வெள்ளி, 9 நவம்பர், 2012

சுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் !




ஐயா வணக்கம்,

கேள்வி :
ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள்,குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட
பாவத்தை,கிரகத்தை குரு பார்வை செய்தால் தோஷ நிவர்த்தி என பாரம்பரிய  ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.இது எந்த அளவிற்கு சரி?
இதன் விதிவிலக்குகள் என்னவிளக்கங்களை ஜோதிடதீபத்தில் எதிர்பார்க்கிறேன்.

நன்றிகளுடன்,
ஜோதிடபித்தன்


பதில் :
ஒரு ஜாதகத்தில் பாதிக்க பட்ட ஒரு பாவகத்தை குரு பகவானின் பார்வை சரி செய்து நன்மையை வாரி வழங்கும் என்பதெல்லாம் உண்மையில்லை , குரு பார்வை தரும் தீமையை பற்றி அறியாதவர்கள் சொல்லும் வார்த்தையாகவே இதை எடுத்து கொள்ள முடியும் , தனுசு அல்லது மீன இலக்கின ஜாதகருக்கு முறையே மிதுனம் மற்றும் கன்னியில் நட்பு நிலை ) அமர்ந்து  நேரெதிர் பார்வை செய்யும் குரு பகவான் தனது லக்கினத்தையே தானே 100 சதவிகிதம் கெடுத்து விடுவார் .

மேலும் தனுசு இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு மேஷத்தில் அமர்ந்து குரு பகவான் பகை நிலை )ஒன்பதாம் பார்வையாக தனது பாவகத்தை  தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் , இதே லக்கினத்தை சார்ந்தவருக்கு சிம்மத்தில் அமர்ந்த குரு பகவான் ( நட்பு நிலை ) ஐந்தாம் பார்வையாக தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் , இதே போன்று மீன இலக்கின ஜாதகருக்கு கடகத்தில்  அமர்ந்து குரு பகவான் உச்ச நிலை )ஒன்பதாம் பார்வையாக தனது பாவகத்தை  தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும்இதே லக்கினத்தை சார்ந்தவருக்கு விருச்சகத்தில் அமர்ந்த குரு பகவான் பகை  நிலை ) ஐந்தாம் பார்வையாக தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் , மேற்கண்ட அமைப்பில் தனது லக்கினத்திர்க்கே தனது பார்வையில் இரண்டுவிதமான பலன்களை தரும் குரு பகவான் , ஒரு பாவகத்தை பார்வை செய்தால் அந்த பாவகம் அணைத்தது தோஷங்களையும் , குறைகளை நிவர்த்தி செய்யும் என்பது எப்படி ? என்று எங்களுக்கு தெரியவில்லை .

சரி உங்களுக்காக ஒரு எளிய விதி முறை சொல்கிறோம் புரிகிறதா என்று பாருங்கள் , அதாவது ஒரு ஜாதகத்தில் குரு பகவான் கோண அதிபதியாக வந்து (லக்கினம் ஐந்து ஒன்பது )கோண பலம் பெற்று தனது வீட்டிற்கு முதல் , ஐந்து , ஒன்பது ) அமர்ந்தால் குரு பகவானின் பார்வை 100 சதவிகித நன்மையை தரும் .

ஒரு ஜாதகத்தில் குரு பகவான் கேந்திர அதிபதியாக வந்து ( நான்கு , எழு , பத்து ) மறைவு பலம் பெற்றால் தனது வீட்டிற்கு 2,6,8,12 ல் அமர்ந்தால் ) நன்மை தருவார் கேந்திர பலம் பெற்று நான்குஎழுபத்து ) ஒரு பாவகத்தை  பார்வை செய்தால் 200 சதவிகிதம் தீமையான பலனை தரும்இந்த அடிப்படை விஷயத்தை புரிந்து கொண்டால் நிச்சயம் குரு பகவானின் பார்வையின் தன்மையை  தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , மேலும் குரு  பார்வையின்  நன்மை தீமையை லக்கினத்தை அடிப்படையாக கொண்டே நிர்ணயம் செய்ய வேண்டும் .

கேள்வி :
 நீசமான குருவின் பார்வைக்கு பலம் உண்டா?

 பதில் : 
ஒரு கிரகம் எந்த நிலையில் இருந்தாலும் அதன் பார்வை , பார்க்கும் இடத்திற்கு உண்டான நன்மை தீமை பலன்களை எவ்வித தங்கு தடையும் இன்றி செய்யும் , ஆக குரு நீச்சம் பெற்றாலும் சரி உச்சம் பெற்றாலும் சரி , பார்க்கும் பார்வை சம்பந்த பட்ட பாவகத்திர்க்கு நன்மை செய்கிறதா தீமை செய்கிறதா என்பதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் .
கேள்வி :
வக்ரமான குருவின் பார்வைக்கு பலம் உண்டாஅஸ்தமனமான குருவின் பார்வைக்கு பலம் உண்டாஆறு,எட்டு,12 ல் மறைந்த குருவின் பார்வைக்கு பலம் உண்டா?

பதில் :
நிச்சயம் உண்டு இதில் எவ்வித குழப்பமும் இல்லை . மேலும் குரு பகவான் வகிரகம்அஸ்தமனம்,மறைவு எந்த நிலை பெற்றாலும் சரி அதன் பார்வை பலத்தில் எவ்வித வேறுபாடும் வர வாய்ப்பில்லை என்பதே உண்மை .

கேள்வி :
லக்னத்திற்கு பாதகாதிபதியாக வரும் குருவின் பார்வையால் நன்மை உண்டா?

பதில் :
இந்த விஷயத்தை சுய ஜாதகம் கொண்டு நிர்ணயம் செய்வதே சால சிறந்தது ,

கேள்வி :
குருவின் 3பார்வைகளில் வித்யாசம் உண்டா?சமம் தானா?

பதில் :
குரு பகவானின் 3 விதமான பார்வையில் எவ்வித வேறுபாடும் இருக்க வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை .

கேள்வி :எந்த அமைப்பால் குருவின் பார்வையால்  ஜாதகனுக்கு தீமை ஏற்படும்?

பதில் :
ஒரு ஜாதகத்தில் கேந்திரங்களுக்கு அதிபதியாக வரும் குருபகவான் , கேந்திர பலம் பெற்று தனது வீட்டை தானே பார்வை செய்யும்பொழுது ஜாதகர் அடையும் இன்னல்களுக்கு ஒரு அளவே இருக்காது , இந்த பலன் கோட்சார குருபகவானுக்கும் பொருந்தும் . ஆக குரு பகவானின் பார்வையும் தீமை செய்யும் என்பதை ஜோதிடதீபம் இந்த பதிவின் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்த விரும்புகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

வியாழன், 8 நவம்பர், 2012

ராகு,கேது திரிகோண ஸ்தானங்களில் அமரும் போது அந்த பாவகத்தின் பலனைக் கெடுத்துவிடுமா ?



  
கேள்வி :   

அண்ணா,  பாவக்கிரகங்களின் வரிசையில் வரும் ராகு,கேது திரிகோண ஸ்தானங்களில் அமரும் போது அந்த பாவகத்தின் பலனைக் கெடுத்துவிடும் என்பது எப்படி?. பொதுவாக 5ல் அமர்ந்தால் பூர்வீகம் கிடையாது,பரதேச ஜீவனம்,புத்திரதோஷம் என்பது எந்த அடிப்படையில்?

பதில் : 

திரிகோண ஸ்தானம் என்று சொல்லும் லக்கினம் , ஐந்தாம் பாவகம், ஒன்பதாம் பாவகம் ஆகிய பாவகங்களில் , லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும் பொழுது 100 சதவிகித நன்மையே வாரி வழங்குவார்கள் ( அது எந்த லக்கினம் என்றாலும் சரி ) மேலும் ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகங்களுக்கு அதிபதியாக  குரு, சுக்கிரன், சூரியனுடன் சேராத புதன் , வளர் பிறை சந்திரனாக  இருப்பின் , அந்த பாவகத்தில் அமரரும் ராகு கேது 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை தம்பி , ஆக திரிகோண ஸ்தானங்களில் அமரும் ராகுகேது நன்மையையும் செய்வார்கள் என்பதை இதில் இருந்து தாங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் .

கிரகங்களில் பாவ கிரகம் என்றும் , சுப கிரகம் என்றும் , நிர்ணயம் செய்யும் பொழுது சுய ஜாதகத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயம்  செய்வதே சால சிறந்தது , பொதுவாக பாவ கிரகம் , சுப கிரகம் என்று நிர்ணயம் செய்வது சரியான பலனை சொல்ல நிச்சயம் உதவி செய்யாது , பல ஜோதிடர்கள் சொல்வது போல் சூரியன் , தேய் பிறை சந்திரன் , சூரியனுடன் சேர்ந்த  புதன் , செவ்வாய் , சனி , ராகு கேது , ஆகிய கிரகங்கள் பாவ கிரகமென்றும் , வளர் பிறை சந்திரன் , சூரியனுடன் சேராத புதன் , குரு , சுக்கிரன் ஆகியவை சுப கிரகமென்றும் நிர்ணயம் செய்வது சுய ஜாதகத்தை வைத்து பலன் சொல்ல நிச்சயம் உதவாது, மேலும் பாரம்பரிய ஜோதிட முறையில் சரியான பலன் சொல்வதற்கு பல விஷயங்களை போட்டு குழப்பிக்கொண்டு இருக்க வேண்டும் ,இருப்பினும் ஜாதக பலனும் சரியாக வர வாய்ப்பில்லை , கிரகம் பாவகத்திர்க்கு தரும் நன்மை தீமை , பாவகம் ஜாதகருக்கு தரும் நன்மை தீமை , நடக்கும் திசை புத்திகள் தரும் பாவக பலன்கள் ஆகியவைகளை சரியாக சொல்ல இயலாது , மேலும் பாரம்பரிய முறையில் ஜோதிட பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது , கோட்சார கிரக நிலை ( கோட்சார கிரகங்கள் நடக்கும் திசை பலன் தரும் பாவகதுடன் சம்பந்தம் பெற வில்லை என்றாலும் கூட ) தரும் பலன்கள் , நடப்பு திசை சுப கிரகத்தின் திசையா? பாவ கிரகத்தின் திசையா ? ( சம்பந்த பட்ட கிரகத்தின் திசை எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரியாவிட்டாலும் கூட ) ராசி நிலையை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லும் பொழுது , சொல்லும் பலன்கள் யாவும் பொது பலன்கள் என்ற அடிப்படையிலேயே நின்றுவிடும் என்பதே உண்மை .

கேள்வி :

நீங்களோ ராகு,கேது அமரும் வீட்டு அதிபதியைக்கூட கணக்கில் எடுக்க வேண்டாம்,இவர்கள் நன்மை செய்கின்றனரா? தீமை செய்கின்றனரா? எனப்பார்த்தால் போதும் என்கிறீர். அப்படியெனில் 12 பாவகங்களிலும்  ராகு,கேது தரும் நன்மை,தீமை பலனை எந்த அடிப்படையில் கணக்கில் கொள்வது. மற்ற கிரகங்கள் பார்வை,சேர்க்கையால் பாதிக்கப்படுவது போல் இவர்கள் பாதிக்கப்பட மாட்டனரா?.

பதில் :

ராகு கேது பற்றி பல விஷயங்களை நமது வலை பதிவில் எழுதியாகிவிட்டது தம்பி இருப்பினும் , தங்களுக்காக ஒருமுறை சொல்கிறோம் , ராகு கேது எந்த பாவகதில் அமருகிரார்களோ அந்த பாவகத்தின் பலனை முழுவதுமாக ஏற்றுகொள்வார்கள் எனும்பொழுது , அந்த பாவக அதிபதி எங்கு இருந்தால் என்ன ? எடுத்துகாட்டாக ஒரு நாட்டின் மன்னனை தன் வசபடுத்தி கொண்டு , அந்த நாட்டின் ஆட்சியை ராணுவம் நடத்துவதிற்கு ஒப்பான, சர்வதிகார  தன்மையை ராகு கேது  கிரகங்கள் பெற்றிருக்கிறது என்பதே உண்மை , இங்கே பாவக அதிபதிக்கு எவ்வித உரிமையும் இல்லை , பாவகதிர்க்கு அதிபதி என்ற பதவி மட்டுமே நன்மை தீமை பலன்களை நடைமுறையில் ராகு கேது கிரகங்களே தரும் .     

கேள்வி :

சுபக்கிரகங்கள் எனச்சொல்லப்படும் குரு,சுக்கிரன்,தனித்த புதன், வளர்பிறை சந்திரன் இந்தக் கிரகங்கள் மறைவு ஸ்தான நிலை பெற்றால் ஜாதகரின் வாழ்வு பெரும்பாடாகிவிடும் என்பதும்,பாவிக‌ள் ம‌றைவு ஸ்தான‌ம் ஏறினால் ஏற்ற‌மான வாழ்வு என்பதெல்லாம் எந்தளவு உண்மை?.

 பதில் :

 சுபக்கிரகங்கள் எனச்சொல்லப்படும் குரு,சுக்கிரன்,தனித்த புதன், வளர்பிறை சந்திரன் இந்தக் கிரகங்கள் மறைவு ஸ்தான நிலை பெறுவது லக்கினம் எனும் முதல் பாவகத்திர்க்கா ? தனது பாவகதிர்க்கா ? அல்லது சந்திரன் அமர்ந்த ராசிக்கா ? எதற்கு சுபகிரகங்கள் மறைவு  நிலை பெற்றால் தீமையை தரும் ? எடுத்து காட்டாக ஒரு கடக இலக்கின ஜாதகருக்கு நான்காம் அதிபதியாக வரும் , சுக்கிரன் தனது பாவகதிர்க்கு மறை பலம் அதாவது துலாம் ராசிக்கு 6,8,12 ல் மறைந்தால் மிகவும் சிறப்பான பலன்களை நான்காம் பாவக அமைப்பிற்கு செய்வார் எனவே இங்கே சுக்கிரன் சுப கிரகம் ஆனால் மறைவு தனது வீட்டிற்கும் லக்கினத்திற்கு மறைவு நிலை பெரும் பொழுது நன்மையை தரவில்லையா ?  ஒரு மேஷ  இலக்கின ஜாதகருக்கு லக்கினம் மற்றும் 6 ம் வீட்டிற்கு அதிபதியான புதன் ( சூரியனுடன் சேர்ந்த புதன் )  12 ல் மறையும் பொழுது எப்படி நன்மையை செய்ய முடியும் ? எனவே தாங்கள் கேட்ட கேள்விக்கு இதற்க்கு மேல் விளக்கம் சொல்ல என்னால் இயலவில்லை .

கேள்வி :

ஜாத‌க‌ங்க‌ளில் குறிப்பிட‌ப்ப‌டும் யோக‌ங்க‌ள் என்ப‌து ப‌ற்றிய‌ ஜோதிட‌தீப‌த்தின் க‌ருத்து என்ன‌?.(உதார‌ண‌ம் க‌ஜ‌கேச‌ரி,ப‌ஞ்ச‌ம‌கா புருஷ‌யோக‌ம்,இன்னும் பிற‌ யோக‌ங்க‌ள்)

பதில் : 

யோகங்கள் என்பது கிரகங்கள் கேந்திர,திரிகோண பாவகங்களில் சேர்க்கை பெறும் அமைப்பை வைத்து நிர்ணயம் செய்கின்றனர் , உண்மையில் சுய ஜாதகத்தில் ஒரு பாவகதிர்க்கு உட்பட்ட பாகைக்குள் அந்த கிரகங்கள் செர்ந்திருக்கின்றனவா ? என்று தெரிந்து கொள்ளாமல் நம்மால் நிச்சயம் யோக அமைப்பை பற்றி சொல்ல இயலாது , அப்படியே ஒரு யோக நிலை ஜாதகத்தில் இருந்தாலும் , அந்த பாவகத்தின் பலன்கள் நடக்கும் திசையில் பலன் தர வேண்டும் , அப்பொழுதுதான் ஜாதகருக்கு சம்பந்தபட்ட கிரக சேர்க்கையின் மூலம் நன்மை நடை பெறும் , மாறாக நடப்பு திசை புத்தியில் சம்பந்த பட்ட பாவகத்தின் பலன்கள் நடை முறைக்கு வரவில்லை என்றால் , ஜாதகத்தில் எந்த யோகம் மற்றும் கிரக சேர்க்கை இருந்தும் பயன் சிறிதும் இல்லை என்பதே உண்மை . ஆக யோக நிலையை பற்றி ஆய்வு செய்யும் பொழுது சுய ஜாதகத்தை அடிப்படையாக கொண்டு பலன் நிர்ணயம் செய்வதே சரியான பலன்கள் சொல்ல உதவும் .

கேள்வி :

ஒரு பாவ‌க‌ம் பாதிக்க‌ப்ப‌டுகிற‌து என்ப‌து எப்ப‌டி? விள‌க்க‌ம் தேவை.

பதில் :

ஒரு பாவகம் பாதிப்படைகிறது என்பதை லக்கினம் மற்றும் பாவகங்கள் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக வைத்தே நிர்ணயம் செய்ய முடியும் , மேலும் சுய ஜாதக அமைப்பில் இருந்து மட்டுமே பாவகங்களின் நிலையை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , நடப்பு திசை தரும் நன்மை தீமை பலன்களையும் , சுய ஜாதக அமைப்பை வைத்தே நிர்ணயம் செய்ய இயலும் , பொதுவாக ஒரு பாவகம் நல்ல நிலையில் இருக்கிறது , பாதிக்க பட்டு இருக்கிறது என்று நிர்ணயம் செய்வது சற்றே கடினம் , இருப்பினும் ராகு கேது , பாவக அதிபதிகள் அமரும் இடம் ஆகியவை வைத்து சொல்லலாம் ஆனால் அவை பொது பலனாகவே இருக்கும் என்பதே உண்மை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  

திங்கள், 5 நவம்பர், 2012

சுய ஜாதகத்தில் ஐந்தில் கேது , குரு பார்வை நலம் தருமா ? புத்திர பாக்கியம் உண்டா ?




பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் ஜோதிடர்கள் சொல்லும் முதல் வார்த்தை குழந்தை பாக்கியத்தை தடை செய்யும் என்பதாகவே இருக்கிறது , கிழ்க்கண்ட  ரிஷப இலக்கின ஜாதகருக்கு கன்னியில் அமர்ந்த கேது தரும் பலன்கள் பற்றி , இதற்க்கு முன் பார்த்த ஜோதிடர்கள் சொன்ன கருத்துகள் பின் வருமாறு :



1 ) ரிஷப லக்கினத்தில் இருந்து ஐந்தில் கேது ( அதாவது கன்னியில் ) அமர்வதால் ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லை என்றும் , இதற்க்கு பரிகாரம் செய்தால் மட்டுமே நன்மை உண்டு , மேலும் புத்திர பாக்கியம் கிடைப்பது அரிது என்று பலன் சொல்லியிருக்கிறார் .

2 ) மற்றொரு ஜோதிடர் ஐந்தில் கேது அமர்ந்தாலும் , அந்த பாவகதிர்க்கு குரு பார்வை இருப்பதால் , நன்மை விளையும் , புத்திர சந்தானம் கிட்டும் என்றும் , குரு பார்வை ஜாதகருக்கு புத்திர சந்தானத்தை வழங்கும் கவலை பட தேவையில்லை என்று கூறியிருக்கிறார்கள் . மேலும் பல ஜோதிடர்கள் பலவாறு சொல்லி ஜாதகரையும் அவர்களை சார்ந்தவர்களையும் குழப்பி  இருக்கின்றனர் என்பது வேறு விஷயம் .

மேற்கண்ட வாறு ஐந்தாம் பாவக பலனை நிர்ணயம் செய்வதில் இருவேறு கருத்து ஜோதிடர்களிடையே நிலவும் பொழுது , ஜாதகம் காண வந்தவர்கள் நிலை என்ன ? குழந்தை பாக்கியம் உண்டா ? இல்லையா ? ஒருவர் குழந்தை பாக்கியம் இருக்கும் என்கிறார் , ஒருவர் குழந்தை பாக்கியம் இல்லை என்கிறார் எதை நம்புவது என்ற நிலைக்கு தள்ளபடுவார்கள் என்பதே உண்மை , இதில்  ஜோதிட தீபம் தரும் சரியான பலன் என்னவென்பதை  இனி காண்போம் .

மேற்கண்ட ஜோதிடர்கள் சொன்ன பலன்கள் யாவும் தவறு என்பதே ஜோதிட தீபத்தின் கருத்து , முதலில் ராகு கேது கிரகத்தின் தனி தன்மையை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறது ஜோதிட தீபம் , அது ராகு கேது கிரகங்கள் ஒரு பாவகத்தில் அமரும் பொழுது அந்த பாவகத்தின் பலனை முழுவதும் தாமே எடுத்துகொண்டு நன்மை தீமை பலன்களை தவறாமல் செய்யும் என்பதே உண்மை , இதில் எவ்வித சந்தேகமும் இல்லை , மேலும் இந்த பாவகத்தை எந்த கிரகங்கள் பார்வை செய்தாலும் , அந்த பார்வை எவ்வித நன்மை தீமை பலனையும் செய்யாது , அல்லது ராகு கேது உடன் சேர்ந்து அமரும் கிரகங்களும் எவ்வித நன்மை தீமை பலனையும் செய்ய இயலாது , நன்மையோ தீமையோ ராகு கேது இரு கிரகங்களே பொறுப்பு ஏற்று பலனை வழங்கும் , ஆக ராகு கேது கிரகங்கள் அமர்ந்த பாவகத்தை பார்க்கும் கிரகங்களுக்கும் , சேர்ந்து அமர்ந்த கிரகங்களுக்கும் எவ்வித நன்மை தீமை பலனை தரும் வலிமை இல்லை என்பதை இந்த இடத்தில் பதிவு செய்வதில் ஜோதிட தீபத்திற்கு இரு வேறு கருத்துகள் இல்லை .

அடுத்து மேற்கண்ட ஜாதகத்தில் ஜோதிடர்கள் நிர்ணயம் செய்த பலன்கள் சரியா ? என்பதை ஜோதிட தீபம் ஆய்வுக்கு எடுத்துகொள்கிறது , அதாவது ஜோதிடர்கள் சொன்ன அனைத்தும் தவறான பலன்கள் என்பதை தெளிவாக ஜோதிட தீபம் உரைக்க விரும்புகிறது , உண்மையில் கேது அமர்ந்த பாவகம் எது என்பதை தெரியாமலே ஜோதிடர்கள் பலன் கண்டுள்ளனர் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறது .

அதாவது இந்த ரிஷப இலக்கின ஜாதகருக்கு லக்கினம் என்பது ரிஷப ராசியில் 56 .00 பாகையில் ஆரம்பித்து, மிதுன ராசியில் 82 .02 பாகையில் முடிவடைகிறது , அதேபோல் ஜாதகரின் ஐந்தாம் பாவகம் என்பது கன்னியில் 172 .09 பாகையில் ஆரம்பித்து துலாம் ராசியில் 205 .13 பாகையில் முடிவடைகிறது , ஆக ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம் எனும் ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் கேது இருக்கிறாரா என்பதை கணிதம் செய்து கண்டு பலன் சொல்வதே சரியான பலனாக இருக்கும் , ஜாதகருக்கு ஐந்தாம் பாவகம் ஆரம்பிக்கும் பாகை கன்னியில் 172 .09 பாகையில் , எனவே இந்த 172 .09  பாகைக்கு மேல் 205 .13 பாகைக்குள் கேது அமர்ந்தால் மட்டுமே கேது ஐந்தில் அமர்வதாக எடுத்து கொள்ள இயலும் , ஆனால் கேது 167 .43  அமர்ந்து விடுவதால் கேது கன்னியில் இருக்கும் நான்காம் பாவகதில் அமர்வதாக எடுத்துகொண்டு பலன் சொல்வதே சரியான பலனாக இருக்கும் , மேலும் கேது என்ற கிரகத்திற்கும், ஐந்தாம் பாவகதிர்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் உறுதி ஆகிறது .

அடுத்த கேள்வி இந்த ஜாதகருக்கு புத்திர சந்தானம் உண்டா ? இல்லையா ? என்பது , ஐந்தாம் பாவகதிர்க்கு அதிபதியான புதன் என்ற கிரகத்தை வைத்தும் , ஐந்தாம் பாவகதுடன் சம்பந்தம் பெரும் கிரகங்களை வைத்தும், குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்யலாம் , ஐந்தாம் பாவக அதிபதியும் சம்பந்தம் பெரும் கிரகங்களும் , ஐந்தாம் பாவகத்திர்க்கு நன்மையை தருவதால் ஜாதகருக்கு நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு என்பதை உறுதி செய்யலாம் , இதே போன்ற ஐந்தாம் பாவகம் வலிமை பெற்ற அமைப்பு உள்ள பெண்ணை ஜாதகர் திருமணம் செய்து கொண்டால் நிச்சயம் ஆண் வாரிசு உண்டு என்பதை 100 சதவிகிதம் உறுதியாக சொல்ல இயலும் .

ஒரு பாவக பலனை நிர்ணயம் செய்யும் பொழுது , அந்தபாவகம் ஆரம்பிக்கும் பாகை அடிப்படையாக வைத்து பலன் கண்டால் நிச்சயம் ஜாதக பலன்களை தெளிவாக சொல்ல  உறுதுணை புரியும் , மேலும் அந்த பாவகதிர்க்கு உட்பட்ட பாகைக்குள் சம்பந்தம் பெரும் கிரகங்கள் தரும் பலன்களை அடிப்படையாக வைத்து பலன் காணுவதே ஜாதக பலன்களை சரியாக சொல்ல எதுவாக இருக்கும் , மேற்க்கண்டவாறு குத்து மதிப்பாக பலன் கண்டால் ஜோதிடரை நம்பி வந்து பலன் கேட்டு அதன் படி நடக்கும் நபர்களின் நிலை பெரிய கேள்வி குறியாக மாறிவிட வாய்ப்பு உண்டு .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  

திங்கள், 29 அக்டோபர், 2012

ஏழரை,அஷ்டம,அர்த்தாஷ்டமச் சனி மற்றும் ராகுகேது பெயர்ச்சி,குரு பெயர்ச்சி சுய ஜாதகத்தில் தரும் பலாபலன்கள் !




அண்ணா,
     
ஜோதீட தீபத்தின் கருத்துக்கு எதிர்க் கருத்தை முன்மொழிபவனில்லை. நிச்சயம் உண்மையான கருத்துக்கள் தான்.ஒரு ஜாதகத்தில் கிரகப்பெயர்ச்சிகளைப் பலன் சொல்வதற்கு எந்தளவுக்குப் பயன்படுத்துவது ?. ஏழரை,அஷ்டம,அர்த்தாஷ்டமச் சனி மற்றும் ராகு,கேதுப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சியைவைத்துப் பல ஜோதிடர்கள் பலன் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். இது எந்தளவுக்கு சுய ஜாதகத்தைக் கட்டுப்படுத்துகிறது. நான் கருதுவது கிரகப்பெயர்ச்சி என்பது மனரீதியான பாதிப்புகளைத்தான் உண்டாக்குகிறது என நினைக்கிறேன். மேற்சொன்ன கருத்துக்கள் பற்றிய தாங்களின் நிலைப்பாடு என்ன?.

அன்பு தம்பி தங்களின் கருத்திற்கு  நன்றி !

 தாங்கள் கிரக பெயர்ச்சி பலன்கள் என்று சொல்வது சந்திரன் இருக்கும் இடத்தை அடிப்படையாக வைத்து ( அதாவது ராசியை ) சொல்லப்படும் கோட்சார பலன்களை பற்றியதாக இருக்கும் என்று நம்புகிறேன் , பொதுவாக பல ஜோதிடர்கள் ஒருவருடைய ஜாதக அமைப்பில் பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது , சந்திர ராசிக்கு சனி , குரு , ராகு கேது கிரகங்கள் , கோட்சார ரீதியாக சம்பந்தம் பெரும் அமைப்பை வைத்து பலன் காணுகின்றனர் , இதில் சனி பகவான் சந்திரன் இருக்கும்  ராசிக்கு கோச்சார ரீதியாக 12 ல் வரும் பொழுது விரைய சனி என்றும், சந்திரன் இருக்கும் ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது ஜென்ம சனி என்றும் ,சந்திரன் இருக்கும் ராசிக்கு 2 ல் வரும் பொழுது குடும்ப சனி என்றும் பலன் காணுகின்றனர் , மேலும் மேற்கண்ட அமைப்பில் சந்திரன் இருக்கும் ராசியிலும் , முன் பின் ராசியிலும் சனிபகவான் சஞ்சாரம் செய்யும் ஒவ்வொரு இரண்டரை ஆண்டு காலத்தை ஏழரை சனியாக கொண்டு பலன் காணுகின்றனர்.

 மேலும் இந்த ஏழரை காலகட்டமும் ஜாதகருக்கு அதிக இன்னல்களை தரும் என்றும் , இந்த காலகட்டங்களில் ஜாதகர் எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பது நலம் என்றும் , எச்சரிக்கை செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்று யாரும் ஆய்வு செய்வதில்லை , மேலும் ஏழரை சனி என்றாலே ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை தரும் , விபத்தை தரும் , இழப்பை தரும் என்றும் , எழரை சனி காலத்தில் ஜாதகர் திருமணம் செய்வது அதிக இன்னல்களையும் , பிரிவை தரும் என்று சொல்பவர்களும் உண்டு , இதை போன்றே அஷ்டம,அர்த்தாஷ்டமச் சனி மற்றும் ராகு,கேதுப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சியை அடிப்படையாக வைத்துப் பல ஜோதிடர்கள் பலன் சொல்வதும் உண்டு , இதில் எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி நாம் இந்த பதிவில் நாம் காண்போம் .

மேற்கண்ட அமைப்பில் பலன் காணும் முறையெல்லாம் ஒருவருடைய ஜாதகத்தில்,சரியான பலன் காண சிறிதும் உதவாது என்பதே ஜோதிட தீபத்தின் கருத்து .


மேலும் கோட்சார கிரகங்கள் மன ரீதியான பாதிப்பை மற்றுமே தரும் என்பதும் தவறான அணுகு முறை என்பதும் ஜோதிட தீபத்தின் கருத்து , காரணம் கோட்சார கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சாரம் செய்யும் பொழுதும் , சம்பந்த பட்ட ராசி என்ன தத்துவமோ , அதற்க்கு தகுந்தார் போல் நன்மை தீமை பலன்களை வழங்கும் என்பதே உண்மை , எடுத்துகாட்டாக சர ராசியுடன் சம்பந்தம் பெரும் பொழுது , விரைவான பலன்களையும் , ஸ்திர ராசியுடன் சம்பந்தம் பெரும் பொழுது நிலையான தொடர் பலன்களையும் , உபய ராசியுடன் சம்பந்தம் பெரும்பொழுது சிறு சிறு நன்மை தீமை பலன்களையும் தரும் .

 மேலும் நெருப்பு ராசியில் ஜாதகரின் செயல்பாடுகளையும் , நில ராசியில் ஜாதகரின் உடல் , சொத்து சுக அமைப்பிலும் , காற்று ராசியில் ஜாதகரின் அறிவாற்றல் சம்பந்தபட்ட அமைப்பிலும் , நீர் ராசியில் ஜாதகரின் மன நிலையை கொண்டும் நன்மை தீமை பலன்களை தரும் , மேற்கண்ட ராசி நிலைகளை தொடர்பு படுத்தி பலன் காணுவது , கோட்சார பலன்களை சரியாக சொல்ல உதவும் என்பதே உண்மை , தாங்கள் சொல்வது போல் மன ரீதியான பாதிப்பை மட்டுமே செய்யும் எனில் கோட்சார கிரகங்கள் நீர் ராசியுடன் சம்பந்தம் பெற்று நன்மை தீமை பலனை செய்தால் மட்டுமே மன ரீதியான பாதிப்பை தரும் என்று ஏற்றுகொள்ள இயலும் .


கோட்சார கிரகங்கள் தரும் பலனை சரியாக நிர்ணயம் செய்ய, ஜாதக ரீதியாக கடை பிடிக்க வேண்டிய விதிகளை இனி பார்ப்போம் :

1 ) நடக்கும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை நடத்துகிறது .
2 ) அந்த பாவகம் சுய ஜாதகத்தில் எப்படி பட்ட நிலையில் இருக்கிறது , அதாவது நல்ல நிலையில் இருக்கிறதா ? பாதிக்கபட்டு இருக்கிறதா ?
3 ) அந்த பாவகத்துடன் தற்பொழுது நவகிரகங்கள் கோட்சார ரீதியாக சம்பந்தம் பெறுகிறதா ?
4 ) அப்படி சம்பந்தம் பெறும் கோட்சார கிரகங்கள் சம்பந்த பட்ட பாவகத்திற்க்கு நன்மை தருகிறதா? தீமையை தருகிறதா ?

மேற்கண்ட விதிகளை கடைப்பிடித்து , துல்லியமான ஜோதிட கணிதம் கொண்டு நவ கிரகங்களை நிலையை தெளிவாக தெரிந்து கொண்டு ஜாதக பலன்களை நிர்ணயம் செய்து சொல்லும் பொழுது , நிச்சயம் ஜாதக பலன்கள் துல்லியமாக வரும் என்பதில் சந்தேகம் இல்லை . மேற்கண்ட அமைப்பு மட்டுமே ஜாதக பலன்களை சரியாக சொல்ல உதவும் தம்பி .


இதை விடுத்து சந்திர ராசியை வைத்து பலன் காணுவது என்பது நிச்சயம் சரியான பலன் சொல்ல முடியாது என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து . 



எடுத்துகாட்டாக :

மேற்கண்ட சிம்ம லக்கின , துலாம் ராசி ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் குரு திசை , 1 ,3 ,5 ,9 ,11 ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலன்களை மட்டுமே செய்து கொண்டு இருக்கிறது , மற்ற ஜோதிடர்கள் துலாம் ராசியை வைத்து எழரை சனி நடக்கிறது என்று சொல்லி , சனிபகவானால் நடக்கும் அத்தனை தீமையும் தங்களுக்கு வரும் என்று எச்சரிக்கை செய்வார்கள் .

 ஆனால் உண்மையில் இந்த சிம்ம லக்கின ஜாதகருக்கு நடக்கும் குரு திசை மூன்றாம் பாவக  பலனை நடத்தினால் மட்டுமே , ஜாதகருக்கு தற்பொழுது கோட்சார கிரகமாக இருக்கும் சனிபகவானால் நன்மை தீமை பலன்கள் நடை பெரும் , ஆனால் குருதிசை 11 ம் பாவக பலனை செய்வதால் , இந்த 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் கோட்சார கிரகங்கள் நன்மை செய்கிறதா ? தீமையை செய்கிறதா ? என்று பார்த்தால் மட்டுமே போதும்.

இங்கே  ராசிக்கு கோட்சார ரீதியாக வரும் ஏழரைசனி எவ்வித பலனையும் தராது ,  எட்டில் இருக்கும் குருவும் எவ்வித பலனையும் தராது , 4 மற்றும் 10 ல் இருக்கும் ராகு கேது கிரகமும் எவ்வித பலனையும் தராது , ஏனெனில் இந்த சிம்ம லக்கின , துலாம் ராசிக்கு நடக்கும் குரு திசை  11 ம் பாவக பலனை மட்டுமே நடத்துகிறது, என்பதால் மேற்கண்ட கிரகங்கள் 11 ம் பாவகத்துடன் எவ்வித சம்பந்தம் பெறாத காரணத்தினால் , சனி , குரு , ராகு கேது கிரக நிலையை பற்றி நாம் எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை , மேலும் தற்பொழுது நடக்கும் குரு திசை 11 ம் பாவக பலனை நடத்துவதால் குரு திசை அதிக நன்மையான பலன்களை வாரி வழங்கும் என்பதே உண்மை .

ஆக சந்திரன் நிற்கும் இடத்தை ( அதாவது ராசியை வைத்து ) பலன் காணுவது என்பது , குத்து மதிப்பாக சொல்லும் ஜாதக பலனாகவே இருக்கும் என்பதும் , இதை நம்பி செய்யும் காரியங்கள் ஜாதகருக்கு அதிக பாதிப்பை தரும் என்பதே உண்மை , இதை வைத்து தனது வாழ்க்கை பாதையை ஜாதகர் சரியாக அமைத்து கொள்வது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதை ஆகிவிடும் என்பதே உண்மை .


சரியான ஜோதிடரை கண்டு , சரியான ஜோதிட ஆலோசனை பெற்று வாழ்க்கையில் நலம் பெறுங்கள் அன்பர்களே .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
jothidadeepam@gmail.com