திங்கள், 23 மே, 2016

திருமண வாழ்க்கைக்கு பொருத்தமற்ற துணையை தேர்வு செய்தால், சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கை என்னவாகும் ?


" ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே " என்ற முதுமொழிக்கு ஏற்ப ஒரு ஆண் மகனின் வாழ்க்கையில் அடிஎடுத்து வைக்கும் பெண் யோகமானவராக இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களும் வந்துசேரும், இதற்க்கு எதிர்மறையாக அமைந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இல்லமால் போய்விட வாய்ப்புண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் பல யோகங்கள் இருந்தாலும் அதை பரிபூரணமாக அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும், முன்னேற்றம் என்பது கடுமையாக பாதிக்கப்படும், ஜாதகரின் திட்டமிடுதல்கள், கனவுகள் மற்றும் லட்சியங்கள் யாவும் நிறைவேறாத கானால் நீராகவே மாறிவிட வாய்ப்பு உண்டு.

இன்றைய இளைஞர்கள் தமக்கு உகந்த கல்வி, வேலை மற்றும் வசதிவாய்ப்புகளை தேர்வு செய்வதில் வல்லவர்களாகவே உள்ளனர், ஆனால் தமது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் மட்டும் ஒரு தெளிவான கண்ணோட்டத்தில் இல்லாமல், மனம் சொல்வதை மட்டும் ஏற்றுக்கொண்டு, அறிவு சொல்வதை நிராகரித்து விடும் தன்மையை பெற்றுள்ளனர், நம்மால் அனைத்தும் முடியும் என்ற குருட்டு நம்பிக்கையில், சில தவறான முடிவுகளால் தமது வாழ்க்கைக்கும் தமது நலனிற்கும் சற்றும் பொருத்தம் இல்லாத நபர்களை தேர்வு செய்து, அதனால் வரும் துன்பங்களை தவிர்க்க இயலாமல் இன்னலுக்கு ஆளாகின்றனர், மேலும் தமது சுய ஜாதக வலிமை நிலையை பற்றி உணராமல் வாழ்க்கையில் கிடைக்க இருக்கும் யோகங்களையும், முன்னேற்றங்களையும் உதறித்தள்ளும் நிலைக்கு வந்துவிடுகின்றனர், இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது, தமது சுய ஜாதக வலிமைக்கு சற்றும் பொருத்தமில்லாத வரனையோ, வதுவையோ தேர்வு செய்யும் ஆண், பெண் இருவருக்கும், திருமணதிற்கு முன்பு வரை உயிராக இருந்தவர்கள் கூட பரம எதிரியாக மாறிவிடும் தன்மையை தந்துவிடுகிறது.

இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையில் எவ்வித தவறான தேர்வுகளுக்கும், மாற்று வழிவகைகள் உண்டு, வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் தவறு செய்தால் வாழ்நாள் முழுவதும் அதன் பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும் என்பதுமட்டும் உறுதி, மேலும் சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையும், தனது லட்சியம் மற்றும் கனவுகளை நிறைவேற்ற இயலாமல் கடுமையான போரற்றங்களையும், இன்னல்களையும் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் சூழ்நிலையை தந்துவிடும், தமது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதற்கு முன் அவர்களது சுய ஜாதக பாவக வலிமையை தெளிவாக உணர்ந்து, தமக்கு பொருத்தமானவர்தான? என்பதை உறுதி செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவதே சால சிறந்தது, கண்களையும் மனம் சொல்வதையும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கை துணையை தேர்வு செய்தால் திருமணத்திற்கு பிறகு வாழும் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று  உறுதியாக சொல்வதற்கு இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் ஆய்வு செய்வோம் அன்பர்களே!


லக்கினம் : மேஷம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 2ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகிக்கு திருமணம் நடைபெற்று 2 வருடங்கள் கடந்துவிட்டது, ஜாதகியின் கணவர் ஜாதகம் மிகவும் வலிமை பெற்ற ஜாதகம், இருப்பினும் திருமணம் நடைபெற்ற 3 மாதத்தில் பெற்றோர் வீட்டுக்கு சென்றவர் இதுவரை கணவர் வீட்டிற்கு வரவில்லை, ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியிலேயே முடிந்தது, திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் எனில் தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் 2,5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, இதில் ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது, ஆனால் ஜாதகிக்கு 5,7ம் வீடுகள் மட்டும் வலிமையாக இருக்கின்றது,2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று கடுமையான பாதிப்பை பெற்று இருக்கின்றது, 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகி மன நிம்மதி இழப்பையும், தேவையற்ற பேச்சு மற்றும் வாத பிரதி வாதங்களால் குடும்பத்தில் சண்டை சச்சரவையும், குடும்ப வாழ்க்கையில் நிம்மதி அற்ற தன்மையையும்  தருகிறது, 8ம் பாவக வழியில் இருந்து திடீர்  இழப்புகளையும், வீண் செலவினங்களையும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இழப்புகளையும் தருகிறது, 12ம் பாவக வழியில் இருந்து நல்ல அயன சயன சுகமற்ற நிலையையும், அனைவராலும் தொல்லை மற்றும் துன்பங்களையும், மன நிம்மதி அற்ற சூழ்நிலையையும் தருகிறது , மேலும் லாப ஸ்தானம் 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகியின் யோக வாழ்க்கையை கேள்விக்கு ஆளாக்குகிறது.

5ம் பாவகம் வலிமை பெற்றது ஜாதகிக்கு தெய்வ அனுகிரகத்தையும், சிறந்த புத்திர  பாக்கியத்தை எதிர்காலத்தில் வழங்கும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது, 7ம் பாவகம் வலிமை பெற்றது ஜாதகிக்கு நல்ல யோகம் நிறைந்த கணவனை வழங்கி இருக்கின்றது, ஜாதகியை சிறப்பாக புரிந்துகொள்ளும் தன்மையை பெற்றவர் என்பதை தெளிவுபடுத்துகிறது, இருப்பினும் 2,8,12ம் வீடுகளின் பாதிப்பு ஜாதகிக்கு திருமண வாழ்க்கையில் இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, பாதக ஸ்தான தொடர்பு சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை மற்றவர்கள் அனுபவிக்கும் தன்மையை தருகிறது, திருமணத்திற்கு பிறகு வந்த இந்த பிரிவு நிலை மற்றும் இன்னல் அனைத்திற்கும் காரணம் தனது சுய ஜாதகத்தில்  2,8,11,12 வீடுகளின் வலிமை அற்ற நிலையே காரணம் என்பதை ஜாதகி தெளிவாக உணர்ந்து, அதற்க்கு உண்டான பிரயசித்ததை தேடிகொள்வது ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கையில் சகல மகிழ்சிகளையும் வழங்கும், மேலும் தனது கணவரின் ஜாதகம் யோகம் நிறைந்தது என்பதனையும், அவரின் வழியில் இருந்து சகல நன்மைகளையும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை ஜாதகி தேடிகொள்வது மட்டுமே சரியான தீர்வாக இருக்கும் என்பதை உணர்வது அவசியமாகிறது.

கடந்த புதன் திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி மிகுந்த இன்னல்களுக்கும், சிரமங்களுக்கும் ஆளாக்கியது, ஆனால் தற்பொழுது வந்துள்ள, நடைபெறுகின்ற கேது திசை ஜாதகிக்கு 1,4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை தருவது சிறப்பான அம்சமாகும், எனவே கேது திசை வழங்கும் ராஜயோக பலன்களை தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்திருந்து பரிபூரணமாக அனுபவிக்க இறைஅருள் கருணை புரியட்டும்.

நமது ஜாதகம் வலிமை  அற்று இருக்கும் பொழுது நாம் தேர்வு செய்யும் நண்பர்கள், வாழ்க்கை துணை, மற்றும் கூட்டாளிகளின் ஜாதகம் மிகவும் வலிமையாக இருப்பது நமக்கு நன்மையை தரும், மேற்கண்ட ஜாதகிக்கு திருமண வாழ்க்கை சிறப்பிக்க உதவும் 2,7ம் வீடுகளில் 2ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது குறையாக இருந்த போதிலும், அவரின் கணவர் ஜாதகத்தில் 2,ம் வீடும் 7ம் வீடும் மிகவும் வலிமையாக இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே தமது 2ம் பாவக வலிமை அற்ற நிலையை மாற்றிக்கொள்ள, தமது கணவருடன் சேர்ந்து இல்லறவழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்வதே சால சிறந்த வழிமுறையாகும், தமக்கு வரும் இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் தமது சுய ஜாதக பாவக வலிமையின்மையே முழு முதற்காரணம் என்பதை ஜாதகி உணர்ந்து, மற்றவர்களை குறை சொல்லாமல், வீண் பிடிவாதத்தை விட்டு தமது வினை பதிவை கழித்துகொள்வதர்க்கு இறைஅருள் கொடுத்த நல்ல வாய்ப்பாக கருதி வாழ்க்கையில் வளம் பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

குறிப்பு :

 திருமண வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்துக்கொண்டு இருக்கும் தம்பதியர் அனைவரும் தமது சுய ஜாதக நிலை பற்றி, சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது, திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க இருக்கும் அன்பர்கள் தமது ஜாதக வலிமையை பற்றியும், தமக்கு வர இருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை பற்றியும் தெளிவு பெறுவது, எதிர்கால வாழ்க்கையை மிகவும் யோகம் நிறைந்ததாக மாற்றியமைக்கும் என்ற  உண்மையை உணர்வது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 14 மே, 2016

தொழில் ஸ்தான வலிமையையும், பாதக ஸ்தான தொடர்புகளும், திசா புத்திகள் வழங்கும் பலாபலன்களும்!


 சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது மிக மிக அவசியமாகிறது "எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம்" என்பதற்கு இணங்க சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான வளரும் சூழ்நிலையையும், சிறந்த உடல் ஆரோக்கியத்தையும், நல்ல சிந்தனைகளையும், அறிவு திறன் மற்றும் மன ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும், லக்கினம் வலிமை இழப்பது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வழங்குவதில்லை, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளையும், யோகங்களையும் அனுபவிக்க இயலாத சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பங்களை ஜாதகருக்கு வழங்குகிறது, லக்கினம் பாதிக்க படுவதே ஜாதகருக்கு நன்மைகளை வழங்குவதில்லை என்ற நிலையில், லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகரின் வாழ்க்கையில் தாங்க இயலாத இன்னல்களை கடுமையாக வாரி வழங்கும், மேலும் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை அந்தோ பரிதாபம் என்ற நிலைக்கு எடுத்து செல்லும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே!

கிழ்கண்ட ஜாதகருக்கு லக்கினம் மட்டுமல்ல மேலும் சில பாவகங்களும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை எவ்வித பாதிப்புகளை வழங்குகிறது என்பதை பற்றியும், ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள திசாபுத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் வழங்கும் பலாபலன்கள் பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : சிம்மம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 2ம் பாதம் 

பாவக தொடர்புகள் :

1,2,5,6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித கடுமையான பாதிப்புகளை 1,2,5,6,9ம் வீடுகள் வழியில் இருந்து நடத்தும்.

8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 100% விகித கடுமையான பாதிப்புகளை 8,10,12ம் வீடுகள் வழியில்  இருந்து நடத்தும்.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும்,7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும்,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும் சிறப்பாக வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்க படுவது, ஜாதகருக்கு சுய தொழில் மூலம் ஜீவனம் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது, 7ம் பாவகம் வலிமையுடன் இருப்பதால் ஜாதகர் கூட்டு தொழில் செய்வதற்கு உகந்தவர் என்பது உறுதியாகிறது, இருப்பினும் ஜாதகர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார், பணிபுரியும் இடத்தில் அதிக இன்னல்களை தற்ப்போழுதும் சந்தித்து கொண்டு இருக்கிறார் என்பதை ஜீவன ஸ்தான வலிமை இன்மை காட்டுகிறது.

மேலும் சுய ஜாதகத்தில் பெருவாரியான வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதும், பாதக ஸ்தான தொடர்புகளை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறு வயது முதல் பல இன்னல்களுக்கு ஆளாக்கி  உள்ளது, ஜாதகரும் தனது செய்கையினாலே பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளார், 1ம் பாவக வழியில் இருந்து உடல்நலம், மன நலம் மற்றும் வளரும் சூழ்நிலை சிறப்பற்ற தன்மையையும், 2ம் பாவக வழியில் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களையும், வரும் வருமானம் ஜாதகருக்கு பாதகமான பலன்களையும், தனது பேச்சினால் இன்னல்களையும், 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியில் இருந்து பலன் அற்ற நிலையையும், பூர்வீகத்தில் இருந்து பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலையையும், குல தெய்வ ஆசி அற்ற நிலையையும், 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் நல பாதிப்புகளையும், எதிரிகள் தொந்தரவு மற்றும் கடன் சார்ந்த இன்னல்களையும், 9ம் பாவக வழியில் இருந்து பித்ரு சாபங்களையும், சுய அறிவு திறன் மற்றும் புத்திசாலித்தனம் ஜாதகருக்கு பயன் தாராமல் மற்றவர்களுக்கு பயன்படும் சூழ்நிலையும் ஏற்ப்படுகிறது.

மேலும் ஜாதகர் 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், எதிர்பாராத மருத்துவ செலவினங்களையும், அனைவராலும் தொல்லைகளையும், எதிர்பாராத விபத்துகளையும், மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களையும் தருகிறது, 10ம் பாவக வழியில் இருந்து அடிக்கடி ஜீவன வழியில் தொந்தரவுகளையும், பணியிட மாறுதல்களையும், உயர் அதிகாரிகளின் கடுமையான கண்டிப்புகளுக்கும், ஆளாகும் சூழ்நிலையை தருகிறது, 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையையும், நல்ல உறக்கமின்மையும், ஜாதகரின் வாழ்க்கையில் வரும் திடீர் நிம்மதி இழப்பும் கடுமையாக பாதிப்பை தருக்கிறது, வீண் மன பயம், பிற்போக்கு சிந்தனைகள், ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது, திடீர் இழப்புகள் ஜாதகருக்கு மிகப்பெரிய நெருக்கடிகளை கடுமையாக தருவது வருந்தத்தக்கது.

சுய ஜாதகத்தில் 8வீடுகள் கடுமையாக பதிக்க படுவது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கண்கூட உள்ளது, சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை இப்படி இருக்க நடைபெறும் திசா புத்திகள் எவ்வித பலன்களை தருகிறது என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! 

தற்பொழுது ஜாதகருக்கு நடைபெறுவது புதன் திசை, இந்த புதன் திசை ஜாதகருக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும், சுய ஜாதகத்தில் பல பாவகங்கள் கடுமையாக பாதிக்கப் பட்ட போதிலும், தற்பொழுது நடைபெறும் புதன் திசை வலிமை பெற்ற 3ம் பாவக பலனை ஏற்று நடத்தியது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே புதன் திசை ஜாதகருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நன்மைகளை வழங்கியது எனலாம், அடுத்து வரும் கேது திசை ஜாதகருக்கு 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகசிறப்பான நன்மைகளையே தரும் என்பது கவனிக்க தக்கது, கேது திசை காலங்களில் ஜாதகருக்கு திருமணம் சிறப்பாக நடைபெறும், நல்ல வாழ்க்கை துணை அமைவார், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து யோக பலன்களை தங்குதடையின்றி பரிபூரணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், திருமணத்திற்கு பிறகு ஜாதகருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

கேது திசைக்கு பிறகு வரும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், சுக்கிரன் திசை முழுவதும் ஜாதகருக்கு நல்ல வீடு வண்டி வாகனம் மற்றும் சுக போகங்களையும் 4ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், மேலும் வாழ்க்கை துணை வழியில் இருந்தும் ஜாதகருக்கு பொருள் சேர்க்கை உண்டாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் கடுமையான பாதிப்பை பெற்ற போதிலும் ( 8 வீடுகள் பாதிக்க பட்டுள்ளது ) நடைபெறும் திசா புத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவது சாதகமாக அமைந்துவிடுகிறது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்ட போதிலும், நடைமுறை எதிர்வரும் திசா புத்தி ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களே நடைமுறைக்கு வரும், எனவே ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்தி காலங்களில் மட்டும் எச்சரிக்கையாக இருப்பது சகல நலன்களையும் தரும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு   உகந்தது அல்ல, வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளை  முழுமையாக பெற, வலிமை பெற்ற பாவக வழியிலான உறவுகளின் தொடர்பை ஜாதகர் நட்பு பாராட்டுவது நல்லது, மேலும் சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு நன்மைகளை தருவோர், 3ம் பாவக வழியில் சகோதரம், 4ம் பாவக வழியில் தாயார், 7ம் பாவக வழியில் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள், 11ம் பாவக வழியிலான மூத்த சகோதரம் ஆகியோரிடம் ஜாதகர் எப்பொழுதும் சுகுமானபோக்கை கடைபிடிப்பது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு நன்மையே நடைபெறும், பாதிக்கப்பட்ட பாவக வழியிலான பலாபலன்கள் ஜாதகருக்கு நடைபெறாது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 11 மே, 2016

சுய ஜாதகங்களில் யோகங்களும், ஜாதகரின் விழிப்புணர்வும்!

 

சுய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் 12 பாவகங்கள் வழியில் பலனை தரும் பொழுது ஜாதகர் விழிப்புணர்வுடன் இருந்து நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் பெறவேண்டும், மாறாக வரும் நன்மைகளையும் யோகங்களையும் ஜாதகர் உதறும் பொழுது, சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்த போதிலும் ஜாதகருக்கு அதனால் எவ்வித பலாபலனும் அனுபவிக்க இயலாத நிலையை தரும், இயற்கையாகவே சுய ஜாதகத்தில் உடல் உயிர் ஆகிய லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் மிகவும் விழிப்புணர்வுடன் செயலாற்றும் தன்மையை தரும், மேலும் சுய ஜாதகத்தில் 12 பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை சிறிதும் விரையம் இன்றி ஜாதகர் அனுபவிப்பர், தங்கு தடையின்றி ராஜ யோக பலாபலன்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், உடல்உயிராகிய லக்கினம் எனும் முதல் பாவகம் ஏதாவது ஒரு வகையில் பாதிக்க படும்பொழுது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் இருந்த போதிலும் அதன் பலாபலன்களை ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தாராது, ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகத்திர்க்கு ஆதிபத்தியத்திற்கு உற்பட்ட உறவுகள் அனுபவிக்கும் நிலையை தந்துவிட வாய்ப்புள்ளது.

சுய ஜாதகத்தில் சிறப்பான ராஜ யோகங்கள் இருந்து, உடல் உயிராகிய லக்கினம் பாதிக்க படும்பொழுது, ஜாதகர் லக்கின பாதிப்பில் இருந்து வெளிவருவதற்கு உண்டான வாய்ப்புகளை தீவிரமாக ஆராய்வது சாலசிறந்தது, இலக்கின பாதிப்பு எத்தகையது, அதன் வீரியம் என்ன என்பதை ஜாதகர் தெளிவாக உணர்வது அவசியமாகிறது, இலக்கினம் மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நிச்சயம் பாதிப்பை தரும், லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை மிக பெரிய அளவில்  வழங்கும், மேற்கண்ட அமைப்பு சுய ஜாதகத்தில் இருப்பின் ஜாதகர் அவ்வித பாதிப்பில் இருந்து வெளிவருவதற்கு உண்டான விஷயங்களில் ஆர்வம் செலுத்துவது சுய ஜாதகத்தில் உள்ள யோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் முழுமையாக அனுபவிப்பதற்கு உண்டான வாய்ப்புகளை நிச்சயம் வாரி வழங்கும், ஜாதகரின் முயற்ச்சி நிச்சயம் நல்ல வெற்றிகளை தரும்.

மேற்கண்ட விஷயங்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம் 
 ராசி : மீனம்
நட்சத்திரம் : ரேவதி 1ம் பாதம்

ஜாதகருக்கு மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

5,8,11ம் வீடுகள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிதமிஞ்சிய யோகங்களை தரும்.

10ம் வீடு குடும்பம் மற்றும் தன  ஸ்தானமான 2ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிதமிஞ்சிய யோகங்களை தரும்.

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

4ம் வீடு சுக  ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிதமான யோகங்களை தரும்.

2,3,6,9,12ம் வீடுகள் தொழில் ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிதமான யோகங்களை தரும்.

ஜாதகருக்கு மிகவும் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

1,7 ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக கடுமையான பாதிப்புகளை வாரி வழங்கும் .

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,11ம் பாவக தொடர்புகளை பெரும் வீடுகள் வழியில் இருந்து மிதமிஞ்சிய யோக பலன்கள் நடைபெறும், ஜாதகரின் வாழ்க்கையில் 5பாவக வழியில் இருந்து நல்ல அறிவு திறனும், புத்திசாலித்தனமும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டமும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையையும், 10ம் பாவக வழியில் இருந்து மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், 11ம் பாவக வழியில் இருந்து முற்போக்கு சிந்தனையையும், நீடித்த மிகப்பெரிய அளவிலான அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்கும், ஜாதகருக்கு 5,8,10,11ம் பாவகங்கள் தனது அமைப்பிலான யோகங்களை விரைந்து வாரி வழங்கும், தன்னிறைவான முழுமை நிறைந்த யோகங்களையும் நன்மைகளையும் 5,8,10,11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் அனுபவிக்கலாம் என்பது மேற்கண்ட ஜாதகருக்கு உள்ள சிறப்பு தன்மை ஆகும்.

ஆனால் ஜாதகரின் லக்கினமும், களத்திர பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால், மேற்கண்ட யோக பலன்களை அனுபவிப்பதற்கு  தடையாக ஜாதகரும், ஜாதகரின் வாழ்க்கை துணையும், ஜாதகரின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளும் இருப்பார்கள் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், அடிப்படையில் லக்கினம் பாதிப்பது, ஜாதகரின் வளர்ந்த சூழ்நிலை சரியில்லை என்பதையும், ஜாதகரின் உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு ஒத்துழைப்பை வழங்காது என்பதையும், ஜாதகரின் எண்ணமும் செயலும் சரியான பாதையில் செல்லாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

களத்திர பாவகம் பாதிப்பது, ஜாதகர் தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனத்தையும், ஜாதகருக்கு சாதகமாக இருக்கும் விஷயங்களில் ஆர்வம் செலுத்தி தேர்வு செய்வது நன்மையை தரும் என்பதனையும், தமது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை தேர்வு செய்யும் பொழுது மிகுந்த எச்சரிக்கையையும், ஜாதகருக்கு பாதகமில்லாத நபர்களையும் தேர்வு செய்வது அவசியமாகிறது, ஜாதகர் மேற்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்த வில்லை எனில் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதனை கருத்தில் கொள்வது, ஜாதகருக்கு நன்மைகளை தரும்.

மேலும் ஜாதகர் உடல்,மனம்,புத்தி மற்றும் செயல்களால் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பில்லாத செயல்களை செய்வதும், உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதும், செய்யும் செயல்களில் விளைவறிந்து செயல்படும் தன்மையையும், அறிவில் விழிப்புணர்வும் தெளிவான சிந்தனையையும் தனது துணையாக கைகொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும்.

இந்த ஜாதகருக்கு கடுமையாக பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்தி காலங்களில் ஜாதகர் மிகுந்த கவனமுடன் நடந்துகொள்வது அவசியமாகிறது, ஏனெனில் பாதிக்க பட்ட பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்தும் திசா புத்திகளே ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளையும், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் வாரி வழங்கும், இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது ஜாதகருக்கு கேது,சுக்கிரன்,சூரியன் மற்றும் செவ்வாய் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால், இந்த காலகட்டங்களில் ஜாதகர் மிகுந்த கவனமுடன் இருப்பது ஜாதகருக்கு நன்மைகளை தரும், மேலும் யோகங்களை தரும் பாவக வழியிலான பலாபலன்களை அனுபவிப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஜாதகர் கையாள்வது சிறப்பானதாக அமையும்.

அடுத்து வரும் சுக்கிரன் திசை 5,8,11ம் வீடுகள்  அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்ற பலனையும், 1,7 ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்ற பலனையும் கலந்து நடத்துவது ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய யோகங்களையும், பாதக ஸ்தான வழியிலான கடுமையான பாதிப்புகளையும் வாரி வழங்கும் என்பதால், ஜாதகர் மிகுந்த விழிப்புணர்வுடன் நடந்துகொண்டு யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுவதும், பாதக ஸ்தான வழியிலான இன்னல்களில் இருந்து விடுபடுவதற்கு உண்டான விஷயங்களில் அதிக ஆர்வமும் கொள்வது, ஜாதகருக்கு மிகசிறந்த யோக வாழ்க்கையயை வாரி வழங்கும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ராஜயோகங்கள் இருந்த போதிலும், லக்கினம் வலிமை இழப்பது ஜாதகருக்கு நல்லதல்ல, யோகபலன்களை ஜாதகர்  பரிபூர்ணமாக அனுபவிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கும், இருப்பினும் ஜாதகர் விழிப்புணர்வுடன் இருந்தால், இந்த நிலையை ஜாதகரே மாற்ற இயலும் என்பதை கருத்தில் கொள்வது நல்லதென " ஜோதிடதீபம் " உறுதியாக பதிவு செய்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 4 மே, 2016

தொழில் ஸ்தானம் - ஜாதக ரீதியாக தமக்கு உகந்த தொழில் அல்லது வேலையை தேர்வு செய்வது எப்படி ?


" உத்தியோகம் புருஷ லட்சணம் " என்ற பழமொழிக்கு உதாரணமாக வாழும் மனிதர்களுக்கே இந்த சமுதாயமும், உறவுகளும் கௌரவம், அந்தஸ்து மற்றும் மரியாதைகளை நிச்சயம் வாரி வழங்குகிறது, கல்வி காலங்களுக்கு பிறகு சரியான ஜீவனத்தை தேடுவதில் அதிக ஆர்வம் இன்றைய இளைஞர்களுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை, இருப்பினும் சுய ஜாதக ரீதியாக தமக்கு உகந்த தொழில் அல்லது பணியை தேர்வு செய்யாத பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கை திசைமாறி செல்வதற்கு அதிக வாய்ப்புண்டு, எந்தவிதத்திலும் தமக்கு சம்பந்தம் இல்லாத துறையை தேர்வு செய்து, கடனுக்காக அந்த தொழிலை செய்வதை விட, தமக்கு உகந்த ஆர்வமுள்ள தொழில்களில் ஜாதகர் ஈடுபடும்  பொழுது, ஜாதகரின் முன்னேற்றமும் சிறப்பாக அமையும். 

மேலும் ஜாதகர் தனது வாழ்க்கையில் முழு ஈடுபாட்டுடன் செய்யும் தொழில் மற்றும் வேலை உலக புகழையும், தன்னிறைவான வசதி வாய்ப்புகளையும் வாரி வழங்கும், நல்ல ஜீவனம் அமைவது என்பது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் என்று அழைக்கப்படும் 10ம் பாவக வலிமையின் அடிப்படையிலேயே அமைகிறது, மேலும் 10ம் பாவக வலிமை சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், கௌரவம் மற்றும் அந்தஸ்த்தை தாம் செய்யும் தொழில் வழியில் இருந்தே நிர்ணயம் செய்வதால், ஜாதகர் சமூகத்துடன் கொண்டுள்ள தொடர்புகளையும், அதன் வழியில் இருந்து பெரும் யோக நிலையையும் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவக வழியில் இருந்தே 100% விகிதம் பெறுகின்றார்.

எந்த ஒரு ஜாதகரும் தமது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமைக்கு ஏற்ப ஜீவனத்தை அமைத்துகொள்வது ஜாதகரின் வாழ்க்கையில் தன்னிறைவான முன்னேற்றங்களை வாரி வழங்கும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சர ராசி, ஸ்திர ராசி மற்றும் உபய ராசி என்றும் நெருப்பு தத்துவம், நில தத்துவம், காற்று  தத்துவம் மற்றும் நீர் தத்துவம் என்றும் இயற்கையால்  வகைபடுத்தபட்டுள்ளது, எந்த ஒரு ஜாதகருக்கும் மேற்கண்ட ராசி மற்றும் தத்துவ அமைப்பிலேயே ஜீவன ஸ்தானம் அமையும், அப்படி அமையும் ஜீவன ஸ்தான வலிமையை முதலில் அறிந்துகொள்வது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உகந்த வெற்றியை தரும்  தொழில் அல்லது வேலையை துல்லியமாக தேர்வு செய்ய உதவி  புரியும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் ஜீவன ஸ்தானம் அமைந்த ராசி, ஜீவன ஸ்தானம் பெற்றுள்ள தத்துவம், ஜீவன ஸ்தானம் தொடர்பு பெற்றுள்ள பாவகம் ஆகியவற்றை கணிதம் செய்து மிக துல்லியமாக ஒருவரின் தொழில் அல்லது வேலையை நிச்சயம் நிர்ணயம் செய்ய இயலும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு சாதகமாக அமைந்தால் ( வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ) தாம் தேர்வு செய்த தொழில் அல்லது பணியில் ஜாதகர் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தரும், நடைபெறும் திசா புத்திகள் சாதகமாக அமையவில்லை என்றாலும் ஜாதகருக்கு சிறப்பான ஜீவனத்தை வழங்குவதில் தவறுவது இல்லை, ஜீவன வெற்றி என்பது சாதகமான  திசா புத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது மிக அபரிவிதமாக வாரி வழங்கிவிடும், இதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஜீவன பாவகம் தரும் பலனை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : தனுசு 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம் 

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவக வலிமை  நிலையை ஆய்வு செய்வோம் அன்பர்களே! ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியாக அமைகிறது, மேலும் உபய ராசி நில தத்துவம், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெறுவது தமது பாவகத்துடனே என்பது வரவேற்க தக்கது, மேலும் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் மற்ற வீடுகள் 7,10 ஆகும், எனவே ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையாக இருப்பது உறுதியாகிறது. 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகருக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் வழியில் இருந்து நன்மைகளை வாரி வழங்கும், இந்த இடத்தில் வாழ்க்கை துணை பற்றி குறிப்பிடுவதற்கு  காரணம், பெண்கள் நினைத்தால் தமது வாழ்க்கை துணையை மிகசிறந்த இடத்திற்கு எடுத்துசெல்லும் வல்லமை பெற்றவர்கள் என்பதை தெரிவிப்பதற்கே, மேலும் ஜாதகர் தமது திருமணத்திற்கு பிறகே வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் பெற்றார் என்பது கவனிக்க தக்கது, வீட்டில் நிம்மதி இருந்தால் மட்டுமே எந்த ஒரு ஆண்மகனும் தாம் செய்யும் தொழிலில் சிறந்து விளங்க முடியும்.

இயற்கையாகவே இந்த ஜாதகருக்கு 7ம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜீவன  உதவிகளையும் ஆதரவையும் பெற்று தந்தது, மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன  ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் இரண்டு, 
1) களத்திரம் என்று அழைக்கப்படும் 7ம் வீடு. 2) ஜீவனம் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 10ம் வீடு, ஜாதகரின் களத்திர ஸ்தானம் காலபுருஷ தத்துவத்திற்கு வீர்ய ஸ்தானமாகவும், ஜீவன ஸ்தானம் காலபுருஷ தத்துவத்திற்கு சத்ரு ஸ்தானமாகவும் அமைந்து மிகவும் வலிமை பெற்றுள்ளது.

 மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் உபய காற்று தத்துவத்திலும், சர நீர் தத்துவத்திலும் சம்பந்தம் பெறுகின்றது ( 7ம் பாவகம் மிதுன ராசியில் 072:16:00 பாகையில் ஆரம்பித்து, கடக ராசியில் 101:49:01 பாகையில் முடிவடைகிறது )  ஜாதகரின் ஜீவன ஸ்தானம் உபய நில தத்துவத்திலும், சர கற்று தத்துவத்திலும் சம்பந்தம் பெறுகின்றது ( 10ம் பாவகம் கன்னி ராசியில் 166:34:14 பாகையில் ஆரம்பித்து, துலாம் ராசியில் 197:34:04 பாகையில் முடிவடைகிறது ) எனவே ஜாதகருக்கு மேற்கண்ட தத்துவ அமைப்பில்தான் ஜீவனம் அமைய வாய்ப்புள்ளது, இயற்கையாகவே மிதுனம் உபய காற்று தத்துவம் என்பதால் ஜாதகரின் வியாபர அறிவை குறிக்கும், மிதுனம் ஜாதகருக்கு  7ம் பாவகமாக அமைவது வியாபாரம் மற்றும் வியாபாரத்தில் தமக்குள்ள அறிவு திறனை குறிக்கும், கன்னி உபய நில தத்துவம் என்பதால் பூமியில் விளையும் உணவு சார்ந்த பொருட்களை குறிக்கும், கன்னி ஜாதகருக்கு 10ம் பாவகமாக அமைவது, ஜாதகர் மண்ணில் விளைந்து மக்கள் உபயோகிக்கும் உணவு பொருட்களை வியாபாரமாக செய்வதை குறிக்கிறது, எனவே ஜாதகர் 7ம் பாவக வழியில் இருந்து அறிவார்ந்த வியாபாரத்தையும், 10ம் பாவக வழியில் இருந்து மண் தத்துவம் சார்ந்த உணவு பொருட்களை வைத்து வியாபாரம் செய்வதை தெளிவு படுத்துகிறது, மேலும்  மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் சார்ந்த வியாபாரத்தில், ஜீவன ஸ்தான வழியில் இருந்து தன்னிறைவான முன்னேற்றத்தை  பெறுவார் என்பதை அவரது சுய ஜாதகம் தெளிவு படுத்துகிறது.

1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர்  நல்ல வியாபர திறன் கொண்டவர் என்பதையும், 3ம் பாவக வழியில் இருந்து செய்கின்ற வியாபரத்தில் வெற்றிகளை தொடர்ந்து பெறுவார் என்பதையும் உறுதி செய்கிறது, இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் ஜாதகரின் 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது  குறைந்த முதலீட்டில் பன்மடங்கு லாபத்தை பெறுவார் என்பதை சிறப்பாக சொல்லலாம், மேலும் கடந்த புதன் திசை ஜாதகருக்கு 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியது தாம் செய்த வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தந்தது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

தற்பொழுது நடைபெறும் கேது திசை ஜாதகருக்கு 1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகர்  தாம் செய்து கொண்டு இருக்கும் வியாபாரத்தில் தன்னிறைவான வளர்ச்சி பெறுவதை தெளிவு படுத்துகிறது, மேலும் அடுத்து வரும் சுக்கிரன் திசையும் ஜாதகருக்கு 4,6,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது மிகுந்த யோகத்தையே தரும் என்பதால் ஜாதகரின் வாழ்க்கை இனிவரும் காலங்களில் மிகவும் சிறப்பானதாக அமையும் என்பது மட்டும் உறுதி, இவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மிகவும்  வலிமையுடன் அமைந்ததும், அதைவிட லாப ஸ்தானம் மிக மிக வலிமையுடன் அமைந்ததும், ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் தந்தது.

 லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் உடல் மனம்  மற்றும் செயல்பாட்டினையும், 2ம் பாவகம் வலிமை பெறுவது கை நிறைவான வருமானத்தையும், வியாபாரத்தில் பேச்சு திறமையையும், 3ம் பாவகம் வலிமை பெறுவது தனிப்பட்ட வியாபர திறமைகளையும், 4ம் பாவகம் வலிமை பெறுவது சொத்து சுக சேர்க்கையையும், 5ம் பாவகம் வலிமை பெறுவது சமயோசித புத்திசாலிதனத்தையும், தொழிலில் ஜாதகர் கொண்டுள்ள நுண் அறிவையும், 6ம் பாவகம் வலிமை பெறுவது குறுகிய கால வெற்றிகளையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது பொதுமக்கள், வாழ்க்கை துணை மற்றும் கூட்டாளிகள் ஆதரவையும், 10ம் பாவகம் வலிமை பெறுவது தொழில் வழியில் கௌரவத்தையும், சுய மரியாதை மற்றும் அந்தஸ்தையும், 11ம் பாவகம் வலிமை பெறுவது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கையையும், மிகுந்த அதிர்ஷ்ட சாலி என்ற நிலையையும், தன்னம்பிக்கையியும், முற்போக்கு சிந்தனையையும் ஒருங்கே அமையபெற்றவர் என்பதனையும், 12ம் பாவக வழியில் இருந்து போதும் என்ற மன நிறைவையும், நல்ல உறக்கத்தையும், மன நிம்மதியையும், வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில், தமக்கு உகந்த தொழிலை ஒரு ஜாதகர் தேர்ந்து எடுப்பராயின், சம்பந்தப்பட்ட ஜாதகர் தொழில் ரீதியாக தன்னிறைவு பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது என்று உறுதியாக இந்த கட்டுரையில்  "ஜோதிடதீபம்" பதிவு செய்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 3 மே, 2016

சுய ஜாதக பலாபலன்களும், தொழில் ரீதியான முன்னேற்றங்களும் !


 சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து, நவ கிரகங்கள் தனது திசா புத்தி காலங்களில் ஏற்று நடத்தும் பலாபலன்கள் பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே, மேலும் ஜாதகர் ஜீவன வழியில் இருந்து பெரும் யோக அவயோக நிலையை பற்றி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்த பட்ட ஜாதகருக்கு செய்யும் தொழில் அல்லது பணியில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், ஜீவன ஸ்தானம் பாதிக்க படும்பொழுது ஜாதகரின் ஜீவன ரீதியான போராட்டங்கள் அதிகரிக்கும், தொழில் வாய்ப்புகள் வெகுவாக பாதிக்கும், கௌரவம் மற்றும் அந்தஸ்து குறையவும் வாய்ப்புள்ளது, எனவே ஒவ்வொரு ஆண் மகனின் ஜாதகத்திலும் ஜீவன ஸ்தான வலிமையே சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய மரியாதை மற்றும் கௌரவத்திற்கு வலு சேர்க்கிறது, மேலும் ஜாதகர் எவ்வித தொழில்களில் சிறந்து விளங்குவார், ஜாதகரின் வருமான வாய்ப்புகள் எப்படி? பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்த்து எப்படி பட்ட வகையில் சிறப்பாக அமையும் என்பதை பற்றிய தெளிவு பெற சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின், தன்மையை ஆய்வு செய்வது அவசியமாகிறது மேலும் நடைபெறும் திசா புத்திகள், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றிய தெளிவு பெறுவதும் அவசியமாகிறது, உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கன்னி 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம்

 ஜாதகருக்கு கன்னி லக்கினம் ( உபய ராசி, உபய மண் தத்துவம் ) மகர ராசி,  திருவோண நட்சத்திரம், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12பாவக வலிமை பற்றி  ஆய்வு செய்வோம்.

ஜாதகருக்கு வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9 பாவகத்துடன் சம்பந்தம்.
2,6ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவகங்கள் :

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

மேற்கண்ட ஜாதகருக்கு 8,12ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் வலிமை பெற்ற இருக்கின்றது, குறிப்பாக 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த நிலையாக கருதலாம்.

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9 பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலையையும், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும், சிறந்த அறிவு திறன் கல்வி கேள்விகளில் புலமை, நுண் அறிவு திறன் மூலம் வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் பெரும் யோகம், தெளிவான சிந்தனை, பகுத்தறிவு, விளைவு அறிந்து செயல்படும் யோகம் தன்னிறைவான வாழ்க்கை முன்னேற்றங்களை ஜாதகரே தீர்மானிக்கும் அமைப்பு, நல்ல குணம் பெருந்தன்மையான நடவடிக்கைகள் மூலம் நற்பெயர் பெறுதல், பெரியோர்களை மதித்து நடந்துகொள்ளுதல், முன்னோர்களின் ஆசியை பெறுதல் என ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை பாக்கிய ஸ்தான அமைப்பில் இருந்து தரும்.

3ம் பாவக வழியில் இருந்து ஆன்மீகத்தில் ஈடுபாடு, சகல சௌபாக்கியம், வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் வெற்றி லாபம், பயணங்களில் நன்மை, எடுக்கும் முயற்ச்சிகளில் நல்ல வெற்றி, வீரியமிக்க செயல்பாடுகள், வாத திறமை, செல்லும் இடங்களில் நல்ல வரவேற்ப்பு, எதிலும் எளிதில் வெற்றி பெரும் யோகம், புத்திகூர்மை தன்னம்பிக்கை, ஆராய்ச்சிகளில் வெற்றி, போக்குவரத்து துறைகளில் நல்ல முன்னேற்றம், கனிம பொருட்களில் நல்ல லாபம், சுரங்கம் சார்ந்த தொழில்களில் சிறப்பான பொருளாதார வளர்ச்சி என வீர்ய ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களே நடைபெறும்.

7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணை, சிறந்த நண்பர்கள், வலிமை மிக்க கூட்டாளி, கூட்டு தொழில் செய்வதால் சிறப்பான முன்னேற்றம், ஏற்றுமதி இறக்குமதி வியாபர யோகம், வெளிநாடுகளில் நல்ல யோகம், செய்யும் தொழிலில் நல்ல ஞானம், கூட்டு முயற்ச்சி வெற்றி பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து மிகசிறந்த மதிநுட்பம் மற்றும் அறிவு திறன், சிறப்பான திட்டமிடுதல்கள், பயணங்களில் ஆர்வம், ஆன்மீகத்தில் வெற்றி, பெரியோர் ஆசிர்வாதம், நல்ல கல்வி அறிவு, பெயரும் புகழும் தேடிவரும் யோகம் என்ற வகையில் நன்மையை தரும்.

2,6ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கல்வியில் வெற்றி, நல்ல ஜீவனம் அமையும் யோகம், சிறந்த வியாபார யோகம், கௌரவம் புகழ் தேடிவரும் அமைப்பு செய்யும் தொழில் வழியில் இருந்து கை நிறைவான வருமானம் பெரும் அமைப்பு, அனைத்திலும் வெற்றி வாய்ப்புகள் என்ற வகையிலும், 6ம் பாவக வழியில் இருந்து குறுகிய கால ஜீவன மேண்மையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றமும்,  பதவியில்  வெற்றி, உத்தியோக ஆர்வம், சொந்த முயற்ச்சியில் முன்னேற்றம் காணும் அமைப்பு என்ற வகையில் யோகத்தை தரும்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சிறப்பான வண்டி வாகன யோகம், சொத்து சுக சேர்க்கை, சுயமாக வீடு சொத்து  வாங்கும் யோகம், சொந்த ஊரில் சிறப்பான முன்னேற்றம் காணும் அமைப்பு, தனது பெயரில் உள்ள சொத்துகள் விருத்தி பெரும் யோகம், வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜாதகர் குடியிருப்பதால் மிகுந்த லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.

5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலேயே  மிகவும் வலிமை பெற்ற அமைப்பாக கருதலாம், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தின் வழியில் இருந்து மிகுந்த லாபங்கள் உண்டாகும், லாட்டரியில் யோகம், பங்கு வர்த்தகத்தில் லாபம், தனது  புத்திசாலிதனத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், தன் சுய முயற்ச்சியில் வெற்றி பெரும் யோகம், திடீர் சொத்து சுக சேர்க்கை, கற்ற கல்வி மூலம் அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், கலைகளில் தேர்ச்சி, சாஸ்திர  ஞானம், குல தெய்வ ஆசிகளை பெரும் யோகம், தனது குழந்தைகள் வழியில் இருந்து யோகம், தனிப்பட்ட முன்னேற்றத்தில் ஆர்வம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி, தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் கொண்டவர், புதிய நம்பிக்கை மற்றும்  லட்சியங்களில் வெற்றி, முற்போக்கு சிந்தனை, பகுத்தறிவு மூலம் சகல விஷயங்களிலும் தேர்ச்சி பெரும் யோகம், செய்யும் அனைத்து காரியங்களிலும் லாபம் பெரும் அமைப்பு, சிறப்பு மிக்க சிந்தனைகள், செயல்திறன்கள் என்ற வகையில் ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தின் மேல் அதிர்ஷ்டம் வந்தவண்ணம் இருக்கும், லாப ஸ்தானம் கடகமாக அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகத்தையும் வாரி வழங்கும்.

10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு அடிமை தொழில் இல்லை என்பதையும், கூட்டு முயற்ச்சியில் தொழில் வெற்றிகளை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதையும் தெளிவு படுத்துகிறது.

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, இழப்பு, வீண் மருத்துவ செலவினங்கள்,  தவிர்க்க  இயலாத பொருளாதார தடைகள், மற்றவர்களை நம்பி செய்யும் சில காரியங்கள் தோல்வியை தரும் அமைப்பு என்ற வகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து வீண் மன கவலைகளையும், மன போராட்டத்தையும் தரும், அனைவராலும் இன்னல்களுக்கு ஆளாகும் தன்மை, நிம்மதி இன்மை, அதிக முதலீடு செய்வதால் வரும் திடீர் இழப்பு என்ற வகையில் துன்பங்களை தரும், மன நிம்மதி வெகுவாக கெடும்.

தொழில் : 

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானத்தை விட லாப ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது, தான் செய்யும் தொழில்களில் அபரிவிதமான யோகங்களை வாரி வழங்கும், குறைந்த முதலீட்டில் அதிகபடியான லாபங்களை பெரும் யோகம் உண்டாகும், தற்பொழுது நடைபெறும் குரு திசையில் ஜாதகருக்கு நல்ல தொழில் முன்னேற்றத்தையும், அடுத்து வரும் சனி திசையில் தொழில் அதிபர் என்ற அந்தஸ்த்தையும் வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்கது, குறுகிய காலங்களில் ஜாதகர் தொழில் ரீதியான அபரிவிதமான வெற்றிகளை பெறுவார் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 20 ஏப்ரல், 2016

சித்திரை,ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு தீங்கு ஏற்ப்படுமா ?


இயற்கையாகவே இந்தியா வெப்பம் மிகுந்த நாடு, தமிழகத்தின் நிலை சொல்லி தெரிய வேண்டியது இல்லை, மேலும் கோடை காலமான பங்குனி,சித்திரை,வைகாசி மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையானதாக இருக்கும், குறிப்பாக சித்திரை மாதத்தில் சூரியனின் வெப்பம் தகிக்கும், இந்த காலங்களில் குழந்தை பிறப்பு அமைந்தால், தாயுக்கும் சேயுக்கும் சிறு சிறு உடல் நல குறைவு ஏற்பட கூடும் என்ற காரணத்தினால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பை நமது முன்னோர்கள் தவிர்த்தனர், இதுவே உண்மையான காரணமாக இருக்ககூடும் அன்பர்களே ! 

மாறாக சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளால், குடும்பத்திற்கு ஆகாது, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆகாது என்பதெல்லாம் முற்றிலும் மூட நம்பிக்கையே அன்றி, சிறிதும் உண்மையில்லை என்பதை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, இந்த நவீன உலகில் இயற்க்கை வெப்பத்தின் கொடுமையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள, பல கருவிகள் வந்துவிட்டது, குளிர்ஊட்டி, மின் விசிறி என அதிநவீன கருவிகள் உள்ளது, எனவே சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல் நலம் மற்றும் தாயின் உடல் நலம் காக்க வழியுண்டு, சித்திரை ஆடி மாதங்களில் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தில் உண்மை இல்லை என்பதை "ஜோதிடதீபம்" கிழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு உறுதியாக பதிவு செய்கிறது, மேலும் கண்ணில் தெரியும் கடவுளான சூரியபகவான் உச்ச நிலையை பெரும் மாதம் சித்திரை மாதம் ஆகும், இந்த சித்திரையில் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாகவே ஆதிக்க சக்தி மிகுந்ததாகவும், அதிகாரம் செய்யும் யோகம் கொண்டதாகவும், தேசஸ் மிகுந்து உடல் வலிமை பெற்றதாகவும் திகழும், சந்திரன் ஆட்சி பெரும் மாதம் ஆடி மாதமாகும், இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்டம் மிகுந்ததாகவும், குறுகிய காலத்தில் மிகப்பெரிய பதவிகளையும், அந்தஸ்தையும் அடையும் என்பதால, மற்ற குழந்தைகளில் இருந்து சிறு வயது முதல் வித்தியாசமான நடவடிக்கைகளை சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் கொண்டிருக்கும் என்பதே உண்மை, இதை அறிந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டனர், அறியாதோர் மேற்கண்ட மூட நம்பிக்கைகளில் மூழ்கி முத்து எடுத்துகொண்டு இருக்கின்றனர் .

ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் வலிமை பெற்று இருப்பதும், சந்திரன் வலிமை பெற்று இருப்பதும் சம்பந்த பட்ட ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகர் பிறப்பில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் ஜாதகர் வளர வளர, வாழ்க்கையில் சகல யோகங்களையும் தங்கு தடையின்றி அனுபவிக்கும் நிலையை தரும், ( சித்திரை மாதத்திலும், ஆடி மாதத்திலும் பிறந்த பல அன்பர்கள் அரசு பதவிகளிலும், அதிகார பதவிகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது )  ஜாதகருக்கு சிறப்பான உடல் மற்றும் மன நிலையை தரும், எண்ணமும் அறிவு திறனும் சிறப்பாக செயல்படும், ஜாதகரின் லட்சியங்கள் யாவும் வெற்றி பெரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை தரும், மிகப்பெரிய அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் மக்கள் செல்வாக்கினை பெற்ற மனிதர்கள் அனைவரின் சுய ஜாதகத்திலும், வலிமை பெற்ற சூரியன் அல்லது சந்திரன் 12 பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வது, பிறந்த மாதமோ, நட்சத்திரமோ, ராசியோ, கிழமையோ நிர்ணயம் செய்வதில்லை, ஜாதகரின் பிறந்த  நேரமும் அதன் அடிப்படையில் அமைந்த லக்கினமும், 12 பாவகங்களின் வலிமை நிலையும், வலிமை பெற்ற 12 பாவகங்களின் பலன்களை, நவகிரகங்கள் தமது திசா புத்திகளில் ஏற்று நடத்தும் பலாபலன்கள் அடிப்படையிலேயே ஒருவரது வாழ்க்கை யோக பலன்களையும், அவயோக பலன்களையும் தருகிறது, மேலும் சுய ஜாதகத்தில் ஓரிரு வினாடிகள் கூட மிகப்பெரிய பாவக வலிமை வித்தியாசங்களை தரக்கூடும், எனவே பிறந்த நேரம் என்பதே சுய ஜாதகத்தை நிர்ணயம் செய்யும் என்பதால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பது தீமையை தரும் என்ற மூட நம்பிக்கையை களைவதே சால சிறந்தது.

சித்திரை மாதம் பிறந்த ராஜயோக ஜாதகத்தை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : மீனம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : விசாகம் 2ம் பாதம் 

சித்திரை மாதத்தில் பிறந்த இந்த ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 பாவகங்களும் மிகவும் வலிமையான நிலையில் அமைந்திருக்கின்றது, ஜாதகர் பிறந்ததில் இருந்தே இவரது குடும்பம் நல்ல முன்னேற்றங்களையும், பொருளாதார வளர்ச்சியையும் தொடர்ந்து பெற்று கொண்டுதான் இருக்கின்றது, நல்ல உடல் நிலை, சிறந்த மன நிலை, தெளிவான அறிவு திறன், கௌரவம் குறையாத யோக வாழ்க்கை என ஜாதகர் இதுவரை யோக  பலன்களையே அனுபவித்து கொண்டு இருக்கின்றார்.

சுய ஜாதக வலிமை அடிப்படையில் ஜாதகருக்கு நல்ல வளரும் சூழ்நிலையை தந்தது, பால்ய வயதில் அடிப்படை கல்வி சிறப்பாக கற்றார், இளமையில் சிறப்பாக பட்டய கல்வியில் முதன்மையில் தேர்ச்சி பெற்றார், அரசு துறையில் பணியாற்றும் யோகத்தை பெற்றார், சரியான வயதில் திருமணம் அமைந்து நல்ல வாரிசும் அமைந்தது, பதவி உயர்வு ஜாதகரை தேடி வந்தது, சுயமாக தொழில் ஒன்றை கூட்டு முறையில் அமைத்துக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார், அனைத்து வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கும் யோகம் ஜாதகருக்கு கிடைத்துள்ளது கவனிக்க தக்க அம்சமாகும், சுய ஜாதகத்தில்  இதற்க்கு முன் நடைபெற்ற சனி திசை ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீடு வாக்கு குடும்பம் எனும் 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை வாரி வழங்கி உள்ளது, 2ம் பாவகம் ஜாதகருக்கு சர நெருப்பு ராசியான மேஷத்தில் அமைவது, ஜாதகரின் வெற்றிகளை 100% விகிதம் உறுதிபடுத்தியது.

 தற்பொழுது நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு 7ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை தரும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோகபலன்களை வழங்குவது, ஜாதகருக்கு புதன் திசையும் அதிர்ஷ்டங்களையும் லாபங்களையும் தொடர்ந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எனவே சுய ஜாதக பாவக வலிமையே ஜாதகருக்கு யோக, அவயோக பலன்களை   வழங்குகிறது, பிறந்த மாதங்களோ, பிறந்த நாட்களோ, ஜென்ம நட்சத்திரமோ, ஜென்ம ராசியோ அல்ல என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, எனவே சித்திரை மாதம் ஆடி மாதம்  பிறக்கும் குழந்தைகள், குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற மூட நம்பிக்கையை களைவது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 14 ஏப்ரல், 2016

திசா சந்திப்பும், ஏகதிசை நடப்பும் தம்பதியர் வாழ்க்கையில் பிரிவை தருமா?

 
 
திருமண பொருத்ததில் அதிமுக்கியமான பொருத்தமாக கருதபடுவது, ஏக திசை நடப்பு எனும் திசா சந்திப்பு என்றால் அது மிகையில்லை, அதாவது வரணுக்கும் வதுவுக்கும் தற்பொழுதோ, எதிர்காலத்திலோ ஏக திசை நடைமுறைக்கு வருமாயின், தம்பதியரின் வாழ்க்கையில் புயல் அடிக்கும், திருமண வாழ்க்கை மன முறிவை நோக்கி இழுத்து செல்லும், எந்த ஒரு விஷயத்தாலும் தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு என்ற நிலையை தடுத்து நிறுத்தி விட முடியாது, எனவே திருமண பொருத்தம் காணும் பொழுது எந்த பொருத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திசா சந்திப்பு எனும் ஏக திசை நடப்பு இல்லாமல் பார்த்து கொள்வது தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு நிலையை தாராது, ஏனெனில் தம்பதியருக்கு எதிர்வரும் காலங்களில் குரு திசை, மற்றும் சனி திசை ஏக காலத்தில் நடைபெறும் என்பதால், குரு திசையில் தம்பதியருக்கு இடையே பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்புள்ளது, சனிதிசை மிகுந்த தீமையை செய்யும் என்பதால், சனி திசையில் தம்பதியருக்குள் பிரச்சனை ஏற்ப்பட்டு நிச்சயம் பிரிவை தரும், சனி பகவானின் திசை என்றாலே தீமையைதான் செய்யும் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை, எங்களது தலை சிறந்த ஜாதகத்தின் கணிப்பை மீறி திருமண செய்தால், அதற்க்கு பிறகு வரும் இன்னல்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

என்று பொருத்தம் பார்க்க சென்ற உங்களை மிரட்டினால், துண்டை காணம் துணிய காணம் என்று ஓட்டம் பிடிப்பீர்களா? மாட்டீர்களா ? இவர்களது ஜாதக பொறுத்த கணிதத்தில் கல்லை கொண்டுதான் அடிக்க வேண்டும், மேற்கண்ட வாதத்திற்கு உற்பட்ட வது வரனின் ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை ஆய்வு செய்வோம் அன்பர்களே ! இவர்களின் கூற்படி தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றால் வாழ்க்கையில் ஏக திசை நடைபெறும் காலத்தில் திருமண வாழ்க்கையில் பிரிவை தருமா? குரு,சனி திசை தம்பதியருக்கு இன்னல்களை தருமா? என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

வரன் ஜாதகம் :

லக்கினம்: சிம்மம்
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம் 

வது ஜாதகம் 


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம் 

வரனின் ஜாதகத்தில் தற்பொழுது குரு திசை நடைமுறையில் உள்ளது, வதுவின் ஜாதகத்தில் தற்பொழுது ராகு திசை நடைமுறையில் உள்ளது,

இருவருக்கும் நடைபெறும் திசை தரும் பலன்கள் பற்றி சிந்திப்போம் :

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை 2,6,8,12ம் வீடுகள் ஜீவன  ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வருமான வாய்ப்புகளையும், சிறந்த பேச்சு திறமையையும்,  இனிமையான குடும்ப வாழ்க்கையையும் தரும், 6ம் பாவக வழியில் இருந்து பதவியில்  வெற்றி, பதவி உயர்வு, அதிகாரிகள் உதவி, சொந்த முயற்ச்சியில் வெற்றி பெரும் யோகம், நல்ல உடல் நிலை, சிறப்பான பொருளாதார வளர்ச்சியை தரும், 8ம் பாவக வழியில் இருந்து நல்ல பொருளாதார முன்னேற்றத்தை  விரைவில் அடைதல், வசதிமிக்க உத்தியோகம், திடீர் பதவி உயர்வு, வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் என்ற  வகையில் யோகத்தை தரும், 12ம் பாவக வழியில் இருந்து எதிரிகள் சூல்சியே ஜாதகருக்கு சாதகமாக மாறி நன்மையை செய்யும், நல்ல அயன சயன சுகத்தை தரும், திடீர் பதவி உயர்வு, தொழில் துறையில் திடீர்  முன்னேற்றம், மன நிம்மதியான வாழ்க்கை என்ற வகையில் குரு திசை ஜாதகருக்கு யோகத்தை  தரும்.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் ராகு தசை 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள் வெளிவட்டார பழக்க வழக்கம் மூலம் பெயரும் புகழும் கிடைத்தல், நல்ல வாழ்க்கை துணை கிடைத்தல், வாழ்க்கை துணை வழியில் இருந்து யோக வாழ்க்கை, பொதுமக்கள் ஆதரவு, சமூகத்தில் பெயரும் புகழும் கிடைத்தல் என்ற வகையில் யோகத்தை தரும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் குரு திசை 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4ம் பாவக வழியில் இருந்து நல்ல சுக  போகங்களையும், நிறைவான சொத்து சுக சேர்க்கை மற்றும் வண்டி வாகன  யோகத்தையும் ஸ்திரமாக வாரி வழங்கும், 10ம் பாவக வழியில் இருந்து திடீர் தொழில் முன்னேற்றங்களையும், கெளரவம் குறையாத யோக வாழ்க்கையையும், ஜீவன வழியில் இருந்து நல்ல முன்னேற்றங்களையும்,  நிலையான பதவியையும், தொழில் துறையில் நல்ல  முன்னேற்றத்தையும் தரும், எனவே வரன் வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் குரு திசை மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்கும் என்பது தெளிவாகிறது.

அடுத்து வரும் சனி திசை வரன் வதுவுக்கு தரும் பலாபலன்கள் :

ஜாதகருக்கு அடுத்து வரும் சனி திசை 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், ஜாதகர் சனி திசை காலங்களில் பதவியில் வெற்றி, செய்யும் தொழில் அபிவிருத்தி, திடீர் முன்னேற்றம், தான் செய்யும்  காரியங்களில் நல்ல முன்னேற்றம், எதிர்ப்புகள் அகலும் தன்மை, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் யோகம், திடீர் அதிர்ஷ்டம் என்ற வகையில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் சனி திசை 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது, ஜாதகிக்கு தனது கணவன் வழியில் இருந்து அனைத்து நன்மைகளையும் வாரி வழங்கும், தாம்பத்திய வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை தரும், மக்கள் செல்வாக்கும், ஆதரவும் ஜாதகிக்கு மிகுந்த பெயரையும் புகழையும் பெற்று தரும், தனது வாழ்க்கை துணையுடன் இணைபிரியா யோக வாழ்க்கையை சனி மஹா திசை வாரி வழங்கும் .

இதுவே மேற்கண்ட 2 ஜாதகத்தில், குரு,சனி மகா திசை வழங்கும் பலாபலன்கள் ஆகும், இந்த உண்மைக்கு மாறாக பதிவின் ஆரம்பத்தில் மற்றவர்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் தேவையற்ற வீண் மன பயத்தையே தரும் என்பதை "ஜோதிடதீபம்" வரன்,வதுவின் உறவுகளுக்கு தெளிவு படுத்தியது.

நவ கிரகங்கள் தனது திசை புத்தி காலங்களில் தரும் பலாபலன்கள்  பற்றிய தெளிவு இல்லாத பொழுதே இதுபோன்ற குழப்பங்கள் ஏற்ப்படும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது, சுப கிரகங்களின் திசாபுத்திகள் அனைத்தும் நன்மையை செய்துவிடுவதில்லை, அசுப கிரகங்களின் திசை புத்திகள் அனைத்தும் தீமையை செய்யும் என்பதும் முற்றிலும் தவறனா கருத்தாகவே உள்ளது, நவகிரகங்களின் திசா புத்திகள் அனைத்தும், சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே தமது திசை புத்திகளில் யோக அவயோக பலன்களை தருகிறது என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% விகிதம் ஜாதகருக்கு யோக பலன்களே நடைபெறும், மாறாக வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நடைபெறும் திசை புத்திகள் சுப கிரகத்தின் திசாபுத்திகள் என்றாலும், ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களையே வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 9 ஏப்ரல், 2016

அவயோக ( தீமையான ) பலன்களில் இருந்து விடுபட ஜாதகர் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ​- ( இலக்கின பாவகம் )


லக்கினம் 

கண்ணாடி நமது உருவத்தை பற்றி அறிந்துகொள்ள உதவுவது போல், சுய ஜாதகம் நமது அகம் புறம் ஆகியவற்றை தெளிவாக உணர்ந்துகொள்ள உதவும், சுய ஜாதகம் என்பது லக்கினத்தை அடிப்படையாக கொண்டே இயங்குகிறது, எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் பாதிக்கபடும் பொழுது ஜாதகர் அந்த பாதிப்பில் இருந்து விடுபட எவ்வித பரிகாரங்களை தேடிகொள்வது என்பது பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! 

சுய ஜாதகத்தில் உயிர் உடலாகிய லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை இழப்பின், ஜாதகர் இலக்கின பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலை தரும், குறிப்பாக சுய ஜாதகங்களில் லக்கினம் எனும் முதல் பாவகம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அதிக அளவிலான பாதிப்பை தரும், மேலும்  லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை வாரி வழங்கும்.

 சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கை பாதிக்க படுவதற்கு "ஜாதகரின் செயல்பாடுகளே" காரணமாக அமையும், மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை, ஜாதகரே தவிர்த்து உதறும் சூழ்நிலையை தரும், ஜாதகர் தனது உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துகொள்ளாமல், தனது படைப்பின் ரகசியம் அறியாமல் சுக போகங்களிலும், கேளிக்கைகளிலும் தனது உடல் மற்றும் மனம் சார்ந்த ஜீவ சக்திகளை வீண் விரையம் செய்வார், ஜாதகர் எடுக்கும் முடிவுகளே சரியானது என வாதம் செய்வார், ஆனால் நடைமுறையில் ஜாதகர் எடுக்கும் முடிவுகள் யாவும், மிகப்பெரிய பின்னடைவை தரும், சரியென்று நினைத்து ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் மிகப்பெரிய இன்னல்களையும், துன்பத்தையும் வாரி வழங்கும், சுய சிந்தனையும், அறிவும் ஜாதகருக்கு பலன் தாராது, ஜாதகரின் மன நிலையை உணர்ந்த மற்றவர்கள் தமது சுய தேவைகளுக்காக ஜாதகரை மிக  சுலபமாக பயன்படுத்தி கொள்வார்கள், இந்த விஷயத்தை ஜாதகர் உணர்ந்துகொல்வதற்கே வெகு காலம் பிடிக்கும்.

மேலும் லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது, ஜாதகரின் உடல் மனம் மற்றும் வளரும் சூழ்நிலை ஆகியவற்றிற்க்கு உகந்ததது அல்ல, சுயமாக ஒரு முடிவு செய்வதற்கும் உகந்தது அல்ல, எதிர்பார்ப்புகள் யாவும் ஒரு காலகட்டத்தில் பொய்த்து போகும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல  எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், அவசர கதியில் செய்யும் தனது நிலைப்பாட்டால், தனிமையில் கலங்கி நிற்கும் சூழ்நிலையை தரும், தனக்கு சரியான நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் ஜாதகரின் கணிப்பு 100%  சதவிகிதம் தவறிவிடும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கி கொள்வார்கள், வறட்டு பிடிவாதமும், முரன்பட்ட கருத்து வேறுபாடுகளும் சமுதாயத்தில் ஜாதகரை வேறு கோணத்தில் பார்வைக்கு ஆளாக்கி விடும், எந்த ஒரு விஷயமும் ஜாதகருக்கு மிக எளிதில் கிடைக்காது, ஒருவேளை கிடைத்தால், அந்த விஷயங்கள் வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த இன்னல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், அடிப்படையில் "மானுட பிறவி பயனின்" பலனை அனுபவிக்க இயலாமலே ஜாதகர் தனது வாழ்க்கையை போராட்டத்துடன் வாழ்ந்து முடிக்கும் தன்மையை தரும், எதிர்ப்புகளும், உதவி இன்மையும் ஜாதகரின் மன நிலை மற்றும் உடல் நிலையை கடுமையாக பாதிக்கும்.

 இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம் 

ஜாதகருக்கு லக்கினம் மகரம், மகரம் சர ராசியில் இயங்குவதால், ஜாதகருக்கு பாதகஸ்தானம் லாபம் மற்றும் அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படும் 11ம் பாவகமே பாதக ஸ்தானமாக வருகின்றது, மேலும் ஜாதகருக்கு லக்கினம் எனும் 1ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுகின்றது, ( லக்கினம் மட்டுமல்ல, 1,2,3,7ம் வீடுகளும் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெருன்கினறது ) மேலும் ஜாதகரின் பாதக ஸ்தானம் என்பது தனசு ராசியில் வியாபித்து இருக்கின்றது, தனுசு ராசி என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக, உபய நெருப்பு தத்வத்தில் அமைகின்றது, எனவே ஜாதகர் தனது பித்ருக்களின் கர்ம வினை பதிவினை, தனது இலக்கின பாவகம் பாதக ஸ்தான தொடர்பு வழியில் இருந்து அனுபவிக்கும் சூழ்நிலையை தருகின்றது, ஜாதகர் செய்யும் அவசர கதியிலான செயல்கள் அனைத்தும், ஜாதகரின் வாழ்க்கையில் வீண் அவ பெயரையும், இன்னல்களையும் வாரி வழங்கி கொண்டு உள்ளது, ஜாதகரின் அறிவு திறன் எவ்விதத்திலும் ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவருக்கும் பலன் தரவில்லை, இயற்கையாக ஜாதகர் சுய கட்டுப்பாடு இன்றி செய்யும் காரியங்களால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை தற்பொழுது அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்.

தன்னை விட வயதில் அதிக உள்ள பெரியவர்களின் சாபத்திற்கும், கோபத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கிக்கொண்டு, அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளபடுகின்றார், செய்யும் காரியங்கள் அனைத்திலும் தோல்வி, தடைகள், ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் யாவும் ஜாதகருக்கே பாதகமாக திரும்பும் சூழ்நிலை, தனது முன்னேற்றத்தை பற்றி சிந்திக்காமல் மற்றவர்கள் விஷயங்களில் கவனம் செலுத்தி வீண் அவபெயரை சந்திக்கும் சூழ்நிலை, முற்றிலும் அதிர்ஷ்டமற்ற ஜாதக நிலை, எதிலும் ஆர்வமின்மை, செய்யும் தொழில் வழியில் இருந்து வரும் வருமானத்தை மற்றவர்கள் அனுபவிக்கும் தன்மை, தமது எதிர்காலம் பற்றிய சிந்தனை அற்ற நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆர்ப்பட்டு தனது உடலையும் மனதையும் வெகுவாக கெடுத்து கொள்ளும் அமைப்பு என, ஜாதகர் தமது வாழ்க்கைக்கு தாமே முடிவுரை எழுதிக்கொண்டு இருக்கின்றார்.

ஜாதகம் என்பது தம்மை பற்றி ஒரு தெளிவு பெறுவதற்கும், எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்வதற்கும் சரியான வழிகாட்டுதல்களை வழங்குவதை அறிந்துகொள்ளாமல், தமக்கு அனைத்தும் தெரியும் என்ற மிதமிஞ்சிய அசட்டு தைரியத்துடன், ஜாதகரின் செயல்பாடுகள் அமைந்து இருப்பது வருத்தத்திற்கு உரியதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஜாதகருக்கு இதற்க்கு முன் பெரியோர்கள் வழங்கிய அறிவுரைகளையும், ஜாதக பலாபலன்களையும், பரிந்துரை செய்த பரிகாரங்களையும்  இம்மியளவும் ஜாதகர் ஏற்றுகொள்வதாக தெரியவில்லை "விதி வலியது" ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் கேது திசையும், அடுத்து வரும் சுக்கிரன் திசையும் பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துவது ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை மிக பெரிய கேள்விக்குறியாக மாற்றும் என்பது மட்டும் உறுதி, இதற்கு முன் நடைபெற்ற புதன் திசை ஜீவன வழியில் இருந்து யோக பலன்களை வழங்கியது, ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல பொருளாதார முன்னேற்றத்தை தந்தது, கேது திசை ஆரம்பித்ததும், பொருளாதாரம் ஆதால பாதாளத்துக்கு சென்று கொண்டு இருப்பதை ஜாதகர் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது.

இலக்கின பாவக வழியில் இருந்து ஜாதகர் நலம் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் :

1) தாம் எடுக்கும் முடிவுகள் சரியானது என்ற எண்ணத்தை ஜாதகர் முதலில் விட வேண்டும்.
2) பாதக ஸ்தானம் என்பது ஜாதகருக்கு நெருப்பு தத்துவ ராசி என்பதால், சுய கட்டுப்பாடும், பொறுமையும் அவசியம் தேவை.
3) தம்மை விட வயதில் அதிகம் உள்ள பெரியோர்களின் ஆலோசனையை பெற்று வாழ்க்கை நடத்துவது சகல நலன்களையும் தரும்.
4) பித்ரு வழிபாடு சகல நலன்களையும் வாரி வழங்கும்.
5) சுய ஒழுக்கமும், உடல் மன நலனில் அதிக அக்கறையும் கொள்வது ஜாதகருக்கு நல்லது.
6) தம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களில் இருந்து ஜாதகர் அறவே விடுபடுவது சகல விதங்களில் இருந்தும் நலம் தரும்.
7) எந்த காரணத்தை கொண்டும் மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது நல்லதல்ல.
8) முறையாக ஆன்மீக தீட்சை நல்ல குருவிடம் பெற்று, தனது நிலையை பற்றி தெளிவு பெறுவது நல்லது. ( வாய்ப்பு குறைவு இருப்பினும் விடா முயற்ச்சி நன்மையை தரும் )
9) பணிவு,அன்பு,ஸ்திரமான மன நிலை, சுய ஒழுக்கம், விட்டு கொடுத்து செல்லும் மன நிலை ஆகியவை ஜாதகரின் வாழ்க்கையில் பாதக ஸ்தான தீமைகளில் இருந்து மீட்டு எடுக்கும்.

குறிப்பு :

பரிகாரம் என்பது சுய ஜாதகத்தில் எந்த பாவகங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதோ, அந்த பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்று கொண்டு, கர்ம வினையினை கழித்து கொள்வதே சிறப்பானது, மேலும் சுய ஜாதக அடிப்படையில் தமக்கு உகந்த கோவில் வழிபாடு, ரத்தின ஆகர்ஷ்ணம், ஹோமம், தான தர்மங்கள் மூலம் சரியான நிவர்த்திகளை தேடி வாழ்க்கையில் சகல நலன்களையும், யோகங்களையும் சிறப்பாக பெறலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 2 ஏப்ரல், 2016

களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், மணமுறிவை தருமா?


சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் பாவகங்கலான குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் எந்த காரணத்தை கொண்டும் பாதிக்கப்பட கூடாது, ஒருவேளை பாதிக்க பட்டால் சம்பந்த பட்ட ஜாதகர் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் பாதிக்க படுவது சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களை தரும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகியின் இல்லற
வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களையும், எதிர்பாராத இழப்புகளையும் கடுமையாக வாரி வழங்கும்.

 ஜாதகி சமுதாயத்திற்கு உற்படாத, கட்டுபடாத முரண்பட்ட வாழ்க்கை முறையையும் வழங்கி விடும், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், எதிர்பால் அமைப்பினரிடம் இருந்தும் அதிக அளவில் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாக்கும், நடைபெறும் திசா புத்தியும் சாதகமாக அமையாவிடில், சம்பந்தப்பட்ட ஜாதகியின் வாழ்க்கை நரக வாழ்க்கைக்கு இணையான பலன்களை தர ஆரம்பித்துவிடும், இயற்கையாகவே குடும்ப கௌரவம் என்பது பெண்களின் வாழ்க்கை முறையின் அடிப்படையிலேயே அமைவதால், பெண்களின் ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் பாதிக்கபடுவது, ஜாதகிக்கு குடும்பம், சமுதாயம் மற்றும் ஜாதகியை சார்ந்தவர்களுக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல, மேலும் ஜாதகியின் வாழ்க்கை பலரின் விமர்சனத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும்.

பெண்களின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, அதிக அளவில் சம்பந்த பட்ட ஜாதகியின் வாழ்க்கை துணையான கணவரையே வெகுவாக பாதிக்கும், பாதிப்பின் தன்மை உணர்வதற்கு பாதக ஸ்தானம் சர, ஸ்திர, உபய இயக்க நிலையையும், நெருப்பு,நிலம்,காற்று மற்றும் நீர் தத்துவ ராசிகளின் தொடர்பை தெளிவாக உணர்வது அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : மீனம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சுவாதி 3ம் பாதம் 

ஜாதகிக்கு மீன லக்கினம், உயிர் உடலாகிய லக்கினம் ஜாதகிக்கு தொடர்பு பெறுவது திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகம், எனவே அடிப்படையிலேயே ஜாதகிக்கு வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையவில்லை, தனது உடல் மற்றும் மன நிலையை தானே சிதைத்துகொள்ளும் தன்மையையும், பெற்றோர் மற்றும் உறவுகளின் ஆதரவில்லாமல் தனது போக்கிற்கு வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, ஜாதகி செய்யும் காரியங்கள் யாரும் அறியாவண்ணம் ரகசியமாக அமைந்தது, வழிகாட்டுதல்கள் இல்லாத வாழ்க்கை முறை ஜாதகியின் குணநலன்களை வெகுவாக பாதித்தது, ஜாதகிக்கு லக்கினம் பாதிக்க படுவது,உடல்,மனம் மற்றும் வாழ்க்கை முறையை வெகுவாக பாதித்தது, இந்நிலை தற்பொழுதும் தொடர்வது ஜாதகிக்கு உகந்ததல்ல.

ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் பேச்சு மற்றும் வாக்குவாதம் ஜாதகிக்கு பேரிழப்பை வழங்கியது, இதன் தாக்கம் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டு இருப்பது வருததக்கது, ஜாதகியின் வருமான நிலை தொடர்ந்து கேள்வி குறியாக இருப்பது பொருளாத பின்னடைவை தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கிறது, மேலும் திருமணம் நடை பெற்றும் குடும்ப வாழ்க்கை என்பது ஜாதகிக்கு சிறப்பாக அமையாத சூழ்நிலையே நிலவுகிறது, பல எதிர்ப்புகளை தனது வாக்குவாதத்தின் மூலம் ஜாதகி உருவாக்கி கொள்வது வாடிக்கையாக மாறிவிட்டது, குடும்ப வாழ்க்கையில் ஜாதகிக்கு ஆர்வம் இல்லாத தன்மையும், தேவையில்லாத வாக்குவாதமும் எதிர்பாராத இழப்புகளை ஜாதகிக்கு தொடர்ந்து வழங்கி கொண்டு இருப்பது 2ம் பாவகத்திர்க்கு நன்மை தரும் அமைப்பல்ல.

மேற்கண்ட பாவக வலிமை அற்ற நிலைக்கு, சிகரம் வைத்தார் போல் ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, பாதக ஸ்தான பலனை களத்திர ஸ்தான வழியில் இருந்து திருமணம் ஆனா சில நாட்களிலேயே வழங்க துவங்கியது ஜாதகியின் கணவருக்கு, திருமணதிற்கு முன்பு நல்ல வேலையில் ஜாதகியின் கணவர் கைநிறைவான வருமானத்துடன் இருந்தார், திருமணம் ஆனா 10 நாட்களிலேயே ஜாதகருக்கு வேலை பறிபோனது மட்டும் இன்றி, இதுவரை அவருக்கு ஒரு சிறு வேலை வாய்ப்பும் அமையவில்லை, ஜாதகர் வீணாக அலைந்தது மட்டுமே பலனாக கிடைத்தது, தனது மனைவி வழியில் இருந்து 200% விகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை ஜாதகர் பெற்றார், ஜீவன வாழ்க்கை முற்றிலும் முடங்கியது, வருமானம் முற்றிலும் நின்றது, எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தோல்வியை தழுவியது, மேலும் இதுவரை சிறப்பாக இருந்த, ஜாதகரின் சுய கௌரவமும், அந்தஸ்தும் வெகுவாக  பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது ( இதற்க்கு காரணமாக ஜாதகரின் சுய ஜாதக நிலையும் காரணமாக அமைந்தது கவனிக்க தக்க அம்சமாகும் ) திருமணதிற்கு முன்பு ஜீவன வழியில் இருந்து ஜாதகர் யோக பலன்களை அனுபவித்த போதிலும், திருமணதிற்கு பிறகு ஜாதகரின் சூழ்நிலை நேரெதிராக மாறி ஜீவன வழியில் இருந்து அவயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தந்து ஜாதகரை திக்குமுக்காட வைத்து கொண்டு இருக்கிறது, தற்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் திசா புத்திகள் ஜாதகிக்கு சாதகமாக இருப்பது, ஜாதகியின் இல்லறவாழ்க்கையில் பிரிவை தர  வாய்ப்பில்லை என்ற போதிலும், களத்திர பாவக வழியிலான 200% விகித இன்னல்களை ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் தங்கு தடையின்றி தரும் என்பது கவலைக்கு உரியதாகும்.

பெண்களின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதிக்க படுவது, ஜாதகியின் கணவருக்கு நன்மைகளை தாராது, களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதிக்க படும்பொழுது, தம்பதியரின் இல்லற வாழ்க்கை கடுமையாக பாதிக்க படும், திருமண பந்தம் விவாகரத்தில் முடியவும் வாய்ப்புள்ளது, எனவே திருமணதிற்கு முன்பே வாழ்க்கை துணையை ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை உணர்ந்து  தேர்வு செய்வது சிறந்த இல்லற வாழ்க்கையை  அமைத்து தரும், அதற்க்கு முன் தமது ஜாதகத்தில் 2,7ம் பாவக  வலிமையை பற்றி  தெளிவாக தெரிந்து வைத்திருப்பது, தமது வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்க சிறப்பான வழிகாட்டுதல்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

 வரனின் ஜாதகதிலோ, வதுவின் ஜாதகதிலோ 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், அவருக்கு அமையும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களை தவிர்க்க உதவும், இனிமையான இல்லறம் அமைய வாய்ப்புண்டு, தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் பாதிக்கபடுவதும், பாதக ஸ்தான தொடர்பை பெறுவதும், இல்லற வாழ்க்கையில் மன கசப்பையும், பிரிவு என்ற நிலையையும் நிச்சயம் தரும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால, 200% விகித இன்னல்களை இருவரும் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது மாற்ற இயலாத ஜாதக நிலையாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 29 மார்ச், 2016

ஸ்திர லக்கினங்களுக்கு பாதக ஸ்தானம் எவ்வித இன்னல்களை தரும்!




ஸ்திர ராசிகள் என்று அழைக்கப்படும், ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம் மற்றும் கும்பம் ராசியினை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் முதல் 12 வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு வழங்கும் அவயோக பலன்களை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும் லக்கினம் முதல் 12 வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மையை தாராது என்பதுடன், 200% விகித இன்னல்களை தரும், மேலும் ஜாதகர் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், ஸ்திர ராசிகளான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிகளை ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் 9ம் பாவகமே பாதக ஸ்தானமாக அமையும், மேலும் லக்கினம் முதல் 12 வீடுகள் ஸ்திர இலக்கின அன்பர்களுக்கு, பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து நிச்சயம் அவயோக பலன்களை தட்டமால் தரும்.

 பொதுவாக நமது கிராமங்களில் ஒரு செலவேந்திரம் உண்டு " பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்" என்ற பழமொழி ஸ்திர லக்கினம் அன்பர்களுக்கு மிக சரியாக பொருந்தும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் வீடுகள் வழியில் இருந்து, ஜாதகர் மேற்கண்ட பழமொழிக்கு உண்டான பலாபலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும், உதாரணமாக ஒரு ஸ்திர இலக்கின அன்பருக்கு, லக்கினம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால், ஜாதகர் தமது வாழ்க்கையை தாமே சிதைத்துகொள்ளும் தன்மையை தரும், சுய ஒழுக்கம் பாதிக்க படும், வீண் அவபெயரை ஜாதகரே தேடி சென்று பெற்றுகொள்வார், அறிவார்ந்த செயல் என்று நினைத்துகொண்டு ஜாதகர் செய்யும் செயல்கள் எல்லாம், அதி முட்டாள் தனமான செய்கையாக அமையும், ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் அவரை சார்ந்தவர்களுக்கு மிகப்பெரிய இன்னல்களையும், மன வருத்தங்களையும் ஏற்ப்படுத்தும், சாதாரணமான நன்மைகளை பெறுவதற்கே ஜாதகர் கடும் போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், உடல்,மனம்,உயிர் ஆகியவற்றின் சக்த்திகளை ஜாதகர் வீண் விரையம் செய்யும் தன்மையை தரும், ஜாதகரின் விளைவறியா செயல்கள் வாழ்நாள் முழுவதும்  ஜாதகருக்கு மிகுந்த துன்பத்தையும் துயரங்களையும் வழங்கும், சமூகத்தில் ஜாதகர் நர்ப்பெயர் எடுப்பது என்பது குதிரை கொம்பாகவே அமைந்து விடும்.

ஸ்திர இலக்கின அன்பர்களுக்கு பாதக ஸ்தானம் பெரும்பாலும் சர ராசிகளிலேயே அமையும் என்பதால், ஜாதகருக்கு கொடுக்க வேண்டிய இன்னல்களை தங்கு தடையின்றி மிக வேகமாக வாரி வழங்கும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் பாதிப்பை ஜாதகர் எதிர்கொள்வது என்பது  மறுஜென்மம் எடுத்ததிற்கு இணையானதாக அமையும், பாதக ஸ்தானம் நெருப்பு தத்துவ ராசி என்றால் ஜாதகர் வீண் விவகாரங்களில் தலையீடு செய்து தேவையில்லாத வம்பு வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், தேவையில்லாத வீண் அலைச்சல் ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்தை  வெகுவாக பாதிக்கும், ஜாதகரின் அறிவு திறன் பலன் தாராமல், உணர்ச்சி வேகமே மிகுந்து நிற்கும், பாதக ஸ்தானம் நீர் ராசி என்றால் ஜாதகரின் வீண் கற்பனையும், கனவு உலக வாழ்க்கையும் நிதர்சனமான உண்மையை  மறைக்கும், பெரும்பாலும் போதை வஷ்துகளுக்கு அடிமையாகும் தன்மையை தரும், வீண் கற்பனையில் தனது வாழ்க்கையை தானே சிதைத்துகொள்ளும் அமைப்பை தரும், ஜாதகரின் வாழ்க்கையில் அடையும் மன துயரங்கள் என்பது ஓர் அளவில்லாமல் வரும் என்பதை கருத்தில்  கொள்வது நலம், பெரும்பாலும் துஷ்ட சக்திகள் ஜாதகரை வெகுவாக  பயன்படுத்திகொள்ளும், தீய பழக்க வழக்கங்களுக்கு ஜாதகர் அடிமையானால் அதில் இருந்து விடுபடுவது என்பது சாதாரன காரியமல்ல என்பதை கவனத்தில் கொள்வது நலம்.

பாதக ஸ்தானம் காற்று ராசி என்றால், ஜாதகரின் அறிவார்ந்த செயல்கள் அற்ற தன்மையும், விளைவு அறியா நிலையும் ஜாதகர் படும் துன்பத்திற்கு காரணமாக அமைந்து விடும், புத்திசாலித்தனம் என்று  நினைத்துகொண்டு ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் வெகுவான  பாதிப்புகளை வாரி வழங்கும், செய்யும் காரியங்களில் ஜாதகருக்கு பெரும்பாலும் மிகப்பெரிய தோல்வியே கிட்டும், அடிப்படையில் உதவி செய்வார் எவருமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகரின் வீண்  பிடிவாதமும், முரட்டு சுபாவமும் ஜாதகரின் தோல்விகளுக்கு காரணமாக அமையும், அறிவார்ந்த பெரியோர்களின் சாபமும், விமர்சனமும் ஜாதகரின் வாழ்க்கையை  வெகுவாக பாதிக்கும், பாதக ஸ்தானம் மண் தத்துவ ராசி என்றால் ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும், ஜாதகரின் உடல் நிலையை வெகுவாக பாதிக்கும், ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் கேள்விக்குறியாகும், ஜாதகரின் சொத்து,வீடு,வண்டி,வாகனம் ஆகியவை அனைத்தும் மற்றவர்களால் அபகரிக்கும் சூழ்நிலையை தரும், அதற்க்கு ஜாதகரின் செயல்பாடுகள் காரணமாக அமையும், தமது பெயரில் உள்ள சொத்து, வண்டி, வாகனம் மற்றும் பணம் ஆகியவற்றை வீண் விரையம் செய்யும் தன்மையை தரும், ஜாதகர் மற்றவர்களால் ஏமாற்றப்படும் சூழ்நிலையை அடிக்கடி சந்திக்கும் நிலையை தரும்.

பாதக ஸ்தான தொடர்பு பெரும் ஓர் உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 3ம் பாவாக வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முயற்ச்சிகள் யாவிலும் மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும் நிலையை தந்து கொண்டு இருக்கிறது, சகோதர வழியில் இருந்து ஆதரவற்ற நிலையையும், ஜாதகியின் அறிவற்ற செயல்களால் ஜாதகி வாழ்க்கையில் அதிக பாதிப்புகளையும், தனது பெயருக்கும்  புகழுக்கும் பெரிய களங்கத்தையும், தான் செய்வதே சரியானது என்ற அறிவீனத்தையும் ஜாதகிக்கு தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கிறது, சம்பந்தம் இல்லாத மற்றவர் காரியங்களில் தலையீடு செய்து வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையையும், தம்மை விட வயதில் அதிகம் உள்ள பெரியவர்களின் பேச்சை கேளாமல் தமது வாழ்க்கையை தாமே கெடுத்துகொள்ளும் செயல்களில் ஜாதகி அசட்டு தனமாக இறங்குவது, ஜாதகியின் உடல் நிலையையும், மன நிலையையும் வெகுவாக பாதித்து கொண்டு இருக்கிறது, ஜாதகியின் நடவடிக்கைகள் ஜாதகியின் குடும்பத்தாருக்கு வெகுவான பாதிப்புகளை தொடர்ந்து வழங்குவது அவர்களின் நிம்மதியை வெகுவாக பாதித்துக்கொண்டு இருக்கிறது, முரண்பட்ட செயல்பாடுகள் ஜாதகியையும் ஜாதகியை சார்ந்தவர்களுக்கும் அதிக இன்னல்களை தருவதற்கு, பாதக ஸ்தான தொடர்புகளே காரணமாக அமைகிறது என்பது கவனிக்க தக்கது.

மேலும் தற்பொழுது நடைபெறும் ராகு திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது ஒன்றுமட்டும் ஆறுதல் தரும் விஷயம், ஆனால் ராகு திசைக்கு அடுத்து வரும் குரு திசை ஜாதகிக்கு 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களை தருவது, குரு திசையில் ஜாதகி அனுபவிக்க இருக்கும், இன்னல்கள் பற்றி தெளிவு பெறுவதும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க ஜாதகி செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்வதும், ஜாதகியின் வாழ்க்கையில் நன்மைகளை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696