலிமை, செய்யும் காரியங்களில் வெற்றி, கல்வியில் மேன்மை, தொழில் யோகம், திருமணம் மற்றும் இனிமையான இல்லற வாழ்க்கை, புத்திர பாக்கியம், பொருளாதார வளர்ச்சி என ராஜயோக வாழ்வை பெற மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.

 வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று குரு ஹோரையில் ( மதியம் 12மணி முதல் 1மணி வரை ) திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள கலை தெய்வமாம் "மகா சரஸ்வதி தேவி கோவிலுக்கு" வருடத்தில் ஒரு முறை சென்று வெண்ணிற புஷ்பம் ( மல்லிகை மலர் ) வெண் பட்டு வஸ்த்திரம் சாற்றி மனமுருக தங்களின் கோரிக்கைகளை வேண்டுதல் செய்ய, அஸ்வினி நட்ச்சத்திர அதிதேவதையான சரஸ்வதி தேவி தங்களின் கோரிக்கைகளை 48 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து அருளாசி வழங்குவார்.

கல்வி ஞானம், சாஸ்த்திர ஞானம், அறிய கலைகளில் தேர்ச்சி, கலைதுறையில் வெற்றி, இயல் இசை நாடகம் போன்றவற்றில் புகழ் பெற  "மகா சரஸ்வதி தேவி கோவிலுக்கு" அவரவர் சுய ஜாதக வலிமை பெற்ற நாட்களில் சென்று வழிபட சகல சௌபாக்கியமும் வந்து சேரும் என்பது ஓர் வியக்கத்தக்க அதிசயம் ஆகும், குறிப்பாக மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தை தமது ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு 100% வெற்றியை தரும் மிக சிறப்பான வழிபாடு இதுவே ஆகும்.

குறிப்பு :

  அஸ்வினி நட்சத்திரத்தை தமது ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்கள் இயற்கையாவே வீரியமிக்க செயல்பாடுகளை முன்னெடுக்கும் வல்லமை பெற்றவர்கள், மேலும் தொழில் நுட்ப அறிவியலில் சிறந்து விளங்கும் தன்மை பெற்றவர்கள், சிறந்த நிர்வாக திறமை, சரியான திட்டமிடுதல்கள், பொருளாதார முன்னேற்றத்தில் அதீத ஆர்வம் கொண்டவர்கள் என்பதனால், இந்த இறை வழிபாடு அவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

வியாழன், 14 செப்டம்பர், 2023

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் ( 30/10/2023 முதல் 19/05/2025 வரை )

  


 நவகிரகங்களில் அதீத சக்தியும், தனித்தன்மையான வலிமையையும் ஒருங்கே அமையப்பெற்ற சாயா கிரகங்களான ராகுகேது பெயர்ச்சி எதிர்வரும் 30/10/2023 ந்த தேதி அன்று, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் இருந்து ராகு பகவான் மீன ராசிக்கும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஏழாம் ராசியான துலாமில் இருந்து கேது பகவான் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்  இனிவரும் ( 30/10/2023 முதல் 19/05/2025 வரை ) ராகு பகவான் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பனிரெண்டாம் ராசியான மீன ராசியிலும், கேது பகவான் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆறாம் ராசியான கன்னி ராசியிலும் எதிர் கதியில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான பனிரெண்டு ராசிகளுக்கும் தன்னிறைவாக வாரி வழங்கும் நற்பலன்கள் என்ன? இன்னல்கள் என்ன? என்பதை பற்றியும், பனிரெண்டு ராசிகளுக்கும் நடைபெறும் யோக அவயோக பலாபலன்கள் என்ன ? என்பதை பற்றியும் இனிவரும் பதிவில் மிக தெளிவாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

சாயா கிரகங்கள் என்றால் என்ன ? 

 "ராகுகேது பெயர்ச்சி" பலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் முன் சாயா கிரகங்களான ராகுகேது வை பற்றிய ஓர் தெளிவான விளக்கத்தை அன்பர்கள் அனைவரும் அறிந்துகொள்வது அவசியமானது, நவ கிரகங்களில் சாயா கிரகங்களான ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் தான் அமரும் பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வல்லமை பெற்றது என்றால் அது மிகையாகாது, தான் அமர்ந்த பாவகத்தில் இணைந்து அமர்ந்த கிரகங்களின் வலிமையையும், தான் அமர்ந்த பாவகத்தை வசீகரிக்கும் கிரகங்களின் வலிமையையும் தனது பலனாக சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வாரி வழங்கும் சிறப்பு தகுதி பெற்றது இந்த ராகு கேது, நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான், நமது ஜனன கால ஜாதகத்தில் ராகு அல்லது கேது தாம் அமர்ந்த பாவகத்திற்கு நன்மையை தருகின்றதா? இன்னல்களை தருகின்றதா? என்பதில் சரியான தெளிவு பெற்று இருப்பதும், கோட்சார ரீதியாக சுய ஜாதகத்தில் ராகு கேது சஞ்சரிக்கும் பாவகம் வலிமை பெறுகிறதா? அல்லது வலிமை அற்று இருக்கின்றதா? என்பதை மட்டும் துல்லியமாக கண்டுணர்வது, நமது எதிர்கால வாழ்க்கையை வெகு சிறப்பாக, யோகமானதாக நிலைநிறுத்திகொள்ள ஏதுவாக அமையும்.

மீனராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் தரும் பொது பலன் : 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மீனம் பனிரெண்டாம் ராசி என்பதால், இங்கு சஞ்சரிக்கும் ராகு நீர் தத்துவம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளை வழங்கக்கூடும், உணவு பொருட்கள், தானியம், ஆடை ஆபரணம் போன்ற பொருட்கள் விலை நிலைத்தன்மை அற்று ஏற்ற இறக்கங்களை அதிக அளவில் சந்திக்க கூடும், நிம்மதி அற்ற நிலை, மனநிலை பாதிப்பு, தெய்வீகத்தில் அதீத நாட்டம், மனஇறுக்கம், மனப்பிறழ்வு போன்ற இன்னல்களை பெண்பாலினர் அதிக அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பொருளாதார சிக்கல்கள் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை தரகூடும், தமது முதலீடுகளில் இருந்து பெரும்பாலான அன்பர்கள் வீண் விரயங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதால் காப்பீடு செய்து கொள்வது மிகுந்த நன்மைகளை தரும், இழப்புகள் வழியில் இருந்து வரும் பாதிப்பில் ஒவ்வொருவரும் தற்காத்து கொள்வதற்கான சரியான உபாயம் இதுவே, ஏனெனில் ராகுவின் தாக்கம் தாங்க இயலாத இன்னல்களை தரும், பொதுமக்கள் மாயை மற்றும் மனப்போராட்டம் இவற்றில் இருந்து விடுபட குலதெய்வ வழிபாடும், அண்ணதானமும்  சரியான வழிப்பாதையை நல்கும், ஆய கலைகள் 64ம் நல்ல தேர்ச்சியை பெறுவார்கள், கலைகளை தமது ஜீவனாக கொண்டு வாழ்வோருக்கு சகல சம்பத்தும் சேரும், இயல் இசை நாடகம் துறையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் உண்டு, அரசாளும் அன்பர்களுக்கு சோதனை அதிகரிக்கும், தவறான கருத்துக்கள் வெகுவான கலவர பாதிப்புகளை வழங்க கூடும், விளைபொருட்கள் பற்றாக்குறை அல்லது விலைவாசி ஏற்றம் போன்றவற்றால் நிம்மதி இழப்பு உண்டாவதுடன், பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை தரக்கூடும், விஷ ஜந்துக்கள் தொல்லை, புதிய வகை நோய் தொல்லைகள், உடல் ஆரோக்கிய பாதிப்பு என சற்று அதிக இன்னல்களை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதால், அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமானது.

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவான் தரும் பொது பலன் :

 கடின உழைப்பாளிகளுக்கு உழைப்பிற்கான ஊதியம் மற்றும் அங்கீகாரத்தை முழுமையாக பெற இதுவே சரியான காலம், நல்ல தொழில் முன்னேற்றத்தை உழைப்பவர்கள் அனைவரும் சிறப்பாக பெறுவார்கள், புதிய கண்டுபிடிப்புகள் எளிய மக்களுக்கு வெகுவான நன்மைகளை தரும், விவசாயம் செழிக்கும், விவசாயிகள் நலம் பெறுவார், இத்தனை நாள் இல்லாத முன்னேற்றத்தை இனிவரும் காலங்களில் உழவு தொழில் புரிவோர் முழுமையாக அடைவார்கள், நிதி சார்ந்த தொழில்கள் விருத்தி அடையும், ஏற்றுமதி அதிகரிக்கும், பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவர், ஆன்மீக வாழ்க்கை மேலோங்கும், தெய்வீக தரிசனம் பெற அனைவரும் ஆர்வம் காட்டுவர், சிறு குறு தொழில் புரிவோர் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும், பொதுவாழ்க்கையில்  நேர்மை அதிகரிக்கும், பொதுமக்கள் நலம் பெறுவர், பொருளாதார வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், நாட்டின் முன்னேற்றம் எதிர்பாராத சிறப்புகளை பெரும், அரசு துறை சம்பந்தப்பட்ட அன்பர்களுக்கு மிகுந்த நன்மைகளை பெரும் அற்புதமான நேரமிது, அயல் தேசங்களில் ஜீவனம் செய்யும் அன்பர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு நிச்சயம் உண்டு, உள்நாட்டு தொழில்கள் விவசாயம் போன்றவை செழிக்கும், நினைத்த காரியங்களை அனைவரும் வெற்றி கொள்வர், நீதி நிலைநாட்ட படும், விளையாட்டு துறை மற்றும் மருத்துவ துறை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம் ஒரு பொற்காலமாக  திகழும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, இளம் பெண்களுக்கு திருமண யோகமும், புத்திர பாக்கியமும் வெகு சிறப்பாக அமையும், தடைகள் அனைத்தும் தகர்த்து எறியப்படும், ஆசிரியர்கள் பெருமை கொள்ளும்  நிகழ்வுகள் உண்டு, மதுவின் பாதிப்பை மக்கள் உணர்ந்து விழிப்புணர்வு கொள்வர், சுய முன்னேற்றத்தில் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்துவர், மாணவர் அனைவரும் சிறந்த கல்வியை பெறுவார், துன்பங்கள் குறைந்து இன்பங்கள் அதிகரிக்கும் நேரமிது, கேதுவின் சஞ்சாரம் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களையும், புதிய தலைமையினை ஏற்றுக்கொள்ளும் யோகத்தையும் நல்கும், எதிர்பாராத புதிய மாற்றங்களை இந்த நாடு மற்றும் மக்கள் அனைவரும் சுவீகரித்து நலம் பெறுவர்.

குறிப்பு : 

அடுத்த பதிவில் மேஷ ராசி அன்பர்களுக்கு ராகுகேது பெயர்ச்சி வழங்கும் பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்து கொள்வோம்.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696