வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

பங்கு வர்த்தகத்தில் லாபம் ஈட்டும் யோக ஜாதக நிலை !





பொதுவாக அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை விரும்பாத நபர்களே இல்லை எனலாம், அதிர்ஷ்டம் மூலம் வாழ்க்கையில் செல்வ வளமும், பொருளாதார முன்னேற்றமும் அடையும் அன்பர்களை கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்வதுண்டு, யார் செய்த புண்ணியமோ ஜாதகர் சகல நலன்களும் பெற்று வாழ்க்கையில் சிறப்பாக இருக்கிறார் என்று பெரியோர்கள் சொல்ல கேட்டதுண்டு, ஆக ஒருவருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பை வாரி வழங்குவதில் முதன்மை வகிப்பது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே என்றால் அது மிகையில்லை, ஒருவரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் 5ம் பாவகத்திர்க்கு முக்கிய பங்கு உள்ளது.

 குறிப்பாக ஜோதிட ஆலோசனை பெற வரும் பல அன்பர்கள் எனக்கு பங்கு வர்த்தகத்தில் வருமானம் ஈட்டும் யோகம் உண்ட என்று கேட்பது வாடிக்கையானதே, இதற்க்கு உண்டான பதில் ஒருவருடைய சுய ஜாதகத்தில் 5ம் பாவகமும் 11ம் பாவகமும் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பங்கு வர்த்தகத்தில் கை நிறைவான வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் என்பது உறுதியான விஷயம்.

சுய ஜாதகத்தில் 5ம் வீடு 5,11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றாலோ, 11ம் வீடு  5,11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றாலோ, ஜாதகர் பங்கு வர்த்தகம் சார்ந்த எந்த ஒரு தொழில் செய்தாலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், நினைத்து பார்க்க இயலாத லாபம் கிடைப்பது உறுதி, 5,11ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது நுண் அறிவு திறனால் பங்குவர்த்தகத்தில் லாபம் ஈட்டும் யோகத்தை தரும் .

குறிப்பாக மிதுன இலக்கின ஜாதகருக்கு துலாமும்,மேஷமும் 5,11ம் பாவகமாக வரும், மிதுன லக்கினத்திற்கு துலமும்,மேஷமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பொது மக்கள் வாயிலாகவும், தனது சுய திறனை கொண்டும் லாபம் ஈட்டும் தன்மை உண்டாகும், குறிப்பாக ஜாதகருக்கு பங்குவர்த்தக துறையில் தினசரி முதலீடு செய்வதால் தொடர்ந்து வருமானம் ஈட்டும் யோகம் உண்டாகும், நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால் ஜாதகருக்கு இரட்டிப்பு யோகம் உண்டாவது நிச்சயம்.

கன்னி இலக்கின ஜாதகருக்கு மகரமும், கடகமும் 5,11ம் பாவகமாக வரும், கன்னி லக்கினத்திற்கு மகரமும் கடகமும் வலிமை பெரும் பெரும் பொழுது ஜாதகர் செய்யும் தொழில் துறை சார்ந்த நிலைகளில் இருந்தும், சொத்து சுக அமைப்பில் இருந்தும் தனது அதிர்ஷ்டத்தின் மூலம் லாபம் ஈட்டும் தன்மையை தரும், குறிப்பாக ஜாதகர் பங்குவர்த்தக துறையை சுய தொழிலாகவே ஏற்று நடத்தலாம் 100 சதவிகித வெற்றியை தரும், மேலும் நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால், ஜாதகரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது.

தனுசு இலக்கின ஜாதகருக்கு மேஷமும்,துலாமும் 5,11ம் பாவகமாக வரும், தனுசு இலக்கின ஜாதகருக்கு மேஷமும்,துலமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது நண்பர்கள் வழியிலும், கூட்டு தொழில் அமைப்பில் இருந்தும் தனது சுய திறமையால் லாப வாய்ப்பை பெரும் யோகத்தை தரும் குறிப்பாக, ஜாதகருக்கு சம்பந்தம் இல்லாமலேயே பல இடங்களில் இருந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும், பங்கு வர்த்தக துறையில் முதலீடு செய்வதால் ஜாதகருக்கு பன்மடங்கு லாபம் உண்டாகும், மேலும் நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால், ஜாதகர் தனது சுய திறமையால் அதிர்ஷ்ட வாய்ப்பினை பெரும் யோகத்தை 100 சதவிகிதம் தரும்.

மீன இலக்கின ஜாதகருக்கு கடகமும்,மகரமும் 5,11ம் பாவகமாக வரும், மீன இலக்கின ஜாதகருக்கு கடகமும், மகரமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது தன்னிகரற்ற தொழில் திறனை கொண்டும், சிறப்பாக கற்ற கல்வி அறிவை கொண்டும் அதிர்ஷ்ட வாய்ப்பினை பெரும் யோகம் உண்டாகும், பங்கு வர்த்தக துறையில் ஆலோசனை சொல்லும் சிறப்பு திறமையை ஜாதகர் இயற்கையாகவே பெற்றிருப்பர், இவர் சொல்லும் கணிப்புகள் யாவும் 100 சதவிகித வெற்றியை பங்குவர்த்தக துறையில் குறைவின்றி தரும். மேலும் நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால், ஜாதகர் குறுகிய  காலத்தில் பங்கு வர்த்தக துறையில் கொடி கட்டி பறக்கும் யோகத்தை தரும்.

மேற்கண்ட மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் எனும் உபய இலக்கின ஜாதகர்களுக்கு 5,11ம் பாவகங்கள் சர ராசியாக அமைவதால் 100 சதவிகித யோகத்தை மேற்கண்ட அமைப்பில் இருந்து வாரி வழங்கும், ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எனும் ஸ்திர இலக்கின ஜாதகர்களுக்கு 5,11ம் பாவகங்கள்   ராசியாக அமைவதால் 35 சதவிகித யோகத்தை மேற்கண்ட அமைப்பில் இருந்து வாரி வழங்கும், மேஷம்,கடகம்,துலாம்,மகரம் எனும் சர இலக்கின ஜாதகர்களுக்கு 5,11ம் பாவகங்கள் ஸ்திர  ராசியாக அமைவதால் 70 சதவிகித யோகத்தை மேற்கண்ட அமைப்பில் இருந்து வாரி வழங்கும்.

ஆக அன்பர்களே ! பங்கு வர்த்தகத்தில் ஜாதகர் வருமானம் பெற வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் 5,11ம் பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9842421435
9443355696

சனி, 8 பிப்ரவரி, 2014

மேஷ லக்கினம் - இலக்கின வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் !




ஒருவரின் பிறந்த சரியான நேரம், இடம், நாள் ஆகியவற்றை 
அடிப்படையாக கொண்டு கணிக்கப்படும் லக்கினம் வலிமையுடன் இருக்கும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து பெரும் யோகம் மற்றும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

கால புருஷ தத்துவத்திற்கு முதல் வீடான மேஷ ராசியை லக்கினமாக கொண்ட ஜாதகருக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் அடையும் நன்மைகளை பற்றி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் , மேஷ ராசி காலபுருஷ தத்துவத்திற்கு முதல் வீடாகவும், சர இயக்கம் கொண்ட நெருப்பு ராசியாக இருப்பதால் ஜாதகரின் செயல்பாடுகள் யாவும் மிகவும் துரிதமாகவும், சுறுசுறுப்பு நிறைந்தவராகவும் காணப்படுவார், மேஷ லக்கினத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருவதால், ஜாதகர் தனது செயல்களை திறம்பட செய்து வெற்றிகாணும் தன்மையை இயற்கையாகவே பெற்று இருப்பார், தான் செய்யும் காரியங்கள் யாவிலும் ஒரு நேர்த்தியையும், ஒழுக்கத்தையும் எதிர்ப்பார்க்கும் குணத்தை கொண்டு இருப்பார், லட்சியமுடன் ஒரு காரியத்தில் இறங்கி இரவு பகல் பாராமல் உழைக்கும் தன்மையை பெற்று இருப்பார்.

 ஜாதகரின் தோற்றம் என்பது மிகவும் கம்பீரம் நிறைந்த திடகாத்திரமான உடலமைப்பை இயற்கையாக பெற்று இருப்பார், அனைவரையும் வசீகரிக்கும் முக அமைப்பு மற்றும் தேசஸ் ஜாதகரிடம் இயற்கையாகவே குடிகொண்டு இருக்கும், சுய கட்டுபாடு , நேர்மை தவறாமை, தனக்கு சரியென பட்டத்தை துணிவாக வெளிபடுத்து தன்மை, தம்மை நாடி வந்தவரை காக்கும் வல்லமை, எந்த ஒரு காரியத்தையும் நினைத்தவாறு செய்து முடிக்கும் பேராற்றல், தனக்கும் தன்னை சார்ந்தவருக்கும் நன்மை செய்யும் குணம், பொது வாழ்வில் தூய்மையாக செயலாற்றும் யோக அமைப்பு, பிரதி பலன் பாராமல் உழைக்கும் தன்மை மற்றும் உதவும் மனப்பான்மை ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து இருக்கும். 

மேஷ ராசியை லக்கினமாக பெற்று லக்கினம் வலிமையுடன் அமையும் பொழுது ஜாதகருக்கு பூரண ஆயுள் அமைந்துவிடும், மேலும் அதித மனவலிமை இயற்கையாக ஜாதகருக்கு அமைந்திருக்கும், கடுமையான சூழ்நிலைகளை தாங்கும் உடல் மற்றும் மன வலிமை படைத்தவராக ஜாதகர் காணப்படுவார், தனது முன்னேற்றத்தில் ஜாதகருக்கு தீவிர ஆர்வம் இருக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விடாமல் முறையாக பயன்படுத்தி தனது முன்னேற்றத்தை செழுமையாக அமைத்தது கொண்டு வாழ்க்கையில் மற்றும் சமுகத்தில் நல்ல அந்தஸ்த்தை விரைவில் பெரும் தன்மையை பெறுவார்.

கால புருஷ தத்துவத்திற்கு முதல் ராசியாக மேஷம் வருவதால், ஜாதகரின் லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து 100 சதவிகித யோகத்தை தங்கு தடையின்றி விரைவாக பெரும் யோகத்தை தரும், மற்றவர்களின் செயல் திறனுக்கும், ஜாதகரின் செயல் திறனுக்கும் பன்மடங்கு வித்தியாசம் இருக்கும், எங்கும் வேகம் எதிலும் வேகம் என்ற தன்மையை ஜாதகரின் உடலமைப்பிற்கு தந்துவிடும், ஜாதகருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்ப்படும் பொழுது அதிலிருந்து விரைவாக குணம் பெரும் மன ஆற்றலை தரும், வலியை தாங்கும் உடல் அமைப்பை ஜாதகர் பெற்று இருப்பது விசேஷமான ஒன்றாக கருதலாம், மேலும் ஜாதகர் எந்த ஒரு பிரச்சனையும் எதிர்கொண்டு வெற்றி பெரும் மன வலிமை கொண்டவராக காணப்படுவார்.

 மேஷ ராசியை லக்கினமாக கொண்டு லக்கினம் வலிமை பெரும் அமைப்பை பற்றி  இனி பார்ப்போம் மேஷ  ராசியை லக்கினமாக பெற்றவர்களின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு 1,2,3,4,5,7,9,10 பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும், 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து தீய பலன்களை அனுபவிக்கும் நிலை உண்டாகும். பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் சம்பந்தபட்ட பாவக  வழியில் இருந்து 200 மடங்கு தீய பலன்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவார்.

ஆக மேஷ லக்கினமாக உள்ள ஜாதகருக்கு லக்கினம் 6,8,12 பாவகத்துடனும், பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது மட்டுமே அதிக தீமைகளை செய்யும் இலக்கின வழியில் இருந்து, மற்ற பாவகங்களான 1,2,3,4,5,7,9,10 ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது மிகுந்த நன்மையே தரும் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும்.

குறிப்பு : 

 லக்கினம் எந்த பாவகத்துடன் தொடர்பு பெறுகிறது என்பதை ஜாதகரின் சுய ஜாதகத்தை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 3 பிப்ரவரி, 2014

நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் சுக வாழ்வும், வசதி மிக்க இருப்பிடமும்!




சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு நான்காம் பாவகமான சுக ஸ்தானம் வலிமை பெரும் பொழுது, ஜாதகர் பெரும் பொழுது ஜாதகர் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து பெரும் நன்மைகளையும், சுப யோக வாழ்க்கையை பற்றி இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

  சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடான கடகம் வலிமை பெரும் பொழுதும், லக்கினத்திற்கு 4ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் முதலில் தனது தாய் வழியில் இருந்து நிறைவான யோகத்தை பெறுபவராக இருப்பார், குறிப்பாக சிறு வயது முதல் தாயின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலையை தரும், அன்பு பாசம் நிறைந்த குழந்தை பருவத்தை ஜாதகருக்கு தந்துவிடும், "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே" என்ற புலமை பித்தன் வரிகளுக்கு பொருத்தமாக, ஜாதகர் நல்ல குணங்களை பெறுவதற்கும், பரந்த மனதை பெறுவதற்கும் இந்த நான்காம் பாவகமே முழு காரணமாக அமைகிறது.

 பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் நீர் ராசிகள் வலிமை பெரும் பொழுது ஜாதகரின் மனம் மிகவும் நல்ல நிலையில் இருக்கும், சிறந்த நல்ல எண்ணங்களால் சூழப்பட்ட சூழ்நிலையில் வளரும் தன்மையை தரும், பறந்து விரிந்த மன ஆற்றலின் காரணமாக ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், ஜாதகர் மன ஆற்றல் மிக சிறப்பாக செயல் படும், தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுப்பாட்டை நிறைவாக நிலையாக தரும்.

 ஆக சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் மேற்கண்ட நன்மைகளை தரும் பொழுது ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் என்பது ஜாதகரின் மன இயல்புக்கு ஏற்றவாறு அமைந்துவிடும், பொதுவாக நான்காம் பாவகம் சுக ஸ்தானம் என்று வர்ணிக்க படுகிறது, எங்கே சுகம் நிறைந்து நிற்கும் எங்கு மனம் ஒரு நிலை படுகிறதோ அங்கெ சுகம் நிறைந்து நிற்கும் என்பதற்கு இணங்க ஜாதகரின் நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் மனம் ஒரு நிலையாக ஒடுங்கி நிற்கும், ஒரு நிலையான மனம் சகல வெற்றிகளுக்கும் காரணமாக அமையும், நினைத்ததை அனைத்தும் பெரும் யோகத்தை தரும்.

சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் முதலில் நல்ல தாய் அன்பையும் அரவணைப்பையும் பெரும் யோகத்தை தரும், இதனால் ஜாதகரின் மனம் பண்பட்டதாக மாறும், அடுத்து ஜாதகரின் வளரும் சூழ்நிலையில் நல்ல நண்பர்களின் ஆலோசனையை பெரும் யோகத்தை தரும், இளமை பருவத்தில் சிறந்த கல்வியை பெரும் யோகத்தை வாரி வழங்கும், தனது வளரும் காலத்தில் அடிப்படை வசதிகளை குறைவின்றி பெரும்  யோகத்தை தரும், கேட்க்கும் பொருட்கள் யாவும் ஜாதகருக்கு தடையின்றி கிடைக்கும்.

 மனிதனுக்கு அடிப்படை தேவைகளில் முதன்மையானது, குடியிருப்பதற்கு தேவையான நல்ல வசதி மிக்க ஒரு வீடு, ஜாதகத்தில் நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகருக்கு இயற்கையாக சகல வசதிகளும் நிறைந்த வீடு சிறு வயதிலேயே அமைந்துவிடும், இதன் காரணமாக ஜாதகருக்கு வளரும் பருவத்தில் கல்வியிலே அல்லது சுகமான வாழ்க்கையிலோ எவ்வித தடையும் இன்றி நிறைவான சுக வாழ்வை தங்கு தடையின்றி தரும், அடிப்படையில் நல்ல வீடு ஒருவருக்கு அமைந்துவிட்டால் ஜாதகருக்கு சகல தேவைகளும் பூர்த்தியாகும்.

 " இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே " என்ற கவிஞரின் வரிகளுக்கு ஏற்ப, சுக ஸ்தானம் வலிமை பெரும் பொழுது நல்ல வசதி மிக்க வீடு அமைந்து, ஜாதகரின் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்க ஆரம்பித்து விடும்.

 ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் லக்கினத்துடன் தொடர்ப்பு பெரும் பொழுது ஜாதகருக்கு "கிழக்கு திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.
 ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் சுக ஸ்தானமான 4ம் வீட்டுடன் தொடர்பு  பெரும் பொழுது ஜாதகருக்கு "வடக்கு திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டுடன் தொடர்பு  பெரும் பொழுது ஜாதகருக்கு "மேற்கு  திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டுடன் தொடர்பு  பெரும் பொழுது ஜாதகருக்கு "தெற்கு திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.

 எந்த ஒரு ஜாதகத்திலும் சுக ஸ்தானமான நான்காம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நன்மை தருவதில்லை, குறிப்பாக குடியிருக்க நல்ல வீடு அமைவதில்லை, நல்ல வண்டி வாகன யோகத்தை தருவதில்லை, சொத்து சுக அமைப்பை தருவதில்லை, இதே போன்று சுக ஸ்தானம் 5,6,8,12ம் வீட்டுடன் தொடர்பு பெறுவதும் நல்லதல்ல, ஜாதகரின் சுகமான வாழ்க்கை என்பது பெரிய கேள்வி குறியாக மாறிவிடுகிறது .

குறிப்பு :
 சுய ஜாதக ரீதியாக ஒருவரின் நான்காம் பாவகம் எந்த வீட்டுடன் தொடர்பு பெறுகிறதோ அந்த திசையை குறிக்கும் வாயிர்ப்படி அமைத்த வீட்டில் ஜாதகர் குடியிருக்கும் பொழுது, சகல செல்வங்களையும், படிப்படியான முன்னேற்றங்களையும், வண்டி வாகன யோகத்தையும் பெற்று நிறைவாக வாழும் யோகத்தை தருகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435


வியாழன், 30 ஜனவரி, 2014

சகல ஐஸ்வர்யங்களும் வாரி வழங்கும் தை அமாவாசை வழிபாடு!


ஒருவரின் சுய ஜாதகத்தில் பாதிக்க பட கூடாத பாவகங்களில் முதன்மை வகிப்பது உடல் உயிராகிய  லக்கினம், பூர்வ புண்ணியம் என்று சொல்லப்படும் 5ம் பாவகம், பாக்கிய ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 9ம் பாவகம், மேற்கண்ட மூன்று பாவகங்கள் சுய ஜாதகத்தில் பாதிக்கப்படும் பொழுது, ஜாதகரின் கருமையம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி, ஜாதகரின் உடல் நலம், கல்வி அறிவு, தொழில் மற்றும் வேலை வாய்ப்பு, திருமண தடை மற்றும் திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்கள், குழந்தை பாக்கியம் இன்மை, பொருளாதார பாதிப்புகள், ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு உட்ப்பட்டு தனது வாழ்க்கையை தானே சீரழித்து கொள்ளும் தன்மை, என்ற அமைப்பில் கடுமையான தீய பலன்களை வழங்க ஆரம்பித்து விடும்.

மேலும் மேற்கண்ட பாவகங்களின் பலனை நடப்பு திசை தர ஆரம்பித்து விட்டால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக மாறிவிடும், மேலும் தனது நல வாழ்விற்கு உண்டான வழிகாட்டுதலும் ஜாதகருக்கு கிடைக்காது, தனித்து போராட வேண்டிய சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளப்படுவார், மேற்கண்ட பாதிப்பில் இருந்து ஜாதகர் விடுபடவும், பாதிக்கபட்ட பாவகங்களில் இருந்து ஜாதகர் யோகம் பெறவும் இந்த தை அமாவாசை வழிபாடு உறுதுணை புரியும் என்றால் அது மிகையில்லை.

இலக்கின பாதிப்பு :

 ஜாதகர் இந்த தை அமாவசை தினத்தில் தனது பெற்றோரிடம் அட்சதை பெற்று ஆசி பெறுவதும், அவர்களுக்கு விருப்பமானதை வாங்கி தருவதும், சிறந்த நற்பலனை ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து பெற்று தரும், நல்ல ஆன்மீக குருவிடம் முறையான தீட்சை பெறுவது ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து வரும் துன்பங்களும், அக இருளும் நீங்கி அறிவில் தெளிவு பெற்று தனது பிறவி துன்பம் நீங்கி யோக வாழ்க்கையை பெற, ஜாதகருக்கு உறுதுணை புரியும், இந்த தை அமாவாசை தினத்தில் மேற்கண்ட வழிமுறைய கடை பிடித்து நலம் பெருக.

பூர்வ புண்ணிய பாதிப்பு :

 மாயை எனும் உலக வாழ்க்கையில் இருந்தும், இறை நிலையுடன் உயிர் கலப்பு பெறவும் முன்னோர்கள் காலம் காலமாக, முறையாக குல தேவதை வழிபாடு  என்ற முறையினை நமக்காக விட்டு சென்றுள்ளனர், குல தேவதை வழிபாடு என்பது ஜாதகரின் அறிவில் தெளிவையும், சிறப்பான சிந்தனை ஆற்றலையும், தனது துன்பங்களில் இருந்து விடுபட்டு யோக வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கும், வழிவகுக்கம் என்றால் அது மிகையில்லை, நமது குல தெய்வ வழிபாடே நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளையும், வாழ்க்கையை சிறப்பாக  வாழும் வாழ்க்கை நெறியினையும் நமக்கு உணர்த்தும் என்றால் அது மிகையில்லை, எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தும் நம்மை காப்பது குல தெய்வ வழிபாடே, சரியான நேரத்தில் நமக்கும் தனது அருள் கரங்களால் காத்து அருளும் தன்மை மற்றும் சக்தி, நமது குல தேவதைக்கே உண்டு.

எனவே இந்த தை அமாவசை தினத்தில் தனது குல தேவதையை நாடி சென்று தன்னால் இயன்ற அளவு அண்ணதானம் பிறருக்கு செய்து குல தெய்வத்தை முறையாக, அவரவர் முறை படி குடும்பத்துடன் சென்று சிறப்பாக வழிபாடு செய்து வருவது ஐந்தாம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை நீக்கி, பூர்வீகத்தில் யோக வாழ்வு, குழந்தை பாக்கியம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய் தொழில் முன்னேற்றம், கல்வியில் வெற்றி, மன நிம்மதி, சிறந்த அறிவாற்றல், கலை ஆர்வம், கற்பனை திறன் ஆகியவற்றை தங்கு தடையின்றி பெற்று தரும் என்றால் அது மிகையில்லை.

பாக்கிய ஸ்தான பாதிப்பு :

 ஜாதகர் மேற்கொள்ளும் காரியங்களில் எல்லாம் தொடர் தோல்வியும், காரிய தடையும், முன்னேற்றம் அற்ற நிலையும், கௌரவம் நற்பெயருக்கு ஏற்ப்படும் கலங்கத்திர்க்கும் , அடிப்படை காரணமாக அமைவது பாக்கிய ஸ்தான பாதிப்பே, மேலும் ஜாதகர் சமுதாயத்தில் நல்ல மனிதராக மதிப்பு மரியாதையுடன் சிறப்பாக வாழும் யோகத்தை தருவது இந்த பாக்கிய ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, மேலும் ஆன்மீக வாழ்க்கையில் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் தருவதும், கற்ற கல்வியை சரியான முறையில் பயன்படுத்தும் நுண் அறிவாற்றலை தருவதும் பாக்கிய ஸ்தானமே என்றால் அது மிகையில்லை.

மேற்கண்ட பாக்கிய ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித நன்மையை பெற, இந்த தை அமாவாசை தினத்தில் தனது பித்துருக்களுக்கு முறையான வழிபாட்டினையும், தர்ப்பணத்தையும் தருவது முக்கியமாகும், மேலும் இந்துவாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் மூன்று 1 குல தெய்வ வழிபாடு 2 பித்ரு வழிபாடு 3 பிராமண தர்மம் ஆகியவற்றை இந்த தை அமாவசை அன்று கடை பிடித்து, 16 வகை செல்வமும், சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வழைஅடிவாழையாக செழித்து ஓங்கி சிறப்பாக வாழ இறை அருள் துணை நிற்கட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435

புதன், 22 ஜனவரி, 2014

பூர்வபுண்ணியம் பாதிக்கபடும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் !


ஒருவருடைய சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் என்பது கொஞ்சம் அதிகமே, குறிப்பாக ஜாதகரின் அறிவு திறன் கடுமையாக பாதிக்கப்படும், சிந்தனை ஆற்றல் மட்டுப்படும், ஜாதகரின் திட்டங்கள் யாவும் கனவாகவே இருக்கும், நடைமுறை படுத்துவதற்கு உண்டான வாய்ப்பை வெகுவாக குறைக்கும், ஆக ஜாதகரின் வெற்றி என்பாது குதிரை கொம்பாகவே இருக்கும்.

 சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய பாவகங்களில் முதன்மை வகிப்பது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் என்றால் அது மிகையில்லை, ஒருவர் எவ்வளவு கல்வி அறிவு பெற்று இருந்தாலும் சரி, உலக அனுபவம் பெற்று இருந்தாலும் சரி, பெரிய திறமைசாலியாக இருந்தாலும் சரி, சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் வலிமையற்று இருந்தால், ஜாதகரின் திறமைகள் யாவும் பயனற்று போகும், ஜாதகரால் வீணடிக்க படும், அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்ப்படுத்தும்.

பூர்வ புண்ணியம் பாதிக்கபடுவதை மூன்று வகையாக பிரிக்கலாம், 1 ஐந்தாம் பாவகம் உபய,ஸ்திர ராசிகளால் பாதிக்க படுவது, 2 ஐந்தாம் பாவகம் சர ராசியினால் பாதிக்க படுவது, 3 ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தான அமைப்பின்னால் பாதிக்கபடுவது, என்ற வகையில் பாதிப்பான பலன்களை ஐந்தாம்  பாவகம் வழங்கும், இதில் முதல் வகை பாதிப்பு என்பதின் வீரியம் 33% ஆகவும், இரண்டாம் வகை பாதிப்பு என்பதின் வீரியம் 80% ஆகவும், மூன்றாம் வகை பாதிப்பின் வீரியம் 200% மாகவும் அமையும், எனவே எந்த ஒரு  ஜாதகருக்கும் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தாம் பெற  கூடவே கூடாது.

எடுத்துகாட்டாக பின் வரும் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!



  இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானமான 9ம் வீட்டுடன் தொடர்பு பெற்று 9ம் வீடு காலபுருஷ  தத்துவ அமைப்பிற்கு முதல் வீடாக அமைவதும், ஐந்தாம் பாவகம் என்பது காலபுருஷ தத்துவத்திற்கு 9ம் வீடாக வருவதும் ஜாதகருக்கு தீமைகளை செய்யும் அமைப்பாக கருதலாம், இதனால் ஜாதகர் அடையும் இன்னல்கள் என்ன ? அனுபவித்த துன்பங்கள் என்ன ? என்பத்தை பற்றி சற்றே ஆய்வு செய்வோம் அன்பர்களே !

1 ஜாதகர் பிறந்த ஐந்து வருடங்களுக்குள்ளேயே, ஜாதகரின் தகப்பனார் தனது பெயரில் தனது முன்னோர்களின் பெயர்களில் உள்ள சொத்து நிலம் வீடு ஆகியவற்றை விற்றுவிட்டு வேறு இடத்தில் குடி பெயரும் சூழ்நிலையை தந்தது, ஜாதகருக்கு அடிப்படையில் வளரும் சூழ்நிலையை மாற்றி அமைத்தது, ஜாதகர் தனது உறவுகளை விட்டு விட்டு மற்று மனிதர்கள் வாழும் ஒரு  புதிய இடத்தில் வளரும் சூழ்நிலையை தந்தது, இதனால் ஜாதகரின் குழந்தை  பருவம் பாதிப்படைந்தது, நல்ல ஆரோக்கியமான வளரும் சூழ்நிலையை  தரவில்லை.

2 ஜாதகரின் கல்வி காலம் பல போராட்டங்கள் நிறைந்ததாக அமைந்தது, பல தடைகளை  தாண்டி ஜாதகர் தனது பள்ளி கல்வியை நிறைவு செய்யும் தன்மையை தந்தது, மேலும் பள்ளியில் படிக்கும் காலங்களில் ஜாதகர் பல அவ பெயரையும் சந்திக்கும் தன்மை தந்தது, உயர் கல்விக்காக ஜாதகர் முயற்ச்சி செய்த பொழுது பல தடைகளை சந்த்தித்து ஒரு வழியாக கல்லூரியில் சேர்ந்தார் ஆனால் முழுமையாக முடிக்க இயலாமல் பாதியில்  கல்லுரி படிப்பு முடிந்தது.

3 பல போராட்டங்களை சந்தித்து கல்லுரி படிப்பு பாதியில் நின்ற பிறகு, வேலைக்காக ஜாதகர் குறைந்த ஊதியத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார், பணியாற்றும் காலத்தில் ஜாதகர் தனது விருப்பத்தின் பெயரில்  காதல் திருமணம் செய்துகொண்டார் ( ஜாதகருக்கு 2 மற்றும் 7ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் இளமையில் திருமணம்   நடைபெற்றது திருமணம் செய்து கொண்ட பெண்ணின் ஜாதகத்தில் 10 வீடுகள் பாதிப்பில் இருந்தது குறிப்பிட தக்கதது ) திருமணம் செய்து ஒரு வருடத்தில் ஜாதகருக்கு பெண் குழந்தை பிறந்தது, ஜாதகரின்  வருமான பற்றா குறையின் காரணமாக திருமண வாழ்க்கை கசந்தது, ஜாதகரின் தீய நண்பர்களின் சேர்க்கையினால் குடி பழக்கத்திற்கு  ஆளாகும் தன்மையை தந்தது, இதில் இருந்து மீள முடியாத நிலையில் ஜாதகர்  இன்னும் இருக்கின்றார்.

4 இவை மட்டுமல்ல இன்னும் பல சொல்ல இயலாத தீமைகளை ஜாதகருக்கு தந்துகொண்டே இருக்கின்றது, குறிப்பாக பாதக ஸ்தான பலனை எந்த எந்த திசை புத்திகள் தருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஜாதகர் தாங்க இயலாத துன்பங்களை அனுபவிக்க நேருகிறது, ஆக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பூர்வ புண்ணியம்  ஜாதகருக்கு  கடுமையான பாதிப்பை தருகிறது என்பது  உறுதியாகிறது .

மேற்கண்ட தீய பலன்கள் நடைபெற முழுமுதற் காரணம் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றதும், ஜாதகர் தனது பூர்வீகத்திற்கு உற்பட்ட 100 கிலோமீட்டரில் ஜீவனம் செய்ததுமே என்றால் அது மிகையாகாது, ஏனெனில் ஜாதகரின் மற்ற பாவகங்கள் மிக வலிமையாக அமைந்து  இருப்பது ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு கட்டியம்  கூறுகிறது,  இவரின் ஜாதகத்தில் 4,6,10 ம் வீடுகளின் வலிமை 80% யோகத்தையும், 1,2,3,7,11ம் வீடுகளின் வலிமை 50% யோகத்தையும் வாரி வழங்கி கொண்டு இருப்பது  சிறப்பான அமைப்பாக கருதலாம்.

ஆக ஜாதகரின் துன்பத்திற்கு முக்கிய காரணம் பூர்வீகம் பாதிக்க பட்டு தனது பூர்வீகத்திற்கு உற்பட்ட பகுதியில் ஜீவனம் செய்வதே, மேலும் ஜாதகரின் சிந்ந்தனை மட்டுப்படவும், திட்டங்கள் யாவும் நடைமுறைக்கு வராமல்,  காரியதடை ஏற்ப்படுவதிர்க்கும் மேற்கண்ட விஷயமே காரணமாக  அமைகிறது  என்றால் அது மிகையில்லை.

குறிப்பு : ஜாதகருக்கு ஜோதிட தீபம் பரிந்துரை செய்த ஆலோசனை ஜாதகரை  எல்லை தாண்டி ஜீவனம் செய்ய சொன்னதே, இதற்க்கு ஜாதகர் சொன்ன  பதில் ஜோதிட தீபத்தினை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, " அய்யா நான் வெளியில் சென்று ஜீவனம் செய்தால் எனக்கு வரும் வருவாய் போதியதாக அமையாது " இதை நினைத்து நாம் அழுவாத சிரிப்பதா ? என்றே தெரியவில்லை, ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்றாலே ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையின் காரணமாக கை நிறைவான வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் , இந்த விஷயத்தை ஜாதகருக்கு புரிய வைக்க நமக்கு போதும் போதும் என்றாகிவிட்டது .

ஆக ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகரின் அறிவாற்றலின் தன்மை வெகுவாக பாதிக்க படுகிறது, சிந்தனை திறனும் குறைகிறது , ஒட்டுண்ணி போல் மற்றவரை   சார்ந்து வாழும் தன்மையை தருகிறது, தன்னம்பிக்கை குறைகிறது, தன்முனைப்பு என்பது இல்லாமல் உயிரற்ற மீன் போல் ஆற்றில் அடித்து செல்லும் நிலையை தருகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ராகு வலிமை பெற்று ஜாதகத்தில் அமர்ந்தால் ஜாதகர் பெரும் ராஜயோக வாழ்க்கை!



 சாயா கிரகமான ராகு பகவான் ஒருவருடைய சுய ஜாதகத்தில் வலிமையுடன் அமரும்பொழுது, தான் அமர்ந்த பாவகத்தின் தன்மையை, முழுவதும் ஏற்று நடத்த ஆரம்பிப்பார், குறிப்பாக ராகு நல்ல நிலையில் அமர்ந்த பாவகத்தின் பலன் நடைமுறைக்கு வரும்பொழுது ஜாதகர் பெரும் யோக வாழ்க்கைக்கு நிகராக எதுவும் இல்லை என்றே கூறலாம், ஏனெனில் கிரகங்களில் அதிவலிமை படைத்தவர் ராகு பகவானே என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, மேலும் ராகுவின் ஆளுமைக்கு அனைத்து கிரகங்களும் உள்ளடங்கி பலன்தரும் என்பதனை ராகு வலிமை பெற்ற ஜாதகங்களை ஆய்வு செய்யும் பொழுது நிச்சயம் உணர முடியும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ராகு பகவான் அமரும் பாவகம் எதுவோ அந்த பாவகத்தின் தன்மையை முழுவதும் தானே ஆளுமை செய்யும் தன்மையை பெறுவார், குறிப்பாக லக்கனத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகரின் உடல்,மனம்,வளரும் சூழ்நிலை,ஜாதகரின் புகழ், ஜாதகர் பெரும் கீர்த்தி என்ற வகையில், சர,ஸ்திர.உபய ராசியின் தன்மைக்கு ஏற்றார் போலவும், நெருப்பு,நிலம்,காற்று,நீர் தத்துவ அமைப்பிற்கு ஏற்றார் போலவும் பலன்களை தங்கு தடையின்றி தர ஆரம்பிப்பார், மேலும் தன்னுடன் சேர்க்கை பெற்ற கிரகங்களின் தன்மையையும் தானே ஏற்றுக்கொண்டு, அவர்கள் செய்யும் யோக, அவயோக பலன்களையும் வாரி வழங்குவார்.

பொதுவாக ராகு அமர்ந்த பாவகங்களில் இருக்கும் கிரகங்கள் தனித்து செயல் புரிய இயலாது, ராகு பகவானே அனைத்திற்கும் பொறுப்பேற்று தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் பலனையும் செய்வார், எனவே ராகுவுடன் சேர்ந்த கிரகங்கள் தனித்து பலன் வழங்கும் என்று எதிர்பார்ப்பதும், யோக அவயோக பலனை தரும் என்று எதிர்பார்ப்பதும் தேவையற்றது என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து ( ராகுவுடன் சேர்ந்த கிரகம் சுப கிரகம் என்று வர்ணிக்கும் குரு,சுக்கிரன்,சந்திரன்,புதனாகவே இருந்தாலும் கூட ராகுவின் பலமே மேலோங்கி நிற்கும் ) .

எடுத்துகாட்டாக :

கிழ்கண்ட ஜாதகத்தில் ராகு பகவான் லக்கனத்தில் அமர்ந்து எவ்விதமான யோக, அவயோக பலன்களை தருகிறார் என்று சிந்திப்போம்.



இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்திருக்கும் ராகு பகவான், ஜாதகருக்கு பிறந்தது முதல் மிகுந்த யோக பலன்களையே தந்துகொண்டு இருக்கிறார், ராகு அமர்ந்த வீடு சிம்ம ராசியாக இருப்பதாலும், இது ஸ்திர நெருப்பு தத்துவ ராசியாக இருப்பதாலும் ஜாதகருக்கு பித்த சம்பந்த பட்ட உடல் அமைப்பை பெற்று இருக்கிறார், மேலும் ஜாதகரின் வளரும் சூழ்நிலை என்பது சிறந்த உடல் நிலையுடன், சீரான கல்வி அறிவுடன், நல்லவர்களின் அன்பிலும் நட்பிலும், உறவுகளின் ஆதரவுடன் பெற்றோருடன் வளரும் வாய்ப்பை வழங்கியது.

 ஜாதகரின் இயக்கம் நெருப்பு ராசி என்பதால் ஜாதகர் சுய கட்டுப்பாடுடன், வீரம் தைரியம் துணிவு நிறைந்தவராகவும், எதற்கும் அஞ்சாத குணத்தை கொண்டவராகவும் காணப்படுகிறார், ஸ்திர நெருப்பு என்றாலே நாம் உதாரணமாக அகல் விளக்கு அல்லது சூரியனை எடுத்துகொள்ளலாம், ஆக ஜாதகரின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கும், தனக்கும் உலக இருளை நீக்கும் தன்மையுடன் இருப்பதாக அமைந்தது, இங்கே அமர்ந்த குரு மற்றும் செவ்வாயின் தன்மையை ராகு செய்வதால், ஜாதகர் நேர்மை நிறைந்த குணத்தையும், எவ்வித பிரச்சனைகளையும் சரியான ஆளுமை திறனுடன் கையாளும் வல்லமையையும் தந்தது, ஜாதகரின் சிம்ம லக்கினம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் பாவகமாக வருவதால், ஜாதகருக்கு தனது பூர்வ புண்ணிய அமைப்பில் இருந்து வரும் யோக பலன்களையும் அனுபவிக்கும் யோகத்தை தந்தது.

இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டும் எனில் ஜாதகர் தனது முன்னோர்கள் வழியில் இருந்து வரும் அறிவாற்றலையும் சிறப்பாக பெற்று, பகுத்தறிந்து செயலாற்றும் தன்மையினையும், அதி புத்திசாலித்தனத்தையும் பெற்று, அவர்கள் வழியிலேயே தனது வாழ்க்கை முன்னேற்றத்தை அடைந்துகொண்டு இருப்பதுதான் என்றால் அது மிகையாகாது , இதை போன்றே ஒவ்வொரு ஜாதகத்திலும் ராகு பகவான் தான் அமர்ந்த பாவகத்தில் நல்ல நிலையில் வலிமையுடன் இருந்தால், ஜாதகர் ராகுபகவானின் கருணையினால் மிகுந்த யோக வாழ்க்கையை பெறுவார் என்பது உறுதி.

குறிப்பாக ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு உற்பட்ட பாகைக்குள் ராகு அமர்ந்தால் நிச்சயம் ஜாதகர் இலக்கின அமைப்பில் இருந்து 100% யோக பலன்களையே தருவார் என்பது உறுதி, இது ராகு பகவானுக்கு மட்டுமல்ல கேது பகவானுக்கும் பொருந்தும், ஒருவருக்கு லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து யோக பலன்களே நடை பெரும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, மேலும் ராகு பகவான் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும், குறிப்பிட்ட பாவகத்திர்க்கு நன்மை தரும் அமைப்பில் ( வலிமையாக ) இருந்தால் குறிப்பிட்ட ராசி,தத்துவம் மற்றும் பாவக தன்மைக்கு ஏற்றார் போல் யோக பலன்களை தங்குதடையின்றி செய்வார் என்பது உறுதி. 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9842421435
9443355696




வெள்ளி, 10 ஜனவரி, 2014

சனிபகவான் ஜாதகத்தில் வலிமை பெற்று அமரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் !




"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்பதற்கு இணங்க சனிபகவானை பற்றி தெரியாமல், பல தவறான கருத்துகள் மக்களிடையே பரப்ப படுகிறது, குறிப்பாக ஒருவருக்கு விபத்து, இழப்பு, கஷ்டம், நோய், துன்பம் போன்ற சிரமங்கள் அனைத்தும் வருவதற்கு காரணம் சனிபகவானே என்றும், இதற்க்கு உதாரணமாக ஏழரை சனி, அஷ்டமசனி, வாக்கு சனி, பாதசனி என்று தனது மனதிற்கு உகந்த அமைப்பில் சனிபகவான் மீது பழிபோடுவது தவறான அணுகுமுறையாகும், சனி பகவான் தான் அமர்ந்த பாவக அமைப்பிற்கும், வசீகரம் செய்யும் பாவகங்களுக்கும் வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சுய முன்னேற்றம் என்பதும், யோக வாழ்க்கை என்பதும் மிகவும் அபரிவிதமானதா அமையும் என்பதில் சந்தேகமில்லை

என்ன செய்ய சனிபகவானின் குணமே மற்றவர்களுக்காக எதையும் தாங்கும் தன்மையையும், சமுதாயத்திற்காக தனது வாழ்க்கையே அற்பணிக்கும் தன்மை பெற்றவர்தானே சனி பகவான், இதை நாம் பல பெரிய தலைவர்களின் ஜாதகத்தை காணும் பொழுது அதில் உள்ள சனிபகவானின் வலிமை அமைப்பில் இருந்து உணர இயலும். 

பொதுவாக கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டிற்கும் (  மகரம் ) , லாப ஸ்தானமான 11ம் வீட்டிற்கும் ( கும்பம் ) வீட்டிற்கும் அதிபதியாக  பொறுப்பேற்கும் சனிபகவான், எப்படி அனைத்து தீமைகளுக்கும் மொத்த உருவமாக வர்ணிக்க படுகிறார் என்பது ஜோதிடதீபத்திற்கு விளங்காத புதிராகவே உள்ளது , மேலும் வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ? என்று எழுதுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை, சுய ஜாதகத்தில் மகரமும் கும்பமும் பாதிக்கப்படும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் ஜீவன ரீதியாகவும், அதிர்ஷ்டம் என்ற அமைப்பிலும் யாதொரு நன்மையையும் பெற தா இயலாத சூழ்நிலையை தரக்கூடும் இது அவரவரவர் சுய ஜாதக வலிமை இன்மையை காட்டுகிறது, இதற்க்கு சனிபகவானை காரணகர்த்தாவாக பாவிப்பது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

சனிபகவானை பற்றி  முரண் பட்ட , தவறான கருத்துக்களை பரப்ப இவர்களால் எப்படி இயலுகிறது என்றும் தெரியவில்லை, சனிபகவான் என்பவர் ஒருவருடைய ஜாதகத்தில் வலிமை பெற்று அமரும்பொழுது சிறந்த ஜீவனத்தை தருகிறார், அதன் வழியில் இருந்து வரும் லாபத்தை பன்மடங்கு பெருக வைக்கிறார், மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் நல்ல நிலையில் இருக்கும் பொழுதே ஜாதகருக்கு சிறந்த கெளரவம் கிடைக்கிறது, மக்களால் போற்றப்படும் பதவிகளை அலங்கரிக்கும் பதவிகளில் சிறப்பாக செயல்பட வைக்கிறார், பெரிய பெரிய தலைவர்களின் ஜாதகங்களில் சனிபகவான் சிறப்பாக அமர்ந்திருக்கும் நிலையை காணும் பொழுது இது புரியும்.

தனது சுக துக்கங்களை பெரிதாக எடுத்துகொள்ளாமல் தீண்டாமை எனும் மாசுபட்ட சமுதாயத்தை மாற்றி அமைத்த ஈரோடு வே. ராமசாமி ஜாதகத்தில் சனிபகவான் லக்கினம், எதிரி ஸ்தானம், களத்திரம், ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று, இலக்கின வழியில் இருந்து முற்போக்கு சிந்தனையையும், எதிரி ஸ்தான அமைப்பில் இருந்து சமுதாயத்தில் மக்களின் மனதில் பகுத்தறிவு சிந்தனையையும், களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து உலக புகழ் பெரும் யோகத்தையும், ஜீவன ஸ்தானத்தில் இருந்து சுய மரியாதை மற்றும் சுய கௌரவத்தையும் பெற்று தந்த சனி பகவான், எப்படி அவயோகதாரியாக வர்ணிக்க படுகிறார் என்பது புரியவில்லை?

உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


(சனி எந்த பாவகங்களுக்கு அதிபதி என்று ஊதா வண்ணத்தில் குறிப்பிடபட்டு உள்ளது )

இந்த ஜாதகத்தில் 6,7,10ம் பாவகங்களுக்கு அதிபதியாக வரும் சனிபகவான் ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து ஜீவன ஸ்தானத்திற்கு படிப்படியான முன்னேற்றத்தையும், 7ம் பாவக வழியில் இருந்து உலகம் முழுவதும் ஜாதகர்  சென்று ஜீவனம் செய்யும் யோகத்தையும், 10ம் பாவக வழியில் இருந்து ஜீவனத்திற்கு நிலையாக நிலைத்து நிற்கும் தன்மையையும், கௌரவமான தொழில் செய்யும் யோகத்தையும் சனிபகவான் வாரி வழங்குவது சற்றே கவனித்தல், நிச்சயம் புலனாகும் .

மேலும் 6ம் பாவகம் ஜாதகருக்கு ஸ்திர ரிஷப ராசியாக அமைவதாலும், அது மண் தத்துவ ராசியாக இருப்பதாலும் ஜாதகர் எதிரிகள் மூலமாகவும் வருவாயினை பெறுவார் என்பதும், ஜாதகரின் வாழ்நாள் முழுவதும், வருமானம் என்பது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என்பதும் சனிபகவானால் வரும் அருளாசியே என்றால் அது மிகையில்லை.

7ம் பாவகம் ஜாதகருக்கு உபய மிதுன ராசியாக அமைவதாலும், காற்று தத்துவ ராசியாக இருப்பதாலும், ஜாதகரின் செயல்கள் மற்றும் அறிவாற்றல் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் உபயோக படும் விதத்தில் அமைவது சனிபகவான் வழங்கும் அருளசியே, மேலும் மிதுனம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடாக வருவது ஜாதகரின் தைரியத்தையும், தன்னுள் கொண்டுள்ள வீரத்தையும், வீரியத்தையும் சரியான நேரத்தில் எடுத்து காட்டும், அதுமட்டுமல்ல இங்கே ஜாதகருக்கு சனிபகவான் தேடினாலும் கிடைக்காத பெருந்தன்மையான குணத்தை தருகிறார் என்பது கவனிக்க பட வேண்டிய விஷயம்.

10ம் பாவகம் ஜாதகருக்கு உபய கன்னி ராசியாக அமைவதாலும், மண் தத்துவ ராசியாக இருப்பதாலும் ஜாதகரின் ஜீவனம் என்பது மண் தத்துவம் சார்ந்த தொழிலை சரியான வயதில் தந்து அதன் வழியில் இருந்து வருமானத்தையும், சமுதாயத்தில் ஒரு கௌரவமான தொழில் அதிபர் என்ற மதிப்பையும், சிறந்த வியாபாரி என்ற அந்தஸ்தையும் தந்திருப்பது சனிபகவானே என்றால் அது மிகையில்லை, ஆக சனி என்பவர் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமரும் பொழுது சிறந்த ஜீவனம், கௌரவமான வாழ்க்கை, சுய மரியாதை, சிறந்த உடல் நலம் மற்றும் உடல் பலம், அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை முறை, வண்டி வாகன யோகம், நல்ல சிறந்த வேலையாட்கள் என்ற அமைப்பில் வாரி வழங்குவார் என்பது உறுதியாகிறது .

பொதுவாக பல ஜோதிடர்களிடம் "சனி ஈஸ்வரன்" என்று தவறான புரிதல் இருக்கிறது, உண்மை அதுவல்ல "சனி சரண்" என்பதே சரியான உச்சரிப்பு, அதாவது மெதுவாக  நகரும் தன்மை பெற்றவர் என்பதே, எனவேதான் ஒவ்வொரு ராசியிலும் சனிபகவான் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார்.

நன்மை தீமை பலன்கள் என்பது ஒவ்வொருவரின் சுய ஜாதக அமைப்பின் அடிப்படையிலும், 12 பாவகங்களின் வலிமையை பொருத்தும் நடைபெறுகின்றது, இதில் நவகிரகங்கள் ஜாதகரின் விதிபயனின் பலனை  ஏற்று அதற்க்கு தகுந்தார் போல் யோக, அவயோக பலன்களை தருகிறது, இதில் சனி,ராகுகேது, செவ்வாய், சூரியன், தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேர்ந்த புதன் எனும் பாவ கிரகங்கள் கெடுதல் செய்யும் என்றும், குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன் எனும் சுப கிரகங்கள் நன்மை செய்யும் என்று ஜோதிடம் சொல்வது, ஜோதிடத்தை பற்றிய அடிப்படை அறிவு அற்றவர்கள் சொல்லும் வார்த்தையாக எண்ணி தவிர்த்து விடுவது நல்லது. ( இல்லை எனில் அவர்களும் குழம்பி நம்மையும் குழப்பி விடுவார்கள் ) 

 கிரகங்களின் உண்மை நிலையினை பற்றிய தெளிவும், சுய ஜாதகங்களில் 12 பாவகங்களுக்கு  அவர்கள் வழங்கும் பலன்களை பற்றிய கணித அறிவும்  பெற்று பலன் சொல்லுவது, ஜோதிட கலைக்கு நாம் ஆற்றும் கடமை என்றால் அது மிகையில்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435

புதன், 8 ஜனவரி, 2014

அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும் 11ம் பாவகம் !


   அதிர்ஷ்டம் மற்றும் லாபம் எனும் 11ம் பாவகம் சுய ஜாதகத்தில், வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும்  நற்பலன்கள் என்பது சற்று மிதமிஞ்சிய அளவிலேயே இருக்கும், குறிப்பாக ஜாதகரின் முற்போக்கு சிந்தனையும், பகுத்தறியும் தன்மையும் எப்பொழுதும் ஜாதகரை விழிப்புணர்வுடன் வைத்திருக்கும், சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் வலிமைபெறுவது ஜாதகருக்கான தனித்திறமையை வெளிப்படுத்தும், இருப்பினும் சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெறுவதே மற்ற பாவக வழியில் இருந்துவரும் சுபயோகங்களை சுவீகரிக்கும் தன்மையை தரும், திறமை இருப்பது ஒரு வகையில் சிறப்பு என்ற போதிலும் அதனால் வரும் முழு பலன்களையும் அனுபவிக்க ஜாதகத்தில் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, இது பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 பொதுவாக ஒரு மனிதனின் பிறப்பின் சாராம்சம் என்ன? தனது வாழ்க்கை எப்படி பட்ட அமைப்பில் வாழும் தன்மையை பெறுவார்,  என்ற விஷயத்தை தெளிவாக தெரிந்து கொள்ள லாப ஸ்தானம் எனும் 11ம் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டு  சிறப்பாக கூறிவிட முடியும் என்றால் அது மிகையில்லை, மனிதனின் பிறவி பலனை நிறைவு செய்யும் தன்மையை (கடனை) 12ம் பாவகம் தெளிவுபடுத்தும், ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை பற்றி தெளிவாக  கூறும் தன்மை 11ம் பாவக வலிமையே நிர்ணயம் செய்கிறது, எனவே சுய ஜாதகத்தில் 11ம் பாவக வலிமை பற்றிய தெளிவு பெறுவது தனது எதிர்காலத்தை பற்றிய ஒரு திட்டமிடுதல் மற்றும் தனது வாழ்க்கையில்  பெரும் லாபம் மற்றும் அதிர்ஷ்டம், நன்மை மற்றும் யோக அமைப்புகள் பற்றிய விபரங்களை மிக தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.

லாப ஸ்தானம் பற்றி சிலாகித்து கூறாத ஜோதிடர்களே இல்லை எனாலாம், குறிப்பாக கோட்சார கிரகங்கள் ராசிக்கு ( லக்கினம் ) 11ல் சஞ்சாரம் செய்யும் பொழுது, ஜாதகருக்கு மிகுந்த யோககங்களையும், அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் வாரி வழங்கும் என்பது பொதுவான கருத்தாகவே இருக்கிறது, ஆக ஒரு ராசிக்கு  கோட்சாரத்தில் 11ல் சஞ்சாரம் செய்யும் கிரகம் மிகுந்த யோகத்தை தரும் என்று என்னும் பொழுது ( ராசிக்கு 11ல் சஞ்சாரம் செய்யும் கிரகம் யோகத்தை தருகிறதா? அவயோகத்தை தருகிறதா? என்பது வேறு விஷயம்), லக்கினத்திற்கு 11ம் பாவகம் வலிமை பெறுவது எவ்விதமான நன்மைகளை தரும் என்பதனை கருத்தில்கொள்வது அவசியமாகிறது.


உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தில் 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் சுபயோகங்கள், அதிர்ஷ்டம் மற்றும் லாபங்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !




இந்த மிதுன இலக்கின ஜாதகருக்கு 1,3,5,6,7,11 வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த யோகத்தை தரும் என்றால் அது மிகையில்லை, இருப்பினும் ஜாதகர் எந்த எந்த வழிகளில் இருந்து அதிர்ஷ்டங்களையும், லாபங்களையும் பெறுவார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது  அவசியம்.

 லக்கினம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அடிப்படையில் சிறப்பாக  வளரும் சூழ்நிலையை தரும், நீண்ட ஆரோக்கியமான உடல் அமைப்பினையும், தெளிவான முற்போக்கு சிந்தனையையும், நிறைந்த அறிவாற்றலையும் வாரி வழங்கும், எனவே ஜாதகர் தனது நிலையில் இருந்து அதிர்ஷ்டசாலி என்பது உறுதியாகிறது.

3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் நல்ல வெற்றியினை தரும், போட்டி, தேர்வு, பந்தயங்களில் வெற்றியை தரும், தனது சகோதர அமைப்புகளில் இருந்து மிகுந்த நன்மையை தரும், வீரியம் மிக்க மன தைரியத்தையும், பிடிவாத மன நிலையை தரும், தனது வெற்றிக்காக இரவு பகல் பாராமல் அயராது பாடுபடும் தன்மையை தரும், ஜாதகர் எடுக்கும் காரியங்கள் யாவும் நிச்சய வெற்றியை தரும் என்பது உறுதியாகிறது.

5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தனது முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து சுகங்களையும், அவர்கள் செய்த புண்ணியத்தையும் அனுபவிக்க பிறந்தவர் என்றால் அது மிகையில்லை, தனது  பெயர் சொல்ல நல்ல புத்திர சந்தானத்தையும், அவர்கள் வழியில் இருந்து வரும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்க இயலும், மேலும் தனது முன்னோர்கள் வழியில் இருந்து வரும் அறிவாற்றலையும், புத்திசாலித்தனத்தையும் பெற்றிருப்பார் என்பது உறுதியாகிறது.

6ம்வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தான் நினைக்கும் எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வரும் திறமை அமையும், அதிர்ஷ்ட வாய்ப்புகள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கும், குறிப்பாக பங்கு சந்தையில் நல்ல லாபம் பார்க்க இயலும், வெகு விரைவில் சுலபமாக வெற்றிக்கனியை பறிக்கும் தன்மையை தரும், லாட்டரியில் அதிர்ஷ்டம், புதையல் யோகத்தை தரும், வேலையாட்கள் மற்றும் எதிரிகளாலும் லாபம் பெரும் தன்மையை தரும், எவ்வித பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் புத்திகூர்மையை தரும் என்பது உறுதியாகிறது.

7ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, நண்பர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை வாழ்நாள் முழுவதும் பெரும் யோகதாரிகள் என்றால் அது மிகையில்லை, மேலும் வாழ்க்கை துணை வழியில் இருந்தும், பொது மக்கள் வழியில் இருந்தும் அதிர்ஷ்டம் வந்துகொண்டே இருக்கும், நல்ல அரசியல்வாதி, பொதுமக்களுக்கு சேவை செய்யும் தொழில்கள் புரிவோர், சிறப்பான வியாபர திறமை, அனைவராலும் அதிர்ஷ்டம் பெரும் அமைப்பை பெற்றவர் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மிகசிறந்த நல்ல குணத்தை வாரி வழங்கிவிடும், எவரும் போற்றும் தன்மையை தரும் பாராட்டு மலையில் நனையும் யோகம் பெற்றவர் , தனது சிந்தனையும் செயலும் முற்போக்கு தன்மையுடன் இருப்பதை ஜாதகரே உணர்ந்துகொள்ள முடியும், தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பை தரும், இது மட்டுமல்ல அனைத்திலும் லாபம் பெறுபவர், மிக அதிர்ஷ்டசாலி என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

ஜாதகரின் லாப ஸ்தானம் சர (மேஷம்) ராசியாக அமைவதால் ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் இருந்து 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கும் என்பது கூடுதல் தகவல்.

11ம் பாவக வழியில் இருந்து ஒரு ஜாதகர் எவ்வித நன்மையை பெறுகிறார் என்பதை நமது ஜோதிட முறையில் தெள்ள தெளிவாக தெரிந்துகொள்ள இயலும் என்றால், அதற்க்கு காரணம் எமது குருவும், இறைஅருளின் கருணையுமே ! 11ம் பாவக வலிமையை உணருங்கள், வாழ்க்கையில் வெற்றியை தடையில்லாது பெறுங்கள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9842421435
9443355696
jothidadeepam@gmail.com

சனி, 28 டிசம்பர், 2013

குழந்தை பிறக்கும் நேரம் என்று எதை எடுத்துகொள்வது ? குழந்தை தலை வெளிவரும் நேரமா ? அல்லது முதல் இதய துடிப்பு நேரமா ?





பொதுவாக குழந்தை பிறந்த நேரத்தை நிர்ணயம் செய்வதில் பல குழப்பங்கள் இந்த நவீன காலத்தில் ஏற்ப்படுகிறது, தாங்கள் சொன்னது போல் குழந்தை தலை வெளிவரும் நேரம் என்று எடுத்து கொண்டாலும் குழப்பமே மிஞ்சும், முதல் இதய துடிப்பு நேரம் என்று எடுத்து கொள்ளவும் முடியாது ஏனெனில் குழந்தையின் இதய துடிப்பு தாயின் கருவிலேயே துவங்கி விடும் .


ஆக குழந்தை எப்பொழுது சுயமாக பூலோக காற்றை சுவாசிக் ஆரம்பித்து தனது, ஜீவ வாழக்கையை ஆரம்பிக்கிறதோ அந்த வினாடியே குழந்தை உண்மையான பிறந்த நேரம் என்று நிர்ணயம் செய்யலாம், குறிப்பாக குழந்தையின் சரியான பிறந்த நேரத்தை துல்லியமாக நிர்ணயம் செய்ய நமது ஜோதிட முறையில் சிறப்பான வழிகாட்டுதல்கள் உண்டு, எனவே நமது ஜோதிட முறையில் பலன் காணும் அன்பர்களுக்கு இந்த குழப்பம் ஏற்ப்பட வாய்ப்பு மிக மிக குறைவு என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி .

ஒரு குழந்தையின் பிறப்பை துல்லியமாக தெரிந்துகொண்டால், குழந்தை பருவம் முதல் முதுமை பருவம் வரை நடைபெறும் நன்மை தீமை பலன்களை தெள்ள தெளிவாக நாம் உணர்ந்துகொள்ள முடியும் , ஜாதகர் அடிப்படையில் வளரும் சூழ்நிலை , ஜாதகருக்கு அமையும் உடல் நிலை , கல்வியில் பெரும் வெற்றி, ஜீவன வாழ்க்கையில் ஏற்ப்படும் முன்னேற்றம் , இல்லற வாழ்க்கையில்  அனுபவிக்கும் இன்பம், ஜாதகருக்கு அமையும் குழந்தை பேரு, என்ற நிலைகளில் இருந்து , ஜாதகரின் ஆயுள் அமைப்பினை பற்றியும் தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

பொதுவாக குழந்தை பிறப்பில் சில நிமிடங்கள் குழப்பம் வர கூடும், அந்த குழப்பத்தை நீக்கவும் , சரியான பிறந்த நேரத்தை தெளிவாக தெரிந்து கொள்ளவும் நமது ஜோதிட முறையில் வழி உண்டு , இதற்க்கு தேவை 1) ஜாதகரின் பிறந்த தேதி , 2) ஜாதகரின் பிறந்த நேரம் 3) ஜாதகரின் பிறந்த இடம் ஆகியன மட்டுமே, மேற்க்கண்ட விபரங்கள் இருந்தால் ஜாதகரின் துல்லியமான பிறந்த நேரத்தை எடுத்துவிட முடியும் , ஜாதகரின் ஜாதக பலன்களை தெளிவாக தெரிதுகொள்ள முடியும் இதன் மூலம் ஜாதகரின் வாழ்க்கையை செழுமையாக வாழும் நிலையினை பெறலாம்.

மேலும் நவீன காலத்தில் நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறப்பினை பலர் நிர்ணயம் செய்கின்றனர், இந்த அமைப்பும் ஜாதகருக்கு சரியான பலனை நிர்ணயம் செய்வதில்லை என்ற உண்மையை உணருவது அவசியம், இயற்கையாக பிறக்கும் குழந்தையின் ஜாதக அமைப்பிற்கும், நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தையின் ஜாதக அமைப்பிற்கும் பல சூட்சம விஷயங்கள் உண்டு , அறுவை சிகிச்சையின் மூலம் பிறக்கும் குழந்தையின் சரியான ஜாதகத்தை எடுப்பதே ஜோதிடரின் முழு திறமை அடங்கி இருக்கிறது .

எந்த காரணத்தை கொண்டும் இயற்கையாக பிறக்கும் குழந்தையை, நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறப்பை நாம் நிர்ணயம் செய்வது, ஜாதகத்தில் யோக பலன்களை வாரி வழங்கி விடாது என்ற உண்மையை உணருவது அவசியம், சிறப்பான நேரம் என்று தாங்கள் நிர்ணயம் செய்யும் நேரம் கூட சில வினாடிகளில் ஜாதக பலன்களை மாற்றி அமைத்துவிடும் .

நமது பூர்வ புண்ணிய அமைப்பினை கொண்டும், பாக்கிய நிலையின் அடிப்படையிலும், நாம் செய்த வினை பதிவின் அடிப்படையிலுமே, நமக்கு பிறக்கும் குழந்தையின் வாழ்க்கை மற்றும் ஜாதக யோக நிலை இறை அருளால் நிர்ணயம் செய்யபடுகிறது என்ற அடிப்படை விஷயத்தை அனைவரும் கருத்தில் கொண்டால், நிச்சயம் மேற்கண்ட குழப்பங்கள் வர சிறிதும் வாய்ப்பில்லை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
9842421435 


வியாழன், 26 டிசம்பர், 2013

பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் தரும் யோக அவயோக பலன்கள் !



ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ஜாதகரின் நல்லறிவு, சிந்தனை திறன், தனக்கு அமையும் வாரிசுகளின் நிலை, கலை துறையில் பெரும் வெற்றி, இயல் இசை நாடக துறையில் ஏற்ப்படும் தனிப்பட்ட திறமை மற்றும் புலமை, தனது குழந்தைகளால் ஏற்ப்படும் யோக வாழ்க்கை, தனது எண்ணத்தின் வலிமை அதனால் கிடைக்கும் வெற்றி என்ற அமைப்பில் இருந்தும்.

 ஆய கலைகள் 64ல் தேர்ச்சி, தர்ம சிந்தனை , இறைசிந்தனை, இறை அருளின் கருணையை பெரும் யோகம், ஜாதகரின் தனிப்பட்ட புத்திசாலித்தனம் என்ற நிலைகளில் தரும் பலன்களை பற்றியும், ஜாதகரின் வாத திறமையினையும், சரியான நேர்மையான தீர்பளிக்கும் தன்மையினையும், தனது சுய அறிவாற்றல் கொண்டு வாழ்க்கையில் தேடும் செல்வ நிலையினை பற்றியும், தனது காதல் வெற்றியினை பற்றியும், தனிப்பட்ட விளையாட்டு திறமைகளை பற்றியும் தெளிவாக தெரிந்துகொள்ள பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவக நிலையினை வைத்து தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பின் மேற்கண்ட அமைப்பில் இருந்து ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும், இதற்க்கு மாறாக ஐந்தாம் பாவகம் 4,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றாலோ ? ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன்  (சர லக்கினத்திற்கு 11வீடு , ஸ்திர லக்கினத்திற்கு 9 வீடு , உபய லக்கினத்திற்கு 7வீடு ) சம்பந்தம் பெற்றாலோ? ஜாதகருக்கு மேற்கண்ட அமைப்பில் இருந்து எதிர்பதமாக தீய பலன்களே நடைபெறும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நெருப்பு ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

 ஜாதகர் தனது பூர்விக அமைப்பில் இருப்பதால் வாழ்க்கையில் நிலையான வெற்றியை தரும், குறிப்பாக ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மிக சுறுசுறுப்பாக அமையும், விரைவான செயல்பாடுகளாலும் விரைந்து முடிவெடுக்கும் தன்மையினாலும் ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றம் பெரும், ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகளால் ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் செல்வ சேர்க்கை குறுகிய காலத்தில் அபரிவிதமான நிலைக்கு எடுத்து செல்லும், ஜாதகரின் சிந்தனை ஆற்றல் அபரிவிதமாக வேலை செய்யும், மற்றும் அதி புத்திசாலித்தனம் ஜாதகரை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நெருப்பு ராசியாக அமைந்து பாதிக்க பட்ட  நிலையில் இருந்தால் :

ஜாதகரை தனது பூர்வீகத்தில் இருந்து சிறு வயதிலேயே வெளியே துரத்தி ஜீவிக்க வைத்து விடும், அல்லது  கல்விக்காவோ, ஜீவனம் தேடியோ வெளி ஊருக்கு அனுப்பி விடும், ஒருவேளை ஜாதகர் தனது பூர்விகத்தில் இருப்பின் ஜாதகரின் குணம் மிக மோசமான அமைப்பை பெற்று இருக்கும், தெளிவான செயல்பாடுகள் அற்றவராகவும், முரட்டு பிடிவாதம் கொண்டவராகவும், குரூர எண்ணம் கொண்டவராகவும், தனது சுய லாபத்திற்காக எதை பற்றியும் சிந்திக்காமல் படு பாதக செயல்களை கூச்சம் இன்றி செய்பவராக இருப்பார், மனித நேயம் என்பது ஜாதகரிடம் மருந்துக்கு கூட இருக்காது, மேற்கண்ட அமைப்பே ஜாதகரின் அழிவுக்கு காரணமாக அமைந்துவிடும், மேலும் ஜாதகருக்கு வாரிசு கிடைப்பது அரிதிலும் அரிது.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நில ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருப்பதால் நல்ல உடல் நிலையினையும் தெளிவான சிந்தனை ஆற்றலையும் தரும், ஜாதகருக்கு பூர்வீக சொத்து சுகங்கள் இயற்கையா நல்ல நிலையில் அமையும், ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் அமையும், எதையும் பலமுறை யோசனை செய்து சரியாக செய்யும் தன்மையை தரும், ஜாதகரின் பொறுமை வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகருக்கு நல்ல வாரிசுகள் அமையும், அவர்களாலும் சொத்து சுக சேர்க்கை ஏற்ப்படும், மேலும் ஜாதகர் தனது சுய  உழைப்பால் பல தலமுறைக்கு சொத்து சுகங்களை தேடி வைக்கும் தன்மையை தரும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நில ராசியாக அமைந்து பாதிக்க பட்ட நிலையில் இருந்தால் :

ஜாதகர் பிறந்த சில வருடங்களிலேயே தனது பூர்வீகத்தில் தனக்கு அமைந்த சொத்து சுகங்களை இழந்து பரதேச ஜீவனத்தை தந்துவிடும், தனது மூதாதையர்கள் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தினையும் இழக்கும் தன்மையை தரும், மேலும் ஜாதகரின் உடல் நிலை கடினமாக பதிக்க படும், இதன் காரணமாக தனது சொத்து சுகங்களை இழக்கும் சூழ்நிலையை கூட தரக்கூடும், மேலும் ஜாதகரின் சிந்தனை ஆற்றலும் பாதிக்க படும், ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் முன் வர யோசனை செய்வார்கள், இறை அருளின் கருணை ஜாதகருக்கு துணை நிற்க வாய்ப்பு மிக மிக குறைவு, குழந்தை பாக்கியம் அமைவது சற்று பாதிக்கப்பட கூடும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் காற்று  ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருப்பதால் நன்மை உண்டாகும், குறிப்பாக ஜாதகரின் அறிவாற்றலின் வீச்சு மிக பெரிய அளவில் இருக்கும், ஜாதகரின் அறிவார்ந்த செயல்கள் யாவும் பொதுமக்களிடையே பெரிய அளவில் பேசப்படும், ஜாதகரால் இயலாத காரியம் ஒன்றும் இல்லை என்ற நிலையை தரும், தம்மை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிகரமாக இருப்பார், ஜாதகரின் ஆலோசனை படி நடக்கும் அன்பர்கள் யாவரும் குபேர சம்பத்தை பெறுவார்கள், ஜாதகரின் வாக்கு வன்மை மிக சிறப்பாக அமையும், வாக்கு பலிதம் உண்டாகும், ஜாதகரின் முன்னோர்கள் போன்றே ஜாதகரும் சமுதாயத்தில் மக்களுக்கு பிரதி பலன் பாராமல், தொண்டு செய்யும் மனப்பான்மையை தரும், ஜாதகருக்கு நல்ல வாரிசுகள் அமையும், அவர்களின் வாழ்க்கையும் செழுமை பெரும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் காற்று  ராசியாக அமைந்து பாதிக்க பட்ட நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருக்கும் வரை ஜாதகரின் அறிவாற்றல் சிறிதும் வேலை செய்யாது , மற்றவர்களை சார்ந்து ஒட்டுண்ணி போல் வாழும் சூழ்நிலையை தரும், ஒரு சிறு தேவைகளை நிறைவு செய்வதற்கும் மற்றவர்கள் கையை பார்த்து வாழும் சூழ்நிலையை தரும், அப்படி இருந்தாலும் கூட ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் முன்வர மாட்டார்கள், மேலும் ஜாதகர் சொல்லும் யோசனைகள் யாவும் பெரும் தோல்வியை தரும், நாளடைவில் ஜாதகரின் சிந்தனை மாறும் அறிவு திறன் வெகுவாக மழுங்க ஆரம்பிக்கும், ஜாதகர் செயல்பாடுகள் யாவும் ஜாதகருக்கே எதிராக திரும்பும், தனது அறிவற்ற செயல்களால் அனைத்தையும் இழந்து நடு தெருவுக்கு வரும் சூழ்நிலையை தந்துவிடும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நீர்  ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருப்பதால் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை அடைவார், குறிப்பாக கலைத்துறையில் ( இயல், இசை, நாடகம் ) மிகப்பெரிய வெற்றியை பெரும் தன்மையை தரும், குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் யோகம் கொண்டவர்கள், அனைவரிடமும் இனிமையாக பழகும் தன்மை பெற்றவர்கள், ஜாதகரின் முன்னேற்றம் என்பது அதிர்ஷ்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி காணும் தன்மையை பொறுத்து அமையும், எந்த ஒரு விஷயத்திலும் நேர்மறை எண்ணங்களை கொண்டு மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் யோகத்தை தரும், நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த குழந்தைகளை பெறுவார், மனதில் நினைக்கும் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்கும் தன்மை கொண்டவர்கள்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நீர்  ராசியாக அமைந்து பாதிக்க பட்ட நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருந்தால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும்  ஆளாகும் சூழ்நிலையை தரும், இதனால் ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் அதிக மன கவலைகளை ஏற்ப்படுத்துவார், குறிப்பாக போதை வஸ்துகளை பயன்படுத்தி தனது ஆரோக்கியத்தை தானே  கெடுத்து கொள்ளும்  நிலையை தரும், ஜாதகரின் முன்னேற்றம் என்பது சிறிதும் இருக்காது, சற்றே கவனிக்காமல் இருந்தால் ஜாதகர் வெகு விரைவில் மன நோய்க்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் மிகப்பெரிய இன்னல்களையே உருவாக்கும், குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது, இவர்களை சிறு வயது முதற்கொண்டு சரியாக நேர்வழி பாதையில் நடத்தி செல்வது அவரது பெற்றோரின் கடமை, ஜாதகருக்கு மன நிலை பாதிக்க பட்டால் ஜாதகரை அதில் இருந்து மீட்டு எடுப்பது மிக சிரமமே.

மேற்கண்ட அமைப்பில் ஐந்தாம் பாவகம் நன்மை தீமை பலன்களை தரும், மேலும்  ஐந்தாம் பாவக நிலையை தெளிவாக உணர சர,ஸ்திர,உபய ராசிகளின் அமைப்பை வைத்து நிர்ணயம் செய்வது அவசியம், ஒரு ஜாதகருக்கு நல்ல அறிவு , பூர்வ புண்ணிய சொத்துகள், சிறந்த புத்திசாலித்தனம், சமயோசித புத்திசாலித்தனம், இறை நிலையின் பரிபூரண கருணை, குல தேவதையின் அருள் மற்றும் நல்ல புத்திர சந்தானம் அமைவது ஜாதகரின் பூர்வபுண்ணிய நிலையின் அடிப்படியிலேயே என்றால் அது மிகையாகாது . 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
9842421435

ஞாயிறு, 3 நவம்பர், 2013

திசா புத்திகளும், சுய ஜாதகத்தில் பாவாக அமைப்பில் ஏற்று நடத்தும் பலாபலன்களும் !



பொதுவாக சுய ஜாதக நிலையை வைத்து நடந்த,நடக்கின்ற,நடக்க இருக்கின்ற பலன்களை சொல்வதற்கு, ஜோதிடர்கள் பல கணித முறைகளை பின்பற்றுகின்றனர், இதில் ஜாதகருக்கு நடந்த திசை என்ன ? பலனை வழங்கியது, நடக்கின்ற திசை என்ன? பலனை வழங்கி கொண்டு இருக்கிறது, இனி நடக்க இருக்கும் திசை என்ன? பலனை வழங்கும் என்ற கணிதத்தில் ஜோதிடர்களுக் மத்தியிலேயே பல முரண்பாடுகள் உண்டு.

 மேலும் ஜாதகத்தை ஒரு ஜோதிடர் கணித்து பலன் சொன்னதிற்கும், அதே ஜாதகத்தை மற்றொரு ஜோதிடர் கணித்து பலன் சொன்னதிற்கும் நிறை வேறுபாடுகள் வருகிறது எனும் பொழுது, ஜாதக பலன் அறிந்துகொள்ள வந்த நபரின் நிலை என்னவாகும், ஒருவர் சுப யோக பலன் என்கிறார்,வேறொருவர் அவ யோக பலன் என்கிறார், இந்த விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள, தொலைகாட்சியில் வரும் தின ராசிபலனை கேட்டாலே போதும். ( ராசி பலன் என்பது சரியாக சுய ஜாதகத்திற்கு பொருந்தாது, கட்டுபடுத்தாது  என்பது வேறு விஷயம் )


 இந்த நிலை ஏற்ப்பட காரணம் ஒருவருடைய சுய ஜாதகத்தில் நடை பெரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அவருக்கு எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்று தெரியாத பொழுதும், தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்கள் குறிப்பிட்ட பாவகங்களுக்கு கோட்சார ரீதியான பலன்களை எவ்விதம் வழங்குகிறது என்று தெரியாத நிலையிலேயே, ஜோதிடர்கள் தனது அறிவுக்கு உட்பட்டு, இதற்க்கு முன் அறிந்த அனுபவத்திற்கு ஏற்ப பலாபலன்களை எடுத்துரைக்கின்றனர்.


 உண்மையில் சுய ஜாதக ரீதியாக நடக்கும் திசை தரும் பாவக பலன்களுக்கும், அதற்கும் எவ்வித சம்பந்தமும் இருக்காது , ஒருவேளை சொல்லும் பலன் பொருந்தி இருப்பின் "காகம் அமர பனம்பழம் விழுந்த" கதையாகவே இருக்கும். ஜோதிடர்கள் உறுதியாக அறுதியிட்டு கூற இயலாத நிலையில் பலன்கள் நடக்கலாம், என்ற வார்த்தையை உபயோகிக்கும் சூழ்நிலையை ஜோதிடர்களுக்கு வரக்கூடும்.


 குறிப்பாக பாரம்பரிய ஜோதிடத்தில் ராகு,கேது,சனி,செவ்வாய் மற்றும் சூரியன் திசைகளில் ஜாதகர் அதிக இன்னல்களுக்கு ஆர்படும் நிலையை தரும் என்ற ரீதியிலும் , சந்திரன்,சுக்கிரன்,குரு மற்றும் புதன் திசைகள் மிகுந்த யோக வாழ்க்கையை வழங்கும் என்ற ரீதியிலுமே பலன்களை "கணித்து" சொல்லுவதுண்டு அல்லது மேற்கண்ட கிரகங்கள் ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருக்கின்றனர்  என்ற நிலையை வைத்தும், ( ராசி மற்றும் அம்ச நிலை, சந்திரனுக்கு கோட்சார நிலை ) ஆட்சி,உச்ச,நட்பு,பகை மற்றும் நீட்ச நிலை கருத்தில் கொண்டும் ஜாதக பலன்களை நிர்ணயம் செய்கின்றனர், இதிலும் பல கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு, இன்னும் சிலர் நட்சத்திரம் மற்றும் சார பலம் என்றும் பல் வேறு கருத்துகளை சொல்வதுண்டு, எது எப்படி இருந்தாலும்  நமது ஜோதிட முறையில் நம்மை நம்பி வரும் ஒருவருக்கு சரியான உறுதியான முறையில் ஜாதக பலன் காணும் எளிய முறையினை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம்.



ஜாதகரின் விபரம்




லக்கினம் : தனுசு

ராசி : கும்பம்
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம்

ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினம் முதற்கொண்டு 12 பாவகங்கள் அவரின் வாழ்க்கை முறையினையும், வாழ்க்கையில் அடையும் வெற்றி தோல்வி, நன்மை தீமை யோக அவயோக பலன்களை நிர்ணயம் செய்கின்றது என்றால் அது மிகையில்லை.


 லக்கினம் ஜாதகரின் உடல் உயிர் நிலை பற்றியும், வளரும் சூழ்நிலையை பற்றியும், 2ம் பாவகம் ஜாதகரின் வாக்கு, தனம், குடும்பம் அடிப்படை கல்வி பற்றியும், 3ம் பாவகம் சகோதரர், எடுக்கும் முயற்சிகளில் வரும் வெற்றி வீரியம் பற்றியும், 4ம் பாவகம் தனது தாய், சொத்து,வீடு,வண்டி வாகன வசதி பற்றியும், ஜாதகரின் குண இயல்பு பற்றியும் உயர் கல்வி பற்றியும் ( பெண்கள் ஜாதகத்தில் தந்தையை பற்றியும் ), 5ம் பாவகம் தனது நினைவாற்றல் குல தெய்வ ஆசி, குழந்தை செல்வம் பற்றியும், தான் கற்ற கல்வியினால் வரும் யோக அமைப்பை பற்றியும், 6ம் பாவகம் தனது எதிரிகளால் வரும் நன்மை தீமை, உடல் நலம் நலமின்மை, கடன் பெறுவதால் வரும் யோக அவயோக நிலையை பற்றியும்.


7ம் பாவகம் தனது நண்பர்கள் வழக்கை துணை, கூட்டாளிகள், பொதுமக்கள் அதரவு, அரசியலில் ஜாதகர் பெரும் வெற்றி, வியாபர நிலையை பற்றியும், 8ம் பாவகம் ஜாதகருக்கு தீடீரென நிகழும் யோக அவயோக நிலையை பற்றியும் , ஆயுள் நிலையை பற்றியும், விபத்து மற்றும் சிகிச்சை பற்றியும், 9ம் பாவகம் ஆன்மீக பெரியோரின் ஆசியை பற்றியும், தான் செய்த பாக்கிய அமைப்பினால் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை பற்றியும், சமுதாயத்தில் ஜாதகருக்கு கிடைக்கும் நர்ப்பெயர் பற்றியும், 10ம் பாவகம்  ஜாதகரின் தந்தையை பற்றியும் ( பெண்கள் ஜாதகத்தில் தாயை பற்றியும்) ஜாதகரின் கௌரவம் , ஜீவனம் , கர்ம நிலையை பற்றியும், 11ம் பாவகம் ஜாதகர் இந்த பிறவி எடுத்ததின் காரணம் பற்றியும் தனது நீடித்த அதிர்ஷ்டத்தை பற்றியும், மூத்த சகோதர அமைப்பை பற்றியும், இரண்டாவது திருமண வாழ்க்கை பற்றியும், 12ம் பாவகம் ஜாதகரின் நிம்மதி, உறக்கம், வாழ்க்கை துணையுடன் உண்டான அன்யோன்யம் மற்றும் சுக வாழ்வு பற்றியும் ஜாதகர் செய்யும் மிகப்பெரிய முதலீடுகள் பற்றியும், வாழ்க்கையின் இறுதியில் அவரது ஆன்மா பெரும் யோக நிலையை பற்றியும் நாம்  தெளிவாக தெரிந்துகொள்ள உதவும்.


மேற்கண்ட 12 பாவகங்கள் சுய ஜாதகத்தில் பெரும் வலிமைக்கேற்ப சம்பந்தபட்ட ஜாதகரின் வாழ்க்கை அமையும், மேற்கண்ட 12 பாவக நிலையை ஏற்று யோக அவயோக பலன்களை ஜாதகருக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அமைப்புகள் வாரி வழங்கும், மேற்கண்ட 12 பாவக நிலையை  பற்றியும், கோட்சார ரீதியாக அந்த பாவகங்களுக்கு நவ கிரகங்கள் தரும் பலன்களை பற்றியும் துல்லியாமாக கணிதம் செய்தால், நம்மை நாடி வரும் அன்பர்களுக்கு தெளிவான ஜாதக பலன்களை உறுதியாக சொல்விட இயலும்.


இனி மேற்கண்ட ஜாதகருக்கு பலாபலன்களை நிர்ணயம் செய்வோம்.


ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :


1,3ம் வீடுகள் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சமபந்தம்.
6,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட ஜாதகத்தில் நன்மையையும் யோகத்தையும் தரும்.

ஜாதகத்தில் பாதிக்கபட்ட நிலையில் இருக்கும் பாவகங்கள் :


8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம். ( 8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது நீண்ட ஆயுளை தரும் இருப்பினும் உடல் தொந்தரவுகளை அடிக்கடி தரும் )

9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதக அமைப்பில் தீமையையும் அவயோகத்தையும் தரும்.

ஜாதக பொது பலன்கள் :


1,3ம் வீடுகள் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு இலக்கின அமைப்பில் இருந்தும் 3ம் பாவக வழியில் இருந்தும் 80 சதவிகித யோக பலன்களை தரும் , ஜாதகருக்கு நல்ல உடல் நிலையையும், வளரும் சூழ்நிலையையும் , நிறைவான அறிவாற்றலையும், நீண்ட ஆயுளையும் இலக்கின அமைப்பில் இருந்து பெறுவார், லக்கினம் தனுசு ராசியாக வருவதும், இந்த ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியாக வருவதும், அது உபய நெருப்பு தத்துவ ராசியாக அமைவதும், ஜாதகருக்கு பரந்த விசாலமான மனதினை தரும், தனது எண்ணத்திலும் செயலிலும் தூய்மையை தரும், தனது சிந்தனையில் வரும் விஷயங்களை நடைமுறையில் காணும் யோகம் உண்டாகும், சமுதாயத்தில் எப்பொழுதும் நர்ப்பெயர் கிடைக்கும், ஆன்மீக  பெரியோர்களின் நல்லாசியும், வழிகாட்டுதலும் ஜாதகருக்கு எப்பொழுதும் கிடைத்து கொண்டே இருக்கும் , தனது பெற்றோர்கள் மற்றும் முன்னோர்கள்  செய்த புண்ணியத்தின் பலனை ஜாதகருக்கு 100 சதவிகிதம் யோகமாக தரும் இதன் வழியில் ஜாதகரின் முன்னேற்றம் அமையும் .


3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் அந்த மூன்றாம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாகவும் ஸ்திர காற்று தத்துவ ராசியாக அமைவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தையும், எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெரும் யோகத்தையும் தரும், குறிப்பாக ஜாதகருக்கு தனது அறிவாற்றல் மூலம் மிகப்பெரிய யோக வாழ்க்கையை தரும், வியாபாரம் வெளிநாடுகளில் இருந்து வரும் பொருளாதார முன்னேற்றம், செல்வ சேர்க்கை மற்றும் செல்வ செழிப்பு, எதிரிகளை வெல்லும் ஆற்றல், நல்ல ஸ்திரமான மன நிலை, தைரியம், பயணங்களில் லாபம் மற்றும் முன்னேற்றம், வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் புதிய சூழ்நிலைகள், ஏஜென்சி துறையில் அபரிவிதமான முன்னேற்றம் என்ற அமைப்பில் யோக பலன்களை வாரி வழங்கும். 


2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து  இசையில் ஈடுபாடும் நல்ல ஞானத்தையும் தரும், திரைப்படம், நாடகம்,விளையாட்டு, பொழுது போக்கு போன்ற விசயங்களில் ஈடுபாட்டினையும், வெற்றியையும் வாரிவழங்கும், தனது குழந்தைகளால் வாழ்க்கையில் யோக அமைப்பை பெறுவார் நிறைவான செல்வ சேர்க்கையை பெரும் யோகம் உண்டாகும், மேலும் ஐந்த பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியாக வருவதும், அது மேஷ சர நெருப்பு தத்துவ அமைப்பாக வருவதும் யோக அமைப்பே, குறிப்பாக ஜாதகருக்கு சுய  கட்டுப்பாட்டினையும் , சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் தெளிவான வாக்கு வன்மையையும், இனிமையான பேச்சு திறனையும் சரளமாக வாரி வழங்கும்.


5ம் பாவக வழியில் இருந்து கலைகளில் வெற்றியும், கலைஈடுபாட்டினையும், தானியம் மற்றும் உணவு பொருட்களாலும், நீர்ம பொருட்களாலும் அதிக லாபத்தையும் , புத்திசாலித்தனமான நடவடிக்கையின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பையும், தனது வாத திறமையினால் அனைத்தையும் வெல்லும் யோகம் உண்டாகும், தனது பேச்சு திறனால் அனைவரையும் மயக்கும் ஆற்றல் உண்டாகும், மேலும் தர்ம சிந்தனை, நல்ல குழந்தைகள், விளையாட்டு வீரர், தன்னம்பிக்கை மிகுந்த மன நிலை, இறை அருளின் கருணையை பரிபூரணமாக அனுபவிக்கும் யோகம், குல தேவதையின் கருணையை விரைவில் பெரும் யோகம் என ஜாதகர்க்கு மிகுந்த யோகத்தை வாரி வழங்கும்.


4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சமபந்தம் பெறுவது, ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து கல்வியில் உயர்வு, கல்வி சார்ந்த விஷயங்களிலும் கல்வி நிறுவனங்களினாலும் லாபம், ஆய்வு மனப்பான்மை, பல திருத்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு , ஏற்றுமதி இறக்குமதி  வியாபர விருத்தி, ஆன்மீக ஈடுபாடு என்ற அமைப்பில் யோகத்தை தரும், 9ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் பாவகமாக வருவதாலும் , 9ம் பாவகம் சிம்ம ஸ்திர நெருப்பு ராசியாக இருப்பதாலும் ஜாதகருக்கு ஆன்மீகத்திலும், இறை நிலையின் பரிபூரண கருணையும் நிச்சயம் உண்டாகும்.

12ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து யோக வழக்கை, பயணங்களால் அதிக லாபம், வசதிமிக்க பொறுப்புகள் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பெரிய தன சேர்க்கை, தொழில் மற்றும் இடமாற்றம் மூலம் அதிக லாபம், வெளி வட்டார பழக்க வழக்கங்களில் நர்ப்பெயரும் யோகமும் உண்டாகும் தன்மை , தனது அறிவாற்றல் மூலம் எவ்வித பிரச்சனைக்கும் தீர்வு காணும் புத்திசாலித்தனம் என்ற அமைப்பில் சுபயோக பலன்களை வழங்கும்.

6,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் வீடாகவும் உபய நில தத்துவ ராசியாகவும் இருப்பதால், ஜாதகருக்கு ஜீவனம் என்பது, மண் சார்ந்த தொழில் அமைப்பையும், இதன் வகை தொழில்களில் வெற்றிமேல் வெற்றியையும், ஜீவன மேன்மையும் தரும், தனது தந்தையின் மூலம் ஜாதகர் வாழக்கையில் நல்ல படிப்பினையை பெறுவார், அவர்களின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம், பெரும் அமைப்பை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறந்த பொருத்தமான வாழ்க்கை துணையை  தமது விருப்பம் போல் பெரும் யோகத்தை தரும், சிறந்த நண்பர்களும் நடப்பும் வாழ்க்கையில் சரியான நேரத்தில் கிடைக்கும், இதன் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் பெறுவார், அரசியலில் எதிர்பாராத வெற்றியை தரும் , பொதுமக்கள் ஆதரவு ஜாதகருக்கு எப்பொழுதும் உண்டு, ஜாதகருக்கு அரசியலில் வெற்றி, வியாபாரத்தில் வெற்றி, சமூகத்தில் நல்ல அந்தஸ்து என்ற நிலையில் யோக பலன்களை வாரி வழங்கும்.

10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம் அல்லது தொழில் அமையும் , வியாபாரத்தில் அபரிவிதமான வளர்ச்சியை ஜாதகர் தொடர்ந்து பெரும் யோகத்தை தரும், பல் வகை தொழில் முன்னேற்றத்தை பெரும் யோகம் உண்டு, கம்பீரமான தோற்றமும், தீர்க்கமான வாத திறமையும் ஜாதகரின் வெற்றிக்கு வழிவகுக்கும், எந்த நிலையிலும் ஜீவன வழியில் இருந்து பின்னடைவை தராது, வெற்றிமேல் வெற்றி உண்டாகும்.

11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பிலேயே 200 சதவிகித யோகத்தை தரும், ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி, அனைத்திலும் லாபம், நல்ல  குணம் என்ற வகையில் பலன்களை வாரி வழங்கும், மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜாதகரின் 11ம் பாவகம் 7ம் ராசியாக வருவதும் அது துலாம் சர காற்று தத்துவ ராசியாக இருப்பதும் மிகுந்த யோக அமைப்பை தரும் நிலையாகும், இந்த பாவகத்தின் பலன் நடை பெரும் பொழுது ஜாதகர் செய்யும் விஷயங்கள் யாவும் 100 சதவிகித வெற்றியை தரும் என்றால் அது மிகையில்லை , சர காற்று தத்துவ ராசியின் தன்மையே மனிதர்களுக்கு சிறந்த அறிவாற்றலையும் திட்டமிடுதலையும் அதன் வழியில் நடந்து வாழ்க்கையில் வெற்றி பெறுதலையும் குறிக்கிறது.

8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தந்த போதிலும், அதற்க்கு இணையான பொருள் இழப்பை தரும் , குறிப்பாக பொருளாதரத்தில் ஏற்ற இறக்கங்களை ஜாதகர் அடிக்கடி கவனத்தில் கொள்வது நல்லது , ஜாதகரின் 8ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடாக வருவதும், அந்த ராசி சர கடகமாக அமைவதும், ஜாதகரின் மன இயல்பில் வரும் மாற்றங்களை குறிக்கிறது, எடுத்துகாட்டாக தேவையற்ற மன கவலை ஜாதகரின் முன்னேற்றமான வாழ்க்கையை பதம் பார்க்கும், வீண் கவலைகளை தவிர்த்து எதிர்த்து நிற்பது ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும், தனது பெயரில் உள்ள சொத்து அமைப்புகளில் சற்றே கவனம் செலுத்துவதும் நல்லது, சிறு சிறு உடல் தொந்தரவுகளை தவிர்க்க இயலாது, இதனால் ஜாதகருக்கு நன்மையே உண்டாகும்.

9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதக அமைப்பில் சற்றே பொருளாதார விரையத்தை கொடுக்கும் , ஜாதகரின் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடாக   வருவது இழப்பின் வீரியத்தை குறிக்கிறது மேலும் ஸ்திர நீர் ராசியாக இருப்பதால், ஜாதகருக்கு ஏற்ப்படும் இழப்பு அதிக நாள் மன நிம்மதியற்ற நிலையை காட்டுகிறது , இந்த காலகட்டங்களில் ஜாதகர் சற்றே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது , வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொள்ளவேண்டிய நேரமிது , 8,12ம் பாவக வழியில் இருந்து பலன்கள் நடை பெரும் பொழுது மட்டும் ஜாதகர் சற்றே கவனமுடன் இருப்பது நலம் தரும், திசை மற்றும் புத்திகளிலும், கோட்சார நிலைகளிலும் மேற்கண்ட பாவக பலன்கள் நடை முறைக்கு வரும் பொழுது எவ்வித பணியையும் மேற்கொள்ளாமல் இருந்தாலே போதும்.

ஜாதகருக்கு திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் எந்த எந்த பாவகங்களின் பலனை ஏற்று நடத்துகிறது என்று இனி பார்ப்போம் .

ராகு திசை : (பிறந்த தேதி முதல்  28/10/1961 வரையிலும் ) 

2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையையும்,  8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று தீமையையும் தந்திருக்கிறது .

குரு திசை : ( 28/10/1961 முதல் 28/10/1977 வரை )

9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குரு திசையானது பெரிய யோகத்தையும் தரவில்லை.

சனி திசை:( 28/10/1977 முதல் 28/10/1996 வரை) 

9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சனி  திசையானது பெரிய யோகத்தையும் தரவில்லை.

புதன் திசை : ( 28/10/1996 முதல் 28/10/2013 வரை )

11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித நன்மையையும், 4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சமபந்தம் பெற்று 80 சதவிகித நன்மையையும் வாரி வழங்கி இருக்கிறது.

கேது திசை : (28/10/2013 முதல் 28/10/2020 வரை)

1,3ம் வீடுகள் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித யோக பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது.

சுக்கிரன் திசை :(28/10/2020 முதல் 28/10/2040 வரை )

4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சமபந்தம் பெற்று 80 சதவிகித நன்மையையும் வாரி வழங்கும்.

சூரியன் திசை : ( 28/10/2040 முதல் 28/10/2046 வரை )

11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித நன்மையை வாரி வழங்கும்.

சந்திரன் திசை : ( 28/10/2046 முதல் 28/10/2056 வரை)

1,3ம் வீடுகள் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித யோக பலன்களை  வாரி வழங்கும்.

செவ்வாய் திசை : ( 28/10/2056 முதல் 28/10/2063வரை)

8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தரும் .

ஆக மேற்கண்ட ஜாதகத்தில் செவ்வாய்,குரு,சனி மகா திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு தாம் தொடர்பு கொண்ட பாவக அமைப்பில் இருந்து அவயோக பலன்களையும்.

ராகு,புதன்,கேது,சுக்கிரன்,சூரியன் மற்றும் சந்திர மகா திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு தாம் தொடர்பு கொண்ட பாவக அமைப்பில் இருந்து யோக பலன்களையும் வழங்கிக்கொண்டு இருப்பது உறுதியாகிறது .

எனவே ஜாதகர்  செவ்வாய்,குரு,சனி மகா திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலகட்டங்களில் சற்றே எச்சரிக்கையாகவும், அவைகள் தொடர்பு பெரும் பாவக சம்பந்தம் பெற்ற விஷயங்களில் ஈடுபடாமலும் இருந்தாலே ஜாதகருக்கு நன்மையே உண்டாகும் , மேற்கண்ட பாவகங்களுடன் கோட்சார கிரக அமைப்பை கருத்தில் கொண்டு பலன் காணும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையை பற்றி தெளிவாக ஜாதக பலன்களை சொல்லவிட இயலும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435
Jothidadeepam@gmail.com

புதன், 30 அக்டோபர், 2013

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?



நிச்சயமாக சொல்ல இயலும் அன்பரே !

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் அபரிவிதமான வருமானம் பெற களத்திர ஸ்தானம் மிகுந்த வலிமை பெற்று இருப்பது அவசியம், அதாவது களத்திர ஸ்தானம் வெளிவட்டார தொடர்புகளையும், பொதுமக்களையும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானத்தையும், வேற்று இன மக்கள் மூலம் வரும் லாபத்தையும் குறிக்கும் எனவே சுய ஜாதகத்தில், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சர ராசிகளுடன் தொடர்பு பெறுவது சிறப்பு .

களத்திர ஸ்தானம் சர ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய தன சேர்க்கையை வாரி வழங்கிவிடும், மேலும் ஜாதகர் செய்யும் தொழிலானது விரைவில் மிக பிரபலாமாக மக்கள் மத்தில் சென்றடையும் , ஜாதகர் விளம்பரம் எதுவும் செய்யாமலேயே தனது வியாபரத்தை பன்மடங்கு வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் திறமை கொண்டவராக இருப்பார், இவருடன் தொழில் தொழில் செய்யும் அன்பர்கள் யாவரும் நேர்மை மிகுந்தவர்களாகவும் உண்மையாக இவர்களுக்கு உழைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

களத்திர ஸ்தானம் ஸ்திர ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில், படிப்படியான நிலையான வளர்ச்சியை தரும், தனது தொழிலை ஜாதகர் பல தலைமுறைக்கு நடத்தும் தன்மையுடன், சரியான திட்டமிடுதலுடன் செம்மையாக தொழில் நிர்வாகம் செய்வார் , இவர்களின் முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, தான் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாழையடி வாழையாக செழித்தோங்கும் தன்மையுடன், சிறப்பான தொழில் முன்னேற்றத்தை பெறுவார்கள், இவர்களின் சிந்தனையெல்லாம் பல தலைமுறைக்கு தனது தொழில் சீரும் சிறப்புமாக நடைபெறும் அளவிற்கும் சரியான திட்டமிடுதலுடன், தொலை நோக்கு பாரவையுடன் இருக்கும்.

களத்திர ஸ்தானம் உபய ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் தொய்வில்லாத சீரான வருமானத்தை பெரும் அமைப்பிலான வியாபாரங்களை  செய்வார், அதிக ரிஸ்க் இல்லாத தொழில்களாகவும், நிர்ணயக்கபட்ட வருமானம் உள்ள தொழில்களை தேர்ந்தெடுத்து செய்யும் தன்மை கொண்டவர்கள், இந்த அமைப்பை பெற்றவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் இழப்பு மற்றும் நஷ்டம் என்பதே இருக்காது, சீரான  நிலையான வருமானத்தை ஜாதகரின் வாழ்நாள் முழுவதும் பெற்றுகொண்டே இருக்கும் விதத்தில் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமையும்.

மேற்கண்ட அமைப்பில் களத்திர ஸ்தானம் அமைந்த போதிலும், களத்திர ஸ்தானம் சுய ஜாதக அமைப்பின் படி பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று விட்டல் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது , மேற்கண்ட பலன்களுக்கு  எதிர்மறையான பலன்களை வழங்கிவிடும், தீய பலன்கள் 200 மடங்கு  நடை பெரும்.

மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகமும், சுக ஸ்தானமான  4ம் பாவகமும் நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் மிகுந்த வற்றி வாய்ப்பை வாரி வழங்கும் .

பங்கு வர்த்தக தொழில்களில் ஜாதகர் நிறைவான வருமானத்த பெற , சுய ஜாதகத்தில் மற்றவர் பணத்தை குறிக்கும் 6ம் பாவகமும், திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வர்த்தகத்தால் வரும் வருமானத்தை தரும் 8ம் பாவகமும், முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை குறிக்கும் 12ம் பாவகமும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் மேற்கண்ட அமைப்பில் 6,8,12ம் பாவகங்கள் ஒருவர் ஜாதகத்தில் நல்ல வலிமையுடன் 100 சதவிகிதம் சிறப்பாக இருந்தால், பங்குவர்த்தக தொழில்களில் கொடிகட்டி பறக்கலாம், அபரிவிதமான வருமானத்தை பெறலாம்.

மாறாக மேற்கண்ட 6,8,12ம் பாவகங்கள் வலிமை இழந்தோ, தனது பாவகத்துடன் சம்பந்தம் பெற்றோ, விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருந்தாலோ , பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தாலோ, ஜாதகர் பங்கு வர்த்தக தொழில் பக்கம் தலை வைத்து படுப்பது கூட ஆகாது, மீறி செய்தால்  ஜாதகரின் "கெளனபீடம்"
(கோவணம்) வரை உருவி விடும் .

எனவே எந்த ஒரு ஜாதகரும் சுய ஜாதக ரீதியாக தனக்கு ஏற்ற ஜீவனம் எதுவென்பதை நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று செய்வது சிறப்பு, அதிலும் தற்பொழுது நடை பெரும் திசை மற்றும் புத்திகள் நல்ல யோக பலன்களை  வழங்குவது நல்லது, சுய ஜாதகம் மட்டும் வலிமை பெற்று தற்பொழுது  நடைபெறும் திசை மற்றும் புத்தி  சிறப்பாக இல்லையெனில் ஜாதகர் செய்யும் தொழில் மிகப்பெரிய வெற்றியை தர வாய்ப்பில்லை என்பது மட்டும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435